வைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது?

dharba

Written by S Nagarajan
Post No. 1162; Dated:- 10th July 2014.

This is the seventh part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.

தர்ப்பம் ஏன் புனிதமானது?

தர்ப்பத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். தர்ப்பம் ஏன் புனிதமானது என்பதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது.

மன்னனாகிய மனுவின் பட்டணம் பர்ஹிஷ்மதி என்ற பெயர் பூண்டு புகழ் பெற்றது. அந்நகரம் அனைத்து ஸம்பத்துகளினாலும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதி வராஹ பகவான் தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் எந்த இடத்தில் உதிர்ந்தனவோ அந்த இடத்தில் இந்த பர்ஹிஷ்மதி நகரம் உருவானது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் பகவானுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன.

மஹானுபாவனாகிய அந்த மனு சக்கரவர்த்தி பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி வராஹன் மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்த காரணத்தினால் அந்த உதவியை நினைத்து பர்ஹிஸ் என்று கூறப்படுகின்ற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞ புருஷனை யாகங்களால் ஆராதித்தான். ஆகவே அந்த நகரம் பர்ஹிஷ்மதி என்று பெயர் பெற்றது.
ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது,
– ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் 22ஆம் அத்தியாயம்

diamonds

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

வைரத்தைச் சேகரிப்பதோ அல்லது அணிவதோ நன்கு பரிசோதித்த பின்னரே வளத்தை விரும்பும் ஒரு மன்னனால் செய்யப்பட வேண்டும்.

அதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ளவரும் அதில் நன்கு பரிச்சயம் உள்ளவரும் ஆகிய ஒருவரே அதன் விலை மற்றும் தரம் பற்றி அறிந்தவராக இருக்கும் தகுதி வாய்ந்தவர் ஆவர்.
நிபுணர்கள் வைரத்தை மிகவும் செல்வாக்கு படைத்தது என்று கூறுகின்றனர். ஆகவே நமது விவரங்களும் வைரம் பற்றிய விவரமான விவரணத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

-கருட புராணம் 68ஆம் அத்தியாயம்

வைரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உரைக்கும் அத்தியாயத்தில் வருவது. இதைத் தொடர்ந்து வைரம் கிடைக்கும் இடங்கள், அதன் குணாதிசயங்கள், தரத்தைச் சோதிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.

yanai4

வாஹனம் – 2

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உள்ள வாஹனம் பற்றிய தொடர்ச்சி:-

ஷீதளா தேவியின் வாஹனம் கழுதை – ஸ்கந்த புராணம் ,ருத்ர
யாமளம்
(ஷீதளா தேவி வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சக்தியின் அம்சம்)
கேதுவின் வாஹனம் புறா (மத்ஸ்ய புராணம் கேதுவின் வாஹனம் ராஜாளி என்று குறிப்பிடுகிறது)
ப்ரம்மாவின் வாஹனம் ஹம்ஸம் – நாரதீய புராணம், ஸ்ரீமத் பாகவதம்
ராகுவின் வாஹனம் புலி
செவ்வாயின் வாஹனம் குதிரை
அக்னியின் வாஹனம் ஆடு – நாரதீய புராணம்
குபேரனின் வாஹனம் நரன் – நாரதீய புராணம் (மனிதனே குபேரனுக்கு வாஹனம். சில நூல்கள் மனிதனின் ஆவி அல்லது ப்ரேதம் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக அவன் நர வாஹனன் என்றே குறிப்பிடப்படுகிறான்)
சந்திரனின் வாஹனம் மான் – நாரதீய புராணம் (மத்ஸ்ய புராணத்தில் சந்திரனின் வாஹனமாக வெண்குதிரை குறிப்பிடப்படுகிறது)
வருணனின் வாஹனம் மகரம் – விதி மார்க்க ப்ரபா

MERCURY_1991356g

நவ கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு,கேது ஆகிய இவைகள் உலகத்தினருக்கு இதம் செய்யும் நவ கிரகங்கள்.
-வாமன புராணம்,மார்க்கண்டேய புராணம், நாரத புராணம்,மத்ஸ்ய புராணம்,அக்னி புராணம், விஷ்ணு தர்மோத்தர புராணம், மஹாபாரதம், யாக்ஞவல்ய ஸ்மிருதி,வைகானஸ ஸ்மிருதி சூத்ரம்

சூரியனின் அதி தேவதை – சிவன்
சந்திரனின் அதி தேவதை – பார்வதி
செவ்வாயின் அதி தேவதை – ஸ்கந்தன்
புதனின் அதி தேவதை – விஷ்ணு
குருவின் அதி தேவதை – ப்ரஹ்மா
சுக்ரனின் அதி தேவதை – இந்திரன்
சனியின் அதி தேவதை – யமன்
ராகுவின் அதி தேவதை – பசு அல்லது காலம்
கேதுவின் அதி தேவதை – சித்ரகுப்தன்
-மத்ஸ்ய புராணம்

அழகாபுரியின் வர்ணனை!

குபேரனுடைய பட்டணமான அழகாபுரியைப் பற்றிய ஒரு சிறிய வர்ணனை இது:

ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது:-

அந்த அழகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீ மஹாவிஷ்ணு வின் பாதாரவிந்தங்களில் படிந்ததனால் மிகவும் பரிசுத்தமான நந்தை என்றும் அலக்நந்தை என்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

வாராய்! விதுரனே! தேவஸ்தீரிகள் தமது விமானங்களிலிருந்து இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளுக்கு வந்து தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக் கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவ ஸ்த்ரீகள் ஸ்நானம் செய்யும் போது அவர்களது தேகங்களிலிருந்து நழுவிய புதிய குங்குமங்கள் பட்டு, பொன்னிறம் உடையதான இந்நதிகளின் ஜலத்தைக் கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் தாமும் குடித்துத் தமது பெண் யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அழகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்தினங்களாலும் செய்த பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவர்களது பெண்மணிகளும் அந்நகரில் உலவிக் கொண்டிருப்பார்கள். அத்தைகையதான அந்த நகரம் மின்னல்களும் மேகங்களும் சூழப்பெற்ற ஆகாயம் போல விளங்கும்.

-ஸ்ரீமத் பாகவதம் நான்காம் ஸ்கந்தம் ஏழாம் அத்தியாயம்

தொடரும்…………………………………………………

pictures are taken from face book and other websites for non commercial use;thanks.

contact swami_48@yahoo.com

புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்?

buddhacelestial

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1158; தேதி:- 8 ஜூலை 2014.

இந்துமதம் ஒரு சமுத்திரம். அதில் கலக்கும் நதிகள் நாம, ரூப, தேயங்ளை இழந்து ஒன்றாகி அதில் கலந்து விடும். புத்த மதம், சமண, சீக்கிய மதங்கள் ஆகியன இந்து மதத்தின் கிளைகள். அதாவது மறு பிறப்பு, பாவம், புண்ணியம், கர்மவினை முதலிய பல கொள்கைகளில் ஒன்றுபட்டு நிற்பவை. ஆகையால் முதலில் இருந்த நிலை மாறி மீண்டும் இந்துக்களின் எல்லா சடங்குகளையும் செய்துவருவதை இன்றும் காணலாம். இந்துமதத்தில் பெரிதும் போற்றப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவர். அதாவது இந்துவாகப் பிறந்து, புத்த மதத்தை ஸ்தாபித்துவிட்டு மீண்டும் இந்துமதத்தில் ஒடுங்கிவிட்டவர். இது எப்படி, எப்போது, ஏன் நிகழ்ந்தது? என்பதே என் ஆவுக் கட்டுரையின் நோக்கம்.

புத்தர், இந்துமதத்தில் உள்ள எல்லாக் கொள்கைகளயும் ஏற்றுக் கொண்டவர். ஆனால் யாக யக்ஞங்களில் உயிர்ப்பலி கொடுப்பதை எதிர்த்தவர். அர்த்தமே இல்லாமல் வெறும் சடங்கு போல உயிர்வதை நிகழ்ந்தபோது எதிர்த்துக் குரல் கொடுத்தவர். ஆனால் அந்த மதம் பிறந்த இந்தியத் திருநாட்டிலும், பரவிய நாடுகளிலும் அவர் கொள்கை தோற்றுப்போனது. எல்லோரும் பாம்பு, மான் மாமிசம், தேள் எல்லாவற்றையும் விரும்பிச் சாப்பிடுவதை டெலிவிஷனில் பார்க்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். புத்த பிட்சுக்கள், அரசியலில் கொடி பிடித்து ஆட்டம் போடுவதையும் படிக்கிறோம்.

bommai krishnan, fb

விஷ்ணுவின் 24 அவதாரங்கள்
எவ்வெப்பொழுது எல்லாம் விஷ்ணு தனது பக்தரின் குறை தீர்க்க பூமிக்கு இறங்கி வந்தாரோ அவ்வப்பொழுது எல்லாம் அவதாரம் என்று கணக்கு– அவதாரம் என்றால் — “இறங்கி வருதல்”— என்று பொருள்.

