விவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்

gita2

லண்டன் சுவாமிநாதன்;
கட்டுரை எண் 831 தேதி 10-02-2014

“உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு ஸ்லோகத்தில் கீதையின் ரஹஸ்யம் ஆழ்ந்து உறைகின்றது.” —- சுவாமி விவேகாநந்தர்

“க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய்யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்ப்பல்யந் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப:”
–பகவத் கீதை 2-3

பொருள்:- எதிரிகளை எரிப்பவனாகிய பார்த்தா ! பேடித்தனத்தை அடையாதே. இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது. அற்பமான மனத் தளர்ச்சியை ஒழித்து விடு. எழுந்திரு !

இதையே ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (குறள் 1075) – என்று வள்ளுவன் இடித்துரைக்கிறான்.

ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
பாரதியோ பொங்கு தமிழில் முழங்குகிறான்:

“உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
பெண்மை கொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் — இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்,
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
— பாரதியார் பாடல்

இன்னொரு பாடலில் பாரதி சொல்வான்:
வில்லினை எடடா! – கையில்
வில்லினை எடடா! – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!
வாடி நில்லாதே; — மனம்
வாடி நில்லாதே; — வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.
— பாரதியார் பாடல்

ஆன்மா அழியாதது என்ற உபதேசமும் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில்தான் வருகிறது. அதையும் பாரதி விட்டுவிடவில்லை:-

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சம் உண்டோடா? –மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா— பாரதியார் பாடல்

“ஆத்மா பலவீனம் உடையவனால் அடையமுடியாதது” (ந அயம் ஆத்மா பலஹீனேன லப்யதே) என்று உபநிஷதமும் கூறுகிறது.

ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீ அண்ணா அவர்கள் கீழ்கண்ட மேற்கோள்களைத் தருகிறார்:
உத்திஷ்ட – இது துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் மந்திரம்

உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதத = எழுந்திரு! விழித்துக் கொள்! குறிக்கோளை அடையும் வரை ஓயாது செல்! (கடோபநிஷத்)

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் – ஆண்டாள் திருப்பாவை

Contact swami_48@yahoo.com

Please read my earlier posts:
On Gita: 1.One Minute Bhagavad Gita 2. Bhagavad Gita through a Story
3.Bhagavad Gita in Tabular Columns 4. 45 commentaries on Bhagavad Gita 5. G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6.A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2) 7. Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwik Food Sold! 8. Krishna’s List of 26 Divine Qualities! (post 721 Dt.24/11/13) 9. கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள் (Post 727, Nov.30, 2013)

On Bharati: 1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! 2.பாரதியின் பேராசை 3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி 4.பயமே இல்லாத பாரதி 5.பாரதி பாட்டில் பகவத் கீதை 6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள் 8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (10) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி! சேதி தெரியுமா? (11) வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’ (741 posted Dec.10) 12) பாரதி தரிசனம்.

ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

Number_5

ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 26

Post No 830 dated 9th February 2014.

பெரியோர்கள் பல்வேறு காரணங்களால் பல விஷயங்களை நமக்கு அறிவுறுத்துகிறார்கள். உலோகாயத நோக்கில் தங்கள் அனுபவத்தின் மூலம் அவர்கள் தரும் அறிவுரைகள் பல. நம்மால் அறிய முடியாத, ஆனால் அவர்களின் உள்ளுணர்வாலும் தவ ஆற்றலினாலும் உணர்ந்து அதன் காரணமாக வழங்கும் அறிவுரைகள் பல. காரணத்தை ஆராயமல் கீழ்ப்படிந்து அவற்றை ஏற்று நடந்தால் நமக்கு நல்லதே நடக்கும். காலப்போக்கில் உலோகாயத நோக்கில் நமது அனுபவத்தாலும், சாஸ்திர அறிவாலும் ஏன், உள்ளுணர்வினாலும் கூட அவர்கள் கூறும் அறிவுரைகள் மெய்யே என்பதை அறியலாம்.

இந்த வகையில் இரண்டு அறிவுரைகளைப் பார்க்கலாம்.

