பலன் தரும் பரிஹார யந்திரங்கள்! (Post No 2852)

coins gold

Article written by S.NAGARAJAN

 

Date: 30 May 2016

 

Post No. 2852

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 babay, mother

வாழ்க்கையில் எதிர்ப்படும் பல்வேறு இன்னல்களை எப்படிக் கடப்பது?

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அருமருந்து!

 

என்றாலும் கூட மகான்களிடம் அணுகி ஆசி பெறுவோர் பல் வேறு இடர்களையும் கடப்பது உறுதி.

 

ஜோதிட ரீதியாக ஜோதிட வல்லுநர்களை அணுகினால் அவர்கள் பரிஹார யந்திரங்களை வைத்துக் கொள்ளுமாறு கூறுவர்.

காலம் காலமாக பலன் அளித்து வரும் சில பரிஹார யந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

 

உரிய பிரச்சினைக்குத் தகுந்தவாறு இவற்றைத் தாமிரத் தகட்டில் எழுதி (பொறித்து) வைத்துக் கொண்டால் பிரச்சினைகள் தீரும்.

 

சத்ரு நாசனம்

 

15 22 2 7
6 3 19 18
21 16 8 1
4 5 17 20

 

 

பரீட்சையில் தேறுதல்

 

23 30 2 7
6 3 27 26
29 24 8 1
4 5 25 29

 

 

ரோக நாசனம் (வியாதிகள் தீர)

 

 

13 20 2 7
6 3 17 16
19 14 8 1
4 5 15 18

 

 

தன லாபம்

 

 

44 51 2 7
6 3 48 47
50 45 8 1
4 5 46 49

 

புத்ர ஜனனம்

 

 

42 49 2 7
6 3 46 44
48 43 8 1
4 5 44 7

 

 

திருஷ்டி, செய்வினை தோஷம் விலக

 

 

3 10 2 7
4 3 7 6
9 4 8 1
4 5 5 8

 

பிரயத்தின காரிய ஜயம்

 

 

24 31 2 7
6 3 28 27
30 25 8 1
4 5 26 29

 

 

–Subham-

**********

 

விஷம் எத்தனை வகை? எது விஷம்?

poison

Research Article written by london swaminathan

 

Date: 26 May 2016

 

Post No. 2842

 

Time uploaded in London :– 18-34

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Potassium-cyanide-phase-I-unit-cell-3D-SF

சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை என்பது சம்ஸ்கிருதம் கற்றோருக்குத் தெரியும். விஷத்தில் ஐந்து வகை, உபவிஷத்தில் ஐந்து வகை என்று பிரித்து வைத்திருக்கின்றனர்! காலப்போக்கில் அதன் தன்மை என்ன? ஏன் இத்தனை வகை என்பதைக் கேட்டால்கூட யாருக்கும் தெரியாது. அவ்வப்போது புராணக்கதைகளில் ஆலகால விஷம், காலகூட விஷம் என்று படிக்கிறோம், தேவர்களும், அசுரர்களும், அமிர்தம் எடுப்பதற்காக, கடலைக் கடைந்த போது எழுந்த விஷம் இது என்றும், அதை, சிவன் விழுங்கும்போது, பார்வதி கழுத்தைப் பிடித்து தடுக்கவே அவருக்கு திரு நீல கண்டன் என்ற பெயர் வந்ததாகவும் மட்டும் அறிவோம்.அவ்வளவுதான்.

 

விஷத்தை வைத்து பல பொன்மொழிகளும் உண்டு.

முதலில் விஷத்தின் வகைகளைக் காண்போம்:–

ஸ்ருங்கி ச காலகூடஸ்ச முஸ்தகோவத்சநாபக:

சங்ககர்ணாதி யோகோயம் மஹாபஞ்ச விஷாமித:

பொருள்:ஸ்ருங்கி, காலகூடம், முஸ்தக:, வத்சநாபக:, சங்ககர்ணி என்ற ஐந்தும் பெரிய விஷங்களாகும்.

