தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை!-Part 2 (Post.12,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,925

Date uploaded in London –  –   17 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை!

இன்னும் ஒரு முறை முயற்சிக்க வேண்டும்! – 2

ச.நாகராஜன்

1093 கண்டுபிடிப்புகள்!

எடிஸன் தனது 84ஆம் வயதில் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதியன்று மறைந்தார். அப்போது அவர் பெயரில் அமெரிக்காவில் மட்டும் 1093 வடிவமைப்புக்கான உரிமையைப் பெற்றிருந்தார். இவற்றில் 389 மின்சக்திக்காக; 195 போனோகிராபுக்காக 150 டெலகிராபிற்காக; 141 ஸ்டோரேஜ் பேட்டரிகளுக்காக; 141 டெலிபோனுக்காக. இது தவிர இன்னும் 34 நாடுகளில் 1239 வடிவமைப்பு உரிமைகளையும் அவர் பெற்றிருந்தார்.

சில சுவையான சம்பவங்கள்

எடிஸனைப் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு. ஒவ்வொரு சம்பவமும் அவரது ஆளுமையின் ஒரு பரிமாணத்தைக் காண்பிக்கும்.

1914ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அவரது தொழிலகம் ஒன்றில் தீப்பிடித்தது. உடனடியாக ‘காணற்கு அரிதான இந்தக் காட்சியைப்’ பார்க்க வருமாறு தன் மனைவியை அவர் உடனே அழைத்தார். எந்த விதமான சம்பவங்களினாலும் அவர் அதிர்ச்சி அடைவதில்லை. மீண்டும் தனது தொழிலகத்தைப் புதுப்பித்தார்.

மின்சார பல்பை அவர் கண்டுபிடித்தவுடன் உதவியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். எடிஸன் தனது ஆபீஸ் பையனைக் கூப்பிட்டு அதை சோதனை செய்யுமாறு கூறினார்.

ஆனால் மிக்க நடுக்கத்துடன் அதை ஏந்திச் சென்ற அவன் தவறுதலாக அதைக் கீழே போடவே அது உடைந்து விட்டது. கோபத்தினால் தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவார் என்று பயந்தான் அவன்.

ஆனால் எடிஸனோ இன்னுமொரு பல்பைச் செய்து அவனிடம் கொடுத்து சோதனை செய்யச் சொன்னார். உதவியாளர்கள் அவரிடம் ‘எதற்காக அவனிடம் இன்னொரு பல்பைக் கொடுக்கிறீர்கள், இதையும் அவன் உடைத்து விட்டால் என்ன செய்வது’ என்று கேட்ட போது எடிஸன் கூறினார்:

“இன்னொரு புதிய பல்பை 24  மணி நேரத்தில் நான் செய்து விட்டேன். ஒருவேளை அவன் இதையும் உடைத்து விட்டால் இன்னொரு 24 மணி நேரத்தில் இன்னொரு புதிய பல்பை என்னால் செய்ய முடியும். ஆனால் இதே வேலையை அவனிடம் நான் கொடுக்காவிட்டால் அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கையே போய்விடும். அந்த தன்னம்பிக்கையை அவன் பெறவே முடியாமல் போய் விடும். அப்படி அவன் தனது தன்னம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அவனிடமே இதைக் கொடுத்தேன். இந்த முறை அவன் சோதனை செய்து விட்டான் என்றால் ஆயுள் முழுவதும் அவன் தன்னம்பிக்கையுடன் இருப்பான்” என்றார்.

‘இது தான் எடிஸன்’ என்று அனைவரும் அவரைப் பாராட்டினர்.

ஒருமுறை அவர் சிரித்தவாறே தன் அருகிலிருந்தோரிடம் கூறினார் இப்படி : “நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன்.

“முதலில் ஒரு அலுவலகத்தில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மெஷின் மீது எனக்கு அபாரமான ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான் என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.”

“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எலிகள் செய்யும் அட்டகாசம் பொறுக்க முடியாதபடி இருந்தது. ஆகவே அவற்றைப் பிடித்துக் கொல்வதற்கு ஒரு கருவியைச் செய்தேன். அவ்வளவு தான், ஆபீஸ் முழுவதும் எலிகளின் சிதறுண்ட உடல்களாக இருந்தது. அறையைப் பார்த்தவர்கள் என்னை வேலையை விட்டுத் தூக்கி விட்டனர்”.

எதனாலும் மனம் தளராத அவர் ஏராளமான வழக்குகளையும் போட்டியாளர்களின் சவால்களையும் தனது வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அனைத்தையும் எதிர்கொண்டார் அவர். கற்பாறையிலிருந்து அதன் தாதுவைப் பிரிக்க முயன்று பல்லாயிரம் டாலரை அவர் இழந்தார். எதிர்பாராத தோல்விகளினாலும் அவர் மனம் தளரவில்லை.

ஆனால் கடுமையான உழைப்புக்கும் சீரிய சிந்தனைக்கும் மாற்றாக ஒன்று உலகத்திலேயே இல்லை என்பதை அவர் நிரூபித்தவாறே வாழ்ந்து வந்தார்.

ஷேக்ஸ்பியர் கவிதைகளில் மிக்க ஆர்வம் கொண்டு நடிகராக விரும்பிய எடிஸன் அரங்கத்தில் இருந்து நடிக்க வெட்கப்பட்டு அந்த ஆசையை விட்டு ஆகப் பெரும் அறிவியல் கண்டுபிடிப்பாளராக மாறினார்.

எடிஸன் வாழ்க்கை தரும் பாடங்கள்!

எடிஸன் வாழ்க்கை கற்பிப்பது மிக முக்கியமான இரு பாடங்களை!

முதலாவது – : நமது மிகப்பெரிய பலஹீனம் ஒரு காரியத்தை பாதியில் விட்டு விடுவது தான். இன்னும் ஒரு முறை முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

இரண்டாவது – வெற்றி அடைய புத்திசாலித்தனம் என்பது ஒரு சதவிகிதம். 99 சதவிகிதம் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனுமான கடுமையான வியர்வை சிந்தும் உழைப்பே.

10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

***

Amazing Facts about Shivalinga (Post No.12,924)


Concrete Linga in Chenkal near Thiruvananthapuram

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,924

Date uploaded in London – –   16 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Where is the tallest Shiv linga in the country?

Maha Mrityunjay Temple is a Hindu Temple dedicated to Hindu God Shiva, situated in Nagaon, Assam, India. This Temple is special in its architectural sense as it is built in a form a Shivling. It is the World’s largest Shivalinga, at the height of 126 foot.

xxxx

What is the meaning of Linga Worship?

