Hindu Crossword 722025(Post.14,182)

Written by London Swaminathan

Post No. 14,182

Date uploaded in Sydney, Australia – 7 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1  2 3
      
4     
      
5     
      
6     

Across

1.Hindu God whose duty is Preservation

4.good friend in Sanskrit

5.number 8 in Sanskrit

6.natural, easy or spontaneous

Down

1.dress, clothing, vesture

2.joyful, elation, being thrilled

3.north, high, 

V1ISH2NU3
E  A T
S4UHRUT
H  S A
A5STA R
   N A
S6AHAJA

—subham—

Tags- Hindu Crossword 722025(Post.14,182)

GNANAMAYAM 9-2-2025 BROADCAST PROGRAMME

புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி ஒன்பதாம் தேதி

9-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Saint VALLIMALAI SWAMIKAL

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  TIRUVANMIYUR TEMPLE

***

INTERVIEW WITH FAMOUS SINGER AND MUSIC TEACHER HYDERABAD SHIVA.

Hyderabad Dr. B.Siva (born to Shri Balasubramanian and Smt Kamala) started his journey at the age of 16 learning from Shri Chandrasekar, Smt Bhanu Kannan when he was he was in Hyderabad and learned from ‘Sangeetha Kalanidhi’ B.Rajam Iyer when he was doing his PG and UG courses in the Madras University. He is also the proud disciple of late Shri. Sethalapathy Balasubramaniam who is the direct disciple of Shri Papanasam sivan. He has also been under the guidance of late Smt. Sundaravalli Srinivasan.

His presentation in media shows called “Kalai Kalvi” and “Pan Paaduvom” in Makkal TV has thrown light on the feature and beauty of different South Indian Ragas and songs like Thiruppugazh and other famous as well as rare compositions. During the last 15 years of his journey, he has been performing in several reputed TV channels on various occasions such as Navaratri, Diwali, Margazhi, Sankaranthi etc…

He has been appreciated for his tremendous performance with his students in the world famous Lakshman Sruthi’s “Chennaiyil Thiruvaiyaaru” in which he performed Sri Aandal Aruliya “Thiruppavai” which increased his rasikas.

Hyderabad SIVA is well known for his activities towards the welfare of his students in the field of music. He is the proud founder of Sukhi Nikhetan Arts Academy, a musical institution in which about 250 students learn Carnatic Music. He is also well known for publishing books related to South Indian Music, Navagraha Kruthis, Thirumurai of Naalvar and is also a launcher of various music ACDs in the concept of “Listen & Learn”. He is also the proud launcher of his new book on Thiruppugazh as “Iasi Thamizh Paamaalai Series 2” with ACD both containing 4-8 line Thiruppugazh songs in the Third International Conference on Muruga Bhakthi, Durban, South Africa.

He with 108 students, is popular in presenting various thematic concerts in an unique style and theme called “Ashtothra Sangeetha Haaram”.

Reports and journals have praised his concerts. One of the most nostalgic report was by Dinamalar, on 22/10/2006, Chennai stated that “In this young age, he attracted and made the audience stunned by singing alapana, kalpana swaras etc., in the raga Shanmukhapriya”.

Presently he is well known for his rendering of songs in a very unique style without breaking the words and phrases not only in Thamizh Compositions, but other language compositions too. He is also being liked for singing a number of Viruthams in his concerts. His journey as a Music Teacher doesn’t end within the boundaries of our country. He is also an Advisor to Musical Institutions in Malaysia and South Africa, equally spreading our culture and art to the students in those countries.

On the professional view of Hyderabad Siva he has been one of the faculty members of the Vivekananda Educational Society and has also been a music lecturer at Sri Saraswathi College of Education, Ponneri, Tamil Nadu. Of all the above he is one among the grade artists in All India Radio, run by the Ministry of Information and Broadcast, Government of India. He is also a member of Advisory Council in Tamil Nadu Music & Fine Arts University.

Since his early years, he has won many accolades in many competitions conducted by reknowned institutions like Tirumala Tirupati Devastanam, Andhra Pradesh, Madras Music Academy, Kalasagram, Secundrabad, etc.

His titles includes an exhaustive list of “Sangeetha Kalarathna” by Tiruparamkundram Shri Skandha Guru Vidhyashram, Aasthana Vidhwan of “Sri Kanchikamakoti Mutt etc. He has also been awarded with Isai Chelvar, Ezhisai Endhal, Sandha Thamizh Isai Chelvar, Thiruppugazh Chemmal, etc by various organisations.

Hyderabad B.Siva has given enumerous concerts and musical presentations and programmes in various sabhas and institutions like the Chennai Sangeetha Vidhwath Sabha, Pongu Thamizh Pannisai Mandram, Bharatiya Vidya Bhawan, Delhi Tamizh Sangam, 2nd International Conference about Siddhar Neri, International Conference on Pancha Puraanam etc. Recently, he has given a musical demonstration in the 3 International Conference on Muruga Bhakthi, Durban, South Africa and 4″ International Conference on Muruga Bhakthi, Colombo, Srilanka.

E-mail: sugisrine@gmail.com

Web: www.snaacademy.com www.hyderabadsiva.com

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருவான்மியூர் கோவில்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வள்ளிமலை சுவாமிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

புகழ்பெற்ற பாடகர்இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி

இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஐதராபாத் Dr. பா. சிவா அவர்கள், ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஸ்ரீமதி கமலா இணையருக்கு இணையற்ற தவப்புதல்வராக 1975இல் தோன்றினார்.

தம் 16ஆம் அகவையிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ஐதராபாத்தில் இருந்தபோது ஸ்ரீ சந்திரசேகர், ஸ்ரீமதி பானு கண்ணன் இருவரிடமும் சங்கீதக் கலையைக் கற்கத் தொடங்கி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பயிலும்போது ‘சங்கீதக் கலாநிதி பி. இராஜம் ஐயர் அவர்களிடமும் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பெருமை பெற்ற ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் நேரடிச் சீடராகிய ஸ்ரீ சீதளபதி பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மாணவன் என்று தன்னடக்கத்துடன் குறிப்பிடும் இவர், அமரர் ஸ்ரீமதி சுந்தரவல்லி ஸ்ரீநிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சங்கீதத்தில் மேன்மை கண்டார்.

இசை பயிற்றுவிப்பதை இறைப்பணியாக மேற்கொண்ட சிவா, விவேகானந்தா கல்விக் கழகத்திலும் பொன்னேரி ஸ்ரீசரஸ்வதி கல்வியியல் கல்லூரியிலும் சங்கீத விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய ஆகாசவாணியில் இசைக் கலைஞராக மிளிர்ந்ததோடு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மன்ற உறுப்பினர் ஆகவும் சேவையாற்றி உள்ளார்.