அர்கக்ஷீரம் ஸ்னுஹிக்ஷீரம் ததைவ கலிஹாரிகா

தத்தூர: கரவீரஸ்ச பஞ்சசோபவிஷா: ஸ்ம்ருதா:

பொருள்:-

துணை விஷங்கள் ஐந்து:- அர்கக்ஷீரம், ஸ்னுஹிக்ஷீரம், கலிஹாரிகா, தத்தூர:, கரவீர:

விஷம் பற்றிய பொன்மொழிகள்:–

அதிபயங்கர விஷம்

ந விஷம் விஷமித்யாஹு ப்ரம்மஸ்வம் விஷமுச்யதே

விஷமேகாகினம் ஹந்தி ப்ரம்மஸ்வம் புத்ர பௌத்ரகம்

பொருள்:–

விஷம் என்று சொல்லப்படுபவை எல்லாம் விஷமல்ல; பிராமணனுடைய சொத்துதான் பிறருக்கு விஷம்; ஏனெனில் விஷம் ஒருவரைத்தான் கொல்லும்; பிராமணன் சொத்தை அபகரிப்பவன் அடியோடு அழிவான். புத்ரன், பௌத்ரன் அதாவது மகன், பேரன் எல்லோரையும் அந்த விஷம் அழித்துவிடும்.

சிவன் சொத்து குல நாசம் – என்ற பழமொழியும் ஒப்பிடற்பாலது.

தமிழில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அவைகளில் பெரும்பாலும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலதானம்) அல்லது தேவதானம் (கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலதானம் பற்றியவையே). அவற்றின் இறுதியிலும் அந்த சொத்துக்களை அபகரித்தால் என்ன நேரிடும் என்ற எச்சரிக்கைகள் உள்ளன.

கிழவனுக்கு இளம் மனைவி விஷம்

அனப்யாசேன விஷம் சாஸ்த்ரம்

அஜீர்ணே போஜனம் விஷம்

தரித்ரஸ்ய விஷம் கோஷ்டி

வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

படிக்காதவனுக்கு சாஸ்த்ரம் (நூல்கள்) விஷம்; அஜீர்ணக் கோளாறு உடையவனுக்கு சாப்பாடு விஷம்; ஏழைக்கு பசு தானம் விஷம்; கிழவனுக்கு இளம் மனைவி விஷம்.

Poison-Center-Mr-Yuck

சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியில், விஷ புஷ்பங்கள், விஷக் கிழங்குகள், விஷக் கனிகள், விஷப் பால்கள், விஷப் பிசின்கள், விஷ அன்னத்தின் (உணவு) லட்சணம், விஷ அன்னத்தைப் (உணவு) சோதிக்கும் முறை ஆகியன பற்றிய விவரங்கள் உள.

காகத்துக்கு சோறு போடுவது ஏன்?

இந்துக்கள், காகம், நாய் முதலியவற்றுக்கு சோறிட்டு உண்டதால், உணவில் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ விஷம் கலக்கப் பட்டாலும், அந்த மிருகங்கள், பறவைகளின் உடல்நிலையை வைத்துக் கண்டுபிடித்து வந்தனர்.

சம்ஸ்கிருத்தில் விஷம் பற்றிப் பல பழமொழிகள் உண்டு:–

விஷத்தை மருந்து ஆக்குவது கடினம் (துஷ்கரம் விஷம் ஔஷதீ கர்தும் – சூத்ரகனின் மிருச்ச கடிக நாடகம்

கிசுகிசுப்பேச்சு விஷம் ஆகும் (த்வேஷாக்யானம் விஷம் பவேத் – பிருஹத் கதா கோச)

தங்கக் கோப்பையில் கொண்டுவதாலும் விஷம், விஷம்தான்; அமிர்தமாக மாறிவிடாது (ந ஹேமகும்பே  விஷம் அம்ருதம் பவேத்)

