கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு! (Post No.4131)

Written by London Swaminathan

Date: 5 August 2017

Time uploaded in London- 13-14

Post No. 4131

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்கரன் கோவில் கொடுங்கலூர் பகவதி கோவில், மதுரை மாரியம்மன் கோவில் முதலிய நூற்றுக் கணக்கான கோவில்களில் பக்தர்கள் ஒரு விநோத காணிக்கை செலுத்துவதுண்டு. உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் வந்தால் அது குணமாக அல்லது குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்க அந்த உறுப்பின் உருவத்தை வாங்கி கடவுளுக்குப் படைப்பர். பொதுவாக வெள்ளியிலோ பித்தளையிலோ கண், காது, கால், கை உருவங்கள் இருக்கும். இதே போல குழந்தை பிறக்காதவர்கள் ஒரு குழந்தை உருவத்துடன் தொட்டில் வாங்கி மரத்தில் கட்டும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் சுமேரிய நாகரீகத்திலும் இருந்தது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.

 

ஜூலை மாதக்  கடைசியில் (2017) குடும்பத்துடன் ஏதென்ஸ் நகரத்துக்குச் சென்று இருந்தேன். உலகப் புகழ்பெற்ற பார்த்தினான் (Parthenon) கட்டிடம் (அதீனா தேவியின் கோவில்) இருக்கும் குன்றுக்கு கீழே புகழ்பெற்ற ஆக்ரோபோலிஸ் மியூசியம் (Acropolis Museum) உள்ளது. அங்கு அரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மாடிவரையுள்ள முக்கியப் பொருட்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆகையால் மியூசியம் கடைக்குச் சென்று பட அட்டைகளையும் (Picture Cards)  பிரிட்ஜில் (Fridge) ஒட்டுவதற்கான மாக்னெட்/ காந்தங்களையும் வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் நினைவாக அந்த நாட்டின் சின்னம் உள்ள பிரிட்ஜ் காந்தம் (Fridge Magnet) வாங்குவது என் வழக்கம். போட்டோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததால் பட அட்டைகளையும் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவும் நல்லதாகப் போயிற்று.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ நான் தேடிய ஆராய்ச்சி விஷயங்கள் கிடைத்தன. இந்துக்களைப் போலவே அவர்களும் ஒரு தேவதைக்கு செலுத்திய காணிக்கையின் படம் கிடைத்தது. அதில் கல்யாணம் ஆவதற்காக கன்னிப் பெண்கள் (கன்யா ஸ்த்ரீகள்) செலுத்திய நூற்கும் (Spinning Whorls) சுழல்கள் இருந்தன. நிம்ப் (Nymphe) என்னும் தேவிக்கு செலுத்தப்பட்ட காணிக்கை அவை.

 

தமிழர்கள் அணங்கு என்றும் சம்ஸ்கிருதத்தில் நங்கை (அங்கண், சுராங்கனி) என்றும் இளம் தேவதைகளை அழைப்பர். இந்தச் சொல் கிரேக்க மொழியில் நைம்ப், நிம்ப் (Nymphe, Nymph) என்று திரிந்துள்ளது. நீர் நிலைகள், மலைகள், காடுகள், மரங்களில் அணங்கு  இருப்பதாக சங்க இலக்கியங்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் செப்புகின்றன. கிரேக்கர்களும் இப்படி நம்பினர். கல்யாணம் ஆகாத பெண்கள் நம்மூரில் திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கை, வேண்டுதல் செய்வது போல கிரேக்கத்திலும் (Greece) நடந்தது தெரிகிறது.

 

புதிய ஐடியாக்கள் (New Ideas)

 

ஒவ்வொரு நாட்டிற்குச் சென்று வந்த பின்னரும் நான் சில பிஸினஸ் ஐடியாக்(Business Ideas)  களை எழுதி வருகிறேன். இப்போது மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுகிறேன்:

1.ஏதென்ஸில் ஒரு கடையில் கிரேக்க தத்துவ அறிஞர் படங்களுடன் சீட்டுக் கட்டு ( Greek Philosophers Playing Cards) வைத்திருந்தனர். பிரித்துக் காட்டுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், பிதகோரஸ், ஹோமர் என்று பல அறிஞர் படங்களையும் பல பொன் மொழிகளையும் பார்த்தவுடன் அதை இரண்டரை யூரோ கொடுத்து  வாங்கினேன். ஆனால் சாக்ரடீஸ் படத்தை ஜோக்கர் (Joker Card) கார்டில் போட்டது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கிரேக்கர்களுக்கு சாக்ரடீஸ் மீது அவ்வளவு மதிப்பு!!

 

நாமும் இதே போல பல நல்ல விசயங்களுடன் சீட்டுக்கட்டுகள் தயாரிக்கலாமே. கோவில்கள், தலங்கள், அறிஞர்கள், பொன் மொழிகளுடன் சீட்டுக் கட்டுகள் (ஆங்கலத்தில்) தயாரித்தால் வெளி நாட்டினரும் வாங்குவர்.

 

ஐடியா 2

இன்னொரு கடை வாசலில் பொன்மொழிகள் அடங்கிய புக் மார்க்குகள்  (Book Marks) இருந்தன. இத் போல ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தர் முதலியோரின் புக் மார்க் வாங்கி இருக்கிறேன். ஆனால் ஏதென்ஸில் நல்ல தரமான, வலுவான பிளாஸ்டிக் அட்டையில் 12 கிரேக்க அறிஞர்களின் படங்களுடன் அவர்களுடைய பொன்மொழிகள் கிடைத்தன. அதைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தும் தந்திருப்பதால் பல நாட்டினரும் வாங்குவர். நாமும் இப்படி பொன் மொழி அட்டைகளை ‘புக் மார்க்’ ஆக விற்கலாமே!

 

தரம் மிகவும் முக்கியம் இல்லாவிடில் வெளிநாட்டினர் வாங்க மாட்டார்கள். மூன்று புக் மார்க் ஒரு யூரோ வீதம் வாங்கினேன்.

 

ஐடியா 3

நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த ஊரின் முக்கியப் படமுள்ள பிரிட்ஜ் மாக்னெட் (Fridge Magnets) வாங்கி, வீட்டில் பிரிட்ஜில் ஒட்டி வைப்பேன். இது போல பார்த்தினான் படமுள்ள மாக்னெட்டுகளை வாங்கினேன். இது நல்ல பிஸினஸ். வெளி நாட்டு மியூசியங்களில் காபிக் கடைக்கு அருகில் இப்படி கடை வைத்து அதில் பட அட்டைகள், பேனாக்கள், கீ செயின்கள், குழந்தைகளுக்கான டிராயிங் புத்தகங்கள், அறிவூட்டும் நூல்கள் என விற்கிறார்கள். நல்ல வியாபாரம் நடக்கிறது. நாமும் ஒவ்வொரு கோவிலிலும் நல்ல தரமான பொருட்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் நானும் இந்தியாவில் தொல்பொருட் துறை அலுவலத்துக்குச் சென்று கருப்பு வெள்ளைப் (Black And white) படங்களை வாங்கி இருக்கிறேன். அவைகளை எல்லாம் இப்போது பார்த்தால் அழுகையும் சிரிப்பும் வருகிறது. வெளிநாடுகளைவிட மிகவும் நல்ல கலைப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு அவைகளை விற்பனை செய்யும் திறன் இல்லையே என்று அழுகை. இப்படித் தரக் குறைவான படங்களை அவர்கள் விற்றதையும் அதை நான் வாங்கி பொக்கிஷம் போல வைத்திருந்ததையும் நினைத்து ஒரே சிரிப்பு.

