வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494)

IMG_9761

பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2494

 

Time uploaded in London :–  12-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

 

திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா

அமாவாசை:8

பவுர்ணமி- 22

ஏகாதசி: 4, 18

சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.

IMG_9765

பிப்ரவரி 1 திங்கட் கிழமை

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)

பிப்ரவரி 3 புதன் கிழமை

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)

 

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்

 

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்

 

 

IMG_9814

பிப்ரவரி 6 சனிக் கிழமை

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்

 

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்

பிப்ரவரி 8 திங்கட் கிழமை

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே — பாரதியார்

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்

பிப்ரவரி 10 புதன் கிழமை

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

IMG_9816

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்

 

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்

 

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)

 

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்

 

பிப்ரவரி 15 திங்கட் கிழமை

சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்

 

 

IMG_9776

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

பிப்ரவரி 17 புதன் கிழமை

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்

 

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு

உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்

 

 

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்

பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்

 

பிப்ரவரி 20 சனிக் கிழமை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்

 

 

IMG_9820

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை

தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்

 

பிப்ரவரி 22 திங்கட் கிழமை

பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்

வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான் மறையும் ஆனான்  — தேவாரம்

பிப்ரவரி 24 புதன் கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்

 

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்

 

IMG_9764

 

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது

தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்

 

பிப்ரவரி 27 சனிக் கிழமை

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை

 

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி

 

பிப்ரவரி 29 திங்கட் கிழமை

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்

 

–சுபம்–

பழைய ஜோக்குகள்:ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் சம்வாதம்! (Post No. 2476)

lakshmi

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 10 January 2016

 

Post No. 2476

 

Time uploaded in London :– 11-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; உதவியவர் சென்னை சந்தானம் சீனிவாசன்)

 

நிரட்சரக்குக்ஷி நீலகண்டமய்யன்

ஒருநாள் ஒரு கோர்ட்டு விசாரணையில் கக்ஷிக்காரராகிய நீலகண்ட ஐயரை வக்கீல் பார்த்து, விவாத வேலி எத்தனை அடி நீளமிருக்கும், என்றார்.

கக்ஷிக்காரரகிய ஐயர் சொன்னதாவது,

“ஐயா! என் வீட்டுக் குட்டிச் சுவரிலிருந்து பாழுங்கிணறு வரையிருக்கும்” என்றார். இங்கே அந்தத் தூரத்தை அளந்து காட்டும் பார்ப்போம் என்று வக்கீல் கேட்க அவர் நீதிபதியைக் காண்பித்து “எசமான்கள்தான் பாழுங்கிணறு என்றால் வக்கீலய்யர்தான் குட்டிச் சுவரு” என்றார். சகலரும் புன்னகையோடிருந்தனர்கள்

Xxx

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

lakshmi in kshetras

ஸ்ரீதேவி x மூதேவி

ஒரு காலத்தில் ஸ்ரீதேவியும் மூதேவியும் “நான்தான் பெரியவள், நான் தான் பெரியவள்”- என்று சச்சரவு செய்துகொண்டு இதைப்பற்றி பூலோகத்தில் யாரிடத்திலாவது விசாரித்துத் தெரிந்துகொள்ளுவோம் என்று ஊரூராய்ச் சுற்றிவருகையில் வழியில் ஒரு செட்டியைக் கண்டு, “ஓய், வணிகரே! உலகத்தில் ஸ்ரீதேவியகிய நான் பெரியவளா, மூதேவியாகிய என் அக்காள் பெரியவளா? என்று கேட்க, செட்டி நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.

 

காரணம் என்னவென்று இருவரும் கேட்க செட்டியானவள், “ஸ்ரீதேவி வஞ்சகக்காரி.எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள் மோசக்காரி ஒருவனைச் சீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு ஸ்ரீதேவி சினமுற்று, “சீ, போ! இன்று முதல் நான் உன்னிடத்திருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, மூதேவி, செட்டியாரைத் தொத்திக்கொண்டாள். செல்வம் முழுதும் தொலைந்து அவன் ஏழையானான்.

 

அதன்பின் இருவரும் தர்க்கித்துக்கொண்டு, மற்றொரு கிராமத்தில் புகுந்த தருணம் ஒரு பிச்சையெடுக்கும் பிராமணன் எதிர்வர இருவரும் பிராமணரையழைத்து, “ஐயா, வேதியரே! உலகத்தில் சீதேவி, மூதேவி- ஆகிய இருவரில் யார் வந்தால் உலகத்தார் சந்தோஷப்படுகிறார்கள்?” என்று கேட்டனர். அதைக்கேட்ட பிராமணன் யோசித்து, சீதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாள் அவள் நம்மை அணுகுவாள், மூதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாலோ, சீதேவி போய்விடுவாள் என்று நினைத்து, “அம்மா! இவ்வுலகில் சீதேவியின் வருகையைப் பற்றி சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்கள் சந்தோஷம் சமமே என்றார். அதைக்கேட்டு இருவரும் பிராமணனின் வாக்கு சாதுர்யத்தை மெச்சிச் சென்றுவிட்டனர்.

Compiled by London swaminathan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

-சுபம்-

 

Tamil Genius! 100 tasks done simultaneously! (Post No. 2462)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2462

 

Time uploaded in London :–  8-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Western world is very familiar with blindfold chess games. German chess player Marc Lang played blindfold chess with 46 people at the same time and set a new record. But Tamils did 100 tasks simultaneously and earned a special place in the literary world. It is called Satavadanam. It is the art of responding to one hundred tasks performed simultaneously. One Tamil Muslim scholar Seykuthambi Pavalar is known for this feat. There was another gentleman born in Jaffna in Sri Lanka and attained the title ‘Satavadani’. His name is N.Kathiraver Pillay (1871-1907).

 

Born in West Puloli of Jaffna peninsula, he migrated to Chennai in Tamil Nadu hundred years ago. He was a great Tamil scholar who compiled a proper dictionary for Tamil like the English lexicographer Samuel Johnson. Mr Pillay lived just 36 years, but yet carved a special place for him in the field of literature. He composed poems in many genres such as Chitra Kavi (composing poems to fit them in the figures such as lotus, snake, chariot), Seettuk Kvai (Letter is the form of verses), Siledaik Kavi (poems in double entendre or paronomasia). He wrote commentaries for minor Tamil works and also published out of print Tamil works.

