தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 6-12-18 (Post No.5744)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 6 December 2018


GMT Time uploaded in London – 8-48 AM

Post No. 5744


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இன்றைய குறுக்கெழுத்துப் போட்டியில் ஆறு தமிழ்ச் சொற்கள் உள. அவற்றைக்கண்டுபிடிக்க உதவியாக சில வருணனைகள் தரப்பட்டுள்ளன. விடையும் கீழே கிடைக்கும்.

குறுக்கே

2.வற்றாது வளம்தரும் பொன்னி ஆறு

4. ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்ற முனிவன்

5.மும்மூர்த்திகள் அவதரித்த தலம்

கீழே

1.கார்பன் டை ஆக்ஸைட்

2.என்ன செய்வது காலத்தின் நிலை அப்படி உள்ளது; சிருஷ்டி,,,,, லய காரண, காரிய……

3.மஞ்சரி,பாப்பா பத்திரிக்கை ஆசிரியர் –பிரபல எழுத்தாளரின் வாஹனம்

  * * * * * *
* கா   வி ரி தி *
*   * * ஜ. *
வி ஸ் வா மி த் ன்
  * தி * * கா *
*   தி * வா * ர் *
*   * * யு * * *




குறுக்கே

2.காவிரி நதி,4. விஸ்வாமித்ரன், 5.திருவாரூர்

கீழே

1.கரியமில வாயு,, 2.கால ஸ்திதி, 3.தி.ஜ.ர.கார்

XXX

குறுக்கே

2.காவிரி நதி- வற்றாது வளம்தரும் பொன்னி ஆறு

4. விஸ்வாமித்ரன்  — ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்ற முனிவன்

5.திருவாரூர்- மும்மூர்த்திகள் அவதரித்த தலம்

கீழே

1.கரியமில வாயு– கார்பன் டை ஆக்ஸைட்

2.காலஸ்திதி- என்ன செய்வது காலத்தின் நிலை அப்படி உள்ளது; சிருஷ்டி,,,,, லய காரண, காரிய……

3.தி.ஜ.ர.கார்- மஞ்சரி, பாப்பா பத்திரிக்கைஆசிரியர் –பிரபல எழுத்தாளரின் வாஹனம்

–SUBHAM–

அயர்லாந்தில் சகோதரி நிவேதிதா வீட்டுக்கு விஜயம்! (Post No.5743)

Written by Santanam Srinivasan (brother of London swaminathan)


Date: 6 December 2018


GMT Time uploaded in London – 7-29 am

Post No. 5743


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

(English version of this article is posted already)

சென்னையிருந்து பிரிட்டனிலுள்ள மாஞ்செஸ்டருக்குச் சென்றேன். அங்கிருந்து அயர்லாந்தின் தலைநகரான டப்ளினுக்குச் சென்றேன். அயர்லாந்தின் வடக்குப் புகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது. அங்கு ஸிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) பிறந்த ஊருக்கு என்னையும் என் மனைவியையும் நண்பர் அழைத்துச் சென்றார். அயர்லாந்து நாட்டிலிருந்து பிரிட்ட்ஷ் ஆட்சியின் கீழுள்ள வட அயர்லாந்தில் தங்கு தடையின்றி நுழைந்தோம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லுவதால் எல்லைச் சாவடி, சுங்கச் சாவடி  தடைகள் இருக்குமோ என்று நினைத்த எனக்கு ஒரு தடையும் மின்றி வீட்டுக்குள் நுழைவது போல நுழைய அனுமதித்தது வியப்பாக இருந்தது.

அந்த ஊரின் பெயர் டங்கனான். அதன் மேயர் அவருக்கே உரித்தான டவாலி, சேனம் முதலியவற்றைப் போட்டுக்கொண்டு, எங்களை வரவேற்றார்.

ஏன்?

இந்தியா என்று சொன்னவுடன் அவ்வளவு மதிப்பு ( அடுத்த பக்கமுள்ளஅயரலாந்தின் தற்போதைய பிரதமர் இந்திய வம்சாவளியினர் என்பதும் நினைவுகூறத் தக்கதே.)

சகோதரி பிறந்த அகத்தைப் பார்க்க வந்தோம் என்று சொன்னவுடன் உதவியாளரை அழைத்து இவர்களை அனைத்து இடங்களையும் சுற்றிக் காண்பியுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டார். அவரும் எங்களை அழைத்துச் சென்றார்.

நாங்கள் சந்தித்த டங்கனான் நகர மேயரின் பெயர் ஸ்யான் மக்பீக். (Sean McPake, Mayor of Dungannon) அவர் தனது வீரப் பிரதாபங்களையும் அவிழ்த்துவிட்டார். அரசியல்வாதிதானே! நகரின் பெருமையை எடுத்துரைத்தார்.

ஆயினும் ஸிஸ்டர் நிவேதிதா பிறந்த இடத்துக்குப் போனபோது பெரிய மருந்துக் கடைதான் அந்த இடத்தை ஆக்ரமித்து இருந்தது. போர்டு கூட அவர் வசித்த ‘வீதி’ என்றே சொன்னது. சிறிது ஏமாற்றமே.

( நம்மூர் அரசியல்வாதிகள் போல இடத்தை ‘ஆட்டை’யைப் போட்டுவிட்டார்களோ என்ற ஸம்ஸயம்! )

அந்த இடத்தின் கதை பற்றி சொல்லுகையில் ராமகிருஷ்ணா மடத்துச் சாமியார்ஒருவர் வந்து அதைத் திறந்து வைத்ததாகவும் அந்த இடத்தைப் புதுக்குவதில அவர்களுக்கு ஆர்வமுளதுஎன்பதையும் அறிந்தோம்.

