புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

gomutra

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1438; தேதி 26 நவம்பர், 2014.

1.மதுரையில் எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம், கொஞ்ச காலம் புலித்தோலில் உடகார்ந்து கொண்டு வீட்டில் தியானப் பயிற்சிகளைச் செய்து வந்தார். பின்னர் மான் தோலில் உட்கார்ந்து தியானம் செய்து வந்தார். பெரிய ரிஷி முனிவர்களின் படத்தைப் பார்த்தால் கீழே மான் தோல் அல்லது புலித்தோல் இருப்பதைக் காணலாம். ஏன்? ஏன்?

2.எனது தாயார் ராஜலெட்சுமி சந்தானமும் எங்கள் வீட்டு சமையல்கார மாமி சுப்புலெட்சுமியும் தினமும் இரவில் நாங்கள் எல்லோரும் சாப்பீட்டு முடித்த பின்னர் பசுஞ் சாணத்தை வைத்து அடுப்பை மெழுகுவர். ஏன்? ஏன்?

3. எனது தங்கை தினமும் காலையில் வாசலைத் தெளிக்கும் போது பசுஞ் சாணத்தைக் கலந்து தெளித்துவிட்டு ஜியோமெட்ரி பாக்ஸ், ரூலர், அடிஸ்கேல் என்றும் எதுவும் இல்லாமல் கன கச்சிதமாக சதுரங்கள், கோணங்கள் வட்டங்களுடன் மாக் கோலம் போடுவாள். ஏன்? ஏன்?

4.நாங்கள் மதுரை வடக்குமாசி வீதி யாதவர் தெருவில் வசித்தோம். எல்லோரும் மாட்டுச் சாணியையும், எரு வரட்டியையும் வாங்கிச் செல்வர். எங்காவது பசு மாடு மூத்திரம் பெய்தால் ஓடி வந்து கையில் ஏந்தி தலையில் ப்ரோக்ஷித்து / தெளித்துக் கொள்வர். ஏன்? ஏன்?

cow urinating

5. எங்கள் தெரு வழியாக வாரத்துக்கு ஒரு முறையாவது யானைப் பாகன் மீனாட்சி கோவில் யானை, அல்லது பெருமாள் கோவில் யானையை அழைத்து வருவான். நாங்கள் எல்லோரும் வீட்டு வாசலில் அரிசி, வெல்லம் வைத்துக் கொண்டு காத்திருப்போம். அதை வாங்கிக் கொண்டு நாங்கள் காசு கொடுத்தால் எங்களை மேலே ஏற்றிக் கொண்டு கொஞ்ச தூரம் போய் வருவான். கூடவே காசு கொடுத்தால் ஒரு சொம்பில் அல்லது வாளியில் வைத்திருக்கும் தண்ணீரைத் துதிக்கையால் உறிஞ்சி எங்கள் மீது —கஜ லெட்சுமிக்கு யானை அபிஷேகம் செய்வது போல — எங்கள் எல்லோரையும் “குளிப்பாட்டி” விடுவான். ஏன்? ஏன்?

6. தெருவில் போகும் யானை அங்கேயே காலைக் கடன்களை முடித்தால் அனைத்து சிறுவர்களும் ஓடிச் சென்று அந்த யானை ‘லத்தி’ மீது கால்களை வைத்து மிதித்து ஆனந்திப்பார்கள். காலில் சேற்றுப் புண் உடைய பெண்களும் வந்து மிதிப்பார்கள். ஏன்? ஏன்?

elephant-poo-11

7.எனக்குப் பூணூல் போட்ட போது, வீட்டு புரோகிதர் (சாஸ்திரிகள்/ வாத்தியார்) வந்து பூணூலில் ஒரு மான் தோலை முடித்து வைத்தார். சின்னப் பையானாக இருந்தால் கோவணத்தைக் கட்டி கையில் அரசங் குச்சியையும் கையில் கொடுத்து, இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும் இடத்தில் முஞ்சிப் புல்லால் கட்டியும் விடுவார். (எனக்கோ இரண்டு எருமை மாடு வயதானபோதுதான் பூணுல் கல்யாணம் நடந்தது!!!)

8. நான் லண்டனில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன். எங்கள் ஹாரோ பகுதியிலும் சரி, கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியிலும் சரி, நரிகள் அதிகம். அது காலலையில் தோட்டத்தில் வந்து ஊளையிட்டால் என் மனைவி ஓடிப் போய் அதன் மூஞ்சியில் விழிப்பாள்/ முழிப்பாள். நானும் அவள் சொன்னதற்காக நரி முகத்தில் முழிப்பேன். ஏன்? ஏன்?

9. எனது சக மாணவர்களில் ஒருவன் சேதுபதி உயர் நிலைப் பள்ளிக்கு வரும்போது கழுத்தில் தங்கச் சங்கிலியில் புலிப்பல் அணிந்திருப்பான். இன்னும் சில பெரியவர்கள் புலி நகத்தை அணிந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏன்?

cow urine cola

10. எங்கள் வீட்டில் (அகத்தில் = ஆத்தில்) என்ன பூஜை புனஸ்காரம் நடந்தாலும் வீட்டு வாத்தியார் — (அதாவது ஐயர், அதாவது புரோகிதர், அதாவது சாஸ்திரிகள்) — வந்து கையில் பவித்ரம் என்று ஒரு தர்ப்பைப் புல் மோதிரத்தை அணியச் சொல்லுவார். தர்ர்பைப் புல் இல்லாமல் நல்லதோ கெட்டதோ எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள். ஏன்? ஏன்?

11.என் மனைவி கர்ப்பமாக இருந்த போது வளைகாப்பு / சீமந்தத்துக்கு வந்த புரோகிதர் அவளுடைய தலையில் – நடு வகுட்டில் — ஒரு முள்ளம் பன்றி முள்ளால் கோடு போடச் சொன்னார் (அக்யூப்ரெஸ்ஸர்?)– ஏன்? ஏன்?

12.குருவாயூருக்குப் போனபோது 70, 80 யானைகள் வசிக்கும் யானைகள் காப்பகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றோம். யானை பாகர்கள், ரகசியமாக, இடது கையில் காசு வாங்கிக் கொண்டு வலது கை வழியாக யானை வாலின் முடியைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். திருஷ்டி வராது- நோய் வராது என்றெல்லாம் சொல்லி எல்லோரும் வாங்கினர். எனக்கோ யானையின் மீது பரிதாபம் அதிகரித்தது. இப்படி ஆளுக்கு ஒரு முடி வாங்கினால் யானைக்கு வாலே இருக்காதே! யானை முடிக்கு அப்படி என்ன கிராக்கி! ஏன்? ஏன்?

Cow-Urine

13.முக்கியப் பண்டிகைகளில் பிராமணர்கள் ‘’பஞ்ச கவ்யம்’’ சாப்பிட வேண்டும். இதில் பால், வெண்ணை, தயிர், பசுஞ் சாணம், பசு மூத்திரம் – ஆகிய ஐந்தும் மிகச் சிறு அளவில் கலந்திருப்பர். உடல்-பொருள்-ஆவியைச் சுத்திகரிக்கும் அதிசய மருந்து என்பர். நானும் கஷ்டப்பட்டுதான் சாப்பிட்டேன். இது ஏன்? ஏன்?

14.பழைய கால ரிஷி, முனிவர்கள் எல்லோரும் கமண்டலம் என்னும் சிறிய கலசத்தில் தண்ணீர் கொண்டு செல்லுவர். இது தாகத்தைத் தணிக்கவா? அல்லது வேண்டியோருக்கு அபூர்வ வரங்களைக் கொடுத்து வேண்டாதவர்களைச் சபிக்கவா? தண்ணீருக்கு அதிசய சக்தி உளதோ! ஏன்? ஏன்?

இப்படி நூற்றுக் கணக்கான பழக்க, வழக்கங்களை, சம்பிராதாயங்களைச் சேர்த்துக் கொண்டு போனால் பட்டியல் நீண்டு விடும்.

எல்லா “ஏன்”?—களுக்கும் சுருக்கமான விடை:– இந்துக்கள் வாழ்வு இயற்கையோடு இணைந்தது — இயைந்தது. இதில் குறிப்பிட்ட எல்லாப் பொருட்களும் “ரீசைக்கிள்” ஆகி மீண்டும் நம் உபயோகத்துக்கே வரும். .புற ச்சூழலை பாதிக்காது.
coffee elephant poo

பசுஞ் சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றுக்கு உள்ள “பாக்டீரியா எதிர்ப்பு சக்தி” பற்றி நமக்குத் தெரியும். இருந்த போதிலும் முறையாக அறிவியல் சோதனைக் கூடங்களில் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டால் வேற்று மதத்தினரும், கலாசாரத்தினரும் பயன்படுத்துவர்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ……….. ………….. இந்து விஞ்ஞான சங்கம் வைத்து எல்லாவற்றையும் ஆராய — நெடு நாளைய ஆசை எனக்கு.

தர்ப்பைப் புல் பற்றியும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த – குறிப்பாக கிரகண கால – ஆய்வுகள் பற்றிப் படித்தேன். முறையான – சோதனைச் சாலை ஆய்வுகள் நடத்த வேண்டும், முடிவுகளை உலகமே ஏற்க வேண்டும்!

selous-game-reservesmoking elphant poo

மான் தோல் சத்வ குணத்தை உண்டாக்கும் என்றும், புலித்தோல் ஒருமுக மனக் குவியத்தையும், குறிக்கோளை அடைவதில் முனைப்பையும் உண்டாகும் என்றும் சொல்லுவர்.

புலிப்பல் தாலி முதலியன குறித்து சிலப்பதிகாரம், பெரிய புராணம் முதலிய நூல்கள் பேசும். வீரம், மன உறுதி, லட்சியத்தை அடையும் முனைப்பு, வேகம் ஆகியவற்றை அளிக்க வல்லது புலி நகம், புலிப்பல் தாயத்து என்பர்.

