SUNDAY 24-11-2024 GNANAMAYAM BROADCAST FROM LONDON.

PLEASE WATCH ON FACEBOOK, YOU TUBE AND ZOOM AT ONE PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME. THE BROADCAST IS ON EVERY SUNDAY.

SUNDAY EVENTS 24-11-2024

CHIEF GUEST- DR SHIB NARAYAN SEN, EDITOR, TRUTH MAGAZINE, KOLKATA.

TOPIC – MAYA (ILLUSION)

BENGALURU NAGARAJAN TALK ON ANNAI- THE MOTHER- OF PONDICHERRY

MRS BRAHAN NAYAKI  SATHYANARAYANANA ON THIRUVATHVUR TEMPLE

WORLD HINDU NEWS IN TAMIL BY VAISHNAVI ANAND FROM LONDON.

PLUS DEVOTIONAL SONGS.

JOIN US ON EVERY SUNDAY

—SUBHAM—

பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ? (Post No.13,923)

Written by London Swaminathan

Post No. 13,923

Date uploaded in London – 23 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரியோர்கள் பலர் நாற்பது வயதுக்குள் உலகத்தைத் துறந்து சொர்க்கத்துக்குச் சென்று விடுகிறார்கள், சமாதி அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்?  இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கியிருக்கிறார் . ஆதி சங்கரர் , சுவாமி விவேகானந்தர்,  ஆண்டாள் , திருஞான சம்பந்தர், தமிழில் புகழ்பெற்ற புலவர் பாரதியார் ஆகிய அனைவரும் நாற்பது வயதுக்குள் உலகத்தினைத் துறந்துவிட்டனர் . ஆனால் மகத்தான காரியங்களை செய்துவிட்டு மறைந்தனர்; இன்றுவரை அவர்களை நாம் நினைவில் வைத்திருப்பதால் அவர்கள் என்றும் வாழ்கின்றனர். அதாவது சாகாவரம் பெற்றுவிட்டனர். 

பிரம்மத்தை அதாவது கடவுளை உணர்ந்தபின்னர், கடவுளைக் கண்ட பின்னர் ஞானிகள் கொஞ்சம் மாயை உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உலகில் வாழ்கிறார்கள் . மாயையை முற்றிலும் துறந்து விட்டால் அவர்கள் இருபத்தோரு நாட்களுக்கு மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிறார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் (ரா.கி.ப).

இதை அவர் உபதேச மஞ்சரியில் விளக்கமாகக் காணலாம். ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் இதை விளக்கமாக விளம்பி இருக்கிறார் .

பாரதியார் தன்னை சித்தர் என்று அறிவித்ததோடு சாகாமல் இருப்பேன் என்று பாடினார். அது உண்மையாகி விட்டது; தமிழ் மொழி வாழும் வரை அவரது பெயர் பூமியில் இருக்கும் . நமது தாய் மொழியான தமிழோ கன்னித் தமிழ் ; என்றும் இளமையுடன் வாழும் மொழி . ஆகையால் பாரதியார் சாகாமல் வாழ்வார். இதே போல ஏனையோர் வாழ்வினையும் காண்கையில் அவர்கள் தமது பணிகளை பூர்த்தி செய்த திருப்தியோடு சென்றனர். 

ரா கி ப தான் நிர்விகல்ப சமாதியில் ஆறு மாதம் இருந்த போதும் திரும்பி வந்தது எப்படி என்று விளக்கியிருக்கிறார். நிர்விகல்ப சமாதியில் சென்றோர் உயிருடன் திரும்பி வரமுடியாது. ஆனால் ஆசையை சிறிது வைத்துக் கொண்டால் திரும்பி வரலாம். இதற்கு ரா கி ப ஒரு கதையையும் சொல்கிறார்.

கடவுளைக் கண்டவர்கள் பேசுவதில்லை; இதனால்தான் கண்டவர் விண்டிலர் ;விண்டவர் கண்டிலர் என்று நாம் சொல்கிறோம் ஆயினும் ஒரு சிலர் பிரம் மானந்தக்  கடலைக் கண்டவுடன் அதில் குதிக்காமல் திரும்பி ஓடிவந்து கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியான கண்டோம் தொண்டீர் எல்லோரும் வாரீர் என்றும், சேர வாரும்  ஜெகத்தீரே என்றும் சொல்லி ஆடிப்பாடி அனைவரையும் அழைப்பார்கள். சிலர் பிரம்மானந்தக் கடலின் ஆழத்தைக் காண அதில் குதிப்பார்கள்; உப்பு பொம்மை கடலுக்குள் குதித்தது போல சில மீட்டர் உள்ளே போவதற்குள் கடலில் கரைந்து விடுவார்கள் .

மத்தைக்க்கு நானதைக்

பாரதி-அறுபத்தாறு

கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;

…………………………….

அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!