 

ஏதென்ஸ் அக்ரோபொலிஸ் (Acropolis Museum in Athens) மியூசியத்தில் ஒரு யூரோவுக்கு இரண்டு (Picture Cards) அட்டைகள் வாங்கினாலும் அவைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்; அப்படி நல்ல தரம்.

 

சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காப்பிக் கடைகளும் இருக்க வேண்டும் அங்கே அந்தந்த ஊருக்கு ஏற்ற படங்களுடன் நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், படங்கள், பிரிட்ஜ் மாக்னெட், ஸ்டிக்கர்களை விற்க வேண்டும்.

 

–subham–

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்! (Post No.4130)

Written  by S NAGARAJAN

 

Date: 5 August 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

 

Post No.4130

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புனித கங்கை

 

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

ஹிந்து சரித்திரம் கண்ட விசித்திரமான மன்னர்களில் ஒருவர் முகம்மது பின் துக்ளக்.

 

ஒரு கிறுக்குத்தனமான ஆசாமி மன்னராக இருந்தால் என்னென்ன நடக்கலாம் என்பதற்கு துக்ளக் ஆட்சி ஒரு உதாரணம்.

தன் தந்தையின் வெற்றியைக் கொண்டாட ஒரு மர மாளிகையை அமைத்தான் துக்ளக். அதன் அஸ்திவாரத்தைப் பற்றி அவன் கவனம் கொள்ளவில்லை. விளைவு, தந்தையும் அவரது சேனா பிரமுகர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அது இடிந்து வீழ்ந்தது.

தந்தைக்கு நல்ல வரவேற்பு!

 

 

அடுத்து வெள்ளி, தங்க நாணயங்களை தாமிர நாணயங்களாக மாற்றினான் துக்ளக். ஹிந்து பொற்கொல்லர்கள் ஒரிஜினலை விட பிரமாதமாக நாணயங்களைத் தாங்களாகவே தயார் செய்யவே தாமிர நாணயங்களை வாபஸ் வாங்கினான். இந்த விஷ பரிட்சையால் பெருமளவு கஜானா காலி ஆனது.

அடுத்தது தலை நகர் மாற்றம். 40 நாட்கள்  700 மைல் தூரம் தன்னுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லியை விட்டு புது தலை நகரான தௌலதாபாத் நோக்கிச் சென்றான் அவன்.

 

 

பலர் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டனர். பலர் வழியிலேயே செத்து மடிந்தனர். இந்த விஷ பரிட்சையும் கூட விபரீதத்தில் தான் முடிந்தது.

 

 

துக்ளக் – பல மொழிகள் கற்றவன்; கணிதத்தில் நிபுணன்; அழகாக எழுதுவான். சூஃபி யோகிகளின் பால் பற்று; கடுமையாக் இஸ்லாமிய விதிகளை அனுசரிப்பவன். 1325இல் தந்தையின் மறைவுக்குப் பின் முழு அரசாட்சிப் பொறுப்பை ஏற்றான்.20-3-1351இல் மறைந்தான்.

 

 

அவன் மறைவு கூட சற்று விசித்திரமானது தான். ஒரு அழுகிய மீனைச் சாப்பிட்டு அதனால் அவன் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது!.

 

இப்படிப்பட்ட துக்ளக் விரும்பி அருந்திய நீர் புனிதமான் கங்கா நீர்

என்றால் அதிசயமாக இல்லை?!

 

மொராக்கோவிலிருந்து இந்தியா வந்த இபுன் பதாதா (1325-1354) என்ற யாத்ரீகர் தனது இந்திய வருகையில் தான் கண்டதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்.

 

அவர் துக்ளக் ஏற்பாடு செய்திருந்த அஞ்சல் சேவையை விரிவாக எடுத்துரைக்கிறார் இப்படி:

 

 

“This post is quicker than the mounted post. It is sometimes used to transport fruits from Khursan which are highly valued in India; they are put on plates and carried with great speed to the Sultan. In the same way they transport the principal criminals, they are each placed in a stretcher and the carriers run carrying the stretcher on their heads.”

 

 

துகளக் விரும்பி அருந்தியது கங்கா நீர்.

அது தௌலதாபாத்திற்கு இதே போலத் தான் கொண்டு வரப்பட்டது.

 

அது பற்றி இபுன் பதாதா குறிப்பிடுவது இப்படி:

 

“The Sultan’s drinking water is brought to him by the same means when he resides at Dawlatabad from the river Kank ( Ganges) to which the Hindus go on a pilgrimage and which is at a distance of forty days’ journey from there.”

கங்கை நீரை மட்டுமே அருந்தி வந்த முகம்மதிய மன்னர்கள் பலர்.

 

அவர்களுள் துக்ளக்கும் ஒருவர்.

மற்றவர்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

HINDU RITUALS IN GREECE (Post No.4129)

Written by London Swaminathan

Date: 4 August 2017

Time uploaded in London- 17-31

Post No. 4129

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
 

When I went to Acropolis Museum in Athens (Greece) in July 2017, I entered the museum shop. Normally I buy only fridge magnets as mementos and stick them to my fridge in London. But the picture post cards in Athens shop were very attractive. So, I bought a few of them and one of them shows a Hindu ritual. I already wrote a research article about the Hindu customs in Sumerian civilization. One of the rituals is offering certain votive objects to get married or to get issues (children) or to get cured of sickness.

People who have problems pray to god with votive offerings either before or after the solution to the problem. South Indian temple Hundis get lot of metal objects in the shape of eye, ear, leg, hand, nose , baby etc. Devotees offer these either to thank the god for solving the problems or to get the problems solved.

 

I found two similarities in the Greek picture:-

  1. Like in Hindu temples, the votive offerings were given to a GODDESS.
  2. The offerings were made with a special request or prayer to solve a specific problem.

The Greek picture post card shows Clay spinning whorls, offered by young women to the sanctuary of Nymph, the protectress of marriage. They are dated around sixth century BCE. This ritual has been there in Greece at least 2500 years ago. Now they are in museum. But Hindu culture is older by thousands of years to Greek culture. And ours is a living culture and you can see such votive offerings even today in Sankarankoil and Bhagavathy temples in Kerala and hundreds of temples around the country.

 

      NEW IDEAS FROM GREECE

NEW IDEAS FROM GREECE: When I came back from New York, San Francisco, Rome, Stockholm and Indian cities, I posted some new ideas for business. In Athens (Greece) I saw playing cards with the famous Greek philosophers. We may also do some playing cards with Indian philosophers or temples or Tourists spots. Foreigners will buy them because it is a memento as well as playing cards. But it must be of good quality. I paid 2-50 euros for the playing cards pack.

