நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801)

IMG_1652 (2)

Written by london swaminathan

 

Date: 11 May 2016

 

Post No. 2801

 

Time uploaded in London :–  17-11

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:

 

महीयांसः प्रकृत्या मितभषिणः

 

Maheeyamsah prakrityaa mitabhaashinah

 

Great men, by nature, do not talk much (they limit their speech to the essentials only)

மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:

பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.

வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.

 

இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.

 

ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

விரைந்துரையார்

மேன்மேலுரையார்

பொய்யாய் புனைந்துரையார்

பாரித்துரையார்

 

பொருள்:

விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்

பின்னர் எப்படிச் சொல்லுவார்?

சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.

 

இதோ பாடல் முழுதும்:

விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய

பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்

சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்

சொல்லுக செவ்வியறிந்து.

—ஆசாரக்கோவை

 

திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.

 

இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:

satyam bruyat priyam bruyat na bruyat satyam apriyam
priyam ca nanrutam bruyat esha dharmah sanatanah

                 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

–மனு ஸ்மிருதி 4-138

உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;

கசப்பான உண்மையைச் சொல்லாதே;

இனிமையான பொய்களைப் பேசாதே;

இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).

 

எனது பழைய கட்டுரை:

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !(
Post No.837            Date. 13-02-2014

–subham–

 

 

 

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790)

obbery324-600

Compiled by london swaminathan

Date: 7 May 2016

Post No. 2790

Time uploaded in London :– 12-56

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–

“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)

பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

 

1900 வேதபாடசாலை

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.

என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

 

படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

asceticww2

–Subham–

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2 (Post No.2782)

Zodiac-Barocius-1585

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5 May 2016

 

Post No. 2782

 

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

Star-Chart-Black

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2

 

.நாகராஜன்

 

 

மிருகசீர்ஷம், திருவாதிரைசிதம்பரம், சிவகங்கை

 

சிதம்பரம் : கோயில் என்று சிறப்பாகச் சொல்லப்படும் தலம்.இறைவன் : திருமூலட்டானேசுவரர் இறைவி: உமையம்மை. தில்லை என்றும் பூலோக கைலாயம் என்றும் சிறப்பாக அழைக்கப்படும் தலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாய தலம் இது. பாடல் பெற்ற சிவ தலங்களில் முதலாவது தலம். பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோர் வழிபட்ட தலம். கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டிய நிலைகளைக் காண முடியும். பொன் கூரை வேய்ந்திருப்பதால் பொன்னம்பலம் என்ற சிறப்புப் பெயர் உண்டு.

 

புனர்பூசம்இராமேஸ்வரம் முதலான இராமதீர்த்தம்

இராமேஸ்வரம்: பாண்டிய நாட்டுத் தலம். இறைவன்: இராமநாதர் இறைவி: மலைவளர் காதலி (பர்வதவர்த்திநி) அக்நி தீரத்தம் உள்ள கடற்கரைத் தலம்.இராவணனைக் கொன்ற தோஷத்திற்கு இராமன் பூஜித்த தலம். இராமநாதர் எழுந்தருளி இருக்கும் இடம் திருக் கந்தமாதனம் என்னும் மலையாகும்.இராமநாதர் திருமேனி சீதையால் வெண் மணலாற் செய்த திருவுருவமாக ஸைகத லிங்கமாக அமைக்கப் பெற்றது.