*****

நான்கு பேர் தோட்டத்தினைப் பார்த்த கதை 

ஓர் இடத்தைச் சுற்றி உயர்ந்த சுவர் எழுப்பப்பட்டிருந்தது . வெளியிலிருந்து ஜனங்களுக்கு அது எப்படிப்பட்ட இடமென்று தெரிந்துகொள்ள  வழியில்லை

ஒரு சமயம் ஏணியை வைத்து ஏறி உள்ளே என்ன இருக்கிறதென்பதைக் காண நான்கு பேர் முடிவு செய்தனர்

முதல் மனிதன் சுவரின் மேல் ஏறி நின்றதும் ஹா ஹா என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் உள்ளே குதித்தான். இரண்டாவது , மூன்றாவது மனிதர்களுடன் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே உள்ளே குதித்தார்கள். நாலாவது மனிதன் கடைசியில் ஏறினான்; சுவரின் மேல் ஏறி நின்றதும் அவன் அற்புதமான பழங்கள் நிறைந்த தோட்டத்தினைக் கண்டான் .உள்ளே விழுந்து தோட்டத்திலுள்ள பழங்களை ருசி பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் பலமாக இருந்தது . அதை அடக்கிக்கொண்டு வேகமாக ஏணியின் வழியாகக் கீழே இறங்கி வந்து அந்த தோட்டத்தின் மஹிமை பற்றி எல்லோருக்கும் சொல்லி வாருங்கள் என்று அழைத்தான்.

இதில் பிரம்மம் என்பது அந்த பழம் நிறைந்த தோட்டத்தினைப் போன்றது  பிரம்மத்தைக் கண்டவன் தலை, கால் புரியாமல் அதில் விழுந்து மூழ்கிவிடுகிறான் இத்தகையோர் பரிசுத்தமான மஹான்கள் ஆவர். ஆனால் லோக சம்ரட்சகர்கள் யார் எனில் ஈஸ்வரனைக் கண்ட பின்னரும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லிக்கொண்டு தான் மட்டும் மோட்சம் அடையாது மற்றவர்களுக்கும் உபதேசம் செகிறார்கள்; பிறவித்துன்பங்களை மீண்டும் மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள்.

பிரம்மத்தைக் கண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பாடியிருக்கிறார்; விவேக சூடாமணி பற்றிய எனது ஆங்கிலக்கட்டுரையில் விவரங்கள் உள்ளன.

–subham—

Tags– பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர், இளம் வயதில், மறைந்தது ஏன், நிர்விகல்ப சமாதி, 21 நாள், ராமகிருஷ்ண பரமஹம்சர், நாலு பேர் , தோட்டம் , பல மரங்கள் , பிரம்மம்

ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள் (Post No.13,922)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.922

Date uploaded in London – –23 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஶ்ரீ சத்யசாயி பாபா அவதார தினம் : நவம்பர் 23, 1926

                                   சமாதி : 24-4-2011

ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள் 

ச.நாகராஜன்

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினமான இன்று (நவம்பர் 23ம் நாளன்று) அவரது அருள் மொழிகளில் சிலவற்றைப் பார்ப்போம். 

1)      தியானத்தில் வெற்றி

மனம் துணி போன்றது. அதற்கு எவ்வித சாயம் ஏற்றினாலும் அச்சாயத்தைத் துணி பெற்றிருக்கும். சாத்வீக மனம் வெள்ளை நிறம் கொண்டதாகும். ராஜஸீக குணத்தால் மனம் சிவப்பாகவும் தாமஸீக குணத்தால் கருப்பாகவும் மாறும். மனமென்பது வாசனைகள் நிறைந்த இடமே. அதனால் வாசனைகள் எந்த வகையில் உள்ளனவோ அதே விதத்தில் மனதும் அமையும்.

சிலர் பல வருடக் கணக்கில் தியான சாதனையைக் கடைப்பிடித்திருந்தாலும் தியான பலன் கிடைக்கவில்லை என்று எண்ணக் கூடும். அதற்கு பதில் அவர்கள் வாசனைகளை சரிவர விரட்டவில்லை என்பது தான்.

தியானத்தில் வெற்றி அடைய வேண்டுமானால் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மலின வாசனைகள் தலை தூக்கும்போது, சாதகன் இன்னும் தீவிரமாக ஜப தியானத்தில் இறங்கி தன் மனோ பலத்தினால் அதை வென்று விடவேண்டும்.

