கடலில் தோன்றும் மர்மத் தீ-1

Picture shows Fire Tornado on land. It lasted for 40 minutes in Alice Springs, Australia.

(கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன. இந்த இரண்டு பகுதிகள் அடங்கிய கட்டுரைத் தொடரில் அது பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறேன்- லண்டன் சுவாமிநாதன்)

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

 

“Siva’s fiery wrath must still burn in you

Like Fire smouldering deep in the ocean’s depths

Were it not so, how can you burn lovers like me,

When mere ashes is all that is left of you?” –Sakuntala of Kalidasa III-3

 

லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்?

1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் இப்போது உலகம் முழுதும் செய்திப் பறிமாற்றம் அதிகரித்துள்ளதால் நாமே ஒப்பிட்டுப் பார்த்து ஊகித்தறிய முடிகிறது.

இதோ 1977ம் ஆண்டு மதுரை தினமணியில் வெளியான செய்தி:

மலை அலையில் கண்ட பெருந் தீ!

பிழைத்தோர் கூறும் அதிசயத் தகவல்கள்!!

விஜயவாடா, நவ.29:- ஆந்திரப் பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். இந்த தாலுகாவில் மத்திய நிபுணர் குழு ஒன்று சுற்றுப் பயணம் செய்தபோது, வெள்ளத்தில் உயிர்தப்பிய பல மீனவர்களும், கிராம வாசிகளும் நிபுணர்களைச் சந்தித்து மலை மலையாக அலை கிளம்பிய சமயம் தீ ஏற்பட்டதாகவும், காது செவிடுபடும்படியான பெருத்த சப்தம் ஏற்பட்டதாகவும் அது வெடிச் சப்தம் போல இருந்ததாகவும் கூறினர். இது நிபுணர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

அலைகளில் இருந்து நெருப்பு ஜ்வாலை கிளம்பியதாகவும் அலைகள் மீது இந்த நெருப்பு தோன்றிய பின்னர்தான் அந்த பேரலைகள் தணிந்ததாகவும் கிராமவாசிகள் கூறினர்.

உஷ்ணமண்டலப் பகுதிகளில் புயல் வீசும்போது அதன்விளைவாக வெளியிடப்படும் சக்தி 200 ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் சக்திக்குச் சமம் என்று குறிப்புகளில் காணப்படுவதாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்தவரும், மத்தியக் குழுவில் இடம்பெற்றவருமான என்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.

ஆகவே மனிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவைப் புயல் தாக்கியபோது உண்டான சக்தியால் தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற மூலகங்களாகச் சிதைந்து அதன் மூலம் நெருப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கிருஷ்ணன் கூறினார். இது கடல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டிய விஷயம் என்றும் அவர் சொன்னார்.

1864ல் மச்சிலிப்படிணத்தைப் புயல் தாக்கியபோதும் இதேபோல அலைகளினூடே நெருப்பு தோன்றியதாக கிழக்கிந்தியக் கம்பெனி ரிகார்டுகளில் காணப்படுகிறது என மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 3-12- 1977 தினமணியில் வந்த செய்தி இதோ:-

கடலில் தோன்றிய மர்மத் தீ என்ன?

மின்சார நிகழ்ச்சியாக இருக்கலாம் என நிபுணர் கருத்து

புதுடில்லி, டிச.2:- ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது. ஆனால் மத்திய அதிகாரி ஒருவர் கூறியது போல ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் என்று பிரிய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினார்கள்.

கடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.

பெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.

இதோ 28-11-1977 தினமணி, மதுரைப் பரப்பில் வந்த மற்றுமொரு செய்தி.

அந்த எமன் அலை!

விஜயவாட, நவ.26:- சென்னையை பயமுறுத்திவிட்டு கடந்த 19ம் தேதியன்று ஆந்திராவைப் புயல் தாக்கியபோது, கிருஷ்ணா மாவட்ட திவி தாலுகாவை விழுங்க முற்பட்ட ராட்சதக் கடல் அலையின் அளவுபற்றி இப்பொழுது தெரியவரும் மதிப்பீட்டைப் பார்க்கும்போது அங்கு கிட்டத்டட்ட ஒரு பிரளயமே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.

கடலில் இருந்து 27 ஆயிரம் கோடி கன அடி நீர் அப்படியே சுவர் போல மாபெரும் அலையாகக் கிளம்பியது. 50 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 19 அடி உயரமும் இருந்த இந்த அலை மணிக்கு 120 மைல் வேகத்தில் கரையைத் தாக்கியது

இந்த அலை தாக்கியபோது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தில் 80 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் மடிந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேலான கால நடைகள் இறந்தன. சுமார் 150 கிராமங்களும் குக் கிராமங்களும் சுவடே இல்லாமல் அழிந்தன.

கடலில் இருந்து பத்து மைல் தூரத்துக்கு உள்ளே வந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த அனைத்தையும் இந்த அலை பந்தாடிவிட்டது.. எருமைகள், காளை மாடுகள் ஆகியவற்றின் சடலங்கள் 20 அடி உயரத்தில் இருந்த மரக் கிளைகள் மீது தொங்கிக் கொண்டிருந்தன. இதிலிருந்து அலைகளின் கோர தாண்டவத்தை அறிய முடிகிறது”.

இந்த தினமணிச் செய்திகளைப் படிக்கும்போது குதிரை முகம் கொண்ட வடமுகாக்னி என்னும் ஊழித்தீயும் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த தென் மதுரை, கபாட புரம் ஆகிய நகரங்களைக் அழித்த கடற்கோளும் நம் மனக் கண்முன் தோன்றுகின்றன.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஊழித் தீ பற்றி தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கூறுவது என்ன? இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன? என்பதைக் காண்போம்.

தொடரும்…………………..

அபூர்வ வலம்புரிச் சங்கு

Contact swami_48@yahoo.com for more details

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இரண்டு வகையும் கடலில் வாழும் சங்கு இனப் பிராணிகள்தான். ஆனால் இந்துக்கள் என்ன காரணத்தால் வலம்புரிச் சங்குகளைப் புனிதமாகக் கருதுகின்றனர் என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வ காரணமும் கிடைக்கவில்லை. இவைகள் அபூர்வமாகக் கிடைப்பதாலும் விஷ்ணுவின் கையில் இருப்பதாலும் தெய்வப் பட்டம் சூட்டினரா என்றும் தெரியவில்லை.

வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய நூல்களில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது பல கோவில்களில் நடைபெறுகிறது.

சங்குகளின் பெயர்கள்

கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’; பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.

16-08-1978 தினமணிப் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு : அரைக் கிலோ வலம்புரிச் சங்கு

“ சென்னை, ஆக. 14:- வலம்புரிச் சங்குகள் கிடைப்பது அபூர்வம். பெரிய உருவமுள்ள வலம்புரிச் சங்குகள் கிடைப்பது அதைவிட அபூர்வம். 2 வாரங்களுக்கு முன் ராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருப்பாலக்குடிக்கு அருகில் கடற்கரையில் 485 கிராம் எடையுள்ள வலம்புரிச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. இது இப்பொழுது தமிழ்நாடு மீன்வள வளர்ச்சி வாரிய திட்டத்திடம் இருக்கிறது. இது 40,000 ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். இதை கீழக்கரைவாசி ஒருவர் 20,000 ரூபாய்க்கு வாங்க முன்பணம் செலுத்தினார். ஆனால் சங்கு குளிப்பது அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டதால் அதை அரசிடம் ஒப்படைக்க நேரிட்டது. சாதாரண சங்குக்கு ஒரு ரூபாயும் வலம்புரிச் சங்குகளுக்கு ஆயிரம் ரூபாயும் அரசு தரும். இதற்கு முன் தமிழ்நாட்டுக் கடற்கரையில் 16 ஆண்டுகளுக்கு முன் வலம்புரிச் சங்கு கிடைத்தது.”

இந்தச் செய்தியைப் படிக்கையில் வலம்புரிச் சங்குகளின் அபூர்வத் தன்மை ஓரளவு புரிந்திருக்கும். அப்போது ரூ.40,000 என்பது இப்போது ரூ. 4 லட்சத்துக்கும் மேலாக இருக்கும்.

