திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர். அதில் ஏப்ரல் 19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!
ச.நாகராஜன்
நாள் ஒன்றுக்கு மூன்றே மூன்று பேரீச்சம்பழங்கள்
ஒரு நாளைக்கு மூன்று பேரீச்சம்பழங்கள் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்பட்டு விடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறது!
ஜீரண அமைப்பில் நாம் சாப்பிடும் உணவு சரியாகச் செல்வதை உறுதி செய்வதோடு பேரீச்சம்பழங்கள் குடல்நாளம் (Gut) நன்கு இயங்குவதையும் உறுதி செய்கிறது. அத்துடன் அவை சரியாக இயங்குவதால் பெருங்குடலில் (colon) கேன்ஸர் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
அமெரிக்க உணவு மற்றும் சத்துணவு விஞ்ஞானப் பிரிவு (Department of Food and Nutritional Sciences)சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவோரின் குடல் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுவதைத் தெரிவித்துள்ளது. பெருங்குடலில் கேன்ஸர் வருவதற்கான திசுக்களை உருவாகவிடாமல் செய்ய நல்ல பாக்டீரியாக்கள் அங்கு சேர்கின்றன.
உடனடி சக்தி சேரும் அது நீடித்தும் இருக்கும்
அடுத்து பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்புச் சத்து, குளுகோஸ், ப்ரக்டோஸ், சக்ரோஸ் (Sugars, Glucose, Fructose and Surcose) ஆகியவை உடனடியாக சக்தியைத் தருகிறது. அத்துடன் சக்தியைத் தருவதாக விளம்பரங்கள் கூறும் குளிர்பானங்கள் அல்லது எனர்ஜி பார் போலல்லாமல் பேரீச்சம்பழங்களில் உள்ள பைபர் சத்து, பொட்டாசியம், மக்னீஷியம் விடமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளிட்டவை உங்கள் சக்தியை அப்படியே நீடித்து நிலை நிறுத்துவதோடு, ஏனையவை போல் திடீரெனக் குறைந்து உங்களைச் சோர்வடையச் செய்யாது.
மலச்சிக்கல் பிரச்சினை தீரும்
உங்கள் ஜீரண அமைப்பில் சாப்பிட்ட உணவுகள் மெதுவாக அழகாக சீராகச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை அடைய பேரீச்சம்பழங்கள் உதவும். ஒரு கப் பேரீச்சம்பழங்களில் 12 கிராம் பைபர் உள்ளது. இது நீங்கள் அன்றாடம் எடுக்க வேண்டிய பைபரில் 48 சதவிகிதம் ஆகும்.
சரியான பைபரை சரியானபடி சாப்பிட்டாலேயே மலச்சிக்கல் வராது; சரியானபடி மலம் வெளியே போக உதவும் இயக்கங்கள் சீராகும். இதைச் செய்ய உதவுவது பேரீச்சம்பழங்களே. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பிரசுரித்துள்ள ஆய்வறிக்கை ஒன்று ஒரு நாளைக்கு 7 பேரீச்சம்பழங்கள் வீதம் 21 நாட்கள் யார் ஒருவர் சாப்பிடுகிறரோ அவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவதே இல்லை என்றும் மலம் போவது சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
மூளை செயல்திறன் கூடும்; மனச்சோர்வு ஏற்படாது!
பேரீச்சம்பழங்களில் விடமின் பி6 (Vitamin B6) இருப்பதால் செரொடோனின் மற்றும் நோரிபினப்ரைன் (erotonin and norepinephrine) ஆகியவை உடலில் உருவாகி மூளையின் செயல்திறன் கூடுகிறது. செரோடோனின் மூட் எனப்படும் மனநிலையைச் சீராக வைக்கிறது. நோரிபினப்ரைன் மன அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஆய்வுகள் விடமின் பி 6 குறைவாக இருந்தாலோ மனச்சோர்வு ஏற்படும் என்று தெரிவிக்கின்றன. ஆகவே உங்கள் மன அழுத்தம் சீராக இருந்து உங்கள் ‘மூடும்’ சரியாக இருக்கும் போது மூளை கூர்மையாக இயங்குகிறது. தகவல்களை நன்கு உள்வாங்கிச் சேர்த்து வைத்துக் கொள்கிறது.
