மாணவர்கள் சாப்பிட வேண்டியது வல்லாரைக் கீரை! வல்லாரை ஏற்றுமதி தகவல்!! (Post.12,935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,935

Date uploaded in London – –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

(இந்தக் கட்டுரை எழுதும் லண்டன் சுவாமிநாதன், இரண்டு முறை ரிஷிகேஷ், ஹரித்வார் சென்றவர் . மதுரையில் உள்ள  ரிஷிகேஷ் சிவானந்தா  சுவாமிஜியின் தெய்வ நெறிக்  கழகத்தில் வாரம்தோறும் பஜனை செய்தவர் . மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் ரமண மஹரிஷியின் வீட்டில் சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்துவிட்டு,  மாடியிலுள்ள சிவானந்தா புஸ்தக்கடையில் வல்லாரை சிரப் Syrup , வல்லாரை மாத்திரை வாங்கி சாப்பிட்டவர் . அத்தோடு மதுரையில் வாரம் இரண்டு முறை நடந்த புகழ்பெற்ற சந்தையில் வல்லாரைக் கீரை வாங்கி, அம்மா செய்த துவையலை சாப்பிட்டவர் )

உலகின் மொழி அற்புதம் வேதங்களை வாய் மொழியாக இன்று வரை பாதுகாத்து வருவதாகும்   இது சரஸ்வதி- சிந்து வெளியில் துவங்கி 5000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அற்புதம்; இதற்கு அபார ஞாபக சக்தி/ நினைவாற்றல் தேவை . பல மாணவர்கள் பயிலும் வேத பாடசாலையில் சில மக்குகளும் இருக்கத்தான் செய்யும். வேதத்தை மற்றவர்கள் போல உருப்போட முடியாது. இதற்காக வேத பாடசாலையில் வல்லாரைக் கீரையை சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்;

உன் வாயில் தர்ப்பையை வைத்து சுட்டுக் பொசுக்கினாலும் வராது  என்று வாத்தியார்கள் திட்டுவார்களாம். தர்ப்பையை வைத்து சுட்டுக் பொசுக்கினாலும் — என்பதன் பொருள் தெரியவில்லை .

xxxx

வல்லாரை Centella asiatica (Asiatic pennywortIndian pennywort) gotu kola, Brahmi

சாகர டயத்துல சங்கரா சங்கரா என்று சொல்வதுபோல பரீட்சை வந்தால் மட்டுமே படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். அப்படியில்லாமல் வகுப்பறையில் பாடங்களை வாத்தியார் சொல்லும்போதே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமானால் வல்லாரைக் கீரையைக் கூட்டு வைத்தோ , துவையல் செய்தோ சாப்பிட வேண்டும் ; அதுவும் முடியாவிட்டால் வல்லாரை மாத்திரை , டானிக் /சிரப்  முதலியவற்றை நாடலாம் .

இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில், மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்,  ஈர்ப்பசையுள்ள இடங்களில் தானாக வளரக்கூடிய செடி இது . பூமியை ஒட்டி படர்ந்து வளரும் .

xxxxx

ரசாயனப் பகுப்பு

Centella contains pentacyclic triterpenoids and trisaccharide derivatives, including asiaticoside, brahmoside, asiatic acid, and brahmic acid (madecassic acid). Other constituents include centellose, centelloside, and madecassoside.

தோல் நோய்களுக்கும் dermatological diseases இதை மருந்தாக உபயோகிக்கின்றனர் . ஆயினும் அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு அடையும் என்பதை ஆராய்சசி காட்டுகின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது பழமொழி அல்லவா !

Xxxxx

Pharmacological Effects of Centella asiatica on Skin Diseases: Evidence and Possible Mechanisms by Kyoung Sik Park

என்ற கட்டுரை 2021ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது அந்தக் கட்டுரையில் இது தோல் நோய்களைத் dermatological diseases தீர்ப்பதாக ஆசிரியர் க்யூங் சிக் பார்க் எழுதியுள்ளார் .

இது எல்லா நோய்களுக்கும் மருந்து என்று அந்தக் கட்டுரை கூறுகிறது ; இது நரம்பு மண்டலத்துக்கு தெம்பு ஊட்டுகிறது ; cardiovascular, இருதய நோய்கள், பார்க்கின்சன் நோய் Parkinson’s disease, அல்செமர் நோய் Alzheimer’s disease, நுரையீரல் நோய்கள் COPD =chronic obstructive pulmonary disease  , டைப் 2 சர்க்கரை வியாதி type 2 diabetes , முகத்தில் வரும் பரு acne, தோல் நோய்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது ; ஆயினும் சோதனை முறையில் இதை எவரும் நிரூபிக்க வில்லை என்றும் கட்டுரையாளர் எழுதியுள்ளார்  .

A growing body of research suggests therapeutic potentials of C. asiatica in treatment of neurological, endocrine, cardiovascular, digestive, respiratory, and dermatological diseases [6]. Investigations have reported that C. asiatica enhances the functions of the nervous system; C. asiatica and its triterpenes have a positive effect in relieving symptoms of Parkinson’s disease [7] and Alzheimer’s disease [8]. In addition, C. asiatica extracts have been reported to be effective in the treatment of endocrine diseases such as type 2 diabetes [911] and obesity [12]. Asiaticoside and asiatic acid, the active compounds of C. asiatica, have positive effects on cardiovascular diseases including hypertension [1314] and atherosclerosis [1516]. C. asiatica extract and its triterpenes exert protective effects against liver injury [1720] and gastrointestinal tract damage [2122]. Asiaticoside and asiatic acid also have therapeutic effects on respiratory disorders such as pulmonary fibrosis [23], chronic obstructive pulmonary disease [24], and acute lung injury [25]. In particular, several in vitro and in vivo studies suggest that C. asiatica extracts and their triterpenes hold great promise as natural remedies that mitigate acne, burns, atopic dermatitis, and wounds [626].

xxxx

வல்லாரைக் கீரை ஏற்றுமதி

வல்லாரைக் கீரையை 740 நிறுவனங்கள்  ஏற்றுமதி செய்தன . அதை 1,251 நிறுவனங்கள் விலைக்கு வாங்கின.

உலக நாடுகள் அதை பெரும்பாலும் இந்தியா, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி  செய்தன .

அதை வாங்கிய இந்தியா தங்கள் சரக்கையும் சேர்த்து அனுப்புவதால் உலகில் வல்லாரை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.  அதற்கு அடுத்த இடத்தில் மடகாஸ்கர் (மலகாசி) நாடும், தென்கொரியாவும்  நிற்கின்றன.

·         As per Volza’s Global Export data, Centella asiatica export shipments stood from World at 5.3K, exported by 740 World Exporters to 1,251 Buyers.

·         World exports most of it’s Centella asiatica to IndiaUnited States and France

·         The top 3 exporters of Centella asiatica are India with 3,136 shipments followed by Madagascar with 370 and South Korea at the 3rd spot with 315 shipments.

xxxxx

ப்ராஹ்மி–. மண்டூகி  , மண்டூகபர்ணி

சம்ஸ்க்ருதத்தில் இதை ப்ராஹ்மி என்று அழைப்பார்கள் . மண்டூகி  , மண்டூகபர்ணி என்றும் சிலர் இதைக் குறிப்பிடுவார்கள் . சரக சுஸ்ருத சம்கிதைகள் இதைக் குறிப்பிடுவதால் 2500 ஆண்டுகளாக பயன்பட்டுவருகிறது. ஆயினும் தமிழ் மொழியிலும் , ஸம்ஸ்க்ருத்திலும் பெயர்க் குழப்பம் இருக்கிறது ; ஒரே தாவரத்தை பல பெயர்கள் இட்டுக் குழப்புவதும் , வெவ்வேறு தாவரங்ககளை ஒரே பெயரிட்டுக் குழப்புவதும் உண்டு. ஆயினும் பிராமி என்ற பொதுப்பெயரை வல்லாரைக்கு உபயோகிக்கின்றனர் .