“ God is Omnipresent and All-pervasive. By the very nature of these qualities, He cannot have any form. He is, therefore, formless (Arupa). But in order to bless us, He assumes innumerable forms (Rupa). The Linga form in which we worship Isvara is symbolic of both His formlessness and form. It is symbolic of form because it has a particular shape; It is symbolic of formlessness because it has neither head nor limbs. The very conception of a Linga denotes something which has neither beginning nor end; the literal meaning of Linga is symbol.(Kanchi Paramacharaya 1894-1994)

xxxx

Why do we see Lingodbhava Murti in all Tamil Temples?

Isvara assumes various forms in pursuance of His Divine Leela. The prime manifestation with a form of the formless Isvara, is known as the Lingodbhava Moorthi, and He made his appearance in that form exactly at midnight on Sivaratri. That is why all devotees keep vigil during the night of Sivaratri, and worship Isvara at midnight.

xxxx

How Big is the Linga in Thanjavur Big Temple?

29 ft; It is 8.7 m (29 ft) high, occupying two storeys of the sanctum. It is one of the largest monolithic linga sculptures in India. Linga itself is 12 feet tall.

xxxx

 Where is the tallest Shiv linga in Kerala?

Maheshwaram Shiva Parvathi temple, which houses the tallest Shiva lingam in Kerala, having a height of 111 ft, is located in Chenkal village. It is near Thiruvananthapuram .

xxxx

Shiva linga in Water Springs

In many places Shiva Linga is in the midst of a water spring or a tank. This is because Shiva is called ABISHEKA PRIYA (bathing) and Vishnu is called ALANKARA PRIYA (decoration).

Thiruvanaikkaa near Trichy has Jambukeshvar Shiva temple where the Linga is in a water spring. There are similar temples in Sirkazi, Thiruvedakam near Madurai etc.

Xxxx

Natural Wonder- Ice Lingas in Kashmir and Himachal Pradesh.

Amarnath is the place in Jammu Kashmir state where a Linga is formed naturally inside a cave. It is made up of ice and it appears in and around August every year and then disappears.

Similar Ice Lingam is formed in a cave near Manali in Himachal Pradesh. It is called Amarnath of Himachal Pradesh. The 25-foot high Shiva lingam made of snow and ice is at Anjani Mahadev Temple.

xxxx

Bhojeswar Mandir

Ashta / Eight Famous Lingas in Tiruvannamalai in Tamil Nadu

The names of the Ashtalingams are:

Indra Lingam (East)

Agni Lingam (South East)

Yama (Ema) Lingam (South)

Niruthi Lingam (South West)

Varuna Lingam (West)

Vayu Lingam (North West)

Kubera Lingam (North)

Esanya Lingam (North East)

During every full moon day lakhs of devotees go round the hill at Tiruvannamalai and they worship all the above eight Lingas in eight different directions.

xxxx

Bhuteswarnath in Chattisgarh.

Sun Light falls on Lingas

Kings of Choza Dynasty were great Shiva Bhaktas. They had clever civil engineers who built temples with many wonders. One of the wonders is to make the sun light enters into the sanctum sanctorum of the temple  so that Sun worships the idol. And Chozas belonged to Sun Race (solar race)

One such temple where the sun rays enter and falls on Shiva Linga in the Garbha Griha is in Karaikurichi near Ariyalur. Sun light falls on the Linga twice a year in Uttarayana and Dakshinayana periods. Every year it happens on the same day in Hindu Calendar.

xxxx

Ghee Linga in Thrissur in Kerala

Since Lord Shiva is ABISHEKA PRIYA (fond of bathing), people pour various liquids on the idol . Thrissur Vadakkunathan temple has the famous Ghee Linga. For centuries , devotees have been bathing the god with clarified butter. Now the linga has disappeared because of the solidified layers of Ghee on the idol.  People take the ghee as Prasad.

xxxx

Linga with holes on the top

Every temple has a special feature in Tamil Nadu. We see Shiva lingas with some peculiarities and stories are told about them. In Thirunallur and Needur we see Lingas with holes on top. In one place it is attributed to Saint Bhringi. He took the form of a beetle and made the whole. In Another temple also similar story is told.

xxxx

Kailash and Shivlinga Mountain

In the Himalayan range we come across hills which look like huge Shiva Lingas. Hindus give importance to such places. We have Linga shaped Mt. Kailash and mountain shaped like Linga in the Himalayas. It is called Shivling Mountain.

xxxx

Koti Linga and Sahasra Linga

We come across innumerable Lingas in certain places and they are called Koti Lingas. If they carve 1000 squares with Linga figure in one single shiva stone,  it is called Sahasra Linga. Many temples have Sahasra Lingas.

xxxx

Linga Story is a long story; we will look at more lingas and their stories in another article.

—subham—

Tags – shiv linga, Linga worship, Strange  facts, tallest

ஏற்றுமதி தடை செய்யப்பட அரிய ஜடாமான்சி மூலிகை (Post No.12,923)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,923

Date uploaded in London – –   16 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

இமய மலையில் வளரும் ஜடா மான்ஸி (Nardostachys Jatamansi ) மூலிகை அருகி வருகிறது . ஆகையால் இதன் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துவிட்டது. ஆயினும் மூலிகை அடங்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்யலாம் .

இதை ஸ்பைக்னார்ட் என்றும் நார்ட்  Jatamansi (also called Spikenard or Nard) என்றும் சொல்லுவார்கள்  . இமய மலையில் அதிக உயரத்தில் (1௦௦௦௦ அடி முதல் 16,,400 அடி வரை ) மட்டும் வளரும் . இந்தியா , பூட்டான், நேபாளம் , பர்மா,சீனா ஆகிய நாடுகளில் வளர்கிறது .

இந்தியாவில் கிழக்கு இமயமலைப் பகுதியிலும் , சிக்கிமிலும் , குமாவோன் மலைகளிலும் விளைகிறது ; பூக்கும் தாவர பிரிவைச் சேர்ந்த இந்தச்  செடியை ஹனிசைக்கிள் honeysuckle family குடும்பத்தில் சேர்க்கிறார்கள். பூக்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்

பூக்கள் மணிகள் போன்ற வடிவம் உடையவை . தமிழ் உள்பட பெரும்பாலான இந்திய மொழிகளில் இதை ஜடா மான்சி என்றே அழைக்கின்றனர் . சம்ஸ்க்ருதத்தில் தபஸ்வினி அல்லது பியாட ஜடா என்றும் இந்தியில் பல் சார என்றும் பெயர்கள் (Tapaswani and Bhytajata in Sanskrit; Balchara in Hindi).

