மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் (Post.13,124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,124

Date uploaded in London – –   25 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முதலில் நாகார்ஜுனா (Nagarjuna) யார் என்ற விஷயத்தைச் சொல்கிறேன் . ரசவாத விஷயங்களை முதலில் நமக்கு எடுத்துரைத்த பெரிய அறிஞர். பிராமணராகப் பிறந்து புத்த மதத்தைத் தழுவியவ மஹா மேதை . மஹாயான புத்த மதக் கிளைக்கு வித்தூன்றியவர். டில்லியில் துருப்பிடிக்காமல் இன்று வரை வெட்ட வெளியில் நிற்கும் உலக அதிசய இரும்புத் தூண்( Iron Pillar in Delhi ) உருவான காலமும் இவர் காலமும் ஒன்றே என்பது புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் ரகு வீராவின் கருத்து.

இரும்பு , ஈயம் போன்ற  விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால்  அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது

குமார ஜீவ என்பவர்தான் (Kumarajiva)  கிபி 405-ல் முதல் முதலில் இவர் பெயரை எழுதியுள்ளதால் நாகார்ஜுனா 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது உறுதியாகிறது . அவர் அர்ஜுன (மருத மரம்) மரத்துக்கு அடியில் பிறந்ததால் நாக+ அர்ஜுனன் என்று பெயர் சூட்டப்பட்டதாக குமார ஜீவ கூறுகிறார். நாகர் ஒருவரிடம் விஷயங்களைக் கற்ற தால் நாகர்ஜுனன் என்றழைக்கப்பட்டார்.

இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் அவருடைய நூல்கள் நமக்கு சீனாவிலிருந்துதான் கிடைத்தன . இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தா பல்கலைக்கழக  நூலகத்தை முஸ்லீம் வெறியர்கள் தீக்கிரையாக்கியதையும் அந்த லைப்ரரி 7 நாட்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியதையும் உலகம் அறியும். அந்த சர்வகலாசாலையில்  படித்தவர்கள்,  புத்தமதம்  தொடர்பான எல்லா நூல்களையும் சீன மொழியில்  மொழிபெயர்த்து,  கொண்டு சென்றனர். அதனால் நமக்கு பல நூல்கள் மீண்டும் கிடைத்தன.

சீன மொழியில் அவரை லூங் ஷு அல்லது லுங் மெங் Lung-shu, Lung-Meng என்று  அழைத்தனர். அவர் முதல்  நூற்றாண்டில் பிறந்தார் என்று புகழ் பெற்ற சீனப்  பயணி இட்சிங் I-Tsing கூறுகிறார்.

அவரும் நாகார்ஜுனா,  கனிஷ்கர் என்னும் குஷான மன்னர் காலத்தவர் என்றே பகர்கிறார் ; அதாவது முதல் நூற்றாண்டு . குணபத்ரா , போதிருசி,  சிக்ஷனந்தா ஆகியோரும் நாகார்ஜுனா பெயரைக் குறிப்பிடுகின்றனர் .

திபெத்திய நூல்களில்தான் இவரைப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை,  இவரை ஒரு மந்திரவாதி என்றும் விதர்ப்ப நாட்டில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கல்யாணமாகியும் நீண்டகாலம் குழந்தை இல்லாமல் இருந்தார் என்றும் எழுதியுள்ளன . மகத சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தாவில் சேரும்படி குருமார் ஸ்ரீ சரக பத்ரா கூறியவாறு அவர் நாளந்தாவில் சேர்ந்தார். அங்கு பெளத்தராகவும் மாறினார்;  சரக பத்ரா இறந்தவுடன் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது  அவருடடைய குருவின் பெயர் ராஹுல என்று திபெத்திய நூல்கள் செப்பும். அவர் உண்டாக்கிய மஹாயான புத்த மதப் பிரிவு திபெத், சீனா, ஜப்பான், கொரியா , மங்கோலியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது

மருத்துவக் கண்டுபிடிப்புகள்

கண்நோய் தீர்க்கும் பல மருந்துகளையும், காயசித்தி உண்டாக்கும் அற்புதக் குளிகைகளையும் நாகார்ஜுனர் கண்டுபிடித்தார். தொலைதூர பிரதேசங்களில் வறுமையை நீக்க அவர் தங்கக்  கட்டிகளைக் கொடுத்து தானியம் வாங்கி விநியோகித்ததாகவும் கதைகள் உண்டு . புத்த கயா என்னும் புனிதத் தலம்,  வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்புச் சுவர்களை எழுப்பிய பெருமையும் அவருக்குண்டு என்று திபெத்திய வரலாற்று ஆசிரியர் தார நாத சொல்கிறார். தென் இந்தியாவில் பல தங்கச் சுரங்கங்களையும் அவர் கண்டுபிடித்தார் .

வேதியியல் (Chemistry) தழைக்கும் வரை மனித இனத்தைப் பசியும் பட்டினியும் பாதிக்காது என்பது அவரது நம்பிக்கை .

யோகரத்னமாலா

அவர் எழுதிய யோகரத்ன மாலா சீன மொழியில் கிடைத்தை அப்படியே ஸ்லோகம் வாரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்; அதைப்  படிக்கும்போது மாயா ஜாலம், மந்திர தந்திரம்தான் நினைவுக்கு வருகிறது;  சுடுகாட்டில் செய்யும் மருந்துகள் , பெண் உறுப்புக்குள் வைத்து எடுக்கும் மருந்துகள், மனித மூளையை எடுத்துச் செய்யும் மருந்துகள், தவளைக் கொழுப்பை வைத்துச் செய்யும் மருந்துகள் என்று நூற்றுக் கணக்கில் இருப்பதால் இதை புத்த மதத் துறவி நாகார்ஜுனா எழுதினாரா அல்லது அவர் பெயரில் பிற்காலத்தில் வந்தவர் எழுதினாரா என்ற வியப்பு மேலிடும் .  ஆயினும் சீன மொழியில் மொழி ஆக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வைத்திருப்பதால் இது புத்த மத நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை .

எனக்கு இந்த யோகரத்னமாலா லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைத்தது. அதிலுள்ள விஷயங்களை நானே உங்களுக்கு எழுத முடியாத விஷயங்களாக இருக்கின்றன ; ஆகையால் நாகரீகம் மிக்க விஷயங்களை மட்டும் எழுதுகிறேன் .

ரசஞ்சனா (பாதரசத்தின் மஞ்சள் நிற ஆக்சைட்), ஷைலஜா (பெர்மெலியா பெறப்போராடா என்னும் செடி), தேன் , யஷ்டி மது (கிளைசீராசா க்ளைப்ரா என்னும் தாவரம்), ஒரு பெண்ணின் முதல் மாத விடாயில் கிடைக்கும் ரத்தம், லாங்குலி மலர்கள் (க்ளோரியோசா சுபர்பா பூ) ஆகியவற்றைக் கொண்டு ஒரு மாத்திரை தயாரியுங்கள் ; இதை வெள்ளி அல்லது தங்கம் அல்லது தாமிர தாயத்துக்குள் வைத்து அணியுங்கள். இதை யார் கழுத்தில் அணிகிறாரோ அவரை மற்றவர்கள் காண (Invisible) முடியாது

இதுபோல நிறைய ஸ்லோகங்கள் உள்ளன. இன்னும் ஒரு கட்டுரையில் அவைகளைக் காண்போம் .

–சுபம்– 

Tags- மறையும் வித்தை, மாயம், நாகார்ஜுனா, யோகரத்ன மாலா , சீன மொழி, நாளந்தா பல்கலைக் கழகம், ரசவாதம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் , மகாயானம்

ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்!- Part 2 (Post No.13,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.123

Date uploaded in London – — 25 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12. Different animals can hear different frequencies of sound

Different sound frequencies are audible to different animals. Dogs, for instance, have significantly higher hearing thresholds than humans do.