பசு மூத்திரம் இப்பொழுது பாட்டில்களில் கூட விலைக்கு வந்துவிட்டது. யானை லத்தி பற்றி ஆராயாவிட்டாலும் யானை லத்தியுடன் வரும் காப்பிக் கொட்டைக்கு மதிப்பு அதிகம். யானை லத்தி காப்பி ஒரு கோப்பை ரூ.300! (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்). யானை லத்தியை புகையிலை போல சிகரெட் செய்து புகைப்பர் ஆப்பிரிக்க மலைஜாதி மக்கள். அது மட்டுமல்ல ஆப்பிரிக்க பபூன் குரங்குகள், யானை லத்தியைச் சாப்பிடுகின்றன. நமக்கும் முன்பாக மிருகங்களும் பழங்குடி மக்களும் இது போல பல ரகசியங்களைக் கண்டுபிடித்து வைத்திருக் கின்றனர். உலகிலேயே இரண்டு பிராணிகளின் மலம் தான் நாற்றம் எடுக்காமல் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை எனத் தெரிகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

தண்ணிரின் சக்தி பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. வரம் கொடுக்கவும், சபிக்கவும் ஏன் தண்ணீரை பயன் படுத்தினர்? பிராமணர்கள் தினமும் முக்கால சந்த்யா வந்தனத்தில் தண்ணிரை மட்டுமே அளித்து காயத்ரியைத் த்ருப்திப் படுத்துவது ஏன்? இறந்து போன முன்னோர்களுக்கும் எள்ளும் நீரும் மட்டும் இரைத்து அவர்களை த்ருப்திப் படுத்துவது எப்படி? இவைகளுக்கு நம்பிக்கை அடிப்படையில் பதில் தரலாம். விஞ்ஞான் அடிப்படையில் பதில்தர ஆய்வு நடத்த வேண்டும் “இந்து விஞ்ஞான சங்கம்” அமைத்து ஆராய்வதே இதற்கு விடைதரும்.

அண்மையில் குதிரைகள் தோன்றியதும் இந்தியாவில்தான் என்று அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் உலகம் முழுதும் நாகரீகத்தைப் பரப்பிய பெருமை இந்தியர்களுக்குதான் என்பது உறுதியாகிறது. இரும்பின் பயனைக் கண்டுபிடித்து அதை உலகம் முழுதும் பரப்பியதற்கு டில்லியில் நிற்கும் குப்தர் கால இரும்புத் தூண் சான்று பகரும்.
Nara_Narayana_Deogarh (1)
Gupta Period Statues of Nara-Narayana at Deogarh. Look at the deer on the chest of one of the figures.

மனுவும் கூட கறுப்பு நிற மான் (கிருஷ்ணசாரம்) எங்கு இருக்கிறதோ அதுதான் புண்ய பூமி. மற்றதெலாம் மிலேச்ச பூமி என்பார். சங்க இலக்கியமும் அராபியர்கள், யவனர்கள், ரோமானியர்களை கடுஞ்சொல் யவனர் என்று ஏசுகின்றன. அந்த கறுப்பு நிற மான் தோலை கிருஷ்ணாஜினம் என்பர். அதையே பிராமணச் சிறுவர் பூணூலில் அணிவர்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே – பாரதியார்.
–சுபம்–

சதுரங்க பந்தம் – 8

poets of india scan 2
Picture of Poets and Writers of India

தமிழ் என்னும் விந்தை!
Post No 1435 Dated 25th November 2014
By ச.நாகராஜன்

காலப்போக்கில் பல யாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பழைய மரபு வகைப் பாடல்கள் பலவற்றை இயற்றுவதற்கு கவிஞர்களே இன்று இல்லை. ஆனால் நல்ல வேளையாக சதுரங்க பந்தத்தைப் பாடலில் அமைத்துப் பாட வல்லவர்கள் இன்றும் இருக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் திகழ்பவர் புலவர் பா.முனியமுத்து. சித்திரக் கவிகளைப் பற்றி ஆய்வு நடத்தி ஒரு நூலையே வெளியிட்டுள்ளார். சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற ஆய்வுக்காக அவர் பிஹெச்.டிபட்டமும் பெற்றுள்ளார். 19 கவிதை நூல்களை எழுதியுள்ள இவரின் புனைப் பெயர் உவமைப் பித்தன். 130க்கும் மேலான கவியரங்குகளுக்குத் தலைமை வகித்துள்ள இவர் 800க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

இவர் இயற்றிய சித்திரக் கவிகள் செந்தமிழ்த்தாய் திருவாயிரம் – தொகுதி 1 என்ற பெயரில் சிலேடைப் பதிப்பகம், எம்.ஆர்.நகர், சென்னை -178 ஆல் 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இரண்டு சதுரங்கப் பந்தப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்றில் நான்கு பக்கங்களிலும் ஈற்றடி ஒன்றாக இருப்பது போல அமைந்துள்ளது. இன்னொன்று ஆனையடி சதுரங்க பந்தம்.

முதல் பாடலைப் பார்ப்போம்:

மாரி விரிமனமே மாமழைப்போய் வானழைமாதே

நீரிடத்தால் மாதவம் நீண்டதொரு – வாரிதமிழ்

ஆரியத்தை வெல்லும் அமிழ்மித மாழைமரி

மாரி மழைமா தமிழ்


bandham new8

கவிதையைப் படிக்க 1,2,10,9,17,18,19,11,3,4,12,20,28,27,26,25,33,34,35,36,37,29,21,13,5,6,14,22,30,38,46,45,44,43,42,41,49,50,51,52,53,54,55,47,39,31,23,15,7,8,16,24,32,40,48,56.64.63.62,61,60,59,58,57 ஆகிய கட்டங்கள் வழியே செல்ல வேண்டும்.

பாடல் முழுதுமாக அமைந்து விட்டது. அத்துடன் நான்கு பக்கங்களிலும் “மாரி மழைமா தமிழ்” என்ற கடைசி அடியும் அமைந்து விட்டது. (ஈற்றடி மேலே சதுரங்க அறைகளில் மஞ்சள் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஈற்றடி மேலே இடமிருந்து வலமாகவும் கீழே வலமிருந்து இடமாகவும் அமைந்திருக்கிறது. அதே போல வலப்பக்கம் மேலிருந்து கீழாகவும் இடப்பக்கம் கீழிருந்து மேலாகவும் அமைந்துள்ளது

தமிழின் பெருமையைப் பேச வரும் கவிஞர் சம்ஸ்கிருதத்தை வென்ற தமிழ் என்று குறிப்பிட்டிருப்பது காலத்தின் கட்டாயம் போலும்!

அடுத்த பாடலைப் பார்ப்போம்:

பாரத மாத்தேரி லூவரும் பண்தாயே வாணியகம்

காரிகை தந்தே மகிழ சமத்துவ மித்தரையில்

மாருத மாண்புபோல் பாதம்சீர் மான நிலமிசையே

தாரணி பாநறவு பூங்கா மலர்த மிழணியே

bandham 8 a

பாடலைப் படிக்க 1,10,19,28,37,46,55,64,63,62,61,60,59,58,57,49,50,51,52,53,54,55,56,48,47,46,45,44,43,42,41,33,34,35,36,37,38,39,40,32,31,30,29,28,27,26,25,17,18,19,20,21,22,23,24,16,15,14,13,12,11,10,9,1,2,3,4,5,6,7,8,15,22,29,36,43,50,57 ஆகிய கட்டங்கள் வழியே செல்ல வேண்டும்.

மஞ்சள் வண்ணம் கொண்டிருக்கும் குறுக்குக் கட்டங்களில் “பாரதமாத்தேரிலூ” என்பதும் “மலர்தமிழணியே” என்பதும் பொருந்தி வந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

ரிக்வேதத்தில் நன்மாறன்?

NarmerPalette

Research paper written by London Swaminathan
Research article No.1433; Dated 24 November 2014.

ரிக்வேதத்தில் 160 அரசர்களின் பெயர்களும், பல இனங்களின் பெயர்களும் உள்ளன. சிந்து சமவெளி நாகரீகம் பற்றிப் புத்தகம் எழுதும் எவரும் வேதங்களைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. அது வேத கால நாகரீகம் என்று வாதாடுவோருக்கும் இல்லை என்று எதிர்ப்போருக்கும் முக்கிய நூலாக விளங்குகிறது. இதை அப்படியே பாதுகாப்பது நமது கடமை. உலகின் மிகப் பழைய நூல் என்பதால் உலகமே இதில் கவனம் செலுத்துகிறது.

ரிக்வேதத்தில் காணப்படும் 160–க்கும் மேற்பட்ட மன்னர்களின், இனக் குழுக்களின் பெயர்களை இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் நேற்று கொடுத்துள்ளேன். 160 பெயர்களும் வேண்டுவோர் அதில் காண்க. அதில் உள்ள ஒரு சில பெயர்கள் குறித்த சுவையான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

ஒரு மன்னன் பெயர் நார்மாற (ன்) (வேதிக் இண்டெக்ஸ்—வால்யூம் 1—பக்கம் 446 – கீத் & மக்டொனெல்). இது ரிக்வேத இரண்டாவது மண்டலத்தில் (2-13-8) வருகிறது.

வழக்கம்போல ரிக்வேதத்தை மொழி பெயர்த்த வெள்ளைக்காரர்கள் மனம் போன போக்கில் உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள். லுட்விக் என்பார் இந்தச் சொல் ஊர்-ஜயந்தி என்னும் கோட்டையின் இளவரசர் பெயர் என்பார். ராத் என்பவரோ இல்லை, இது ஒரு அசுரனின் பெயர் என்பார். கிரிப்பித் என்பவரோ இது மிகக் கடினமான பகுதி, என்னால் மொழிபெயர்க்க முடியவில்லை. நர்மாற என்பது ஒரு பேய், பிசாசு, அசுரன், தீய சக்தியாக இருக்கலாம் என்பார்.