ஐந்து பெயர்களின் பெயரைச் சொல்லக் கூடாது. யார் யாரை?
1) ஆத்ம நாமம் – தன்னுடைய சொந்தப் பெயரைக் கூறக் கூடாது.
2) குரு நாமம் – தான் குருவாக வரித்தவரின் பெயரைக் கூறக் கூடாது.
3) க்ருபண நாமம் – கஞ்சனின் பெயரைக் கூறக் கூடாது.
4) ஜ்யேஷ்டாபத்ய நாமம் – மூத்த மகனின் பெயரைக் கூறக் கூடாது
5) களத்ர நாமம் – தனது மனைவியின் பெயரைக் கூறக் கூடாது.

இதனால் தானோ என்னவோ பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் மூத்த மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இன்னொரு செல்லப் பெயர் இருக்கும்.

இதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:-

ஆத்மநாம குரோர்நாம நாமாதிக்ருபணஸ்ய ச I
ஸ்ரேய: காமோ ந க்ருஹ்ணியாத் ஜ்யேஷ்டாபத்ய களத்ரயோ: II

இனி பேச்சை எப்படிப் பேசக் கூடாது என்பதைப் பார்ப்போம்.

???????????

1) பருஷம் – கடும் சொற்களைக் கூறக் கூடாது
2) அதிமாத்ரம் – அதிகமாகப் பேசக் கூடாது
3) சூசகம் – பின்னால் புறம் கூறிப் பேசக் கூடாது
4) அன்ருதம் – பொய்யைப் பேசக் கூடாது
5) அகாலயுக்தம் – சமயத்திற்குப் பொருந்தாத பேச்சைப் பேசக் கூடாது.
6)
இதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:

பருஷஸ்யாதிமாத்ரஸ்ய சூசகஸ்யாந்ருதஸ்ய ச I
வாக்யஸ்யாகாலயுக்தஸ்ய தாரயேத்தேகமுத்திதம் II

சரக சம்ஹிதையில் சூத்ர ஸ்தானத்தில் ஏழாம் அத்தியாயத்தில் 28வது ஸ்லோகமாக அமைகிறது இது.

பேசும் போது இந்தக் கருத்துக்களை உள்ளத்தில் இருத்திப் பேச ஆரம்பித்தால் வளம் ஓங்கும்! வாழ்க்கை செழிக்கும்!!

Compiled by Santanam Nagarajan; contact swami_48@yahoo.com

***************

26. மேலும் சில ஜென் கதைகள் – 4

buddha huge

ஸ்வர்ண லோகம்

26. மேலும் சில ஜென் கதைகள் – 4
ச.நாகராஜன்

Post No 829 dated 9th February 2014.

நீ அடுத்த பக்கத்தில் தான் இருக்கிறாய்!

புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது பயணத்தின் போது ஒரு நதிக்கரையை வந்து அடைந்தான். நதியோ பிரவாகமாகப் பொங்கி ஓடியது. திகைத்துப் போன அவன், எப்படி இந்த வெள்ளத்தைக் கடப்பது என்று சிந்திக்க ஆரம்பித்தான். சரி, இனி மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்த போது எதிர்க் கரையைப் பார்த்தான். அங்கு ஒரு பெரிய ஆசார்யர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து பெரும் குரலில்,”ஆசார்யரே! ஆற்றின் அடுத்த பக்கத்திற்கு நான் எப்படி வருவது என்பதை தயவுசெய்து சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
ஒரு நிமிடம் யோசித்த ஆசார்யர் அவனை நோக்கி உரத்த குரலில்,”நீ அடுத்த பக்கத்தில் தான் இருக்கிறாய்!” என்று சொன்னார்.

ஒரு துளி தண்ணீர்

ஜிஸான் என்ற ஜென் மாஸ்டர் தனது சீடனை குளிப்பதற்காகத் தண்ணீர் கொண்டு வருமாறு பணித்தார். சீடனும் நீரைக் கொண்டு வந்தான். வெந்நீருடன் அதை இதமாக இருக்கும்படி கலந்தான். மீதம் இருந்த சிறிது குளிர்ந்த நீரை வெளியே கொட்டினான்.இதைப் பார்த்த மாஸ்டர்,”முட்டாள்! மீதமுள்ள நீரை நீ ஏன் செடிகளுக்கு ஊற்றக் கூடாது? இந்த ஆலயத்தில் இருக்கும் நீரில் ஒரு துளியைக் கூட எப்படி நீ வீணடிக்கலாம்?” என்று கேட்டார்.

