—SUBHAM—
TIRUKKURAL, CALENDAR , 1915
Posted by Tamil and Vedas on September 25, 2025
https://tamilandvedas.com/2025/09/25/jaffna-womans-tirukkural-calendar-year-1915/

புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா!
நமது நிருபர், DINAMALAR
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM
இருக்கை பேராசிரியர்,
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
நுாற்றாண்டுகளுக்கும் மேலான அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்களில் புரையோடி போயிருந்த மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தை விலக்கி, நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்ட, பண்டைய இந்திய அரசியல் வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்ற மாபெரும் தளகர்த்தர்களில் முக்கியமானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
காங்கிரஸ் அல்லாத ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்டவர் இவர். இவரது பிறந்த தினம் இன்று (25, செப்டம்பர்). தனது புதிய அவதாரத்தின் மூலம் இன்று இந்தியாவின் வளர்ச்சி முகத்தை மாற்றியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் தலைவர்களில் முதன்மையானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
தேசியச் செயலராக, தலைவராக தொடக்க காலம் முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் சித்தாந்தங்களை வளர்த்தெடுத்தவர்.
இளமைக் காலம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா சந்தரபான் என்ற கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். மூன்று வயதிற்குள் தந்தையையும், ஏழு வயதிற்குள் தாயாரையும் இழந்த தீன்தயாள், ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் ராதாராமனின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு படித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
இளங்கலை பட்டப்படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக முதுகலைப் பட்டப்படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். இவர், அரசு நிர்வாகப்பணித் தேர்விலும், இளநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, பல்வந்த் சாப்தே மூலம் 1937ல் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.
சமூக வாழ்க்கை
ஆர்.எஸ்.எஸ்.,சைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவர் மற்றும் நானாஜியால் பெரிதும் கவரப்பட்டு, 1942 முதல் முழு நேர ஊழியராக மாறினார். கடந்த, 1951ல் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். 1952ல் ஜனசங்கத்தின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர் இவர், 1945ல், ‘ராஷ்டிரதரம்’ என்ற மாத இதழ், 1948ல் ‘பஞ்சஜன்யா’ என்ற வார இதழ், 1949- – 50ல் ‘சுதேசி’ நாளி தழையும் வெளியிட்டார். மேலும், ‘சாம்ராட் சந்திர குப்தர், ஜெகத்குரு சங்கராச்சாரியா’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதினார். ஆர்கனைசர் என்ற ஆங்கில வார இதழில் ‘அரசியல் டைரி’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவிற்கு எதிராக டாக்டர் முகர்ஜி, ஒரு சத்யாகிரகக் குழுவுடன் ஜம்மு- காஷ்மீரை நோக்கிப் பயணப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கேயே மர்மமான முறையில் திடீரென இறந்தார். கட்சியின் முழுப் பொறுப்பும், 37 வயதே நிரம்பி இருந்த தீன் தயாள் கைக்கு வந்தது.
தொடர்ந்து 15 ஆண்டுகள் வாழ்க்கையின் இறுதி நாள் வரை அதுவே அவரது இலட்சியப் பயணமாக அமைந்தது. கட்சியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதிலும், அதன் அரசியல் சித்தாந்தங்களைச் செதுக்கியதிலும், பலமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்ததிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.
பின், 1980ல் ஜனசங்கம், பெயர் மாற்றத்துடன் பாரதிய ஜனதா கட்சியாகி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு, அன்றே அடித்தளமிட்ட தேசத்தலைவர் தீன் தயாள் உபாத்யாயா ஆவார். பாரதிய ஜனசங்கத்தின் தொடக்க காலம் முதல் தொடர்ந்து பொதுச் செயலராகப் பணியாற்றிய தீன்தயாள் உபாத்யாயா, 1967, டிசம்பரில், தேசியத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
மனிதநேய சித்தாந்தம்
பிரதமர் மோடி, தீன் தயாள் உபாத்யாயா சொல்லிக் கொடுத்த மனித நேயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தற்போது செயல்பட்டு வரும் தேசிய புதிய கல்விக் கொள்கை, புதிய சுகாதாரக் கொள்கை, பொது சிவில் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த மசோதா, ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, துாய்மை இந்தியா போன்ற அனைத்துக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, இக்கோட்பாடே!
சுதந்திரத்துக்குப் பிறகும் கூட, நம் அரசியல் கட்சிகளின் சிந்தனை மேற்கத்திய சிந்தனையாகவே தொடர்ந்தது. இந்தியர்களின் மனமும் சிந்தனை ஓட்டமும் பாரதிய தன்மை கொண்டதாக இருக்கவில்லை. இந்திய அரசியலில் காணப்பட்ட மேற்கத்திய தன்மையும் ஊழல்களும் இவரை மிகவும் கவலை அடையச் செய்தன.
இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் செயற்கையானவை என்று கருதினார். இவை பாரத தேசத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துரைத்தார். அரசியலிலிருந்து தர்மத்தை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கொள்கை ஆக்கினார்.
கடந்த, 1965ல் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கக் கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ஒரு தீர்க்கமான கொள்கையை முன்வைத்தார். இந்த விளக்கங்கள் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அறம் இல்லாத பொருளாதாரமும் ஒழுக்கமில்லாத அரசியலும் ஒரு சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்றார் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கோட்பாடுகளும் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒட்டி அமைய வேண்டும் என்றார்.
இவர் மனிதனுக்குத் தேவையான தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை இன்றைய சமூக- பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்பு படுத்தி விவரித்தார்
உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மா ஆகியவற்றால் ஆக்கப்பட்ட மனிதனுடைய இந்த நான்கு கூறுகளுக்கான தேவைகள் ஒரே சமயத்திலும் ஒருங்கிணைப்புடனும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; இதை இயற்கைக்குப் பங்கமில்லாமல் பாரதப் பண்பாட்டுடன் செய்ய முயல வேண்டும் என வலியுறுத்தினார்.
சுதேசி பொருளாதரத்தை ஆதரித்தார். வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்து உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் வளங்களை ஊக்குவித்தார். இன்றைய காலங்களின் தேவை புதிய நகரங்கள் அல்ல; கிராமங்களின் தொழில்மயமாக்கலே என்றார்.
விவசாயிகள் அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளில் இருந்தும், பிற நேர்மையற்ற கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும்; விவசாயிகள் முதலாளிகளாகக் கருதப்பட வேண்டும்; பாரம்பரிய திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; உள்ளுர் சந்தைகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீன்தயாள் விரும்பினார்.
