நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்? (Post No 2586)

happy 3

Written by S Nagarajan

 

Date: 1st March 2016

 

Post No. 2586

 

Time uploaded in London :–  8-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து வாழ்வியல்

 

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

.நாகராஜன்

 IMG_2726

ஹிந்து இலக்கியம் வெற்றி இலக்கியமே

ஹிந்து இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான வாழ்வியலாகும்.

ஆனால் அவை பல லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் பொதிந்துள்ளபடியால் எளிதில் பெறுதல் சிறிது கடினம்! ஆகவே, அவற்றை அன்றாடம் அறவோர் மக்களுக்குக் கூறி வந்தனர்.

 

ஆனால் இன்றைய நடைமுறையில் அந்த பழைய கால குரு குல முறை மற்றும் கதா ப்ரவசனங்கள் இல்லை. காடுகளும் பாழ்பட்டுப் போயின; கதை சொல்லும் மண்டபங்களும் பாழாகி இடிந்து வீழ்ந்துள்ளன.

ஆகவே ஆர்வமுள்ளோர் தேடித் தேடி அவற்றைத் தாமே தொகுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

 

 

நான் ஏன் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

ஒரு சின்ன எடுத்துக் காட்டாக, ஒரே ஒரு பொருள் பற்றி சில அறிவுரைகளைஅறவுரைகளை இங்கு பார்ப்போம்.

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

இது சாத்தியம் தானா? சாத்தியமே!

 

 happy4

நாரதர்ஸமங்கர் ஸம்வாதம்

பீஷ்மரிடம் தர்மர் ஏராளமான விஷயங்களை அவர் மரணப்படுக்கையில் இருக்கும் சமயம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அதில் சாந்தி பர்வத்தில் 292ஆம் அத்தியாயத்தில் வரும் ஒரு சிறிய பகுதி இது.

நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தில் (ஸம்வாதம் என்றால் அர்த்தமுள்ள உரையாடல்!) நாரதர், ஸமங்கரை நோக்கி, “எப்பொழுதும் மனதில் சந்தோஷமடைந்து சோகமற்றவர் போல இருக்கிறீர்என்று சொல்லவே அவர் பதிலாகச் சொல்வதில் ஒரு பகுதி:-

 

நான் சகலமான பிராணிகளிடமும் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கப் போகின்றதையும் அவைகளின் தத்துவங்களையும் அறிகின்றேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

நான் உலகத்தில் காரியங்களின் ஆரம்பங்களையும், மறுபடி பயன்களின் உற்பத்திகளையும் நானாவிதமான பயன்களையும் அறிவேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

அவருடைய பயன் தரும் விளக்கம் தொடர்கிறது.

 

 IMG_2750

ஹிந்து ஞானம்சந்தோஷமடையும் வழி பற்றி!

ஹிந்து இலக்கியங்களின் சாரத்தை மைசூரிலிருந்து வெளியான வாரப் பத்திரிகையான ரேஷனலிஸ்ட் (Rationalist) இதழில் ஜி.ஆர். ஜோஸ்யர் (G.R.Josyar) தொகுத்து வெளியிட்டு வந்தார். இதைப் படித்தவர்கள் வியந்தனர். இப்படி ஒரு ஹிந்து பொக்கிஷம் இருக்கிறதா என்று!

 

மைசூர் மஹாராஜா, சர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர் இதைப் புத்தகமாக வெளியிட ஆலோசனை கூறினர். அதை ஏற்று ஜி.ஆர், ஜோஸ்யர்சான்ஸ்க்ரீட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்) வெளியிட்டார்.

அதில் இடம் பெறும் ஒரு விஷயம்நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

 

“I do not get feverishly concerned with what is happening to me now, or what may happen to me tomorrow. Therefore I live quite happily.”

“I do not fear the approach of old age or death, or rejoice over conquests and achievements. Therefore I live quite happily.”

“I look upon gains as they come and losses as they come as the same as my two hands. Therefore I live quite happily.”

 

“When I acquire some fresh knowledge from time to time, it brings me wisdom, and not conceit. Therefore I live quite happily.”

“Though I am powerful I do not forcefully defraud others. Though poor I do not cherish wants. Therefore I live quite happily.”

 

“I rejoice in the happiness of others, and sympathize with the miserable. The proud find in me a companion. Therefore I live quite happily.”

