இனிப்பு சாப்பிட்டால் இருமல் வரும்! நம்பிக்கை இருந்தால் நோய்கள் தீரும்!! (Post No.13,693)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,693

Date uploaded in London – 21 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நீதி வெண்பாவில் இரண்டு முக்கிய மருத்துவ அறிவுரைகள் உள்ளன.

பலருக்கு இனிப்புகள் சாப்பிட்டால் உடனே இருமல் வரும்; தொண்டையில் அரிப்பும் ஏற்படும். கசப்பு சாப்பிட்டால் அடங்கி விடும்.

இதை அந்தக் காலத்திலேயே நம்மவர்கள் பாடி வைத்துவிட்டார்கள் அதோடு, ஒரு அறிவுரையும் வழங்கினார்கள் . கெட்டவர்களும் இருமல் தான். இனிப்பான சொற்களால் அவர்களைத் திருத்த முடியாது கசப்பான மருந்து தேவை என்கிறார் புலவர்.

துன்னும் இருமலுந் துர்ச்சனரும் ஒக்குமே

மன்னும் இனிமையான் மாறாகிப் – பன்னுங்

கடுவும் கடுநேர் கடுமொழியுங் கண்டாற்

கடுக வசமாகை யால். 22

பொருள்

துன்னும் இருமலும் – மிகுந்து வரும் இருமல் நோயும்

துர்ச்சனரும் – தீயோரும்

மன்னும்- நீங்காத

இனிமையான் – இனிமைக்கு

மாறாகி – வேறாகி

பன்னும்- சொல்லப்படுகின்ற

கடுவும் –   நஞ்சு போன்ற கைப்பான மருந்தையும்

கடுநேர- அம்மருந்தையொத்த

கடுமொழியும்- வன்சொல்லையும்

கண்டால் –  பார்த்தால்

கடுக – விரைவாக

வசம் ஆகையால் – அடங்கி விடுதலால்

ஒக்கும் – அவ்விருமலும் தீயோரும் ஒன்றுக்கொன்று ஒப்பாகும்

கருத்து — இருமலை கசப்பான மருந்தால் தீர்ப்பது போல தீயோரும் கடுஞ் சொற்களாலேயே அடங்குவார்கள்

****

இது உண்மைதான்!

அறிவியலும் தமிழர் கண்டுபிடிப்பை ஏற்கிறது. ப்ரக்டொஸ் வகை இனிப்பு அதிகமாகவுள்ள பழரசங்கள் , பானங்கள் ஆஸ்த்மா அறிகுறிகளை உண்டாக்குகின்றன.  அதிகமாக இனிப்புகளைச்  சாப்பிட்டால் நீடித்த இருமல் நோய் வரும். நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அது பாதிப்பதால் இருமலும் எளிதில் போகாது   

Fruit drinks and soft drinks that contain high fructose corn syrup (HFCS) have been shown to trigger asthma symptoms. Eating a lot of high sugar foods may also contribute to developing or prolonging a cough. A high-sugar diet has been shown to impair immune system function, which could slow down your recovery.

உங்களுக்கு இருமல் இருந்தால், இனிப்புப் பண்டங்கள் உங்கள் இருமல் நோயை மேலும் அதிகரிக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை,  குறிப்பாக வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தியை இனிப்புகள் அகற்றிவிடுகின்றன. தடுமன் என்னும் ஜலதோஷம் வந்தால்கூட இனிப்புகளை நிறுத்திவிடுங்கள் .

Sugar consumption is a sure-shot way of making your cough worse. As per a study published in Frontiers in Immunology in 2017, increased sugar intake can suppress the immune system, especially when fighting viral infections. This applies to the common cold too, so make sure you stay away from those desserts.

****

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும்

மந்திரமும் தேவும் மருந்தும் குருஅருளும்

தந்திரமும் ஞானந் தருமுறையும் – யந்திரமும்

மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்

பொய்யெனிற் பொய்யாகிப் போம். 38

பொருள்:

மேதினியில்=உலகத்தில்

மந்திரமும் = மறை (வேத) மொழிகளும்

தேவும் = கடவுளும்

மருந்தும் = மருந்துகளும்

குரு அருளும் = ஆசார்யனின் அருளும்

தந்திரமும் = தந்திரம் பற்றிக்கூறும் நூல்களும்

ஞானம் தரும் முறையும் = வழிபாட்டு முறைகளும்

யந்திரமும் = மந்திர எழுத்துக்கள் எழுதிய தகடுகளும்

(ஆக இவ்வேழும்)

மெய்யெனில் = மெய்யென்று நம்பினால்

மெய்யாய் விளங்கும் = உண்மையாகவே பலன் கொடுக்கும்

பொய்யெனில் = பொய்யென்று நினைத்தால்

பொய்யாகிப் போம் = பலிக்காது

மந்திரம் என்றாலேயே “நினைத்தவரைப் பாதுகாப்பது” என்று பொருள். அப்படிப்பட்ட ஒன்றை நம்பிக்கை இல்லாமல் சொல்லவே முடியாது.

****

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும் என்பதை நான்கு வேதங்களும் சொல்லுகின்றன:-

நம்பினார் கெடுவத்தில்லை இதுநான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகம் வரம் பெறலாம்

-என்பது மஹா கவி பாரதியின் வாக்கு.

சம்சயாத்மா விநஸ்யதி (சந்தேகப் படுபவன் அழிவான்) என்பது கண்ண பிரானின் வாக்கு (பகவத் கீதை 4-40)

வள்ளுவனும் சொல்லுவான்:-

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து (குறள் 353)

பொருள்:-

முதலில் சந்தேகத்துடன் ஆரம்பித்து, பின்னர் ஐயம் தெளிந்து உண்மைப் பொருளை அறிந்தார்க்கு பூமியைவிட, தேவலோகம் மிக அருகில் வந்துவிடும்.

நோய்கள் தீருவது உண்மையா ?

இதுவரை அறிவியல்  பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் உலகிலுள்ள  எல்லா மதத்தினரும் சில புனிதத் தலங்க களுக்குச் சென்று  அங்குள்ள நீரில் மூழ்கினாலோ அல்லது தீர்த்தத்தைக் குடித்தாலோ நோய்கள் தீரும் என்று இன்றுவரை நம்புகின்றனர் . இந்த சந்தேகம் அந்தக்காலத்தில் இருந்ததால்தான் இது நம்பிக்கையைப் பொறுத்தது என்று சொல்லிவிட்டார்கள். 