XIR68327
Strange animal in Nar Mer palette of Egypt

(ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்களில் கிரிப்பித் கொஞ்சம் நேர்மையான பேர்வழி. அவர் புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் —- இது எனக்குப் புரியவில்லை. இது தெளிவில்லை, இது மொழிபெயர்க்க முடியாதது — என்று ஒப்புக் கொள்கின்றார். மற்றவர்கள் மனம்போன போக்கில் மொழி பெயர்த்துள்ளனர். சில இந்தியர்கள் ‘பி.எச்டி’. பட்டம் வாங்க நேர் மாறாக எழுதி இருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்மணி எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று மொழிபெயர்ப்பார். அவர் மன நிலை அதற்கு மேல் உயரவில்லை!! அவர் புத்தகத்தை பிரபல புத்தக நிறுவனங்கள் வெளியிடும். அதை இந்து விரோத சக்திகள் எங்கள் லண்டன் பல்கலைக் கழகம் உள்பட பல இடங்களில் பாடப் புத்தகமாக ‘’சிலபஸ்’’ போட்டுள்ளனர்!!!

இந்துக்களுக்கு எதிராக உலகில் எத்தனை வேலைகள் நடை பெறுகின்றன என்பது இங்குள்ளவர்களுக்குத் தான் தெரியும். என்னிடம் தமிழ் படித்த வெள்ளைக்கார பெண்மணி ‘’சாமியாடும் மாரியாத்தாக்கள்’’ பற்றி ஆராய தமிழ் படிப்பதாகச் சொன்னார். ஆனால் அவர் நடை உடை பாவனை அத்தனையும் இவர் ஒரு உளவாளியோ என்று என்னை எண்ணச் செய்தது. இந்தியாவைக் கடவுள் காப்பற்றட்டும்!! சாமியார் மடம் முழுதும் உளவாளிகள்!!! நிற்க!

palette_of_narmer

மீண்டும் நன்மாறன் அவர்களைச் சந்திப்போம். நான் 40 ஆண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடித்த மிக முக்கியமான விஷயம் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தன என்பதே. இதை நான் சொல்வதற்கும் முன்னர் பரஞ்சோதி முனிவர் சொல்லிவிட்டார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் மறைமுகமாகச் சொல்லிவிட்டனர்.

ஆக நரமாறனை ஒருவர் பேய் என்றும் ஒருவர் மன்னன் என்றும் சொல்லும்போது நானும் சில கருத்துக்களைச் சொல்வதில் பிழை ஏதேனும் உண்டோ?

நார்மாற என்பதை நர + மேரு = மனிதர்களில் சிகரம் எனலாம். நன் மாறன் எனலாம். இதே பேரில் எகிப்தில் ஒரு மன்னர் இருந்தார். அவர்தாம் எகிப்தில் முறையாக ஆட்சியைத் துவக்கிய மன்னர் என்பர். அதில் பல சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

Map_of_Vedic_India

1.அவர் பெயர் மனிஸ் ( அதாவது மனு). முதல் மன்னன்!!

2.இவர் ஆஹா என்பவரின் மகனாக இருக்கலாம் அல்லது ஆஹா இவர் மகனாக இருக்கலாம் என்று இரு வேறு கருத்துகள் உள. ஆஹா என்பது கந்த்ர்வர் பாடகர் இருவரில் ஒருவர். ஹாஹா, ஹூஹூ என்ற இருவர் பெயர்களை அமரகோசம் சொல்கிறது.

3.இதைவிடப் பெரிய ஒற்றுமை, இந்த முதல் அரசரின் காலமும், மாயா இன மக்களின் முதல் ஆண்டும் — எல்லாம்— கலியுகத்தின் துவக்க ஆண்டக இருக்கிறது!!(கி.மு.3100).

4.நாலாவது பெரிய ஒற்றுமை — ரிக் வேத துதியில் வரும் டெவில், டீமன் (பிசாசு, அசுரன்) என்பதெல்லம் எகிப்திய நரமேர் சிற்பத்தில் உள்ள விநோத மிருகத்தைக் குறிப்பதோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது ( இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் ).

5.நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் சேர மன்னர் பட்டங்களான பொறையன், குட்டுவன், ஆதன் என்பன எகிப்திய மன்னர் பெயர்களில் ஒட்டிக் கொண்டிருப்பதையும், ராமசேஷன் (ராம்செஸ்) என்ற பெயர் எகிப்தில் 13 மன்னர்களுக்கு இருப்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1932 ஆம் ஆண்டு மைலாப்பூர் பிரசங்கங்களில் சொன்னதையும் எழுதி இருக்கிறேன்.

6.நான் எழுதிய பத்துப் பதினைந்து எகிப்திய கட்டுரைகளை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில்தான் நான் ‘’நரமேர்’’ என்ற எகிப்திய மன்னனை ரிக்வேத நாரமாறனுக்கு ஒப்பிடுவது சரியே என்பது விளங்கும்.

talageri good

இது ஒரு புறமிருக்க ஸ்ரீகாந்த் தலகரி என்ற அறிஞர் எழுதிய ‘’ரிக்வேதம்—ஒரு வரலாற்று ஆராய்ச்சி’’ என்ற புத்தகத்தில் யாரும் மறுக்க முடியாத வாதங்களைத் தருகிறார். பரதன் என்ற மன்னன் பெயரில் நம் நாடு பாரதம் என்று அழைக்கப்பட்டதை மஹாபாரதம் சொல்லுவதை ( மஹாபாரதம் 1-69-49) ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். இந்த பரதன் ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதியில் குறிப்பிடப்படுகிறார். அவர் வம்சாவளியில் வந்த பத்து மன்னர்களின் பெயரை ஸ்ரீகாந்த் தலகரி பட்டியல் இட்டுள்ளார். இந்தப் பத்து மன்னர்கள் பெயர்களுக்கு இடையே எவ்வளவோ மன்னர்கள் இருந்திருக்கலாம். ரிக் வேதம் என்பது வரலாற்றுப் புத்தகம் அல்ல என்பதால் அவர்கள் எல்லோரையும் நாம் அறிவதற்கில்லை என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். ஆக அந்த ஒரு வம்சாவளியை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 500, 600 வருடங்களுக்கு இந்தப் பாடல்கள் உருவானது புரியும். சுருங்கச் சொல்லி விளக்க வேண்டுமாயின் ரிக்வேத முதல் பாடலிலிருந்து கடைசி பாடல் வரை — 400 முனிவர்களுக்கு மேல் பாடிய காலம் என்பதே — பல நூறு வருடங்களைக் காட்டிவிடும்.

ரிக் வேதம் தரும் பரதன் வம்சாவளி:

பரதன்
தேவவாத
ஸ்ருன்ஜய
வத்ரியஸ்வ
திவோதாச
பிரதர்தன
பிஜாவன
தேவஸ்ரவஸ்
சுதாச
சஹதேவ
சோமக

four veda names

இந்தப் பட்டியலில் உள்ள பிரதர்தன என்னும் மன்னன் பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகிறது. புராண மன்னர் பட்டியலில் உளது. சிரியா-துருக்கி பிரதேசத்தை கி.மு 1400இல் ஆண்ட மிடன்னிய மன்னர் பட்டியலில் உளது. ஆனால் எல்லோரும் ஒருவர் என்று எண்ணி விடக்கூடாது. பிரதர்தன என்ற பெயர் அவ்வளவு சிறப்புடைத்து!!

தமிழில் பழ மறையைப் பாடுவோம் – பாரதி
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதி.

—-சுபம்—

மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?

indaca

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1431; தேதி 23 நவம்பர், 2014.

இந்திய வரலாற்றை விரைவில் மாற்றி எழுத வேண்டும். இதற்காக பல் துறை வித்தகர் அடங்கிய இந்திய வரலாற்று சங்கம் அமைக்கவேண்டூம். வேத ஆராய்ச்சிக்கு என ஒரு சங்கம் அமைக்கவேண்டும். ஏனெனில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்வோர் பக்கத்துக்கு பக்கம் வேதங்களை மேற்கோள் காட்டித்தான் எழுத முடிகிறது. அஸ்கோ பர்போலாவின் டிசைபரிங் தெ இண்டஸ் ஸ்க்ரிப்ட் Deciphering the Indus Script புத்தகத்தைப் பார்த்தால்—படித்தால் இது விளங்கும். வேதங்களோ வெகு வேகமாக அழிந்து வருகிறது. எல்லோரும் வேதத்தைப் புத்தகத்தை வைத்துப் படிக்கத் துவங்கி விட்டனர். மனப்படாமாக வைத்துக் கொள்ளும் சக்தி மிகவும் குறைந்து விட்டது. போன் நம்பரைக் கேட்டால்கூட அந்த போனை on ‘ஆன்’ செய்து அதைப் பார்த்துப்படித்தாதால்தான் தன்னுடைய போன் நம்பர் தெரியும்!!

உலகின் மிகப் பழைய (Rig Veda) ரிக் வேதப் புத்தகத்தில் 150 அரசர்களின் பெயர்கள் மற்றும் மிகவும் பழமையான – அருமையான ரஹசியங்கள் உள. நிற்க

கட்டுரைத் தலைப்பு அர்ரியன், மெகஸ்தனீஸ், பிளினி என்று சில புரியாத கிரேக்க, ரோமானிய பெயர்களைச் சொல்கிறதே ! இவர்கள் யார்?

யார் இந்த அர்ரியன்?
அர்ரியன் (கி.பி.92-175):- கிரேக்க நாட்டு வரலாற்று அறிஞர்—தத்துவ வித்தகர். துருக்கியில் பிறந்தார். ஏதென்ஸில் இறந்தார்.

யார் இந்த பிளினி?
பிளினி மூத்தவர், பிளினி இளையவர் என்று இருவர் உண்டு. இருவரும் சொந்தக்காரர்களே. ரோமானிய எழுத்தாளரும் தத்துவ ஞானியுமான மூத்த பிளினி கி.பி. 23- கி.பி.79 க்கு இடையே வாழ்ந்தார். இளைய பிளினி ரோம் நகரில் மாஜிஸ்டிரேட் பதவி வகித்தார் புத்தகங்கள் எழூதினார். வாழ்ந்த காலம் கி.பி. 61- கி.பி.112.

