கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 26
கோவில் எண்–28 காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் அவதரித்த புனித ஸ்தலம்
ஆதி சங்கரர் அவதரித்த காலடி – 26
இந்திய தத்துவ ஞானிகளில் முன்னனியில் நிற்பவர் ஆதி சங்கரர். உலகம் வியக்கும் அற்புதங்களைச் செய்தவர். அவர் பிறந்த இடம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. காலடி என்பது ஊரின் பெயர் .கொச்சி நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.
அவர் அவதரித்த ஊர் பூர்ணா நதிக்கரையில் இருக்கிறது.; அவரது காலம் கி.பி 732 என்று சிலரும், காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் சங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் என்றும் வாதிடுவர். ஆதி சங்கரர் போலவே “மீணடும் ஒரு புதிய சங்கரர் = அபி நவ சங்கர” என்ற பெயரில் மீண்டும் ஒருவர் தோன்றி சங்கரர் போலவே செயற்கரிய செயல்களை செய்ததால் இந்தக் குழப்பம் .
ஆதி சங்கரர் என்ன அத்புதங்களைச் செய்தார் ?
1. இந்தியாமுழுதும் — கன்யா குமாரி முதல் காஷ்மீரில் ஸ்ரீ நகர் வரை சென்று கோவில்களையும் மடங்களையும் ஸ்தாபித்தார். வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினான் என்று பேசும் அரைவேக்காடுகளுக்கு அவர் இந்தியாவின் நான்கு மூலைகளில் ஸ்தாபித்த 4 மடங்கள் தக்க பதில் பகரும் .
2. முக்கிய உபநிஷதங்களுக்கு, விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு , பகவத் கீதைக்கு பிரம்ம சூத்தரத்துக்கு உரை எழுதி உலக சாதனை ஏற்படுத்தினார். உரைச் சக்கரவர்த்தி என்று சொல்லலாம். அவருக்கு அடுத்தபடியாக உரை எழுதிய ஒரே ஆள், மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன் நச்சினாக்ர்க் கினியர் ; அந்தப் பார்ப்பான் உரை எழுதாவிடில் தமிழ் மொழியே அழிந்து போயிருக்கும்; ஒரு பயலுக்கும் புறநானூற்றுக்கும் அக நானூற்றுக்கும் அர்த்தம் தெரியாமல் கருணாநிதி, நெடுஞ்செழியன் விஷ (ம) உரை எழுதி இருப்பார்கள்
3. ஏராளமான ஸ்லோகங்களை எளிய சம்ஸ்க்ருத மொழியில் எழுதி இன்றுவரை அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன ; இதில் ஆதி சங்கரர் எழுதியது எவை? அவரைப்போலவே 100க்கு 100 அச்சுபோல போல வந்த அபிநவ சங்கரர் எழுதியது எவை? என்ற சர்ச்சையில் இறங்க எந்த மடத்து சங்கராச்சார்யாரும் தயாராக இல்லை. மொழியியல் அறிஞர்கள் முடிவு சொல்ல வேண்டிய விஷயம் அது ( ஆதி சங்கரர் காலம் பற்றி நான் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை இதே பிளாக்கில் உள்ளது.)
4.ஆதி சங்கரர் போல வாதம் செய்தவரும் இல்லை; வாதத்தில் வென்றவரும் இல்லை; இந்தக்கால அயோக்கியர் நடத்தும் டெலிவிஷன் விவாதம் போல அல்லாமல், நியாயமான விவாதம்; அதில் தோற்றவர் மனம் உவந்து குருவின் கட்டளைக்குப் பணிந்தனர்; இதன் மூலம் மாபெரும் அத்வைத தத்துவத்தை ஆதி சங்கரர் உலகெங்கும் பரப்பினார்; அதை ஆங்கிலத்தில் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர்.
5. சாலைகள் பாலங்கள், கூகுள், இன்டெர்னட், விமானங்கள் , வாட்ஸப் , மொபைல் போன்களுடன் ,25 பேர் துப்பாக்கிகளுடன் பின் தொடரும் போலி பிபிசி அட்டன்பரோக்களைப் புகழும் அரை வேக்காடுகளுக்கு சங்கரர் அத்புதங்கள் புரியாது . இவை எதுவுமே இல்லாத காலத்தில் அவர் நாட்டை வல ம் வந்து மடங்களை நிறுவினார்.
6. இவை தவிர அவர் ஒரு ஏழைக்கு இறங்கி கனகதாரா ஸ்தோத்திரம் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது போல ஏராளமான அற்புதங்கள் !
இவ்வளவு சேவைகளைச் செய்த சங்கரரை நினைத்தாலே புண்ணியம்; அந்த தலத்தை , அவரது மடத்தை , பிறந்த இடத்தை மிதித்தால் எவ்வளவு புண்ணியம்!!
(நான் காலடி தலத்தை காரில் அடையும் போது நள்ளிரவு; இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே காரில் இருந்தவாறே கும்பிடு போட்டுவிட்டு அதிகாலை பிளைட்டில் Flight கொச்சியில் ஏறி லண்டன் வந்தேன்; அப்போது நான் இந்தியாவில் இருந்தது 24 மணி நேரமே; அதற்குள் ஒரு கல்யாணம், ராமர் கோவில், பரதன் கோயில், சிவன் கோவில் எல்லாவற்றையும் முடித்தேன்; மறக்க முடியாத 24 மணி நேர இந்திய விஜயம்).
7. நாஸ்தீக நேருஜி கூடப் புகழ்ந்த ஒரு தீர்க்கதரிசி சங்கரர்; 90க்கும் மேற்பட்ட துர் மதங்களை அழித்துத் துடைத்து ஆறு சமயங்களை ஸ்தாபித்தார்.
