பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)
பர்மா நாட்டின் தற்போதைய பெயர் மியன்மார்.;லட்சக் கணக்கான தமிழர்கள் வசித்த, வசிக்கும் நாடு.தமிழர்களின் பழைய கல்வெட்டும் வணிகர் தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து கொண்டு வந்த தேக்கு மரம் இன்று செட்டி நாட்டில் வீடுகளை அலங்கரிக்கிறது. பர்மாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் காலனிகள் அமைத்த இடங்களில் அங்கிருந்து கொண்டுவந்த கைப்பிடி மண்ணை வைத்து எழுப்பிய தமிழ்நாட்டுக் கோவில்களில் இன்றும் பர்மாவில் கொண்டாடியது போலவே விழாக்களை மக்கள் நடத்துகின்றனர். மணிப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோரே என்னும் இடத்திலும் கோயில் கட்டி இன்றும் வழிபடுகின்றனர்..
பர்மாவில் ஆங்கிலக் கதைகளிலும் கூட தமிழ்ச் சொற்களான பந்தல்,கோயில், செட்டியார் என்பன அப்படியே மொழி பெயர்க்காமல் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பர்மா என்பதே பிரம்ம தேசத்தின் திரிபுச் சொல் என்பதும் இந்து மத தாக்கத்தைக் காட்டி நிற்கிறது . பாமர் என்ற இன மக்களால் அந்தப் பெயர் உண்டாகியது என்று வாதிடும் மக்களுக்கும் அந்தச் சொல்லின் தோற்றம் தெரியவில்லை. பர்மாவைப் பற்றிய ஆங்கிலப் புஸ்தகங்கள் இந்துமதத்தை பிராஹ்மிணிகல் Brahmanical Religion மதம் என்றே குறிப்பிடுகின்றன. இதற்கு மூ ன்றே பொருள் தான் உண்டு. பிரம்மன் என்பவரை வழிபடும் மதம் ; பிரம்மன் என்பது உபநிஷத்துகளில் கடவுள் என்று பொருள்படும் ; இரண்டாவது பொருள், மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா என்னும் கடவுளை வழிபடுவோர் நிறைந்த இடம்; மூன்றாவது அர்த்தம், பிராமண குருக்கள், பட்டர்கள் வந்து பூஜைகளைத் துவக்கிய நாடு. இந்த மூன்றுக்கும் அங்கே சான்றுகள் உள
பிரம்மாவுக்கு பல வண்ணங்களில் தபால் தலைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்ட லாவோஸ் Laos என்னும் நாடும் இதை ஒட்டி இருக்கிறது. அதன் பெயரே லவன் என்ற ராம பிரானின் மகன் பெயர். பர்மா கல்வெட்டுகள் தங்கம் , வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி மன்னருக்கு பிராமணர்கள் பட்டாபிஷேகம் செய்த செய்தி ஒரு கல்வெட்டிலும், அந்த மன்னர்கள் ராமனின் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் கல்வெட்டுகளும் பர்மாவில் கிடைத்துள்ளன. எல்லா வற்றிற்கும் மேலாக பக்கத்து நாடான தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயரே அயோத்யா தான். அதை அயுத்தியா என்று எழுதுவார்கள் .
பர்மாவில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வேலுவதி மற்றும் பல தமிழ் மன்னர்கள் பெயர்கள் உள்ளன ; வர்மன் என்று முடியும் பல்லவர் போன்ற மூன்று மன்னர்கள் உள்ளனர். இவர்கள் யார் என்பது பர்மியர்களுக்கே தெரியாது பொது ஆண்டு (கி.பி. 439 முதல் 200 ஆண்டுகளுக்கு அங்கு மொக்கன், திட்டம்/தித்தன் முதலிய 5 தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அசோகர் காலத்தில் சோனா, உத்தரா என்ற இருவர் புத்த மதத்தைப் பரப்ப பர்மா சென்றதை இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். சம்ஸ்க்ருத நூல்களில் பர்மாவை சொர்ண பூமி / தங்க நாடு என்றே அழைக்கின்றனர் ;அவைகளை தனி வரலாற்றுக் கட்டுரைகளில் காண்போம். இப்போது வெற்றிலை துப்பிய எச்சில், பன்றிக் காலின் கரி முதலிய சுவையான வரலாறுகளை மட்டும் காண்போம் .
xxxx
தூ— என்று துப்பியதால் மன்னர் பதவி போச்சு !