விஷத்துக்கு விஷமே முறிவு (விஷஸ்ய விஷம் ஔஷதம்) – கஹாவத்ரத்னாகர்

விஷம் வைத்த கை உன் கையே ஆனாலும் வெட்டப் படவேண்டியதே (ஸ்வஹஸ்தோபி விஷதிக்த:சேத்ய:)- சாணக்கிய நீதி சாஸ்த்ரம்

 

–சுபம்–

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! – 2 (POST No. 2840)

Gurdjieff13-1-24_3

Article written by S.NAGARAJAN

 

Date: 26 May 2016

 

Post No. 2840

 

Time uploaded in London :–  6-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

 

FIRST PART WAS PUBLISHED HERE ON 21 MAY 2016. THIS IS PART 2

 

27-5-16 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! – 2

ச.நாகராஜன்

 

 

“நீங்கள் சரிபார்க்காத எதையுமே நம்பாதீர்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.”

–  குர்ட்ஜியெஃப்

 

 

குர்ட்ஜியெஃப் தனது சீடர்கள் அனைவரையும் தங்கள் சக்தியை எல்லையற்று விரிவு படுத்துவதை விரும்பினார்.

அவரது சீடர்களில் ஒருவர் ஃப்ரிட்ஜ் பீட்டர்ஸ் (Fritz peters) என்பவர். அவரை தனது புல்வெளியை நன்கு செதுக்கும்படி குர்ட்ஜியெஃப் கூறினார். ஒரு நாளில் ஒரு சிறிய பகுதியையே சுத்தம் செய்த பீட்டர்ஸ் நாளடைவில் ச்கதி அதிகமாகவே பல ஏக்கர்கள் கொண்ட புல்வெளிப் பகுதியை தான் ஒருவராகவே ஒரே நாளில்  முடித்தார்.அப்படி ஒரு நம்ப  முடியாத ஆற்றல் அவருக்கு வந்து விட்டது!

 

 

மனித ஆற்றலை அனைவராலும் வளர்க்க முடியும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் உண்டு.. இதை யார் வேண்டுமானாலும் உடனடியாக்ச் செய்து பார்க்கலாம்!

 

 

உங்கள் வயிற்றை ஒரு கையினால்  தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு கையினால் உங்கள் தலையை இலேசாக தட்ட ஆரம்பியுங்கள். அல்லது ஒரு காலை முன்னும் பின்னுமாகத் தரையில் கடிகார பெண்டுலம் போலத் தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு காலின் முன் பகுதியினால் தரையைத்தட்ட ஆரம்பியுங்கள். 99 சதவிகிதம் பேரால் இதைச் சரியாகச் செய்ய முடியாடு. வயிற்றைத் தடவும் போதே தலையையும் தடவுவார்கள்.

 

 

குர்ட்ஜியெஃப் தனது சீடர்களுக்கு கைகள், கால்கள் போன்ற பல்வேறு அங்கங்களையும் ஒரே சமயத்தில் வெவ்வேறு விதமான பயிற்சிகளைச் செய்யுமாறு கூறுவார்.

சில சமயம் ஒரு அபிநய நிலையில் அப்படியே உறைந்து நிலைத்து நிற்குமாறு கூறி விடுவார்.

 

 

அவர் ஒரு முறை பீட்டர்ஸுக்கு அளப்பரிய் ஆற்றலைத் தரவே தனக்குள்ளிருந்து பெரும் ஆற்றால் ஊற்றாக ஊறுவதை பீட்டர்ஸ் உணர்ந்தார். ஆனால் அதே சமயம் ஆற்றலைத் த்நத குர்ட்ஜியெஃப் மிகவும் தளர்ந்து போனார்.

 

நமது மனம் பிரம்மாண்டமான ஆற்றல் தேக்கத்தைக் கொண்டுள்ளது. ஆனால் தினசரி வாழ்க்கை முறையால் எழுந்தவுடன் ப்ல துலக்குவது, பேப்பர் படிப்பது,. அலுவலகம் செல்வது, சாப்பிடுவது என்று பல பழக்கங்களுக்கு அடிமையாகிறோம். ரொபாட் போல மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி இயங்க ஆரம்பிக்கிறான். இந்த ரொபாட் இயக்கத்திலிருந்து வெளி வருவது நம் கையில் தான் இருக்கிறது.