IMG_0280

When he was in Sri Lanka he did 18 tasks at the same time. But he practised more and got ready for 100 tasks. This was demonstrated in front of learned men in Chennai. If one is able to do eight tasks at the same time he is known as Ashtavadani and those who could do ten tasks simultaneously are known as Dasavadani. Like blindfold chess, more the number, more difficult it will be.

 

Ashtavadanam includes tasks such as answering eight people at one time. One will be asking him to compose a verse in Tamil , another will be asking him to do sums like addition, multiplication, subtraction, fifth person may ask him to play with him a board game. Other scholars will be asking him difficult questions in grammar. While he is doing all these things, he has to make an iron chain with difficult links. This is not the end. Someone will be throwing small stones or marbles on his back. When he stops he would ask him how many balls he threw. Another person will ask the meaning of a poem from Tamil Ramayana or Mahabharata.

 

If ashtavadanam is this complicated, one can imagine how difficult it would be to do 100 tasks simultaneously. N Kathirvel Pillay did 100 tasks in Lakshmi Vilas Theatre in Chennai. All this was done after announcing to the general public and inviting Tamil professors and other scholars. Simple questions such as the day, date, time on a particular point in the calendar will also be asked. Since N Kathirvel Pillay had tremendous memory power he did this without any difficulty.

Rev Clayton who was an officer in the British Government at that time wrote a review in ‘Mail’ newspaper after Kathirvelpillay’s Satavadanam. He mentioned that Mr Pillay did this with effortless ease.

blindfold chess

Blindfold Chess: similar task

The art of doing 8 or 10 or 100 tasks is unique to the Tamil speaking world. Tamil literary history mentioned several Ashtavadanis, Dasavadanis and a few Satavadanis. They symbolised tremendous memory power, focus and concentration.

 

–subham–

 

 

ஆசீர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!( Post No. 2413)

baba-blessing

Written by S NAGARAJAN

Date: 22 December 2015

 

Post No. 2413

 

Time uploaded in London :– காலை 6-16

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

 

ச.நாகராஜன்

 

பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.

 

 

அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.

கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

 

 kanna, rajini

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.

வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!

 

 

  • பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்

இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.

 

 

மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு                  சூழ்கலை வாணர்களும் –   இவள்                     என்று பிறந்தவள் என்றுணராத                 இயல்பினளாம் எங்கள் தாய் என்று இப்படி

ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.

 

 

நூலுக்கு வருவோம்.

 

நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-

பத்ரம் தே |

எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!

 

 

ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |

நீ நலமுற இருப்பாயாக

 

 

தே பவந்து மங்களம் |

உனக்கு மங்களம் உண்டாகட்டும்

 

 

சிரம் ஜீவ |

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

 

 

ஜயது பர்த்தா |

ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக

 

அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:

அப்ரதிரதோ  பவ | (சாகுந்தலம் 7-17)

 

ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக

 

யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது

ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் |  (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)

 

க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள்  வாழ்வாயாக

 

அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :

அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)

 

 என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்

 

ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :

இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம்  5-13)

(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்

 

 

துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :

ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)

 

வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்

( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம்  என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

 IMG_2597 (2)

******                                       

 

நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!

–subham–

 

சத்வ, ரஜோ, தாமச உணவு வகைகள் எவை? (Post No. 2396)

IMG_9939

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2396

 

Time uploaded in London :– காலை 9-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9937

267 உணவுகளின் பட்டியல்:

பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த அருமையான தமிழ் உணவு என்சைக்ளோபீடியாவில் உணவு பரிமாறுவது எப்படி? என்ற விவரங்களை நேற்று வெளியிட்டேன். இதோ 267 உணவு வகைகளில் எவை உத்தம (சத்வ), மத்தியம (ரஜோ), அதம (தாமஸ) உணவு வகைகள் என்ற பட்டியல். இதற்கான அறிவியல் காரணங்கள் ஆராயப்படாவிடினும், இது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகும். 1891-ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் 1912-க்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. இதில் குறிப்பிடப்படாத தமிழ் உணவு வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். யாராவது ஒருவர் இதை மறுபதிப்பு செய்வது பயனுள்ள பணியாக இருக்கும். சேர், வீசை போன்ற அளவை முறைகளை கிலோ முதலிய தற்கால அளவுகளுக்கு மாற்றுவது அவசியம். இதை எழுதியவர் டி.கே.ராமசந்திர ராவ்.

சத்துவ குண, உணவு வகைகள்

IMG_0336 (2)

 

ரஜோ குண, உணவு வகைகள்

IMG_0337 (2)

 

தமோ குண, உணவு வகைகள்

IMG_0338 (2)

நூலிலடங்கிய விஷயங்கள்

IMG_9957 (2)

 

IMG_9945

 

IMG_9946IMG_9947

–சுபம்–

விவேகானந்தரும் நெப்போலியனும்! (Post No. 2395)

VIVEKA QUOTE

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 December 2015

 

Post No. 2395

Time uploaded in London :– 8-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

விவேகானந்தர் சரிதம்

 

ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

 

ச.நாகராஜன்

 

 

கதாம்ருதம் எழுதிய மகான் எம்

 

எம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகேந்திர நாத் குப்தா (ஜனனம் 14-7-1854; சமாதி 4-6-1932) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதியான பின்னர், அன்னை சாரதா தேவியாரின் அருள் பாலிப்பில் வாழ்ந்து வந்தார். அன்னையின் மறைவுக்குப் பின் தாயை இழந்த சேய் போல அவர் துடித்தார். எழுபது வயது நிரம்பிய அவர்.”ஆஹா! அன்னை அல்லவா என்னை 35 வருட காலம் பாதுகாத்தார்! இப்போது அவர் இல்லையே! நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

 

 

பின் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு சிறு ஆசிரமத்தை அமைத்து அங்கு வசிக்கலானார்.

அமைதியையும் ஞானத்தையும் நாடுவோர் அந்த ஆசிரமத்திற்கு வரலாயினர். வேத கால ஆசிரமம் போல அது விளங்க ஆரம்பித்தது.