ஆசனவாய் வீக்கம் வராது
ஹெமொராய்ட்ஸ் (Hemorrhoids) என்பவை ஆசனவாயிலும் குதத்திலும் உள்ள நரம்புகளாகும். மலச்சிக்கலால் இவை வீக்கமடைந்து வீங்கி இருக்கும். மலச்சிக்கல் இங்கு அழுத்தத்தைத் தர ஜீரண மண்டலத்தின் கோடியில் உள்ள பகுதியில் கூட இந்த அழுத்தம் ஏற்படும். இது வலியைத் தரும் ஒரு நிலை. இதை நல்ல உணவுப் பழக்கத்தால் மாற்றி மலச்சிக்கல் ஏற்படுவதையே தடுத்து விடலாம்.
பல டாக்டர்களும் பைபர் அதிகம் இருக்கும்படியான உணவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம்பழங்கள் உங்கள் ஹெமொராய்ட்ஸ் வீக்கத்தை ( அது இருப்பின்) சரி செய்து விடும்.
மனம் உடைந்து விட்ட நிலையில் அதைப் போக்கும்; உற்சாகம் தரும்!
மனம் உடைந்து விட்ட நிலையில் உதவிக்கு வருவது பேரீச்சம்பழங்கள் தாம்.ஆம், இது உண்மை! இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குருதிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. வயதான பெண்மணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக பொட்டாசியமானது ஸ்ட்ரோக்கைக் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூளை நரம்புகள் சுருங்குவதால் ஏற்படும் ischemic Stroke ஐயும் தடுக்கிறது.
நலம் தரும் பேரீச்சம்ழங்களை உண்ணுங்கள்!
ஆகவே அதிகம் விலை இல்லாத, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய நல்ல பேரீச்சம்பழங்களை வாங்கி உண்ணுங்கள். அபாயகரமான வியாதிகள் வருவதைத் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
Vanaspati-Non flowering trees bearing fruits Vrksa- Flowering trees Viirudha – Creepers on ground Ausadha – Herbaceous plants
Xxx
4 Actions for Happiness
Praatahsnaana -Taking bath before sunrise
Gosevaa – Protection of cows
Aaraama puspavatikaa- Relaxing in flower garden
Maataa pitaa susruusaa – Service to mother and father
—Citta vinodini
Praatah snanam gavaam sevaa aaraama puspavaatikaa
Maataa pitaasca susruusaa saastraaya ca sukhaaya ca
Citta vinodini
Xxx
Equal sharers in merit or demerit
Kartaa — doer
Kaarayitaa — man behind such an action
Presekah — sender
Anumodakah — one who approves
Karta karayita caiva presako hyanumodakah
Sukrutamduskrtam caiva catvarah samabhaginah
Xxx
Four Women who attained Salvation
Maitreyii
Sulabhaa
Saarngii
Saandilii
Maitreyi sulabha sarngi sandili ca tapasvini
Stritve praptah param siddhimanya janma samadhitah
Xxx
Saadya phala dayaka– Givers of immediate results
Resolution of Gods – Devataanaam sankalpa
Obedience to the learned – Dhiimataa manubhaavam
Vidusaam vinayam- Humility of the accomplished
Paapakarmanaasa – destruction of wicked deeds
—Mahabharata, Udyoga Parva,33-71/72 Xxx
4 Officiating
priests
Hotaa- Rig Veda
Adhvaryu-Yajur Veda
Udgaataa – Sama Veda
Braahmana – Atharva Veda
XXX
Common to Man
and Animals
Aahaara – Eating Nidraa -Sleep Bhayam- Fear Maithunam – Copulation
Human beings excel in dharma, and if they lack it they are equal to animals. Aharanidra bhayamaithunam ca samanya metat pasu birnaranam Dharmohi teshamadhiko visesah dharmena hinah pasubhissamanah
மே 2019 ஞான ஆலயம் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.அவற்றில்
ஒன்று இது:
அதிசயங்கள் பல கண்ட அற்புத
பூமி அயோத்தி!