—SUBHAM—

TAGS- நம்பிக்கை, நோய்கள், மந்திரமும் தேவும் மருந்தும், இனிப்பு , இருமல் , நீதி வெண்பா,coughing, sweets

பாரதக் குடும்பத்தைப் போற்றும் மேலை உலகம்! (Post No.13,692)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.692

Date uploaded in London – 21 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதக் குடும்பத்தைப் போற்றும் மேலை உலகம்! 

ச. நாகராஜன் 

“இந்தியாவில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. உளுத்துப் போன கூட்டுக் குடும்ப வாழ்வின் சுமையில் நசுங்கி இருக்கும் அவர்கள் அந்தக் கூட்டை உடைத்து வெளியே வர வேண்டும்” என்று பெண்ணியம்  பேசுவோருக்கு ஒரு அதிர்ச்சியை பிரிட்டனைச் சேர்ந்த நேச்சர் குரூப் ஆஃப் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை முடிவு தருகிறது.

தனித்தனிக் குடும்பங்களாக மாறி வரும் சூழ்நிலை அதிகரிக்குமானால், அது இந்தியாவில் ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த் ஆய்வை மேற்கொண்டவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாங்கோ லியூ.

அவர் கூறியதாவது:-

“கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட்டுத் தனியே போனால் இயற்கை வளம் அதிகமாகச் சுரண்டப்படும். தேவைகள் அதிகப்படும். இதனால் பொருளாதாரமே பாதிக்கப்படும். உதாரணமாக ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஒரு குளிர்சாதனப் பெட்டி இன்று இருக்கும்போது தனியே செல்லும் குடும்பங்களுக்குத் தனித்தனியே இதன் தேவை ஏற்படும். இதைப் போலவே தண்ணீர், மின்சாரம் என்று அனைத்து விஷயங்களிலும் தேவை ஏற்படும். வீட்டில் அளவு விகிதாசாரம் 5.5 என்ற அளவிலிருந்து 4.8 என்ற ஆபத்தான அளவை எட்டி விடும்” என்கிறார்.

சென்ற நூற்றாண்டில் வங்காளத்தில் சென்ஸஸ் சூபரிண்டெண்டென்டாக இருந்த ஏ.ஈ.போர்ட்டர் மேலை நாடுகளைக் காப்பி அடித்து, இந்தியக் குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்வைச் சிதைக்கும் போக்கை ஆரம்பிப்பது கண்டு மன வருத்தம் அடைந்து, “ கூட்டுக் குடும்பமாக வாழ்வது ஹிந்து வாழ்க்கை முறையின் தனித்தன்மை! அதிலே வாழும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சாகும் வரை பாதுகாப்பு உண்டு.” என்று கூறியதோடு கூட்டுக் குடும்பம் தியாகம், தன்னல மறுப்பு, தூய்மை ஆகியவற்றை ஊட்டுகிறது என்றார். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் அச்சாணி பெண்ணே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

லக்னோவில் டாக்டர் பி.பி.சேதி என்னும் சைக்கியாட்ரிஸ்ட், “மன நலம் சிதைத்து இருப்போரின் தொகை, அவர் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவரா அல்லது தனித்து வாழ்பவரா என்பதைப் பொறுத்து இருக்கிறது” என்கிறார். தனிக் குடித்தனம் போகும் இளம் தம்பதியினரால் பொறுப்புகளைத் தாங்க முடியவில்லை என்றும், மனநிலை தடுமாறி அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர் ஆய்வில் கண்டறிந்துள்ளார். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்ற புதிய தெராபியை உலகிற்கே இந்தியா அளிக்கிறது என்றும், இது மனநலம் சீராக இருக்க காலம் வென்ற உத்தி என்றும் அவர் உறுதிபடக் கூறுகிறார்.

பாரத வாழ்க்கை முறை சஹதர்மிணி (தர்மத்தை உடனிருந்து அனுசரிப்பவள்) என்றும், அர்த்த நாரி (ஆண் பாதி, பெண் பாதி என்ற சமநிலை) என்றும், கிரஹலக்ஷ்மி (வீட்டிற்கு ஒளி தருபவள்) என்றும் பெண்மையைப் போற்றுகிறது.

“ஆயிரம் இராமர்கள் உருவாகக் கூடும். ஆனால் ஒரு சீதை உருவாவது கஷ்டம்” என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றிலே ஆழ்ந்த பொருள் பதிந்துள்ளது. அது பாரதப் பெண்மையின் சிகரத்தைச் சுட்டிக் காட்டுவதோடு இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீன அறிவியல் சூழ்நிலையில், பெண்கள் எந்த லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது. பெண், புறத்திலே விஞ்ஞானமயமாகத் திகழ மைத்ரேயி, கார்க்கி, சீதை, அருந்ததி வடிவாக அகத்திலே ஜொலித்தால் மீண்டும் வேத காலம் மலரும்! 

**

சினேகிதி மாத இதழில் 2003, செப்டம்பர் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை.

German Tamil Scholar who glorified Hindus and irked Christians! (Post No.13,691)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,691

Date uploaded in London – 20 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

“Your task is to spread Christianity in India and not Hinduism in Europe” – Christian Missionary Head quarters wrote back to ZIEGENBALG.

BARTHOLOMAEUS ZIEGENBALG (1682-1719 ) was a German Tamil scholar  who translated many Tamil books in to German. He lived only 36 years and he achieved a lot within that short life span. Had he lived like Rev G U Pope, he would have translated all Tevaram and Divya Prabandham verses in German language. He praised all that was Hindu. It is all in his letters and articles in German.

Here is his life story:

BARTHOLOMAEUS ZIEGENBALG was the first PROTESTANT missionary to come to India. He was born on 10-7-1682 in Pulsnitz, Saxony. His father was a wealthy grain merchant and so he had good education. He joined University of HALLE  but could not continue his education because of health issues. He worked as a private tutor.

King Frederick IV of Denmark and Norway wished that missionaries were sent to Tharangampadi (Tranqebar) in Tamil Nadu, then a military colony leased to the  DANISH EAST INDIA COMPANY by the Raja of Thanjavur. When ZIEGENBALG  was recommended, he took a seven month long voyage and reached India. On arrival at Tharangampadi (Tranquebar) he met with bitter opposition from the colonial authorities. Ziegenbalg was imprisoned for four months in 1798/09. After his release he worked very hard and founded an orphanage and a school. He also established a Tamil Printing Press. He studied Portuguese and Tamil. He collected materials for a Tamil dictionary and wrote a grammar book in Latin named GRAMMATICA DAMULICA in 1716.

He also studied the living religion, customs and manners of the people of South India. The results of his research are laid down in several manuscripts, which Ziegenbalg sent to Germany for publication.