 Maṇḍūkī (मण्डूकी) is also mentioned as a synonym for Brāhmī, a medicinal plant identified with two possibly species verse, according to verse 5.63-66. The fifth chapter (parpaṭādi-varga) of this book enumerates sixty varieties of smaller plants (kṣudra-kṣupa). Together with the names Suvarcalā and Brāhmī, there are a total of twenty-four Sanskrit synonyms identified for this plant. Note: Chopra identifies Brāhmī with 1) Centella asiatica (Linn.) Urban. while Bāpālāl and Th. B.S. et al identify it with 2) Bacopa monnieri (Linn.) Pennell.

xxxxx

Maṇḍūkī (मण्डूकी) is another name for Maṇḍūkaparṇī, which is a Sanskrit word referring to Centella asiatica (centella), from the Apiaceae family. Certain plant parts of Maṇḍūkaparṇī are eaten as a vegetable (śāka), according to Caraka in his Carakasaṃhitā sūtrasthāna (chapter 27), a classical Ayurvedic work. The plant is therefore part of the Śākavarga group of medicinal plants, referring to the “group of vegetables/pot-herbs”.

—subham—

Tags- பிராமி, வல்லாரை, நினைவாற்றல் , ஞாபக சக்தி , மாணவர்க்கு

Amazing Facts about Haridwar (Post No.12,934)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,934

Date uploaded in London – –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Author London Swaminathan had beeen to Haridwar, Rishikesh, Mathura, Agra and Delhi twice.

Haridwar is one of the Seven Holy Cities of India. It is in Uttarakhand state on the banks of holy Ganga. River Ganges enters the plains from the Himalayan Mountain.

xxxx

In the Seven Holy Cities sloka/couplet it is called Maayaa, not Haridwar.

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।  पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः Meaning: 1: Ayodhya, Mathura, Maya (Mayapuri or Haridwar), Kashi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) … 2: … and Dwaravati (Dwaraka); These seven cities are giver of Moksha (Liberation) (and are called Mokshapuri).

xxxxx

Haridwar is famous for its daily evening Ganga arti. It is the worship of River Ganga by showing Arti with lamps.

Haridwar means Gateway to Gods. Devotees go to famous Himalayan shrines of gods and goddesses from here.

xxxx

Haridwar is famous for two festivals . World’s largest festival called Kumbh mela is held in Prayag every 12 years. In between Mini Kumbh melas are held in Haridwar, Ujjain and Nasik. It is celebrated once in four years in turn. Another festival that attracts millions of Shiv Bhaktas is Kanwar Yatra. Devotees of Shiva gather here in July- August every year to take holy water from Ganges in pots; they hang it on either side of a bamboo pole and walk miles to bathe Lord Shiva with that water.

xxxx

Haridwar has many unique temples. Bharat Mata (bhaarat maathaa) temples is 180 ft high with 8 stories. It is dedicated to patriots, saints of India and Mother India. In the top three floors Goddess Shakti, Vishnu and Shiva are installed. Swami Sathya Mitrananada Giri built it and Prime minister Indira Gandhi opened it in 1983. It has got lifts to take the pilgrims upto the top f;;or.

xxxx

The Purani history of Haridwar links it with Samudra Manthan. When the goody Devas and baddy Asuras churned the ocean, Amrit / elixir came out of it. Garuda/eagle stole some of it and the drops fell at four places and one of them is this holy city.

xxxx

Top Attractions in Haridwar

  1. Har ki Pauri.
  2. Ganga Aarti at Haridwar.
  3. Chandi Devi Temple.. …
  4. Mansa Devi Temple.
  5. Daksh Mahadev Temple.
  6. Shantikunj Gayatri Parivar.
  7. Maya Devi Temple.
  8. Shri Vyas Ashram.
  9. Bharat Mata Mandir

10.Patanjali Yogpeeth

      11.Ma Anandamayi Ashram

  xxxxxx

Har Ki Pauri

Har Ki Pauri is a famous ghat on the banks of river Ganga in Haridwar. Har ki Pauri is believed to be the place of exit of holy river Ganga from the mountains. Ganga Aarti takes place in Brahmakund area of Har ki Pauri, a sacred spot where it is believed that the nectar (Amrit) fell on earth. Largest fairs of Hindu’s, Kumbh and Ardh Kumbh also takes place at Har ki Pauri. Is a holy place for devotees of Shiva.

Mansa Devi Temple

Mansa Devi Temple is the  revered temple of Goddess Mansa Devi located at Bilwa Parvat near Haridwar. This temple is a holy place to worship Goddess Mansa, who is believed to be a form of Shakti, emerged from the mind of great Sage Kashyap. Mansa Devi temple is a famous Siddhpeeth and offers panoramic views of Haridwar city. She is considered a wish fulfilling goddess and whatever one wishes in Manas/mind, she fulfils it.

Chandi Devi Temple

Chandi Devi Temple is a holy temple located at a hill top, Neel Parvat near Haridwar. Goddess Chandi is the presiding diety of the temple and believed to be a Siddh Peeth where desires get fulfilled. An additional attraction is the rope way cable car to the top. One can have the view of entire city, holy river and the Himalayas. The pilgrims can reach both the temples located on the hilltop by the ropeway in around 5 minutes, while the steep climb by steps takes over One hour.

Patanjali Yogpeeth

Patanjali Yogpeeth is a medical and research institute in Yoga and Ayurveda. Established in 2006 by Yog Guru Ramdev, Patanjali Yogpeeth is named after Maharishi Patanjali who believed to be the inventor of Yoga.  Ayurveda treatment is offered  in hospital. All Patanjali medicines are available.

Ma Anandamayi Ashram

 5.3 kms / 19 mins

Ma Anandamayi Ashram is a spiritual place in Haridwar dedicated to Sri Ma Anandamayi, an eminent spiritual personality. She was a Bengali mystic and her Samadhi is in Kanhal nearby. Museum, Yagnasala,Rudraksha tree are other attractions.

Picture: Millions of devotees collect hloy Ganga Jal befor Kanwar Yatra.

Daksha Mahadev Temple

The ancient temple of Daksha Mahade, is situated in the south Kankhal town in Haridwar.A sacred place of great devotion and faith among Lord Shiva devotees, This temple of Lord Shiva is named after King Daksha Prajapati, father of Sati.There are many more places for nature lovers and adventure tourists.

—subham—

Tags- Haridwar, amazing facts, places to visit, Ganga Arti, Patanjali Yoga, Bharat Mata Mandir

QUIZ ஹரித்வார் பத்து QUIZ  (Post No.12, 933)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,933

Date uploaded in London – –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ Serial No.96

1.ஏழு மோக்ஷ புரிக்களில் ஒன்று ஹரித்வார்ஆனால் வேறு பெயரில் அதை அழைக்கிறார்கள் . அது  என்ன பெயர் ?

xxxx

2.ஹரித்வார் எந்த நதியின் கரையில் இருக்கிறது; அதன் சிறப்பு என்ன ?

xxxx

3.ஏன் இதை ஹரித்வார் என்று அழைக்கிறார்கள் ?

xxxx

4.பிரயாகையில் நடக்கும் உலகிலேயே மிகப்பெரிய விழா இங்கும் நடக்கிறது . அதன் பெயர் என்ன ?

xxxx

5.நகரத்தின் அருகில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்ட அணையால் கங்கை நதியில் நடந்துவந்த கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ; அந்த  அணையின் பெயர் என்ன ?

xxxx

6.ஒவ்வொரு  நாள் மாலையிலும் இங்கு நடக்கும் முக்கிய வழிபாட்டை இப்போது வேறு சில தலங்களிலும் பின்பற்றுகிறார்கள் ; அது என்ன வைபவம்?

xxxx

7.ஹரித்வாரில் உள்ள முக்கிய கோவில் எது ?

xxxx

8.நகரத்தில் காண வேண்டிய இடங்களில் ஒன்று “ஹர் கி பவுரி”. Har ki Pauri அதன் சிறப்பு என்ன ?

xxxx

9. ஹரித்வாரில் இருக்கும் பாரத மாதா ஆலயத்தின் சிறப்பு என்ன ?.

 xxxx

10.சண்டி தேவி கோவிலுக்கு எப்படிப் போகலாம் ?

xxxx

விடைகள்

1.மாயா = ஹரித்வார்

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா

புரீ த்வாரவதீ சைவ சப்தயதே மோக்ஷ தாயிகா

xxxx

2.இந்த நகரம் உத்தரகண்ட் மாநிலத்தில் , கங்கை நதியின் கரையில் இருக்கிறது. இமய மலையில் உற்பத்தியாகும் கங்கை நதி முதலில் சமவெளியில் பாயும் இடம் ஹரித்வார் .