“I do not look on anyone as my own or any as aliens. Therefore I live quite happily.”

 

“I view all things with steadfast, genuine and friendly interest. Therefore I live quite happily.”

 the_laughing_buddha_by_mdhamka-d5qlx26

இதற்கான எமது தமிழாக்கம்:-

எனக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியோ அல்லது நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியோ நான் பதட்டத்துடன் கவலைப்படுவதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

முதுமை அல்லது சாவு வருகிறதே என்று நான் பயப்படுவதும் இல்லை, அல்லது வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி எண்ணி மகிழ்வதுமில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

வருகின்ற லாபங்களையும் வருகின்ற நஷ்டங்களையும் என் இரு கைகளைப் போல நான் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

அவ்வப்பொழுது நான் புதிய விஷயம் பற்றிய அறிவைப் பெறும் போதெல்லாம் அது எனக்கு ஞானத்தை நல்குகிறது. இறுமாப்பை அல்ல. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

நான் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை. நான் ஏழையாக இருந்த போதும் கூட தேவைகளை மனதில் வைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் மற்றவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். துன்பப்படுவோரின் மீது இரக்கமுறுகிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

 

நான் யாரையும் எனக்குச் சொந்தமானவராகவோ அல்லது எனக்கு அன்னியராகவோ நினைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் அனைத்தையும் நேர்மையுடனும், சுத்தமாகவும், நட்புடன் கூடிய ஆர்வத்துடனும் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 happy2

சந்தோஷமாக வாழ வழி தெரிகிறதல்லவா!

வாழ்வோம்; வளர்வோம்; அனைவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்!

****************

 

 

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் அழைப்பு! (Post No 2578)

kakakaka

Written by S Nagarajan

 

Date: 27  February 2016

 

Post No. 2578

 

Time uploaded in London :–  5-38 AM

 

( Thanks for the Beautiful Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

kaka2

நையாண்டி மடல் எண் 2

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: மெய் சிலிர்க்க வைக்கும் அழைப்பு!

.நாகராஜன்

 

 

அன்புடையீர்.

நிச்சயமாக உடனே அடுத்து ஒரு மடலை அனுப்பும் எண்ணமே எமக்கு இல்லை. ஆனால் முதல் மடல் வெளியானவுடன் எமக்கு வந்த தொலைபேசி அழைப்பு அந்த எண்ணைத்தை மாற்றி விட்டது.

தொலைபேசியில் பேசியதும் அவரோ இவரோ இல்லை. நீதியைக் காப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நீதித்துறையில் களம் இறங்கியவர்.

 

அவர் உலக நீதித் துறை வரலாற்றிலேயே ‘தனி ஒரு” இடத்தைப் பிடித்தவர்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இப்போது உலக அரங்கிலும் கூட அனைவரும் அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கின்றனர்.

உலக நீதித்துறை வரலாற்றில் யாருமே சாதிக்க முடியாதபடி அப்படி இவர் சாதித்த “தனி ஒரு” சாதனை என்று ‘முட்டாள்தனமாகக்’ கேள்வி கேட்கிறீர்களா?

 

 

நமது கழகத்தின் முதல் விதியே கேள்வி யாரும் கேட்கக் கூடாது என்பது தான்!

யாமே கேள்விகளை எழுதி யாமே பதில் எழுதி சாமானியனுக்கு அறிவுறுத்துகிறார் போல அதை ஊடகங்களுக்கு கொடுப்பதே எமது வாடிக்கை.

இருந்தாலும் போனால் போகிறது என்று இந்த ஒரு முறை உங்களை மன்னித்து விடுகிறேன்.

 

 

இவர் சாதித்த சாதனை என்ன தெரியுமா?தன் மீதிருந்த குற்றச்சாட்டுகளைத் தானே விசாரித்து தானே தனக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டது தான்! தான் நிரபராதி என்று அந்தத் தீர்ப்பில் இருப்பது நியாயம் தானே!)

இப்படி உலக வரலாற்றில் தன்னைத் தானே விசாரித்து அற்புதமாகத் தீர்ப்பு வழங்கியதாகச் சரித்திரம் உண்டா?

கோட்டா முறைப்படி உள்ளே வந்து சகல சலுகைகளையும் இவர் கடந்த பல்லாண்டுகளாக அனுபவித்தவர்.