He wrote in a letter that the more he acquainted with the teaching of the Hindus, the more he was impressed by them. He felt the Hindu books might be studied  with as much profit as Aristotles.  The mission authorities however felt that it was “ Ziegenbalg’s task is to propagate Christianity in India and not Hinduism in Europe”.

The Christians never published his writings. Only later generations discovered the eminent scholarly value of these books.

Ziegenbalg’s main work GENEALOGIE DER MALABARISCHEN GOETTER= GENEALOGY OF SOUTH INDIAN  GODS: A MANUAL OF THE MYTHOLOGY  AND RELIGION OF THE PEOPLE OF SOUTHERN INDIA  was printed in madras in 1867.

Another work AUSFUEHELICHE BESCHREIBUNG DES MALABARISCHEN  HEIDENTUMS = COMPLETE DESCRIPTION OF MALABAR HEATHENDOM was  published only in 1926 by the Dutch scholar W. CALAND

The first part of the book unfolds the theological and philosophical principles contained in tamil writings. The second part describes Hindu customs and manners.  It contains observations on chronology, caste, ritual in eating, agriculture, medicine, chemistry and alchemy.

Some of Ziegenbalg’s smaller writings Neethi Venba, Kondrai Venthan and Ulaka Neethi (all Tamil books) are in his KLEINERE SCHRIFTEN= MISCELLANEOUS WRITINGS edited by W. Caland in 1930.

A large amount of Indological data are also included in his letters, reports and accounts, available in Complete Reports of the Royal Danish Missionaries in India. Another booklet of his, the first product of the Tamil Press in Tranquebar, Malabar Heathendom ,was thought to have been lost, until it was rediscovered in 1965.

Though unnoticed by his contemporaries, Ziegenbalg has won a place among the outstanding scholars of Hindu religion. He suffered from nervous disorders since his childhood  and was only 36 years old when he died at Tranquebar on 2-2-1719.

–subham—

Tags, German, Tamil Scholar, Tranquebar, Malabar Heathendom, Ziegenbalg, impressed by Hinduism, Tamil Grammar, Hindu customs, Aristotle.

கிளி போல பேசாதே; கொக்கு போல இரு! (Post No.13,690)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,690

Date uploaded in London – 20 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஒரு ஸம்ஸ்க்ருதப் புலவர் நமக்கு நல்ல அறிவுரை வழங்குகிறார் . கிளி போல வள வள என்று பேசுவதை    விட, மெளனம் சாதிப்பதே நல்லது . இதோ அந்த ஸ்லோகம்

ஆத்மனோ முக தோஷேண பத்யந்தே சுக சாரிகாஹா 

பகாஸ்  தத்ர ந பத்யந்தே மெளனம் ஸர்வார்த்த சாதகம்

பொருள்

கிளிகள் அவற்றின் வாய்ச்சாலத்தால் கூண்டுக்குள் சிக்குகின்றன; கொக்குகள் அப்படி சிக்குவதில்லை ; மெளனமே சாதகமானது.

****

பரமஹம்சர் சொல்கிறார்

கிளி மூலம் ராம கிருஷ்ண பரமஹம்சர் நல்ல அறிவுரை வழங்கு கிறார் :

ஜீவனானது இவ்வுலத்தை விட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக  எதை நினைத்துக்கொண்டிருக்கிறதோ அதற்குரிய உடலில் மீண்டும் வந்து பிறக்கிறது. இடையறாத நாம ஜபம் செய்தால் மரண நெருக்கடியிலும் அந்த நாமம் உதவும்.

பந்தப்பட்டப் மனிதர்கள் மரணம் நேரிடும் தறுவாயிலும் உலக விஷயங்களைப்  பற்றியே பேசுகின்றனர். புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போவதிலும் கங்கை நதியில் ஸ்னானம் செய்வதிலும் ஜப தபங்கள் செய்வதிலும் பிரயோஜனமில்லை. மனதில் உலகப்பற்று இருக்குமானால்  அது மரண காலத்தில் நிச்சசயமாக வெளிப்படும். அப்போது அவர்கள் கண்டபடியெல்லாம் பிதற்றுவார்கள்.  சாதாரணமாக ராதா கிருஷ்ணனின் திவ்ய நாமத்தைப் பாடும் கிளிகள் , பூனையால் பிடிக்கப்படும்போது கீ கீ என்று தனது சுபாவமான குரலெடுத்தக் கத்தும்”

****

வாழ்நாள் முழுதும் ராம ஜபம் செய்த மஹாத்மா காந்தி , சுடப்பட்டு நிலத்தில் வீழ்ந்தபோது ஹே ராம் என்று சொல்லிக்கொண்டு இறந்தார்.

****

சமண முனிவர் அருளுரை

நாலடியார் செய்யுள் ஒன்று, இதே கருத்தை பேய்ச்சுரைக்காய் எடுத்துக் காட்டின் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறது.

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்று () இடம் பட மெய் ஞானம் கற்பினும் என்றும்

மடங்காதா ரென்று மடங்கார்- தடங்கண்ணா ()அடங்காதார் என்றும் அடங்கார் – தடம் கண்ணாய்

யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் () உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்

கைப்பறா பேய்ச்சுரையின் காய். (06) கைப்பு அறா பேய் சுரையின் காய் (௬).

பதவுரை

தடம் கண்ணாய்= விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!

உப்பொடு= உப்புடன்,

நெய்= நெய்யும்,

பால்= பாலும்,

தயிர்= தயிரும்,

காயம்= பல காயங்களும்,

பெய்து= இட்டு,

பேய்ச்சுரையின் காய்= பேய்ச்சுரைக்காயை,

அடினும்= சமைத்தாலும்,

கைப்பு அறா= (அதன்) கசப்பு நீங்காது; (அதுபோல),

மெய் ஞானம்= உண்மை ஞான நூல்களை,

என்றும்= எந்நாளும்,

இடம்பட= விரிவாக,

கற்பினும்= கற்றாலும்,

அடங்கார்= அடங்காதவர்கள்,

என்றும்= எந்நாளும்,

அடங்கார்= அடங்கார்.

கருத்துரை

பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.

–subham—

Tags- பேய்ச்சுரைக்காய், நாலடியார், செய்யுள், கிளி , கொக்கு,  ராம கிருஷ்ண பரமஹம்சர்பூனை, மஹாத்மா காந்தி, ஹே ராம்

இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்! (Post No.13,689)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.689

Date uploaded in London – 20 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்! 

ச. நாகராஜன் 

அறிவியல் முன்னேற்றத்தின் தாக்கம் அதிகம் ஆக ஆக அதற்கு ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் பெண்கள், தாங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று புரியாமல் இன்று தவிக்கின்றனர். 

பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இனிய மாலை நேரங்களில் பக்தர்களின் கேள்விகளுக்கு அன்னை பதில் அளிப்பது வழக்கம். 

ஒருநாள் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது லட்சியமாக இருக்க வேண்டும் என்ற வினா எழுப்பப்பட்டது. 

“சாதாரண வாழ்க்கையில் பெண்களுக்கு உடல் நலமும், சீரிய லயமுமே லட்சியமாக இருக்க வேண்டும்” என்றார் அவர். 

ஆனால் வேகமயமான இன்றைய உலகில் பெண்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு பெரிய இழப்புகள் அவர்களின் உடல் நலமும், சீரிய லயமுமே! எதிலும் டென்ஷன்! எங்கும் டென்ஷன்! 

தேவியே பெண்ணுருவம் கொண்டு இந்தியப் பெண்களுக்கு வழி காட்ட வந்தது என்று கருதப்படும் மா ஆனந்த மயி பெண்களைத் தம் அருகே இழுத்து அணைத்து வாழ்க்கையின் புதிய பரிணாமத்தைக் காட்டி புது அர்த்தத்தைத் தந்தவர். 

கமலா நேருவும் அவருடைய புதல்வி மறைந்த பாரதப் பிரதமர் இந்தியா காந்தியும் அடிக்கடி அவரை நாடி வருவது வழக்கம். அவர் மறைந்த போது ஹெலிகாப்டரில் டார்ஜிலிங் வந்து அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி. பெண்களை மிக நெருக்கமாகத் தம் அருகில் வரச்செய்வது, அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சரி சமமாக உயர முடியும் என்று உணர்த்துவது ஆகிய காரணங்களுக்காகவே அவர் பெண்ணாக உருக்கொண்டார் என்பது பக்தர்களின் எண்ணம்.

 இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண்மணி என்ன ஆன்மீக சாதனையை மேற்கொள்ள முடியும் என்று ஒரு பெண் கேள்வி கேட்ட போது அவர் எளிமையாக இரண்டே வார்த்தைகளில் பதில் தந்தார் – “சேவையும், ஜபமும்”. 

“தன்னலமற்ற சேவையைச் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் அர்ப்பண மனப்பான்மையுடன் செய்யுங்கள். இறைவனை நினைத்து ஒவ்வொரு பணியும் அவன் தந்த பல்வேறு வாய்ப்புகளே என்று நினைத்து அதில் ஈடுபடுங்கள்” என்றார் அவர்!

 இயற்கையின் சூழலில் இன்பமாக ஒரு காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் இன்று காலையில் தண்ணீருக்காக மோட்டார் ஸ்விட்சைப் போட்டு,  மாவு அரைக்க கிரைண்டரை இயக்கி, மிக்ஸியில் அரைத்து, டெலிபோனில் தான் கிளம்புவதை அறிவித்து, ஸ்கூட்டரில் ஏறி அலுவலகம் அடைந்து, லிஃப்டில் பரபரப்புடன் ஏறி, தன் இருக்கையில் கணினி முன்னே அமர்ந்து அதை டென்ஷனுடன் ஆன் செய்து இயக்க ஆரம்பிக்கிறார்கள். 

நாள் முழுதும் மெஷினுடன் போராடி மாலையில் வீடு திரும்பியவுடன் தொலைக்காட்சிப் பெட்டி முன்னே சீரியலுக்கு மீளாத அடிமை ஆகிறார்கள். கணவனுக்கு அடிமையாக இருப்பதா என்று ஒரு காலத்தில் போர்க்கொடி தூக்கிய இவர்கள் இன்று மெஷின்களுக்கும் டி.வி. சீரியல்களுக்கும் அடிமையாகி இருப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! இவர்களைப் பார்த்து மெஷின் வொர்ஷிப்பர்ஸ் என்று பிரபல கவிஞர் டி.எஸ். எலியட் கேலி செய்வதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை!

 ஶ்ரீ சத்ய சாயிபாபா, பெண்கள் தங்களின் லட்சியமாக உதயபாரதியைக் கொள்ள வேண்டும் என்று கூறி விளக்குகிறார்.

 சங்கரருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடந்த விவாதத்தில் மண்டனமிஸ்ரரின் மனைவியான உதயபாரதியே நடுவராக இருந்தார். பாரபட்சமற்ற தீர்ப்பு கிடைக்கும் என்று சங்கரரும் அதற்குச் சம்மதித்தார். 

:இந்த மாலைகளை அணிந்து கொண்டு வாதிடுங்கள். தோற்றவரின் மாலை வாடி விடும் என்று கூறி உதயபாரதி ஆளுக்கு ஒரு மாலையை வழங்கினார். வாதத்தைக் கவனித்தவாறே, அவர் தனது சமையல் வேலைகளையும் இதர வீட்டு வேலைகளையும் செய்து கொண்டே இருந்தார். 

மண்டனமிஸ்ரரின் மாலை வாடியது. அவர் தோற்றார். ஆனால் உதயபாரதி விடவில்லை. “அவரில் பாதி நான். ஆகவே என்னையும் ஜெயித்தால் தான் மறு பாதியையும் ஜெயித்து முழு வெற்றி அடைந்ததாக அர்த்தம் என்று கூறி, தானே களத்தில் இறங்கினார். 

சங்கரரிடம் அவர் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்க, பதில் அளிக்க அவர் யோசிக்க வேண்டியதாக இருந்தது. இறுதியில் ஞான சரஸ்வதியாக இருந்த உதயபாரதியை சங்கரர், ‘சாரதை’யாக உணர்ந்து வணங்கினார். 

சீரியல் வொர்ஷிப்பராக இருப்பதை விட்டு விட்டு உடல் நலம், வாழ்க்கையில் சீரிய நலம், சேவை, ஜபம் என்ற லட்சியங்களை ஏற்று புதுமைப் பெண்கள் உதயபாரதிகளாக மாறினால் புதிய பாரதம் உருவாகும், இல்லையா?! 

சினேகிதி மாத இதழில் 2003, நவம்பர் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை.

What can Parrots teach You? (Post No.13,688)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,688

Date uploaded in London – 19 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Ramakrishna Paramahamsa gives us a very good message though parrots. Hindus love parrots very much and all Brahmins in ancient India raised parrots as pets in their houses. Around 600 CE, the boy wonder of Tamil Nadu Tiru Gnana Sambandar sang about Brahmin houses where the parrots recited Vedas. The same message comes from Northern India. When Adi Shankara asked the women bathing in the Narmada river, the way to Mandana Mishra’s house in the city of Mahismati, they answered in Sanskrit verse thinking that the young man from Kerala would not understand anything. The ladies told him in verses go to the house where the parrots are reciting the Vedas; Shankara politely bowed and thanked them and went his way.