சங்கரர் – முதலை கதை
எல்லோருக்கும் தெரிந்த கதை; ஆதலால் மிகச் சுருக்கமாக — திருச்சூரைச் சேர்ந்த ஆர்யாம்பா- சிவகுருவுக்கு நீண்ட காலமாக குழந்தை பிறக்கவில்லை; த்ரிசூர் வடக்கு நாத சிவனை வேண்டவே சங்கரர் அவதரித்தார். அம்மாவுடன் பூர்ணா நதியில் குளிக்கச் சென்றார். முதலை , சங்கரன் காலைப் பிடித்தது; அம்மா! இந்தப் பிறவி எனக்கு இத்தோடு முடிந்தது; என்னை சந்நியாசி ஆக அனுமதித்ததால் அது என்னை உயிர் தப்பவிடும் என்றார் ; அம்மாவின் மனம் உலகம் முழுதும் ஒன்று போல் இருக்கும்; நீ பிழைத்தால் போதும் மகனே; எங்கிருந்தாலும் நீ வாழ்க என்றாள் . முதலை மறைந்தது. 16 வயதுக்குள் சாஸ்திரம் என்னும் சமுத்திரத்தின் கரை கண்டார்; 32 வயது வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். அவருடைய குரு, நர்மதை நதிக்கரையில் வசித்த கோவிந்த பகவத்பாதர்; அவர் வாதத்தில் வென்ற புகழ்மிகு அறிஞர் மண்டன மிஸ்ரர்; சங்கருக்கு 4 முக்கிய சிஷ்யர்கள் — ஹஸ்தாமலகர் , சுரேஷ்வரர் , பத்மபாத ஆச்சார்யா, தோடகாச்சார்யா.
காலடியில் சங்கரர் கோவில் தவிர, கீர்த்தி ஸ்தம்பம் (வெற்றித் தூண்) ஒன்றும் உள்ளது. நாடு முழுதும் பல இடங்களில் சங்கரர் சிலைகளும் உள்ளன. நாட்டின் வடகோடியில் இமயமலையில் அவர் ஸ்தாபித்த சாரதாம்பாள கோவிலும் காஷ்மீரின் தலைநகரில் அவர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்து ஸ்ரீ நகர் என்று பெயரிட்டதும் இவர் புகழை இமயத்தின் உச்சிக்கு ஏற்றிவிட்டது
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!
—SUBHAM—
TAGS- கேரள மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள்,
PART 26, கோவில் எண் 28 , காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் , புனித ஸ்தலம்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 2
நடாஷா டெம்கினா
ச.நாகராஜன்
நடாஷா நிகோலயிவ்னா டெம்கினா (Natala Nilolayevna Demkina) என்ற பெண்மணி 1987ஆம் ஆண்டு ரஷியாவில் சரன்ஸ்க் என்ற நகரில் பிறந்தவர். ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்த இவர் அலெக்ஸாண்டர் புஷ்கின் எழுதியவற்றை ஒரு வயதிலேயே படிக்க ஆரம்பித்தார். மூன்று வயதில் நன்றாகப் படிக்க வந்து விட்டது.
பத்தாம் வயதில் இவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலிருந்து மனித உடலின் உள்ளே உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தெளிவாகத் தன்னால் பார்க்க முடிகிறது என்றார் அவர்.
அவரது 17ஆம் வயதில், 2004ஆம் ஆண்டு, டிஸ்கவரி சேனல் அவரைப் பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தைத் தயாரித்தது.
அதில் அவர் தன்னைப் பற்றி விளக்கமாகக் கூறினார் :
“எனக்கு இரண்டு விதமாகப் பார்க்க முடிகிறது. முதல் பார்வை மற்ற எல்லோரையும் போலச் சாதாரணமாக அனைத்தையும் பார்க்கும் பார்வை. அடுத்த பார்வை மருத்துவ பார்வை. ஒரு உடலை மருத்துவ ரீதியில் பார்க்க முடியக்கூடிய அனாடமிகல் பார்வை. ஒருவரின் உடலில் உள்ள இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் என்னால் பார்க்க முடிகிறது. அவற்றின் இயக்கத்தையும் என்னால் பார்க்க முடிகிறது”.
ஆனால் அவரால் தனது உடலைப் பார்க்க முடியவில்லை. ஒருவர் தன் முதுகிற்குப் பின்னால் மறைத்திருக்கும் எந்தப் பொருளையும் அவரால் பார்க்க முடிவதில்லை. இரவிலும் அவருக்கு இந்தப் பார்வை போய் விடுகிறது.
முதலில் விளையாட்டாக தன் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த பார்வையைச் சொல்லப் போக, நாளடைவில் ஏராளமான நோயாளிகள் அவரிடம் வர ஆரம்பித்தனர். அவர் நோய் பற்றிய அறிகுறிகளை சரியாகக் கண்டறியவே பலரது உயிர் காப்பாற்றப்பட்டது.
இக்னார் மோனிசெவ் (Ignor Monichev) என்ற ஒரு பத்திரிகையாளர் அவரிடம் வந்தார். தனது எந்தக் கை உடைந்த கை என்று அவர் கேட்டார். 90 விநாடிகளில் அவரது இடது கையைச் சுட்டிக் காட்டிய டெம்கினா அதுவே உடைந்த கை என்றார்.
வியாதியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஒரு வியாதியும் இல்லை என்றனர். ஆனால் டெம்கினா அவருக்கு இடது பக்க நுரையீரலில் மேல் பகுதியில் கான்ஸர் செல்கள் உள்ளதைக் கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார்.