 

 

இவர் மீது பல வயிற்றெரிச்சல்காரர்கள் ஊழல் புகார்களை அனுப்பவே நீதியரசர்கள் இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவர் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டனர்.

ஆனால் வேலை ஒன்றையே தாரக மந்திரமென்று கொண்ட இவர் தன்னைத் தானே விசாரித்துக் கொண்டார்.

இவர் எம்மை அழைத்து முமு,கவில் தம்மை இணைத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் மெய் சிலிர்த்துப் போனோம். உடம்பெல்லாம் புல்லரித்தது..

 

கழகத்தில் வக்கீல் பிரிவு உண்டா, அதற்கான தலைமைப் பதவி தனக்கு கிடைக்குமா என்று கேட்டார்.

 

kaka4

பிரமித்துப் போன யாம்  ‘உடனே தந்தோம்’ என்றோம். பிரிவு  உண்டா என்று கேட்காதீர்கள். கழகத்தின் முதல் நோக்கமே பிரிவினைக்கு வித்திடுவது தான். இதற்கு எத்தனை பிரிவுகள் வேண்டுமோ அத்தனை பிரிவுகளும் இங்கு உண்டு. பிரிவில் ஏற்படும் விளைவுகளினால் நம் கஜானா நிரம்ப வேண்டும்; அதிகாரம் வர வேண்டும் என்று பதில் தந்தோம். அவர் மகிழ்ந்து போனார்.

 

 

இனி கழக உடன்பிறப்புகள் இவர் காட்டிய வழியின் படி எந்த ஊழல், இதர சிவில் கிரிமினல் குற்றங்களைச் செய்தாலும் நீதி மன்றம் செல்ல வேண்டாம்.

தமக்குத் தாமே விசாரித்து  (நிரபராதி என்று) நீதி வழங்கிக் கொள்ளலாம். இது எப்படி ஒரு ஆறுதலான செய்தி!

முட்டாள்களே! இந்த இனிய செய்தியை வேண்டி விரும்பி உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறோம்.

 

அன்புடன்

தலைவர்

வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546)

two pillars

Written  by London swaminathan

 

Date: 16  February 2016

 

Post No. 2546

 

Time uploaded in London :–  9-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு மனிதனுக்கு ஒரு மாகாண கவர்னர், தவறுதலாக, அநியாயமாக மரணதண்டனை கொடுத்துவிட்டார். பாரசீக நாட்டில் (தற்போது ஈரான்) இது நடந்தது. மரண தண்டனைக் கைதிக்கு நம்பிக்கை போகவில்லை. இறுதிவரை முயன்று பார்ப்போம். நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா!

 

அந்த ஊரில் மரண தண்டனைக் கைதிகளை ஒரு தூணில் கட்டிவைத்து, தலையை ஒரே வெட்டாக வெட்டி விடுவர். நேரம் நெருங்கியது. கொலை வாளுடன் வந்தான் தண்டனையை நிறைவேற்றும் வெட்டியான். அப்போது, மரண தண்டனைக் கைதி ஒரு வேண்டுகோள் விடுத்தான். எனக்கு இந்தத் தூணில் மரணம் வேண்டாம். அடுத்த தூணில் கட்டிவைத்து என்னை வெட்டு என்றான்.

 

வெட்டியானுக்கு ஒரே சிரிப்பு. “ஏனப்பா? சாகப் போகிறவனுக்கு தலைக்கு மேலே, வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? உனக்கு எதற்கு அடுத்த தூண்?” என்று நகைத்தான். கைதியோ மீண்டும் மீண்டும் வேண்டினான். “சரி, போ! உன் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று அடுத்த தூணுக்கு அழைத்துச் சென்று கட்டிக் கொண்டிருந்தான். இதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அந்த நாட்டு அரசன், அந்தப் பக்கமாகச் செல்லுகையில் இது என்ன  பெருங்கூட்டம்? எனக்குத் தெரியாமல் எந்நாட்டில் என்ன நடக்கிறது? என்றான். உடனே எல்லோரும் கைதியின் விநோத வேண்டுகோளைத் தெரிவித்தனர். அரசனுக்கும் ஆச்சரியம். கூட்டத்தை விலக்கி, மரண தண்டனைக் கைதியுடன் பேசினான். அவன், தான் நிரபராதி என்றும், தனக்கு மரணதண்டனை அளித்தது தவறு என்றும் அழகாக எடுத்துரைத்தான். உடனே அவனை விடுதலை செய்ய அரசன் உத்தரவிட்டான்.

