QUIZ காஷ்மீர் பத்து QUIZ (Post No.12,829)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,829

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL NUMBER—86

1.காஷ்மீர் தலை நகர் ஸ்ரீநகருக்கு ஏன் தேவியின் பெயர் ஏற்பட்டது ?

Xxxxx

2.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த அரசியல் சட்ட விதி என்ன சொன்னதுசிறப்பு விதியை யார் எப்போது நீக்கினார்கள்?

xxxxx

3. காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் எங்கே இருக்கிறது மாநிலத்திலுள்ள புனிதத் தலங்கள் எவை ?

XXXX

4.அந்த மாநில தலை நகர் ஸ்ரீநகரில் உள்ள ஏரிக்கு என்ன பெயர்அதன் புகழுக்கு காரணம் என்ன ?

xxxx

5.காஷ்மீரின் எவ்வளவு சதுர மைல் பகுதியை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது நேரு செய்த மிகப்பெரிய தவறு என்ன?

XXXX

6.இந்துக்கள் பகுதியான காஷ்மீர் மாநிலத்தை எப்போது முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள் ?

XXXXX

7.நேருஜி குடும்பத்தின் பண்டிட் ஜாதி என்பது என்ன ?

XXXX

8.காஷ்மீர் மாநில வரலாற்றைக்கூறும் மிகச் சிறந்த நூல் எதுஅதை யார் எழுதினார் ?

xxxxx

8.ராஜதரங்கிணி என்றால் என்ன?

xxxxx

9. மாநிலத்திலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் எவை?

xxxxx

10.காஷ்மீர் படுகொலை KASHMIR GENOCIDE என்பது என்ன?

Xxxxx

விடைகள்

1.ஸ்ரீநகரில் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்ததால் அந்த நகருக்கு தேவியின் பெயரும் உலகப்புகழூ ம்  உண்டாக்கியது ; அங்கு சங்காரச்சார்யார் பெயரில் ஒரு குன்றும் உள்ளது; அவர் வழிப்பட்ட கோவில்கள் ஸ்ரீ நகரிலும் அதற்கு அப்பால் இமய மலையிலும் இருக்கின்றன. அதை சங்கரருக்கும் இதே நகரில் கோவில் இருக்கிறது அவர் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பர்; ஆயினும் காஞ்சி மகா சுவாமிகள் தன்னுடைய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் ஆதி சங்கரர்  2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் காட்டுகிறார்.

xxxxx

2.அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ன் படி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது ; இந்திய சுப்ரீம் கோர்ட்டும் அது செல்லுபடியாகும் என்று 2023 டிசம்பரில் தீர்ப்பு அளித்துவிட்டது ; முன்னர் இருந்த தனிக்கொடி , முதலமைச்சரை காஷ்மீர் பிரதர் என்று அழைப்பது எல்லாம் காலாவதியாகிவிட்டது. பிற மாநில மக்கள் குடியேறக்கூடாது, சொத்துக்கள் வாங்கக்கூடாது என்ற விதிகளும் குப்பைத் தொட்டிக்குள்  போடப்பட்டன; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 1400ம்- ஆண்டுக்கு முந்தைய இந்து ஆட்சி மீண்டும் செயலுக்கு வந்து விட்டது

xxxxx

3.இந்தியாவின் வடகோடி மாநிலம் காஷ்மீர்; அதற்கு அப்பால் நாட்டின் வட அரணாக விளங்குவது இமயமலை.

ஸ்ரீ நகரில் உள்ள டால் ஏரிக் கரையில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 240 படிக்கட்டுகள் உள்ளன.  . இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இதனை ஜோதீஷ்வரர் கோவில் என அழைக்கின்றனர். இக்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆதிசங்கரர் இங்குதான்  சௌந்தர்யலஹரி என்னும் அம்பாள் ஸ்தோத்திரப் பாடலை இயற்றினார் .

காஷ்மீரின் வரலாறு கூறும் நூல்  ‘ராஜதரங்கிணி’ ;அதை எழுதிய  கல்ஹணர் இக்கோவில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்   மன்னர் கோபாதித்யா  கட்டினார் என்பார் . பின்னர், கர்கோடக  வம்சத்தின் லலிதாதித்யா என்பவர் திருப்பணிகளை செய்தார்

Kheer Bhawani Temple. கீர் பவானி கோவில்

Shankaracharya Temple. சங்கராசார்யா கோவில்

Sharika Devi Temple. சாரிகா தேவி  கோவில்

Martand Temple.மார்த்தாண்ட சூரியன்  கோவில்

Amarnath Cave.அமர்நாத் பனிக்கட்டி லிங்க  கோவில்

Mamleshwar Temple in Pahalgam.பக்லஹாமில் உள்ள மாமகேஸ்வர் சிவன் கோவில்

Rani Mandir in Gulmarg. குல்மார்க் ராணி மந்திர்

Pandrethan near Srinagar. ஸ்ரீ நகர் அருகில் பண்ட்ரீ தான்  கோவில்

ஜம்மு பகுதி கோவில்கள்

Vaishno devi temple வைஷ்ணவ தேவி குகைக் கோவில்

Shri Raghunathji Temple. ரகுநாத் கோவில்

Shri Ranbireshwar Temple. ராணா வீரேஸ்வர் கோவில்

Panchvaktar Temple. …பஞ்ச்வக்தர் கோவில்

Rani Kalhuri Devi Temple. …ராணி கஸ்தூரி

Ram Talai Temple. …ராமதலாய் கோவில்

Radha Krishan Rukmani Temple. …ராதா கிருஷ்ணா ருக்மிணி கோவில்

Panjthirthi. பஞ்ச தீர்த்த கோவில்

ஜம்முவிலிருந்து 45 கி.மீ தொலைவிலுள்ள வைஷ்ணவ தேவி குகைக் கோவில் அமர்நாத் பனிலிங்கம் போலவே  பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது

ஜம்மு பகுதியில் ரகுநாத் கோவில் மிகப்பெரிய கோவில்

xxxxx

4.ஸ்ரீநகர் ஜீலம் ஆற்றின் கரையில் இருக்கிறது அங்குள்ள ஏரிக்கு தாள் ஏரி என்று பெயர். மக்கள் சிக்காரா என்னும் படகு வீடுகளில் வசிக்கின்றனர். அதில் சென்று காய்கறி, பழ ங்களை விற்கிறார்கள் ; சுற்றுலாப்பயணிகள் அதில் சென்று பல இடங்களைப் பார்க்கலாம்  இதன் சுற்றளவு 10 மைல் ; ஏரியின் பரப்பளவு 6 சதுர மைல் . ஏரியில் மிதக்கும் தோட்டங்களும் கரையில் மொகலாய மன்னர்கள் அமைத்த புகழ்பெற்ற தோட்டங்களும் அமைந்துள்ளன

xxxxx

5.வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சியால் இந்தியா மூன்று துண்டாகியது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், இந்தியா என்று ஆனது ; கிழக்கு பாகிஸ்தானை இந்திராகாந்தி விடுவித்து வங்க தேச நாட்டை உருவாக்கினார்; மேற்கு பாகிஸ்தான் காஸ்மீர் மீது படை எடுத்து அதையும் சேர்க்க முயன்றது; அப்போது ஹிந்து மன்னர் (HARI SING)  இந்திய ராணுவ உதவியை நாடி ஸ்ரீ நகர் முதலிய பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்குள் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றி சுதந்திர காஷ்மீர் / ஆஜாத் காஷ்மீர் என்று பெயரிட்டது ;அதன்பரப்பளவு 13.300 சதுர கிலோமீட்டர் 13,297 km2 (5,134 sq mi)

இந்தியா -பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரிக்கவே காஷ்மீர் மக்களுக்கு வோட்டெடுப்பு அடிப்படையில் சுய நிர்ணய உரிமை (SELF DETERMINATION) செய்யலாம் என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற நேருஜி வகைசெய்தார்; ஆனால் இருநாட்டு ராணுவங்களும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது ; இரு நாடுகளும் அதைச் செய்யவில்லை; வரலாற்று ரீதியில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் இந்து பூமி என்பதை காஷ்மீரின் ராஜ தரங்கிணி , நீலமத புராணம் ஆகியன சொல்கின்றன. அப்படியிருந்தும் நேருஜி இப்படிச் சொன்னார்.