பாகவதத்தில் 22 அவதாரங்களைச் சொல்லிவிட்டு ஆங்காங்கே வேறு பல அவதாரங்களும் காட்டப் படுகின்றன. சீக்கிய மதத்தின் குரு கோவிந்த சிங் எழுதிய தசம கிரந்தத்தில் 24 அவதாரங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்தப் பட்டியலுக்கும் பாகவதப் புராணப் பட்டியலுக்கும் சில வேறு பாடுகள் உண்டு. பாகவதப் பட்டியலில் புத்தரும் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகச் சேர்க்கப்பட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்வது போல “ இந்துமதத்தில் உள்ள சில கருத்துக்களை சரியான கண்ணோட்டத்தில் காட்ட வந்தவர் புத்தர். அவர் எதையும் அழிக்க வரவில்லை. பூரண நிலையை தோற்றுவிக்க வந்தவர்” என்பது மிகவும் சரி. புத்தருக்கு முன்னால், மஹாவீரர், அவருக்கு முந்திய தீர்த்தங்கரர்கள் ஆகியோரும் புரட்சிகர கருத்துக்களைத் தெரிவித்தனர்.

may sri ram bless you

வேதத்தில் அவதாரங்கள்
அவதாரக் கொள்கை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே உள்ளது. ‘’ஓங்கி உலகளந்த உத்தமன்’’ வாமனன் பற்றிய குறிப்பு ரிக் வேதத்தில் இருக்கிறது. மூவடிகளால் தாவிய துதியை சாயனர் என்னும் உரைச் சக்ரவர்த்தி ‘வாமன அவதாரம்’ என்றே சொல்கிறார். வராக, மச்ச, கூர்மம் போன்ற வேறு அவதாரங்கள் சதபத பிராமணத்திலும் தைத்திரீய சம்ஹிதையிலும் வந்துவிடுகின்றன.
உலகில் எல்லாப் பழைய கலாசாரங்களிலும் காணப்படும் பிரளயம் பற்றிய கதை இந்தியாவில் இருந்தே உலகம் முழுதும் சென்றது. ஏனெனில் இந்தியக் கதைகளில் மட்டுமே முழு விவரங்களும் உள்ளன. மேலும் இந்திய புராணங்கள் அந்தக் கதை இந்திய மண்ணிலேயே நிகழ்ந்ததாகத் தெளிவாகக் குறிப்பிடும். ஏனையவை ஈரெட்டாகப் பேசுகின்றன. ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக மத்ஸ்யாவதார கதையைச் சொல்வதாக நான் கருதுகிறேன்.

1200 ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி எல்லா சம்ப்ரதாய பஜனைகளிலும் பாடப்படும் பாடல்கள் ஆகும் — (நாங்கள் லண்டனில் மாதம்தோறும் நடத்தும் சம்பிரதாய பஜனையில் அஷ்டபதி பாடுகிறோம்) — அதில் பத்து அவதாரங்களையும் பட்டியலிடும் பாடலும் புத்தரைக் குறிப்பிடும் பாடலும் உண்டு. அவர் பாடல் எழுதிய காலத்தில் புத்தமதம் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. அவருடைய அஷ்டபதி பாடல், புத்தமதத்துக்கு இந்தியாவில் இறுதி மணி அடித்தது. அத்தோடு புத்தர் இந்துமதத்தில் கலந்து ஜீரணிக்கப்பட்டார்.

avatars6only

புத்தமதம் ‘திருடிய’ கொள்கை
அவதாரக் கொள்கை வேத, இதிஹாச, புராணத்தில் இருந்தது. அதை புத்த மதத்தினர் பயன்படுத்தினர். இந்துமத, பஞ்சதந்திரக் கதைகளை எல்லாம் எடுத்து அவை அனைத்தும் போதிசத்வரின் (புத்தரின்) பூர்வஜன்மம் என்று சொல்லி கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கதைகள் எட்டுக் கட்டினர். சுமார் 600 கதைகள் ‘’ஜாதகக் கதைகள்’’ என்ற தொகுப்பாக வெளிவந்தது. அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்துக்கள் பாகவத புராணத்தில் திருப்பிச் செய்தனர்!!! புத்தரே எங்கள் அவதாரம்தான் என்று ஒரு போடு போட்டனர். பௌத்த மதத்தின் கதை முடிந்து போனது!!

24 அவதாரங்கள்
பாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:

1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப (இவர் 24 சமண தீர்த்தங்கரர்களில் ஒருவராக இருக்கக்கூடும்) 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).
இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.
தசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.

avatars10

புத்தர் மதித்த ஹிந்துமதம்
தனது மதம் ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று புத்தர் முதலில் நினைத்தார். ஆனால் அவரது பிரதம சீடன் ஆனந்தன், புத்த பிட்சுணிகளாக பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று அடம்பிடித்தவுடன், “ஐயய்யோ என் மதம் 500 ஆண்டு மட்டுமே இருக்கும்” என்று வருத்தப்பட்டார் (காண்க தத்துவப் பேராசிரியர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முன்னுரை ). ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகர் யுவாங் சுவாங் எழுதிய யாத்திரைக் குறிப்புகள், தமிழ்நாட்டை ஆண்ட மாபெரும் பல்லவ மன்னன் மஹேந்திர பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரஹசன நாடகம் ஆகியவற்றில் புத்தமதம் சீரழிந்த காட்சிகளைக் காணலாம். நிற்க.

புத்தரும் அவர் வழி வந்த அசோகனும் பிராமணர்களைக்கு அடுத்தபடியகவே எப்போதும் சிரமணர்களைக் குறிப்பிட்டனர். புத்தர் இந்திரனையும் பிராமணர்களையும் புகழ்கிறார் (காண்க எனது முந்தைய கட்டுரை: பரிமேலழகர் உரையில் தவறு). தம்மபதத்தில் ஒரு அத்தியாயமே பிராமணர்களுக்கு ஒதுக்கி இருக்கிறார். ஆக, புத்தர் இந்துமதத்தை ‘’மிதிக்க’’ வந்தவர் என்று வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் தவறு. அவர் இந்துமதத்தை ‘’மதிக்க’’ எழுந்தவர். அவரது போதனைகள் அனைத்தும் அற்புதமானவை. பின்னால் வந்த ஒழுக்கமற்ற சீடர்கள் அம்மதம் வீழ்ச்சியுறக் காரணம் ஆயினர். அவர் சம்ஸ்கிருதத்தைக் கைவிட்டு பாலி மொழியில் பேசியது பெரிய தவறு என்று சுவாமி விவேகாநந்தர் கூறியிருப்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துவிட்டேன். (சுருக்கமாகச் சொன்னால் வருடம்தோறும் ஆயிரக் கணக்கான ‘’திருடர்கள்’’ கருப்பு வேட்டி கட்டி ஐயப்பன் வேஷம் போடும் நிலையை, பழங்கால புத்தமத சீடர்களுக்கு ஒப்பிடலாம். இது எல்லா ஐயப்ப பக்தர்களையும் குறிப்பது ஆகாது!!!)

–சுபம்–

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

gayatri matha

Written by S Nagarajan
Post No.1157; Dated:- 8h July 2014.

This is the fifth part of S Nagarajan’ article on the Puranas. First four parts were published in the past few days:swami.

தேவி பாகவதம் 12ஆம் ஸ்கந்தத்தில் காயத்திரி ஸ்தோத்ரம் வருகிறது. அதைச் சொல்வதால் ஏற்படும் பயனை நாராயணர் நாரதருக்கு ஸ்தோத்திரத்தின் முடிவில் இப்படிக்
கூறுகிறார்.

“ ஓ, மஹாதேவீ! ஓ ஈஸ்வரியே! ஓ, சந்தி ஸ்வரூபிணீ! உன்னை நமஸ்கரிக்கிறேன்” என்று எவன் சந்தியாகாலத்தில் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்கின்றானோ அவனுக்கு
அளவில்லாத புண்ணியம் கிடைக்கும்.

மஹா பாபத்தைப் போக்கும்.

மஹா சித்தியைக் கொடுக்கும்.

புத்திரன் இல்லாதவனுக்கு புத்திரனையும், செல்வம் இல்லாதவனுக்கு செல்வத்தையும், சகல தீர்த்த ஸ்நான பலத்தையும், தவம், யக்ஞம், யாகம் ஆகியவற்றின் பலனையும் வேண்டியவர்க்கு வேண்டிய பலனையும் கொடுக்கும்.

போக மோக்ஷங்களை வேண்டியவர்க்கு இம்மையில் போகத்தையும், அந்திய காலத்தில் மோக்ஷத்தையும் அடையும்படி செய்யும்.

இத்துதியை எந்தெந்த ஸ்நான காலங்களில் எவன் படித்து எந்த ஜலத்தில் ஸ்நானம் செய்த போதிலும் சந்தியா காலத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவான்.

இதில் சந்தேகம் கிடையாது. ஓ! நாரதரே! இது அமிர்த வாக்கியமாகும்.
இது சத்தியம்! சத்தியம்!!