அதெல்லாம் சரி. யார் அந்த ஸிஸ்டர் நிவேதிதா என்று வினவும் அப்’பாவி’களுக்கு விக்கி பீடியாவில் நிறைய தகவல் உள்ளது என்று விடை தருவேன்.

சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட்  எலிஸபெத் நோபிள்.

அவர் பிறந்த தேதி- 28 அக்டோபர் 1867

சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யை

அவர் இறந்த தேதி – 13 அக்டோபர் 1911

இறந்த இடம்- டார்ஜீலிங்

25 மார்ச் 1898-ல் அவருக்கு சகோதரி நிவேதிதா என்ற பெயரை, விவேகாநந்தர் நாமகரணம் செய்தார்.

மெத்தப் படித்த அவருக்கு, ஆன்மீக தாகம் எடுத்தது. கிறிஸ்தவ மதத்தில்விடை கிடைக்கவில்லை புத்தசமய நூல்களில் மூழ்கித் திளைத்தார். அவ்வமயம், அமெரிக்காவில்இந்து மதக் கொடியைப் பறக்கவிட்டு புகழ் எய்திய சுவாமி விவேகாநந்தர் லண்டனில் மூன்றுமாதம் தங்கிச் சொற்பொழிவு ஆற்றினார். மார்கரெட் நோபிள் கேட்ட சந்தேகங்களுக்கு விடைபகர்ந்தார். சூரியனைக் கண்ட பனி போல அவர் ஐயம் அகன்று தெளிந்தார். இந்தியாவுக்கு வந்தவுடனஅவருக்கு பிரம்மசர்ய விரதம் அளித்து நிவேதிதா என்ற பெயரை சுவாமிஜி அளித்தார்.

இந்தியாவில் பெண்களுக்கு கல்வி புகட்டி அவர்களை முன்னேற்றுங்கள்என்று சுவாமிஜி இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு செவ்வனே பணியாற்றினார். ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் துணைவியார் அன்னை சாரதா தேவிக்கு நெருக்கமானவர்.

சிறந்த பேச்சாளர்; பெரிய எழுத்தாளர்; பல நூல்களின் படைப்பாளி; சிறந்த சமூக சேவகி. கல்கத்தாவில் பிளேக் நோய்கண்டவர்களுக்கு அச்சமின்றி உதவி செய்தார். காந்திஜி, பாரதியார் போன்றோர் நிவேதியைச் சந்தித்து அளவளாவினர். தேசபக்தக் கனல்பறக்கும் உரையாற்றி இந்திய சுதந்திரப் பயிரில் நீர் பாய்ச்சினார். அவர் கல்வியாளர் என்பதால் பல பள்ளிகளை நிறுவினார். பெண் உரிமைக்குப் போராடியதால் பாரதியார் போன்றோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

அந்தப் புனித மாது பிறந்த இடத்தில் நடந்தது நீங்காத நினைவாக நிலைத்து நிற்கும்.

கட்டுரை எழுதிய சந்தானம் சீனிவாசன் சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

–சுபம்–

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 6 (Post No. 5742)

Written by SNagarajan

Date: 5 DECEMBER 2018


GMT Time uploaded in London –5 37 am


Post No. 5742

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 6

ச.நாகராஜன்

முப்பெருந்தேவியர் முன்னணியில் அமர்ந்திருக்க பாண்டியன் புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சியளிக்க வள்ளுவரை அனைவரும் வணங்கியவுடன் சபை ஆரம்பித்தது.

முதலிலேயே பாண்டிமாதேவி எழுந்தாள்.

“ஐயனே! செய்யற்க என்று செய்யத் தகாதவைகளைக் கூறி அருளினீர்கள்.

செய்க என்று தாங்கள் அறிவுறுத்தவது யாதோ?” என்று வினவ பாண்டியன் தன் தலையை அசைத்து ஆமோதித்தான்.

வள்ளுவர் முழங்கினார்:
“செய்க பொருளை”

கூட்டம் ஆரவாரித்தது இந்தக் கட்டளையைக் கேட்டு. வாழ்வியல் ஆதாரமான செல்வத்தைச் சேர்க்க திடமான கட்டளையாக இரு சொற்களிலேயே அவர் கூறியது அனைவரையும் கவர்ந்தது.

இதனால் உணர்ச்சி வசப்பட்ட ஒருவர் கூட்டத்திலிருந்து எழுந்தார்.

“ஐயனே! பொருளில் தானே எவ்வுலகமும் அடங்கியுள்ளது” என்று மகிழ்ச்சிப் பொங்க கூற பாண்டியன் தன் கையை அசைத்து அவரை அமர்த்தினான்.

குறுக்கிட்டதற்குத் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டி அவர் அமர்ந்தார்.

வள்ளுவர் கூறினார்:

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு

அவ்வுலகம் இல்லாகி யாங்கு

கூட்டத்தினர் மிக்கமகிழ்ச்சியுடன் உணர்ச்சிவசப்பட்டு குறுக்கிட்டவரை குறுகுறுப்புடன் பார்த்து, “பார்த்தாயா!செல்வம் இந்த உலகத்தில் மட்டுமே செல்லுபடியாகும்; அருள் அல்லவா அந்த உலகத்தை ஆள்கிறது”என்று சொல்வது போல தலையை அசைத்தனர்.