இன்னொரு நோயாளியை ஒரு வருடமாக ஒரு மருத்துவமனையில் வைத்து நுரையீரல் காச நோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் ஒருவிதமான முன்னேற்றமும் இல்லை. டெம்கினா அவரை ஒரு பார்வை பார்த்தார். அவருக்கு காசநோய் இல்லை என்றும் வேறொரு நோய் இருப்பதாகவும் அதன் பெயர் தனக்குத் தெரியவில்லை என்றும் தான் பார்ப்பதை வரைந்து காட்டுவதாகவும் கூறினார். படமும் வரையப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்த டாக்டர்கள் அந்த நோயை சர்காய்டோஸிஸ் (Sarcoidosis) என்று கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைத் தர ஆரம்பித்தனர். அவரும் நோயிலிருந்து மீண்டார்.
ஆரம்பத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் வீதம் பார்த்து வந்த டெம்கினா அவர்களிடம் நன்கொடை மட்டும் கேட்டு வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து அதை ஒரு மருத்துவ பள்ளிக்கு நிதியாக அளித்து வந்தார்.
ரஷிய பத்திரிகையான பிராவ்தா மற்றும் இஸ்வெஸ்தியா அவரைப் பற்றிய செய்திகள் வெளியிட அவர் உலக அளவில் பிரபலமானார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ‘தி சன்’ அவரை இங்கிலாந்திற்கு அழைத்தது. பிரபல ரிபோர்ட்டர் பெண்மணியான பிரினாய் வார்டன் (Brinoy Warden) ஒரு கார் விபத்தில் அப்போது சிக்கி வீல் சேரில் அமர்ந்திருந்தார். அவர் பிரினாயைப் பார்த்தவுடன் எங்கெல்லாம் அவர் காயப்பட்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார். மெடல் பின்கள் உடலில் செருகப்பட்டிருந்ததைக் கூட அவர் கூறி விட்டார்.
டிஸ்கவரி சேனல் நியூயார்க்கில் அவரை ஒரு சோதனைக்கு உட்படுத்தியது. இதில் ஏழு சோதனைகளில் நான்கில் அவர் தேறினார்.
2005இல் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் அவர் மீது சோதனை நடத்த அவரை அழைத்தது. ஏழு நோயாளிகளின் வியாதிகளைப் பற்றிய சோதனை இது. ஏழு பேரின் நோய்களையும் அப்படியே துல்லியமாக டெம்கினா கூறி விட்டார்.
மாஸ்கோ பல்கலக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேரத் துடித்தார் டெம்கினா. அவரைப் பற்றிய அதிகச் செய்திகள் கிடைக்கவில்லை.
அவரது இணையதளம் இப்போது முடங்கிக் கிடப்பதால் அவர் என்ன செய்கிறார் என்பதை உலகம் அறிய முடியவில்லை.
அதிசயமான அதீத உளவியல் ஆற்றலைக் கொண்டவர் நடாஷா டெம்கினா என்பதில் ஐயமில்லை.
மஹாத்மா காந்தி வைக்கம் போராட்டம் வெற்றி விழாவினைக் கொண்டாட 1937ம் ஆண்டு கேரளத்துக்கு வந்து 24 கோவில்களுக்குச் சென்றார்; வைக்கம் புரட்சி வீரர்களான திருவாங்க்கூர் மஹாராஜா, மஹாராணி , கேளப்பன் நாயர், மாதவன் பிள்ளை, கிருஷ்ண சுவாமி ஐயர் , மகா மேதையான சர் சி பி ராமசுவாமி அய்யர் ஆகியோரை கூட்டம் தோறும் பாரட்டினார் . தன் வாழ் நாளில் இவ்வளவு கோவில் களுக்கு ஒரு போதும் சென்றதில்லை என்றும் கேரளத்திலுள்ள அற்புதமான கோவில்களைப் பார்த்த பின்னர் தனக்கு கோவில் பற்றிய ஒரு புதிய பரிமாணம் தெரிய வந்தது என்றும் பேட்டிகளில் சொன்னார்.
xxxx
கோட்டயம் மகளிர் கூட்டம் 19-1-1937
ஹிந்தி மொழியில் காந்திஜி பேசினார்
” இந்த கேரள யாத்திரையில் முதல் தடவையாக பெண்கள் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இங்கே குழுமியுள்ள உங்களுக்கு நான் கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். முதல் தடவையாக ஒரு சகோதரி ஹிந்தி மொழியில் வரவேற்புரை வழங்கியதை செவிமடுத்தேன் ; உங்கள் வரவேற்புக்கும் இந்தி மொழி வரவேற்பு உரைக்கும் நன்றி .
வைக்கம் பிரகடனம் பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன்.பின்னர் ராஜகுமாரி கவுர் விரிவாகப் பேசுவார்.
இந்து மதத்தின் கறுப்புப் புள்ளி (சாபக்கேடு) தீண்டாமை என்றும், அது இந்து மதத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் கூட்டம் தோறும்விளக்கிவந்தேன். அந்த சாபக்கேட்டினை விலக்க , மகாராஜாவின் பிரகடனம் தக்க தருணத்தில் வந்துள்ளது.