இருப்பினும், சுற்றுச் சூழலை அழிக்கும் நுகர்வுக் கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும்; இயற்கை வளங்களின் சமநிலை பாதிக்காதவாறு, அவ்வளங்கள் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும் வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஓவ்வொரு தொழிலாளியும் உணவைப்பெற வேண்டும் என்ற வழக்கமான முழக்கத்திற்குப் பதிலாக நம் பொருளாதாரத்தின் அடிப்படையாக அனைவருக்கும் உணவும் வேலையும் கிடைக்க வேண்டும் என்றார்.
தேசிய விழிப்புணர்வு, தேசிய அடையாளம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிற தீன்தயாள் உபாத்யாயா, பிளவு படுத்தும் மனப்பான்மை கொண்ட ‘மேற்கத்திய தேசியவாதத்தை’ எதிர்த்தார். தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய இவர், ‘தேசிய அடையாளமும் கலாசார சுதந்திரமும் இருக்கும்போதுதான் அரசியல் சுதந்திரம் அர்த்தமுள்ளதாகிறது.
‘எனவே, நம் தேசிய அடையாளம் குறித்த சிந்தனை அனைவருக்கும் தேவை; மேலும், நம் தேசிய அடையாளத்தை நாம் அறியாத வரை, நம்முடைய முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியாது’ என்றார். பண்டிட் தீன்தயாளால் முன்மொழியப்பட்ட அரசியல் தத்துவமான இந்த ஒருங்கிணைந்த மனிதநேயம் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்துகிற தத்துவமாக இருக்கிறது!
தொடர்புக்கு:+91 94438 50902dharmaws@yahoo.co.in
DINAMALAR REPORT
*******
FOLLOWING IS FROM FACEBOOK
பாரதத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாய (Pandit Deendayal Upadhyaya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார் (1916). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.
* கங்காபுரில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ராஜகரில் பள்ளி மேல்படிப்பும் பயின்றார். கணிதத்தில் சிறந்த மாணவராக விளங்கினார். 1937-ல் இன்டர்மீடியட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மேல்படிப்புக்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
* கான்பூர் எஸ்.டி. கல்லூரியில் சேர்ந்தார். இங்கு அவர் சுந்தர்சிங் பண்டாரி, பல்வந்த் மஹாசிங்கே ஆகியோரை சந்தித்தார். 1939-ல் பட்டம் பெற்றார். எம்.ஏ. படிப்பதற்காக ஆக்ரா சென்றார். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
* சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் இவரால் முதுகலைப் படிப்பைத் தொடர முடியவில்லை. அரசு வேலைக்கான தேர்வு எழுதப்போன சமயத்தில் வேட்டி, குர்தா, தலையில் தொப்பி சகிதம் சென்ற இவரைப் பார்த்து சிலர் ‘பண்டிட்ஜி’ என்று கிண்டலாக அழைத்தனர். ஆனால் அதுவே பின்னாளில் இவரது பெயருடன் நிலைத்துவிட்டது.
* இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார். தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-ல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
* 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
* இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
* தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
* ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
* தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 51.
பதிவு: ராஜலட்சுமி சிவலிங்கம், FACE BOOK REPORT 25-9-25
–SUBHAM–
தத்துவஞானி .தீன்தயாள் உபாத்யாயா!
Posted by Tamil and Vedas on September 25, 2025
https://tamilandvedas.com/2025/09/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%9e/
Post No. 15,024
Date uploaded in London – 25 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
அதர்வண வேத மந்திர எண்கள் பின்வருமாறு
அக்சத – காயமடையாத 4-9-8
அன்ய -த்யூஸ் -ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் 7-116-2
அபான – வெளிவிடும் மூச்சுக் காற்று 10-2-
பிராண, வியான ஆகிய காற்றுகளை ரிக்வேதத்தில் கண்டோம்
அப்வா – வயிற்று நோவு – 3-2-5
அருந்ததி – ஒரு மூலிகையின் பெயர் ; 4-13-1
கீழ் ஜாதியில் அக்ஷமாலா என்ற பெயருடன் பிறந்த பெண் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது ;அவள் வசிஷ்ட மகரிஷிக்கு மனைவியாகி சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களுள் ஒன்றானாள் ; அதை அராபியர்கள் ஆல்கால் ALCOL என்றனர் ; திருவள்ளுவர் குறளில் அது அலகை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அகண்டு – ஒரு வகைப் பூச்சி 2-31-2
அல்பஸயு – ஒரு வகைப் பூச்சி 4-36-9
அசரிக- (முடக்கு வலி) முடக்கு வாதம் 19-34-10
உபய– த்யூஸ் – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் மலேரியா போன்ற காய்ச்சல் 1-26-4; 7-116-3;
இந்த உபய என்ற சொல் இன்று வரை வைஷ்ணவர் கடி தங்களிலும் திருமண அழைப்பிதழ் களிலும் இடம் பெறுகிறது இரண்டும் என்பது பொருள்
கிலாச – வெண் குஷ்டம் 1-23-1,2;
க்ளிவத்வ/- ஆண்மையின்மை , அலி 6-138;
கண்டமாலா – கழுத்தில் வீக்கம்
கண்ட என்பதை கழுத்துக்குத் தமிழர்களும் ஏனையோரும் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்
நீல கண்ட – சிவனுக்கும் மயிலுக்கும் பெயர்
ஜடிங்கா – வலியைக் குறைக்கும் , மயக்கம் தரும் மூலிகை; பலாச நோய்க்கு மருந்து
(பலாச கீழே வருகிறது )
ஜ்வர – காய்ச்சல் 5-30-8
இன்று வரை நாடு முழுதும் பயன்படுத்தும் சொல்
த்ரிதியாக – 3 நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் /மலேரியா 1-25-4; 7-116-2;
பலாச – காசநோய் 4-98;6-14-1
யக்ஸ்மா – காசநோய் 5-38 and 16;
வருண கிரஹித – ஜலோதர நோய் / மகோதரம்
வித்ரியாக – இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் 5-22-13;
சீர்சாமய – தலைவலி ;ஆமய என்றால் நோய்; சிரஸ் என்றால் தலை 5-4-10;9-8-1;
சதாம் -தி – தினமும் வரும் மலேரியா ஜுரம் 1-2-13
ஹரிமா- மஞ்சள் காமாலை 19-44-2
***
ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் ஆண்- பெண் புணர்ச்சி பற்றிய சூக்தம் 10-85-37 உள்ளது
கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு செய்யவேண்டிய பும்ஸவன சீமந்தக் கிரியைகளை அதர்வண வேதம் விவரிக்கிறது . கர்ப்பவதிக்கு குளிகை மருந்து தருவதையும் குறிப்பிடுகிறது. அங்கே வரும் ஒரு அருமையான உருவகம் சொல்கிறது: AV 3-23
தாவரங்களே தந்தை, பூமியே தாய், சமுத்திரம் வேர், கடவுள் கொடுத்த மூலிகைகள் உனக்கு ஒரு நல்ல மகனை ஈன்ற உதவட்டும்
யாசாம் த்யெளவ பிதா, ப்ருத்வீ மாதா, சமுத்ரோ மூலம், விருதாம் பபூவ .
