Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணம் ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்திலிருந்து சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு 17-3-2025 அன்று மீண்டும் சென்றேன். மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நான்கு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் காரணமாக மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால் இப்போது மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகளை நடைபெறும்; நாங்கள் சென்ற தினம் சுவாதி நட்சத்திர தினம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது இந்தக் கோவிலின் சிறப்பு சாந்த முகம் உடைய நரசிம்மர் ஆகும் .
நரசிம்மர் மஹிமை
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில் அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம் பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .
இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.
இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். இங்கு உள்ள ஒரு ஆஞ்சாசனேயர் முன்னாள் நெல் தானியத்தைக் கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதும் நம்பைக்கையும் உளது .
அப்பரிசிகள் கிராமத்தின் ஊரின் பெயர் பற்றிய எனது கருத்து இதோ:
கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !
PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL
இரு முறை கோவில் கட்டுவதில் தடை ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம் என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும் தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .
பிரஹலாதன் பெயர் மருவி பரகால என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!
கோவிலுக்கு வெளியே பூ, துளசிமாலை விற்கப்படுகின்றன. நாங்கள் துளசி மாலை வாங்க்கிச் சென்றோம். பார்ப்பதற்கு இகவும் லட்சணமான மூர்த்தி என்பதால் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம் இது . கோவில் மிகச் சிறியது . கல்வெட்டுகளும் இருப்பதாக கேள்விப்பாட்டேன். ஆயினும் நாங்கள் அவற்றைக் காண முடியவில்லை .
temple door carvings at Parikkal Narasimhar temple
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
COLLECTED FROM NATIONAL NEWSPAPERS AND EDITED BY ME
ஞானமயம்வழங்கும்உலகஇந்துசெய்திமடல் 23-3-2025
செய்திகளைத்தொகுத்தவர்லண்டன்சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும்வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்றுஞாயிற்றுக்கிழமைமார்ச் 23–ம்தேதி 2025-ம்ஆண்டு
****
முதலில் பகவத்கீதைசெய்தி
பகவத்கீதைபற்றிசுனிதாவில்லியம்ஸ்
9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் மன அமைதி பெறுவதற்காக விண்வெளிக்கு பகவத் கீதையையும் கொண்டு சென்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர்.
அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்புவதில் தாமதத்தை ஏற்படுத்தின.
இப்போது இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.
புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார். அதோடு அவர் விநாயகர் சிலையையும் கொண்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில், “பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. பகவத் கீதையை எனது தந்தை எனக்கு பரிசளித்தார்.
பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது” என்றார்.
****
துளசி செடியை அவமதித்த ஹக்கீம் மீது வழக்கு
புனித துளசி செடி அவமதிப்பு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரளாவில் துளசி மாடத்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வீடியோ பதிவேற்றியவர் கைது;
குற்றத்தில் ஈடுபட்டவரை முதலில் கைது செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
“துளசித்தாராவை (துளசி மாடம்) அவமதித்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக “சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க” கேரள உயர் நீதிமன்றம், மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. துளசித்தாரா என்பது புனித துளசி செடியைக் கொண்ட வீடுகளுக்கு முன்னால் உள்ள ஒரு உயர்ந்த மேடை ஆகும்.
ஆலப்புழாவைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீராஜ் ஆர்.ஏ.,வின் ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வு காவல்துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. அப்துல் ஹக்கீம் என்ற நபர் “துளசித்தாராவை அவமதிப்பது” போன்ற வீடியோவை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஸ்ரீராஜ் கைது செய்யப்பட்டார்.
திருச்சூரில் உள்ள குருவாயூரில் உள்ள கோயில் காவல் நிலையத்தில் மதங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் தொந்தரவு செய்ததாக ஸ்ரீராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது மற்றும் அப்துல் ஹக்கீம் இன்னும் சுதந்திரமாக இருக்கும்போது ராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“துளசித்தாரா இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது முடிகளைப் பறித்து ‘துளசித்தாரா’வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அப்துல் ஹக்கீம் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “இப்போது கூட அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது,. அத்தகைய நபர் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்கப்படுகிறார், மேலும் மனுதாரர் இங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்” என்று நீதிமன்றம் கூறியது.