– 12ஆம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்

periyava-rudraksha
Kanchi Shankaracharya with Rudrakshas.

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

நாயாய் இருந்தாலும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரிக்கப் பெறுமானால் அதுவும் முக்தி அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறபோது, மானிடனுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ஆதலால் ஒருவன் முயற்சி மேற்கொண்டு ஒரு ருத்ராக்ஷத்தையாவது தரிக்க வேண்டும். அப்படித் தரிக்கிறவன் 21 தலைமுறைகளை உய்வித்து சிவலோகத்தில் பூஜிக்கப்பட்டவனாக இருப்பான்.

ஈஸ்வரர் ஷண்முகனுக்கு உரைப்பது – தேவி பாகவதம் 11ஆம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

goddess-madurai-meenakshi-picture

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

தன் முகத்தினுடைய சௌந்தர்ய ப்ரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்

வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா

இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தில் 18வது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும். அவைகளைத் தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்று சொல்வதுண்டு.அதே போல தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது,

ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18வது நாமம்

To be continued………………………

பாகவத மஹிமை

blue krish

Written by S Nagarajan
Post No.1154; Dated:- 7th July 2014.

This is the fourth part of S Nagarajan’ article on the Puranas. First three parts were published in the past few days.

எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் தான் கிடைக்கும்.

நாரத முனிவரிடம் ஸனகாதிகள் கூறும் இந்தப் பகுதி பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் பாகவத மாஹாத்மியத்தில் இடம் பெறுகிறது..

GoddessAmbika_21479

அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

“அனந்த த்ரிதியை விரதம், ரசகல்யாணி விரதம், ஆனந்தத்தை விளைவிக்கின்ற ஆருத்ரா விரதம், மங்கள வார விரதம், சுக்கிர வார விரதம், கிருஷ்ண பக்ஷ சதுர்தசி விரதம்,பிரதோஷ விரதம், புரட்டாசி மாதத்திலும் சித்திரை மாதத்திலும் வருகிற நவராத்ரி விரதம் ஆகியவற்றைப் புருஷர்களும் ஸ்தீரிகளும் பிரயத்தனத்தோடு அனுஷ்டிக்க வேண்டும். இவை போலவே சோமவார விரதமும் எனக்குப் ப்ரீதியானது.”

இனி ரசகல்யாணி விரதமானது அந்தந்த திரிதியையோடு கூடிய தினம்.

ஆருத்ரா விரதமாவது ஆருத்ரா நக்ஷத்திரத்தில் திரிதியையோடு கூடிய தினம். பிரதோஷ விரதமாவது – மஹாதேவன் தேவியை அந்திப் பொழுதில் உன்னதமான ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்து சகல தேவர்களும் தன்னைச் சூழ்ந்திருக்க அந்த அம்பிகை எதிரில் நடம் புரிவன். அந்த அந்திப் பொழுதே பிரதோஷ காலம் எனப்படும். அக்காலத்தில் ஆகாராதிகளை விட்டு மஹாதேவியைப் பூஜிக்க வேண்டும்..
பர்வத ராஜனிடம் தேவி கூறியது.

– தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 39ஆம் அத்தியாயமான தேவீ பூஜா விதி என்னும் அத்தியாயத்தில் வருவது

மூன்று ஈஷணைகள்!

ஈஷணைகள் மூன்று.
1) தாரேஷணை
2) தனேஷணை
3) புத்ரேஷணை

(தாரேஷணை என்றால் மனைவியின் மீது ஆசை. தனேஷணை என்றால் பணத்தின் மீது ஆசை. புத்ரேஷணை என்றால் மகன் மீது ஆசை)
இந்த மூன்று ஆசைகளையும் திருதராஷ்டிரன் விட்டு விடுவான் என்று அவன் முடிவு பற்றி நாரதர் தர்மபுத்திரருக்கு உரைத்தது.
(ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயம்)

blessings from parents

கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

ராமர் வில்லை முறித்த சம்பவம் பிரசித்தமானது. கிருஷ்ணரும் வில்லை முறித்திருக்கிறார். அதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுவது இது:-

அச்சுதன் வில் வைத்திருக்கும் இடம் எது என்று பட்டணத்து ஜனங்களை வினவிக் கொண்டு வில் வைத்திருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு இந்திர தனுசு போல அற்புதமாக இருக்கின்ற வில்லைக் கண்டான். அதைப் பல மனிதர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றும் அது பூஜிக்கப்பட்டு ஸ்வர்ணா லங்காரத்துடன் பல மேன்மைகள் அமைந்ததாய் இருந்தது. அப்போது அதைப் பாதுகாப்போர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று தடுத்த போதும் ஸ்ரீ கிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தாமல் பலாத்காரமாக அந்த வில்லை எடுத்துக் கொண்டான். திரிவிக்கிரமாவதாரம் செய்த மஹாபுருஷனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் அந்த வில்லை ஒரு நிமிடத்தில் இடக்கையால் அவலீலையாக எடுத்து நாணேற்றி ஜனங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் யானை கரும்புத்தடியை முறிப்பது போல இழுத்து இடையில் முறித்தான். அப்போது முறிகின்ற அந்த தனுஸின் ஒலி அந்தரிக்ஷ லோகத்தையும் பூமி ஆகியவைகளையும் நிறைத்து விட்டது. கம்ஸன் பயம் அடைந்தான்.

ஸ்ரீமத் பாகவதம் தசம ஸ்கந்தம் – பூர்வ பாகம் – 42ஆம் அத்தியாயம்

To be continued…………

உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !!

Thousand-Pillar-Hall--
Madurai Meenakshi Temple:Thousand Pillared Temple

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.1152; தேதி ஜூலை 6, 2014.

((தமிழ் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். மற்றவர்கள் வருடக் கணக்கில் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்து ஆராய்சி செய்து எழுதும் ஆய்வுக் கட்டுரைகளைத் திருடாமல் பயன் படுத்துங்கள். கட்டுரையை எழுதியது யார், எந்த பிளாக் – கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிய்யுங்கள். தமிழ் வாழும்! தமிழரும் உயர்வர்!))

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது !
மாயா நாகரீக நகரமான மெக்சிகோ நாட்டு சிசன் இட்சாவில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது! !!
விஜய நகர சாம்ராஜ்யம் முழுதும் ஆயிரம் கால் மண்டபங்கள் பட்டொளி வீசிப் பிரகாசிக்கின்றன !!!
மேலே படியுங்கள்!!

தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள உலக அதிசயங்கள் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை. லண்டனில் வாழும் எங்களுக்கு ‘இந்த அரசனின் மேஜை’ ,’அந்த அரசனின் செருப்பு’, ‘மஹாராணியின் உடை’, ‘திருமண கவுன்’ — என்றெல்லாம் காட்டிக் காசு பறிக்கிறார்கள். அப்படியே ஏதேனும் பார்க்கத்தக்க அதிசயம் இருந்தாலும் அதெல்லாம், வெள்ளைக்காரன்கள் கொள்ளை அடித்துக் கொண்டுவந்த கோஹினூர் வைரம், திப்புசுல்தானின் புலி, குப்தர் காலத் தங்கக் கசுகள் என்ற வகையில் வந்துவிடும். ஆனால் அத்தனையையும் அழகாகப் பாதுகாத்துக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் காட்டும் அழகே அழகு!!!! இந்த மஹா திருடர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!!! உண்மையில் நிறையவே உண்டு!!!!!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மியூசியங் களுக்கும், பிரபுக்களுக்குச் சொந்தமான தனியார் வீடுகளுக்கும் போய்ப் பார்த்தால் தமிழ்நாட்டுத் திராவிடக் கொள்ளைக்கரர் ஆட்சியில் கடத்திவரப்பட்ட அற்புதமான சிலைகளைக் காணலாம். நியூயார்க் மியூசியத்தில் நான் பார்த்த ஒரு சிலை இந்திய மியூசியத்தில் அப்படியே இருக்கிறது. எது ‘ஒரிஜினல்’, எது ‘போலி’ என்பது அந்த சிலைக்குள் ஒளிந்திருக்கும் இறைவனுக்கே வெளிச்சம்!!

100 o madurai

“கோயில் பூசை செய்தான் சிலையைக் கொண்டு விற்றல் போலும்………. ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்…………………. சீச் சீ !சிறியர் செய்த செய்கை செய்தான்”………… என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. “திராவிடங்களின் ஆட்சி”யில் கோவில் நகைகளில் இருந்து உண்மையான மாணிக்க, மரகத, வைரக் கற்களை எடுத்துக் கொண்டு செயற்கைக் கற்களை வைத்ததாகவும் “பெரியவர்கள்” சொல்லிக் கேள்வி. சிவன் சொத்துக் குல நாசம் என்பர். அது பலிக்கட்டும்.

எதற்கு இவ்வளவு முத்தாய்ப்பு என்கிறீர்களா? நல்ல வேளை, ஆயிரங்கால் மண்டபங்கள் முதலியன கருங்கற்காலால் ஆனதால் இந்தக் கொள்ளைக்கார மஹாபாவிகளால் ஒன்றும்செய்ய முடியவில்லை. படையெடுத்துவந்த முஸ்லீம் வெறியர்கள் சேதப்படுத்தியது போக மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது.