 

MORE NEW IDEAS FROM GREECE; I KNOW INDIAN BOOKSHOPS SELL BOOK MARKS WITH QUOTATIONS. BUT I BOUGHT A SET OF BOOK MARKS WITH QUOTATIONS FROM THE GREATEST GREEK WRITERS. WE MUST SELL SOMETHING LIKE THIS IN ALL THE BOOK SHOPS WITH HINDU QUOTES OR TAMIL LITERATURE QUOTES. QUALITY AND ACCURACY ARE MORE IMPORTANT.

SURGICAL INSTRUMENTS FROM GREECE; This picture post card shows the surgical tools and suction cups. Carved on the base of a statue, now lost. Dedicated to the sanctuary of Asklepios , 320 BCE. From Athens museum stall.

 

CHARAKA AND SUSRUTA HAD MORE SURGICAL INSTRUMENTS; WE HAVE THE NAMES OF HUNDREDS OF SURGICAL TOOLS IN THE BOOKS OF CHARAKA AND SUSRUTA IN SANSKRIT. WE MUST SELL PICTURE POST CARDS WITH THOSE INSTRUMENTS

Statue of a young girl, probably depicting the goddess Artemis; Acropolis Museum, Athens, Greece; around 530 BCE. I bought this picture post card last week in Athens.

All Indian Temples must have a book shop cum stall with high quality books and pictures.

Every Indian museum must have a stall with a cafe. Western countries do roaring business buy selling artefacts, picture cards, books etc in such museum stalls. They are of high quality. India can do it.

 

 

BOOK ON SANTORINI ISLANDS, GREECE

   

The house where we stayed in Santorini (Thera) islands had a book on the table which contained some pictures about wine making and archaeological finds.

 

CHRISTIAN MUSLIM ATROCITIES: –

In the past few days I wrote some articles comparing Hindu culture with the Greek culture. I wrote that I will list the atrocities of Christians and Muslims in Athens. But encyclopaedias such as Wikipedia have very elaborate writeups about it. So I will just give you the bullet points

 

How Parthenon, Temple of Goddess was destroyed?

First, Persian invasion caused some damage in the fourth century BCE

After the introduction of Christianity in Greece, they banned all the pagan temples.

One of the kings, who was a Christian fanatic, took the beautiful, valuable statue of Athena made up of gold to  Turkey and destroyed it.

Later Christian kings converted Temple of Athena in to a church; made architectural changes; in other words, defaced it. Gave new names to old Greek gods to show them Christian. Virgin Athena changed into Virgin Mary.

After Ottoman Turkish attack, the Parthenon structure and temple were destroyed.

They converted it into a mosque. The Venetian- Turkish war destroyed this structure with cannon balls. They used it arms depot.

It is a systematic destruction similar to what Muslim invaders did to Hindu temples in India and what Portuguese and Spanish invaders did to Mayan, Aztec, Olemec and Inca civilizations.

Wherever these invaders went there was bloodshed, plundering and destruction.

 

Last but not the least, people like Elgin “stole” the remaining marbles “legally” and now they are in British, Louvre and Metropolitan museums around the world. My Greek tourist guide was furious when she explained about how Elgin took the historical marbles to Britain.

More in Wikipedia.

 

–Subham–

 

 

அதீனா தேவி தோன்றிய கதை (Post No.4128)

Written by London Swaminathan

Date: 4 August 2017

Time uploaded in London- 12-14

Post No. 4128

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

அதீனா என்னும் தேவதை (Goddess Athena) இந்துமதக் கடவுளரான துர்கா சரஸ்வதி, லெட்சுமி ஆகிய மூவரின் பிம்பம் என்று சொல்லலாம். நாம் எப்படி ஒரே சக்தியை மூன்று துறைகள் கொடுத்து மூன்று தேவிகளாக வழிபடுகிறோமோ அதே போல கிரேக்கர்களும் கல்வி, வீரம், வெற்றி ஆகியவற்றுக்கு அதிதேவதையாக அதீனாவைத் தேந்தெடுத்தனர். இந்துமதத்துக்கும் கிரேக்க கலாசாரத்துக்கும் உள்ள தொடர்புகளை ஏற்கனவே சில கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். அதீனாவின் சின்னம் ஆந்தை. பறவைகளில் மிகவும் புத்திசாலி ஆந்தை என்பதால் இந்த தெரிவு. இந்துக்   கடவுளான லெட்சுமிக்கும் உலூக என்றால் வடமொழியில் ஆந்தை. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அந்த பெயர்களுடன் புலவர்களும் அறிஞர்களும் உண்டு (ஓதலாந்தை, பிசிர் ஆந்தை)

 

அதீனா பற்றிய குறிப்புகள் கி.மு.800 முதல் கிடைக்கின்றன. அதாவது வேத காலக் கடவுளருக்கு மிகவும் பின் வந்தவள். வேத காலக் கடவுளரான த்யவ் (Dyaus Pitr) பிதர் என்பவரை கிரேக்கர்கள் ஸூஸ் (Zeus) என்பர். அவருடைய தலையிலிருந்து அதீனா தோன்றியதாக ஒரு கதை உண்டு. அவளுடைய தாயார் மேதிஸ் METIS (ஞானம்). இதுவும் மதி (மூளை, அறிவு) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையதே. வேதகால தேவதையான அதிதி போலவும் இவரை சிறப்பிப்பர். அதாவது எல்லா நல்ல குணங்களுக்கும் அதி தேவதை.

ஏதென்ஸ் நகரத்துக்கு யாரை தேவதையாக நியமிப்பது என்று கருத்து வாக்கெடுப்பு நடந்தது. பொசைடான் (Poseidon)  என்னும் கடல் தேவதைக்கும் அதீனாவுக்கும் நடந்த போட்டியில் பொசைடான் உப்பு நீர்க்கடலைக் காட்டினார். ஆகையால் மக்கள் அவரை ஒதுக்கிவிட்டனர். அதீனா புனித மரமான ஆலிவ் (Olive Tree)  (ஒலிவ) மரக் கிளையைக் காட்டியதால் அவளையே மக்கள் தேர்ந்தெடுத்தனர். அந்த மரக் கிளையே சமாதானத்தின் சின்னம் ஆகும்.

இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை நினைவு கூறுதல் பொருத்தமாகும். உலகில் முதலில் சமாதானம் வேண்டிப் பாடிய பாடல் ரிக் வேதத்தின் கடைசி பாடலாகும்.

 

சூஸ் என்னும் கடவுளுக்கு நிகரான அறிவுடைய ஒரு தேவதை தோன்றப் போகிறாள் என்று ஆரூடம்(prophesy) சொல்லப்பட்டது. அப்படித் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சூஸ் தனது மனைவியான மேதிஸ் (மதி= அறிவு) என்பவரை விழுங்கி விடுகிறார். ஆனால் சூஸுக்கு ஒரு நாள் பொறுக்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. உடனே தச்சர்களுக்கு அதிதேவதையான   (Hephaistos) ஹெபஸ்டோசை அழைத்து தலையைப் பிளக்கச் சொன்னார். அவர் கோடாரியைக் கொண்டு பிளக்கவே அதீனா உதயமானாள்.

