செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு! (Post No.7352)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 17 December 2019

Time in London – 8-59 AM

Post No. 7352

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாக்யா 1-12-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் கட்டுரை அத்தியாயம் 437

செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!

ச.நாகராஜன்

அனடாலி கார்பாவ் (Anatoly Karpov – தோற்றம் 23-5-1951 இப்போது வயது 68) உலகின் மாபெரும் செஸ் சாம்பியன். 1999ஆம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை அவரே உலகின் செஸ் சாம்பியன்.

ஆனால் 1984ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டி திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது. கார்பாவ் அவரை எதிர்த்து விளையாடிய காஸ்பரோவை (Garry Kasparov தோற்றம் : 13-4-1963 இப்போது வயது 56) விட முன்னணியில் தான் இருந்தார். இருந்தும் ஏன் செஸ் போட்டி நிறுத்தப்பட்டது?

இந்தப் போட்டி நடைபெற்ற போது ஐந்து மாதங்களில் கார்பாவ் 10 கிலோ எடையை இழந்திருந்தார். இதனால் போட்டியை நடத்தியவர்கள் கவலையுற்று போட்டியை நிறுத்தி விட்டனர். உலக செஸ் சாம்பியனின் உடல் நிலை கவலைக்கிடமாக ஆகி விடக்கூடாது என்பதே அவர்களின் கவலை.

கார்பாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இப்படி விளையாட்டில் தீவிரமாக சிந்திப்பதில் ஒரு நாளைக்கு 6000 கலோரியை அவர் செலவிட வேண்டி இருந்தது என்பது தெரிய வந்தது.

விஞ்ஞானிகள் அவர் ஏன் தன் சக்தியை இழந்தார்? செஸ் போட்டியில் எந்தக் காயை எப்படி நகர்த்தலாம் என்று இடைவிடாது சிந்தித்ததாலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா – மூளை அவ்வளவு சக்தியை உறிஞ்சுகிறதா? – என்று ஆராயத் தொடங்கினர்.

சாதாரணமாக உடல் சும்மா இருக்கும் போது – அதாவது சுவாசம், ஜீரணம், உடலைத் தகுந்த வெப்பநிலையில் வைத்திருப்பது போன்ற இயல்பான காரியங்களைத் தவிர வேறெதுவும் செய்யாதிருக்கும் போது –  உடலின் மொத்த ஆற்றலில் மூளை 20 முதல் 25 சதவிகிதம் உபயோகிக்கிறது. இதற்கான குளுகோஸை அது எடுத்துக் கொள்கிறது.

ஒரு நாளைக்கு ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி 350 முதல் 450 கலோரிகள் வரை இதற்காக தேவைப்படுகிறது. ஆனால் குழந்தைப் பிராயத்திலோ – 5 முதல் 6 வயதாக இருக்கும் போது  மூளை உடலின் ஆற்றலில் 60 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது. இதை டியூக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டக் பாயர் தெளிவு படுத்துகிறார். இப்படி மூளை உடல் சக்தியை எடுத்துக் கொண்டாலும் அது உடல் எடையில் 2 சதவிகிதமே ஆகும்.

புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. ஆனால் தனது வேலையில் ஒருவர் நல்ல திறமை பெற்று விட்டார் எனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுவதில்லை.

அறிவியல் ரீதியாக இது கண்டுபிடிக்கப்பட்ட போது செஸ் விளையாட்டில் மிகத் திறமைசாலியான கார்பாவ் ஏன் 10 கிலோ எடையை இழந்தார் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கான காரணம் அதிகம் சிந்தித்தனால் அவர் உடல் எடையை இழக்கவில்லை, மாறாக தீவிரமான விளையாட்டின் போது அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு, வேளாவேளைக்கு உணவை எடுத்துக்கொள்ளவில்லை, அதனால் தான் அவருக்கு எடை இழப்பு ஏற்பட்டது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர். சாதாரணமாக, நிபுணர்களாக உள்ள செஸ் விளையாட்டு வீரர்கள் தீவிரமாக விளையாடுகையில் அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. வேகமாக சுவாசிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. உடல் வியர்க்கிறது. இவ்வளவும் சேரும்போது அவர்களது உடல் அதிக கலோரியை இழக்க ஆரம்பிக்கிறது. அத்துடன் இந்த விளையாட்டு நிபுணர்கள் எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து விளையாட்டில் அமர வேண்டி நேர்கிறது. அப்போது தினசரி நடைமுறையில் இருக்கும் உணவுப் பழக்கத்தை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. ஆகவே ஆற்றல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இது சாதாரணமாக அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் ஒன்று.

உங்கள் உடலை ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட வைத்தால் அப்போது அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் உடலில் எடை இழப்பு ஏற்படும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.

ஆகவே கார்பாவ் ஏன் உடலில் 6000 கலோரியை இழந்தார் என்ற கேள்விக்கு, அவர் செஸ் விளையாட்டின் போது அதிகம் சிந்தித்ததால் எடையை இழக்கவில்லை; மாறாக அவர் மன இறுக்கத்திற்கு ஆளானதும், வேளா வேளைக்குச் சரிவர உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுமே காரணங்கள் என்பது முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஆகவே எவ்வளவு வேண்டுமானாலும் தீர்க்கமாக சிந்திக்கலாம் என அறிவியலே முத்தாய்ப்பாகக் கூறி விட்டதால் இனி கவலைப்படாமல்  நிறைய சிந்திக்கலாமே!

