உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி! (Post No.3062)

I day map 2

Article Written S NAGARAJAN

Date: 15th  August 2016

Post No. 3062

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1997) ஒரு அஞ்சலிக் கட்டுரை இது!

 

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!

ச.நாகராஜன்

 

ஒருவரை எப்பொழுது வேண்டுமானாலும் நினைக்கும் போது உடனே உத்வேகம் பிறந்து பல அரிய காரியங்களைச் செய்ய முடியும் என்றால் அப்படிப்பட்ட உத்வேக வாழ்க்கையை வாழ்ந்தவர் —வாழ்வாங்கு வாழ்ந்த சிறந்த மனிதர்– என்று அர்த்தம். ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்டு அமரரான திரு வெ.சந்தானம் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை உத்வேகமூட்டும் அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்பொழுதும் உணர்த்தும்.

 

மாபெரும் அரசியல் தலைவர்களுடன் சகஜமாகப் பழகியவர் அவர். ஆன்மீகத்திலோ இணையிலா ஆசார்யர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் கொண்டவர். சித்தர்களிலோ எனில் கணபதியுடன்நேருக்கு நேர் பேசும்  மகத்தான ஸ்வாமிஜியின் அன்புக்கு பாத்திரமானவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சில நிகழ்ச்சிகள் ..

 

காமராஜர் மதுரையில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டு பந்தலைப் பார்வையிட வந்தார். பந்தலோ டி.வி.எஸ் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட அருமையான் பந்தல். தினமணி நிருபர் காமராஜரிடம் சென்றார். எங்கள் ஆசிரியருக்கு (தினமணி வெ.சந்தானம்) தேச் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்காக அரசு தரும் எதுவம் வரவில்லையே என்றார்.

ஏன் என்று கேட்டார் காமராஜர்.

 

அதற்கு சிறை இருந்ததற்கான சான்றை சக சிறைவாசி ஒருவர் தர வேண்டும் என்று விதி இருக்கிறதே என்றார் நிருபர்.

எவன் அப்படி விதியைப் போட்டான்?

“தாங்கள் தான்! முதலமைச்சர் விதி இது”

ஹ ஹ ஹா என்று சிரித்தார் காமராஜர்.

 

ஒரே ஒரு வரி.

ஆங்கிலத்தில்,

திரு சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார்.

கேகாமராஜ்

 

I day squirrel

உடனுக்குடன் செயலபடும் மாபெரும் தலைவர் காமராஜர். என் தந்தையாரிடம் மீது அவர் கொண்ட அன்பும் மதிப்பும் எல்லையற்றது.

 

எனது தந்தையாரை “சாமி” என்று அழைக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீகம் தேசீய்மும் இழைந்து ஓடும் உத்வேகமூட்டும் சொற்பொழிவுக்குச் சொந்தக்காரர். மகுடி கேட்ட நாகம் போல மக்கள்  கூட்டம் சொக்கும் அவரது பேச்சால். மதுரையில் அவர் சொற்பொழிவு ஆற்றும் கூட்டங்கள் பலவற்றிற்கு என் தந்தையார் தான் தலைவர். மறுநாள் அப்படியே தேவர் பெருமானின் சொற்பொழிவு தினமணியில் வெளியாகும். மக்கள் பெரிதும் மகிழ்வர். தேவர் பெருமானும் தான்! அப்படியே வந்திருக்கிறதே என்று மகிழ்வார். எங்கள் குடும்பத்திற்கு தேவர் சமூகத்தினரின் உதவி காலம் காலமாக இருந்து வந்தது!

 

ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா ஒரு அபூர்வமான சித்தருக்கெல்லாம் சித்தர். தினமும் கணபதி ஹோமம் இளமையிலிருந்தே செய்து வந்தவர். கணபதியை பிர்த்யட்சமாகக் கண்டு பேசுபவர்.

 

அவரை தரிசிக்கும் போதெல்லாம் ஏராளமான அபூர்வமான சம்பவங்களை எங்கள் குடும்பத்தினர் அனுபவித்து மகிழ்வது வழக்கம்.

 

ஆய்க்குடியி (தென்காசி அருகில் உள்ள அற்புதமான கிராமம்) வசித்து வந்தார் அவர்.

 

அவராலேயே பரசுராமர் பூஜை செய்த ஐயப்பனின் சிலை அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் மக்கள் அங்கு செலவ்தை அனைவரும் அறிவர்.

 

அங்கு வருடந்தோறும் நடக்கும் புஷ்பாஞ்சலி அபூர்வமான ஒன்று.

என் தந்தையார் மீது அளவு  கடந்த அன்பு கொண்டவர் அவர் அவர் செய்யும் கணபதி ஹோமம் கணபதியை பிரத்யட்சமாக எழுந்தருளச் செய்யும் ஹோமம் ஆகும்.

 

எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடந்தது. நண்பர் ஒருவர் வீட்டிலும் ஹோமம் நடந்தது. அங்கு அனைவரையும் தீடீரென்று கீழே விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார். அனைவரும் நமஸ்கரித்தோம்.

 

பின்னால் தான் அவர் நடந்ததைச் சொன்னார்,

ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்தர் உள்ளிட்ட பலர் வந்திருந்ததாகவும் அவர்களைத் தரிசித்ததால் எங்களையும் நமஸ்கரிக்கச் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற வைத்ததாகவும் தெரிய வந்தது.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏராளமான சுவையான நிகழ்வுகள்.

காலம் நிறபதில்லை; ஓடுகிறது. நல்ல நினைவுகள் நீடிக்கின்றன மறைவதில்லை!

