விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14 (Post.13,404)
க்ஷோபன — நாம எண் 374
படைப்பு நடந்த காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது.
ப்ரக்ருதிம் புருஷம் சைவ பிரவிஸ்யாத்மேச்சயா ஹரிஹி
க்ஷோபயாமாச பகவான் சர்க்க காலே வ்யயாவ்ய செள
இதை 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த மாபெரும் பிரபஞ்ச வெடிப்புடன் ஒப்பிடலாம் .
பிக் பேங் (BIG BANG ) என்பதை விளக்கும் விஞ்ஞானிகள் அது ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க முடியவில்லை
xxx
இன்னும் ஒரு அற்புத விளக்கம்
ஸனாத் – நாம எண் 896
அநாதியான கால ரூபியாக இருப்பவர்
இது நீண்ட காலத்தைக் குறிக்கும் என்கிறார் சங்கரர். இதுவும் இறைவனின் ஒரு அம்சம்
விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது –
பரஸ்ய ப்ரஹ்மனோ ரூபம் புருஷஹ பிரதமம் த்விஜ
வ்யக்தா வ்யக்தே ததைவான்யே ரூபே கால்சத்ததா பரம்
பொருள்
ஓ முனிபுங்கவர்களே !பரம்பொருளின் முதல் வடிவம் புருஷன்.; ஏனைய அனைத்தும் அதிலிருந்து உண்டானவையே . காலம் என்பதும் அதன் ஒரு வடிவமே
இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு புராணம் காலம் பற்றிப் பேசுவதாகும் . உலகில் எந்த சமய இலக்கியமும் மிகப் பெரிய எண்ணான யுகம் – 4,32,0000 ஆண்டுகள் — பற்றிப் பேசுவதில்லை ; இந்து மதமோ சஹஸ்ர கோடி யுகங்கள் பற்றிப் பேசுகிறது. மேலை உலகில் காலம் பற்றி விளக்கிய ஐன்ஸ்டைன் , காலம் என்பது நாலாவது பரிமாணம் என்று சொல்லி நீள , அகல, உயரத்துடன் காலத்தையும் சேர்த்தே பேச முடியும்; அதைப்பிரிக்க முடியாது என்கிறார் எங்கே இருக்கிறீர்கள் என்பதை எப்போது இருக்கிறீர்கள் என்று சேர்த்தே சொல்லமுடியம் என்றார் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதம் சொல்லிவிட்டது. அதி உயத்தில் ஆகாசத்தில் மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் SPACE STATION பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; அங்கு இரவு பகல் என்பதே கிடையாது ; நம்முடைய நாள், கிழமை, தேதி ஆகியவையும் செல்லாது. ஏனெனில் பூமியை ஒரே நாளில் பலமுறை வலம் வந்து விடுவார்கள் அவர்கள் கிழமை பற்றி என்ன சொல்ல முடியும் ?
சந்திரனில் ஒருவர் வீடு கட்டி வசித்தால் நம்முடைய காலண்டர்கள், பஞ்சாங்கங்களால் அவருக்குப் பயன் இல்லை; அவர் இருக்கும் இடத்தைச் சேர்த்துச் சொன்னால்தான் நாம் அவரை அறிந்து கொள்ளமுடியும். காலம் என்பது பிரிக்க முடியாத நாலாவது பரிமாணம்
xxxx
காலஹ — நாம எண் 418
எல்லாவற்றையும் எண்ணுகிறவர் ; காலஹ கலயதா-மஹம் – கீதை 10-30
அதாவது எல்லாவற்றையும் அளந்து அதற்கு வரையறை நிர்ணயிப்பர்.
பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்..
அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார்.
காலம் பற்றி சிந்திப்பதும் அதை சங்கரர் போன்றோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விளக்குவதும் அறிவியல் முன்னேற்றத்தைக் காட்டுகிறது .
xxxxx
கேசவஹ — இந்த நாமம் இரு முறை வருகிறது- எண் 23 மற்றும் 648
நல்ல அழகிய கேஸம் / தலை முடியுள்ளவர் என்பது எல்லோரும் அறிந்த விளக்கம்; சங்கரர் வேறு ஒரு அற்புத விளக்கத்தையும் தருகிறார் .
க -என்னும் பிரம்மனும், அ -என்னும் விஷ்ணுவும் ஈச என்னும் ருத்ரனும் எவருக்கு வசமாகியவர்களோ அவர்தான் கேசவர்.
அம்ஹாவோ ஏ ப்ராகாஸந்தே சா மாமா தே கேச சம்ஜ்நீ னிதாஹா
சர்வஞாஹா கேஸவம் தஸ்மான் மாம் ஆஹுர் த்விஜசத்தமாஹா—
, பொருள்
என்னுடைய ஒளிவீசும் அங்கமெல்லாம் கேசம் எனப்படும். இதை அறிந்த புனிதர்கள் என்னை கேஸவ என்று அழைக்கிறார்கள்.
மஹா பாரதம், அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சம் மற்றும் வேதத்திலிருந்து சங்கரர் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார் . கூகுள் இன்டெர்னட் GOOGLE or INTERNET வசதிகள் இல்லாத காலத்தே ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேற்பட்ட மஹாபாரதம் முதலியவற்றிலிருந்தும் எட்டு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேற்பட்ட 18 புராணங்களிலிருந்தும் சங்கரர் எடுத்துக்காட்டுவது அபார ஞாபக சக்தியைக் காட்டுகிறது .
(நான் இங்கு எல்லா ஸ்லோககங்களையும் தரவில்லை)
–sunbham–
tags- விஷ்ணு சஹஸ்ரநாம , அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
இமயமும் இராமாயணமும்! – 1
ச .நாகராஜன்
“மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநில மீதிது போல் பிறிதிலையே”
என்று மகாகவி பாரதியார் பெருமிதத்துடன் பாடிப் புகழும் இமயமலை உலகின் ஆகப் பெரும் பெரிய மலைத் தொடர். குமார சம்பவத்தில் மகாகவி காளிதாஸன் ‘மானதண்டம்’ என்று பூமியை அளக்கும் அளவு கோல் என்ற பொருளில் கூறிப் புகழ்கிறான்.
2500 கிலோமீட்டர் நீளமும் 350 கிலோமீட்டர் அகலமும் கொண்டது இமயமலைத் தொடர். உலகின் உயரமான சிகரத்தைக் கொண்டது இமயம். 17 பெரிய கணவாய்களைக் கொண்டது இமயத் தொடர். 16500 அடி முதல் 18800 அடி உயரம் வரை இவை அமைந்துள்ளன!
பாரத தேசத்தின், அறநூல்கள் புகழும் இந்த மலை ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.
ராமாயணத்தின் முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, ஜனகர், லஷ்மணன், வசிஷ்டர், ராவணன், அனுமார், ஊர்மிளை என ஏராளமான பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டது இமயம்.
அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் சில சம்பவங்களையும் இடங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சீதா தேவி அவதரித்த மிதிலை
மிதிலா நகரம் வேத காலத்தைத் தொடக்கமாகக் கொண்ட பழம் பெரும் நகரம். நேபாளத்தின் தெற்கே கமலா நதிக்கரையில் எழில் கொஞ்சும் இமயமலை சுற்றி வடக்கில் இருக்க தெற்கே கங்கா நதி ஓட அமைந்துள்ள நகரம் இது. இப்போது பீஹார் மற்றும் நேபாளப் பகுதிகளைக் கொண்ட இடம் மிதிலா நகரம். பிரிட்டிஷார் அரசாண்ட காலத்தில் இது இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்ததாகப் பிரிக்கப்பட்டது.
மைதிலி மக்கள் வாழும் இடம் இது என்றும் இவர்கள் மொழி மைதிலி என்றும் அறியப்படும்.
இப்போதைய இந்தியப் பகுதியில் மதுபானி, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன் சீதாமதி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன.
72 கோடி ரூபாய் மதிப்பில் சீதை அவதரித்த இடமான சீதாமர்ஹியில் ஒரு பெரும் ஆலயம் அமைப்பதற்கான திட்டத்தை பீஹார் அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
மிதி என்ற அரசன் மிதிலாபுரியைத் தோற்றுவித்தான் என்றும் அவன் தனது தந்தையின் உடலிலிருந்து தோன்றியதால் ஜனகன் என்றும் அழைக்கப்பட்டான் என்றும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன. இதை விதேகம் என்று யஜூர்வேத சம்ஹிதை குறிப்பிடுகிறது. மிதிலை என்று ராமாயணமும் மஹாபாரதமும் குறிப்பிடுகிறது.
ராமாயண இதிஹாஸம் கூறும் சீதையின் அவதார தோற்றம் அனைவரும் அறிந்ததே.
மிதிலையை ஆண்ட ஜனக மன்னன் ஒரு நாள் பூமியில் புதைந்திருந்த பெட்டியைக் கண்டெடுக்க அதில் இருந்த சீதையைக் கண்டு சீதையை வளர்க்க ஆரம்பித்தார். உரிய பருவத்தில் சிவ தனுசை விஸ்வாமித்திர மஹரிஷியுடன் வந்த ராமர் முறிக்கவே சீதையை மணம் புரிந்தார்.
சீதைக்கு ஜனகரின் மகள் என்பதால் ஜானகி என்ற பெயரும் மிதிலையில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் விதேக தேசத்து ராஜகுமாரி என்பதால் வைதேகி என்றும் பூமியில் அவதரித்ததால் பூமிஜா என்ற பெயரும் இப்படிப் பல பெயர்கள் உண்டு.
சீதையின் சரித்திரம் சொல்லும் மகத்தான இதிஹாஸம் ‘சீதாயா சரிதம்’ என்று கூறப்படும். அனைவரும் அறிந்த பெயர் ராமாயணம்.
சீதா தேவி பிறந்த இடமாக பக்தர்கள் இரு இடங்களைக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர்.
ஒன்று நேபாளத்தில் உள்ள ஜனக்பூர். இங்குள்ள ஜானகி மந்திர் மிகவும் பிரசித்தமானது. சீதை தோன்றிய இடமாக கருதப்படும் இந்த இடத்தில் மிகப் பெரும் ஆலயமாக ஜானகி மந்திர் திகழ்கிறது. ராம நவமி உள்ளிட்ட விழா நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி வழிபடுகின்றனர்.
அடுத்து ராமருக்கும் சீதைக்கும் விவாகம் நடந்த இடமாக உள்ள ராம-ஜானகி விவாஹ் மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். விவாஹ பஞ்சமி அன்று (நவம்பர் – டிசம்பரில் வருகின்ற சுக்ல பக்ஷ ஐந்தாம் நாள்) ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். அற்புதமான வேலைப்பாடு கொண்ட மண்டபம் இது.
பீஹாரில் உள்ள சீதாமர்ஹியும் சீதையின் பிறந்த இடமாக கருதப்படுவதால் இங்கும் பக்தர்கள் ஏராளமாகத் திரள்கின்றனர்.
ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் ஆலயம்
ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் மஹாதேவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம். இதைப் பற்றிய தல வரலாறு ஒன்று உண்டு. ராம-ராவண யுத்தம் முடிந்த பின்னர் அயோத்தி திரும்பிய ராமர் போரில் இறந்தவர்களுக்காக பிராத்தனை புரிய இங்கு வந்தார். ஆயிரம் தாமரை மலர்களால் இங்குள்ள சிவனை அவர் தினமும் அர்ச்சிக்க ஆரம்பித்தார். ராமரை சோதிக்க எண்ணிய சிவபிரான் ஒரு நாள் ஒரு தாமரை மலரை மறைந்து போகச் செய்தார். ராமர் மனம் தளரவில்லை. தனது ஒரு கண்ணை மலருக்குப் பதிலாக அர்ச்சிக்க எண்ணினார். கண்களை எடுக்க இருந்த தருணத்தில் தோன்றிய சிவபிரான் அவரைத் தடுத்து ஆட்கொண்டார். இந்தக் கணம் முதல் ராமரை கமலநயனன் – தாமரைக் கண்ணன் என்று உலகம் போற்றி அழைக்க ஆரம்பித்தது. இந்தக் கோவிலில் இன்றும் அனைத்து பக்தர்களும் ஒன்று கூடி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
குமாவோன்
இமயமலைப் பகுதியில் உள்ள வியக்க வைக்கும் பிரதேசம் குமாவோன்.
குமோவான் காடுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஜிம் கார்பெட் (பிறப்பு 25-7-1875 மறைவு 19-4-19550 என்ற பிரபல எழுத்தாளர் அருமையாக நூல்களில் எழுதியுள்ளார்.
குமாவோன் என்ற பெயரே ஆமை என்ற பொருள் கொண்ட கூர்ம என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்ததை நினவு படுத்தும் இடம் இது.
ராவணனின் சகோதரனான கும்பகர்ணனின் தலையை அறுத்த ராமர் அந்தத் தலையை குமாவோனுக்கு அனுமன் மூலமாக அனுப்பி விட்டார். அதை அனுமன் சம்பாவத் என்ற இடத்தின் அருகே விட்டு விட்டார்.
அந்தத் தலை நீரால் நிரம்ப அது ஒரு ஏரியாகப் பரிணமித்தது. எட்டு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஏரி இது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அர்க்கர்களை விஷ்ணு கூர்ம வடிவம் எடுத்து கொன்று இந்த ஏரியில் தள்ளினார். இந்த யுத்தம் நடந்த இடம் கூர்மாஞ்சல் என்று அழைக்கப்படுகிறது. மறத்தின் மீது அறம் கொண்ட வெற்றியைக் குறிக்கும் இடம் இது என்று இன்றும் போற்றப்படுகிறது.
இந்த கூர்மாஞ்சலே காலப் போக்கில் குமாவோன் என்று பெயர் மாறியதாக இங்குள்ள மக்களும் அறிஞர்களும் கூறுகின்றனர். மூன்று யுகங்கள் கடந்தும் இருந்த இந்த ஏரி மஹாபாரத காலத்தில் விசேஷ வரலாற்றை கடோத்கஜன் மூலமாகப் பெற்றது.