ச.நாகராஜன்
அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்பை மட்டும் கொண்டதல்ல; அவதாரத்தின்
அடிப்படையிலான ஏராளமான அற்புதங்களைக் கொண்ட பூமியுமாகும்.
ஒரே ஒரு அற்புதத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:
அப்துல் பர்கர் என்ற ஒரு முஸ்லீம் ஹவில்தார் ராம ஜென்ம பூமியில்
அவுட்போஸ்டில் இரவு நேரக் காவல் காத்து வந்தார்.
அவர் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் முன் ஒரு வாக்குமூலத்தைத் தானே
முன்வந்து தந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறிய அற்புத சம்பவம் இது:
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி.
இரவு நேரக் காவல் பார்த்து வந்த அவர் அன்று இரவு 2 மணிக்கு ஒரு
பேரொளியை ஆலயத்தின் உள்ளே கண்டார். பொன்மயமான அந்த ஒளி ஒரு நான்கு அல்லது ஐந்து வயதுடைய
தங்க நிற பாலகன் ஒருவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட பேரொளியை அவர்
தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை. ஒளி வெள்ளத்தில் மூழ்கி அவர் சமாதி நிலையை எய்தி விட்டார்.
தனக்கு உணர்வு வந்த போது ஆலயத்தின் பிரதான வாயிலின் பூட்டு உடைந்து கிடந்தது. ஏராளமானோர்
கோவிலின் வாயிலில் குழுமி இருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்து பக்தி பரவசத்துடன் ஆரத்தியை
எடுத்துக் கொண்டிருந்தனர்.
டவுன் போலீஸ் ஸ்டேஷனும்
ஒரு அதிகாரபூர்வமான பதிவைச் செய்திருந்தது. ஆறாயிரம் பேர் பூட்டை உடைத்து உள்ளே சென்று
பக்தி பரவசத்துடன் ராம விக்ரஹத்திற்கு ஆரத்தி எடுத்ததை அந்த ரிகார்டும் உறுதிப் படுத்தியது.
ஆக ராம ஜென்ம பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்த வழிபாடு
1949 வரை தொடர்ந்திருக்கிறது.
ராம ஜென்ம பூமி ராம ஜெனனத்தை மட்டும் கொண்ட பூமி அல்ல; அவனது
சரிதத்தை உலகியல் மொழியில் ராமசரித மானஸ் என்று துளஸிதாஸர் (1532 – 1623) இயற்றிய இடமும்
கூட அயோத்தி தான்!
துளஸிதாஸரின் வாழ்க்கை அற்புதமான சம்பவங்களைக் கொண்டது.
அவர் கர்ப்பத்தில் 12 மாதம் இருந்தது, பிறக்கும் போது 32 பற்களுடன்
பிறந்தது போன்ற ஏராளமான அதிசய விஷயங்களைப்
பொதுவாக அனைவரும் அறிவர். அவர் ராம பக்தராக மாறிய சம்பவமும் அதிசயமான ஒன்று தான்.
அவரது மனைவி மீது கொண்ட ஆசையால் அவர் மனைவி தனது பிறந்தகம் சென்ற
போது அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார் துளஸிதாஸர்.
அதைப் பார்த்த அவர் மனைவி, “எனது இந்த சதை மீதும் எலும்பின்
மீதும் கொண்டிருக்கும் பற்றைப் போல ராமபிரானின் மீது கொண்டால் பிறப்பு இறப்பு பயம்
நீங்குமே” என்று சொல்ல கண நேரத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து மஹா ஞானியானார்
அவர்.