ஆரம்ப காலந்தொட்டே சிவா அவர்கள் இசைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் வந்துள்ளார்கள். அவர்களில் சென்னை இசைக்கல்லூரி, ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், செகந்திராபாத் கலாசாகரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இசை, சங்கீதக் கலைத் துறைகளில் அவர் பெற்ற வல்லமை, அர்ப்பணிப்பு, புதிய பாணியில் போதிக்கும் ஆற்றல், தமிழிசை மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் பல பட்டங்கள் பெற்று கௌரவிக்கப் பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாஸ்ரமம் வழங்கிய சங்கீத கலாரத்னா, ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான், இசைச்செல்வர், ஏழிசை ஏந்தல், சந்தத் தமிழிசைச் செல்வர், திருப்புகழ்ச் செம்மல், சுககான நாதஜோதி போன்றவை நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

சென்னை சங்கீத வித்வத் சபை, பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம், பாரதீய வித்யா பவன், தில்லித் தமிழ்ச் சங்கம், 2ஆம் அனைத்துலக சித்தர் நெறி மாநாடு, அனைத்துலக பஞ்சபுராண மாநாடு போன்ற எண்ணிறந்த அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகளை சிவா நிகழ்த்தியுள்ளார். மேலும் பல மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியும் வருகிறார். சமீப காலத்தில் தென்னாப்பிரிக்கா, டர்பன் 3வது அனைத்துலக முருகபக்தி மாநாடு மற்றும் ஸ்ரீலங்கா, கொழும்புவில் நிகழ்ந்த ழ்ந்த 4வது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் சிவா அவர்கள் நிகழ்த்திய இசைக்கச்சேரி, கடல் கடந்தும் நமது தமிழிசை ஒலித்துக் கொண்டிருக்க ஒரு பாலம் அமைத்துள்ளது. என்றால் அது மிகையாகா.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளியேறும் பண்பாடுவோம், கலைக் கல்வி மூலம் தென்னிந்திய இசை, பல்வேறு இராகங்கள், திருப்புகழ் முதலிய தெய்வீகப் பாடல்களை சங்கீத ஞானம் உள்ளோரும், மற்றோரும் கேட்டின்புறும் வண்ணம் பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு அம்முயற்சியில் பாராட்டத்தக்க வெற்றியும் கண்டிருப்பது சிவாவின் தனிச்சிறப்பாகும்.

மேலும் தொலைக்காட்சியில் பல்வேறு ஒளி அலைகளில் நவராத்திரி, தீபாவளி, மார்கழி, மகர சங்கராந்தி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது இசைக்கச்சேரியை நிகழ்த்தி மக்களின் மனங்கவர்ந்து அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நமது கலாரத்னாவுக்கு ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக் கணக்கான ரசிகர்களை ஈட்டித் தந்த இன்னொரு நிகழ்வு உலகப் புகழ் பெற்ற லக்ஷ்மண் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு நிகழ்வில் தமது மாணவ மாணவியருடன் அவர் ஒளியேற்றிய இசை நிகழ்வாகும்.

சங்கீதக் கலையை மேலும் வளர்ப்பதிலும் தம்மிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கைத் தூக்கி விடுவதிலும் அவர் காட்டும் அக்கறை அளவிடற்கரியது. சுமார் 250 மாணவ மாணவியர் பயிலும் வண்ணம் சுகிநிகேதன் கலைக்கூடத்தை நிறுவி, அதற்கென ஓர் அழகிய மாளிகை எழுப்பி, சுகமான சூழலில் நவீனக் கருவிகளோடு கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து, நிறைய இசைப்புத்தகங்களையும் அவற்றுக்குத் துணையாக குறுந்தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் நவக்கிரகக் கீர்த்தனைகள், நால்வர் திருமுறைகள், இசைத்தமிழ்ப் பாமாலை, சின்னச் சின்னப் பாட்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

அவருக்கே உரித்த தனிப்பாணியில் அஷ்டோத்ர சங்கீதஹாரம் எனும் தலைப்பில் 108 மாணவர்களுடன் அவர் அரங்கேற்றிய இசைக்கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளேடுகளும் மாத இதழ்களும் சிவா அவர்களின் தனித்துவமிக்க இசைப்பணியைப் பாராட்டத்தவறவில்லை. குறிப்பாக 22.10.2006இல் வெளியான தினமலரில் இவ்வளவு சிறிய இளம் வயதில் காண்போரையும் கேட்போரையும் சுண்டியிழுக்கும் வண்ணம் சண்முகப்பிரியா ராகத்தில் ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களை அவர் பாடியத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஐதராபாத் சிவா அவர்களின் தனித்துவம் வாய்ந்த இசைப்பயணம் என்று சொல்லும்படி யாரும் இதுவரை செய்யத் துணியாதவகையில் திருமுறைப்பாடல்களைச் சரியான சொல் பிரிப்போடு, செவிமடுக்கும் இளைய தலைமுறையும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இராகம் பண் தவறாமல் பாடும், பாட்டுவிக்கும் ஆற்றலைக் கண்டு வியக்காதார் உளரோ? அதிலும் விருத்தங்களை இனிமை குன்றாது, பொருள் விளங்கப் பாடும் ஆற்றல் கடவுள் அவருக்களித்த வரம்தான்!

இவரின் இசைப்பணி தமிழ்நாட்டின் எல்லையுடன் நின்றுவிடவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசீயஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல இசைப் பள்ளிகளும், கல்லூரிகளும் அன்னாரை ஆலோசகராக ஏற்று நமது கலையையும் கலாச்சாரத்தையும் மக்களிடையே பரப்பி வருவது மகிழ்வூட்டுகிறது.

தொடர்க, வளர்க அன்னாரின் தெய்வீக இசைப்பணி!

‘இசைச்செல்வர்’, ‘சங்கீத கலாரத்னா’

ஐதராபாத் Dr.பா. சிவா

வில்லிவாக்கம், சென்னை 600049.

sugisrine@gmail.com

skype id: siva.vocal

:www.snaacademy.com, www.hyderabadsiva.com

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 TAGS- GNANAMAYAM, 9-2-2025 BROADCAST, PROGRAMME, புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 22 (Post.14,181)

Written by London Swaminathan

Post No. 14,181

Date uploaded in Sydney, Australia – 7 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 22

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இந்துக்களா?

ஆஸ்திரேலியாவில் ஆதிவாசிகள் 250 வெவ்வேறு  மொழிகளைப்  பேசுவதால் அவர்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து குடிபெயர்ந்தது தெரிகிறது .

மேலாகப்  பார்க்கும்போது அவர்கள் விபூதி போல உடலில் வெள்ளை நிற மண்ணை மூன்று மூன்று வரிகளாகப் பூசிக்கொள்வதும் நடனத்தை சிவா நடனம் என்று கூறிக்கொள்வதும் இந்துமதத் தாக்கத்தைக் காட்டுகிறது . பல தமிழ்ச் சொற்கள் இருப்பதும் அவர்களை தமிழ் இந்துக்களின் மூதாதையர்கள்  என்று   காட்டுகிறது.

இதுபற்றி 1950-களில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சென்னை மயிலாப்பூர் சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட விஷயமும் முக்கியமானது உலகத்தில் ஆதியில் இந்து மதம் மட்டுமே இருந்தது; அதன் எச்ச சொச்சங்களே இவை என்று குறிப்பிட்ட சங்கராசார்யார், தென் ஆப்ரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கர் தீவில்  ஸம்ஸ்க்ருத்ப் பெயர்கள் எங்கும் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் துருக்கியில் தசரதன், மற்றும் வேத கால தெய்வங்களின் பெயர்கள் கல்வெட்டில் காணப்படுவதால் மறுக்க முடியாத, எல்லோரும் ஏற்கக்கூடிய,  தொல்பொருட் துறைச் சான்றுகள் கி.மு 1340–ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டதையும்  அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார் .

அவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியபோது கிடைத்தைவிட இப்போது நிறைய செய்திகள் கிடைக்கின்றன .

இவைகளை ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் நான் நம்பும் விஷயங்கள் இவைதான்:–

1

உலகில் ஆதிகாலத்தில் இந்து மதம் இயற்கையாகத் தோன்றியது ; அது பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் இன்றும் காணப்படுகிறது ; இதற்கு இந்தோனேஷியாவின் பாலி தீவுகள் மற்றும் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் காணப்படும் மாயா, இன்கா, ஒல்மெக் , அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீகங்கள் , ரோமானிய எட்ருஸ்கன்,மித்ரா பண்பாடுகள் சான்றுகள் ஆகும் ; ஸ்வஸ்திகா வடிவத்தை அவர்கள் அனைவரும் போற்றியுள்ளனர்

2

இதே போல எந்த ஒரு பழைய மொழியின் சொல்லையும் சம்ஸ்க்ருத- தமிழ் மூலத்துக்கு இழுத்து வந்துவிடலாம் ; ஆதி மொழி, இவற்றின் மூலத்திலிருந்து பிறந்ததே ; சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் ஆங்கில மொழியில் ஆயிரக்காண தமிழ்ச் சொற்கள் இருப்பதும் இதற்குச் சான்று

(மேற்சொன்ன எனது கருத்துக்களை விளக்கும் ஏராளமான கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன; புஸ்தக வடிவிலும் அச்சாகிவிட்டன).

3

ஒவ்வொரு பிரிவினரையும், மொழியையும் ஆழமாக ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படும் .

மரணம், மனித வாழ்வு, புறச்சூழல் பற்றிய ஆதிவாசிப் பழங்குடி மக்களின் கொள்கைகளில் பல இந்துமத ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

அவர்கள் கொடி FLAG இந்துக்களின் கொடியைப்போல இரண்டு நுனிகளைக் கொண்டது  ஆர் எஸ் எஸ் அமைப்பும், உலகில் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளமும் இன்று வரை அதே போல கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் .

பிறந்தவரெல்லாம் இறப்பது உறுதி என்ற பகத் கீதை ஸ்லோகம் அவர்களின் மத நம்பிக்கைகளில் ஒன்று

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च । तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २-२७॥ Indeed, certain is death for the born, and certain is birth for the dead; therefore, over the inevitable, you should not grieve. BG 2-27

உலகிலேயே தண்ணீரைப் புகழும் ஸ்லோகங்கள் வேதங்களில்தான் அதிகம் ; ஏனெனில் வேத கால இந்துக்கள் இந்தியாவில் தோன்றியவர்கள் ; கைபர் கணவாய் வழியாக  வரவில்லை; அது மட்டுமல்ல; இந்துக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீர் இடம்பெறுகிறது ; இது இந்தியாவில் தோன்றிய ஆரியர்களின் உயிர். இதை இன்றும் பிராமணர்களின் மூன்று வேளை சந்தியா வந்தன  கிரியைகளில் காணலாம். ஆபஹ என்றால் தண்ணீர்; அத்துடன்தான் சந்தியா வந்தனம் தொடங்கும். தண்ணீர் இல்லாமல் பிராமணர்கள எதையும் செய்ய முடியாது . சமைத்த உணவினைத் தொட்டால்கூட பெண்கள் கையைத் தண்ணீரில் கழுவிவிட்டுத்தான் மற்ற பண்டங்களைத் தொட முடியும்!  

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் நீரைப் போற்றி அதுதான் நம்மை இணைக்கிறது என்றும் கூறுகிறார்கள் . இது வேத மந்திரத்தின் எதிரொலி . உலகில் வேறு எந்த மத நூல்களிலும் தண்ணீரைப் புகழும் மந்திரங்கள் கிடையாது. ஏனெனில் அவர்கள் வறண்ட அல்லது பனிப்பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள்  .

பழங்குடி மக்கள் பற்றி,  நான் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஆஸ்திரேலிய மியூசியத்தில் பெரிய போர்டுகளில் அச்சிட்டு வைத்திருக்கிறார்கள்.

பெரியோர்களை மதிக்கவேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ; இது இந்து மத வேதங்களில் மட்டுமே உளது. சிறுவர்களுக்கு கற்பிக்கும் மந்திரம்:

மாதா பிதா குரு தெய்வம் மற்றும் அதிதி தேவோ பவ  (விருந்தாளிகள் தேவர்கள் ).

ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி! (Post No. 2500)

Date: 2 February 2016 [Written by london swaminathan

“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!

நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு,  ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT  வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.

THREE SISTERS IN BLUE MOUNTAINS

படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!

—subham—

ஆஸ்திரேலிய, பழங்குடி மக்கள், இந்துக்கள், ஆஸ்திரேலியா,  அதிசயம், அனைத்தையும் பாருங்கள்!- Part 22, அதிசய கணபதி

எண் 72 தரும் விடைகள்! (RULE OF 72)! (Post.14,180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,180

Date uploaded in Sydney, Australia – –7 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மனக்கணக்கில் வட்டித் தொகையைக் கணக்கிடலாமே!

1-2-25 கல்கிஆன்லைன் – இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

 உங்கள் வைப்புத்தொகை இரண்டு மடங்காக எத்தனை காலம் ஆகும்?

எண் 72 தரும் விடைகள்! (RULE OF 72)! 

ச. நாகராஜன் 

நமது பணத்தை ஒரு வங்கியில் போட்டு அதற்கான வட்டியைப் பெறுகிறோம்.

ஆனால் எவ்வளவு பணம் எப்போது சேரும் என்பதற்கு ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொண்டோ அல்லது ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டோ கணக்கிடுகிறோம்.

ஆனால் 72 என்ற எண் தரும் ஒரு விதி இந்தக் கணக்கைச் சுலபமாக்கி விடுகிறது.

இருந்த இடத்தில் இருந்தே மனக்கணக்காக விடையை ஒரு நொடியில் கண்டு பிடித்து விடலாம். இது சுமாரான விடை தான் என்றாலும் உடனடியாக உங்களுக்கு ஒரு விடையைத் தந்து விடுகிறது.

எப்படி?

வங்கி உங்களுக்கு 12% வருடாந்திர வட்டி தருகிறது என்றால் உங்களது வைப்புத் தொகை இரண்டு மடங்காக எவ்வளவு காலம் ஆகும்?

72ஐ பன்னிரெண்டால் வகுத்துப் பாருங்கள்; வருவது தான் விடை.

72/12 = 6

ஆறு வருடங்களில் உங்களது வைப்புத் தொகை இரு மடங்காகும்.

(இப்போது யார் 12% தருகிறார்கள் என்று கேட்க வேண்டாம். பழைய காலத்தில் இது சர்வ சாதாரணமாகத் தரப்படும் வட்டி விகிதமாகும். அந்தக் காலத்தில் 15% தருவதும் கூட வழக்கம் தான்!)