ஆனால் அதே சமய்ம் அளப்ப்ரிய ச்கதி வந்து விட்டால் அது அபாரமான விஷயம் மட்டுமல்ல; அபாயகரமான விஷயமாகவும் ஆகி விடக் கூடும்.

 

 

உதாரணமாக பென்னட் காட்டில் சென்ற போது பல்வேறு உணர்ச்சிகளின் எல்லையைத் தொட்ட போதும் அதில் அப்படியே இருக்க விரும்பவீல்லை. ஏன்? அப்படிப்பட்ட எல்லையற்ற சக்தியை மனிதனால் தாங்க முடிவதில்லை.

 

ஆகவே தான் படிப்படியாக சக்திகளை மேம்படுத்திக் கொண்டு அவற்றை நிலை நிறுத்தி படிப்படியாக முன்னேற வேண்டும் என்று யோகிகள் கூறினார்கள் போலும்!

 

இதே போன்ற உணர்வை ஒரு எல் எஸ் டி போதை மருந்தை உட்கொண்ட போதும் பெறலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போதை மருந்த உட்கொண்ட ஒருவர் சாவைப் பற்றி நினைத்த போது எதிரிலிருந்த அனைவரும்  மண்டையோடுக்ளாகத் தெரிந்து சிரிக்க ஆரம்பிக்கும் காட்சியைக் கண்டார்.. பூமியோ பிணம் எரியும் சுடுகாட்டு நாற்ற்த்தை வெளிப்படுத்தியது.

 

ஆனால் போதை மருந்து தரும் உணர்வுகளுக்கும் யோகிகள் பெரும் ஆற்றலுக்கும் பிரக்ஞை நிலையில் பெருத்த வேறுபாடு உண்டு.ஒன்று போலி. மற்றது உண்மை!

ஆகவே போதை மருந்து சாப்பிட்டு போலி உணர்வுகளைப் பெறாமல், ஒரு எல்லைக்குட்பட்ட ஆற்றலோடு பல்வேறு இயல்பான பழக்க வழக்கங்களுடன் இருப்பதும் கூட ஒரு விதத்தில் நல்லது தான்! திடீர் பாய்ச்சலில் அனைத்து ஆற்றலையும் பெற்றுத் திகைக்காமல்,

மெதுவாக உரிய விதத்தில் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 

பிர்பல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒளிக்கு எடை உண்டு என்றும் அது ஒரு அழுத்தத்தைத் தர வல்லது என்றும் சொன்ன போது அனைவரும் சிரித்தனர். ஆனால் 1918இல் ஏற்பட்ட கிரகணத்தின் போது ஒளிக்கு எடை உண்டு என்பதும் அது ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்படும் என்பதும் நிரூபிக்கப்பட்டது.

 

ஆனால் இது வரை எண்ணத்திற்கு ஒரு அழுத்தம் உண்டா அது மற்றவரை எப்படி பாதிக்கும் அல்லது முன்னேற்றும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இல்லை.

குர்ட்ஜியெஃப் போன்றோரின் பல்வேறு வாழ்க்கைச் சமப்வங்களே அதிசயிக்கத் தக்க விதத்தில் எண்ண சக்தியையும் இதர ஆற்றல்களையும் விளக்குகின்றன.

 

 

அறிவியல் முன்னேறி எண்ண சக்தியை பரிசோதிக்கும் சில கருவிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அது நிறைவேறும் என உறுதியாக நம்பலாம்!

 

குர்ட்ஜியெஃப் இறந்து விட்டார் என்று பலராலும் பரப்பப்பட்ட செய்தியால் பென்னட் சில காலம் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் திடீரென்று அவர் உயிருடன் இருப்பதை அறிந்து அவரைச் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.குர்ட்ஜியெஃப்பின் இறுதி வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை உள்ளடக்கி அவர் ஒரு புத்தகத்தையும் எழுதினார்.