வள்ளுவர் பாண்டியனைப் பார்த்துக் கூறினார்:

செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற்  கூரிய தில் 

பாண்டியன் மஹாராணியைப் பார்த்து அர்த்தத்துடன் புன்முறுவல் பூத்தான்; நாட்டு மக்களுக்கும் புரிந்தது. பேரழகியான ராணி காலையில் முதல் வேலையாக அன்றைய பொக்கிஷக் கணக்கைத் தான் பார்ப்பார் என மக்கள் அறிந்து வைத்திருந்தனர். சற்றுக் குறைந்தாலும் அவர் மன்னரை இடிப்பாராம். உடனடியாக  மன்னன் அதில் கவனம் செலுத்தி பொக்கிஷத்தை நிரப்ப வழிவகை செய்வானாம்.

மஹாராணி இந்த குணத்தை அர்ஜுனனை இடித்துப் பொருள் சேர்க்க வைக்கும் அன்றாடக் கணக்குப் பார்க்கும் திரௌபதியிடமிருந்து உத்வேகம் பெற்றுத் தான் பெற்றார் என்பதை மக்கள் அறிவர். மகளிர் எல்லோரும் பாண்டிய நாட்டில் இப்படி அமைய ராணியே காரணம்.

மக்கள் தங்களுக்குள் பல பழமொழிகளைக் கூறி மகிழ்ந்தனர்:

பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்.

காசே தான் கடவுளடா

ஆரவாரம் அடங்கிய போது ஒருவர் கூறினார் இன்னொரு பழமொழியை:

பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே

வள்ளுவர் கூறி முடித்தவுடன்ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! பொருளின் சிறப்பை இப்படிக் கூறி விட்டீர்கள். பொருளே எல்லாமா? பொருள் உடையவர் தான் சிறந்தவரோ?” என்றார்.

வள்ளுவர் பகர்ந்தார்:

இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு

தெள்ளியர் ஆதலும் வேறு

ஆஹா!செல்வந்தர் அனைவரையுமே தெள்ளியர் என்று  கூறி விட முடியாது. உலகத்தின் இயற்கை இருவிதமாக அமைகிறது என்று வள்ளுவர் கூறுகிறார் என உணர்ந்த மக்கள் அமைதியடைந்தனர்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன் அறிந் தாங்கே திரு

தர்மவான்களை லட்சுமி தானே தேடி வந்து சேர்வாள் என்ற வள்ளுவரின் இந்தப் பொருள் பொதிந்த கருத்தை ஆமோதித்த வேதம் ஓதும் அந்தணர்கள் பாண்டியனைப் பொருள் பொதிந்த பார்வையுடன் நோக்கினர். தர்மவான் அல்லவா பாண்டியன்; அவனிடம் பொருள் சேர்வதில் என்ன வியப்பு இருக்கிறது!

‘பொருள் சேர்ப்பதுடன் வேறு என்ன முக்கியமானவை உள்ளன, ஐயனே!’- கூட்டத்தினருள் பலரும் ஒரே சமயத்தில் இதைக் கேட்கவே வரிசையாகக் கூற ஆரம்பித்தார் வள்ளுவர்:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை

கெடல் வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்றுபவர் கண் இழுக்கு

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை

புலவர்கள் எழுந்தனர்.

நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று உடனடியாக இன்று அறச் செயல்களைச் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

இன்பம் பயக்கவல்ல ஒரு நல்ல காரியத்தில் துன்பம் வரலாம். என்றாலும் துணிவுடன் அதை நிறுத்தி விடாமல் செய்து முடிக்க வேண்டும்.

பிறரை அழிக்க வல்ல ஆற்றலுள்ளவரிடத்தில் அறநூல்கள் சொல்லும் பிழைகளைச் செய்தால் யாரும் அழிக்க இல்லாமலே தானே அழிந்து விடலாம்.

பொருள் வரும் வழிகளை நன்கு பெருக்கி, அதன் மூலம் வளம் அனைத்தையும் பெற்று, அதில் எதிர்ப்படும் இடையூறுகளைக் களைந்து அதை நீக்க  வல்ல ஆராயும் அறிவு படைத்தவன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். கூட்டத்தினருள் ஒவ்வொருவராக எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

உடனுக்குடன் வள்ளுவர் விடை பகர்ந்தார்.

மறக்கக் கூடாதது?

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் துப்பு

மாசு இல்லாதவரின் நட்பை எப்போதும் மறாக்காதீர்கள். துன்பம் உற்றபோது உதவியவர்களின் நட்பைத் துறக்காதீர்கள்.

கற்க வேண்டியது?

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

ஒரு அவையிலே ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு அஞ்சாமல் தக்க விடையைக் கூறும் வகையில் நல்ல நூல்களைப் படித்து ஆதார நூல்களை நன்கு கற்க வேண்டும்.

கற்க வேண்டியவற்றை நன்கு கசடில்லாமல் கற்க வேண்டும். கற்றது மட்டும் போதாது; அதன் படி நின்றொழுக வேண்டும்.

வேண்டத் தகாதது?

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்

பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தை விரும்பாதீர்கள். அது பயன் தரும் போது அது நன்மையான பயனாக அமையாது.

தொடர்ந்து வள்ளுவர் கூறினார்:

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன் விழுங்கி அற்று

சூதாட்டம் வேண்டாம். வென்றது போல முதலில் காட்டினாலும் அது தூண்டிலில் இரை என மயங்கி அதைக் கவ்வும் மீன் போன்றதாகும்.

