Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
56. பாணினி 57.பதஞ்சலி
உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி (Seventhu Century BCE). ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் /வரருசி என்பவர் விளக்க உரை எழுதினார். இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான்.
“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால், நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்
பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீயக் காட்சிகள் , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.
பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது.
58.பரதமுனி
பரதமுனி எழுதிய நூல் நாட்டிய சாஸ்திரம் . அதில் ஆறாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்?, எப்படி எழுதினேன்? என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது
அவர் நாட்டியம், நாடகம், நாடக மேடை அமைப்பு என ஏராளமான விஷயங்களை எழுதியுள்ளார் ; காலம் –
59.வாத்ஸ்யாயனர்
உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் ; நூலின் பெயர் காமசூத்திரம். இதிலும் மனு தர்ம சாஸ்திரத்திலும் ரிக் வேதத்திலும் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி சொல்லவில்லை . காமசூத்திரம் பொதுவான அழகு சாதனைக் குறிப்புகள் பற்றியும் சொல்கிறது; மிக வியப்பான விஷயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான சிலபஸை- பாட திட்டத்தையும் சொல்கிறது .
சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.
காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.
60.வராஹமிஹிரர்
மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனி நகர் அருகில் வாழ்ந்த வராஹ மிஹிரர் இரண்டு உலகப் புகப்பெற்ற நூல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்; அவரே சொல்லிவிட்டார்: இவை அவருக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களின் சம்மரி SUMMARY / சுருக்கமான தொகுப்பு என்று!
ஜோதிடம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் ஜாதகம் என்று பெயர்; விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் சம்ஹிதா என்று பெயர். பிருஹத் சம்ஹிதா ஒரு என்சைக்ளோ பீடியா ; அதில் வான, பூமி, , மனித, பிராணி, நவரத்தின சாஸ்திரங்கள் உள்ளன
பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்க் கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர் . பல ஜோதிட, வான சாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.”உண்மையைச் சொல்லுங்கள் ! பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்த போதும் ஆண் அகந்தையால் பெண்களைக் குறை கூறுகிறான் ; .திருமண உறுதிமொழியை ஆண்கள் மீறினாலும் பெண்கள் மீறினாலும் பாவம் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆண்கள் இந்த விதிகளை மதிப்பதில்லை; பெண்களே மதிக்கிறார்கள் ஆகையால் பெண்களே மேல் என்று பெண்களை பாராட்டுகிறார்.
61.மனு நீதி நூல்
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647; மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு. என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
இவர் இயற்றிய சட்டங்கள் தொடாத விஷயமே இல்லை
62.கங்கா தேவியின் மதுரா விஜயம்
மதுரை மீனாட்சி கோவில்— துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை..
63.முத்துசுவாமி தீட்சிதர்
சம்ஸ்க்ருத மொழியில் வேறு எவரும் செய்யாத அதிசயங்களை செய்து காட்டியவர் ! ஒரே வேற்றுமையை – விபக்தியைப்— பயன்படுத்தி கிருதிகள் இயற்றினார்; உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அதிசயம் இது.
அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.
தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர்.
தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.
தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.
தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.
தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்..
64.வேதாந்த தேசிகன் / வேதாந்த தேசிகர் (1269-1369)
வேதாந்த தேசிகர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். தந்தையார் – அனந்தசூரி, தாயார்- தோத்தாத்ரி அம்மையார். இயற்பெயர் திருவேங்கடமுடையான் .
தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் நூல்கள் எழுதி வைஷ்ணவத்தை வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்த்தினர் இவரைப் போற்றி வருகின்றனர். இறைவனுக்கு மொழி வேறுபாடு இல்லை என்பதை நிலைநாட்டியவர் . உபாயவேதாந்த – இரு மொழியில் வல்லவர் — என்ற வழக்கினை நிலைநாட்டினார் .
நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் என்பது சம்பிரதாயம் .இவர் திருமாலின் மணியின் அவதாரம் என்பதும் நம்பிக்கை .