இமயமலைப் பகுதியில் உள்ள தாரஸ் பழங்குடி மக்கள் தங்களை ராமரின் பக்கம் போர் புரிந்தவர்கள் என்று கூறி இன்றும் பெருமைப்படுகின்றனர். ராம- ராவண யுத்தம் மிக கோரமாக நடந்ததால் அதில் பங்கேற்ற இவர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். இதற்கான வார்த்தை தார்த்தராயா என்பதாகும். அதிலிருந்து இந்த தாரஸ் என்ற குடிப் பெயர் வந்ததாம். இங்குள்ள பெண்கள் ஆண்களை விட மிக அதிகமாக மதிக்கப்பட்டு அதிகாரத்துடன் திகழ்கிறார்கள்.
திரிவேணி சங்கமம்
கங்கை, குப்த சரஸ்வதி, யமுனா ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் மிகவும் புண்யமயமானது. இங்கு ஸ்நானம் செய்வது அனைத்து பாவங்களையும் போக்கி விடும் என்பது ஐதீகம். வனவாசம் செல்வதற்கு முன்னர் இங்கு தான் ரிஷி குண்டத்தில் ராமர் ஸ்நானம் செய்து தன் வனவாசத்தை ஆரம்பித்தார்.
இங்கு அருகில் உள்ள ஸ்வர்க்க ஆஸ்ரமத்தில் உள்ள சத்ருக்கன் ஆலயம் சத்ருக்கனனுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு புகழ் பெற்ற ஆலயம் ஆகும்.
தேவ ப்ரயாகத்தில் உள்ள ரகுநாதர் ஆலயம் ராமருக்கென உரித்தான ஆலயமாகத் திகழ்கிறது. ரிஷிகேச யாத்திரையை மேற்கொள்வோர் அனைவரும் இந்த ஆலயங்களைத் தரிசிப்பது மரபாகும்.
Viveka Chuudaamani , Crest Jewel of Discrimination, is a master piece on Advaita Vedanta. Aadi Sankara gives the gist of the Upanishads and Bhagavad Gita in 581 slokas/couplets. I read it in 1994 and scribbled some notes on the margin of slokas. My approach is not the approach of a philosopher. Great many scholars have already written commentaries. Most of them were saints like Swami Chinmayaananda and Swami Sri Maadhavaananda of Advaita Ashrama ,Calcutta.
Like I did with Vishnu Sahasranama, I approached it as a nature lover, science student and a linguistic researcher. I have compared it with some TAMIL poems which other scholars did not do. So, my notes are no commentary but just a comparative study of a layman.
Wisdomlib.org gives all the slokas with meaning.
सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् । गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ १ ॥
1. I bow to Govinda, whose nature is Bliss Supreme, who is the Satguru, who can be known only from the import of all Vedanta, and who is beyond the reach of speech and mind.
Viveka =discrimination
Cuudaa=crest; swami Chinmayananda used a different spelling- choodaa
Mani = jewel.
Here the name Govinda has two interpretations
1. Lord Govinda
2. Sankara’s Guru- Sankaracharya was the disciple of Sri Govindapada who is the disciple of Gaudapada. So Sankara has saluted his Guru and God, we may say.
I have noted three interesting points:
a) Sankara has the name Govinda in another famous hymn Bhaja Govindam.
b) Though he is a great devotee of Lord Siva, he did not see any difference between Lord Siva and Vishnu. This has an implication on his age. Most of the scholars placed him around 732 CE. That was the time when Saivites and Vaishnavites fought vehemently with each other. Each one claimed superiority of their own god in Tevaram and Divy Prabandham in Tamil.
This supports the argument of Kanchi Paramacharya Sri Chandra Sekhara Indra Sarasvati (1894-1994). He placed Sankara in BCE period. There was no fight between Vishnu Bhaktas and Siva Bhaktas then. So no one can place him in 732 CE.
He also said there was no fight with Jains and Buddhists in 732 CE. By that time they were weakened or defeated in South India.
I am going to give another point later about Sankara’s cliché Snake and Rope.
But one argument put forth by me in my research article Sankara’s Age is not acceptable to any Sankara Mutt. We all know there were two Sankarachryas who looked similar in many aspects. The second Sankara was called Abhi Nava Sankara (once again a New Sankara). He did whatever Aadi Sankara did. Most of the simple slokas were probably done by the second Sankara. But all mutts are scared to accept it. One it is accepted it would open the Pandora’s box, they fear. Everything done by Aadi Sankara would be doubted.
Another interesting point in the very first sloka is Govinda. I mentioned there are two interpretations.
I compare it with the very first Kural of Tiruvalluvar. Iin the Tamil Veda Tirukkural the first couplet/Kural has two Sanskrit words. Addhi Bhagavan.
Dravidians are scared to accept it as Sanskrit. They said it was the name of his Mother Aadhi and Father Bhagavan. We wouldn’t think that Valluvar was so mean to bring his family in the very first couplet. But like Sankara’s Govinda this is also debated till this day.
Here is the first Kural
அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி பகவன்முதற்றேஉலகு.-1
Tamil Transliteration Akara Mudhala Ezhuththellaam Aadhi Bagavan Mudhatre Ulaku.
A, as its first of letters, every speech maintains; The “Primal Deity” is first through all the world’s domains
Aadhi Bhagavan= primal deity.
This is accepted by most of the commentators.
Summary
Sankara saw Brahman (god) in Vishnu/Govinda and Siva. It is evident in his other hymn Bhaja Govindam. So we cant place him 732 CE He belongs to an ancient period. We have to consider two similar Sankaras to solve the problems.
–subham—
Tags Viveka Chudamani, Adi Sankara, Sloka 1, Govinda, Kural , Adi Bhagavan
ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் – 2
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரத்தின் காவல் தெய்வம் கனக துர்க்கை ஆவார். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சபரிமலை ஐயப்பன் கோவில் போலவே இங்கும் பக்கதர்கள் தீட்சை மாலை பெற்று மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சை விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள் .
இந்தக் கோவில் கிருஷ்ணா நதியின் கரையில், இந்திர நீலாத்ரி/ கீலாத்ரி குன்றின் மீது அமைந்துள்ளது. கோவிலை அடைய 260 படிகள் ஏறவேண்டும். மூலஸ்தானத்தின் மேல் தங்கக் கூரை போடப்பட்டுள்ளது.
எல்லா இந்துப் பண்டிகை நாளும் கொண்டாடப்பட்டாலும் நவராத்ரியும், முடிவு தினமான தசராவும் வெகு விமரிசையாக நடைபெறும். தசராவின் போது துர்கையம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார்.. கூட்டம் அதிகம் வருவதால் தொலைவிலிருந்து பார்க்க வசதியும் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள சிவலிங்கத்தை அகஸ்திய முனிவர் ஸ்தாபித்ததாக ஐதீகம் இதனால் இந்த இடம் மல்லேஸ்வரம் என்ற பெயர்பெற்றது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது; ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான இடம்
கீலா என்ற அசுரன், அம்மனை வேண்டி தவம் செய்து வரம்பெற்றதால் கீலாத்ரி என்று இந்தக் குன்று பெயர்பெற்றது.
மகிஷன் என்ற அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள் அந்தக் கோலத்தில் இங்கு வாசம் செய்கிறாள் கனக துர்கா தேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன 4 அடி உயர அம்மன்.
ஒரு காலத்தில் கனக (தங்கம்) மழை பெய்ய வைத்ததால் கனக துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது.