                             தியான வாஹினி பத்தாம் பாகம்

2. வீடு பேற்றை அடைய தேவையான இரண்டு

ஆகாயத்தில் உயரப் பறக்கும் பறவைக்கு இரு இறகுகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பூவுலகில் நடந்து முன்னேறும் மனிதனுக்கு இரு கால்கள் தேவைப்படுகின்றன. மோட்ச மாளிகையை அதாவது வீடு பேற்றை அடைய ஆவலுறும் சாதகனுக்கு பற்றின்மையும் விவேகவும் அதாவது உலக ஆசைகளை விடுவதற்குப் பற்றின்மையும் ஆத்மாவை அறிவதற்கு விவேகமும் தேவைப்படுகின்றன. ஒருகால் உள்ள பறவையால் ஆகாயத்தில் உயர எழும்ப இயலாது. இயலுமா? அதைப் போலவே பற்றின்மை அல்லது விவேகத்தை மட்டும் பெற்ற மனிதனால் பிரம்மம் என்னும் பரமாத்மாவை அடைய இயலாது. ‘எனது’ என்னும் உணர்வு மோகத்தால் ஏற்படும் பற்றுக்குள் தளைப்படுத்துகிறது. ஒருவன் ஒன்றை தனது என்று எத்தனை நாளைக்கு உரிமை கொண்டாட இயலும்? ஒரு நாள் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விட்டு விட்டு தனிமையில் வெறு கையுடன் அவன் வெளியேறத்தான் வேண்டும். தப்பிக்கவே முடியாத தலைவிதி இது.

   சூத்ர வாஹினி – அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா

3. பார்ப்பதும்உணர்வதும் அடிப்படை உண்மையும்

நாம் ஒரு சுவரைப் பார்க்கிறோம். எவ்வாறு அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம்? அது ஒரு தடுப்பாக இருப்பதனாலும், அதனூடே நாம் பார்க்கவும் போகவும் இயலாதிருப்பதனாலும் அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம். அதாவது, அது ஒரு தடுப்பாகையால் அதைச் சுவர் என்று அழைக்கிறோம்.

ஆனால் அதனை நாம் ஒரு விஞ்ஞானியின் கண் கொண்டு பார்க்கும் போது அந்தச் சுவரை ஆக்கக்கூடிய அணுக்களுக்கிடையே ஏராளமான இடைவெளி இருப்பதைக் காணலாம். நம் வெற்றுக் கண்களால் பார்க்கும் போது அதனை நாம் சுவர் என்று அழைப்பினும், ஒரு விஞ்ஞானி அதனைப் பார்க்கும் போது – நாம் விண்வெளியில் பார்க்கும் விண்மீன்களுக்கிடையே  மிகுந்த இடைவெளியிருப்பது போலவே – அங்கும், அந்தச் சுவரிலும் ஏராளமான இடம் இருப்பதாகக் கூறுகிறான். இவ்வாறாக, விஞ்ஞானத்தின் உதவியைக் கொண்டு பல பொருள்களைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு நாம் முற்படுகிறோம். நாம் பார்ப்பது ஒன்றும், உணர்வது மற்றொன்றும், அடிப்படை உண்மை வேறொன்றுமாக உள்ளன. அடிப்படை உண்மையைக் கண்டு கொள்ள வேண்டி நாம் தீவிர முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அடிப்படை உண்மைகளைப் பறைசாற்றுவதற்காக நாம் மூன்று வழிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

அவை உலக வழி, ஆன்மீக வழி, தார்மீக வழி முதலியன ஆகும். இன்று உலகத்திலுள்ள அனைத்து அநீதியையும் போக்குவதற்குப் பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி அடைவதில்லை. உண்மையைப் பரவச் செய்து, இந்த அநீதியை ஒழிக்கும்படியாக நீங்கள் ஓர் உறுதியான முயற்சி செய்ய வேண்டும். நம் கண்களால் முற்போக்காகக் காணும் அனைத்தையும் நாம் அடிப்படை உண்மை என்று நினைக்கிறோம். ஆனால், அது அப்படியன்று; நாம் பார்ப்பதன் பின்னால் உண்மை மறைந்து இருக்கிறது.

    நீலகிரியில் நிமல கருத்துரைகள், கருத்துரை 16

(1976ம் வருடம் மே மாதம் நீலகிரியில் கோடை வகுப்புகளில் பாபா ஆற்றிய உரை)

***

Hindu Crossword Puzzle 22112024 (Post No.13,921)

Written by London Swaminathan

Post No. 13,921

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1 2  3  4
        
    5   
 6       
     7  8 
  9    10  

ACROSS

1.Skanda or Kartikeya’s name; he was born in that pond.

5. Dancer or actor in Sanskrit (root of Natyam, Nataka)

6. Revati’s father; Balarama’s wife; also name of a mountain

7. Flavour, Sentiment, Emotion; Hindus divided it into nine types.

9.Cave in Sanskrit. Vali entered it and Sugreeva blocked it by mistake.

DOWN

1.Planet Venus in Sanskrit

2.Moon’s favourites star in the 27 – star system. Sangam Tamils married on this star day according to Akanauru.

3.Rama’s monkey brigade. Literal translation Forest +Man

4.Indumathi’s husband in Solar dynasty. Dasaratha’s father.