120- க்கும் மேலாக இவரெழுதிய நூல்களில் பெரும்பாலானவை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன அருணகிரிநாதரின் சந்தததமிழ் போல சம்ஸ்க்ருத சந்தக் கவிதைகளை இவர் பாடல்களில் காணலாம். சொல் விளையாட்டுச் சித்தர். இவர் நான்கு மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்றவர்.
ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர்
நாள்தோறும் காலையிலிருந்து இரவு வரையிலுள்ள நேரத்தைஒழுங்குபடுத்தி இவர் அமைத்திருந்த வேலைத் திட்டம் ‘தினசரியை’ என வழங்கப்பட்டது. இது வைணவரின் நித்திய கரும வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.
****
Last Part —மூககவி , வால்மீகி, வியாசர் ,சுபாஷித ஸ்லோகங்கள், கல்வெட்டுக் கவிஞர்கள்,அமரசிம்மனின் அமரகோஷம்ஆகியன பற்றியும் அடுத்துக் காண்போம்
To be continued………………
Tags- வேதாந்த தேசிகர் முத்துசுவாமி தீட்சிதர்,கங்கா தேவி, மனு நீதி நூல் ,வராஹமிஹிரர் ,வாத்ஸ்யாயனர் ,பரதமுனி ,பாணினி பதஞ்சலி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
25-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
நிறைய விமான விபத்துக்கள்! விமானப் பயணம் மேற்கொள்வது அபாயமா?
ச. நாகராஜன்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் அருகே உள்ள, மின்சார துணை மின்நிலையத்தில் 2025 மார்ச் 21ம் தேதி எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்படவே 1350 விமானங்களின் பயணம் தடைப்பட 2,91000 பயணிகள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.
இது ஒரு புறமிருக்க, மனதை நடுநடுங்க வைக்கும் கோரமான சமீபத்திய விமான விபத்துக்கள் இனி விமான பயணத்தை மேற்கொள்வதா வேண்டாமா என்ற கேள்வியைப் பலரிடமும் எழுப்பியுள்ளது!
இரண்டாயிரத்துஇருபதுகளில் மூன்று வருடங்களில் 300 மோசமான விபத்துக்கள் என்றால் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பத்தியிரண்டு மற்றும் எண்பத்தி மூன்றில் மட்டும் 600 விபத்துக்கள் நடந்துள்ளன.
பெரும்பாலான விமான விபத்துக்கள் சிறிய விமானங்கள் பறக்கும் போது தான் ஏற்படுகின்றன!
அமெரிக்க விமானம் ஒன்றும் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரும் மோதியதில் 67 பேர் இறந்தனர். வான் வழி என்பது மோசமான வழிதானோ என்ற பயத்தை இது ஏற்படுத்தி விட்டது.
டொரோண்டோவில் சமீபத்தில் நடந்த டெல்டா ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 4819 இன்னொரு மோசமான விபத்தாகும்.
ஆனால் உண்மையில் ஆராயப் போனால் அமெரிக்காவில் மட்டும் 90 லட்சம் வணிக விமானப் போக்குவரத்து ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இதில் ஒன்று அல்லது இரண்டைப் பெரிதாக எடுத்துக் கொண்டால் பயம் வரத்தான் செய்யும்.
சில சமயங்கள் நெருங்கி இருந்து மோதும் நிலையில் இருந்த விமானங்கள் தப்பிப் பிழைத்த சம்பவங்களும் நிறைய உள்ளன.
ஓடுபாதை எனப்படும் ரன்வே விபத்துக்களும் தனி ரகமானவை.
காக்பிட்டில் உள்ள ஆக்ஸிஜன் அமைப்பில் உள்ள சர்க்யூட்டில் ஷார்ட் சர்க்யூட்டினால் ஏற்படும் தீயைப் பலரும் தீவிரவாதிகளின் சதித் திட்டம் என்று தவறாகப் பிரசாரம் செய்து விடுகிறார்கள்.
கைரா டெம்ப்ஸி (Admiral Cloudberg, aka Kyra Dempsey) என்ற பெண்மணி 300 விமான விபத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விட்டார்.