 

அறிவியலுக்கும் அமானுஷய சக்திக்கும் பாலமாக அமையும் சிலர் குர்ட்ஜியெஃப் போலப் பிறந்து கொண்டே இருக்கின்றனர்!

 

chris hadfield

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வின்ண்வெளியில் நிலை கொண்டிருக்கும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் பன்னாட்டு விண்வெளிநிலைய்ம் பூமியை ஒவ்வொரு 92 நிமிடமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றுகிறது.

 

அதில் நிறைய காமராக்கள் உள்ளன. விண்வெளி வீரரான கிறிஸ் ஹாட்ஃபீல்ட் (Chris Hadfield) தனது கடைசி பயணத்தின் போது 2012 டிசம்பரிலிருந்து 2013 மே மாதம் முடிய அதில் இருந்தார். அப்போது பூமியை 2597 முறை வலம் வந்தார். சுமார் 45000 போட்டோக்களை அவர் எடுத்தார். ஆனால் அவை அனைத்தையும் அவரே ஒரு முறை கூட் முற்றிலுமாகப் பார்க்கவில்லை,

 

ஒரு நாள் யோசித்தார். இவ்வளவு புகைப்படங்கள் எடுத்தும் அவற்றை ஒருமுறை கூடப்  பார்க்கவில்லையெனில் அதற்கு அர்த்தமே இல்லையே! விளைவு, அவற்றைத் தான் பார்த்ததோடு அதில் முக்கியமான போட்டோக்கள் மூவாயிரத்தைத் தேர்ந்தெடுத்தார்

 
ஆனால் இவற்றையும் புத்தகமாக வெளியிட்டால்  விலை கட்டுபடியாகாதே, யாரும் வாங்க மாட்டார்களே என்று அவருக்குத் தோன்றியது.

 

மீண்டும் அவற்றை பரிசீலனை செய்து 192 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் யூ ஆர் ஹியர் ; அரவுண்ட் தி வோர்ல்ட் இன் 92 மினட்ஸ் ( ‘You Are Here: Around the world in 92 minutes’)

 

அற்புதமான புகைப்படங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம். இந்த போட்டோக்கள் பலவற்றை இணையதளங்கள் பலவற்றில் பார்த்து மகிழலாம். நெட் இணைப்பு இருந்தால் மட்டும் போதும்!

 

***********

 

 

 

 

 

 

 

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே! (Post No.2837)

Srimad_Bhagavad__gita

Article written by S.NAGARAJAN

 

Date: 25 May 2016

 

Post No. 2837

 

Time uploaded in London :–  5-52 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

 

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

 

ச.நாகராஜன்

la bhagavad gita

ஹிந்து மதத்தின் உயரிய நூல் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. ஆதி சங்கரர் ‘பகவத் கீதா கிஞ்சித தீதா என்று கூறி பகவத் கீதையைக்  கொஞ்சமாவது படியுங்கள் என அருளுரை பகர்ந்துள்ளார்.

 

கீதையின் பெருமையைக் கூறும் சுலோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் இரு சுபாஷித சுலோகங்களை இங்கு பார்ப்போம்.

 

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே:   I

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா:  I I

 

இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி ந்ன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின்  முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?

ஆக கண்ணனின் முகத்திலிருந்து வந்த அரிய நூலில் இல்லாத விஷயம் வேறு எதில் இருக்கப் போகிறது?

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

The Bhagavat Gita should be repeatedly recited well; of what use are thoughts about other scriptures? For, it has come out of the lotus-mouth of the Lord Krishna (the Lotus-navelled one) Himself. (Tranlation by S.B.Nair)

 

இன்னொரு ஸ்லோகம் மஹாபாரதத்தில் உள்ள அரிய விஷயங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அதில் முதலிடத்தைப் பிடிக்கிறது கீதை.