நம்பிக்கையை இழக்கக்கூடாது;முயற்சி திருவினை ஆக்கும்.

 

Xxx

cow

சண்டை பிறந்தால் தீர்வு பிறக்கும்!

ஒரு ஊரில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். ஒரு குடியானவன், பக்கத்து ஊரில் ஒரு பசு மாட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதைப் பார்த்தான். இந்த மாட்டை இன்று இரவு திருடி விடுவோம் என்று அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். போகும் வழியில் ஒரு ஆவியும் (பேய்) அவனைப் பின் தொடர்ந்தது. அது, அந்தக் குடியானவனைக் கொல்ல வேண்டுமென்று திட்டமிட்டது.

 

அந்தக் குடியனவனைப் பின் தொடரும் திருடனிடம் சென்று தனது திட்டத்தை தெரிவித்தது. திருடனுக்கு ஏக சந்தோசம். நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று ஜாலியாகப் பேசிக்கொண்டே சென்றான்.

 

குடியானவனின் வீடும் வந்தது. அவன் மாட்டைக் கட்டிவிட்டு, மனைவி மக்களைச் சந்தித்து அளவளாவினான். திருடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். முதலில் பேயை (ஆவி) அனுப்பி, குடியானவனைக் கொல்லச் செய்தால் வீட்டிலுள்ள எல்லோரும் அழுது புலம்புவார்கள். எல்லோரும் விழித்துக் கொண்டால் பின்னர் மாடு திருடும் வேலை நடக்காது என்று எண்ணி, பேயே! நீ உன் திட்டத்தை  எனக்குப் பின்னால் நிறைவேற்று; கொஞ்சம் பொறு — என்றான்.

 

பேய்க்கும் ஒரு சந்தேகம். இந்தத் திருடன் போய் முதலில் பசுவைத் திருடினால் அது, “மா, மே” என்று கத்தும். எல்லோரும் விழித்துக் கொண்டால் என் பாடு, திண்டாட்டமாகிவிடும் என்று எண்ணி, “ஏ, திருடா, கொஞ்சம் பொறு. நான் போய் என் வேலையை முதலில் முடிக்கிறேன்” என்றது.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்தவே, அது வாக்குவாதமாகி மாறி கைகலப்பில் முடிந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் விழித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டனர். ஊரே கூடிவிட்டது. திருடனும் பேயும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே, ஊர் மக்கள் அனைவரும் கூடி, அவர்களை ஓட ஓட விரட்டினர். குடியானவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

 

–சுபம்–

 

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******

 

 

 

பேசத் ‘தெரிந்தவன்’! (Post No.2536)

Politics 074-0089

Compiled by london swaminathan

 

Post No. 2536

Date: 13th February 2016

 

Time uploaded in London:- 8-30 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜோக்குகள்; சிரிப்பு வராவிட்டால் என்னைக் கோவிக்காதீர்கள்!

 

ஒரு பிரசங்கியின் பிரசங்கத்தைக் (சொற்பொழிவு) கேட்க அநேக ஜனங்கள் கூடினார்கள். முதலில் பிரசங்கியார் (சொற்பொழிவாளர்) நான் பேசப்போகும் விஷயம் தெரியுமா? என்றார். ஜனங்கள் தெரியாதென்றனர். அப்படியானால் நான் சொல்லிப் பிரயோஜனமில்லை என்று சொல்லி பிரசங்க மேடையைவிட்டுக் கீழே இறங்கினார்.

 

சிறிது நேரம் பொறுத்து மறுபடியும்  மேடையேறி, “இப்பொழுது நான் கூறுவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். ஜனங்கள் தெரியும் என்றனர்.  அப்படியானால் நான் கூற வேண்டியதில்லை என்று சொல்லி, முன்போல் கீழே இறங்கி ஒதுங்கி நின்றார்.

 

சிறிது நேரம் கழித்து மீண்டும் மேடையேறி, “இப்பொழுது நான் சொல்லப்போவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். சிலர் தெரியுமென்றும், வேறு சிலர் தெரியாதென்றும் சொன்னார்கள். “அப்படியானால் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கீழே இறங்கிப் போய்விட்டார்.