xxxxx

6.ராஜ தரங்கிணி ஏன்னு வரலாற்று நூலின்படி கலியுகம் துவங்கிய காலம் முதல் இந்துக்கள் ஆண்ட காஷ்மீர் 1200 முதல் முஸ்லீம்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளது கடைசி இந்து மன்னரின் பெயர் உதயண தேவன்; அவன் மனைவி கோதா ராணி பின்னர் ஆண்டாள்;அவள் 1339ல் இறந்தவுடன் சுல்தான் ஷாமாஷ் உத்தீன் ஆட்சியைப் பிடித்தான் ; நரேந்திர மோடி அரசு 2019ல் மீணடும் இந்து ஆட்சியை ஏற்படுத்தியது

xxxxx

7.காஷ்மீர் பண்டிட் KASHMIRI PANDITS/ PUNDITS

காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் ஆவர்.. இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு காஸ்மீரி பிராமணர்.

xxxxx

8.காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் — இது வடமொழியில் எழுதப்பட்டது. இதில் 3449 சுவைமிகு ஸ்லோகங்கள் உள்ளன. காஷ்மீர் வரலாறு நமக்கு எதற்கு என்று பல தமிழர்கள் நினைக்கலாம். இலங்கை மன்னரையும் சோழனையும் தோற்கடித்த மிஹிரகுலன் என்ற காட்டுமிராண்டி மன்னன் பற்றிய சுவையான செய்திகள், இலங்கை வரை ஆட்சிச் சக்கரத்தை பரவ விட்ட லலிதாதித்யன் போன்ற மன்னர்கள் பற்றிய செய்திகள் இதில் உள.

 பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் ஒரு காஷ்மீரி பிராமணர். அவருடைய மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட் இதை வடமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எங்கு தெரியுமா? சிறையில் உடகார்ந்து கொண்டு! அப்பொழுது நேருவும் சிறைவாசம் செய்தார். 1934 ஆம் ஆண்டில் அவர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு டேராடூன் சிறையில் இருந்தே முன்னுரை எழுதினார். புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டது. 

Xxxxx

9.ஸ்ரீநகர், குல்மார்க், சோன் மார்க், பஹல் காம் ; இங்கு பூங்கா க்கள் , துலிப் தோட்டங்கள், பனிச் சறுக்கு விளையாட்டுகள் , இயற்கைக் காட்சிகள் , படகு சவாரிகள், குதிரை சவாரி, மலை ஏறுதல்  என்று பல கவர்ச்சிகள் உள்ளன.

XXXX

10.காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளதுமனித உரிமை அமைப்புகள் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை, அகதிகள் வெளியீரம் பற்றி வாய் திறக்கவில்லை. பாரதீய ஜனதா தவிரவுள்ள இந்திய அரசியல் கட்சிகளும்  மெளனம் சாதித்தன .

XXXXX SUBHAM XXXXX

tags- காஷ்மீர் , குவிஸ், இந்துக்கள் படுகொலை, ராஜதரங்கிணி, ஸ்ரீ நகர், ஆதிசங்கரர் , படகு வீடு, தால்  ஏரி , பண்டிட், நேருஜி, Pandit, Nehru

புனர் ஜனனி குகை:திருவில்வாமல ராமர்  கோவில் மேல் விவரம்-Part 32 (Post No.12,828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,828

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 32

கோவில் எண்–31  தொடர்ச்சி

31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில்  பற்றி மேல் விவரம்

ஸ்ரீ வில்வாத்ரி மஹாத்ம்யயம் என்ற சம்ஸ்க்ருத நூலில் 18 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதன்படி கிழக்கேயுள்ள பெருமாள் கோவில்தான் முதல் கோவில் ;  பரசுராமர் ஸ்தாபித்தது ; இதை இப்போது லட்சுமணர் கோவில் என்கிறார்கள்

ஆமலகன் கதை

மேற்கு நடாவில் உள்ள பெருமாள்   ஸ்வயம்பூ / தானாகாத் தோன்றியது. மனிதர்கள் வடிவமைக்கவில்லை இது பற்றியும் ஒரு கதை இருக்கிறது . இதுவும் வில்வாத்ரி மஹாத்ம்யத்தில் உள்ள கதைதான். காஸ்யப பிரஜாபதியின் மகன் ஆமலகன் மஹாவிஷ்ணுவை வேண்டி கடுந்தவம் இருந்தான் இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது; யாராவது கடும் தவம் புரிந்தாலோ அஸ்வமேத யாகங்கள் செய்தாலோ , தன்னுடைய பதவியைப் பறிக்கத்தான் அவர்கள் தவம் இருக்கிறார்கள் என்று அஞ்சுவான். உடனே தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோரை அனுப்பினான். அவர்கள் டான்ஸ் ஆடியும் கூட ஆமலகன் ஆடாது அசங்காது தவம் செய்தான். உடனே ஆடல் அழகிகள் இந்திரனுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். ஆமலகனுக்கு பதவி ஆசை ஏதும் கிடையாது. அவன் உண்மை பக்தன் என்று. ரிப்போர்ட்டைப் படித்த இந்திரனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அடுத்த படியாக அசுரர்கள் பயந்தார்கள். அவர்கள் ஆமலகன் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் கண்களைத் திறக்கவே அசுரர்கள் எரிந்து கல்லானார்கள்;  அந்த இடத்தை இப்போதும்   ராக்ஷஸ பாறை என்கிறார்கள் .

ஆமலகன் தீவிர தவத்தை மெச்சி விஷன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இன்றுபோல் என்றும் தரிசனம் தருக என்று ஆமலகன் சொன்னவுடன் தன்னுடைய சக்தியை சிலை மீ து பிரயோகித்தார்  அதுவே மேற்கு நோக்கி நிற்கும் ராமர் அல்லது மஹாவிஷ்ணு கோவில் எனப்படுகிறது.

கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் இது ஒப்பற்றது லட்சுமணனுக்கு இங்குள்ள ஒன்றைத் தவிர வெண்ணி மலாவில் ஒரு கோவில் இருக்கிறது. கோட்டயத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கோவில் பிரபலம் அடையவில்லை.

இங்கு கணபதி, சாஸ்தா, சிவன்-பார்வதி ஆகிய மூர்த்திகளும் இருக்கிறார்கள். கோவில் முழுதும் தரையில் கற் பலகைகள் வேயப் ப்பட்டுள்ளன .வட புறத்தில் குளமும் கோவிலுக்குள் கிணறும் இருக்கின்றன.

புனர் ஜனனி குகை

கோவிலிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் நீளமான புனர் ஜனனி குகை இருக்கிறது இதை பரசுராமர் வேண்டுதலின்பேரில் விஸ்வகர்மா உண்டாக்கினார். இது வழியாகச் செல்வோருக்கு மறு ஜென்மம் கிடையாது . ஆயினும் ஆண்டுக்கு ஒரு முறையே இதைத் திறப்பார்கள் ; நவம்பர்- டிசம்பரில் வரும் குருவாயூர்  ஏகாதசியன்று  பக்தர்கள் குகைப் பயணம் செய்கிறார்கள் ; ஏனைய நாட்களில் இங்கு தீய சக்திகள் உலவுவதாக மக்கள் சொல்லுவர்.

இந்தக்  குகை மேடு பள்ளம் நிறைந்தது.சில இடங்களில் மிகவும் குனிந்தும் ஊர்ந்தும் செல்லவேண்டும். சில இடங்கள் மிகவும் இருட்டானவை; மூச்சு விடுவதும் சிரமம்; ஆயினும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் ராம நாமம் சொல்லிக்கொண்டே முன்னேறுவார்கள்; குகையைக் கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். குகைக்கு வெளியே வந்தவுடன் பாப நாசினி, பாதாள தீர்த்தம் அம்பு தீர்த்தம்,கொம்பு  தீர்த்தம் ஆகியவற்றில் குளிப்பார்கள்.