வெவ்வேறு மிருகங்கள் வெவ்வெறு விதமான ஒலி அதிர்வெண்களைக் கேட்கும் வல்லமை படைத்திருக்கிறது. நாய்களுக்கு அதிகமான கேட்கும் சக்தி உள்ளது.

13. Some people have perfect pitch

The capacity to recognize or reproduce a particular musical note without any reference is known as perfect pitch. It is believed that this uncommon talent is inherited genetically. One frequently used statistic is that one in 10,000, or.01 percent of persons, are believed to have perfect pitch.

சிலருக்கு நேர்த்தியான சுருதி உள்ளது. உலகில் 0.01 சதவிகிதம் பேருக்கே இப்படி ஒரு சுருதி அமைந்துள்ளது.                               14. The world’s quietest place is in Minnesota 

According to Guinness World Records, the anechoic chamber at Orfield Laboratories in Minnesota is the world’s quietest location. Since the room absorbs 99.99 percent of sound, the lab is known as an anechoic chamber, which means there is no echo. It can make a person crazy.

மின்னஸோட்டாவில் உள்ள ஆர்ஃபீல்ட் சோதனைச்சாலையே உலகிம் மிக அமைதியான இடம்!                                                                   

15. Sound waves can be amplified 

By utilizing a tool like a speaker or microphone, sound waves can be amplified, or made louder.                                                                                                 ஒலி அலைகளைக் கூட்டிப் பெரிதாக்க முடியும்..                               16. Sound waves can be canceled out                 Using a tool like noise-canceling headphones or another similar item can help cancel out sound waves. The original sound wave is eliminated by creating a sound wave that is a perfect mirror image of it.

ஒலி அலைகளை கேன்ஸல் செய்ய – அதாவது இல்லாமல் செய்ய முடியும்.

 17. The loudest sound ever recorded was a volcanic eruption

The Indonesian volcano Krakatoa’s 1883 explosion produced the loudest sound ever heard by humans. The loudest sound ever recorded came from the Earth on August 27, 1883. Krakatau, an uninhabited island between Java and Sumatra in Indonesia, was the source of the volcanic eruption.   

இந்தோனேஷியாவில் 27-8-1883 இல் ஏற்பட்ட க்ராகடோவா எரிமலை வெடிப்பே அதிக ஓசையை எழுப்பிய ஒன்றாகும். 3000 மைல் தள்ளி இருந்தவர்கள் கூட இதைக் கேட்டனர்.

18. Sound can affect your mood                    

It has been demonstrated that sound significantly affects our emotions and mood. For instance, some forms of music might evoke either happy or sad emotions in us. The amygdala reacts to sound very quickly.   

ஒலியானது உங்கள்  மூடை – மனநிலையை – மாற்றவல்லது.

19. Sound can affect our perception of taste.

Our sense of taste can also be influenced by  According to a study, listening to high-pitched music makes food seem sweeter while listening to low-pitched music makes food seem more bitter.                                                                                                      

ஒலியானது நமது ருசி உணர்வை மாற்ற வல்லது.

20. Sound can affect our perception of time

We can perceive time differently as a result of sound. According to a study, listening to rapid music makes people feel as though time is passing more quickly, and listening to slow music makes them feel as though time is passing more slowly.                               

 ஒலியானது காலம் பற்றிய நமது பார்வையை மாற்ற வல்லது.

21. Sound can create standing waves

When a sound wave is reflected back on itself, it can create a standing wave, which appears to be stationary.                                                                                  ஒலியானது பின்னால் பிரதிபலிக்கப்பட்டால் அது நிலையாக இருக்கும் ஒரு அலையை உருவாக்க முடியும்.

நமது வாழ்வு ஒலி இல்லாமல் இல்லை. வார்த்தைகள் மூலமாகவே நாம் பேசுகிறாம். தினசரி வாழ்வில் ஒலி முக்கியம். ஒருவரோடு ஒருவர் தகவலைப் பரிமாறிக் கொள்ள, இசையைக் கேட்க, வேடிக்கைகளை அனுபவிக்க ஒலியே தேவை.

Our lives are not complete without sound, and sound is crucial to how we connect with the world. Sound is a crucial part of our daily lives, from how well we can communicate to how much fun we have listening to music.

***

இது மட்டுமன்றி வேத ரிஷிகள் கூறிய மந்திர மஹிமைகளை, ஒலியின் ஆற்றலை இன்னும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை.

இராமாயண மகாநாட்டில் மந்திரம் ஓதியே யாகசாலை அக்னி  மூட்டப்பட்டதை அனைவரும் அறிவர்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எதிர்காலம் ரிஷிகளின் ஒலி ஆற்றலை மேலும் அதிகமதிகமாக அறிவியல் பூர்வமாகச் சொல்லும்.

காத்திருப்போம்!

***

VOTE FOR GOOD PEOPLE; DO YOU REMEMBER THIS STORY?

DO YOU REMEMBER THIS STORY?

posted by london swaminathan 0n 23rd March 2024

A group of people from the business community decided to celebrate Ganesh Chaturthi by doing Mik Abishekam to Lord Ganesh in the near by temple.  A meeting specially convened for this purpose,  requested all members to come with one pot of milk on the festival day. Each person thought when all others are bringing milk let me take just water. Who is going to find what I did. What difference it is going to make? Since all members thought the same way there was a shocking surprise on Ganesh Chaturthi day. The priest took one pot after another and poured the contents on the head of the Ganesh statue. Nothing but water came from hundreds of pots. All the people slipped away before the priest cursed them.

 This should not happen during this Lok Sabha elections. If each person thinks let me not vote this year. I have a party to attend, I have a business to do, I have to go to work and do overtime so that I get more money etc, your favourite party may lose in the contest.

So, all patriots and all Hindu devotees must give priority for voting on the polling day. They must vote for a pro Hindu, honest patriot. This is a golden opportunity to defeat all corrupt, anti Hindu, anti national elements. Please boycott all anti Hindu Newspapers, TV Channels and support only patriotic forces. Here are some tips,

Do pujas, archanas in temples in support of patriots.

Pray to God to for the victory of Good and Honest candidates.

Don’t forget to vote and make others vote.

Watch and support

PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS

PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS

PLEASE USE ORGANISER. ORG  FOR DAILY ENGLISH NEWS

Swarajya, Republic TV, Janam TV English and Malayalam and Hindu Post also give Pro Hindu reports.

PEASE BOYCOTT ALL ANTI -HINDU NEWSPAPERS.

PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.

PLEASE BUY NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE.

*******

TAGS- vote for , good people, ganesh chaturthi, story

தேசபக்தர்களுக்கு வேண்டுகோள்


VOTE FOR DHARMAposted by london swaminathan on 24th march 2024

PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS

PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS

PLEASE USE ORGANISER. ORG  FOR DAILY ENGLISH NEWS

PEASE BOYCOTT ALL ANTI HINDU NEWSPAPERS

PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.

PLEASE USE ALL NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE

PLEASE SUBSCRIBE TO HINDU POST, REPUBLIC TV, ORGANISER WEEKLY, JANAM TV AND OPINDIA.

நல்லோர் மட்டுமே , தேச பக்தர்கள் மட்டுமே , இந்து மத ஆதரவாளர் மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்று மனதார பிரார்த்தியுங்கள் ; முடிந்தால் கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள்; யாக யக்ஞங்கள் செய்யுங்கள் .

விருப்பப்பட்டால் , எதிரிகளை ஒழிக்கும் அதர்வண வேதப் பிரயோகங்கள், ஆ பிசார யக்ஞங்களை, சத்ரு சம்ஹார பூஜைகளைச்  செய்யுங்கள் . கோவில் அர்ச்சகர்கள் தினமும் நல்லோ ருக்காக ஒரு அர்ச்சனை செய்யலாமே.

பிராத்தனைக்கு மகத்தான சக்தி உண்டு

xxx

ஒரு வோட்டிலும் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால்

வோட்டுப்போட மறக்காதீர்கள்; வேறு எல்லாப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு

 வோட்டுப்போடுங்கள் . என் ஒரு வோட்டுதானே ; இது  ஒன்றும்  பெரிய விஷயமில்லை என்று நினைக்காதீர்கள் . இப்படி 100பேர் நினைத்தால் கூ ட எதிரிகள் வென்று விடுவார்கள் .