தாஸ்த்வா புத்ரவித்யாய தைவீ ப்ராவாந்த்யோ பவஹ
The plants which has been the father, earth the mother, ocean the root, let those herbs of the god favour thee, in order to acquire a son.
Yaasaam dhyau pithaa prthvee maathaa samudro moolam viroodhaam bhaboova.
Thaasthvaa putravidhyaaya dhaivee praavathyopavah –AV 3-23
தொடரும்…………………..
Tags- கர்ப்பம் அடைந்த பெண், ரிக், அதர்வண வேதங்கள், மருத்துவ சொற்கள், அபூர்வ தகவல்கள்- 2
Posted by Tamil and Vedas on September 25, 2025
https://tamilandvedas.com/2025/09/25/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae-2/

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,023
Date uploaded in London – —25 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 23-6-25 அன்று வெளியான கட்டுரை!
புதிய உண்மை – 7 விதமான ஓய்வு வேண்டும் ஒவ்வொருவருக்கும்!
ச. நாகராஜன்

டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித்
ஓய்வு எடுங்கள், ஒய்வு எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏழு விதமான ஓய்வு வேண்டும் என்று கண்டுபிடித்து புதிய உண்மையைச் சொல்கிறார் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித் என்னும் பன்னாட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்.
பணியையும் வாழ்க்கையையும் இணைக்கும் ஆய்வு நிபுணரான இவர் ஏழு வித ஒய்வை வற்புறுத்துகிறார் தனது புத்தகமான ‘சேக்ரட் ரெஸ்ட்’ (SACRED REST) என்ற நூலில்! படிக்க வேண்டிய நல்ல நூல் இது!!
1.உடலுக்கு ஓய்வு
முதன்முதலில் அன்றாடம் வேலை பார்த்துக் களைத்து இருக்கும் நாம் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தூக்கம், பகலில் குட்டித் தூக்கம் ஆகியவை இந்த வகையில் அடங்கும். தியானம், புத்துணர்ச்சி ஊட்டும் செயல்கள் ஆகியவை உடல் ஓய்வு தருவதில் திறன் வாய்ந்தவை என்று சொல்லலாம்.
2.மனதிற்கு ஓய்வு
இதைப் பெறுவது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது. இதற்கான எளிய வழியை டாக்டர் டால்டன் ஸ்மித் கூறுகிறார். அன்றாடம் வேலை செய்யும் போது இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் மனதிற்கு ஓய்வு கிடைக்கும். இன்னொரு வழி அன்றாடம் படுக்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பை எழுதுவது.
இன்னொரு வழியும் உண்டு : எண்ணத்தை நெகிழச்செய்தல். (THOUGHT DIFFUSION).
அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து உங்கள் எண்ணங்களை மனதில் ஓட விட வேண்டும். அதில் சொந்த உணர்ச்சியைக் கலக்காமல் அவை ஒவ்வொன்றாக மெதுவாக அதனதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வேண்டும். நீரோடை ஒன்றில் பூக்கள் மிதந்து செல்வது போல அல்லது வானத்தில் மேகக்கூட்டம் ஒவ்வொன்றாக மெதுவாக நகர்வது போல இது இருக்க வேண்டும்.
3.புலன்களுக்கு ஓய்வு
எப்போது பார்த்தாலும் டிவி அல்லது கம்ப்யூட்டர் திரை முன் இருப்பது, யாருடனாவது பேசிக் கொண்டேஇருப்பது, இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பது, குழந்தைகளுடன் இருப்பது அல்லது வளர்ப்பு மிருகங்களுடன் நேரத்தைச் செலவிடுவது – இவை அனைத்துமே அதிகப்படியாக நமது புலன்களை ஈடுபடுத்தும் செயல்களாகும். படுக்கப் போவதற்கு முன்னர் அன்றாடம் ஒரு நாற்பத்தைந்து நிமிடங்கள் டிவி திரை அல்லது சோஷியல் மீடியாக்களிடமிருந்து விலகி இருந்து பாருங்கள். புலன்களின் கூரிய சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
4.உணர்ச்சி ஓய்வு
நீங்கள் ஒரு விஷயத்தை அறிந்து மிகவும் சோர்வடைந்து விட்ட போது அதைப் பார்த்த ஒருவர், என்ன ஆயிற்று எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “ஃபைன்” என்ற வார்த்தை வாயிலிருந்து வந்தாலும் உள்ளுக்குள் மன அழுத்தம் இருக்கவே செய்யும்; இன்னும் கூடுதலாகிக் கொண்டே தான் இருக்கும். மாறாக வெளிப்படையாக, ” … இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்து விட்டேன்” என்று சொல்வது உங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். இன்னும், உற்சாகமாக இருப்பவர்களிடையே சென்று அவர்களுடன் கலந்து கொள்வதும் ஒரு நல்ல வழி தான் – உணர்ச்சி ஓய்வுக்கு!
5.சமூக ஓய்வு
நீங்கள் எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்பவரா அல்லது கலகலப்பாக அனைவருடனும் பழகுபவரா – இதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவருடன் இருக்கும் போது சக்தி அதிகமாகிறதா அல்லது சக்தியை இழக்கிறோமா? நம்முடைய சோஷியல் பேட்டரி சார்ஜ் ஆகிறதா அல்லது சார்ஜை இழக்கிறதா? உங்கள் பார்ட்னருடன் இதைப் பற்றிப் பேசினால் போதும் – ஒருவர் பார்ட்டியில் இன்னும் சற்று நேரம் இருக்கலாம் என்பார். இன்னொருவரோ உடனே போக வேண்டும் என்பார். ஆக சமூக நிகழ்ச்சிகளில் நாம் நமது பேட்டரியை நன்கு சார்ஜ் செய்து கொள்ளும் விதத்தில் கலந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
6.படைப்பாற்றல் ஓய்வு
ஓவியம் படைப்பது, இசையை அமைப்பது, எழுதுவது, இப்படி படைப்பாற்றல் துறைகளில் உள்ளவர்கள் ஓய்வே இல்லாமல் பணியைத் தொடர்ந்தால் அவர்கள் உடல் சோர்வு மனச்சோர்வு ஆகியவற்றை அடைவர். இதைப் போக்க அவ்வப்பொழுது இயற்கைச் சூழ்நிலைகளில் சிறிது நேரத்தைக் கழிக்கலாம். அதை உணர்ந்து அனுபவிக்கலாம். அல்லது கையில் உள்ள பிரச்சனையை மறந்து விட்டு சிறிது நேரம் ‘ஹாயாக’ இருக்கலாம்.