கேரள கங்கை

கேரளத்துக்கு பரசுராமர் கங்கை நதியைக் கொணர்ந்ததாகவும் அதுவே பரதப் புழா என்னும் நதி என்றும் சொல்லுவார்கள்; அதை மெய்ப்பிக்கும் வகையில் திரு வில்வமலா, திருச்சிக்குழி, தீர்த்தலா, திருநாவாயி, திருமி ட்டக்கோடு ஆகிய புனித தலங்கள் நதிக்கரை நெடுகிலும் இருக்கின்றன. ; இவை தவிர மேலும் பல சிவ, விஷ்ணு கோவில்களும் எதிர்க்கரையில் இடம்பெறுகின்றன. காசியில் மணிகர்ணிகா  படிக்கட்டு எவ்வளவு மகிமை பொருந்தியதோ  அவ்வளவு மகிமை மிக்கது திருவில்வ மங்களா (பரதப் புழா) நதித்தித்துறை  .

பாண்டவ சகோதரர்களும்  குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் நீத்தார் கடன் நிறைவேற்ற வியாசரின் ஆலோசனைப்படி  இங்கு வந்து பித்ரு கடன்களைச்  செய்தனராம் ; அவர்களும் சோமேஸ்வரம், ஐவர் மடம் , கோத்தகுருச்சி ஆகிய கோவில்களை நிர்மாணித்ததாக ஐதீகம்.

ஏகாதசி திருவிழா

கும்ப மாத ஏகாதசி விழாதான் பெரிய பண்டிகை பிப்ரவரி – மார்ச்சில் வரும் ஏகாதசி, அதற்கு முன்னர் அஷ்டமி நவமி நாட்களில் விளக்கு அலங்காரம் நிராமாலா / மாலை அலங்காரம், யானை ஊர்வலம் நடக்கும். ஏகாதசி அன்று பத்தர்கள் உண்ணாவிரதம் இருந்து இரவு முழுதும் கண்விழித்து பெருமாள் நாமத்தைக் சொல்லுவார்கள் .

ஒரு காலத்தில்  கொச்சி மகாராஜா, கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்), திருவனந்தபுரம் மஹாராஜா ஆகியோர் ஆளுக்கு ஒரு நைவேத்தியம் படைக்கும் பணியைச் செய்து வந்தார்கள். தற்காலத்தில் அவை நடைபெறாவிட்டாலும் பெருகி வரும் பக்தர் எண்ணிக்கை கோவிலின் புகழைப் பரப்பி வருகிறது.

திப்பு சுல்தான் தாக்குதல்

கர்நாடகத்திலும் கேரளத்திலும் திப்புவின் துலுக்கப்படைகள் நிறைய கோவிலைத் தாக்கி அழித்தன அல்லது சேதப்படுத்தின. 1789ம் ஆண்டில் திருவில்வமங்கலா கோவிலைத் தாக்கிய முஸ்லீம் படைகள் அதை முக்கால் வாசி அழித்துவிட்டன ; அவரது நட்பு மன்னரான கொச்சி மஹாராஜா கோவில் அது என்று தெரிந்தவுடன் கர்ப்பக்கிரகத்தை மட்டும் மிச்சம் விட்டனர்

 1861ம் ஆண்டு கொச்சி மஹாராஜா இதை செப்பனிட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்ட நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு கோவிலைச் சேதமாக்கியது. கேரள கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் கோவில் தீ விபத்து என்பது அடிக்கடி கேட்கப்படும் செய்திதான்.

கிழக்கு நடையில் இருந்த விக்கிரகத்தை அருகிலுள்ள குளத்தில் போட்டு தீயிலிருந்து பாதுகாத்தனர். மேற்கு நடா பெருமாளை காப்பாற்ற முடியவில்லை. 25 நாட்களுக்குப் பின்னர் தீ அவிந்தபோது விக்கிரகததை சோதித்தனர்; அது சேதம் அடையாமல் இருந்தது ; பின்னர் திருப்பணி செய்து 1885ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

பரசுராமர் காலத்திலேயே கோவில் பராமரிப்பு, பூஜைகள் முதலியன  சிற்சில இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக அப்பணிகளைச் செவ்வனே செய்துவந்தனர். பின்னர் இரண்டு மன்னர்கள் பொறுப்பேற்றவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது; பிரிட்டிஷாரை, சமரசத்துக்கு அழைத்தபோது அவர்கள் சக்தி வாய்ந்த கொச்சி பக்கம் தீர்ப்பு வழங்கினார்கள் ; தற்காலத்தில் கொச்சி தேவ  ஸ்வம்போர்டு இதை நிர்வகிக்கிறது.

—–சுபம் —-

TAGS-திரு வில்வ மங்கலா , வில்வாத்ரி , கோவில், தொடர்ச்சி, திப்பு சுல்தான் தாக்குதல் ,புனர் ஜனனி குகை

ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்! (Post No.12,827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,827

Date uploaded in London –  –  13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை

நோய்சிகிச்சைவைத்தியர்நோயாளி பற்றி ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்!

 ச.நாகராஜன்

வைத்தியரின் நான்கு தகுதிகள் 

வைத்தியருக்குத் தேவையான அடிப்படையான தகுதிகள் நான்கு.

(குண சதுஷ்டயம் என்று கூறப்படுவது) அவையாவன:

1) ஸ்ருதே பர்யவதாதத்வம் – மருத்துவம் பற்றிய மிகச் சிறப்பான அறிவு

2) பஹூஷோ த்ருஷ்டகர்மதா – மிக மிக அதிகமான செயல்முறை அனுபவம்

3) தாக்ஷ்யம் – திறமை

4) சௌசம் – சுத்தம்

சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுஷோ த்ருஷ்டகர்மதா |
தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம் ||

–    சரக சூத்ரம் IX -6 

நோயாளியிடம் வைத்யரின் நான்கு அணுகுமுறைகள் 

ஒரு நோயாளியிடம் நல்ல ஒரு வைத்தியர் அணுக வேண்டிய முறைகள் நான்கு உண்டு. அவையாவன:

1) மைத்ரி – நட்புடன் 2) காருண்யம் – தயையுடன் 3) ப்ரீதி – அன்புடன் அணுகுதல் 4) உபேக்ஷணம் – இரக்கத்துடன்

சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-

மைத்ரிகாருண்யமார்தேஷு ஷக்யே ப்ரீதிருபேக்ஷணம் |

ப்ரக்ருதிஷ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திசதுர்விதா: ||

–    சரக சூத்ரம் IX -26

நோய் பகுப்பாய்தல் நான்கு விதம்

ஒரு வைத்தியர் நோயை பகுத்து ஆராயும் முறைகள் (Diagnosis)

நான்கு. அவையாவன:

1) ஆகம: – கேட்டல் (நோயாளியிடம் அவருக்கு என்ன செய்கிறது என்று நுணுகிக் கேட்டறிதல்)

2) வ்யவஹாரம் – அவருடன் உரையாடுதல் (நோய் சிகிச்சையை ஆரம்பிக்கு முன்னர் நோய் மற்றும் நோயாளி பற்றி நன்கு அறிய நட்பு கலந்த உரையாடல் அவசியம்)

3) சிகித்ஸா – சிகிச்சை

4) நிர்ணயா – சிகிச்சை பற்றி முடிவு கட்டுதல்

ஆகம: ப்ரதமம் கார்யோ வ்யவஹாரபதம் தத: |

சிகித்ஸா நிர்ணயச்சைவ தர்ஷனம் ஸ்யாச்சதுர்விதம் ||

–    நாரத ஸ்மிருதி I – 36

வியாதிகள் நான்கு விதம்

பொதுவாக வியாதிகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

அவை:

1) ஆகந்தவ: – தொற்று வியாதி

2) சாரீர: – உடல் சம்பந்தமானது

3) மானஸா: – மனம் சம்பந்தப்பட்டது

4) ஸ்வபாவிகா: – இயற்கையானது

இதை சுஸ்ருதர் இப்படி விவரிக்கிறார்:

துக்க சம்யோகா வ்யாத்யய: சதுர்விதா: – ஆகந்த்வ: ஷாரீரா: மானஸா: ஸ்வாபாவிகாஷ்ரோதி || 

–        சுஸ்ருதர் சூத்ரம் I – 23

உடல்பயிற்சியின் லக்ஷணம் நான்கு

உடல்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அறிகுறிகள் (வ்யாயாம லக்ஷணம்) நான்கு விதமாகும்.