1% தான் வட்டி என்றால் 72 / 1 = 72,, உங்கள் பணம் 72 வருடங்களில் இரட்டிப்பாகும்.

3% தான் வட்டி என்றால் 72 / 3 = 24, உங்கள் பணம் 24 வருடங்களில் இரட்டிப்பாகும்.

4% தான் வட்டி என்றால் 72 / 4 = 18,, உங்கள் பணம் 18 வருடங்களில் இரட்டிப்பாகும்.

6% வட்டி என்றால் 72 / 6 = 12,, உங்கள் பணம் 12 வருடங்களில் இரட்டிப்பாகும்.

8%  வட்டி என்றால் 72 / 8 = 9,, உங்கள் பணம் 9 வருடங்களில் இரட்டிப்பாகும்.

9%  வட்டி என்றால் 72 / 9 = 8, உங்கள் பணம் 8 வருடங்களில் இரட்டிப்பாகும்.

இன்னும் துல்லியமாகத் தெரிய வேண்டுமென்றால் 70 அல்லது 69.3 என்பதை வைத்துக் கொண்டு கணக்கிட்டுப் பார்க்கலாம். ஆனால் 72 என்பது எல்லா விதமான எண்களுக்கும் உடனடியாக மனக்கணக்காகவே விடையைத் தருகிறது.

அடுத்த விதி: எண் 114 விதி

உங்கள் பணம் மூன்று மடங்காக எப்போது ஆகும். இருக்கவே இருக்கிறது விதி எண் 114.

114 ஐ வட்டி விகிதம் 10ஆல் வகுத்துப் பாருங்கள்

வரும் விடை : 11.4 (சுமார் 11 வருடங்கள் ஆகும் என்கிறது விடை)

அடுத்த விதி : எண் 144 விதி

உங்கள் பணம் நான்கு மடங்காக எப்போது ஆகும் என்பதைக் கணக்கிட உதவுவது   விதி எண் 144.

144 ஐ வட்டி விகிதம் 10ஆல் வகுத்துப் பாருங்கள்

வரும் விடை : 14.4 (சுமார் பதிநான்கரை வருடங்கள் ஆகும் என்கிறது விடை.

 இது போன்ற இன்னும் பல எளிமையான சூத்திரங்கள் உண்டு. அவற்றையும் தெரிந்து கொண்டால் மனக்கணக்கே எல்லாம் விடைகளையும் தரும்!

***

FIND GOLD FROM THIS CROSSWORD (Post No.14,179)

Written by London Swaminathan

Post No. 14,179

Date uploaded in Sydney, Australia – 6 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Sanskrit words for gold are used in girls ‘names throughout India. I have added two Tamil words with them. They are in Hindu hymns in Tamil and Sanskrit. Initial letters of the words are given IN THE BOX.

FIND GOLD FROM THIS CROSSWORD (Post No.14,179)

S H   
  KH R
    K 
DT    
      
      
     P
      
      

ANSWERS

S HEMA
 WKH R
  AIKU
DTNRAK
IAAANM
NNKNCA
AGAYAP
RA ANO
AM  AN

SWARNA, HEMA, KANAKA, HIRANYA, KANCANA, RUKMA, DINARA, PON, TANGAM.

AI Overview

In Sanskrit, the most common word for “gold” is “suvarna” (सुवर्ण), while the Vedic term for gold is “hiranya” (हिरण्य); other related terms include “kanaka” (कनक), “rukma” (रुक्म), and “hema” (हेम), which can all be considered different ways to refer to gold depending on the context. 

Key points about gold terms in Sanskrit:

  • Hiranya (हिरण्य): The oldest Sanskrit word for gold, primarily used in Vedic texts. 
  • Suvarna (सुवर्ण): The most common and widely used term for gold in Sanskrit. 
  • Kanaka (कनक): Another word for gold, sometimes used in reference to gold used in painting. 
  • Rukma (रुक्म): Can refer to both gold and a golden ornament. 
  • Hema (हेम): Also signifies gold. 

 —-subham—-

tags- FIND GOLD , CROSSWORD.

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 21 (Post.14,178)

Written by London Swaminathan

Post No. 14,178

Date uploaded in Sydney, Australia – 6 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 21

அதிசய ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள்

தாமாகவே நிலத்தடி நீரைப் பாய்ச்சி அடிக்கும் அதிசய பொங்கு ஊற்றுக் கிணறுகள்  நிறைந்த நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

இவைகளுக்கு ஆர்டீஷியன் கிணறுகள் என்று பெயர்.

பொங்கு ஊற்றுக் கிணறுகள் (artesian wells)

பொங்கு ஊற்றுக் கிணறு என்பது தரையிலிருந்து தானாகவே பீரிட்டெழுகிற நீருற்று ஆகும். தரைக்கடியில் சிக்கியிருக்கிற நிலத்தடி நீரே இவ்வாறு வெளிப்படுகிறது. பிரான்சில் உள்ள ஆர்த்வா  பிரதேசத்தில் இவ்வாறான ஓர் ஊற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1126 ஆண்டு முதல் நிறைய பொங்கு ஊற்றுக் கிணறுகள் அங்கு தோண்டப்பட்டன. அதன் காரணமாக இவை ஆர்ட்டீசியன் ஊற்றுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

சில இடங்களில் நிலத்தின் மேல்மட்டத்தில் இருப்பதால் இயற்கை  நீறுற்றுகளாக வெளிப்படுகின்றன . இன்னும் சில இடங்களில் மூன்று கிலோ மீட்டருக்கு அடியில் இவை இருக்கின்றன.

மின்சார அல்லது பெட்ரோல் என்ஜின்களைப் பயன்படுத்தி நீரை பம்ப் செய்து மேலே கொண்டுவரத் தேவை இல்லை. பூமிக்கடியிலுள்ள அழுத்தம் காரணாமாகத் தானாகப் பீய்ச்சி அடிக்கும் ஊற்றுகளையே இப்படி அழைக்கிறோம்.

தமிழ் நாட்டில் கூட 1934-இல் அன்றைய தொழில் துறை  தண்ணீர் தேவைக்காக நெய்வேலியில் பொங்கு ஊற்றுக் கிணறுகள் தோண்டப்பட்டன. உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிமான பொங்கு ஊற்றுக் கிணறுகள் காணப்படுகின்றன. அந்தப் பிரதேசத்தை கிரேட் ஆர்டீஷியன் பேசின்  The Great Artesian Basin அழைக்கிறார்கள் நான்கு மாநிலங்களில் இவை அதிகம் காணப்படுகின்றன (Northern Territory, Queensland, South Australia, and New South Wales. )

பாறைகளுக்கு அடியில் மழை நீர் சிக்கி இத்தகைய நீர்நிலைகள் உண்டாகின்றன. எல்லா ஊற்றுக்களின் நீரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

பதினேழு லட்சம் சதுர கிலோமீட்டருக்கு இவை பரவி இருக்கின்றன. ஆஸ்திரேலிய கண்டத்தின் ஐந்தில் ஒரு பகுதிப்  பரப்புக்குச் சமமானது; சிட்னி துறைமுகத்தை  130,000 தடவை நிரப்புவதற்குப் போதுமான தண்ணீர் இது!