இது கேப்ரிபோலியேசி Caprifoliaceae or Valerianaceae குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும் . இதை மஸ்க் ரூட் , நார்ட் Muskroot, Nard என்ற பொதுப்பெயர்களிலும் அழைப்பார்கள் .

இதிலுள்ள ரசாயன பொருட்கள்   

acaciin

ursolic acid

octacosanol

kanshone A

nardosinonediol

nardosinone

aristolen-9beta-ol

oleanolic acid

பீட்டா -சிட்டோஸ்டெரோல் என்பன ஆகும் .

xxxxx

மருத்துவ உபயோகங்கள்

மூளைக்கு பலம் தரும் ( brain protective property). 

வலிப்பு, கிறுகிறுப்பு , காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும்   seizures, vertigo etc., in fever

ஜடா மான்சி எண்ணெய் ( oil of jatamansi ) பளபளப்பான தலை முடி வளர உதவும் .

ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து .

தேள் கடி சிகிச்சையிலும் இதை பயன்படுத்துகின்றனர் .

பொதுவாகச் சொல்லவேண்டுமானால் உடலிலுள்ள எல்லா அவயவங்களுக்கும் நல்லதைச் செய்யும்.

தூக்கமின்மை insomnia நோய்க்கும் இதை மருந்தாக உபயோகிக்கின்றனர் .உடலி லுள்ள செல்களை சேதம் அடையாமல் தடுக்கும் ரசாயனங்களை ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் Anti-oxidants என்பர் . இது ஜடாமான்சியில் அதிகம் இருப்பதால் இதை மருத்துவர்கள் நாடுகின்றனர் . உடலைச் சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் (Anti-oxidants) இவர்கள். இயற்கையில் இது பழங்களில் அதிகம் காணப்படுகிறது 

xxxxx

விலை என்ன 100 கிராம் 250 ரூபாய் ஆகும்

 – जटामांसी (100 Grams)

Jatamansi has been found to have anxiolytic effects, reducing anxiety symptoms in individuals. source: ncbi

Jatamansi has been shown to regulate neurotransmitters in the brain, improving mood and emotional well-being. source: ncbi

Jatamansi has been shown to have anti-convulsant effects, reducing the frequency and severity of seizures. source: ncbi

Jatamansi extract has been shown to improve sleep quality in individuals with. source: ncbi

National Center for Biotechnology Information= N C B I

–subham—

Tags- ஜடாமான்சி , ஜடாமன்சி

QUIZ  சிவலிங்கம் பத்து QUIZ (Post No.12,922)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,922

Date uploaded in London – –   16 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz serial No.93

1.இந்தியாவில் ஐஸ் கட்டி மூலம் ஆண்டுதோறும் தோன்றும் பனிக்கட்டி லிங்கம் எங்கே இருக்கிறது ?

XXXX

2.நெய் அபிஷேகம் செய்து செய்து முழுக்க, முழுக்க நெய் மலையாகி விட்ட நெய் லிங்கம் எங்கே இருக்கிறது ?

xxxx

3.ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதத்தில்  லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும் கோவில் எங்கே இருக்கிறது ?

xxxx

4.உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எங்கே இருக்கிறது ?

xxxx

5.கேரளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ள இடம் எது ? லிங்கத்தின் உயரம் என்ன ?

xxxx

6.தலையில் துளை உடைய லிங்த்தை  எங்கே காணலாம் ?

xxxx 

7.திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எத்தனை லிங்கங்கள் உள்ளனஅவை யாவை ?

xxxx 

8. நீரூற்று அல்லது தண்ணீர் இடையே உள்ள சிவலிங்கங்களை எங்கே தரிசனம் செய்யலாம் ?

Xxxxx

 9 . தஞ்சசைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு பெரியது?

Xxxx

 10.சிவலிங்கத்தின் பொருள் என்ன ?

Xxxx

 Bhojeswar, Bhojpur

விடைகள்

1.காஷ்மீரில் அமர்நாத் குகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் ஐஸ் லிங்கம் உண்டாகி பின்னர் மறைந்துவிடும் .

XXXX

2.திருஸூர் வடக்குநாதன் சிவன் கோவிலில்  நெய் லிங்கம் இருக்கிறது

xxxx

3.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண காலத்தில் ஒரு முறையும், தட்சிணாயன காலத்தில் ஒரு முறையும் தொடர்ந்து 5 நாட்கள் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழும்.

xxxx

4.அஸ்ஸாம் மாநிலத்தில் நவகாவ்ன் என்னும் இடத்தில் எழுப்பப்பட்ட சிவலிங்கத்தின் உயரம் 126 அடி. இதுதான் மிக உயரமான சிவலிங்கம் .

xxxx

5. திருவனந்தபுரத்துக்கு அருகில் செங்கல் என்னுமிடத்திலுள்ள சிவன்-பார்வதி கோவிலில் 111. 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கான்க்ரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது .

xxxx

6.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.

xxxx

7.எட்டு லிங்கங்கள் இருப்பதால் இதை அஷ்ட லிங்கம் என்பர் . அவை

இந்திர லிங்கம் (கிழக்கு), அக்னி லிங்கம் ( தென்கிழக்கு),

எம லிங்கம் (தெற்கு), நிருதி லிங்கம் (தென் மேற்கு), வருண லிங்கம் (மேற்கு) வாயு லிங்கம் (வட மேற்கு ), குபேர லிங்கம் (வடக்கு), ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு) 

xxxx 

8. திருச்சி அருகிலுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில், சீர்காழி திருக்காளமுடையார் கோவில், திருவேடகம் ஆலயம் ஆகியவற்றில் நீர் சுரக்கும் லிங்க சந்நிதிகளைக் காணலாம்.

xxxx 

9.சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள் ; பீடத்தின் உயரம் 18 அடிகள். மொத்த உயரம் 30 அடிகள் .

xxxx 

10. இறைவனை உருவமற்றவராகவும் வழிபடலாம் என்பதை சிவலிங்கம் காட்டுகிறது. இறைவனுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை என்பதையும் லிங்க உருவம் காட்டுகிறது . இயற்கையில் ஆறுகளில் கிடைத்த வட்ட வடிவான , வழ வழப்பான கற்களை சுயம்பு லிங்கம் என்று வழிபடுவது எளிதாக இருந்தது . இதே போல லிங்க வடிவிலுள்ள கயிலாயம், சிவலிங்க மலை, லிங்க வடிவிலான பாறைகளை வணங்குவதும் இறைவன் ‘அடி, முடி இல்லாதவர், ஆதி அந்தம் அற்றவர்’ என்பதை காட்டுகிறது. 

Tall Shivalinga near Thiruvananthapuram.