8.(Go up) ………. Chit Ananda (first word)

10. (Go up)  A sanyasi’s or ascetic’s living place.

SOLUTION

S 1AR 2AV 3ANA 4
U O A  J
K H N5ATA
R 6AIVATA 
A N R 7AS 8A
 B 9ILAM 10  

—subham—

Tags- Hindu Crossword, 22112024

தமிழ் தெரியுமா? 22112024 (Post.13,920)

Story of Punithavathi

Written by London Swaminathan

Post No. 13,920

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

  1  2 3 4  
      5
 6      
       
  7   8 9 
       

குறுக்கே வலம்  இடமாக செல்க

1. இந்துக்களின் புனித நதி

3. கிருஷ்ணர் கோபிகளுடன் விளையாடிய நதி

6.புனிதவாதியாரின் கணவர் பெயர்

7……………………….தாயைப்போல் பிள்ளை

****

மேலிருந்து கீழே செல்க

1.      ராமாயணப் புலவன் பெயருடன் அவன் படைத்ததும் ஒட்டிக்கொண்டுள்ளது.

2.       

3.      இந்த இடத்தில் சிவன் உள்ளதால் இமயமலைக்குத் தனிச் சிறப்பு.

4..விதை போட்டால் முதலில் நடைபெறும் செயல்; ஆங்கிலத்தில் ஜெர்மினேஷன்.

5.மீனவர்கள் கடலில் கொண்டுசெல்வது .

8.தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்; பெண்களை போ என்று சொல்லவும் பயன்படுத்துவார்கள்.

9. ராமர் கட்டிய பாலத்தை இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லால் அழைப்பர்

விடைகள்

க  1ங்கை 2ய 3மு 4னை 
ம் லை ளை மீ 5
ப 6த்ன்
ன் லை  
நூ  7லைப்  போ 8ல்சே 9லை
ல்  டி து 

 –subham—

tags- தமிழ் தெரியுமா? 22112024

Why did Swami Vivekananda, Sankara and Bharatiyar leave the World at Young Age? (Post.13,919)

Written by London Swaminathan

Post No. 13,919

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Swami Vivekananda, Adi Sankara and Bharatiyar, the greatest of the modern Tamil poets , left the world before they were forty years old. They have done tremendous work within that period. But had they lived longer they would have changed the world for better. Two of the three attained Samadhi and Bharati died without taking medicine.  Their last days described how they died or attained samadhi

Sri Ramakrishna Paramahamsa (R .K .P) explains the  reason for this in his teachings.

For Brahma Gnanis , 21 day period is the survival period according to him.

Bharati called himself a Siddha and declared that he would not die. Like other Siddhas or saints he is also remembered whenever one speaks about Tamil Language. And we believe Tamil wont die. So as long as Tamil exists, Bharati’s name would also live.

Sri R K P explains it in an anecdote:

There was a place enclosed by a high wall, and men outside did not know what sort of a place it was. Once four persons made up their minds to scale the wall with the help of a ladder, and find out what was inside. As soon as the first man ascended to the top of the wall, he laughed out, “Ha ha! ha!”, and jumped into the enclosure.

The second person also, as soon as he ascended the wall, laughed aloud and jumped in like the first; and so did the third. When the fourth and last man got upon the wall, he found stretched before him a large and beautiful garden with pleasant groves full of delicious fruits. Though strongly tempted to jump in and enjoy the scene, he resisted the temptation, and coming down the ladder, spoke of the glory of the garden to those outside it. Brahman is like that walled garden.

Whoever sees Him forgets his own existence and rushes headlong to Him to be absorbed in His essence. Such are the holy men and the liberated saints. But the Saviours of humanity are those who see God, and being at the same time eager to share their happiness of Divine vision with others, refuse the opportunity of passing into Nirvana (state of extinction of individuality), and willingly undergo the troubles of rebirth in the world in order to teach and lead struggling humanity to its goal.

Bhagawan Sri Ramakrishna

(Sayings of Sri Ramakrishna,)

And in another place, he says,

“Can there be Maya in the emancipated soul? Ornaments cannot be made of pure gold.; some alloy must be mixed with it. As long as a man has a body he must have some Maya, at least to carry on the function of the body; a man totally devoid of Maya ,will not survive more than 21 days”.

Once the saintly men think that they have done what they wanted to do, they leave the world. Bharati refused to take medicine in his last days. Vivekananda sat in meditation and left the body. Sankara also disappeared. In the case of Gnana sambandar and Andal also we see them merging with the God in their teenage.

Sri RKP explains that they are like salt dolls that went to measure the depth of the sea of bliss. As soon they jump into it they dissolve themselves and become one with the sea. The sea is Ananda Sagara.

Very few saints , even after seeing the mighty ocean of bliss, come back and call every one, please come and enjoy the ocean of bliss. We see this in the verses of great saints.