 

கீதா விதுரவாக்யானி தர்மா: ஷாந்தனவேரிதா:    I                 ந ஸ்ருதா பாரதே யேன: தஸ்ய ஜன்ம நிரர்த்தகம்  II

 

இதன் பொருள்:- எவன் ஒருவன் ம்ஹாபாரதத்தில் கீதையையோ , விதுரனின் வாக்கியங்களையோ, தர்மத்தைப் பற்றிய பீஷமரின் பொருளுரைகளையோ படிக்கவில்லையோ அவனது வாழ்வு பூமியில் வீணே!

கண்ணனின் கீதை

விதுரனின் அரத்தமுள்ள நீதி

பீஷ்மரின் தர்மோபதேசம்

ஆகிய இவை மஹாபாரதத்தின் சாரமாக அமைந்துள்ளதால் இவற்றைப் பட்டியலிட்ட கவிஞர் இதைப் படியுங்கள் என்று சொல்லி, இவற்றைப் படிக்காத வாழ்வு வீணே என்கிறார்  முத்தாய்ப்பாக!

 

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

He who has not listened to the Bhagavat Gita , the speeches of Vidura and the disquisitions on Dharma by Bhishma  in the Mahabharata has his birth on the earth in vain. (Tranlation by S.B.Nair)

 

 

கீதையைப் படிப்போம்;

வாழும் வழி அறிந்து அந்தப் பாதையில் செல்வோம்

உயர்வோம்!

*********

பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்! (Post No.2834)

ashmolean museum navagrahas

Picture: Navagrahas at Ashmolean Museum, Oxford, UK( picture by london swaminathan)

Written  BY S NAGARAJAN

Date: 24 May 2016

 

Post No. 2834

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 navagrahas from British Museum

Nine Planets/ Navagrahas at British Museum, London (Picture by london swaminathan)

நவக்ரஹங்களும் மனிதர் வாழ்க்கையில் அவரவர் வினைகளுக்கு ஏற்ப நல்லதையும் கெட்டதையும் உரிய காலத்தில் வழங்குகின்றன என்பது ஜோதிட சாஸ்திர உண்மை.

 

தீய பலன்களின் வீரியத்தைக் குறைக்கவும் நல்ல பலன்களின் வலிமையை அதிகரிக்கவும் அந்தந்த கிரஹங்களின் யந்திரங்களை தாமிரத் தகட்டில் எழுதி அவரவர் வைத்திருப்பது நலம் பயக்கும்.

 

 

ஜோதிட ரீதியாக வலுவிழந்த கிரஹங்களின் வலுவைக் கூட்டவும், தீமை தரும் தசா புக்திகளில் அந்தந்த கிரஹத்திற்குரிய யந்திரத்தை அணிந்து தீமையைக் குறைக்கவும் இந்த் நவக்ரஹ யந்திரங்கள் தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அணிந்து பார்த்தால் பலன் தானே தெரியும்!

 

ஒவ்வொரு க்ரஹத்திற்கும் உரிய யந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல நாளில் அந்தந்த கிரஹத்திற்குரிய ஹோரையில் இதை அணியலாம்.  நல்ல பலன் தெரியும்.

 

வாழ்க்கையில் தீமை தவிர்த்து முன்னேற்றம் காண ரிஷிகள் வகுத்த பல வழிகளில் இந்த யந்திரங்களும்  ஒன்று!

