Important Upanishad Mantras – Part 5 (Post.15,937)

Written by London Swaminathan

Post No. 15,937

Date uploaded in London – 2 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 5; Mantra 31

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति

— Kaivalya Upanishad also in Sanyasa suktam

na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .

pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti||

Neither by actions, nor by (aquiring) progeny and wealth, but by renunciation alone is immortality attained

Na karmanā – not by karma.

Na prajaya – not by progeny.

Na dhanena – not by wealth.

Tyagenaike amṛtatvamanaśuh – Only by tyāga, renunciation of karma, one can gain mokşa.

32

कैवल्योपनिषद् (Verse 7)

उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तम्।ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात्॥

Mantra 7 — Kaivalya Upanishad

Umasahayam paramesvaram prabhum, trilochanam nilakantam prasantam |

Dhyatva munirgacchati bhutayonim, samastasakshim tamasah parastat || 7 ||

Having meditated on the tranquil, supreme Lord who is the consort of Uma (and) who is the Lord with three eyes and blue neck, the meditator attains (oneness with Brahman) which is the source of all beings, witness of all, and beyond all darkness.

****

33

Verse 2.3.11 of the Katha Upanishad

तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥

tāṃ yogamiti manyante sthirāmindriyadhāraṇām |
apramattastadā bhavati yogo hi prabhavāpyayau || 11 ||

This firm holding back of the senses is what is known as Yoga. Then one should become watchful, for Yoga comes and goes.

****

34

 (from the Rigveda 10.13.1 and Shvetashvatara Upanishad 2.2)

युजे वां ब्रह्म पूर्व्यं नमोभिर्वि श्लोक एतु पथ्येव सूरेः।
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आ ये धामानि दिव्यानि तस्थुः॥

Word-by-word meaning:

  • युजे वां ब्रह्म पूर्व्यं नमोभिः (yuje vāṁ brahma pūrvyaṁ namobhiḥ): I invoke/engage with the eternal and ancient Divinity through my prayers and salutations.
  • वि श्लोक एतु पथ्येव सूरेः (vi śloka etu pathyeva sūreḥ): May the hymn (the praise) travel forth on the path of the wise.
  • शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः (śṛṇvantu viśve amṛtasya putrāḥ): Listen, all sons (and children) of immortality.
  •  ये धामानि दिव्यानि तस्थुः (ā ye dhāmāni divyāni tasthuḥ): Those who dwell in the divine celestial realms.

Meaning

“I yoke your ancient prayer with adorations. Let my verse go forth like the path of a wise man. May all the sons of the Immortal (divine beings) listen, even those who have reached heavenly abodes.”

This verse is foundational to understanding the relationship between the divine and humanity in Hindu scripture, specifically highlighting the concept of amṛtasya putrāḥ (“children of immortality”).

****

35

Shvetashvatara Upanishad 1.15–16 says

15-16     As oil exists in sesame seeds, butter in milk, water in river- beds and fire in wood, so the Self is realized as existing within the self,

Or

तिलेषु तैलं दधिनीव सर्पि-

रापः स्रोतःस्वरणीषु चाग्निः ।

एवमात्माऽत्मनि गृह्यतेऽसौ

सत्येनैनं तपसायोऽनुपश्यति ॥ १५॥

सर्वव्यापिनमात्मानं क्षीरे सर्पिरिवार्पितम् ।

आत्मविद्यातपोमूलं तद्ब्रह्मोपनिषत् परम् ॥ १६॥

tileṣu tailaṃ dadhinīva sarpi-

rāpaḥ srotaḥsvaraṇīṣu cāgniḥ .

evamātmā’tmani gṛhyate’sau

satyenainaṃ tapasāyo’nupaśyati .. 15..

sarvavyāpinamātmānaṃ kṣīre sarpirivārpitam .

ātmavidyātapomūlaṃ tadbrahmopaniṣat param Shvetashvatara Upanishad 1.15–16;

As oil exists in sesame seeds, butter in milk, water in river- beds and fire in wood, so the Self is realized as existing within the self, when a man looks for It by means of truthfulness and austerity-when he looks for the Self, which pervades all things as butter pervades milk and whose roots are Self- Knowledge and austerity. That is the Brahman taught by the Upanishad; yea, that is the Brahman taught by the Upanishads. Shvetashvatara Upanishad 1.15–16;

Another translation

Like oil in sesame seeds, like butter in cream, like water in springs, like fire in firesticks, so dwells the Lord of Love, the Self, in the very depths of consciousness. Realize him through truth and meditation.

The Self is hidden in the hearts of all, as butter lies hidden in cream. Realize the Self in the depths of meditation—the Lord of Love, supreme Reality, who is the goal of all knowledge.