Bharati, Swami Vivekananda and Sankara explained it and then they jumped into it and merged  with the god.

–subham—

 Tags- Death, at early age, Sankara Vivekananda, Bharatiyar, Sambandar, Andal, 21 days only, life

TEN MORE GOOD CARTOONS FROM DECCAN CHRONICLE 22-11-2024

 Here are more cartoons from the Deccan Chronicle Newspaper up to 22nd November 2024

Posted by London Swaminathan on 22-11-2024

—subham—

cartoons22112024, deccan chronicle.

ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கம்! (Post No.13,918)

Dogs takn to slaughter houses

Written by London Swaminathan

Post No. 13,918

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Snake Blood served hot and fresh  in Glass

ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி, நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கத்தினை ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் உபதசத்திலுள்ள ஒரு சம்பவத்தின் மூலம் அறியலாம்.

தென் கொரியர்கள் ஆண்டுக்குப் பத்து லட்சம் நாய்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்; சீனர்கள் உயிருள்ள பாம்புகளின் ரத்தத்தைக் குடிக்கிறார்கள்; பல்லி , கரப்பு, தேள்  இவைகளைச் சாப்பிடுகிறார்கள். நகரும் எந்த ஜந்துவும் அவர்களுப் பிடிக்கும் என்பது முது மொழி; அந்த வரிசையில் வாம தேவரைச் சேர்த்துவிடக்கூடாது  அவர் பெரிய ஞானி; ரிக் வேதமோ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பேராசிரியர் வில்சனின் கணிப்பு. இல்லை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது விஞ்ஞானிகளின் துணிபு. மேலும் இது போன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டுதான்  உள்ளன .

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் நாலாவது மண்டலம் வாமதேவ ரிஷியின் பெயரில் அமைந்துள்ளது அவரது தெய்வீகக் கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன அவர் பசி வந்தபோது நாயின் குடல்களைச் சாப்பிட்டதாக ரிக் வேதம் பாடுகிறது. மனிதர்களுக்குப் பசிக்கொடுமை வந்துவிட்டால்  என்ன செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மனு ஸ்ம்ருதியும்  (10-106 )அந்த நாய் மாமிச சம்பவத்தைக் குறிப்பிடுகிறது

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பதைத் தமிழ்ப்புலவர்களும் பாடியுள்ளனர்; அதாவது பத்து நல்ல குணங்களைக் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்; ஆனால் வாமதேவ ரிஷி சாதாரண மனிதர் அல்ல;. அவருடைய புகழ் ரிக்வேதத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் உள்ளது.

உண்மையான விளக்கம் என்ன வென்றால், ஞானிகளுக்கு உடல் என்பது வெறும் அழுக்குச் சட்டை போன்றது; இதை பகவத் கீதையிலும் கிருஷ்ணன் கிழிந்த ஆடை — வாஸாம்ஸி ஜீர்ணானி — என்று வருணிக்கிறார் திருவாசகத்தில்,  தேவாரத்தில், சித்தர் பாடல்களில்  மலம் சேரும் ஒன்பது வாயில் குடிலினைக் காண்கிறோம்  ஆகவே ஞானிகளுக்கு உடல் ஒரு பொருட்டல்ல; மேலும் அவர்கள் சில நேரங்களில் பைத்தியக் காரன் போலவும் , குழந்தைகள் போலவும், குடிகாரர்கள் போலவும் நடந்து கொள்வார்கள் என்று ராம கிருஷ்ண பரம ஹம்ஸர், பல சம்பவங்கள் மூலம் நமக்குக்  காட்டுகிறார்.

Rig Veda 4.18.13

अव॑र्त्या॒ शुन॑ आ॒न्त्राणि॑ पेचे॒ न दे॒वेषु॑ विविदे मर्डि॒तार॑म् । अप॑श्यं जा॒यामम॑हीयमाना॒मधा॑ मे श्ये॒नो मध्वा ज॑भार ॥
अवर्त्या शुन आन्त्राणि पेचे न देवेषु विविदे मर्डितारम् । अपश्यं जायाममहीयमानामधा मे श्येनो मध्वा जभार ॥
avartyā śuna āntrāṇi pece na deveṣu vivide marḍitāram | apaśyaṃ jāyām amahīyamānām adhā me śyeno madhv ā jabhāra ||

English translation:

“In extreme destitution I have cooked the entrails of a dog; I have not found a comforter among the gods; I have beheld my wife disrespected; then the falcon, (Indra), has brought to me sweet water.” (Amruta).

*****

பகவத் கீதை

वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா₂ விஹாய

நவானி க்₃ருஹ்ணாதி நரோ ’பராணி

ததா₂ ஸ²ரீராணி விஹாய ஜீர்ணான்

அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ பகவத் கீதை 2-22

ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை( ஜீர்ணானி வாஸாம்ஸி) அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது. பகவத் கீதை 2-22

****

நாயுடன் எச்சில் இலையில் சாப்பிட்ட சாது!