சுபம்

 Tags– QUIZ  சிவலிங்கம் பத்து QUIZ 

தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை! (Post No.12,921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,921

Date uploaded in London –  –   16 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை!

இன்னும் ஒரு முறை முயற்சிக்க வேண்டும்! – 1

ச.நாகராஜன்

வெற்றிக்கான வழிகாட்டி எடிஸன்

வாழ்க்கையில் வெற்றி பெற வெற்றிக்கான மந்திரத்தைத் தந்தவர் அமெரிக்கரான தாமஸ் ஆல்வா எடிஸன்.

“தோல்வி என்பது தோல்வியே அல்ல; அதை நீ ஒப்புக் கொள்ளாதவரை” என்று கூறியதோடு அப்படியே வாழ்ந்து காட்டிய மேதை எடிஸன்.

ஏராள்மான கண்டுபிடிப்புகளைத் தன் வாழ்நாளில் கண்டுபிடித்த எடிஸன் பெரிய உடல் குறைபாடுடன் வாழ்ந்தவர். ஆம், அவருக்குக் காது கேட்காது.

பள்ளியிலும் அவர் பயிலவில்லை. என்றாலும் கூடத் தளராத தனது உழைப்பினாலும், உற்சாகத்தினாலும் உலகை ஒளிர வைக்கும் மின்சார பல்பை முதலில் உருவாக்கினார். போனோகிராபை (கிராமபோன்) அவர் உருவாக்கினார். அனைவரையும் மனம் கவர வைக்கும் திரைப்படத் துறைக்கான  காமராவையும் அவரே கண்டுபிடித்தார்.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் ஓஹையோ மாகாணத்தில் மிலன் என்ற ஊரில் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாளன்று சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 வது மகனாக பிறந்தார் எடிசன். நான்கு வயது வரை அவருக்குப் பேச்சே வரவில்லை.

இளம் வயதில் ஸ்கார்லெட் எனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட எடிசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. பின்னால் ஒரு ஆபரேஷன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற போதும் கூட அதை அவர் விரும்பவில்லை. ‘என் வாழ்க்கையில் ஒரு பறவையின் ஒலியையும் கூட நான் கேட்டதில்லை’ என்று பின்னால் அவர் குறிப்பிட்டார்.

மேஜையின் மீது தலையை வைத்து அங்கு எழும் அதிர்வுகளை அவர் மூளை கிரகித்தது. அதை வைத்தே நுட்பமான ஒலி அலைகளை அவர் துல்லியமாகக் கணித்தார். இந்த வியப்பூட்டும் திறனைக் கண்டு அனைவரும் பிரமித்தனர்.

தாயார் தந்த ஊக்கம்

அவர் ஏழாவது வயதில் பள்ளியில் சேர்ந்து படித்தது 12 வாரங்கள் மட்டுமே. ஹைபர் ஆக்டிவ் குழந்தை என்று சொல்லி அவரது தாயாரை பள்ளி நிர்வாகம் அழைத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி விட்டது.

அவரது தாயாரே அவருக்குக் கல்வி கற்றுத் தர ஆரம்பித்தார்.

‘என் வாழ்க்கையை வடிவமைத்தவர் எனது தாயார்’ என்று உளமுருகப் பின்னால் குறிப்பிட்டார் அவர்.

வீட்டின் அருகில் இருந்த ஒரு நீரோடையில் மூழ்கி இறக்கவிருந்தார் அவர்.

எதிலும் மிகவும் ஆழ்ந்து கவனத்தைச் செய்யும் எடிஸன் நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார்.

புதிய தொழில்நுட்பத்தில் ஈடுபாடு

ஆரம்ப காலத்தில் டெலகிராப் ஆபரேட்டராக அவர் பணி புரிந்தார்.

பதிமூன்றாம் வயதில் புகைவண்டியில் நாளிதழ்களை விற்க ஆரம்பித்தார். பின்னர் கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட் என்ற பத்திரிகையை பிரசுரித்து அதை புகைவண்டியில் விற்க ஆரம்பித்தார்.

புகைவண்டியில் ஒரு நாள் மூன்று வயது குழந்தையை விபத்திலிருந்து அவர் காப்பாற்றவே குழந்தையின் தந்தை அவருக்கு டெலகிராபியை கற்றுத் தந்தார். இதனால் அவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது.

1876ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் மென்லோ பார்க்கில் தனக்குத் தானே ஒரு சிறிய சோதனைச் சாலையை அவர் அமைத்துக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடலானார்

மின்சார பல்பு

ஒன்றரை வருடம் அரும்பாடு பட்டு உலகின் முதல் இன்காண்டஸ்சென்ட் பல்பை – வெப்பத்தால் ஒளிரும் பல்பை – கண்டுபிடித்தார்.

அது உலகையே மாற்றியது; உலகமே ஒளிமயமாக வழி வகுத்தது. 1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தனது சோதனைச்சாலையிலேயே பல்பை அமைத்து ஒளிர வைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ருதர்போர்டு பி. ஹேயஸ் அவரை அழைக்கும் அளவு அவர் புகழ் பரவ ஆரம்பித்தது.

அடுத்து போனோகிராப் (கிராமபோன்), திரைப்பட காமரா ஆகியவற்றை அவர் கண்டுபிடிக்கவே உலகம் பிரமித்தது. 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உலகின் முதல் திரைப்படத்தை அவர் திரையிட்டுக் காட்டினார்.

ஹென்றி போர்டின் மாடல் டி காருக்காக செல்ஃப் ஸ்டார்டருக்கான பேட்டரியையும் அவர் உருவாக்கித் தந்தார்.

தனது பகுதியில் வாழும் மக்களுக்கு மின்சார விநியோகத்திற்கான கருவிகளையும் அவர் கண்டுபிடித்துத் தரவே மக்கள் வெகுவாக அவரைப் பாராட்ட ஆரம்பித்தனர்.

ஸ்டாக் டிக்கர் என்ற அவரது கண்டுபிடிப்பு தகவல் பரிமாற்றத்திற்கு வெகுவாக உதவ ஸ்டாக் மார்க்கட் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தது. 40000 டாலரை அவர் பெற்றார். இது அவரது வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.

அதிலிருந்து அவருக்கு வெற்றி மேல் வெற்றி தான் வந்தது.

தோல்வியே வெற்றிக்கான முதல் படி

மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதில் ஆயிரம் முறை தோல்வி அடைந்து விட்டீர்களே என்று அவரைப் பார்த்துக் கேட்ட போது, “யார் அடைந்தது தோல்வி, ஆயிரம் வழிகளில் இதைச் செய்ய முடியாது என்று நான் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

தோல்வி என்பதை அவர் ஏற்கவே இல்லை. நாளுக்கு பதினெட்டு மணி நேரம் உழைத்த அவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். 2500 குறிப்பு புத்தகங்களில் தனது சோதனைகளை அவர் எழுதி வைத்திருந்தார்.