(எல்லா ஜாதி இந்துக்களும் திருவாங்க்கூர் சமஸ்தானத்தில் உள்ள 2200 கோவில்களிலும் நுழையலாம் என்ற பிரகடனத்தை 1936 நவம்பரில் மஹாராஜா வெளியிட்டார்)
பெண்கள்தான் மதத்தின் காவலர்கள் ; பெண்கள் தான் சமுதாயத்தின் தூய்மையின் காவலர்கள் என்பதையும் நான் அடிக்கடி சுட்டிக்காட்டடி வந்தேன். ஆகையால் இதுவும் (பிரகடனத்தை செயல்படுத்தல்) பெண்களின் பணியே. மதத்தை தூய்மையாக்குதல் என்பது இதயத்தை தூய்மை ஆக்கும் பணி . பிரகடனத்தின் உண்மைப்பொருளை பெண்கள் உணர்ந்தால் , ஆண்களைவிட பிரகடனத்தை திறம்பட செயல்படுத்த முடியும் “.
xxxxx
ஈசாவாஸ்யம் இதம் சர்வம்
காந்திஜிக்கு மிகவும் பிடித்த வாசகம் ஈஸா வாஸ்ய உபநிஷத்தில் உள்ள முதல் மந்திரம் ஆகும். கேரள பயணத்தின் கடைசி ஐந்து நாட்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மந்திரத்தை விளக்கி எல்லோருக்கும் இதைப் பரப்புங்கள் என்றார்
” கடந்த நாலைந்து நாட்களாக நான் ஒரு மந்திரத்தை கூட்டங்களில் சொல்லிவருகிறேன் அதன் பொருள் என்ன ?
இந்தப் பிரபஞ்சம் முழுவதும், அணு அணு தோறும் இறைவன் இருக்கிறான் அப்படியானால் உங்கள் இதயத்தில் மட்டும் இன்றி எல்லோரிடத்தும் உளான். அவ்வளவு அருகில் இருக்கும் இறைவனுக்கே எல்லாவற்றையும் அர்ப்பணியுங்கள்; நீங்கள் அவற்றை துறப்பதோடு பிறர் பொருளை என்றும் நயவதீர்கள். இதை இந்துக்கள் உணர்ந்தால் வேற்றுமைக்கு இடமே இராது
Xxxx
13-1-1937 திருவனந்தபுரம் சொற்பொழிவு
அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றேன். அர்ச்சகர் ஒவ்வொரு தெய்வம் பற்றியும் இந்தியில் சொன்னார்.;அவர் இது ஒவ்வொன்றும் தெய்வம் என்று சொல்லவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத, வருணிக்க இயலாத கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள பாலங்கள்தான் இந்தக் கோவில்கள் என்பதை நான் உணர்ந்தேன். நாமோ ஆழம் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பில் உள்ள ஒரு நீர்த்திவளைத்தான்; நாம் எல்லோரும் தத்துவ ஞானிகள் அல்ல. பாமரனுக்கும் பாமரன் நாம். ஆகையால் காண முடியாத கடவுளை அறிய தொட்டுப்பார்க்க ஏதும் தேவைப்படுகிறது; காணுவதற்கும் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யவும் ஒரு பொருள் கண்ணுக்கு முன்னால் தேவைப்படுகிறது; அது புஸ்தகமாக இருக்கலாம், கல் கட்டிடமாக இருக்கலாம்; அல்லது அதற்குள் உள்ள சிலைகளாக இருக்கலாம்.சிலருக்கு புஸ்தகங்கள் திருப்தி தரலாம்; இன்னும் சிலருக்கு கல் கட்டிடங்கள் திருப்தி அளிக்கலாம். இன்னும் பலருக்கு அங்கே காணக்கூடிய சக்தியைக் கண்டால்தான் திருப்தி ஆனால் உங்களை மூட நம் பிக்கைகளுடன் கோவிலுக்குள் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. நம்பிக்கையுடன் கோவிலுக்குள் செல்லுங்கள் ; அப்படிச் சென்றால் தூய்மை அடைவீர்கள் இறைவன் மீது மேலும் மேலும் நம் பிக்கை ஏற்படும்.
Xxxx
வைக்கம் 18-1-1937
“கோவிலுக்கு போனால் மட்டும் போதாது; பலரும் நம்பிக்கையினால் மட்டுமின்றி கோவிலுக்ச் செல்வதை ஒரு வழக்கமாக / சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று அவர்கள் சிந்த்திப்பதில்லை. இந்தியா முழுதும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் கோவிலுக்குப் போகிறார்கள்; அவர்கள் அங்கே உறையும் இறைவனிடம் ஏதேனும் வரம் கேட்க போகிறார்கள். இப்பொழுது மஹாராஜா பிரகடனத்தை வெளியிட்ட பின்னர் நீங்கள் கோவிலுக்குப் போகையில் நான் கூடுதலாக ஒன்றை எதிர்பார்க்கிறேன் ; இவ்வளவு காலமும் ஒரு பிரிவினருக்கு கோவிலில் நுழைய உரிமை இல்லை ; ஏனெனில் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களிடையே இருந்தது. இப்பொழுது அவர்களும் நமக்கு சமமானவர்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் வர வேண்டும். கோவிலுக்குள் அவர்களை அ னுமதித்ததோடு சம பாவனை யும் இருக்க வேண்டும்
–subham—
Tags– கோவில் ஏன், வைக்கம், பெண்கள், ஈசாவாஸ்யம், காந்தி,
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 25
கோவில் எண்–27 திரு வண் காடு TIRUVANGAD RAMASWAMI TEMPLE
கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் தொடர்ச்சி……………
கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் திருப்ரியார் / திரு ப்பரையார் என்பதை முன்னர் கண்டோம். நேற்று திரு வண் காடு பற்றி கேட்டீர்கள். இதோ மேலும் சில சுவையான விஷயங்கள் .
தலைச்சேரி/ திருவண்காடு பெருமாள் கோவில்
பெருமாளின் விக்கிரகம் அழகான தோற்றத்துடன் இருக்கிறது ; கருவறைக்கு வெளியே இடது புறம் ஹனுமான், வலது புறம் சுப்பிரமணியர் , கணபதி சந்நிதிகள்; முக மண்டபம், நமஸ்கார மண்டபங்களும் இருக்கின்றன. அங்கு போர்க்களி பகவதி சிலை இருக்கிறது; கதகளி ஆட்டத்தின் நிபுணரான கோட்டயம் ராஜா வித்வான் தம்புரான் ,அவளை வாகீஸ்வரி என்று வணங்கியதால் அவள் புகழ் மேலும் பரவியது .