7. ஆன்மீக ஓய்வு
கடைசியாக ஒன்று. நமது மனமும் உடலும் ஆன்மீக ஓய்வுக்காக ஏங்குகிறது. நம்மை இன்னொரு பெரிய ஆற்றலுடன் இணைக்கவே மனமும் உடலும் பெரிதும் விரும்புகிறது. ஒரு நல்ல குழுவில் இணைந்து சேவை செய்வது, பிறருக்கு உதவுவது, பெரியோருடன் பழகுவது ஆகிய இவை எல்லாம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆலய வழிபாடு, யாத்திரையாகச் செல்வது பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆக இந்த ஏழு வித ஓய்வுகளையும் உங்கள் வாழ்வில் கொண்டு வந்து விடுங்கள்.
அப்புறம் பாருங்கள் – உங்கள் உடல் சக்தியையும் மனோசக்தியையும்.
அது ‘வேற லெவலில்’ இருக்கும்!
அப்போது நன்றி சொல்ல வேண்டியது – இந்தப் புதிய உண்மையைக் கூறும் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித்துக்குத் தான்!
***
Posted by Tamil and Vedas on September 25, 2025
https://tamilandvedas.com/2025/09/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-7-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5/
Posted by Tamil and Vedas on September 24, 2025
https://tamilandvedas.com/2025/09/24/jaffna-woman-tirunavukkarasu-tirukkural-calendar/
Post No. 15,022
Date uploaded in London – 24 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Proverbs on Words -Part 3
From word to deed as from a leaf to root
Fair words butter no cabbage.
-Serbian
A hard word is not always a hard heart.
A word spoken at the right moment is like a golden apple on a silver dish.
-Silesian proverbs
Just as a word appears so light to him who throws it, so it appears heavy to him who receives it.
The best word is the word that remains to be spoken words will pay for most things.
Spanish
**
A live word is more precious than a dead letter.
Golden words often come from a heart of copper–Russian
**
Spoken words are like winds, neither caught in a net nor overtaken with grey hounds –Romanian
The word that has departed grows on the way-Norwegian
Words must be weighed not counted- Polish
**
Words and deeds are not weighed in the same balance.
A word has hundred heads.
Words are like cherries; pick one and ten come.
Unspoken words cannot be recorded
Words need but little space.
Evening word, the wind carries away.
–Italian proverbs.
**
The written word remains-Latin
It is better to keep back one word than to speak two- Icelandic
It is a long way from words to deeds-Lettish
**
A bitter word comes from a bitter heart.
Words are like the bees, they have honey and a sting.
Words are dwarfs, but example are giants.
–Swiss proverbs.
Soft words hurt not the mouth- Swedish.
–Subham—
Tags- Proverbs, on words
Posted by Tamil and Vedas on September 24, 2025
https://tamilandvedas.com/2025/09/24/words-are-like-bees-they-have-honey-and-a-sting-post-no-15022/


Post No. 15,021
Date uploaded in London – 24 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 3
Now let us look at the medical glossary in the Atharva Veda:
Aksata – uninjured 4-9-8
Anya-dyus -fever that attacks on alternate days 7-116-2
Apaana – air breathed out 10-2-13
We have already seen praana and vyaana in the Rig Veda.
Apvaa – some stomach disease – 3-2-5
Arundhati – a plant used for healing 4-13-1
Arundhati was a low caste woman named Akshamala in the Manu smriti. But a star and a plant and a Nyaya are named after her. Her name figured at least six times in 2000 year old Sangam Tamil literature.
Arabs called it Alcol which is in Tirukkural- alakai.
Agandu – a species of insect 2-31-2
Alpasayu- an insect 4-36-9
Aasarika – rheumatic pain 19-34-10
Ubhaya – dyus – malarial fever that attacks with a gap of two days 1-26-4; 7-116-3;
The word UBHAYA for two or both is used until this day in letters and Vaishnavite invitations.

Kilaasa – leukoderma 1-23-1,2;
Kliivatva- impotency 6-138;
Gandamaalaa – inflammation of the glands in the neck.
Gandaa for neck is used in all te names
Neelakaandan – blue necked Shiva or peacock G=K
Jadinga – a sedative plant used by Trikakuda to treat balaasa.
Jvara- fever 5-30-8
Until this day the word jvara is used.
Tritiyaka- malarial fever that attacks with a gap of three days 1-25-4; 7-116-2;
Balaasa – consumption of phthisis 4-98;6-14-1;
Yaksma- TB 5-308 and 16;
Varuna grhita – suffering from Jalodhara
Vitritiyaka- malarial fever that attacks with a gap of two days 5-22-13;
Sirsaamaya – headache5-4-10;9-8-1;
Sadam -di -malarial fever that rises daily 1-2-13
Harimaa – jaundice 19-44-2
***
Terms in the field of SURGERY
Asthiivantau- knee cap 10-2-2
Ucchalankhau- the portion between heel and ankle 10-2-1;
Kakaatika- bones of mouth10-2-8
Wkabandha – torso 10-2-3;
Kapaala – skull 10-2-8
This word is used in Tamil and all medical books as cephala; C=K;
Kusindha- loins, pelvis 10-2-3
Kha – orifice 10-2-6;
Gulphau- ancles 10-2-1;
Grivaa- neck 10-2-4
Catustaya – elastic bones above the knee 10-2-1, 2;
Citya hanov frame of the chin 10-2-8;
Janghaa- thigh 10-2-1
Jaraayu- outer membrane of an embryo 1-27-1;
Parsu- rib 9-7-6;
Paarsni- heels 10-2-1;
Paratistha- foot 10-2-1;lalaata – forehead 10-2-8;
Virya – semen 10-2-5;
Sithira – cartilage – 10-2-3;
Sapta khani siirsaani- seven pores of the head 10-2-5;
Sroni- buttocks 10-2-3;
Bhagwan Singh has taken a lot of time in compiling various lists under different heads in his book THE VEDIC HARAPPANS.
Those who are interested may go to each hymn and find more medical secrets.
Tenth canto has many important terms. One can compare these terms with the terms in the Samhitas of Sushruta and Caraka. A lot of scope for medical research in the Vedas.
If one studies the hymn where the medical terms occur, one will be surprised to find out newer things in medical systems.
Known Medical Miracles
We already know the medical miracles in the Vedas particularly linked with the Asvini Devas, the doctors of the Vedic period.