சங்க இலக்கியத்தில் வலம்புரிச் சங்கு

தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வலம்புரிச் சங்கு பற்றிப் புலவர்கள் பாடுகின்றனர். அரண்மனைகளிலும் போர்க்களங்களிலும் எப்படி ஒலித்தது என்பதை பின்வரும் இடங்களில் படிக்கலாம்:

அக.201, 350; ஐங்குறு.193; கலி.135; திரு.23, 127; நெடு. 142, பதி. 67, பரி. 3-88, 13-44, 15-59; புற225, 397;பெரு.35; முல்லை.2

தருமி என்னும் ஏழைப் பிராமணப்  புலவருக்குச் சிவபெருமான் பாட்டு எழுதிக் கொடுத்து அவன் ஆயிரம் பொன் பரிசு பெறும் தருணத்தில் அதை பாண்டியப் பேரரசின்  தலமைப் புலவர் நக்கீரர் எதிர்த்தார். உடனே நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் வெடித்தது. அப்போது “சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?” என்று சிவபெருமானின் குலத்தையே கிண்டல் செய்தார் நக்கீரர். இதிலிருந்து வேளாப் பார்ப்பான் ( அக்கினி வளர்த்து யாகம் செய்யாத பார்ப்பனர்கள்) சங்கு வளையல் செய்து விற்றுவந்தது தெரிகிறது. இதற்குப் பின்னர் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை வாட்டிய போதும் “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தமிழுக்காக வீர முழக்கம் செய்தார் சங்கு அறு தொழிலில் ஈடுபட்ட நக்கீரன்.

இவ்வளவு இடங்களில் வலம்புரிச் சங்கைக் குறித்துப் புலவர்கள் பாடுவதே அதன் மகிமையை உணர்த்தும்

திருமணத்தில் சங்கு

வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது

சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரும் விஷயங்களைத் தருகிறார்: சங்க ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.

“ ஏ, பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “ என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.

சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”

தட்சிணாவர்த்த(வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.

உலகின் பல மியூசியங்களில் தங்கக் கவசம் போடப்பட்ட சங்குகளை வைத்திருக்கின்றனர். இவை இந்தியக் கோவில்களில் இருந்து சென்றவை. பணக்கரர்கள் பல லட்சம் கொடுத்து வலம்புரிச் சங்கு வாங்குவதற்குக் காரணம் அவை அதிர்ஷ்டகரமானவை, நிறைய பணத்தைக் கொண்டு வருபவை என்று நம்புவதே.

தென் ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைக்கும் சில வகைச் சங்குகள் வலம்புரியாக இருந்தும் அவை இந்தியவகை போன்று புனிதமானவையோ விலை மதிப்புடையனவோ அல்ல.

பவுத்தர்களும் சங்கை புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று. ஆயுர்வேதத்தில் சங்குப் பொடியைப் பயன்படுத்துகின்றனர். சீனவிலிருந்தும் திபெத்திலிருந்தும் வரும் தங்கப் பிடி போட்ட சங்குகள் வெளிநாட்டு ஏலக் கம்பெனிகளில் பல லட்சம் பவுன் அல்லது டாலர்களுக்கு ஏலம் விடப்படுகின்றன

லண்டனில்உள்ள பிரிட்டிஷ்மியூசியம், நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிடன் மியூசியம் முதலியவற்றில் அரிய சங்குகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர். திருவாங்கூர் மகாராஜா கொடியிலும் கூட சங்கு இடம்பெற்றது. Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே!

முத்து, பவளம் ஆகியவும் கடலில் இருந்தே கிடைக்கின்றன. சோழிகளில் குறிப்பிட்ட வகையை ஒருகாலத்தில் பணமாகப் பயன்படுத்தினர். இவைகளும் கடல் தரும் செல்வங்களே.

 

 

விசாகம்! – 2: நட்சத்திர அதிசயங்கள்

 

 

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 2

ச.நாகராஜன் 

அக்னியும் இந்திரனும் அதி தேவதைகள் 

இனி விசாகத்துடன் தொடர்புடைய ஏராளமான புராணக் கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம். விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகள் அக்னியும் இந்திரனும் ஆவர். மஹாபாரதத்தில் மார்க்கண்டேயர் பஞ்ச பாண்டவர்களுக்கு (வன பர்வம் 200வது அத்தியாயம்) ஒரு அற்புதமான கதையைக் கூறுகிறார். அது சிபி சக்கரவர்த்தியின் சரித்திரம். உசீனர தேசத்தை ஆண்டு வந்த சிபி சக்கரவர்த்தியின் மடியில் ஒரு நாள் திடீரென்று புறா ஒன்று வந்து விழுந்தது.”அடைக்கலம். ராஜாவே, அடைக்கலம். என்னைக் காப்பாறுங்கள்” என்று சரணடைந்தது. அதைத் துரத்தி வந்த கழுகு சிபியிடம் வந்து, “அரசே! நான் துரத்தி வந்த இரை அது. அதை எனக்கு விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது. சிபி தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டார். கழுகிடம் புறாவை விட்டு விடுமாறு வேண்டினார். “:எடைக்கு எடை உன் சதையைத் தருவதானால் நான் புறாவை விட்டு விடுகிறேன்” என்று கழுகு கூறியது.மகிழ்ச்சியுடன் அதற்கு இணங்கிய சிபி தன் ஒரு பக்கத்துத் தொடையை அறுத்து  பெரிய தராசின் ஒரு பக்கத்தில் வைத்து மறு பக்கத்தில் புறாவை வைத்தார்.புறாவின் எடை கூட இருந்தது. தயங்காமல் தன் மறு பக்கத் தொடையையும் அறுத்து தராசில் சிபி வைத்தார்.இன்னும் புறாவின் எடை கூடவே இருந்தது.சிபி தானே ஏறி தராசில் நின்றார்.அவரது இந்தத் தியாகம் உலகையே பிரமிக்க வைத்தது! அவரது தியாகத்தைக் கண்டு வியந்த புறா, “நானே அக்னி!கழுகாக வந்தது இந்திரன்!வாழ்க உன் பெருமை” என்று கூறி வாழ்த்தியது. இந்திராக்னி தராசில் வைத்து நிறுத்திய மன்னன் உலக மக்களின் மனத் தராசில் அதிக எடையைப் பெற்றுக் காலம் காலமாகப் புகழப் படுகிறான்.

தராசில் நிறுத்தல், விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரன், அக்னியால் சோதிக்கப்படுதல் என்ற இந்தச் சம்பவம் துலா தராசியின் சின்னமான தராசையும் துலா ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தையும் நினைவு படுத்துகிறது.விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரனும் அக்னியும் கழுகாகவும் புறாவாகவும் சிபியை தராசில் சோதிக்கும் போது நீதியின் கோட்பாடுகள் பிரித்துணரப்படுகிறது!பல தொடர்புகளை சங்கிலி போலப் பிணைக்கும் விசாகம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

முருகனின் பெருமை

இன்னொரு கதையையும் இங்கு பார்க்கலாம்.ஒரு முறை அக்னி, கங்கை, சிவன், பார்வதி ஆகிய நால்வருமே முருகன் மீது உரிமை கொண்டாட சிவன், “குழந்தை யாரை முதலில் பார்க்கிறான் என்று பார்ப்போம்” என்றார். கார்த்திகை மாதர் மடியிலே இருந்த முருகனோ வந்த நால்வரின் உளக் கருத்தையும் நன்கு அறிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார். தன்னை நான்கு உருவங்களாக ஆக்கிக் கொண்டார். குமரன், விசாகன்,சாகா,நைகமேயன் என்ற அந்த நால்வருள் குமரன் சிவனிடமும், விசாகன் பார்வதியிடமும்,சாகா கங்கையிடமும்,நைகமேயன் அக்னியிடமும் விரையவே அனைவருமே மன மகிழ்ந்தனர். “பல்வேறு பெயர்களுடன் திகழ்ந்து நீ அனைவருக்கும் அருள் பாலிப்பாயாக”, என்று சிவன் வாழ்த்துவதாகக் கதை முடிகிறது. இப்படி விசாக நட்சத்திரத்திற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எழுத தனி நூலே வேண்டும்!