 

6 7 2
1 5 9
8 3 4

 

Surya (Sun) சூரியன்

 

 

7 8 3
2 6 10
9 4 5

 

Chandra (Moon) சந்திரன்

 

8 9 4
3 7 11
10 5 6

 

Mangala (Mars) செவ்வாய்

 

 

9 10 5
4 8 12
11 6 7

 

Budha (Meercury) புதன்

 

10 11 6
5 9 3
12 7 8

 

Brihaspati (Jupiter) வியாழன்

 

 

11 12 7
6 10 14
13 8 9

 

Sukra (Venus) சுக்ரன்

 

 

12 13 8
7 11 15
14 9 10

 

Shani (Saturn)  சனி

 

13 14 9
8 12 16
15 10 11

 

Rahu  ராகு

 

rahu, BM,London

 

Ketu, BM, London

Pictures of Rahu and Ketu at the British Museum, London(Pictures were taken by london swaminathan)

14 15 10
9 13 17
16 11 12

 

Ketu  கேது

 

 

Budha Sukra Chandra
Brihaspati Rahu Ketu
Mangala Shani Sun

 

 

Navagraha Yantras

நவ க்ரஹ யந்திரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ள யந்திரம்

**********

 

 

தமிழர்களின் கோழிச் சண்டை, ஆட்டுக் கிடாச் சண்டை!! (Post No.2823)

cockfighting

Research article written by London swaminathan

 

Date: 19 May 2016

 

Post No. 2823

 

Time uploaded in London :–  9-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழர்களின் பொழுது போக்காக சில விளையாட்டுகள் இருந்து வருவது சிறப்புக்குரியது. சேவல் கோழி, கவுதாரி முதலிய பறவைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது, அதே போல ஆடு, மாடுகளை சண்டை போட வைத்து வேடிக்கை பார்ப்பது பற்றி சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் சுவையான செய்திகள் உள்ளன. இங்கே ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்டுகிறேன்.

கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் அயோத்தி நகர மக்களின் பொழுதுபோக்குகளை கம்பன் வருணிக்கிறான். கோசல நாடு பற்றி கம்பன் கூறியது அனைத்தும் சோழ நாட்டை மனதிற்கொண்டு சொல்லப்பட்டவையே.

கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி

உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீறி

வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர ஆக்கை

மறுப்பட ஆவிபேணா வாரணம் பொருத்துவாரும்

 

பொருள்:–

சினம் மிகுந்த மனமும், கண்களைப் போலச் சிவப்பு நிறமுள்ள உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலிலே கட்டப்பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழியைத் தாக்கி, முன்பகை ஏதுமில்லாமலே கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதனவாகி, செருக்கினால் அப்போரில் வலிமை பெற்று, வீர வாழ்க்கைக்கு களங்கம் உண்டானால், உயிர்துறக்கும் சேவற் கோழிகளை சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள்.

goat fight

எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து

உரும் இவை என்னத் தாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்

விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி

அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்

பொருள்:–

 

எருமைகள் பெற்றெடுத்த செந்நிறக் கண்களையுடைய ஒரு எருமைக் கடாவுடன், மற்றோர் எருமைக் கடா, இவை ‘உருமும் இடிகள்’ ஆகும், என்று சொல்லும்படி மோதி, இருட்டு, இரண்டு பகுதியாகிப் போர் செய்வது போல போரிட்டன. அந்தக் கடாக்களின் போரினை வேடிக்கை பார்த்து ஆரவாரித்து வண்டுகள் மேலே எழுந்தன. மக்களில் சிலர் வானம் வரை சப்தம் கேட்கும்படி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழர் நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் அ.தட்சிணாமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:–

வீரவுணர்வு மிக்க தமிழர்கள் ஆட்டுக் கிடாய்களையும், காடை, கவுதாரி, கோழி முதலான பறவைகளையும் பழக்கிப் போரிடச் செய்து மகிழ்வதில் நாட்டம் கொண்டிருந்தனர். ‘குப்பைக் கோழி தனிப் போர் போல’ (பாடல் 305) என்று குறுந்தொகைப் புலவர் ஒருவர் அரிய உவமையை ஆள்கின்றார். இதனால் கோழியைப் பழக்கிப் போரிடச் செய்தலும் வழக்கிலிருந்தது என அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் பூழ்ப்போரும் தார்ப்போரும் வாகைத் திணையில் பேசப்படுகின்றன.