கியாசுவா 1234-1250 King Kyaswaa
கியாஸ்வா ஒரு திறமையான அரசர். 1249ல் அவர் வெளியிட்ட கல்வெட்டு நீண்ட வாசகமுள்ள கல்வெட்டு. அதில் என்னன்ன குற்றங்களுக்கு என்னன்ன தண்டனைகள் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தர்மராஜா என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.அவர் புத்த மத நூல்களான த்ரி பிடகா (மூன்று பெட்டி) வை ஒன்பது முறை படித்தவர். 57ஆவது வயதில் கத்திச் சண்டை போட்டு விளையாடுகையில் காயம் ஏற்பட்டு செத்துப் போனார் .
xxxx
உசனா 1250-1256 Uzanaa
இவர் கியாஸ் வா வின் மகன் ; வேட்டை ஆடுவதிலும் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதிலும் பொழுதைச் செலவிட்டார் ; 38 வயதில் யானையால் மிதிபட்டு உயிரைவிட்டார்.
உசனாவுக்கு இரண்டு மகன்கள் ; முறையான மஹாராணி மூலம் பிறந்தவர் திங்கத்து ; காமக்கிழத்தி மூலம் பிறந்தவர் நராதிபதி .அப்போது முதன் மந்திரியாக இருந்தவர் யஜாதிங்கியான் Yazaathinkyaan. ஒரு முறை அவர் நடந்து செல்லுகையில் பின்னால் திங்கத்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு மந்திரி முறையான மரியாதை செலுத்தவில்லை என்று கோபம் பொங்கியது. பர்மா மக்கள், நம்மூர் தஞ்சாவூர்க்காரர்கள் போல வெற்றிலை போடும் பழக்கம் உடையவர்கள் வாயில் இருந்த வெற்றிலை எச்சிலை தூ என்று முதமந்திரி மீது துப்பினார். மன்னர் மகன் ஆயிற்றே ; ஆகையால் முதல் மந்திரி வாய் திறக்காமல் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் போட்டுக்கொண்ட துணி மணிகளை துவைத்து அலசாமல் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்தார் . யானையைப் போல நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருந்தார் . மன்னர் உசனா இறந்த செய்தி வந்தது இதுதான் தருணம் என்று கருதிய முதலமைச்சர் பெரியோர்கள், ஊர் மக்களின் பிரதிநிதிகள், புத்த பிட்சுக்கள் கூட்டத்தைக் கூட்டி, பெட்டிக்குள் வைத்திருந்த எச்சில் கறை பட்ட சட்டையைக் காட்டி அதைச் செய்த திங்கத்து மன்னர் பதவிக்கு அருகதையற்றவர் என்று அறிவித்தார். அனவைவரும் அதை ஆமோதித்தனர் .காமக்கிழத்தியின் மகனான நராதிபதி மன்னன் பதவியில் அமர்த்தப்பட்டார் . அவரோ சரியான சாப்பாட்டு ராமன்; பெருந்தீனி;தினமும் 300 வகை கறிகளை சாப்பிடுகிறேன்; எனக்கு 3000 அந்தப்புர அழகிகள் இருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார் . அவருக்கு மக்கள் வைத்த பெயர் வேறு ; அவர்கள் சூட்டிய பெயர் தரூப் யி. அதாவது துருக்கர்களைக் கண்டு பயந்தோடியவன் . அவர்கள் துருக்கர் என்பது சீனாவிலிருந்து படை எடுத்த மங்கோலியர்கள் ஆவர் .