60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆதிவாசிப்  பழங்குடி மக்கள் இந்த நீறுற்றுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் . அவர்கள் இதன் முக்கியத்தை உணர்ந்து போற்றியும் வந்திருக்கிறார்கள் .

பல இடங்களில் அவை கசிந்து ஓடைகளாகி ஆறுகளுடன் கலக்கின்றன  120 நகரங்கள் இவற்றால் பயன்பெறுகின்றன. இரண்டு லட்சம் மக்களுக்கும் 7600  தொழில் நிறுவனங்களுக்கும் இவை ஒரு வருடத்துக்கு 33  பில்லியன் டாலர் வருவாயை ஈட்டித் தருகின்றன. இது எவ்வளவு முக்கியமானது என்பதைக்  காட்டும் புள்ளி விவரங்கள் இவை.

இவைகளை  முறையாகப் பயன்படுத்தவும் , நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்கவும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது

சில சுவையான விஷயங்கள் இதோ :

இவை உப்புக்கரிக்காத தண்ணீரைக் கொடுத்தாலும் பூமிக்கு அடியிலிருந்து வரும்போது முப்பது முதல் நூறு டிகிரி வெப்பத்துடன் வெளிவரும்; சில இடங்களில் கொதிக்கும் நீராக வருகிறது.

மருத்துவ உபயோகம்

இந்த நீரில் கால்சியம், மக்னீஷியம் பொட்டாசியம் கந்தக,  கார்பனேட் உப்புகள் கலந்து இருப்பதால் தோலுக்கு நம்மை பயக்கும்.. திசுக்களை வலுப்படுத்தும்; நோய்களைத் தடுக்க உதவும்

சுத்தமான நீர் கிடைக்கும் இடங்களில்  குடி நீராகவும் பயன்படுகிறது

அதிகமாக தண்ணீரை  பம்ப் செய்து எடுத்த இடங்களில் நீர்மட்டம் 1300 அடிகளுக்கு கீழே போய்விட்டது .

நூறு அடி முதல் ஆயிரம் அடி வரை இந்த நீர் பூமிக்கடியில் இருக்கிறது

இடத்துக்கு இடம் நீரின் தன்மை மாறுபடுவதால் இதைக் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துவதில்லை ; பயிர்த் தொழில், ஆடு மாடு பண்ணைத் தொழில்களுக்கு அதிகம் பயன்படுகிறது

சில நீரூற்றுகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீரை அளித்துவருகின்றன. மேலும் சில அதற்கு முன்னால் வற்றிவிட்டன.

*****

Facts about artesian wells

An artesian well is a deep well that naturally produces water due to underground pressure within a confined aquifer, meaning the water rises to the surface without needing a pump; the term “artesian” originates from the region of Artois in France where such wells were first extensively drilled; here are ten facts about artesian wells

*****

The Basin spans almost 1.7 million square kilometres which is over one-fifth of the Australian continent.  There is around 65 million GL of groundwater in the Basin which is enough water to fill the Sydney Harbour 130,000 times.

****

Basin water emerges through cracks in the rock and flows into springs, creeks and rivers. This creates a permanent water source even during dry periods. Most springs and leakages occur on the edges of the Basin where water is close to the surface.

****

What makes artesian water hot?

Water temperatures ranging from 30–100 °C across the basin, The water from deeper bores are almost at boiling temperature because of the immense heat and pressure at such depths.

****

Why is artesian water so special?

The high mineral content of the Artesian Thermal water includes minerals such as calcium , magnesium , potassium , sulphur & bicarbonate , which are believed to be absorbed into the skin , helping to repair tissue damage and also help the body fight illness .

****

Artesian wells are commonly used for drinking water, irrigation, and industrial purposes and can provide a reliable water source in areas where surface water is scarce or contaminated.

—Subham—

Tags— ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் ,பாருங்கள்!- Part 21, ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள், Facts , artesian wells

கடவுளைக் காட்டுங்கள் : ஷீர்டி சாயிபாபாவிடம் கேட்ட பக்தர்! (Post.14,177)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,177

Date uploaded in Sydney, Australia – –6 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

2-1-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

கடவுளைக் காட்டுங்கள் : ஷீர்டி சாயிபாபாவிடம் கேட்ட பக்தர்! 

ச.நாகராஜன்

ஷீர்டியில் வாழ்ந்து வந்த  சாயிபாபா பக்தர்களுக்குப் பல விதமாக அனுக்ரஹம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும்  அற்புதம் தான்! பக்தர்களின் பிரமிப்பு தான்! 

ஆனால் யாருக்கு ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்குத் தான் அவரது ஆசியும் அதனால் ஏற்படும் பலனும் கிடைக்கும்.

 தகுதி இல்லாதவர்களின் அனுபவம் அவரிடம் வேறு விதமாக இருக்கும்.

செல்வந்தர் ஒருவர் பாபாவிடம் ஒரு நாள் வந்தார்.

அவர் பாபாவிடம் கேட்டார்: “பாபா! எனக்குக் கடவுளைக் காட்டுங்கள். பிரம்மத்தைக் காட்டுங்கள் வெகு தூரத்திலிருந்து நான் இதற்காகவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். எல்லோரும் நீங்கள் உடனே பிரம்மத்தைக் காட்டுவீர்கள் என்று சொல்கிறார்கள்”

பாபா: ஒ! பயமே வேண்டாம்.  நான் உடனே உனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறேன். அதுவும் மிகத் தெளிவாகக் காட்டுகிறேன். உலகில் ஏராளமானோர் பணம், அதிகாரம், புகழ், ஆரோக்கியம் இவற்றிற்காக அலைகிறார்கள். ஆனால் பிரம்மத்தைப் பார்க்க விரும்புபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.

பின்னர் பாபா பிரம்மத்தைப் பற்றிச் சற்று விளக்கினார். பிரம்மமே பிரபஞ்சத்தின் அடிப்படை காரணம். அதை உணர்வதற்காக பிறவி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், அதற்காக ஒரு குரு அவசியம் தேவை என்பதை எல்லாம் அவர் நன்கு விளக்கினார்.

பின்னர் அவர் அருகிலிருந்த ஒரு பையனிடம் நந்தியாலிடம் போய் நான் ஐந்து ரூபாய் கடனாகக் கேட்டேன் என்று சொல்லி வாங்கி வா என்றார். நந்தியால் ஒரு மார்வாடி.

வெளியே சென்ற பையன் திரும்பி வந்து மார்வாடி, அவரிடத்தில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று கூறினான். பாபா அவனை அந்த கிராமத்தில் இருந்த பல பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி வர அனுப்பினார். ஒரு இருபது நிமிடம் கழிந்தது. ஆனால் பணம் வரவில்லை.

அதற்குள் அங்கு அவரிடம் வந்த செல்வந்தர் பொறுமையை இழந்தார். இங்கு இனியும் நேரத்தை வீணாக்குவது சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் கடனாக தன் கையிலிருந்து ஐந்து ரூபாயை பாபாவிற்குக் கொடுத்தால் அது திருப்பி வருமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது. ஷீர்டிக்கு வந்து திரும்புவதற்கு அவர் ஒரு டோங்காவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த டோங்காகாரர் வேறு அவசரப்படுத்துவார் என்று அவருக்குத் தோன்றியது.