மூளை பற்றிய காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் இன்னொரு ‘உண்மை நாம் அனைவருமே நமது மூளையில் பத்து சதவிகிதம் தான் பயன்படுத்துகிறோம் என்பது. இது உண்மையில்லை, கட்டுக்கதை என்கிறது நவீன அறிவியல். எல்லோருடைய மூளையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்பட்டே வருகிறது என்பது அறிவியலின் சமீப கால முடிவு. மூளையை ஸ்கேன் செய்து பார்த்த நிபுணர்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சமயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர். இப்படி பத்து சதவிகிதம் தான் மூளை பயன்படுத்தப்படுகிறது என்ற கட்டுக்கதையான ஒரு தகவல் எப்படி யாரால் முதலில் சொல்லப்பட்டது என்பது சரியாக விளங்கவில்லை. எல்லோரும் எப்போதும் மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துதல் என்பது முடியாத காரியம். தேவைப்படும் போது தேவையுள்ள தசைப் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவ்வளவு தான்!!

நாம் என்ன, இதயம், கண், காது போன்ற இதர உடல் அங்கங்களை பத்து சதவிகிதம் தான் உபயோகப்படுத்துகிறோமா என்று கேட்கின்றனர் விஞ்ஞானிகள்.

இப்படி மூளையைப் பத்து சதவிகிதம் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார்களே, அவர்கள் தாம் தங்கள் மூளை ஆற்றலில் பத்து சதவிகிதம் பயன்படுத்துபவர்கள் என்று கலாய்க்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆகவே மூளை ஆற்றலை நன்கு பயன்படுத்தி அதிகம் சிந்தித்து அதிகம் பயன் எய்தலாம் என்பதே அறிவியலின் முடிவு!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சீனிவாச ராமானுஜன் உலகப் புகழ் பெற்ற அதிசய கணித மேதை. (தோற்றம் 22-12-1887 மறைவு : 26-4-1920) 32 ஆண்டுகளே வாழ்ந்த இந்த மகா மேதையின் கணிதக் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றும் உலக அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

சீனிவாச ராமானுஜன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றினார். அவரை ஆதரித்துப் பாராட்டிய பெரும் கணித மேதையான ஜி.ஹெச். ஹார்டி அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட விரும்பினார். அந்த நூலில் வெளியிட ராமானுஜனின் ஒரு போட்டோ வேண்டுமென அவர் விரும்பினார். இதற்காகப் பலரை அணுகிய போதும் ஒரு போட்டோ கூட கிடைக்கவில்லை. கடைசியாக அவர் சுப்ரமணியம் சந்திரசேகரை அணுகி ஒரு போட்டோவை எப்படியாவது கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டார்.

சந்திரசேகர் இந்தியாவிற்கு வருகையில் ராமானுஜனது (விதவை) மனைவியை அணுகினார். ராமானுஜத்தின் மனைவியிடம் ஒரே ஒரு போட்டோ இருந்தது. அதை அவர் கொடுத்தார். அதிலிருந்து மூன்று போட்டோக்களை என்லார்ஜ் செய்த சந்திரசேகர் ஒன்றை ராமானுஜனின் மனைவிக்குக் கொடுத்தார். இன்னொன்றை ஹார்டிக்கு அனுப்பினார். மூன்றாவது போட்டோவைத் தான் வைத்துக் கொண்டார்.

நூல் ராமானுஜனின் போட்டோவுடன் வெளியானது.

மிகப் பெரிய கணித மேதையான ராமானுஜனின் ஒரே போட்டோ இது தான். ஒரு வேளை, பிரிட்டனுக்குச் செல்லும் போது பாஸ்போர்ட்டுக்காக அவர் எடுத்த போட்டோவாக இது இருக்கலாம் என எண்ணப்படுகிறது.

இன்னொரு கணித மேதையான பால் எர்டோஸ் (1913-1996) இந்தியாவிற்கு இரு முறை சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். தனக்குச் சொற்பொழிவுக்காக அளிக்கப்பட்ட பணத்தை அவர் ராமானுஜனின் விதவை மனைவிக்கு அனுப்பி உதவினார்.

***

எமனையும் சமாளித்த பிடல் காஸ்ட்ரோ (Post No.7351)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 December 2019

Time in London – 19-44

Post No. 7351

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருந்து கியூபா நாட்டை ஆண்டவர் பிடல் காஸ்ட்ரோ. அவரை அமெரிக்க உளவு ஸ்தாபனத்தாலும் கூட  கொல்ல  முடியவில்லை. சிலருக்கு ஆயுஸ் அவ்வளவு கெட்டி. இறுதி வரை அஜாத சத்ருவாக இருந்து இறந்தார். தனது சகோதரரையே  பதவியில் அமர்த்திவிட்டு உயிர்நீ த்தார் . நான் தினமணியில் 1992ல் எழுதிய கட்டுரை இதோ –

காஸ்ட்ரோ பிறந்த ஆண்டு — 13 ஆகஸ்ட் 1926

இறந்த ஆண்டு – 25 நவம்பர் 2016

ஒன்பது அமெரிக்க ஜனாதிபதி ஆட்சிகளை வேடிக்கை பார்த்தவர்.