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் வள்ளுவர்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் நினைப்பவருக்கு உத்வேகம் ஊட்டும் உத்தமர் திரு வெ.சந்தானம்.

எனது தந்தையார்.

 

இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரை நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.

 

*********

 

துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061)

0c79b-ar2bkanda9.jpg

கவந்தன் படலம்

 

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3061

Time uploaded in London :– 12-47

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

கம்பன் காவியம் ஒரு கல்கண்டு! சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

 

 

ராமன் ஒரு அவதாரம்; ஆயினும் மனிதனாகத் தோன்றினால் மனிதன் போலவே நடந்தால்தான் அவனை நாம் பின்பற்றுவோம். ராமன் தனது வாழ்க்கை மூலம் பல அரிய பண்புகளை நமக்குக் கற்பிக்கவந்தவன். ஆகவே துணையின் பெருமை, நட்பின் பெருமை, உதவி பெறுவதன் பெருமை ஆகியவற்றையும் நமக்குக் காட்டுகிறான்.

 

பஞ்ச தந்திரங்களில் ஒன்று சரியான நட்பைப் பெறுதல்; துணை இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. ஏழு கோடி அவுணர்களை வீழ்த்திய ராமனும் கூட துணை இல்லாமல் ஒருவேலையைச் செய்ய இயலாது.

 

 

ராமன் உதவி பெறுவதைவிட, கம்பன் அதை நமக்குச் சொல்லும் அழகு தனியே!

 

சுக்ரீவனின் நட்பைப் பெறுக – என்று ராம பிரானுக்கு  கவந்தன் அறிவுரை அறிவுரை வழங்குகிறான்

 

கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்

இணை இலாதாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்

துணை இலாதவருக்கு இன்றால் பகைப் புலம் தொலைத்து நீக்கல்

 

–ஆரண்ய காண்டம், கவந்தன் படலம்

 

பொருள்:-

அம்புகளை வீசும் வில்லை உடைய (கணை உலாம் சிலை) உன்னைக் காப்பதற்கு பலம் உடையவர் யாருமில்லை.ஆயினும் ஒப்பில்லாத சீதையைத் தேடுவதற்கு (இண இலாள் தன்னை நாடற்கு), உதவி தேவை.

 

எதைப் போல என்றால்,

கப்பல் இல்லாமல் கடலைக் கடக்க முடியாது (புணை இலாதவற்கு வேலை/கடல் போக்கு அரிது)

 

அதேபோல

துணை இல்லாமல் பகைப் புலத்தை அழிக்க முடியாது.

kamban_stamp

நல்ல உவமை: இந்த உவமையை இந்துமத நூல்கள் முழுவதும் காணலாம். கடல் என்பது அவர்களுக்குத் தெப்பம் போல; உலகம் முழுதும் சென்று நாகரீகத்தைப் பரப்பியவர்கள் இந்துக்கள். அதனால் வேதம் முதல் நேற்றைய இலக்கியம் வரை கப்பல்-கடல் உவமை வரும்.

 

சம்சார சாகரம் = பிறவிப் பெருங்கடல் என்பதை கீதையிலும்  குற ளிலும் காணலாம். நிற்க.

 

திருவள்ளுவரும் இதை வலியுறுத்துவார்:-

 

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

–குறள் 677

ஒரு செயலைச் செய்பவன், ஏற்கனவே அந்தப் பணியைச் செய்து அறிவு பெற்றவனின் அனுபவத்தைப் பகிர்ந்து, அதைச் செய்வதே முறை.

MySt Kambar fdc

–Subham–

டர்பா (DARPA) காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!(Post No.3059)

 darpa 2

Article Written S NAGARAJAN

Date: 14th  August 2016

Post No. 3059

Time uploaded in London :– 6-31 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

.நாகராஜன்

 

darpa 3

“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா

 

 

செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.

 

 

எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!

ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு  மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.

அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!

2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!

எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது

அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.

 

 

இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

 

 

இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!

எம்பதடிக் சிஸ்டம்  (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி  இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.

 

DARPA_Logo

 

அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ்  உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.

ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)

எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!

எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!

 

துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?

 

முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!

 

Wallace_Carothers,_in_the_lab

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.

பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை  மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.

தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.

நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!

நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!

******

 

5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்! (Post No.3058)

adi 18 food

Written by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3058

Time uploaded in London :– 18-29

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

boli

உணவில் சைவ உணவு, அசைவ உணவு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

குஜராத்தி உணவு, வங்காளி உணவு, தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளால் உணவு கேள்விப்பட்டது இல்லை அல்லவா?

 

ஆனால் ஏதோ காரணத்தால் சம்ஸ்கிருத அறிஞர்கள் உணவை ஐந்து வகையாகவும், தமிழ் அறிஞர்கள் உண்வை ருசியின் அடிப்படையில் ஆறு வகையாகவும் பிரித்து இருக்கின்றனர்..

நளன், பீமன் போன்ற புகழ் பெற்ற புராண, இதிஹாச சமையல் நிபுணர்கள் “பஞ்ச பக்ஷ பரமான்னம்” படைத்ததாகப் படிக்கிறோம்.

 

பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவோர் , அடடா! பஞ்சபக்ஷ பரமான்னம் கிடைத்தது என்பர். அவர்களே தமிழ் உணவு சாப்பிடும்போது அடடா! அறுசுவை உணவு என்பர்.