ராதையின் அற்புத வான நடனம்

அடுத்து ராதா என்ற பெயருடைய இந்த நட்சத்திரம் பற்றிப் பல நிகழ்வுகள் உண்டு. ராதை கிருஷ்ணனுடன் ஆடும் நடனம் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் விஞ்ஞானிகளாலும் கூட வானில் ஆடும் ராதையின் நடனம் கொண்டாடப்படுகிறது; பெரிதும் வியக்கப்படுகிறது! ஆகாயத்தில் பால்வீதி மண்டலத்தில் கண் சிமிட்டி நடனமாடும் லட்சக்கணக்கான  நட்சத்திரங்களையும் , கிருஷ்ண-ராதா நட்சத்திரங்களையும் வானவியல் அறிஞர்களும் மஹா கவிகளும் வியந்து புகழ்ந்து பாடியுள்ளனர். மில்கி வே என்ற பால்வீதி மண்டலத்தில், ஒளி வெள்ளத்தில் மிதக்கும் தாரகைகள் பளிச்சிடும் வான வீதியில், நிகழும் நட்சத்திர நடனம் தங்களின் வர்ணனைக்கு அப்பாற்பட்ட பேரொளி என்று தங்கள் தோல்வியை அவர்கள் மனமார ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நூற்றுக் கணக்கான அற்புத கவிதைகளில்  கண்ணனையே ரசித்து அவனையே அனுபவித்து அவனிலேயே உயிர் வாழ்ந்த லீலாசுகரின் கிருஷ்ணகர்ணாம்ருத (3-2) பாடல் ஒன்றை மட்டும் (பதங்கள் சுலபமாக அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது) மாதிரிக்காக இங்கு பார்த்து மகிழ்வோம்:

ராதா ஆராதித விப்ரம அத்புத ரஸம் லாவண்ய ரத்னாகரம்                     ஸாதாரண்ய பத வ்யதீத ஸஹஜ ஸ்மேர ஆனன  அம்போருஹம் I                ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா ஸர்வஸ்வ நிர்வாபணம்                           பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷிக்தம் மஹII

“ராதையினால் போற்றப்பட்ட ஆச்சரியமான சிருங்கார ரஸத்தை உடையதும் அழகின் கடல் போன்றதும் சாதாரண நிலையைக் கடந்து இயற்கையாகவே புன்முறுவல் பூத்த முகமாகிய தாமரை உடையதும் இந்த்ர நீலமணியின் பெருமையையும் கர்வத்தையும் தனது காந்தியால் அழிப்பதும் குழலுடன் கூடியதும் ஒப்புயர்வற்ற அழகினால் மனதிற்கு இனியதும் தலை சிறந்ததும் குழந்தை வடிவானதும் ஆகிய பேரொளியை வழிபடுகின்றேன்” என்பது இதன் பொருள்.

ராதை என்றாலேயே மகிழ்ச்சி என்று பொருள்!

இனி உலக நாகரிகங்களெல்லாம் வியக்கும் நட்சத்திரமாகவும் இது விளங்குகிறது. துலாம் என்ற வார்த்தையின் திரிபான துல்கு என்ற வார்த்தையால் தங்களின் ஏழாவது மாதத்தைப் பெயரிட்டு அசிரியர்களும்  அகடியர்களும் இதைக் கொண்டாடி வந்தது  குறிப்பிடத்தகுந்தது. ஆல்பா, பீடா லிப்ரா எனப்படும் இரு நட்சத்திரங்களே அறிவியல் குறிப்பிடும் இரு துலா ராசி நட்சத்திரங்கள். மூன்றாம் மாக்னிட்யூட் நட்சத்திரங்கள் இவை.வேதங்களின் கூற்றுப்படியும் விசாகம் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டதாகும்.ஸ்வாதியின் கிழக்கில் அமைந்துள்ளதாக இதை நமது நூல்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

ராதா அல்லது விசாகம் கவட்டை போன்ற அல்லது செடி அல்லது மரக்கிளை போன்ற அமைப்பைக் கொண்டது. இது தோரணம் போன்ற அமைப்பை உடைய நான்கு நட்சத்திரங்கள் என்றும் சிலர் கூறுவர். இந்த நான்குமே ஒரு தராசைச் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் கூறி மகிழ்வர்.ராதை என்ற சொல்லுக்கே மலர்ச்சி, மகிழ்ச்சி,வெற்றி ஆகிய அர்த்தங்கள் உண்டு. சக்தி,வலிமை,முயற்சியின் அடிப்படையிலான வெற்றி, பொறுமை, விடாமுயற்சி, உறுதி ஆகிய அருங்குணங்களைத் தன்னுடையதாக அறிவிக்கும் அற்புத நட்சத்திரம் விசாகம்.

தமிழ் முருகனும், புத்தரும்

தமிழ் முருகன் அவதரித்த நட்சத்திரம் இது. மனித குலத்திற்கே புத்தொளி காட்டிய புத்தர் வைகாசி பௌர்ணமியிலேயே அவதரித்தார். அதே பௌர்ணமியிலே ஞானம் பெற்றார்.அதே வைகாசி பௌர்ணமியிலேயே முக்தி அடைந்தார்.கிறிஸ்தவர்களோ ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான திருத்தூதர் பிலிப்புடன் இந்த நட்சத்திரத்தைத் தொடர்பு படுத்தி மகிழ்கின்றனர்!

வானில் மட்டும் (பாலன்ஸை) நடுநிலையுடன் சீராக சமமாகக் காண்பிக்கும் நட்சத்திரம் இல்லை விசாகம்; வாழ்க்கையிலும் சமச்சீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய பாதையின் ஆரம்பத்தைக் காட்டும் நட்சத்திரம் இது!

–           விசாக நட்சத்திர அதிசயம் நிறைவுறுகிறது

வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

 

வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்!நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!

நட்சத்திர அதிசயங்கள்!

வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

ச.நாகராஜன்

விநாயகரின் நிபந்தனை

வேத வியாஸர் எழுதியுள்ள தலை சிறந்த இதிஹாஸமான மஹாபாரதத்தை எழுத அவர் விநாயகரின் உதவியை நாடினார். விநாயகர் தன் எழுத்தாணி இடைவிடாமல் செயல்படும்படி அவர் சுலோகம் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு ஒப்புக் கொண்ட வியாஸர் ஆனால் பொருள் புரிந்து கொண்டே சுலோகங்களை எழுத வேண்டும் என்று எதிர் நிபந்தனை விதித்தார். அதற்கு ஒப்புக் கொண்ட விநாயகருக்கு வந்தது சங்கடம். மிகவும் கடினமான சாதாரணமாக எளிதில் அர்த்தம் புரியாத சிலேடைகளுடன் நிறைந்த சுலோகங்களை வியாஸர் அவ்வப்பொழுது சொல்ல ஆரம்பித்தார். விநாயகர் இதன் உண்மைப் பொருள் என்ன என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதற்குள் வியாஸர் பல சுலோகங்களை மனதில் கவனம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட சுலோகங்களுக்கு குட்டு சுலோகங்கள் என்று பெயர். சுமார் 8000 குட்டு சுலோகங்கள் மஹாபாரதத்தில் உள்ளன.

வியக்க வைக்கும் புதிர் சுலோகம்

இவற்றில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.

அர்ஜுனஸ்ய இமே பாணா நேமே பாணா: சிகண்டின:I        க்ருதந்தி மம காத்ராணி மாக மாஸே கவாமிவII – மஹாபாரதம் பீஷ்ம பர்வம்

சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன.

இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது.

எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும்  ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது.அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் அவர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை மட்டும் உணர்த்தவில்லை. அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கிறது.

பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்

டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது.இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது.கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அஷ்ட வசுக்களான தரன், த்ருவன்,சோமன், அஹன், அநிலன்,அநலன்,பிரத்யூஷன்,ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்ட ஆஸ்ரமம் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர்.ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார். வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்! அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார்.உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.

