பேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)

valluvar-4

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 6-33 AM

 

Post No.3112

 

 

இந்தியாவின் இரு பெரும் புலவர்கள் ஒரே உவமையைப் பயன் படுத்துவதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இலக்கிய இன்பம் பொங்கும். நாம் கற்றதை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.

 

ஆண்மை இல்லாதவனை அலி அல்லது பேடி என்பர்; உடலில் குறை இருந்தாலும் சரி, மனதில் வீரமினமை இருந்தாலும் பேடி -தான்.

 

பேடித்தனத்தை அடையாதே (க்லைப்யம் மாஸ்மகம:– பகவத் கீதை 2-3) என்று அர்ஜுனனை கிருஷ்ணன் கண்டிப்பதையும் நாம் அறிவோம்.

 

பெண்ணாகவும் ஆணாகவும் விளங்கிய சிகண்டியுடன் சண்டை போட மறுத்து, உயிர் துறந்த மாபாரதப் பிதாமஹர் பீஷ்மரை நாம் அறிவோம்.

 

வள்ளுவனுக்கும், அவனுக்கு முன் வாழ்ந்த காளிதாசனுக்கும் மஹாபாரதக் கதை நினைவுக்கு வந்தது போலும்!

 

இதோ காளிதாசன் கவிதை:–

 

கதஸ்ரியம் வைரி வராபிபூதாம்

தசாம் சுதீனாமபிதோ ததானாம்

நாரீமவீராமிவ தாமவேக்ஷ்ய ச

வாடமந்த: கருணாபரோபூத்

–குமார சம்பவம் 13-36

 

இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள் குமாரன் (முருகன்) புகுந்தபோது அது பேடியை மணந்த அழகி போலப் பொலிவிழந்து காணப்பட்டது. உடனே முருகப்பெருமானுக்கு கருணை பிறந்தது.

 

வள்ளுவன் சொல்லுவான்:–

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று — திருக்குறள் 402

 

அதாவது, படிக்காத ஒருவன் அறிஞர் சபையில் பேச முற்படுவது, இயல்பாகவே தனங்கள் இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காம சுகம் அனுபவிக்க விரும்பியது போல் ஆகும்.

 

இதை விட பேடி என்ற சொல் லையே வேறு இரண்டு சொற்களிலும் காணலாம்:–

 

பகையகத்து பேடி கை வாள் ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன் கற்ற நூல்– திருக்குறள் 727

 

சபையில் பேச அஞ்சும் ஒருவன், போர்க்களத்தில் பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே.

 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை

வாளாண்மை போலக் கெடும்– திருக்குறள் 614

 

முயற்சி இல்லாத ஒருவன் பிறருக்கு உதவ முன் வருவது பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே (பயனற்றது).

 

நல்ல உவமை! வள்ளுவன் வாய்மொழி வளர்க! காளி புகழ் ஓங்குக!!

 

-Subam-

 

கெட்ட நண்பர்கள் இருக்கையில் பாம்புகள் எதற்கு? (Post No.3109)

¿Quién? ¿Cuándo? ¿Por que? ¿Que? ¿Como? ¿Donde?

Translated by London Swaminathan

 

Date: 1st September 2016

 

Time uploaded in London:5-20 AM

 

Post No.3109

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

(Posted in English yesterday)

சம்ஸ்கிருதத்தில் இரண்டே வரிகளில் , திருக்குறள் போல,  அருமையான கருத்துகளைச் சொல்லி விடுவர். அது போன்ற 4 வட மொழி ஸ்லோகங்கள் “ஏன்? ஏன்?”  என்று முடியும். ஆகையால் ஸ்லோகத்தில் எதுகை மோனையும் இருக்கும்.

 

இதோ முதலில் கருத்து; பின்னர் ஸ்லோகம்!!

 

பொறுமை உள்ளவனுக்கு கவசம் ஏன்?

கோபம் உள்ளவனுக்கு எதிரி ஏன்?

உறவினர் உள்ளவனுக்கு நெருப்பு ஏன்?