—Shvetashvatara Upanishad 1.15–16; translation by Eknath Easwaran

Another translation by R E Hume of the above passage

As oi in sesame seeds, as butter in cream

As water in river beds and as fire in the friction sticks

So is the soul apprehended in one’s own soul

If one looks for Him with true austerity

–SVETASVATARA UPANISHAD, P.396, THE THIRTEEN PRINCIPAL UPANISHADS, R E HUME

**

Tamil Saivite saint Appar  (600 CE) says in Tevaram verse in Tamil:

Like the fire in the wood, like the ghee in the milk,

the great gem like Brilliant Lord is standing obscured.

installing the pole of relationship, with the rope of

feeling, when gyrated vigorously, It (it) would appear in front.

***

Sri Ramakrishna Paramahamsa explains it in simpler terms:

“You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? Because you cannot find God in the days of your ignorance, say not that there is no God.”

xxx

 There are pearls in the deep sea, but you must hazard all the perils to get them. If you fail to get at them  by a single dive, do not conclude that the sea is without them. So also in the quest for the Lord, if your first attempt to see him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.

To be continued………

 Tags- God, oil in sesame, churning milk, in firewood, Svetasvatara Upanishad, Appar, Tevaram, tileṣu tailaṃ dadhinīva sarpi-

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- Part 5 (Post.15,936)


Written by London Swaminathan

Post No. 15,936

Date uploaded in London – 2 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 5; Mantra 31

ந கர்மணா ந ப்ரஜயா தனேன

த்யாகேனை  கே அம்ருதத்வ மானசு:

கைவல்யோபநிஷதம் 

கர்மத்தினாலன்று, மக்களைப் பெறுவதாலன்று, செல்வத்தாலன்று, தியாகத்தாலேயே பரம்பொருளை அடைந்தனர்

தியாகம் – எல்லாவற்றையும் துறப்பது ; மனமுவந்து  வித்துவிடுவது.

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति

— Kaivalya Upanishad also in Sanyasa suktam

na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .

pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti||

****

32

உமாஸஹாயம் பரமேச்வரம்  ப்ரபும்

த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்

த்யாத்வா முனிர் கச்சதி பூதயோனிம்

ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் 

கைவல்யோபநிஷதம் 7

உமா   தேவியைத் துணையாகக் கொண்டிருப்பவ

னை,  தேவிக்குத் தலைவனை, பரமேஸ்வரனை, ஆண்டவனை, முக்கண்ணனை , நீலகண்டனை, பராமசாந்தி மூர்த்தியை,  தியானித்து , உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாயிருக்கிற, அனைத்துக்கும் சாக்ஷியாயிருக்கிற , அஞ்ஞான    இருளுக்கு அப்பாற்பட்டவனாயிருக்கிற  அந்த சிவனை ,  ஒரு முனிவன், அடைகிறான்.

कैवल्योपनिषद् (Verse 7)

उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तम्।ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात्॥

Mantra 7 — Kaivalya Upanishad

Umasahayam paramesvaram prabhum, trilochanam nilakantam prasantam |

Dhyatva munirgacchati bhutayonim, samastasakshim tamasah parastat || 7 ||

****

33

தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திரம் இந்திரிய தாரணாம்

அப்ரமத்த: ததா பவதி யோகோ ஹி  ப்ரபவப்யயெள–கடோபநிஷதம் 6-11

உறுதியான இந்திரிய நிக்ரகத்தை ( புலன்களின் கட்டுப்பாட்டினை) யோகம் என்று சொல்லுகின்றனர்.  அதனால் யோகி கவனமாக இருக்க வேண்டும்.; ஏனெனில் யோகம் பெறவும் இழக்கவும் வல்லது.

Verse 2.3.11 of the Katha Upanishad

तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥

tāṃ yogamiti manyante sthirāmindriyadhāraṇām |
apramattastadā bhavati yogo hi prabhavāpyayau || 11 ||

****

34

யுஜேவாம்  ப்ரஹ்ம பூர்வ்யம் நமோபிர்

விச்லோக  ஏது  பத்யேவ ஸூரே:

ச்ருண்வந்து ஸர்வே  அம்ருதஸ்ய புத்ரா ஆ  

ஏ திவ்யானி  தாமானி  தஸ்து:

ஸ்வேதாச்வதரோபநிஷத் 2-5

சான்றோர்களுடைய  வழியிலேயே சென்று பரம் பொருளாகிய பிரம்மத்தின் கண் உங்கள் இருவரையும் தியானத்தால் சேர்ப்பேன். போற்றுதற்குரிய பழம்பொருள் எப்போதும் ஒளிவீசட்டும்.  தேஜோ மண்டலத்தில் வசிப்பவர்களாகிய  அம்ருதத்தின் (அழியாத பொருளின் ) புதல்வர்களே! நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள் !

Or

உங்களுடைய பழைய பிரார்த்தனையையும் துதிகளையும் நான்  சேர்த்துச் சொல்கிறேன் ; என்னுடைய இந்த துதியானது சான்றோர்களுடைய வழியில் செல்லட்டும்;  (மேல் உலகத்தை அடைந்தவர்களும்) அம்ருதத்தின் (அழியாத பொருளின் ) புதல்வர்களே! நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள் !