 

பூசம் – பிரசித்தம் ( பிரசித்தம் என்றால் ஏராளமான தலங்கள் என்று பொருள்)

ஆயில்யம் – வழுவூர், மாகாளம்

 

மகம், பூரம் – பிரசித்தம்

 

 

உத்திரம்பங்குனி உத்திரம்திருவாரூர்

 

திருவாரூர்: பஞ்சபூதத் தலங்களுள் பிருதுவி தலம். தேவர்கள் கறையான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளிய இடமாகையால் வன்மீகபுரம் என்ற பெயரும் உண்டு.சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையான இது காசிக்கும் தில்லைக்கும் மேலானது.அம்பிகை தவம் செய்த தலமாதலால் பராசக்தி தலம். திருமகள் வழிபட்ட தலமாதலால் கமலாலயம். வீதி விடங்கராகிய தியாகேசர் எழுந்தருளி இருப்பதால் வீதிவிடங்கம் என்ற பெயரும் உண்டு.அகத்தியர், அரிச்சந்திரன் சனகாதி நால்வர் என்று இங்கு வழிபட்டுப் பேறு பெற்றோர் ஏராளம்.

ஹஸ்தம் – திருவாரூர்

சித்திரை – பிரசித்தம்

 

சுவாதிகேதாரம் (தீபாவளி)

கேதாரம் : வடநாட்டுத் தலம். இமயமலைச் சாரலில் ஹரிதுவாரத்திலிருந்து 253 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: கேதாரநாதர் இறைவி: கேதார கௌரியம்மை. கேதாரம்: வளைந்த பூமி இங்குள்ள லிங்கம் எருமையின் பின்புறம் போன்ற வடிவில் இருப்பதாக அருணாசல புராணம் கூறுகிறது.

 

விசாகம் – (வைசாகம்) பிரசித்தம்

 

அநுஷம்திருநெல்வேலி

 

திருநெல்வேலி: பாண்டிய நாட்டுத் தலம். இறைவர்: நெல்லையப்பர்.  இறைவி:காந்திமதியம்மை. தீர்த்தம்: தாமிரவருணி

 

 

கேட்டைஎலந்துறை, திருநெல்வேலி

-தொடரும்

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1 (Post No 2779)

hindu-zodiac

Date: 4 May 2016

 

Post No. 2779

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.ஆ

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1

 

.நாகராஜன்

star2

நட்சத்திர தலங்கள்

ஹிந்து அற நூல்கள் காட்டும் வழிகாட்டுதலின் படி 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. அவரவரக்கு உரிய காலத்தில் உரிய பலனை வழங்கும் அற்புத ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.

இந்த 27 நட்சத்திரங்களும் பூஜித்த தலங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. இவற்றைத் தனது இடையறாத ஆய்வால் கண்டு தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அதிகாரபூர்வமான ஆய்வு என்பதால் இதில் உள்ள சிறப்பை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள் வருமாறு:-

 

அசுவதி –  திருக்கடையூர்

மயிலாடுதுறைதரங்கம்பாடி இரயில் கிளைப்பாதையில் 22 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: அமிர்தகடேசர். இறைவி அபிராமி அம்மை. அமிர்த புஷ்கரணி உள்ள தலம். எம சம்ஹாரம் நடந்த தலம். சித்திரை மாதம் 18 நாட்கள் நடக்கும் விழாவில் மக நட்சத்திரத்தில் இத்திருவிழா சிறப்புற நடக்கும்.

 

பரணிஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ வாஞ்சியம்: கங்கை குப்தமாக (மறைவாக) வசிக்கப்பெற்ற தலம்.சுவாமி சூலத்தால் குத்தி உண்டாக்கப்பெற்றது. சூலம் குத்திய அடையாளமாக மூன்று கிணறுகள் இங்கு உண்டு. யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். லட்சுமி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த தலம். சந்தன விருட்சம் பிரகாரத்தில் இருக்கிறது. கோவிலின் வடக்கில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு யம வாதனை இல்லை. கோவிலில் யமனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சுவாமிக்கு யமவாகனம் உள்ளது.காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறினுள் ஒன்று. (இதர ஐந்து தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு)

 

கார்த்திகைசரவணப் பொய்கை, காசி, அருணாசலம்

காசி:மோட்சபுரிகள் ஏழில் நடு நாயகமாக விளங்கும் தலம். இந்தப் பிறவியிலேயே முக்தி தரும் சிறப்புடைய தலம். பிரளய காலத்தில் மூலப் பொருள், அனைத்தையும் ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. அதைப் பத்திரப்படுத்தும் இடம் காசி. சாலோக்யம், சாரூப்யம், சாந்நித்யம் சாயுஜ்யம் என்ற நான்கு வகை முக்திகளில் இறைவனே ஆதல் என்ற சாயுஜ்ய  முக்தி தரும் தலம். ஜைன மதத்தைத் தோற்றுவித்த பார்சுவநாதர் பிறந்த இடமும் இதுவே.