நண்பன் இருந்தால் மருந்து ஏன்?

 

கெட்டவர் சேர்க்கை இருக்கும்போது பாம்பு ஏன்?

படிப்பாளிக்கு பணம் ஏன்?

பணிவு உடையோருக்கு ஆபரணம் ஏன்?

நல்ல விவேகம் உள்ளவனுக்கு ராஜ்யம் ஏன்?

 

 

பேராசை இருந்தால் வேறு கெட்ட குணம் அவசியமா?

கோட் சொல்லும் ஆளுக்கு வேறு பாவம் அவசியமா?

 

உண்மை இருக்குமிடத்தில் வேறு தவம் அவசியமா?

சுத்த மனம் இருந்தால் தீர்த்த யாத்திரை அவசியமா?

 

ஒற்றுமை உள்ள இடத்தில் வேறு பலம் அவசியமா?

புகழ் இருக்குமிடத்தில் வேறு அலங்காரம் அவசியமா?

நல்ல கல்வி இருந்தால், செல்வம் அவசியமா?

கெட்ட புகார் இருந்தால், மரணமும் அவசியமா?

 

Many People Thinking of Questions

சாந்திஸ்சேத் கவசேன கிம், கிம் அரிபி: க்ரோதோ அஸ்தி, சேத் தேஹினாம்

ஞாதிஸ்சேத் அனலேன கிம், யதிசுஹ்ருத் திவ்ய ஔஷதை: கிம் பலம்

 

 

கிம் சர்பைர் யதி துர்ஜனா: கிம் தனை வித்யா  அனவத்யா யதி

வ்ரீடா சேத்கிமு பூஷணை:, சுகவிதா யத்யஸ்தி  ராஜ்யேன கிம்

 

லோபஸ்சேத் குணேன கிம், பிசுனதா யத்யஸ்தி கிம் பாதகை:

சத்யம் சாத் தபஸா ச கிம் சுசிமனோ யத்யஸ்தி தீர்தேன  கிம்

 

சௌஜன்யம் யதி கிம் பலேன மஹிமா யத்யஸ்தி கிம் மண்டனை:

சத்வித்யா யதி கிம் தனைர் பயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா

 

–SUBHAM–

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101)

ganapathy on baby

Compiled by London Swaminathan

 

Date: 29 August 2016

 

Time uploaded in London: 5-10 AM

 

Post No.3101

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

செப்டம்பர் மாத (துன்முகி ஆவணி– புரட்டாசி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– செப்டம்பர் 4-சாமவேத உபாகர்மா, 5- விநாயக சதுர்த்தி, 13- ஓணம், பக்ரீத், 17– மாளய பட்சம் ஆரம்பம், 30- மாளய அமாவாசை;

 

அமாவாசை – 1, 30

பௌர்ணமி – 16

ஏகாதசி – 12/13, 26/27

முகூர்த்த நாட்கள் – 4,5,8, 14, 15

chacolate ganapathy

செப்டம்பர் 1 வியாழக்கிழமை

 

ஆசை காரணமாக எதுவும் செய்யக்கூடாதுதான்; ஆனால் உலகில் ஆசை இல்லாத செயல் எதுவுமில்லை; வேதம்  கற்பதும், சடங்குகளைச் செய்வதும்    ஆசையினாலன்றோ! -மனு 2-2

செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை

ஆசை இல்லமல் ஒரு மனிதனும் ஒரு செயலையும் செய்வதில்லை; ஒரு ஆசையின் தூண்டுதலினால், ஆசை நிறைவேறவே அவன் எதையும் செய்கிறான்-மனு 2-4

 

செப்டம்பர் 3 சனிக்கிழமை

யோகத்தை அடைந்தவன் சாந்தியை அடைகிறான்; யோகம் கைகூடாதவன், ஆசையின் தூண்டுதலினால், பயனில் பற்றுக்கொண்டு, கட்டப்பட்டுவிடுகிறான் – பகவத் கீதை 5-12

 

செப்டம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359

 

செப்டம்பர் 5 திங்கட்கிழமை

நான் எல்லாவற்றையும் வென்றுவிட்டேன்; எனக்கு எல்லாம் தெரியும்; என் வாழ்க்கை தூய்மையானது; நான் அனைத்தையும் துறந்தவன்; நான் ஆசையிலிருந்து விடுபட்டவன்; யாரை குரு என்று நான் அழைப்பேன்? யாருக்கு நான் உபதேசம் செய்வேன்? –தம்மபதம் 353; புத்தர் சொன்னது.