இவர் தனது ஆய்வின் முடிவில் விமான விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணங்களை வரிசைப்படுத்துகிறார் இப்படி:
தவறான தகவல் தொடர்பு
தவறான புரிதல்
தவறான யுஎக்ஸ் டிஸைன் (யுஎக்ஸ் என்றால் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் அதாவது பயன்படுத்துபவருக்கு உகந்த வடிவமைப்பு)
ஒருவேளை இந்த மூன்றும் சேர்ந்தாலும் விபத்து விளையும்.
விமானத்தில் பறப்பது ஆபத்தா அல்லது விமானப் பயணம் பத்திரமானது தானா என்ற கேள்விக்கு விமான விபத்து ஸ்பெஷலிஸ்டான கைரா டெம்ப்ஸி கூறுவது இது தான்:
“பயப்படாதீர்கள்! மிகைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தலைத் தரும் அறிக்கைகள் தவறானவை. இவை எப்போதோ ஏற்படும் விபத்துக்களே. ஐந்து வருட சராசரியை எடுத்துப் பார்த்தோமானால் இது ஒன்றுமில்லை என்பது புலப்படும்.
கடந்த ஐந்து வருடங்களில் உலகெங்குமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துப் பார்த்தோமானால் விமானப் பயணம் போல சொகுசான பாதுகாப்பான பயணம் வேறு எதுவும் இல்லை.
ஆகவே, விமானப் பயணிகளே வழக்கம் போல பயப்படாமல் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களை வெற்றிகரமாக முடியுங்கள்.”
நல்ல வேளையாக சரியான ஒரு விளக்கம் கிடைத்து விட்டது.
“சரி சார், இதோ போர்டிங் கால் வந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான்!”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular dailies and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 27-ஆம் தேதி 2025-ம் ஆண்டு
முதலில் காஷ்மீர் செய்தி
காஷ்மீர் தாக்குதலால் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகள்
காஷ்மீரில் பஹல்காம் என்னும் சுற்றுலாத் தலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் 28 இந்து சுற்றுலாப் பயணிகளை ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்கிக்கொன்ற சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது; சவூதி அரேபியாவுக்குச் சென்ற பிரதமர் பாதியில் பயணத்தைக் கைவிட்டு நாடு திரும்பினார் . பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதற்குக் காரணம் என்பதால் இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது ;பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையில் கடற்படை, விமானப்படை அதிகாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர் இந்து என்ற ஒரே காரணத்துக்காக புதிதாக கலயாணம் செய்து தேனிலவுக்கு வந்தவர்களையும் பயங்கரவாதிகள் சுட்டுத்தள்ளினார்கள்
நாடு முழுதும் கோவில்களிலும் மடாலயங்களிலும் இந்துக்கள் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தப் படுகொலையைக் கண்டித்தது பாரத நாடு ஒன்றே என்பதை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியது . மத்தியக்கிழக்கிலுள்ள பயங்கரவாதிகளை இஸ்ரேல் வேரறுத்து வருவது போல இந்தியாவும் பாகிஸ்தானிய பங்களாதேஷ் பயங்கரவாதிகளை வேரறுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் பத்திரிக்கைகளில் எழுதி வருகின்றனர் .
நாட்டிலுள்ள இந்துக் கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வார்கள். அங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுவதே அதற்கு காரணம். யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இம்முறை அமர்நாத் யாத்திரை நடக்குமா என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சுற்றுலா தொடங்கும். அந்த நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது. அமர்நாத் யாத்திரை இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் உச்சகட்ட பாதுகாப்பு பிறப்பிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே அனைத்து வாகனங்களும், பக்தர்களின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
****
காஞ்சி சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு/20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் தேர்வாகியுள்ளார் /ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச ஷர்மா திராவிட்/2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர் /ரிக்யஜுர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர் /தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்தவர்.
ஏப்ரல் முப்பதாம் தேதி அவருக்கு தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி தீட்சை வழங்குகிறார். *****
காஞ்சி சங்கராச்சார்யார் மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று சங்கர மடம் அறிவித்துள்ளது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மாவுக்கு சன்யாச தீக்ஷை வழங்குகிறார்.