Xxxx

3.ஹரி அல்லது விஷ்ணுவின் நுழை வாயில் என்று பொருள் ; இமய மலையிலுள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை போவோர் இந்த நகரம் வழியாகச் செல்வது சம்பிரதாயம் . தெய்வத் தலங்களுக்கான வாசல்the Gateway to God) என்று சொன்னாலும் பொருந்தும். ஹர என்றால் சிவன் ; ஹரத்வார் என்று பொருள் கொள்வோரும் உண்டு .

Xxxx

4.மகாமகம் போன்ற கும்பமேளா ; இது 12ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாகையில் நடக்கும் ; இடையே ஒவ்வொரு நான்கு ஆண்டு இடைவெளியிலும் ஹரித்வார், உஜ்ஜைனி , நாசிக் ஆகிய இடங்களில் சுழல் முறையில் (Taking  turns) நடக்கும் . தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, அதில் சிறிய பகுதியைக் கருடன் எடுத்துச் சென்றான் . அப்போது அமிர்தம் சிந்திய நான்கு இடங்களில் இதுவும் ஒன்று.

xxxx xxx

5. பீம கோடா அணை Bhimgoda

xxxx xxx

6. கங்கா ஆரத்தி ; கோவில் மணி ஒலிக்க , பல்லாயிரம் பகதர்கள் புடைசூழ , கங்காதேவிக்கு தீபாராதனை காட்டப்படும் . இதை பல நதிகளுக்கும் இப்போது செய்யத் துவங்கியுள்ளனர் .

xxxx

7. வேண்டியதை அருளும் மானசா தேவி கோவில் , நகரின் முக்கியக் கோவில் ஆகும் . சக்தி பீடமான மன்சா தேவி ஆலயம் சிவாலிக் குன்றுகளின் பில்வ மலையில் அமைந்துள்ளது. அன்னை பார்வதியின் ஒரு அவதாரம்தான் மானசா தேவி. மனஸ் என்றால் மனது, பக்தர்களின் மன கவலைகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாலும், காஷ்யப ரிஷியின் மனதில் இருந்து தோன்றிய மானச புத்ரி என்பதாலும் அன்னைக்கு இந்த திருநாமம். கர்ப்ப கிரகத்தில் இரண்டு தெய்வ மூர்த்தங்கள் உள்ளன ஒரு அம்மனுக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உள்ளன. இன்னோரு மூர்த்தத்திற்கு பதினெட்டு கரங்கள் உள்ளன.

xxxx

8. இதன் பொருள்  “இறைவனின்/ சிவ பெருமானின்  அடிச்சுவடுகள்”  ; அங்கு தான் கங்கா ஆரத்தி நடக்கும் ; அங்கிருந்துதான் பல்லாயிரம் பக்தர்கள் ஆண்டுதோறும்  கன்வார் Kanwar Mela (July or August) devoted to Lord Shiva) யாத்திரையைத் துவங்குகிறார்கள்; காவடிகளில் தொங்கும் குடங்களில்/ பானைகளில் கங்கை நீரை எடுத்துக் கொண்டு சிவபெருமான் தலங்களுக்குச் சென்று அபிஷேகம் செய்துவிட்டு புனித நீரை பிரசாதமாக எடுத்து வருவார்கள் .

xxxx

9. இதை சுவாமி சத்ய மித்ரானந்தா கட்டினார். 1983  ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி திறந்து வைத்தார்  .

பாரத மாதா மந்திரில் / கோவிலில் எட்டு மாடிகள் இருக்கின்றன. எட்டாவது மாடியில் சிவ பெருமானும், ஏழாவது மாடியில் விஷ்ணுவின் அவதாரங்களும், ஆறாவது மாடியில் சக்தி தேவியும் தரிசனம் தருவார்கள்.  முதல் ஐந்து மாடிகளில் இந்திய தேசபக்தர்களும், பாரத அன்னையும், மீரா ,சாவித்ரி போன்ற புகழ் பெற்ற பெண்மணிகளும், இந்தியாவில் தோன் றிய மதங்களின் பெரியார்களும் சாது, சன்யாசிகளும் காட்சி தருகிறார்கள் . எட்டாவது மாடி வரை செல்ல லிப்ட் வசதி உண்டு. ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த பாரத அன்னை ஆலயம் அமைந்துள்ளது .

பாரத நாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிககளைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் வைக்கப்பட்டிருக்ன்றன. எட்டு மாடிகளையும் ஏறிவிட்டால் 180 அடி உயரத்திலிருந்து இம்மாய மலையயையும் கங்கை நதியையம் பல ஆலயங்களையும் கண்டுகளிக்கலாம்.

xxxxx

10.ஹரித்வாரில் தக்ஷ மகா தேவ் சிவன் கோவில், மாயாதேவி கோவில் என்று பல முக்கியக்க் கோவில்கள் இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு கம்பி வழி ரயில் மூலம் செல்லுவது ஒரு தனி அனுபவம் ஆகும். சுற்றியுள்ள மலைகளையும் கங்கை நதியையும் பார்த்த வண்ணம் செல்லலாம் . நடந்து போகும் வழியாக வும்   மலை  உச்சியிலுள்ள கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசிக்கலாம் .

–subham—

Tags- மானசா தேவி , கங்கா ஆரத்தி , பாரத மாதா ஆலயம், மனசா தேவி , கோவில், ஹரித்வார், கங்கை ,  ஹர் கி பவுரி, அயோத்யா மதுரா மாயா

கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள்- அப்துல்கலாம் – Part 2 (Post No. 12,932)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,932

Date uploaded in London –  –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் நாளிதழில் 17-1-2024 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

கனவு காணுங்கள்கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 2

ச.நாகராஜன்

ஜனாதிபதி கலாம்

போக்ரான் அணுகுண்டு வெடிப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்தார் கலாம். இந்திய அரசாங்கம் 1999 நவம்பரில் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை அவருக்கு வழங்கியது. ஆலோசகராக 2001 நவம்பர் வரை இருந்த அவர் இந்தியா விண்வெளித் துறையில் முன்னேற பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினார். அவரது தளராத உழைப்பும் அதன் மூலம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பணியும் பெரிதும் அனைவராலும் போற்றப்பட்டது. பல்வேறு விருதுகள் அவரை வந்தடைந்தன. 1981இல் பத்மபூஷண் 1990இல் பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற கலாம் பாரதத்தின் மிக உயரிய கௌரவ விருதான பாரத ரத்னா-வை 1999இல் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஜூலை 25ஆம் நாள் முதல் 2007 ஜூலை 25 முடிய ஜனாதிபதியாகத் திகழ்ந்த அவரை மக்கள் தலைவர் என அனைவரும் அன்புடன் அழைத்தனர்.