அர்ஜுனனுடன் தொடர்பு கொண்ட பல்குனி நட்சத்திரம்

அர்ஜுனனின் பத்து பெயர்களில் பல்குனன் என்ற பெயர் மிகவும் முக்கியம் வாய்ந்தது.இது அவனுடைய நட்சத்திரம். பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்று அழைக்கப்படும் பூரம் மற்றும் உத்தர நட்சத்திரங்கள் சிம்ம ராசி மற்றும் கன்யா ராசியில் உள்ளன. இவற்றுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திர அதிபதியான வசுவான பீஷ்மரை அர்ஜுனன் குறி பார்த்து அடித்தான். வசுக்கள் காக்கும் பசு அடையும் துன்பம் போல பீஷ்மர் துன்பம் அடைந்தார்! மாசி மாதம் என்றாலே பசுக்களுக்கு நோய் வரும் மாதம்.

நண்டைக் குறிக்கும் கடக ராசியில் உள்ள தாய் நண்டு குஞ்சு நண்டு பிறக்கும் போது தன் உயிரை விட்டு அடையும் துன்பம் போல பீஷ்மரும் உயிரை விடும் துன்பத்தை அடைந்தார்.கடகம் மற்றும் மகர ராசி 180 டிகிரியில் நேர் எதிராக உள்ளன!இந்தப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கித் தான் மேலே கூறிய செய்யுளை வியாஸர் இயற்றினார். அதன் உண்மைப் பொருளை விநாயகர் தேர்ந்து பின் மேலே எழுதத் தொடங்கினார்.

 

பத்து நாட்கள் போர் மர்மம்

இத்துடன் இந்த செய்யுளின் ஆழ்ந்த பொருள் நின்று விடவில்லை.மஹாபாரதப் போரில் முதல் பத்து நாட்களுக்குத் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் வீரர்களை அழிப்பேன் என்று வீர சபதம் செய்து அதன் படியே செய்தார்  தியோ என்ற வசுவுக்கு மார்த்தாண்டன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. மார்த்தாண்டன் என்றால் சூரியன் . தீபிகா என்ற ஜோதிட நூல், ‘சூர்யான் உச்சான்’ என்று தொடங்கி ‘நீசான் சுநீசான்’ என்று முடியும் நான்கு அடிகளில் சூரியனுக்கு பத்து நாட்கள் மட்டுமே அதிக வலிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. பத்தாயிரம் சூரிய வீரர்களான நாராயணி சேனாவுடன் பீஷ்மர் போரிட்டதை மஹாபாரதம் விளக்குகிறது ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது பத்தாயிரம் ராக்ஷஸர்கள் அழிகின்றனர் என்று ரிக் வேதம் (I-35.10)கூறுகிறது.பத்தாயிரம் கதிர்களுடன் காலை பவனி வரும் சூரியன் போல பீஷ்மர் ஓவ்வொரு நாளும் போரில் நாராயணி சேனாவுடன் புகுந்தார்.

சூரியன் வடக்கே நகரத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு நாளும் வலிமை பெறுகிறான். அதாவது நாள் பொழுது அதிகரிக்கிறது. இரவுப் பொழுது குறைகிறது.ஆறு மாதம் கழித்து அவன் தெற்கே செல்லும் போது அவன் வலிமை குறைகிறது. அதாவது நாள் பொழுது குறைகிறது.இரவுப் பொழுது அதிகரிக்கிறது.பாரதப் போரில் தக்ஷ¢ணாயனத்தில் சூரியன் வலிமை குன்ற மார்த்தாண்டனான பீஷ்மர் வலி குன்றுகிறார். மகாபாரத யுத்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக நட்சத்திரத்தின் அருகே வான ரேகை சென்றது. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு சிகண்டி மண்டலம் என்று பெயர்.  சிகண்டி என்றால் மயில் என்று பொருள்!பூரம் உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே சித்ர சிகண்டி மண்டலம் வருகிறது. சிகண்டியைக் கண்ட பீஷ்மர் போர் புரிய மறுத்து போர் புரிவதை நிறுத்துகிறார்.சூரியன் மக நட்சத்திரத்தில் இணையும் போது அவிட்ட நட்சத்திரம் மேற்கே மறைகிறது! வானவியல் படி 180 டிகிரி நேர் எதிரே இருப்பதால் இந்த மறைவு ஏற்படுகிறது.

ஒப்பற்ற சுலோகம்

மாசி மாதம் பசுக்களுக்கு நோய் வரும் மாதம், தாய் நண்டு பிரசவிக்கும் போது இறந்து படும் வேளையில் அடையும் துயரம், மார்த்தாண்டனான பீஷ்மர் என்னும் வசு பல்குனனால் சிகண்டி மண்டலத்தை முன்னிட்டு அடிக்கப்படும் போது வீழ்ந்து பட்டான் என்ற அனைத்தையும் உள்ளடக்கி ஒரே ஒரு செய்யுளில் வியாஸர் விளக்கும் மகாபாரதப் போரின் ஒரு பெரும் பகுதியை விளக்கும் இந்தச் செய்யுள் போல இன்னொரு செய்யுள் உலக இலக்கியத்தில் எங்கேனும் உள்ளதா? இல்லை என்பதே மறுமொழி! அறிவியலும் புராணமும் இணையும் அற்புத நட்சத்திரங்களாக பல்குன நட்சத்திரமும் அவிட்ட நட்சத்திரமும் திகழும் அதிசயத்தைப் பார்க்கும் போது நட்சத்திர மர்மம் அவிழ்கிறது. புரியாத ஆழ்ந்த பொருளும் புரிகிறது, இல்லையா!

*********************** .

 

Ancient Tamil Dress

 

Picture shows Reed Skirt of women of Hawaii (USA)

(Tamil version of this article is posted in two parts with references: London swami)

Sangam Tamil literature sings about the reed skirts of Tamil women. The skirts were made up of dried grasses or reeds. I was looking for such dress in the sculptures and paintings, but in vain. Recently I came across such reed skirts worn by women of Hawaii. Even today women in Pacific islands wear such reed skirts. While I was reading a book on the customs during the age of the Brahmanas (part of Vedic literature), I read another interesting fact. Brahmin priests were wearing reed skirts made up of certain types of grass for the Yagas (fire ceremonies).

The Priest-King of Indus valley civilization wears an embroidered shawl. Incidentally Brahmana scriptures mention embroidered woollen cloths. Tamils also wore dress with flower designs on it, says 2000 year old Purananuru (274).

Silappadikaram is the most popular Tamil epic that sings the glory of ancient Tamil kingdoms. Adiarkku Nallar, one of the commentators, gives 36 types of Tamil clothes. Their names include clothing imported from Malaysia, Burma, Orissa and Gujarat ( all the 36 types are given in my Tamil version of this article).

Nakkirar, one of the famous poets of Sangam period, says that “we need one Nazi measure of food every day, two pieces of clothes. It shows the ancient Tamils wore one upper garment and one under garment like Dhoti. We have descriptions of shirts called ‘Kanchukam’, mostly worn by soldiers or foreign body guards from Rome (Yavanas=Milechas). Those Milechas were described as speechless, dumb and men of gestures (sign language)—Mullai Pattu lines 66-67.

One great thing about the Tamils was that they produced cloths looking exactly like a snake skin. Ancient Egypt was believed to have imported all the clothes for the mummies from Tamil Nadu. When we look at the Tamil name of the Egyptian God of weaving ‘Neith’, we have to accept the fact that Tamils were the main source of clothes for Egyptian Pyramids.

The clothes that looked like a snake skin were praised by many Tamil poets in the Sangam anthologies. A verse in Akananuru describes a wedding scene. The bridegroom noticed that bride was sweating under her sari. When he took off  her sari to let some air, she looked like a shining sword out of its sheath. His real intention was to have a look at her beautiful face. She tried to hide her body with her hair and the garlands as soon as he took her clothes off. This verse throws some light on the type of clothes (may be saris) they wore during weddings.

Andal ,a poetess who lived in the seventh century AD describes about a wedding sari called Kooraip Pudavai. This type of sari, red in colour, is still used by the Brahmin ladies on the wedding day.

REED DRESS reference from the Vedic Literature:

Picture: Embroidered shawl of Indus Priest King

From “India of the age of the Brahmanas” by Jogiraj Basu

‘’garments made up of wool, cotton and silk were worn by the people. Cotton and wool, sewing and knitting  are often referred to. The term sutra refers to cotton and urna to wool which was made up of sheep’s hair. The general dress consisted of three parts—the main portion fitting the body called vaasa, an outer or over garment called aadhi vaasa and an under garment named niivi.