அந்தக் கதையைத் தனியாகக் காண்போம் .
—–to be continued
Tags- பர்மா வரலாறு , மியன்மார் சுவையான சம்பவங்கள், வெற்றிலை எச்சில், ராஜா பதவி , போச்சு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7
ச.நாகராஜன்
ஶ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர் அருளிய நூல் ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ
இதில் 100 ஸ்லோகங்கள் உள்ளன.
இந்த நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 41 ஸ்லோகம் முடிய ஆனந்த லஹரீ என்று கூறப்படுகிறது.
அடுத்து 42 முதல் 100 ஸ்லோகம் முடிய சௌந்தர்ய லஹரீ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நூலில் ஏராளமான சிறப்புகள் உண்டு,
முதலில் இது ஒரு மந்திர சாஸ்திர நூலாகும்.
மந்திரம், தந்திரம், யந்திரம் அடங்கியுள்ள இந்த நூல் ஶ்ரீ வித்யா உபாசகர்களால் பெரிதும் மதிக்கப்படும் நூலாகும்.
ஏராளமான பிரயோக முறைகள் இதில் இருப்பதால் இதை குரு மூலமாகக் கற்பதே சிறந்தது.
தேவியின் பல நாமங்களை சங்கரர் அழகுற இதில் அமைத்துள்ளார்.
ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு சக்தி உண்டு என்பதால் நூல் முழுவதையும் பாராயணம் செய்வோர் தேவியின் அருளுக்குப் பாத்திரமாகி அபாரமான சக்தியைப் பெறுவர்.
அது மட்டுமல்ல ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறலாம். எந்த ஸ்லோகத்தை என்ன பலனுக்காகப் பெற, எப்படி நியமத்துடனும் நிவேதனத்துடனும் செய்ய வேண்டும் என்பதற்கான நியதிகள் உண்டு.
சிவ சக்த்யோ என்று முதல் ஸ்லோகத்தில் ஆரம்பித்து தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் என்று நூல் முடிகிறது.
இகலோகத்தில் சகல சுகமும் பெற 22ஆம் ஸ்லோகத்தைத் துதிக்கலாம்.
பவானி என்று ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகம் பவானி என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அம்பாள் பக்தனுக்கு ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுவதாக உறுதி கூறுகிறது.
“ஹே, பவானி! உன் அடிமையான் என்னை நீ கருணையுடன் கூடிய உனது கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று துதி செய்ய விரும்பி ஒருவன், “பவானி, நீ” என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அவனுக்கு விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்களாரத்தி செய்யப்பட்ட திருவடிகளுடன் கூடியதாக உன் ஸாயுஜ்ய பதவியையே நீ அளித்து விடுகிறாய்”.
பத்தாம் ஸ்லோகமான ஸுதாதாராஸாரை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் துதித்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளின் அருள் வாக்கு,
செல்வம் செழிக்கக் கூற வேண்டிய ஸ்லோகம் ஸ்மரம் யோநிம் என்று ஆரம்பிக்கும் 33வது ஸ்லோகமாகும்.
ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரியமித மாதௌ தவ மநோ:
நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா: |
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்ஹ்தாக்ஷ வலயா:
சிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி ஸதை: ||
இதன் பொருள்:
“ஓ, பராசக்தியே! புண்ணியவான்களான சில யோகிகள் தமது கையில் தாமரை மணிமாலையைத் தரித்து முறையே காம, யோநி, லக்ஷ்மீ பீஜாக்ஷரங்களான க்லீம், ஹ்ரீம், ஶ்ரீம் என்னு பீஜாக்ஷரங்களையும் சேர்த்து ‘ஸௌபாக்ய பஞ்சதசீ’ என்னும் இந்த மந்திரத்தை திரிகோணாகாரமாகிய சிதக்நியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னைத் திருப்தி செய்விக்கிறார்கள்.”