ஜனாதிபதி பதவியில் ஆற்றிய அரும் செயல்கள்

ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல. நாடு  முழுவதும் பயணப்பட்டு ஆங்காங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார்அவர் சென்ற இடமெல்லாம் அவரது ஆளுமையைக் காட்டும் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடைபெற்றன.

ஜனாதிபதி ஆனவுடன் அவர் பெரிதும் மதித்த மானெக்‌ஷாவைப் பார்க்க விரும்பினார். மானெக்‌ஷா (தோற்றம் 3-9-1914 மறைவு 27-6-2008) அப்போது நீலகிரியைத் தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்து வந்தார்.

தலைநகர் டில்லியிலிருந்து வெல்லிங்டன் வந்த  ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் நேராகச் சென்று ஃபீல்ட் மார்ஷல் மானெக்‌ஷாவைச் சந்தித்தார்.

மானெக்‌ஷாவின் உடல் நலம் பற்றி மிக்க அக்கறையோடு விசாரித்த கலாம் அவர் சீக்கிரமாகவே உடல்நலம் தேற வேண்டும் என்று வாழ்த்தினார்.

.

சந்திப்பு முடிந்து கிளம்பும் போது கலாம், “நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

உடனே மானெக்‌ஷா, “ மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! எனக்கு ஒரு குறை உண்டு.” என்றார்,

திடுக்கிட்ட கலாம், “என்ன, என்ன? நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்” என்றார்.

வீல்சேரில் அமர்ந்திருந்த மானெக்‌ஷா கூறினார்: “நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் எனது ஜனாதிபதியை எழுந்து நின்று சல்யூட் வைக்க முடியவில்லையே என்ற குறை தான் எனக்கு.”

ஜனாதிபதி நெகிழ்ந்து போனார்.

அந்தச் சந்திப்பில் மானெக்‌ஷா தனக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை வரவில்லை என்பதையும் தெரிவித்தார்.

பென்ஷன் தொகை வராத மொத்த வருடங்கள் இருபது.

அதிர்ந்து போன கலாம் டெல்லிக்குச் சென்றவுடன் பென்ஷன் தொகையை உடனே வழங்குமாறு உத்தரவு போட்டார்.

மொத்த தொகை ஒன்றே கால் கோடி ரூபாய் அளவு இருந்தது.

ஒரு தனி விமானத்தில் பாதுகாப்புத் துறை செக்ரட்டரியை அனுப்பி பென்ஷன் தொகையை வழங்கச் செய்தார் கலாம்.

சந்தோஷமாக செக்கைப் பெற்றார் உடல்நலம் குன்றியிருந்த மானெக்‌ஷா.

உடனே அதை வெல்லிங்டனில் இருந்த மிலிடரி மருத்துவமனைக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.

இப்படி அவரது சந்திப்பு ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கதாக விளங்கியது.

மாணவர்கள்இளைஞர்களின் வழிகாட்டி

கலாம் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய மையமாக அமைந்தது அவர் மாணவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது தான்!

பல்கலைக் கழக விழா ஒன்றில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி கலாமிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அவரும் ஏற்றார். மாணவர்களைச் சந்திப்பது என்றால் அவருக்குத் தான் தனிப்பட்ட உற்சாகம் உண்டே! விழா மேடையில் ஜனாதிபதி அமர்வதற்காக சற்று பெரிதாக இருந்த விசேஷ நாற்காலி போடப்பட்டிருந்தது. கலாம் அதில் அமர மறுத்து விட்டார். துணைவேந்தரை அதில் அமருமாறு கூறி அவரது நாற்காலியில் தான் அமர்வதாகக் கூறினார். துணைவேந்தரோ அதற்கு மறுத்து விட்டார். உடனடியாக மற்றவருக்குப் போடப்பட்டிருந்தது போன்ற நாற்காலி வரவழைக்கப்படது. அதில் அமர்ந்தார் கலாம். விழா தொடங்கியது.

எளிமையிலும் எளிமை என்பதற்கு அவர் ஒரு இலக்கணமாக விளங்கினார்.

அடுத்த ஜனாதிபதியாக ஆகப் போகிறார் என்று நிச்சயமாகி விட்ட நிலையில் அவர் ஒரு பள்ளியில் உரையாற்றச் சென்றார். அங்கு பவர் கட்! கலாம் அசரவில்லை. நானூறு மாணவர்களுக்கு மத்தியில் சென்ற அவர் தன்னைச் சுற்றி நெருங்கி வருமாறு அனைவரையும் அழைத்தார். அனவரும் அப்படியே வந்தனர். உதவேகமூட்டும் உரையை அவர் நிகழ்த்த மாணவர்கள் மனம் மிக மகிழ்ந்தனர்.

டி.ஆர்.டி.ஓ-வில் அவர் பணியாற்றிய போது அவரது உதவியாளர்களுள் ஒருவருக்கு வேலைப்பளு காரணமாக தன் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனது. அன்று மாலை பொருட்காட்சிக்குத் தன் மகனைக் கூட்டிக் கொண்டு போவதாக அவர் சொல்லி இருந்தார். போகமுடியவில்லை. இதை அறிந்த கலாம் அவரது வீட்டிற்குச் சென்று அவர் மகனைத் தானே பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்று விட்டார். குடும்பங்களின் மூத்த அண்ணன் அவர்!

சைவ உணவுக்கார். பிரம்மச்சாரி. மக்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்.

ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவரிடையே 2015 ஜூலை மாதம் 27ஆம் நாள் உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவர் மாலை சுமார் 6.30 மணியளவில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் இராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களும் நல்லடக்க நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அவர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் முக்கியமானது அக்னிச் சிறகுகள்.

அவர் இளைஞர்களுக்குக் கொடுத்த முக்கிய உத்வேகமூட்டும் உபதேசம் :-

“கனவு காணுங்கள். தேசம் மேம்பட, நீங்கள் மேம்பட கனவு காணுங்கள். படைப்பாற்றலுடன் தீவிரமாக உழைத்து அதை மெய்ப்பித்து நனவாக்குங்கள்.”

இதன்படி வாழ்ந்து காட்டி நாட்டின் உயரிய குடிமகனாகத் திகழ்ந்த அவர் பொன்மொழி பொய்யா மொழி அன்றோ!

***

கரிசலாங்கண்ணி மூலிகை ஏற்றுமதி (Post No.12,931)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,931

Date uploaded in London – –   18 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 கரிசலாங்கண்ணி மூலிகையை  அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா . அதற்கு அடுத்த இரண்டு இடத்தில் நிற்பது சீனாவும் அமெரிக்காவும் ஆகும் .

இந்தியா அனு ப்பும் சரக்கை நெதார்லாந்து என்னும் ஹாலந்து , அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியன வாங்குகின்றன .

·         As per Volza’s India Export data, Eclipta export shipments from India stood at 830, exported by 136 India Exporters to 275 Buyers.

·         India exports most of it’s Eclipta to NetherlandsUnited States and Franceand is the largest exporter of Eclipta in the World.

·         The top 3 exporters of Eclipta are India with 830 shipments followed by China with 47 and United States at the 3rd spot with 38 shipments.

xxxxx

Eclipta Prostrata எக்லிப்டா ப்ராஸ்ட்ரேட்டா அல்லது Eclipta Alba ஆகிய இரண்டு வகைகளையும் இதே பெயரில் அழைக்கின்றனர். சம்ஸ்க்கிருத்தத்தில் பிருங்கிராஜ் என்று சொல்கிறார்கள் கரிசல், பிருங்கிராஜ், கரப்பான், கைகேசி என்று இதற்கு பல  பெயர்கள் .

இது  Asteraceae ஆஸ்டிரேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம்.

தமிழ் நாட்டுவைத்தியத்திலும் ஆயுர்வேத  யுனானி வைத்தியத்திலும் கரிசலாங்கண்ணியை உபயோகிக்கிறார்கள் .