யார் இந்த மெகஸ்தனீஸ்?
இவர் மகத சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் சந்திர குப்த மௌர்யனியிடம் செல்யூகஸ் நிகோடரின் தூதராக இருந்தவர். அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியன் காலத்தவர். இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இண்டிகா என்ற நூலை எழுதியவர். ஆனால் நமக்கு அந்த நூல் கிடைக்க வில்லை. மற்றவர்கள் இங்குமங்கும் காட்டிய மேற்கோள்கள் மூலம் சிற்சில பகுதிகள் கிடைத்தன. வாழ்ந்த காலம் கி.மு..350- கி.பி.290.
arrian
Picture of Arrian

இந்த மூவரும் அவரவர்தம் துறைகளில் கரை கண்டவர்கள். மேலும் இந்து ஆதரவு பாரதீய ஜனதா கட்சியையோ, இந்து விரோத திராவிடக் கட்சி களையோ, கடவுள் விரோத மார்கஸீய கட்சிகளையோ சாராதவர்கள். ஆகையால் இவர்களை யாரும் சந்தேகிக்க முடியாது. இவர்கள் மூவரும் தங்கள் நாடுகளுக்கும் மேலாக அல்லது சமமாக வைத்து இந்தியாவைப் பாராட்டுபவர்கள். கிருஷ்ணரையும் ஹெர்குலீஸையும் ஒன்று என்று கருதியவர்கள். மெகஸ்தனீஸ் என்பவரோ மதுரை மீனாட்சியின் புகழையும் பாடியவர்!

அதிசயத்திலும் அதிசயம்—உலக மஹா அதிசயம்— இந்தியாவுக்கு வந்த எந்த வெளி நாட்டு யாத்ரீகர்களும் வெள்ளைக்கரர்கள் எட்டுக் கட்டிய ஆரிய—திராவிட பொய்மைக் கதைகளை குறிப்பிடவில்லை. ஆரிய—திராவிட வாதம் பொய்மை வாதம் என்பது இதன் மூலம் வெள்ளிடை மலையென விளங்கும்.

இந்த மூவரும் இந்திய வரலாறு பற்றிக் கூறும் செய்தி மிகவும் வியப்பானது. இவர்கள் மூவரும் அவர்கள் காலத்துக்கு முந்திய சுமார் 150 அரசர்கள் வரை குறிப்பிடுவர். இது 2000 ஆண்டுகளுக்கு முன், இந்தியர்கள் என்ன நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று காட்டுகிறது. நாம் இப்பொழுது படிக்கும் வரலாற்றுப் புத்தகம் வின்ஸென் ட் ஸ்மித் என்பவர் எழுதியது. அக்காலத்தில் பைபிள் பிரசாரகர்கள் உலகம் என்பது கி.மு.4004 அக்டோபர் 23 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்குப் பிறந்தது என்று சொல்லியதை நம்பியவர். இந்தியாவுக்கு மன்னர்களும் இல்லை, வரலாறும் இல்லை எல்லாம் புத்தர் காலம் முதற்கொண்டே வந்தன — என்று கதை எழுதியவர்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

ஆனால் அர்ரியன் என்பவர் மஹா பாரத கால மன்னர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறுகிறார். 153 மன்னர்கள் 6042 ஆண்டுகள் ஆண்டதாக அர்ரியனும், 154 மன்னர்கள் 6451 ஆண்டுகள் ஆண்டதாக பிளினியும் கூறுகின்றனர். இந்தக் கணக்கெல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முந்தையது என்பதைக் கருத்திற்கொண்டால் இன்னும் 2000 ஆண்டுகளை நாம் சேர்க்கவேண்டும்.

கிருஷ்ணருக்கும் மௌர்ய சந்திர குப்தனுக்கும் இடையே 138 மன்னர்கள் ஆண்டதாக மெகஸ்தனீஸ் சொல்லுகிறார். ஒரு மன்னருக்கு 35 ஆண்டு ஆட்சிக்காலம் வைத்தாலும் 4830 ஆண்டுகள் ஆகும். மெகஸ்தனீஸோ நமக்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கண்ணபிரான் ஆட்சி செய்தது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

இவர்கள் கூறுவதில் கொஞ்சம் முரண்பாடுகள் இருந்தாலும் எவ்வளவு பழமையானது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் நம்பினர் என்பது புலனாகும்.

பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூல் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டுகளும், சேரன் செங்குட்டுவன் 55 ஆண்டுகளும், ஆடுகோட்பாட்டு சேரலாதன் 35 ஆண்டுகளும் ஆண்டதாகச் செப்பும். மேலைநாட்டு ரத்தக்களரிகளையோ மொகலாய சாம்ராஜ்ய படுகொலைகளையோ பழைய இந்திய வரலாற்றில் காண முடியாது. ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் சொன்னது போல வயதான மன்னர்கள் தாங்களாகவே வலிய வந்து தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து வானப்ரஸ்தம் சென்றனர்.

pliny-the-elder-greek-philosopher
Pliny the Elder

கபிலரும் புறநானூற்றுப் பாடல் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிப் பேசுவார். கபிலரே 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவருக்கு 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன் இருங்கோவேளின் முதல் தலைமுறை துவாரகையிலிருந்து யாதவர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்தது.

பாணினி தனது இலக்கண சூத்திரங்களில் பாரத்வாஜரின் 21-ஆவது தலைமுறை, கௌதம மஹரிஷியின் 53-ஆவது தலைமுறை என்றெல்லாம் எடுத்துக்காட்டுவார். பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் நீண்ட குருமார்கள் பட்டியல் உள்ளது. எல்லாப் புராணங்களிலும் மன்னர் பரம்பரைகள் 130 முதல் 150 வரை உள்ளது.

ஆக பாணினி, கபிலர், அர்ரியன், பிளினி, மெகஸ்தனீஸ், உபநிஷத், புராணங்கள் ஆகிய அனைத்தையும் நம்பி நம் வரலாற்றைத் திருத்தி எழுதுவது நம் கடமை. முதலில் இப்போதுள்ள வரலாற்றுக்கு அருகிலேயே இவைகளின் மாற்றுக் கருத்துகள் என்று கொடுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. நமது தலைமுறை மாணவர்கள் அவைகள மேலும் ஆராய்ந்து புது வரலாறு எழுதட்டும். இதன் மூலம் தமிழர்தம் பழமையும் பெருமையும் மேலும் ஓங்கும்.

Ancient-India-as-De

குதிரை போட்ட வெடிகுண்டு

குதிரை பற்றிய அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நேற்று எல்லா இந்தியப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. ஆரிய – திராவிட வாதம், உளுத்துப்போன கட்டை என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தச் செய்தி அந்த வாதத்தில் மீது வீசிய வெடி குண்டாகும்.

குதிரையும் காண்டாமிருகமும் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கணத்தில் தோன்றிய பிராணீகள் என்பதை மஹாராஷ்டிர மாநில நிலக்கரிச் சுரங்கத்தில் கிடைத்த படிம அச்சு எலும்புகளைக் கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளனர். நாம்தான் உலகிற்கு பசுமாடுகளையும், குதிரைகளையும் அறிமுகப்படுத்தி மனித குலத்தை நாகரீகப் படுத்தினோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது நாள் வரை ஆரிய—திராவிடம் பற்றிப் பிதற்றி வந்தோர், சைபீரியாவில் இருந்து குதிரை வந்ததா? அரேபியாவில் இருந்து வந்ததா? ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்ததா? என்று பி.எச்.டி பட்டத்துக்காக பொய்யுரைகளை எழுதி வந்தனர்.

சிந்து சமவெளி மக்களோவெனில், பசு மாடு, குதிரை ஆகியவற்றின் புனிதம் கருதி அவைகளை முத்திரையில் பொறிக்கவில்லை. காளை மாட்டை ஆயிரம் முத்திரைகளில் பொறித்த நம்மவர் ஒரு முத்திரையிலும் பசுவைப் பொறிக்கவில்லை. இது போலவே குதிரையும்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

அயஸ் என்பது பற்றி நான் முன்னரே சொல்லிவிட்டேன். தமிழர்கள் பொன் என்பதை தங்கத்துக்கும், இரும்புக்கும், ஐம்பொன் சிலகளில் உள்ள ஐந்து உலோகங்களுக்கும் பயன்படுத்தியது போலவே ரிக்வேதத்தில் அயஸ் என்பதைப் பயன்படுத்தினர். இதைச் சரியாக மொழி பெயர்க்காமல் இரும்பு என்று எழுதி காலக் கணக்கீட்டைப் பின்னுக்கு இழுத்தனர். உண்மையில் இரும்பு கண்டு பிடித்ததும் நாமே —– சிவபெருமான் எரித்த முப்புரங்களில் இரும்பு, தங்கம், வெள்ளி என்ற 3 கோட்டைகள் உள்ளன!
–சுபம்–

contact swami_48@yahoo.com

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை!

sapta mata - IVC
சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1428; தேதி 22 நவம்பர், 2014.

எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். நான் ஏற்கனவே எழுதிய எண் தொடர்பான கட்டுரைகளின் விவரங்கள் இறுதியில் உள்ளது. அந்தக் கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

ARV_INDUS_12484f

ஏழு கோடு உடைய சீப்பு எழுத்து

இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர். ஆனால் ரிக் வேதத்தைப் பொறுத்த மட்டில் ஏழு என்பது நல்ல பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ரிக் வேதம் உலகின் மிகப் பழைய வேதம். யார் சிந்து சமவெளி பற்றி புத்தகம் எழுதினாலும் இந்த வேதத்தைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. ஏனெனில் அதே பஞ்சாப் சமவெளியில்தான் வேதத்தின் முக்கியப் பகுதிகள் உருவாயின. சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கையில் அது சரியா தப்பா என்று கண்டறிய ரிக்வேதம்தான் உதவ முடியும். ஆகையால் இதை அப்படியே காப்பது நம் கடமை.

வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணுங்கள்:
சப்த ரிஷிக்கள்
தீயின் ஏழு நாக்குகள்
சப்த சிந்து (ஏழு நதிகள்)
பிருஹஸ்பதியின் ஏழு வாய்
சூரியனின் ஏழு குதிரைகள்
ஏழு புனித இடங்கள்
ஏழு குருக்கள்
வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள்
ஏழு புண்ய தலங்கள்
ஏழு புனித பாடகர்கள்
சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்)
ஏழு ஆண் குழந்தைகள்
எழு சூத்திரங்கள்
ஏழு சந்தஸ்கள்
ஏழு ஸ்வரங்கள்
விதை கருவில் உள்ள ந்ந்ழு சத்துப் பொருட்கள்
சப்த வத்ரி

சப்த வத்ரி என்னும் பெயருக்குப் பின் ஒரு கதை உண்டு. அவரை அவரது சகோதர்கள் தினமும் இரவு நேரத்தில் ஒரு அலமாரிக்குள் வைத்துப் பூட்டி விடுவர் என்றும் அவர் எந்தப் பெண்ணுடனும் குடும்ப உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே சகோதர்களின் நோக்கம் என்றும் இறுதியில் அவர் அஸ்வினி தேவர்களின் உதவியுடன் வெளியே வந்தார் என்றும் சொல்லுவர். இந்த சுவையான கதை அடையாளபூர்வ கதையாகும். அதாவது வறண்ட கோடையும் குளிரும் நீங்கி வசந்தகாலம் வருவதைக் குறிப்பதே இக்கதை. வேத கால ரிஷிகள் நாங்கள் மறை பொருளில்தான் பாடுவோம், பேசுவோம் என்று ஒரு மந்திரத்தில் கூறுவர். இதை அறிந்தே சங்க காலத் தமிழன் வேதங்களுக்கு ரஹசியம் (மறை) என்று பெயர் வைத்தான்.

InscriptH8205a_edited-1
சிந்துவெளியில் சீப்பு போன்ற எழுத்திலும் ஏழு கோடுகளைக் காண்க

சப்தகு என்று ஒரு வேத கால ரிஷி முனிவரும் உளர். இன்றும் சப்தரிஷி என்ற பெயர்களை நம் நண்பர்கள் இடையேயும் பார்க்கலாம். வான மண்டலத்தில் வலம் வரும் சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தையும் அதில் வசிட்டருடன் இணபிரியாது நிற்கும் கற்புக்கரசி அருந்ததியையும் சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் ஆறு, ஏழு இடங்களில் விதந்து ஓதுவதையும் முன்னரே பல கட்டுரைகளில் கண்டு மகிழ்ந்தோம்.

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்த்யாவந்தனத்தில் ஏழு ரிஷிகள் பெயரையும் சம்ஸ்கிருத யாப்பு இலக்கணத்தில் உள்ள ஏழு பெயர்களையும் சொல்லுவர். இது தவிர சப்தபதி, ஏழு கடல், ஏழு மலை, ஏழு நதி, ஏழு புனித நகரங்கள், ஏழு த்வீபங்கள் என்று ஏராளமாக ஏழு ஏழாக வகைபடுத்துவர்.

பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 ரிஷிகள்:
அத்ரி ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்ப, ஆங்கிரஸ ரிஷிகள்
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 செய்யுள் இலக்கண அணிகள்:
காயத்ரி, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பக்தி, த்ருஷ்டுப், ஜகதி
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 வேத காலக் கடவுள்கள்:
அக்னி, வாயு, அர்க்க (சூரியன்), வாகீஸ (பிருஹஸ்பதி), வருண, இந்திர, விஸ்வேதேவா:

இதுதவிர மேல் ஏழு உலகங்களில் பூர், புவர், ஸ்வர் என்று சொல்லுவர். ஆனால் அதன் பொருள் அதற்கு மேலுள்ள மஹர், ஜன, தபோ, சத்ய லோகங்களையும் உள்ளடக்கியதாகும்.

babylon-8
ஏழு ராக்ஷசர்கள் — பூதங்கள், பாபிலோனியா

ராமபிரான் ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைக்கும் பரீட்சையில் தேறியது பற்றியும் அவருக்கு ‘’குட் –பை’’ — சொல்லும் போது விபீஷணன் நினைவுப் பரிசாக ஏழு தங்க பனைமரங்கள் பொம்மையைக் கொடுத்தது பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இதே போல சங்கீத சப்தஸ்வர ரஹசியங்களையும் முன்னரே கண்டுவிட்டோம்.

திருமணத்தில் துவங்கும் சப்தபதி — ( ஏழு அடி நடந்து நட்பை உறுதி செய்து) — முதல் எல்லாவற்றிலும் ஏழு பிரதானம் ஆகும். கரிகால் சோழன் ரிக்வேதத்தில் சொன்ன படி எல்லோரையும் ஏழு அடி நடந்து சென்றுதான் வழியனுப்புவான் என்று சங்க இலக்கியம் செப்பும்:–

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

‘’கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டமும் சங்க கால மன்னர் செய்த யாகங்களும்’’ — என்ற எனது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கட்டுரையில் இது பற்றி எழுதியுள்ளேன்.

bronze-bells
பாபிலோய ஏழு பூதங்கள்

வள்ளுவன் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமைக்கும் (ஏழு பிறப்பு) பயன்படுவது பற்றி பாடிவிட்டான். ஆண்டாளோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் அடிமை என்று திருப்பாவையில் பாடுவாள். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனைச் சந்தித்து அவன் முன்னால் கான் விளை பரிசுப் பொருட்களைக் குவித்து வணங்கியபோது எங்கள் குலம் உனக்கு ஏழு தலைமுறைக்கு அடிமைப்பட்டது என்று பெருமைபடப் பேசுவர். ஏழு என்றால் மிகப் பல — பரிபூரணம் என்ற பொருளும் இவைகளில் தொனிக்கும்!

பாபிலோனியாவில் உள்ள ஏழு பூதங்கள் குறித்து 3000, 4000 ஆண்டு பழமையான பாடல்கள் உள்ளன. எந்தௌ ஆங்கிலக் கட்டுரையில் பாடல் முழுதும் உளது. சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் புலி தேவதை, பேய் முத்திரை, கோமுக யக்ஷன் (ஆட்டு முக தக்ஷன் – தக்ஷன் செய்த யாகக் கதை — போன்ற முத்திரைகள்) ஆகியவற்றை சிந்து சம்வெளி முத்திரிகளுடன் ஒப்பிடுவது நலம் பயக்கும். ஆராய்ச்சியை புதிய திசையில் கொண்டு செல்லும்.
–சுபம்–

demon indus
Gods from Indus 5
சிந்துசமவெளி பூத பேய் முத்திரைகள்

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

contact swami_48@yahoo.com
babylon demon
பாபிலோனியய பூதம் – சிந்து சமவெளிப் புலிப் பெண் பூத முத்திரை போன்றது

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!

blessing baba

கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23ஆம் தேதி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது.
Post No. 1425 dated 21st November 2014
Written by S Nagarajan

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!

By ச.நாகராஜன்
கல்வி அனைத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்கி விடலாம்! அன்பு, அனைத்தையும் தழுவும் அன்பு!அன்பில்லாத வாழ்க்கை சாவை விடக் கொடியது! –பாபா

பாபாவின் உபதேச உரைகள்
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதார தினமான நவம்பர் 23ஆம் தேதியன்று இறைவனின் சாந்நியத்தில் பல காலமாக புட்டபர்த்தி கோலாகலமாகத் திகழ்ந்து வந்ததை அணுக்க பக்தர்கள் அனைவரும் அறிவர்.

பகவானின் கையினாலேயே லட்டு பிரசாதத்தை ஏற்று மகிழ்ந்தோர் லட்சக் கணக்கில் உள்ளனர். அவர்கள் தங்களின் பாக்கியத்தை நினைந்து மகிழும் போதே இந்த அவதார தினத்தில் அவர் பூதவுடலுடன் நம்முடன் இல்லையே என்ற ஏக்கத்தையும் அடைவது இயல்பே!

ஆனால் பகவானின் கடந்த கால அருளுரைகளை நோக்கினால், அவர் தனது உபதேச உரைகளை பக்தர்கள் அனைவரும் திருப்பித் திருப்பி மனதில் ஏற்று கற்று அதன் படி நிற்பதையே விரும்பினார் என்பதை அறிவோம்.

சத்யம் சிவம் சுந்தரம் நான்கு பாகங்களில் அவர் வரலாற்றை விளக்கும் போது ‘சத்ய சாய் ஸ்பீக்ஸ்’ (சுமார் 42 தொகுதிகள்) அவரது உபதேச உரைகளை அள்ளித் தருகிறது.

baba and hanuman

புத்தி என்னும் பறவை
உபநிடதத்தை பாபா விளக்கும் பாங்கே தனி! அது இறைவனின் விளக்கமாயிற்றே!ஒரு உதாரண விளக்கத்தை மட்டும் இங்கே காணலாம்:

பத்து உபநிடதங்களில் ஒன்றான தைத்ரீய உபநிடதம் புத்தியைப் பறவையாக விவரிக்கிறது. ‘ச்ரத்தா’ அதனுடைய தலை. அதனுடைய வலது இறக்கை ‘ரிதம்’ – பிரபஞ்ச லயம். அதனுடைய இடது இறக்கை ‘சத்யம்’ – உண்மை. பறவையின் பிரதான உடல் ‘மஹத் தத்வம்’ – பேருண்மை. அதன் வால் யோகா. இப்படி ஐந்து பகுதிகளை அதன் முழு வடிவத்தில் கொண்டுள்ள புத்தி அசாதாரணமான சக்தியைக் கொண்டதாகும்.

ச்ரத்தையே முக்கியம்

இப்படி உபநிடதத்தை விளக்கும் பாபா ஒரு சிறிய கதையையும் கூறுகிறார் இப்படி:
ஒரு முறை விக்கிரமாதித்த மஹாராஜா பண்டிதர் சபையைக் கூட்டி ச்ரத்தா, மேதா, புத்தி இந்த மூன்றில் எது மிகவும் முக்கியமானது என்று கேட்டான்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறவே குழப்பம் தான் நிலவியது. இறுதியில் ஒருவாறாக சமாதானம் அடைந்த அவர்கள் ஒரு மனதாக மேதா – அதாவது திறமை தான் மிக முக்கியமானது என்று தங்கள் முடிவைத் தெரிவித்தனர். ஆனால் விக்கிரமாதித்தனோ மிகவும் ஏமாற்றம் அடைந்தான்.