மதுரை, ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் முதலிய பல ஊர்களிலும் ஆந்திரத்தில் வாரங்கல் ஹனுமகொண்டா, கர்நாடகத்தில் மூடுபித்ரி போன்ற இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் என்று சொன்ன போதிலும் சில நூறு தூண்களையே காணமுடியும்.

மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தூண்களைக் காண முடியும். இவை இரண்டும் உலக மஹா அதிசயங்கள். இன்று இப்படி ஒரு கட்டிடத்தை எழுப்ப பல கோடி– கோடி ரூபாய் தேவைப்படும். பல்லாயிரம் ஊழியர்கள் வேலை செய்யவேண்டி வரும். பெரிய பெரிய எஞ்சினீயர்கள் ஆயிரம் வரை படங்களைத் தயாரித்து ஆராய்ச்சிக் கூட்டங்கள் போட வேண்டியிருக்கும். 600 முதல் 800 ஆண்டுகளுக்கு முன் காகதீய வம்சமும் நாயக்க வம்சமும் இவைகளைக் கட்டிய காலத்தில் என்ன வசதி இருந்தது? – இன்றுள்ள ஒரு வசதியும் கிடையாது. ஆயினும் எப்படி அற்புதமாக அமைத்துவிட்டனர். எண்ணி எண்ணி இறும்பூது எய்வோம்

1000_Pillar_Temple1hanamkonda
Warangal/Hanamkonda 1000 pillar Temple.

ஆயிரங்கால் மண்டபங்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலை மியூசியங்கள். வெள்ளைகாரன் நட்டில் இவைகள் இருந்தால் ஒவ்வொரு தூணுக்கும் கண்ணாடிப் பெட்டி வைத்து, ஆயிரம் ஆராய்ச்சிப் புத்தகம் வெளியிட்டு, ஒவ்வொன்றையும் படம் பிடித்து, கீ செயின் (சாவிக்கொத்து), பட அட்டைகள் (வியூ கார்ட்ஸ்), காந்த அட்டைகள் (மாக்னெட்) என்று விற்றுக் கோடி கோடியாக சம்பாதித்திருப்பான். நாமும் பயன்படுத்தாமலா இருந்தோம்? புளியோதரை சாப்பிட்டுவிட்டு அதில் கையைத் துடைத்தோம். நம்முடைய பெயர்கள் காலாகாலத்துக்கும் நீடிக்க அதில் நமது பெயர்களை கூரான கற்கள் ,உலோகக் கம்பிகள், சாவிக்கொத்துகள் வைத்து எழுதினோம். கடவுள் நம்மை மன்னிப்பாராக.

மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது. இப்போது அங்கே ஒரு மியூசியம் வைத்துப் “பாதுகாக்கிறார்கள்”. அற்புதமான சிலைகள் இருக்கின்றன. இதை அமைத்த அரியநாத முதலியார் (1569) பெயர், ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம்பெறவேண்டும். ஏன் தெரியுமா? உலகிலேயே நீண்ட காலம் அமைச்சர் பதவி வகித்தவர் அவர்தான். 71 ஆண்டுகளுக்கு நான்கு நாயக்க மன்னர்களுக்கு தளபதியாக-மந்திரியாக (கி.பி.1529—1600) இருந்தவர்! மண்டப முகப்பில் அவர் குதிரையில் சவாரி செய்கிறார்.

இந்த மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரம் உடைய 26 சிற்பங்கள் இருக்கின்றன. குறவன் – குறத்தி, ரதி மன்மதன், அர்ஜுனன், பாண்டவ சகோதரர்கள், அரிச்சந்திரன் சந்திரமதி – இன்னும் எத்தனையோ!! குறவன் குறத்தி ஒரு அற்புதமான கலைப் படைப்பு. குறத்திக்கு மூன்று குழந்தைகள்: ஒன்று முதுகில் , மற்றொன்று கூடைக்குள், இன்னொன்று பால் குடிக்க நெஞ்சில்! குறவன் – அவனுக்கே உரித்தான அத்தனை நகைகளையும் அணிந்து சர்வ ஆபரண பூஷணனாக விளங்குகிறான். மண்டபத்துக்குள் உள்ள 22 தூண்கள் வெவ்வேறு இன்னிசை ஒலி எழுப்புகின்றன.
1000-Pillar-Temple-Moodbidri-Left-Side-View
Moodbidri, Karnataka.

(( ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய நகைகள், உலகம் முழுதும் மியூசியங்களில் உள்ள மதுரை அதிசயங்கள் – இன்ன பிற விஷயங்களை நாலு ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டேன். கூறியது கூறல் ஒரு இலக்கியக் குற்றம் என்பதால் இத்துடன் நிறுத்துவேன்)).

மதுரையில் 985 தூண்களே இருக்கின்றன. மீதி 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி கோவில் இருக்கிறது. ஆக மொத்தம் ஆயிரம்! இதன் நீளxஅகலம்= 76 மீட்டர் x 72 மீட்டர். மண்டப முகப்பில் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் உள்ளது.

ஸ்ரீரங்கம் ஆயிரம் கால் மண்டபம், மதுரையை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டப நீள x அகலம் = 152 x 48 மீட்டர். அங்கே 953 தூண்கள் உள்ளன. மதுரையைப் போலவே ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள். இந்த ஆயிரம் கால் மண்டபம் பற்றியே தனி ஆராய்ச்சிப் புத்தகம் எழுதலாம். பொருள் வசதி இருந்தால் நானே அதைச் செய்வேன்! இதுவும் நாயக்கர் காலத்தில் எழுந்ததே. முஸ்லீம் படையெடுப்பில் வீழ்ந்த எல்லாவற்றையும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்து உலகப் புகழ் பெறும்படி செய்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யமும் அவர்கள் வழிவந்த நாயக்க வம்சமும் ஆகும்.. சுந்தரத் தெலுங்கினில் பாட்டு அமைத்து அவர் புகழ் பாடுவோம்! தலை வனங்குவோம்!

warangal 1000 pillar temple

வாரங்கல் ஆயிரம் கால் மண்டப கோவில்
தெலுங்கானாவில் வாரங்கல் அருகே ஹனுமகொண்டாவில் ஒரு கோவில் இருக்கிறது .ஆனால் இந்தச் சிவன் கோவிலில் சுமார் 300 தூண்களே இருப்பதாக ஆய்வாளர் கூறுவர். ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல தூண்கள் காட்சி தருகின்றன. இது மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பழையது. தமிழ்நாட்டைத்தவிர மற்ற இடங்களில் உள்ளவை ஆயிரம் தூண்கள் உடையவை அல்ல. நிறைய தூண்கள் இருந்தால் ஆயிரம் என்று சொல்லி விடுவர். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் என்பதால் 60,000 பேர் என்று நாம் சொல்லுவது போல! இது ருத்ர தேவன் (கி.பி1163) காலத்தில் உருவாக்கப்பட்டது.
கர்நாடகத்தில் மூடபித்ரி என்னும் இடத்தில் ஜைன கோவில் ஒன்றிலும் “ஆயிரம் கால்” மண்டபம் உள்ளது.

ராமாயணத்தில் ஆயிரம் கால் மண்டபம்:–

சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணனுக்கு தெய்வய் சிற்பியான மயன் நீண்ட தூன்கள் ஆயிரம் கொண்ட அழகிய மண்டபத்தை உருவாக்கினான். பிரம்மா கூட அதைப் பார்த்து வெட்கம் அடையும் படி அது அமைக்கப்பட்டது.

வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினைஅயாலும் செய்தான்
அம்தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர்மணி மண்டபம் தாமரையோனும் நாண.

யார் சொன்ன ‘ஐடியா’?
காகதீய, நாயக்கர்களுக்கு யார் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்தனர்? எப்படி அவரகளுக்கு 1000 தூண்களுடன் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது? வேதத்திலேயே 1000 கால் மண்டபம் பற்றிய கருத்து எழுந்துள்ளது. 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச ‘டெசிமல்’ முறையையும் 1.2,3…. 10 என்ற எண்களையும் உலக மக்களுக்குக் கற்பித்தது இந்துக்களே. இதை நாம் உலகிற்குக் கற்பித்திராவிடில் கம்யூட்டர்களோ ராக்கெட்டுகளோ உருவாகி இருக்காது! இதற்கு வேதம் முதல் லீலாவதி அல்ஜீப்ரா பற்றி ஸ்லோகம் எழுதிய காலம் வரை ஆயிரக் கணக்கான குறிப்புகள் உண்டு.
ரிக்வேதத்தில் மித்ரன் – வருணன் மேலான துதியில் (5-62-6) ஆயிரம் கால் உடைய பரப்பு (பகுதி /பிரதேசம்) பற்றிய பாடல் வருகிறது. இது போன்ற துதிகளே நம் சிற்பிகளை ஊக்குவித்தது என்றால் மிகையாகாது.