 

இது ஒரு அடையாள பூர்வ கதை. இதுபோல வேதத்திலும் குறிப்பாக பிராமண நூல்களிலும் நிறைய சங்கேத மொழிக் கதைகள் உண்டு. இதற்கு அர்த்தம் புரியாத மேலை நாட்டினர் தத்துப் பித்து என்று உளறியுள்ளனர்.

 

 

எங்களுக்குச் சுற்றுலா கைடு (guide) ஆக அந்த பெண்மணி இந்தக் கதையைச் சொல்லி முடித்த பின்னர் இதை சிவன் தலையில் கங்கை புகுந்த கதையுடன் ஒப்பிட்டாள். ஆகாயத்திலிருந்து பாய்ந்த கங்கா தேவியின் வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் அவளைத் தன் தலையில் தாங்கி பின்னே வெளியே விட்டார் என்பது புராணக் கதை. இதற்கு இரண்டு விதப் பொருள் உள்ளது.

ஒன்று கங்கா நதி சிவ பெருமான் உறையும் கயிலை மலைப் பகுதியிலிருந்து தோன்றுவதைக் குறிப்பது.

இரண்டாவது அறிவு/ ஞானம் என்பதைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். அதன் பிரவாஹம் ஒருவரை அகந்தையிலோ, தவறான வழியிலோ செலுத்தி விடக்கூடாது.

 

இந்தக் கருத்துகளை விளக்குவதே அதீனா/ கங்கா  தேவி பிறந்த கதை.

 

கிரேக்க நாட்டு வரலாறு எல்லாம் மிக மிக உருச் சிதவுற்ற வேதகாலக் கதைகள் ஆகும். Hermes ஹெர்மிஸ்= சரமா, த்யௌ பிதர்= சூஸ் , Nereids நெரைட்ஸ் = நீர்த் தேவதைகள் போன்ற நூற்றுக் கணக்கான ஒற்றுமைகள் இருந்தாலும் கதையின் போக்கு முழுவதையும் காண்கையில் நம்முடன் ஒப்பிட இயலாது. அதாவது வேத கால இந்துக்கள் — பாமர மக்கள் — அங்கு குடியேறி இருக்கலாம். அவர்கள் நம் கதையைத் திரித்திருக்கலாம். இப்போதும்கூட தமிழ்நாட்டின் கிரா    மப்புறக் கதைகளிலும், தல புராணக் கதைகளிலும் இந்துமதக் கதைகள் எவ்வளவு திரிபு அடைந்துள்ளன என்பதை ஆரய்வோருக்கு இது தெள்ளிதின் புலப்படும்

 

–subham–

மறைந்திருக்கும் ஆற்றல்- PART 3 (Post No.4126)

Written  by S NAGARAJAN

 

Date: 4 August 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4126

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

யோகிகளின் ஆற்றல்

மறைந்திருக்கும் ஆற்றல் – முதல் பகுதி கட்டுரை எண் 4008 17-6-17இல் வெளியானது

மறைந்திருக்கும் ஆற்றல் – இரண்டாவது பகுதி கட்டுரை எண் 4079 14-7-17இல் வெளியானது

இந்த இரு கட்டுரைகளையும் படித்த பின்னர் இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரையை இப்போது படிக்கலாம்.

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 3

 

ச.நாகராஜன்

 

 

அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ்  (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பல சுவையான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. 168 பக்கங்கள் அடங்கியது இது.

 

 

  கடைசியாக இன்னும் ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

சீனாவில் தான் இது வரை சென்றிராத பகுதிகளில் கானான் பயணம் மேற்கொண்ட போது பிச்சைக்காரன் போலத் தோற்றமளித்த பலரிடமிருந்து அவர் மேல் உலகத்திற்குத் தேவையான ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டாராம். (பக்கம் 34)

 

 

அவரது லக்கேஜ் மொத்தம் 35 பெரிய பெட்டிகள் அடங்கியது.

ஒரு முறை அவர் ஒரு நதியின் வழியே பயணப்பட்டார். ஏழு நாட்கள் அந்தப் பயணம் தொடர்ந்தது. அவரது 34 பெட்டிகள் மட்டும் அவருடன் வந்தன. நம்பர் 9 என்ற பெட்டியை மட்டும் காணோம்.பெட்டியின் மேல் நம்பர்கள் வெள்ளை வர்ணத்தில் பூசப்பட்டிருக்கும். அந்தப் பெட்டி இப்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் கலையில் வல்லவரான ஒரு மகானை அணுகினார் கானான்.

 

பழைய கோட்டை ஒன்றில் காலியாக இருந்த ஒரு அறையில் அந்தப் பெட்டி இருப்பது தெரிய வந்தது. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அந்தக் கோட்டையை விட்டு வெளியே வந்தார் கானான்.

 

 

அடுத்து அதை எப்படிப் பெறுவது?அந்தக் காலத்தில் தந்தி கிடையாது. தபால் என்றால் அங்கு போய்ச் சேர பத்து நாட்கள், பதில் வர இன்னும் ஒரு பத்து நாட்கள் ஆகும். தனி ஒரு நபரை அனுப்பலாம் என்றால் 16 நாட்களுக்குக் குறைந்து ஒருவர் அங்கு போய்த் திரும்ப முடியாது. ஒரே ஒரு விஷயத்தால் மட்டும் தான் பெட்டியைப் பெற முடியும். டெலிபதியை உபயோகிப்பது தான் அது!

 

 

ஆனால் சீன மொழி கானானுக்குத் தெரியாது என்பதால் அந்த வேலையைத் தனக்குத் தெரிந்த மகானிடம் அவர் ஒப்படைத்தார்.

 

 

பத்து நிமிடத்தில் அந்த மகான் ஆழ்ந்த சமாதி நிலைக்குச் சென்றார்.அவரது உடல் குளிர்ந்து போனது. அவர் மூச்சு விடுவதும் நின்றது. அவரது இதயத் துடிப்பு ஸ்டெதாஸ்கோப் வைத்துக் கேட்டாலும் கூடக் கேட்க முடியாத படி ஆனது.அவரது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடியது. இதே நிலையில் சுமார் மூன்று மணி நேரம் அவர் இருந்தார்.

பின்னர் சுய நிலைக்குத் திரும்பினார். அவர் உடலை வளைத்தார். ஏதோ முணுமுணுத்தார்.

 

அவர் சக்தியெல்லாம் இழந்து களைத்துப் போயிருந்தார். அவருக்கு பிராந்தியும் பாலும் கொடுத்து அவரது களைப்பைப் போக்க கானான் உதவினார்.