அவை :

1) ஸ்வேதா – வியர்வை

2) ஸ்வாச வ்ருத்தி – ஆழ்ந்த சுவாசம்

3) காத்ர லாகவம் – உடல் லேசாக ஆதல்

4) ஹ்ருதய உபரோத: – இதய ஒடுக்கம் (Inhibition of the heart)

இதை சரகர் இப்படி விவரிக்கிறார்:

ஸ்வேதாகம: ஸ்வாஸவ்ருத்திர்காத்ராணாம் லாகவம் ததா |

ஹ்ருதயாத்யுபரோதஸ்ச இதி வ்யாயாமலக்ஷணம்

–    சரக சூத்ரம் VII – 33

எந்த விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது?

ஐந்து விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது. யார் அவர்கள்? இதோ விவரணம்:

1) குசேல: – சரியாக உடை அணியாமல் இருப்பவர்

2) கர்கஸ: – முரட்டுத்தனமாக இருப்பவர்

3) ஸ்தப்தா: – பிடிவாதமாக இருப்பவர் (Stubborn)

4) க்ராமணீ – வக்கிரமானவர் (pervert)

5) ஸ்வயமாகதா – கூப்பிடாமல் தானாகவே வருபவர்

இந்த ஐந்து விதமான வைத்யர்களை பூஜிக்க – மதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதைப் பற்றித் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:

குசேல: கர்கஷ: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத: |

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்தரிஸ்மா அபி ||

உடல் அங்கங்களுக்குரிய தேவதைகள்!

மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திற்கும் உரிய தேவதை ஒன்று உண்டு. அதைத் தொழுவது நமக்கு நல்லது.

ஐந்து முக்கிய அங்கங்களுக்கு உரிய தேவதைகள் இவை:

1) வாக் – பேச்சுக்கு அக்னி

2) பாணி – கைகளுக்கு இந்திரன்

3) பாயு – ஜனன உறுப்புகளுக்கு விஷ்ணு

4) குடா – குதத்திற்கு சூர்யன்

5) சிஸ்னா – ஆண் ஜனன உறுப்பிற்கு ப்ரஜாபதி

இப்படி நமது நூல்கள் நோய், டாக்டர், சிகித்ஸை முறை ஆகிய அனைத்தும் பற்றி நுட்பமாக விளக்குகின்றன. அத்துடன் மருந்துகள், அவற்றைத் தயாரிக்கும் விதம், இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், அவற்றின் பயன்கள் ஆகியவை பற்றியும் ஏராளமான நூல்கள் விவரிக்கின்றன.

இவை அனைத்தையும் படித்து ஓர்ந்து அதைத் தன் சிகிச்சை முறையில் பயன்படுத்தும் அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் ஆயிரக் கணக்கில் பாரத தேசத்தில் பண்டைய காலத்தில் இருந்தனர் என்பது நிஜமான ஒரு உண்மை!

***

திருவில்வாமல ராம, லட்சுமண கோவில்-31 (Post No.12,826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,826

Date uploaded in London – –   12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 31

கோவில் எண்–31  

31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில்

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் சிறப்புடையவை ; அவை

1.திருபிரையார் / த்ரிப்ரயார்  ராமர்  கோவில்

2.திரு வண் வண்டூர்  ராமர் கோவில்

3.திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில்

இன்று திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில் பற்றிக் காண்போம்

எங்கே இருக்கிறது ?

த்ரி சூரிலிருந்து 29 கி.மீ.; பாலக்காட்டிலிருந்து 20 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது தமிழ்ப் பழமொழி ; இங்கு ஒரே இடத்தில் இரண்டு கோவில்கள்; உள்ளே உறையும் ஆண்டவன் பெருமாள் என்றாலும் ஒன்றை ராமராகவும் மறறொன்றை லட்சுமணராகவும் பார்க்கிறோம்.

ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் கேரளத்தின் கங்கை எனக் கருதப்படும் பரத நதி ; மலையாளிகள், பரதப்புழா என்பார்கள் .அருகில் பிரபல மலையாளக் கவிஞர் குஞ்சசன் நம்பியார் பிறந்த கிள்ளிக் குறிச்சி மங்கலம் இருக்கிறது

இது ஒரு மலைக் கோவில்; ஆயினும் கோவில் வரை சாலை வசதி இருக்கிறது.

கோவிலின் பெயர்—திருவில்வாமல/  வில்வாத்ரிநாத கோவில் Thiruvilwamala Vilwadrinatha Temple

சதுர வடிவிலான 2  அடுக்கு கோவில்களும் தனித்தனியே உள்ளன; ஆனால் பிரதட்சிணம் செய்கையில் இரண்டையும் சேர்த்தே  வலம் வரவேண்டும் என்பது சம்பிரதாயம் .

ஒரு காலத்தில் இது பணக்கார கோவிலாக இருந்தது; ஆண்டுக்கு ஒரு லட்சம் பரா நெல்லை முன்னோர்கள் விட்டுச் சென்றனர் ஆயினும் இந்து விரோத அரசுகள்  வந்து கோவிலை மொட்டை ஆண்டி ஆக்கிவிட்டன .

ஒரு காலத்தில் 7 நிலைக் கோபுரத்துடன் இந்தக் கோவில் விளங்கியது; இடி விழுந்த பின்னர் மொட்டை ஆனது ; இப்போது முறையான கோபுரமோ கொடிமரமோ இல்லாத கோவில் இது;  அந்தக் காலத்தில் 40 கி.மீ தொலைவிலும் இந்தக் கோவிலின் விளக்குகளைப் பார்க்க முடிந்ததாம்

பெரிய அரசமரம்

இந்தக் கோவிலின் இன்னுமொரு சிறப்பு, மண்ணே இல்லாத பாறைப் பிரதேசத்தில் பிரம்மாண்டமான அரச மரம் தழைத்து வளருவதாகும் .

கிழக்கு வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் 5 அடி அனுமன் சிலை வெள்ளிக் கவசத்துடன் ஜொலிக்கிறார்; எங்கெல்லாம் ராமன் நாமம் ஓலிக்கிறதோ  அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் சொரிய அனுமன் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கிறான் என்று பிரபல சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லும் ; அது உண்மையே.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் = எங்கெங்கெல்லாம் ராமனின் புகழ் பா டப்படுகிறதோ

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் = எங்கெங்கெல்லாம் கை கூப்பிய வண்ணம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்= கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் உள்ள

 மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’= ராக்ஷஸர்களின் எமனான மாருதியை/ அனுமனை வணங்குவோமாக.

கிழக்கு நோக்கிய கோவில் லட்சுமணப் பெருமாள்; மேற்கு நோக்கிய கோவில் ராம பிரான் ; ஆயினும் இரண்டு மூர்த்திகளும் நான்கு கைகள் உடைய விஷ்ணுவே; சங்கு சக்ர கதா தாரி ; நாலாவது கையில் தாமரை..

இரண்டு கோவில்களிலும் தாமிரத்தகடுகளால் கூரையை வேய்ந்துள்ளனர்

வில்வாத்ரி கோவில்

பரசுராமர் தன்னுடைய பித்ருக்களை (நீத்தார்) கடைத்தேற்ற சிவபெருமானை வேண்டினார்.  அவர் கொடுத்த விஷ்ணு மூர்த்தியை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்; பின்னர் பூத மலையில் தவம் செய்து  முக்தி அடைந்தார்; அந்த பூதன்மலா அருகில் இருக்கிறது

ராமபிரான் என்று வணங்கப்படும் மேற்கு நோக்கிய சிலை தங்கத் தகட்டால் கவசம் இடப்பட்டுள்ளது ; ஒரு முறை அர்ச்சகர், அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் சிலை சேதமுற்றதாகவும் ஆகையால் இரண்டு துண்டுகளை கவசத்தால் போர்த்தி  இணைத்து விட்டனர் என்பதும் இதன் பின்னுள்ள கதை ஆகும்.