In Sangam Tamil Literature we see the great Brahmin poet Kabilan training the  parrots to bring grains from faraway places, because the three mighty kings Chera, Choza, Pandyas laid a siege around Chieftain Pari’s kingdom.

Generally, parrots are always projected in good light. Women are named after parrots and Anjukam is a very common name. Women are compared to girls in Sangam Tamil Literature. But Ramakrishna Paramahamsa gives a good message:

Even at the time of death the ‘bound souls. speak of worldly matters only. There is no use in visiting places of pilgrimage, or bathing in holy Ganges or counting beads; if there are worldly attachments  in the heart they are sure to manifest themselves at the dying moment. Hence ‘bound souls indulge in random talks even at that time.  A parrot may ordinarily sing the holy name of Radha Krishna, but when it is attacked by a cat, it cries out Kang Kang – its natural cry.

( The moral is ‘always recite God’s name’)

Learn Silence; Don’t be a Parrot!

Another Sanskrit poet asks us to think why parrots are caged and not the Cranes. Because parrots always speak, people cage them and enjoy their talks. Cranes are very quiet, and they never talk but concentrate in its task of catching fish. If You learn silence, you will never be caught. It is very true. If you got jails, you can see many prisoners who came in to it because of their bad talk.

Here is the couplet

Atmano mukha doshena badhyante suka saarikaa

Bakas tatra na badhyante maunam sarvaartha saadakam

The parrots got caged because of their talkative nature; whereas the cranes/herons not caged; so silence is always an advantage.

–subham—

Tags – parrot, cat, crane, heron, silence, talkative, Ramakrishna Paramahamsa, bound souls.

இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க் (Post.13,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,687

Date uploaded in London – 19 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்துமதத்தைப் பாராட்டிய பார்த்தலோமேயஸ் சீகன்பால்க்

இதற்கு முன்னர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் , கார்ல் கிரவுல் ஆகிய இரண்டு ஜெர்மானியர்கள்,  இந்தியாவில் தமிழ், சம்ஸ்க்ருதத் துறைகளில் ஆற்றிய பணிகளைப் பார்த்தோம் . இதோ மூன்றாவது ஜெர்மானியர்

பார்த்தலோமேயஸ் சீகன்பால்க்

BARTHOLOMAEUS ZIEGENBALG 1682-1719 PROTESTANT

பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் , கிறிஸ்தவ மத்ததை பரப்புவதற்காக  இந்தியாவுக்கு வந்த முதல் ப்ராட்டஸ்டண்ட் PROTESTANT பிரிவு கிறிஸ்தவ  பாதிரியார் ஆவார் . அவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் அவர் பிரசாரம் செய்தார்  அவர் தமிழ் மொழியைக் கற்று பல நூல்களை ஜெர்மன் மொழி மொழியில் கொடுத்திருப்பார். அவர் 10-7-1682ல் பிறந்த இடம் சாக்சனி வட்டாரத்திலுள்ள பல்சனிட்ஸ் Pulsnitz, Saxony, ஆகும்.

அவருடைய தந் தை பணக்கார தானிய வர்த்தகர். இதனால் நல்ல கல்வி கற்று ஹால் HALLE  பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஆனால் உடல் நலம் குன்றியதால் படிப்பைத்  தொடர முடியவில்லை. பின்னர் தனியாக ட்யூட்டர் வேலை செய்தார்.

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜா,  DANISH EAST INDIA COMPANY

டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு தரங்கம்பாடி வட்டாரத்தை டென்மார்க் ராணுவம் தங்குவதற்கு குத்தகைக்கு விட்டிருந்தார். டென்மார்க்- நார்வே மன்னரான நாலாவது பிரெடெரிக் மன்னர் அங்கு கிறிஸ்தவ பிரசாரகர்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார் ; இளம் வயதினரான சீகன்பாலக்கை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார். அவர் 7 மாதங்களுக்கு கடற்பயணம் செய்து தரங்கம்பாடிக்கு வந்தபோது காலனி அதிகாரிகள் அவரை எதிர்த்துப் போராடினர். அவரை 4 மாதங்களுக்கு சிறை வைத்தனர்.  1709 ம் ஆண்டில் விடுதலை  ஆனவுடன் அனாதைச் சிறுவர் இல்லம் , பள்ளிக்கூடம் ஆகியவற்றைத் துவக்கினார். தமிழ் அச்சகம் ஒன்றையும் அமைத்தார் அப்போது போர்ச்சுகீசிய மொழி ஐரோப்பிய தொடர்பு மொழியாக இருந்ததால் அதைக் கற்றார்.     

தமிழ் அகராதிக்கான சொற்களை சேகரித்து, லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தைக் எழுதினார் 1716ஆம் ஆண்டில் GRAMMATICA DAMULICA  நூல் வெளியிடப்பட்டது.

தென்னிந்திய கலை, கலாசாரத்தை அறிந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிடுவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தார் 

இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க்

ஒரு கடிதத்தில் அவர் எழுதுகிறார்- “இந்துமத போதனைகளை அதிகமாகக் கற்கக்கற்க அவை என்னை மிகவும் கவர்ந்து வருகின்றன. அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர் நூல்களை கற்ற பலன்கள், இந்துமத நூல்களை  கற்பதம் மூலம் கிடைக்கும்”.

உடனே ஜெர்மானிய கிறித்தவ அதிகாரி பதில் எழுதினார்

உமது வேலை ஐரோப்பாவில் இந்து ததைதப் பரப்புவது அல்ல, உமது வேலை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே ; நினைவிற் கொள்க .”

இதன் காரணமாக சீகன் பால்க் எழுதிய புஸ்தகங்களையும் கட்டுரைகளையும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவர்கள் அச்சிடவில்லை.  அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அவர் எழுதிய அரிய பெரிய உண்மைகளை அறிந்து வியப்புற்றனர் .

சீகன்பால்க்குக்கு சிறுவயது முதலே கடுமையான நரம்பு நோய் இருத்தது. இதனால் 36 வயதானபோதே 2-2-1719 ல் இறந்தார் சென்னையில் 1867-ல்தான் அவரது முக்கிய நூல் GENEALOGIE DER MALABARISCHEN GOETTER= GENEALOGY OF SOUTH INDIAN  GODS: A MANUAL OF THE MYTHOLOGY  AND RELIGION OF THE PEOPLE OF SOUTHERN INDIA வெளியிடப்பட்டது  அதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு 1869-ல் வெளியானது

அவைகளில் சீகன்பால்க் சொல்கிறார்

எல்லாக் கடவுளரின் தோற்றம், அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களின் பல பெயர்கள், அவர்களுக்குள்ள பொறுப்புகள், கடவுளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் வசிக்கும் இடங்கள், அந்தக் கடவுளர் செய்யும் பணிகள் ஆகிய எல்லாவற்றையும் இந்துக்கள் எழுதி வைத்துவிட்டார்கள்.  அவர்கள் குடிகொண்டுள்ள கோவில்கள், அவர்களை வணங்கிய சாது சந்யாசிகள், விழாக்கள் ஆகியவற்றையும் எழுதிவிட்டனர்.