This shows considerable advancement in the medical field. Rejuvenation of Cyavana (RV 10-39-4) and Purandhi’s husband (RV 1-116-13), setting the fractured thigh of Vispala through support (RV 1-116-13) and curing of the blindness of Rjrsva (RV 1-116-17).
–subham—
Tags – medical glossary, jargon, Atharva Veda, Rig Veda, Surgery, part 3
Posted by Tamil and Vedas on September 24, 2025
https://tamilandvedas.com/2025/09/24/medical-knowledge-of-vedic-hindus-part-3-post-no-15021/
Post No. 15,020
Date uploaded in London – —24 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2025 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமான கட்டுரை!
தெரியாமல் ஆளைக் கொல்லும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்!
ச. நாகராஜன்
தெரிந்தே கொல்லும் வியாதிகள் உலகத்தில் ஏராளம் இருக்க தெரியாமல் ஆளைக் கொல்லும் ஒரு புதிய பொருள் நவீன உலகத்தில் உண்டாகி இருக்கிறது. இந்தப் பொருளை உருவாக்கியவர்கள் மனிதர்களே!
இந்தப் பொருள் தான் மைக்ரோ பிளாஸ்டிக்!
பெரிய பிளாஸ்டிக் துகள்களிலிருந்து உருவாகும் இவை ஒரு நானோ மீட்டரிலிருந்து 5 மில்லிமீட்டர் வரை இருக்கும்.
ஒரு நானோ மீட்டர் என்பது மனித தலைமுடியின் அகலமாகும்.
சரி, இந்த பிளாஸ்டிக் துகள்களை உருவாக்குபவர் யார்? மனிதர்களே தான்!
சிகரட் பில்டர்கள், நைலான், பாலிஸ்டர் துணிகள், ஏராளமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இவற்றின் மூலம் உருவாவது தான் பிளாஸ்டிக் துகள்கள்!
கடல் உணவிலிருந்து நமக்கு விடமின் டி மற்றும் ஒமேகா 3 கிடைப்பது உண்மை தான்! ஆனால் இப்போது கடல் வாழ் மீன்களைச் சாப்பிடும்போது நாம் எண்ணற்ற மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை!
மனிதர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தூக்கி எறியும் கழிவுப் பொருள்களை கடல் வாழ் உயிரினங்கள் உண்ண, அது நம் உணவுச் சங்கிலியின் உள்ளே புகுந்து விடுகிறது.
ஒரு இஃப்ரிமெர் ஆய்வின் படி ( IFREMER RESEARCH) 24400 கோடி அளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கடலின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன.
1950களிலிருந்து பிளாஸ்டிக்கின் உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போனது. ஐரோப்பாவில் மட்டும் 2022ம் ஆண்டு வாக்கில் இது 580 லட்சம் டன்களை எட்டியது.
அப்படி என்றால் உலகளாவிய விதத்தில் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து திடுக்கிடலாம்!
2017ல் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதன்படி ஒவ்வொரு மனிதனும் வருடத்திற்கு 11000 பிளாஸ்டிக் துகள்களை உண்ணுகிறார்கள்!
காலப்போக்கில் காற்றினாலும், கடல் அலைகளினாலும் மைக்ரோ ஆர்கானிஸம் உடைந்து தூள் தூளாகி நானோ பிளாஸ்டிக்காக் ஆகிறது.
இவை சுற்றுப்புறச் சூழலில் காற்று, நீர், மண் உள்ளிட்டவற்றில் கலந்து அவற்றை மாசு படுத்துகிறது.
இந்த மோசமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் ஆக்கிரமிப்பிற்து பயோஅக்குமுலேஷன் (bioaccumulation) ‘என்று பெயர்.
இவை கடல் வாழ் உயிரினங்களின் மீது எல்லையற்ற மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சோதனைச்சாலைகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை ஜீரண உறுப்புகளை தடைப்படுத்தி டிஎன் ஏ சேதத்தைக் கூட விளைவிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக்கில் அதிக அளவு phthalates இருப்பதால் எண்டாக்ரின்களை சீர் குலைக்கிறது. இவை ஹார்மோன் அமைப்புகளில் சேர்ந்து கடல்வாழ் உயிரினங்களையும் மனிதர்களையும் ஆபத்துக்குள்ளாக்கி ஆரோக்கியக் கேட்டை உருவாக்குகிறது.
அடுத்து மனிதரை எடுத்துக் கொண்டோமானால் மனிதரிடம் தீய பாக்டீரியாக்களைச் செலுத்தி அபாயகரமான வியாதிகளை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உருவாக்குகின்றன.
மனிதர்கள் வாய் மூலமாக உண்ணும் உணவுப் பொருள்களாலும், சுவாசிக்கும் மூச்சுக் காற்று மூலமாகவும்,, தோலில் ஏற்படும் தொடுதலாலும் மைக்ரோ பிளாஸ்டிக்கின் அபாயமான விளைவுகளுக்கு ஆளாகிறார்கள்!
குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதனாலும் சிறுவர்கள் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலாலும் தொழிலாளர்கள் டெக்ஸ்டைல் ஆலைகள், கட்டுமானப் பணிகள், உள்ளிட்டவற்றில் பணியாற்றும் போதும் இதனால் அதிக அளவு அபாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்த அபாயத்தை எப்படித் தடுப்பது?
சாமானியன் கூட இந்த அபாயத்தை முயற்சி செய்து தடுத்து விடலாம்.
இன்று பெருமளவும் நீரைப் பருக்க வாட்டர் பாட்டில்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையோ அல்லது ஸ்டீல் வாட்டர் பாட்டில்களையோ உபயோகிக்கலாம்.
வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கெடுத்து ஒவ்வொன்றாக அவற்றை அதற்குரிய கழிவுப் பெட்டிகளில் போட்டு விடலாம்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து அதற்குப் பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தலாம்.
சிந்தடிக் பைபர்களினால் ஆன துணி வகைகளின் (synthetic fabrics (polyester, nylon,acrylic) பயன்பாட்டை அறவே நீக்கலாம்.
கார் டயரிகளில் உள்ள இவை சாலைகளில் உரச உரச ஏராளமான துகள்களை சுற்றுப்புறமெங்கும் தூவிக் கொண்டே செல்கிறது. ஆகவே கார் டயர்களின் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
வீட்டில் உள்ள பைபர் தரை விரிப்புகள், மர சாமான்கள், துணி வகைகளிலிருந்து ஏற்படும் தூசிகளைத் தவிர்க்கலாம்.