ஸௌபாக்ய பஞ்சதசீ என்னும் அபூர்வமான மந்திரம் இந்த ஸ்லோகத்தில் சங்கேதமாகக் குறிப்பிடப்படுகிறது.
சௌபாக்யம் அருளும் இந்த ஸ்லோகம் அபூர்வமான ஸ்லோகங்களுள் ஒன்று.
இதைக் கையில் பணத்தை வைத்துக் கொண்டு சொன்னால் அது போல பத்து மடங்காக நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு என்ன பலன் என்பதை லிப்கோ (தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி) வெளியீட்டில் காணலாம்.
ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடாக அண்ணா அவர்களின் சௌந்தர்ய லஹரீ விரிவுரை மிக நிச்சயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.
அம்பாளின் அருளுக்கு உடனே பாத்திரமாக விரும்புவோர் அணுக வேண்டிய நூல் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரீ.
இதன் பெருமையை யாராலும் முற்றிலுமாக உரைக்க முடியாது!
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 17
79.வீரநாராயண கோவில், பெலவாடி The Veera Narayana temple, / Viranarayana temple of Belavadi
சிக்மகளூர் நகரிலிருந்து 25 கி.மீ.
ஹொய்சாளர் தலைநகரான ஹளபீடுவிலிருந்து 10 கி.மீ.
இங்குள்ள வீரநாராயணர் கோவில், ஹொய்சாளர் கட்டிடக் கலையை அப்படியே பாதுகாத்துவைத்துருக்கிறது. மூன்று கர்ப்பக்கிரகங்களை மிகப்பெரிய ரங்க மண்டபம் இணைக்கிறது . வேறு எங்கும் இவ்வளவு பெரிய மண்டபம் கிடையாது .வீரநாராயண பெருமாள் எனப்படும் விஷ்ணு, யோக நரசிம்மர், கோபாலன் ஆகிய மூவர் சந்நிதிகள் முக்கியமானவை 800 ஆண்டு வரலாறு உடைய இந்தக் கோவிலில் கூரை மீது செதுக்கப்பட்டுள்ள கிருஷ்ண லீலைகளும் வேறு எங்கும் காண இயலாத ஒப்பற்ற வடிவங்களாக உள்ளன, பகாசுரனை பீமன் வதைத்த இடம் இதுதான் என்பது மக்களின் நம்பிக்கை .
Xxxxx
80. அங்காடி கோவில் Durga or Vasantha Parameshwari Temple /Vasanthika Temple, Angadi
முடிகரே என்னும் இடத்திலிருந்து 18 கிமீ. ஹொய்சாளர்களின் மூன்று பாழடைந்த கேசவ, வீரபத்ர, மல்லிகார்ஜுன கோவில்கள் இருக்கின்றன. அங்காடி என்னும் ஊர்ப்பெயர் சந்தை, மார்க்கெட் என்று பொருள்படும். சங்க இலக்கியத்தில் மாத்திரை நகர நாள் அங்காடி, அல்லங்காடி பற்றிப் படிக்கலாம் . சாலை என்பவன் புலியைக் கொன்ற இடமும் இதுதான் (ஓய் +சால ). சசகபுரம் என்றும் பெயர்.. இங்குள்ள வஸந்திக ஹொய்சாள கோவிலில் இன்றும் துர்க்கையை தரிசிக்கலாம்.இங்குள்ள கருங்கல் தூண்கள் மிகவும் அழகானவை.
Xxxxx
ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!
81.ஹாஸனாம்பா கோவில் Hasanamba temple , Hassan,
ஹாசனாம்பா என்ற பெயரில் சக்தி தேவி வணங்கப்படுகிறாள் . தீபாவளி காலத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் கோவிலுக்குள் புற்று வடிவத்தில் இறைவன் உளார் .800 ஆம்தட்டுகளுக்கும் மேல் பழமை உடையது .ஒரே வாரம் மட்டும் கோவில் திறந்து இருப்பதால் அப்போ து பல்லாயிரக் கணக்கனமாக்கல் விஜயம் செய்கிறார்கள். கோவில் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் நந்தா தீபம் மாட்டும் எரிந்து கொண்டிருக்கும் .