 

ரோஹிணி – ஆனைக்கா, எல்லா விஷ்ணு தலங்களும்

திரு ஆனைக்கா : காவிரியின் வடபுறம் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அப்புலிங்க தலம்.சுவாமி பெயர் – ஜம்புகேஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.இங்கு ஒரு யானையும் ஒரு சிலந்தியும் பூஜை செய்து கொண்டு வந்தன.வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேல் கூடு கட்டும். யானை தினமும் காவேரி ஸ்நானம் செய்து துதிக்கையில் காவேரி தீர்த்தம் ஏந்தி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும். சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். இதைக் கவனித்து வந்த சிலந்தி ஒரு நாள் கோபம் கொண்டு யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடிக்கவே  யானை வலி பொறுக்க முடியாமல் புரண்டு துடித்து மரணம் அடைந்ஹது. சிலந்தியும் மாய்ந்தது.இச்சிலந்தி மறு ஜன்மத்தில் கோச்செங்கணான் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை ஏறி வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இங்கு தவம் செய்து வந்த ஜம்பு மஹரிஷி தலையில் நாக மரம் உண்டாயிற்று. தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்த படியால் இது ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. இந்த தலத்தை ஜம்புகேஸ்வரம் என்று அழைப்பர். பஞ்ச பிரகாரங்கள் உள்ள இந்தக் கோவிலில் அம்பாள் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட பெரிய மண்டபம் உள்ளது.

தொடரும்

மாண்டவ்ய மகரிஷி கதை (Post No.2776)

mahabharata pile

Compiled by london swaminathan

 

Date: 3 May 2016

 

Post No. 2776

 

Time uploaded in London :– 10-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மாண்டவ்ய மஹரிஷி என்றும் ஆணி மாண்டவ்யர் என்றும் அழைக்கப்படும் முனிவரின் சரிதம், நிறைய பேரால் சொல்லப்பட்டிருக்கிறது. மஹாபாரதத்திலுள்ள இக்கதையை ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் சொல்லி, தனக்குப் பிடித்த வியாக்கியானமும் செய்திருக்கிறார்கள்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்

இதற்கு முன் நான் சுருக்கமாக இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன்; இதோ அந்தப் பதிவின் பெயர்:

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

Article No.1734; Date:- 20th March, 2015.

 

irandu1

 

irandu18

 

irandu19

irandu20

 

irandu21

–subham–

 

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–

 

முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ (Post No.2769)

thanga murukan

Compiled by london swaminathan

 

Date: 30 April 2016

 

Post No. 2769

 

Time uploaded in London :– 6-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நீங்கள் முருக பக்தரா? எங்கே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதில் பத்துக்கு பத்து கிடைக்கவில்லையென்றால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே பிளாக்கில் போட்ட 25-க்கும் மேலான கேள்வி பதில்களுக்குப் போங்கள். ஏதாவது ஒன்றிலாவது நூற்றுக்கு நூறு எடுக்க முடிந்தால் நீங்கள் மெத்தப் படித்தவர். மிகவும் குறைவாக மதிப்பெண்கள் கிடைத்தால் மெதுவாகப் படிப்பவர்கள்!!!

muruga,doddappalapura,karnataka

1.முதலில் ஒன்று என்ற எண்ணுடன் துவங்குவோம். எந்த ஓரெழுத்து மந்திரத்தின் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார்? எங்கு?

 

2.முருகனுக்கு எத்தனை மனைவியர்? யார் அவர்கள்?