 

 

முழு சுய உணர்வுக்குத் திரும்பிய மகான்  எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்று கூறினார். இன்னும் பத்து நிமிடங்களில் வராமல் தங்கி விட்ட ஒன்பதாம் நம்பர் பெட்டி கப்பலில் ஏற்றப்பட்டு விடும் என்று உறுதி படக் கூறினார். இன்னும் எட்டு நாட்களுக்குள் அது வந்து விடும் என்றார் அவர். அதே போல எட்டே நாட்களில் அந்தப் பெட்டி வந்து சேர்ந்தது.

 

 

அந்தப் பெட்டியைக் கொண்டு வந்தவரிடம் கானான், அந்தப் பெட்டி பழைய கோட்டையில் காலியான ஒரு அறையில் இருந்ததை அவர் எப்படி அறிந்தார் என்றும் தனக்கு அந்தப் பெட்டி வேண்டும் என்பதை அவர் எப்படி அறிந்தார் என்றும் கேட்டார்.

 

அந்தக் காலத்தில் அந்தி நேரம் ஆன பின்னர் யாராவது ஒருவர் வீட்டிற்கு வந்தால் யார் அது என்று சத்தம் போட்டுக் கேட்பர். வந்தவர் தனது பெயரையும் அடையாளத்தையும் சொன்ன பின்னரே கதவு திறக்கப்படும். பெரும்பாலும் கதவைத் திறக்காமலேயே செய்திகளைக் கேட்டுக் கொண்டு வந்தவரைத் திருப்பி அனுப்பி விடுவது தான் சாதாரணமாக நிலவி வந்த பழக்கம்.

 

 

இந்த சமயம் போலீஸ் கமிஷனரின் கதவு தட்டப்பட்டது. எப்போது கானானின் நண்பராக அமைந்த மகான் சமாதி நிலைக்குப் போனாரோ அதே சமயம் இது நிகழ்ந்தது. கமிஷனர் கானானின் நண்பரான மகானின்  குரலை அவர் வெளியிலிருந்து எப்படிப் பேசுவாரோ அப்படித் தெளிவாகக் கேட்டார்.

 

 

கமிஷனருக்கு எந்த வித சந்தேகமும் எழவில்லை. கானானின் நண்பராக இருந்த மகான் குரல் அவருக்கு நன்கு பரிச்சயமான குரல். அதன்படியே அவர் நடந்து கொண்டார். ஒன்பதாம் நம்பர் பெட்டி உடனே அனுப்பப்பட்டது.

 

மறு நாள் கமிஷனர் அந்த மகானைத் தேடிய போது அவர் அந்த ஊரில் இல்லை. கமிஷனர் கானானுக்கு கடிதம் எழுதி மகான் அங்கு வரவே இல்லை என்பதை அறிந்து அதிசயப்பட்டார்.

 

இப்படிப் பட்ட பல சம்பங்கள் கீழை நாடுகளில சகஜம் என்கிறார் கானான்.

 

சிப்பாய் கலகம் நடந்த நாட்களில் பிரிட்டிஷ் படையினரின் நடமாட்டம் முழுவதும் டெலிபதி மூலமாகவே இடத்திற்கு இடம் அனுப்பப்பட்டதாம். ஆங்கிலேயர் எப்படி தமது படையினரின் நடமாட்டங்களை அனைவரும் அறிகின்றனர் என்று திகைத்துப் போனார்களாம்.

 

வாம சார மற்றும் தக்ஷிணாசார மார்க்கம் மூலமாக மறைந்திருக்கும் ஆற்றல் ஹிந்து வீரர்களை வழி நடத்தியது.

கானானின் புத்தகம் இது போன்ற பல சுவையான தகவல்களைத் தருகிறது.

ஹிந்து யோகிகளின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர்  படிக்க வேண்டிய நூல் இது.

நூலை முழுதுமாகப் படிக்க விரும்பும் அன்பர்கள் இணைய தளத்திலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

 

டவுன்லோட் செய்து கொள்ள வேண்டிய தொடுப்பு இது :

https://archive.org/details/invisibleinfluen015654mbp

 

 

 

***                                                                                                 இந்தக் குறுந் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது

Story of Athena and Ganga Devi! (Post No.4125)

Written by London Swaminathan

Date: 3 August 2017

Time uploaded in London- 21-09

Post No. 4125

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

pictures by london swaminathan.

The story of Athena, the Greek Goddess, is a symbolic one. We have such symbolism in the Vedic literature. Athena personifies wisdom, like Goddess Sarasvati. She was a virgin and is the protective genius of the City nation .

Our tourist guide in Athens compared Ganga’s (Ganges) descending from heaven and Shiva holding her in his head and Ganga emerging from his head

The myth of the birth of Athena illustrates the compromises necessary in the progression of thought. Greek god Zeus and the Titan Metis (cunning intelligence) were her parents. A prophesy had claimed that Metis would bear a goddess equal to Zeus in wisdom, so the god devoured his wife in an attempt to prevent the birth. But one day Zeus had a raging head ache and asked the craftsman god Hephaistos to split his head open with an axe. Hephaistos did so and Athene emerged, fully formed and armed, from her father’s head. True to the prophesy, Athene rivalled Zeus in wisdom and was symbolised by owl. Owl is considered wisest of all the birds.

 

 

This is similar to Lakshmi emerging from ocean after the churning of ocean. Lakshmi also has owl as her vehicle. Owl is derived from the Sanskrit word Uluka. Owl’s name is a suffix for poets and saints in Tamil and Sanskrit (Aanthai in Tamil, Kausika in Sanskrit).

This is to show that wisdom dawns upon in someone. We have such symbolic stories in Vedic literature.

 

When there was a referendum to select the representative Athens , Athene gave them the gift of Olive tree. Olive branch stands for pece. So the Athenians preferred her. This shows that peace is more important than other things for the progress and prosperity of a country. Rig Veda ends with hymn praying for Shanti/ Peace.

 

Or guide explained that Pericles was the father of democracy. But it is wrong. Rig Veda refers to Samiti and Sabha elected by people. English word committee was pronounced as samite at one time. Committee is derived from Samiti. Moreover, Valmiki Ramayana refers to Dasaratha’s consultation with the elders of the city before appointing Rama as his heir.

Greece had three Pre -historic civilizations: Mycenaean, Cycladic and Minoan.

Greek has three different types of columns/ Pillars.

Greeks like blue and white than other colours.

— Subham —

 

 

எதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும் (Post No. 4124)

Written by London Swaminathan
Date: 3 August 2017
Time uploaded in London- 17-44
Post No. 4124
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

கிரேக்க நாட்டின்   தலைநகரான ஏதென்ஸ் நகரத்துக்கு ஜூலை மாதக் கடைசியில் (2017) போய் வந்தேன்— 9000 ஆண்டுப் பழமையுடையது என்று பெருமை பேசும் நகரில் நின்றது மகிழ்ச்சி தந்தது. இந்த நகரம் பற்றிய விஷயங்கள் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எங்களுக்கு வரலாற்றுப் பெருமைகளை விளக்குவதற்கு ஒரு பெண்மணி முன்வந்தார். அவருக்கு 100 யூரோ கொடுத்தோம். அதற்கு முன் ஒவ்வொருவரும் ( 11 பேர்) 30 யூரோ கொடுத்து டிக்கெட்டும் வாங்கினோம்.