Final minute for this dog

ஒரு சமயம் பகவத் பிரேமையில் ஈடுபட்ட சாது  ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (ரா.கி.ப)  தங்கியிருந்த ராணி ராசமணியின் காளி கோவிலுக்கு வந்திருந்தார்; அவருக்கு ஒரு நாள் முழுதும் ஆகாரம் கிடைக்கவில்லை.  பசியோடு இருந்தபோதும் தமக்கு சாதம் வேண்டும் என்று அவர் ஒருவரையும் கேட்கவில்லை . ஆனால் ஒரு மூலையில் எறியப்பட்ட எச்சில் சோற்றை ஒரு நாய் சாப்பிடுவதைக் கண்டு  அங்கே சென்று அந்த நாயைத் தழுவிக்கொண்டு , “தம்பி ! எனக்கு கொடுக்காமல் நீ மட்டும் உண்பது எப்படி?” என்று சொல்லிக்கொண்டு அந்த நாயுடன் சாப்பிட ஆரம்பித்தார் ; இப்படிச் சாப்பிட்ட பின், அவர் காளி கோவிலுக்குள் நுழைந்து  மிகுந்த பகுதி பரவசத்துடன் கோவில் முழுதும் ஆனந்த  உணர்ச்சி நிரம்பும்படியாக ஸ்தோத்திரம் பண்ணத்தொடங்கினார் . பிறகு அவர் வெளியே செல்லும்போது பரமஹம்சர்,  தமது உறவினரான ஹிருதய முகர்ஜியை  அந்தச் சாதுவுவின் பின்னால் போகும்படியும் அவர் சொல்வது,  செய்வது, எல்லாவற்றையும் தன்னிடம் செல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.

ஹிருதயும் அப்படியே அவர் பின்னால் சென்றார்  ; சிறிது தூரம் போன பின், அந்த சாது திரும்பிப் பார்த்து ஏனப்பா என் பின்னால் வருகிறாய்? என்று கேட்டார்  சுவாமி எனக்கு ஒரு உபதேசம் செய்தருள வேண்டும் என்றார் ஹிருதய் .

அதற்கு அவர் “அப்பனே! இந்த அழுக்குப் படிந்த குட்டை நீரும், அதோ பெருக்கெடுத்து ஓடும் சர்வ பாப நாசினியாக கங்கையின் நீரும் ஒன்றென உனக்குத் தோன்றும்போதும் வீணா கானமும் அதோ அந்த தெருக்களில் கேட்கும் ஜனசந்தடியும் உன் காதுகளில் வித்தியாசம் இல்லாமல் கேட்கும்போதும் தான் உனக்கு உண்மையான  ஞானோதயம் உண்டாகும்” என்றார்.  இதைக் கேட்டுவந்து, ஹிருதய் பகவானிடம் (ரா.கி.ப) சொன்னபோது அவர், அந்த சாது உண்மை ஞானத்ததையும் பிரேமையையும் பெற்றிருக்கிறார்; சித்தர்கள் குழந்தைகளைப் போலவும் பெ,,,,,,ய்களைப் போலவும், அத்தோடு பைத்தியக்கார்களைப் போலவும் இன்னும் பலவித வேஷங்களுடனும்  அங்குமிங்கும் அலைந்து திரிவார்கள் என்றார் .

இந்த சம்பவம் மட்டுமின்றி, ஸ்ரீ ராகிருஷ்ணரே பலவித சமய சம்பிரதாயங்களை பின்பற்றி பயிற்சி சாதனைகளை செய்தபோது எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதையும் பார்க்கும் போது வாமதேவரும் ஏன் நாய் மாமிசம், சாப்பிட்டார் என்பது புரிகிறது

நீதி- ஞானிகள் உபாதேசத்தைப் பின்பற்று; அவர்கள் செய்வதை எல்லாம் தகுந்த ஞானம் ஏற்படும்வரை செய்யாதே!

–subham—

Tags- ரிக்வேதப் புலவர் ,வாமதேவ ரிஷி, நாய் மாமிசம், ,புது விளக்கம், ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்

பிக்கவோலு விநாயகர் கோவில் -45 (Post No.13,917)

Written by London Swaminathan

Post No. 13,917

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள் பகுதி 45

விநாயகரை வழிபடும் புராதன கோவில்களில் பிக்கவோலு Bikkavolu Vinayaka Temple) சிறப்பிடம் பெறுகிறது; காரணம் என்னவெனில் இது பழமையான பிள்ளையார் கோவில்; மேலும் ஏழு அடி உயரத்திற்கு கணபதி காட்சி அளிக்கிறார். அத்தோடு இது ஒரு தான் தோன்றி, அதாவது ஸ்வயம்பு சிலை.