 

ganesh manal

செப்டம்பர் 6 செவ்வாய்க் கிழமை

ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347

 

செப்டம்பர் 7 புதன் கிழமை

ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338

 

செப்டம்பர் 8 வியாழக்கிழமை

ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335

செப்டம்பர் 9 வெள்ளிக்கிழமை

உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

செப்டம்பர் 10 சனிக்கிழமை

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

 

ganesh yellow gem

செப்டம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 12 திங்கட்கிழமை

ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி

செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை

ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை (அதிருஷ்டம்) இருக்கிறது கழுதை மேய்க்க –தமிழ் பழமொழி

செப்டம்பர் 14 புதன் கிழமை

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை – தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 15 வியாழக்கிழமை

ஆசை காட்டி மோசம் செய்கிறதா? –தமிழ் பழமொழி

 

ganesh rose

செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 17 சனிக்கிழமை

ஆசை பெரிதோ, மலை பெரிதோ? –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

செப்டம்பர் 19 திங்கட்கிழமை

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

செப்டம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆசையாய் மச்சான் என்றாளாம்; “அடி சிறுக்கி” என்று அறைந்தானாம் –தமிழ் பழமொழி

 

ganesh procession

செப்டம்பர் 21 புதன் கிழமை

ஆசை வெட்கம் அறியாது — தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 22 வியாழக்கிழமை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசை உட்பட்டு – குறள் 266

 

செப்டம்பர் 24 சனிக்கிழமை

“ஆசா லோகஸ்ய ஜீவனம்”- ஆசையே உலகிலுள்ள ஜீவன்கள் வாழ மூல காரணம் — சம்ஸ்கிருத பழமொழி

செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஆசாவதிம் கோ கத:?” ஆசைக்கடலின் கரையைக் கண்டவன் எவன்?

 

chennai ganesh motorcycle

செப்டம்பர் 26 திங்கட்கிழமை

“ஆசா துக்கஸ்ய காரணம்” – ஆசையே துன்பத்துக்கு காரணம்

செப்டம்பர் 27 செவ்வாய்க் கிழமை

“ஆசாபரே ந தைர்யம்” — ஆசை வந்துவிட்டால்; பொறுமை பறந்தோடிப் போகும்.

 

செப்டம்பர் 28 புதன் கிழமை

“கால: க்ரீடதி, கச்சத் ஆயு:, தத் அபி ந முஞ்சத் ஆசாவாயு:” — மோஹமுத்கரம் ( காலம் நம்முடன் விளையாடுகிறது; ஆயுளோ தேய்கிறது; ஆனால் ஆசையின் பிடிப்பு மட்டும் தளர மறுக்கிறது

 

செப்டம்பர் 29 வியாழக்கிழமை

ஆசை அணுவானாலும் ஆளை விடாது- தமிழ் பழமொழி –

செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை

ஆசை அண்டாதானால் அழுகையும் அண்டாது –தமிழ் பழமொழி

ganesh indonesia

 

–Subham–

 

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057)

sheridan novel

Compiled by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3057

Time uploaded in London :– 11-55 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐரிஷ் கவிஞர்,  நாடக ஆசிரியர்,  அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:–

 

ஒரு முறை ஷெரிடன் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டார். ஒரு பெண்மணி அவருடன் உலாப் போக வேண்டும் (வாக்கிங்) என்று நச்சரித்தார். என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்தார் ஷெரிடன்.

 

“அம்மையாரே! வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எந்த நேரமும் மழை கொட்டலாம்”  என்றார் ஷெரிடன்.