அப்துல் ஹக்கீம் ஒரு மன உளைச்சலுக்கு ஆளான மனிதர் என்று அரசு தரப்பு வாதிட்டது, ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது, அவர் எப்படி தொடர்ந்து கோவிலின் வளாகத்திற்கு வெளியே செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பியது. “அவர் ஒரு மனநோயாளி என்றால், அவர் எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார் என்பதும் புலனாய்வு அதிகாரியால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று நீதிமன்றம் கூறியது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்ற முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.
நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோவில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோவில்கள் நிறுவப்பட வேண்டும்என பல பக்தர்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகையாளருடன் பேசுகையில் தெரிவித்தார்
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார் .
*****
ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை
ஒடிசாவின் பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையானது இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் வேத வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பூரியில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெற்றது. பூரி நகரில்ரத யாத்திரை நடைபெறும் போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை நடத்தப்படும். இஸ்கான் அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த காலகட்டத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை நடத்தப்படும்.
வெளிநாடுகளில் இஸ்கான் நடத்தும் ஜெகநாதர் ரதயாத்திரையானது, பூரி ரத யாத்திரை மரபுகளில் இருந்து விலகி, வேதப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாள் அல்லாமல் வேறுநாட்களில் நடத்தப்படுகிறது. இந்து இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக பூரி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நவம்பர் 9-ம் தேதி நடத்தவிருந்த ரத யாத்திரை, பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் பூரி மன்னரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டத.
இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மரபுகளின் படி ஒரே நாளில் ரத யாத்திரையை நடத்துவது தொடர்பாக இஸ்கான் அமைப்புடன் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பூரி மன்னர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜெகநாதர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இஸ்கான் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காலந்தவறி ரத யாத்திரையை நடத்துவது, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது .
இதுபற்றி ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது.எங்கள் கவலைகளை இஸ்கான் பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம். மேலும் பூரியில் நடத்தப்படும் ரத யாத்திரை அட்டவணைப்படி உலகம் முழுவதும் நடத்தும்படி கேட்டுக் கொண்டோம் என்று அரவிந்த பதி சொன்னார்.
*****
அறநிலையத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:
ஹிந்து சமய அறநிலைய துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக் கோவில்களை சூறையாடி விக்கிரகக்ங்களை உடைத்து தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் கஜினி நகருக்கு எடுத்துச் சென்றவன் கஜினி முகமது .
உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில் கடந்த 47 ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்பல் மாவட்ட காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இதற்கு நம் நாட்டின் மீது படையெடுத்தவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் கொண்டாட தேவையில்லை” என்று காரணம் கூறியுள்ளது.
கஜ்னாவியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர் முகமது கஜினியின் சகோதரி மகன்தான் சாலார் மசூத் காஜி. கஜினியின் படை தளபதியாகவும் இருந்தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்ளையடித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. அப்போது கஜினியுடன் அவரது மருமகன் சாலார் மசூதும் இருந்துள்ளார்.
பிறகு ஒரு தனிப்படையுடன் தற்போதைய உ.பி.க்கும் சாலார் மசூத் வந்தார். சம்பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்னனை கொன்றார். இந்த வெற்றியின் நினைவாகவே அவரது பெயரில் சம்பலிலும், அருகிலுள்ள முராதாபாத் மற்றும் சஹரான்பூரிலும் நேஜா விழா நடத்தப்படுகிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்லையில் உள்ள பைரைச்சிற்கும் சென்றார்.
இன்றைய உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள பைரைச்சில் அப்போது குறுநில மன்னர் சுஹல்தேவ் ஆட்சி இருந்தது. தம்முடன் மேலும் 21 குறுநில மன்னர்களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்கொண்டார் சுஹல்தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படையால் சாலார் மசூத் கொல்லப்பட்டார். அப்போது பைரைச்சிலேயே சாலார் மசூத் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறை மீது 1250-ல் துக்ளக் வம்சத்தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்டினார். தற்போது, முஸ்லிம்கள் இடையே பிரபலமான சாலார் மசூத் தர்காவுக்கு ஆண்டுதோறும் உருஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரி இந்து அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
*****
R S S ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!
பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்- என்னும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், மார்ச் 23ம் தேதி வரை ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அவர், பாரத மாதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள் .
இந்த ஆண்டு ஆர் எஸ் ஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது
உலகிலேயே மிகப்பெரிய தொண்டர் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
மார்ச் 30 –ஆம் தேதி லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது ஜெய்பூர் நகரில் உள்ள காலே ஹனுமான்ஜி மந்திராகும்
இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த அதிசயமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அற்புதமானதொரு ஆன்மீக அனுபவத்தை அடைகின்றனர்.
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.
சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.
தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.
ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.
சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.
அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.
காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.
எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோவிலில் உள்ள தூண்கள் புஷ்ய நட்சத்திரத்திற்கு இணங்கக் கட்டப்பட்டுள்ளன.
கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கச் மூன்று திசைகளைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.
முகலாயர் மற்றும் ராஜ்புத்ர கட்டிடக் கலையின் படி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கோவில் அமைப்பில் ஒரு சிறிய கர்ப க்ருஹத்தில் ஒரே கல்லால் அமைந்துள்ள ஹனுமானின் விக்ரஹம் உள்ளது. இங்கு விநாயகர், ஶ்ரீ ராமர், சிவன், துர்க்கை ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கல்கத்தாவிலிருந்து வந்த கட்டிடக் கலை நிபுணர்கள் இந்தக் கோவிலை பெரிதாக்கினர்.
கோவிலைச் சுற்றி பெரிய தோட்டங்களும், விருந்தினர் விடுதிகளும் உள்ளன.
ஒரே சமயத்தில் 5000 பக்தர்கள் உணவருந்தும் விதத்தில் பிரம்மாண்டமான உணவருந்தும் கூடமும், பெரிய சமையல் அறையும் இங்கு உள்ளன.
கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.
சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.
ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.
சாமானியன் முதல் உயர் பதவி வகிப்பவர் வரை ஹனுமனை வழிபட்டு அதனால் தாங்கள் பெற்ற பயன்களை கூறுவதால் ஹனுமனின் புகழ் பெருகிக் கொண்டே இருக்கிறது
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தனது பையில் அனுமனது சிலையைக் கொண்டு செல்வதை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காலே ஹனுமான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் 6-3-25 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!
மாற்று மருத்துவம்!
மலர் மருத்துவம் தரும் 38 மலர் மருந்துகள்!
ச. நாகராஜன்
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் அருகே உள்ள மோஸ்லி (Mosely)
என்ற கிராமத்தில் மலர் மருத்துவம் என்னும் புது சிகிச்சை முறையைக் கண்டறிந்த டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach) பிறந்தார்.
(பிறப்பு 24-9-1884 மறைவு 27-11-1936)
கேம்பிரிட்ஜில் படித்து பப்ளிக் ஹெல்த்தில் ஒரு டிப்ளமாவை அவர் பெற்றார்.
பின்னர் லண்டனில் யுனிவர்ஸிடி காலேஜ் ஹாஸ்பிடலில் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்க ஆரம்பித்தார். நேஷனல் டெம்பரன்ஸ் ஹாஸ்பிடலில் 21 வருடம் வேலை பார்த்து நல்ல அனுபவத்தைப் பெற்றார் அவர்.
டாக்டர்கள் வியாதிகளை இனம் கண்டு குணப்படுத்தும் விதத்தில் அவர் அதிருப்தி கொண்டார். நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் வருத்தமுற்றார்.
தனது 43வது வயதில் தனது மருத்துவ பிராக்டீஸை அவர் விட்டு விட்டார். தாவர வகைகளை ஆராய ஆரம்பித்தார். 1932 வாக்கில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு 12 மருந்துகளை அவர் கண்டுபிடித்தார். அடுத்து 1933ல் இன்னுமொரு ஏழு மருந்துகளை அவர் உருவாக்கினார்.