வில்வ ஆமலக பெயர்க் காரணம்

சிலைக்குக் கீழ் ஒரு பள்ளம் இருந்ததாகவும் அதிலுள்ள தீர்த்தமே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு முறை அந்த தீர்த்தப்பள்ளத்தில் விழுந்த கதலி (வாழை) பழத்தை அர்ச்சகர் எடுக்க முயன்றபோது பெரிய சப்தம் எழும்பி எல்லாம் பூமிக்கடியில் சென்றதால் இப்போது அந்த இடம் வறண்டு விட்டதாகவும் சொல்லுவார்கள்; கோவிலுக்கு அடியில்  குகை இருப்பதாகவும் அங்கே தங்க வில்வ மரம் இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்

(இலங்கை கோவில்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளிலும் இது போன்ற விஷயங்களைக் காணலாம்.; பல கோவில்கள் மலைக்குகைகளின் மேல் அமைந்துள்ளன; அவற்றின் கீழ் சுண்ணாம்புப் பாறைகளினால் ஆன குகைகள் இருக்கின்றன; அவற்றில் தேங்கும் தண்ணீர், அவற்றைக் கரைக்கும்போது அவை இடி ஓசையுடன் பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. ; இது விஞ்ஞான விளக்கம்).

பக்தர்கள் சொல்லும் கதை

வில்வாத்ரி நாத பெயருக்கு வேறு ஒரு கதையும் உண்டு

விஷ்ணுவின் சக்தி பெருகியவுடன் அசுரர்கள் பயந்து போய் ஒரு தந்திரம் செய்தனர்; ஒருவன் பிராமண உருவத்தில் வந்து மற்றவர்களுடன் உலவினான் ; இரவு நேரத்தில் தன்  கைவரிசையைக் காட்டினான். பசுக்களைக் கொன்று சாப்பிட்டுவிட்டு  எலும்புகளை ஓரிடத்தில் தூக்கி எறிந்தான் ; அவை மலைபோலக் குவிந்த இடம் மூரி குன்னு ( மாடுகள் குன்று ) என்று அழைக்கப்படுகிறது ; கும்ப மாதத்தில் ஒரு நாள் அந்த அசுரன் விக்கிரகத்தையே உடைக்க முயன்றபோது பெருமாள், நரசிம்மாவதாரம் எடுத்து அசுரனை வதைத்தார் ; நரசிம்ம மூர்த்தியின் பயங்கர ஓசையை அடக்கி அவரை சாந்தப்படுத்துவதற்கு வில்வமங்கள் சுவாமிகள் துதி பாடினார் . அப்போது அவரை வில்வ அத்ரி நாத என்று புகழ்ந்தால் வில்வாத்ரி நாத என்ற நாம கரணம் சூட்டப்பட்டது .

தொடரும் ………………………..

Tags– வில்வாத்ரிநாத, திருவில்வாமலக , ராம லட்சுமண கோவில் , அரசமரம் , அனுமன் சிலை, யத்ர யத்ர ரகுநாத , கேரள கோவில் எண் 31

லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! (Post No.12,825)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,825

Date uploaded in London –  –  12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! 

ச.நாகராஜன் 

ஒரு நல்ல செய்தி.

இதை ஹிந்துஸ்தான் டைம்ச் தனது 26-10-2023 இதழில் வெளியிட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு கான்பூரில் பிடூரில் (Bithoor)  உள்ள வால்மீகி ஆசிரமத்தை வசப்படுத்தி அதை புனருத்தாரணம் செய்ய இருக்கிறது.

இந்த ஆசிரமத்தில் தான் ஶ்ரீ ராமரின் புத்திரர்களான லவ மற்றும் குச ஆகிய இருவரும் பிறந்ததாக நம்பப்படுகிறது.

இதை அரசு வசப்படுத்த ஒருகோடியே ஐம்பது லட்சத்தை உ.பி. அரசு ஒதுக்கி இருக்கிறது. தக்க ஒரு ஏஜென்ஸிக்கு ஈ-டெண்டர் முறைப்படி இது தரப்படும்.

இதைச் செய்ய முன் வரும் முகமைகள் (ஏஜென்ஸிகள்) டெண்டரில் பங்கு கொள்ள ரூ 3.12 லட்சம் செலுத்த வேண்டும்.

அரசின் அகழ்வாராய்வு பிரிவு மதுராவில் உள்ள ராஜா சீதாராம் மஹல் மற்றும் ஃபதேபூரில் உள்ள சிவராஜ்பூர் ராசிக் பிஹாரி ஆலயம் ஆகியவற்றையும் புனருத்தாரணம் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

ராஜா சீதாராம் மஹலை புனருத்தாரணம் செய்வதற்கு அரசு ஒரு கோடியே இருபத்தொன்பது லட்சத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த டெண்டரில் பங்கு கொள்ள விரும்பும் முகமைகள் ரூ 4.04 லட்சத்தை EMD பணமாகச் செலுத்த வேண்டும்.

தெர்ந்தெடுக்கப்பட்ட முகமை வேலையைச் செய்ய அகழ்வாராச்சிப் பிரிவு அது சரிவர நடக்கிறதா என்று மேற்பார்வை பார்க்கும்.

டெண்டர்களை பரிசோதிக்க இரு மதிப்பீடுகள்  செய்யப்படும். ஒன்று இதைச் செய்யும் முறையும் உத்தியும் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக டெக்னிகல் ஆய்வு. அடுத்ததாக இதன் நிதி ஆதாரத் தேவை சரிதானா என்று சரிபார்க்க ஒரு நிதிக்குழுவின் ஆய்வு.

மக்கள் இதை வரவேற்கின்றனர்.

ஒரு புறம் தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும் போது சனாதனம் தனது வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பதைக் காண்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த வகையில் 2024ஆம் ஆண்டு ஹிந்து தர்ம வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று விடும்.

அடுத்து இந்த வாரம் ( 5-12-2023 அன்று) பாராளுமன்றத்தில் வடக்கில் உள்ள மாநிலத்தில் உள்ளவர்கள் பசுமூத்திரத்தைச் சாப்பிடுபவர்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கூற பெரும் சர்ச்சை வெடித்தது.

மக்கள் மனம் புண்படும் அளவில் பேசிய எம்.பி.யை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரே கண்டித்து விட்டார்.

இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுக்கள் அதிகமாக அதிகமாக ஹிந்துக்களின் ஒற்றுமை ஓங்கி வருகிறது.

விநாசகாலே விபரீத புத்தி என்று ஒரு பழமொழி உண்டு. வீழும் காலம் வரும் போது புத்தி நிலை தடுமாறும்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறக் கூற அது அதிக வீரியத்துடன் முன் எப்போதும் இல்லாத வலிமையுடனும் பொலிவுடனும் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்தால் ஹிந்து பாரதம் உருவாகும்.

மகாகவி பாரதியார் சத்ரபதி சிவாஜி தன் படைவீரருக்குக் கூறியதாக, படைத்த கவிதை இங்கு நினைவு கூரத் தகும்.

அதில் ஒரு பகுதி நடக்கப் போகும் முடிவையும் தருகிறது.

அது இது தான்:

வம்மினோ துணைவீர் மருட்சி கொள்ளாதீர்

நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?

மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

இன்னருள் நமகோர் இருந்துணை யாகும்

பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்

இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர் வானக நாடுறும்

வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!