இப்படி அவர் எழுதியதால் மேலை உலகத்துக்கு தமிழ் மொழியில் உள்ள இந்து மதத்தை, முதல் தடவையாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னர் சம்ஸ்க்ருத வேத உபநிஷத்துக்களைத் தான் மேலை உலகம் ஐந்தித்து இருந்தது.

மலபார் வட்டார கிறித்தவரல்லாத /இந்து உலகம் என்ற தலைப்பில் AUSFUEHELICHE BESCHREIBUNG DES MALABARISCHEN  HEIDENTUMS = COMPLETE DESCRIPTION OF MALABAR HEATHENDOM .அது ஆங்கில த்தில் வெளியானது ஆனால் அது 1926 ஆம் ஆண்டில்தான் வெளியானது அதை டச்சு மொழி அறிஞர் காலண்ட் W. CALAND   வெளியிட்டார். இதன் முதல் பகுதியில் தெய்வத்தமிழ் மொழியிலுள்ள தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன  இரண்டாவது பகுதியில் இந்துமத சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் உள்ளன. வரலாறு, ஜாதி, சடங்குகள், சாப்பிடும் முறை, மருத்துவம் ரசாயனம், இரும்பைத் தங்கம் ஆக்கும் முறைகளை அவர் குறிப்பிடுகிறார்.

1930 ஆம் ஆண்டில் W.காலண்ட்/ W. CALAND    வெளியிட்ட பதிப்பில் நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய அவரது மதிப்பீடுகள் கருத்துக்கள் ஆகியன அவரது கடிதங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் உள்ளன  KLEINERE SCHRIFTEN= MISCELLANEOUS WRITINGS

அவைகளும் புஸ்தகமாக வெளிவந்துவிட்டது

மலபாரில் கிறிஸ்தவ மதம் இல்லாத சமயம் என்ற MALABAR HEATHENDOM அவரது புஸ்தகம் 1965ம் ஆண்டில்தான் கிடைத்தது

இந்திய மதம் பற்றிய அவரது அபார அறிவினை இதுவரை உலகம் போற்றவில்லை.

அவர் மாட்டும் ஜியூ பாப் போல 80 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து இருந்தால் தெய்வத்தமிழ் நூல்கள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் செய்திருப்பார்; நமது துரதிருஷ்டம் அவர் 36 வயதில் விண்ணுலகை அடைந்தார்.

அவரது ஜெர்மன் மொழி நூல்களை நாம் தமிழில் மொழிபெயர்த்து இந்துமதத்தின் பெருமையை மீண்டும் போற்றலாம்.

–SUBHAM—

TAGS – பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் ,BARTHOLOMAEUS ZIEGENBALG , W. CALAND, BOOKS, GERMAN, TAMIL SCHOLAR, ஜெர்மன் மொழி, தமிழ் நூல்கள்

அப்பாவைப் போல மகன்! வீட்டில் ஜாக்கிரதையாகப் பேசுங்கள்!! (Post No.13,686)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,686

Date uploaded in London – 19 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு நகைச் சவை படைபினைப் படித்தேன் ; அது மிகவும் உண்மை ; லண்டனில் கிழக்குப்பகுதிக்கு வந்தால் வெள்ளைகாரச் சிறுவர்களும்கூட F சொற்களை சர்வ சாதாரணமாய் பகர்வார்கள் ; வீட்டில் கணவனும் மனைவியும் பேசுவதன் எதிரொலி இது.

மனம், மொழி, மெய்

உபநிஷத்தில் எட்டு கோணல் என்ற பெயருடைய ரிஷியைச் சந்திக்கிறோம். வீட்டில் அப்பா, வேதத்தைத் தப்பும் தவறுமாக உச்சரித்ததால் அஷ்ட வக்ரத்துடன் பிறந்தார் அஷ்டா வக்ர மகரிஷி. ஆக நாம் பேசும் பேச்சுக்கள் சிறுவர்களின் மனோ , வாக், காயம் என்ற மூன்றையும் பாதிக்கின்றன இதனால்தான் கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்; அங்கே மாமியாரின் வசை மொழிகள் இரா. அம்மாவின் அன்பான அருள் மட்டுமே இருக்கும் மாமியார் உடைத்தால் மண்கலம்மருமகள் உடைத்தால் பொன்கலம் என்ற பழமொழியை நாம் அறிவோம்.

****

இதோ நான் படித்ததில் பிடித்தது:

பையன் அப்பாவிடம் சொன்னான் : அப்பா! உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்; நீ ஸ்கூலுக்கு வரணும் .

எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?

கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க .

ஒன்பத ஏழால 9x 7 பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ;

 நான் 63-னு சொன்னேன் .

சரி ……. அப்புறம் ?

ஏழ ஒன்பதால 7×9 பெருக்கினா என்ன வரும்னு  கேட்டாங்க

அதே எழவுதானே வரும்னு சொன்னேன்  உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க.

சரி சரி நாளைக்கு வரேன், போ  .

****

அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்

அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரை  பார்த்தியா?

இல்லடா, நாளைக்கு வரேன்

சரி, நாளைக்கு  கணக்கு டீச்சரை  பார்த்துட்டு அப்படியே  P.T. டீச்சரையும்  பார்த்துடு.

எதுக்குடா?

ட்ரில்/ DRILL  நடந்தது; முதல்ல வலது கையைத் தூக்கச் சொன்னாரு; அதைச் செஞ்சேன்  ; அப்புறம் இடது கையைத் தூக்கச் சொன்னாரு; அதையும்  செஞ்சேன் ; ரெண்டு கையையும் தூக்கிட்டு வலது காலையும்  தூக்கச் சொன்னாரு; தூக்கினேன்  அப்புறம் இடது காலத் தூக்கச் சொன்னாரு.

ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசா அவன்? சரி நீ என்ன பண்ண ?

ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசான்னு வாத்தியாரைக் கேட்டேன்

உங்க அப்பாவைக் கூட்டிட்டு வான்னு சொன்னார் ..

சரி சரி நாளைக்கு வந்து பாக்கறேன்.