இந்த புனித சன்யாச தீக்ஷை கிமு 482 இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 வது ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.
காஞ்சி மடத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆந்திராவின் அன்னவரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட், 2006 ஆம் ஆண்டு வேதப் படிப்பில் ஈடுபட்ட காலத்திலிருந்தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிகளையும் தொடர்ச்சியான அருளையும் பெற்றுள்ளார்., ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜுர் வேதம், சாமவேதம்,ஆறு அங்கங்கள் , தசோபநிஷத் ஆகியவற்றையும் முடித்து சாஸ்திரப் படிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் .
அவர் ஆந்திராவில் உள்ள துனியில் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி. தாயார் பெயர் மங்காதேவி.
ஸ்ரீ சர்மா வேதக் கல்வியை கர்நாடகாவின் ரத்னாகர பட் சர்மாவிடமும் , சம்ஸ்க்ருத இலக்கணத்தை
திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடமும் படித்தார். ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் கற்றார்
வேதப் படிப்புகள் தவிர, அன்னவரத்தில்10–வது வகுப்பு தேர்வையும் முடித்துள்ளார்..
நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
****
பொன்முடி பதவி நீக்கம் : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு, பொன்முடி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் முதலமைச்சர் குறித்துத் தெரிவித்த கருத்துகளை மனுவில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மனுவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியது தொடர்பாக ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், பொன்முடிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
****
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை அனுமதிக்க முடியாது,” என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது
கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிராவில், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டும் என்றே அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நிரிபேந்திர பாண்டே என்பவர் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் அமர்வு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மஹாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள்.
மஹாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை தொடர்பு கொண்ட போது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்ற குறிப்பிட்டது ராகுலுக்கு தெரியுமா? அவர்களை புகழ்ந்து, ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்த போது கடிதம் எழுதியது தெரியுமா?
சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்து பொறுப்பு அற்றது. சாவர்க்கரை மஹாராஷ்டிரா மக்கள் போற்றுகிறார்கள். அவருக்கு எதிரான இழிவான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பாட்டால், நாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். மேலும் ராகுலின் மனு குறித்து பதிலளிக்கும்படி உ.பி., அரசு மற்றும் நிரிபேந்திர பாண்டேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.
*****
ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; நியூயார்க் நகரம் பிரகடனம் செய்தது
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில், நியூயார்க் நகரம் சிறப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்தார்.
பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டார்.
இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
****
இந்துக்களிடம் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் – மோகன் பகவத்
இந்துக்களிடம் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமூகத்தின் அடித்தளமான மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தார்மீக கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்காக ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கையை இந்துகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சந்தித்து தங்கள் வீடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை அவர்களிடம் பரப்ப வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தேசியவாதம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடித்தளங்களை வலுப்படுத்த பண்டிகைகளை கூட்டாக கொண்டாடுமாறும் மோகன் பகவத் அறிவுறுத்தினார்.
****
எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் – ஹெச்.ராஜா
எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என பாரதீய ஜனதாக கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மணி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஹெச்.ராஜா, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.
1968-ம் ஆண்டு சேலத்தில் ஈ.வெ.ராமசாமிக்கு எதிரான வழக்கு நடந்த போது, இந்துக்கள் அந்த இடத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்களா என்று நீதிமன்றம் கேட்டது. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியதும் அந்தவழக்கை அவருக்கு சாதமாக தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
மேலும், பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
*****
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
கனாவில் லட்சுமி நாராயணன் கோவிலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களை சேதப்படுத்தி உள்ளனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் முதலில் தாக்கினர். இதைத் தொடர்ந்து லட்சுமி நாராயணன் கோவிலை சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து கனடாவில் உள்ள ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
காலிஸ்தானி பயங்கரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹிந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
****
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த கேல் தாஸ் என்பவர் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அமைச்சர் காரின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
****
கடைசியாக ஒரு சுவையான செய்தி
கோயில் தேங்காயை விலை ரூ.10 லட்சம்
ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர்.
கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது.ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெர்னெம் நகரம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
இவ்விழாவின் இறுதியாக, சுவாமிக்கு படைத்த தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, ஒரு பக்தர் அந்த புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இதை அவர் தனது வீட்டில் வைத்து வழிபடுவார் என கூறப்படுகிறது.இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.
திருவிழாவின்போது, தேங்காய் – பழங்கள் சுவாமிக்கு படைக்கப்படுவது வழக்கம். விழாவின் முடிவில் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலத்தில் விடப்படும்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
மே மாதம் நான்காம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—-Subham—-
Tags- World Hindu News letter, Gnanamayam, 27 4 2025, Tamil news
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 22, Gramaphone, Flowers 25 p to Rs2, UNIDO Skinners horse, Museum stamps, coins, Statistical Institute, Engineers Institute, Music composer Shubert, Year of Child, Bhai Paramanand, Vallabhacharya, Rajya sabha, book fair, Kampta prasad, Gangaram, Happy Child, Trade fair, Jatindarnath das, Kittur Rani Channamma, Tolstoy, Punjab regiment, World Book Fair, Ram Manohar Lohia, IAEA conference, Mahavir Nirvana, Swords, three planes, Homeopathy, Five rubber trees, Cotton plants. Postman, Bulb, Ananda Coomaraswamy
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part five/ பகுதி ஐந்து
45.ரூப கோஸ்வாமின்
சைதன்ய மஹாப்ரபுவின் சீடர் ; வங்காளத்தைச் சேர்ந்த இவர் உஜ்வலநீலாமணி என்ற நூலை எழுதினார். இது கவிதை இயல் Poetics நூல்; இவரது காலம் 16-ஆவது நூற்றாண்டு.
46.ஆதிசங்கரர்
இந்தியாவில் வியாசருக்கு அடுத்தபடியாக அதிகம் எழுதியவர் சங்கரர். இவர் உபநிஷத்துக்களுக்கும் பகவத் கீதைக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் எழுதிய உரைகள் உலகப் பிரசித்தமானவை; இவர் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர் ; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு என்றும் கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் இருவேறு கருத்து உள்ளது. ஆதி சங்கரரின் கவிதைகளையும் ஸ்லோகங்களையும் இன்றும் மக்கள் தினமும் வீடுகளில் பயப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது . முக்கிய நூல்கள் : மனீஷா பஞ்சகம், விவேக சூடாமணி, பஜகோவிந்தம், ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா, கனகதாரா ஸ்தோத்திரம் உபநிஷத், கீதை ஸஹஸ்ரநாம உரைகள் , நூற்றுக்கணக்காக ஸ்லோகங்கள் ,துதிகள், தோத்திரங்கள்.
சம்ஸ்க்ருத மொழியை இன்றும் வீடுகளில்தவழவிட்ட பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும் ; அடுத்தபடியாக
ராமாயணத்தைத் தந்த வால்மீகியைக் குறிப்பிடலாம்; அவரது சுந்தர காண்டம், பண வரவுக்காக, பலராலும் வீடுகளில் சம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யப்படுகிறது .
47.ராமானுஜர் 1017 to 1137 CE
விசிஷ்டாத்வைத தத்துவத்தை முன்வைத்த ராமானுஜரும் நிறைய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியுள்ளார் . அவரது காலம் 1017 to 1137 CE அவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை எழுதினார் ; அவை விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள்.1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.
48.சித்த
ஸ்வேதாம்பர சமண மதப்பிரிவைச் சேர்ந்த இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; உபமிதி பாவப்பிரபஞ்சகதா என்ற நூலில் உருவகம் (allegorical) மூலம் விஷயங்களைக் கூறுகிறார். இவரது காலம் 906 CE.
49.சோமதேவ
கதாசரித்சாகரத்தின் ஆசிரியர் ; கவிதை வடிவில் முதல் கதை புஸ்தகத்தைத் தந்தவர். காஸ்மீரைச் சேர்த்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு .
50.சுபந்து
வாசவத்தத்தா என்ற காதல் கதையை உரைநடையில் எழுதிய இவர் முதலில் 13 ஸ்லோகங்களையும் எழுதியுள்ளார் காலம் ஆறாம் நூற்றாண்டு.