Warp, woof and different aspects of weaving are referred to in SB 3-1-2-18.

Suvaasa (good garment) and suvaasaa (well clad) occur frequently in SB and AB etc.

“ garment is a man’s outward appearance, whence people on seeing a well clad man, asks who can this be? for he is perfect in his outward appearance.” (SatapataBrahmana)

When a cloth is woven it is embroidered at the border before the actual texture is woven; it is embroidered in the middle and again it is embroidered at the end” (Aitareya Brahmana 2-11-10)

Special garments were prescribed for the priests performing sacrifice. Skirts made up of Kusa grass were used in certain sacrifices. From the S.B. we learn that the sacrificial garment consisted of a garment of pure wool not dyed, an under garment made of silk called “taarpya”, an outer garment like adhi vaasa and a head dress or turban (Usniisa). Kings and queens wore such head dress. Indra’s wife Indrani had a most variegated (multi coloured and embroidered) head band, says S.B. 14-2-1-8

Sages, mendicants and Brahmacharis used to put on garment made of hides of black antelope (krsnaajina).

Female ascetic Sabari in the Ramayana was called Krishnaajinaambharadharaa i.e. one who puts on the garment made of black deer skin.

Sanskrit dramas describe the red colour dress of the prisoners who were sentenced to death.

 

Tamils designed the first Bra (ssiere)?

World Tamil souvenirs and Tamil magazines show ancient Tamil women wearing bra. There is a convention of drawing or painting Tamil women like this for hundreds of years. But we don’t see such a custom or costume in any other ancient civilization. They did not wear brassiere. Neither did the Tamil women in ancient paintings at Sithannavasal or temple sculptures. They were shown with bare breasts. Not even in Ajanta paintings in Maharashtra. But the Tamil convention of drawing or painting women with bras made me think that Tamils should have designed it first. But it needs more in depth research on the origin of Bras.

*****************

 

தமிழர்களின் தழை உடை-1

Picture shows the Reed Skirt worn by women of Hawaii (USA)

(English version of this article is also posted in my blogs: London swami)

தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் எப்படி உடை அணிந்தார்கள் என்று கண்டுபிடிக்க பல சிற்பங்களையும் ஓவியங்களையும் கூர்ந்து கவனித்தேன். ஆனால் தழை உடை பற்றி கிடைக்கவில்லை. இப்பொழுது பசிபிக் தீவுகளில் தழை உடை அணியும் படம் கிடைத்தவுடன் மீண்டும் இது பற்றி ஆய்வைத் துவங்கினேன்.

தழை உடையை எல்லாப் பெண்களும் அணியவில்லை. கானகப் பகுதிகளில் வாழ்ந்தவர்களும் விலை மாதர்களும் அணிந்தனர். உடனே இந்த உடை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். யாகம் செய்யும் பிராமணர்களும் தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட தழை உடைகளையே அணிந்தார்கள்(*reference is given at the end). இப்போதும் ஹவாய் முதலிய பசிபிக் மஹா சமுத்திரத் தீவுகளில் தழை உடை அணிகிறார்கள். இது பாவாடை போல இருக்கும்.

தழை உடை பற்றிய குறிப்புகள்: குறுந்தொகைப் பாடல் 125,159,214,294; குறிஞ்சிப்பாட்டு வரி 102; ஐங்குறு நூறு 72. இது தவிர, அக நானூறு, கலித்தொகையிலும் பல பாடல்களில் தழை அணி வருகிறது.

36 வகை ஆடைகள் (36 Types of Clothes)

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை,  அரத்தம், நுண் துகில், சுண்ணம்,  வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் காழகம், சில்லிகை, துரியம், பங்கம், நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல் யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி, செம்பொத்தி, பனிப்பொத்தி. இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!

 

தமிழர்களின் நெசவுத்திறன்

Picture of Mohanjadaro Priest King

வேத காலத்தில் எழுந்த பிராமணங்கள் என்னும் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் பூ வேலைப்பாடு (Embridered)  அமைந்த ஆடைகளைச் செய்ததாக எழுதிவைத்துள்ளனர். இந்த ஆடையை சிந்து சமவெளி புரோகிதரின் (Priest/ King) உடலிலும் காணமுடிகிறது. இதைப் புறநானூறு “ நீலக் கச்சை பூவார் ஆடை” (புறம். 274, உலோச்சனார்) என்று புகழ்கிறது.

ஆண்கள் மேல் துண்டும், கீழே வேஷ்டியும் மட்டும் அணிந்தனர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” (புறம்.189) என்ற நக்கீரர் வாக்கியத்தால் இதை அறியலாம். மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியும் இதை உறுதிப்படுத்துகிறது:

“ திண்டேர் பிரம்பிற் புரளும் தானை

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி” (மதுரை. வரிகள் 435-436)

மேல் சட்டையை சிலர் அணிந்தனர். வீரர்கள், பொற்கொல்லர் ஆகியோர் அணிந்ததை பாடல்கள் காட்டுகின்றன. மேல் சட்டைக்கு ‘கஞ்சுகம்’ என்று பெயர்.

மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அந்நிய நாட்டவர்கள் (யவனர்கள்) சட்டை அணிந்ததையும் முல்லைப் பாட்டு கூறுகிறது:

“ உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்” (வரி 66-67)

தமிழர்கள் நெய்த ஆடை மிகமிக மெல்லியதாக இருந்ததைப் புலவர்கள் பல இடங்களில் பாடி இருக்கின்றனர்: “இழையறிவாரா, வொண் பூங்கலிங்கம்” (புறம். 383) என்றும் பாம்பின் தோல் போல மெல்லிய ஆடைகளை மன்னன் நல்கினான்: “நோக்கு நுழைகல்லா நுண்மைய பூகனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர” (பொருநர். 82-83) என்றும் பாடுகின்றனர். மஸ்லின், நைலான் போன்ற சிறந்த ஆடைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன!!

( அறுவை, கலிங்கம்=துணி, அரவு உரி= பாம்புத் தோல் )

தொடரும்…………. (பகுதி இரண்டில் பெண்களின் ஆடைகள், தமிழர்களின் Brassiere பிரா—கண்டுபிடிப்பு, கூரைப்புடவை, கல்யாணப் புடவை முதலியவற்றைக் காண்போம்).

For more of the same, contact: swami_48@yahoo.com

*REED DRESS reference in the Vedic Literature is given below:

From “India of the age of the Brahmanas” by Jogiraj Basu:

“ When a cloth is woven it is embroidered at the border before the actual texture is woven; it is embroidered in the middle and again it is embroidered at the end” (Aitareya Brahmana 2-11-10)

Special garments were prescribed for the priests performing sacrifice. Skirts made up of Kusa grass were used in certain sacrifices. From the Satapata Brahmana we learn that the sacrificial garment consisted of a garment of pure wool not dyed, an under garment made of silk called “taarpya”, an outer garment like adhi vaasa and a head dress or turban (Usniisa). Kings and queens wore such head dress. Indra’s wife Indrani had a most variegated (multi coloured and embroidered) head band, says Satapata Brahmana14-2-1-8

Sages, mendicants and Brahmacharis used to put on garment made of hides of black(deer) antelope (krisnaajina).

Female ascetic Sabari in the Ramayana was called Krishnaajinaambharadharaa i.e. one who puts on the garment made of black deer skin.