****  

அடுத்த நாள்  அப்பாவிடம் கேட்டான்

அப்பா ஸ்கூலுக்கு போனியா?

இல்லடா நாளைக்கு வரேன் .

போக வேண்டாம்பா ; என்ன ஸ்கூலிலிருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.

என்னாச்சுடா ?

பிரின்சிபால் ரூமுக்கு வரச் சொன்னார்.

அங்கு கணக்கு டீச்சர் , பி.டீ. டீச்சர் ,  சயன்ஸ் டீச்சர் மூன்று பேரும் இருந்தாங்க.

சயின்ஸ் டீச்சரா! அந்த நாய் ஏன் அங்க வந்தான்?

அதேதான்பா நானும் கேட்டேன்.  டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க .

****

நீதி : குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை; கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.

–SUBHAM—

TAGS- அப்பாவைப் போல மகன்,  வீட்டில்,  ஜாக்கிரதை,  பேசுங்கள்!! டிஸ்மிஸ், பையன்

பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 2 (Post No.13,685)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.685

Date uploaded in London – 19 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

உலகெங்கும் ஒலிக்கும் இன்னிசைக் குரல்!

பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 2

 இசையே தெய்வம்

லதா  மங்கேஷ்கருக்கு இசை ஒரு தொழில் அல்ல; அதுவே அவருக்கு தெய்வம்! இசையை கடவுளின் குரல் என்றார் அவர். அவரது அற்புதமான குரலைக் கேட்ட ரசிகர்கள் அவரது பாடல் இடம் பெற்ற படங்களை வெற்றிப் படங்களாக்கினர்.

ஒரு நாளைக்கு பத்துப் பாடல்களை ரிகார்ட் செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்தார்; அதற்கான கடும் உழைப்பையும் பயிற்சியையும் அவர் விருப்பத்துடன் மேற்கொண்டார்.

பஜனை, கஜல்கள் ஆகியவற்றுடன் சிக்கலான இசை அமைப்புகள் கொண்ட பாடல்களை அவர் அனாயாசமாகப் பாடினார். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அவர் தன் குரல்வளத்தால் மெருகேற்றினார்.

தொடர்ந்து பல பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றார்.

மராத்தி, ஹிந்தி மொழிகளில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்கிலம், ரஷிய மொழி உள்ளிட்ட இருபது மொழிகளில் அவர் பாடியுள்ளார்..

 ஆகப் பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், சலில் சௌத்ரி, ஆர்.டி.பர்மன், சங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா உள்ளிட்ட அனைத்து இசை அமைப்பாளர்களும் அவரை விரும்பி வரவேற்றுப் பாட வைத்தனர். அதே போல சிறந்த பாடலாசிரியர்களான குல்ஜர், ஷகீல் பதாயுனி, ஆனந்த் பக்‌ஷி உள்ளிட்டோரும் அவர் திறமையை உணர்ந்து பாடல் வரிகளை அமைத்துப் புகழ் பெற்றனர்.

புகழ் பெற்ற பாடகர்களான மன்னா டே, முகேஷ், ஹேமந்த் குமார், முகம்மத் ரஃபி, கிஷோர் குமார் உள்ளிட்டோருடன் அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக ஆகி விட்டன!

லதாவே பாடல்களை இயற்றியுள்ளார்; இசைஅமைப்பாளராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 குடும்பம்

லதா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். ஆனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்தார்.

 ராஜ்ய சபா உறுப்பினர்

1999-ல் அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கென அவர் சம்பளத்தையோ டெல்லியில் தரப்படும் வீட்டையோ பெறவில்லை.

 பாரத் ரத்னா

ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் அவர் பெற்றார். 1969-ல் பத்ம பூஷன் விருதையும் 1999-ல் பத்ம விபூஷன் விருதையும் அவர் பெற்றார்.

 2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.

 ஏழைகளுக்கு உதவி

2001-ல் அவர் புனாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை நிறுவி ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். காஷ்மீரில் 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டொருக்கு அவர் நிதி உதவி அளித்தார்.

 எத்தனை பாடல்களை அவர் பாடினார்?

லதா எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பற்றிய தொடர் விவாதம் கின்னஸ் ரிகார்ட் 25000 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்று தெரிவித்ததை ஒட்டி எழ ஆரம்பித்தது.

லதாவோ தான் பாடிய பாடல்களுக்கான எண்ணிக்கை குறிப்பைத் தான் குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.

சிலர் 20000 பாடல்கள் என்று சொல்ல இன்னும் சிலரோ 30000 பாடல்கள் என்று சொல்ல இந்த விவாதம் தொடர் விவாதமாக ஆகி விட்டது!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; ஏராளமான நாடுகளில் அவர் குரல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.

அவரது பாடல்களைக் கேட்டு தங்களின் அபிப்ராயத்தைத் தெரிவிப்போர் மிகுந்த மன நெகிழ்வுடன், “இது சிறு வயதில் நான் கேட்ட பாடல்; இன்னும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்து விட்ட எனது தாயாரின் நினைவு வருகிறது” “இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தமானது; இதைப் கேட்காமல் அவர் உறங்க மாட்டார்”, ‘எனக்கு பாடப்படும் பாடலின் மொழி தெரியாது, ஆனால் இந்த இனிய குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்’ என்பன போன்ற ஆயிரக்கணக்கான விமரிசனங்களைப் பதிவிடுகின்றனர் – இன்றும் கூட! (யூ டியூபில் காணலாம்)

 பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வாழ்வில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இசை ராணி அவர் என்பதில் ஐயமே இல்லை!

 மறைவு

2022-ல் ஜனவரி மாதம் 8-ம் தேதி அவருக்கு கோவிட் -19 நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு  அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

2022 பிப்ரவரி 6-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 92.

பல நாடுகளின் பிரதம மந்திரிகள்,மற்றும் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.

மும்பையில் அவரது இறுதிச் சடங்கை அவரது சகோதரர் செய்ய, அரசு மரியாதையுடன் உடல். எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி கோதாவரி நதியில் கரைக்கப்பட்டது.

 அனுபவ மொழிகள்

தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறிய பொன்மொழிகள் பல:

அவற்றில் சிலவற்றைக் காணலாம்:

 ஒவ்வொரு பாடலிலும் எனது ஒரு துளி உள்ளது. எனது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள் ஆகியவற்றின் ஒரு சிறிய பகுதி உள்ளது.,

 பாடுவது என்பது எனது தொழில் மட்டுமல்ல; அது எனது உயிர்; அது எனது வாழ்க்கை முறை!

 இசைக்கு எல்லைகளே இல்லை; அது ஆன்மாவின் மொழி!