நவராத்ரி காலத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மகாலெட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுர சுந்தரி, மகிஷாசுர மர்த்தனி, துர்கா தேவி, ராஜா ராஜேஸ்வரி அலங்காரங்கள் செய்யப்படும் விஜயதசமி/ தசரா நாளன்று அம்மனை அன்னப் பறவை வடிவிலான படகில் வைத்து கிருஷ்ணா நதியில் தெப்போத்சவம் நடத்துகிறார்கள்.
பவானி தீட்சை
சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக்கொண்டு , விரதம் இருந்து , யாத்திரை செய்து, தரிசனம் செய்வது போல ஆந்திர மக்கள் பவானி தீட்ச்சை பெற்று கனக துர்க்கையை தரிசிக்கின்றனர் 21 அல்லது 41 நாட்கள் விரதம் இருந்து சிவப்பு ஆடை அணிந்து யாத்திரை வருகின்றனர்.. கிருஷ்ணா நதியில் குளித்து விட்டு சிவப்பு ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று தீட்சை மாலை பெறுவார்கள்; விரதம் முடிந்த பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சையை முடிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் போலவே தினமும் குளித்து விரத உணவை மட்டும் உண்டு, பெண்களைத் தொடாமல் புலனடக்கத்துடன் விரதம் இருப்பது மரபு. பெண்களும் விரதம் இருந்து வருகிறார்கள். பெண்களாக இருந்தால் மாதத் தீட்டு ஏற்படாத 21 நாட்களில் விரதம் இருப்பார்கள். நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விரதம் எடுக்கிறார்கள்.
கனக துர்க்கை அம்மன் கோவில் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ளது. பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம் .இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.
சாகம்பரி உற்சவம்
ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் மூன்று நாள் சாகம்பரி உற்சவம் நடக்கும் சுக்ல பட்ச திரயோதசி முதல் பெளர்ணமி வரை நடக்கும் அந்த நாட்களில் அம்மன், சாகம்பரி அல்லது வன சங்கரி ரூபத்தை எடுப்பதாக ஐதீகம்; அப்போது நடக்கும் பூஜையால் காய்கறிகள், பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை; மூன்று நாட்களும் கோவிலை காய்கறிகள் பழங்களால் அலங்கரிப்பர்; தேவியும் பழம், காய்களால் அலங்கரிக்கப்படுவாள் ; இரண்டு லட்சம்பேர் வரை தரிசனத்துக்கு வருகிறார்கள் வறட்சி நீங்கி மழை பெய்து வளம் பெறுக, மக்கள் சாகம்பரி தேவியை வணங்குகின்றனர்.
சாகம்பரியின் கோவில் ஒன்று உத்தர பிரதேச ஸஹ்ரான்பூரில் இருக்கிறது .
கோவிலில் உள்ள சிவனை பிரம்மா, மல்லிகை மலரால் அர்ச்சனை செய்ததால் அவரை மல்லிகேசா என்று அழைக்கின்றனர். அர்ஜுனனும் இங்கு தவம் செய்ததாக தல புராணம் சொல்லும். கோவிலின் நீண்ட வரலாறு மற்றும் பூஜை/ சேவை வசதிகள் எல்லாம் கோவிலின் வெப்சைட்டில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது Sri Durga Malleswara Swamy Varla Devasthanam, https://kanakadurgamma.org/en-in/about/the-temple-history/the-history
சீனப்பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு
1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் கனக துர்க்கையம்மன் கோவில் குறித்து எழுதி வைத்துள்ளார். கோவில் அருகே கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
–subham–
Tags- ஆந்திர மாநில, புகழ்பெற்ற கோவில்கள்-2, கனக துர்க்கை, அம்மன் கோவில், விஜயவாடா
Amarnatha Cave in Kashmir; Ice Lingam is appaeraing every year.
LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)
75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்
79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்
79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்
79.0669° E KEDARNATH கேதார்நாத் சிவன் கோவில்
81.3119° E MOUNT KAILASH கயிலாயம்
XXX
திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 31
இந்தக்கட்டுரை 1990-ம் ஆண்டுகளில் லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிகையில் என்னால் எழுதப்பட்டது. அந்த மாதப் பத்திரிகையில் எழுதிய 40 கட்டுரைகளை தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற தலைப்பில் நாகப்பா பதிப்பகம், சென்னை மூலம் 2009 டிசம்பரில் வெளியிட்டேன். அண்மையில் புஸ்தக .கோ .இன் மூலம் மீண்டும் வெளியானது. அதில் திருமூலரும் தீர்க்க ரேகையும் என்ற கட்டுரையும் ப்ஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றி திருமுலர் என்ற கட்டுரையும் திருமந்திரம் பற்றியது . 1990ம் ஆண்டு கட்டுரை இதோ :
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701
xxx
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை,
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,
படர்வொன்றி யென்றும் பரமாம்பரமே“- 2708
நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள், கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகைLATITUDE என்றும் பிரிப்பார்கள்.
தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும் ,90 தென் கோடுகளாகவும் பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.
இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது நூற்றாண்டில்தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.
அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருப்பதாகப் பாடுகிறார்.
திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் அவர் எழுதிய திருமந்திர பாடல்களை மொழியியல் ரீதியில் ஆராய்ந்தால் ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டு( CE ) என்றுதான் காலம் கற்பிக்கமுடியும்.. அப்போது இந்தியாவின் வரைபடம் கிடையாது. ஆயினும் மேரு, தில்லை, இலங்கை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை அவர் ஞானக் கண்களால் கண்டிருக்கிறார். ஒருவேளை அந்தக் காலத்தில் ஒலைச் சுவடி அல்லது மரவுரியில் தேசப் படம் இருந்ததோ என்றும் என்ன வேண்டியிருக்கிறது .
திருமந்திரப் பாடல் 2708க்கு சுவாச சாஸ்திர விளக்கமும் உண்டு. அதாவது, மேரு, தில்லை, இலங்கை ஆகிய மூன்றும் மூக்கில் சுவாசம் ஓடும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் என்றும் விளக்குவர் .ஆனால் அவர் இந்தப்பாடலை இரு பொருள் தொனிக்கப் பாடியிருக்கிறார் என்பது மற்றோர் திருமந்திரப் பாடலால் தெரிகிறது. அந்தப் பாடலில் இந்த மூன்று சொற்களையும் நிலவியல் ரீதியிலேயே பாடியிருக்கிறார். அடுத்த பாடலில் காவிரி, கன்யாகுமரி, தென் திசை, ஏழு மலைகள் , ஒன்பது தீர்த்தங்கள் பற்றிப்பாடுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்துப் பாடி தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்திய பெருமையும் திருமூலரையே சாரும்.
Chidambaram= Thillai Temple
இந்திய வரை படத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒரு நூலையோ குச்சியையோ வைத்து மேரு,சிதம்பரம், இலங்கையை இணைத்தால் அவை, ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணலாம். இதோ இந்த உண்மையயை விளக்கும் பாடல்கள்
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை,
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,
படர்வொன்றி யென்றும் பரமாம்பரமே“
இந்தப் பாட்டில் இடகலை/ இடது நாசி, பிங்கலை/வலது நாசி என்பன இமயத்திற்கும் இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நாடு நாசி தில்லைக்கு ஒப்பாகும். (நாசி= மூக்கு; இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்துதான் NOSE நோஸ் என்ற ஆங்கிலச் சொல்பிறந்தது)
2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.
இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற சுவாசம் பற்றிய சொற்களுக்கு இமயம், , இலங்கை சிதம்பரம் என்ற மூன்று இடங்களின் பெயர்களை பயன்பட்டுயத்தியது ஏன் என்று யோசித்தால் எனது விளக்கம் நன்றாகப் புரியும்.
மேரு= இமய மலை = புனித மலை
தமிழ் நாட்டில் இந்த தீர்க்கரேகைக் கோடுLONGITUDE தொடும் இடத்தில் மிகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது
இலங்கையில் இந்தக் கோடு தொடும் இடத்தில் மிகப் பழமையான முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது
இமயத்தில் இந்தக்கோடு செல்லும் இடங்களில் கயிலாயம், அமர்நாத் பனிலிங்கம் உள்பட பல சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன.
LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES
75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்
79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்
79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்
81.3119° E MOUNT KAILASH கயிலாயம்
(கொழும்பு, நீர்க்கொழும்புக்கு மேல் புத்தளம் உள்ளதைக் கவனிக்கவும். அதன் அருகில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது)
XXX
தற்போதைய விளக்கம் 2-7-2024
என்சைக்ளோபீடியா அல்லது பல வெப்சைட்டுகளில் பார்த்தால் டாலமி வரைந்தார், அதற்கு முன் கிரேக்கர்கள் சொன்னார் என்றெல்லாம் படிப்பீர்கள். அவை இன்றைய மேப்/ வரை படம் அல்ல. இந்த இடத்திற்கு அடுத்தார் போல இந்தப் பிரதேசம் அல்லது தேசம் இருக்கும் என்ற குத்து மதிப்பான விவரம்தான். நாம் இன்று பார்க்கும் வரைபடத்தின் மூலம் 1600-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது ; அதாவது 400 ஆண்டுகளுக்கு முன். திருமூலரோ அதற்கும் முன்னால் வாழ்ந்தார்.
இமயம் எங்கே இருக்கிறது, குமரி எங்கே இருக்கிறது என்பதெல்லாம் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. அதற்கு முந்தைய புராணங்களோ உலகத்தையே ஏழு கண்டங்களாகப் பிரித்திருக்கிறது . அதை இன்றும் பிராமணர்கள் பூஜைக்கு முந்திய சங்கல்பத்தில் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல புராணம் என்பதற்கான பஞ்ச இலக்கணங்களில் ஒன்று வரலாறு இன்னொன்று புவியியல். உலகத்திலேயே இவைகளை சமயப் புத்தகத்தில் சேர்த்தது இந்து மதம் மட்டுமே. உலகில் வேறு எந்த மதப் புஸ்தகத்திலும் வரலாற்றையும் பூகோளத்தையும் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. இந்து மத்தில் எல்லா புராணங்களிலும் இவை இருக்கும். அந்தக் காலத்திலேயே நாம் வரலாறு , புவியியல் அறிவு பற்றி சிந்தித்ததை இது காட்டுகிறது
கங்கை கோதாவரி காவிரி பற்றி ஒரே பாடலில் அப்பர் பாடுகிறார். இடையே உள்ள தூரம் 700 காதம் என்று கல்வெட்டு கணக்கைக் கூட சொல்கிறது !
XXXX
பழைய உரை (எனது விளக்கத்திலிருந்து மாறுபட்டது)
2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.
2747: Siva’s Spheres of Dance Within
The central spinal column that is Meru
The Nadis, Ida (Left) and Pingala (Right),
The Jiva’s delta-shaped Muladhara
The Sushumna Cavity that is unto Tillai Forest
Where the cool (southerly) breeze from Mount Malaya wafts
All these alike are Siva’s Spheres of Dance.
(ப. இ.) அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் ‘மாதவஞ் செய் தென்றிசையின்’ மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க.
(அ. சி.) மேரு நடுநாடி – அண்டத்துள் நடுரேகையும் (Equator), பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை
களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் – இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம். (இதனால் மேருமலை திருமூலர் காலத்திலேயே அழிவெய்திவிட்டது என்பது போதருகின்றது.) மேரு – சுமேரு – குமேரு – என மூன்றாம். மேரு – பூமத்தியரேகையும் – பூமியின் அச்சரேகையும் கூடும் இடம்; அதுதான் இலங்கை. சுமேரு -வடதுருவம் (N. pole). குமேரு – தென்துருவம் (S. pole). தில்லைவனம் – மலயம் இவை பூமியின் நடுநாடி (Axis) யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.
XXXX
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை, நடுநின்ற மேரு
நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம், படர்வொன்றி யென்றும்
பரமாம்பரமே
2754: Pervasive Dance in the Mystic Centers
Idakalai,* Pingalai,*
The delta-shaped Muladhara
The Central spinal column Meru,
Where (Kundalini) Sakti is
The Sushumna cavity within
That is unto the Tillai Forest
-In all these the Primal One pervaded,
He that is Paraparam.
அடுத்த பாட்டிலேயே திருமூலர் உண்மையான புவி இயல் பற்றிச் சொல்வதைக் கவனிக்கவும்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34
2755: South the Holy Land
At the Land’s End is KanyaKumari;
And then the Kaveri
And other holy waters
The nine “theerthas” comprise;
And the seven sacred hills too;
In that land are born the Veda-Agamas;
Thus blessed,
The South is the Holy Land indeed.
—SUBHAM—
TAGS-திருமூலர், தீர்க்கரேகை, ஒரே கோட்டில் , சிவன் கோவில்கள், மேரு, இலங்கை, சிதம்பரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 31
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது
மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2
ச. நாகராஜன்
லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை)
பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.
1967-ம் ஆண்டு தனது முதல் நூலான ’தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்’ என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின..
பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.
இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.
லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.
மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திட்டத்தின் கருவிகள்
லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-
உங்களின் எண்ணத்தால், திட்டத்தால், முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?
உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள், தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?
இந்த திட்டத்தின் எல்லை எது? இதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?
இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்? முழுவதும் அலசிப் பாருங்கள்
இந்தத் திட்டத்தின் நோக்கம், குறிக்கோள் என்ன? இது ஏன் முக்கியமாக இருக்கிறது?
இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள், திட்டங்கள், விருப்பத் தேர்வுகள் உண்டா?
இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்து, பார்வை என்ன? இதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?
இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?
இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?
இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, , இதன் விளைவு, செய்யப்படும் முறை, செயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?
இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சினை சுமுகமாக முடியும்!
புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்
2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள் ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும் விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘தி எட்வர்ட் டி போனோ கோட் புக்’ என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?
எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, “நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்” என்று பொருளாகும். இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.
தனது வாழ்நாளில் ‘கவுன்ஸில் ஆஃப் யங் எண்டர்பிரை யூரோப்’ என்ற நிறுவனத்தை நிறுவி பதினைந்து லட்சம் இளைஞர்களுக்கு ஐரோப்பா, இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய தொழிலை ஆரம்பிக்க இவர் ஊக்குவித்தார்.
புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.
புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.
குடும்பம்
டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அவர் மறைந்த பிறகு அவரது உயிலில் இன்னும் ஒரு மகனின் பெயரும் ஒரு மகளின் பெயரும் சொத்துக்கு வாரிசுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
மறைவு
டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார். மால்டாவில் மெடினா என்ற இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
டி போனோவின் அறிவுரைகள்
பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கவும் ஏராளமான அறிவுரைகளை டி போனோ வழங்கியுள்ளார்.
அவரது கூற்றுகளில் சில:
படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!
படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!
மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!
நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!
புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா – டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!
Tirupati Temple with Modi and Andhra CM Jagan Mohan Reddy
கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 108 முக்கியக் கோவில்கள் பற்றி நான் எழுதிய நான்கு புஸ்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 108 முக்கிய கோவில்கள் பற்றி எழுதவும் ஆசை பிறந்தது . ஆந்திரம் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவிலும் காளஹஸ்தி, ஸ்ரீசைலம் சிவன் கோவில்களும்தான். இவை தமிழ் நாட்டின் எல்லையை ஒட்டியவை. ஆனால் வட கோடி வரை எவ்வளவோ ஸ்தலங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வற்றைத் தமிழர்கள் அறியார் .
நான் மந்த்ராலயம் வரை சென்று வந்தேன். அதைத் தாண்டி மஹாராஷ்டிரம், பக்கத்து மாநிலமான கர்நாடகக் கோவில்களையும் தரிசித்து வந்தேன். இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களையும் தரிசிக்க நூறு முறையாவது பிறக்க வேண்டும். இதுவரை நான், தென் குமரி முதல் வட இமய ரிஷிகேஷ் -ஹரித்வார் வரை சென்றதே பெரும் பாக்கியம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு (2023) இலங்கையிலுள்ள கதிர்காமம், திருகோணமலை முதலிய தலங்களையும் தரிசிக்கும் பெரும்பேறும் பெற்றேன் . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லி ஆந்திர- தெலிங்கனா மாநில பயணத்தைத் தொடர்வோம் .
தெலுங்கானா அல்லது தெலிங்கனா என்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (சங்கராசார்யார் 1894-1994) சொன்ன சுவையான விஷயத்தை முதலில் காண்போம் இதன் உண்மையான பெயர் த்ரி லிங்க தேசம். அது மருவி தெலுங்கானா ஆனது. இந்த தேசத்து பிராமணர்கள் வடக்கில் சென்றவுடன் அவர்கள் தில்லான், தில்லோன் என்று அழைக்கப்பட்டனர். பிரபல அரசியல் வாதிகள்,கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில் இதைக் காணலாம். த்ரிலிங்க தலங்கள் ஸ்ரீசைலம், காளேஸ்வரம் , திராஷாராமம் ஆகிய சிவன் கோவில்கள் ஆகும்.
Telangana CM Revanth Reddy with wife Geetha (Cong.Party)
ஆந்திரத்தின் புகழோ ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது ரிக்வேதத்தின் ஐதரேய பிராமணத்தில் ஆந்திரம் குறிப்பிடப்படுகிறது. தமிழில் மிகப்பழைய நூல்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கட மலையை தமிழ் நாட்டின் வட எல்லையாக குறிப்பிடுகின்றன. மெளரிய மன்னர்களும் தெற்குப் பகுதியை ஆந்திர என்று சுட்டிக் காட்டுகின்றனர் .
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு– –சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2
****
இப்போது ஆந்திர மாநிலத்தை ஆந்திரம்- தெலுங்கானா ( 2014) என்று பிரித்தவுடன் எந்த க்ஷேத்திரம் /தலம் எந்த மாநிலம் என்ற குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் பழைய தல யாத்திரை நூல்களில் எல்லா இடங்களும் ஆந்திர மாநிலம் என்றே குறிப்பிடப்படும்.
கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா புண்ய நதிகள் பாயும் புண்ய பிரதேசம் இது. கரை தோறும் புனிதக் கோவில்கள் எழும்பியுள்ளன.
கப்பலோட்டிய சாதவாகன மன்னர்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமயம் பரவ வித்திட்ட புண்ய பூமி இது. அவர்கள் உதவியுடன்தான் தமிழ் மன்னர்கள் இமயத்தில் கொடி நாட்டினர் என்பதை சிலப்பதிகாரம் நமக்குச் சொல்கிறது.
XXXX
Modi Ji in Tirupati Balaji temple
ஆந்திர மாநில ஸ்தலங்கள்
சங்கமேசுவரம், யாகந்தி கோவில், கபில தீர்த்தம், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோவில், திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், ராமகிரி வாலீசுவரர் கோயில்,பீமாவரம் சிவன் கோவில்
புங்கனூர் சிவன் கோயில், சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில், பஞ்சாராம ஸ்தலங்கள், லேபட்சி, வீரபத்திரன் கோவில் ஆகியன ஆந்திர பகுதியில் உள்ள முக்கிய சிவன் கோவில்கள் ஆகும்.
திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவில்.
திருச்சானூர் பத்மாவதி கோவில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில்
பீச்சுப்பள்ளி – (அனுமார் கொவில்) மெகபூப்நகர் மாவட்டத்தில் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான அனுமான் ஆலயம்.
ஆலம்பூர் – மெகபூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருட்டிணா நதிகள் இணையுமிடத்தில் தட்சிண காசி என்று கொண்டாடப்படும், பரமேசுவரர் மற்றும் சோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம்.
வாரங்கல் பத்ரகாளி (ரௌதிர தேவி) கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்
வாரங்கல்- ராமப்பா கோவில்
பாசரா -கலைமகள் /சரஸ்வதி கோவில்
அனந்தகிரி காடு – அனந்தபத்மநாபர் கோவில்
மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை
பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற இராமர் கோவில். பக்த ராமதாசர் வழிபட்ட கோவில்.
யாதகிரிகுட்டா: திருமகள், நரசிங்கமர் (லட்சுமி நரசிம்மர்) சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.
காளேசுவரம்: ஆந்திர-மராட்டிய மாநிலங்கள் எல்லையில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மிக சிறப்புற்ற காளேசுவர முக்தீசுவர சுவாமி எனப்படும் சிவன் கோயில்; இக்கோவிலின் கருவறை மையத்தில் சிவனுக்கு (காளேசுவரர்) ஒரு லிங்கமும், எமனுக்கு (முக்தீசுவரர்) மற்றொரு லிங்கமுமாக இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன
நாகுனுர் கோட்டை: கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள . கோட்டைக்குள் பல பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும், தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள மேல்மாடங்கள் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுப் போலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுப் போலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரும் விருந்து
Former Vice President Vankaiah Naidu with his wife at Balaji temple, Tirupati
Map of Telangana
வேமுலவாடா – கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் CE 750–975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர் சுவாமி கோவிலுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் இராமன், இலக்குவணன், இலட்சுமி, கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான திரு பீமேசுவரரின் திருக்கோவில் மிகச் சிறப்புற்றது.