வோட்டுப்போடாமலிருப்பது அதர்மத்தை ஊக்குவிக்கும் மஹா பாபச் செயல் ..

எல்லா வேலைகளையும், பயணங்களையும் ஒத்திவைத்துவிட்டு வோட்டுப்போடுங்கள் .

நீங்கள் வோட்டுப்போடவில்லையானால் , உங்களுடைய எதிரிகள் கள்ள வோட்டுப்போட வாய்ப்பும்  உண்டு

தர்மம் வெல்க ; சத்திய மேவ ஜயதே(முண்டகோபநிஷத் ); வாய்மையே வெல்லும் !

–SUBHAM–

VOTE FOR DHARMA, தேசபக்தர்களுக்கு வேண்டுகோள் 

More Quotations from Garuda Purana; April 2024 Calendar (Post No.13,122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,122

Date uploaded in London – –   24 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Festival Days-

APRIL 9-  TELUGU NEW YEAR, 11- RAMADAN,  14- TAMIL NEW YEAR DAY, 17- SRI RAMA NAVAMI, SHIRADI SAIBABA JAYANTHI, 21- MAHAVIR JAYANTHI, MADURAI MEENKAKSHI KALYANAM, 22- MADURAI CHARIOT FESTIVAL , 23- MADURAI KALLALAKAR VAIGAI RIVER FESTIVAL,CHITRA PURNIMA

New Moon Day- APRIL 8 (SOLAR ECLIPSE IN AMERICA ETC)

Full Moon Day- 23

Ekadasi Fasting Days- 5, 19

Auspicious Days- 4, 5, 15, 21, 22, 26

April 1 Monday

1.111.12. He is a wise man who regards another man’s wife as his mother, another man’s wealth as a lump of clay and all living beings like himself.

xxxx

April 2 Tuesday

1.113.33. A well-assimilated knowledge never diminishes; it increases on being imparted to others like the water in a well which increases when water is drawn out.

xxxx

April 3 Wednesday

1.113.30. Just as a gale blows a boat, the karma drags a man against his wish even from foreign countries to the place where he has to reap the fruits.

xxxx

April 4 Thursday

1.113.36. Of all purities, purity of food is excellent. If a man incurs impurity by taking unwholesome food, he cannot be cleansed with clay or water or any other substance of cleanliness.

xxxx

April 5 Friday

1.113.37. These are five cleansing agents – truthfulness, pure mind, suppression of sense organs, sympathy with all living beings and water, the fifth of the series.

xxxx

April 6 Saturday

1.113.49. A man gets only those things he is destined to get; he goes only to those places where he has to go (at the behest of karma) and whether misery or pleasure he gets only what he has to get.

xxxx

April 7 Sunday

1.113.48. If the time of death has not been reached no one dies even if pierced with a hundred arrows. If the same has arrived he does not survive even a slight prick with the tip of a kusa grass.

xxxx

April 8 Monday

1.113.40. He who keeps his hands and feet clean, his mind under perfect control, and acquires learning, penance and fame, reaps the fruit of pilgrimage.

xxxx

April 9 Tuesday

1.113.38. He who maintains truthfulness and purity finds an easy access to heaven. Truthfulness is superior to even horse sacrifice.

xxxx

April 10 Wednesday

1.113.50. A man gets things from karma only. Why should he shout and cry? Even if prodded, flowers and fruits do not transgress their stipulated time (they do not come out earlier or later). So is the case with karma of the previous birth.

xxxx

April 11 Thursday

1.114.9. O Saunaka, if there is no opportune moment, if there is no privacy and if there is no one to make overtures, women shall preserve chastity.

xxxx

April 12 Friday

1.113.53-56. Just as a calf can recognize its mother in the midst of a thousand cows, the previous karma approaches the doer. Enjoy your merits, o fool! Why should you feel aggrieved? What you do now will certainly follow you hereafter whether good or bad.

xxxx

April 13 Saturday

1.109.3. The residence in hell is better than that in a house of evil conduct. By the former, one’s sins are washed away whereas there is no redemption from the latter.

XXXX

April 14 Sunday

1.109.6. What purpose can be served by the riches in the hands of a miser? Of what avail to men can that knowledge be that is tarnished by a roguish disposition? Of what avail is beauty bereft of good qualities and valour? Of what value is a friend who turns his face away at the time of misfortune?

xxxx

April 15 Monday

1.113.58. O brahmana! Nowhere can they find happiness, who are defiled by lust and hatred. After careful consideration I see that there is pleasure where there is enlightened bliss.

xxxx

April 16 Tuesday

1.113.59. Attachment is a cause of misery; since apprehension follows in the wake of attachment. If, therefore, attachment is eschewed one should be happy.

xxxx

April 17 Wednesday

1.113.60. The body is the base for misery and happiness. Life and body are born together.

xxxx

April 18 Thursday

1.113.61. Pleasure and pain can be defined briefly. Whatever goes in the possession of others is misery, whatever remains in one’s possession is pleasure.

xxxx

April 19 Friday

1.113.63. What has passed has gone forever; if anything is to happen it is still far off. He who minds the present alone is not afflicted by sorrow.

xxxx

April 20 Saturday

1.113.62. After pleasure comes the pain and after pain comes the pleasure. Pleasure and pain whirl like wheels in human life.

xxxx

April 21 Sunday

1.113.57. The vicious and the mean observe other’s faults, be they so little as the mustard seeds. They see but pretend not to see their own faults as big as bilva fruits.

xxxx

April 22 Monday

1.114.5. If you wish for a prolonged friendship, avoid the following three, gambling with him, monetary transactions with him and seeing his wife in his absence.

xxxx

April 23 Tuesday

1.114.6. One should not sit in the same seat with one’s mother, sister and daughter in an isolated place. The powerful sense organs can drag even an erudite man (into the mire of lust). What of common men?

xxxx

April 24 Wednesday

1.109.5. One should unhesitatingly abandon a country infested with men of evil conduct, a residence of harassing environment, a king of miserly temperament, and a friend of deceptive disposition.

XXXX

April 25 Thursday

1.114.4. Men cannot have as much confidence in mothers, wives, brothers or sons as in a friend of kindred nature.

xxxx

April 26 Friday

1.114.3. If anyone says for once the two letters “Hari” he has everything made ready for his journey to salvation.

xxxx

April 27 Saturday

1.114.2. The two syllables “mitram” (friend) signify solace in sorrow, freedom from fear and preservation of love and confidence. By whom has this jewel been created?

xxxx

April 28 Sunday

1.114.1. None is friend or enemy to any other person by nature. Friendship and enmity arise from special causes.

xxxx

April 29 Monday

1.114.8. It is easier to gauge the velocity of the hailstorm at the time of the final dissolution, the speed of the racing horse and the depth of the great ocean than the heart of the person who does not love.

xxxx

April 30 Tuesday

1.114.15. Do not allow others to see your vulnerable points; but note others carefully like a tortoise that keeps all its limbs safe in its shell.

xxxx 

BONUS QUOTES

1.113.45. During nights birds flock together on a tree for rest. In the mornings they go to different quarters. What is there to lament over?

xxxxx 

1.114.7. God of love compels persons to turn their attention to such spots as provide risks, death and punishments and not to one’s own? [i.e. People do not love their wives but run after other women risking even death].

—-subham—

Tags- Garuda Purana, Golden sayings, April 2024, Calendar, More Quotes,quotations

மேலும் 30 கருட புராண பொன் மொழிகள்; ஏப்ரல் 2024 காலண்டர் (Post.13,121)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,121

Date uploaded in London – –   24 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மேலும்  30 கருட புராண பொன்மொழிகள் ஏப்ரல் 2024 காலண்டர்

பண்டிகை நாட்கள் –ஏப்ரல் 9-  தெலுங்கு புத்தாண்டு, 11- ரம்ஜான்,  14- தமிழ்ப் புத்தாண்டு, 17- ஸ்ரீ ராம நவமி, ஷீரடி பாபா பிறந்த நாள், 21- மஹாவீர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், 22- மதுரையில் தேர் திருவிழா , 23- சித்ரா பெளர்ணமி, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.