 

பூழ்= காடை, கானாங்கோழி பறவை வகைகள், தார்=ஆட்டுக் கிடா

நமது இலக்கியங்களில், குறிப்பாக கம்பராமாயணம், பெருங்கதை போன்ற இடைக்கால நூல்களில், இது போன்ற நிறைய குறிப்புகள் உள.

 

goat fight 2

–சுபம்–

 

வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816)

IMG_9826

Written by london swaminathan

 

Date: 16 May 2016

 

Post No. 2816

Time uploaded in London :– காலை 9-05

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?

 

வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்

ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்

வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்

ஏதக்கோன் இல்லை இனிது

 

பொருள்:

நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.

கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.

 

ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.

 

இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.

 

சம்ஸ்கிருதத்திலும் அழகான பாடல் உண்டு (நான் முன்னர் எழுதிய கட்டுரையிலுந்து)

paari vallal

Pari, who gave his chariot to a climbing plant, one of the Seven Tamil Philanthrophists

தானதூஷணம்

அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:

பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.

 

 

ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:

அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்

விலம்ப: – தாமதமாகக் கொடுக்கும் தானம்

வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது

அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது

பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது

உத்தமன், மத்திமன், அதமன்

தமிழில் நீதிவெண்பா பாடல் ஒன்றும், இதே கருத்தை அழகாக விளக்கும்:

தானறிந்தோருக்குதவி தன்னாலமையுமெனில்

தானுவந்தீதல் தலையாமே—ஆனதனால்

சொன்னாற் புரிதலிடை சொல்லியும் பன்னாள் மறுத்துப்

பின்னாட் புரிவதுவே பின்.

 

பொருள்:– ஒருவர் தான் அறிந்த ஒருவருக்கு உதவி செய்ய முடியுமானால், அவர் கேட்கும் முன்னால், மகிழ்ச்சியுடன் தானே வலியப் போய் உதவி செய்தால், அது தலையானது; முதன்மையானது; உத்தமம்.

அவர் கேட்ட பின்னர், உதவி செய்வது இடைப்பட்டது; மத்திமம்.

அவர் கேட்ட பின்னரும் பல நாள் தாமதித்து, பின்பு உதவுவது கடைப்பட்டது; கடைத்தரமானது; அதமம்.

அன்பர்களே! நண்பர்களே! நாம் எல்லோரும் உத்தமர்களாக வாழ்வோம்! அல்லது வாழ முற்படுவோம்.

ஆங்கிலப் பழமொழிகளிலும் இதே கருத்தைக் காணலாம்:–

He gives twice who gives quickly

To refuse and to give tardily is all the same

He that is long a giving knows not how to give

Long tarrying takes all the thanks away

 

 

முந்தைய கட்டுரைகள்:

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல் (12 மே, 2016)

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (25 பிப்ரவரி 2016)

–சுபம்–

 

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806)

4_pyramids

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2806

 

 

Time uploaded in London :–  6-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”

 

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே

 

 

 

என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

 

 
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன்  தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

 

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

 

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

 

“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”

“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”

“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”

“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”

“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

 

“சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

 

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”

 

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

 

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.

 

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

 

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.
 
அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

 

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”

 

To be continued……………………………

 

 

 

 

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!! (Post No.2804)

themiser600w-238x300

Written by london swaminathan

 

Date: 12 May 2016

 

Post No. 2804

 

Time uploaded in London :–  17-57

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி

ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி

 

“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”

இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!

 

தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்

palmyrah avenue

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

 

பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

Arecanut-Cultivation

முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள்

தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் அனதப் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

 

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்

இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்

–நீதிநெறிவெண்பா

 

தென்னை மரத்தின் தியாகம்!

 

பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.

 

தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

–வாக்குண்டாம்

coconut in sun light

–சுபம்–

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803)

search in egypt1

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2803

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

 

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்

எழுதியவர்- ச.நாகராஜன்

 

 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
ஸ்பிங்ஸ்
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

 

அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

 

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

search in egypt2

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

 

 

To be continued…………………………………..