உமா மகேசுவரம் – மெகபூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்சுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின் திருக்கோயில் உள்ளது. கருவறைக்கு அருகில் பாபநாசனம் என்ற இடத்தில் ஊறும் கிணறு இருக்கிறது
ஒவ்வொரு தலத்தையும் விரிவாகக் காண்போம்
TO BE CONTINUED……………………………………….
Tags- தெலுங்கானா ,ஆந்திரம், கோவில்கள் ,திருப்பதி ஸ்ரீசைலம், அஹோபிலம், பத்ராசலம், காளஹஸ்தி, த்ரி லிங்க , கிருஷ்ணா , கோதாவரி, துங்கபத்ரா
Sangamam UK third annual meeting was held on 29th June 2204 at Purley in Greater London area. About 25 active workers attended the meeting. Kalyan and Pravin introduced the organisation for new members and explained the recent activities of the organisation. Sri Prakash ji, active RSS karyakartha from Chennai, spoke for an hour on line and answered the questions raised by the UK Members. Those who couldn’t attend from far off places like Liverpool and Birmingham attended the meeting via zoom.
The program started with small refreshment and Manju from Liverpool delivered the welcome note and program agenda. Post welcome note, Dakshin Kshetra Sampark Pramukh Shri Prakash Ji, from Chennai, spoke.
Satish and Chelliya introduced the new members and mentioned recent activities conducted by the organization. Mothi Sayeeram and Subbu explained the organization’s present state and future roadmap to everyone. Those who couldn’t attend in person from far-off places like Liverpool and Birmingham joined the meeting online
Last year Tamil Nadu Governor Sri Ravi Ji addressed the annual gathering in Reading. This year RSS key Karyakartha from Chennai was the main speaker.
Sri Prakashji , an RSS Dakshin Kshetra Sampark Pramukh from Chennai,i, delivered his speech online from Chennai. He quoted elaborately from the works of Sri Ramakrishna Paramahamsa, Swami Vivekananda and folk tales from Ramayana. He explained the five point resolution passed by RSS for celebrating its centenary . RSS was started by Doctor Ji in 1925 with only 17 people. Now it has spread throughout India and he said just in the past week, a two day training programme was conducted with 600 youths in Tamil Nadu.
Prakshji explained the RSS Panch Parivartan program for benefits of the society. The program includes five key points for social transformation namely samajik samrasata, kutumb prabodhan, paryavaran, the insistence on ‘Swa’ and the duties of the citizens.
There is a need for comprehensive and immense efforts to sustain the lively and value-based nature of our family system. Through our day to day behaviour and conduct, we should ensure that our family life works for building character, enriching life-values and strengthening mutual relationships. The family life will be joyous and blissful through dining, praying, celebrating festivals and going on pilgrimage together, the use of mother tongue, insistence on Swadeshi and, nourishing and protecting family and social traditions. Family and Society are complementary to each other. To instil the sense of social responsibility, encouraging donations for social, religious and educational cause and readiness to help the needy as per ability should become the nature of our family.”
Saving water, reviving old values, living the life which Ramayana taught us, contacting and connecting families were explained by Prakashji with stories and anecdotes.
If the electrical connection fails in a house the electrician comes , restores the lost contact and then connects the wires. Then only we get back the bright lights. So, start with contact first and then connect the families through activities, Prakashji emphasized.
xxxx
London Swaminathan , who was invited as a guest speaker, spoke for 20 minutes about attracting new members through new activities.
Pravin, Sangamam organiser, UK introduced London Swaminathan as an author of 120 Tamil and English books and former BBC broadcaster, Dinamani Newspaper Senior Sub Editor and University of London (SOAS) Tamil Teacher where he helped his Professor Dr Stuart Blackburn, erecting Tamil Poet Tiru Valluvar statue donated by Government of Tamil Nadu .
Since the list of suggested activities was circulated to the members, London Swaminathan briefly explained how successfully they conducted new activities in the past 18 years through four organisations. Now that zoom is available for online activities, lot of things can be done online, he reminded. But he warned not to initiate new activities without knowing the implications. Swaminathan insisted that Mental, Physical and Intellectual capacity along with available resources must be taken into account before starting new programmes. He gave an example of his friend who wanted to become a Mittal or an Ambani or an Adani overnight without any infrastructure. So, one must think small and get it done successfully. Then, one can expand it slowly.
Harini, key member of the Sangamam UK and her husbandMr Venkatesh were the hosts for this meeting. They made fantastic arrangements, provided refreshments and finally ended with dinner. As it was announced as a family gathering, many families came with their children.
The meeting concluded with a vote of thanks by Dr. Varadharajan and a group photo to commemorate the occasion.
–subham—
Tags Sangamam UK, annual meeting, June 2024, Purley, London Swaminathan, Prakashji
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது
மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 1
ச. நாகராஜன்
பிரச்சினைகளும் தீர்வுகளும்
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஏராளமான பிரச்சினைகள் தோன்றுகின்றன. சிந்திக்கிறோம்; சிலவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது. சிலவற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.
மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!
மாற்றி யோசிப்பது என்றால், அது என்ன? எப்படி மாற்றி யோசிப்பது?
இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட புதிர்களை முதலில் விடுவியுங்கள்.
முடியாவிட்டால் விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதைப் பார்த்துக் கொள்ளலாம்.
புதிர் 1
ஒரு பெண்மணிக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் அவர்கள் இரட்டையர் இல்லை. அப்படி என்றால் இதற்கான விளக்கம் என்ன?
புதிர் 2
வேகமாகச் சென்ற ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணித்த தந்தை உடனே இறந்து விடுகிறார். அபாய நிலையில் இருந்த பையனை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். அறுவைசிகிச்சைக்காக உள்ளே வந்த சர்ஜன், “இந்த ஆபரேஷனை என்னால் செய்ய முடியாது. இவன் எனது மகன்” என்கிறார். இதற்கான விளக்கம் என்ன?
புதிர் 3
அழகிய ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்தான். அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். ஆனால் இதை அறிந்து கொண்ட அரசன் கோபப்பட்டான். அவனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அவன் தன் மக்களிடம் தான் நேர்மை தவறாத ஒருவனாக நடந்து கொள்வதாகக் காண்பிக்க ஆசைப்பட்டான். அரசவையைக் கூட்டிய அரசன் தான் இரு துண்டுச் சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும் ஒன்றில் வேண்டாம் என்று இருக்கும்,இன்னொன்றில் மணம் புரியலாம் என்று இருக்கும் என்றும் எந்த ஒன்றை அந்த ஏழை எடுக்கிறானோ அதன் படியே முடிவு இருக்கும் என்று சொன்னான்.
பெட்டியில் இரு துண்டுச் சீட்டுகளை அவன் மக்களின் முன்னே போட்டான். ஆனால் அந்த இரண்டிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது.
ஏழையைக் கூப்பிட்டு ஒரு சீட்டை எடு என்றான் அரசன்.
அரசனின் தந்திரத்தை ஏழை புரிந்து கொண்டான். மாற்றி யோசித்தான். செயல்பட்டான்
ராஜகுமாரியை மணந்து கொண்டான். எப்படி?
புதிர் 1
விடை: அந்தப் பெண்மணிக்கு இரண்டுக்கும் மேல் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகளை இரட்டையர் என்று சொல்ல முடியாதல்லவா?!