******

தமிழர்களின் தழை உடை-2

 

Wearing saris: two different styles

( Please read part 1first to maintain continuity: London swami )

திருமண காலத்தில் தமிழர்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தனர் போலும். அகநானூறு 136ம் பாடலில் விற்றூற்று முதெயினனார் இப்படிக் கூறுகிறார்:

“ கற்பினை உடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள் கசங்காத புதிய ஆடையால் உடல் முழுதும் போர்த்தியதால் வேர்வை வந்தது. காற்று வரவேண்டும் என்ற சாக்கில் அவள் முகத்தைப் பார்க்க ஆசை கொண்டு ஆடையைப் பற்றி இழுத்தவுடன் உறையினின்று உருவிய வாளைப் போல அவளது வடிவம் ஆடையினின்று விலகி நின்றது”—இந்த வருணனை முகத்தை மூடும் அளவுக்கு ஆடை (saris?) அணிந்ததைக் காட்டுகிறது.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் கூரைப் புடவை கட்டியது பற்றிப் பாடுகிறார். இப்பொதும் பிராமணப் பெண்கள் தாலி கட்டும் நேரத்தில், சிவப்பு நிறத்தில் உள்ள கூரைப் புடவையை அணிந்தே திருமண மேடைக்கு வருவர். இது போன்ற சிவப்பு நிறப் புடவைகள் மதுரையில் விற்கப்பட்டதாகவும் மாங்குடி மருதனார் கூறுவார்:

“ வெயிற் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்

செக்கரன்ன சிவந்து நுணங் குருவிற்

கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்” (மதுரை. 432-3)

மருதம்,முல்லை, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர் போலும். அவர்கள் மேலாடை அணியவில்லை என்றே தோன்றுகிறது. அது போன்ற இடத்தில்தான் தழை உடைகளை அணிந்திருக்க வேண்டும். மார்பை மாலைகளாலும் சந்தனம் பூசியும் அலங்கரித்துக் கொண்டனர்.

 

 

Picture shows Lavani dance of Maharashtrian women

பெண்களின் உள்ளாடை—தமிழனின் கண்டுபிடிப்பு?

1997ம் ஆண்டில் லண்டனில் இருந்து வந்த மேகம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளில் ஒன்று ‘பிரா’வைக் கண்டுபிடித்தவன் தமிழன்’ என்று எழுதினேன். பெண்கள் அணியும் இந்த பிரா=brazziere (மார்பகக் கச்சை) மேலை நாடுகளில் பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது.

பல நாட்டுப் பெண்களின் பழங்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும். மார்பக கச்சை அணிந்ததைக் காண முடியாது. ஆனால் எல்லா உலகத் தமிழ் மாநாட்டு மலர்களிலும், வாரப் பத்திரிக்கைகளில் வெளியாகும் வரலாற்றுப் புதினங்களிலும் தமிழ்ப் பெண்களை எப்படி வரைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் சொல்லுவது நன்றாக விளங்கும். இது ஒரு மரபைக் கடைப் பிடித்து வரைந்த ஓவியங்களாகும். இப்போது நக்கீரர் கூறிய “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” என்பதை மீண்டும் படித்தால் பெண்களின் இந்த உள்ளாடையையும் நினைந்தே அப்படிச் சொன்னார் என்று கருதலாம்.

தமிழ் நாட்டுக் கோவில் சிற்பங்களும் சித்தன்னவாசல் ஓவியங்களும், வட நாட்டில் அஜந்தா ஓவியங்களும் மேலாடை இல்லாமலேயே பெண்களைக் காட்டுகின்றன.

ஆண்கள் பஞ்ச கச்சம் கட்டியதாக சிலர் வாதிடுவர். ஆனால் பழங்கால ஓவியங்களிலோ சிற்பங்களிலோ இதற்கு ஆதாரம் இல்லை. கிராமப்புறங்களில் நிலத்தை உழுவோர் கச்சம் போல் வேட்டி கட்டி உழுவதைக் காணலாம். ஆகவே அரசவை போன்ற இடங்களிலும் கோவில்களிலும் புலவர்களும் மந்திரிகளும் இப்படிப் பஞ்சகச்சம் அணிந்திருக்கக்கூடும். இன்றும் கோவில்களில் பிராமண அர்ச்சகர்கள் இப்படிக் கச்சம் அணிவதைப் பார்க்கிறோம்.

நற்றிணைப் பாடல் 21 (மருதன் இளநாகன்), வீரர்கள் இடுப்பில் கட்டிய கச்சையைக் குறிப்பிடுகிறது. அகம் 376ல் பரணர், ஆட்டநத்தியின் இடுப்பில் கட்டிய கறுப்பு நிறக் கச்சை பற்றிப் பாடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் உடைகள் பற்றிய குறிப்புகள் அதிகம். ஆனால் அந்தக் காவியம் காட்டும் காட்சிகள் சங்க காலத்துக்குப் பின் வந்தவை ஆகும்.

மரண தண்டனைக் கைதிகளுக்கு சிவப்பு நிற ஆடை அணிந்து தெருக்கள் வழியே கொண்டு சென்றதாக வடமொழி நூல்கள கூறுகின்றன.

Contact swami_48@yahoo.com

 

பொன் (அயஸ்) என்றால் என்ன?

(English version of this article is already posted in the blogs: swami)

பொன் என்றால் என்ன? தங்கமா? இரும்பா? ஐந்து உலோகங்களில் எதையும் பொன் என்று கூறலாமா?

பொன் என்றால் இரும்பு, தங்கம், ஐந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்தான் கோவிலில் உள்ள சிலைகளை ஐம்பொன் சிலைகள் (பஞ்ச லோக) என்று கூறுகிறோம். தற்கலத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே நம் நினைத்துக் கொள்வோம். பொற்கொல்லர் என்பது தங்க வேலை செய்வோரை மட்டுமே குறிக்கும்.

திருக்குறளில் இரண்டு பொருள்களிலும் வள்ளுவர் பயன்படுத்துகிறார். “தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று” என்னும் இடத்தில் இரும்பு என்ற பொருளிலும், “சுடச்சுட ஒளிரும் பொன்” என்ற இடத்தில் தங்கத்தையும் நினைவுபடுத்துகிறார்.

இதேபோலத்தான் ரிக் வேதத்திலும் அயஸ் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெளி நாட்டு அறிஞர்கள் அனைவரும் இதை இரும்பைக் குறிக்கும் என்றும், இரும்பு பற்றி பேசுவதால் வேத காலம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பிந்தைய நாகரீகமென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு. ஆக முதலில் அயஸ் என்ற சொல்லைத் தங்கத்துக்குக்கூட பயன்படுத்தி இருக்கலாம். பொன் என்ற சொல்லை  தமிழர்கள் பயன்படுத்திவரும் முறையைப் பார்க்கையில் இது சாத்தியமே என்று தோன்றுகிறது.

“மா” என்றால் என்ன?

“மா” என்றால் மிருகம் என்று பொருள். இதை அரி+மா (சிங்கம்), பரி+மா (குதிரை), அசுண+மா (பாம்பு என்றும் வேறு ஒரு மிருகம் என்றும் கருதப்படுகிறது. ஆ+மா (காட்டுப் பசு), கல்லா+மா (குதிரை) என்ற பின் உறுப்புச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். அஸ்வ என்ற சொல்லும் இப்படி மா என்ற பொருளிலேயே துவக்க காலத்தில் பயன்படுத்தி யிருக்கலாம். “மா” என்ற தமிழ் சொல் தனியாக வரும் போது எப்படி இடத்தைப் பொருத்து பொருள் கொள்கிறார்களோ அப்படியே அஸ்வ என்பதற்கும் பொருள் கொண்டால் வேதத்தின் பழமை புலனாகும். ஆனால் மேலை நாட்டோர் எல்லா இடத்திலும் அஸ்வ என்பது குதிரையே என்று வாதிட்டு, சிந்து சமவெளியில் குதிரை இல்லாததால் வேத காலத்தை அதற்குப் பிந்தியது வாதிடுகின்றனர்.

துவக்க காலத்தில் அஸ்வ என்பது, ‘வேகம்’, ‘மிருகம்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தி இருக்கலாம். இது ஒரு புறமிருக்க சிந்து சம்வெளியில் குதிரை எலும்பு கிடைத்ததாகச் சொல்லுவோரும் சிந்துவெளி முத்திரைகளில் ஒற்றைகொம்புடன் காணப்படும் மிருகங்கள் குதிரையே என்று சொல்லுவோரும் உண்டு.

ஆக அஸ்வ, அயஸ் ஆகியன மிகப் பழங்காலத்தில் வேறு பொருள்களில் வழக்கில் இருந்ததாகக் கொண்டால் பல புதிய உண்மைகள் புலனாகும். வேதத்தில் வரும் சமுத்திரம் என்ற சொல்லை கடல் அல்ல ,வெறும் நீர் நிலையே என்று விதண்டாவாதம் செய்யும் மேலை நாட்டு அறிஞர்களும் உண்டு.