இதிலிருந்து கிடைக்கும் ரசாயனப் பொருட்கள் என்ன என்ன என்பதையும் மருத்துவ ஆராய்சசிப் பத்திரிகைகளில் காணலாம் :

Eclipta alba (Bhringaraja) having important role in the traditional Ayurvedic and Unani systems of holistic health and herbal medicine of the east. The principal constituents of Eclipta alba are coumestan derivatives like wedololactone[1.6%], demethylwedelolactone, desmethyl-wedelolactone-7glucoside and other constituents are ecliptal, β-amyrin, luteolin-7-O-glucoside, hentriacontanol, heptacosanol, stigmasterol.

xxxx

மருத்துவ குணங்கள்

மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் அற்புத மருந்து Karisalankanni may help as a liver tonic to treat jaundice, hepatitis and other liver diseases.

இதன் எண்ணெய் நல்ல கூந்தல் வளர் தைலம் ஆகும்.

இந்தச் செடியும் அதன் பாகங்களும் , அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் ரசாயனப் பொருட்களும் புற்றுநோயைக் குணப்படுத்தவும் (anticancer), குஷ்ட நோயைக் குணப்படுத்தவும் (antileprotic) , வலி நிவாரணியாகவும் (analgesic) பயன்படுகிறது .

இதன் ஏனைய பயன்பாடுகள்

சதைகளைப் பாதிக்காதபடி காக்கும் ant myotoxic

ரத்தக் கசிவை நிறுத்தும் antihemorrhagic

கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும்  antihepatotoxic

வைரஸ் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் antiviral, antibacterial,

செல்கள் பாதிக்காதபடி காக்கும் antioxidant

கரிசலாங்கண்ணியை சோதனை முறையில் இரண்டு மாதங்களுக்கு கொடுத்துப்பார்த்ததில் இது நீரை வெளியேற்றும் தண்ணீர் மாத்திரையாக இருந்தது . இதனால் ரத்த அழுத்தம் குறைந்தது

A group of study participants took two capsules containing 500 milligrams (mg) of bhringraj leaf powder by mouth three times daily for 60 days.

Results from the trial suggested that bhringraj may act as a diuretic (water pill), lowering blood pressure in mildly hypertensive adults (people with mild high blood pressure) assigned male at birth between 45 to 55 years old

இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடும் hypotensive

பூச்சிகளின் கரு முட்டைகளை அழிக்கும் ovicidal,

தலை முடியை கருப்பாக வளரவைக்கும் பொருட்கள் இதில் உள்ளன.

மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே மருந்துகளை எடுக்க வேண்டும். அதிகம் எடுத்தால் ஈரல் பாதிப்பதும் தெரிய வந்துள்ளது.

—Subham–

கரிசலாங்கண்ணி ,காமாலை , மஞ்சள் காமாலை, கல்லீரல், கூந்தல் வளர் தைலம்

QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ (Post No.12,930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,930

Date uploaded in London – –   18 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.95

1.காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் மிக உயர்ந்த புனிதத்தலம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?

XXXX

2.காசி நகரை வாரணாசி என்று சொல்லுவது ஏன் ?

XXXX

3.உலகின் பழைய நகர் காசிதான் என்பதற்கு என்ன சான்று உள்ளது?

XXXX

4.காசியில் தீபாவளி அன்று நடக்கும் அதிசயம் என்ன ?

XXXX

5.வேதத்தில் காசி நகரம் உள்ளதா ?

XXXX

6.காசியில் உள்ள சிவபெருமானின் பெயர் என்ன? தேவியின் பெயர் என்ன?

XXXX

7.ஞான வாபி என்பது என்ன ? ஏன் பத்திரிகைகளில் அடிக்கடி அடிபடுகிறது?

XXXX

8.”பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை” என்ற பழமொழிக்கு காரணம் என்ன ?

XXXX

9.காசியில் எத்தனை படித்துறைகள் , எத்தனை கோவில்கள் இருக்கின்றன ?

XXXX

10.காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ; இதனால் பலரும் இறுதிக்காலத்தை இங்கே கழிக்கிறார்கள். அப்படி இறப்போரின்  உடல் எங்கே தகனம் செய்யப்படுகிறது?

XXXX

விடைகள்

1.உத்தர பிரதேச மாநிலத்தில் காசி நகரம் இருக்கிறது .

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது

XXXX

2. வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் BENARES என்று உருமாறிப்போனது.

XXXX

3.மஹாபாரத காலம் கி.மு 30102க்கு முன் என்பது இந்துக்கள் நம்பிக்கை. அதில் காசி ராஜாவின் புதல்விகள் அம்பா , அம்பிகா, அம்பாலிகா / பீஷ்மர் கதை வருகிறது . ௨௬௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் காசியில்தான் முதல் பிரசங்கத்தை நிகழ்த்தினார் . தொல்பொருட்துறை சான்றுகள் கி.மு. 900 முதல் கிடைக்கிறது.

சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!

XXXX

4.ரிசர்வ் பாங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள விலை மதிக்க முடியாத அன்னபூரணி தேவியின் தங்க விக்ரகம் தீபாவளி முதல் மூன்று நாட்களுக்குத் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

XXXX

5. அதர்வண வேதத்தில் காசி குறிப்பிடப்படுகிறது . ஆகவே  ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காசி வேதகாலம் முதல் இருக்கிறது

XXXX

6.சிவபெருமான் பெயர் விஸ்வநாதர் ; அம்மனின் பெயர் விசாலாக்ஷி .XXXX

7. மதவெறி பிடித்த மஹா பாவி மொகலாய மன்னன் அவுரங்க சீப் Aurangzeb , அயோத்தியில் ராமர் கோவிலையும், மதுராவில் கிருஷ்ணர் கோவிலையும் இடித்து மசூதி கட்டினான். அதே போல காசி விஸ்வநாதர் கோவிலையும் இடித்து மசூதி கட்டினான் . அந்த மசூதி வளாகத்தில் ஞான வாபி இருக்கிறது;  கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் அங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பது  வரலாற்றுச் செய்தி. அங்கு  அகழ் வாராய்ச்சி செய்து உண்மையை வெளிக் கொணரவேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

XXXX

8. தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரால்  1813 ம் ஆண்டு முதல் இன்று வரை காசி விசுவநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை பூசைகள் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் காசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. தெருவில் “சம்போ சம்போ சங்கர மகாதேவா” என்று கூவி  கொண்டு பூசை பொருட்களை கொண்டு செல்வதால் இது சம்போ என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பெரிய கலக்கம் நடந்த்தபோதும்  இந்த பவனி தடைப்பட்டதில்லை .

XXXX

9. வாரணாசியில் 64 ஸ்நான கட்டங்களும், 1500 சிறிய, பெரிய கோவில்களும் இருக்கின்றன. சிலர் 88 படித்துறைகள் என்று கணக்குச் சொல்லுவார்கள்

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

XXXX

10. மணிகர்ணிகா படித்துறையும், அரிச்சந்திரன் படித்துறையும் இறந்த உடல்களை தகனம் செய்யும் இடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

சுபம்

Tags-  வாரணாசி , காசி பத்து , காசி QUIZ, மணிகர்ணிகா, படித்துறை

கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – ஏ.பி.ஜே. அப்துல்கலாம்-1(Post.12,929)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,929

Date uploaded in London –  –   18 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் நாளிதழில் 17-1-2024 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

கனவு காணுங்கள்கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 1

ச.நாகராஜன்

அதிசய மனிதர் அப்துல்கலாம்

இந்தியாவின் தலைசிறந்த மாமனிதருள் ஒருவராகத் திகழ்ந்ததோடு இளைஞர்களுக்கு ‘கனவு காணுங்கள், அதை மெய்ப்பிக்க உழையுங்கள்’ என்ற தாரக மந்திரத்தைத் தந்தவர் மக்கள் தலைவராகத் திகழ்ந்த பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதே இளைஞர்கள் வெற்றியின் முதல் படியில் காலடி வைத்தது போலாகும்.