கூண்டுக்குள் பகவதி, வேகாத அரிசி நைவேத்தியம் !!
போர்க்களி பகவதி பற்றி சுவையான கதை யுமுண்டு ; இப்போது அவள் சிலை ஒரு மரக் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது ; ஒரு சமயம் கோவிலில் முரசு அடிக்கும் மாரருக்கும் அர்ச்சகருக்கும் இடையே சுவையான வாக்குவாதம் எழுந்தது . மாரர் சொன்னார் – நான் என் ஜண்டை வாத்தியத்தை பாணி யின் படி வாசித்தால் பகவதியே இங்கு நேரில் வந்துவிடுவாள்.
உடனே அர்ச்சக்கர் சொன்னார் – அப்படி வந்தால் உடனே நைவேத்தியம் படைக்கிறேன் .
முறைப்படி பாணி வாசித்தவுடன் பகவதி நேரில் வந்தாள் ; அர்ச்சகருக்கு நைவேத்தியம் செய்ய நேரமில்லை; களைந்த அரிசியை அப்படியே நைவேத்தியம் செய்தார்; தேவியோ அங்கும் இங்கும் அலையத் தொடங்கினாள். உடனே மந்திர தந்திரங்கள் மூலம் அவளது ஆட்டத்தை ஒடுக்கி கூண்டுக்குள் வைத்தனர். இன்றும் தண்ணீரில் களைந்த , வேகாத அரிசியே அவளுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் உப்பிலியப்பன்/ ஒப்பிலா அப்பன் பிரசாதம் போல இது ஒரு கதை!!!
கலைக்கூடம்
திரு வண் காடு கோவில் ஒரு கலைக் கூடம் என்றால் மிகையாகாது; அற்புதமான மரச் சிற்பங்களில் ராமாயணக் காட்சிகளைக் காணலாம். புராண சிற்பங்களும் , இராமாயண ஓவியங்களும் இருக்கின்றன. கர்ப்பக்கிரக சுவர்களும் கூரையும் தாமிர/ செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது . அதன் உச்சியில் மூன்று தங்க ஸ்தூபிகள் .
கோட்டையா கோவிலா ?
இந்தக் கோவில், வரலாற்றில் பங்கு வகித்த, கோவில்; ஏனெனில் இங்குதான்- அதாவது கோவிலுக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் முக்கியக் கூட்டங்களை நடத்தி , மன்னர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதற்கு முன்னர் திப்பு சுல்தானின் படைகள் தாக்கி கோவிலின் சில பகுதிகளை அழித்தன .
திப்பு சுல்தானின் அட்டூழியம்
கிழக்குப் பகுதியிலிருந்து கோவிலைப் பார்த்தால் கோட்டை போலவே தோன்றும் .திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள் கோவிலின் 7 நிலைக் கோபுரத்தையும் கோவில் மதில் சுவர்களையும் இடித்துத் தள் ளின. இன்றும் அவற்றின் வடுக்களை, தடயங்களைக் காணலாம்.
திப்பு சுல்தான் கோவிலுக்கு அருகிலுள்ள குன்று பகுதியில் நின்று கொண்டு பீரங்கிக் குண்டுகளை கிழக்கு கோபுரத்தின் மீது வீசினான்; அதில் ஒரு குண்டு திரும்பி வந்து திப்புவின் பீரங்கியின் மீது விழுந்து அதைச் செயலற்றதாக ஆக்கியது. திப்பு, சகுனம் சரியில்லை என்று கருதி பின்வாங்கினான். அவன் படைகள் தங்கிய இடம் இன்றும் தூய தமிழ்ச் சொற்களால் பெரும் போர்க்களம்/ பெருங் களம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இறைவனின் பலி வேட்டை உற்சவம் இங்குதான் நடைபெறுகிறது .
திப்பு சுல்தானை வென்ற பிரிட்டிஷாரில் சிலர், கோவிலின் பக்தர்கள் ஆயினர் .
Two Shiva Temples in Rama temple
தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER, 1815
தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER , பெருமாளின் பக்தர் ஆனதோடு கோவிலுக்கு வந்து வணங்குவதை வழக்கம் ஆக்கிக்கொண்டார். இது ஏன் என்றால் அவர் ஒரு அதிசயத்தைக் கண்டார். முதலில் கோவிலை அவமதித்து, குதிரை மீதேறி, கோவில் வளாகத்திலும் பவனி வந்தார்; எல்லோரும் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தனர். அவரோ கேட்பதாக இல்லை. ஒரு முறை இப்படி கோவில் வளாகத்துக்குள் குதிரை சவாரி வந்தபோது, அது முன்னேயும் போகாமல் பின்னேயும் நகராமல் தெனாலி ராமன் குதிரை போல முரண்டு பிடித்தது. எல்லோரும் இதன் காரணத்தை விளக்கியவுடன் அவர் இறங்கி ராமபிரானுக்கு சல்யூட் அடித்தார் பின்னர் எல்லாம் சரியானது. அப்போது முதல் பெருமாளை சேவிக்கத் துவங்கிய அவர், கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்களையும் கட்டிக்கொடுத்தார். அவர் இப்படி சுவர் எழுப்பியதை இன்றும் அங்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.
The wall around this Pagoda was constructed under the supervision and patronage of T H Baber Esq in 1815
xxxx
கோவில் உற்சவம்
வருடாந்திர உற்சவம் மேடம்/மேஷம் மாதத்தில் விஷு அன்று துவங்கி 7 நாட் களுக்கு நடைபெறும் .