 

காலையிலிருந்து இரவு முடிய பரமஹம்ஸரின் அருளுரைகளும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அங்கு ‘எம்’மால் நினைவு கூரப்பட்டன.

 

பரமஹம்ஸரின் பக்தரான பாபு என்பவர் உலகியல் வாழ்க்கையில் அதிக துன்பம் அடைந்திருப்பதாக கேள்விப்பட்ட எம், ஒரு நாள் தனது தொண்டர்களில் ஒருவரை அவருக்கு உதவ கல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

அந்தத் தொண்டரிடம்  “பாபுவிடம் ஷிமுல்தலாவுக்கு (பாபு வாழ்ந்த இடம் – வங்காளத்தில் உள்ளது) என்னால் இப்போது வர முடியாது என்று சொல். யாருக்குத் தான் துன்பம் இல்லை, கஷ்டங்கள் இல்லை!” என்று கூறியவர் தொடர்ந்து வாழ்க்கையில் வாழ வேண்டிய முறையை அங்கு கூடியிருந்தோருக்கு உபதேசிக்க ஆரம்பித்தார்.

 

QUOTE VIEVEKA

எம்மின் உபதேச உரை

 

“உலகம் என்பது புயல் அலைகளைக் கொண்ட ஒரு பெரும் கடல். அதில் பலஹீனமானவர்கள் தலையை நிமிர்த்திக் கொண்டு நிலைத்திருக்க முடியாது. துன்பங்களோ, சறுக்கல்களோ ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஸ்வாமி விவேகானந்தர், “ எவர்கள் துன்பங்களையும் சறுக்கல்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் குழந்தைகள்.. பச்சைக் குழந்தைகள்” என்று சொன்னார்.

 

 

ஸ்வாமிஜி தனது நண்பர் ஒருவரிடம். “ உனக்கு தொந்தரவு, தாழ்வுகள், சறுக்கல்கள் என்றால் என்ன என்று தெரியுமா? எவர்கள் அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மனிதர்களா, என்ன?” என்று கேட்டார்.

 

 

பரமஹம்ஸர் ஒரு  முறை சொன்னார்: “சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள் ஐந்து ரூபாய்க்குச் சமம். ஆனால் எவர்கள்  வெற்றி தோல்வியில் மயங்காமல் இருக்கிறார்களோ அவர்கள் எழுபத்தைந்து ரூபாய்க்குச் சமம். அவர்கள் தொட்டவுடன் துள்ளிப் பறந்தோடும் காளைக்குச் சமம். அவர்கள் எந்த ஒரு சந்தோஷமான உணர்வுக்கும் அடி பணீய மாட்டார்கள்”.

 

 

(கிரேக்கத்தில் உள்ள) ஸ்பார்டாவில் ஒரு  முறை பலஹீனமானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கிப் போட்டார்கள். அந்த தேசத்தில் பலஹீனமானவர்களை ஒரு பெரும்  தொந்தரவு என்று நினைத்தார்கள். பலஹீனமானவன் எதையும் சாதிக்க முடியாது. துன்பங்களைச் சந்திக்காதவன் மனிதனா என்ன?

 

மஹாபுருஷர்களின் குணாதிசயங்கள் எவை தெரியுமா? பொறுமை, அபாய தருணங்களில் சீரான முன்னேற்றம், நல்ல காலங்களில் தர்ம சிந்தனை, பேச்சில் நளினம், போர்க்களத்திலோ அபார வீரம் – சிங்கத்தைப் போல!”

 

Statue équestre de Napoléon

L’empereur désigne le port.

 

நெப்போலியனின் நன்றி உணர்வு

 

இதைத் தொடர்ந்து எம் பாண்டவர்கள் துன்பங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டார். பி நெப்போலியனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்னர்ர்.

“நெப்போலியன் படை விரானாக இருந்த போது அவனுக்கு திடீரென்று வேலை போனது.  கஷ்டத்தில் வாடும் அவனது தாயார் அவனுக்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு கடிதம் எழுதினார். அவனால் வேதனையைத் தாள முடியவில்லை. நேராக ஆற்றை நோக்கி ஓடினான். அதில் குதித்து உயிரை விட் நினைத்தான். அப்போது அவனைப் பின்னாலிருந்து ஒரு கரம் தொட்டது. அவனது நண்பர்களில் ஒருவனின் கரம் அது.

 

 

‘என்ன விஷயம்’ என்று அவன் கேட்க நடந்ததை நெப்போலியன் சொல்லி வருந்தினான். உடனே அந்த நண்பன் தன் பையிலிருந்த (இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான) பிரெஞ்சு நாணயங்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான். தபால் அலுவலக நேரம் முடியப் போவதை நினைத்த நெப்போலியன் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் அதை அனுப்ப ஓடினான். காலம் ஓடியது. படிப்படியாக உயர்ந்த நெப்போலியன் சக்கரவர்த்தியாக மாறினான.

ஒரு நாள் தன் நகரில் மக்கள் வெள்ளம் சூழ ஊர்வலமாக வந்த போது வழியில் ஒரு ஓரமாக நின்றிருந்த பழைய நண்பனைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்ட நெப்போலியன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தான்.

 

 

அந்த நிலையிலும் கூட அந்த நண்பன் தான் நெப்போலியனுக்கு பணம் கொடுத்து உதவியதைச் சொல்லவில்லை. ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நெப்போலியன் வற்புறுத்தி அவனுக்கு ஒரு பெரும் பதவியைத் தந்து கௌரவித்தான்.”

napoleon_statue_inside_les_invalides_2_1600

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில்

 

எம் இதைச் சொல்லி நிறுத்தினார். உடனே குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் இது ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போல அல்லவா இருக்கிறது என்று கூறி வியந்தார்.

அந்தச் சீடர் கூறினார்:- “அடடா! நெப்போலியன் எப்படிப்பட்ட அரும் குணம் உடையவன். பொது சபையில் தன் நண்பனை கௌரவித்தானே! ஸ்வாமிஜியின் வாழ்க்கையிலும் இதே போல நிகழ்ச்சி நடந்துள்ளதே! அல்மோராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தனது பழைய கால நண்பர் ஒருவரைச் சுட்டிக் காட்டி வரவழைத்து பெரிதும் கௌரவித்தார். உணவின்றி பசியால் வாடி விவேகானந்தர் அலைந்த காலத்தில் அந்த நண்பர் அவருக்கு ஒரு வெள்ளரிக்காய் கொடுத்து அவர் பசியைப் போக்கினார். அந்த நன்றியை அவர் மறகக்வே இல்லையே” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

 

எம் கூறினார்: “அது தான் மஹாபுருஷர்களின் குணநலமாகும். அவர்கள் ஒவ்வொரு நல்ல செயலையும் -அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை – மறக்க மாட்டார்கள். என்றும் நன்றியுடன் இருப்பர்.”