 (from the Rigveda 10.13.1 and Shvetashvatara Upanishad 2.2)

युजे वां ब्रह्म पूर्व्यं नमोभिर्वि श्लोक एतु पथ्येव सूरेः।
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आ ये धामानि दिव्यानि तस्थुः॥

****

35

திலேஷு தைலம் ததினீவ ஸர்வபிராப : 

ஸ்ரோத: ஸ்ரவணீஷு சாக்னி:   

ஏவமாத்மா (அ)த்மனி க்ருஹ்யதே (அ)செள

ஸத்யேனைனம் தபஸா  யோ(அ)னுபச்யதி

–ஸ்வேதாச்வதரோபநிஷத் 1-15

எள்ளில் எண்ணெய் போன்றும், தயிரில் வெண்ணெய் 

போன்றும், மரக்கட்டையில் தீ போன்றும் பரமாத்மன்  நம்முள் — ஜீவாத்மாவின்கண் — மறைந்துள்ளான் .

ஒப்பிடுக –

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”.

—திருநாவுக்கரசர் தேவாரம்

तिलेषु तैलं दधिनीव सर्पि-

रापः स्रोतःस्वरणीषु चाग्निः ।

एवमात्माऽत्मनि गृह्यतेऽसौ

सत्येनैनं तपसायोऽनुपश्यति ॥ १५॥

सर्वव्यापिनमात्मानं क्षीरे सर्पिरिवार्पितम् ।

आत्मविद्यातपोमूलं तद्ब्रह्मोपनिषत् परम् ॥ १६॥

tileṣu tailaṃ dadhinīva sarpi-

rāpaḥ srotaḥsvaraṇīṣu cāgniḥ .

evamātmā’tmani gṛhyate’sau

satyenainaṃ tapasāyo’nupaśyati .. 15..

sarvavyāpinamātmānaṃ kṣīre sarpirivārpitam .

ātmavidyātapomūlaṃ tadbrahmopaniṣat param Shvetashvatara Upanishad 1.15–16;

To be continued………

 Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part 5, ஸ்வேதாச்வதரோபநிஷத், எள்ளில் எண்ணெய் போன்றும், கைவல்யோபநிஷதம்

எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 3 (Post.15,935)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,935

Date uploaded in London – 2 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 3 

ச. நாகராஜன் 

பாக்யராஜ் அவர்கள் பிர்ச்சாரத்தில் ஈடுபட்டபோது நல்ல வரவேற்பு இருந்தது. கூட்டத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எம்ஜியாரை சந்தித்து விட்டு வந்த பாக்யராஜ் அவர்களிடத்தில் எம்ஜியாரின் உடல்நிலை பற்றித் தெரிந்து கொண்டு உற்சாகமானார்கள் மக்கள். அதனால் பாக்யராஜ் அவர்கள் பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் பெருமளவில் கூடினார்கள்.

 தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய ஜெயலலிதா அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுடன் ஆண்டிபட்டியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பல இடங்களில் பேசினார். அரசியலில் அடுத்த ரவுண்டுக்கான வாய்ப்பாக ஜெயலலிதா அங்கிருந்து காய் நகர்த்தினார்.

ஆனாலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் தொடர்ந்தது. இதில் பாக்யராஜையும் இழுத்து அவருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் சண்டை மூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நல்ல முறையில் ஆபரேஷன் நடைபெற்று முடிந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் இரண்டு விரலைக் காட்டும் படம் தமிழகம் முழுவதும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் அங்கு அவர் நடமாடுவது, சாப்பிடுவது, கையசைப்பது போன்ற காட்சிகள் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

 வெற்றி பெற்றவர்கள் விவரம் பேக்ஸ் மூலம் எம்ஜியாருக்கு கிடைத்தது.

 1985 பிப்ரவரி 4ந்தேதி அது. பரங்கிமலைப் பகுதி ராணுவத் திடலில் அதிகாலையிலேயே மக்கள் வெள்ளம். இதயதெய்வமாய், கோயிலுக்கும் கூட போகாமல் குல தெய்வமாய் கும்பிடும் அவரது ரசிகப் பெருமக்கள், கட்சியினர் என கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவர் எம்ஜியாரின் நீல நிற அம்பாசிடர் கார் மேடை அருகே மின்னல் போல் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் முன்பு இருந்ததை விட பளிச்சென்று இருந்தார்.

 இறங்கிய எம்.ஜி.ஆர் மேடையை நோக்கி சுறுசுறுப்புடன் ஓட்டமாய் நடக்க ஆரம்பித்தபோது நெகிழ்ந்து போன மக்கள் கூட்டம், புரட்சித் தலைவர் வாழ்க! என்று கோஷம் போட்டதும் எம்.ஜி.ஆர் இரண்டு விரலைக் காட்டி மக்களைப் பார்த்து உற்சாகமானார்.

 **

இப்படியாக கட்டுரை எம்ஜியாரைப் பற்றியும் பாக்யராஜ் அவர்களைப் பற்றியும் விவரிக்கிறது.