இந்தக் கோவிலில் ஒரு குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக சாக்கியர் கூத்து நடத்தி வருகின்றது .
தளி கோவிலைப் போலவே அறிஞர்களுக்கு பட்ட தானம் வழங்கப்படுகிறது; கோவில் மூலவர் பிரதிஷ்டை நடந்த மகர மாத திருவோண நட்சத்திரத்தன்று இந்தப் பட்டங்களை வழங்குவார்கள் .
இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு ராமருக்கு களபம் சாத்துதல் ஆகும். அதாவது சந்தனத்தை ராமபிரானுக்கு சார்த்துவார்கள் ; ஹனுமனுக்கு அவல் பிரசாதம் .
இவ்வாறு கலைகள் , பூஜைகள் ஆகிய அனைத்திலும் எதாவது ஒரு புதிய அம்சம் இருப்பதை இந்தக் கோவிலில் காணலாம்.
—subham—
Tags- மூன்று ராமர் கோவில்கள், , PART 25, தலைச்சேரி, திருவண்காடு, பெருமாள் கோவில், TIRUVANGAD RAMASWAMI TEMPLE
5.எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏன் அப்படி பெயர் கொடுத்தனர் ?
XXXX
6.எவரெஸ்ட்சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
XXXX
7.இந்த சிகரத்தின் உயரம் என்ன? இன்னும் உயரம் அதிகரித்து வருகிறதா ?
XXXX
8.இந்த சிகரத்துக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன ?
XXXX
9.சிகரத்தின் மீது ஏறுவதற்கு கட்டணம் உண்டா?
XXXX
10.எவரெஸ்ட்சிகரத்தை விண் வெளியிலிருந்து காண முடியுமா?
XXXX
விடைகள்
1.நேபாளத்தில் சாகர்மாதா என்றும், சீனாவில் சோமோலுங்மா என்றும் இந்த சிகரத்துக்குப் பெயர்; இவைதான் ஒரிஜினல் பெயர்கள் ; சம்ஸ்க்ருதத்தில் தேவ கிரி, தேவ மாதா என்று அழைத்தனர்.
XXXX
2.ஜூங்கோ டாபே .Junko Tabei என்ற ஜப்பானிய பெண்மணி 1975ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் மீது ஏறி சாதனை படைத்தார்.
XXXXX
3. முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் நியுஜிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியும் நேபாள செர்பா டென்சிங் என்பவரும் சிகரத்தை வென்று சாதனை படைத்தகனார்.
XXXXX
4.இருவரும் சிகரத்தில் ஏறிய நாள் 29 மே 1953
XXXX
5. முதல் இந்திய சர்வேயர் George Everest ஜார்ஜ் எவரெஸ்டின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது
XXXXX
6. எவரெஸ்ட் சிகரம் திபெத் (சீனா)- நேபாள எல்லையில் உள்ளது. இரண்டு நாடுகளில் எதாவது ஒன்றின் அனுமதி பெற்ற பின்னரே ஏறமுடியும்
XXXX
(7). முதலில் 8,840 மீ (29,002 அடி) என அளக்கப்பட்டது ; பின்னர் அதன் உயரம் 8,848 மீ (29,029 அடி) என்று உறுதி செய்தனர் . வருடத்துக்கு 4 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருகிறது
XXXX
8. நேபாளம் வழியாகவும் சீனா வழியாகவும் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன
XXXXX
9.அனுமதிக் கட்டணம் 9000 பவுண்டுகள் (9000கX ரூ.100). பின்னர் இன்ஸ்யூரன்ஸ் , ஷெர்பா உதவி, ஆக்சிஜன், உணவு, உடை முதலியன இதே போல இன்னும் ஒரு மடங்கு வைத்திருக்க வேண்டும்.
XXXX
10.விண் வெளியில் பறந்த வீரர்கள் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் நேபாள கம்பெனிகள் ஹெலிகாப்டர் சுற்றுலா மூலமும் பயணிகளுக்கு சிகரத்தைக் காட்டுகிறது
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 24
கோவில் எண்கள்- 26,27
கேரளத்தில் 3 ராமர் கோவில்கள்
108 வைணவ தலங்களில் கேரளத்தில் உள்ள மேலும் ஒரு கோவிலைக் காண்போம் .
கோவில் எண் 26 திருக்காட்கரை / த்ரிகாக்கரா
ஆலவாய்- திருஸூர் (திருச்சூர் ) ரயில் மார்க்கத்தில் இரு ஞாலக் கொடி (இரிஞ்சாலக்குடா) ஸ்டேஷனிலிருந்தும், அங்கமாலி ஸ்டேஷனிலிருந்தும், 15 கி.மீ தூரத்தில் திருக்காட்கரை / த்ரிகாக்கரா விஷ்ணு கோவில் இருக்கிறது . ஆல்வாயிலிருந்து 7 கி.மீ.
மூலவர் – திருக்காட்கரையப்பன் , நின்ற திருக்கோலம், தெற்கு நோக்கிய சந்நிதி.
தாயார்- பெருஞ் செல்வ நாயகி , வாத்சல்யவல்லி
தீர்த்தம் – கபில தீர்த்தம்
விமானம் – புஷ்கல விமானம்
பிராத்தியட்சம் ஆனது- கபில முனிவர் முன்னிலையில்
சிறப்பு அம்சங்கள்
நம்மாழ்வார் பாடிப் பரவியதால் 1200 ஆண்டுக்கும் மேலான வரலாறு உடைய கோவில்
நேந்திரம் வாழை எப்படித் தோன்றியது என்ற தாவரவியல் BOTANYகதையும் உண்டு .