எங்களுக்கு கிரேக்க நாட்டின் சரித்திரத்தை விளக்கிய பெண்மணி நாங்கள் இந்தியர்களா என்று கேட்டுவிட்டு சிவபெருமான் முடியில் தாங்கிய கங்காதேவியையும் அதீனா தேவியையும் ஒப்பிட்டார். அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லுகிறேன்.

அதீனா தேவியின் பெயரில் உருவான நகரம் ஏதென்ஸ். இது போல நகரங்களைப் பெண்களாகக் கருதும் வழக்கமும், நகரங்களுக்கு பெண் தெய்வங்களின் பெயரை இடும் வழக்கமும் இந்து வழக்கம். மும்பயி, கல்கத்தா, மதுரை, கன்யாகுமரி முதலிய நூற்றுக் கணக்கான நகரங்கள் பெண் தெய்வங்களின் பெயர்களை உடையன. மதுரையின்   பெண் தெய்வம் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. மணிமேகலை, தெய்வம் அயோத்யா தேவி முதலியன பற்றி மணிமேகலை, ரகுவம்சம் ஆகியன பேசுகிறது. நகரங்களைப் பெண்களாகக் கருதுவதை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணலாம்.

 

அதீனா தேவி ஒரு கன்னிப் பெண்; இதனால் அவளை அதீனா பார்தினோஸ் (Athena Parthenos) என்பர்; நாம் கன்யாகுமரி என்று சொல்லுவதற்கு இணையானது அதீனா பார்த்தினோஸ். கன்னிகள் மூலம் பிறந்த பலர் இந்து மதத்தில் உண்டு. பஞ்ச பாண்டவர்கள், சீதா தேவி, ஆண்டாள், திரவுபதி போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

 

அதீனா தேவி கோவில், ஏதென்ஸில் ஆக்ரோபொலிஸ்(Acropolis) என்னுமிடத்தில் உயர்ந்த குன்றில் உள்ளது. அந்தச் சிலை இருந்த கோவிலை பார்த்தினான் (Parthenon) என்பர். அது கிரேக்க நாட்டின் முக்கியச் சின்னம். அதிலிருந்த அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து அ ழித்தனர். சமீப காலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் எப்படி பாமியன் புத்தர் சிலைகளையும், சிரியாவிலுள்ள பல்மைரா கட்டிடங்களையும் அழித்தனரோ அப்படி வெள்ளையர்களும் முஸ்லீம்களும் திட்டமிட்டு அழித்தனர். பார்த்தினான் கோவிலை சர்ச்சாகவும் மசூதியாவும் மாற்றினர். இந்தக் கதைகள் எல்லாம் விக்கிபீடியாவில் விரிவாக உள்ளது நானும் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் தருவேன்.

பார்த்தினான் கோவிலைக் கட்டிய சிற்பி பிடியாஸ் (Phidias). அதீனாவின் சிலை மிக உயரமான சிலை. தங்கத்தினாலும் தந்தத்தினாலும் ஆனது. அதை குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். பார்த்தினான் கோவிலின் சலவைக் கற்களை வெள்ளையர்கள் கொள்ளை அடித்தனர். பெரிய கொள்ளைக்காரன் வெள்ளைகாரன்தான்- அதாவது பிரிட்டிஷ்காரனான எல்ஜின்.  எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் பல துண்டுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன. மற்ற துண்டுகள் நியூயார்க் ரோம், ஏதென்ஸ் முதலிய மியூசியங்களில் இருக்கின்றன.

 

எங்களுக்கு விளக்க வந்த கைடு, எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் அவை இருப்பதை ஆட்சேபித்தார். அதை பிடியாஸ் மார்பிள் அல்லது பார்த்தினான் மார்பிள் என்றல்லவா சொல்லவேண்டும். கொள்ளை அடித்த எல்ஜின் பெயரில் எப்படி அழைக்கலாம்?என்றார்.

 

பார்த்தினான் கோவில், கி.மு 440 வாக்கில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரும் ஒரு கோவில் இருந்ததாக ஐதீகம்.

 

— subham—

உடனே தூக்கம் வரும் அதிசயம்! (Post No.4123)

Written  by S NAGARAJAN

 

Date: 3 August 2017

 

Time uploaded in London:- 16-28

 

 

Post No.4123

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

நாட்டு நடப்பு – உண்மை நிகழ்ச்சி!

 

உடனே தூக்கம் வரும் அதிசயம்! அறியத் துடித்த ஒரு அமெரிக்கரின் சுய சரித்திரம்!

ச.நாகராஜன்

 

 

அது அந்தக் காலம்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஏதோ ஒரு வருடம், ஏதோ ஒரு நாள்.

 

அப்போதெல்லாம் மதுரையில் உள்ள தெய்வ நெறிக் கழகத்தில் காலையிலும் மாலையிலும் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றுவது எனது வழக்கம்.

தெய்வநெறிக் கழகத்தின் சார்பில் சமயஜோதி என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அத்ற்கான அலுவலகம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய சந்தில் இருந்தது.

ஒரு நாள் அங்கு சென்ற நான் அங்கு ஒரு அமெரிக்கர் உட்கார்ந்திருத்தைப் பார்த்தேன். வயதில் இளைஞர். ஆனால் அரையில் காவித் துணி ஆடை!

 

ஆழ்ந்த யோசனை.

 

பேசுவதாகக் காணோம்.

 

அவரிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு ஆசை.

எங்கிருந்து வருகிறீர்கள்?

 

எப்படி தெய்வநெறிக் கழகத்திற்கு வந்தீர்கள்?

இந்தியா பிடித்திருக்கிறதா?

இந்தியாவைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ஊஹூம்.. எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

அலுத்துப் போன நான், “அமைதியாக இருக்கிறீர்களே! உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் அதை நான் மற்றவர்களுக்கும் சொல்வேனே” என்று சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப யத்தனித்தேன்.

 

அவர் என்னைப் பார்த்து உட்காரச் சொன்னார். ஆங்கிலத்தில்  பேசலானார்.

“நான் யாரிடமும் பேசுவதில்லை. உண்மை தான்! எனது கதையைக் கேட்க விருப்பமா?”

“ஆமாமாம்” என்று பலமாகத் தலையாட்டினேன்.

 

*

அவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த பணக்காரர்களில் ஒருவரின் மகனாம்.

தொலைக்காட்சி வராத அந்தக் காலத்தில் உலகமே சினிமா மயம். சினிமாவிற்கு அடிமை மயம்.

சிறு பையனாக இருந்த அவருக்கு ஏழ்மை, பசி போன்ற எதுவும் தெரியாதாம்.

 

தெரிந்தது இரண்டே இரண்டு.

 

ஒன்று சினிமா பார்ப்பது.