திருமண வாழ்வு

ஆயிரத்தி எண்ணூற்று எழுபதுகளில் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 16 வயது பெண்ணான மேரி ஸ்டில்வெல்லை எடிஸன் திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் பிறந்தன. டெலகிராபி மீதுள்ள ஆர்வத்தினால் ஒரு குழந்தைக்கும் டாட் என்றும் இன்னொரு குழந்தைக்கு டேஷ் என்றும் செல்லமாகப் பெயரிட்டு அழைத்தார்.  மேரி 1884ஆம் ஆண்டு மரணமடையவே 1886இல் மினா மில்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் அவர் நியூ ஜெர்ஸியில் வெஸ்ட் ஆரஞ்ச் என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெரிய சோதனைச் சாலையை நிறுவினார். முதலில் ஐந்து கட்டிடங்களாக இருந்த ஆய்வுக்கூடம் 25 ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் பேர்களை வேலைக்கு அமர்த்திய பெரும் நிறுவனமாக வளர்ந்தது.

அதிகமாக சம்பளம் தராத போதும் கூட இளைஞர்கள் அவரிடம் வேலை பார்க்க போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

***     தொடரும்

காந்திஜி தினமும் உபயோகித்த சர்ப்பகந்த மூலிகை! (Post No.12,920)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,920

Date uploaded in London – –   15 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்துக்களின் மகத்தான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று ரவூல்பியா ஸர்பென்டினா  என்னும் சர்ப்பகந்த மூலிகை  ஆகும். இதை இன்று மேலை நாட்டினரும் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர். வேத காலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் மூலிகை இது .

மஹாத்மா காந்திஜி இந்த மூலிகையை தினமும் தேநீரில் போட்டு சாப்பிட்டு வந்தார் (The Indian political leader Mahatma Gandhi was known to employ Rauwolfia, reportedly using the root to make a tea that he consumed in the evening to help relax after a busy, overstimulated day.)

எப்படி அபூர்வ குளிகையான சோம லதா என்னும் அபூர்வ தாவரம் மறைந்துவிட்டதோ அதுபோல சர்ப்பகந்த  என்னும் மூலிகையும் மறையும் ஆபத்து உள்ளது. அரிய மூலிகை அருகிவருகிறது ஆயினும் இதில் உள்ள ரசாயனத்தைக் கண்டுபிடித்துவிட்டதால் அது இருக்கும் வேறு சில தாவரங்ககளை உலகம் நாடி ஓடுகிறது.

வோல்சா  நிறுவனம் (As per Volza’s Global Export data)  வெளியிடும் ஏற்றுமதி இறக்குமதி தகவலின்படி,Rauwolfia serpentina  ரவூல்பியா/ சர்ப்பகந்த ஏற்றுமதி மிக மிகக் குறைவு; அதாவது 191 கப்பல்களில் தான் இந்தச் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது அவைகளை 32 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்தன . 53 நிறுவனங்கள் அதை விலைக்கு வாங்கின  (export shipments stood from World at 191, exported by 32 World Exporters to 62 Buyers).

ஜெர்மனி, பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகியன அதிகமாக இறக்குமதி செய்தன (விலைக்கு வாங்கின)

இந்தியாவுக்கு முதலிடம்

இந்தியா 172 கப்பல் லோடு-களையும் ருமேனியா 13 கப்பல்களிலும் ஜெர்மனி 2 கப்பல்களிலும் இதை அனுப்பின.

(World exports most of it’s Rauwolfia serpentina to Germany, Pakistan and Switzerland; The top 3 exporters of Rauwolfia serpentina are India with 172 shipments followed by Romania with 13 and Germany at the 3rd spot with 2 shipments).

இந்த மூலிகை அருகி வருவதால் இந்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்த 29 மூலிகைகளில் இதுவும் உள்ளது. இதே துணைக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைகளை ரவூல்பியா என்ற பெயரில் ஏற்றுமதி செய்கின்றனர்.அல்லது  ரிசர்பைன்  ரசாயனம் உள்ள தாவரங்களை அனுப்புகின்றனர்.

சர்பகந்த மூலிகையிலுள்ள ரசாயனப் பொருள் (Rauwolfia alkaloids) உயர் ரத்த அழுத்த நோயை (hypertension/ high blood pressure ).  குணப்படுத்த பயன்படுகிறது .

Rauwolfia serpentinaமூலிகையின் பொதுப் பெயர் இந்தியன் ஸ்னேக் ரூட் என்பதாகும் (Indian Snakeroot)  இதை முதலில் தூக்கமின்மையை ( insomnia )அகற்ற பானங்களில் பயன்படுத்தினார்கள். இதிலுள்ள ரிசெர்பைன்  reserpine என்னும் ரசாயனம்தான் முக்கியமானது.

Side Effects  எதிரிடை விளைவுகள்

இதை அதிகமாக உபயோகித்தோருக்கு புற்றுநோய் மற்றும் மனத் தொய்வு ஏற்படுத்தியதாக சில ஆய்வுகள் காட்டியவுடன் இதற்கு கெட்ட  பெயர் ஏற்பட்டது. ஆயினும் பிற் கால  ஆராய்ச்சிகள் சரியான அளவு எடுத்தால் குணங்களே அதிகம் என்று காட்டின. இதிலுள்ள ரிசர்பைன்  என்ற ரசாயனம் இன்றுவரை மருத்துவ உலகில் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்த மூலிகை எப்போதும் பசுமையாக வளரும் செடி(evergreen shrub) . இதை அபோசயனேசி (Apocynaceae family) குடும்பத்தில் வைத்துள்ளனர்.  இதன் துணைப் பிரிவில் (Genus) இதே போல 100 தாவரங்கள் இருக்கின்றன. இவை மித வெப்ப மண்டல ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் காணலாம். ஆஸ்திரேலியாவிலும் தென், மத்திய அமெரிக்க நாடுகளிலும் உண்டு. இது அதிகம் வெப்பம் இல்லாத இமயமலைப் பகுதிகளிலும் தென் பகுதியில் அடர்ந்த காடுகளிலும் வளர்கிறது இது இளம் சிவப்பு, வெள்ளை மலர்களுடனும் கருஞ் சிவப்பு காய்களுடனும் காணப்படும் . இலைகள் நீள் வட்ட அல்லது முட்டை வடிவில் இருக்கும்.