 

3.திருத்தணியில் எத்தனை படிகள் உள்ளன?

4.கதிர்காமத்தில் எத்தனை திரைகள் உள்ளன?

5.நமக்கு திருப்புகழ் பாடல்கள் எவ்வளவு கிடைத்துள்ளன?

6.பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?

7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது?

8.பழனி மலையில் எத்தனை படிகள் ஏறிச் சென்றால் முருகனை தரிசிக்கலாம்?

9.மலேசியாவில் பத்துமலைக் குகைக் (Batu Caves) கோவிலில் எத்தனை படிகள் இருக்கின்றன?

10.நக்கீரரை பிடித்த பூதம் அவரை எத்தனையாவது ஆளாகப் பிடித்தது?

 

mayil murugan

விடைகள்: 1.ஓம், சுவாமி மலை 2.இரண்டு மனைவியர்:வள்ளி, தெய்வானை 3. மொத்தம் முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 4.ஏழு திரைகள்  5.அருணகிரிநாதர் பாடியது 16,000க்கும் மேலான  திருப்புகழ் பாடல்கள்; இன்று பட்டியலிடப்பட்டவை 1334; யாரேனும் 1300 அல்லது அதற்கு நெருங்கிய எண் சொன்னால் முழு மதிப்பெண். 6.நவபாஷாணம் எனப்படும் ஒன்பதுவகை மருந்துப் பொருட்களால் ஆன சிலை என்பது  ஐதீகம் 7.முருகப் பெருமானுடன் மிகவும் தொடர்புடைய எண் ஆறு; அவன் பெயரே ஆறுமுகன், ஷண்முகன், அவனது புகழ்பெற்ற தலங்கள் ஆறு படைவீடு, அவனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்; அவனது யந்திரம் அறுகோணம் 8.பழனியின் படிகள் 689 அல்லது 690 என்ற இரண்டும் சரியே; நாம் கடைசி படியைக் கோவிலாகவோ அல்லது அதையும் ஒரு படியாகவோ எண்ணலாம் 9.பாட்டு கேவ்ஸ் (Batu Caves) என்றும் பத்துமலை என்றும் அழைக்கப்படும் மலேசியாவின் புகல் மிகு முருகன் கோவிலில் 272 படிகள் உள 10. குகையில் 999 பேரை அடைத்து வைத்து ஆயிரமாவது ஆளாக நக்கீரரைப் பிடித்தது ஒரு பூதம்; அப்போது அவர் முருகன் அருள் வேண்டிப் பாடியதே திருமுருகாற்றுப்படை..

 

Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?

murugan vattam
Contact swami_48@yahoo.com

உப்பே உத்தமம்! (Post No.2759)

salt,fb

Written  BY S NAGARAJAN

Date: 27 April 2016

 

Post No. 2759

 

 

Time uploaded in London :–  6-14 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சமஸ்கிருத செல்வம்

 

உப்பே உத்தமம்!

 

ச.நாகராஜன்

 

அறுசுவை உணவில் எந்தச் சுவை சிறப்பானது?

 

கேட்க வேண்டுமா என்ன? உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று தமிழ் பழமொழி அழகாக, சுருக்கமாக சொல்லி விட்டது.

சம்ஸ்கிருத கவிஞர்கள் உப்பை பல பாடல்களிலும் எடுத்துக் கையாண்டுள்ளனர் – பல்வேறு காரணங்களுக்காக.

ஆனால் உணவில் சுவை சேர்ப்பது எது என்பதை ஒரு கவிதை ஹிதோபதேசத்தில் விளக்குகிறது.

 

பாடல் இதோ:-

 

க்யாத: சர்வ ரஸானாம் ஹி லவணோ ரஸ உத்தம: |

வினா தேன ஹி ராஜேந்த்ர  வ்யஞ்ஜனம் கோமயாயதே ||

 

இதன் பொருள் : ரஸங்களில் எல்லாம் உத்தமமான ரஸம் உப்பு தான்! ஓ, அரசனே!  ஏனெனில் அது இல்லாவிட்டால் வ்யஞ்ஜனம் (உணவு) சாணிக்குச் சமம்!