 

அந்தப் பெண்மணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது ஷெரிடன் பின்புறக் கதவு வழியாக நழுவினார்.

 

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்ததப் பெண்மணி ஓடோடி வந்தார்.

 

“மிஸ்டர் (ஷெரிடன்), வானம் வெளிறிவிட்டது போல இருக்கிறதே” என்றார் அந்த மாது.

 

நீங்கள் என்னுடன் வரக்கூடாது என்று சொல்ல விரும்பாத ஷெரிடன், மறைமுகமாக அதைச் சொன்னார்:

“ஆமாம், ஆமாம், வானம் தெளிந்துவிட்டது. ஆனால் ஒருவர் செல்லும் அளவுக்குதான்!”

 

–என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தார்.

xxxx

தாமஸ் கில்லிக்ரூ கொடுத்த சூடான பதில்

jeses thieves

கில்லிக்ரூ இங்கிலாந்தின் இரண்டாவது சார்லஸ் மன்னரின் அரசவையில் இருந்த நாடக ஆசிரியர்,  நகைச்சுவை மன்னன்.

 

ஒரு முறை பாரிஸில் பிரெஞ்சு மன்னன் 14ஆவது லூயியை பார்க்கச் சென்றார். அவர் அரண்மனையைச்  சுற்றிக் காண்பித்தார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட   ஒரு படத்தைக் காட்டினார். இதோ பாருங்கள் அதற்கு வலது புறம் இருக்கும் படம் போப்பாண்டவருடையது. இட து புறம் இருக்கும் படம் என்னுடையது என்று பெருமையாக சொன்னார்.

 

உடனே தமாஷ் பேர்வழியான கில்லிக்ரூ சொன்னார்:

அட! ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது அவர் கூடவே இரு புறமும் இரண்டு திருடர்களையும்  சிலுவையில் அடித்ததாகப் படித்திருக்கி றேன். இப்போதுதான் தெரிகிறது யார் அந்தத் திருடர்கள் என்று!

220px-Disraeli

டிஸ்ரேலியின் சூடான பதில்

 

டிஸ்ரேலி என்பவர் பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராகப்  பதவி வகித்தவர்.

 

அவருடைய அரசியல் எதிரி கிளாட்ஸ்டோன்.

 

ஒருமுறை “துரதிருஷ்டம்” என்ற சொல்லுக்கும் “பேராபத்து” என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

 

நான் உடனே சொல்கிறேன்; நன்றாகக் கேளுங்கள்:

 

கிளாட்ஸ்டோன், தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது துரதிருஷ்டம்.

அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அது “பேராபத்து!” — என்றார் டிஸ்ரேலி

 

–Subham–

 

வால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்! சூடான பதில்கள் (Post No.3054)

VOLTAIRE

Compiled by london swaminathan

Date: 12th    August 2016

Post No. 3054

Time uploaded in London :– 10-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வால்டேர் 1694 ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரெஞ்சு தத்துவ அறின்ஞர், எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர். அவர் லண்டனுக்கு வந்தபோது நடந்த நிகழ்ச்சி!

 

பிரன்சுக்கும் இஙிலாந்துக்கும் இடையே எப்போதும் போட்டி, பொறாமை, போர்கள் இருக்கும். இன்றும் கூட பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது!

 

1727 ஆம் ஆண்டு! ஒரு நாள் !

வால்டேர் லண்டன் தெருக்களில் நடந்து கொண்டிருந்தார்.

 

அவர் பிரெஞ்சுக்காரர் என்று தெரிந்தவுடன் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.

 

“டேய்,  எல்லாரும் வாங்கடா,  இதோ இருக்கான் பிரெஞ்சுக்காரன், அடித்து நொறுக்குங்கடா, அவனை தூக்கில் தொங்கவிடுவோம்” என்றெல்லாம் கூட்டம் கொக்கரித்தது.

 

வால்டேர் அஞ்சாத சிங்கம்; புத்தி வேலை செய்தது.