இன்னொன்று ஊர் சுத்துவது. ஜாலியாக டூர் போகப் பிடிக்கும். புதிய இடங்கள்,புதிய மக்களைப் பார்க்கலாம்…. நன்கு செலவழிக்க முடியும். காசுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் இந்த சினிமா பார்ப்பது ஒரு போதைப் பழக்கமாக மாறி இரவு பகல் அதில் கழிய ஆரம்பித்து பல பக்க விளைவுகள் ஏற்படலாயின.

 

 

உறக்கம் போயிற்று. சிந்திக்கும் ஆற்றல் போயிற்று. படிப்பதிலும் ஆர்வம் போயிற்று.

யாராலும் திருத்த முடியாத கேஸ்!

 

மருத்துவம் போன்ற எதனாலும் திருத்த முடியாத கேஸ்!

தந்தை நொந்து போனார்; வருத்தப்பட்டார். என்ன செய்வது?

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

 

 

“சினிமா பார்ப்பதை நிறுத்த உனக்கு ஒரு வழி இருக்கிறது. ஊர் ஊராகச் சுற்றிப் பாரேன். உன்னை விட மாறுபட்ட மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்கள் வாழ்க்கை முறையைப் பாரேன்” என்று யோசனை கூறினார் தந்தை.

“டூர் போ” என்பதைப் பிடித்துக் கொண்டான் பையன்.

உலக வரைபடத்தில் (அவனது நல்ல காலமாக) தேர்ந்தடுத்த இடம் – இந்தியா!

 

இந்தியாவில் அவனுக்குப் பணம் தரும் ஏற்பாடுகளைத் தந்தை செய்து முடித்தார்.கேட்கும் போது பணம் வரும். எங்கும் போகலாம்.

காசியில் கங்கை நதிக் கரையோரம் போன பையனுக்கு எதிலும் ஆச்சரியம்; எங்கும் ஆச்சரியம்.

ஊர் உராகச் சுற்றியதால் சினிமா நினைவே வரவில்லை.

ஒரு நாள் ஒரு கிராமத்தில் வயக்காட்டின் வழியே அவன் சென்று கொண்டிருந்த போது ஆனந்தமான ஜிலுஜிலு காற்று. அருகே ஒரு தென்னந்தோப்பு.

 

 

அதில் ஒரு ஏழைக் குடியானவன் மண்கலத்தில் மனைவி கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மனைவிக்கு விடை கொடுத்து விட்டு ஒரு துண்டை உதறி தென்னை மரத்தின் அடியில் போட்டுப் படுத்தான்.

ஒரே ஒரு கணம்; ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் அந்தக் குடியானவன்.

 

 

இதைப் பார்த்த நம் அமெரிக்க இளைஞனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

எப்படி ஒரு கணத்தில் தூக்கம் வரும்.

 

 

தான் நல்லபடியாகத் தூங்கிப் பல வருடங்கள் ஆயிற்றே. கஷ்டப்பட்டு உடல் அயர்ந்தாலும் உறக்கம் வராதே!

அங்கேயே தென்னை மரத்தின் அருகில் உட்கார்ந்த இளைஞன் அந்தக் குடியானவன் எழுந்தவுடன் ஆவலுடன் அவனை விசாரித்த கேள்வி: “எப்படி இவ்வளவு சீக்கிரம் உ’றங்க முடிகிறது?”

 

 

மொழிபெயர்ப்பாளர் மூலம் அவனுக்கு கிடைத்த பதில்” இதில் என்ன ஆச்சரியம். எங்கள் வாழ்க்கை முறை எளிது. எங்கள் கிராமத்தில் ஏன் எங்கள் தேசத்தில் நூற்றுக்கு நூறு பேரும் படுத்தவுடன் உறங்கி விடுவோம்.இது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை. அன்றாடம் நடக்கும் சாதாரண விஷயம் இது!”

அமெரிக்க இளைஞனுக்கு அந்தச் சாதாரண வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கின.

 

 

எளிய வாழ்க்கை முறை!  அது என்ன எளிய வாழ்க்கை முறை? இந்திய வாழ்க்கை முறை!

 

அதை ஆராயப் புகுந்தான் அந்த இளைஞன். நேர்மையும் எளிமையும் இணைந்த வாழ்க்கை முறை வாழ்வதற்கு இனிதானது என்பதை அறிந்தான்.

 

விளைவு: இன்று நான் கண்ட இ:ளைஞனாக ஆகி இருக்கிறான்!

ஹிந்து வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. கல்மிஷமற்றது. ஆரவாரமற்றது. மிகவும் நேர்மையானது.

வேலையைக் கவனி; பலனைப் பற்றி அதிகமாக யோசிக்காதே

எல்லாம் வரும்; தேவையானது தேவைப்படும் நேரத்தில் தானாக வரும்.

 

 

வழக்கமாக அடிக்கடிப் பணம் கேட்கும் தன் பையன் பணமே கேட்காததைப் பற்றி பதறிப் போனார் தந்தை.

‘உடனே வரவா’ என்று தந்தி அடித்தார்.

“வேண்டாம்” என்ற மகன், “இங்கு புதிய பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பணமே வேண்டாம். மாறியவனாக வருகிறேன்” என்று பதில் தந்தி அடித்தான்.

*

 

“அந்த இளைஞன் தான் நான்”

தன் கதையை முடித்தார் அமெரிக்கர்.

நேரம் ஓடியிருந்தது. நான் வியந்து போனேன்.

எந்த ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு வாழும் சாமானிய மக்கள் அதிக ஆரவாரமின்றி அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து வருவதை நேரில் கண்டிருக்கிறேன் நான் – சத்திய சாயி சேவா தளப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது!

 

 

ஹிந்து வாழ்க்கை முறையின் அடிப்படை எளிமை; எளிமை; எளிமை! நேர்மை, நேர்மை, நேர்மை!

சிறு நகரங்களிலும் கூடப் பெண்கள் மாலையில் கோவிலுக்குச் செல்வது விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், பஜனைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் ஆகியவற்றைச் சொல்வது என்றிருந்தனர்.

*

ஆனால் இன்றோ.. மாறி விட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் முதலில் அடிப்பட்டிருப்பது – எளிமை தான்!

கோவில்களில் கூட ஒரு வணிக முறையிலான பரபரப்பு!

எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும் எப்போதும் ஆசை!

இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் அரசியல்வாதிகள்!

 

 

கிராமம் தோறும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மொபைலும் மோட்டார் சைக்கிளும் காலத்தையும் தூரத்தையும் சுருக்கி விட்டன. அது போலவே அவர்கள் மனத்தையும் சுருக்கி விட்டன. விசாலமான மனம் எங்கே போனது?

 

 

கையில் சிறிது பணம் சம்பாதிக்கும் தகுதி வந்தவுடன் பெண்களின் “தோரணையே’ மாறி உறவுகள் அடிபடும் நிலை.

எல்லா ஜாதிகளிலும் தான்! எல்லா நகரங்களிலும் தான்!