1934ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்ஷைரில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு அவர் இடம் பெயர்ந்தார். அங்குள்ள தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலும் அவர் அலைந்து திரிந்து தன் ஆய்வை மேற்கொண்டு இன்னும் 19 மருந்துகளைக் கண்டுபிடித்தார். தன்னிடம் வருவோருக்கு மலர் மருந்துகளை அவர் தர ஆரம்பித்தார்.
பத்திரிகைகளில் அவரது மலர் மருந்துகளைப் பற்றிய செய்திகள் வரவே பொதுமக்கள் திரளாக அவரை நாடி வந்தனர். ஆனால் ஜெனரல் மெடிகல் கவுன்சில் அவரது மலர் மருத்துவ விளம்பரங்ளை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் தனது மலர் மருத்துவ முறைகளை அவர் தொடர்ந்து பரப்பினார். 1938ம் ஆண்டு மிக அமைதியாக தன் உயிரை நீத்தார்.
அவர் கண்டுபிடித்த மருந்துகள் மொத்தம் 38.
அக்ரிமனி, ஆஸ்பென், பீச், செண்டாரை, செராட்டோ, செஸ்ட்நட் ப்ளம், செஸ்ட்நட்பட், சிக்கரி, க்ளெமடிஸ், க்ராப் ஆப்பிள், எல்ம். ஜென்ஷன், கார்ஸ், ஹீதர், ஹால்லி, ஹனிசக்கிள், ஹார்ன்பீம், இம்பேஷன்ஸ், லார்ச், மிமுலஸ், மஸ்டர்ட், ஓக், ஆலிவ், பைன், ரெட் செஸ்ட்நட், ராக் ரோஸ், ராக் வாட்டர், செலெராந்தஸ், ஸ்டார் ஆஃப் பெத்லஹேம், ஸ்வீட் செஸ்ட்நட், வெர்வெய்ன், வைன், வால்நட், ஒய்ட் செஸ்ட்நட், வைல்ட் ஓட், வைல்ட் ரோஸ், வில்லோ ஆகிய இந்த 38 மலர் மருந்துகளே அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகின்றன.
மலர் மருந்துகளின் விலை மற்ற அல்லோபதி மருந்துகளை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு,
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.
ஆண், பெண் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆனால் நல்ல ஒரு மலர் மருத்துவரிடம் சென்று தனது குறைகளைச் சொன்னால் போதும். கூறுகின்ற வார்த்தைகளிலேயே மலர் மருத்துவர் வியாதி இன்னதென்று நிர்ணயம் செய்து மருந்தை சிபாரிசு செய்வார்.
ஹோமியோபதி மருந்துகளைப் போல சின்னச் சின்ன உருண்டைகளில் இரண்டு அல்லது மூன்றை வாயில் போட்டு சிறிது நீரை அருந்த வேண்டும். ஓரிரு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும்.
முக்கியமாக மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது தரும் பலனை உடனே உணர முடியும்.
அதிகமான பயமா, ரெட் செஸ்ட்நட் சாப்பிட வேண்டும்.
வேலை செய்து செய்து உடலும் மனமும் களைத்து விட்டனவா, ஆலிவ் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே டென்ஷன் என்றால் வெர்வெய்ன் சாப்பிடலாம்.
இப்படி ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மலர் மருந்து உண்டு.
கர்ப்பிணிகள் தங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசித்தபின் இவற்றை உட்கொள்ளலாம்.
இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்துகளை விற்கும் மருத்துவக் கடைகளில் வாங்கலாம்.
மலர் மருந்தைப் பயன்படுத்துங்கள்; அதிக டென்ஷன், உடல்சோர்வு, களைப்பு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கிக் கொள்ளுங்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I decided to stay in Kuala Lumpur, capital of Malaysia for two days on my way back to London from Sydney in Australia. The reason for the visit is to take rest and visit Batu Caves Murugan Temple and Petronas Twin Towers. The Twin Towers is in the congested area of the town and so we took Grab (like Ola and Uber is Grab) and it cost us only nine RM (ringitt). But the entrance fee for the Twin Towers is RM 100 for me and my wife; actually it is a concession for senior citizens like us. Others pay double the amount. All the visitors are taken in batches. We stopped at three places: 1.Sky Bridge connecting Twin Towers; 2.Eighty Fourth Floor and 3.Shopping Floor where you can buy momentous, gifts etc.