அந்த க்ஷணமே சீடனுக்கு ஞானோதயம் ஏற்பட்டு விட்டது. அவன் தன் பெயரை டெகிசுயி என்று வைத்துக் கொண்டான்.டெகிசுயி என்றால் ஒரு துளி தண்ணீர் என்று அர்த்தம்!

மிகப் பெரிய போதனை!

மிகப் பெரிய ஜென் மாஸ்டர் ஒருவர் தனது சீடனை நோக்கி தனது போதனைகளிலேயே சிறந்த போதனை,” புத்தர் என்பது உன் சொந்த மனம் தான் என்பது தான்” என்றார். இந்த போதனையால் வெகுவாகக் கவரப்பட்ட சீடன் இதையே தியானம் செய்ய எண்ணி அவரிடம் அனுமதி பெற்று காட்டிற்குச் சென்றான். இருபது ஆண்டுகள் இதையே தியானம் செய்தான். ஒரு நாள் அந்தக் காட்டின் வழியே ஒரு துறவி செல்வதைக் கண்டு அவருடன் பேசலானான். அவரும் தனது மாஸ்டரின் கீழே போதனை பெற்றவர் தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்ட அவன்,” தயவு செய்து எனக்கு நமது மாஸ்டரின் மிகப் பெரியபோதனை எது என்று சொல்லுங்கள்” என்று வினவினான். அந்தத் துறவியின் கண்கள் மின்னின.”ஆஹா! மாஸ்டர் தனது அருமையான சிறந்த போதனையை எனக்குத் தந்துள்ளார். புத்தர் என்பது உன் சொந்த மனம் இல்லை என்பது தான் அது என்றார் அவர்!

புனிதமானவர்!

மிகப் பெரிய புனிதர் ஒருவர் மலை உச்சியில் உள்ள சிறிய குடிசை ஒன்றில் வசித்து வருவதாக பரபரப்பான செய்தி எங்கும் பரவியது.கிராமத்தில் உள்ள ஒருவன் அவரைத் தரிசிக்கக் கருதி கஷ்டமான பயணத்தை மேற்கொண்டு செங்குத்தான மலை மீது ஏறி குடிசையை அடைந்தான்.
குடிசையை அடைந்தவுடன் வாயிலில் ஒரு வயதான வேலைக்காரனைச் சந்தித்தான்.
அவனை நோக்கி,” நான் புனிதரைத் தரிசிக்க வேண்டும்” என்றான் அவன்.

புன்முறுவல் பூத்த வேலைக்காரன் அவனை உள்ளே அழைத்துச் சென்றான். சிறிய குடிசையில் நுழைந்தவுடன் எதிர்புறம் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியே அவனை வேலைக்காரன் இட்டுச் சென்றான். வேலைக்காரனை நோக்கிய அவன்,” நான் புனிதரைப் பார்க்க வேண்டுமே!” என்றான்.
“ நீ ஏற்கனவே அவரை இங்கு பார்த்து விட்டாய். வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரையும், அவர் எவ்வளவு எளிமையாக, படாடோபம் இல்லாமல் இருந்தாலும் சரி, அவரைப் புனிதர் என்று பார்க்கக் கற்றுக் கொள். இதைப் பின்பற்றினால் நீ எந்த பிரச்சினைகளுக்காக இங்கு புனிதரை தரிசிக்க வந்தாயோ அவை தானே தீர்ந்து போகும்” என்றான் அந்த வயதான வேலைக்காரன்!

உன் பொக்கிஷத்தைத் திற!

டாஜு என்ற சீடர் சீனாவில் பாஸோ என்ற மாஸ்டரைச் சந்திக்கச் சென்றார். மாஸ்டர் டாஜுவை நோக்கி,” உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“ஞானம்” என்று பதிலிறுத்தார் டாஜு.

“உன்னிடமே பொக்கிஷம் இருக்கிறதே! அதன் கதவைத் திற” என்றார் மாஸ்டர்.
“எனது பொக்கிஷம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் டாஜு.
“நீ கேட்பது தான் உனது பொக்கிஷம்” என்றார் பாஸோ.