*****

Rare Pictures from 1907 Book: Saint, Potter, Weaver, Blacksmith ,Fakir, Barber Carpenter (Post No.12,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,824

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Native Races of the British Empire , Northern India has got rare pictures of all kinds of workers. It was published in 1907 by W Crooke

Natives of Northern India

W Crooke, 1907

We have pictures of Hindu saint on nails reminding us of Bhisma on Bed of arrows; we have also toddy seller, goat sacrifice, snake charmers, woman on spinning wheel. I have published some pictures like dancers, Hindu girl, Dancing troupe etc. Here are some more pictures :

 Hindu Merchant

Naga Warriors

Muslim Fakir

Barber

Carpenter

Goat sacrifice

Potter

Rajput King

Sacred Drum

Snake charmer

Spinning Wheel

Toddy seller

Weaver 

–subham—

Natives of north India, pictures, Hindu saint, weaver, spinning, goat sacrifice, rare, 1907 book, W Crooke

Greatest Tamil Prophet/ Poet Bharati slams Dravidian Baddies (Post No.12,823)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,823

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

According to Rig Veda, the oldest book in the world, Kavi means seer, forecaster of the future and prophet. Ucanas Kavi was the topmost poet of the Rig Vedic age. Even Lord Krishna mentioned Ucanas and said he was the Ucanas among the Kavis in the Bhagavad Gita. From the word Kavi came the word Kaavya.

If the two Brahmin poets Kabilar and Paranar are the top most poets of Sangam age and if Tiru Valluvar is the top most poet of the Post Sangam age, Bharati is the top most poet of Modern Age in Tamil literature.

I have listed Bharati’s prophesies already in Tamil and came across some new prophesies in the past few days.

1.We must remember Bharati died in September 1921. But he asked us to sing and dance saying India got Independence. But it took 26 years after his death to become independent.

On Liberty
1.Come, that we may sing
For Freedom’s bliss is ours;
Come, that we may dance
For Liberty is ours!

He was thorough with the latest scientific advancements in the 1920s. He sang about the movement of atoms inside the element and prayed to God that he must also be ever active like atoms (electrons and Protons inside atom).

He was thorough with astronomy and sang about the countless universes and attributed everything to Brahma (Nakka Piraan in Tamil).

He predicted the Radio, TV, Zoom, Mobile communication well before they came in to use.

We will invent an instrument to hear in Kanchi

Hat a scholar speaks from the Benares city.–Bharati

2.Modi and Bharati

In one poem Bharati said three times that India will give the world Eternal Bliss or Liberation to all human beings. Now Narendra Modi’s World Yoga Day is accepted even by Muslim countries. If they practised Yoga in the real sense, they will become Hindus culturally. Liberation is also possible irrespective of their religious faiths.

The way all men will turn Divine

India to the world will show

Yes, India to the world will show

Indeed India to the world will show.–Bharati

3.Akhand Bharat

In one of his poems to little ones, he sang let us pray to Undivided Hindustan (Sethamillaatha Hindusthaanam in Tamil). This shows that the artificial geographical boundaries will disappear and Akhand Bharat would emerge, probably after Third World War. Students of history know that the boundaries of most countries changed completely after the two World Wars.

This is the land of the Vedas

Where great and good heroes were born;

Truly flawless is Hindustan

Adore this as God, my dear child.–Bharati

(Sethamillaatha in Tamil= not damaged= undivided= flawless)

4.Road Bridge to Sri Lanka

In another poem, he says let us level the Setu and build a bridge to Simhala Island (Sri Lanka). This is also going to happen and let us name the bridge  Bharati Rama Setu Bridge.

Bharati says

We will build a bridge to the Isle of Lanka

And elevate Sethu and make it road;

We will irrigate the central regions

With surplus water of Bengal .–Bharati

5.Aircraft Carrier and Destroyers

So far India is buying most modern war ships from foreign countries. In the past few days, we read the news items India is going to build its own war ships. Bharati  sang

We will make vehicles for the road or the air

And build ships which make the earth tremble .–Bharati

So we see another prophesy of Bharati coming true.

6.Dravidians Slammed

Anti God and Anti Indian Dravidian idiots are spreading two lies; Vatican gave them huge money to destroy Hinduism.

Hinduism and Sanaatanam are two different things; Hindu word is not in the Hindu scriptures at all and Santanam is like Dengue, Malaria and poisonous fevers and that must be eliminated, they said. Both are untrue.

Foreseeing Dravidian Drainage Mouthed fellows, Bharati sang in one of the poems Sanatanam That is Hinduism.

In that beautiful stanza, he listed all the world religions and said that all points out to the same truth. But expecting Vatican provoked/funded Dravidian men, he gave the epithet Sanaatan (Eternal) only to Hinduism in that stanza. What a forethought!!

It proved two things,

1.Hinduism and Sanaatan Dharma are one and the same.

2.Hinduism is the only religion which cannot be dated.

பூமியிலே கண்டம் ஐந்து……………….

பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

 புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம்இஸ்லாம்யூதம்,

 நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,

நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே

7.Vaikam Revolution

No more talk of caste and creed

No more talk of birth and breed;

Who first drew breath in this our land

Brahmin or other caste, with us he will stand.–Bharati

Vaikam Proclamation by Travancore Maharaja in November 1936 allowed all Hindus irrespective of their castes in to 2200 temples in Kerala. Gandhiji called the Proclamation a revolution. It happened only in 1936. The seeds of the movement were sowed only in 1921 and in 1922 Satyagraha agitation started. But the amazing thing is Bharati sang about the Harijan Liberation even before his death in 1921. Now we know he was the one who laid the foundation for Vaikam Revolution. So neither Kalappan Nair Nor Madhavan Pillai, nor Krishnaswami Iyer, nor Kesava Menon nor Mahatma Gandhi is the architect of Vaikam Revolution. It was Bharati who mentioned all the low castes in his Viduthalai, Viduthalai poem and proclaimed all are liberated and declared there is no caste distinction in India. Bharati’s words came true in Travancore’s 2200 temples in 1936.

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

The more one reads Bharati’s poems, the more newer things are seen.

xxxxx

Bharati’s poems have four dimensions;1. he is a poet who sang about the emancipation of human beings, particularly women2.he is a poet who sang about the greatness of Tamil language; 3.he is a poet who sang about the Gods and divinity in great souls and last but not the least 4.he is a poet who sang about Independent India. He kindled patriotic spirit among Tamils.

5.Nature

No one has come even nearer to Bharati in the modern times. If I can add one more dimension to his poems, I would add Nature; there is no Tamil poet who can excel Bharati in appreciating Nature. He was the Wordsworth of Tamil literature.

Daffodils gave mental peace to Wordsworth; Swallows and House martins gave immense pleasure to Bharati and he learnt from them to be free, independent, ever active and go up spiritually (Vittu Viduthalyaki Nirpaai Antha Chittukuruvi Pole in Tamil)

Long Live Bharati; Long Live Tamil.

–subham—

Tags- Bharati, Prophet, Prophesies, Akhand Bharat, Vaikam, Sanatan Dharma, Dravidians, Hinduism, Nature.

உலகிலேயே பணக்கார பெருமாள் கோவில் தொடர்ச்சி – Part 30 (Post N.12,821)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,821

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 30

கோவில் எண்–30 திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தொடர்ச்சி

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் பற்றிய மேலும் சில சுவையான விஷயங்களை ஆராய்வோம்.

இது  108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ வழிபாட்டிடங்களில் ஒன்று

பாகவத புராணம் உள்பட பல புராணங்களில் கோவிலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஸ்தல வரலாற்றின்படி கலியுக ஆண்டு 950.ல் இந்தக் கோவிலை திவாகர முனிவர் என்பவர் கட்டினார் . அவருடைய பூஜைக்குரிய சாளக்ராம கல்லை ஒரு குழந்தை வாயில் போட்டு குதப்பியபோது முனிவர் கண்டிக்கவே அந்தக் குழந்தை ஓடி மறைந்தது; தன்னைக் காட்டில் வந்து காணும்படியும் சொன்னதாம். அங்கு அவர் சென்றபோது பிரம்மாண்டமான அனந்த பத்ம நாப சுவாமி உருவத்தைக் கண்டாராம். 