 

அது என்ன பஞ்ச பக்ஷ பரமான்னம்?

fruits 2

பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று ஐந்து வகையாக பிரித்ததற்குக் காரணம் அந்த உணவும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டவே.

 

1.பக்ஷணம் என்ற சொல் நம் எல்லோருக்கும் தெரிந்ததே; இது நொறுக்குத் தீனி வகை; கருக்கு முறுக்கென்று சப் தம் போட்டுச் சாப்பிடும் திட உணவுப் பொருட்கள். எடுத்துக் காட்டு: முறுக்கு, காராச் சேவை, காராபூந்தி

 

2.போஜ்யம்: போஜனம் (Bois in French) என்ற சொல்லும் தமிழர்களுக்குத் தெரிந்த சொல்லே. என்ன போஜனம் ஆயிற்றா? என்றால் சாப்பிட்டாகிவிட்டதா? என்று பொருள். அதாவது சாதம், சாம்பார், குழம்பு முதலியன. பெரும்பாலும் திட வடிவில் வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி இருக்கும்.

 

 

3.லேஹ்யம்: இந்தச் சொல்லும் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொல்லே; சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் லேகியம் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கையில் வாங்கி நக்கிச் சுவைப்போம். ஆங்கிலச் சொல் LICK ‘லிக்’ (நக்கு) என்ற சொல்லும் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்த சொல்லே.

 

 

சோஷ்யம் என்ற வகை உணவுகள் உறிஞ்சிக் குடிக்க வேண்டிய பானங்கள். சக் SUCK (உறிஞ்சு) என்ற ஆங்கிலச் சொல் இதிருந்து பிறந்த சொல்லே. ரோஸ் மில்க் முதல் பட்டர்மில்க் (மோர்) வரை எல்லா பானங்களும் பாயசங்களும் இதில் அடக்கம்..

 

 

பேயம் என்பனவும் திரவ நிலையிலுள்ள உணவு வகைகளே. ஆனால் இவைகளை உறிஞ்சத் தேவை இல்லை. அன்னாந்து அப்படியே குடிக்கலாம். பால், தண்ணீர், நீர்மோர் போன்றவை.

 

கம்ப ராமாயண காலத்திலேயே ஸ்ட் ரா STRAW இருந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். இலைகளின் காம்பிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு அவைகளை ஸ் ட் ரா போல தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கம்பன் தரும் தகவல்!

 jilebi, jangri

அறு சுவை உண்டி

பொருள்கள் திட நிலையில் இருக்கிறதா, திரவ நிலையில் இருக்கிறதா என்ற அடிப்படையில் சம்ஸ்கிருத வல்லுநர்கள் பிரித்தனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் சுவையின் அடிப்படையில் உணவு வகைகளை ஆறு பிரிவுகளாகப் பயன்படுத்தினர்.

 

அறு சுவை யாவை?

தித்திப்பு= இனிப்பு (சர்க்கரை, வெல்லம், கரும்பு, பழச்சுவை)

கைப்பு= கசப்பு ( பாகற்காய், வேப்பிலை)

புளிப்பு= புளியங்காய், மாங்காய், எலுமிச்சை

உவர்ப்பு= உப்புச் சுவை (உப்பு)

துவர்ப்பு= பாக்கு முதலியன தரும் ருசி

கார்ப்பு= காரம், உறைப்பு (மிளகாய், மிளகு)

 

தமிழர்கள் இதை 1200 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியமைக்கு நாலடியாரில் சான்றுளது.

 

அறுசுவையுண்டி யமர்ந்தில்லாளூட்ட

மறுசிகை நீக்கியுண்டாரும் — வறிஞராய்ச்

சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்

றுண்டாக வைக்கற்பாற்றன்று

(நாலடியார் பாடல் 1)

fruit salad

அறு சுவை உண்டி = ஆறு சுவையுடைய உணவை

இல்லாள் அமர்ந்து ஊட்ட = பெண்சாதி அன்புடன் பரிமாற

மறு சிகை நீக்கி = மற்றொரு கவளத்தை  வேண்டா ம் என்று தள்ளி

உண்டாரும் = உண்ட செல்வர்களும்

வறிஞராய் = வறுமையுற்று

ஓர் இடத்துச் சென்று =  வேறு ஒரு இடத்துக்குப் போய்

கூழ் இரப்பர் எனில் = கூழை பிச்சையாக கேட்பார்களானால்

செல்வம் ஒன்று = செல்வம் என்கிற ஒரு பொருள்

உண்டு ஆக = நிலையாக இருப்பதாக

வைக்கல் பாற்று அன்று = வைக்க வேண்டாம் (நினைக்க வேண்டாம்)

 

செல்வம் நிலையாமை தலைப்பில் வரும் பாடல் இது.

 

ஆக 5 உணவு, ஆறு உணவு — எதைச் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.

 

கண்ணனோவெனில் பகவத் கீதையில் உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கிறார். சத்துவ குணம், ராஜச குணம், தமோ குணம் கொடுக்கும் உணவு எவையென்று செப்பியதை முன்னரே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

 

–subham–

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057)

sheridan novel

Compiled by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3057

Time uploaded in London :– 11-55 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐரிஷ் கவிஞர்,  நாடக ஆசிரியர்,  அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:–

 

ஒரு முறை ஷெரிடன் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டார். ஒரு பெண்மணி அவருடன் உலாப் போக வேண்டும் (வாக்கிங்) என்று நச்சரித்தார். என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்தார் ஷெரிடன்.

 

“அம்மையாரே! வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எந்த நேரமும் மழை கொட்டலாம்”  என்றார் ஷெரிடன்.