டாஜு மகிழ்ச்சி அடைந்தார்.ஞானமும் பெற்றார். அன்றிலிருந்து அவர் தனது நண்பர்களிடம்,” உனது பொக்கிஷத்தைத் திற. அந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்து” என்று சொல்ல ஆரம்பித்தார்!

சின்ன உண்மை
ஜென் பொன்மொழிகள் :-
ஒருவர் நூறு வருடம் ஜீவித்திருக்கலாம், ஒரு நிமிடம் கூட நிஜமாக வாழாமலேயே! (People can live one hundred years without really living a minute)
புயல் வரப் போகிறது என்று வாழ்க்கை முழுவதையும் கழித்தால், நீ ஒருபோதும் சூரிய ஒளியை அனுபவிக்க மாட்டாய்! (If you spend your whole life waiting for the storm, you will never enjoy the sunshine)

-அடுத்த இதழில் முடியும்

Contact:- swami _ 48 @yahoo.com

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (மார்ச் 2014- ஸ்ரீ விஜய- 2014)

Please click here
மார்ச்-சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்

ஜனவரியில் வள்ளுவரின் குறள்
பிப்ரவரியில் மாணிக்கவாசகரின் திருவாசகம்
மார்ச்சில் திருமூலரின் திருமந்திரம்!

31 முக்கிய திருமந்திரப் பாடல்களைப் படித்து பயன்பெறுங்கள்.
எங்கு பயன்படுத்தினாலும் தொகுத்தவர் பெயரையோ
பிளாக்-கின் பெயரையோ கொடுத்து
தமிழன்பர்களை ஊக்குவியுங்கள்

ராம ராஜ்யம்

sri rama

Post No 825 Date 7th February 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 15
By ச.நாகராஜன்

ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் 76 ஸ்லோகங்கள் உள்ளன. அற்புதமான இந்த ஸ்லோகங்களில் ஸ்ரீராமர் தனது தம்பி பரதனைக் குசலம் விசாரித்து கேட்கும் போது கேட்கப்பட்ட கேள்விகளைக் காணலாம். ராம ராஜ்யம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ராமரது உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்கும் ஸ்லோகங்களாக இவை அமைந்துள்ளன.

பரதனை நோக்கி ராமர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது:-
கச்சித் அஷ்டாதசான்யேஷு ஸ்வபக்ஷே தச பஞ்ச ச I
த்ரிபித்ரிபிரவிஞாதை வேத்ஸி தீர்த்தானி சாரகை: II
– நூறாவது ஸர்க்கம், 36வது ஸ்லோகம்.

அன்யேஷு – பிறர்களிடத்தில் அஷ்ட தச – பதினெட்டும் ஸ்வபக்ஷே – தன் பக்கத்தில் தச பஞ்ச ச – பதினைந்தும் (அதாவது மேற்சொன்ன பதினெட்டில் மந்திரி, புரோஹிதர், இளவரசு தவிர்த்து) உள்ள தீர்த்தானி – ராஜ்யாதிகாரிகளை அவிஞாதை: – ஒருவரை ஒருவர் அறியாதபடி த்ரிபி: த்ரிபி: – ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்றாக சாரகை: – வேவுகாரர்களைக் கொண்டு வேத்ஸி கச்சித் – அறிந்து வருகின்றாயா?

இங்கு ராமர் குறிப்பிடும் பதினெட்டு பேர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்:

1) மந்திரி 2) குலகுரு 3) இளவரசு 4) சேனாதிபதி 5) வாயில்காப்போன் 6) அந்தப்புர காரிய நிர்வாஹம் செய்பவன் 7) சிறைச்சாலையின் அதிகாரி 8) பணத்திற்கு அதிகாரி 9) அரசனின் ஆக்கினையை வெளியிடுவோன் 10) வியவகாரத்தைக் கேட்போன் 11) சேனைகளுக்குச் சம்பளம் முதலியவைகளைக் கொடுப்பவன் 12) நகரத்தைச் சோதித்தல், நகர பிராகாரத்தைக் காத்தல் முதலிய தொழில்களைப் புரிபவன் 13) சேனை தவிர மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதைத் தனித் தனியே பிரித்துக் கொடுப்போன் 14) அரசன், மந்திரி முதலியவர்களுக்குத் தக்க ஆசனம் அளித்தல், சபாசதர்களை வரவேற்றல், சபைக்கு வர அதிகாரமற்றவர்களைத் தடுத்தல், சபையைச் சத்தமில்லாமல் செய்தல், சபையைக் காத்தல் முதலியவற்றைப் புரிபவர்களின் தலைவன் 15) தாயாதிகளின் பாக விஷயத்தில் நேரும் வழக்கைத் தர்ம சாஸ்திரப்படி தீர்ப்பவன் 16) அரசனின் ஆணைப்படி தண்டனைகளை ஏவுபவன் 17)மலையரண், நீரரண், காட்டரண் முதலியவைகளைக் காப்பவன் 18) ராஜ்யத்தின் எல்லையைக் காப்பவன்