600 கொலை முயற்சிகளில் சாகாதவர் .

கியூபாவை 50 ஆண்டுகள் ஆண்டவர்.

ஜப்பானியர் பாதுகாத்த மாலிப்டின ரகசியம் (Post No.7349)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 December 2019

Time in London – 9-34 am

Post No. 7349

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Molybdenum Knife

tags -மாலிப்டினம், ஜப்பானியர் , ரகசியம்

நீலம் செய்யும் ஜாலம் ! (Post No.7348)


Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 16 December 2019

Time in London – 7-25 am

Post No. 7348

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

14-12-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நீலம் செய்யும் ஜாலம்!

ச.நாகராஜன்

Princess Diana

சனி பயம் போக்கும் நீலம்

சனி பகவானை நினைத்தாலேயே பலருக்கும் பயம். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி (அர்த்தாஷ்டம சனி) என்றெல்லாம் பயப்பட்டு தங்கள் துன்பத்திற்கெல்லாம் சனியே காரணம் என்று நொந்து கொள்வர்.

ஆனால் உண்மையில் கிள்ளி எடுக்கும் சனி அள்ளிக் கொடுப்பவரும் கூட. கெடுக்கும் சனி என்று சொல்லப்படுபவரே கொடுக்கும் சனி என்பதையும் உணர வேண்டும்.

நளனும் பேரழகி தமயந்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து மணந்த கதையும் பின்னால் பிரிந்த கதையும் நாம் அறிந்ததே.

சனியின் பிடி நீங்கி இருவரும் மீண்டும் இணைந்ததைப் படிக்கும் போது மனம் பெரிதும் ஆறுதல் அடைகிறது. திரு நள்ளாற்றில் நளன் சனியை வணங்கி அவன் அருள் பெற்று இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்ற வரலாறை அறிவதால் நாமும் அங்கு சென்று வழிபட்டு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கப் பெறுகிறோம்.

    அந்த நளன் பட்ட பாடை விட நான் படும் பாடு பெரும்பாடு என்று சொல்பவர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் அற்புத மணியாக, ஜாலம் செய்யும் மணியாக அமைகிறது நீலம்.

Princess Kate William

ஜோதிடம் பரிந்துரைக்கும் நீலம்

ஒரு ஜாதகத்தில் சனி தீய பலன்களைத் தரும் அம்சம் இருப்பின் நீலமே அந்த ஜாதகருக்கும் உதவும் மணியாகும்.

முதலில் ஏழரை நாட்டுச் சனி என்று அழைக்கப்படும், சனி ராசிக்கு 12ஆம் இடம், ஜன்ம ஸ்தானம், இரண்டாமிடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்படும் தீய பலன்களை இந்திர நீலம் மட்டுப்படுத்தும். அடுத்து அஷ்டம சனி (எட்டாம் இடத்தில் சனியின் சஞ்சாரம்) மற்றும் கண்டச் சனியினால் (நான்காம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம்) ஏற்படும் தீய பலன்களும் கூட நீலம் செய்யும் ஜாலத்தால் மட்டுப்படுத்தப்படும்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அணிய உகந்த கல் நீலம்.

எண் கணிதத்தில் சனி பகவானுக்குரிய எண் 8. ஆகவே 8 எண்ணில் பிறந்தவர்களும் கூட்டு எண் 8ஆக உடையவர்களும் அணிய வேண்டிய கல் நீலமே.

ப்ளூ சபயர் (Blue Sapphire) என்று கூறப்படும் நீலத்தின் வரலாற்றை ஆராயப் போனால் பழங்காலத்திய அறிஞர்கள் எந்தக் கல்லுக்கு இந்தப் பெயரைத் தந்தார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை. லெபிஸ் லஸூலி, டர்க்காய்ஸ், ஹயாசிந்த் (Lapis Lazuli, Turquoise, Hyacinth ) ஆகிய பல வண்ணக் கற்களையும் ஸபையர் என்றே கருதும் வகையில் பழைய நூல்களின் விளக்கங்கள் உள்ளன.

இந்தியாவிலும் அரேபியாவிலும் ஆரோக்கியம் நிலைப்பதற்கான தாயத்தாகவும் தீய திருஷ்டியைப் போக்கவும் நீலம் அணியப்பட்டு வந்தது. கடும் தொற்று நோய்களான பிளேக் உள்ளிட்ட மரண நோய்களை இது அண்ட விடாது என்பதும் இந்திய, அரேபியர்களின் நம்பிக்கை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இருக்க தீய திருஷ்டி ஒருவரை அண்டாது என அனைவரும் நம்பினர். அத்துடன் மனதை அலை பாய விடாது ஒரு நிலைப்படுத்தும் அரிய கல் இது என அனைவரும் போற்றி வந்துள்ளனர்.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நீல மணி பற்றிப் பல அரிய குறிப்புகளை பண்டைய நூலின் மேற்கோள்களுடன் தருகிறார். அதன்படி நீலத்தின் வகைகள் 4. குணங்கள் 11. குற்றங்கள் 8.(நீல மணி போன்ற நிறத்தை உடைய மயில்கள் உனது சாயலுக்குத் தோற்று காட்டில் போய் ஒளிகின்றன – ‘மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கள் அடையவும்’ என்பன போன்ற பல மணியான வரிகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.) இவை விரிப்பின் பெருகும்; ஆதலால் தக்க தமிழறிஞரை நாடி அறியலாம்.

ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்

நீலத்தைப் பற்றிப் பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:

நீலம் பழங்காலத்தில் கலிங்கத்திலிருந்து கிடைத்து வந்தது. (இப்போதைய ஒரிஸாவும் வங்காளத்தின் மேற்குப் பகுதியும் இணைந்த பிரதேசம் கலிங்கம் என அழைக்கப்பட்டது). ஸ்ரீ லங்காவிலும் தரமான நீலக் கற்கள் கிடைத்தன.

நீலம் இரு வகைப்படும். 1) ஜல நீலம் 2) இந்திர நீலம்.

இவற்றுள் இந்திர நீலமே சிறந்தது.

இரு வகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று லேசானதாகவும் வெள்ளை ஒளியைக் கக்குவதாகவும் இருப்பது ஜல நீலமாகும்.

இந்திர நீலமோ கனமாக இருக்கும். கறுப்பு ஒளியை உள்ளிருந்து வெளிப்படுத்தும்.

ஜல நீலத்தில் சிவப்பு ஒளி காணப்பட்டால் அது ரக்த-காந்தி அல்லது ரத்ன-முகி எனப்படும். ஜல நீல வகையில் இதுவே சிறந்தது.

இந்திர நீலத்தை எடுத்துக் கொண்டால் சிறந்த இந்திர நீலக் கல் சீரான ஒளியுடன் கூடி இருக்கும். கனமாக இருக்கும். மேல் பரப்பில் எண்ணெய் பூசினாற் போலக் காணப்படும்.அது ஒளி ஊடுருவும் தன்மையுடன், உருண்டையாக மிருதுவாக உள்ளிருந்து ஒளியைப் பிரகாசித்துக் கொண்டவாறே இருக்கும்.

ஜல நீலத்தில் ஏழு வகைகள் உண்டு 1) ஐந்து வண்ணங்களை இணைத்து உள்ளது 2) ஐந்து வண்ணங்களை ஒரு பாதியிலும் இன்னொரு பாதியில் ஒரே ஒரு வண்ணமும் இருப்பது 3) மேற்பரப்பில் எண்ணெய் பூச்சு கொண்டது போலத் தோற்றமளிக்காதது 4) மிக லேசானது 5) உள்ளே சிவப்பு ஒளியுடன் காணப்படுவது 6) தட்டை வடிவுடன் கூடியது (அல்லது இன்னும் சிலரின் கருத்துப்படி வெந்த அரிசியை தட்டினால் வரும் தட்டை வடிவத்துடன் கூடியது) 7) சிறிய அளவுடன் கூடியது (சிறியது)

 தாமிர வண்ணத்தில் உள்ள நீலமானது ஒதுக்கப்பட வேண்டாம். இதே போல தாமிர வண்ணத்தில் உள்ள கரபீரம் மற்றும் உத்பலம் (Opal) ஆகிய கறகளையும் ஒதுக்கத் தேவையில்லை.

வானவில் நீலம் : வானவில் போல ஜொலிக்கும் கல்லின் மதிப்பைச் சொல்லவே முடியாது. பூமியில் காணுதற்கு மிகவும் அரிதானது இது.

மஹா நீலம் : நீல வண்ணம் அளப்பரியதாக இருக்கும் நீலக் கல் மஹா நீலம்  எனப்படும் அல்லது பெரும் நீலம் என அழைக்கப்படும்.

நீலம் செய்யும் ஜாலம்

சனியினால் ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.

சிந்தனை சீராகும். பணம் செழிக்கும். பல்வேறு விதமான தொல்லைகள் தீரும்.

சனி நலம் பயக்கும் நிலையில் இருந்தால் அந்த நல்ல பலன்கள் கூடுதலாகும்.

இந்தக் கல்லின் இரசாயனச் சமன்பாடு அலுமினியம் ஆக்ஸைடு ஆகும். (Al2O)

மோவின் அலகுப் படி இதன் கடினத் தன்மை : 9

இதன் ஒப்படர்த்தி :- 3.98 – 4.06

நீலம், கொரண்டம் எனற கனிம வகையைச் சேர்ந்தது.

சாணக்கியர் கூறும் எட்டு வகை நீலங்கள்

சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்ய நீதியில் நவரத்னக் கற்களைப் பற்றிய ஏராளமான நல்ல குறிப்புகளைத் தருகிறார்.

நீல மணியைப் பற்றி அவர் தரும் வகைகள் 8.