பண்பாட்டின் அடிப்படை உருவான பெண்களே இப்படி என்றால் ஆண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

*

 

 

அமெரிக்க இளைஞனைக் கண்டு ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. பெங்களூரில் சி.வி.ராமன் நகரில் பள்ளியிலிருந்து வரும் பேரக் குழந்தையை அழைத்து வரும் கால கட்டம். ஒரு பதினைந்து நிமிடங்கள் பஸ்ஸுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

நான் நிற்கும் இடத்திற்கு எதிரில் ஒரு அழகிய இளம் பெண். 25 வயது இருக்கும். ஜீன்ஸ் பேண்ட். ஸ்லீவ்லெஸ் ஷர்ட். வாயில் ஒரு சிகரட். சுழல் சுழலாக டிசைன் டிசைனாக புகையை ஊதி வானத்தில் விடுவதில் அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆனந்தம். நான் அதிர்ந்து போனேன்.

 

எனது பார்வையை அலட்சியமாக எதிர் நோக்கிய பெண் இன்னொரு சிகரட்டை பற்ற வைத்தாள்.

 

நாளடைவில் எனக்கு இந்தக் காட்சி பழக்கமானது. அந்தப் பெண்ணுக்காக பிராத்தனை தான் என்னால் செய்ய முடிந்தது. அருகில் அவளது ஆண் நண்பர்கள் நாலைந்து பேர் ஆளுக்கு ஒரு சிகரட் கொடுத்து உதவுவார்கள். நல்ல உதவி!

 

 

இது சாதாரணம் என்று சொன்ன எனது அண்டை வீட்டார் பெங்களூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் எப்போது போனாலும் ஏராளமான பெண்கள் புகை பிடிப்பதைக் காணலாம் என்றனர்.

காலம் மாறுகிறது.

 

எது முன்னேற்றம்! உலகளவில் சுருங்கியதோடு மனதளவிலும் சுருங்கி உடல் அளவிலும் சுருங்கி ஈசல் போல மின்மினி போலச் செத்தொழிவதா!

 

அல்லது அமெரிக்க இளைஞன் பார்த்த நேர்மையாகவும் எளிமையாகவும் வாழும் குடியானவன் போல வாழ்ந்து மகிழ்வதா?

 

*

‘வாழ்க்கை முறை காலத்திற்குக் காலம் மாறும், சார்!’ என்பர் சிலர்.

சரி தான்!

 

வேக யுகம். பரபரப்பான வாழ்வு. எல்லாமே அர்ஜெண்ட், வெரி அர்ஜெண்ட், வெரி வெரி அர்ஜேண்ட் தான்.

ஆர்டினரியே இன்று கிடையாது.

 

இன்று சினிமாவுடன் தொலைக்காட்சி சீரியல்கள் வேறு.

ஒரே நாளில் பரபரப்பான சீன்களாக, கடத்தல், கற்பழிப்பு, கொலை,கொள்ளை, விஷம் வைத்தல் இத்யாதி காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்புகின்றன. அவற்றைக் கண்டு கண்டு கண்டு…..

 

வாழ்க்கை முறை மாறி வரும் சூழ்நிலையில் அந்த அமெரிக்க இளைஞர் போல நாமும் “உறக்கம் எப்படி உடனே வருகிறது” என்ற அதிசயத்தைக் கேட்டு அதைக் கற்க வேண்டிய நாள் விரைவில் நெருங்கி வருமோ?!

—- Subham —-

Parthenon of Athens and its Hindu Links! (Post No.4122)

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 21-39
Post No. 4122
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

Parthenon was the temple of Goddess Athena in the capital city Athens in Greece.

I went to Athens on 27th of July and spent almost a full  day visiting Acropolis, Parthenon and the Acropolis museum. An approved tourist guide approached us ( a group of 11 people0and explained everything in two hours for the price of 100 Euros. This is in addition to the ticket price of 30 Euros per head. As a history student, first I objected to hiring her, the tourist guide. But after listening to her, I said I was happy. she gave the whole history of Greece in two hours. Above all, looking at us she asked whether we were from India. We said we were of Indian origin, but at the moment coming from London, Sydney and New Zealand. The reason she asked us about our origin was that she compared the Goddess River Ganges (ganga devi) with the Goddess Athena. The comparison does not stop there. I will explain it one by one in my article today.

 

Athens was named after the goddess Athena Parthinos. Naming a city after a goddess is typical Hindu custom. We have the famous Mumbai, Kolkata, Madurai, Kanyakumari and hundreds of towns in India named after Hindu goddesses. Athena Parthenos means Virgin Goddess, i.e. Kanya Kumari.

Raghuvamsa of Kalidasa, Ramayana of Valmiki and Silappadikaram and Manimegalai , the Tamil epics – all these talk about the goddesses of the towns such Lanka Devi, Mathura Devi, Manimeghala, goddess of Ayodhya etc.

The tourist guide beautifully explained how the Christians and Muslims systematically destroyed the building Parthenon and the wonderful Athena statue inside the Parthenon temple. They converted the building as a church and then a mosque and then arms depot. at one time they torpedoed the statue like Muslim terrorists who bombed the tallest Buddha staue in the Bhamiyan cave of Afghanistan. The Greek tourist guide angrily accused the British for plundering the marbles in the Parthenon temple and placed them in the British Museum in London as Elgin marbles. She blamed that Elgin stole them and why did they call Elgin marbles. She rightly told that it should be called Parthennon marbles or Phydias marbles and should be returned to Greece. Immediately I remembered the British looting of Kohinoor and the Victoria looting Sapphire of Madurai Goddess Meenakshi.

Now let us look at the structure of Parthenon:

 

Parthenon was the temple of Athena Parthinos (the Virgin). It was built on top of Acropolis in Athens. Phydia,s the sculpto,r supervised it and the architects Callicractes and Ictinus built it. It had a beautiful statue of Goddess Athena, made up of gold and ivory. It was a tall statue. The rectangular building is the best specimen of Doric style. It has 8 pillars or columns on one side and 13 columns lengthwise. It is called golden ratio.

The tourist guide added some information which I did not find in the encyclopaedias. Proportionately the Parthenon structure is similarto A 4 size paper. So it is a perfect size. Since it is not on a flat surface the lines drawn from the columns will meet at five kilometres above the Parthenon and it will form a pyramid.

It was built between 447 and 438 BCE. But people believe that there was another building before that.

 

Parthinogensis means birth without a male’s participation. That is virgin birth. We have Draupadi, Sita, Andal, Five Pandava brothers and several others in this category.

I will compare the birth of Athena and the Ganga in the second part. The story of birth of Athena is a symbolic story like the symbolism we find in the Rig Veda and the Brahmanas. It symbolises the dawn of wisdom. I will also explain how Christians and Muslims destroyed the temple. It is also a repeat of what they did in India and Sri Lanka. The Muslim terrorists who destroyed Bhamiyan Buddha and Syrian Palmyra just imitated the Christians and Muslims of Europe. They were the roll models for these terrorists. The full history of destruction is in Wikipedia and other encyclopaedias. I will just tell you what the tourist guide told us.

 

–to be continued………………….

 

 

 

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–