 

அந்தப் பெண்மணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது ஷெரிடன் பின்புறக் கதவு வழியாக நழுவினார்.

 

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்ததப் பெண்மணி ஓடோடி வந்தார்.

 

“மிஸ்டர் (ஷெரிடன்), வானம் வெளிறிவிட்டது போல இருக்கிறதே” என்றார் அந்த மாது.

 

நீங்கள் என்னுடன் வரக்கூடாது என்று சொல்ல விரும்பாத ஷெரிடன், மறைமுகமாக அதைச் சொன்னார்:

“ஆமாம், ஆமாம், வானம் தெளிந்துவிட்டது. ஆனால் ஒருவர் செல்லும் அளவுக்குதான்!”

 

–என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தார்.

xxxx

தாமஸ் கில்லிக்ரூ கொடுத்த சூடான பதில்

jeses thieves

கில்லிக்ரூ இங்கிலாந்தின் இரண்டாவது சார்லஸ் மன்னரின் அரசவையில் இருந்த நாடக ஆசிரியர்,  நகைச்சுவை மன்னன்.

 

ஒரு முறை பாரிஸில் பிரெஞ்சு மன்னன் 14ஆவது லூயியை பார்க்கச் சென்றார். அவர் அரண்மனையைச்  சுற்றிக் காண்பித்தார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட   ஒரு படத்தைக் காட்டினார். இதோ பாருங்கள் அதற்கு வலது புறம் இருக்கும் படம் போப்பாண்டவருடையது. இட து புறம் இருக்கும் படம் என்னுடையது என்று பெருமையாக சொன்னார்.

 

உடனே தமாஷ் பேர்வழியான கில்லிக்ரூ சொன்னார்:

அட! ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது அவர் கூடவே இரு புறமும் இரண்டு திருடர்களையும்  சிலுவையில் அடித்ததாகப் படித்திருக்கி றேன். இப்போதுதான் தெரிகிறது யார் அந்தத் திருடர்கள் என்று!

220px-Disraeli

டிஸ்ரேலியின் சூடான பதில்

 

டிஸ்ரேலி என்பவர் பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராகப்  பதவி வகித்தவர்.

 

அவருடைய அரசியல் எதிரி கிளாட்ஸ்டோன்.

 

ஒருமுறை “துரதிருஷ்டம்” என்ற சொல்லுக்கும் “பேராபத்து” என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

 

நான் உடனே சொல்கிறேன்; நன்றாகக் கேளுங்கள்:

 

கிளாட்ஸ்டோன், தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது துரதிருஷ்டம்.

அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அது “பேராபத்து!” — என்றார் டிஸ்ரேலி

 

–Subham–

 

வால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்! சூடான பதில்கள் (Post No.3054)

VOLTAIRE

Compiled by london swaminathan

Date: 12th    August 2016

Post No. 3054

Time uploaded in London :– 10-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வால்டேர் 1694 ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரெஞ்சு தத்துவ அறின்ஞர், எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர். அவர் லண்டனுக்கு வந்தபோது நடந்த நிகழ்ச்சி!

 

பிரன்சுக்கும் இஙிலாந்துக்கும் இடையே எப்போதும் போட்டி, பொறாமை, போர்கள் இருக்கும். இன்றும் கூட பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது!

 

1727 ஆம் ஆண்டு! ஒரு நாள் !

வால்டேர் லண்டன் தெருக்களில் நடந்து கொண்டிருந்தார்.

 

அவர் பிரெஞ்சுக்காரர் என்று தெரிந்தவுடன் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.

 

“டேய்,  எல்லாரும் வாங்கடா,  இதோ இருக்கான் பிரெஞ்சுக்காரன், அடித்து நொறுக்குங்கடா, அவனை தூக்கில் தொங்கவிடுவோம்” என்றெல்லாம் கூட்டம் கொக்கரித்தது.

 

வால்டேர் அஞ்சாத சிங்கம்; புத்தி வேலை செய்தது.

“நான் பிரெஞ்சுக்காரந்தான்!. ஆனால் ஆங்கிலேயனாகப் பிறக்காததே பெரும் தண்டனை ஆயிற்றே; இதற்குப் பின்னரும் எனக்குத் தண்டனை தேவையா?

 

இதைக்கேட்டவுடன் கூட்டத்தினருக்கு பரம சந்தோஷம்! அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தனர்.

 

Xxxx

டேனியல் வெப்ஸ்டர்

Danielwebsterbirthplace

டேனியல் வெப்ஸ்டர் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி. செனட் முதலிய சபைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

சின்னப் பையனாக இருந்தபோது அழுக்குச் சட்டை, அழுக்கான கை,கால்களுடன் பள்ளிக்கு வருவார். அவனது வகுப்பு ஆசிரியைக்கு அந்த அசிங்கத்தைப் பார்க்கப்  பிடிக்கவில்லை.

ஒருநாள் அவனைப் பார்த்து சத்தம் போட்டார்:

 

“இன்னொரு முறை, அழுக்குக் கைகளுடன் வகுப்புக்கு வந்தால், உன்னை அடித்து நொறுக்கி விடுவேன் – என்றார்.

 

அவனோ விஷமக்கார சுட்டிப் பையன். கொஞ்சமும் மாறவில்லை. அதே அழுக்குச் சட்டை, அழுக்கு கைகள்!

 

ஆசிரியைக்கு மஹா கோபம்:-

 

“டேய் நாயே! உனக்கு எத்தனை முறை சொல்லவேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கையை நீட்டு, இந்தா அடி! என்று கம்பை ஓங்கினார்.