பண்டிதர்களை நோக்கி அவன், “ஓ! பண்டிதர்களே! ஆஸ்தா என்றால் ஆசக்தி . ச்ரத்தா என்றாலோ மிக்க உற்சாகம், நம்பிக்கை ஆகும். ஸ்வஸ்தா என்றால் ஸ்திரத்வம் அதாவது உறுதி. ஆசக்தியும் ஸ்திரத்வமும் இல்லாத மேதா பயனற்றது. தன்னுடைய திறமையையும் புத்திசாலித்தனத்தையும் மட்டுமே நம்பும் ஒருவனின் வாழ்க்கை குறிக்கோள் உடைய வாழ்க்கையாக அமையாது. அவன் மிக்க உற்சாகத்துடன் நம்பிக்கையையும் திட உறுதியுடன் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். ச்ரத்தை மிகவும் முக்கியமானது. அது இல்லாமல் எதையும் சாதிக்கவே முடியாது. ச்ரத்தை இருந்தது எனில் சிறு தீப்பொறி உங்களிடம் இருந்தாலும் அது ஊதி விடப்பட்டு பெரும் ஜுவாலையாக ஆகி விடும். ச்ரத்தை இல்லை எனில் தீ ஜுவாலையே உங்களிடம் இருந்தாலும் அது அணைந்து விடும். அதே போல ச்ரத்தை இருந்தால் ஒரு சிறிய விதையைக் கூட ஆலமரமாகப் பெரிதாக்க முடியும்.”

விக்கிரமாதித்தனின் இந்த விளக்கத்தால் பண்டிதர்கள் தெளிந்தனர். இதை விளக்கிய பாபா இன்றைய நாளில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிகவும் வளர்ந்து விட்டாலும் கூட ஆன்மீக முன்னேற்றமும் அதனுடன் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
baba stamps

உபநிடதம் விளக்கும் புத்தி

“புத்தி மேதாவை விட வலிமை வாய்ந்தது. புத்தி என்பது சாதாரணமாக விளக்கப்படும் புத்தி கூர்மை மட்டும் அல்ல. அது அமைதியுடன் கூடிய ஆஸக்தி (உற்சாகம், நம்பிக்கை) மற்றும் ஸ்வஸ்தாவைக் (ஸ்திரத்வம், உறுதி) கொண்டதாகும். இந்த புத்தியானது ரிதம், சத்யம்,யோகா, மற்றும் மஹத் தத்வத்தால் பெரிதும் வளமடைகிறது.”

இப்படி உபநிடத ரகசியத்தைக் காலத்திற்கேற்றவாறு எளிமையாக விளக்கி நம்மை “புத்திசாலியாக” ஆக்க பாபா விழைகிறார்.

பாபாவின் கணக்கு சற்று வித்தியாசமானது.

மனிதனின் அறிவு ஐந்து வகைப்படும் என்று கூறி அதை விளக்கும் பாபா ஒரு விசித்திரமான கணக்கையும் தருகிறார். மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்று என்பது தான் அது! (3-1=1 !!)

இன்றைய நாட்களில் எல்லோரிடமும் பெரிதும் காணப்படுவது புத்தக அறிவு (book knowldege). இதைப் பெறுவதற்காக அரிய வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்குகிறோம். இதைப் பெறவே நம் நேரத்தைச் செலவழிப்பதால் பொது அறிவும்(general knowledge) இயல்பான அறிவும் (common sense) இல்லாமல் போய் விடுகிறது. இவை இரண்டையும் சமூகத்தில் சேவை செய்வதால் மட்டுமே பெறலாம். விஷயத்தைப் பகுத்துப் பார்க்கும் (discrimination knowledge)அறிவு நான்காவதாகும். இதுவோ இன்றைய நாட்களில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக ஆகி விட்டது. சுய நலத்தை விட்டு விட்டு லோக க்ஷேமத்திற்காகப் பயன்படுத்தப் பட வேண்டிய அறிவு இது.

baba young

சாதாரண எண் கணிதத்தில் கூறப்படுவது போல் அல்லாது ஆன்மீக கணிதத்தின் படி மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்றாகும்! (3-1=1) கடவுள், மாயை, பிரபஞ்சம் ஆகிய மூன்றினுள் கடவுளே ‘இருக்கின்ற பொருள்’. மாயை கண்ணாடி. பிரபஞ்சம் கடவுளின் பிரதிபலிப்பு. கண்ணாடியை அகற்றி விட்டால் மாயையும் இல்லை, பிரபஞ்சமும் இல்லை. கடவுள் மட்டுமே இருக்கிறார். ஆகவே மூன்றிலிருந்து (கடவுள், மாயை, பிரபஞ்சம்) ஒன்றைக் (மாயையை) கழித்து விட்டால் மாயையும் பிரதிபலிப்பான பிரபஞ்சமும் போய், மிஞ்சுவது கடவுள் தான்!

இதை சுலபமாக அனைவராலும் அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் ஐந்தாவது வகையான ப்ராக்டிகல் நாலெட்ஜ் எனப்படும் அனுபவ ஞானம் இல்லை. இதை ஒவ்வொருவனும் அடைவது அவசியம்.”

baba alert

பாபாவின் விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இப்படிப்பட்ட ச்ரத்தா, மேதா,புத்தி மற்றும் ஐந்து வகை அறிவினாலும் எதை அடைய வேண்டும்! இறைவனைத் தான்! இறைவனோ அன்பு மயம்!

எப்படி சூரியனையும் சூரிய கிரணங்களையும் பிரிக்க முடியாதோ, கடலையும் அதன் அலைகளையும் பிரிக்க முடியாதோ அதே போல கடவுளையும் அன்பையும் பிரிக்க முடியாது.

ஆகவே ஜகம் முழுதும் அன்பைச் செலுத்துங்கள். சாயி உங்கள் வயப்படுவான். ஏனெனில் சாயியும் ப்ரேமையும் ஒன்றே தான்!

சாயியின் மொத்த உரைகளின் சாரத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளையும் “அன்பில் ஆரம்பி. அன்பில் வழி நடத்து; அன்பில் முடி” என்பது தான்!

இந்த அன்பு மந்திரமே சாயி மந்திரம்.
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ என்று உளமார நினைந்து அன்புருவாம் சாயியை வணங்கிப் போற்றுவோம்! அவன் அருளைப் பெறுவோம்!!
baba smile

This is written by my elder brother S Nagarajan for the Tamil Magazine ஞான ஆலயம்- — London Swaminathan.

******************************
contact swami_48@yahoo.com

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

brahma-

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.

சிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்.

இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன!!
ஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை மட்டும் பட்டிய லிடுகிறேன்:–

அறிவியல் உண்மை 1
கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வியக்கும் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.

hindu-gods-brahma

பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும்.

அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!!

அறிவியல் உண்மை 2
பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.
அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.

நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச்Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.

அறிவியல் உண்மை 3
தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.

four faced Sumer
Four faced God of Sumer (Brahma?)

அறிவியல் உண்மை 4
வெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா?

பிரம்மா ஒரு மக:ளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே!!

இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.

முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்!

Svetovid-Statue-Ruyan-Island-
Four faced Slavic God (Svetonvid)

அறிவியல் உண்மை 5
பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள் வந்தன.

கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.

அறிவியல் உண்மை 6
கணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச் செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே 108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் இது பற்றி நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய எண்கள் 18, 108, 1008 பற்றிய கட்டுரையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.

brahma-statue

அறிவியல் உண்மை 7
நாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள் எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின் மூலக்கூறுகள் (water molecules) இரு கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

அறிவியல் உண்மை 8
உலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் வழங்கும் பிரம்மாவின் 29 வடமொழிப் பெயர்களை மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

பிரம்மா என்பவர்
வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்
பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்
உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்
கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்
பிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!!

—-சுபம்—

தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

bankura in WBRiya,Raima,Moon

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1420; தேதி 19 நவம்பர், 2014.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் — குறள் 822

பொருள்:– தம் இனத்தைச் சேர்ந்தவர் போல நடிப்பர்; ஆனால் உள்ளன்பு இராது. அத்தகையோர் நட்பு, பொது மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறு படும்.

இதில் மகளிர் மனம் போல மாறுபடும் என்பதைப் பார்க்கையில் பெண்களின் சஞ்சல புத்தியைக் குறை கூறுவது போலத் தோன்றும். ஆயினும் பொது மகளிரைப் பற்றி சொல்கிறார் என்றவுடன் அந்த ஐயப்பாடு நீங்கிவிடும். எதையும் அது எங்கே, என்ன காரணத்துக்காக சொல்லப்பட்டது என்பதை காணல் வேண்டும்.

கூடா நட்பு என்னும் இதே அதிகாரத்தில் இன்னும் ஒரு குறளில் வள்ளுவர் கூறுவதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்:

_HY29BONALU-festival,s'bad, hindu

ராஜீவ் காந்தி படுகொலை

தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து— குறள் 827
பொருள்:- உள்ளுக்குள் பகை வைத்திருப்போர் வணங்குபோதும் கைக்குள்ளும் கொலைக் கருவி வைத்திருப்பர். அவர்கள் விடும் போலிக் கண்ணீரும் அத்தகையதே.

நமது காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் செய்த படுகொலையையும் நாம் கண்டோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை வணங்குவது போலக் குனிந்து வெடிகுண்டை வெடித்துப் படுகொலை புரிந்தவளும் ஒரு பெண்ணே. இதை மேற்கூறிய குறளில் கண்டோம்.