இது காகிநாடாவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ளது இதை ராஜ மகேந்திரவரத்திலிருந்ததும் அடையலாம்; சுமார் நாற்பது கி.மீ

இதன் வரலாறு 849 CE ஆம் ஆண்டில் துவங்குகிறது

இந்தக் கோவில் பற்றிய மூன்று சுவையான விஷயங்கள்

1.பிள்ளையார் சிலை வளருகிறது

2. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை ரகசியமாக பிள்ளையார் காதில் ஓதுகிறார்கள்

(ஏனைய கோவில்களில் நந்தியின் காதில் இவ்வாறு ஆசை அபிலாஷைகளைத் தெரிவிப்பதைக் காணலாம்)

3.மூன்றாவது விசேஷம்- கணபதி காலிலிருந்து நீரூற்று வருகிறது

இயற்கையே பிள்ளையாரின் மகிமையை இவ்வாறு அலங்கரிக்கிறது; அங்கீகரிக்கின்றது போலும்! விநாயகர் சிலை மிகவும் அழகாக இருக்கிறது.

இந்த வட்டாரத்தத்தில் பல கோவில்களை கீழைச் சாளுக்கிய வம்ச மன்னர்கள் கட்டினார்கள்  கிராமத்திற்கு பிருத்தாங்கினவோலு என்ற பெயரும் உண்டு. மூன்றாம் விஜயாதித்யன் பெயரில் கிராமம் இருக்கிறது

****

கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்

மூன்று சிவன் கோவில்கள்  இங்கே இருக்கின்றன  அவைகளில் ஒன்று கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்.(SRI GOLINGESWARA SWAMI VARI TEMPLE, BICCAVOLU ). ஏனைய இரண்டு கோவில்கள் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில், சந்திர சேகர சுவாமி கோவில் ஆகும்;  எல்லாக் கோவில்களும் ஆயிரம் ஆண்டு அல்லது அதற்கு மேல் வரலாறு உடையவை.

கோ லிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால் கரு  வறையில் அழகான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது ;சுற்றிலும் சிற்பக் களஞ்சியம்தான். வாயில் புடையில் நீண்ட 33 வரி சாசனத்தைப் பொறித்துள்ளார்கள் . இன்னும் ஒரு சிறப்பு ஆலிங்கன நிலையில் சிவனையும் பார்வதியையும் செதுக்கியுள்ளார்கள்  இது முக மண்டபத்தில் இருக்கிறது . விமானம் ஒரிஸ்ஸா பணியில் இருக்கிறது சில சிலைகள் கஜுராஹோ (காமக் கலை) சிற்பங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.

ராஜ ராஜேஸ்வரி ஆலயம்

இந்த ஆலயத்தில் சிவலிங்கமும் ராஜேஸ்வரியும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் சுற்றியுள்ள பிறைகளில் / மாடங்களில் கணபதி, மயில் மீதரமர்ந்த முருகன், மஹிஷாசுர மர்த்தனி ஆகியோர் உள்ளனர் .

சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சந்திரசேகரனையும்  பாலா திரிபுர சுந்தரியையும் தரிசிக்கலாம்;  மகர தோரணங்களுடன் மண்டபம் காட்சிதருகிறது.

கணேசரையும் மறுபுறம் லட்சுமியையும் காட்டும் ஒரு சிற்பம் இங்கிருந்து சென்னைக்கு எடுத்துச்  செல்லப்பட்டு மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கிராமத்துக்கு வெளியே இருக்கும் சிவன் கோவிலில் சிவபிரானின் சதுரங்க நடனத்தைக் காணலாம் .

சின்னச்சின்ன கோவில்களாக வயல்வெளி முழுதும் நிறைந்திருக்கும் ஆலயங்களில் கங்கை யமுனா நதி தேவதைகளின் சிற்பங்கள், பல்லவ, ராஷ்டிரகூட பாணி விமானங்கள் ஆகிய யவற்றையும் தொல் பொருட் துறை அறிஞர்கள் பட்டியலி ட்டுள்ளார்கள். 

–subham—

Tags- பிக்கவோலு விநாயகர் கோவில்,ஆந்திர மாநில , புகழ்பெற்ற கோவில்கள் ,பகுதி 45 , கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்

 பூமியில் உங்கள் வயது 60 என்றால் புதனில் உங்கள் வயது 249! ஓஓ!! (Post.13.916)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.916

Date uploaded in London – –22 November 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge. 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Kalkionline-ல் 14-11-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. Kalkionline-ல் கல்கி, மங்கையர் மலர், தீபம், கோகுலம் உள்ளிட்ட பத்திரிகைகளைப் படிக்கலாம்.

பூமியில் உங்கள் வயது 60 என்றால் புதனில் உங்கள் வயது 249! ஓஓ!!