When you enter the building, they take a photo of you and your companion. It will be ready when you get out of the building; if you want you may buy your picture.
At each stop you are given 10 minutes to fifteen minutes and you can take pictures of the sky scrapers of Kuala Lumpur.
Local people are reluctant to pay and visit the building; but tourists think that it is onetime opportunity in life. The Twin Towers is with a huge shopping mall. When you come out you see a fountains and a park. If you want to cover the tall towers while taking pictures you must walk away.
Following are the details:
Name: Petronas Twin Towers (also known as the KLCC Twin Towers)
Location: Kuala Lumpur, Malaysia
Height: 1,483 feet (452 meters)
Floors: 88 stories
Architects: Cesar Pelli & Associates
Official Opening: August 28, 1999
Design: The design incorporates Islamic arabesques and repetitive geometries characteristic of Muslim architecture.
Historical Significance: From 1996 to 2004, they were the tallest buildings in the world.
Now the tallest Twin Towers in the World.
–subham—
Tags- my visit, Petronas , twin towers, Kuala Lumpur,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
SRI VENKATESWARA TEMPLE, AUSTRALIA
SYDNEY OPERA HOUSE
DARLING HARBOUR, SYDNEY
SYDNEY MURUGAN TEMPLE
Four Countries! Over 40,000 Kilometres! 100 days.
Most of you would have read Jules Verne’s book Around the World in 80 days or at least seen the film. I , London Swaminathan , did go around half of the world in one hundred days. I left London on December 11, 2024 and came back on 20th March 2025. I covered over 40,000 kilometres by travelling to Australia, Singapore, Malaysia and India. Two times I had transit at Frankfurt airport in Germany. But I can claim only covering half of the world because I did not touch American and African continents. Following are the places I visited:
December 11, 2024- I left London Via Frankfurt
December 12- reached Singapore
December 13- visitedSingapore Muthumaramman Temple, and had lunch at famous Komala Vilas
December 14, 2024- reached Sydney in Australia
December 20,21,22- visted Shell Cove beach
December 22- I did Minnamurra Rain Forest Walk
December 23- I had Darshan at Sri Venkateswara Temple at Hellensburg.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலேஷியா நாட்டின் தலை நகரம் கோலாலம்பூர்; அங்கு 2025 மார்ச் மாதம் பதிமூன்றாம் தேதி (13-3-2025) தங்கியதற்கு இரண்டு காரணங்கள். 1.பத்துமலை முருகனைத் (BATU CAVES SHRINE) தரிசிக்கவேண்டும் ; 2.உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் (PETRONAS TWIN TOWERS) ஏறி நகரம் முழுவதையும் பார்க்கவேண்டும் என்பதே; இரண்டு ஆசைகளும் இனிதே நிறைவேறின .
ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம்; பத்துமலை முருகனைத் தரிசிக்க டிக்கெட் கிடையாது; இரட்டைக் கோபுரத்தைத் தரிசிக்க கட்டணம் உண்டு நானும் என் மனைவியும் சீனியர் சிட்டிசன் என்பதால் (கிழவன்-கிழவி என்பதால் ) ஆளுக்கு ஐம்பது வெள்ளி (மலேசியன் ரிங்கட் Malaysian ringgit- RM) கட்டணம். ஏனையோருக்கு இரு மடங்கு கட்டணம்.