நாடக அரங்கில் படுகொலை

இதே போல நாடக அரங்கில் நடந்த ஒரு படுகொலையும் வரலாற்றில் உள்ளது. சுங்க வம்சத்து கடைசி அரசனான தேவபூதி மிகவும் மோசமான ,பலவீனமான ஒரு பேர்வழி. அவனை ஒரு அடிமைப் பெண், — படுக்கை அறையிலே கொலை செய்தாள். அவள், அவனது ராணி போல வேஷம் போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று அவனைக் கொன்றாள். அவளும் ஒரு பெண்தான்.

வரலாற்றில் இப்படிப் பெண்கள் மூலம் படுக்கை அறையில் நடந்த படுகொலைகள் பல உள. ஆக பெண்களிலும் “நீலாம்பரிகள்” உண்டு. ராமாயணத்தில் பெண் என்ற காரணத்தால் தாடகையைக் கொல்ல ராமன் மறுக்கிறான். அவள் பெண் அல்ல, பேய் என்கிறான் விசுவாமித்திரன். ஆகவே எந்த சூழ்நிலையில் யாரைச் சொல்கிறார் என்பதை அறிந்த பின்னரே ஒருவரைக் குறைகூறுதல் பொருந்தும்.

பெண்கள் மட்டுமே கொலை செய்தனர் என்பதும் உண்மையல்ல. ‘’மனதிலே கருப்பு வைத்து’’ – விபூதி பூசி வந்த — முத்த நாதன் என்பான் உடைக்குள் இருந்த வாளினை உருவி, மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றதும், இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காவலர்களே கொன்றதும் வரலாற்று உண்மைகள்.

Belur1mirror lady

தொல்காப்பியத்தில்…

தொல்காப்பியத்தில் முதல் சூத்திரம்:–
‘’எழுத்து எனப்படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே’’

பொருள்:– தமிழ் எழுத்துக்கள் அ முதல் ன வரை முப்பது என்பர். மூன்று சார்பு எழுத்துக்களைச் சேர்க்காமல்.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘’ன’’ — என்பதை கடைசியில் வைத்ததற்கு என்ன காரனம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர்.

சேனாவரையர் எழுதிய உரையிலும், “அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமை யின் ஆடூஉவறிச் சொல் முற்கூறப்பட்டது என்பர். தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ் மொழி எழுத்துக்கள் அ-வில் துவங்கி ன-வில் முடிந்திருக்கலாம். ஆயினும் அவர் நூல்தான் நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் மிகப் பழையது என்பதால் மூன்று உரையாசிரியர்களும் தங்களுடைய அல்லது அவர்களது காலத்தினுடைய ‘’ஆண் ஆதிக்கக் கொள்கையை’’ தொல்காப்பியர் மேல் போட்டுவிட்டனர்!! அதாவது ன-கரம் ஆண்பால் பெயர்களில் வருவதால் அது உயர்வான எழுத்து என்றும் அதனால்தான் அதைத் தமிழ் மொழியின் கடைசி எழுத்தாக வைத்துச் சிறப்பித்தார் தொல்காப்பியர் என்றும் பொருள்படும்படி எழுதிவிட்டனர்.

இது போலவே மனு எழுதிய ஒரு ஸ்லோகத்தையும் காட்டி மனு பெண்களின் எதிரி என்பர் வெளிநாட்டினர் — ஆனால் மனுவோ பெண்களுக்கு மகத்தான ஆதரவு கொடுத்தவர் — “எந்த இடத்தில் பெண்கள் பூஜிக்கப்பட வில்லையோ அந்தக் குடும்பம் வேரொடு அழியும் என்றும், பெண்கள் விடும் கண்ணீர் குடும்பத்தையே துடைத்து ஒழித்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். பெண்கள் வாழ்க என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க. அது மட்டுமல்ல. பெண்களுக்கு கணவனும் சகோதரர்களும் நகைகளையும் புத்தாடைகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருக்கிறார்– (கேட்பது பெண்கள் குணம், வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க) ஆக உரைகாரர்களையோ வெளிநாட்டு ‘’அறிஞர்’’ களையோ நம்பி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கி விடக்கூடாது.

026maruthi

பகவத் கீதையிலும், ஆதி சங்கரரின் விவேக சூடாமணியிலும் ஆண்களுக்குச் சார்பான ஸ்லோகங்கள் இருப்பது உண்மையே. ஆனால் அவர்கள். தாய் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு கடவுளுக்கும் மேலான இடத்தைக் கொடுத்துப் பாடி இருக்கின்றனர்.

மனைவி என்ற நிலையில் உள்ள பெண்களுக்கு சிவ பெருமான் போல 50—50 கொடுக்கின்றனர். உடலில் பாதி மட்டுமல்ல- உரிமையிலும் அர்த்த நாரீ என்ற முறையில் ‘’சஹ தர்மசாரினி’’ என்பர்.

இழி தொழில் செய்யும் பெண்கள் மீதே அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
தனித்தனியாக எடுத்துப் பார்க்கையில் கம்பன், பட்டினத்தார், அருணகிரி நாதர் ஆகியோர் பெண்களின் எதிரிகள் போலக் காட்சிதருவர்.!

இதோ சில கம்பன் பாடல்கள்:

‘’அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை’’

‘’மன்றலங் கோதை மாதர் மனம் என போயிற்றம்மா’’

வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்’’ – கம்ப ராமாயணம்.

afrohairstylecmpetion-5

வரைவின் மகளிர் என்ற அதிகாரம் முழுதும் வள்ளுவனும் பெண்களைச் சாடுகிறான்.
இது போல ஷேக்ஸ்பியர் உள்பட எந்த நாட்டு இலக்கியத்திலும் காணலாம்.
ஆக, எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் கண்டு தெளிக.
பாரதியின் சொற்களுடன் முடிக்கிறேன்:–
பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்கள் வெல்கவென்று கூத்திடுவோமடா!
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலி அழிப்பது பெண்களின் அறமடா!
கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா!

-சுபம்-

Pictures are taken from various sites; not related to the article;thanks.

தமிழனுக்கு அடி மேல் அடி! 27,000 அடி!!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1418; தேதி 18 நவம்பர், 2014.

தமிழா உனக்கு 27,000 அடி!
புரியவில்லையா? விளங்கவில்லையா?
உனக்கு பல்லாயிரம் அடி! தமிழன்னை கொடுத்தது!!
சங்கத் தமிழ் இலக்கியத்தில் மொத்தம் 27,000 அடிக்கு மேல்!!

தமிழா உனக்கு 27,000 அடி! உடனே, படி,படி,படி!

தொல்காப்பியத்தில் 3999 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருக்குறளில் 2660 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

சிலப்பதிகாரத்தில் 5001 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

மணிமேகலையில் 4759 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருமந்திரத்தில் 12,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திவ்யப் பிரபந்தத்தில் 16,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

தேவாரம் திருவாசகத்திலோ பல்லாயிரம் அடி
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

பெருங்கதையில் 16,230 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

lot of books 3

சீவக சிந்தாமணியில் 12,400 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

கம்ப ராமாயணம் 42,000 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

வள்ளலார் முதல் பாரதி வரை சொல்லிய சொல்
பல்லாயிரம் அடி! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

இன்னும் ஆயிரமாயிரம் கவிஞர்கள் படைத்த கவிதைகளைப் படிக்க வேண்டுமானால் பல நூறு பிறவி வேண்டும்!

கல்வி கரையில, கற்பவர் நாள் சில!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

நாளது சின்மையும், இளமையது அருமையும்
அரிதரிது! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

ஓங்கி உலகலளந்த உத்தமன் (விஷ்ணு) மூவடியால் உலகளந்தான்!
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் கற்றோர் ஈரடியால் (இரு மொழியால்) உலகளப்பர்!! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!!
dog-with-books-and-glasses

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள்

சங்கத் தமிழ் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சுமார் 30, 000 அடிகள் (சிலர் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப படையை ஒதுக்கி 27,000 வரிகள் என்பர்)

சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

மணிமேகலை 4,759 அடிகள்

பெருங்கதை 16,230 அடிகள்
origin of man

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

தாயுமானவர் 1,454 பாடல்கள்

அருணகிரி 1,361 பாடல்கள்

இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்
தமிழில் உள்ள பழமொழிகள் 20,000க்கு மேல்
Rat-reading

எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:
தமிழ் ஒரு கடல் ( 11-5-2012 எழுதியது )
சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்( 11-5-2012 எழுதியது )

cat reading

contact swami_48@yahoo.com

வரலாறு கூறும் அற்புத ரிக்வேதப் பாடல்!

thumb_286_47041

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1416; தேதி 17 நவம்பர், 2014.

ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 1028 துதிப்பாடல்கள் இருக்கின்றன. அவைகளில் 10,552 மந்திரங்கள் உள.

பல அதிசயங்கள் நிறந்தது ரிக் வேதம். அது என்ன அதிசயம்?
உலகிலேயே முதல் முதலாகத் தொகுக்கப்பட்ட நூல் என்னும் பெருமையுடைத்து.
உலகிலேயே முதல் முதலாக ‘’இண்டெக்ஸ்’’ INDEX போட்ட நூல் இதுதான். அதாவது எல்லா ஆங்கில நூல்களிலும் கடைசி பக்கத்துக்குப் போனீர்களானால் அதிலுள்ள விஷயங்களை அகர வரிசையில் சொல் குறிப்பு அகராதி என்று கொடுத்திருப்பர். இதை ‘’அணுக்ரமணி’’ என்ற பெயரில் உலகிற்குச் சொல்லிக் கொடுத்தது நம்மவர்களே. எந்தெந்த ரிஷி எந்த மந்திரத்தைக் ‘’கண்டுபிடித்தார்’’, எந்தக் கடவுளின் பெயரில் பாடினார் என்றெல்லாம் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னர் எழுதவேண்டு மானால் அவர்களுடைய விசாலமான புத்தியை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா? ( ரிஷிகள் என்போர் மந்திர த்ருஷ்டா= மந்திரங்களைக் கண்டவர்கள்; எழுதியவர்கள் அல்ல)

400—க்கு மேற்பட்ட ரிஷிகளின் பெயர்களையும் அப்படியே நமக்குக் கொடுத்துள்ளனர்.