 

 

இரவு நேர சந்திர ஒளி பிரகாசமாக ஒளிர ஆசிரமத்தின் வனாந்திர சூழ்நிலை ஸ்வாமிஜியின் நினைவால் புனிதம் பெற்றது.

 

நெப்போலியன் வாழ்விலும் ஸ்வாமிஜியின் வாழ்விலும் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையை மனதில் அசை போட்டு வியந்தவாறு சீடர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் கலைந்தனர்.

 

*********

ஸ்வாமி நித்யாத்மனந்தா எழுதிய ‘M – THE APOSTLE AND THE EVANGELIST’ (VOLUME – 1) என்ற நூலில் 346 முதல் 349ஆம் பக்கம் முடிய உள்ள உரையாடலை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை.

பம்பாய் நகரில் சில அதிசயங்கள்!! (Post No. 2388)

IMG_2814 (2)

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 6-06 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article was published in English

 

எனது மும்பை யாத்திரை!

இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னர் மும்பை சென்றபோது நான் பார்த்த இரண்டே இடங்கள் மஹாலக்ஷ்மி கோவிலும், சித்தி விநாயகர் கோவிலும்தான். இம்முறையாவது ஜுஹு பீச்/கடற்கரை, பயங்கர வாதிகள் தாக்கி நூற்றுக் கணக்காணோரைக் கொன்ற தாஜ் ஹோட்டல், இந்தியா கேட் (இந்தியாவின் நுழைவாயில்), விக்டோரியா டெர்மினஸ் (ரயில் நிலையம்), பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஆகியவற்றைக் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். ஆயினும் எனது சம்பந்தியின் வலியுறுத்தலின் பெயரில், விமானத்திருந்து இறங்கிய நாளன்றே மீண்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கே சென்றோம். ஒரே கூட்டம், அரை நிமிட தரிசனம். கையில் பூ, வாயில் கொழுக்கட்டையுடன் திரும்பினோம். தமிழர்களுக்கு முருகன் எப்படியோ அப்படி மஹாராஷ்டிரர்களுக்கு கணபதி. நாம், அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது போல, அவர்கள் விநாயகரின் எட்டு தலங்களுக்குச் சென்று வருவர். விநாயக சதுர்த்தி அங்கு தேசிய தேசிய திருவிழா!

IMG_2803 (2)

வெளியே வந்தவுடன் கடைகளில் இருந்த, தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத பூ வகைகளையும், சிறிய கொழுக்கட்டை முதல் மிகப்பெரிய ராட்சதக் கொழுக்கட்டைகள் (மோதகம்) வரையும் போட்டோ எடுத்தேன்.

 

நாசிக்கிலிருந்து திரும்பிவந்து மூன்று நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் ‘ஷாப்பிங்’ சென்றோம். பின்னர் ஒரு டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் சென்றோம். இந்தியா கேட்டுக்கு எதிரே புகழ்மிகு டாஜ் ஹோட்டல் இருக்கிறது. அதில் நைசாக உள்ளே நுழைந்தோம் ரிசப்ஷன் வரை சென்று வழ வழ தரையில் நடந்தோம். எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி கேட்டுகள் உள்ளன. நம்மைச் சோதித்தே அனுப்புகின்றனர். காரணம்—எதிரேயுள்ள கடல் வழியாக ரப்பர் படகில் வந்த பயங்கர வாதிகள் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதே. இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

IMG_2790

தாஜ் ஹோட்டலுக்கு எதிரேயிருந்த இந்தியா ‘கேட்’டருகே அன்று கடற்படை விழா நடந்ததால், பக்கத்தில் அனுமதிக்கவில்லை. தூரத்தில் கப்பல்கள் மட்டும் விளக்கொளியில் ஜொலித்தன. தொலைவிலிருந்து இந்தியா கேட்டையும், கப்பல்களையும், நூற்றுக் கணக்கான மின் விளக்கு பொருத்தப் பட்ட அலங்கார குதிரை வண்டிகளையும் பார்த்தோம். நல்ல கூட்டம். குழந்தைகளுடன் வந்தோரும், வெளி நாட்டினரும், அலங்கார குதிரை வண்டிகளில் ஏறி பவனி வந்தனர். ஒரு புறம், சுண்டல், பொறி கடலை விற்பனை நடந்து கொண்டிருந்தது. மறு புறம் இளம் சிட்டுகள் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வியாபாரி ஐம்பது ரூபாய் விலையுள்ள ராட்சத பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்!

 

வீர சிவாஜி வாழ்க (ஜய ஜய பவானி: பாரதி பாட்டு)

 

மஹாராஷ்டிரத்தில் விநாயகருக்கு அடுத்தபடியாக போற்றப்படுபவர் வீர சிவாஜி! பல இடங்களில் இவரது சிலை உண்டு. இந்தியா கேட் வீர சிவாஜி, ஏர்போர்ட் வீர சிவாஜி ஆகியவற்றை காரிலிருந்தே படம் எடுத்தேன். சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி விமான நிலையம். இப்படி ரயில் நிலையம், விமான நிலயம், மியூசியம் எல்லவற்றின் பெயர்களையும் சிவாஜியின் பெயரில் மாற்றிவிட்டனர். மொகலாய சாம்ராஜ்யத்தை விழுத்தாட்டி, முஸ்லீம்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த சிவாஜியின் பெயரை நம் நாட்டிற்கே சூட்டினாலும் அது போ.ற்றப்பட வேண்டியதே.

IMG_9425

 

IMG_9427

பம்பாய் ஐடியா/ யோஜனை

சுவிடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ், அமெரிக்கவிலுள்ள நியூ யார்க், இதாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களுக்குச் சென்றவுடன், சின்னச் சின்ன பயனுள்ள விஷயங்களை எழுதி இவைகளை ஏன் மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாதென்று கேட்டிருந்தேன். பம்பாயிலும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டேன்.