ஒரு முதியவர் வருத்தத்துடன் எழுந்தார்.

“ஐயனே! கற்க வேண்டிய பருவமெல்லாம் போய் விட்டது. இந்த முதிய வயதில் நான் என்ன செய்வது?

அவரை நோக்கிப் புன் முறுவல் பூத்த வள்ளுவர் கூறினார்:

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை

ஒருவேளை நூல்களைக் கற்கும் வாய்ப்பு இல்லாது போனாலும் கேட்டறிய வேண்டும். அது தளர்ச்சி வந்த காலத்தில் உதவும் ஊன்று கோல் போலத் துணையாகும்.

முதியவர் மிக்க மகிழ்ச்சியுடன் தன் கைத்தடியை ஊன்றி நின்ற போதே அடுத்து வள்ளுவர் கூறினார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்

எதைக் கேட்க வேண்டும் என்ற அடுத்த கேள்வியைக் கேட்க நினைத்த அவருக்கு அந்த வாய்ப்பையே அளிக்காமல், எவ்வளவு சிறிதாகக் கேட்டாலும் நல்லவற்றைக் கேட்கவும். கேட்ட அளவிற்கு அது பெருமை தரும் என்று பதில் கூறிய வள்ளுவரை அனைவரும் போற்றினர். முதியவர் அமர்ந்தார்.

அடுத்து அரசனை நோக்கிப் பின்னர் மந்திரியையும் படைத்தலைவனையும் நோக்கிய வள்ளுவர் கூறினார்:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை

அரசன் இரகசியமாக ஒரு மறை பொருளைப் பேசும் போது அதை உற்றுக் கேட்கக் கூடாது.தொடர்ந்து வினவக் கூடாது. அந்த விஷயத்தை அவரே சொல்லும் போது தான் கேட்க வேண்டும்.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று

மறைந்த செய்திகளை கேட்டறிய வல்லவனாகி தான் அறிந்த செய்திகளை சந்தேகப்படாமல் துணிய வல்லவனே ஒற்றன் ஆவான்.

அரசு விஷயத்தையும் ஐயந்திரிபற வள்ளுவர் கூறி விட்டதை புலவர்கள் நன்கு விளக்கினர்.

வள்ளுவர் உரைக்க உரைக்க புலவர்கள் விரிவுரை விளக்க விளக்க கூட்டத்தினர் அதை மெய்ம்மறந்து கேட்டனர்.

மாலைப் பொழுதாகியது. மனமில்லாமல் அங்கிருந்து கூட்டம் கலைந்தது.

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 759,374,179,36,669,893,512,106,391,725,177,931,414,416,695,587

Tags-நூறு கேள்விகள்! – 6

                                                    ***

Liquor is Poison- Great Poets Agree (Post No.5741)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 20-09

Post No. 5741


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

37. A king is ruined through evil counsellors :

 an ascetic through society :

a child by spoiling :

a priest by not studying the Sacred Scriptures :

a family by the evil behaviour of children :

good manners by evil habits :

modesty by wine :

agriculture by want of care :

affection by absence from home :

friendship by want of love :

possessions by mismanagement :

money by waste and prodigality. -Niti Sataka of Bhartruhari

There is another translation for the same couplet:-

The king shall be ruined by a wicked adviser; the monk would be ruined by attachments;

the son would be spoilt by pampering; the learned would become dull without constant study;

The family would be ruined by a wicked son;

and modesty and virtues would be lost by bad company. Thealcoholic drinks would ruin the  intellect and agriculture would be lost  by undertaking travels abroad and friendshipwould be ruined without love. Lack of scruples would ruin prosperity and wealthwould be lost by renunciation or by lethargy.

दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रो‌உनध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.37 ॥

Bhartruhari gave lot of advice in one sloka/couplet. Tamil poet Tiruvalluvvar explained it in detail in several couplets.

For instance he has done ten couplets on the evils of drinking.

Kural 451, 460, 922, 925,926, 366, 341, 70 may be compared with the above sloka of Bhartruhari

“Noble men dread vulgar company; mean men treat the vulgar as kinsmen “- 451

“There is no help better than good company and no trouble worse than evil company”- 460

This is applicable both to a king/ruler and common man.

Evils of Drinking

“Let no one drink liquor; if drink is desired let them drink who do not seek the esteem of the good”.- 922

“To spend money and purchase liquor and lose bodily sense by intoxication is nothing but foolish ignorance”. – 925

V V S Iyer has translated this as,

“It is the veriest idiocy to spend to spen one’s substance

And obtain in return only insensibility”.

“The sleeping and the dead are in no way different; those who drink are always like them that eat poison”- 926

DR S M Diaz has translated it with the following commentary:

Those who sleep resemble the dead for the duration, but the drunken ones are,

As good as dead always, having consumed poison-Kural 926

Dr Diaz comments

Tennyson spoke of sleep as the twin brother of death.Shakespeare too has said very much the same on several occasions. But that is acomparison valid only for the duration of the sleep. But the drunken person isinvariably like on, who has really crossed the barrier of death, havingconsumed poison.

Desire and Attachment

“Desire is the evil which causes deception and detracts one from liberation. it is therefore proper that one should beware of it and guard oneself against it”- 366

“A man suffers no misery whatsoever from the desire of which he has freed himself “– 341

Dr S M Diaz in his commentary says

When you detach yourself from things of the world, one by one,

Each step will be a relatively a painless process.

Socrates said that ‘to have no wants is divine’ He descended to a  human and practical level when he stated ‘The fewer our wants, the closer we resemble the gods’.