ச.நாகராஜன்

சஷ்டி அப்த பூர்த்தி விழாவில் கலந்து கொண்ட நீங்கள், உங்கள் நண்பரிடம் பூமியில் உங்கள் வயது அறுபது என்றால் புதனில் உங்கள் வயது 249 வருடம் என்று சொல்லுங்கள்.

பிரமிப்பார்!

தொடர்ந்து சுக்ரனில் 97, செவ்வாயில் 31, வியாழனில் 5 வயது சனியில் இரண்டு வயது என்று சொல்லுங்கள்.

பிரமித்துப் போவார்.

கீழே உள்ள அட்டவணை அனைத்து அறிவியல் விவரங்களையும் தருகிறது.

   கிரகம்         மனித வயது Rotation

சுழல் முறை                       Revolution                                                                       

சுழற்சி

பூமி 60 வயது ஒரு நாள் ஒரு வருடம்

புதன் 249.12 வயது 58.6 நாட்கள் 0.2408 வருடம்

சுக்ரன் 97.53 வயது 243 நாட்கள் 0.61562 வருடம்

செவ்வாய் 31.90 வயது 1.025 நாட்கள் 1.8809 வருடம்

குரு (வியாழன்) 5.06 வயது 0.41 நாட்கள் 11.862 வருடம்

சனி 2.04 வயது 0.45 நாட்கள் 29.458 வருடம்

யுரேனஸ் 0.71 வயது 0.67 நாட்கள் 164.79 வருடம்

நெப்ட்யூன் 0.36  வயது 6.39 நாட்கள் 248.54 வருடம்

நீங்கள் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்களில் இளமையுடன் இருப்பீர்கள்.

புதனிலும் சுக்ரனிலும் வயதானவராய் இருப்பீர்கள்.

இதுவே பூமியில் உங்கள் வயது நூறு என்றால் இதர கிரகங்களில் வயது என்ன?

இதோ அட்டவணை:

   கிரகம்         மனித வயது Rotation

சுழல் முறை                       Revolution                                                                       

சுழற்சி

பூமி 100 வயது ஒரு நாள் ஒரு வருடம்

புதன் 415.05

வயது 58.6 நாட்கள் 0.2408 வருடம்

சுக்ரன் 162.33 வயது 243 நாட்கள் 0.61562 வருடம்

செவ்வாய் 53.16 வயது 1.025 நாட்கள் 1.8809 வருடம்

குரு (வியாழன்) 8.48 வயது 0.41 நாட்கள் 11.862 வருடம்

சனி 3.40 வயது 0.45 நாட்கள் 29.458 வருடம்

யுரேனஸ் 1.19 வயது 0.67 நாட்கள் 164.79 வருடம்

நெப்ட்யூன் 0.61  வயது 6.39 நாட்கள் 248.54 வருடம்

இதற்கான அறிவியல் காரணம் என்ன?

மனிதர்கள் பொதுவாக தங்கள் வயதை ஆண்டுகளிலேயே கணக்கிடுகிறார்கள். இதர கிரகங்களில் உங்களின் வயது அந்த கிரகங்களின் ஓடுபாதையைப் (ORBIT) பொறுத்தே அமைகிறது.ஆகவே தான் பூமியில் 60 என்றால் புதனில் 249 என்று ஆகிறது. கிரகங்கள் சூரியனை வெவ்வேறு கால அளவில் சுற்றுகிறது. ஆகவே ‘ஒரு வருடம்’ என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறான கால அளவு. சுழற்சி வேகம் ஒவ்வொர் கிரகத்திற்கும் வேறு மாதிரியாக உள்ளது. இதனால் தான் மேலே உள்ள அட்டவணை வெவ்வேறு அளவைத் தருகிறது!

எனக்கு வயது இருபது என்றால் எப்படி மற்ற கிரகங்களின் வயதைத் தெரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். 

இணைய தளத்தில் கூகில் தேடலில் My Age in other planets

என்று டைப் செய்தால் வரும் அட்டவணையில் உங்கள் வயதை பதிவு செய்து கிரகம் வாரியாக வயதைப் பெறலாம்.

சந்திரனைப் பொறுத்த மட்டில் அதன் ஒரே முகத்தைத் தான் நாம் பார்க்கிறோம். ஏனெனில் அதன் சுழற்சி 29.53 பூமி நாட்கள். பூமி 24 மணி நேரத்தில் தன் சுழற்சியை முடிக்கும் போது சந்திரன் சூரிய உதயத்தை 709 மணி நேரங்களில் பார்க்கிறது.

ஆகவே பூமியில் உங்கள் வயது 60 என்றால் சந்திரனில் 742.11.

பூமியில் நூறு என்றால் சந்திரனில் 1236.85

நிலாவிலே உல்லாசமாய் ஆடலாம்!

சல்லாபமாய் பாடலாமா?!!!

***