 

பட்டுப்போன மரங்களுக்கு பல வண்ணப் பெயிண்ட் அடித்து அதில் கண் காது மூக்கு வரைந்து அழகு செய்துவிட்டனர். இதுபோல வைரம் பாய்ந்த மரங்களை நாமும் அலங்கரிக்கலாமே!

 

பல இடங்களில் மரத்தின் உச்சியில் மஞ்சள் நிற டயர்கள் தொங்கின. முதலில் அவை ஆபத்துக்கு உதவும் லைப் போட் ( உயிர் காக்கும் படகுகள்) என்று நினைத்தேன். மூலைக்கு மூலை அவைகலைக் கண்டவுடன் டிரைவரிடம் கேட்டேன். அவை எல்லாம் டயர்களுக்கு பங்க்சர் ஒட்டும் கடைகளாம். அதை எளிதில் காட்ட மரங்களின் கிளைகளிலிந்து மஞ்சள் நிற டயர்களைத் தொங்க விட்டுள்ளனர். இது போல ரயில் நிலையங்களைக் காட்டவும் பஸ் ஸ்டாப்புகளைக் காட்டவும் நாமும் சில அடையாளங்களை — தொலைவிலிருந்து எளிதில் காணும் அடையாலங்களைத் தொங்கவிடலாமே.

IMG_9550

லண்டன் ஐடியா

லண்டனில் பல்வேறு மொழிகள் ( 130 மொழிகள்) பேசுவோர் வாழ்கின்றனர். ஆகையால் செண்ட்ரல் மிடில்செக்ஸ் ஆஸ்பத்தியில் ரிசப்ஷன் பகுதிலிருந்து பல்வேறு வண்ணக் கோடுகள் செல்லும். யாரேனும் பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) எங்கே என்றால், சிவப்பு நிறக் கோட்டைக் காட்டி அதைப் பின்பற்றும்படி சைகை காட்டுவர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் FOLLOW THE RED LINE, PLEASE என்பர். இப்படி எக்ஸ்ரே என்றால் நீல நிறம் – என்று முக்கிய டிபார்ட்மெண்டுகளுக்கு கலர் கோடிங் (COLOUR CODING வண்ண அடையாளம்) வைத்துள்ளனர். இதைப் பின்பற்றும்படி வேறு சில மருத்துவ மனைகளுக்கும் நான் எழுதினேன்.

 

சமீப காலமாக லண்டன் விக்டோரியா (VICTORIA STATION) ரயில் நிலயம் போன்ற பெரிய ஸ்டேஷன்களும் பயணிகளுக்கு இந்த கலர் லைன்களப் போட்டு, பஸ், டாக்ஸி டாய்லட் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி கலர் கோடிங் பின்பற்றலாம். பிளட் டெஸ்ட் BLOOD TEST என்றால் உலகம் முழுதும் சிவப்பும், எக்ஸ் ரே X RAY என்றால் உலகம் முழுதும் நீல நிறமும் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குM? இதே போல டாக்ஸி, ரயில், பஸ் ஆகிய நிலையங்களுக்கும் உலகம் முழுதும் ஒரே நிற சைகைகள் இருந்தால் நலம்.

IMG_8067

ஆல மரமும் கரும்பு ஜூசும்

மஹாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் உள்ளன. தென்காசி- செங்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதே போல கரும்புச் சாறும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்போது வெங்காய விலையேற்றமும், தட்டுப்பாடும் இருப்பதால், சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயம் விற்கப்படுவதையும் கண்டோம்.

 

அஞ்சல்தலைக் கண்காட்சி

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தினமும் இலவச ஆங்கில நாளேடுகள், அறையின் வாசலில் கிடக்கும். அதை எடுத்தபோது அதிலிருந்து விழுந்த நோட்டீஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நவி மும்பை (புதிய பம்பாய்) பகுதியில் ஒரு தபால்தலைக் கண்காட்சி- இலவச அனுமதி – என்று அச்சிட்டிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பன்று மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரில் விரைந்தேன். லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த எந்த தபால்தலைக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. மேலும் சென்னை, மதுரை தலைமைத் தபால அலுவகங்களில் பிலாடெலிக் கவுண்டரில் தபால்தலைகள் வாங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தால் விமானங்கள் ரத்தாயின என்று கேட்டு என்ன செய்வதென்று திகைத்தபோது, “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – தபால்தலைக் கண்காட்சி நோட்டீஸ் வந்தது.

IMG_9639

தபால்தலைக் கண்காட்சியில் பல இந்திய தபால்தலைகளை விலைக்கு வாங்கினேன். ஆனால் லண்டனில் 150 வியாபாரிகள் ஸ்டால்களில் தபால் தலைகள் விற்பார்கள். மும்பையில் வெறும் அரசு ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. ஆயினும் கும்பல் கும்பலாக பள்ளி மாணவ மாணவியர் வந்து அஞ்சல்தலைகளைத் ‘தரிசித்த’ வண்ணமிருந்தனர். அதைக் கண்டபோது மகிழ்ச்சி பொங்கியது.

 

தபால்தலை சேகரிப்பு உலகில் அழிந்துவருகிறது. காரணம்: இண்டர்நெட், பேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ். இதுதவிர அஞ்சல்தலைகளின் விலையேற்றம்– நான் பிரிட்டனில் ஆண்டுதோறும் வெளியிடும் தபாலதலைகளை வாங்க நூறு பவுண்டுகளுக்கு மேல் செலவிடுகிறேன். இன்னுமொரு காரணம் தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பதிலாக, போஸ்ட் ஆபீஸ்காரகளே அச்சு முத்திரை குத்தும் வழக்கம் மேலைநாடுகளில் பரவிவருகிறது

IMG_9631

உலக அதிசய தபால் கார்டு!!