 முதல் அமைச்சரான எம்.ஜி.ஆர் எப்போதும் போல பாக்யராஜை அன்புடன் அரவணைத்து வந்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் திரு பாக்யராஜ் ஏன் பதவிப் பொறுப்பில் இருக்க மும்முரமாக முயலவில்லை?

 இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒரு நீண்ட அரசியல் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘நானும் அரசியலும்’ என்ற ஒரு நீண்ட தொடரை பாக்யராஜ் அவர்களே பாக்யா இதழில் எழுதியுள்ளார்.

2011ம் ஆண்டு தீபாவளி இதழில் தொடங்கிய அந்தத் தொடர் 73 வாரங்கள் தொடர்ந்து, 22-3-2013 இதழில் முடிவு பெற்றது.

சின்னச் சின்ன சுவையான சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, ஆரம்ப கால வாழ்க்கை என இதில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தேர்தலில் ஓட்டுப்போடுமாறு சொல்ல எத்தனித்த பாக்யராஜை எம்.ஜி.ஆர் தடுத்தார்.

பாக்யராஜ் திடுக்கிட்டார். கூட்டம் முடிந்தபிறகு காரில் செல்லும் போது எம்.ஜி.ஆர் தான் தடுத்ததற்கான காரணத்தை பாக்யராஜ் அவர்களிடம் கூறினார்.

“நீ திரைத்துறையில் வெற்றி பெற்று வருகிறாய். இன்னும் சாதிக்க வேண்டியது அதில் நிறைய இருக்கிறது. இளம் வயது. . உனக்கு தி.மு.க.விலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு இப்போது உனக்கு அரசியல் களம் வேண்டாம்”

இதை ஏற்ற பாக்யராஜ் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியே தான் இருந்தார்.

இருந்தாலும் காலத்தின் கட்டாயத்தால் அவர் தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது, பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கியது ஆகிய எல்லா விவரங்களும் அவரது தொடரில் இடம் பெற்றுள்ளன.

இதைப் படித்தால் பாக்யராஜ் அவர்களின் வாழ்க்கைப் பயணம் நமக்குப் புரியும்.

 எம்ஜியாருடனான அவரது நட்பு அலாதியானது.

எம்.ஜி.ஆர் புகழ் நிலைக்கும் வரை பாக்யராஜ் புகழும் நிலைக்கும்.

 ஏராளமான பாக்யா இதழ்களைப் பார்த்தால் அதில் இடம் பெறாத தமிழ் திரையுலகம் பற்றிய நுணுக்கமான விவரங்களே இல்லை என்று கூறலாம்.

நடிகர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என அனைவரும் அதில் தங்களின் அற்புதமான பங்களிப்பைப் பல்வேறு தொடர்களில் எழுதியுள்ளனர்.

 இத்துடன் அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைப் பற்றியும் ஆக்கபூர்வமான கட்டுரைகளை பாக்யா வெளியிட்டது.

 அந்த மகத்தான மனிதர் தமிழ் உலகிற்கு இறைவன் அளித்த ஒரு பொக்கிஷம் என்று கூறி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

                         ***                      முற்றும்

சங்க இலக்கியத்தில் கடவுள்கள்! – திராவிடர்களுக்கு செமை அடி!! (Post.15,934)

Written by London Swaminathan

Post No. 15,934

Date uploaded in London – 1 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க இலக்கியத்தில் கடவுள்கள்! – கடவுளை எதிர்க்கும் திராவிடர்களுக்கு செமை அடி!!

புறநானூறு புள்ளிவிவரங்கள்! -Part 2

லண்டன் சாமிநாதன் ஆராய்ச்சிக் குறிப்புகள் :

புறநானூறு என்னும் சங்க கால பழைய நூலில் குத்து மதிப்பாக 7200 வரிகள்;  குத்து மதிப்பாக 43,200 சொற்கள்.

சங்க நூல்களிலும் காளிதாஸனிலும் இந்துமத தகவல்கள் ஒரே  மாதிரி இருப்பதை ஒப்புமை காட்டி ஏற்கனவே  நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளேன் ; எனது பிளாக்குகளில் காண்க

****

பாடல் எண்கள்

அந்தணர் – புறம்-1, 2, 397, 362, 126, 200, 201; சங்க இலக்கியத்தில் சுமார் இடங்கள்

நால்/ வேதம் – புறம்-2, 224, 15; பரி.3-66, 5-23; மது.468,  656;

அந்தணர், நான்மறை– புறம்-.6, 20, 93,362; அகம்181; பட்டி202;. தொல். பாயிரம்; பரி.9-12;

அந்தணர் முத்தீ–  புற..2, 367;  பரி.5-42;

அகத்திய நட்சத்திரம் – பொதியில் முனிவன் – பரி.11-11

****

அமிழ்தம் அமிர்தம் , அமுது, அமுதம்- புறம்-10, 125, 182, 361, 390, 399, 392, 150,

சுமார் 42 இடங்களில் சங்கப் புலவர்கள் நான்கு விதமான ஸ்பெல்லிங் பயன்படுத்திப் பாடினார்கள். தமிழர்கள் அதி தீவிர   இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு கடல் கடைந்த புராணக்கதை அத்துபடி!