மிகுந்த ஆச்சரியத்திற்குரிய இந்த நிர்வாக அமைப்பு (administration set up) இன்றைய நவீன காலத்திற்கும் பொருந்துகிறது அல்லவா?

Cabinet Ministers, advisor, Minister of State, Commander, treasury, Defence, Security Judicial Officer, Prison Warder என்று இப்படி சரிக்குச் சரியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தால் இன்று நாம் காணும் அரசியல் நடைமுறையும், சமூக நடைமுறையும் ஒரு லட்சிய நாட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக அமைகிறதல்லவா?

நிர்வாகம் செம்மையுற நடை பெறுகிறதா, லஞ்ச லாவண்யம் இல்லாமல் நடை பெறுகிறதா என்பதைச் சரிபார்க்க மூன்று மூன்று பேரை வைத்து உளவு பார்க்கும் முறையும் சொல்லப்பட்டு இருப்பதை நோக்கும் போது லஞ்சமில்லா நாடு என்ற லட்சிய நாட்டையே நாம் பார்க்க முடிகிறது.

இது ராமராஜ்யத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் ஒரே ஒரு ஸ்லோகம் தான்!

Contct swami_48@yahoo.com

*****

வினவுங்கள் விடை தருவோம்: அதர்வ வேத புத்தகங்கள்

A veda

the_atharvaveda_

the_atharvaveda_and_the_ayurveda_idf413

Q& A :Books on Atharva Veda In Tamil and English

Post No 824 Date 7th February 2014

வினவுங்கள் விடை தருவோம்:
அதர்வ வேத புத்தகங்கள்

Question
Feb 6 at 9:57 AM
அய்யா,

எனக்கு தமிழ் அதர்வண வேதம் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொல்வீர்களா? அல்லது வழி காட்டுவீர்களா?

n.r.
salem

Answer:
Dear NR,

Following books are available in English and Tamil:

1.Atharva Veda Samhita by W.D.Whitney
Coomentary (Bashya) of Sayanacharya in English
Edited by K.L.Joshi, Parimal Publications, Delhi.

2. Atharva Veda Samhita by William Dwight Whitney
Edited by Charles Rockwell Ranman
Published by Motilal Banarsidas Publishers Private Limited
Delhi.
3.Essentials of Atharva Veda
R .L. Kashyap
Sri Aurobindo Kapali Sastri Institute of Vedic Culture, Bangalore – 11

4. A Bird’s Eye View of the Vedas
Swami Harshananda
Ramakrishna Math, Bangalore

தமிழில் அதர்வண வேதம் பற்றி கீழ்கண்ட புத்தகங்கள் உள்ளன. நான் லண்டனில் வசிப்பதால் இதற்கு மேல் என்னிடம் தகவல் இல்லை:

1.அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு, கவிமாமணி தமிழ்மாறன், ரம்யா பதிப்பகம், 33/4(15/4), ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 தொலைபேசி 24340599, விலை ரூ.100, பதிப்பு 2009.

2.அதர்வ வேதம்– தமிழ்– ஆங்கிலம், ஆங்கிலம் ஆர்.டி.கிரிப்பித், தமிழ் ம ரா.ஜம்புநாதன்/வி.என்.ராகவன், பெ.நா.சிவன், (அலைகள் வெளியீடகம், சென்னை – 24).