 

இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை F.Johnson  அழகுறச் செய்துள்ளார் இப்படி:-

 

Of all flavours, salt is called the best flavour; for, without it, O, King. sauce is as savoury as cowdung.

 

 

ஆனால் கடலில் உப்பு இருப்பது ஒரு குற்றமாகக் கவிஞர்களால் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது.

 

என்றாலும் உணவுக்கு எடுப்பு உப்பே!

 

***

 

100 மைல் நடந்து பல்கலைக்கழகம் சென்ற அறிஞர்! (Post No 2757)

carlyle book 2

Translated by London swaminathan

Date: 26 April 2016

 

Post No. 2757

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Thomas Carlyle (1795-1881), Scottish Essayist, Historian, Philosopher, Satirical Writer and Teacher

 

carlyle stamp

தாமஸ் கார்லயில் பிரிட்டனின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்; பெரிய தத்துவ அறிஞர், வரலாற்று அறிஞர்; அங்கத எழுத்தாளர், ஆசிரியர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

அவர் சிறுவராயிருந்தபோது வீட்டையும் மற்ற குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவருடைய தாயாரும் தந்தையும் அருகிலுள்ள மார்க்கெட்டுக்குச் சென்றனர். அன்று குளிர் அதிகமாயிருந்தது. அந்தக் குளிரைத் தாங்கும் அளவுக்கு ஆடையில்லாத பிச்சைக்காரன் ஒருவன் உடல் நடுங்க, பசியால் மெலிந்து, நடக்கமுடியாமல் தள்ளாடிக் கொண்டே வந்தான். கார்லயிலின் வீட்டிற்கருகில் வந்து நின்றான். அவனது தாங்கமுடியாத, தரித்திர நிலைமையைக் கண்ட கார்லயிலின் மனம் உருகியது.

 

உடனே கார்லயில், எனது தாய் தந்தையர் எனக்கு அவ்வப்போது கொடுத்த காசுகளை நான் மண் உண்டியலில் போட்டு சுவரின் உச்சியில் மறைத்து வைத்திருக்கிறேன். இப்போது அதை எடுத்துவந்து, அதை உடைத்து அதிலிருக்கும் காசுகளைத் தருகிறேன் என்று சொல்லி அவ்வாறே அவனிடம் கொடுத்தார். இதை கார்லயிலே ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதால்தான் நமக்குத் தெரியும்.

thomas carlyle

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் அவரது திறமையை அறிந்த ஆசிரியர், அவருடைய தந்தையை அழைத்து உமது பிள்ளையை எடின்பரோ பல்கலைக்கழகத்துக்கு படிப்பதற்கு அனுப்புங்கள். அவன் உயர் படிப்பில் மிகவும் அக்கறையுள்ளவனாகக் காணப்படுகிறான் என்றார்.

 

தாமஸ் கார்லயிலின் தந்தையான ஜேம்ஸ் கார்லயில் அதிகம் படித்தறியாதவர். இருந்தபோதிலும் தன் மகனை எடின்பர்க் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்தார். அவரது கிராமத்தைச் சேர்ந்தோர், உன் மகன் படித்துவிட்டு அடங்காப்பிடாரனாக வந்து உம்மையே அடிப்பான் என்று சொல்லி எள்ளி நகையாடினர். ஆனால் அவரோ, அந்தப் பொறாமைக்காரர்களின் பேச்சைக் கேட்கவில்லை.