 

அவன் அந்தக் கையில் ‘தூ’ என்று துப்பிவிட்டு எச்சிலால் டிரவுசரில் துடைத்துக்கொண்டு கையை நீட்டினான்.

 

“சீ நாயே! இதைவிட இந்தப் பள்ளிக்   கூடத்தில் வேறு எங்காவது இதைவிட அசிங்கமான கை இருந்தால் எனக்குக் காட்டு “– என்று சொல்லி தடியை ஓங்கினார்.

வெப்ஸ்டரா சளைப்பான்?

 

அடுத்த கையை நீட்டினான்! அது முந்தைய கையை விட அசிங்கமாக இருந்தது என்பதை சொல்லவும் வெண்டுமா?

 

டீச்சருக்கு அடிப்பதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

 

DanielWebster

Xxx SUBHAM xxx

 

 

 

 

மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)

Abraham-Lincoln

Translated by london swaminathan

Date: 11th    August 2016

Post No. 3051

Time uploaded in London :– 6-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சில தலைவர்கள் கொடுக்கும் சூடான பதில்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. இந்தியப் பிரதமர், ஒரு காலத்தில் டீக்கடை வைத்தது பற்றி பலர் கிண்டல் செய்தவுடன், பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், எல்லா இடங்களிலும் இலவச தேநீர் கடை வைத்து தேநீர் வழங்கியதை நாம் அறிவோம்

 

 

இதுபோல அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர் ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறியவர்.

 

ஒருமுறை, வாழ்க்கையின் உயர்மட்டத்திலுள்ள பிரமுகர் டக்ளஸ் என்பவர் பொது இடங்களில்   லிங்கனை விமர்சித்து வந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் டக்ளஸ் சொன்னார்:-

 

“நான் லிங்கனை முதலில் சந்தித்ததே ஒரு கடைப் பையனாக வேலை பார்த்தபோதுதான். அவன்  விற்காத பொருள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?  அவன் மதுபானக் கடையில் எடுபிடியாகவும் இருந்தான்!”

 

இப்படி டக்ளஸ் பேசி முடிந்தவுடன் ஒரே கரகோசம்!

 

லிங்கனா சளைப்பார்? அவர் சொன்னார்:’

 

“மாண்புமிகு டக்ளஸ் சொன்னது எல்லாம் உண்மை. எள்ளளவும் பிசகில்லை! நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்; பஞ்சு விற்றேன்; சுருட்டு விற்றேன்; மெழுகு வர்த்தி வியாபரமும் செய்தேன்; சில நேரங்களில் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விஸ்கியும் விற்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் டக்ளஸ், ‘கவுண்ட’-ருக்கு எதிர்ப் பகுதியில் நின்று என்னிடம் பொருள்களும் வாங்கியது உண்மையே; ஆனால் இப்பொழுது என்ன நிலை?

 

‘கவுண்ட’–ருக்கு அந்தப்புறம் நின்று பொருள்களை விற்ற நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். உங்களுக்கே தெரியும். ஆனால் மதுபானக் கடையில் என்னிடம் ‘கவுண்ட’’-ருக்கு எதிர்ப்புறத்தில் நின்று என்னிடம் விஸ்கி வாங்கிக் குடித்தாரே அவர் மட்டும் அந்தப் பகுதியை விட்டு இன்று வரை விலகவே இல்லை! அது மட்டுமல்ல, அதிபயங்கர விசுவாசத்தோடு அக்கடையை விட்டு அகலுவதே இல்லை என்றார்.

 

பொதுக்கூட்ட மண்டபத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு கரவொலி எழுந்தது!

 

Xxxx

m twain

மார்க் ட்வைனின் சூடான பதில்!

(சாமுவேல் லாங்ஹார்ன் க்ளெமென்ஸ் என்பவரின் புனைப் பெயர் மார்க் ட்வைன். சிறந்த அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர், நாவலாசிரியர், நகைச் சுவைப் பேச்சாளர்)

 

ஒருநாள் அவரும் வில்லியம் டீன் ஹவல்ஸ் என்ற பிரமுகரும், சர்ச்சிலிருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கன மழை கொட்டியது.

 

ஹவல்ஸ்: “ சாமுவேல் இந்த மழை நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

சாமுவேல் (மார்க் ட்வைன்):- எனக்குத் தெரிந்தவரை மழை, எப்போது பெய்யத் துவங்கினாலும் நின்று போய் இருக்கிறது!

–என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

 

மழையில் சொன்னாலும், இ துவும் சூடான பதில்தான்!

 

–subham–

 

 

மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3 (Post No.3048)

BlackBuckAntelope

black buck antelope

Research Article Written by london swaminathan
Date: 10th August 2016
Post No. 3048
Time uploaded in London :– 17-12
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! – Part 3

உலகின் முதல் சட்டப் புத்தகமாகிய மனு ஸ்ம்ருதி யாருக்காக எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது என்பதெல்லாம் அந்த நூலிலேயே நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் மூன்று மர்மங்கள் இருக்கின்றன: கங்கை நதி மர்மம், சரஸ்வதி நதி மர்மம், கறுப்பு மான் மர்மம்.
ஒவ்வொன்றாகக் காண்போம்.