“நான் பிரெஞ்சுக்காரந்தான்!. ஆனால் ஆங்கிலேயனாகப் பிறக்காததே பெரும் தண்டனை ஆயிற்றே; இதற்குப் பின்னரும் எனக்குத் தண்டனை தேவையா?

 

இதைக்கேட்டவுடன் கூட்டத்தினருக்கு பரம சந்தோஷம்! அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தனர்.

 

Xxxx

டேனியல் வெப்ஸ்டர்

Danielwebsterbirthplace

டேனியல் வெப்ஸ்டர் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி. செனட் முதலிய சபைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

சின்னப் பையனாக இருந்தபோது அழுக்குச் சட்டை, அழுக்கான கை,கால்களுடன் பள்ளிக்கு வருவார். அவனது வகுப்பு ஆசிரியைக்கு அந்த அசிங்கத்தைப் பார்க்கப்  பிடிக்கவில்லை.

ஒருநாள் அவனைப் பார்த்து சத்தம் போட்டார்:

 

“இன்னொரு முறை, அழுக்குக் கைகளுடன் வகுப்புக்கு வந்தால், உன்னை அடித்து நொறுக்கி விடுவேன் – என்றார்.

 

அவனோ விஷமக்கார சுட்டிப் பையன். கொஞ்சமும் மாறவில்லை. அதே அழுக்குச் சட்டை, அழுக்கு கைகள்!

 

ஆசிரியைக்கு மஹா கோபம்:-

 

“டேய் நாயே! உனக்கு எத்தனை முறை சொல்லவேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கையை நீட்டு, இந்தா அடி! என்று கம்பை ஓங்கினார்.

 

அவன் அந்தக் கையில் ‘தூ’ என்று துப்பிவிட்டு எச்சிலால் டிரவுசரில் துடைத்துக்கொண்டு கையை நீட்டினான்.

 

“சீ நாயே! இதைவிட இந்தப் பள்ளிக்   கூடத்தில் வேறு எங்காவது இதைவிட அசிங்கமான கை இருந்தால் எனக்குக் காட்டு “– என்று சொல்லி தடியை ஓங்கினார்.

வெப்ஸ்டரா சளைப்பான்?

 

அடுத்த கையை நீட்டினான்! அது முந்தைய கையை விட அசிங்கமாக இருந்தது என்பதை சொல்லவும் வெண்டுமா?

 

டீச்சருக்கு அடிப்பதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

 

DanielWebster

Xxx SUBHAM xxx

 

 

 

 

மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)

Abraham-Lincoln

Translated by london swaminathan

Date: 11th    August 2016

Post No. 3051

Time uploaded in London :– 6-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சில தலைவர்கள் கொடுக்கும் சூடான பதில்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. இந்தியப் பிரதமர், ஒரு காலத்தில் டீக்கடை வைத்தது பற்றி பலர் கிண்டல் செய்தவுடன், பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், எல்லா இடங்களிலும் இலவச தேநீர் கடை வைத்து தேநீர் வழங்கியதை நாம் அறிவோம்

 

 

இதுபோல அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர் ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறியவர்.

 

ஒருமுறை, வாழ்க்கையின் உயர்மட்டத்திலுள்ள பிரமுகர் டக்ளஸ் என்பவர் பொது இடங்களில்   லிங்கனை விமர்சித்து வந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் டக்ளஸ் சொன்னார்:-

 

“நான் லிங்கனை முதலில் சந்தித்ததே ஒரு கடைப் பையனாக வேலை பார்த்தபோதுதான். அவன்  விற்காத பொருள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?  அவன் மதுபானக் கடையில் எடுபிடியாகவும் இருந்தான்!”

 

இப்படி டக்ளஸ் பேசி முடிந்தவுடன் ஒரே கரகோசம்!