பிறப்பும் இளமையும்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A.P.J. Abdul Kalam) தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் படகு ஒன்றின் சொந்தக்காரராகத் திகழ்ந்த ஜைனுலாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆஷியம்மாவிற்கு ஐந்தாவது மகனாக 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார்.

மிக வறுமையான பின்னணி. ஆகவே குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் வகையில் பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் வேலைக்குச் சென்றார். செய்தித்தாள்களை அன்றாடம் விநியோகம் செய்யத் தொடங்கினார்.

இராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளியில் தன் கல்வியை ஆரம்பித்த கலாம் திருச்சிக்குச் சென்று 1954ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். 1955இல் சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

படைப்பாற்றல் திறனுடன் கூடிய அதிக உழைப்பு, இன்னும் அதிக உழைப்பு – இதற்கு இலக்கணமாக இளமையிலிருந்தே திகழ்ந்தார் கலாம். முடிக்கவே முடியாத ஒரு திட்டத்தைக் கொடுத்த ஒரு முதல்வர் அதை இரண்டு நாளில் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை விதித்தார். இராப்பகலாக உழைத்து இரண்டே நாட்களில் அதை முடித்து சாதனையை நிகழ்த்தினார் கலாம்.

விஞ்ஞானி கலாம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (Defence Research and Development Organisation எனப்படும் டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாகச் சேர்ந்த கலாம் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலாம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை ஏவும் ஊர்தியைச் செய்யும் திட்டத்தின் இயக்குநர் ஆனார். சாடலைட் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் இந்த ஊர்தி உருவாக்கப்பட்டு, ரோஹினி என்ற செயற்கைக் கோளை புவி ஓடுபாதையில் 1980இல் வெற்றிகரமாக ஏவியது.

மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி ஏவுகணை

கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார். டிஆர்டிஓவின் தலைவராகத் திகழ்ந்த கலாம் அக்னி ஏவுகணையை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 20 மீட்டர் நீளமுள்ள இந்த சாலிட் ப்ரொபல்ட் பாலிஸ்டிக் மிஸைல் (Solid-propelled ballistic missile) 16 டன் எடையைக் கொண்டது. இதன் பே- லோட் 1000 கிலோ ஆகும்.

இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

வீலர் (Wheeler)  என்ற தீவு ஒரிஸாவின் தெற்குக் கடற்கரையில் பிதர்கணிகா காடுகளுக்கு அருகில் உள்ளது. இதுவே அக்னி – || ஏவுகணையைச் சோதனை செய்ய வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.


இந்தக் கடற்கரை பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒருவகை ஆமைகள் ஏராளமாக உள்ளன.
இவற்றை ஆலிவ் ரிட்லி டர்டில் (Olive Ridely turtles) என்பர். நம்ப முடியாத தூரத்திலிருந்து பயணப்பட்டு அவை இங்கு வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குஞ்சு பொறிக்கும் ஒரு வகை விசேஷமான ஆமைகள் இவை.
நவம்பரில் வரும் இவை மார்ச் முடிய இங்கே தங்கும். குஞ்சுகள் பொறிக்கப்பட்டவுடன் திரும்பித் தமது இடம் நோக்கிச் செல்லும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அப்துல்கலாம் அவர்களிடம் மார்ச்சுக்கு பிறகு அக்னி ஏவுகணை சோதனையை வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர்.


சுற்றுப்புறச் சூழலில் பெரிதும் ஆர்வம் கொண்ட அப்துல்கலாம் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
உடனடியாக ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி இந்தத் தளத்தில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.


ஒருவிதமான மின் விளக்கும் எரியவிடப்படவில்லை. ஏனெனில் அவை ஆமைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று.
சுமார் ஐந்து மாதங்கள் இப்படி மெழுகுவர்த்திப் பணி தொடர்ந்தது.
விசேஷ விருந்தாளிகளான இந்த ஆமைகள் தமது சந்ததி விருத்திப் பணி முடித்து மீண்டும் சொந்த இடம் நோக்கிப் பயணப்பட்டபின் ஆய்வு வேலைகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்தன.
1999ஆம் ஆண்டு ஏப்ரல் 11 – நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோதனை நடந்தது; வெற்றி பெற்றது. இது 2004ஆம் ஆண்டு உரிய முறையில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

அடுத்து ப்ரித்வி ஏவுகணைத் திட்டத்தையும் அவர்  வெற்றிகர மாக்கினார்.

மக்கள் அவரை ஏவுகணை  மனிதர் என்று செல்லமாகப் போற்றி அழைக்கலாயினர்.

***  தொடரும்

மூலிகைகளின் ராணி துளசி (Post No.12,928)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,928

Date uploaded in London – –   17 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று துளசி. இதை நாம் மூலிகைகளின் ராணி QUEEN OF HERBS என்று அழைப்போம் , வெளிநாட்டினர் இதை மூலிகைகளின் ராஜா KING OF HERBS என்பார்கள் .

துளசி- Holy Basil,  Ocimum sanctum ; Family Lamiaceae

எந்தப் பெருமாள் கோவிலுக்கு எப்போது போனாலும் எரிய உத்தூரணியில் துளசி ஜலத்தைக் கொடுப்பார்கள் . அதை மரியாதையுடன் உறியாமல் குடித்துவிட்டு தலையிலும் தடவிக்கொள்ளும்போது கிடைக்கும் புத்துணர்ச்சியின்  பின்னால் பெரிய ரகசியமே உள்ளது .

அதை ப்பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களையும் காண்போம். வானவப் பெரியார்கள் இறந்தாலோ சமாதி அடைந்தாலோ அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் பிருந்தாவனம் என்ற பெயரில் ஒரு மாதத்தை அமைப்பார்கள் . இந்தியா முழுதும் வீடுகளின் பின்புறத்தில் துளசி மாடங்களை அமைத்து அதை பய பக்தியுடன் பராமரித்து, தினமும் சில இதழ்களை பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக உட்கொள்ளுவர். இதனால் இருமல் சளி , கபம் நோய்கள் வராது

இந்துக்கள் எளிதில் கிடைக்கும் , செலவில்லாமல் வளரும் அபூர்வ மூலிகைகளை  இறைவனுக்குப் படைப்பது அவர்களின் மூலிகை அறிவினைக் காட்டுகிறது . விநாயகருக்குப் போடும் அருகம்புல்லும் , சிவனுக்குப் போடும் வில்வமும் அரிய மருத்துவ குணங்களை கொண்டது .

பசு மாடு (பால்), குதிரை , கணிதத்தில் பூஜ்யம் , எண்களில் 1,2,3 போன்ற எழுத்துமுறை , வானத்தில் விண்வெளிப்பயணம் , கலைகளில் 64  கலைகள் ,  மொழியியலில் பாணினியின் அற்புதமான கண்டுபிடிப்புகள் , உலகிலுள்ள ஜீவராசிகள் 84 லட்சம் , பிக் பேங் என்னும் பிரபஞ்ச வெடிப்பு, பரிணாமக் கொள்கை என்று எவ்வளவோ அடிப்படை விஷயங்களை நாம் உலகிற்கு  கற்பித்ததால் மேலை நாடுகள் விஞ்ஞானத்தில்  முன்னேறின.

xxxx

Picture of Vana Tulsi 

துளசியின் மஹிமை

வீட்டிற்கு முன்போ அல்லது பின்புறத்திலோ ஏன் துளசி மாட த்தை அமைக்கச் சொன்னார்கள் ?

இந்துக்கள் துளசி விவாஹம் நடத்திக் கொண்டாடுகிறார்கள் . துளசி மாலையை அணிகிறார்கள் .