3.அதர்வ வேதம் தொடர்பான உபநிஷதங்கள் முண்டக, பிரச்ன, மாண்டூக்ய உபநிஷதங்கள், தமிழ் விலக்கம், சுவாமி ஆஷுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலை, சென்னை– 4

4. அதர்வ வேதம், ஸ்வாமி, அநுராகம், தி. நகர், சென்னை- 17(மிகச் சிறிய விளக்கம்)

Contact swami_48 @yahoo.com

அறிவு வளரும் விதம்!

lotus reflection

சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 25
அறிவு வளரும் விதம்!
Post No.822 Date 6th February 2014

சூரியனைக் கண்டதும் நளினமான தாமரை மலர் மலர்கிறதல்லாவா! அது எப்போது தோன்றும் என்று சூரிய உதயத்திற்காக எங்குகிறது கமல மலர். இதைப் பார்த்தார் கவிஞர், அவருக்கு உடனே ஞாபகம் வருவது பண்டிதனைப் பார்த்தவுடன் மனம் மகிழும் அறிவு ஜீவி தான்! தன் மனதில் எழுந்த எண்ணத்தைக் கவிதையாகப் பொழிகிறார் இப்படி:

ய படதி லிகதி பஷ்யதி, பரிப்ரச்சதி பண்டிதானுபாஸ்ரயதே I
தஸ்ய திவாகர-க்ரணைர் நளினிதளாமிவ விகாஸயதே புத்தி: II

இதன் பொருள்:
யார் ஒருவன் எழுத வல்லவனோ (லிகதி), எவன் எதையும் உற்றுக் கவனிப்பவனோ (பஷ்யதி), எவன் ஒருவன் எதையும் ஆராயும் மனப்பான்மை கொண்டவனோ (பரிப்ரச்சதி) அவன் பண்டிதர்களுடைய சகவாசத்தால் (பண்டிதான் உபாஸ்ரயதே) மனம் மிகவும் மகிழ்கிறான். அது எது போல இருக்கிறது என்றால், தாமரை மலரின் இதழ்கள் (உயிரைத் தரும்)திவாகரனின் கிரணங்களைக் கண்டவுடன் மலர்வது போல இருக்கிறது!

அறிவு எப்படி அதிகரிக்கிறது என்பதை இன்னொரு கவிஞரின் பாடல் தெரிவிக்கிறது.

ஆசார்யாத் பாதமேகம் ஸ்யாத் பாதம் ஸப்ரஹ்மசாரிபி: I
பாதம் து மேதயா ஞேயம் சேஷம் காலேன பச்யதே II

அறிவின் ஒரு பகுதியே ஆசார்யரிடமிருந்து பெறப்படுகிறது (ஆசார்யாத் ஏகம் பாதம் ஸ்யாத்)

இன்னொரு பகுதி கூடப் படிக்கும் சக தோழர்களிடம் விவாதிப்பதால் உண்டாகிறது. (ஏகம் பாதம் ச:ப்ரஹ்மசாரிபி:)

மூன்றாவது பகுதியோ சுயமாகப் பிரகாசிக்கும் ஒருவனது அறிவிலிருந்து பெறப்படுகிறது (ஏகம் பாதம் து மேதயா ஞேயம்)

மீதிப் பகுதியோ காலம் செல்லச் செல்ல உலகின் தொடர்பினால் பெறப்படுகிறது (சேஷம் காலேன பச்யதே).

இந்த நான்கு பகுதியுமே முக்கியம் தான்; இவை அனைத்தும் இணையும் போது ஒரு மேதை உருவாகிறான். ஆசார்யரும் அருமையாக இருந்து சக மாணவர்களும் புத்திசாலிகளாக இருந்து இயல்பினாலேயே அறிவு பிரகாசித்து, உலகியல் தொடர்பு நல்லறிவை இன்னும் அதிகரிக்குமானால் அப்படிப்பட்டவனுடைய மேதைத் தன்மை சமுதாயத்திற்கு எவ்வளவு நலத்தை உண்டாக்கும்!
இதை செய்யவே பண்டைய நாட்களில் குரு குலங்கள் நிறுவப்பட்டன.

ஆங்கிலேயன் வகுத்த குமாஸ்தா படிப்பு வந்தவுடன் இந்த மேதைத் தன்மை அழிந்து விட்டதே என்று வருத்தம் தான் பட வேண்டும். இன்றைய நாட்களில் இந்த நான்கு வகை அறிவையும் நாமே முயன்று தான் பெற வேண்டும்.

Compiled by S. Nagarajan
Contact us for more of the same: swami_48@yahoo.com
***************
picture is used from another website;thanks.