****

சங்க இலக்கியத்தில் கடவுள்கள் – கடவுளை எதிர்க்கும் திராவிடர்களுக்கு செமை அடி

மாயோன் மேய காடுறை உலகமும்

MAAYON(VISHNU) GOD OF THE FORESTS

சேயோன் மேய மைவரை உலகமும்

SEYON(SKANDA) GOF OF THE HILLS


வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

KING (OF DEVAS) GOD OF SWEET WATERED LAND

வருணன் மேய பெருமணல் உலகமும்

VARUNAN, GOD OF VAST SAND (COAST)


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற்

RESPECTIVELY BELONG TO MULLAI, KURINJI, MARUTHAM, NEITHAL,

சொல்லவும் படுமே

இது தொல்காப்பியத்தின் (அகத்திணையியல்) பாடல் வரிகள் ஆகும்.

FROM TOLKAPPIAM PORUL ADIKARAM

இந்த வரிகள் தமிழ் நிலத்தின் நான்கு திணைகளையும், அதற்குரிய கடவுள்களையும் வரிசைக்கிரமத்தில் கூறுகின்றன

VISHNU மாயோன் (திருமால்): காடு மற்றும் காடு சார்ந்த முல்லை நிலத்திற்குரிய தெய்வம்.

MURUGAN/SKANDA/KARTIKEYA சேயோன் (முருகன்): மலை மற்றும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்.

INDRA/KING OF GODS வேந்தன் (இந்திரன்): வயல் மற்றும் வயல் சார்ந்த மருதம் நிலத்திற்குரிய தெய்வம்.

VARUNAN வருணன் (கடவுள்): கடல் மற்றும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்.

1

இந்திரன், இந்திரர், இந்திர, — புறநானூறு 182;

ஐங்.62;  பரி. 8-33, 19-50; பரி. திரட்டு 2-97;

வேந்தன்/ தொல்காப்பியம்

***

2

வருணன் /தொல்காப்பியம்

புறம்.9-10;

கலி.131-1/2; 220-1;

அகம் .110-4/5; 270-9/12; 240-8/9;201-3/7;156-13/18

நற்றிணை  155-5/6;

***

3

மாயோன் , மாயவன் / விஷ்ணு

நற்றிணை – கடவுள் வாழ்த்து;

புறம்.57, 291;

கலி.105-35,

மது.591;

நற்.32;

பரி.15-33;

பரி. திரட்டு 8-1;

BLUE/BLACK COLOURED நீலநிற உருவின் நேமியோன் –புறம்.58;

தொல்காப்பியம்

GARUDA FLAG புட்கொடி -புறம் 56;

****

4

DURGA கொற்றவை /துர்கா

திரு .258;

பரி. 11-99,100;

கொற்றி – கலி.89-8;

குறு .218;

DEVI OF AYIRAI HILLS அயிரைமலை தேவி /கொற்றவை – பதிற்று.9-14/18;88-11; 88-24; 80-19/21;

DEVI OF VIDHYA MOUNTAIN விந்தியமலை தேவி ;விந்தியாவாசினி– பதிற்று.88-1/5

****

5

MURUGA/SKANDA முருகன் , முருக , முருகு/ ஸ்கந்தன்

குறுந்தொகை- கடவுள் வாழ்த்து

புறம் 16, 23, 299, .56-14; 259-5;

அகம். 22-11; 28-6; 118-5; 137-8;138-10; 181-6; 232-14; 272-13; 288-4; 1-3; 59-11; 98-10; 158-16.

திரு. 269, 243, 244,

மது. 38, 181, 724;

சுமார் 40 இடங்களில் வருகிறது 

பிள்ளையார் – முருகனின் பெயர்– திருமுருகாற்றுப்படையில் சுமார் 5 இடங்களில் வருகிறது 

கொற்றவை சிறுவ -திரு 258;

பழையோள் குழவி -திரு.259;

பிணிமுக வாஹனம் . புறம்.56; திரு.247;

****

6

BALARAMA வாலியோன் / பலராமன்

புறம் .56-12;

பரி. 2-20;

நற்றி.32-2;

பனைக்கொடியோன் -புறம் 56;58;

****

7

சங்க நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் போற்றும் துதிகள் ஆகும் ; அவை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியவை -புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு.