51.ஷீலா பட்டாரிகா
கவிதைத் தொகுப்புகளில் பெயர் உள்ள பெண் கவிஞர் இவர்; காலம் ஒன்பதாம் நூற்றாண்டு
52.சூத்ரக
சாதவாஹனா வம்ச மன்னர் ; இவர் எழுதிய ம்ருச்சககடிகம் என்ற நாடகம் மிகவும் புகழ்பெயது ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிகளில் வந்துள்ளது ; தமிழில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்ற பெயரில் மொழிபெயர்த்தார் ; அற்புதமான நாடகத்தை நகைச்சுவை ததும்பத் தந்த சூத்ரகரின் காலம் இரண்டாம் நூற்றாண்டு.
மிருச்சகடிகம் வாசவதத்தை , பாண , மற்றும் பத்மபிரபிரித்தகா போன்ற சமஸ்கிருத நாடகங்களை இயற்றினார்
53.நன்னையபட்டு
சம்ஸ்க்ருத மொழியில் இலக்கணத்தைத் தந்த மூன்று பெரியோர்களை முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்பார்கள் அதுபோல தெலுங்கு மொழியிலும் மூன்று முனிவர்கள் உனது அவர்களில் ஒருவர் நன்னய்ய பட்டு ; நன்னயா. திக்கனா, எர்ரனா என்பவர்கள் ‘கவித்திரையம்’ ஆவர்.
தெலுங்கு மொழி இலக்கணத்தையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதினார் ; அவளவு சம்ஸ்க்ருதப் பிரியர்; மேலும் அது நாடு முழுதும் பரவ சம்ஸ்க்ருத மொழி ஒன்றுதான் உதவும்; இன்று நாம் ஆங்கிலத்தில் எழுதினால் அது உலகின் பெரும்பாலான மக்களுக்குத் தெரிவது போல.
தெலுங்கு மொழிக்கான முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி ஆகும்.. இவர் இராஜமகேந்திர புரத்தைத் தலைநகராகக் கொண்டு வேங்கி நாட்டை ஆண்டு வந்த ராஜராஜ நரேந்திரனின் (கி.பி. 1020-1063) அரசவையில் புலவராகத் திகழ்ந்துள்ளார்.
54.சாவர்ணி –
இவரது கவிதைகள் கவிதைத் தொகுப்பு நூல்களில் உள்ளன; வேறு தகவல் கிடைக்கவில்லை.
55.மத்வர்
த்வைத தத்துவதை நிலை நாட்டியவர் ;பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். 32 அத்தியாயங்கள் கொண்ட மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது. ருக்வேதத்திலிருந்து 32 துதிகளுக்கு உரை எழுதினார். காலம் 1199–1278 CE.
To be continued…………………………….
Tags- ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், சூத்ரகர், பெண் கவிஞர், சம்ஸ்க்ருத மழை , அறுபது கவிஞர்கள் , பகுதி ஐந்து
இது விசாகப்பட்டிணம் கடற்கரையோரம் ரத்னகிரி மலையில் உள்ள வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. இது வைணவத் தலங்களுள் ஒன்றாகும்.
கடல்மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
மலையடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே செல்ல வண்டி வசதிகளும் உண்டு.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.
மஹா விஷ்ணு வசித்து வந்த வைகுண்டத்திற்கு காவல் காக்க இரு துவாரபாலகர்கள் இருந்தனர். விஷ்ணுவைத் துதிக்க வந்த முனிவர்களை இவர்கள் துன்புறுத்தவே அவர்களுக்கு விஷ்ணு சாபமிட்டார். முதல் துவாரபாலகன் இரண்யகசிபு என்ற அரக்கனாகவும் இன்னொரு துவாரபாலகன் அவன் தம்பி இரண்யாட்சன் என்ற அரக்கனாகவும் பிறந்தான்.
இரண்யகசிபு அனைத்து தேவர்களையும் கொடுமைப் படுத்தி, ‘தானே கடவுள்’, தன்னையே வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான்.
அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனே சிறந்த விஷ்ணு பக்தனான பிரகலாதன். நாரதரின் வளர்ப்பிலே வளர்ந்த பிரகலாதன் நாராயண நாராயண என்று எப்போதும் விஷ்ணுவின் நாமத்தைக் கூறிக் கொண்டே இருந்தான்.
இதனால் கோபமுற்ற இரண்யகசிபு பிரகலாதனைப் பல விதத்திலும் கொடுமைப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ நாராயண நாமத்தை விடவே இல்லை.
கடைசியாக ஒரு நாள் இரண்யகசிபு, “சொல்! உன் நாராயணன் எங்கே இருக்கிறான்” என்று பிரகலாதனை அதட்டிக் கேட்க, பிரகலாதன், “நாராயணன் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்” என்று பதிலளித்தான்.
“இதோ இந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?” என்று கேட்டு இரண்யகசிபு அருகில் இருந்த தூணை எட்டி உதைக்க அதிலிருந்து ஆவேசமாக தூணைப் பிளந்து நரசிங்க ரூபமாக வந்த விஷ்ணு பகவான் அவனைத் தன் மடியில் வீட்டு வாசலில் வைத்து தன் கூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழிக்க அவன் மாண்டு போகிறான்.
ஒரு முறை பிரகலாதனைக் கடலில் வீசுமாறு இரண்யகசிபு ஆணையிட்ட போது விஷ்ணு பகவான் அந்த மலையின் மீது இறங்கி அவனைக் காப்பாற்றினார். ஆகவே தான் இது சிம்மாத்ரி என்ற பெயரைப் பெற்றது.
முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நரசிம்மராக அங்கேயே குடியிருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.
இந்தக் கோவிலில் உள்ள நரசிம்மர் சந்தன மேனியுடனேயே காட்சி அளிக்கிறார். இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.
தந்தை இரண்யகசிபுவின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் அகோரருக்கு கோவில் ஒன்றைக் கட்டினான். யுக முடிவில் அது அழியத் தொடங்கியது. மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது.
அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூருவன் என்ற மன்னன் இந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு எடுத்து ஒரு கோவிலைக் கட்டினான். அந்தச் சமயத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின் மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறையில் மூன்றாம் நாள் நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் அனைவருக்கும் காட்சி தருமாறு சந்தனப் பூச்சு நீக்கப்படுகிறது. இது அட்சய திருதியை தினத்தன்று நடைபெறுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றி பதினோராம் நூற்றாண்டு குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
கங்க மன்னர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலை விரிவாக்கியுள்ளனர்.
கோவிலில் உள்ள விக்ரஹம் வராக மற்றும் நரசிம்ம அவதாரங்களின் அடையாளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கோவிலின் நடுவே கர்பக்ருஹம் அமைந்துள்ளது. அதன் நடுவில் ஒரு சிறிய மேடையில் மூலவர் சந்தனப்பூச்சு பூசப்பட்டு லிங்கம் போலக் காணப்படுகிறார். வைகாசி மாதம் சந்தனப் பூச்சு நீக்கப்படும் சமயத்தில் அவர் தனது உண்மைத் தோற்றத்துடன் காட்சி தந்து அருள்கிறார். இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன் இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். இரு பக்கங்களிலும் ஶ்ரீ தேவியும் பூதேவியும் உள்ளனர். ஆண்டாள், லக்ஷ்,மி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.
கர்பக்ருஹத்திற்கு இடது பக்கம் கப்பஸ்தம்பம் என்ற ஒரு தூண் மணிகளாலும் பட்டுத் துணியாலும் அலங்கரிப்பட்டுள்ளது. இந்தத் தூணிற்கு அடியில் சந்தான கோபாலரின் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த தூணைக் கட்டிக் கொள்ப்வர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.
கோவிலின் பிரதான வாயில் கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறாது.
கோயில் ஒரிய பாணியில் அமைந்துள்ளது.