The Bhagavad Gita also says

He who does forsaking attachment, resigning them to Brahman/God, is not soiled by evil, like unto a lotus leaf by water  – BG 5-10

Krishna repeats it in BG 5-21 and 18-2

Duty of a Son

“The duty of the son to the father is to make others exclaim ‘what penance has he done to be blessed with such a worthy son”. –70

In Tamil there is a saying about bad sons. Each one of them is worse than the other. When he was about to die in a burning house, which one is a good son so that we would call him before you die. Immediately the dying old man said,

Look above, there is a boy setting fire to the roof. He is the best among my sons.

At the same time we come across illustrious sons like Adi Sankara, Sambandar, Dhruva, Markandeya, Nachiketas, Satyakama Jabala, Aruni and others.

–Subham–

ENGLISH CROSS WORD FOR 5 -12-18 (Post No.5740)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 17-28

Post No. 5740


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND SIX WORDS IN THE SQUARE.

1.HUSBAND OF DAMAYANTI

4. ANOTHER NAME OF SUN

5.HINDU LAW GIVER

DOWN

2.TWIN DEVAS OFRIG VEDA

3.MEANING IN SANSKRIT

4.BEING, ALONG, WITH IN SANSKRIT

ANSWERS AREGIVEN AT THE END

  * N A L A
*   * S * R
S     A   V   I   T  
  A   * I * *
M A N U *

Answers

ACROSS

1.NALA, 4.SAVIT, 5.MANU

DOWN

2.ASVIN, 3.ART, 4.SAM

—SUBHAM–

தமிழ் குறுக்கு எழுத்து 5-12-2018 (Post No.5739)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 14-33

Post No. 5739


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள தமிழ் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; விடையும் கீழேஉளது.

குறுக்கே

3.ஏகாதஸி முதலிய விரத நாட்களில் உண்டு மகிழலாம்

5.யானைக்கும் பிடிக்கும்;பக்தர்களுக்கும் பிடிக்கும்;கார்ல் மார்க்ஸுக்கு மட்டும் அபினி.

6.துவாதஸிக்கு அகத்திக்கீரை வாங்கிப் போட்டால் நல்லதாம்

கீழே

1.முருகனின் வாஹனம்

2.இவர் —- — ஆக பணக்காரர்

4.யுவர்களுக்கும் யுவதிகளுக்கும் பிடித்தது

ANSWERS

குறுக்கே

3.பலகாரம், 5.மதம், 6.கோயில் பசு

கீழே

1.நீல மயில், 2.பரம்பரை, 4.காதல்

குறுக்கே

3.பலகாரம்– ஏகாதஸி முதலிய விரத நாட்களில் உண்டு மகிழலாம்

5.மதம்- யானைக்கும் பிடிக்கும்;பக்தர்களுக்கும் பிடிக்கும்;கார்ல் மார்க்ஸுக்குமட்டும் அபினி.

6.கோயில் பசு- துவாதஸிக்கு அகத்திக்கீரை வாங்கிப்போட்டால் நல்லதாம்

கீழே

1.நீல மயில்- முருகனின் வாஹனம்

2.பரம்பரை- இவர் —- ஆக பணக்காரர்

4.காதல்- யுவர்களுக்கும் யுவதிகளுக்கும் பிடித்தது

    நீ   ப    
ப   கா ம்
    ம்  
  கோ யி ல் ப   சு
    ல்   ரை  

TAGS– தமிழ் குறுக்கு எழுத்து, 5-12-2018

–subham–

‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’– வள்ளுவன் ,பர்த்ருஹரி பொன்மொழி (Post No.5738)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 11-14 am

Post No. 5738


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்களைத் தொடர்ந்து காண்போம்

நீதி சதகம் 37

அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;

சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);

புதல்வனுக்கு  ஆபத்து அதிக செல்லம்;

அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;

குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;

நற்பெயர்க்கும் மரியாதைக்கும்  ஆபத்து கெட்டவர் சஹவாசம்;

புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;

விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;

அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;

வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;

செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37

ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தேன்; ஒருவேளை, வள்ளுவனை பர்த்ருஹரி மிஞ்சிவிடுவானோ என்று. உண்மைதான் வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.

Bhartruhari Nitisataka 37

दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रो‌உनध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.42 ॥

த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்

விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்

ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக  ப்ரவாஸாஸ்ரயான்

மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்

சில எடுத்துக் காட்டுகளைக்  காண்போம்;

ஒரு ஆட்சியாளரிடம் கெட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அதிகாரியோ, மந்திரியோஇருந்தால் போதும்; அவ்வளவுதான் அந்த    அரசனோஆட்சியாளனோ அஸ்தமித்து விடுவான்.

வள்ளுவன் சொல்லுவான்,

நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பதாகும் அறிவு – 451

நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்

இன்னொரு குறளில் இதை அடிக்கோடிட்டுக் காட்டுவான்

நல்லினத்தினூங்குந் துணையில்லை  தீயினத்தின்

அல்லற்  படுப்பதூஉம் இல்- 460

நல்லவர்கள் துணக்கு இணையான துணை வேறில்லை

தீயவர்கள் தொடர்பு போல துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை

ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!

வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதே!

கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.

கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும்  அழிந்து விடும்

‘உண்ணற்க, உணில் – சான்றோர் இல்லை’ –என்பான் (922) அடுத்த குறளில்

வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதேடா தமிழா என்று ஒரு குறளில் செப்புகிறார்

‘பொருள் கொடுத்து மெய்யறியாமைகொளல்’ (925)

‘கள்’ என்பது விஷத்தை குடிப்பதற்குச் சமம்-

‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.