மாயா நாகரீகத்துக்குக் கற்பித்தது யார்?
மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சிசன் இட்சா என்ற நகரம் உள்ளது. எட்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறந்த நகரம் இது. வீரர்கள் கோவில் என்ற கட்டிடமும் அதற்கு முன் ஆயிரம் கால் மண்டம் இருந்த இடமும் உள்ளது. இப்பொழுது நூற்றுக் கணக்கான தூண்கள் மட்டும் வரிசை வரிசையாக நிற்கின்றன. ஒரு காலத்தில் இதற்கு ‘மேல்கூரை’ இருந்தது. உலகின் மிகப் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்று இங்கே இருந்தது. பல வெளி நாட்டுக் கலாசரங்கள் கலந்து ஒன்றிப்போன நகரம் இது.
chichenitza_s6

Chichen Itza,Mexico

மாயா கட்டிடக் கலை—பல்லவர் கால கட்டிடக் கலை- தென்கிழக்காசிய கட்டிடக் கலை மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் அற்புதமான ஒற்றுமையைக் காணலாம். இந்தியாவில் இருந்து போன சிற்பிகளின் கைவண்ணம்தான் இதுவும் என்பதில் ஐயமில்லை.
((மாயன் நாகரீகம் பற்றிய எனது மூன்று ஆங்கில கட்டுரைகளில் அறுபதுக்கும் மேலான ஒற்றுமைகளின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். மாயா நாகரீக மக்கள், அர்ஜுனன் காண்டவ வனத்தை எரித்தவுடன் தென் அமெரிக்காவுக்குச் சென்ற நாகர்கள் என்றும் எழுதியுள்ளேன்)).

கட்டுரையை முடிப்பதற்கு முன் ஒரு வரி:– இது இன்னும் ஆராய்சி செய்யப்படாத ஒரு துறை. இரு நாட்டு கட்டிடங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும்.

ch_warr1
Mayan Chichen Itza, Mexico

Please read my previous posts about Indian- Mayan Civilisation links:–
1.Are Mayas Indian Nagas? April 28, 2012.
2.Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted April 28, 2012
3.Part- 2 of Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted May 1, 2012.
4.Did Indians build Egyptian Pyramids?
5.The Wonder That is Madurai Meenakshi Temple (Posted on 14 Oct. 2011)
6. மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!! (posted on May 10, 2012)
7. நாகர்-மாயா இன அற்புத ஒற்றுமைகள் (posted on May 10, 2012)

Contact swami_48@yahoo.com
–சுபம்–

லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

Sri-Lalitha-Sahasranama-Stotram-Leaflet-Tamil-

Written by S Nagarajan
Post No.1150; Dated 5th July 2014.

This is the third part of S Nagarajan’ article on the Puranas. First two parts were published in the past two days.

ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யமானதும், லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொடுப்பதுமான இதற்குச் சமமான ஸ்தோத்திரம் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை.

இந்த ஸ்தோத்திரமானது சகல வியாதிகளையும் தீர்த்து விடும்.. சர்வ ஸம்பத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். சகல விதமான அகால மிருத்யுவையும் அடக்கி விடும். கால கிரமத்தில் ஏற்படக்கூடிய மரணத்தையும் நீக்கி விடும்.

சகல விதமான ஜ்வரங்களால் ஏற்படும் கஷ்டங்களை நீக்கி விடும். தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும்.பிள்ளையில்லாத வர்களுக்கு புத்ர ஸம்பத்தைக் கொடுக்கும். புருஷார்த்தத்தையும் கொடுக்கும்.

மேலே கூறிய அர்த்தத்தைத் தரும் மூன்று ஸ்லோகங்கள் வருமாறு:-

ரஹஸ்யானாம் ரஹஸ்யம் ச
ல்லிதாப்ரீதி தாயகம் I
அனேன ஸத்ருஸம் ஸ்தோத்ரம்
ந பூதம் ந பவிஷ்யதி II

ஸர்வரோக ப்ரசமனம்
ஸர்வ ஸம்பத் ப்ரவர்தனம் I
ஸர்வபாப ம்ருத்யுசமனம்
காலம்ருத்யு நிவாரணம் II

ஸர்வ ஜ்வரார்த்திசமனம்
தீர்க்காயுஷ்ய ப்ரதாயகம் I
புத்ரப்ரதம் அபுத்ராணாம்
புருஷார்த்த ப்ரதாயகம் II

த்யானம், ஜபம் முதலான அநேக ரஹஸ்யங்களோடு கூடிய இந்த ஆயிரம் நாமங்கள் லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொfடுப்பவை. நிகழ்காலம் இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் மிஞ்சிய இதற்கு சமமான ஸ்தோத்ரம் வேறொன்றுமில்லை

அறிய முடியாதென்று கை விடப்பட்ட அஸாத்யம்,அயாப்யம் என்ற பேதங்களை உடைய வியாதிகளையும் கூட இது போக்கடிக்கும். ரோகம் என்பதற்கு நிகரான வறுமையையும் போக்கும். திடீரென ஏற்படும் அபமிருத்யுவை இது விலக்கும். காலத்தினால் ஏற்படும் மரணத்தையும் இது போக்கும்.

ஒரு நாளைய ஜ்வரம் முதல் ஸன்னிபாத ஜ்வரம் வரை அனைத்தும் அகலும். சதாயுஸ் எனப்படும் நூறு வயதை இது அருளும். புத்திர செல்வம் இல்லாதவர்களுக்கு புத்ர செல்வம் தரும். புத்திமான்களால் விரும்பப்படும் முக்தியையும் இது அருளும்.
-ப்ரம்மாண்ட புராணத்தில்

லலிதோபாக்யானத்தில் ஹயக்ரீவர்- அகஸ்த்ய ஸம்வாதத்தில் வரும் ஸ்லோகங்கள்

Lalitha-sahasra-nama-stotram_img_0

அர்க்யம் விடுவது எதற்காக?

அர்க்கிய ஜலத்தை எடுத்து ஒருவர் எதற்காக விடுகின்றாரோ அதற்கான காரணமும் சொல்லுகிறேன். கேட்பீராக!

மஹாவீர்ர்களாயும் நன்றி மறந்தவர்களாகவும், பயங்கரர்களாயும் இருக்கின்ற முப்பது கோடி மந்தேஹா என்னும் ராட்ஸசர்கள் சூரியனை விழுங்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் இச்சையைக் கெடுப்பதற்குத் தேவ கூட்டங்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதக அஞ்சலியாக அர்க்கியத்தை விடுகிறார்கள். விட்டவுடன் அந்த அர்க்கிய ஜலம் வஜ்ர உருவம் கொண்டு அந்த ராட்ஸசர்களைக் கொளுத்துகின்றது. இது தான் அதற்குக் காரணம்.
-நாரதரிடம் நாராயணர் கூறுவது.

– தேவி பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்தியாயமான சந்தியோபாசனம் என்னும் அத்தியாயத்தில் வருவது

sri-lalita-sahasranama-arch_1

சுபாஸ்ரயம் எது?
சுபாஸ்ரயம் எது? இதற்கான விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் காணலாம்.

எந்த உருவத்தைச் சிந்திக்கும் போது மனமானது ராகம் முதலிய தோஷங்களால் வரும் கலக்கமின்றித் தெளிவு பெறுமோ, அத்தகையதும் தனக்கு மேற்பட்ட ஒன்று இல்லாததும் ஆகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் உருவமே சுபாஸ்ரயம் எனப்படும்.

To be continued………………

வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

sukadeva
சுகதேவர் படம்

Written by S Nagarajan

Post No 1147; Dated 4th July 2014.

This is second part from “Honey Drops from the Hindu Puranas”- e book published by nilacharal; First part was published yesterday.

ஸரஸ்வதி என்னும் பெயருடைய ப்ரஹ்ம நதியின் மேல் கரையில் சம்யாப்ராஸமென்று பிரசித்தமானது வியாஸருடைய ஆசிரமம். அங்கு ரிஷிகள் ஓயாமல் யாகங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரங்களின் வரிசைகளால் அலங்காரமுற்ற அந்தத் தனது ஆசிரமத்தில் வியாஸர் ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்து மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கித் தன்னிலையில் இருக்கச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் வியாஸ ஆசிரமத்தைப் பற்றிக் கூறியது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வியாஸ மா முனிவர் சம்சாரத்தில் விளையும் அனர்த்தமாகிய தாபத்ரயத்தைப் போக்கும் உபாயம் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகமே என்பதை அறியாமல் வருந்தும் உலகத்திற்கு நன்மையை விளைவிக்கும் பொருட்டு ஸாத்வத ஸம்ஹிதை எனப்படுகின்ற இந்த பாகவத மஹா புராணத்தைச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக் கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

vyasa & madhva வியாசரும் மத்வரும்

வேதாங்கம் ஆறு

1)சிக்ஷா 2)கல்பம் 3)நிருத்தம் 4)வ்யாகரணம் 5)ஜ்யோதிஷம் 6) சந்தம் என வேதாங்கம் ஆறு வகைப்படும்.
கிருஷ்ண பக்ஷத்தில் வேதாங்கத்தைப் படிக்க வேண்டும்.
-கூர்ம புராணம், மனு ஸ்மிருதி

சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக்
கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

வேதங்களின் புரோகிதர்கள்

ரிக் வேதம் – ஹோதா
யஜுர் வேதம் – அத்வர்யு
சாம வேதம் – உத்காதா
அதர்வ வேதம் – ப்ரஹ்மா

ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரஹ்மா என இப்படி நான்கு முக்கிய ரூபங்களில் யக்ஞங்களை நிர்வகிப்பவர்கள் உள்ளனர்.