SHIVA ON BULL விடை ஏறு-சிவ பெருமான் – 

திரு .151, 152;

புறம் 1, 56;

SHIVA UNDER BANYAN TREE ஆலமர் செல்வ / தட்சிணாமூர்த்தி-திரு.256; சிறுபாண்.97;கலி.81-7;83-14;

புறம்.198; 

SHIVA WITH THREE EYES முக்கண் , முக்கட் செல்வர் , முக்கண்ணான்- புறம்.6-18;  அகம்.181-16; கலி. 2-4; 104-12 ;101-24;

SHIVA WITH SAPPHIRE COLOUR NECK மணிமிடற்றோன் – புறம் 56; நீலகழுத்து சிவன் ;

பால்புரை பிறைநுதல் பொலிந்த

நீலமணிமிடற்று ஒருவன் போல – புறம் 91

கறைமிடற்று அண்ணல்-புறம் 55;

SHIVA WITH UMA உமை ஒரு பாகன் –  கலி.38-2;  முருகு.153, 154;

***

8

சங்கப்பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ள வேத கால தெய்வம் யமன் தான்.


யமன், ஞமன், கூற்றுவன், காலன் – புறம்.4, 5, 41, 226, 255,  75, 98, 210, 221, 227, 230, 237, 361, 362;363, 366;

பரி.3-21/23; 5-61;

அகம். 61;

எருமை வாகனம் – கலி.101-25; 103-43;

குறு.283;

மலைபடு.209;

கலி.100-15; 105-37/38;

பதிற்று.14-10;39-8;26-13; 51-35; 84-7;

யமன் கையிலுள்ள தராசு/துலாக்கோல்  – புறம்.6-8/10; பரி.5-61; கலி.100-13/16;

யமன் மீது மக்கள் கோபம் – புறம்.210-8; 237-9; 255-4; நற்றிணை 271-11/12;

***

9

33 தேவர்- பரி.8-3/7; 3-6; திரு.167, 168; சிலப்பதிகாரம்.5-176;

10

அஹல்யா – அகலிகை– பரி.19-50;

***

11


Look at Vasishta in Ursa Major/ Sapta Roshi  Constellation; Star Vasishta is a Doule Star and Arundhati star is one of them. People with good eye sight can see the second star in clear nights.

அருந்ததி — புற.122, ஐங். 442;

பெரு 303, 304;

கலி. 2-21;

பரி.5-44-49;

சிலப்பதிகாரம் 1-27; 5-229;

***

12

ராக்ஷஸர்கள்

அரக்கர் , அரக்கன், அரக்க, அரக்கத்து – புறம்.378; அகம்.14; கலி.84, 38;  பதி. 30-27;

அவுணர் / அசுரர் – புறம்174;. குறு.1;  திரு.59; பதி.11-4;  பரி.5-7, 8-8; 3-56; மது.590;  கலி.2-3;

****

13

முக்கோல் – த்ரிதண்டி கலி.9-12; 126-4; முல்லை.38

***

14

பிராமண கோத்திரங்கள்

கவுண்டின்யர்,வாதுளர், கோசிகர், ஆத்ரேயர், காசியபர்;

தொல்காப்பியரும், காப்பியாற்றுக் காப்பியனாரும் கபி / கவி  என்னும் காவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்

தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் செப்புகிறார்..

பாலைக் கெளதமனார் – கெளதம கோத்ரம்

செல்லூர் கோசிகன் கண்ணன் –  கெளசிக

பெருங் கெளசிகனார் , இளம் கெளசிகனார் – கெளசிக

கள்ளில் ஆதிரையனார், தங்கால் ஆத்ரேயன் – ஆத்ரேய

கொடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் – வாதூல

கார்க்கியார் – கார்க்ய

மதுரை கவுணியன் பூதனார் – கவுண்டின்ய

ஆமூர்க் கோதமன் சஹதேவன் –  கெளதம கோத்ரம்

கவுண்டின்ய கோத்ர விஷ்ணுதாசன் -166

காப்பிய கோத்ர – தொல்காப்பியனார் ;

காப்பிய கோத்ர  காப்பியாற்றுக்  காப்பியனார் ;

இவர்களைத் தவிர கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சுமார் 20 பிராமணப் புலவர்கள் தங்கள் கோத்திரங்களை வெளியிட வில்லை.

நச்சினார்க்கினியர் என்னும் உரை ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர்தான் தமிழில் அதிக உரைகளை நமக்கு எழுதிவைத்தவர். அவர் எழுதிய ஒவ்வொரு உரை முடிவிலும் தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த  நச்சினார்க்கினியர் எழுதிய உரை என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்.

Uma with Skanda= Sa+Uma+Skanda= Somaaskanda 

TO BE CONTINUED………………………..

சங்க இலக்கியம், கடவுள்கள், திராவிடர்களுக்கு, செமை அடிபுறநானூறு புள்ளிவிவரங்கள்! ,Part 2, லண்டன் சாமிநாதன், ஆராய்ச்சிக் குறிப்புகள்

Tirukkural Encyclopaedia- Chapter 13 (Kural 121-125) Post.15,933

Written by London Swaminathan

Post No. 15,933

Date uploaded in London – 1 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

In the previous 12th chapter seven out of ten couplet have Sanskrit words.

Sama and Vanika (vaanika= business, commerce) are well known Sanskrit wors. English word SAME is derived from sama.