 சூரியனுக்கு முன் அகல் விளக்கு பிடிப்பது போல!

 ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான கிஷோர் குமார் லதாவைப் பற்றி மிகச் சரியாக இப்படிக் கூறினார்:

 “லதா மங்கேஷ்கரைப் புகழ்வது என்பது சூரியனுக்கு முன் அகல் விளக்கைக் காட்டுவதைப் போலத் தான்!”

 இந்த அவரது கூற்று பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரைப் பற்றிய சரியான விளக்கம் தான், இல்லையா!

**

தமிழ் நாய்களும் ஷேக்ஸ்பியர் நாய்களும் பட்டபாடு! –6

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,684

Date uploaded in London – 18 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

தமிழ்சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- நாய்

நாய் பட்டபாடு  என்று கஷ்டபடுவோர் சொல்லும் வசனத்தைக் கேட்டுள்ளோம் ; தமிழர்களின் கைகளிலும் ஷேக்ஸ்பியர் கையிலும் நாய்க்கும் அந்த கதிதான். நாய் நன்றியுள்ள பிராணி ; அதைச் சொல்லாமல் டச் சீ நாயே என்று நாயையே திட்டுகிறார் ஷேக்ஸ்பியர்; அவரது நாடகங்களிலும் அவர் எழுதிய 14 வரி SONNET  பாடல்களிலும் 200 முறைகளுக்கு மேலாக இ;ப்படி திட்டுகிறார்; மட்டம் தட்டுகிறார். மாணிக்கக்கவாசகரோ தன்னைத்தான் நாயேன் என்று திருவாசகத்தில் அறுபதுக்கும் மேலான தடவை மட்டம் தட்டிக்கொண்டார். தென்  கொரியர்களோ ஆண்டுக்கு பத்து லட்சம் நாய்களை அடித்து க்கொன்று டின்னர் டேபிளுக்கு கொண்டுவருகிறார்கள் . ஆனால் நாம் காந்திஜீ சொல்லியும் கூட அவரைப்  புறக்கணித்து தெருநாய்களை இன்று வரை கொல்ல வில்லை. ஆனால் திட்டுவதை நிறுத்தவவில்லை.; நாலடியார், நீதிவெண்பா, திருமந்திரப்பாடல்களில் இதைக் காண்கிறோம் முதலில்  ஷேக்ஸ்பியர்  வசைமாரி பொழிவதைக் காண்போம்.

ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாளர் 271 முறை  நாய்களை அவர் பயன்படுத்தி இருப்பதையும் இருமுறை அவரது நாடகங்களில் மேடையில் நாய் தோன்றியதையும் எழுதியுள்ளார்

 “Whoreson dog” (Cymbeline, King Lear, and Troilus and Cressida); இது நிந்தனைக்குரிய முறையில் நாயை அழைப்பதாகும்

****

“Slave, soulless villain, dog” (Anthony & Cleopatra); அட அடிமையே ஆத்மா இல்லாத எதிரி நாயே!!

****

“egregious dog? O viper vile!” (Henry V); மட்டமான ஐந்துவே , பாம்பே !

****

“cut throat dog” (Merchant of Venice); to name just a few.கருணையற்ற  நாய்!

****

மூன்றாவது ரிச்சர்ட் கொல்லப்பட்டபோது ,

“God and your arms be praised, victorious friends,/ The day is ours, the bloody dog is dead.”

கொலைகார நாய்ப்பயல் செத்தான்! என்ற வசனம் வருகிறது.

*****

:From Two Gentlemen of Verona Act 2

SCENE III. The same. A street.

Enter LAUNCE, leading a dog

LAUNCE: […] I think Crab, my dog, be the sourest-natured

dog that lives: my mother weeping, my father

wailing, my sister crying, our maid howling, our cat

wringing her hands, and all our house in a great

perplexity, yet did not this cruel-hearted cur shed

one tear: he is a stone, a very pebble stone, and

has no more pity in him than a dog: [… and on and ஒன

எல்லோரும் கதறி அழுகிகிறார்கள்  ; இந்த நாய் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதா ? அது கல்லு சரியான கூழாங்கல்லு ; நாய்தானே

*****

அதே ஜென்டில்மேன் ஆப் வெரோனா நாடகத்தில் வரும் நகைச் சுவைக் காட்சியில் அந்த நாயை அடிதூக்கில் தொங்க விட்டு என்று திரும்பத்திரும்ப பேசி மகிழ்கிறார்கள்; அதில் கிராப் / நண்டு என்பது நாயின் செல்லப்பெயர்

“all the chamber smelt him. ‘Out with the dog!’ says

one: ‘What cur is that?’ says another: ‘Whip him

out’ says the third: ‘Hang him up’ says the duke.

I, having been acquainted with the smell before,

knew it was Crab, and goes me to the fellow that

whips the dogs: ‘Friend,’ quoth I, ‘you mean to whip

the dog?’ ‘Ay, marry, do I,’ quoth he. ‘You do him

the more wrong,’ quoth I; ”twas I did the thing you

இவ்வாறு பல நூறு முறை நாயை இகழ்கிறார்  .

****

நம்ம திருமூலரும் சளைக்கவில்லை

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

பிரணவ மந்திரத்தைக் கற்பித்த குருவை அவமதிப்போர் 100 முறை நாயாகப் பிறந்து புலையணைக்கப் பிறந்து அழிவார்கள்

****

 சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 43

சக்தி என்பவள் சாதகனின் கடவுள்முக்திக்கு வழிவகுப்பதும் அவள்தான். அதை அறியாமல் வழிபடும் பாவிகள்அடிபட்ட நாய் போல ஓலமிடுவார்கள்

****

பழமொழிகளோ நாய்களை மட்டம் தட்டுகின்றன

நாய் பற்றிய பழமொழிகள்

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? …

அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது (மலையாளப் பழமொழி)

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு …….யைத் தின்னத்தான் போகும்

****

From my Old Post

கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி

கதை கேட்ட நாயை ……………. அடி!

Article No.1756; Date:- 29  March, 2015

Written by London Swaminathan

பழமொழிக் கதை!

ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, மே மாதம்- 1900—ஆம் ஆண்டு

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து வெளியான பழைய பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்ததில் சில சுவையான கதைகள் கிடைத்தன. எனது சொந்த நடையில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகிறேன்

ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.

ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.

அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.

பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.

இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.

இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.

அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.

இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!

—subham—-

Tags- நாய் , ஷேக்ஸ்பியர், தமிழர்கள் , திருமூலர், கதை கேட்ட நாயை , பழமொழிகள் , வசைமாரி, தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 6 நாய்