நீலாவளியம் : அலைஅலையாக நீலக் கோடுகளோடு பிரகாசிப்பது.

இந்திரநீலம் : மயிலின் தோகை போல நீல நிறத்துடன் ஒளிர்வது.

கலாயவண்ணம் : கலாயம் என்னும் ஒரு வகை தானிய மலரைப் போன்ற வண்ணம் கொண்டு ஒளிர்வது.

மாநீலம் – பொன்வண்டின் நிறம் கொண்டு பிரகாசிப்பது

நாவல் வண்ணம் – நாவல் பழத்தைப் போன்ற நிறம் கொண்டு ஒளிர்வது.

முகில் வண்ணம் – முகில் என்றால் மேகம் என்று பொருள். மேகம் போன்ற நிறம் கொண்டு பிரகாசிப்பது.

நந்தகம் – தவளை போன்று உள்ளே வெண்மையும் வெளியே நீல நிறமும் கொண்டு ஒளிர்வது

நடுநீர்ப் பெருக்கு – நீர்ப் பெருக்குப் போல நடுவில் நீலத்துடன் பிரகாசிப்பது.

ஆக இந்த எட்டு வகையும் மனித குலத்திற்கு நன்மை பயப்பதே ஆகும்.

செயற்கை நீலம்

செயற்கை முறையில் சிந்தடிக் நீலக் கற்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி 1902ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டு ஒரு வழியாக செயற்கை நீலக் கல் உருவானது. என்றாலும் கூட இயற்கையில் இருக்கும் நீல ஒளி அதே போல அமையவில்லை.

அமெரிக்காவும் ரஷியாவும் இந்த செயற்கைக் கற்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளன. 2003ஆம் ஆண்டில் மட்டும் 250 டன்கள் செயற்கை நீலம் உருவாக்கப்பட்டுள்ளது; அவை தொழிலகப் பயன்பாட்டிற்கும் உதவ ஆரம்பித்தன. பல்வேறு அரிய தன்மைகள் உள்ள செயற்கை நீலக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு ஜன்னல்களில் பதிக்கப்படலாயின.

அரிய நீலக் கற்கள்

உலகில் ஏராளமான அரிய வகை நீலக் கற்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமானவை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ லங்காவில் ரத்னபுரம் என்னும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட நீல மணியாகும். ரத்னபுரம் நவரத்தினங்களின் நகர் என்ற பெயர் பெற்ற நகராகும். இது 1404.49 கேரட் எடையுடன் கூடியது. அதாவது 280 கிராம் எடை கொண்டது.

இதன் விலை 1000 லட்சம் டாலர் என மதிப்பிடுகின்றனர். (ஒரு டாலர் சுமார் 70 இந்திய ரூபாய்க்குச் சமம்.) ஆனால் இதை 1750 லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு ‘தி ஸ்டார் ஆஃப் ஆடம்’ (The Star of Adam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஈடன் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடம் நேராக ஸ்ரீ லங்கா வந்ததாகவும்,  ஆடம்ஸ் பீக் என்று இப்போது அழைக்கப்படும் மலையில் ஆடம் வாழ்ந்ததாகவும் ஒரு பெரும் நம்பிக்கை நிலவுகிறது. அதன் அடிப்படையில் இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.

கடந்த 2000 ஆண்டுகளாக ஸ்ரீ லங்காவில் பல அரிய வகை ரத்தினக்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டார் சபையர் என்று பெயரிடப்படும் நீல மணிகள் ஆறு முனை உள்ள நட்சத்திரம் போல ஒளி விடும் கற்களாகும்.

க்வீன்ஸ்லாந்தின் ப்ளாக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நீல மணி 733 கேரட் எடை கொண்டது. இது உலகின் இரண்டாவது பெரிய நீலமணியாகும். ஸ்டார் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் மூன்றாவது பெரிய நீலக் கல் 563.4 கேரட் எடை கொண்டது. இது இப்போது வாஷிங்டன் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஆஃப் பாம்பே என்ற கல் 182 கேரட் எடை கொண்டது.

காஷ்மீர், பர்மா, ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் கிடைக்கும் நீலம் அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. காஷ்மீர் கற்கள் பழைய காலத்தில் கிடைத்தவை. அவை மாறி மாறி விற்கப்பட்டு அணியப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் நீலம் கிடைக்கிறது. இந்தியாவில் திருவனந்தபுரம் பகுதியில் நீலக் கற்கள் அபூர்வமாகக் கிடைக்கின்றன.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கிரஹ தோஷத்தினால் எதையெதை எல்லாம் இழந்தோமா அதையெல்லாம் மீண்டும் திரும்பப் பெற ஒருவர் அணிய வேண்டிய கல் நீலமே.  அலங்கோலமாக இருக்கும் வாழ்க்கையை குதூகலமாக மாற்றுவதற்கான ஜாலத்தைச் செய்ய வல்லது நீலம்!