அவர் பாபாவிடம்> “நீங்கள் எனக்கு பிரம்மத்தைக் காண்பிக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று கேட்டார்.

உடனே பாபா கூறினார்: “அட! நான் இப்போது செய்து கொண்டிருப்பதெல்லாம் அதற்காகத் தான்! இங்கு உட்கார்ந்திருக்கும் போதே நீ கடவுளைப் பார்ப்பதற்காகத் தான் இவற்றையெல்லாம் செய்கிறேன். உனக்கு ஒன்றும் புரியவில்லையா? 

செல்வந்தர் தனக்குப் புரியவில்லை என்றார். 

பாபா: நான் ஐந்து ரூபாய் கேட்டேன். அதாவது ஐந்து விஷயங்களை சரணாகத் தரும்படி கேட்டேன். 1) ஐந்து பிராணன்கள் அதாவது உயிர்ச் சக்திகள் 2) ஐந்து புலன்கள் 3) மனம் 4) புத்தி 5) அகங்காரம். பிரம்மத்தை அடையும் சாலை சற்று கஷ்டமானது. எல்லோராலும் அதில் பயணப்பட முடியாது. பணம், கௌரவம், அதிகாரம் ஆகிய தடைகள் இருக்கக்கூடாது. அப்படியானால் பிரம்மம் பிரகாசமாகத் தெரியும்.

பாபா அந்த செல்வந்தர் தன் பையில் 250 ரூபாய் வைத்திருந்தாலும் தன் குருவுக்கு ஐந்து ரூபாய் கூடக் கொடுக்கத் தயங்கினார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஆனால் குருவிடமிருந்து விலையே இல்லாத பிரம்மத்தை இலவச பரிசாக பெற அவர் விரும்புகிறார்! எவ்வளவு பேதைமை அது! 

வெட்கப்பட்ட செல்வந்தர் அங்கிருந்து நகர்ந்தார் என்று சொல்லவும் வேண்டுமோ!

 இதே போல இன்னொரு சமயம் ஒருவர் பிரம்மஞானத்தைப் பெற விரும்பி பாபாவிடம் வந்தார். ஆனால் அவர் உலக இன்பங்களைத் துறக்கத் தயாரில்லை. அவரை அங்கே காத்திருக்கச் சொன்ன பாபா கடனாக ஒரு தொகையை வாங்கி வருமாறு ஒருவரை மார்வாடி ஒருவரிடம் அனுப்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லை என்று பதில் வந்தது.

 இன்னும் பலரிடமும் அவரை அனுப்பினார். பலன் இல்லை. கடைசியாக அணுக்க பக்தரான நானா சாஹிப்பிடம் அதைக் கேட்டார்.

உடனே அவர் முதலில் பணம் கேட்டு இல்லை என்று பதில் வந்த  மார்வாடியிடம் பணம் கேட்டு ஒரு துண்டுச் சீட்டை அனுப்பினர். உடனே கேட்ட பணம் வந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரம்ம ஞானம் வேண்டியவர் பாபாவிடம் தான் வேண்டியதை நினைவு படுத்தவே பாபா, “உனக்காகத் தான் இத்தனையையும் நான் செய்து கொண்டிருக்கிறேன். பாபா மார்வாடியிடம் பணம் கேட்ட போது அது கிடைக்கவில்லை. ஆனால் நானா கேட்டபோது உடனே அது கிடைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

 யார் தகுதி உடையவர்களோ அவர்களுக்குத் தான் தேவையானது கிடைக்கும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெறுவார்கள்” என்றார்!

கடவுளின் அருளைப் பெற ச்ரத்தா மற்றும் சபூரி (நம்பிக்கை மற்றும் பொறுமை)வேண்டும் என்பதே அவரது முக்கிய உபதேசம்.

 இப்படி 634க்கும் மேற்பட்ட சம்பவங்களையும் உபதேச உரைகளையும் ஶ்ரீ B.Vநரசிம்ம ஸ்வாமி அவர்கள் எழுதிய ஷிர்டி சாயிபாபா பற்றிய நூலில் காணலாம்.

***

 tags- கடவுள் : ஷீர்டி சாயிபாபா

London Swaminathan’s January 2025 Articles Index;Index No. 146 (Post No.14,176)

Written by London Swaminathan

Post No. 14,176

Date uploaded in Sydney, Australia – 5 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan’s January 2025 Articles Index;

Index No. 146 (Post No.14,176)

My Visit to Palm Beach in Australia (Post.14,044)2/1

My Visit to Sydney Murugan Temple in Australia (Post No.14,050)4/1

My Visit to Sydney University Museum (Post No.14,074) 10/1

I am a Rat? Gandhiji was a Snake. Are You a Pig?(Post No.14,139) 25/1

January 2025 Calendar ; Tulsidas Sayings (Post No.14,040) 1/1/2025

London Swaminathan’s Articles in December 2024 (Post.14,060)7/1

My Ferry Trip in Parramatta River to Opera House (Post.14,151) 28/1

My Visit to Australian Museum in Sydney (Post.14,108)17/1

My Visit to Lake Paramatta and Darling Harbour in Sydney (Post No.14,132) 23/1

February 2025 Calendar; Quotations from Saint Tyagaraja Keertanas (Post.14,157) 30/1

GNANAMAYAM 19-1-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 26-1-2025 BROADCAST SUMMARY (5, 12 also)

Hindu Crossword on 17 days

****

TAMIL ARTICLES

ஜனவரி 2025 காலண்டர்; வள்ளலார் பொன்மொழிகள் (Post No.14,039) 1/1/2025

அம்பரமே தண்ணீரே சோறே! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 12 (Post No.14,046) 3/1

முப்பத்து மூவர்; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 11 (Post.14,043) 2/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 1 (Post No.14,075) 10/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2 (Post No.14,078)11/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 3 (Post.14,082)12/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 4 (Post No.14,092)14/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 5 (Post No.14,096) 15/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 6 (Post .14,103)16/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 7 (Post.14,107) 17/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8 (Post No.14,110)18/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 9 (14,117) 19/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 10 (Post.11,124)21/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11 (Post.14,128)22/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12 (Post.14,131)23/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 13 (Post 14,136)24/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 14 (Post No.14,140)25/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 15 (Post.14,143)26/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16 (Post.14,150)28/1

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 17 (Post.14,154)29/1

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே (Post.14,049) 4/1

வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா? வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-2 (Post14,052) 5/1

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 3; தெய்வமணி மாலையில் உவமை நயம் (Post No.14,054)6/1

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-4; மேலும்  பல உவமைகள் (Post No.14,062) 7/1

வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5 (Post No.14,065)8/1

வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6 (Post.14,069) 9/1

தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-7 (Post No.14,703)10/1

வள்ளலாரின் சிவ பக்தி! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post No.14,077)11/1

வள்ளலாரும் மூலிகைகளும்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-9   (Post.14,089) 14/1

வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-10  (Post No.14,102) 16/1

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11 (Post.14,106) 17/1

அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12 (Post.14,111) 18/1

நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-13 (Post No.14,116) 19/1

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -14(Post.14,122) 21/1

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு-15 (Post No.14,127)22/1

ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள் -Part 16 (last part) Post.14,135 24/1