அஞ்சல்தலைக் கண்காட்சியில் தபால் கார்ட் (போஸ்ட் கார்ட்), உறை முதலியனவும் வாங்கியபோது வியப்பு மேலிட்டது. ஒரு கார்டின் விலை ரூ 2-50, உறையின் விலை ரூ.4. எங்கள் நாட்டு கணக்கில் இரண்டரை பென்ஸ், நாலு பென்ஸ்!! உலகிலேயே குறைந்த தபால் கட்டணம் இந்தியாவில்தான்! இமயம் முதல் குமரி வரையுள்ள பன்னிரெண்டரை லட்சம் சதுரமைல் பரப்பில்  உள்ளோரைத் தொடர்புகொள்ள இரண்டரை ரூபாய் போதும்! ஐரோப்பாவில் 15 நாடுகளைக் கடக்கும் தூரம் 3500 மைல் (குமரி- காஷ்மீர்).இதற்கு நாங்கள் 60 பென்ஸ் முதல் ஒரு பவுண்ட் வரை ( ஒரு பவுண்ட்= 100 ரூபாய்) செலவிடுகிறோம்.

வாழ்க இந்தியா! வளர்க அஞ்சல் துறை!

IMG_2731

விமானநிலயத்தில் ஒரு சர்ப்ரைஸ் !!

சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமானநிலயத்தில் ட்யூட்டி Fரீ கடைப் பகுதியில் கோண்டு இனப் பழங்குடி மக்களின் ஓவியங்கள் கலைப் பொருட்களை விற்கும் இரண்டு கடைகளைக் கண்டேன். மிக அருமையான வண்ண ஓவியங்கள்; கலைப் பொருட்கள். ஆனால் விலையோ யானை விலை, குதிரை விலை!! பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு புகைப் படமும் எடுத்தேன். நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்டுகள் வனம் என்பதே = கோண்ட்வானா லாண்ட்= காண்ட வனம் என்பதை நிரூபித்து இருக்கிறேன். காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது தென் அமெரிக்காவுக்குச் சென்றவர்களே மாயா இன மக்கள் என்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். ((காண்டவ = கோண்ட், காண்டவ வனம் = கோண்ட்வானா லாண்ட்.))

 

இப்பொழுது இந்தப் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.

 

வாழ்க காண்டவ வன கோண்ட் மக்கள்!

 

–Subham–

 

ஐன்ஸ்டீன் வாழ்க்கை தரும் 10 பாடங்கள்

einstein statue

Compiled by S NAGARAJAN

Date: 30 October 2015

Post No: 2285

Time uploaded in London :– 5-51 AM

(Thanks for the pictures) 

Don’t reblog it at least for a week. Don’t use photos. They are not mine.Photos by Prabhakar Kaza.

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்துள்ள கட்டுரை

ஐன்ஸ்டீன் வாழ்க்கை தரும் 10 பாடங்கள்

.நாகராஜன்

விஞ்ஞானம் என்பது அற்புதமான ஒரு விஷயம்அதை வைத்துத் தான் நீங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இல்லாத போது!”

அலங்கோலமாகக் காட்சி அளிக்கும் ஒரு டெஸ்க் குழம்பி இருக்கும் ஒரு மனதைக் காட்டுகிறது என்றால், மிகவும் காலியாக இருக்கும் டெஸ்க் எதைக் காட்டுகிறது?”  – ஐன்ஸ்டீன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விஞ்சிய சமீப காலத்து விஞ்ஞானி யாருமே இல்லை என்பதால் அவர் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன என்பதை ஏராளமானோர் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்; இன்றும் செய்து வருகின்றனர்.

விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாமல் சாமானிய மனிதனுக்குக் கூட அவர் வாழ்க்கை ஏராளமான நல்ல விஷயங்களை அளிக்கிறது.

அவர் விஞ்ஞானியாக இருக்கும் போதே ஒரு நல்ல ஆசிரியராக இருந்தார். அப்படி ஆசிரியராக அவர் மாணவர்களுக்கு மட்டும் இல்லை; உலகத்திற்கே ஆசானாக இருந்தார். ஆகவே தான் அவர் வாழ்க்கை முறையையும் அவர் வாழ்க்கை ஏற்றம் பெறக் கூறிய சொற்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

குறைந்தபட்சம் பத்துப் பாடங்களையாவது அவரிடமிருந்து எல்லோரும் கற்க முடியும்.

  • நான் விசேஷ திறமை படைத்தவன் அல்ல. எதைப்பற்றியும் மிகத் தீவிரமாக அறிவதில் ஆர்வம் உடையவன்”, என்றார் அவர். இந்த ஒரு குணமே நம்மை வளர்க்கப் போதுமானது. எதையும் போகிற போக்கில் எடுத்துக் கொள்ளாமல், சற்று தீவிரமாக அதன் ஆழத்திற்குச் சென்று பார்க்கும் அணுகுமுறை வேண்டும்.

இந்த அணுகுமுறை நாளடைவில் நமது இயல்பான குணமாக ஆகிவிடும். அப்போது எதில் நீங்கள் சாதிக்க விரும்புகிறீர்களோ அதில் வெற்றி உறுதியாகிவிடும்.

  • நான் பிரமாதமானவன் இல்லை; ஆனால் எந்த பிரச்சினையிலும், இன்னும் கொஞ்சம் நீடித்துத் தாக்குப் பிடிக்கிறேன்என்றார் அவர். எந்த ஒரு பிரச்சினையிலும் உடனடியாக தீர்வு காண உலகம் துடிக்கிறது. யாருக்கும் பொறுமை இல்லை. நீடித்து தாக்குப் பிடிக்கும் மனமும் இல்லை. மாறாக எடுத்த விஷயத்தை முடிக்கும் உறுதியுடன் விடா முயற்சி தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். விடாமுயற்சியை விலைக்கு வாங்க முடியாது; விற்கவும் முடியாது! அதை எந்த அளவுகோலாலும் அளக்க முடியாது. அது அளவுகோலுக்கு அப்பாற்பட்ட ஒன்று!
  • காரை டிரைவ் செய்து கொண்டே நல்ல அழகிக்கு முத்தமிடும் ஒருவன், அந்த முத்தம் எப்படி இடப்பட வேண்டுமோ அப்படி இடவில்லை என்பது உறுதி. ஒரு சமயத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்து என்றார் அவர். பல விஷயங்களில் கவனம் செலுத்தி அனைத்தையும் விரைவில் சாதிக்க விரும்பும் ஒருவன் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாமல் திணறுகிறான்!