கட்டிடத்தில் ஏறிச் செல்ல லிப்ட் உள்ளது. ஆயினும் அணி அணியாகவே செல்ல முடியும்; இரட்டைக் கோபுரங்களையும் இணைக்கும் பாலத்தில் உலவ பத்து நிமிடம் கொடுக்கிறார்கள் . இரு பக்கங்களிலும் உள்ள கண்ணாடி வழியாக மலேஷியத் தலை நகரைக் கண்டு களிக்கலாம். பின்னர் உயரமான 84-ஆவது மாடிக்கு அழைத்துச் செல்வார்கள்; அங்கு மேலும் பல கட்டிடங்களை நான்கு திசைகளிலும் கண்டு களிக்கலாம் . அங்கே ஒரு பத்து நிமிடம் நிற்கலாம். பின்னர் ஷாப்பிங் ஏரியாவில் இறக்கிவிடுவார்கள்; பை கனமாக இருந்தால் பரிசுப் பொருட்களையும் வாங்கலாம். உள்ளே நுழையும் போதே உங்களை தனித் தனியாகவோ, கணவன் மனைவி ஜோடியாகவோ ,காதலன்- காதலி ஜோடியாகவோ போட்டோ எடுத்து விடுவார்கள்; நீங்கள் வெளியே செல்லுகையில் அது தயாராக இருக்கும்; விருப்பப்பட்டால் காசு கொடுத்து அதையும் வாங்கலாம். எங்களை காரில் சுற்றிக் காட்டிய இளைஞனைக் கேட்டேன்; அவன் மேலே ஏறியது இல்லை என்றான்; சுற்றுலாப்பயணிகளுக்கு அது வினோதம்; உள்ளுர்க்காரர்களுக்கோ அது காசினைக் கொள்ளை அடிக்கும் இடம் என்பது புரிந்தது!
கோபுரக் கட்டிடம் மிகப்பெரிய SHOPPING MALL ஷாப்பிங் மால்- உடன் இணைந்தது அதில் ஏராளமான கடைகள். நாங்கள் சென்றபோது கூட்டம் அதிகம் இல்லை.
வெளியே வந்தவுடன் பொங்கும் நீறுற்றுடன் பூங்கா உள்ளது அதில் கொஞ்ச தூரம் சென்றால் கட்டிடத்துடன் செல்பி எடுக்கலாம்.
****
கட்டிடம் பற்றிய புள்ளி விவரங்கள்
இரட்டைக் கோபுரங்களின் உயரம் –1483 அடி!
மொத்தமுள்ள மாடிகள் — 88
கட்டிடத்தில் உள்ள பகுதிகள் – கடைகள்; பெட்ரோலியம் மியூசியம்
இரண்டு கோபுரங்களையும் இணைக்கும்Skybridge பாலம் – 44– ஆவது மாடி
Location: Kuala Lumpur, Malaysia.
Architect: Cesar Pelli.
Completion: 1998.
Height: 451.9 meters (1,483 feet).
Floors: 88 floors per tower.
Purpose: The towers house offices for Malaysia’s national oil company, Petronas, a large mall, a concert hall (home to the Malaysian Philharmonic Orchestra), and a petroleum museum.
ஏன் பெட்ரோனாஸ் என்ற பெயர்?
இதைக் கட்டியவர்கள் பெட்ரோனாஸ் பெட்ரோலியக் கம்பெனிக்காரர்கள் அந்தக் கம்பெனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .
நாங்கள் விமான நிலையத்திலிருந்து, தங்கும் இண்டிகோ ஹோட்டலுக்குச் சென்றபோது நகரம் இருள்மயமாக காட்சி அளித்தது. இது ஒரு கிராமமோ என்ற நினைப்பு ஏற்பட்டது. ஆனால் கட்டிட உச்சியிலிருந்து நகரத்தைக் காண்கையில் நியூயார்க்குக்கு வந்து விட்டோமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது அவ்வளவு உயரமான கட்டிடங்கள்! வண்ண வண்ண கட்டிடங்கள்; விதவிதமான வடிவங்களில்!.
கட்டிடம் எங்கே இருக்கிறது?
கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் ஹோட்டல் ரூம் வாடகை எடுத்தால் நடந்தே செல்லலாம். அல்லது உள்ளூர் பஸ், ரயிலிலும் எளிதில் அடையலாம்
யார் இதை வடிவமைத்தார் ? – சீசர் பெல்லி
எப்போது கட்டப்பட்டது ? 1998
இதன் சிறப்பு என்ன? இதைவிட உயரமான கோபுரங்கள் இருந்தபோதிலும் இரட்டைக் கோபுரம் என்ற வகையில் இதுதான் உலகிலேயே உயரமான கட்டிடம் !