மனு சொல்கிறார்:–
இரண்டு தெய்வீக நதிகளான சரஸ்வதி, த்ரிஷத்வதி ஆகியவற்றின் இடையே இறைவனால் உருவாக்கப்பட்ட பூமி பிரம்மாவர்த்தம் எனப்படும் (வேத பூமி)
மனு 2-17
வேத பூமியை அடுத்துள்ள குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன நாடுகள் பிரம்மரிஷி தேசம் எனப்படும்.
மனு 2-19

 

25d24-talageri-rivers

எனது கருத்து:–

ஜீவ நதியான சரஸ்வதியைக் குறிப்பிடுவதால் அவர் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். சரஸ்வதி ஆறு வற்றிப் போய் 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் கங்கை நதியை விட்டுவிட்டு வேறு இரண்டு நதிகளை தெய்வீக நதிகள் என்று சொல்லுவதிலிருந்து இந்த நூல் வேத கால நூல் என்று தெரிகிறது. மேலும் ஒரு அதிசயமான ஒற்றுமை அவர் சொல்லும் பூமிகள், சிந்து சமவெளி நாகரீக பூமியாகும். ஆக வேத காலமும், சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று என்று கருத இடமுண்டு.

கீழைக்கடல் முதல் மேலைக் கடல் வரையுள்ள, இரண்டு மலைகளுக்கு (இமயமும்,விந்தியமும்) இடைப்பட்ட பூமி, ஆர்யாவர்த்தம் எனப்படும்.
மனு 2-22

(ஆர்ய என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்திலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பண்பாடுடைய மக்கள், வடக்கில் இமய மலையில் வாழும் தவசீலர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. இது கு றித்த எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க)

எங்கு கிருஷ்ண மிருகம் எனப்படும் கறுப்பு மான்ன்கள் காணப்படுகின்றனவோ அந்த இடமெல்லாம் யாக யக்ஞங்கள் செய்வதற்குரிய பூமி. அதற்கப்பாலுள்ள இடமெல்லாம் மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர், பண்பாடற்றவர்) பூமி.
மனு 2-23

வெளிநாட்டினர் சதி:–
மனு ஸ்மிருதியை மொழிபெயர்த்த வெளிநாட்டுச் சதிகாரகளும், அரைவேக்காடுகளும் வேண்டும் என்றே ஆரிய, மிலேச்ச என்ற சொற்களை அப்படியே வைத்துக்கொண்டனர். ஏனெனில் இரண்டுக்கும் இப்போது கெட்ட, தவறான பொருள் கையாளப்படுகிறது. இதை வைத்து மக்களைக் குழப்பலாம் என்பது அவர்கள் செய்த சதி.
மிலேச்ச (யவன) என்பதை அராபியர், ரோமானியர், கிரேக்கர் என்ற பொருளிலேயே 2000 ஆண்டுப் பழமையான பழந்தமிழ் இலக்கியமும் அதற்கு முந்தைய சம்ஸ்கிருத இலக்கியமும் பயன்படுத்துவதை உரைகளிலும், முதல் நூல்களிலும் காணலாம் (மிலேச்ச/ யவனர் பற்றிய எனது முந்தைய ஆய்வுக்கட்டுரைகளில் ஆதாரங்கள் உள).

 

ganges-map-simple

கங்கை நதி மர்மம்

சங்க இலக்கியத்தில் கங்கயின் புனிதத்தை தமிழர்கள் போற்றுவர். இது 2000 ஆண்டுக்கு முந்தியது. ஆனால் மனுவோ கங்கையின் புனிதம் பற்றிப் பேசாமல் சரஸ்வதி நதியின் புனிதத்தைப் போற்றுகிறார். ஏன்?

சரஸ்வதி வற்றி, மறைந்து போன பின்னர்தான் கங்கையின் புகழ் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம் அல்லது உலகின் முதல் நீரியல் விஞ்ஞானி, எஞ்சினீயர் பகீரதன் கங்கையை, இப்போதுள்ள கங்கைச் சமவெளிக்குப் திசை திருப்பிய பின்னர் அதன் புகழ் பரவி இருக்கலாம். அதற்கும் முந்தையது சரஸ்வதியும் வேத காலமும்.

பகீரதன் யார்?
ரிக் வேதம் குறிப்பிடும் வைவஸ்வத மனு எட்டாவது மனு. அவருக்கு அடுத்து வந்தவன் இக்ஷ்வாகு. அவனுடைய சூரிய குலத்தில் 54 ஆவது மன்னன் பகீரதன். மாபெரும் பொறியியல் வல்லுநன். பல மன்னர்கள், கங்கையை திசை திருப்பி நீர்ப்ப சனம் செய்ய முயன்றனர்; தோல்வியுற்றனர். ஆனல் பகீரதன் தனது எஞ்சினீயரிங் திறமையால கங்கையத் திசை திருப்பினான். இந்தியாவின் பழங்கால எஞ்சினீயர்கள் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

இந்த பகீரதன் இட்சுவாகுவுக்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவன். அப்போதுதான் கங்கையின் பெருமை உலகிற்குத் தெரிந்தது என்றும் கொள்ளலாம். ஆக மனு , கங்கயின் பெயரைச் சொல்லா ததன் மர்மம் துலங்கிவிட்டது. மனுச் சக்ரவர்த்தி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். இட்சுவாகுவோ சிந்து சம்வெளிக்கும் முன்னர் வாழ்ந்தவன். அதியமானை கரும்பு கொண்டுவந்தவனின் வழித்தோன்றல் என்று அவ்வையார் புகழ்வது ஏன்? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

yavana-in-bharhut

மிலேச்சனின் படம்

கறுப்பு மான் மர்மம்

இரலை என்றும் கலைமான் என்றும் போற்றப்படும் கறுப்புமானுக்கு மனு கொடுக்கும் முக்கியத்துவம் வியப்புக்குரியது. அது இருக்கு மிடத்தில்தான் இந்துக்கள் வாழலாம் என்கிறார். ஆனால் கறுப்பு மானோ இன்றும் இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் உள்ளது ஆக தமிழ் நாடும் யாக பூமியே, வேத பூமியே. பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி முதலிய தமிழ் மன்னர்கள் இதற்கு எடு த்துக்காட்டு.