பொங்கல்  க்விஸ்1412025 (Post No.14,090) 14/1

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 5, 12, 19, 26 FOUR DAYS

தமிழ் தெரியுமா 21125? – (Post No.14,126) (ELEVEN DAYS)

–subham-

Tags- London Swaminathan’s January 2025 Articles , Index, No. 146

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20 (Post.14,175)

Tasmanian Devil

Written by London Swaminathan

Post No. 14,175

Date uploaded in Sydney, Australia – 5 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

20ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20

புகழ்பெற்ற பத்து ஆஸ்திரேலிய நகரங்கள் தொடர்ச்சி…………

டாஸ்மேனியா Tasmania மாநில தலை நகரம் ஹோபார்ட் Hobart

ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் உள்ள தீவு டாஸ்மேனியா ஆகும். இந்தத் தீவு இயற்கை அழகும் புதுமைகளும் நிறைந்த இடம். தலை நகர் ஹோபார்ட்டும் இயற்கை வனப்பு மிக்கது . டெர்வெண்ட் என்னும் நதியும் வெல்லிங்டன் மலையும் இந்த Mount Wellington and the flow of the wide River Derwent) வட்டாரத்தை  அலங்கரிக்கின்றன. நாட்டின் இரண்டாவது பழைய நகரம் இது. நிலத்துக்கடியிலுள்ள மியூசியத்தில் புதிய பழைய ஓவியங்களைக் காணலாம். நகரத்தின் சனிக்கியமை கிழமை மார்க்கெட்டும் புகழ்பெற்றது . இதை சாலமங்கா மார்க்கெட் Salamanca Market என்று அழைக்கிறார்கள்.

மலையைச் சுற்றிப்பார்ப்பதும், நதியின் கரையிலுள்ள தாவரவியல் பூங்காவைப் Royal Tasmanian Botanical Gardens. பார்ப்பதும் இயற்கை ஆர்வலர்களுக்கு இன்பம் பயக்கும் .

டாஸ்மேனியா தீவு கப்பல் காட்டும் தொழிலுக்கு பெயர்பெற்ற இடம். இங்குள்ள கடல்சார் மியூசியமும்( Maritime Museum of Tasmania )இதன் வரலாற்றை விளக்கும் . ஊரைச் சுற்றிப்பார்ப்போர் டாஸ்மான் பாலத்தையும் கண்டு வியப்பார்கள் (Tasman Bridge. It is among the world’s first box-girder cantilever bridges to have been built).

டாஸ்மான் பாலம்

டாஸ்மேனியா தீவு முழுவதையும் நோக்கினால் அங்குள்ள மழை  வனக் காடுகளையும் அவைகளுக்குள் உள்ள தேசீய பூங்காக்களையும் குறிப்பிட வேண்டும். தீவுக்கே உரித்தான டாஸ்மேனியன் டெவில் என்ற பிராணி, பிளாட்டிபஸ், அங்குமிங்கும் பறந்து திரியும் மயில்கள் முதலியவற்றைப் பார்த்து மகிழலாம். ஹோபார்ட் நகரிலிருந்து அரைமணி நேரத்துக்குள் செல்லக்கூடிய (Bonorong Wildlife Sanctuary  ) வனவிலங்கு பாதுகாப்பிடம் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகும்

மொழியியல் வல்லுனர்களுக்குப் பல புதிர்களைப்போடும் இடம் இந்தத்தீவு ; பல பெயர்ளைன் பொருள் என்ன, அவற்றின் மூலம் என்ன என்று அறிஞர்கள் விவாதத்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

*****

அடிலெய்ட் Adeleide நகரத்தின் சிறப்புகள்

நாட்டின் தென் கோடியிலுள்ள  முக்கிய நகரம் இது. சிட்னிக்கும் அடிலெய்டுக்கும் இடையிலுள்ள தூரம் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல். இந்த நகரிலுள்ள தாவரவியல் பூங்கா, சென்ட்ரல் மார்க்கெட் ஆகியன  பார்க்க வேண்டிய இடங்கள்; ஒயின் மதுபானப்பிரியர்களுக்கும் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.

சுமார் பத்துமைல் தொலைவிலுள்ள Kangaroo Island கங்காரு தீவில் கோவாலா , கங்காரு முதலிய மிருகங்களையும், கடலில் வாழும் சீல் முதலியவற்றையும் காணலாம்.

அடிலெய்ட் ஓவல் (Adelaide Oval )ஸ்டேடியம் கிரிக்கெட், கால்பந்து,  ரக்பி, டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் இடம் ஆகும். இதன் கூரை மேல் ஏறி இறங்குவது ஒரு தனிச் சிறப்பு ஆகும்; அதற்குக் கட்டணம் உண்டு.

மூன்று நாள் ரயில் பயணம்

இந்த நகரம் வேறு ஒரு சுற்றுலாப் பயணத்துக்கும் பெயர் பெற்று இருக்கிறது அது கான் ரயில் பயணம் (Three days on board The Ghan train). இந்தியாவில் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீரூக்குப் போவது போல அடிலெய்ட் என்னும் தென் கோடி முனையிலிருந்து வடகோடி டார்வின் நகருக்குச் செல்ல கான் ரயில் ஓடுகிறது அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டகத்தைக்  கொண்டுவந்த ஆப்கானியர் பெயரான கான் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது . டார்வின் நகரிலிருந்து புறப்பட்டும் அடிலெய்டுக்கு வரலாம். இந்தப் பயணம் முடிய மூன்று நாட்கள் ஆகும் ; ஆஸ்திரேலிய கண்டத்தைக் குறுக்காக கடந்து செல்லும் இந்த ரயில் பாதையின் நீளம்   2,979 kilometres (1,851 miles); நட்ட நடுவில் அலிஸ் ஸ்ப்ரிங்ங்ஸ்  Alice Springs,என்னும் ஊரும் வரும் அனகிகிருந்துதான் ஆஸ்திரேலிய பழங்குடி ஆதிவாசிகளின் உளூரு மலைக்குச் செல்ல வேண்டும் இந்துக்களுக்கு கைலாய மலை போல ஐயர்ஸ் ராக் என்றும் உளூரு என்றும் அழைக்கப்படும் புனித மலை உள்ளது.

உலகின் மிக நீண்ட ரயில் பயணங்களில் ஒன்று இது .

****

டார்வின் நகரின் சிறப்புகள்

டார்வின் நாட்டின் வடகோடி நகரம். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலை நகர்  இங்கும் ஆதிவாசி மற்றும் நவீன ஆஸ்திரேலிய கலைப்பொருள், ஓவியக் கண்காட்சியகங்கள் இருக்கின்றன நீர் விளையாட்டுப் பூங்காக்களும், தெரு ஓரக் கடைகளும் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன. 

நகருக்கு வெளியே கடற்பயணங்களின் மூலம் பல சுற்றுலாத் திட்டுகளை அடையலாம்  இங்கிருந்து விமானம் மூலமாக காக்காடு தேசீய பூங்காவுக்கும் Kakadu National Park Scenic Flight &Yellow Water Cruise (by plane) செல்லலாம்.