வட இந்தியாவில் துளசி  டீ யைக் குடிக்கிறார்கள் ; இது ஒரு மூலிகை டானிக் போன்றது .

துளசியை உபயோகிக்க முக்கியக்காரணம் அது மன உளைச்சலையும் பதட்டத்தையும் நீக்கி ஒரு மனிதனை மனித நிலைக்கு   கொண்டு வரும் . இதை ஆங்கிலத்தில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் Anti oxidants  என்பார்கள் . அதாவது செல்கள் சேதம் அடைவதைத் தடுக்கும். Fresh leaves and stem of Ocimum sanctum extract yielded some phenolic compounds (antioxidants)

துளசிச் சாற்றை , திரிபலா பொருட்களுடன்சேர்த்து ஆயுர்வேத சொட்டு மருந்து செய்கிறார்கள்; இது கண்களில் வரும்நோய்களுக்கு நல்ல மருந்து.

அண்மைக்காலத்தில் இதிலுள்ள ரசாயனப் பொருட்களைப் பிரித்து  எடுத்ததில் நீரிழிவு , புற்றுநோயை எதிர்க்கும் சத்தும் இதில் இருப்பது தெரிந்தது Tulsi leaves, which have high concentrations of eugenol, have been shown to have anticancer properties. In a various cancers, eugenol exerts its antitumour effects through a number of different mechanisms; Ocimum sanctum leaves have been traditionally used in treatment of diabetes mellitus. Dietary supplementation of fresh tulsi leaves in a dose of 2 gm/kg BW for 30 days led to significant lowering of blood glucose levels in test group.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாயிலுள்ள தொற்றுக் கிருமிகளையும் வயிற்றில் உண்டாகும் புண்களையும் (Ulcers)  ஆற்றும்.

The leaves are good for nerves and to sharpen memory. Chewing of

Tulsi leaves also cures ulcers and infections of mouth.

இதற்கு பூச்சிகளை விரட்டும் சக்தி உண்டு . ஆகையால் காய்ந்த இலைகளை துணியில் சுருட்டி வைக்கிறார்கள் .

ஆயுர்வேத ,சித்த மருத்துவத்தில் சகலரோக நிவாரணியாக , கைகண்ட மருந்தாக பயன்படுகிறது சாதரணமாக வரும் காய்ச்சல் , இருமல், வயிற்றுப் பொருமல் ,ஆஸ்த்மா, தலைவலி, பூச்சிக் கடிகள்  முதலிய எல்லாவற்றுக்கும் இது மருந்து  ( used in Ayurveda and Siddha systems of medicine for prevention and cure of many illnesses and everyday

ailments like common cold, headache, cough, influenza, earache,

fever, colic pain, sore throat, bronchitis, asthma, hepatic diseases,

malarial fever, as an antidote for snake bite and scorpion sting,

flatulence, migraine headaches, fatigue, skin diseases, wound,

insomnia, arthritis, digestive disorders, night blindness and diarrhoea.)

கேரளத்தில் இதைக் கருத்தடை (Anti Fertility)  மூலிகையாகவும் பயன்படுத்துகின்றனர் . இனிமேல் குழந்தைகள்   வேண்டாம் என்று நினைப்போர் துளசியை சாப்பிடலாம்  

பாக்டீரியா என்னும் கிருமிகளைக் கொல்லும் (Antibacterial activity) சக்தியும் துளசி இலைகளுக்கு உண்டு ; குறிப்பாக புதிதாகப் பறித்த இலைகளுக்கும்  சாற்றுக்கும் இந்த சக்தி அதிகம் .

கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பினையும் துளசி இலைகள் குறை ப்பது (Antilipidemic  ) முயல்கள் மேல் நடத்திய ஆராய்ச்சியில் தெரிந்தது ..

xxxx

துளசியில் மூன்று முக்கிய வகைகள் உண்டு .

ராம் துளசி

ஷியாம் (கிருஷ்ண)  துளசி

வன துளசி (Ocimum gratissimum).

xxxx

துளசியிலிருந்து எண்ணெயும் எடுக்கிறார்கள் ; அதில் 60 வகையான ( Aroma Compounds  ) வாசனைப் பொருட்கள் உள்ளன.

தாய் லாந்து நாட்டில் உணவு வகைகளில் துளசியைச் சேர்க்கிறார்கள் .

ஏற்றுமதி

துளசி உள்ள ஆசிமம் Ocimum பிரிவில் சுமார் நூறு வகையான  தாவரங்கள் உள்ளன . ஆசிமம் பசிலிக்கம் அதிகம் ஏற்றுமதியாகிறது  .இஸ்ரேல் ,  எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா நிற்கிறது . அமெரிக்கா , ஜெர்மனி , சிங்கப்பூர் இதை அதிகம் இறக்குமதி செய்கிறது . இதுவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது Ocimum basilicum L. (Lamiaceae) commonly known as sweet basil, has been used as a traditional medicinal plant for the treatment of headaches, coughs, diarrhea, constipation, warts, worms, and kidney malfunctions.

·         As per Volza’s India Export data, Ocimum basilicum export shipments from India stood at 1K, exported by 135 India Exporters to 291 Buyers.

·         India exports most of it’s Ocimum basilicum to United StatesSingapore and Germanyand is the 3rd largest exporter of Ocimum basilicum in the World.

·         The top 3 exporters of Ocimum basilicum are Israel with 6,102 shipments followed by Ethiopia with 1,282 and India at the 3rd spot with 1,018 shipments.

–subham—

Tags – துளசி , மருத்துவ உபயோகம், குணங்கள், ஏற்றுமதி, QUEEN OF HERBS

Amazing Facts about Krishna Janma Bhumi with 5500 Temples ! (Post No.12,927)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,927

Date uploaded in London – –   17 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Location of Mathura

Mathura is in Uttar Pradesh. Hindus’ Holy place Varanasi, Rama’s birth place Ayodhya and Krishna’s birth place Mathura are in the state.

xxxxx

Krishna’s Temple

Muslim Fanatic King Aurangzeb destroyed original Krisha Temple and built a mosque over the temple. The mosque is still there.

xxxxx

Three Temples in one complex

There are three temples in the current Krisha Temple in Mathura. They are Temple of Keshava  dev, Garbagriha where Krishna was born and Bhagavata Bhavan with Radha Krishna.

xxxxx

Where is Brindhavanam or Vrindhavan?

Brindhavanam is the place where Krishna as a boy played with his classmates. It is 20 kilometres from Mathura. Brindha means Holy basil / Tulsi; van means forest.

xxxxx

Why do people call surrounding area as Vraj Bhumi ?

Vraj means pasture and Bhumi means land ; it is where Yadu kula raised their thousands of cows.

Braj, also known as VrajVrajaBrij or Brijbhumi

xxxxx

How big is Vraj Bhumi and what are the important places located there?

It covers a vast area touching three states. Krishna played with Gopi girls led by Radha, killed many demons, did many adventures to protect cows and cowherd boys. There are 5500 temples.

xxxxx

Why is Mathura called City of Widows?

 A lot of women who lost their husbands went there and started living there. There are 15,000 to 20,000 widows who are supported by several charities.

xxxxx

Two Holy Trees in B/Vrindhavan

There is a holy tamarind tree where Chaitanya Mahaprabhu did meditation. Moreover Radha left Krishna there searching for her. Third thing abot the tree is that the fruits never ripen because of Radha’s curse. One of the fallen fruits hurt Radha and she went late to meet Krishna.

Another holy tree is a banyan tree called Vamsi Vat ; vamsi means flute and vat means banyan tree. This is where Krisha used to sit and play on flute.

xxxxx

What is the significance of Nidhivan?