பாரத தேசமெங்கும் சுற்றி அலைந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம்
செய்து பக்தி மேலிட நெகிழ்ந்தார்; உருகினார்.
பின்னர் வாரணாசிக்கு அவர் வந்த போது அயோத்திக்குச் செல்லுமாறு
இறைவனின் திருவருள் ஆணை பிறந்தது.
அயோத்தி சென்றார் அவர்.
அவர் துளஸி ராமாயணத்தை இயற்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று
உண்டு.
வால்மீகி ராமாயணத்தை இயற்றிய போது அதைப் படித்து அதற்கு தனது
கையெழுத்திட்டு அங்கீகாரம் தந்தார் ராமபிரான்.
ஹனுமானும் ராம சரிதத்தை எழுத ஆசைப்பட்டு கற்களில் தன் நகங்களால்
ராம சரிதத்தை எழுதினார்.
தனது ராமாயணத்தை ராமபிரானிடம் அவர் காண்பிக்க,
ராமபிரான், அதுவும் சரிதான் என்று கூறி விட்டு,, “ஆனால்ஏற்கனவே
வால்மீகி ராமாயணத்தில் கையெழுத்திட்டு விட்டதால் அதில் தன்னால் கையெழுத்திட முடியாது
என்றும் வால்மீகியிடம் சென்று அதைக் காண்பிக்குமாறும் அருளுரை பகர்ந்தார்.
ஹனுமான் வால்மீகியிடம் சென்றார்; தனது ஹனுமத் ராமாயணத்தைக் காட்டினார்.’அதைப் படித்து
வியந்த வால்மீகி தனது ராமாயணம் அதற்கு முன் நிற்காது என்ற முடிவில் ஹனுமனது ராமாயணத்தைக்
கடலில் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
வால்மீகி கூறியபடி தனது ராமாயணத்தைக் கடலில் போட்ட ஹனுமார் இனி
வரும் காலத்தில் தானே துளஸி என்ற பெயருடைய ஒரு பிராமணருக்கு உத்வேகம் ஊட்டி, தனது ராமாயணத்தை
எல்லா மக்களும் எளிதில் அறியும் மொழியில் இயற்றச் செய்யப் போவதாக அருளுரை பகர்ந்தார்.
அதன் படியே நடந்தது. அயோத்திக்குச் சென்ற துளஸிதாஸர் அங்கு ஒரு
ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். அந்த இடம் அவருக்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. ஒரு
சாது அந்த இடத்தைப் பீடத்தால் அலங்கரித்து துளஸிதாஸர் அங்கு வருவதைத் தன் குரு முன்னதாகவே
கணித்துச் சொல்லி விட்டார் என்று கூறினார்.
1575ஆம் ஆண்டு ராம நவமி நாள். அறிஞர்களின் கூற்றுப்படி திரேதா
யுகத்தில் ராமர் பிறந்த நாளில் எந்த கிரக நிலைகள் இருந்தனவோ அதே கிரக சேர்க்கை அமைந்த
நாள் அது. ராமரைத் துதித்து தன் ராமசரிதமானஸ் காவியத்தைத்த் தொடங்கினார் துளஸிதாஸர்.
ஏழு காண்டங்களை எளிய மொழியில் பாடினார். மானஸ சரோவருக்கு ஏழுபடிகள்
வழியே செல்வதாக உள்ள கருத்துப்பட ராமசரித மானஸ் என்ற பெயரை தான் இயற்றிய ராமாயணத்திற்குச்
சூட்டினார்.
இரண்டு வருடம் ஏழு மாதம் 26 நாட்களில் அற்புதமான காவியம் முடிந்தது.
அது முடிந்த நாள், சீதா கல்யாணம் நடந்த அதே ஆண்டு விழா நாள்.
சரிதத்தைப் பூர்த்தி செய்த துளஸிதாஸர் வாரணாசி திரும்பினார்.
அங்கு அவரது காவியத்தின் பெருமை பரவியது. இது பொறுக்காத பண்டிதர்கள் சிலர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுவடிக் கட்டை எடுத்து வருமாறு இருவரை அனுப்பவே அவர்கள் ஆலயத்திற்கு இரவு நேரத்தில் சென்றனர்.