இங்கு ஒரு வினோதம் என்னவென்றால், ஒன்பது தலையுள்ள ராவணன் வீணை வசிப்பதாகும் ; மற்ற இடங்களில் நாம் பத்து தலை ராவணனைக் காண்கிறோம் . சித்தேஸ்வர சுவாமியும் சிவன் ரூபத்தில் காட்சி தருகிறார்.
மும்பை , கோல்கத்தா முதலிய ஊர்களுக்கு அந்தந்த ஊர் சக்தி தேவியே பெயர் கொடுத்தது போல இந்த ஹாஸன் நகருக்கும் தேவி ஹானாம்பாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது ..
Xxxxx
82.ஹளபீடு 35,000 சிற்பங்கள்
ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!
ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.ஆகா உலகியேயே பணக்கார நறு இந்தியாதான் என்பதற்கு நம் சிலைகளில் உள்ள நகைகளைப் பார்த்தால் போதும்.
1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து.
2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.
3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!
4..துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.
5.ஹளபீடு என்றால் பழைய வீடு /தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது
150 அற்புதக் கோவில்கள்
. 6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்
7. இந்த ஊர், பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
8. .முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)
9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.
என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?
எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;
எல்லா வகை தெய்வங்கள்
பால கிருஷ்ணனின் லீலைகள்
கர்ண– அர்ஜுனன் யுத்தம்
கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்
கஜேந்திர மோட்சம்
சிவ தாண்டவம்
சிவனின் ரிஷப வாஹன கோலம்
ராவணன் தூக்கும் கயிலை மலை
ராமாயணக் காட்சிகள்
சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 35,000 சிற்பங்கள்
மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.
‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!!
11. காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது
To be continued……………………………………
Tags- ஒரே வாரம், ஹளபீடு, அங்காடி, பெலவாடி, ஹொய்சாளர், ஹாசனாம்பா,
1.காவிரி நதியில் உள்ள பழைய அணை எது ? அதை யார் கட்டியது ?
XXXXXX
2.காவிரி நதியின் நீளம் என்ன ? அதன் மறு பெயர் என்ன ?
XXXX
3.காவிரி நாதியின் பெயருக்கு கரணங்கள் என்ன?
XXXX
4.காவேரி நதியை உருவாக்கிய ரிஷியும் அதற்குக் காரணமான பறவையும் எவர் ? எது?
XXXX
5.காவேரி திருவையாற்றில் ஐந்து நதிகளாகப் பிரிவதால் அந்த ஊருக்கு திருவையாறு என்று பெயர்; அந்த 5 கிளை நதிகளின் பெயர்கள் என்ன?
XXXX
6.துலா காவேரி ஸ்னானம் என்பது என்ன? காவேரியின் பெருமையைக் கூறும் சம்ஸ்க்ருத நூலின் பெயர் என்ன? காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் சங்கமம் ஆகும் இடம் வரை விவரிக்கும் தமிழ் புஸ்தத்தின் பெயர் என்ன?
XXXX
7.இந்த நதி உற்பத்தி ஆகும் இடத்தின் பெயர் என்ன? அங்குள்ள தலங்கள் யாவை? காவேரி நதி எந்தக் கடலில் கலக்கிறது ?
10.தமிழ் நாட்டில் மேட்டூர் அணை உள்ளது. கர்நாடகத்தில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் மீதுள்ள அணைகள் யாவை ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Picture shows Dams across River Kaveri
ANSWERS
1.திருச்சிக்கு அருகில் உள்ள கல்லணை ; இதை கரிகால் சோழன் கட்டினான். உலகிலேயே பழைய அணை இதுதான் OLDEST DAM IN THE WORLD . ஆங்கிலத்தில் கிராண்ட் அணைக்கட் GRAND ANICUT என்று சொல்லுவார்கள்
XXXXX
2. காவிரி நதியின் நீளம் 800 கி.மீ ; மைல் கணக்கில் சுமார் 500 மைல் ; மறு பெயர் பொன்னி .