 

லிங்கனா சளைப்பார்? அவர் சொன்னார்:’

 

“மாண்புமிகு டக்ளஸ் சொன்னது எல்லாம் உண்மை. எள்ளளவும் பிசகில்லை! நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்; பஞ்சு விற்றேன்; சுருட்டு விற்றேன்; மெழுகு வர்த்தி வியாபரமும் செய்தேன்; சில நேரங்களில் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விஸ்கியும் விற்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் டக்ளஸ், ‘கவுண்ட’-ருக்கு எதிர்ப் பகுதியில் நின்று என்னிடம் பொருள்களும் வாங்கியது உண்மையே; ஆனால் இப்பொழுது என்ன நிலை?

 

‘கவுண்ட’–ருக்கு அந்தப்புறம் நின்று பொருள்களை விற்ற நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். உங்களுக்கே தெரியும். ஆனால் மதுபானக் கடையில் என்னிடம் ‘கவுண்ட’’-ருக்கு எதிர்ப்புறத்தில் நின்று என்னிடம் விஸ்கி வாங்கிக் குடித்தாரே அவர் மட்டும் அந்தப் பகுதியை விட்டு இன்று வரை விலகவே இல்லை! அது மட்டுமல்ல, அதிபயங்கர விசுவாசத்தோடு அக்கடையை விட்டு அகலுவதே இல்லை என்றார்.

 

பொதுக்கூட்ட மண்டபத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு கரவொலி எழுந்தது!

 

Xxxx

m twain

மார்க் ட்வைனின் சூடான பதில்!

(சாமுவேல் லாங்ஹார்ன் க்ளெமென்ஸ் என்பவரின் புனைப் பெயர் மார்க் ட்வைன். சிறந்த அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர், நாவலாசிரியர், நகைச் சுவைப் பேச்சாளர்)

 

ஒருநாள் அவரும் வில்லியம் டீன் ஹவல்ஸ் என்ற பிரமுகரும், சர்ச்சிலிருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கன மழை கொட்டியது.

 

ஹவல்ஸ்: “ சாமுவேல் இந்த மழை நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

சாமுவேல் (மார்க் ட்வைன்):- எனக்குத் தெரிந்தவரை மழை, எப்போது பெய்யத் துவங்கினாலும் நின்று போய் இருக்கிறது!

–என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

 

மழையில் சொன்னாலும், இ துவும் சூடான பதில்தான்!

 

–subham–

 

 

பானை உடைத்தவன் பாக்கியசாலி! (Post No.3018)

-font-b-Ceramics-b.jpg

Translated  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  8-16 AM

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

எழுத்துத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்:–

பிறருடைய கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முதலியவற்றை மீண்டும் பயன்படுத்துகையில் எழுதியோருடைய பெயர்கள், வெளியிட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பகிருங்கள்; எழுத்தைத் திருடினால் உங்கள் மனைவி, மகள்கள், சொத்து, சுகம் இவைகளை வேறு ஒருவன்  திருடிவிடுவான் என்பதை அறியீரோ!

xxx

vase large_1027_2083145b

பீங்கான் தட்டுகள், குடங்கள்,பூக்கள் வைக்கும் ஜாடிகள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள். அவனுக்கோ கை நடுக்கம்.

 

நல்ல பூ வைக்கும் ஜாடியை உடைத்துவிட்டான்.

முதலாளி விரைந்தோடி வந்தார்.

 

இதோ பார், இதற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உனக்கு வேலை.

 

இதன் விலை என்ன?

முதலாளி: 300 டாலர். அவ்வளவு பணம் உன்னிடம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆகவே வாரா வாரம் உனது சம்பளத்தில் ஒரு டாலர் கழித்து வருவேன்.

ரொம்ப நல்லது, முதலாளி! எனக்கு 300 வாரங்களுக்கு வேலை இருக்கிறதே! அதுவே போதும்!!

 

.////

சந்தேகப் பங்காளிகள்!

 

இரண்டு பேர் கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்தி வந்தனர். இருவரும் விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சென்றனர். கடலில் நீந்தக் குதிக்கும்போது ஒரு பார்ட்னர் சொன்னார்:-

 

அடக் கடவுளே? கடையின் கதவைப் பூட்டினேன். ஆனால் பணப் பெட்டியைப் பூட்ட மறந்து விட்டேன்!