கோவிலில் பல முக்கிய விழாக்கள் உண்டு. கல்யாண உற்சவம் மற்றும் சந்தனயாத்திரோட்சவம் ஆகியவை சிறப்பு விழாக்களாக அமைகின்றன. ஏராளமான பக்தர்கள் சந்தன யாத்திரையில் பங்கு கொள்கின்றனர்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வராக லட்சுமி நரசிம்மர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MOTIVATION ARTICLE PUBLISHED ON 22-3-25 IN KALKIONLINE
கேட்பது நாம்! பதில் சொல்வது அறிஞர்கள்!!
ச. நாகராஜன்
1) விமரிசனத்திலிருந்து தப்ப முடியுமா? தப்புவதற்கு என்ன செய்வது?
ஓ, முடியுமே! விமரிசனத்திலிருந்து நீங்கள் தப்பவேண்டுமென்றால் ஒரு வேலையையும் செய்யக் கூடாது. ஒன்றும் பேசக் கூடாது. ஒரு மனிதனாகவும் கூட இருக்கக் கூடாது. – எல்பர்ட் ஹப்பர்ட்
2) நம்மை எல்லையற்றவராகச் செய்வது எது?
கற்பனா சக்தி நம்மை எல்லையற்றவராகச் செய்கிறது. – ஜான் மூர்
3) எவ்வளவு சுமையை ஒருவன் தூக்க முடியும்?
சுமையின் அளவு குதிரையின் வலிமையைப் பொறுத்தது. – தால்முட்
4) வணிகம் எப்படிச் செய்ய வேண்டும்?
சகோதரர்கள் போலச் சேர்ந்து வாழுங்கள்; அன்னியர்கள் போல வணிகம் செய்யுங்கள். – அராபிய பழமொழி
5) யாரைத் தவிர்க்க வேண்டும்?
மூன்றை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 1) தெரு நாய் 2) பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 3) தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு மேதாவி என்று நினைப்பவன் – வேல்ஸ் பழமொழி
6) எவன் திறமையுள்ளவன்?
எவன் ஒருவன் தான் திறமையுள்ளவன் என்று நினைக்கிறானோ அவன் திறமையுள்ளவனே. – வர்ஜில்
7) எவன் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்?
முட்டாளும் செத்துப்போனவனும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
– ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல்
8) வெற்றிக்கான முதல் விதி எது?
தன்னை நம்புவதே வெற்றி பெறுவதற்கான முதல் விதி. – ரால்ப் வால்டோ எமர்ஸன்
9) எதற்கு விதி தேவையில்லை?
நேர்மைக்கு விதியே தேவையில்லை – ஆல்பர்ட் காமஸ்
10) அதிர்ஷ்டம் யாருக்கு வரும்?
தைரியசாலியையே அதிர்ஷ்டம் தேடி வரும். – வர்ஜில்
11) யாருடைய தவறை மன்னிக்கக் கூடாது?
தன்னுடைய தவறைத் தவிர மற்ற அனைவருடைய தவறையும் மன்னிக்கலாம்.- மார்கஸ் போர்ஸியஸ் கடோ
12) சோதனை வரும் போது எது முக்கியம்?
சோதனைக் காலத்தில் ஒரு அவுன்ஸ் விசுவாசமானது ஒரு பவுண்ட் புத்திகூர்மையை விட மேல். – எல்பர்ட் ஹப்பர்ட்
13) வெற்றி அளக்கப்படுவது எப்படி?
இலக்கை நோக்கிக் குறிபார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது..இலக்கை நோக்கி தவறாமல் அம்பை எய்து விட வேண்டும். அது தான் வெற்றியின் அடையாளம் – இத்தாலிய பழமொழி
14) எதற்குக் கெட்ட காலம் கிடையாது?
நல்ல கருத்துக்களுக்கு கெட்ட காலமே கிடையாது. ஹெச். கார்டன் செல்ஃப்ரிட்ஜ்
15) எப்படி மற்றவருடன் பழகுவது?
ஒருபோதும் காது கேளாதவனிடம் முணுமுணுக்காதே; கண் தெரியாதவனிடம் கண் சிமிட்டாதே! அவ்வளவு தான்! – ஸால்வேனியா பழமொழி