கள்ளுண்ணாமை என்னும் பத்து குறட்பாக்களையும் எல்லா இடங்களிலும்போர்டு எழுதி ஒட்ட/கட்ட வேண்டும்.

ஒருவனை வஞ்சிப்பது பந்தபாஸம்

அஞ்சுவதோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பதோரும் அவா-366

துறவறவியலில் அவா அறுத்தல் என்ற அதிகாரத்தில் அழகாகச் சொல்கிறான். ஒருவனைக் கெடுப்பது ஆசைதான். ஆகையால் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறம்; எந்தவித பந்த பாசம் இருந்தாலும் அவன் சந்யாஸி இல்லை.

ஏனெனில் துறவு என்னும் அதிகாரத்தில்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின்  அதனின் இலன்- 341

ஒருவனுக்கு எந்தெந்தப் பொருளில் ‘அட்டாச்மெண்ட்’ attachment இல்லையோ அநதந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் இல்லை.

எதில் நமக்கு விருப்பம்- இணைப்பு- பாசம்- பந்தம் உண்டோ அதனால் துன்பம்தான்.

ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் விவேகமோ, சுறு சுறுப்போ இல்லாவிடில் பணம் அழிந்து போகும்.

‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது தமிழ்ப் பழமொழி.

குன்று போல தானியமோ, பணமோ இருந்தாலும் உழைக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது

கரைந்து விடும்.

கூரை மீது ஏறி கொள்ளி வைப்பவனே நல்ல பிள்ளை

மகன் பற்றி வள்ளுவன் சொன்னதை எல்லோரும் அறிவோம்,

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் – 70

இவன் தந்தை என்ன என்ன விரதம் இருந்து, எந்தெந்தக் கோவிலுக்குப் போய், சாமியை வேண்டி இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று உலகம் விஅயக்க வேண்டும்; அப்படிப்பட்ட குண நலன்களுடன் இருப்பவ்னே மகன்; இதுவே மகன் செய்யும் உதவி.

இதற்கு நேர் மாறாக இவன் தந்தை இவனை ‘ராகு காலத்தில் பெற்றானோ, அல்லது கெட்ட காலத்தில் பெற்றானோ’ என்று ஊரே தூற்றும்படி இருக்கக்கூடாது.

அடேய், உன் மகன்களில் எவனடா நல்ல பிள்ளை? என்று ஊரே பதறியபோது,கதறியபோது,

‘அதோ கூரை மீது ஏறி கொள்ளி வைக்கிராறானே, அவன்தான் இருப்பதற்குள் நல பிள்ளை’— என்ற கதை ஆகி விடும்.

கணவனோ, மகனோ நீண்ட காலம் பிரிந்து வெளிநாட்டிற்குப் பயணமானால் அந்த வீட்டுப் பெண்மணியோ, மகனோ மகளோ எளிதில் கெட்டுப்போக வாய்ப்பும் உண்டு. அன்பும் மறைவதுண்டு. இதையும் பர்த்ருஹரி செப்புகிறான்.

மொத்தம் 100 ஸ்லோகங்கள்; இன்னும் வரும்.

tags–வள்ளுவன் ,பர்த்ருஹரி, கூரை மீது ஏறி கொள்ளி ,வேண்டாத சனியனை விலை, ‘கள்’, நீதி சதகம் 37

தொடரும்……………………..

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 5 (Post No.57)

Written by S Nagarajan

Date: 5 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 38 am


Post No. 5737

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5

பாண்டிய மாதேவிக்கு மனமகிழ்ச்சி எல்லை கொள்ளவில்லை. மன்னர் தந்த ஓலை சோழமாதேவியிடமிருந்து வந்திருந்தது. அங்கு விஜயம் செய்திருக்கும் சேரமாதேவியுடன் சேர்ந்து வள்ளுவரைத் தரிசிப்பதற்காக மதுரை நோக்கி வர வேண்டும் என்ற தன் ஆசையைத் தமக்கைக்கு எழுதுவதாக அவள் எழுதியிருந்தாள்.

‘தங்கையே! உடனே அருமை சேரமாதேவியுடன் இணைந்து வருக! எல்லையில் வரவேற்கக் காத்திருப்பேன்’ என பதில் ஓலை அனுப்பினாள் பாண்டிய மஹாராணி.

செய்தி தெரிந்தவுடன் மக்களும் இரு பெருந்தேவியரை வரவேற்கக் காத்திருந்தனர்.

மக்கள் சோழ, சேர நாடுகளிலிருந்து யார் வந்தாலும் தங்கள் தங்கள் இல்லத்தில் தங்கலாம் என விரும்பிச் சொன்னதால் சோழ, சேர நாட்டு விருந்தினருக்கென அதிக ஏற்பாடுகளைச் செய்யும் அவசியம் பாண்டியனுக்கு ஏற்படவில்லை. மக்கள் தாங்களே வீதியெங்கும் தோரணமும் கொடியும் கட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் விருந்தோம்பும் பண்பையும் தெரிவித்தனர்.

அவரவருக்கு உரிய மரியாதையுடன் அற்புத அரண்மனைகளை அவர்களுக்கு ஒதுக்கி இருந்தார் மந்திரி.

தேவியர் வர, வரவேற்பு முடிய அவ்விருவரும் தங்கள் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறினர்.