மலையாள மக்கள் இவரை வாமன ரூபமாகப் பார்ப்பதால் ஓணம் பண்டிகை இங்கு பெரிய உற்சவம்.
வாமன அவதாரம் – மஹாபலி – ஓணம் பண்டிகை கதை எல்லோரும் அறிந்ததே. ரிக் வேதமும் திருக்குறளும் வாமன அவதாரத்தை விதந்து ஓதுகின்றன .
2 சுவையான கதைகள்
இந்த ஸ்தலத்தில் வசித்த ஒரு பக்தனின் தோட்டத்தில் வாழை மரங்கள் சரியானபடி காய்த்துக் குலை தள்ளவில்லை பெருமாளே! உனக்கு தங்கத்தினால் ஆன வாழைப்பழ சீப்பினை செய்து வைக்கிறேன்; என்னுடைய தோட்டம் நன்றாகப் பூத்துக் குலுங்க வேண்டும் என்று வேண்டினான்; என்ன அதிசயம்! வாழை மரங்கள் குலை தள்ளியதோடு அவை எல்லாம் புது வகை நேந்திரம் பழமாக விளைந்தன.
இன்று கேரளத்துக்குச் செல்லும் எவரும் நேந்திரங்காய் /வாழைக்காய் வறுவல் வாங்காமல் திரும்புவதில்லை ; அந்த அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டது .
இரண்டாவது கதை என்னவென்றால் அந்த பக்தன் கொடுத்த தங்க வாழைப்பழ சீப்பு கோவிலிலிருந்து காணாமற்போனது; ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற பழமொழிக்கு இணங்க அங்கிருந்த யோகியை மன்னன் திருடன் என்று பிடித்து துன்புறுத்தினான். அந்த யோகி தற்கொலை செய்துகொண்டு, பிரம்ம ராட்சஸ் என்னும் பேயாக மாறி ஊரையே துன்புறுத்தியது.
(பிராமணர்கள் தவறான முறையில், அகால மரணம் அடைந்தால் பேயாக மாறி தவிப்பார்கள்; அந்த வகைப் பேய்களுக்கு பிரம்ம ராக்ஷஸன் என்று பெயர். பிராமணர்களைக் கொன்றால் வரும் பாவத்துக்கு பிரம்ம ஹத்தி என்று பெயர்) .
கதை இத்தோடு முடியவில்லை. அந்த யோகி தற்கொலை செய்துகொள்ளும்போது சொல்லியபடி மூங்கில் கூரை போட்டு கோரைக் கொள்ளியை வெளிச்சத்துக்கு ஏற்றினார்களாம் .பின்னர் பிரம்ம ராட்சசனாக திரிந்த யோகிக்கு மக்கள் கோவில்கட்டி தினசரி நைவேத்தியம் படைத்ததாக ஸ்தல வரலாறு சொல்லும்.
XXXXX
FOLLOWING INFORMATION IS TAKEN FROM FACEBOOK
1. பண்டைய காலத்தில் மகாபலியின் ஆசனம் இருந்த இடத்தில் தற்போது மாதிரி ஆசனம் ஒன்று காணப்படுகிறது. இது கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ளது. கேரள மக்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.
2. வட்ட வடிவில் கேரள பாணியில் அமைந்த எழில் மிகு திருத்தலம்.
5. கோயிலுக்கு வெளியே தனி சன்னதிகளில் பகவதி தேவி, சாஸ்தா, சுந்தர யக்ஷி, கோபால கிருஷ்ணன் மற்றும் நாகர் அருள்பாலிக்கின்றனர்.
6. மகாபலியால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் கோயில் அருகே தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் பழமையை எண்ணிப் பார்க்கையில் நமக்கு மெய் சிலிர்க்கிறது.
7. தமிழ் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன என்பது மிக சிறப்பு.
நம்மாழ்வார் – 3612-22
xxxxx
27.தலைச்சேரி திரு வெண் காடு ராமர் கோவில்
தலைச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த ராமர் கோவில் இருக்கிறது
வெண் என்றால் வெள்ளை ; இது பெரிய காட்டுப்பகுதி ஸ்வேத என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் வெள்ளை ; ஆகையால் இதை ஸ்வேதாரண்யம் என்றும் அழைப்பர் ; இதே பெயரில் தமிழ் நாட்டிலும் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது .
XXXXX
கேரளத்திலிருந்து ஒரு பிராமணர் காசி யாத்திரை சென்றார். அங்கு காவி உடை தரித்த சந்யாசிகள் குழு ஒன்றினைக் கண்டு கும்பிடு போட்டார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ஒரு சந்யாசி கேட்டார் .
தலைச்சேரி என்று பிராமணர் விடை கொடுத்தார்
அவ்வளவு புனிதமான இடத்தை விட்டு இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே என்று எல்லோரும் ஏகோபித்த குரலில் மொழிந்தார்கள் . வட கேரளத்திலுள்ள இந்த ராமர் கோவில் அவ்வளவு சிறப்புடைத்து .
கேரளத்தில் பகவதி, சிவன், பெருமாள் கோவில்கள் நிறைய உள்ளன. ஆனால் ராம பிரானுக்கோ 3 கோவில்கள் மட்டுமே உள . குரு வாயூருக்கு அருகிலுள்ள திருப்பிரயார் கோவிலை முன்னரே தரிசித்தோம். இது அடுத்த கோவில்; மூன்றாவது கோவில் பாலக்காடு அருகில் திரு வில்வமலாவில் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
இங்கு கோபுரத்தை பித்தளைத் தகடுகளால் போர்த்தியதைப் பழைய
நூல்களில் காண முடிகிறது .