சுமார் 3,000 ஆண்டுகளாக நாட்டுப்புற/ இயற்கை வைத்தியத்தில் இந்துக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்  பாம்புக் கடிக்கும், பூச்சிக் கடிக்கும் மருந்தாக பயன்படுத்தியதால் இதற்கு பாம்புக்கடி வேர் Snake Root ஸ்னேக் ரூட் என்ற பொதுப்பெயர் ஏற்பட்டது . மலேரியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகிய  சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தினர் . மன நோய்களைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது .

இதன் மற்றோரு பெயர் சந்திரிகா (also known as sarpagandha and chandrika)

R serpentina was used in folk medicine in India for centuries to treat a wide variety of maladies, including snake and insect bites, febrile conditions, malaria, abdominal pain, and dysentery.

400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் மருத்துவர் Dr Leonhard Rauwolf  டாக்டர் லெனார்ட் ரவூல்ப் இதை உலகிற்கு  அறிமுகப்படுத்தியதால் அவருடைய பெயர் இந்த மூலிகைக்கு சூட்டப்பட்டது  உண்மையில் இந்தியா அல்லது இந்துக்களின் பெயரை சூட்டியிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவர் டாக்டர் ருஸ்டம் ஜல் வகீல்  (The Indian physician Rustom Jal Vakil is considered responsible for introducing Rauwolfia to Western medicine). இதை மேலை நாட்டு மருத்துவ சிகிச்சையில் அறிமுகப்படுத்தினார் . அவர் நீண்ட ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டதால் அவர் சொன்னதை மேலை உலகம் ஏற்றது .

Fifty Alkaloids

ஐம்பதுக்கும் மேலான ரசாயனப் பொருட்களை இந்த மூலிகையிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர்

The identified indole and indole alkaloids include ajmalidine, ajmaline, ajmalinine, ajmalicine, aricine, canescine, coryanthine, deserpidine, isoajmaline, isoserine, isoserpiline, lankanescine, neoajmaline, papaverine, raubasine, raucaffricine, rauhimbine, rauwolfinine, recanescine, rescinnamine, reserpiline, reserpine, reserpinine, sarpagine, serpentine, serpentinine, thebaine, yohimbine, and yohimbinine.

அவைகளில் மிகவும் பயன்படுவது ரிசர்பைன் (Reserpine). அது செடியின் வேரில் அதிகம் காணப்படுகிறது

Reserpine is one of the major alkaloids of the plant. The reserpine content has been found to be highest in the root and lower in the stems and leaves.

Reserpine has been classified as an indole alkaloid. It is a white-to-yellow powder that becomes darker when exposed to light. It is odorless, insoluble in water, slightly soluble in alcohol, and freely soluble in acetic acid. It has a chemical formula of C33H40N209, a molecular mass of 609 g, and a bitter taste.

இது பற்றிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருடம் வாரியாக மருத்துவ சஞ்சிகைகளில் உள்ளன. பெரும்பாலான ஆராய்ச்சிகளை நடத்தியவர்கள் இந்திய மருத்துவர்களே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் .

–சுபம்–

Tags- சர்ப்பகந்த, ரவூல்பியா செர் பென்டினா , வேத கால மூலிகை, காந்திஜி, இருதய நோய், இரத்த அழுத்தம், ரிஸர்பைன்

Amazing Facts about Ayodhya Ram Temple (Post No.12,919)

Sita Devi’s Palace in Janakpur, Nepal

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,919

Date uploaded in London – –   15 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

LONGEST INCENSE STICK

The 108-feet long incense stick that spreads good fragrance up to 50 kilometre range.The incence stick weighs 3,610 kg and almost 3.5 feet wide;It took more than six months to prepare the incense stick in Vadodra, Gujarat. Cow dung, ghee, essence and extract of flowers, Ayurvedica products and herbs were used in it.

XXXXX

BIGGEST BELL

The temple has a bell weighing 2,400 kg. The monumental bell has been made of ‘ashtadhatu’ (eight metals) and costs ₹ 25 lakhs.

Made by a diverse team of approximately 30 skilled workers in Uttar Pradesh, the bell is composed of eight metals: gold, silver, copper, zinc, lead, tin, iron, and mercury. The bell will produce a resonant sound audible within a two-kilometre radius and measures an impressive six feet in height and five feet in width.

xxxxx

GOLDEN DOORS

Ram temple has 46 doors. And 42 of them will have are coated with gold. About 100 kilo gold is used for this. the first majestic golden door, measuring 12 feet in height and 8 feet in width, has been successfully installed on the upper floor of the sanctum sanctorum..

XXXXX

SITA DEVI SENDS 3000 GIFTS FROM NEPAL

More than 3,000 gifts for Lord Ram from Sitaji’s birthplace in Janakpur, Nepal, have arrived in Ayodhya. The gifts, including silver shoes, ornaments, and clothes, were handed over to the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust by Ram Roshan Das, the priest of Ram Janki Temple in Janakpur.

XXXXX

161 feet HIGH

The Ram temple is 161 feet tall .

 Temple occupies an area  of 2.7 acres (1.1 ha)

One central temple with 6 more joined around it as one temple complex.

Total area of temple complex- 71 acres

xxxx

Where is Ayodhya?

It is in Uttar Pradesh on the banks of River Sarayu.

The city is about 130 k.m. from Lucknow, 200 k.m. from Varanasi, 160 k.m. from Prayagraj , 140 k.m. from Gorakhpur and about 636 k.m. from Delhi. Buses are frequently available from Lucknow, Delhi and Gorakhpur.

XXXXX

Date of Consecration/ Kumbabishekam

22 January 2024.

XXXXX

ARUN RAJ IDOL SELECTED

The idol of ‘Ram Lalla’ has been carved by Karnataka’s renowned sculptor Arun Yogiraj. The idol is 51 inches tall and weighs 1.5 tonnes. The  idol is dark in complexion and is in standing posture. “The idol made of Lord Shri Ram Lalla is in the form of a five-year-old child.

XXXXX

Common Factor between Ram, Krishna, Vyasa and Draupadi

All the epic characters were black. Their black skin gave a severe blow to Aryan- Dravidian theory. So the anti Hindu foreigners never talk about the colour of epic heroes. Except Vyas, other three were very beautiful.

XXXXX subham xxxxxx

tags- Amazing Facts, Ayodhya ,Ram Temple,bell, idol, Ram lalla

QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ (Post No.12,918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,918

Date uploaded in London – –   15 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Srial No.92

1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின்   கரையின் மேல் இருக்கிறது?

XXXX

2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500  ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

XXXX

3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?

XXXX

4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?

XXXX

5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?

XXXX

6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?

XXXX

7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?

xxxxx

8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?