சபை ஆரம்பிக்கும் போது அவர்கள் சரியான நேரத்திற்கு வரவே மக்கள் துள்ளிக் குதித்து நடனம் ஆடினர்.

வள்ளுவரை அனைவரும் முறைப்படி வணங்கியவுடன் சபை தொடங்கியது.

முதல் கேள்வியே விறுவிறுப்பாக இருந்ததால் மக்கள் அமைதி காத்து சபை நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தனர்.

ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! வணக்கம். விதியா, மதியா எது வெல்லும்? என் கருத்துப் படி விதி தான் வலியது” என்று கூறினார்.

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்.

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்”

வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் மக்கள் ஆரவாரிக்க கேள்வி கேட்டவர் அமர்ந்தார்.

ஆனால் புலவர் குழு இரண்டாகப் பிரிந்தது. ஒரு குழு  மதியே என்று முழங்க இன்னொரு குழு விதியே என்றது.

வள்ளுவரின் குறளுக்கு பொருளை விரித்துச் சொல்ல மதி என்ற குழுவினருள் ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! மதி அல்லவா ஜெயிக்கும். சரியாகச் சொன்னீர்கள். விதியே முற்றிலுமாகக் கிடையாது என்பது எனது எண்ணமும் கூடத்தான்! சரிதானே!”

என்றார்.

வள்ளுவர் புன்முறுவல் மாறாது கூறினார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்

கேட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. மக்களும் திடுக்கிட்டனர். ஊழ் கட்சியின் புலவர் குழாம் ஆரவாரம் செய்தனர்; விதி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.

ஊக்கமுடைய ஒரு வீரன் எழுந்தான்.

ஐயனே! அப்படியானால் முயற்சிக்குப் பலனே இல்லையா?

வள்ளுவர் உடனே முழங்கினார்:

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

உடனே அவன்  மகிழ்ந்து கூவ, மதி கட்சியைச் சேர்ந்த புலவர் கூழாம் முயற்சி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.

பாண்டியன் எழுந்தான். வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினான்:

“ஐயனே! முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். ஆயின் மற்றொன்று சூழினும் ஊழ் தான் முன்னால் வரும். முன்னால் மட்டும் தான் வருமா? வெற்றியும் பெறுமா? தெளிவு படுத்த வேண்டும். ஊழா, முயற்சியா?”

பாண்டியன் கேள்வியை முடிக்குமுன்னரே வள்ளுவர் கூறினார்:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

பாண்டியன் இதன் பொருளுணர்ந்து மகிழ்ந்தான்.

மக்கள் புலவர்களைப் பார்க்க அவர்கள், “கைப்பொருள் வர வேண்டுமெனில் நல்ல ஊழ்வினை காரணமாக – ஆகூழால் – சோர்வில்லாத முயற்சி உண்டாகும். ஆயின் செல்வம் போவதற்குக் காரணமான போகூழ் இருப்பின் சோம்பல் ஏற்படும். முயற்சியே இருக்காது” என்று விளக்கினர்.

விதியே மதியாகும் அதிசயத்தைப் பற்றிப் புலவர் பெருமக்கள் விவாதித்து வள்ளுவரின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதைச் சொல்ல ஆரம்பித்தனர்.

 நல்ல வினைகள் நல்ல ஊழைத் தரும். நல்ல விதி முயற்சியைத் தரும் என்று புலவர்கள் விரித்துரைக்க வள்ளுவரை நோக்கி, முயற்சிக்குப் பலனே இல்லையா என்று முதலில் கேட்டவர் எழுந்தார்.

“ஐயனே! என் எண்ணம் பலிக்குமா, பலிக்காதா?” என்று வலியுறுத்திக் கேட்கவே

வள்ளுவர் கூறினார்:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பகீரதன் கதையை புலவர் ஒருவர் கூற முயற்சி வெற்றி தருவதை மக்கள் உணர, இன்னொரு புலவர் நளன் கதையைக் கூற அவன் ஊழின் வசத்தால் துன்பம் அனுபவித்ததை மக்கள் உணர்ந்தனர்.

“ஆக முயற்சி நிச்சயம் வேண்டும்; முயற்சி உள்ளவனுக்கு ஊழ் உறுதுணையாக இருக்கும். ஆகூழ் உள்ளவனுக்கு முயற்சி ஏற்படும். அதில்லாமல் போகூழ் உள்ளவனுக்கு சோம்பலே ஏற்பட்டு அவனை அழித்து விடும்.” – என இப்படி புலவர்கள் விவாதிக்க பாண்டியன் எழுந்து வள்ளுவரை நோக்கி, “முடிந்த முடிபாக தாங்கள் அருளுவது என்ன?” என்று வினயத்துடன் கேட்டான்.

வள்ளுவர் மென்மையாகக் கூறினார்:

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”

“ஆஹா! அவரவரே தம்மை மதிப்பீடு செய்து கொள்ளலாம். கட்டளைக் கல்! ஆஹா! கர்மமே கட்டளைக் கல். அவரவர் வினைப் படி அவரவர் தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர்! ஊழையையும் முயற்சியையும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது” என்று பாண்டியன் கூறவே அறிஞர்கள்,

“எந்த ஒருவனும் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளலாம்” என்று முடிவு  கூறினர்.

முப்பெரும் தேவியரும் இந்த அறிவு சால் விவாதங்களைக் கேட்டுப் பிரமித்தனர்.

ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! இப்படி விளக்கிக் கூறும் தாங்கள் எதைச் செய்யக் கூடாது என்பதையும் சொல்லி அருளுங்கள்” என்று வேண்டினார்.