And the Kural 114 has its echo in Manu10-57; Kural 118 is reflected in Bhagavad Gita 5-18; 12-19; and Dhammapada sloka 269.

Here in this 13th chapter, we have Sanskrit words in couplets 121, 126 and 130.

Kural 121 talks about going to heaven which is typical Hindu concept. Word Amarar used by Valluvar here means Devas in the heaven, who live eternally.

***

Part 25

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Translations of G U Pope and Suddananda Bharatiyar are taken from ProjectMadurai website;thanks.

****

Self-control- Chapter 13- The Possession of Self-restraint  அடக்கமுடைமை

121.Self-control will place a man among the immortals; the want of it hurls him down into the shades of endless gloom (of hell)– 1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

121.Effective self- control places one among the Gods;

Want of it will plunge one into utter darkness- S M Diaz, I G of Police- SMD Year 2000

***

121.
Control of self does man conduct to bliss th’ immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).– Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

121.Self-rule leads to realms of gods
Indulgence leads to gloomy hades.  — Suddhananda Bharathiyar- SB      
***

121.Self-control paces a man among gods; the want of it sends him to the hideous darkness of hell — EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

121.Right self-control will lead a man to heaven;

The lack of it will lead to darkest night- HAP (not full book) Year 1931

***

121. அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

XXXXXXXXXXXXXXXXXXXX

122.Gurad as your very treasure the power of Self-control; life has no greater gain on earth- – ANM+2

***

122.It is well to treasure the virtue of self- control

As there is no greater wealth for the soul— SMD

***

122.
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that. – GUP

***

122.No gains with self-control measure
Guard with care this great treasure– SB      

***

122.Maintain self-control regarding it as your mainstay, for there is no boon greater than that for man—EVS

***

122.Guard self-control as treasure rare;

It is wealth supreme to everyone—HAP

***
122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

123.Endless glory unto the man who knows that Self-control leads to wisdom and practises it in the manner of the prophets of the old—– ANM+2

***

123.if one exercises self-restraint with knowledge and intent

He will gain distinction  among the wise— SMD

***
123.
If versed in wisdom’s lore by virtue’s law you self restrain.
Your self-repression known will yield you glory’s gain.
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise. – GUP

***

123.Knowing wisdom who lives controlled
Name and fame seek him untold. – SB              

***

123.One who exercises self-control with wisdom will be esteemed among the wise – EVS

***

123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

124.More imposing than the grandeur of a mountain is the bearing of a soul, that swerving not from the path of duty, subdues its rebellious senses—– ANM+2

***

124. The grandeur of a consistently virtuous man who exercises self- control

Is greater than that of the mountains— SMD

***
124.
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself. – GUP

***

124.Firmly fixed in self serene
The sage looks grander than mountain– SB      

***

124.The greatness of a man who exercises self-control and lives righteously  is loftier than a mountain—EVS

***

124. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

125.There are a goodness and a grace in our humility, but it crowns anew men of fortune—– ANM+2

***

125.it is well for everyone to be meek, but for those

Who have wealth , meekness is an added possession—SMD

***
125.
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -’tis fortune’s diadem.
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches. – GUP

***

125.Humility is good for all
To the rich it adds a wealth special– SB      

***
125.Humble reserve is good for all, it is an ornament for the rich in particular – EVS

It is good  for all to have humility;

But unto wealthy men it is riches rare- – HAP

***
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

To be continued………………………….

Tags – Tirukkural Encyclopaedia, Chapter 13,  Part 25, (Kural 121-125)

எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 2 (Post No.15,932)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,932

Date uploaded in London – 1 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 2

ச. நாகராஜன்

அங்கே ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்று எம்ஜியாரின் மனைவி ஜானகியைச் சந்தித்தார். அப்போது அவரைப் பார்த்தவுடனேயே, “எங்கே, இங்கே? அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வந்தீர்களா” என்று ஜானகி அம்மா கேட்டதும் பாக்யராஜ் அவர்களுக்கு மனது ரொம்பவும் வலித்தது. காரணம் சென்னையிலிருந்து திருச்சியோ, கோவையோ வந்தது போல ஜானகி அம்மாள் கேட்டது தான். மேலும் அவர், “இங்கே விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய விசிட்டிங் பாஸ் இல்லாமல் தலைவரைப் பார்க்க இயலாது” என்ற போது ஏதோ அரசியல் நடக்கிறது என்பதை உணர்ந்து பத்தாயிரம் கி.மீ.க்கும் மேல் கடந்து வந்தும் தலைவரைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ! என்று எண்ணியபோது சோகம் பாக்யராஜ் அவர்களை அப்ப, அவரது கண்கள் கலங்கியது.
“தலைவரைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். நேரில் ஒருமுறை பார்த்து விட்டால் அந்த திருப்தியோடு சென்னை சென்று தலைவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தி தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன்” என்று எவ்வளவோ சொல்லியும் ஜானகி அம்மாள் யோசிப்பதாக கூறிவிட்டார். தலைவரை நாம் பார்க்காமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஜானகி அம்மாவுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட பாக்யராஜ் மருத்துவமனையை விட்டு புறப்பட்டார்.