-பத்ம புராணம்

Shiksha
ஏழு சிரஞ்சீவிகள்

அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது என்பது நமது நம்பிக்கை)

-பத்ம புராணம்

ருணங்கள் மூன்று

ரிஷி ருணம் 2) தேவ ருணம் 3) பிதிர் ருணம் என ருணங்கள் மூன்று வகைப்படும் (ருணம் என்றால் கடன் என்று பொருள் படும்)
பிரம்மசர்யத்தை அநுஷ்டிப்பதால் ரிஷிகளும், யக்ஞகர்மங்களைச் செய்வதால் தேவர்களும், புத்திரர்களைப் பெறுவதால் பிதிருக்களும் திருப்தி அடைகின்றனர். இந்த மூன்று கடன்களையும் செலுத்திய பின்னரே ஒருவர் வானப்ரஸ்த ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும்.
– சிவ புராணம், மனு ஸ்மிருதி
rishi3

ப்ராண (நடைப்) பிணம் யார்?

உயிரோடிருந்தும் பிணம் யார்? இதற்கு விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் காணலாம்.

பரீட்சித்து மன்னன் சுகரிடம் என்ன வினவினான் என்று சௌனக முனிவர் ஸூதரிடம் வினவும் போது அவர் கூறியது கீழ்க்கண்ட வார்த்தைகள்:

“நாள்தோறும் பிராணிகளின் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கின்றது. அதில் பகவானுடைய குணங்களைச் சொல்லிக் கொண்டு கழித்த காலம் தவிர மற்றவை எல்லாம் வீணே!
க்ஷணமாயினும் பகவானுடைய குண கீர்த்தனத்துடன் கழியுமாயின் அதுவே சபலமாகும். அது வீணன்று!
‘ஜீவித்திருத்தலே ஆயுளுக்குப் பயன் ஆகட்டுமே’ என்றால் சொல்லுகிறேன், கேளும்.

மரங்கள் ஜீவிக்கவில்லையா?
அவற்றிற்கு மூச்சில்லையே என்கிறீரா?
கருமானுடைய தோல் துருத்திகளும் மூச்சு விடுகின்றன!
அவற்றிற்கு ஆகாராதிகள் இல்லையே என்கிறீரா?

கிராமத்திலுள்ள நான்கு கால் ஜந்துக்களும் மற்றவைகளும் ஆகாரத்தைத் தின்பதில்லையா? புணர்ச்சியில் ஈடுபடுவதில்லையா?

ஒரு காலும் பகவானுடைய நாமம் எவன் காதில் விழவில்லையோ அவன் கிராமத்தில் திரியும் நாய், பன்றி, கழுதை இவைகளுடன் ஒத்த ஒரு மிருகமே (நான்கு கால் மிருகமே) ஆவான்.
திரிவிக்கிரம அவதாரம் செய்து உலகங்களை எல்லாம் தனது பாதாரவிந்தங்களால் ஸ்பர்சித்த பகவானுடைய பராக்ரம சரித்திரங்களைக் கேளாத காதுகள் காதுகளே அல்ல! வீண் பாழிகளே!
பெரியோர்களால் ஓயாமல் பாடப்படும் குணங்களை உடைய பகவானுடைய பாடல்களைப் பாடாத நாக்கும் இருந்தும் இல்லாதது போலத் தான்! தவளையின் நாக்கைப் போலப் பயனற்றதே!

போக மோட்சங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பூஜிக்காத கைகள் பொன் வளைகளை அணிந்திருப்பினும் பிணத்தின் கைகளே!

விஷ்ணுவின் திவ்விய மங்கள விக்ரஹங்களைக் காணாத கண்கள் மயில் கண்களே!

ஸ்ரீரங்கம் முதலிய ஸ்ரீவிஷ்ணுவின் திவ்விய க்ஷேத்திரங்களுக்கு நடந்து செல்லாத மனிதர்களின் பாதங்கள் மர ஜென்மம் பெற்றவைகளே (மரத்தின் வேர்களோடு ஒத்தவைகளே)

பகவானிடம் பக்தியுடைய பெரியோர்களின் பாததூளியை ஒருக்காலும் விரும்பாத மனிதனும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் படிந்த துளஸியின் வாசனையை முகர்ந்து சந்தோஷம் அடையாத மனிதனும் பிராணனோடு இருக்கும் பிணங்களே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டும் மொழிந்தும் அவை நெஞ்சில் படப்பெற்று மனத்தில் கலக்கமும் முகத்தில் மலர்ச்சியும் கண்ணில் ஆனந்தக் கண்ணீரும் உடம்பில் மயிர்க்கூச்சலும் எவன் உண்டாகப் பெறாதிருப்பானோ அவனுடைய இதயம் இரும்பினால் செய்யப்பட்டதே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டு மனதில் அன்பு உண்டாகப் பெறுவான் ஆயின் அவனுக்கு முகமலர்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் மயிர்க்கூச்சலும் உண்டாகும்.”

To be continued…………………….

18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

bhajan sippla

Written By S.Nagarajan
Post No.1145; Dated 3rd July 2014.

This is from the book Purana Thulikal (Honey Drops from the Puranas)- Part 2 written by my brother S Nagarajan. Part 1 and Part 2 are already published by nilacharal in e book formats for sale:- swami.

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.

***********

pbaaea095_sage_ved_vyasa

இரண்டாம் பகுதி
புராணத் துளிகள்

பல லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய 18 புராணங்களையும் , உப புராணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் படிப்பதற்கு ஒரு ஆயுள் போதாது. அதை முறையாக விளக்குவதற்கு போதிய பண்டிதர்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்து விட்ட இந்த நாட்களில் முக்கிய சில பகுதிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதல் பாகம் நிலா பப்ளிஷர்ஸ் மூலம் வெளியானது. இதோ இரண்டாம் பாகம்!

பிரம்மாவின் வம்சம்

மரீசி,நாரதர்,அத்திரி,புலஸ்தியர்,புலகர்,கிருது,தக்‌ஷன், வசிஷ்டர் ஆகிய அனைவரும் பிரம்மாவின் பிரசித்தரான புத்திரர் ஆவர்.இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார்.தக்ஷனுடைய பதிந்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர்.அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர்.ஏனைய மானுடர்,மிருகங்கள், சரபங்கள் முதலில பலவகை சாதி பேதங்களாயுள்ள உயிர்கள் எல்லாம் உண்டாயின.பிரம்மனுடைய சரீரத்தில் வலப்பாதியில் “ஸ்வாயம்பு மநுவும்” இடப்பாதியில் “சதரூபி” என்கிற பெண்ணும் உண்டாயினர். சதரூபி என்பவளுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு பிள்ளைகளும், அதிக சுந்தரிகளாக உள்ள மூன்று பெண்களும் பிறந்தார்கள்.இவ்வண்ணம் பிரம்ம வம்சம் விருத்தியானது.
-ஜனமேஜய மஹாராஜனிடம் வியாஸர் கூறியது
தேவி பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் அத்தியாயம் 13

chaitanyam

சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்?

சுக முனிவர் மிதிலை நகருக்கு வந்த போது துவாரபாலகன் ஒருவன் அவரிடம் சுகம் எது, துக்கம் எது, சத்ரு எவர், நண்பர் எவர், சுபத்தை வேண்டுபவனால் செய்யத் தக்கது என்ன, இவற்றை நன்றாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சுகர் இப்படி பதில் கூறுகிறார்:-

எல்லா உலகத்திலும் இரண்டு விதமிருக்கிறது. அதிலிருக்கும் பிரஜைகளும் ராகி, விராகி என்று இரண்டு விதமாக இருக்கின்றனர்.
அவர்களுதைய சித்தமும் இரண்டு விதம்.

இவைகளுள் விராகி என்பவர் அறிந்தவர், அறியாதவர்,அறிந்தும் அறியாதவர் என மூன்று விதமாய் இருப்பர்.

ராகி என்பவர் மூர்க்கர், சதுரர் என இரண்டு விதமாயிருப்பர்.
அந்தச் சதுர்ப்பாடு சாஸ்திர விசாரத்தால் வருவதாகிய சாமர்த்தியம், புத்தி சூக்ஷ்மத்தால் வருவதாகிய சாமர்த்தியம் என இரு வகைப்படும்.

அந்த புத்தியானது யுக்தம், அயுக்தம் என இரு வகைப்படும்.