 

மற்றொரு பங்காளி: அதனால் என்ன?

 

ஆமாம், ஆமாம், அதனால் ஒன்றுமில்லை! நீதான் என்னுடன் இருக்கிறாயே!!

 

////

confident-businessm

தன்னம்பிக்கை வாழ்க!

 

உலக வணிக கண்காட்சிக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பொறு ப்பான குரோவர் வேலனைச் சந்திப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருந்தது. அவரைக் காண பலரும் காத்திருந்தனர்.

 

ஒருவருக்கு வேலை இல்லை. அவரைச் சந்தித்து வேலை வாங்க துடியாய்த் துடித்தார். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

 

ரிசப்ஷன் (RECEPTION) பெண்மணியிடம் குரோவர் வேலன் அலுவலக அறை எது? என்று கேட்டார்.

 

ரிஷப்ஷன் பெண்:- அவர் மிகவும் (BUSY) ‘பிஸி; இப்பொழுது நீங்கள் அவரைச் சந்திக்க முடியாது.

 

அவர் விறு விறு என்று அந்த அறையை நோக்கி நடந்தார்.

 

பெண்: – அன்பரே! அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொன்னேனே! காதில் விழவில்லையா?

 

ஏ, பெண்ணே! நான் காலையிலும் மாலையிலும் கடவுளுடனேயே இரு முறை பேசுகிறேன். உங்கள் முதலாளியுடன் பேச முடியாதா? என்று சொல்லிக் கொண்டே குரோவரின் அறைக்குள் நுழந்தார்.

அவருக்கு வேலை கிடைத்துவிட்டது!

 

தன்னம்பிக்கை வாழ்க!

 

////

whistling

பாடினாலும் வேலை!

 

எட்வார்ட் ஹாரிமேன் என்பவர் பெரிய ரயில்வே கம்பெனியின் அதிபர். அவரிடம் பல அதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்..

ஒரு நாள் அவர் திடீரென அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்.

ஒரு அதிகாரி மேஜையின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு ஜாலியாக ‘விசில்’ அடித்து பாடிக்கொண்டிருந்தார்.

 

முதலாளியைப் பார்த்தவுடன் தூக்கிவாரி போட்டது.

உடனே நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

 

சரி! நம்முடைய ‘சீட்டு’ இன்று கிழிந்தது– வீட்டுக்கு அனுப்பிவிடுவார் முதலாளி என்று நடுங்கினார்.

 

முதலாளி சொன்னார்: அட! இவ்வளவு கடுமையான வேலையிலும் உனக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கிறதே.

வெரி குட் (ரொம்ப நல்லது)

/////

 

ஏமாற்றியவருக்கு இரட்டைச் சம்பளம்!!

 

ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் பெரிய பத்திரிக்கை முதலாளி. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுபவர். யாரும் மதுபானம் குடித்துவிட்டு அலுவலத்துக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.

 

ஒரு பத்திரிகை அலுவலக ஊழியர்,  ‘ஓஸி’யில் கிடைத்த மதுபானத்தை  நன்றாக மாந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்தார். முதலாளி எங்கே இந்த அறைக்குள் வரப்போகிறார் என்று எண்ணி இருந்தார்.

 

அவரது “அதிர்ஷ்டம்” பென்னெட் உள்ளே நுழைந்தார். உடனே இந்த குடிகார பத்திரிக்கை ஊழியர் கொஞ்சம் பிரிண்டிங் இங்க் — மையை முகத்தில் பூசிக் கொண்டார்.

 

பென்னெட், அவரை, ஒரு பார்வை பார்த்தார். போர்மன் (FOREMAN), யார் இந்த ஆள்?

 

உடனே அவர் அவர் பெயரைச் சொன்னார்.

Ink-face-black-eyes-Ilaria-Berenice

முதலாளி: கடுமையாக உழைப்பவர் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது. இன்று முதல் அவருக்கு இரட்டைச் சம்பளம் கொடுங்கள்!