 

ஒரு நாள் மகனை எடின்பரோவுக்கு வழியனுப்புவதற்காக தாயும் தந்தையும் அவனுடன் ஊர் எல்லை வரை நடந்து வந்தனர். பின்னர், தந்தை ஏற்பாடு செய்த ஆளுடன் எடின்பர்க் நகரத்துக்கு நடந்தே சென்றார். அவர் நூறு மைல் தூரம் நடந்தே வந்து எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

On_Heroes_and_Hero_Worship

விடுமுறையின்போது மகன் வீட்டுக்கு வருவதை அறிந்தவுடன் பல மைல்தூரத்துக்கு நடந்து சென்று மகனை எதிர்கொண்டு அழைத்துவருவார்.1814 ஆம் ஆண்டு அவர் பல்கலைப் படிப்பை முடித்தார்.

பின்னர் ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதினார். பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவர் எழுதிய புத்தகம் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது.அரசியர் விமர்சனங்களை அங்கத நடையில் எழுதுவதில் வல்லவர்.

 

—சுபம்—

பொன்னியின் செல்வனில் எத்தனை எழுத்துக்கள்? (Post No 2755)

ponni1

Written  BY S NAGARAJAN

Date: 25 April 2016

 

Post No. 2755

 

 

Time uploaded in London :–  13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

pooni2

“பொன்னியின் செல்வனின் எத்தனை எழுத்துக்கள்?”

 

“பத்தொன்பது லட்சத்தி பதினாலாயிரத்தி நானூறு எழுத்துக்கள்!”

 

“அடடே! அதில் உள்ள சொற்கள் எத்தனை?”

 

“நாலு லட்சத்து ஏழாயிரத்து நூற்றி நாற்பத்தியேழு.”

 

“அட, அதில் இடம் பெற்றுள்ள வாக்கியங்கள்? அத்தியாயங்கள் எத்தனை?”

 

 

“61333 வாக்கியங்கள் 293 அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளன?”

 

 

“அடடே, போகிற போக்கில் ஓர் எழுத்துச் சொற்கள் எத்தனை. இரண்டு எழுத்துச் சொற்கள் எத்தனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவீர்களா?”

 

 

“நிச்சயமாக!

 

அதில் வரும் ஓர் எழுத்துச் சொற்கள் 2220

இரண்டு எழுத்துச் சொற்கள் 40606

மூன்று எழுத்துச் சொற்கள் 78705

நான்கு எழுத்துச் சொற்கள் 101573

ஐந்து எழுத்துச் சொற்கள் 69321

ஆறு எழுத்துச் சொற்கள் 44348

ஏழு எழுத்துச் சொற்கள் 30217

எட்டு எழுத்துச் சொற்கள் 19220

ஒன்பது எழுத்துச் சொற்கள் 9445

பத்து எழுத்துச் சொற்கள் 5830

ப்தினொன்று எழுத்துச் சொற்கள் 2961

ப்ன்னிரெண்டு எழுத்துச் சொற்கள் 1438”

 

kalki stamp

“போதும், போதும் நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?”

 

“என் பெயர் க.சீனிவாசன். அறிவியல் அலுவலர். கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.”

 

“எப்படி இவ்வளவு நுணுக்கமாக அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கிறீர்கள்?”

 

“அதில் ஒன்றும் சிரமம் இல்லை! இந்த நெடிய புதினத்தைச் சென்னை குரோம்பேட்டையிலுள்ள AUKBC தரவு உள்ளீடு செய்து இணணயதளத்தில் வழங்கியிருக்கிறது. எனவே எனது ஆய்வுக்குத் தேவையான தரவைப் பெறுவதில் சிக்கல் எழவில்லை.”

 

“நீங்கள்  மேற்கொண்டு என்ன செய்தீர்கள்?”

 

“தர்வுகளை அலசுவதற்குத் தேவையான நிரல்களை மட்டும் கணிப்பொறிக்கென எழுத வேண்டியிருந்தது.”

 

“உங்கள் ஆய்வின் முடிவில் என்ன கண்டு பிடித்தீர்கள்?”

ponni3

“ஏறக்குறைய நான்கு லட்சம் சொற்கள் கொண்டுள்ள இந்தப் புதினம் ஏ 4 அளவுத்தாளில் அச்சிட்டால் சுமார் 900 பக்கங்கள் வரும். அதில் பதினொன்றாயிரத்திற்கும் மேலான சொலவளத்தை கல்கி பயன்படுத்தியுள்ளார் என அறிய முடிகிறது.