இதைக் கேட்ட துவாரபாலகன், தான் அர்த்த ஞானமுடையவன் இல்லை என்று கூறி சுகர் கூறிய சொற்களுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டுகிறான். உடனே சுகர் விளக்கத்தை அளிக்கிறார் இப்படி:-

“எவனுக்கு சம்சாரத்தில் விருப்பம் இருக்கிறதோ அவன் ராகி எனப்படுவான். அவனே எல்லாவற்றிலும் மோகம் அடைகின்ற மூர்க்கன். அவனுக்குச் சுக துக்கங்கள் அநேக விதமாய் இருக்கின்றன. என்னவென்றால், தனம், புத்திரன்,செல்வம், மனைவி,மானம், விஜயம் முதலியவற்றையும் காரிய சாதனத்தையும் பெறுவதனால் சுகமும், அதைப் பெறாததால் துக்கமும், நிமிஷம் தோறும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. அவனது செய்கை எல்லாம் சுகத்தை அடைய வேண்டுமென்கிற விருப்பத்தை உடைத்தாய் இருக்கிறது.

அச் செய்கைகளுக்கு மாறான செய்கைகளைச் செய்து தடைப்படுத்துகிறவன் சத்ருவாகின்றான். அச்செய்கைக்குச் சாதகனாய் இருக்கிறவன் நண்பனாகிறான்.

விராகி, விஷய சுகங்களொன்றிலும் ஆசை வைக்காமல் ஏகாந்தத்தில் வேதாந்த விசாரம் செய்து ஆத்ம சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான். அவனே மோகம் அடையாத பண்டிதன். அவனுக்கு சம்சார வாழ்க்கையின் சுகம் எல்லாம் துக்ககரமாகவே இருக்கும்.

ஆயினும் அப்படி ஆத்ம சுகத்தை நாடுகின்றவனுக்குக் காம குரோத லோப மத மாச்சரியம் முதலிய கொடிய சத்துருக்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சத்துருக்களால் பீடிக்கப்பட்டிருப்பவனுக்கு பந்து, சந்தோஷம் என்பவன் ஒருவனே! அவனைத் தவிர வேறொருவரும் மூன்று உலகிலும் இல்லை.”

இப்படி சுகர் கூறியதைக் கேட்ட துவாரபாலகன் அவர் ஞானி என்று எண்ணி அவரை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கிறான்.

தேவி பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம்

To be continued………………….

ஐந்து கவிஞர்கள் பாடிய “பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க”!

Abirami

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1143; தேதி 2 ஜூலை 2014.

வாழ்க்கையில் ஒருவருக்கு வேண்டியவை என்ன, என்ன? கடவுள் சந்நிதியிலோ, பெரிய மஹான்கள் முந்நிலையிலோ என்ன வேண்டுவது? குறைந்தது 16 கேட்கலாம். அதனால்தான் மணமக்களை வாழ்த்துவோர் — “ பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க “ – என்று வாழ்த்துகின்றனர். இவ்விஷயத்தில் எல்லோருக்கும் தெரிந்த பாடல் அபிராமி பட்டர் பாடியது: அத்தோடு தெரியாத நாலு பாடல்களையும் சேர்த்துக் காண்போம்:–

முதல் பாடல்

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய! நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டும் கண்டாய்!
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.
((அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மை பதிகம்))

Abhirami-and-Bhattar-painted-by-Keshav

English Translation
O, Goddess of old Kadavur, Younger Sister of Vishnu who is ‘sleeping’ on the ocean, who is inseparable from Amutheesar, O Abhirami, please bless me with the following:–
1)Good and Proper Education,2) Long life, 3)Good Friends, 4)Inexhaustible Prosperity, 5)Youthfulness, 6)Disease free (healthy) body, 7)Calm mind (tranquillity), 8)Affectionate wife, 9)Children with good character, 10)Name and Fame, 11)Truthfulness, 12)Philanthropy, 13)Theft free Wealth, 14)Good government, 15)Worry free life, 16) Association with your great devotees.

இதுவுமது (இரண்டாம் பாடல்)

பிரபோத சந்திரோதயம் என்னும் நூல் வேறுவிதமான பட்டியலைத் தருகிறது:
கற்றறிவு குலமேன்மை கருணை பெரும்புகழ்
செல்வம் கைமாறெண்ணா
துற்றுதவுங் கொடை சீர்மை ஒழுக்கம் அருந்
தவம் நியமம் உறவின் கேண்மை
மற்றெதிரிலாத் திண்மை வாய்மை மிகும்
தூய்மை குண வனப்பு யாவும்
பெற்றிடினும் அடக்கமிலாப் பெருமிதத்தால்
இத்தனைக்கும் பிழையுண்டாமால்.

*****

indian_family1
Picture of a Happy Family

இதுவுமது: மூன்றாம் பாடல்

ஆசு கவி வீசு புகழ் சிலேடை மன்னன் காளமேகம் பாடியது:

“துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,
அதி தானியம், சவு பாக்கியம், போகம், அறிவு, அழகு,
புதிதாம் பெருமை, அறம் குலம் நோயின்மை, பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே” — (காளமேகப் புலவர்)

பொருள்:மதுரையில் எழுந்தருளிய இறைவா! புகழ் , கல்வி, வீரம், வெற்றி, பிள்ளைப் பேறு, துணிவு, செல்வம், மிகுந்த நெல் முதலிய தானியம், நலம், போக, அறிவு, அழகு, புதிது புதிதாக ஏற்படும் சிறப்புகள், தர்ம சிந்தனையுடைய நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாத வாழ்வு, நீண்ட வயது ஆகிய பதினாறு பெரும் பேறுகளையும் தந்தருள்வாயாக!

arusuvai uNti
Picture of Good Food

இதுவுமது: நாலாம் பாடல் ( எழுதியவர் பெயர் இல்லை)

A Prayer Found in Chester Cathedral

Give me good digestion, Lord,
And also something to digest;
Give me a healthy body, Lord,
With sense to keep it at its best.

Give me a healthy mind, good Lord,
To keep the pure and good in sight;
Which, seeing sin, is not applauded,
But find a way to set it right.

Give me a mind that is not bored,
That does not whimper, wine and sigh;
Don’t let me worry overmuch
About the fussy thing called “I”.

Give me a sense of humour, Lord,
Give the grace to see a joke;
To get some happiness from life,
And pass it on to other folk.

Unknown

Currency_1728545g
Enormous Wealth

இதுவுமது: ஐந்தாம் பாடல்

What We Need

A little dash of purpose,
An effort made to cheer,
A little more of courage,
And less of doubt and fear;
A little more of lifting,
And pulling all our weight,
A little less of leaning,
And leaving it to fate.

A little less of grabbing,
Of selfishness and greed,
A little more of helping,
A fellow that’s in need;
A little more of working,
With smiles instead of frowns,
A little less of kicking,
A fellow when he down.

A little less complaining,
About the things that mar,
A little more adapting,
To all the things that are;
A little more of caring,
And willingness to fight,
A little more of daring,
For what we feel is right.

A little splash of humour,
To brighten up the way,
A little joy to follow,
And linger through the day;
A little touch of laughter,
To cause a little mirth,
Is simply what we’re needing,
To gladden this old earth.

Hope Spencer
about life

ஐந்து கவிஞர்கள் பாடிய அத்தனையும் கிடைத்துவிட்டால் நமக்கு வேறு என்ன வேண்டும்? எல்லோரும் வேண்டும் விஷயங்களில் காணப்படும் ஒற்றுமை படித்துப் படித்து ரசிக்க வேண்டியவை!!!

–சுபம்–
pictures are used from face book and other websites;thanks.

மஹாபாரதத்தில் ஒரு அதிசய பறவை

graphic-croc

(((தமிழ் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! தமிழையும் தமிழினத்தையும் வாழ்விக்க ஒரு வழி இருக்கிறது. ரொம்ப எளிது! யாராவது ஏதாவது நல்ல கட்டுரை எழுதினால், அதில் எழுதியவன் பெயரை வெட்டிவிடாமல் fபேஸ்புக்கில் அல்லது உங்கள் பிளாக்கில் ‘’அனுமதி பெற்று’’ போடுங்கள். வருடம் முழுதும் ஆராய்ச்சி செய்தவன் பெயர் நிலைத்தால் தமிழர் வாழ்வர்!!! தமிழும் வாழும்))).

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1141 தேதி:– ஜூலை 1, 2014.
English version of this article was published yesterday: ‘Strange Bird in Mahabharata’.