அமாவாசை – 8  (அமெரிக்கா முதலிய நாடுகளில் சூரிய கிரகணம்)

பெளர்ணமி – 23

ஏகாதசி விரத நாட்கள் – 5, 19

முகூர்த்த நாட்கள்- 45, 15, 21, 22, 26

ஏப்ரல் 1 திங்கட் கிழமை

மற்றவர்களின் மனைவியைத் தாயாக நினைப்பவனும், மற்றவர்களின் செல்வத்தைக் களிமண் கட்டியாக  நினைப்பவனும், எல்லா உயிரினங்களையும் தன்னைப்போல நினைப்பவனும்,  புத்திசாலியானவன். 1.111.12.

xxxx

ஏப்ரல் 2 செவ்வாய்க் கிழமை

ஒருவன் கற்ற கல்வி குறையவே குறையாது ; ஒரு கிணற்றில் எடுக்கப்பட்ட நீர் எப்படி மீண்டும் மீண்டும் ஊறுமோ அவ்வாறே  கல்வியும் மற்றவர்களுக்கு கொடுக்கக் கொடுக்க அதிகரிக்கும் . 1.113.33

xxxx

ஏப்ரல் 3 புதன் கிழமை

எப்படி ஒரு படகினைப் புயல் காற்று இழுத்துச் செல்லுமோ அப்படி ஒருவனை அவன் செய்த வினைப்பயன் இழுத்துச் செல்லும் ; அவன் வெளிநாட்டிலிருந்தாலும் எந்த இடத்தில் வினையை அனுபவிக்கவேண்டுமோ அந்த இடத்துக்கு இழுத்துவரும் 1.113.30.

xxxx

ஏப்ரல் 4 வியாழக் கிழமை

பின்வரும் ஐந்தும் ஒருவனைத் தூய்மையாக்கும்: சத்தியம், நல்ல எண்ணம், புலனடக்கம், உயிர்களிடத்தில் கருணை, தண்ணீர் 1.113.37. 

xxxx

ஏப்ரல் 5 வெள்ளிக் கிழமை

விதிப்படியே ஒருவனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கிறது. கர்ம வினைப்படியே அவன் ஒரு இடத்துக்குச் செல்கிறான்.அதன்படி இன்பமோ துன்பமோ நேரிடுகிறது 1.113.49.

xxxx

ஏப்ரல் 6 சனிக் கிழமை

சுத்தமான உணவே சிறந்தது; சுத்தமற்ற உணவை உட்கொண்டால் மண் அல்லது நீர் அல்லது தூய்மைப்படுத்தும் எந்தப் பொருளும் அவனைத் தூய்மைப் படுத்தாது  1.113.36.

xxxx

ஏப்ரல் 7  ஞாயிற்றுக் கிழமை

ஒருவன் இறக்கும் தருணம் வராவிடில் 100 அம்புகள் துளைத்தாலும் அவன் உயிருடன் இருப்பான் ; இறுதிக்காலம் வந்து விட்டாலோ தர்ப்பைப்புல்  குத்தினாலும் மரணம் வரக் கூடும்  1.113.48.

xxxx

ஏப்ரல் 8 திங்கட் கிழமை

யாத்திரையில் பலன் கிடைக்க மனதும் கைகால்களும் சுத்தமாக இருக்க வேண்டும் . அப்படிப்பட்டவர்களுக்கு கல்வியும், தவமும், புகழும் கிட்டும் -1.113.40.

xxxx

ஏப்ரல் 9 செவ்வாய்க் கிழமை

சத்தியத்தைக் கடைப்பிடிப்பது யாகங்களைவிடச் சிறந்தது; நேர்மையும் தூய்மையும் சொர்க்கத்தின் கதவுகள் –1.113.38.

XXXX

ஏப்ரல் 10 புதன் கிழமை

மித்ரம் = நண்பன் என்ற சொல் துன்பத்தில் ஆறுதல் தரும்; பயத்திலிருந்து விடுவிக்கும்; அணைப்பினையும் நம்பிக்கையையும் பொழியும்; யார் இந்த அற்புதமான சொல்லை உருவாக்கினாரோ !!-1.114.2.

xxxx

ஏப்ரல் 11 வியாழக் கிழமை

அவரவர்களுக்கு பூர்வ ஜன்ம கர்ம வினைப்படி உரிய காலத்தில் பலன் கிடைக்கிறது. இதில் அழுவதற்கோ கூச்சல் போடவோ  என்ன இருக்கிறது? பழங்களையும் பூக்களையும் முன்கூட்டி பலன் தரச் செய்ய இயலுமா? 1.113.50.

xxxx

ஏப்ரல் 12 வெள்ளிக் கிழமை

கருமி கையிலுள்ள பணத்தால் என்ன பலன்? முரட்டு சுபாவமுள்ளவனுக்கு கல்வித் தகுதியால் என்ன பலன்?  நல்ல குணமும் வீரமும் இல்லாதவனுக்கு அழகினால் என்ன பலன்? கஷ்டம் வரும்போது ஓடிவிடும் நண்பனால் என்ன பலன்? 1.109.6.

XXXXxxxx

ஏப்ரல் 13 சனிக் கிழமை

தீயோர் வாழும் இடமானது நரகத்தைவிட மோசமானது ; உடனே வெளியேறவேண்டும்; ஏனெனில் நரகத்தில் இருந்தால் பாவம் முழுவதும் தீரும்; தீயோரிடையே வாழ்வது மேலும் பாவம் உண்டாக்கும் 1.109.3..

XXXX

ஏப்ரல் 14  ஞாயிற்றுக் கிழமை

ஏமாற்றும் குணமுள்ள நண்பனையும் கருமித்தனமான அரசனையும், தொல்லைகள் நிரம்பிய வீட்டினையும் , தீயோர் நிரம்பிய நாட்டினையும் விட்டு வெளியேறத் தயங்கக் கூடாது 1.109.5.

XXXX

ஏப்ரல் 15 திங்கட் கிழமை

ஆயிரம் பசுக்களிடையே ஒரு கன்று தன்னுடைய தாயை நோக்கி எப்படி ஓடிவருகிறதோ அதுபோல ஒருவனுடைய பூர்வ ஜென்ம வினை அவனை நோக்கி ஓடிவரும். கர்ம வினையை அனுபவித்தே ஆக வேண்டும்; இப்போது செய்யும் நல்வினை, தீவினையும் உங்களைத் தொடர்ந்து வரும் 1.113.53-56.

xxxx

ஏப்ரல் 16 செவ்வாய்க் கிழமை

கீழ்மக்கள் மற்றவர்களின் குறைகளை மட்டுமே காண்பார்கள் . கடுகளவு குறை இருந்தாலும் அதைப் பார்ப்பார்கள்; வில்வப்பழ அளவுக்குள்ள அவர்களுடைய குறைகளை கண்டும்  காணாதது  போல பாசாங்கு செய்வார்கள்1.113.57

xxxx

ஏப்ரல் 17 புதன் கிழமை

வெறுப்பும் காம உணர்வும் உள்ளவர்களுக்கு எங்குமே இன்பம் கிடைக்காது ; அறிவார்ந்த ஞானம் உள்ளவர்களுக்கு நித்யானந்தமே 1.113.58

 xxxx

ஏப்ரல் 18 வியாழக் கிழமை

பற்றும் பாசமும் துன்பத்திற்கு கரணம்; ஏனெனில் அதைத் தொடர்ந்து அச்சமும் வரும்; ஆகையால் பற்றினை விட்டால் ஆனந்தம் கிட்டும் 1.113.59.

xxxx

ஏப்ரல் 19 வெள்ளிக் கிழமை

இன்ப துன்பத்திற்குக் காரணம் நமது உடல்தான்; உயிரும் உடலும் இணைந்தே இருக்கும் 1.113.60.

xxxx

ஏப்ரல் 20 சனிக் கிழமை

இன்பத்தையும் துன்பத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்; நம்முடையது பிறர் கையில் போவது துன்பம்; நம்மிடம் மிச்சம் இருப்பது இன்பம்.1.113.61.

xxxx

ஏப்ரல் 21  ஞாயிற்றுக் கிழமை

இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருகிறது ; துன்பத்தைத் தொடர்ந்து இன்பம் வருகிறது; மனித வாழ்வில் இது சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும் 1.113.62.

xxxx

ஏப்ரல் 22 திங்கட் கிழமை

சென்றது இனி மீளாது; போனது போனதுதான்; வரப்போவதோ தொலைவில் இருக்கிறது;  ஆகையால் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவனே துன்பமற்றவன் 1.113.63.

xxxx

ஏப்ரல் 23 செவ்வாய்க் கிழமை

பிறக்கும்போதே எவரும் நன்பணுமில்லை; எதிரியுமில்லை ;நம்பும் பகைமையும் சில செயல்களால் ஏற்பட்டதே 1.114.1.