XXXXX
3.காவிரி நதியின் பெயருக்கு காரணங்கள்:
ஆறு பாயும் இடம் எல்லாம் பூங்காக்களை உண்டாக்கி செல்லுவது முதல் காரணம்.
காகம் விரித்த நதி என்பதால் – காக + விரி என்பது இரண்டாவது காரணம்;
பொன் போல் விளையும் நெற்பயிருக்கு காரணமாவதால் பொன்னி;
இந்தியாவின் ஒரே தங்கச் சுரங்கமான கோலார் தங்கச் சுரங்கம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆவதால் பொன்னி .
XXXX
4.அகஸ்திய மகரிஷி ; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிட்டு நதியைத் திருப்பிவிடும் பாதையைக் காட்டிய பறவை காகம். அகஸ்தியர் மாபெரும் சிவில் மற்றும் மரைன் என்ஜினீயர் CIVIL AND MARINE ENGINEER. ராமன் ,அர்ஜுனன் போன்றோர் பெரிய நதிகளைக் கடக்க முடியாமல் கடலோரமாகவும் படகுகளில் பயணம் செய் தும் தென்னாட்டிற்கு வந்தனர். அகஸ்தியர்CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர் என்பதால் விந்திய மலையை உடைத்து, காடுகளை அழித்து தமிழ் நாட்டிற்கு சாலைப்பாதை LAND ROUTE/ ROAD ROUTE அமைத்தார். பகீரதன் என்ற என்ஜினீயர் CIVIL ENGINEER கங்கையைத் திரும்பிவிட்டது போல காவிரியையும் தமிழ் நாட்டிற்குப் TO DIVERT THE RIVER FROM KERALA SIDE பயன்படும் வகையை எண்ணி தவம் இயற்றுககையில் காகம் வந்து கமண்டல ததைத் தட்டவே அதிலுள்ள நீர் வழிந்தோடிய பாதையில் காவிரியைத்திருப்பிவிட்டார். இதை கல்லணையில் சிலைகளாகக் காணலாம்STATUES DEPICTING THIS ANECDOTE ARE IN GRAND ANICUT NEAR TRICHY.
XXXX
5. திருவையாறு :–காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு , வடவாறு ; இங்குதான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதி இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் அங்கு ஆராதனை நடைபெறும்
XXXXX
6.ஐப்பசி மாத முதல் நாளில் மாயவரத்தில் காவிரி துலா ஸ்நானம் துவங்கி ,மாதம் முழுதும் மக்கள் புண்ணிய நீராடுவர் . இதோ காஞ்சி பரமாசார்ய (1894-1994)சுவாமிகளின் அருளுரை
காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!
XXXXX
7.கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரியில் தோன்றுகிறது.; குடகு என்பதை ஆங்கிலத்தில் கூர்க் COORG என்பர்.
பூம்புகார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
தலைக் காவேரி , அதன் கீழுள்ள தர்மஸ்தலா ஆகியன முக்கிய தலங்கள்.
XXXXX
8.காவிரி நதி, மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் :–கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஹொகனேகல் /ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு நீர்வீழ்ச்சிகள் ஆகும்
XXXX
9.முன் காலத்தில் சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களில் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆயினும் முழுக்க, முழுக்க காவிரி நதியைப் போற்றும் நூல்கள் :–
சம்ஸ்க்ருத மொழியில் துலா காவேரி மஹாத்மியம் , தமிழ் மொழியில் நடந்தாய் வாழி காவேரி; ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய பயண நூல்.