Xxx

donkey

இவனா எனது மகன்?

ஒருவன் தன் மகன் மீது கோபித்துக்கொண்டு, அவனை நடுத்தெருவில், “கழுதை மகனே!” என்று அடிக்க ஆரம்பித்தான். உடனே தெருவில் போன கழுதை ஒன்று, “அட! இவனா எனது மகன்?” – என்று கூச்சலிடத் துவங்கியதாம்.

 

Xxx

 

தாடியைப் பறிகொடுத்த முட்டாள்!

ஒருவன் இரவில், கதைப் புத்தகமெடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். அதில் நீண்ட தாடியும் சின்னத் தலையும் யாருக்குண்டோ, அவன் முட்டாளென்று எழுதியிருந்தது. அதைக்கண்டு தன் தலையையும், தாடியையும் தடவிப்பார்த்து அப்படியேயிருக்க, “ ஓகோ, ஈதென்ன ஆச்சரியம்1 நாம் தலையைப் பெருக்க  முடியாது, தாடியை வேணுமென்றால் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் அறிவாளியாகலாமென்று எண்ணி கததரிக்கோலைத் தேடினான்; கிடைக்கவில்லை.

 

கடைசியில் அவன் தாடியைக் குறைப்பதற்காக, படுக்கைக்கு அருகிலிருந்த தீபத்தில் தாடியின் நுனியைக் காட்டினான். தாடி முழுதும் குப்பென்று பற்றி எரிந்து, முகம் வெந்து, தாடி கோவிந்தாவாய்ப் போயிற்று. புத்தகத்தில் சொல்லியிருப்பது மெய்தான், நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க சொல்லிப்புட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டான்.

beard

Xxx

எனக்கு அம்மா வேண்டாம், ஐயா!

ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின் வாசலில் நின்று, அம்மா, பசிக்குதே; கொஞ்சம் சோறு இருந்தா போடுங்க” என்றான்.  வீட்டெஜமானன் அம்மா, வீட்டில் இல்லை, போ, போ” என்றான். அதற்குப் பிச்சைக்காரன், “நான் பிச்சை கேட்டேனே தவிர, அம்மாவைக் கேட்கவில்லை, ஐயா” என்று கூறிச் சென்றான்.

–சுபம்-

 

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–

 

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532)

IMG_3156 (2)

Written by london swaminathan

 

Post No. 2532

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 8-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3147

 

IMG_3154 (2)

IMG_3157 (2)

 

புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு  உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு  முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.

 

நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.

 

இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.

எனது வேறு சில பழைய கட்டுரைகள்:

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

 

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

தொல்காப்பியம் பற்றி சுமார் பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

 

–சுபம்–

ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும் (Post No. 2531)

viveka lanka

Written by S Nagarajan

 

Date: 12  February 2016

 

Post No. 2531

 

Time uploaded in London :–  8-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

akbar-1

Picture of Akbar

12-2-2016 பாக்யா இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

 

ச.நாகராஜன்

 

 

 

முகலாய மன்னர்களிலேயே வித்தியாசமானவர் அக்பர். அவர் வாழ்நாள் இறுதி வரை கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார்.

அவர் பயணப்படும் போதெல்லாம் கங்கை ஜலம் குடம் குடமாகப் போதுமான அளவு கூடவே எடுத்துச் செல்லப்பட்டது.

அக்பருக்கு சூரியனிடத்தில் அளவு கடந்த பக்தி. தினமும் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம்.

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்ததால் மிக்க ஆரோக்கியத்துடன் அவர் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட அக்பரிடம் ஸ்வாமி விவேகானந்தருக்கு அலாதி ஈடுபாடும் மரியாதையும் உண்டு.

 

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிக்குப் பின்னர் ப்ரிவ்ராஜகராக தன்னந்தனியே தான் யார் என்று சொல்லாமல் ஸ்வாமி விவேகானந்தர் பாரதம் முழுவதும் சுற்றி வந்தார்.

அவரது புத்தி கூர்மையையும் வேதாந்தத்தை அவர் விளக்கும் விதமும் அவரது பரந்த அறிவையும் கண்டு வியந்து அவரிடம் மரியாதை கொண்ட சமஸ்தான மன்னர்கள் பலர்.