விடை: தனது மாமனராக ஆகப் போகும் அரசனை இழிந்தவனாகக் காட்டக் கூடாது. அதே சமயம் தான் ராஜகுமாரியையும் மணந்து கொள்ள வேண்டும். இரண்டு சீட்டுகளையும் மக்கள் முன்னால் காண்பியுங்கள் என்றோ அரசன் நியாயமானவன் இல்லை என்றோ சொன்னால் அதன் பின் விளைவுகள் நன்றாக இருக்காது.
ஆகவே அந்த ஏழை யோசித்தான். பெட்டியில் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தான். அதைப் படித்தான். அதை உடனே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.
“அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரியலாம் என்று எழுதப்பட்டிருந்தது என்றான்.அடுத்த சீட்டை எடுத்துப்பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள், மக்களுக்கும் காட்டுங்கள்” என்றான் அவன்.
இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருக்கிறது.
ஆகவே அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதோடு தனது மருமகனாக வருபவன் ஒரு புத்திசாலி, தன் பெயரைக் காப்பாற்றுவான் என்பதையும் புரிந்து கொண்டான்.
திருமணம் நடந்தது!
மாற்றி யோசியுங்கள்! நிலைமையைச் சமாளியுங்கள்!!
மாற்றி யோசித்து எப்படி ஒரு நிலைமையைச் சமாளிப்பது?
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு அருமையான சம்பவம் உண்டு.
ஒரு கைதி தனது மனைவிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் அதிகாரிகளால் நன்கு படிக்கப்பட்டு சென்ஸார் ஆன பின்னே அவளிடம் சேர்க்கப்படுகிறது என்பதை நன்கு அறிவான்.
ஒரு நாள் மனைவியிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மனைவி, தனக்கு தோட்டத்தில் செடிகளை நட ஆசை என்றும் ஆனால் தோட்டத்தில் உள்ள பூமியை உழுது தோண்டும் மெஷினை தனக்கு இயக்கத் தெரியாதென்றும் எழுதி இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் அவள் வருத்தப்பட்டிருந்தாள்.
கைதி உடனே பதில் எழுதினான் மனைவிக்கு :”அன்பே! அப்படி எதுவும் செய்து விடாதே! அந்தத் தோட்டத்தில்தான் நான் திருடிய அத்தனை சொத்தையும் புதைத்து வைத்திருக்கிறென்” என்று!
ஒரே வாரத்தில் மனைவிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.
திடீரென்று அரசு அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை நன்கு தோண்டி எதையோ தேடினர் என்றும் ஒன்றும் காணாமல் திரும்பிப் போய் விட்டனர் என்றும் இப்போது செடிகளை தான் விரும்பியபடி நடப் போவதாகவும் எழுதியிருந்தாள்.
கைதிக்கு மகிழ்ச்சி. மாற்றி யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான் அல்லவா! அதனால்!
இதே போல் ஏராளமான சுவையான மாற்றி யோசிக்கும் வழிகளைக் கூறும் புதிர்களும் நிஜ சம்பவங்களும் உண்டு.
இதை உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் தான் எட்வர்ட் டி போனோ
பிறப்பும் இளமையும்
எட்வர்ட் சார்லஸ் ஃபிரான்ஸிஸ் பியூப்ளியஸ் டி போனோ தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா என்ற தீவில் செயிண்ட் ஜூலியன்ஸ் பே என்ற இடத்தில் 1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் நாள் அன்று பிறந்தவர்.
தந்தை ஜோஸப் டீ போனோ ஒரு மருத்துவர். தாய் ஜோஸபைன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். வகுப்பில் படிக்கும் போதெல்லாம் இவரே வகுப்பில் மிகவும் குறைந்த வயதுள்ள மாணவனாக இருப்பார். ஒவ்வொரு வகுப்பாகப் போகாமல் இரண்டு முறை மேல் வகுப்புகளுக்கு படிப்பில் சூரனாக இருந்ததால் தாவினார். பின்னர் . மால்டா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவர் ஆனார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு உளவியலிலும் மனவியலிலும் தேர்ச்சி பெற்றார். தனது பிஹெச்.டி பட்டத்தைப் கேம்பிரிட்ஜில் பெற்றார்.
I took some pictures of the posters displaayed for sale in the old shop on 17-5-2024
Welcome to London- Part 5
“Set in London’s West End, Covent Garden is a vibrant, must-see destination for anyone who enjoys shopping, theatre, restaurants, bars, history and culture. Things to see in and around Covent Garden include the London Transport Museum, the Royal Opera House, Somerset House and Covent Garden Market”
Where is it?
Covent Garden tube station (Underground ) is in Piccadilly Line.
One can walk from Holborn, Charing Cross, Leicester Square Tube stations within ten minutes.
xxxx
Covent Garden in London is an old style market place where you find gem stones, fashion jewellery, clothes, artifacts, hand made bags, novel electronic clocks, gift items etc. There are restaurants , street food and musicians and jugglers to watch. Nothing is expensive.
It is similar to Moore Market in Chennai (which was burnt down in a fire accident.)
I cant forget Covent Garden because I acted in Pygmalion of Bernard Shaw with famous Tamil Actress Radhika. We invited her to London on behalf of BBC Tamilosai to act in POOKKAARI (flower vendor, adapted in tamil by Shankar Anna of BBC Tamil Service. He gave me the main role. For the photo shoot of Radio Drama, BBC took us to Covent Garden. It was an unforgettable experience.
xxxxxxxxx
Story of Pygmalion
Pygmalion was a play written by George Bernard Shaw in 1913. It deals with themes of social class, stereotypes, and appearances vs. reality. It tells the story of Eliza Doolittle, a lower-class girl who sells flowers, and an upper class linguist named Henry Higgins.
Shaw took his title from the ancient Greek legend of the famous sculptor named Pygmalion who could find nothing good in women, and, as a result, he resolved to live out his life unmarried. However, he carved a statue out of ivory that was so beautiful and so perfect that he fell in love with his own creation.
The moral of Pygmalion is that life is too realistic to believe in the fabrication of idealism. For instance, Eliza has been transformed into a duchess yet she is aware that she would be no more to Higgins than a pair of slippers.
xxxxxxx
On the days I felt sleepy during summer lunch time, I used to take a bus from Bush House of BBC World Service and go to Covent Garden to watch the jugglers there. That was 30 years ago.
On 17th May, 2024 I took my brother and his wife to the Covent Garden. They visited London for the first time. It was not changed much. It looked almost same, though I visited it after two decades. We watched a street music player. I was interested in a shop where they were selling old pollsters with golden sayings. (Please see the pictures I took)
xxxxxx
Google says
A shopping and entertainment hub in London’s West End, Covent Garden centres on the elegant, car-free Piazza, home to fashion stores, craft stalls at the Apple Market, and the Royal Opera House. Street entertainers perform by 17th-century St. Paul’s Church, and the London Transport Museum houses vintage vehicles. Upscale restaurants serve European cuisines, and nearby theatres draw crowds for plays and musicals. ― Google
Posters shop
Street Musician
–subham—
Tags- Welcome to London 5, Don’t miss Covent Garden, Pygmalion, Pookkaari, BBC Tamil Service, Shankar anna