அங்கிருந்து வரும் வழியில் மனது சரி இல்லாமல் அங்குள்ள நம்ம வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அங்கே எம்ஜியாரின் குடும்ப நண்பரும் அமெரிக்க குடிவாழ் இந்தியரான ஜானகி என்ற பெண்மணி, பாக்யராஜ் அவர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு “தலைவரைப் பார்த்து விட்டீர்களா?” என்ற போது , “இன்னும் இல்லை. அனுமதி பாஸ் கிடைக்கவில்லை” என்று ஜானகி அம்மாள் கூறியதைச் சொன்னார்.

“பாக்யராஜ் சாருக்கு பாஸா? நீங்கள் வருவதுதான் ஜானகியம்மாளுக்கு நேத்தே தெரியுமே, எங்கிட்ட சொன்னாங்களே? ஏதோ தவறு நடக்கிறது. நான் ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிக்கிறேன்” என்றார்.

அப்போது தான் அங்கு நடைபெறும் அரசியலும், தான் புறக்கணிக்கப் படுவதும் பாக்யராஜ் அவர்களுக்குப் ஊர்ஜிதமானது.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு உதவியாக இருந்த மாணிக்கம் மூலம் பாக்யராஜ் பார்க்க வந்ததாக தெரிந்ததும், அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். உடனே ஜானகியம்மாளிடம் பாக்யராஜ் அவர்களைப் பற்றி எம்.ஜி.ஆர். விசாரித்தார்.  அப்போது ஆர்வமில்லாமல்  ஜானகி அம்மாள் ஏதோ கூறியதும் உடனே கோபப்பட்ட  எம்.ஜி.ஆர். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் உதவியாளர்  பி.ஏக்கன் அவர்களிடமும் உடனடியாக பாக்யராஜை வரவழையுங்கள் என்று உத்தரவுபோட அனைவரும் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்தனர். பாக்யராஜ் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அனைவரும் தொடர்பு கொண்டபோது , அவர் வெளியில் கோயிலுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். பாக்யராஜ் அவர்கள் மறுநாள் காலை அறைக்கு வந்தபோது ஒரே பரபரப்பாய் இருந்தது. ரிசப்ஷனில் ஏகப்பட்ட மெசேஜ் என்று தெரிவித்ததும், தலைவரைப் பார்க்க மருத்துவமனை நோக்கி ஓடினார் பாக்யராஜ்.

தான் நோய்வாய்பட்டு உடல்நிலை ஒத்துழைக்காமல் மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் தன்னை பல்லாயிரம் மைல் கடந்து வந்து பார்க்க வந்திருக்கும் தனது கலையுலக வாரிசு பாக்யராஜ் அவர்களைச் சந்தித்ததும் கரங்களைப் பற்றிக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்த எம்ஜியாரின் கண்களில் இருந்து தாரைதாரையாய் நீர் வடிந்தது. அதைப் பார்த்த புரட்சித்திலகம் பாக்யராஜ் அவர்களின் கண்களும் குளமாயின.

இப்போது ஜானகி அம்மாள், “தேர்தல் பிரச்சாரத்துக்கு பாக்யராஜ் செல்ல வேண்டும். ஆசி கூறுங்கள்” என்றார். எம்.ஜி.ஆர். ஆசிர்வதிக்க பாக்யராஜ் அவர்கள் சென்னை திரும்பினார்.

இங்கே…. சென்னையில் “எம்.ஜி.ஆர். இறந்து விட்டதாகவும் அவரை ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்கள், விரைவில் அவரை அமெரிக்காவிலிருந்து பிணமாக கொண்டு வருவார்கள் என்றும் அனுதாப அலை வீசவே இந்த நாடகம் என்றெல்லாம் பிரசாரத்தில் பேசப்பட்டது.

எம்ஜியாரின் உடல்நிலையைல் பற்றி தெரிந்து கொள்ள நேரில் சந்தித்துவிட்டு சென்னை வரும் பாக்யராஜ் அவர்களை எதிர்பார்த்து தமிழகமே அவரது வருகைக்காக காத்திருந்தது.

விமானநிலையத்தில் பாக்யராஜ் அவர்களை வரவேற்க கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பாக்யராஜ் ரசிக மன்றத்தினர் என எல்லோரும் சூழ்ந்து கொண்டனர். தலைவர் நலமாக இருக்கிறார் என்றும் தன்னுடன் நீண்ட நேரம் பேசினார் என்றும் கட்சியினர் மற்றும் தமிழக மக்களைப் பற்றி விசாரித்தார் என்றும் பாக்யராஜ் அவர்கள் தெரிவித்தபோது கட்சி தொண்டர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.

*

பிறகு என்ன நடந்தது? கவிஞர் ரவிராஜ் அவர்கள் கூறுவதை மேலே பார்ப்போம்.

                    **                   தொடரும்