லட்ச தீபமும் முற ஜபமும் 

மார்த்தாண்ட வர்மா (1729) சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தை ஆண்டார் ; அவர் பெரிய ராஜ தந்திரி; போர் வீரர்; சோம்பேறிகளாக வாழ்ந்த குறுநில மன்னர்களை யுத்தத்தில் தோ    கடித்து நாடு பிடித்தார் 1750 ஆம் ஆண்டுக்குள்  நாகர்  கோவில் முதல் கொச்சி வரையுள்ள நிலப்பரப்பு அவரது ஆட்சிக்குள் வந்தது.

. தன்னுடைய ஆட்சியில், போரில் நடந்த, பாவங்களை  நீக்க அவர் தன்னுடைய செங்கோல், கிரீடம், வாள் எல்லாவற்றையும் கோவிலில் இறைவன் பாதங்களில் சமர்ப்பித்து மீண்டும் எடுத்துக் கொள்ளுவார். தான் இறைவனின் சார்பில் ஆளும் அடியார் என்பதைக் குறிக்க பத்மமனாப தாச என்று தம்மை அழைத்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்தோரும் இதே வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்

 தமிழ் நாட்டிலிருந்து நிறைய பிராமணர்களை வரவழைத்து ஆதரித்தார். இது மலையாளி நம்பூதிரிகளுக்கும் போத்திகளுக்கும் வருத்தம் அளிக்கவே ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை  எல்லோரையும் அழைத்து ரிக், யஜுர், சாம வேதத்தை எட்டு வாரங்களுக்கு பாராயணம் செய்ய வைத்தார் . ஒவ்வொரு வேதமும் எட்டு முறை பாராயணம்.  பிராமணர்களுக்கு பெரும் விருந்து அளித்தார் ; கோவிலில் லட்ச தீபம் ஏற்ற வைத்தார். வேத பிராமணர்களுக்கு விருந்தோடு விருதுகளையும் வழங்கினார். 56 நாள் ஜபம் லட்ச தீபத்  திருநாளில் நிறைவு அடையும்; அன்றைய தினம் மகர சங்கராந்தியாக இருக்கும்.இவை தவிர அரை ஆண்டுக்கு ஒரு முறை பத்ர தீபம் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் எண்ணெய் தீபங்களும் இப்போது மின்சார விளக்குகளும் எரிகின்றன. இப்போது ஊட்டுப் புராவும் சுருங்கிவிட்டது. பிரம்மாண் டமான அண்டாக் களையும் பானை களையும் மட்டும் காணலாம்.

ஏழு நிலைக் கோபுரம்

அனந்த அல்லது ஆதி சேஷன் என்னும் பாம்பின் மேல் பத்மநாப சுவாமி / பெருமாள் பள்ளிகொண்டதால் திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.

ஏழு நிலைக் கோபுரம் ; தமிழ் நாட்டுப் பாணியில் இருக்கும். கோவிலின் தோற்றம் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை; கல்வெட்டுச் சான்று 1729ல் நடந்த திருப்பணிகளையே குறிப்பிடுகிறது

1200 சாளக்ராம கற்களை கடுசர்க்கரா மூலம் பிணைத்து தற்போதைய விக்கிரகத்தை உருவாக்கினார்கள்; கடு சர்க்கர என்பது சுண்ணாம்பு, கருங்கல், வெல்லப்பாகு, கடுகு கலவை ஆகும்.

பாம்பின் மீது யோக நித்திரையில் படுத்திருக்கும் பெருமாளை மூன்று  துவாரங்கள்/ வாசல்கள்  வழியில் தரிசிக்கலாம். பெருமாளுக்கு முன்னர் ஒரே கல்லிலான ஒற்றைக்கல் மண்டபம் இருக்கிறது.

பெருமாளின்  இடது கையில்  தாமரை மலரும் வலது கரம்  தொங்கும் நிலையிலும் உள்ளன . ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பக்கங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருக்கிறார்

கோவிலைப் பற்றிய புள்ளி விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்; 6000 கட்டிட ஊழியர்கள், 4000 மேஸ்திரிகள் 100 யானைகள் உதவியுடன் 7 மாதம் பணியாற்றி  கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி கற்சுவரை எழுப்பினர்; கோவில் 7 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி ஒவ்வொரு கோபுர வாசல் வழியே வரும் . கோவிலுக்கான த்வஜஸ்தம்ப / கொ டி மரம் 48 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து பூமியில் படாமல் யானைகள் மூலம் கொண்டுவரப்பட்டது. கொடி மரத்தை தங்கத் தகடுகள் மூலம் போர்த்தியிருக்கிறார்கள்.

கோவில் தூண்களில் அழகிய புராண சிற்பங்கள், கையில் விளக்கு ஏந்திய தீப ஸ்திரீக்கள் செதுக்கப்பட்டுள்ளன.ஓவியங்களும் உள்ளன.

கிருஷ்ணர், க்ஷேத்ரபாலர், சாஸ்தா, நரசிம்மர், வியாசர் ,சிவன், கணேசர் , ராமர், சீதா, லட்சுமணர், முதலிய பல சந்நிதிகளும் கோவிலுக்கு உள்ளன.

கோபுரத்தின் உயரம் 100 அடி. குலசேகர மண்டபத்திலுள்ள சிற்பங்கள் எல்லோருடைய கண்களையும் கவரும். அங்கு சிவன், விஷ்ணு, லட்சுமி உருவங்களை செதுக்கியுள்ளனர்.

திருவிழாக்கள்

மீனம் மாதத்தில் ஒன்றும் (மார்ச்-ஏப்ரல் )  துலாம் (செப்டம்பர் – அக்டோபர்) மாதத்தில் ஒன்றும் ஆக இரண்டு முக்கிய விழாக்கள் நடைபெறும். ஒவ்வொன்றும் பத்து நாட்களுக்கு நடக்கும்.

xxxx

பொக்கிஷம் பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தி

இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது  ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விவரங்களை மீண்டும் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

—subham—

Tags- கோவில் எண் 30 , திருவனந்தபுரம்,  அனந்த பத்மநாப சுவாமி கோவில்  தொடர்ச்சி , லட்ச தீபம்,  முற ஜபம் 

முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் (Post No.12,820)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,820

Date uploaded in London –  –  11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 74

முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன்

ச.நாகராஜன்

பருத்திப்பள்ளி என்பது கொங்குமண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்த உபநாடுகளில் ஒன்று. அது எழுகரை நாடுகளில் ஒன்று. சித்திரமேழி விண்ணகரம் எனப் பழைய பெயர் இந்த ஊருக்கு உண்டு.

பருத்திப்பள்ளி புவனேசுவர சுவாமி ஆலயத்தில் ஒரு சாசனம் இருக்கிறது.

இது ஒரு வீர வரலாற்றைச் சொல்கிறது.

வரலாறு இது தான்:

பருத்திப்பள்ளியில் செல்லர் குலத்துதித்த வலிமிகுந்த வீர வாலிபன் ஒருவன் இருந்தான். தென்கரை நாட்டில் (தாராபுரம்) சில பகைவர்கள் மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த வாலிபன் வேட்டுவ வீரர்கள் உள்ளிட்ட பல வீரர்களைச் சேர்த்து ஒரு சேனையை அமைத்தான். சேனைக்குத் தலைவனாகவும் ஆனான். சேனைத் தலைவனான அவன் இராஜ கட்டளைப்படி தாராபுரம் சென்று பகைவர்களை விரட்டினான். இந்த வலிமையைப் பார்த்து வியந்த கிருஷ்ணதேவ ராயர் அவனுக்கு ‘முதலிக் காமிண்டன்’ என்ற விருதுப் பெயரை அளித்துச் சிறப்பித்தார்.

கிருஷ்ணதேவ ராயர் கி.பி.1509 முதல் 1530 வரை விஜயநகரத்தை அரசாண்ட மன்னர். 