தனிநபர் மேக் அப் சாதனங்களில் – காஸ்மெடிக் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. ஆகவே இவற்றைத் தவிர்க்கலாம். இவற்றை வாங்கும் போது பாலி எதிலின் பாலி ப்ரொபிலின் நைலான் (polyethylene (PE), polypropylene (PP), nylon (PA))அடையாளக் குறிகள் உள்ளதா என்று பார்த்து அவற்றைத் தவிர்க்கலாம்.
அடிக்கடி துணிகளைத் தோய்க்காமல் சீரான இடைவெளியில் தோய்த்து துகள்களை உருவாக்குவதைத் தடுக்கலாம். அல்லது ஆர்கானிக் காட்டன் துணிகளை மட்டுமே பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் நீரில் 2,40,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை அல்லவா? ஆகவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வாங்குவதை அறவே நிறுத்தலாம்.
மறு சுழற்சிக்கு உள்ளாகும் பிளாஸ்டிக் பொருள்களைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
கடைக்காரரிடம் பேக்கிங் செய்யும் போது பிளாஸ்டிக் பொருள்கலைப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக முன்னமேயே சொல்லி விட வேண்டும்.
டெப்லான், நான் – ஸ்டிக் சமையல் சாதனங்களை வாங்கவே கூடாது.
நாளடைவில் டெப்லான் மைக்ரோ பிளாஸ்டிக்கை உணவுப் பொருளில் சேர்த்து விடும்.
சூயிங் கம் சாப்பிடுபவராக இருந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அதிலும் பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது!
இப்படி அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் இனி ஆய்வுக்கு நாமே உட்படுத்தி மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஒழித்தால் தான் நாமும் வாழ முடியும்;
நமது அண்டைவீட்டாரும் ஏன் சந்ததியினரும் கூட இந்த அபாயம் இல்லாமல் வாழ முடியும்.
செய்வோமா?
**
Posted by Tamil and Vedas on September 24, 2025
https://tamilandvedas.com/2025/09/24/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
Post No. 15,019
Date uploaded in London – 23 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாலாயிரம் முதல் எடடாயிரம் ஆண்டுகள் பழமையுடையவை என்று பேராசிரியர் வில்சன், ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் தேதியிட்ட ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள் நிறைய உள்ளன. அவை இடம்பெறும் சூக்தங்களை ஆராய்ந்தால் புதிய, புதிய அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன ! முதல் அதிசயம் அந்த சூக்தங்களில் உள்ள நிறைய சொற்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்.
அதர்வண வேதத்தில் அதிக மருத்துவ சொற்கள் உள்ளன; ஏனெனில் அந்த வேதம் மருந்துகள், மூலிகைகள், நோய் தீர்க்கும் தாயத்துகளைப் பற்றி நிறையவே பேசுகிறது .
பிற்காலத்தில் எழுந்த சதபத பிராமணம் , அதைத் தொடர்ந்து வந்த பிருஹத் ஆரண்யக உபநிஷத் முதலியவற்றிலும் மருத்துவக் குறிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் சமய சம்பந்தமான புஸ்தகங்கள் ; இதற்குப் பின்னர் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட சுஸ்ருத, சரக சம்ஹிதைகளில் முழுக்க முழுக்க மருத்துவ விஷயங்கள் உள்ளன; அவைகள் குறிப்பிடும் எலும்புகள், தசைகளின் எண்ணிக்கையும் இருதயம் பற்றிய வருணனையும் இன்றைய மருத்துவ நூல்களில் உள்ளவைகளைப் போலவே இருப்பது வியப்புக்குரிய விஷயம் ஆகும் .
விந்தையிலும் விந்தை என்னவென்றால் உலகில் வேதங்கள் எழுந்த காலத்தில் ஏனைய பழைய மொழி எதிலும் நூல்களே எழுதப்படவில்லை; செத்துப் போனா சுமேரிய, எகிப்திய மொழிகளில் கூட அதிகம் இல்லை.. அதைவிட உலக அதிசயம் என்னவென்றால் பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் இன்றுவரை இதை வாய்மொழியாக பயின்றும் பரப்பியும் வருகின்றனர் ;அதனால்தான் பாரதியாரும் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாட்டு பாடி மகிழ்ந்தார். அதர்வ வேதம் 2-33. துதியில் உடலின் உறுப்பு ஒவ்வொன்றிலிருந்தும் நோயை அகற்ற வேண்டுகோள் வருகிறது.
ரிக்வேதத்தில் ஒரே பாடலில் 27 உடல் உறுப்புகள் வந்து விடுகின்றன! அனைத்து மருத்துவர்களும் அந்த சூக்தத்தை மனப்பாடம் செய்யவேண்டும்.
முதலில் ரிக்வேத பட்டியலைக் காண்போம்; அதில் பத்தாவது மண்டல எண்ணுள்ள உறுப்புகளைக் கணக்கிடுங்கள் ; துதிப் படாலில் இவ்வளவு என்றால் மருத்துவ நூல்களில் எவ்வளவு இருக்கிறது என்பது விளங்கிவிடும்.
Rig Veda Mandala 10 Hymn 163
अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि |
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||
गरीवाभ्यस्त उष्णिहाभ्यः कीकसाभ्यो अनूक्यात |
यक्ष्मं दोषण्यमंसाभ्यां बाहुभ्यां वि वर्हामि ते ||
आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि |
यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते ||
ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम |
यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||
मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||
अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||
akṣībhyāṃ te nāsikābhyāṃ karṇābhyāṃ chubukādadhi |
yakṣmaṃ śīrṣaṇyaṃ mastiṣkājjihvāyā vi vṛhāmi te ||
ghrīvābhyasta uṣṇihābhyaḥ kīkasābhyo anūkyāt |
yakṣmaṃ doṣaṇyamaṃsābhyāṃ bāhubhyāṃ vi vṛhāmi te ||
āntrebhyaste ghudābhyo vaniṣṭhorhṛdayādadhi |
yakṣmammatasnābhyāṃ yaknaḥ plāśibhyo vi vṛhāmi te ||
ūrubhyāṃ te aṣṭhīvadbhyāṃ pārṣṇibhyāṃ prapadābhyām |
yakṣmaṃ śroṇibhyāṃ bhāsadād bhaṃsaso vi vṛhāmi te ||
mehanād vanaṃkaraṇāl lomabhyaste nakhebhyaḥ |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||
aṅghād-aṅghāl lomno-lomno jātaṃ parigvedaaṇi-parigvedaaṇi |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||
***
அதர்வ வேதம் 10-8-43 துதியில் இருதயத்தை ஒன்பது வாயில்கள் உடைய தாமரை என்று வருணிக்கிறது; இருதயத்தை ஒரு கோணத்தில் பார்த்தால் தாமரை மொட்டு போலவும் ரத்தக் குழாய்களுடன் பார்த்தால் மலர்ந்த தாமரை மலர் போலவும் தென்படும் . தமனி போன்ற ரத்தக்குழாய்களை கூட வேத மந்திரங்கள் குறிப்பிடுகின்றன உடல் நலத்தில் அவ்வளவு அக்கறை!