XXXX

9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?

xxxx

10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?

xxxx

BONUS QUESTIONS

11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?

xxxx

12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?

xxxx

13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?

xxxx

14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?

xxxx

விடைகள்

1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .

XXXX

2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.

XXXX

3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.

XXXX

4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம்  51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.

xxxx

5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.

xxxx

6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..

.XXXX

7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு  2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .

XXXX

8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்

XXXXX

9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி  ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.

XXXX

10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.

xxxxx

BONUS QUESTIONS

11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.

xxxx

12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .

xxxx xxxx

13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள  ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ.  இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .

 xxxx

14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.

— சுபம் —

Tags- QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ

KARMA RAHASYA  – 1 (Post No.12,917)

KARMA RAHASYA  – 1 (Post No.12,917)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,917

Date uploaded in London –  –   15 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

KARMA RAHASYA  – 1

S. Nagarajan

One’s Karma is the cause for one’s rise and fall.

In this regard there is an ancient story of the conversation between Mrithyu and Gautami with Kala and a Hunter (Fowler) and the serpent.

The story was told by Bhishma to Yudhishthira. In Mahabharata, the first chapter of Anusasana Parva narrates this story.

There was an old lady of the name of Gautami, who was possessed of great patience and tranquillity of mind. One day she found her son dead in consequence of having been bitten by a serpent. An angry fowler, by name Arjunaka, bound the serpent with a string and brought it before Gautami. He then said to her-‘This wretched serpent has been the cause of your son’s death. Tell me quickly how this wretch is to be destroyed. Shall I throw it into the fire or shall I hack it into pieces? This infamous destroyer of a child does not deserve to live longer.’

Gautami replied, ‘ O Arjunaka, release this serpent. It does not deserve death at your hands. Those that have made themselves light by the practice of virtuous deeds, manage to cross the sea of the world even as a ship crosses the ocean. But those that have made themselves heavy with sin sink into the bottom, even as an arrow thrown into the water.’

The fowler said, ‘I know, O lady, that knowing the difference between right and wrong, that the great are afflicted at the afflictions of all creatures. But these words which you have spoken are fraught with instruction for only a self-contained person. Therefore, I must kill this serpent. Those who value peace of mind, assign everything to the course of Time as the cause, but practical men soon assuage their grief (by revenge). Therefore, O lady, assuage your grief by having this serpent destroyed (by me).

Gautami replied, ‘The death of the boy was predestined: therefore, I am unable to approve of the destruction of this serpent.’

At this point of time the serpent, painfully bound with the cord, sighing a little and maintaining its composure with great difficulty, then uttered these words slowly, in a human voice.’

“The serpent said, ‘O Arjunaka, what fault is there of mine? I have no will of my own, and am not independent. Mrityu sent me on this errand. By his direction have I bitten this child, and not out of any anger or choice on my part. Therefore, if there be any sin in this, O fowler, the sin is his.’

The fowler said, “As in the making of an earthen vessel the potter’s wheel and rod and other things are all regarded as causes, so  O serpent, (cause in the production of this effect). He that is guilty deserves death at my hands.’

“The serpent said, ‘As all these, viz., the potter’s wheel, rod, and other things, are not independent causes, even so I am not an independent cause. Therefore, this is no fault of mine, as you should grant.”

The serpent directed by Mrityu having said this, Mrityu himself appeared there and addressing the serpent spoke thus.

Mrityu said, ‘Guided by Kala, I, O serpent, sent you on this errand, and neither you nor am I the cause of this child’s death. Even as the clouds are tossed hither and thither by the wind, I am like the clouds, O serpent, influenced by Kala. All creatures, mobile and immobile, in heaven, or earth, are influenced by Kala. All acts in this world and all abstentions, as also all their modifications, are said to be influenced by Kala, Surya, Soma, Vishnu, Water, Wind, the deity of a hundred sacrificer, Fire, Sky, Earth, Mitra and Parjanya, Aditi, and the Vasus, Rivers and Oceans, all existent and non-existent objects, are created and destroyed by Kala. Knowing this, why you, O serpent, consider me to be guilty? If any fault attaches to me in this, you also would be to blame.’

Thus folwer blamed the snake and snake blamed Mritu and Mritu blamed Kala.

Then Kala arrived at that scene of disputation on this point of morality, and spoke thus to the serpent and Mrityu and the fowler Arjunaka assembled together.

Kala said, ‘Neither Mrityu, nor this serpent, nor I, O fowler, am guilty of the death of any creature. We are merely the immediate exciting causes of the event. O Arjunaka, the Karma of this child formed the exciting cause of our action in this matter. There was no other cause by which this child came by its death. It was killed as a result of its own Karma. It has met with death as the result of its Karma in the past. We all are subject to the influence of our respective Karma. Karma is an aid to salvation even as sons are, and Karma also is an indicator of virtue and vice in man. We urge one another even as acts urge one another. As men make from a lump of clay whatever they wish to make, even so do men attain to various results determined by Karma. As light and shadow are related to each other, so are men related to Karma through their own actions. Therefore, neither you, nor am I, nor Mrityu, nor the serpent, nor this old Brahmana lady, is the cause of this child’s death. He himself is the cause here.”

Upon Kala expounding the matter in this way, Gautami, convinced in her mind that men suffer according to their actions, spoke to Arjunaka.’Neither Kala, nor Mrityu, nor the serpent, is the cause in this matter. This child has met with death as the result of its own Karma. I too so acted (in the past) that my son has died (as its consequence). Let now Kala and Mrityu retire from this place, and you too, O Arjunaka, release this serpent.’

Then Kala and Mrityu and the serpent went back to their respective destinations, and Gautami became consoled in mind as also the fowler.

Thus Bhisma convinced Yudhishthira that Men attain to heaven or hell as the result of their own Karma.

Karma Rahasya is subtle.This can not be understood easily.

Even to read this Karama Rahaya article one should have done some good Karma, is it not?

*** 

Thanks to Kisari Mohan Ganguly who translated Mahabharata first in English between 1883 and 1896. Condensed from his version.

நயன்தாரா ஏற்றுமதியும் மருத்துவ உபயோகமும் (Post No.12,916)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,916

Date uploaded in London – –   14 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வின்கா ரோசியா Vinca rosea என்ற பூ ஆப்பிரிக்காவின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கர் (Madagascar, now called Malagasy) என்ற தீவிலிருந்து உலகம் முழுதும் பரவியதாக தாவர வியல் அறிஞர்கள் செப்புவர்; இன்று  இதை வீடுகளிலும் தோட்டங்களிலும், குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், எங்கும் காண்கிறோம்.