ஆனால் அங்கு இருவர் வில்லும் அம்புடனும் காவல் காத்து வருவதைப்
பார்த்து அதிசயித்த அவர்கள் மறுநாள் துளஸிதாஸரை வணங்கி மன்னிப்புக் கேட்டு நடந்ததைக்
கூறினர்.
அமிர்தமே நாணமடையும் படியான சுவையான சொற்கள் கொண்டது எனப் புகழப்படும்
காவியம் மக்களிடையே பரவி ராம பக்தியை வளர்த்தது.
சித்ரகூடத்தில் ராம தரிசனம் பெற்ற துளஸிதாஸர் சமாதி நிலையை எய்தினார்.
ஆக அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்புடன் கோடிக் கணக்கான மக்கள்
அன்றாடம் பய பக்தியுடன் போற்றும் ராம சரித மானஸ் காவியம் பிறந்த இடமும் கூட என்பதனால்
அதன் சிறப்பு மேலும் கூடுகிறது.
12 நூல்களைப் படைத்த துளஸிதாஸர் சம்ஸ்கிருத பண்டிதரும் கூட.
ராமசரித மானஸ் காவியத்தில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம்
அதிசயமானது. வால்மீகியின் ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரமாவது ஸ்லோகத்திலும் ஒரு காயத்ரி
மந்திரத்தின் ஒரு எழுத்து தோன்றும். ராமசரித மானஸிலோ ஒவ்வொரு செய்யுளிலும் ச, த, ர,
ம வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து வரும்.சீதாராமன் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள்
இந்த ச, த, ர, ம வர்க்க எழுத்துக்கள். ஆக சீதை அல்லது ராமனை ஒவ்வொரு செய்யுளிலும் துதிக்கும்படியான
ஒரு அற்புத அமைப்பு துளஸி ராமாயணத்தில் உள்ளது. காவியத்தின் கதையையும் சொல்ல வேண்டும்,
சந்த சாஸ்திரத்தின் படியும் அமைக்க வேண்டும், சீதாராமன் என்ற சொல்லில் உள்ள வார்த்தைகளில்
ஏதேனுமொரு வார்த்தையைக் குறிக்கும் வர்க்க எழுத்தையும் தர வேண்டும் என்றால் அது மனித
யத்தனத்திற்கு அப்பாற்பட்ட இறை செயல் அல்லவா? ராமனே தனது ஜென்ம பூமியில் தன் நினைவை
மக்களுக்கு ஒவ்வொரு செய்யுளிலும் தரும் வரம் அல்லவா இது!
ஆக இப்படி ஆயிரக்கணக்கில் அற்புதங்கள் நிரம்பிய பூமி அயோத்யா.
அதில் ராமனை பிரதிஷ்டை செய்து காலம் காலமாகச் செய்து வந்த வழிபாட்டை வழக்கம் போல செய்ய
சீதாராமன் அருள் புரிவாராக!
Half baked
historians and selfish politicians spread a myth that the British rule did lot
of good to India and people lived happily. Even innocent students had that
illusion because they were taught history written by the British. It glorified
the British rule in India and praised the British as builders of Modern India.
But millions of Indians died in India due to starvation and famine. British did
not help the general public but allowed
the Christian missionaries to do the job with a motive.
Even the
London Times newspaper published the statistics on those deaths. They were happy
that the famine helped them to bring the Hindus into Christian fold. They praised
the British contribution to the missionaries. Even today the Christian Aid
Agencies follow the same tactics. After every natural disaster they publish
full page advertisements seeking donations. Only when they are trapped in some
cases like the recent sex abuses by the missionaries and Christian aid agencies,
people came to know that they received a fat salary, stayed in 4 or 5 star
hotels and travelled in business class. In short, at the news of every earth
quake, flood, storm, famine and Tsunami they feel very happy.