 

–SUBHAM—

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004)

sabari

Picture shows Sabari with Rama, Lakshmana

Article Written by London swaminathan

Date:25 July 2016

Post No. 3004

Time uploaded in London :– 8-05 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.

 

முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.

 

கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன

அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்

வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்

பொருள்:

சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).

உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.

 

அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து,  நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.

 

(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து,   ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)

shabari

Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி

இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு,  கேள்வி  ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!

 

சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:

எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன

புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே

 

பொருள்:

புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)

 

இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.

 

வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.

 

அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.

 

சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–

sabari ashram

Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்

1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.

2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.

3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.

4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.

5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.

  1. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு

7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.

 

8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.

 

சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி

 

இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.

 

–subham–

 

மனைவிக்கு ‘ஜாயா’ என்று பெயர் ஏன் ? (Post No.2997)

IMG_4412

Compiled by London swaminathan

Date:23 July 2016

Post No. 2997

Time uploaded in London :– 6-20 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜாயா என்றால் பிறவிக்குக் காரணமானவள். இதை மனைவிக்கு சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்துவது விநோதமாக இருக்கும். இது தாயாருக்குப் பொருந்தும். ஆனால் தாயாருக்கு ஜனனி, மாதா போன்ற பல பெயர்கள் இருக்கின்றன.

 

ஜாயா என்பதற்கு மனு விளக்கம் தருகிறார்:–

 

பதிர் பார்யா சம்ப்ரவிஸ்ய கர்போ ப்ருத்வேஹ ஜாயதே

ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புன:

–மனு 9-8

 

கணவன் (பதி:), இந்திரிய ரூபமாக மனைவிக்குள் (பார்யா) புகுந்து (சம்ப்ரவிஸ்ய), கர்ப்பமாக உருவாகி மீண்டும் பிள்ளையாகப் பிறக்கிறபடியால் மனைவிக்கு ஜாயா என்று பெயர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், கணவனே மகனாகப் பிறக்கிறான்.

 

பிள்ளைக் குழந்தையை வாரி எடுத்து அணைக்கும்போது கணவனை அணைக்கும் இன்பத்தை மனைவி அனுபவிக்கிறாள். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்: – கணவனை அணைக்கும் போது இருந்த பால் (செக்ஸ்) உணர்வுகள், இப்பொழுது தாயின் அன்பு வெள்ளமாக மாறிவிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால், குழந்தை  பிறந்தவுடன், கணவன் மீதான அன்பில் 50 % அன்பு,  குழந்தைக்குப் போய்விடும். கணவன்பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்!

jaya hanuman

புலன்களை வென்றவன் (ஜிதேந்த்ரியன்) யார்?

 

ஸ்ருத்வா ஸ்ப்ருஷ்ட்வா அத த்ருஷ்ட்வா ச புக்த்வா க்ராத்வா ச ய: நர:

ந ஹ்ருஷ்யதி க்லாயதி வா ச விக்ஞேய: ஜிதேந்த்ரிய: (மனு 2-98)

 

 

ஸ்ருத்வா – கேட்டும்

ஸ்ப்ருஷ்ட்வா அத – தொட்டும்

த்ருஷ்ட்வா ச – பார்த்தும்

புக்த்வா – சுவைத்தும்

க்ராத்வா ச – முகர்ந்தும்

ய: நர: – எந்த மனிதன்

 

ந ஹ்ருஷ்யதி -மகிழ்வதில்லையோ

க்லாயதி வா – துக்கம் அடைவதில்லையோ

ச விக்ஞேய: — அவன் அறியப்படுவான்

ஜிதேந்த்ரிய: – புலன்களை வென்ற வீரன் என்று.

 

அதாவது ஐம்புல நுகர்ச்சியானது அவனுக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தராது. இந்தக் கருத்து பகவத் கீதையிலும் பல இடங்களில் வருகிறது.

 

ஒன்றாகக் காண்பதே காட்சி (அத்வைதம்)

புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் (மஹாவீரன்) —

என்று அவ்வையாரும் செப்பினார்.

 

–Subham–