XXXXXX
10. கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர்,
Krishna Raja Sagara Dam. கிருஷ்ணராஜ சாகர்
Hemavathy Dam. ஹேமாவதி அணை
Harangi Dam.ஹாரங்கி அணை
Kabini Dam.கபினி அணை
Banasura Sagar Dam.பாணாசுர சாகர் அணை
தமிழ்நாட்டில்
Kallanai.கல்லணை
Mettur Dam (Ellis Park, Stanley)மேட்டூர் அணை
Amaravati Dam.அமராவதி அணை
இவை முக்கிய அணைகள். இவை தவிர குட்டி அணைகளும் உண்டு.
வாக்தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். ஆகவே ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டு சரஸ்வதியின் அருளைப் பெறுகின்றனர். சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறை சார்ந்தோர், ஓவியர்கள் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பித்து அருள் பெறுகின்றனர்.
இங்குள்ள அம்மனின் சிலை பஞ்சலோகத்தினால் ஆனது. காலையில் சரஸ்வதியாகவும் பகலில் லக்ஷ்மியாகவும் மாலையில் பார்வதியாகவும் அம்பிகை வழிபடப்பட்டு போற்றப்படுகிறாள்.
விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மூகாம்பிகை அம்மனுக்கான முக கவசத்தையும் அவர் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஷிமோகா பிரதேசமான அன்றைய கேளடி பகுதியை ஆண்ட கேளடி நாயக்க மன்னர்கள் இந்தக் கோவிலை நல்ல முறையில் அமைத்தனர். இதே வமிசத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவும் இந்தக் கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்திற்கு அரசியல் தலைவர்களும் பெருமளவில் வந்து வழிபடுவது வழக்கம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
இங்கு வந்து வழிபட்டவுடன் எந்தக் காரியத்திலும் பக்தர்கள் வெற்றியை அடைவது நிதர்சனமாக இன்று வரை காணப்படுகிறது.
பங்குனி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று தேவி அவதரித்த நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சுமார் ஐயாயிரம் பேர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச உணவு வழங்கப்படுகிறது.
இங்கு தங்குவதற்கு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. 250 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள விருந்தினர் விடுதியில் 350 அறைகள் உள்ளன. சுமார் 4000 பேர் தங்க இங்கு வசதி உள்ளது..
ரகசிய பொக்கிஷ அறை
இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போலப் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள ரகசிய அறை பற்றிக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள சங்கரபீடத்தில் ஒரு நாகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே ரகசியத்திற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது.
இந்தப் பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதில் ஏராளமான வைரம், மரகதம் உள்ளிட்ட மணிகளோடு தங்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தினாலான தங்க ரதம் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இது தவிர பல கோடி பெறுமான தங்க நகைகளும் சுமார் 50 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மாணிக்கம், வைரம் கொண்ட நகைகளும் அம்மனுக்கு உள்ளன.
கர்நாடகத்தின் செல்வச் செழிப்புள்ள ஆலயம் இது என்றால் அது மிகையல்ல.
இங்கு அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் லிங்கத்திற்கு மட்டும் நடைபெறும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மூகாம்பிகையின் குங்குமத்தை இட்டுக் கொண்டால் கெட்ட தலையெழுத்து நீங்கும் என்பது ஐதீகம்.
லிங்கத்தின் நடுவே தங்க நிற ரேகை உள்ளது. அபிஷேக சமயத்தில் இதைக் காணலாம்.
எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சண்டி ஹோமத்தை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.
ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய அவை அகலும்.
இங்கு ஒரு கோசாலையும் உண்டு.
பொதுவாகவே தேவியைக் கும்பிட்டால் அவள் தனம் தருவாள், கல்வி தருவாள், தளர்வறியா மனம் தருவாள். தெய்வ வடிவு தருவாள். நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருவாள் நல்லன எல்லாம் தருவாள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு தேவி மூகாம்பிகை. அவள் குடியுருக்கும் இடம் கொல்லூர்.