   நல்ல வைரம் எப்படி உடனடியாக நற்பலனைக் காண்பிக்கிறதோ, தோஷமுள்ள வைரம் எப்படி உடனடியாகத் தீய பலன்களைக் காண்பிக்கிறதோ, அதே போல நீலமும் உடனேயே நற்பலன்களை அளிக்க வல்லது; தோஷமுள்ள நீலக் கல் உடனேயே தீய பலன்களைக் காண்பித்து விடும். ஆகவே இதைத் தேர்வு செய்பவர்கள் நிபுணரின் உதவியை நாடி நல்ல கல்லை மட்டுமே அணிய வேண்டும்.

வாழ்க வளமுடன்!

துப்பாக்கி கலாசாரம்! (Post No.7347)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 15 DECEMBER 2019

Time in London – 16-42

Post No. 7347

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

துப்பாக்கி கலாசாரம் என்பது நான் 1992ல் எழுதியது. இப்போது மிகவும் மோசமாகிவிட்டது .

இந்த 2019ஆம்  ஆண்டில் லண்டனில் மட்டும் 134  பேர்

வன்முறைச்  சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது நான் 13-09-1992-ல் எழுதியது இப்போதும் நீடிக்கிறது.

Three young men have been murdered in little over 12 hours in London, as the death toll for this year nears the decade high seen in 2018.

With three weeks left until the end of 2019, 134 people have so far been killed including the victims of the London Bridge terror attack.

Last year, police recorded 141 homicides in the capital – the highest since 2008.

The last spate of bloodshed started at 2pm on Thursday, when 22-year-old Exauce Ngimbi was stabbed to death in Lower Clapton.

Scotland Yard has arrested four people, including a 14-year-old boy, over the murder. 

குரங்கு ஆக மாறிய தமிழ்ப் பெண் – சிலப்பதிகாரத்தில் 7 அதிசயங்கள் (Post No.7345)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 15 DECEMBER 2019

Time in London – 9-47am

Post No. 7345

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Kannaki and Kovalan

படிப்பது போல நிறுத்தாமல் படித்து முடிப்பர். அவ்வளவு சுவைமிக்கது.

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Cheran Senguttuvan With Kannaki Statue

–subham–

உங்கள் வாழ்க்கையை உயர்த்த வல்ல ஒரு புத்தகம் (Post No.7344)

 

WRITTEN By S Nagarajan

swami_48@yahoo.com

Date: 15 DECEMBER 2019

 Time in London – 7-26 am

Post No. 7344

Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000

 

 

 

டிசம்பர்
2019 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

புத்தகச் சுருக்கம்

உங்கள் வாழ்க்கையை உயர்த்த வல்ல  ஒரு புத்தகம்

ச.நாகராஜன்

 

LIFE PLAN

The Sunday Times – லண்டனிலிருந்து
வெளி வரும்
பிரபல பத்திரிகையான ‘தி சண்டே
டைம்ஸ்
வெளியிட்ட இந்தப் புத்தகம்
உண்மையிலேயே ஒருவரின் வாழ்க்கையை உயர்த்த வல்ல ஒரு புத்தகம் தான்.

ரிச்சர்ட் கிர்லிங் (Richard Girling) என்பவர்
தொகுத்த இந்தப் புத்தகத்திற்கு உளவியல் ஆலோசகராக அமைபவர் ஜான் நிக்கல்ஸன். (
John Nicholson).

 

 A 4 அளவில்148
பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 46 அத்தியாயங்கள்
உள்ளன.

அதில் உடல்நல மேம்பாடு குறித்து
பல அத்தியாயங்கள் உள்ளன.

நல்ல ஆரோக்கியத்தை அனுபவியுங்கள் (Enjoy
Better Health)

 

    இந்த அத்தியாயத்தில் உங்களால் குனிந்து உங்கள்
கால் விரல் நுனியைத் தொட முடிகிறதா, பஸ்ஸைப் பிடிக்க ஓடும் போது உங்களுக்கு மூச்சு
வாங்குகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு உடல்பயிற்சியின் அவசியம் விளக்கப்படுகிறது.

 

ஏன் உடல் பயிற்சி தேவை?

உடலின் எடையைக் குறைக்க; தசைகளை
மேம்பத்த;  வலிமையுடன் இளமையோடு இருக்க; மாரடைப்பு
வரும் அபாயம் ஏற்படாமல் தடுக்க; சமூகத்தில் இணைந்து பழகி புதிய நண்பர்களை உருவாக்கிக்
கொள்ள; மன அழுத்தம் தரும் காரணிகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதோடு,
மன இறுக்கம் இல்லாமல் இருக்க; நல்ல ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ்க்கையை அனுபவிக்க
; – ஆம் இவ்வளவும் உடல்பயிற்சியால் அடையும் நல்ல பயன்கள்

உடல் பயிற்சி செய்வதை அன்றாடப்
பழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள்!

 

அதிக எடையுள்ளவராக இருந்தாலோ
அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தாலோ டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னர் உடல்பயிற்சியை
ஆரம்பியுங்கள்.

சாப்பிட்ட பிறகு உடல்பயிற்சி
செய்யாதீர்கள்.

சரியான உடை அணிந்து உடல்பயிற்சி
செய்யுங்கள்.

ஜுரமாக இருக்கும் போது உடல்பயிற்சி
செய்யாதீர்கள்.