eins5

  • கற்பனையே அனைத்தும். வாழ்க்கையில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அனைத்துக் கவர்ச்சிகளுக்கும் அடிப்படை மனச்சித்திரமே! அது இலவசமாக ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் ஒன்று. அதில் தான் ஒருவன் தன் தனித்திறமைகளை உணர்கிறான். உணரமுடியும்!
  • தவறுகள் தவிர்க்க முடியாதவை; எல்லோருக்கும் தவறுகள் ஏற்படுவது சகஜம். தவறு செய்யாத மனிதனே இல்லை. தவறு செய்யாமல் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் புதிதாக எதையுமே செய்து பார்த்தவன் இல்லை என்று அர்த்தம். தவறுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான படிக்கற்கள்; தடைக்கற்கள் அல்ல! பெரும் வெற்றிக்கு முன்னர் கிடைக்கும் தோல்விகள் வெற்றிக்கான பாக்கேஜுக்குள் அடக்கமானவையே!
  • எதிர்காலத்தை நம்மால் பார்க்க முடியாது. “நான் எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. அது நாம் நினைப்பதற்கு முன்பேயே வெகு சீக்கிரமாக வந்து விடுகிறதுஎன்றார் அவர். இன்று நாம் செய்யும் செயல்களின் விளைவே நமது எதிர்காலமாக உருப்பெறுகிறது. நமக்கு முன்னால் எதிர்காலத்தில் என்ன உள்ளது என்பது பற்றி நினைப்பது மோசமான விஷயம் இல்லை என்பது உண்மை தான்; என்றாலும் கூட அப்படி நினைத்துக் கொண்டே இருக்கும் போது நிகழ்காலத்தின் மீதான கவனம் சிதறிப் போகிறது.
  • வெற்றியின் மீது கவனம் செலுத்தாதீர்கள். மதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்என்றார் அவர். வெற்றி என்பது நிச்சயமாக அடைய வேண்டிய ஒரு நல்ல இலட்சியம் தான்! ஆனால் அதை விட அனைவரும் மதிக்கும்ஒரு விஷயத்தை நீங்கள் செய்து விட்டீர்கள் என்றால் அது காலம் காலமாக நிலைத்து நிற்கும். ஆகவே வெற்றியை நினைக்காமல், மதிப்பின் மீது கவனம் செலுத்துங்கள்.து
  • பைத்தியக்காரத்தனம் என்பது எது என்று கேட்டால் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து வேறு வேறான முடிவுகளை எதிர்பார்ப்பது தான்! வேறு வேறு விதமாக முடிவுகள் இருக்க வேண்டுமெனில் வேறு வேறான செய்கைகளை அல்லவா நீங்கள் மேற்கொள்ள வேண்டும்! முட்டாள் ஒருவன் தான் ஒரே விதமான செய்கைக்கு வேறு வேறான முடிவுகளை எதிர்பார்ப்பான். ஆகவே மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். முடிவுகளும் மாறும்!
  • அறிவு வேண்டும் வேண்டும் என்கிறோம். உண்மையான அறிவு அனுபவத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
  • ஒரு விளையாட்டில் ஈடுபடும் போது விளையாட்டின் அடிப்படை விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நன்கு விளையாடி வெற்றி பெற முடியும். மற்றவரை விட அப்போது தான் உங்களால் நன்கு விளையாட முடியும். ஆகவே எதில் ஈடுபட்டாலும் அடிப்படையை நன்கு புரிந்து கொள்ளுங்கள். பின்னர் செயல்பட ஆரம்பியுங்கள்.

ஐன்ஸ்டீன் தரும் வாழ்க்கையையே மாற்றும் வாழ்க்கையையே மாற்றும் பத்து அறிவுரைகள் இவை தான்;

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

அமெரிக்காவில், மவுண்டி சினாய், ஜ்யூவிஷ் மற்றும் நார்தர்ன் லிபர்டீஸ் ஆகிய மூன்று மருத்துவ மனைகளும் ஒன்றாக இணையத் திட்டமிட்டன. இந்த மருத்துவ மனைகளின் இணைப்பிற்குப் பின் புதிய பெயர் சூட்ட வேண்டுமே! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மெடிகல் செண்டர் என்று பெயர் சூட்ட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. தங்கள் முடிவைத் தெரிவித்து ஒரு கடிதத்தை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினர். அதற்கு ஐன்ஸ்டீன் ஒரு பதில் கடிதம் அனுப்பினார் இப்படி:-

ஜூன் 28, 1951

பெறுநர் : ஜோஸப் ஃபர்ஸ்ட் பிலடெல்பியா

அன்புள்ள டாக்டர் ஃபர்ஸ்ட்,

தங்களது 26ஆம் தேதியிட்ட கடிதத்திற்கு நன்றி. மெடிகல் செண்டருக்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் என் பெயரைத் தேர்ந்தெடுத்தது என் மனதை மிகவும் தொட்டு விட்டது. இந்த கௌரவத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் மிகவும் பிஸியாக இருப்பவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே வேறு ஏதாவது முக்கிய காரணம் இருந்தாலன்றி இதற்காக பிரின்ஸ்டனில் இருக்கும் என்னைப் பார்க்கும் சிரமத்தை தயவுசெய்து மேற்கொள்ள வேண்டாம்.

நன்றி, வாழ்த்துக்கள்.

சின்சியர்லி யுவர்ஸ்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தன் ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருக்கும் ஐன்ஸ்டீன் பொதுவாக தம்மை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை. ஆகவே நாசுக்காக அவர்கள் மனம் புண்படாதபடி அவர்கள் தந்த கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர்கள் தன்னை வந்து பார்க்கும் சிரமத்திற்கு அவர்களை ஆளாக்கவில்லை!

இஸ்ரேலின் ஜனாதிபதியாக ஆக அவருக்கு அழைப்பு வந்த போது அதை நளினமாக மறுத்து விட்டார் ஐன்ஸ்டீன். ஆனால் அதே சமயம் ஒரு சிறுமி தனது கணிதப் பிரச்சினைக்கு தீர்வு தர முடியுமா என்று கேட்ட போது நீண்ட கடிதம் எழுதினார். அதில் அந்த சிறுமியை விடக் கணிதத்தில்  தான் ஒன்றும் ஒசத்தி இல்லைஎன்று தெரிவித்திருந்தார். உலகம் கண்ட அபூர்வமான மேதை, பிரபல விஞ்ஞானி ஆனால் என்ன எளிமை!