Nidhivan which means “Tulsi Forest ” is one of the sacred sites of Vrindavan, nobody is allowed to stay inside the premises. Nidhivan is considered as one of the mysterious places of Vrindavan. It is a dense forest with the lush green trees. The interesting thing is that the barks of the trees are hollow and the land is absolutely dry, but the tree remains loaded with green leaves throughout the year. Vrindavan saint Swami Haridas got an idol of Radha Krishna here. He was the Guru of Tansen, Akbar’s Royal Musician. Every year big music festival is organised at the site.

 —subham—

Tags: Mathura, Krishna Janma Bhumi, Vraj,  Vrindhavan, Brundhavan, 5500 temples, Radha, Gopi, Holy trees

QUIZ மதுரா பத்து QUIZ (Post No.12,926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,926

Date uploaded in London – –   17 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz serial No.94

1.கிருஷ்ணர் பிறந்த மதுரா எங்கே இருக்கிறது ?

XXXX

2.கிருஷ்ணர் கோபியருடன் விளையாடிய யமுனை நதிக்கு 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்தில் என்ன பெயரைப்   புலவர்கள் பயன்படுத்தினர்?

XXXX

3.கிருஷ்ணர் பிறந்த இடத்திலுள்ள கோவிலை பல முஸ்லீம் மன்னர்கள் தாக்கினர். அதை  அழித்து அதன் மீது மசூதி கட்டிய மஹா பாவி யார் ?

XXXX

4.தற்போது உள்ள கிருஷ்ணர் கோவிலை எழுப்பியவர்கள் யார் ?

XXXX

5.மதுரா கிருஷ்ணன் கோவிலில் எத்தனை முக்கிய கருவறைகள் உள்ளன ?

XXXX

6.கிருஷ்ணரின் முதல் குளியல் நடந்த ,மதுரா கோவிலில் உள்ள,  குளத்தின் பெயர் என்ன ?

XXXX

7.பிருந்தா வனம் எங்கே இருக்கிறது ?

XXXX

8.பிருந்தாவனத்தைச் சுற்றியுள்ள இடத்தை மேய்ச்சல் (வ்ரஜ) பூமி என்ற சிறப்புப்  பெயரால் அழைப்பது ஏன் ?

XXXX

9. பிருந்தாவனத்தில் எத்தனை கோவில்கள் இருக்கின்றன ?

XXXX

10.பிருந்தாவனத்தில் ஒரு ஆல மரத்தையும் ஒரு புளிய மரத்தையும் புனிதமாக கருதுவது ஏன் ?

XXXX

விடைகள்

1.உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கிறது . ராமர் பிறந்த அயோத்தியும் இதே மாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது .

XXXX

2. தொழுனை நதி

XXXX

3.மதவெறி பிடித்த மொகலாய மன்னன் அவுரங்க சீப் Aurangzeb in 1670 ஆம் ஆண்டில் அதன் மீது மசூதியைக் கட்டினான். அது இன்றும் இருக்கிறது .

XXXX

4.பல தொழிலதிபர்கள் 13 ஏக்கர் நிலத்தை வாங்கி 1953 ல் கோவில் கட்டுமானத்தைத் துவக்கி 1982  ஆம் ஆண்டில் முடித்தனர்

XXXX

5. இந்த கோவில் வளாகத்துக்குள் மூன்று கோவில் அல்லது காருவறைகள் உள்ளன . கேசவ தேவ் கோவில், கிருஷ்ணர் பிறந்த இடமான கர்ப்பக்கிரகம் , ராதா கிருஷ்ணர் உறையும் பாகவத பவன் ஆகிய மூன்று பிரிவுகள் அவை .

XXXX

6. பவித்ரா குண்டம் என்பது குளத்தின் பெயர்

XXXX

7. கிருஷ்ணனும் ராதா தலைமையில் இருந்த கோபியர்களும் விளையாடிய பிருந்தா வனம் (துளசித் தோட்டம் ) மதுரா மாவட்டத்தில் இருக்கிறது . டில்லியிலுருந்து 129 கி.மீ , மதுராவிலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது . பிருந்தா என்றால் துளசி என்று பொருள்.

XXXX

8. விரஜ மண்டலம் – விரஜ பூமி – என்று அழைக்கப்படும் நிலப் பகுதிதான் பகவான் கிருஷ்ணன் அற்புத லீலைகள் புரிந்த புண்ணிய பூமி. விரஜ மண்டலம் நந்தகோபருடைய ஒன்பது லட்சம் பசுக்கள் மேய்ந்த பூமி.  நந்தக் கிராமத்திலிருந்து பிருந்தாவனத்திலுள்ள `வம்சீ வடம்’ என்ற இடம் வரை  கிருஷ்ணன் அந்தப் பசுக்களை மேய்த்து வந்ததனால் இதற்கு விரஜ மண்டலம் அதாவது மேய்ச்சல் பூமி என்ற பெயர் ஏற்பட்டது .

xxxx

9. விருந்தாவனத்தில் 5500 கோவில்கள் இருக்கின்றன

XXXX

10. கமலீ தலா புகழ்பெற்ற இடம். இங்கே பழைய புளியமரம் ஒன்று இருக்கிறது. மகாப்பிரபு சைதன்யர் இங்கேதான் அமர்ந்து ஹரிநாம பஜனையில் ஈடுபட்டார் .புளியமரத்தைச் சுற்றி அழகான சலவைக் கல் மேடை அமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தைத் தவிர பிருந்தாவனத்தில் வேறு எங்கும் புளியமரம் இல்லை.

கிருஷ்ணன் தன் புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் வம்சீ வட். வம்சீ என்றால் புல்லாங்குழல், வட என்றால் ஆலமரம்.இங்கு இருக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி.

XXXX

Bonus Questions

11. காலீய தஹ் எற இடத்தின் சிறப்பு என்ன ?

XXXX

11.பிருந்தாவனத்தின் கிழக்குப் பக்கம் தென்வடலாக யமுனை ஒடுகிறது. யமுனைத் துறைகளில் முக்கியமானது காலீய தஹ் எனப்படும் துறையாகும். அங்கு தான் கிருஷ்ணன் காளியன் என்ற பாம்பின் மீது நடனம்  ஆடி அதன் கொட்டத்தை அடக்கினான்

XXXX

12.பிருந்தாவனத்தை விதவைகள் நகரம் என்று அழைப்பது ஏன் ?

XXXX

12.விதவைகள்  நகரம் “city of widows” என்ற சிறப்பு அடைமொழியை மக்கள் சூட்டியுள்ளனர். ஏனென்றால் கணவனை இழ ந்த நிறைய பெண்மணிகள் அங்கு குடியேறி வசிப்பதை புனிதமாக கருதுகின்றனர். அவர்களுக்குதவி செய்ய தனி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . 15,000 முதல்  20,000  விதவைகள் வரை வசிக்கின்றனர்.

XXXX

13. நிதுவனம் என்ற இடத்தை இசை மேதைகள் நாடுவது ஏன் ?

XXXX

13. இங்கு ராதா,  அரச உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கண்ணனே காவலாள் வேடத்தில் நுழைவாயிலில் காட்சியளிக்கிறான். பகல் முழுவதும் , ராதையும் கிருஷ்ணனும் பல விளையாட்டுக்களில் ஈடுபட்ட இடம் இது. இங்கே சங்கீத சாதனையில் ஈடுபட்டிருந்த ஹரிதாஸ் சுவாமிகளுக்கு,  குளத்திலிருந்து கிருஷ்ண விக்கிரகம் கிடைத்தது. அக்பரின் ஆஸ்தான வித்வானாகிய தான்சேனுக்குக் குரு ஹரிதாஸ் சுவாமிகள் .

–subham—

Tags: QUIZ மதுரா பத்து,  QUIZ,  தொழுனை நதி , பிருந்தாவனம் , வ்ரஜ பூமி , கிருஷ்ணன், ராதா , மதுரா , கோவில்