காக்காடு தேசீய பூங்கா

*****

பிரிஸ்பேன் Brisbane, the capital city of Queensland

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம்; ஒலிம்பிக் போட்டி நடைபெறப்போகும் (2032 Summer Olympics .) நகரம் வண்ண வண்ண கட்டிடங்களும் பிரிஸ்பேன் நதியும்  நகருக்குப் பெருமை சேர்க்கின்றன. எல்லா இடத்துக்கும் இலவச படகு சவாரி செய்யலாம் டிராம் பஸ் வசதிகளும் உண்டு அறிவியல் மியூசியம், கலைப்பொருள் ஓவிய மியூசியம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்

City Hopper ferry service in Brisbane, Australia is free. The City Hopper is a free inner-city ferry that runs along the Brisbane River. சிட்டி ஹாப்பர் என்னும் இலவச படகு எட்டு இடங்களில் நிற்கும். நகரின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பார்ர்க்க வேண்டிய இடங்கள் னைத்தையும் பார்த்துவிடலாம் .

Look for a red sign on the front and side of the ferry to identify it as a free City Hopper

The City Hopper runs every 36 minutes from 6 AM to midnight, seven days a week

The City Hopper stops at eight locations, including Eagle Street Pier, Kangaroo Point, and South Bank Parklands

பிரிஸ்பேன் சிட்டி ஹால் முக்கிய சுற்றுலா இடம்.

(Brisbane City Hall was built in the early 1900s and comprises around two acres, complete with 573 rooms and the largest copper dome in Australia). 573 அறைகளும் தாமிரக் கூரையும் உள்ளன. இது இரண்டு ஏக்கர் பரப்பில்  நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது

நகரிலிருந்து சற்று தொலைவாகப் பயணம் செய்து கோவாலா விலங்குப் பாதுகாப்பகம்   Lone Pine Koala Sanctuary. , கடலில் குடியேறிச்செல்லும் திமிங்கிலக் கூட்டம் ஆகியவற்றையும் காணலாம். humpback whale migration   திமிங்கில கூட்டத்தைக் காண்பது ஆண்டில் சில June and November, மாதங்களின் மட்டுமே சாத்தியம் . நதியின் கரை ஓரமாக நடந்து செல்லுவது மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும்.

****

முக்கியக் குறிப்பு

யர்ஸ்ராக்/ உளூரு என்னும் ஆதிவாசி மலை , பெரும் பவளத்திட்டு, பிரிஸ்பேன் நகரம் , பாரமேட்டா  நதிப்  பயணம் , ஆபரா ஹவுஸ் ஆகியன பற்றி முன்னரே எழுதிய விரிவான கட்டுரைகளில் நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ; அவற்றினையும் காண்க.

—subham-

Tags —ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள் Part 20, புகழ்பெற்ற,  பத்து,  நகரங்கள் , பிரிஸ்பேன், அடிலெய்டு, டார்வின், டாஸ்மேனியா , ஹோபார்ட்

அபிராமி பட்டர் – 2 (Post No.14,174)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,174

Date uploaded in Sydney, Australia – –5 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.

அபிராமி பட்டர் – 2 

இன்றும் திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்த வீட்டைக் காணலாம். அங்குள்ள மேல் வளாகத்தில்  உள்ளது அபிராமி பட்டரின் வீடு. ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று அங்குள்ள ஆலயத்தில் அபிராமி பட்டரின் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அபிராமி அம்மை நவரத்தின அங்கி அணிந்திருக்க  அம்பிகை முன் அபிராமி அந்தாதி பாடப்படும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தங்கக் காசு சமர்ப்பிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெறும்.

 79வது பாடலின் முடிவில் கொடிமரத்திற்கு அடியில் பௌர்ணமி நிலவு தோன்றுவது போன்ற நிகழ்வு நடைபெறும். கோவிலின் அனைத்து விளக்கும் அணைக்கப்பட்டு இருளில் பௌர்ணமி நிலவு ஒளியுடன் காணப்படுவது போன்ற திருவிழா அம்பிகையின் திருவிளையாடலைக் காட்டும் விழாவாக அமையும். 

அபிராமி அந்தாதி ஏராளமான சிறப்புகளைக் கொண்டதாகும்.

உதிக்கின்ற என்று ஆரம்பித்த அந்தாதி உதிக்கின்ற என்ற அதே சொல்லோடு முடிந்தது.

அந்தாதியின் நூறாவது பாடல் இது. உதிக்கின்றவே என்று முடிவதைப் பார்க்கலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்

விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,

உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

ஒவ்வோரு பாடலின் இறுதி அடியில் வரும் சொல்லே அடுத்த பாடலின் முதல் அடியில் வரும் முதல் சொல்லாக அமைந்தது. இது தமிழ் யாப்பு இலக்கணப்படி அந்தாதி என வழங்கப்படுகிறது.

ஶ்ரீ வித்யா உபாசகர் என்பதால் அம்பிகையின் பெருமையையும் ஏராளமான அம்பிகையின் மகிமையைக் குறிக்கும் பெயர்களையும் ஆதில் ஆழப் புதைந்து கிடக்கும் இரகசியங்களையும் அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

“மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே” என்று அவர் கூறுவதிலிருந்து அவரது எளிமையான பக்தி வெளிப்படுகிறது.

இந்த நூலை ஆயிரக்கணக்கானோர் இன்றும் பாராயணம் செய்து வருவது கண்கூடு.

அபிராமி அன்னையைத் தொழுது துதிப்பதால் என்னென்ன நலன்கள் ஏற்படும் என்பதை அவரே ஒரு பாடலில் கூறுகிறார்: 

தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (பாடல் எண் 69)

இது மட்டுமின்றி நூலின் பயனாக இதை ஓதுபவர்க்கு ஒரு தீங்கும் வராது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

 ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்

காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

 அபிராமி அந்தாதியுடன் அபிராமி பட்டர், அபிராமியம்மை பதிகம், கள்ள விநாயகப் பதிகம், அமுதகடேசர் பதிகம், கால சங்காரமுர்த்தி பதிகம் உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார்.

இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் சொற்சுவையுடனும் பொருள் சுவையுடனும் அமைந்திருக்கும்.

அபிராமியம்மை பதிகத்தில் உள்ள ஒரு பாடல் அபிராமி அம்மையைத் தொழுவார்க்குக் கிடைக்கும் நலன்களைப் பட்டியலிடுகிறது.

 கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

அபிராமி அந்தாதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் நாமங்கள் பலவற்றைக் காணலாம்.

அகிமாலினி, அம்பிகை, சாம்பவி, சாமளை, பராசக்தி, மாதங்கி, வாராகி, உள்ளிட்ட பல நாமங்களை இந்த அந்தாதியில் காண முடிகிறது.

அபிராமி அந்தாதிக்கு நல்ல உரை தந்து உதவியவர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.

இதற்கு எளிய தமிழில் கவிஞர் கண்ணதாசன் ஒரு விளக்கவுரையை அளித்துள்ளார்.

இவற்றைப் படிப்பது அபிராமி அன்னையின் மகிமையை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.

காலம் காலமாக தன்னைத் தொழுகின்ற அனைவருக்கும் அனைத்து நலன்களையும் தரும் அபிராமி அன்னை ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர, வேண்டிக் கொண்டு என் உரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!