சதபதப் ப்ராஹ்மணம் (1000 BCE) என்னும் நூலில் எலும்புகள் தண்டுவடம் பற்றிய சொற்கள் வருகின்றன; துதி 12-3-2-3/4 ல் என்ன என்ன இடத்தில் எவ்வ்ளவு எலும்புகள் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறது நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது இதைப் பார்த்திருக்கலாம்.
சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூலில் 300 எலும்புகளைக் கணக்கிடுகிறார் ; சரகர் 500 தசைகளைக் குறிப்பிடுகிறார் .
சரகர் 200 ரத்த நாளங்களையும் அவைகளிலிருந்து பிரிந்து செல்லும் 700 நுண்ணிய குழாய்களையும் எண்ணி இருக்கிறார் ; இன்றைய மருத்துவ நூல்களில் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையை எழுதியுள்ளனர் .
அகதா – cured 10-97-2 குணம் அடைந்த.
அஞ்சஸ் – ointment, a mixture 1-132-2 களிம்பு /மை.
ஆயிண்ட்மென்ட் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்தது.
அஜ்னாத யக்ஸ்மா – இனம் தெரியாத காச நோய் 19-61-1; in AV 3-11-௧
அனானிமஸ் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்தது
அப்வா – வயிற்று நோய் 10-193-12; in AV 3-2-5
அறுகுன – healthy 6-39-2 ஆரோக்கியமான;
ஆரோக்கியம் என்ற சொல்லின் மூலம் இது ;
ஓஷதி – medicine 10-97- மருந்து
அவுடதம் என்று தமிழ் வைத்திய நூல்கள் எழுதுகின்றன .
குசும்பக –1-191-16 விஷப் பூச்சி
ஜலாச –2-33-7; 7-35-6 மருந்து
பிராண – air inhaled 1-48-10 உள்வாங்கும் மூச்சு
பிஷஜே – physician 2-33-4, 6; 9-112-1; 10-97-6; மருத்துவன்
பேஸஐ – மருந்துகளை அறிந்தவன்
1-23-19; 2-33-7; 5-53-14;6-74-3;
மன/ ம் – mind 1-25-3; மன/ ம்
விஸ்வபேஸஐ – சகல கலா வல்லவன் / மருந்து விஷயத்தில்
10-60-12; 10-137-3;
விசூசி – வயிற்றுப் போக்கு 6-74-2; 8-14-15;visarmaan- dissolving 5-42-9;
வ்யான – உடல் முழுதும் வியாபிக்கும் காற்று 6-74-4; 7-88-7;
ஹ்ரூதய – heart 6-53-8 இருதயம்
இதில் மனம், இருதயம் என்பதை தமிழர்களும் ஆங்கிலேயர்களும் பயன்படுத்துகிறார்கள்
மனஸ் = மைண்ட்
ஹ்ருத் – ஹார்ட்
****
அறுவைச் சிகிச்சை surgery சொற்கள்
ரிக் வேதத்தில் உள்ள பத்து மண்டலங்களில் உள்ளவை
அம்சேள – தோள்கள் – shoulder blades 1-158-5;
அணூக்யா – முதுகு எலும்பு 10-163-2;
அங்க -உடல் உறுப்பு 10-85-3
தமிழிலும் பயன்படுத்துகிறோம்
அங்குலி விரல்கள் 10-85-30;10-97-12; 10-163-6;
அப்சஸ் – உடலின் முன்பகுதி 1-122-15;
அஸ்தி -எலும்பு 1-84-13;
இறந்தவர்களின் எலும்பினையும் சாம்பலையும் கரைக்கும் போது இந்துக்கள் பயன்படுத்தும் சொல்; இதிலிருந்து ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற ஆங்கிலச் சொற்கள் உதித்தன
அண்டெள – விதைக் கொட்டை 1-104-8; 10-86-7;
ஆத்மன் -தலையற்ற உடற் பகுதி 9-74-4; 10-163-3;
அந்த்ராணி – குடல் 4-18-13; 10-153-௩
இன்டெஸ்டைன் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம்;
உபஸ்த – மூடிய பகுதி 2-35-9;2-41-21;7-6-6;
உரஸ் மார்பெலும்பு, விலா 1-158-5; 10-155-4;
ஊரு – தொடை 10-90-11;
உஷ்ணிதா – பிடரி 10-163-2, 4;
கர்ண – காது 2-39-6;
மஹாபாரத கர்ணனை நினைவு படுத்தும் சொல்;
கிகாச – விலா அல்லது முதுகெலும்பின் ஒரு கண்ணி 10-163-2;
சக்ஷு – கண்கள் 1-22-20;
ஜானு – மூட்டு 1-116-15; 1-118-8; 10-119-10;
ஜாயிண்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம்
ஜத்ரு – விலா எலும்பு 8-1-12;
ஜானுவோ சாந்தி -அடி வயிற்றெலும்பு 10-15-6;
ஜிஹ்வா –நாக்கு 1-87-5;2-1-13; 3-35-9;
த்வக் – தோல் 1-28-9;3-21-5; 8-1-௩௨;
தந்த – பல் 4-6-8;
டென்டல் க்ளினிக், டென்டிஸ்ட் போன்ற சொற்களை ஆங்கிலத்தில் காண்கிறோம் .
நக – நகம் 10-28-10;
நாச – மூக்கு 2-39-6;
நாசிகா – மூக்குத்துவாராம் 10-163-1;
நோஸ் நேசல் போன்றவை ஆங்கிலத்தில் வழங்குவது ஸம்ஸ்க்ருதமே.
பவனஹ – spondyls 10-68 9; தண்டுவட எலும்புப் பாதிப்பு
பாயு – குதம், ஆசனவாய் 1-31-12/13;2-2-4; 6-15-8;
ப்ரஸ்டிஹ் –விலா எலும்புகள் 10-87-10;
ப்ரஸ்த – முதுகு 1-58-2;
பிளாசி – குடலின் பகுதி 10-163-3;
பாஹு – முன்கை 1-95-7; 6-51-12;
வாகு வளையம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு
பாஷத் – அடி வயிற்று எலும்பு 6-3-4; 6-14-1; 10-86-7;
மஸ்திகா – மூளை 10-163-1;
முகம் – வாய்ப் பகுதி 6-75-15;; 10-90-11/12;
தமிழுக்கு முகம் இல்லை ஸம்ஸ்க்ருதத்துக்கு வாய் இல்லை என்பது கிண்டல் மொழி ; அதாவது வேறு சொற்கள் இல்லை
முஷ்கயோஹ் – விதைப்பை 10-38-5;
மேதஸ் – எலும்பு மஜ்ஜை அல்லது நிணம் 3-21-1, 2, 4;
யோனி – பெண் உறுப்பு 1-79-3;
லோம / ரோம – மயிர் 10-163-5, 6;
வனிஸ்த்து – மலக்குடல் , அல்லது குடலில் ஒரு பகுதி
வ்ராஸ் நவ் – விதைப்பை 10-66-7;
சிரஸா – தலை d 7-18-19; 10-87-16;
சேகம் – விந்து 3-31-1; 4-16-3;
சிரஸ், ரோமம் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும்.