மிகுந்த வெப்பம் உள்ள நாட்களில்
உடல்பயிற்சி செய்ய வேண்டாம். (
Dehydrateஇனால்
பாதிக்கப்படலாம்)

உடல்பயிற்சி செய்வதற்கு முன்னர்
Warm-up செய்வது அவசியம்.

மெதுவாக முன்னேறுங்கள். ஒருநாள்
விட்டு ஒரு நாளோ அல்லது வாரத்திற்கு மூன்று நாட்களோ உடல்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.

 

வலி இருந்தால் உடல்பயிற்சியை
உடனடியாக நிறுத்தி விடுங்கள்.

உடல்பயிற்சி முடிந்த பின்னர்
சற்று இளைப்பாறுங்கள்.

பின்னர் குளியலில் ரிலாக்ஸாக
இருங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஒரு
விளையாட்டையோ, அல்லது ஓட்டத்தையோ, நீச்சலையோ, சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக ஆக்கிக்
கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் (Healthy Eating)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திக்கிலிருந்தும்
இதைச் சாப்பிட்டு இப்படிச் சாப்பிடு என்று ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும்
ஒரு பெரிய ஜோக்  என்னவெனில் ஹெல்தி ஃபுட் என்பது
சுவையானதாகவும் இருக்காது;பலனையும் தராது என்பது தான்!

ஆகவே, எதையெதைச் சாப்பிடுவது
என்பதை எப்படி நிர்ணயிப்பது?

 

ஒரு சுலபமான வழி – வாரம் ஒரு
முறை உங்கள் உடல் எடையை எடுத்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

புரோட்டீன், விடமின்கள், உடலுக்குத்
தேவையான சத்தான மினரல்கள் ஆகியவற்றை சரியானபடி நீங்கள் எடுத்துக் கொண்டால் அது போதும்.

கர்ப்பிணிகள் மட்டுமே துணை உணவுகளை
சில சமயம் நாட வேண்டி வரும்.

 

கொழுப்பை எப்படிக் குறைப்பது
எனில் அதைப்  பற்றிய உணர்வுடன் எப்போதும் இருத்தல்
அவசியம்.

ஒரு சாதாரண விதி என்னவெனில்
அன்றாட மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு பால் மற்றும் நெய், தயிர் போன்றவையும், மூன்றில்
இன்னொரு பங்கு அசைவமும் இன்னொரு பங்கு சமைத்து உண்ணும் ஏராளமான வகைகளும் எடுத்துக்
கொள்ளலாம் என்பது தான்.

 

தூக்கம் எவ்வளவு தேவை? (Sleep : How Much You
Need)

 

பொதுவான நம்பிக்கை என்னவெனில்
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது தான்.

இரவு நேரத்தில் தூக்கத்தின்
முதல் பகுதி தான் மிகுந்த பயனுடையது. ஆழ்ந்த உறக்கம் என்பது இந்த நேரத்தில் தான் ஏற்படுகிறது.

ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம்
நல்ல முறையில் தூங்கினால் அதுவே ஆரோக்கியமான வாழ்விற்குப் போதும்.

மதிய உணவிற்குப் பின்னர் 30
நிமிட குட்டித் தூக்கம் நல்ல பலனை அளிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

 

அருமையான ஒரு நல்ல வாழ்க்கையை
அமைத்துக் கொள்ள ஏராளமான கேள்விகளுக்கு பதிலை நீங்கள் சொல்லி ஒரு நல்ல திட்டத்தை அந்த
பதில்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

வேலை – உங்களுக்குப் பிடிக்கிறதா?
போர் அடிக்கிறதா?

வீடு – ஆரோக்கியமாக வாழ உதவுகிறதா?

தொழில்நுட்பங்கள் – புதிய தொழில்நுட்பங்கள்
உங்களைப் பயமுறுத்துகிறதா அல்லது அவற்றை வரவேற்று அவற்றுடன் வாழப் பழகுகிறீர்களா?

ஒய்வுநாட்களில் என்ன திட்டம்?
புத்தகம் படிப்பதா, இசை கேட்டு அனுபவிப்பதா? புதிய இடங்களுக்குப் பயணங்களா? அல்லது
டி.வி.தானா?

 

குடும்பத்தினருடன் எப்படி, எவ்வளவு
நேரம் செலவிடுகிறீர்கள்?

இவற்றிற்கான ஒரு நல்ல அடிப்படையை
வகுத்துக் கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும் என்பதில் ஐயமே இல்லை.

வாழ்க்கை திட்டத்தைப் பற்றி
அறிய முன் வந்த தன்னார்வத் தொண்டர்கள், இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது என்பதை
உறுதியாகச் சொல்கின்றனர்.

 

எடுத்துக்காட்டாக ஒரு கேஸை சொல்லலாம்.

ஆடம் என்ற இள வயது வாலிபன் ஒருவன்
வீடியோவில் சூதாட்ட விளையாட்டு ஒன்றுக்கு அடிமையாக இருந்தான். அவனது தந்தை மிகவும்
கவலைப்பட்டு வாழ்க்கைத் திட்டம் பற்றி அறிந்து ஆலோசகரை நாட, அவன் இந்த திட்டத்தின்
யோசனைகளின் படி மாறி நலமுற்றான்.