XXXX

ஏப்ரல் 24 புதன் கிழமை

ஒரு ஆமை தனது உறுப்புகளை எப்படி ஓட்டிற்குள் பாதுகாக்கிறதோ  அவ்வாறு

உன்னுடைய பலவீனத்தை மற்றவர்கள் அறியமுடியாதபடி பாதுகாத்துக்கொள் –1.114.15.

xxxx

ஏப்ரல் 25 வியாழக் கிழமை

ஹரி என்ற இரண்டு எழுத்துக்களை எவன் ஒருவன் ஒரு முறையாவது உச்சரிக்கிறானோ , அவன் முக்திக்கான பாதையில் அடிவைத்துவிட்டான் என்று பொருள் – 1.114.3.

XXXX

ஏப்ரல் 26 வெள்ளிக் கிழமை

தாயை விட , மனைவியை விட , சகோதரர்களை விட , புதல்வர்களை விட , ஆப்த நண்பனிடத்தில் மனிதன் நம்பிக்கை வைக்கிறான் –1.114.4.

XXXX

ஏப்ரல் 27 சனிக் கிழமை

உங்கள் நண்பனிடத்தில் நிலைத்த நட்பு நீடிக்க வேண்டு மானால் அவனுடன் சூதாடாதீர்கள் ; அவனுடன் பண விஷயத்தில் ஈடுபடாதீர்கள் (முதலீடு, கடன்), அவன் மனைவியை அவன் இல்லாதபோது சந்திக்காதீர்கள் –1.114.5.

XXXX

ஏப்ரல் 28  ஞாயிற்றுக் கிழமை

தனிமையான இடத்தில் ஒரு மனிதன் தன்னுடைய தாயார்  அல்லது சகோதரி அல்லது புதல்வியுடன் அமரக்கூடாது ; படித்த அறிஞனையும் கூட காமப்பிசாசு ஒரு நொடியில் அ ழித்துவிடும்; பாமரன்படும்பாட்டை சொல்லவும் வேண்டுமா?-1.114.6.

xxxx

ஏப்ரல் 29 திங்கட் கிழமை

மன்மதனின் லீலைகள் அளப்பரியது — அபாயமும் மரணமும் தண்டனைகளாலும் களும் நிறைந்த இடத்திற்கு ஒருவனை அழைத்துச் சென்றுவிடுவான் (மனைவியை விட்டு மரணத்தைக் கொடுக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போவான்)–1.114.7.

xxxx

ஏப்ரல் 30 செவ்வாய்க் கிழமை

யுக முடிவில் வீசும் ஆலங்கட்டி மழைக் காற்றின் வேகத்தைக் கண்டுபிடிப்பது எளிது; பந்தயத்தில் ஓடும் குதிரையின் வேகத்தைக்கூட கண்டுபிடித்துவிடலாம்; சமுத்திரத்தின் ஆழத்தைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால் அன்பில்லாத ஒருவரின் இதயத்தின் ஆழத்தை அளக்கவே முடியாது  -1.114.8.

BONUS QUOTES

இரவு நேரத்தில் பறவைகள் ஓய்வெடுக்க மரங்களுக்கு வருகின்றன ; காலையில் அவை வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன ; இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?-1.113.45. (வாழ்க்கையும் அப்படித்தான்)

xxxxx

ஒரு பெண்ணின் கற்பு எ துவரை நீடிக்கும் தெரியுமா? சந்தர்ப்பம் கிடைக்காத வரை, தனிமை கிடைக்காதவரை, மற்ற ஆண்கள் அணுகாதவரைய மட்டுமே நீடிக்கும் 1.114.9.

—subham—

Tags- மேலும் 30,  கருட புராண,  பொன்மொழிகள்,  ஏப்ரல் 2024 காலண்டர்

ஒலி பற்றிய அரிய அறிவியல்  உண்மைகள்!-1 (Post No.13,120)

ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்!-1 (Post No.13,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.120

Date uploaded in London – — 24 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்!

ச.நாகராஜன்

விஞ்ஞான அறிவியல் கட்டுரை ஒன்றை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. அதன் சுருக்கமே இது.

ஆதாரம் & நன்றி :

20 Interesting Facts About Sound You Probably didn’t Know

ஒலி பற்றிய அரிய உண்மைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில இதோ:                                                                                                                       

1. Sound travels through a medium                         Sound requires a medium to travel through, such as air, water, or a solid object because it cannot travel through a vacuum. This explains why there is no sound in space .     

ஒலி ஒரு மீடியத்தின் –  ஊடகத்தின் -வாயிலாகவே செல்கிறது. காற்று, நீர், அல்லது ஒரு திடப் பொருள் ஆகியவற்றின் வழியே தான் ஒலி செல்ல முடியும். அது  வெற்றிடத்தில் (வாக்குவம்) செல்ல முடியாது. ஆகவே தான் விண்வெளியில் ஒலி இல்லை.                                                

2. Sound travels in waves

Due to the fact that sound waves are longitudinal waves, the medium’s particles vibrate back and forth in the same direction as the sound wave’s motion. Sound waves are produced by these vibrations and travel through materials including wood, water, and the air.

ஒலி அலை அலையாகவே செல்லும். மரம், காற்று, நீர்  ஆகியவற்றின் வழியே இப்படிச் செல்லும்.

3. Sound waves can be reflected, refracted, and diffracted

Sound waves can be reflected, refracted, and diffracted much like light waves can.

ஒலி அலைகளை பிரதிபலிக்க வைக்க முடியும். கோட்டமுறச் செய்ய முடியும். ஒளிக்கதிர் சிதைவை அடையச் செய்ய முடியும்.

4. The speed of sound depends on the medium Different media transmit sound at varying speeds. Sound, for instance, travels more quickly through metal than through wood and through water than through air. However, humidity and temperature can have an impact on this speed.                                          

ஒலியின் வேகம் அது செல்லும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். ஆனால் உஷ்ணநிலையும் , ஈரப்பதமும் கூட இதைப் பாதிக்கும்.

5. Sound can be measured in decibels             

The intensity of sound is measured using a logarithmic scale known as decibels (dB). The threshold of hearing is 0 dB, while the human ear can hear noises up to 120 dB. (the threshold of pain).

ஒலியை டெசிபல் மூலமாக அளக்கலாம். மனித காது 0 முதல் 120 டெசிபல் வரை கேட்கும்.

6. Sound can damage your hearing

Your hearing can be harmed by extended exposure to loud noises. Any injury to the ear might cause hearing loss. The inner ear is highly sensitive to loud noise (cochlea).

ஒலி உங்கள் செவிப்புலனின் கேட்கும் ஆற்றலைப் பாதிக்கும். அதிகமான ஒலி இந்த கேட்கும் ஆற்றலை இழக்கச் செய்யும்.

7. Sound can be used to treat medical conditions

In sound therapy, which is a form of complementary medicine, different medical disorders like anxiety, depression, and pain are treated with sound.                