 

 

புதினத்தில் உரையாடல் இடம் பெற்றிருப்பதை ஓரெழுத்து ஒரு  மொழி வாயிலாகவும் ஒரு சொல் வாக்கியங்கள் மூலமாகவும் அறிய இயலும். நீண்ட சொல் அமைப்புகளையும் நீண்ட வாக்கிய அமைப்புகளையும் கொண்டு நூலாசிரியரின் நடையை ஒருவாறு தெளியலாம்.”

 

 

“ஆஹா! அருமை! இதற்கு மேல் கொண்டு என்ன செய்யலாம், இந்த ஆய்வில்?”

 

“ஒரு நூலாசிரியர் வாலிபப் பருவத்தில் எழுதும் போது உள்ள சொல்லாட்சிக்கும் முதிர்வுப் பருவத்தில் அவர் சிந்தனை செம்மையுறும் போது  படைக்கப்படும் புதினங்களில் உள்ள சொல்லாட்சிக்கும்  வேறுபாடு இருத்தல் கூடும். அறிவுத் தேடலில் ஒரு கட்டத்தில் சொல்வ்ளம் உச்சம் பெறுவதாகவும் மொழிப்பயன்பாடு இறுகுவதாகவும் (fossilation or crystallaization) அறிஞர்கள் உரைக்கின்றனர். இக்கூற்றின் தன்மையை மெய்ப்பிக்க நூலாசிரியரின் புதினங்களைக் காலவரிசைப்படுத்தி ஆய்வு செய்தல் மேலும் பயன் தரக்கூடும்!”

 

“சபாஷ்!சீனிவாசன் அவர்களே! கல்கியின் வாசகர்கள் உங்களைப் பெரிதும் பாராட்டுவார்கள். எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆய்வின் மூலமாக ஒரு பெரும் உண்மையை தமிழ் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். பெரும் ஆய்வுகளின் ஆரம்பப் பணியை கணினி எளிதாக்குகிறது. மிகக் கஷ்டமான சொற்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகளை அது அனாயாசமாக அள்ளி வீசுகிறது. இது முந்தைய காலத்தில் தமிழ் அறிஞர்களால் பல்லாண்டு உழைப்பின் மூலமாகவே பெறப்பட்டது, இப்போது கணினியின் ஒரு சொடுக்கின் மூலமாகப் பெறப் படுகிறது. அந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து அற்புதமான் ஆய்வுகளைச் செய்ய முடியும் என்பதை உங்கள் ஆய்வால் உணர முடிகிறது. கம்பன், பாரதி, சங்க இலக்கியம் ஆகியவற்றில்  இப்படி கணினி மூலமாகப்  தரவுகள் பெறப்பட்டால் தமிழகத்தில் ஒரு புதிய அறிவுப் பேரலை எழும்பும் என்பதில் சந்தேகமே இல்லை!”

*

ஆய்வாளர் திரு க.சீனிவாசனின் ‘கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சொல்லாட்சி’ என்ற கட்டுரையின் அடிப்படையில் மேலே கண்ட கற்பனை உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தக் கட்டுரை வளரும் தமிழ் என்னும் புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரை. பல நல்ல கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூல் பதிப்பாசிரியர்கள் சா.கிருட்டினமூர்த்தி, தி.மகாலட்சுமி.சு.நரேந்திரன் ஆகிய முனைவர்களால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ponni4

 

அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

 

நல்ல தமிழ் வளர நல்ல ஆய்வு வேண்டும். நல்ல முனைவர்கள் வேண்டும். இருண்ட தமிழகத்தில் மினுக் மினுக் என்று ஒரு சின்ன ஒளி கண்ணுக்குப் புலப்படுகிறது.

கீற்றொளி பெரும் ஜோதியாக மாறட்டும்!

************