இன்னொரு அதிசயமும் உண்டு. உலகில் எந்த நூலையும் நாலு கூறு போட்டு நாலு மாணவர்களை அழைத்து இதை ‘’எழுதக்கூடாது. ஆனால் மனப்பாடமாகப் பரப்ப வேண்டும்’’ என்று யாரும் சொன்னதில்லை. வியாசர் என்னும் மாமுனிவன் மட்டும் இப்படி உத்தரவிட்டதும் அதை அவர்கள் சிரமேல் கொண்டு இன்று வரை நமக்குக் வாய் மொழியாகக் கொடுத்து வருவதும் உலகம் காணாத புதுமை. சுமேரியாவிலோ எகிப்திலோ களிமண்ணிலும் சுவற்றிலும் எழுதாவிடில் அனைத்தும் அழிந்திருக்கும் ஆனால் நம்மவர் மனப்பாடமாக இன்று வரை அதைக் காப்பாற்றி வந்தது நம் திறமைக்கு ஒரு சான்று.

இதில் வேறு பல ரகசியங்கள் இருப்பதாலும் எதையும் நேரடியாகச் சொல்லாமல் ரகசியமாகச் சொல்வதானாலும் சங்க காலத் தமிழர்கள் இதற்கு ‘’மறை’’ என்றும், ‘’எழுதாக் கிளவி’’ என்றும் பெயர் சூட்டி அகம் மகிழ்ந்தனர், உளம் குளிர்ந்தனர்.

இதில் உள்ள கணித ரகசியங்கள் பற்றியும் மிகப் பெரிய எண்கள் பற்றியும் தனியே கொடுத்து விட்டேன். இன்று 38 பெயர்களையும் ஏழு புதிர்களையும் உள்ளடக்கிய ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம்.

ரிக்வேதத்தில் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் என்னும் ரிஷியும் அவர் வழிவந்தவர்களும் பாடிய துதிப்பாடல்கள் இடம் பெறும். இதில் 18ஆவது துதியில் 25 மந்திரங்கள் உள. தமிழில் பரணர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்று செய்தியைத் தருவார் ( எனது பழைய கட்டுரையில் மேல் விவரம் காண்க: வரலாறு எழுதிய முதல் தமிழன்).

அது போல இப்பாடலில் 38 விஷயங்களை அள்ளிக் கொடுத்து விட்டார் வசிட்டன். இதில் உள்ள பல விஷயங்கள் புதிர்களாகவே உள்ளன. ரிஷி முனிவர்கள் பயன்படுத்தும் மறை பொருளான மரபுச் சொற்றொடர்களும், நமது அறியாமையுமே இதற்குக் காரணம் என்று இப்பகுதியை மொழிபெயர்த்த கிரிப்பித் என்ற அறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
Rig Veda images

புதிர் 1
இந்தத் துதிப்பாடல் இந்திரன் மீது பாடப்பட்டது. 14ஆவது மந்திரத்தில் ஒரு எண் வருகிறது. அதைச் சில அறிஞர்கள் 66,606 என்றும் இன்னும் சிலர் 6666 என்றும் மொழி பெயர்க்கின்றனர். அதன் சம்ஸ்கிருத மொழி அமைப்பு அப்படி அமைந்துள்ளது. அது சரி! இப்படிப்பட்ட வினோத எண்ணுக்கு இந்த துதியில் அவசியமே இல்லையே! ரிஷிகள் ஏதேனும் மறை பொருளைச் சொல்ல விரும்புகின்றனரா அல்லது எதுகை, மோனை விஷயங்களுக்கா கத் தங்கள் புலமையைக் காட்டுகின்றனாரா? புதிரோ புதிர்!

புதிர் 2
தாசர்கள் என்றால் கறுப்பர்கள், அவர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆரியர்களால் விரட்டப்பட்டவர்கள் — என்று வெளிநாட்டார் எழுதி வைத்தனர். ஆனால் இந்தப் பாட்டு முழுதும் சு தாச என்னும் மன்னன் அடைந்த வெற்றியைப் பற்றியது. அவனுடைய அப்பா பெயர் திவோ தாச! அவன் குல குரு வசிஷ்ட மாமுனிவன். அவனுக்கு உதவியதோ இந்திரன்! புதிரோ புதிர்!

புதிர் 3
இதே பாடலில் யுத்யாமதி என்ற ஒரு பெயர் வருகிறது. அது ஒரு மன்னன் பெயராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுவர். ஆனால் அவரைப் பற்றிய எந்த விஷயமும் வேறு எங்கும் கிடைத்தில. ஒரு வேளை சிந்து சமவெளியை ஆண்ட ஒரு மன்னனோ!! ( மதி-பதி-வதி: சிந்து சமவெளி மன்னர் பெயர்கள் என்ற எனது கட்டுரையில் விவரம் காண்க). புதிரோ புதிர்!

புதிர் 4
இந்தப் பாடல் அடங்கிய ஏழாவது மண்டலம் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் ஒன்று என்று பல அறிஞர்களும் ஒப்புவர். அத்தைகயதோர் பாடலில் திடீரென யமுனை நதி பற்றி வருகிறது! ‘’கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் சிந்து நதி தீரத்தில் பாடிய துதிப்பாடலகள்’’– என்று கதைத்து வந்த வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ மீது குண்டு வீசியது போல இருக்கிறது இந்த யமுனைக் குறிப்பு! அவர்களுடைய ஆரிய—திராவிட வாதங்களை ஒரு சொல்லால் தவிடு பொடியாக்கி விடுகிறது இந்த வரி.

வேதம் பற்றியும் அதிலுள்ள வரலாறு பற்றியும் எழுதி வரும் ஸ்ரீகாந்த் தலகரி என்னும் அறிஞர், வேத கால இந்துக்கள் கிழக்கில் இருந்து மேற்கே ஈரான் வரை சென்றார்கள் என்று நிரூபித்ததை இது உறுதி செய்கிறது.

சங்கத் தமிழர்களுக்கு சிந்து நதியோ, அந்தப் பகுதியோ தெரியுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அவை பற்றி சங்கப் பாடல்களில் இல்லை. ஆனால் யமுனை (தொழுநை) நதியும் கங்கை நதியும் இமய மலையும் சங்கத் தமிழர்களுக்கு மிகவும் தெரிந்த இடங்கள்!
nab843

புதிர் 5
அஜஸ், சிக்ரூஸ், யக்ஷூஸ் என்பவர்கள் பேடா என்பவர் கீழ் இருந்தது போல என்று ஒரு வரி வருகிறது யார் இந்த பேடா? என்று தெரியவில்லை! புதிரோ புதிர்!

புதிர் 6
‘’பசியுள்ள மீன்கள் போல’’ — என்று இடையில் திடீரென்று ஒரு வரி வருகிறது. சிலர் இதை மீன் பற்றிய உவமை என்கின்றனர். இன்னும் சில வெளிநாட்டார் இது ‘’மத்ஸ்ய’’ இனத்தினர் என்பர். மத்ஸ்ய என்ற வட சொல்லுக்கு மீன் என்ற பொருள் உண்டு. மச்சாவதாரம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. ஆக இந்த வரியும் புதிரோ புதிர்!

புதிர் 7
ஆறாவது மந்திரத்தில் துர்வாச புரோதாச என்ற பெயர் உள்ளது. இது ஒரே பெயரா அல்லது இரண்டு பெயர்களா என்றும் அறிஞர்கள் மோதிக் கொள்வர். புதிரோ புதிர்!

இப்படி ஒரே பாடலில் பல அறிஞர்கள் பலவாறு பேசுவதை அறிந்தே, நம் அய்யன் வள்ளுவன், “எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”– என்று செப்பினான். குறிப்பாக, வேத மந்திரங்களுக்கு ஆரிய—திராவிட விஷப் புகை தூவி மந்திரம் போடும் வெளி நாட்டாரை நம்பாது இருப்பதே நலம்!

new

பாடலில் என்ன சொல்கிறார் வசிட்டர்?

இந்தப் பாடல் சுதாச என்னும் மன்னன், பத்து ராஜா யுத்தத்தில் அடைந்த மாபெரும் வெற்றியைப் பாடுகிறது. எப்படி கரிகால் சோழன் ஏழு பேரை வென்று வெற்றி வாகை சூடினானோ அது போல சுதாசன் பத்து பேரை வென்று வெற்றி வாகை சூடினான். அவனுடன் போனார் வசிட்டர். அவனுக்கு உதவியது இந்திரன்!

“ஆடு சிங்கத்தை வென்றது போல வென்றான்” — என்ற உவமை இதில் இருப்பது குறித்தும் சிங்கம், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை அக்காலத்திலேயே இருந்தது என்றும் எனது முந்தைய கட்டுரையில் தந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

இறுதியாக, — இதில் வரும் முப்பத்தெட்டு பெயர்கள் என்ன என்ன?

1.இந்திர, 2.வசிஷ்ட, 3.சுதாஸ், 4.சிம்யு, 5.துர்வாச, 6.புரோதாச, 7.ப்ருஹு, 8.த்ருஹ்யூஸ், 9.பக்தாஸ், 10.பலனாஸ், 11.அலினாஸ், 12.சிவாஸ், 13.விசானின்ஸ், 14.த்ருஷ்டூஸ், 15.பாருஸ்னி, 16.ப்ரிஸ்னீ, 17.வைகர்ண, 18.கவச, 19.அனு, 20.புரு 21.ஆனவாஸ், 22.பேடா, 23.யமுனா, 24.அஜஸ், 25.சிக்ரூஸ், 26.யக்ஷூஸ், 27.தேவக, 28.மன்யமான, 29.சம்பர, 30.பராசர, 31.சதாயது, 32.பைஜாவன 33.அக்னி, 34.தேவவான், 35.யுத்யாமதி, 36.திவோதாச, 37.மருத், 38.மத்ஸ்ய
nad035

இதில் பல இனங்கள் (குழுக்கள்), நதிகள், மன்னர்கள், கடவுளர் பெயர்கள் இருக்கின்றன.

–சுபம்–

அமிழ்தம், அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம் — பாரதி