மருத்துவத்தில் சிகிச்சைக்கு ஒலி உதவி செய்ய முடியும். இது சவுண்ட் தெராபி என அழைக்கப்படுகிறது.

8. The Doppler effect affects the pitch of sound

The term “Doppler Effect” describes the shift in wave frequency that occurs when a wave source and its observer move in relation to one another. Christian Johann Doppler made the discovery and defined it as the process of rising or falling starlight depending on the relative motion of the star.                                                                              

டாப்ளர் எபெக்ட் என்ற விதி அலை அதிர்வெண்ணில் ஏற்படும் மாறுதலைப் பற்றிக் கூறுகிறது. ஒரு ஒலி அலை உங்களை நோக்கி வரும் போது அதை நோக்கி நீங்கள் சென்றீர்கள் என்றால் இது ஏற்படும்.                                                                                                 

9. Sound can be used to levitate objects          

Sound waves are used in the process of acoustic levitation to suspend items in the air. ஒலியால் ஒரு பொருளை உயரத் தூக்க முடியும்.

10. Sound can be used to start fires

A category of modern art known as “sound art” makes use of sound as its main medium. Sound installations, performances, and recordings all fall under this category.      ஒலியால் தீயை உருவாக்க முடியும்!

11. Sound can be used to create art                        

A category of modern art known as “sound art” makes use of sound as its main medium. Sound installations, performances, and recordings all fall under this category.               ஒலி ஒரு கலை.

TO BE CONTINUED………………………

Deep rooted Mahabharata Story in Tamil Nadu Villages (Post No.13,119)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,119

Date uploaded in London – –   23 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx


Mahabharat story has been narrated in thousands of villages in South India and Sri Lanka by villagers. There are over 1000 Draupadi Amman (Goddess) temples and Dharmaraja (Yudhisthira) temples in the villages. They celebrate Mahabharata episode called Duryodhana in Battlefield (In Tamil Padukalam) during summer season. In almost all the villages one can see certain common factors:

1.A big colourful Duryodhana figure up to 120 foot long is made in the ground with mud and other stuff.

2.Mahabharata Story is told every day for 18 days before the final day.

3.The final day is 18th day ; all Indians know the 18 day war ended with the killing of Duryodhana by Bhima, the mightiest of the Pandavas. Draupadi, wife of Five Pandavas made a vow when she was undressed in the assembly of Duryodhana that she would not dress her hair until Duryodhana’s blood is used as oil for her hair. Her vow was fulfilled by Bhima. This is enacted on the final day where the villagers divide themselves and fight as Pandavas and Kauravas .

4.The interesting fact is the whole event involves non-Brahmins. In the cities,  Mahabharata discourses, debates, dramas are mostly organised by Brahmins and other high castes.

5.Along with the Duryodhana battlefield event, Fire Walking Ceremony also held in most of the villages where men and women walk on a bed of fire.

6.All Tamil Newspapers report this event every year with pictures. English newspapers turn a blind eye to this event because English newspapers are rarely read in villages.

xxxx


What does it show?

Mahabharata is not new to Tamils. 2000 years ago Sangam period Tamils mentioned important episodes of Mahabharat in their poems.

Madurai Tamil Academy (Called Tamil Sangam) translated the whole story, the longest epic in the world with over two lakhs lines (200,000 lines)

Unfortunately we get only a very late work that too only in parts (Villiputturar Bharatham).

But the Mahabharata incidents mentioned by the Sangam Tamil poets and post Sangam Poets ( Tamil Kavya Silappdikaram etc) show that the story was known to both literates and illiterates in cities and villages of Tamil Nadu and Sri Lanka.

River Ganges, Himalayas, Arundhati, Saptarishis, Krishna- Gopi Sari episode on the banks of Yamuna, Indra- Ahalya episode and hundreds of such episodes are mentioned in 2000 year old poems. Later, around 7th century , we see thousands of references in Divya Prabandham and Thevaram. Even Saivite poets of Thevaram and later Thiruppugaz mentioned them.

Sangam Tamils were mostly Hindus. And their 2500 poems by 450 poets reflect Hindu values and Hindu beliefs. But the most amazing thing is that illiterate and neo literates of villages remember the story and celebrate it in their own ways.

In the villages of South India one can hear many Pandava stories which are not in Vyasa’s grandest epic. Arjuna- Allirani Love Ballad (may be Chitrangada of Mahabharata) and other ballads are very popular in Tamil Nadu.

They all proclaim ‘Truth alone Triumphs’. Evil will be destroyed completely.

(Pictures are taken from Tamil Newspapers; thanks)

We have archaeological records for Draupadi Amman worship from Pallava period.

xxx

In Sri Lanka

Udappu is a fishing village near Chilaw in the North Western Province of Sri Lanka where the people are Hindus and observe the Mahabharatha predominantly as their holy text. The story of the trials, tribulations and finally triumph of the five Pandava brothers and their wife Draupadi will be enacted in various forms culturally at this festival, culminating in a village wide fire walking event, which is a popular tourist attraction.

The 18-day period is spent in prayer and fasting, with a priest reciting the Mahabharata epic to remind everyone of the story of Draupadi, the five Pandava brothers’ common wife, whose chaste and virtuous ways enabled her to recover the kingdom they been deprived of by King Duryodhana. The Draupadi festival comes to a conclusion on the final evening when the entire male population of Udappu walk barefoot over a bed of red hot coals without injury in a ceremony called Tee Mithi in Tamil language. Sri Lanka

xxxxx

Thimithi Festival/ Fire Walking

Thimithi festival or Theemithi festival, known commonly as the fire walking festival, is celebrated in the southern state of Tamil Nadu.

This international Hindu festival is celebrated by Tamilian populations in Malaysia, Singapore, Sri Lanka and Mauritius, usually takes place in the month of Aipasi (or Aippasi) of the Tamil calendar (or October and November according to the Gregorian calendar)

Plays from the Mahabharat are performed during the two weeks prior to the festival, there is a symbolic marriage event of Arjuna and Draupadi along with the older rituals of using neem leaves (used for healing epidemics like smallpox) and wearing yellow clothes to denote prosperity for the rain to bring successful harvests.

The path which one has to walk on is made by digging a large pit and burning sandalwood (which has religious significance in the region) for hours to reduce it to burning embers.

–Subham–

Tags – Duryodhana , Battlefield episode, Padukalam, Tamil villages, Mahabharata, story, narration, Drapadi Amman, Yudhisthira, Dharmaraja

தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்; கிராமம் தோறும் நாடகம் ! (Post.13,118)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,118

Date uploaded in London – –   23 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்கிராமம் தோறும் மஹாபாரத நாடகம் !

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஒரு அதிசயத் திருவிழா ஆயிரக்கணக்கான ஊர்களில் ஆயிரக் கணக்கான கோவில்களில் நடக்கிறது ; அதாவது, மகாபாரதத்தின் கடைசி நாள் போர் நடித்துக் காண்பிக்கப்படுகிறது . மஹாபாரதப் போரில் 18-ம் நாள் போரில் துரியோதனனை பீமன் கொல்லுவதை பெரிய அளவில் நடித்துக் காட்டி தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் என்று காட்டுகிறார்கள் ; கீழே இணைத்ததுள்ள பத்திரிக்கைச் செய்திகள் நாலைந்து கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகள்தான் . ஆயினும் இவைகளில் உள்ள பொதுவான அம்சங்கள் மஹாபாரதம் கிராம மக்கள் வாழ்வில் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது . சங்க காலத்திலேயே மஹாபாரதம் மக்கள் மனதில் வேரூன்றியதை சங்க இலக்கிய புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவிட்டனர். பின்னர் வந்த சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யபிரபந்தம், திருப்புகழில் மஹாபாரத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை தவிர அர்ஜுனன்- அல்லிராணி காதல் பாடல்கள் நாட்டுப்புறத்தில் உள்ளன. மதுரைத் தமிழ்ச்சங்கம் மகாபாரதத்தை மொழிபெயர்த்ததாக கல்வெட்டுகள் பேசுகின்றன.பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் பாரதம் உள் பட நிறைய பாடல்கள் கிடைக்கின்றன.