Vishnu in Egyptian Pyramids (Part 3)

 

 

Top Picture: Vishnu’s Lion man incarnation

Bottom: Egyptian Goddess

Please read part-1:Did Indians build Egyptian Pyramids?

Part-2: Vedas and Egyptian Pyramid Texts before reading this part 3.

First sloka of Vishnu Sahasranama was in the Egyptian monuments. New Larouse Encyclopedia of Mythology (page 37) says:

“Today nothing remains of her (Neith) celebrated temple at Sais where Plutarch tells us, could be read the following inscription: ‘I am all that has been, that is and that will be. No mortal has yet been able to lift the veil which covers me’.

As soon as one reads the above quote, one will be reminded of Bhagavad Gita. The first sloka of Vishnu Sahasranama also describes Vishnu as “Bhuta, Bhavya, Bhavath Prabhuhu” meaning Vishnu was the master of past, future and present.

Hindus are the only race in the world that has this concept of time from time immemorial until today. Millions of people recite this Sahasranama and Gita every day. God is beyond time. Not only God but also god men also can go beyond time. We are one step ahead of Einstein.

(Please read my posts: Time Travel by Two Tamil Saints and Do Hindus believe in ETs and Alien Worlds? in my blogs).

This concept has travelled all the way to Egypt from India. The very God Plutarch (46-120 AD) talking about is Neith, a Tamil word. The Egyptian God name is Neith and the meaning in Egyptian is Weaver God (Tamil verb nei means weave).

Vaishnavism in Egypt

Some of the early pharaohs of Egypt like Khufu etc. of the IV dynasty are stated to have been wearing the Namam or the Vaishnavite caste mark. Some of the pharaohs are stated to have been wearing even the Dwathasa Namams on their body, donning the Jogi jeer cap and carrying the Sri Satari and clad in the short s Sanyasin’s garb (vide Egyptian myth and legend page 134, 368 etc and bible dictionary appended to the holy bible edited by the American revision committee page 38).

Some of the bushmen of Australia also are stated to have Vaishnavite caste marks .(please see wonderlands and new light by Sri Vaduvur Doraiswmy Iyengar’s book Wonderlands).

Vishnu’s vehicle Garudan (Falcon/Eagle) is seen in almost all the Egyptian monuments.

Lion Throne (Simhasanam)

Sanskrit literature praises lion as the king of the forest. Brahmana literature also praises both tiger and lion as the leaders of the jungle. Simhasanam (Lion Throne) is a word used in India till this day. In other cultures they have no significance for it or a word for it. ‘Swayameva Mrugenthratha’ is a Sanskrit saying in praise of lion. We see Egyptian Gods and Queens sitting on Lion Thrones (see the picture). Relief from the limestone sarcophagus of Ashait, daughter of king Mentuhopte II, shows Ashait sits on a Simhasanam.

Another goddess is also portrayed like our Narasimhavatar (Lion faced Vishnu incarnation).

Saqqara Maze

Saqqara is 25 kilometres from Cairo, capital of Egypt. Saqqara has step pyramid, one of the oldest stone structures in the world. Under the pyramid there are maze of tunnels. In Tamil there is a story about Mayil Ravanan. Any one enters his fort can never find one’s way out. It has got a complicated maze. My guess is Saqqara is named because of circular mazes underground. Archaeologists have found maze of tunnels. Chakra (the wheel) is one of the weapons of Vishnu as well.

Picture: This is NOT from Saqqara;this is to show how a maze looks like.

 

Origin of Egyptians and Sumerians

People of Egypt and Sumeria were very clear about their origin. They say they came from a far off island. A lot of scholars identify this place with Dilmun/Bahrain. They talk about pure, clean place. Sumerians also said the same and they called the god of sweet waters Enki. It may be Gangai. In Tamil Ganga becomes Gangai. All Sanskrit “a “ changes to “i” in Tamil.  In pyramid texts a foot and jar is shown to mean pure and clean. Hindus holy river Ganges comes from the head of Shiva and touches the foot of Vishnu and enters the plain. The footsteps are worshipped by the Hindus. The word Enki=Gangai and the footsteps point in the direction of Ganges. The association with purity and water is notable. Sanskrit is the only language in the world which has highest number of words for water.

(Please read my post 280 SANSKRIT WORDS FOR WATER)

Vedic people are the only race in the world who never claimed of any foreign origin. They claim every bit of India as their own and holy. But the foreigners who tried to disintegrate India said that they came from outside. When they found Sanskrit names around the world, instead of saying Hindus went there, they said Hindus came from those places. If they give five points in support of this curious theory, there are 95 points against this. Only Now Indians are slowly waking up and thinking of re writing their history. They are exploding the myth of Aryan Dravidian Invasion theory with NASA evidence of Saraswati River etc.

Dancers and Musicians

Dancers and musicians portrayed in some of the Egyptian paintings look like Indians. Two dancers and four musicians in the painting from Nebamum tomb at Thebes (1400 BC) resemble Indians.

Limestone relief from El Amarna showing King Akhenaten with his wife Nefertiti making offerings to Aten resembles the posture of Sandhyavandhanam.

Apis Bull resembles Nandhi of Hindu Shiva temples. Bull and cow were worshipped in Egypt.

Funeral customs

Not only the Book of Dead but also the funerary customs have striking similarities with Hindu customs. In India, on the tenth day after the death of a near and dear one, the eldest son donates more than seventy different things to the priests for the sake of safe passage of the soul. One of them is a cow and another is a boat. The cow is to guide the soul in the right direction and the boat is to cross the river Vaitarani in the hell. Egyptians also show a cow and a boat in the funerary monuments.(See the picture and description in Aryatarangini by A Kalyanaraman-Volume 1).

Continued in Part 4…………………..contact swami_48@yahoo.com

If you are interested in the worship of Vishnu in India also read my posts: Vishnu in Indus Valley Civilization and Secrets of Vishnu Sahasranama.

**************

வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்

Picture shows Simha (Leo) Rasi

பூரம் உத்தரம் ஆகிய இரு நட்சத்திரங்களும் சிம்மம் கன்னி ராசிகளில் உள்ள நட்சத்திரங்கள்..இவற்றை டெல்டா மற்றும் தீடா லியோ என்றும் பீடா மற்றும் 93 லியோ என்றும் நவீன வானவியல் குறிப்பிடுகிறது. பீடா லியோ, டெனிபோலா எனப்படுகிறது. இவை வெண்மை நிற நட்சத்திரங்கள். இவையே வெண்மை நிறத்தவனான பல்குனனுடன் தொடர்பு கொண்ட நட்சத்திரங்கள். பூரத்திற்கு அர்யமாவும் உத்தரத்திற்கு பகாவும் அதி தேவதைகள். பங்குனி மாதம் பல்குனி நட்சத்திரத்தில் பிறந்ததால் பல்குனன் என்ற பெயரை அர்ஜுனன் பெற்றான்.

 

நட்சத்திர அதிசயங்கள்

 

வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்

ச.நாகராஜன்

அர்ஜுனி நட்சத்திரம்!

 

ரிக் வேதம் பூர்வ பல்குனி நக்ஷத்திரத்தை ‘அர்ஜுனி’ என்றே குறிப்பிடுகிறது. (ரிக் வேதம் X.85.13)உலகின்  முதல் இலக்கியமான வேதம் மிகமிகப் பழையது.அதில் அர்ஜுனனைப் பற்றிய குறிப்பு வருகிறதென்றால் மகாபாரதத்தின் பழமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். வேதம், பூரம் எனப்படும் பூர்வ பல்குனியை ‘அர்ஜுனா பல்குனா:’ எனக் கூறுவதோடு அது இரண்டு நட்சத்திரங்களை உடையது எனக் கூறுகிறது. அர்ஜுனன் என்ற வார்த்தைக்கு வெண்மை என்று பொருள்.இந்த நட்சத்திரங்கள் இரண்டும் வெண்மையாக இருப்பது ஒரு சுவையான செய்தி! இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் அர்ஜுன மரம் போலத் தோற்றம் இருப்பது தெரிய வரும்! இந்த அர்ஜுன நட்சத்திரத்தின் அருகில் தான் துருபத நட்சத்திரம் காணப்படுகிறது!