கட்டிடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் மடபமும் மண் உளது
உள்ளூர்க்காரருடன் சென்றிருந்தால் எது, என்ன என்று சொல்லியிருப்பார்கள் காசு இருந்தால் போங்கள்; இல்லாவிடில் உள்ளூர்க்காரர்கள் மூலம் வேறு உயரமான கட்டிடத்தில் ஏறி காசு இல்லாமலேயே நகரினைக் காணலாம்
ஆனால் நான் நியூயார்க் சென்றபோதும் இப்படி காசு கொடுத்து உயரமான கட்டிடத்தைப் பார்த்தேன் .
–SUBHAM—
TAGS- மலேஷியா , கோலாலம்பூர், இரட்டைக் கோபுரம், பெட்ரோனாஸ் டவர், நான் கண்ட கோபுரம், லண்டன் சுவாமிநாதன்
உலகின் ஆகப் பெரும் பெங்சுயி நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மலாசியாவைச் சேர்ந்த லில்லியன் டூ (LILLIAN TOO).
பெங் சுயி பற்றி 200க்கும் மேற்பட்ட வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களை எழுதியவர் இவர்.
இவரது புத்தகங்கள் 30 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சுமார் 60 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.
ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார் லில்லியன் டூ. பின்னர் சாதாரண வங்கி ஊழியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் அவர்.
பெங்சுயி பற்றி அவருக்கு ஆர்வம் எழுந்தது. அதை நன்கு கற்றார். வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றார். தனது வெற்றியை மற்றவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பெங்சுயி பற்றிய வகுப்புகளையும் இன்று வரை நடத்தி வருகிறார்.
தனது வெற்றிக்கான முக்கியமான காரணங்களாக அவை கூறும் காரணங்கள் இரண்டு:
1) “ஓம் மணிபத்மே ஹூம்” என்ற மந்திரத்தை 10 லட்சம் முறை ஜபித்தது முதல் காரணம்.
2) அடுத்த காரணம் சீனர்கள் புனிதமாகக் கருதக் கூடிய ‘டிராகன்’ வடிவுடைய அரவணா என்ற மீனை வளர்த்தது.
மணிபத்மே ஹூம் மந்திரம் வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்த்தும் புத்தமத மந்திரம் ஆகும். அது அதிக செல்வத்தையும் தரும். இதை ஜபிக்க ஆரம்பித்தவுடன் ஹாங்காங்கில் வேலை பார்த்து வந்த அவர் வேலையை விட்டு விட்டு பெரும் பெங்சுயி நிபூணராக மாறினார். வாழ்க்கையின் குறிக்கோள்,, அதை அடையும் வழி ஆகியவற்றை உணர்ந்தார்.
அரவனா மீன் என்பது செல்வத்தையும் அதிகாரத்தையும் குறிக்கும் ஒரு வகை மீனாகும். அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஒருங்கே சேர்த்து இது தரும். இந்த மீனை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்தாலேயே பணம் வந்து குவியும் .புகழ் பெருகும்.
மீனைக் கடையில் வாங்கி உரிய முறையில் வளர்த்தால் இதன் பலனை நேரடியாக அனுபவிக்கலாம். இல்லையேல் முதலில் அந்த மீனின் சின்னத்தை வாங்கி அதை வீட்டில் வைத்துப் பார்த்து நல்ல பலனைப் பெறலாம்.
பணத்தோடு வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை அளிப்பதால் இதை பேரரசர் என்று சீனாவில் அழைப்பது வழக்கம்.
இப்படி மந்திரத்தாலும் அரவணா மீனாலும் பெரும் புகழ் பெற்ற லில்லியன் டூ மற்றவர்களுக்கும் தான் உணர்ந்த உண்மைகளைக் கூற ஆர,ம்பித்தார்.
ஒருவனின் உள்ளத்தூய்மையும் மனப்பாங்கும் அவனது உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது இவரது கொள்கை.
வீட்டில் வேண்டாத பொருள்களை வெளியே தூக்கி எறி என்பது இவர் செல்வம் பெறக் கூறும் முதல் வழி. DECLUTTERING என்னும் வேண்டாத குப்பையை அகற்றும் வழி மகத்தான ரகசியத்தைக் கொண்ட வழி. அதே போல உள்ளத்திலிருந்தும் கசப்புகளையும் அழுக்குகளையும் வெளியே தூக்கி எறி என்கிறார் இவர்.