இந்த வரலாற்றை இருப்புலிப் பள்ளு சிறப்பித்துக் கூறுகிறது இப்படி :

வெற்றியுடனே கிருஷ்ணராயரிடத்தில் வர

   மேன்மைப்பட்டாபிஷேக முடிசூட்டி

முத்தின் சிவிகையில் வைத்து வலஞ்செய்துதான்

   முதலிக் காமிண்டனென்றும் விருதுங்கொடுத்து

நத்தூர் பருத்திப்பள்ளி நாடும் பூந்துறைநாடு

    நாலாறுநாடுதானு மேலுமையாப் பெற்றோன்

இந்த சம்பவத்தை கொங்குமண்டல சதகம் பாடல் 74இல் பதிவு செய்கிறது.

புதுமைப் படைவேட் டுவர் சூழத் தார புரத்துடனே

சதுர மிகுபடை யார்சம ராற்றிச் சயம்பெறவே

முதலிக்கா மிண்டனெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை

மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தாராபுரத்தில் வந்து எதிர்த்த பகைவரை, வேட்டுவப் படையைச் சேர்த்துக் கொண்டு அவர்களைத் துரத்தி வெற்றி கண்ட திறமையைக் கண்டு விஜயநகர அரசர் கிருஷ்ணராயர் முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயரை அளிக்க அதைப் பெற்ற பருத்திப்பள்ளிச் செல்லனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***

வைக்கத்துப் புரட்சி வீரன் பாரதி;  திராவிட சாக்கடை வாயனுக்கு பதில் (Post No.12,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,819

Date uploaded in London – –   10 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு மேலும் மூன்று சான்றுகளைக் கண்டு பிடித்துவிட்டேன்

தமிழ்நாட்டு சாக்கடை வாயர்களும் கூவம் நதி நீர் குடிப்போரும் இந்துமதம் ஒரு டெங்கு, மலேரியா என்று உளறி குடும்பத்தோடு படுநாசம் அடையப்போகிறார்கள் என்று பாரதிக்கு  அன்றே தெரிந்து விட்டது.

இதற்கு முன்னர் அவர் சொன்ன தீர்க்க தரிசி செய்திகள் :

1.சுதந்திரம் அடைவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தவர் பாரதி. ஆயினும் ஆடுவோமே பள்ளுப்படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடி சுதந்திரம் வரப்போவதை அறிவித்ததார்

2.காசிநகர்ப்புலபவன் பாடுவதை காஞ் சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார்; இன்று ரேடியோ டெலிவிஷன் மட்டுமின்றி மொபைல் போன் வழியாகவும் ஜூம் ZOOM  வழியாகவும் கேட்கிறோம்; பார்க்கிறோம்

3.ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் என்று பாடினார் ; கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் இந்தியாவே தனியாக விமானம் தாங்கிக்கப்பல் முதலியவற்றைக் கட்டப்போவதாக சொல்கின்றன

4.எல்லோரும் அமர நிலை அடையும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும் என்று ஒரே பாட்டில் 3 முறை சொல்லி சத்தியம்  செய்தார். இன்று நரேந்திர மோடி சொன்ன யோகா பயிற்சியை முஸ்லீம் நாடுகளும் கூட மனமுவந்து செய்கின்றன. இதில் இந்துக்கள் தீவிரம் காட்டினால் இந்துப் பண்பாடு உலகெங்கும் வேரூன்றும்.

XXXXXX

 இனி நடக்க வேண்டியவை

5.சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்று பாடியது இனி வரப்போகும் அகண்ட பாரதத்தைக் காட்டுகிறது; இந்துப் பண்பாடு தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 வரை இருந்தது . சேதமில்லாத ஹிந்துஸ்தானம் என்பது அகண்ட பாரதம் வரப்போவதைக் காட்டுகிறது .

6.அதே போல சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ;சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்பது இந்தியாவுடன் இலங்கையும் இணையப்போவதைக் காட்டுகிறது; குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்துக்கு சாலை- ரயில் பாதை வரப்போவதை பாரதி பாடிவிட்டார் .

XXXX

திராவிட சாக்கடை வாயனுக்கு, கூவம் நதி குடிப்போனுக்கு பாரதி சவுக்கடி !!

வாடிகன் அசிங்கங்களிடம் பணம் வாங்கும் கும்பலைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், திராவிடப் போர்வையில் விஷம் கக்கி வருவதை, நாம் அறிவோம். சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று பரப்பி இந்துக்களை கிறிஸ்தவர்கள் குழப்புவதை நாம் அறிவோம். இந்த திகிடுதத்த  அயோக்கியர்கள் இப்படிச் செய்யப்போகிறார் ள் என்று அறிந்த பாரதி ஒரு பாட்டில் எல்லா மதங்களின் பெயர்களையும் சொல்லிவிட்டு, இந்துமதத்துக்கு மட்டும் சனாதனமாம் இந்துமதம் என்கிறார் . இது திராவிடர்களுக்கு கொடுத்த செமை அடி; சவுக்கடி . சனாதனம் என்றால் ஆதி அந்தமற்ற, அழிவே இல்லாத, முடிவே இல்லாத மதம் என்று பொருள்; இதிலிருந்தே மற்ற மதங்களுக்கு தோற்றமும் அழிவும் உண்டு என்பது தெளிவு. இந்துமதத்துக்கு தோற்றம் என்பதே இல்லை. ஏனைய மதங்கள்  தோன்றிய தேதிகளை என்சைக்ளோ பீடியாக்களில்  காணலாம் .

பூமியிலே கண்டம் ஐந்து……………….

பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

 புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

 நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,

நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே

XXXXX

வைக்கத்துப் புரட்சி வீரன்  யார் ?

தமிழ்நாட்டில் தருதலை ,திராவிட  திகிடுதத்தங்கள்  ஈ வெ ராமசாமி நாயக்கரை வைக்கத்துடன் தொடர்புபத்தி பொய்யுரை பரப்பியதை நானே சென்ற மாதம்தான் அறிந்தேன்; காந்திஜியின் அந்தரங்க செயலாளர் மஹாதேவ தேசாய் எழுதிய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன்.அதில் வைக்கத்து புரட்சி என்று சொன்னது காந்திகிஜி என்பதோடு சுமார் 15, 20 வைக்கம் வீரர்களின் பட்டியலும் இருக்கிறது;  தமிழ் நாட்டிலிருந்து ராஜாஜி பெயரும் நாகர்கோவில் டாக்டர் நாயுடு பெயரும் மட்டும் இருக்கிறது; அந்த கிளர்ச்சிக்ககான வித்து 1921ல் தான் ஊன்றப்பட்டது. 1936ல் வெற்றி அடைந்து கோவிலை எல்லா ஜாதியினருக்கும் திறந்து விட்டார்கள்; அந்தக் கிளர்ச்சியின் போது என்னென்ன ஜாதிகளுக்கு விடுதலை கேட்டார்களோ  அதை பாரதி 1921க்கு முன்னரே அப்படியே பாடிவிட்டார் . எனக்கு ஒரே வியப்பு.ஒருவேளை பாரதியின் பாட்டுதான் அவர்களை உசுப்பிவிட்டதோ என்று எண்ணி எண்ணி வியந்தேன்.  இதோ பாரதி  பாட்டு

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே  — பாரதியார்

நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.

திராவிடர்கள் நெகட்டிவ் சக்திகளின் NEGATIVE FORCES ஒட்டுமொத்த உருவம். மற்றவர்களை அழிப்பதையே அதிகம் பேசும் கும்பல் .

அது அழியப்போவதையும் பாரதி பாடிவிட்டார்.

தாழ்வு பிறர்க்கென்ன …………………………….

தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

XXXX

எனது 3 புதிய கண்டுபிடிப்புகள்

1.சனாதனம் புதியகண்டுபிடிப்பு; வைக்கம் இரண்டாம் கண்டுபிடிப்பு; 3. ஞா லம் நடுங்க அவரும் கப்பல்கள் மூன்றாம் கண்டுபிடிப்பு.

–SUBHAM—

TAGS- வைக்கம், விடுதலை, சநாதனமாம் இந்துமதம், கப்பல்கள்