செப – \ஆன் குறி 1-23-22; 10-85-37;
ஸ்கந்த – தோள் 1-32-5;
ஸ்தன – தாய்ப்பால் சுரக்கும் உறுப்பு 2-39-6;
சிரமம் – எலும்பு முறிவிவு அல்லது காயம் 1-117-19’
சுரோணி -இடுப்பு, ஆசனவாய் 10-163-4;
ஹனு – தாடை 4-18-9;5-36-2;
ஹனு/ மன் எல்லோருக்கும் தெரிந்த கடவுள்
To be continued…………………………..
Tags- ரிக், அதர்வண வேதங்களில், மருத்துவ சொற்கள், part 1
Posted by Tamil and Vedas on September 23, 2025
https://tamilandvedas.com/2025/09/23/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/
Post No. 15,018
Date uploaded in London – 23 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia Part 11 One Thousand Interesting Facts! -Part 11
76.
தொல்காப்பிய கந்தழி மர்மம்
Khandali Kodinilai Valli is in a Sutra of Tolkappiam, which Tamils consider as the oldest book in Tamil. This grammatical wok used three words in the Invocation to God (Kadavul Vaazththu in Tamil) rule. The meaning is debated until this day. Two commentators Nachinarkiniyar and Ilampuranar gave us two different interpretations. Similar sounded words exist in Sanskrit, but their meaning has nothing to do with God.
I wrote two articles in 2014 and 2020 giving the gist of ancient interpretations. Lord Krshina’s destruction of CHO of demon Banan is sung under this title according to later works.
But interestingly this word is found in an inscription of business community. The meaning given there deepens its mystery.
500 Merchants Group ஐந்நூற்றுவர்
Businessmen in ancient India formed guilds (cartels) and monopolised business in particular products , for example Spices, Grains, Cloths or monopolised trade in a particular area or region.
Inscriptions of Ainnurruvar / group of 500 are found in different parts of South India. They are available from ninth century CE. One of the inscriptions at Kamudi in Tamil Nadu records the following eulogy:
Svasti sri samasta- bhuvanaasrya – pancasata (500)- viirasaasana – lakshana- Lakshita Lakshmi
Vaksasthala – Alankrita Sri Vaasudeva- Khandlali- Mulabhadra– Udhbhava- Sri Viiraparameswarikku
Makkal- aagiya pathinettu (18) -pattinamum muppaththirendu(32) velaappuramum- aruvaththu naangu(64) kadikaitaavalamum chettiyum chettiputtirarum kavaraiyum gaamunda – svaamiyum siriya tolil vaariyamum
Ariyam payinra aavanakkaararum vendanum veerarum kottaiyum ullitta viirar ……………………….
Another inscription with slight variation is seen in
Samudrapatti .
This can be interpreted as the above guild possess 500 charters called viirasaasanas as their chest being adorned by goddess Lakshmi as having descended from gods vaasudeva, khandali , and muulabhadra as the sons of Parameswari, these merchants used to transact in 18 pattinas, thirty two coastal towns/velaapurams and sixty four places where goods were loaded and unloaded or stored/ kadigai taavalam.
(This inscription and its English translation is taken from an article written by N. Geetha in Ancient Sciences and Archaology, Volume Two, Bharatiya Kalaprakashan , Delhi 2007).
As soon as I saw the word KHANDALI in the inscription I copied it from the book. For the first time I came across a God called KHANDALI and Muulabhadra.
Mūlabhadra (मूलभद्र):—[mūla-bhadra] (draḥ) 1. m. Kaṃsa. Is the uncle of Lord Krishna according to Wisdomlib.org
I doubt the inscription meant Kamsa here. So both Khandali and Muulabhadra, Gods of business community add more puzzles. The community worshipped both Lakshmi and Parameswari according to the above inscription. That means they respected both Shiva and Vishnu sects.
If we go through more inscriptions and books of business communities we may solve the puzzle of KHANDALI.
***
Kodinilai, Kanthazhi, and Valli are terms mentioned in the Tolkappiyam, an ancient Tamil grammatical work, specifically in Sutra 88 of the Porul section. While the exact meaning is debated, some scholars interpret these as names for the Sun, Fire, and Moon, respectively, suggesting the prevalence of fire and sun worship in ancient Tamil Nadu.
Purath thinai Iyal, Sutra 88.
“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்
Interpretation:
According to the oldest commentator, Ilampuranar, Kodinilai refers to the Sun, Kanthazhi to Fire (Agni), and Valli to the Moon.
Kanthu is in the Vedas associated with God. Even today we have Kodi Kambam / Dwaja Shambam in South Indian Temples. They hoist God’s flag on it during festivals.
Commentator Ilampuranar, suggests these terms indicate ancient worship of the Sun, Fire, and Moon.
However, the words Kodinilai and Kanthazhi are noted to be absent from other Sangam Tamil literature, adding to the mystery surrounding their usage.
In essence, these terms provide insights into ancient Tamil religious practices, potentially linking them to celestial bodies and elemental worship, even though their specific meanings are subject to scholarly interpretation
***
திசையாயிரத்து ஐஞ்நூற்றுவர் வணிகக்குழுவின் (Thisaiyaarathu Ainootruvar Merchant’s Guild) கல்வெட்டு.
These people had their head quarters in Aihole in Chalukya territory. Several inscriptios are available from South India and South East Asia in Sanskrit, Tamil, Telugu and Kannada.
***
கந்தழி in Sanskrit Dictionary
खण्डाली – khaNDAlI – f. – pond
–subham—
Tags- Khandali, Mystery, Tolkappiam, Merchant guilds, Kamudi Inscrition, 500 merchants Ancient Tamil Encyclopaedia Part 11 One Thousand Interesting Facts! -Part 11
Posted by Tamil and Vedas on September 23, 2025
https://tamilandvedas.com/2025/09/23/tamil-khandali-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf-mystery-deepens-part-11-post-no-15018/