ஒருவர் இவரிடம் வந்து ,”மேடம், நீங்கள் கூறியபடி என் எண்ணத்தைச் சீராக்கி உள்ளேன். எனக்கு ஒரு கார் வேண்டும். இதை அடைவது தான் என் லட்சியம்” என்றார்.
உடனே லில்லியன் டூ. அவரிடம்,” கட்டாயம் கிடைக்கும். கார் வேண்டும் என்பதை மனதில் புரோகிராம் செய்யுங்கள். கிடைத்தால் எப்படி எல்லாம் இருப்பீர்கள் என்பதை கற்பனை செய்து மகிழ்ச்சியை உணருங்கள்’ என்றார்.
அவரும் அப்படியே செய்தார்.
லில்லியன் டூவுக்கு ஒரு போன் வந்தது – அவரிடமிருந்து.
“கார் கிடைத்து விட்டது” என்று மகிழ்ச்சியுடன் அவர் கூவினார்.
அத்தோடு அவர் கேட்டார்: “மேடம், நான் இதற்குத் தகுதி உடையவன் தானா? என்று.
லில்லியன் டூ, “நீங்கள் தகுதி உள்ளவர் என்பதால் தானே இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அனுபவியுங்கள்: என்றார்.
ஆனால் தொடர்ந்து அவர் தான் அந்தக் காரைப் பெறத் தகுதி இல்லாதவன் என்றே நினைத்தார்.
விளவு இன்னொரு போன் அவரிடமிருந்து லில்லியன் டூவுக்கு வந்தது; “மேடம்! கார் திருடு போய்விட்டது!” என்று.
மனதின் சக்தி மகோன்னதமானது. அதன் சக்தி ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.
இதை உணர்பவர்கள் வெற்றி பெறுவர். இதற்கு நூற்றுக் கணக்கான் பெங்சுயி வழிமுறைகள் உதவி புரிகின்றன.
அவற்றைக் கற்று கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் லில்லியன் டூ!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Durga Temple at Batu Cavea
Forty feet long Durga Statue
Batu Caves near Kuala Lumpur, Capital of Malaysia, is famous for its tallest Muruga statue in the world.
I and my wife visited the shrine on 13th March 2025 on our way back to London from Sydney, Australia.
Though the temple is up above the hill, the golden coloured statue at the foothill is the most attractive one.
One should climb 272 steep steps to have the darshan of Lord Skanda/ Kartikeya/ Murugan.
Following are some interesting titbits about the Caves.
The Hill itself 400 million old geological calcite formation.
There are 272 steep, colourful steps.
Up above the hill is the Murugan shrine. During Thaipusam festival there will be a huge crowd.
The golden coloured Murugan statue at the foothills is 140 feet tall. It is the tallest Skanda statue in the world.
At the foothills, there are several temples including Hanuman, Vishnu, Ganesh, Durga and Ayyappan temples.
On the way to the main shrine smaller shrines are located. No fee is collected to enter the temple.
In addition to the temples, there are paid shows such as Gitopadesam and Ramayana show.
There are beautiful peacock statues and a huge Garuda statue; there is also a huge Hanumans statue near the Anjaneya temple.
Durga temple at the foothills has a beautiful idol; and a devotee has made a forty feet long Durga figure inside the temple.
Malaysia being a Muslim country, it is difficult to find a pure vegetarian restaurant; but inside the temple complex the restaurants serve pure vegetarian food.
One can reach the Batu Caves within half hour from the capital city Kuala Lumpur. Good parking space is provided in the temple complex.
One remarkable thing about the place is the presence of a big number of aggressive monkeys and the pigeons like old Trafalgar Square of London.
I found 50 % devotees and 50 % tourists, mostly foreigners and local Chinese. We finished the Darshan of all the temples in three hours. People travelling to Malaysia, must visit this temple.
london swaminathan
london swaminathan in batu caves
Extremists are demanding to cut down part of the mountain saying it creates traffic problems; but Hindus are resisting it.
I took lot of pictures there .
-subham—
Tags- Batu Caves, Murugan shrine, Skanda, monkeys, steep steps, temples for all Gods, tallest, forty feet long, Durga