பாரதி பற்றி அவரது மனைவி செல்லம்மாள் !

IMG_6148

Article No. 2099
Written by S NAGARAJAN
Date : 26 August  2015
Time uploaded in London :–  19-10

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -3

எழுதியவர்: ச.நாகராஜன்

என் கணவர்

இத்தொகுப்பில் இடம் பெறும் இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

அற்புதமான அந்த உரையை நிகழ்நிலையில் (Online) யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; தரவிறக்கமும் (downloading) செய்து கொள்ளலாம். பல வலைத்தளங்களில் இந்த உரையைக் காண முடிகிறது.

இதை ஒலிபரப்பிய திருச்சி வானொலி நிலையத்திற்கு தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. இதை வலைத்தளத்தில் ஏற்றிய, யார் என்று அறிய முடியாத, முதல் அன்பருக்கு நமது நன்றிகள். சுமார் 573 வார்த்தைகள் அடங்கிய இந்த உரையிலிருந்து சில பகுதிகள் – இதை முழுவதுமாக உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதற்காக!

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

IMG_6145

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

அருமையான கட்டுரையில் பெரும்பாலான பகுதிகளை மேலே படித்து விட்டீர்கள்.

விட்டுப் போன பகுதிகளை உடனே இணைய தளத்தில் படித்து விடலாம்.

பாரதி ஆர்வலர்கள் சேர்க்க வேண்டிய பாரதி இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான கட்டுரை!

***************

Stories behind Five Tamil Proverbs

pattinathar

Compiled by London swaminathan

Article No.1908; Dated 3 June 2015.

Uploaded at London time: 20-56

 

Tamil language is rich in proverbs. There are more than 20,000 proverbs. Percival, Rev.J.Lazarus and Herman Jensen had compiled and published them hundred years ago. Later lot of books appeared in Tamil; but there are lot of proverbs not included in these volumes. There is scope for lot of research as well. They have to be compiled subject wise and compared with proverbs in other Indian languages.

 

Some of the proverbs have some stories or interesting anecdotes behind them. I have given below only five proverbs with the stories behind them. It can be compared with proverbs in other Indian languages.

1.His own deeds will burn him, and a cake will burn the house

(Tan vinai tannaich chudum, Ottappam veettaich chudum)

Pattainathu Adikal was a great saint and poet. He used to eat with men of all castes. High caste Hindus did not do such thing in his days. So when his sister saw this, she was very angry. She tried to change his ways; but Pattinathar saw every one equal following the Upanishadic dictum Sarvam Brahma Mayam ( God is in everything), tat tvam Asi (You are That) and Isavasyam Idam Sarvam….. (Everything animate or inanimate that is within the universe is controlled and owned by the Lord).

But his sister was not convinced with his explanation or behaviour. She thought him better dead and so baked a cake with poison in it and gave it to him. Hindu saints had power to know what was happening around them. Knowing his sister’s bad intention and took the cake and threw it on the roof of her house. And he said the words in the proverb. By a miracle it set the house on fire. Thus the evil woman’s plan was spoiled.

2.The Old Woman finished her Ten miles, and so did the Horse

(Kizaviyum Kadam, Kuthiraiyum Kadam);kadam is ten miles.

The story is that a man having performed the proper religious ceremonies hastily mounted his horse and set off for heaven. At the same time an old woman performed some ceremonies, with all her heart slowly and carefully, and her real piety brought her to heaven before the man on horseback.

There is an equivalent English saying, “God knows well which the best pilgrims are”.

Actually this happened in the case of Avvaiyar and Sundaramurthy Nayanar. When Sundaramurthy Nayanar and Cheraman Perumal Nayanar travelled to heaven using their elephant and horse, Avvaiyar was there before the two devotes who were using the fast track. When they asked how come that old lady was before them, she told them that she prayed to Lord Ganesh (elephant headed God) who lifted her with his trunk and placed her at the entrance of the heaven. This proverb covers that anecdote as well.

cheraman

3.To you Bebe, and to your father Bebe

(Unakkum Bebe, unga Appanukkum Bebe)

A man pressed by his creditors was advised by a friend, to whom also he owned money, to escape from their importunities by feigning madness. The debtor accordingly did so replying to them all like a madman. He just said bebe, which is a nonsense word without any meaning. The plan was successful and the creditors were cheated. Then the friend asked that the debt due to himself should be paid. But he himself received the treatment he had advised the deceitful debtor to use to others. The proverb is also used about children who have no respect for others.

Equivalent English proverbs:

Trickery comes back to its own master

He falls into the pit, who leads another into it.

4.This is the law of my caste, and this is the law of my belly

(Ithu en Kulacharam, Ithu en vayitracharam)

Potters are predominantly Saivaites. But the potters in Sri Rangam were asked by the Vaishnavaites to put the Vaishnava mark on their foreheads; otherwise the Brahmins won’t buy their pots for the temple. One clever potter, having considered this difficulty, after making the Saivaite symbol (Vibhuti/Holy Ash) on his forehead made a big Vaishnava mark on his stomach. When rebuked for so doing by a Brahmin, he replied as above.

tiger_kills_student_

5.Like the jester that was bitten by a snake

(Pakadiyai Pambu Kadithathu Pola)

Applied to one who so often tells lies that if he happen to speak the truth no one will believe him. Or to a child that constantly feign sickness to avoid going to school, and is not believed to be ill when it is really sick. Once the jester was bitten by a snake and he cried for help. No one believed him. They thought he was just joking. It is similar to Crying Wolf Story in Aesop fables.

We have a similar story in India. A boy shouted for help saying that the tiger was coming. When the villagers gathered with all the weapons he was just laughing. He did it a few times and one day he encountered a real tiger. When he cried for help no one came forward thinking that he was trying to fool them once more. The tiger mauled the boy to death.

1.தன் வினை தன்னைச் சுடும், ஓப்ட்டப்பம் வீட்டைச் சுடும்

2.கிழவியும் காதம், குதிரையும் காதம்

3.உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பே பே

4.இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்

5.பகிடியைப் பாம்பு கடித்தது போல