இதைவிட அதிசயம்! சிந்து சமவெளியில் இந்த வகை மானின் எலும்புகள் கா ப்படுகின்றன. வேத கால முனிவர்கள் இதை ஆஸ்ரமங்களில் வளர்த்ததை புற நானூறும், காளிதாசன் காவியங்களும் விதந்து
ஓதுகின்றன. ஆகவே சிந்து சமவெளியில் வேத முனிவர்கள் ஆசிரமங்களை வைத்து மான்களை வளர்த்தமையும் வெள்ளிடை மலையென விளங்கும்!
–Subham–

 

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்! (Post No.3040)

rupee6

Written by london swaminathan

Date: 6th    August 2016

Post No. 3040

Time uploaded in London :– 13-18

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதம் இப்பொழுது வழங்கும் மொழிகளிலேயே மிகவும் பழமையானது; மிகவும் வளமானது. இதற்கு அருகில் வரக்கூடிய மொழிகள் இன்றைய உலகில் இல்லை. சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயமே இல்லை. கிரேக்க மொழி இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் அதில் கி.மு.800 முதலே இலக்கியங்கள் கிடைக்கும். தமிழோ இதற்கு மிகவும் பிந்தியது. கி.மு. முதல் நூற்றாண்டு முதல்தான் இலக்கியங்கள்! சீன மொழியும், எபிரேய (ஹீப்ரு) மொழியும், லத்தீன் மொழியும் தமிழைவிட மூத்த மொழிகள்; ஆனால் சம்ஸ்கிருதம் அளவுக்கு வளம் நிறைந்தவை அல்ல!

 

இந்தியாவிலுள்ள எவரும் சம்ஸ்கிருதச் சொல் இல்லாமல் ஐந்து நிமிஷம்கூடப் பேச முடியாது. அப்படி கஷ்டப்பட்டு பேச முயற்சித்தால் எதிரே உள்ளவருக்கு விளங்காது!!!

 

மொழிகள் பற்றி நாம் எதைச் சொன்னாலும் அதற்கு ஆதாரம், சான்று இருக்கிறதா? என்று கேட்கவேண்டும். சம்ஸ்கிருத மொழியில் கி.மு.1400 முதல் கல்வெட்டுகளும், இலக்கியமும் உள்ளன. தமிழ் மொழியில் கி.மு.300 முதல் கல்வெட்டுகளும் கி.மு.100 முதல் இலக்கியங்களும் உள்ளன. (எனது முந்தைய கட்டுரைகளில் விவரங்கள் உள)

 

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த கரங்கள் என்பன கூட சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான் போலும்!

Currency-of-the-world-006

பணம் எத்தனை வகை? சம்பாதிக்கும் முறை எத்தனை வகை? என்பதை கீழ்க்கண்ட சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும்:–

தனமூலா: க்ரியாசர்வா அதஸ்தஸ்யார்ஜனம் மதம்

வர்தனம் ரக்ஷணம் போக இதி  தஸ்ய விதி: க்ரமாத்

 

தத் புனஸ் ச த்ரிவிதம் ஞேயம் சுக்லம்  சபலமேவ ச

க்ருஷ்ணம் ச தஸ்ய விஞேய: ப்ரபேதஸ்சப்ததா புன:

 

ச்ருதசௌர்யம் தப: கன்யா  யாஜ்ய சிஷ்யா அன்வயாகதம்

 

தனம் சப்தவிதம் சுக்லம் உதயோப்யஸ்ய தத்வித:

குசீத க்ருஷிவாணிஜ்ய சுல்க சில்பானு வ்ருத்திபி:

 

க்ருதோ உபகாராதாப்தம் ச சபம்லம் சமுதாஹ்ருதம்

பார்ஸ்வகத்யூத தைன்யார்த்தீ ப்ரதிரூபக சாஹசை:

 

வ்யாஜேனோபார்ஜிதம் யச்ச தத் க்ருஷ்ணம் சமுதாஹ்ருதம்

யதா விதேன த்ரவ்யேன பக்திசேஹகரோத்யயம்

 

தத்விதம் பலமாப்னோதி தத்பலம் ப்ரேத்யசேஹ ச

 

 currencies

பொருள்:–

எல்லா காரியங்களுக்கும் பணம் வேண்டியிருப்பதால் அதை சம்பாதிப்பது இன்றியமையாதது.

 

சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுதல், அதை முதலீடு செய்து அதிகரித்தல், செலவு செய்து அனுபவித்தல் என்று மூன்று வகை இருக்கிறது.