சப்தரிஷி மண்டலத்தில் உள்ள 17ம் எண் உடைய நட்சத்திரம் 60 வருட சக்கர சுழற்சியைக் கொண்ட இரட்டை நட்சத்திரம் ஆகும். இந்த சக்கரம் அர்ஜுனனுக்கு மேல் சுழன்று வருவதால் அது தான் அவனது இலக்காக அமைகிறது! அந்த மீனின் கண்ணில் அவன் அம்பை எய்தால் அவன் திரௌபதியை அடையலாம்! இந்த அர்ஜுனி நட்சத்திரத்தில் தான் முன்பு திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது!

 

கன்யா ராசியின் ஆறு நட்சத்திரங்கள்

 

வானத்தில் கன்யா ராசி மண்டலத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பெரும் மர்மங்களும் சுவையான செய்திகளும் அடங்கி உள்ளன!இந்த ஆறு நட்சத்திரங்களில் பெரும் தவத்தைச் செய்து ராமனின் அருளைப் பெற்ற சபரி நட்சத்திரம் அமைவது குறிப்பிடத்தகுந்தது. பெரும் தவத்திற்குரிய இடமான சப்தரிஷி மண்டலம் அருகில் சபரிக்கு உரிய இடம் கிடைத்திருப்பது நியாயம் தானே! ஆறு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் நீலம் கலந்த வெண்மையுடனும், மூன்றும் ஐந்தும் மஞ்சள் நிறத்துடனும் ஆறாம் நட்சத்திரம் சிவப்பாகவும் ஐந்தாம் நட்சத்திரம் வெண்மையாகவும் காணப்படுவதால் இவை விசித்திரமானவை எனக் குறிக்கப்படும் சொல்லான ‘விசித்ரா’ என அழைக்கப்படுகின்றன. இதில் ஐந்தாம் நட்சத்திரம் (சூர்யனின் ஒளி போன்ற மஞ்சள் நிறத்தை உடையவளான) திரௌபதியாக  அடையாளம் காட்டப்படுகிறது!

 

வானிலே திரௌபதியின் இடத்தைக் காணும் தர்மர்

 

மஹாபாரதம் ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் பூமியில் தம் கடமையை முடித்த பாண்டவர்கள் அனைவரும் வானில் தம் தம் இடத்திற்குச் செல்வதை விரிவாகக் குறிப்பிடுகிறது. (நான்காம் அத்தியாயம்- கோவிந்தன் அர்ஜுனன் ஆகிய இருவரையும் ரிஷிகள் புடை சூழ்ந்த இடத்திலும் பன்னிரெண்டு சூர்யர்களோடு கர்ணனையும், மருத் கணங்களோடு சூழப்பட்ட வாயுவின் அருகில் பீமனையும் அஸ்வினீ தேவர்களின் ஸ்தானத்தில் நகுல சகாதேவர்களையும் பார்க்கிறார்)ஸ்வர்க்க வழியில் செல்லும் தர்மர் ஒவ்வொருவருடைய இருப்பிடத்தையும் இவ்வாறு பார்த்த பின்னர் திரௌபதியின் இடத்திற்கு வந்து அவளைப் பார்க்கிறார். மகாபாரதம் கூறும் சுலோகங்களைப் பார்ப்போம்:

Picture shows stars in the constellation of Virgo (Kanya rasi)

“தாமரை மலர்களாலும் குவளை மலர்களாலுமாகிய மாலையை அணிந்தவளும் ஸ்வர்க்கத்தை விளங்கச் செய்பவளும் சூரியன்  போன்ற ஒளியுள்ளவளுமாகிய திரௌபதியைப் பார்த்தார். அப்போது அவர் அவளைத் தொட விரும்பினார்.அப்போது இந்திரன் அவரை நோக்கி,”யுதிஷ்டிரரே! இவள் கர்ப்பத்தில் பிறவாதவளும் உலகங்களுக்குப் பிரியமானவளும் புண்ய சம்பந்தமுள்ளவளுமான லஷ்மி!இவள் உமக்காக திரௌபதி வடிவம் எடுத்துக் கொண்டு மானிடத்தன்மையை அடைந்தாள்.”

 

இவ்வாறாக, தனது கடமையை முடித்த திரௌபதி மீண்டும் வானில் தனது ஸ்தானத்திற்குத் திரும்புவதைப் பார்க்கிறோம்.

இத்தோடு கன்யா ராசியில் உள்ள இந்த நட்சத்திரங்களின் மீதான அடுத்த நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்பைக் குறித்து மேலை நாட்டு அறிஞர் ஆர்.பிரௌன், “கிரேக்க இலக்கியம் இகாரியஸின் மகளான எரிகோனின் ஆபரணங்களை அகற்றும் சம்பவத்தை இது நினவு படுத்துகிறது” என்று குறிப்பிடுகிறார், துச்சாஸனன் திரௌபதியின் துகிலை உரியும் சம்பவத்தை இத்தோடு ஒப்பிட்டால் நாம் வியப்பை அடைவோம்!

 

கான்பூரையும் கன்யாகுமரியையும் காக்கும் கன்யா மண்டலம்

 

கன்யா ராசி மண்டலம் கான்பூர்  எனப்படும் கன்யாபுரத்தையும் தென் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரியையும் காக்கும் மண்டலமாகத் தொன்று தொட்டு நம் முன்னோரால் சொல்லப்பட்டு வருகிறதுதை நினைவு கூர்ந்து மகிழலாம்!

 

அர்ஜுனனும் சர் ஜேம்ஸ் ஜீனும் காணும் விஸ்வரூப தரிசனம்!

 

போர்க்களத்தில் கீதையை கண்ணன்  சொல்லக் கேட்ட அர்ஜுனன் திகைத்து, “பயங்கரமான உக்ரரூபத்துடன் இருக்கிறாயே!நீ யார்?” (ஆக்யாஹி மே கோபவான் உக்ர ரூபோ; கீதை 10-31)என்கிறான். அதற்குக் கண்ணன்,”உலகை அழிக்கும் வலிமை வாய்ந்த காலன் நான்!” (காலோஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ; கீதை 10-32)என்கிறான்!

 

பிரசித்தி பெற்ற வானியைல் விஞ்ஞானி பயங்கரம் மற்றும் உக்ரம் என அர்ஜுனன் குறிப்பிட்ட ‘டெரர்’ (terror) மற்றும் டெரிபிக்(terrific) என்ற வார்த்தைகளால் பிரபஞ்சத்தின் விஸ்வரூபத்தை வானில் கண்டு பின் வருமாறு குறிப்பிடுகிறார்:-“ நமது பூமியைச் சுற்றி பரவி இருக்கும் பிரபஞ்சத்தின் நோக்கத்தையும் இயற்கையையும் கண்டுபிடிக்க முயலும் நமக்கு அது பயங்கரமாகத் தோற்றமளிக்கிறது! அதனுடைய அர்த்தமே காண முடியாத  பரந்த  தூரங்களும் கற்பனைக்கும் எட்ட முடியாத காலமுமே இந்த பயங்கரத்திற்கான காரணங்கள்! பிரபஞ்சத்தின் எல்லையற்ற காலத்தின் முன் நாம் கூனிக் குறுகுவதோடு மனித குல சரித்திரமே இமைக்கும் நேரத்திற்கும் கீழாக இருப்பதையும் காண்கிறோம். பரந்த வெளியில் மனித குலமாகிய நாம் மட்டும் தனித்து நமது வீடாகிய பூமியில் இருக்கிறோம்!உலகின் எல்லா சமுத்திர மணல்களையும் பிரபஞ்சமாக வைத்துக் கொண்டால் அதில் ஒரு சிறுமணல் துகளின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி போல நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம்!!”

 

அர்ஜுனன் கண்ட விசுவரூப தரிசனத்தில் அவன் பயந்து கூறிய அதே சொற்களை விஞ்ஞானி அப்படியே கூறுவது வியப்பை அளிப்பதாக இருக்கிறது.

 

விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை இரு வேறு வழிகள் வாயிலாகக் காண்பிக்கின்றன என்று பிரபல வானியல் விஞ்ஞானி டாக்டர் ஹெர்பர்ட் டிங்கிள் கூறியது மிகப் பொருத்தமாக அமைகிறது!

 

*********************************