நான் இதற்கு முன் 1) வேதத்தில் காணப்படும் ஹோமா பறவை 2) தமிழ் இலக்கியத்திலும் சுமேரியாவிலும் காணப்படும் இருதலைப் பறவை (அண்டரண்ட பக்ஷி), 3) சங்கத் தமிழ் இலக்கியத்தில் பறவை மனிதன் 4) கபிஞ்சலா எனப்படும் சாதகப் பட்சி 5) பாரி- கபிலருக்கு நெல் மணிகள் கொண்டுவந்த கிளிகள் 6) வேதம் சொல்லும் கிளிகள் 7) முரசு சப்தம் கேட்டால் இறக்கும் அசுணமா முதலிய பல பறவை / மிருக அதிசயங்களை எழுதினேன். இப்பொழுது மேலும் ஒரு அதிசயப் பறவை பற்றி மஹாபாரதத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. இந்தப் பறவையின் பெயர் பூலிங்கப் பறவை. பூமிக்குள் ஆழமாகக் குழி தோண்டி முட்டை இடுவதால் இந்தப் பெயர்.

இதோ சபாபர்வ ஸ்லோகங்கள்:–

பூலிங்கசகுனிர் நாம பார்ஸ்வே ஹிமவதப் பரே
பீஷ்ம! தஸ்யா: யதா வாச: ஸ்ரூயந்தே அர்தவகார்ஹிதா:

மா சாஹசமிதீதம் சா சததம் வாசதே கில
சாஹசம் ச ஆத்மனா அதீவ சரந்தி நா அவபுத்யதே

சா ஹி மாம்சர்களம் பீஷ்ம! முஹாத் சிம்ஹஸ்ய காதத:
தந்தாந்தரவிலக்னம் யத்ததாதத்தே அல்ப சேதனா
–மஹாபாரதம், சபா பர்வம் 2-41-19/21

இந்தப் பறவை பற்றி வியாசர் சொன்னது பலருக்கும் புரியவில்லை போலத் தோன்றுகிறது. ஆகையால் சுருக்கமான மஹாபாரதப் பதிப்புகளில் இது காணப்படுவதில்லை.
croc3

சபாபர்வத்தில் தர்மன் (யுதிஷ்ட்ர மஹாராஜா), ராஜசூய யக்ஞம் செய்யும் காட்சி வருகிறது. அங்கே கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை என்றவுடன் சிசுபாலன் பொங்கி எழுகிறான். எப்போதுமே கிருஷ்ணனைக் கண்டால் அவனுக்கு பாகற்காய் போல கசக்கும். ஆகையால் ஏசுவதே அவனது தொழில். ஆனால் கிருஷ்ணனோ, சிசுபாலனின் தாயாரிடம் ஒரு சத்தியம் செய்துள்ளான். உன் மகன் செய்யும் நூறு தவறுகளை பொறுத்துக் கொள்வேன், அவ்வளவுதான். அதற்கு மேல் எனக்கு எதிராக ஏதேனும் பேசினால் அவன் பெயர்—ரிப்பேர்—ஆகிவிடும்; அவனது மானம் – விமானத்தில் ஏறிவிடும்; அவனது கதி—சகதி ஆகிவிடும் என்கிறான்.

எவ்வளவு சொன்னல் என்ன? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், வாலைக் குழைத்துக் கொண்டு ——- தின்னதானே போகும். கிருஷ்ணரை கண்ட சுடு சொற்கள் பேசி ஏசுகிறான் —முறைதவறிப் பிறந்த பயலே- இடைப் பயலே- மடப்பயலே – என்று திட்டுகிறான். 101 ஆவது முறையில் கிருஷ்ணன் சுதர்சன சக்கரத்தை ஏவி — வாழைக்காய்-கத்தரிக்காய் பஜ்ஜிக்கு காய் வெட்டுவதுபோல அவனது தலையைச் சீவிவிடுகிறார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதையே.

பீஷ்ம பிதாமஹர் – குருகுலத்தின் அன்புக்கும் பண்புக்கும் உரிய பெரியோய்—அவர் கிருஷ்ணனுக்குப் பரிந்து பேசவே அவரையும் ஏசுகிறான் சிசுபாலன். அப்போழுதுதான் பூலிங்கப் பறவை குறிப்பு வருகிறது.

ஓய், பீஷ்மரே, ஜால்ரா போடுவது, ஒத்து ஊதுவதுதான் உமக்கு வேலையா? அந்தத் திருட்டு இடையன் புகழைப் பாடுவதே உமக்குத் தொழில் ஆகிவிட்டது போலும், நீரே ஒழுக்கம் கெட்டவர்தானே. உமக்கு என்ன அருகதை இருக்கிறது. அமபையைத் தூக்கிவந்து விச்த்திரவீர்யனுக்கு கொடுத்தீர். நீர் ஆண்மை இல்லாத அலி. ஆகையால்தான் பிரம்மச்சாரி வேஷம் போடுகிறீர் என்றெல்லாம் ஏசினான்.

பீஷ்மருக்கு நன்றாகத் தெரிந்த உண்மை—அன்றோடு அவன் கதை முடியப்போகிறது என்பது. ஆகவே பேசாமல் இருக்கிறார். அப்படி ஏசுகையில் நீர் பூலிங்கப் பறவை மாதிரி முட்டாளாக இருக்கிறீரே! அதுதான் சிங்கத்தின் வாயில் உடகார்ந்து மாமிசத் துண்டுகளைப் பொறுக்கும். மற்றவர்களுக்குப் புத்திசொல்லிவிட்டு அந்தப் பறவையே மாமிசத்துக்கு ஆசைப்பட்டு சிங்கத்தின் வாயில் நுழையும் . அந்தப் பறவை இமயமலைக்கு அப்பால் உள்ளது என்கிறான் சிசுபாலன். இதெல்லாம் அவன் தலை சீவப்படுவதற்கு முன் உதிர்த்த பொன்மொழிகள்!!
lionmonkey

அவன் இப்படித் திட்டியதிலும் சில அறிவியல் விஷயங்கள் இருக்கின்றன. இந்துக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியதால் எப்போதும் பறவை, மிருகங்கள், பூக்கள் செடி,கொடி, மரங்கள் பற்றிய உவமைகளையே கையாளுவர். இதற்கு முந்தைய எனது கட்டுரைகளில் ஆதிசங்கரர் ஒரே ஸ்லோகத்தில் நாலு பறவைகள் பற்றிப் பாடியதையும், மரம் ஏறும் விதைகள் கொண்ட விநோத அங்கோல மரம் பற்றி அவர் பாடியதையும், தத்தாத்ரேயர் 13 பறவைகள், மிருகங்களீடம் பாடம் கற்றதையும் படித்தீர்கள்.

Hippo and Oxpeckers - Highly Commended - Paula Martin
இந்தப் பூலிங்க பறவை பற்றி கே. என். தவே (K N Dave) என்பவர் எழுதிய ‘’சம்ஸ்கிருத இலக்கியத்தில் பறவைகள்’’ (Birds in Sanskrit Literature) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அவர் சொல்கிறார்:–

ஆப்பிரிக்காவில் நைல் நதியில் ப்லோவர் (Plover) இனப் பறவைகள் உண்டு. மாமிசத்தை உண்ணும் முதலைகளின் பற்களில் மாமிசத் துண்டுகள் சிக்கி அழுகிவிடும். ஆகையால் அவைகள் நதிக்கரையில் வந்து வாயைத் திறந்து கொண்டு உட்காரும். அப்பொழுது ப்லோவர் (Crocodile Bird) பறவைகள் தைரியமாக உள்ளே சென்று அந்த மாமிசத் துண்டுகளைத் தின்னும். இது முதலை—பறவை இனத்தில் மட்டுமின்றி நிறைய உயிரினங்களில் காணலாம். இதை ‘’சிம்பியாசிஸ்’’ (Symbiosis) என்று அழைப்பர். அதாவது இரண்டு உயிரினக்கள் இடையே உள்ள – இருவருக்கும் பயன் தரும் – ஒற்றுமை அல்லது ஒத்துழைப்பு.. சிங்கத்தின் உடலில் உள்ள பூச்சி புழுக்களை குரங்குகள் அகற்றும். காண்டமிருகத்தின் மேலுள்ள கிருமிகளை பறவைகள் அகற்றும்.

ஏன் சிசுபாலன் சிங்கத்தின் பெயரைச் சொன்னான்? இதற்கும் தவே விளக்கம் அளிக்கிறார். மனிதனில் வீரம் உடையவனை புலி, சிங்கம் என்று அழைப்பது போல நீரில் பலம் உடைய முதலைக்கும் சிங்கம் என்ற பெயர் உண்டு என்று சொல்கிறார். ராமனை, வால்மீகி முனிவர் ‘புலி’ என்றே அழைக்கிறார்.

வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தில் வரும் ‘’கௌசல்யா சுப்ரஜா’’ என்ற முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட ஸ்லோகம். அதில் வரும் ‘’நர்சார்தூல’’ என்ற சொல் மனிதருள் புலியே என்று இராம பிரானை புகழ்கின்றது.

birds_gazelle
தவே சொல்லக்கூடிய விளக்கம் நமக்கு இன்று ஓரளவு தகவல் தருகிறது. மஹாபாரத காலத்தில் ஒருவேளை, சிங்கத்தின் வாயில் இருக்கும் மாமிசத் துண்டுகளை எடுக்கும் பறவை இனம் இருந்திருக்கலாம். யார் அறிவார்?
-சுபம்–

MUNGOS MUNGO