இதற்கு தமிழ் நாட்டில் நித்ய கல்யாணிநயன்தாராசுடுகாட்டுப்ப்பூ என்று பல பெயர்கள் உள்ளன. இதை சாகுபடி செய்தால் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் எந்த விதக் கவனிப்பும் இல்லாமல் எளிதில் வளரக்கூடிய தாவரம் / செடி இது. இதற்கு வாசனை என்ற சிறப்பு இல்லை. ஆயினும் நிறைய நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதால் இதற்கு மதிப்பு அதிகம் .

xxxxxxxxxxxxxxxx

எச்சரிக்கை

மருத்துவக் கட்டுரைகளைப் படித்துவிட்டுநேரடியாக தனக்குத்தன் தானே  வைத்தியம் செய்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. எதையும் பயன்படுத்துவதற்கு முன்னால் பதிவு செய்த உண்மை மருத்துவர்களைக் கலந்து (REGISTERED MEDICAL PRACTITIONERS) ஆலோசியுங்கள் .

அவர்கள் சொன்னாலும் கூட,  உங்கள் தேகம் அந்த மருந்தை ஏற்கிறதா எதிரிடை விளைவை உண்டாக்குகிறதா (மலச்சிக்கல்வாந்திகிறுகிறுப்பு,  அதிக தூக்கம்) என்பதை தேதிவாரியாக குறித்து வையுங்கள்அதிகப்பாதிப்பு  இருந்தால் மருந்தை எடுக்காதீர்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமாவது நீங்கள் எடுக்கும் புதிய மருந்து பற்றிச் சொல்லி விட்டு மருந்தினை எடுங்கள் .

பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் பலன்கள் உண்மையானால் டாக்டர்களுக்கு வேலையே இராது. ஆகையால் பத்திரிகையில் படிப்பதை அப்படியே பின்பற்றாதீர்கள் . மருத்துவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்

Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாஸ்கரில் (LARGE ISLAND COUNTRY NEAR AFRICA; MALAGASSY)  இருந்து பரவியது ; தாவரவியலில் இதை அபோசயனேசி (Apocynaceae ) குடும்பத்தின் கீழ் வைத்துள்ளனர் . காதராந்தஸ் ரோசியஸ் Catharanthus roseus என்பது தாவரவியல் லத்தீன் மொழிப்பெயர்.

வெள்ளை நிறம் அல்லது இளம் சிவப்பு நிறத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றும் ; கண் போல இருப்பதால் நயன(கண்) தாரா (நட்சத்திரம்) என்றும் எப்போதும் பூப்பதால் நித்ய கல்யாணி என்றும் ஸம்ஸ்க்ருத்தில் அழைக்கின்றனர். தமிழில் நல்ல பெயரைச் சூட்டவில்லை . ஆங்கில மொழியில் Periwinkle பெரிவின்க்கில் என்று சொல்லுவார்கள்

ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை உடையது  இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.

இம் மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும்.. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் மேற்பரப்பு பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.

இந்தி மொழியில் இதை சதாபஹார் सदाबहार Sadabahar என்று அழைப்பர் ;

ஏனைய மொழிகளில் Shavam Naari (Malayalam), सदाफूली Sadaphuli (Marathi), নযনতাৰা Nayantara (Bengali); బిళà±ళ à°—నà±నేరà± (Telugu).

நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள்

நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.

இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் (In the acute leukemias and lymphoblastosarcomas, cytomorphologic and quantitative studies demonstrated that the oncolytic effects correlated well with the magnitude of metaphasic blockade)

ஹா ட்கின்ஸ் நோய் என்னும் புற்று நோயை யும் குணப்படுத்தும் Hodgkin’s disease, lymphosarcoma, and acute leukemia have been studied after treatment with the Vinca rosea alkaloids (vinblastine and vincristine),

நித்ய கல்யாணியிலிருந்து ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள் 70 கிடைக்கின்றன (The stem of Madagascar periwinkle produced a milky sap which is the source of over 70 different indole alkaloids. அவற்றில் நான்கினை மருத்துவ உலகம், புற்று நோய் சிகிச்சையில்( cancer fighters.)பயன்படுத்துகின்றன ; அவையாவன

: வின் ப்லாஸ்டின் Vinblastine (VBL),

வினோரெல்பை ன் vinorelbine (VRL),

வின்கிரிஸ்டின் vincristine (VCR) and

வின்டெசின் vindesine (VDS).

இவைகளில் VCR, VBL and VRL என்பன அமெரிக்காவிலும் வின் ப்லுனைன்  Vinflunine என்பதை ஐரோப்பாவிலும் பயன்படுத்துகின்றனர் .புற்று நோயைத் தீர்க்கும் மருந்துகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது நித்ய கல்யாணி என்றால் இதன் மதிப்பை அறியலாம் .

மனநோய்களை குணமாக்கும்;

இரத்த அழுத்தம் , நீரிழிவுநோய் கட்டுப்படும்; been used for various treatments, e.g. diabetes mellitus, high blood pressure and infection

மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்;

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும்.

பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

xxxxxxxxx

இதில் கிடைக்கும் ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள்: அஜ்மாலின்,ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)

இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.,

xxxxxx

வருமானம் தரும் நித்யகல்யாணி

ஏற்றுமதி தகவல்கள்

வோல்சா நிறுவனம் திரட்டிய (As per Volza’s Global Export data),  தகவலின்படி (Vinca rosea export shipments) 283 கப்பல்களில் நித்ய கல்யாணி ஏற்றப்பட்டது . 58 ஏற்றுமதி நிறுவனங்கள் அதை அனுப்பின.( stood from World at 283, exported by 58 World Exporters to 61 Buyers.). அதை 61 வியாபார நிறுவனங்கள் வாங்கின

பெரும்பாலான வின்கா ரோசியா செடிகளை பிரான்ஸ், ஜப்பான், பெரு ஆகிய நாடுகள் வாங்கின.

(France, Peru and Japan)

இந்தியா முதலிடம்

இந்தியா 184 கப்பல்களிலும் காஸ்டாரிகா 23 கப்பல்களிலும் , வியட் நாம் 21 கப்பல்களிலும் நித்ய கல்யாணி சரக்குகளை அனுப்பின

The top 3 exporters of Vinca rosea are India with 184 shipments followed by Costa Rica with 23 and Vietnam at the 3rd spot with 21 shipments.

xxxx

தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. . நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.

நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது ஆபத்தானது .

–subham—

Tags- நித்ய கல்யாணி, Vinca rosea, Periwinkle, சதாபஹார் सदाबहार Sadabahar, புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் , குணமாகும், மருந்து ஏற்றுமதி , நயனதாரா