பொது அம்சங்கள்

கிராமம்தோறும் திரவுபதி அம்மன் கோவில் அல்லது தர்மராஜா (யுதிஷ்டிரன்) கோவில் இருக்கிறது.

அங்கு கோடை காலத்தில் துரியோதனன் படுகளம் என்ற பெயரில் விழா நடக்கிறது .

18 நாட்களுக்கு மஹாபாரத சொற்பொழிவு நடத்தப்படுகிறது

பல கிராமங்களில் ஒவ்வொரு நாளும் அந்த நிகழ்ச்சியை கிராம இளைஞர்கள் நடித்துக் காட்டுகினறனர் .

அப்பொழுது பிரம்மாண்டமான துரியோதனன் உருவத்தைச் செய்து வண்ணங்களால் அலங்கரிக்கின்றனர் .

18ம் நாளில் அவனை பீமன் கொல்வதைக் காண சுற்று வட்டார கிராம மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூடுகின்றனர்

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் பிராமணர் அல்லாதோர் நடத்தும் கோவில்களில் இவை நடைபெறுகின்றன. மக்களின் அடிமட்டம் வரை மஹாபாரதம் ஆழமாகப் பரவியதை இது காட்டுகிறது.

இந்தச் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு நன்றி  யூ ட்யூபிலும் இவைகளைக் காண முடிகிறது .

நான் எழுதிய இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  என்ற நூலில் இந்த திரவுபதி அம்மனும் மஹாபாரத நிகழ்ச்சிகளும் இலங்கை வரை பரவி இருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளேன் .

XXXX

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி- பக்தர்கள் பங்கேற்பு

By மாலை மலர்21 மார்ச் 2024

மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது . துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

XXXX

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

APRIL 16, 2023 DAILY THANTHI

ராணிப்பேட்டை

நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி அக்னி வசந வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் செய்யப்பட்டு அதனை சுற்றி பீமனும், துரியோதனனும் பாடல் பாடி ஒருவரையொருவர் சண்டையிட்டுகொண்டனர்.

தொடர்ந்து கட்டைக்கூத்து கலைஞர்கள் பீமன், துரியோதனன் வேடமிட்டு பீமன் துரியோதனனை கொல்லும் நிகழ்ச்சியை நடித்துக் காட்டினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

XXXX

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

UPDATED : ஏப் 14, 2023 11:41 AM

ADDED : ஏப் 14, 2023 11:41 AM DINAMALAR

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை தர்மராஜா கோவில் தெருவில், ஏழு கிராமங்களுக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த மாதம், 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கிருஷ்ணகிரி செல்வநாடக சபா குழுவினரின், பல்வேறு இதிகாச மஹாபாரத தெருக்கூத்து கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன

நேற்று, இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் முன்பு, 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை மண்ணால் செய்து, அதில் பீமனும், அர்ச்சுணனும் போரிடும் காட்சிகள் நடத்தி, இறுதியில், போர் வாளால் துரியோதனனை அர்ச்சுணன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரவுபதி அம்மனை துரியோதனன் உடல் மீது வைத்து சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தன. இதில், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஏழு ஊர் நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

XXXX

தினத்தந்தி மே 7, 2023

வாணியம்பாடியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் உள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன

இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத உருவத்தை உருவாக்கி பீமன் தன் கையில் வைத்துள்ள கதாயுதத்தால் துரியோதனின் முட்டி பகுதியில் தாக்கி பட

XXXXX

திண்டல் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி Byமாலை மலர்11 மார்ச் 2023

கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும், பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டிய காட்சி.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் திண்டல் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 7 கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கை.

திண்டல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 7கிராம மக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார்.

அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவு பொழுதில் கூத்துக்கலைஞா்கள் நடித்துக்காட்டுவார்கள். இதனையடுத்து மஹாபாரத சொற்பொழிவில் நேற்று 18 ம் நாள் 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் நாடக சபா கோபால் மற்றும் கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம்  தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா். இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்ற சென்றனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் தர்மகர்த்தா, மண்டு கவுண்டர் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
XXXXX

வந்தவாசி மருதாடு கிராமத்தில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். இதற்கிடையே இந்தாண்டு அக்கி வசந்த விழா கடந்த மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் திரௌபதியம்மன் கோயில் முன்பாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக கட்டைக்கூத்து நாடக கலைஞர்களால் மகாபாரத நாடகம் தினமும் இரவு நேரத்தில் அரங்கேற்றி வந்தது.

இதற்கிடையே மகாபாரத இறுதியில் துரியோதனை பீமன் வதம் செய்து துரியோதனின் உதிரத்தை பஞ்சாலி கூந்தலில் தடவி கூந்தலை முடிக்கும் சாப நிறைவேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

இதில் துரியோதனை பீமன் வதம் செய்யும் படுகளம் நிகழ்வை மறுதாடு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

XXXX

எறும்பூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த எறும்பூர்
எறும்பூர் கிராமத்தில் 21 ஆண்டுக்கு பிறகு திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மகா பாரத

சொற்பொழிவும், கண்ணன், தர்மன், பீமன், நகுலன் ஆகிய உற்சவ சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும்
நடைபெற்றது. துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர். இதில் சென்னை, காஞ்சீபுரம், வந்தவாசி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

xxxxx

துரிஞ்சிகுப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், துரியோதனன் படுகளமும், தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில்  ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 1-ஆம் தேதி மகாபாரத அக்னி வசந்த  பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக – அலங்காரங்களும் நடைபெற்றது. இதனையடுத்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும், இதிகாச நாடகங்களும் நடைபெற்றன., விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் சிறப்பாக நடைபெற்றது.  களிமண்ணால் துரியோதனன் உருவபொம்மை வடிவமைக்கப்பட்டு, பூசாரிகளின் சிறப்பு வழிபாடுகளுடன் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மாலையில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

 from sri lanka



—-SUBHAM—-

Tags – மகாபாரதம், திரவுபதி அம்மன், தீ மிதி, தர்மராஜா கோவில், துரியோதனன் படுகளம் , பீமன், நாடகம்

ஒலியால் உயரத் தூக்கப்படும் பாறை! – திபெத்திய மர்மம்!! (Post No.13117)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.117

Date uploaded in London – — 23 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒலியால் உயரத் தூக்கப்படும் பாறை! – திபெத்திய மர்மம்!!

ச.நாகராஜன்

டாக்டர் ப்ரூஸ் கேதி, எட்வர்ட் டேவிட் ஹெ. சைல்ட்ரஸ் 1-9-2011 (Bruce Cathie, Ed. David H. Childress, September 1, 2011) அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

திபெத்தில் லாமாக்கள் உயரமான இடங்களுக்கு பாறைகளை ஒலி அலைகள் மூலமாகக் கொண்டு செல்வர் என்பதைப் பலமுறை படித்திருக்கிறேன்.

அது பற்றி எழுதியுமிருக்கிறேன்.

அதை நேரில் பார்த்து படமும் பிடித்த ஒருவரின் நிஜமான அனுபவம் இது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஜெர்மானிய மொழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை ஹென்றி கியல்ஸன் (Henry Kielson) என்பவர் ‘தி லாஸ்ட் டெக்னிக்ஸ்’ (The  Lost Techniques) என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஸ்வீடனைச் சேர்ந்த டாக்டர் ஜாரி (Dr Jari) என்பவர் கியல்ஸனின் நண்பர். அவர் ஆக்ஸ்போர்டில் படித்தவர். ஒரு சமயம் திபத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1939-ம் ஆண்டில் டாக்டர் ஜாரி எகிப்துக்கு இங்லீஷ் ஸயிண்டிபிக் சொஸைடியில் கலந்து கொள்ள செல்ல வேண்டியதாயிருந்தது. அங்கு திபெத்திய நண்பர் அனுப்பிய ஒருவரை அவர் சந்தித்தார். உடனடியாக அவரை திபத்திற்கு ஒரு லாமாவிற்கு சிகிச்சை அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகொள் விடப்பட்டிருந்தது.