வள்ளுவர் கூறினார்:

“எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று”

மற்றவர் வருந்தும் காரியங்களை ஒரு போதும் செய்யாதீர்கள்; ஒரு வேளை தவறி ஒரு முறை செய்து விட்டால் அதை மீண்டும் செய்யவே வேண்டாம்.

அடடா! என்ன கருணையுடன் இப்படி ஒரு வாழ்வியல் ரகசியத்தை எளிதாகக் கூறுகிறார் என அனைவரும் மகிழ்ந்த போது வள்ளுவர் தொடர்ந்தார்:

“ஈன்றாள் பசி காண்பான் ஆயினுச் செய்யற்க 

சான்றோர் பழிக்கும் வினை”.

தாய் பசியினால் வாடித் துடித்தாலும் சான்றோர் செய்யக் கூடாது என்று சொல்லிய செயல்களை ஒரு போதும் செய்யாதீர்கள்!

அற நூல்கள் செய்யக் கூடாதவை என்று சொல்லி இருக்கும் செயல்களை ஒவ்வொரு புலவரும் விளக்க ஆரம்பித்தார்.

வள்ளுவர் இன்னும் கூறினார்:

“இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து”.

வறியவன் என்று தீயவனவற்றைச் செய்யாதே; செய்தால் இலனாகவே ஆகி விடுவாய் – புலவர்கள் அப்படித் தீயவை செய்பவன் எதை எதை இழப்பான் எனப் பட்டியலிட்டு முடிக்க வள்ளுவர் தொடர்ந்தார்:

“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்”.

தனக்கு தீமையானவை வரக்கூடாது என்று எண்ணும் ஒருவன் பிறருக்குத் தீயன செய்யக் கூடாது. – வள்ளுவர் வலியுறுத்தலை அனைவரும் புரிந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்தார்:

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை”.

எந்த உயிரையும் கொல்லாதே – தானே சாக வேண்டிய சூழ்நிலையிலும் கூட – வள்ளுவர் கூறிய கொல்லாமை அறத்தை அனைவரும் புரிந்து கொண்ட போது அவர் மந்திரியையும் மன்னனையும் பார்த்துக் கூறினார்:

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை

மறைவாக ஒற்றன் தரும் செய்தியைக் கேட்டவுடன் அவனுக்கு அனைவருக்கும் தெரியும் படி பரிசைத் தர வேண்டாம்; செய்தால் அவன் கொண்டு வந்த இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியதாகும்.

ஒற்றர்கள் புன்முறுவல் பூத்தனர். ஏன் அரசன் ஊரார் அறியத் தம்மைப் புகழ்ந்து அனைவருக்கும் எதிரே பரிசு தருவதில்லை என்பதை அவர்கள் இன்று காரணத்துடன் தெரிந்து கொண்டனர்.

செய்யற்க என்று வள்ளுவர் கூறிய அறவுரைகளை ஓலையில் எழுதிக் கொண்டனர் பலரும்.

மாலை நெருங்கியது. மக்கள் மனமகிழ்ச்சியுடன் வீடு செல்ல ஆயத்தமாயினர்.

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590

TAGS– நூறு கேள்விகள்! – 5

Swami’s English Cross word- 4 Dec.2018 (5736)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 19-38

Post No. 5736


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND SIX WORDS FROM THISSIMPLE CROSS WORD SQUARE.

ANSWERS ARE ALSO GIVEN AT THE END.

1.SANSKRIT WORD FOR LOTUS; VERY COMMON NAME FOR HINDU BOYS AND GIRLS

2.GREATEST COMPILER, COMMENTATOR, CONSIDERED AVATAR OF VISHNU

3.POETICAL WORK LIKE RAGHUVAMSA

4.GODDESS OF SPEECH, WORD

5.MOTHER GODDESS

6. SANSKRIT WORD FOR PROTECT; FROM WHICH ROOT DEMON’S NAME IS DERIVED.

ANSWERS

    K   V  
K   A V Y A
    M A A  
R   A K S A
    L   A  

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 4-12-2018 (Post No.5735)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 15-48

Post No. 5735


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தக் கட்டத்தில் குறைந்தது ஆறு தமிழ்ச் சொற்கள் உள.

கண்டுபிடித்து இன்புறுங்கள்.

இதோ உதவிக் குறிப்புகள்

1.வானுலக மாக்கள் பாடும் இசை

3.விஷ்ணு அடிக்கடி எடுப்பது

2.வாழையடி வாழையாக

6.மனம், தொண்டு, தொண்டர்

4.தண்ணீர் குடித்தால் தீரும்

5.பாடினால், இதனுடன் பாட வேண்டும்

ANSWERS

    தே    
    தா        ம்
    ரா ம்  
  ம் டி
    ம்   ரை  

1.தேவராகம்–வானுலக மாக்கள் பாடும் இசை

3.அவதாரம்- விஷ்ணு அடிக்கடி எடுப்பது

2.பரம்பரை- வாழையடி வாழையாக

6.அகம்படி- மனம், தொண்டு, தொண்டர்

4.தாகம்- தண்ணீர் குடித்தால் தீரும்

5.ராகம்- பாடினால், இதனுடன் பாட வேண்டும்

1.தேவராகம்

3.அவதாரம்

2.பரம்பரை

6.அகம்படி

4.தாகம்

5.ராகம்

tags– குறுக்கெழுத்துப் போட்டி 4-12-2018 

–subham–