நீங்கள் நாலும் தெரிந்தவரா?

quiz5

நீங்கள் நாலும் தெரிந்தவரா?

Quiz Compiled by London Swaminathan
Post No 820
Date 5-2-14
This quiz is available in English as well.

1.தேவாரம்,திருவாசகத்தை அளித்த நால்வர் யார்?
2.தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள் யார்?
3.வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் எந்த நாலு ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்?
4.நான்கு புருஷார்த்தங்கள் (அடைய வேண்டிய லட்சியங்கள்) என்ன?
5.மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள் என்ன?

6.நான்மணிக் கடிகை நூலில் கூறப்படும் நாலு என்ன?
7.‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. என்கிறார்களே நாலின் பொருள் என்ன?
8.நாலும் கலந்துனக்கு நான் தருவேன் என்று பிள்ளையாரிடம் அவ்வையார் கூறினாரே, அந்த நாலு என்ன?
9.தமிழில் புற நானூறு, அக நானூறு பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்? வேறு என்ன பழந்தமிழ் நூல்கள் நானூறு (நாலு நூறு) பாடல்கள் உடையவை?
10.பிரம்மாவின் நாலு மானச புத்திரர்கள் யாவர்?

11.நான்கு வகைப் பூக்கள் யாவை?
12.நான்கு வகை ஜாதிகள் எவை?
13.புறநானூற்றில் கூறப்படும் நாலு தமிழ் ஜாதிகள் யாவை?
14.‘க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர்ஜன்மம் இல்லை என்று சம்ஸ்கிருத ஸ்லோகம் சொல்கிறது. அந்த நாலு சொற்கள் என்ன?
15.கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள் எவை?

16.நான்கு வகைப் படைகள் யாவை?
17.ஒரு காரியத்தைச் செய்ய நாலுவித (சதுர் வித உபாயங்கள்) வழி முறைகள் உண்டு. அவை யாவை?
18.உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள் எவை?

Answers விடைகள்
1. அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
2.ராமர்—சீதை, லெட்சுமணர்— ஊர்மிளை, பரதர் — மாண்டவி, சத்ருக்னன் —ஸ்ருதகீர்த்தி
3. ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து
4.தர்ம, அர்த்த, காம, மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு)
5.பிரம்மசர்யம் (மாணவன்), கிருஹஸ்தன் (இல்லறத்தான்), வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு), சந்யாசம் (துறவி)

6.நாலு மணி மணியான நீதிகள் ஒவ்வொரு பாட்டிலும் உண்டு. இது ஒரு ரத்தின மாலை(கடிகை)
7.வெண்பா ( 4 வரிகள் உடையது), இரண்டு வரிகளை உடையது குறள்.
8. பால், தேன், பாகு, பருப்பு,
9.பழமொழி நானூறு, நாலடி நானூறு மற்றும் பல.
10. சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

11.குரவு, தளவு, குருந்தம், முல்லை (புறநானூறு பாடல் 335); கோட்டுப் பூ, கொடிப் பூ, நிலப் பூ, நீர்ப் பூ என்றும் பகர்வர்.
12. பிராமண, கஷத்ரிய, வைஸ்ய, சூத்ர
13.துடியன், பாணன், பறையன், கடம்பன்
14.கங்கை, கோவிந்தன், கீதா, காயத்ரி
15. ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி.

16. ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்)
17. சாம, தான, பேத, தண்டம் (கெஞ்சல், பணம் கொடுத்தல்,எதிரிகள் இடையே பிரிவு உண்டாக்கி மசிய வைத்தல், கடும் தண்டனை கொடுத்து பணியச் செய்தல்)

18.அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம (சுருக்கமான பொருள் : நாம் கடவுள். இந்த நிலையை எய்துவதே ஒவ்வொரு இந்துவின் வாழ்க்கை லட்சியம்)

Earlier Quiz posted by me:

(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை

contact: swami_48@yahoo.com

25. மேலும் சில ஜென் கதைகள் -3

Please clcik here for the article
Swarno lokam 25

bird in hand

சூரிய உதயம், அஸ்தமனம் கண்டு உத்வேகம் பெறலாம்!

Please click here for the article:
சம்ஸ்கிருத செல்வம் 24

sunset birds,assam