நீண்ட நெடும் பயணம் மேற்கொண்ட டாக்டர் விமானம் மூலமாகவும் யாக் வண்டிகள் மூலமாகவும் திபெத்திய மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் வயதான லாமா இருந்தார். அவருக்குத் தான் சிகிச்சை தேவை.

டாக்டர் ஜாரி அங்கு சில காலம் தங்கி இருந்தார். திபெத்தியர்களுடன் நட்பு பாராட்டியதால் பல அரிய விஷயங்களை அவர் அறிந்து கொண்டார்.

ஒரு நாள் அவரது நண்பர் மடாலயத்திற்கு அருகிலிருந்த ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அவர் அங்கு பார்த்தது சரிவான ஒரு புல்தரை. அதைச் சுற்றி வடமேற்கே உயரமான சிகரங்கள் இருந்தன. 250 மீட்டர் உயரத்தில் பாறையிலான சுவரின் மேல் குகை வாயில் போல ஒரு பெரிய துளை இருந்தது.

இந்த துளைக்கு முன்னால் ஒரு பெரிய மேடை இருந்தது. அதன் மேல் துறவிகள் ஒரு பாறைச் சுவரைக் கட்டிக் கொண்டிருந்தனர். இதை அணுகுவதற்கான ஒரே வழி சிகரத்தின் உச்சியிலிருந்து கயிறைக் கட்டிக் கொண்டு மெதுவாக கீழே இறங்குவது தான்.

புல்தரையில் நடுவில் சிகரத்திலிருந்து 250 மிட்டர் தூரத்தில் ஒரு பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பாறை இருந்தது. அதன் நடுவே கிண்ணம் போல நடுவில் சுரண்டப்பட்டு இருந்தது. அந்த கல்லால் ஆன கிண்ணத்தின் குறுக்களவு ஒரு மீட்டர். அதன் ஆழம் 15 செண்டிமீட்டர். இந்த உட்குழியில் எருதுகளால் கொண்டு வரப்பட்டு ஒரு பாறை உள்ளே வைக்கப்பட்டது. இந்தப் பாறை ஒரு மீட்டர் அகலம் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. இந்த கல் பாறையிலிருந்து 90 டிகிரி அரை வட்ட வடிவில் 63 மீட்டர் தூரத்தில் 18 இசைக் கருவிகள் அமைக்கப்பட்டன.

63 மீட்டர் ஆரம் என்பது துல்லியமாக அளக்கப்பட்டது. இசைக் கருவிகளில் 13 டிரம்களும் 6 டிரம்பட்டுகளும் இருந்தன. எட்டு டிரம்கள் ஒரு மீட்டர் குறுக்களவைக் கொண்டிருந்தன. நீளம் ஒன்றரை மீட்டர். நான்கு டிரம்கள் 0.7 மீட்டர் குறுக்களவுடனும் ஒரு மீட்டர் நீளத்துடனும் மத்திம அளவைக் கொண்டிருந்தன. ஒரே ஒரு சின்ன டிரம் மட்டும் 0.2 மீட்டர் குறுக்களவும் 0.3 மீட்டர் நீளமும் கொண்டிருந்தது. டிரம்பட்டுகள் அனைத்தும் ஒரே அளவையே கொண்டிருந்தன.

டிரம்பட்டுகள் 3.12 மீட்டர் நீளமும் 0.3 மீட்டர் திறப்பையும் கொண்டிருந்தன. பெரிய டிரம்களும் டிரம்பட்டுகளும் கற்பாறையை நோக்கி சரியாக இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. பெரிய டிரம்கள் அனைத்தும் ஒரு மில்லிமீட்டர் இரும்புத் தகடால் செய்யப்பட்டிருந்தன. அதன் எடை 150 கிலோ.  அவை ஐந்து பிரிவுகளாக இருந்தன.  டிரம்கள் ஒரு பக்கம் திறக்கப்பட்டு இருந்தன. அடுத்த பக்கமோ உலோகத் தகடு இருந்தது. அதன் மீது துறவிகள் தோலால் ஆன ஒரு தடியினால் அடித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இசைக்கருவிக்கும் பின்னாலும் துறவிகள் வரிசையாக இருந்தனர்.

கற்பாறை அதன் இடத்திலிருந்த போது சின்ன டிரம்முக்குப் பின்னால் இருந்த ஒரு துறவி இசை நிகழ்ச்சி தொடங்கலாம் என்பதை சமிக்ஞையால் அறிவித்தார். சின்ன டிரம் ஒரு கூரிய ஒலியை எழுப்பியது. மற்ற இசைக்கருவிகள் பேரொலியைக் கிளப்பிய போதும் இந்த சின்ன டிரம்மின் ஒலி தனியாகக் கேட்டது. எல்லாத் துறவிகளும் ஒரு பிரார்த்தனையைப் பாடினர். நம்பமுடியாத அளவுக்கு ஓசையைக் கூட்டிக் கொண்டே சென்றனர். முதல் சில நிமிடங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை.  டிரம் ஓசை அதிகரிக்க அதிகரிக்க பெரிய பாறை அசைய ஆரம்பித்தது. இங்கும் அங்குமாக ஆடியது. திடீரென்று அது வானில் எழும்பியது. 250 மீட்டர் உயரத்தில் உள்ள குகையின் வாயிலின் எதிரே இருந்த மேடையை நோக்கி வெகு வேகமாகச் சென்றது. மூன்று நிமிடங்கள் கழித்து அது மேடையில் கீழே இறங்கியது..

துறவிகள் தொடர்ந்து புதிய பாறைகளை புல்தரையில் கொண்டு வந்தனர். இதே போல மணிக்கு 5 அல்லது 6 ப்ளாக் எனப்படும் பாறைகளை மேலே தூக்கினர்.  கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை ஒரு பாறை உடைந்தது. அந்த உடைந்த பாறைகளை துறவிகள் அகற்றினர்.

டாக்டர் ஜாரி கற்களைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி அறிவார். லினவெர், ஸ்பால்டிங் ஹக் (Linaver, Spalding and Huc) ஆகிய திபெத்திய நிபுணர்கள் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரும் இதை நேரில் பார்த்ததில்லை. டாக்டர் ஜாரி தான் இதைப் பார்த்த முதல் அயல்நாட்டுப் பயணி.

அனைவரையும் வசியப்படுத்தும் ஹிப்னாடிஸத்திற்கு தான் ஆட்பட்டிருக்கிறோமோ என்று சந்தேகப்பட்ட அவர் இரண்டு படங்களைப் பிடித்தார்.  அவர் தான் எதைப் பார்த்தாரோ அதை அந்தப் படங்களில் கண்டார். திருப்தி கொண்டார்.

டாக்டர் ஜாரி வேலை பார்த்து வந்த இங்க்லீஷ் சொஸைடி அவரிடமிருந்த இரு படங்களையும் கைப்பற்றி அவற்றை இரகசியமானவை என்று குறித்து வைத்து விட்டது. 1990 முடிய அதை யாரும் பார்க்க முடியாது.

**

ஒலியால் ஒரு பாறையை உயரத் தூக்க முடியும் என்பதை பல திபெத்திய நூல்கள் கூறுகின்றன. லாமாக்கள் கூறியுள்ளனர்.

டாக்டர் ஜாரி தான் இதைத் தன் கண்ணால் நேரில் பார்த்து படம் பிடித்து வெளி உலகிற்கு அறிவித்த முதல் மேலை நாட்டுப் பயணியாவார்.

இப்படி திபெத்திய மர்மங்கள் ஏராளம் உண்டு. ஒலி அலையின் சக்தி உள்ளிட்ட மர்மங்களைப் பற்றிப் படித்தால் பிரமிப்பை அடைவோம்.

***