 

அவை ஒவ்வொன்றும் சுக்லம்/வெள்ளை, சபலம்/புள்ளி அல்லது கறை, க்ருஷ்ணம்/கறுப்பு என்று பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் மீண்டும் ஏழு விதங்களாகப் பிரிக்கப்படும்;

 

கல்வி, வீரதீரச் செயல், தவம், கன்யாதானம் (சீதனம்), யாகம் செய்வித்தல், சிஷ்யபரம்பரையாகக் கிடைத்தல் (குருதட்சிணை) , புதையல்  ஆகிய வரும்படி வெள்ளைப் பணம் (சுக்லம்)

 

வட்டி, விவசாயம், வியாபாரம், சுங்கவரி, கலைகள், உபதொழில்கள், உதவி செய்தமைக்காகக் கொடுக்கப்படும் பணம் (கையூட்டு) என்ற வகை வரும்படிகள் புள்ளி அல்லது கறையுள்ள வரும்படி;

 

தொண்டூழியம் (அடிமைத் தொழில்), சூதாட்டம் (லாட்டரி), பிறரை வருத்தி பொருளீட்டல், கெட்ட வழிகளில் பொருளீட்டல், ஆள்மாறாட்டம், சாகசச் செயல்கள், கடைத்தர வியாபாரம் (ஏமாற்று, மோசடி) ஆகிய வகை வரும்படி கறுப்பு வருமானம்.

 

யார் யார் எவ்வெவ்வகையில் சம்பாதிக்கின்றனரோ அந்தந்த பலனை அனுபவிப்பர்.

–Subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11 (Post No.3039)

buddha museum

Article Written S NAGARAJAN

Date: 6th  August 2016

Post No. 3039

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11

ச.நாகராஜன்

 

சிரித்தவாறே விடை பெற்ற ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்து டெங்சாங் என்ற இடத்தை அடைந்தார். அது பர்மாவின் எல்லையில் உள்ள நகரம். அங்கு தனது ஆலயத்திற்காக நிதி திரட்ட முனைந்தார் ஸு யுன்.

 

ஹுனான் கில்ட் ஹால் என்ற இடத்தில் தன் பைகளை அவர் வைக்கும் முன்னரே சிலர் அவரிடம் வந்து அவரை வணங்கினர்.

 

“பூஜ்யரே! எங்களுக்கு சூத்ரங்களைக் கேட்க ஆவலாக உள்ளது” என்றனர்.

 

“இங்கு சூத்திரங்களைச் சொல்வதற்காக நான் வரவில்லை” என்றார் ஸு யுன்.

“உங்களைப் போன்ற துறவிகள் சூத்திரங்களைச் சொல்வது வழக்கம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார் அவர்களில் ஒருவர்.

 

“இந்தப் பகுதியில் உள்ள துறவிகளின் பழக்கம் பற்றி நான் ஒன்றுமே அறியேன்” என்றார் ஸு யுன்.

 

உடனே கில்ட் ஹாலின் தலைவர் இடைமறித்துக் கூறினார்”

“அன்புள்ள ஐயா! நீங்கள் இவர்களுக்காக சூத்திரங்களை நிச்சயம் சொல்ல வேண்டும். இவர்கள் புனிதர் என்று அழைக்கப்படும் ‘வூ’ வின் வம்சாவளியினர். அவர் 80 வயது வரை வாழ்ந்தவர். பல டஜன் குழந்தைகளைப் பெற்றவர்.  அவ்ர்களில் பல பண்டிதர்கள் உண்டு. அந்தப் பெரியவர் சில நாட்களுக்கு முன்னர் தான் காலமானார். இறப்பதற்கு முன்னால் தான் முன் பிறப்பில் ஒரு துறவியாக இருந்ததாகவும், தான் இறந்த பின் துறவிக்குரிய ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள யாரும் அழக்கூடாது என்றும் எந்த ஒரு மிருகத்தையும் இறந்ததையொட்டி விருந்திற்காகக் கொல்லக் கூடாது என்றும், அங்கிருக்கும் டாயோயிஸ்ட் பண்டிதர்கள் யாரையும் ஈமச் சடங்கிற்காக அழைக்கக் கூடாது என்றும் கூறினார்.

 

 

ஒரு பெரிய துறவி இங்கு வருவார் என்றும் அவர் தன்னை  முக்தி பெறச் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டவுடன் மறைந்த அந்தப் புனிதரின் இல்லத்திற்கு வர சம்மதித்து ஸு யுன் அங்கு சென்று அவரின் ஆன்மா சாந்தியடையவும் பசியோடிருக்கும் ஆவிகளின் பசிக்கு உணவாகவும் சூத்திரங்களை ஓதினார்.

gautam-buddha-PZ98_l

அந்த மாவட்ட அதிகாரிகள் அனைவரும் ஒருங்கு திரண்டு வந்து ஸு யுன்னிடம் அவர் அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினர்.

ஆனால் ஸு யுன் தான் காக் ஃபுட்டில் உள்ள ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிதி திரட்டவே அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

 

இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள் கணிசமான நிதியைத் திரட்டி அவரிடம் கொடுத்தனர்.

 

ஸு யுன் தனது மலைக்குத் திரும்பினார். அங்கு ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தார். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி வழங்கினார். அவர்களுக்குத் தியானப் பயிற்சியை அளித்து ஒழுக்க முறைகளைக் கற்பித்தார்.

 

புத்தமத நெறிகளை போதித்தார்.

 

அந்த வருடம் ஆண் பெண் என இருபாலார் மற்றும் துறவிகள் என்று எண்ணிக்கை எழு நூறைத் தாண்டியது.

இந்த ஆலயத்தின் நெறிகளையும் செயல்பாட்டையும் பார்த்த ஏனைய மலையில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் இதே நெறிகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தொடங்கின.

 

 

துற்வற ஆடைகளை முறைப்படி அங்குள்ள துறவிகள் அணிய ஆரம்பித்தனர்.

 

அனைவரும் ஸு யுன்னிடம் வந்து அவரது ஆலயத்தில் தங்கி அவரது போதனைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

 

ஸு யுன்னுக்கு 65 வயது நிறைவடைந்தது.

***********.