ஆக இப்படி பிரச்சினைகள் வாழ்க்கையில்
பல விதம்.

அவற்றிற்குத் தீர்வு சொல்லும்
புத்தகம் தான் –
Life Plan.

சுவாரசியமான இந்தப் புத்தகம்
1988இல் முதல் பதிப்பைக் கண்டது.

 

ஆனால் எத்தனை வருடமானாலும் இதில்
சொல்லப்படும் உண்மைகளும் உத்திகளும் நிரந்தரமானவை; பயனளிக்க வல்லவை!

***

 

 

Football Anecdotes (Post No.7343)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 DECEMBER 2019

 Time in London – 19-30,

Post No. 7343

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Football and Religion


In Belfast they still tell you about the football game that took place between the 100 % Catholics and 100% Protestants. A Limey attended that game and when the Catholics made a skilful play he applauded and when the Protestants in their turn scored he again joined in the shouting. At this point an Irishman jabbed the Limey in the back and said,


“My God, Man, haven’t you got any religion at all?”


Xxxx

“Girls” won the match

Coach Dana X Bible of Texas A and M college delivered perhaps the quietest, shortest, most effective pep talk in recent football history. His team had been badly trounced in the first half of one of their big games. The interval between halves was one of silence and gloom in which the coach said nothing. At last, as the team prepared to go out again on the field, he looked them over slowly and deliberately and said,
Well, girls, shall we go?
They won the game.

Xxx

The football game between Notre dame and Yale was in full swing. The score was tied. The spectators were yelling wildly; the players were grimly determined that their side would win.


About the middle of the third quarter time was called at the request of the Yale Center. Walking up to the referee he said,


Look here, Mr Referee, I don’t like to complain but every time we get tangled up in a scrimmage play that big Irish Center bites me. What do you think that I should do about it?


Well, snapped the referee, the only thing I advise is that you play him only on Fridays.

Xxxx subham xxx

கோயபெல்ஸ் யார்? (Post No.7342)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 DECEMBER 2019

 Time in London – 16-41

Post No. 7342

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஹிட்லரின் அமைச்சரவையில் பிரசார மந்திரியாக இருந்த கோயபெல்ஸ், பிரசாரத்துக்காக பொய்களைக் கட்டவிழ் த்துவிட்டவர் . அதனால் இன்றும் அரசியவாதிகள் பொய்

சொன்னால் அவர்களை கோயபெல்ஸ் என்று சொல்லுவது வழக்கமாகிவிட்டது .

இதோ நான் 13 செப்டம்பர் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை :-

written by london swaminathan

Tags – டயரி,சர்ச்சை ,கோயபெல்ஸ்

–subham–

TELUGU HEROINE NAYAKURALU; COCK FIGHT USED TO WIN THE KINGDOM! (Post No.7341)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 DECEMBER 2019

 Time in London – 14-23

Post No. 7341

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Two Tamil kings used elephant garlanding to win the kingdoms. When elephants garlanded the strangers in the crowd, Karikal Choza and Murthi Nayanar became kings according to legends. In Andhra Pradesh a cock fight was used to decide the Ruler.

The story of Telugu heroine Naayakuraalu is celebrated in song and legend. As an infant she was abandoned by her parents and was discovered and cared by others. One farmer bought her and named her Naagammaa. She married a rich man and on his death inherited a vast fortune.  She succeeded in winning the favour of Anuguraja, a Haihaya prince, who ruled over the small principality of Palnad. He had received that as a wedding present. He ruled in the 12th century.the chief had three wives and several sons.

The growing influence of Nayakuralu in the court was resented by the minister Dodda and he resigned his office in favour of his son Brahma. Brahma soon brough about the assassination of the chief.  

Nayakuralus influence continued in the reign of net chief Nalagama and she was practically the ruler the minister Brahma persuaded the chief to partition the country. Mallideva , one of the half brothers of the chief , established his rule at Macherla. Brahma became his minister. Other brothers of the chief also lived with Mallideva.

Nayukarulu did not like the division of the country. She challenged Mallideva and Brahma to a cock fight, the wager being that the defeated party should surrender all territory to the victor and live in the forest for seven years. In the contest Brahma’s cock was killed and he along with his master and his half brother retired to the forests in Nallagonda.

Harassed constantly by the agents of Nayakuralu , their life in exile was miserable. On the expiry of seven years , they returned and demanded the restoration of their territory. But Nayakuralu refused.  In the fight that ensued , Nayakuralu donned the armour and fought  at the head of her army, but was defeated and captured. The battle was a bloody one and all the half brothers of Nalagama perished. Brahma generously restored the whole kingdom to Nalagama.

The battle she fought was known as Palnati Yuddham. Two films were taken based on this battle that happened approximately 1000 years ago. Now there is a statue for Nagamma in Dachepal in in Palnadu area of Guntur District.

Nayakuralu had a talent for intrigue and organisation, and her life of adventure was cast in a heroic mould.

Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Year 1953

Tags- Nayakuralu, Nagamma, Palnadu, Cock fight, Palnati Yudhdham

–subham–