பலிக்கல்லில் உள்ள ஒரு கல்வெட்டு கி.பி. 826ம் ஆண்டைச்சேர்ந்ததால் இதன் பழமை தெரிகிறது .
முதலில் சுவையான கதையைக் கேளுங்கள்
அகஸ்தியமாமுனிவர் இந்தக் காட்டின் வழியே வருகையில் இரண்டு வேடர்கள் அவருக்கு துன்பம் விளைவித்தனர். அகஸ்தியர் இருவரையும் சபிக்கவே அவர்கள் மன்றாடினர் . உடனே அகஸ்த்தியர் அவ்விருவரையும் இரண்டு சிவன் கோவில்களில் தவம் இருந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்கிறார். அவ்வாறே ஒருவர் தவமிருந்து ஸ்வேத முனி என்றும், மற் றொருவர் நீல முனி என்றும் பெயர் பெற்றனர்
ஸ்வேத முனி தவம் செய்த இடம்ஸ்வேதாரண்யம் ஆனது = திரு வெண் காடு ; அங்கே அவர் சிவ பெருமானுடன் பெருமாள் கோவிலையும் கட்டினார் ; அதுவே நாம் காணும் ராமர் கோவில்
நீல ரிஷி சிவனை வழிபட்ட இடம் நீலேஸ்வரம் சிவன் கோவில் ஆனது.
ஸ்வேதர் ஸ்தாபித்த சிவன் உக்கிர சொரூபம் ஆனதால் எதிரே இன்னுமொரு சிவனையும் பிரதிஷ்டை செய்தனராம் ; ஆக ஒரே மைதானத்தில் 3 கோவில்கள் உள ; இரண்டு சிவனுக்கு ஒன்று ராமருக்கு.
கேரளத்தில் ராமர் என்று சொல்லும் கோவில்களில் இருப்பது பெருமாள் தான். இந்த ராமர் கோவிலிலும் 4 கைகள் உள்ள ராமன் சங்கு , சக்கரம் கதை, அபய முத்திரைகளுடன் காட்சி தருகிறார்.
இந்த ரூபம் அவர் கர தூஷணன் என்ற 2 அசுரர்களை வதம் செய்தபோது எடுத்த உருவம்; ஆகையால் கோவிலில் கதகளி நடனத்தில் கூட கர தூக்ஷண வதத்தைத் தான் நடிக்கிறார்கள்.
கோவிலைப் பற்றிய மேலும் சில கதைகளையும் காண்போம்.
தொடரும் ……………………………
Tags- கோவில் எண் 26, திருக்காட்கரை /,த்ரிகாக்கரா , தலைச்சேரி , திரு வெண் காடு , ராமர் கோவில்,ஒருவர் ஸ்வேத முனி , நீல முனி ,மூன்று ராமர் கோவில்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 19
தவறான மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு!
ச.நாகராஜன்
பகுதி 22
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர்களின் மீது போடப்பட்ட அணுகுண்டால்!
லக்ஷக்கணக்கான மக்கள் அழிந்து பட்டனர்; அதன் பின் விளைவுகளால் லக்ஷக்கணக்கான மக்கள் அவதியுற்றனர்.
உலகம் தாங்க முடியாத அணுகுண்டை அமெரிக்கா ஜப்பானிய நகர்களின் மீது வீசியது ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?
உண்மை அது தான்!
மொகுசட்சு (mokusatsu) இந்த ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் அணுகுண்டு போடப்பட்டது. 1945இல் ஜப்பான் மிகவும் பலஹீனமாகி விட்டது. அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சோவியத் யூனியன், சைனா ஆகிய ஐந்து பெரும் சக்திகளும் ஒன்றாக இணைந்து கொண்டன. இவை அனைத்தும் ஜப்பானிய பிரதம மந்திரியாக இருந்த கண்டாரோ சுசுகிக்கு (Kantaro Suzuki) மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தன.
ஜப்பான் நிபந்தனைகளுக்கு உட்படாவிடில் “ தகுந்த கடுமையான அழிவை” (prompt and utter destruction) அது சந்திக்க நேரிடும் என்று சொல்லப்பட்டது.
இதற்கான தகுந்த பதிலை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்தது.
பத்திரிகையாளர்கள் ஜப்பானிய பிரதம மந்திரியை இது. குறித்துக் கேட்ட போது அவர், “இன்னும் ஒரு இறுதி முடிவுக்கு தான் வரவில்லை” என்றார். “இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை” என்றார். மொகுசட்சு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ‘இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ என்று ஒரு அர்த்தம்; “கமெண்டை நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்று இன்னொரு அர்த்தம். அதாவது இது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மையான அர்த்தம். இந்த வார்த்தை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களிடம் அனுப்பப்பட்டபோது அவர்கள், “இதை அவமதித்து ஒதுக்குகிறேன்” என்று ஜப்பானிய பிரதம மந்திரி சொல்வதாக மொழிபெயர்த்தனர்.
இந்த வார்த்தைகளை அப்படியே அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்தன. அமெரிக்கா முழுவதும் பொங்கியது. பத்து நாட்கள் கழித்து ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது.
அணுகுண்டு போட்டு அழிவை உண்டாக்கி உலகப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவை முடிவெடுக்க வைத்தது மொகுசட்சு.
ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன், சியாங் கே ஷெய்க் ஆகியோர் ஜப்பான் சரணாகதி அடைந்து விடும் என்றே நம்பினார் ஆனால் அவரது பதிலால அவர்கள் வெகுண்டனர். அணுகுண்டு வீசப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதே அணுகுண்டு போடப்பட்டு சுமார் 80,000 பேர்கள் ஒரு க்ஷணத்தில் அழிவதற்கான காரணமாக அமைந்தது!