அவர்களுள் ஒருவர் கேத்ரி மன்னர். ஸ்வாமிஜியிடம் அலாதி பக்தி கொண்ட அவர் தன்னை அவருடைய சீடனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

 

 

ஸ்வாமிஜிக்கும் அவரது அன்னைக்கும் இருநூறு ரூபாயை அவர் மாதம் தோறும் உதவித் தொகையாக அனுப்பி வந்தார் என்றால் அவரது பக்தியை நாம் நன்கு ஊகிக்க முடியும்.

ஆக்ராவுக்கு அடுத்து உள்ள சிகந்தராவில் அக்பர் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென ஒரு அற்புதமான சமாதியை அமைக்கலானார். 119 ஏக்கர் பரப்பில் இது 1600ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. அக்பரே கட்டிடத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்தார். 1605இல் அவர் மறையவே அவரது மகன் ஜிஹாங்கீர் அதை 1613இல் முடித்தார்.

 

samadhi of akbar

Picture of Tomb of Akbar

ஆனால் அவுரங்கசீப் காலத்தில் ஜட் ராஜாவான ராஜாராம் ஜட் அநத சமாதியை முற்றிலுமாக அழித்தார். சமாதி முழுவதுமாக  கொளுத்தப்பட்டது. அக்பரின் எலும்புகளையும் அவர் எரித்தார்.

சமாதி சிதிலமடைந்தது. இதை பிரிட்டிஷ் அரசு காலத்தில்  லார்ட் கர்ஸன் பிரபு சிறிது சீரமைத்தார்.

இந்த சிதிலமடைந்த சமாதியை ஸ்வாமிஜி தன் சுற்றுப் பயணத்தின் போது பார்த்தார். அதுவோ கேத்ரி மன்னரின் ஆளுகையில் இப்போது இருந்தது.

 

தொண்டை அடைக்க கண்களில் நீர் அரும்ப, “அக்பரின் சமாதி இந்த நிலையில் இருக்கலாமா? மேற்கூரையில்லாமல் சூரிய வெளிச்சத்திலும் மழையிலும் இதை பார்க்கவே என் மனம் பொறுக்கவில்லையே” என்று அடிக்கடி அவர் கேத்ரி மன்னரிடம் கூறுவார்.

 

 

ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேத்ரி மன்னரின் மனதில் ஆழப் பதிந்தது. குருநாதரின் ஆசை அல்லவா அது!

விவேகானந்தர் பின்னர் அமெரிக்கா சென்று சர்வமத மகாசபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று விட்டார். ஸ்வாமிஜியை அறிந்த மன்னர்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. மக்களிடமோ பெரும் எழுச்சி ஏற்பட்டது.

 

 

யாருமறியாத சாதாரண சந்யாசியாக பாரதத்தை விட்டுச் சென்றவர் அகில உலகப் புகழுடன் திரும்பி வந்தார்.

ஒரு நாள் கல்கத்தாவிற்கு வரும் வழியில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. கேத்ரி மன்னர் அக்பரின் சமாதியை புனருத்தாரணம் செய்து வந்ததாகவும், ஒரு நாள் சாரம் முழுவதுமாக கீழே சரிந்து விழவே உயரத்திலிருந்த மன்னரும் விழுந்து மாண்டார் என்றும் ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார்கள்.

மிகவும் மனம் வருந்தினார் விவேகானந்தர்.

 

vivekaa maly

நீண்ட காலமாகத் தான் விரும்பியபடியே சமாதி நன்கு அமைக்கப்பட்டதை நினைத்து மகிழ்வதா? அல்லது தன்னால் உத்வேகமூட்டப்பட்ட தன் சீடர் கேத்ரி மன்னர் இதற்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி வருந்துவதா!

நெடுநாள் அவர் மனம் கலங்கி வருந்தி இருந்தார்.

 

 

“கேத்ரி மன்னர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து இறந்தார். எனவே என்னைச் சுற்றி அனைத்தும் இருளாக உள்ளன”  என்று எழுதினார் அவர்.

 

அக்பரின் சமாதியைப் புனரமைக்க உத்வேகம் ஊட்டிய மாபெரும் வீ ரத் துறவி விவேகானந்தர் என்றால் அந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்த மாபெரும் மன்னராக கேத்ரி மன்னர் திகழ்கிறார்!

*******