கனவு நிஜமானால் கஷ்டம் தான்! (Post No.12,052)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,052

Date uploaded in London –   28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 1

ச.நாகராஜன்

கனவு நிஜமானால் கஷ்டம் தான்! 

29 வயதான ஜென்னா ஹோவல் (Jenn Howell) என்ற இளம் பெண்மணி கனவு ஒன்றைக் கண்டாள். அதில் அவள் சில மோசமான பேர்வழிகளிலிருந்து தப்பிக்க ஒரு ஓடும் ரயிலில் ஓடிக் கொண்டிருந்தாள். அவரது துணைவன் அவரிடம் உன் கையிலிருக்கும் மோதிரத்தை ஒளித்து வைத்துக் கொள் என்று கூற அவள் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிக் கொண்டாள்.

திடீரென்று ஹோவல் விழித்தெழுந்தாள்.  அப்பாடா, கண்டது ஒரு கனவு தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் அப்போது யதேச்சையாக தன் இடது கையைப் பார்த்த போது அங்கு மோதிரத்தைக் காணோம். நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கு எக்ஸ்ரே எடுத்த போது அதை அவள் விழுங்கி விட்டிருப்பது தெரிய வந்தது. என்டாஸ்கோபி மூலமாக மோதிரம் ஒரு வழியாக உடலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

ஹோவல் மோதிரத்தை வடிவமைப்பைச் செய்தவரிடம் தான் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தார். அவர் சொல்லியிருந்தார் :

“அடடா! எப்படி இருக்கிறது இது! அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடலாம் போல இருக்கிறது!”

திறக்க முடியாத லாக்கர்!

ஸ்டீபன் மில்ஸ் என்பவர் ஒரு வெல்டர், மெஷினிஸ்டும் கூட. அவர் அல்பெர்டாவில் ஃபோர்ட் மக்மர்ரே என்ற இடத்தில் வசிப்பவர். அவர் வெர்மில்லியன் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு கண்காட்சியைப் பார்க்க வந்தார். அங்கு ஒரு 2000 பவுண்ட் மதிப்புள்ள பூட்டப்பட்ட லாக்கர் இருந்தது. அது 1990களில் நன்கொடையாக அங்கு தரப்பட்டிருந்தது. ஆனால் அதைத் திறக்கவே முடியவில்லை. பல நிபுணர்களும் வந்து அதைத் திறக்க முயன்றனர். முடியவே இல்லை. அதற்குள் நிறைய தங்கம் இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர்.

ஸ்டீபன் அந்த லாக்கரிடம் வந்த போது இந்த விஷயத்தை அங்கிருந்தவர் சொல்லக் கேட்டார். உடனே நான் இதைத் திறக்கப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு விளையாட்டாக 20-40-20 என்று அமுக்கி விட்டு மூன்று முறை வலது புறமும் இரு முறை இடது புறமும் திருகினார். என்ன ஆச்சரியம்! லாக்கர் திறந்து கொண்டது. உடனே அனைவரும் ஓடி வந்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அனைவருக்கும் ஆவல்!

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல அதில் தங்கமோ பணமோ இல்லை.

1977இல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் சர்வரின் ஆர்டர் புக் இருந்தது. 1978இல் 9.95 டாலர் செலுத்தப்பட்டதற்கான பேப்பர் இருந்தது. ஆனால் 40 வருடம் திறக்காக ஒரு லாக்கரைத் திறந்தாரே அதற்கு விலை மதிப்பு உண்டா என்ன?

வீட்டிலேயே நடைப்பயிற்சி

பிரான்ஸில் பல்மாவில் (Balma) ஒரு உணவுவிடுதியில் சர்வராக வேலை பார்த்து வந்தார் எலிஷா நோகோமோவிட்ஸ் (Elisha Nochomovitz). பார்சிலோனா மாரத்தானில் 2020 மார்ச் 15ஆம் தேதி கலந்து கொள்ள அவர் எண்ணியிருந்தார்.ஆனால் கோவிட் 19 தொற்று வரவே அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் விடவில்லை.

தனது வீட்டு 23 அடி நீள பால்கனியில் இந்தப்புறத்திலிருந்து அந்தப்புறமும் அந்தப்புறத்திலிருந்து இந்தப் புறமும் ஓட ஆரம்பித்தார். இப்படி 42 கிலோமீட்டர் ஓடினார். ஆறு மணி நேரம் 48 நிமிடத்தில் இது முடிந்தது. ஆனால் மூன்றரை மணி நேரம் தான் ஆகி இருக்க வேண்டும் அந்தப் போட்டியில் ஓடி வெற்றி பெற! என்றாலும் தனது இந்த வீட்டு சாதனையை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இவரைப் போல கோவிடினால், வீட்டில் ஓடிக் கொண்டே இருக்கும் அனைவருக்கும் ஒரே உற்சாகம். இதை வரவேற்று எலிஷாவைப் பாராட்டினர்.

பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் தனது வாசகர்களிடமிருந்து பெற்ற நிஜமான சம்பவங்கள் தாம் இவை!

**

Famous Cities of India Crossword (Post No.12,051)


Dilwara Temples, Rajasthan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,051

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the famous cities with the help of the clues and colour coding. Colours may help you to some extent because of overlapping colours.

1   2 3   4    5
        6     
    7    8 9 10
             
   11          
      12       
 13           

Across

1.Old Name of Delhi

6.Named after Puranic Ajamila or Ajayameru

7.Cotton city of India

8.Hill statin in Rajasthan with near by Dilwara temples

11.Chattisgarh city with Bhima-Kichak Temple; also a classical Raga name

12.Famous Jail in Pune where freedom fighters spent their time

13. Place with bird sanctuary in Rajasthan

xxxxxxxxxxxxxxx

Down

1.Queen Ahalyabhai Holkar ruled from here

2.Krishna’s place in Gujarat coast

3.Rama Janma Bhumi

4.Famouss cave with beautiful paintings

5.Island where Veer Savarkar was imprisoned

9.Orissa’s Puranic name

10.Capital city of Union territory of Dadra and Nagar Haveli; once under the Portuguese rule.

I 1 ND 2RA 3PRA 4STHA 5
 N W Y A 6JMERN
 D A 7KOLAA 8BU9 D 10
 O R D  N T A
 RM 11ALHART K M
 E K Y 12ERAWADA
B13HARATPURL N

Answers

Across

1.Indraprastha, 6.Ajmer , 7.Akola , 8.Abu , 11.Malhar , 12.Yerawada , 13.Bharatpur

xxxxxxxxxxxxxxx

Down

1.Indore , 2.Dwaraka, 3.Ayodhya ,4.Ajanta , 5.Andaman , 9.Utkal, 10.Daman

—-Subham—

Tags- Famous cities, quiz

Can you identify these 20 Swamijis, Babas and Anandas?(Post No.12,050)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,050

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.Where is Saint Tukaram’s Samadhi?

2.Whose Samadhi is in Shirdi?

3.Who is the Swamiji who took Ramakrishna Paramahmasa’s message to the Western world?

4.Who was called The Flying Swami?

5.Who started Divine Life Society?

6.Who was Brahmananda?

7. who spread TM known as Transcendental Meditation?

8. Who is the author of ‘An Autobiography of a Yogi’?

9.Where is Sathya Sai Baba’s Samadhi?

10. Who is the current head of Chinmaya Mission?

11.Who was the previous head of Chinmaya Mission?

12.What was the name of Chinmayananda before he took Sanyas?

13.Who wrote the popular book ‘Oh, Mind! Relax Please’?

14. who established Skandashram in Tamil Nadu?

15. Who established Swami Chidbhavananda Ashramam in Theni, Tamil Nadu?

16.Who was born in Manjakkudi village and became a famous Swamiji?

17.Who lived for 300 years among Hindu Ascetics?

18.Where is Gnanananda Thapovanam?

19.What is in ‘Who am I?’ book by Ramana Maharishi?

20.What is the original name of Sage of Kanchi, Jagadguru Sri Chandrashekarendra Saraswati (1894-1994)?

 Answers:

1.Sant Tukaram Vaikunthstan Temple, Dehu – from where Tukaramji ascended to Vaikuntha (Abode of God) in his mortal form; there is a beautiful ghat behind this temple along the Indrayani river.

2.Sri Sai Baba

3.Swami Vivekananda

4.Swami Vishnu Devananda, who flew to trouble spots in the world to spread peace.

5.Swami Sivananda of Rishikesh

6.Ramakrishna Paramahamsa’s disciple. His pre monastic name was Rakhal Chandra Ghosh.

7. Maharishi Mahesh Yogi

8.Paramahamsa Yogananda

9. Puttaparthi village in Andhra Pradesh

10.Swami Swaroopananda

11.Swami Tejomayananda

12.Balakrishna Menon

13. Swami Sukhabodananda

14.Swami Santhananda of Pudukkottai

15.Swami Omkarananda

16.Swami Dayananda

17.Swami Trailinga Swami of Kasi

18.Thirukkovilur in Tamil Nadu

19. Who am I? is the title given to a set of questions and answers bearing on Self-enquiry. The questions were put to Bhagavan Sri Ramana Maharshi by Sri M. Sivaprakasam Pillai, about the year 1902.

20.Swaminathan

xxxx

My old book containing English and Tamil Quiz posts

–subham—Tags- Quiz, Saints, Anandas, Babas

இடையர்கள் கொண்டாடும் வினோத மஞ்சள் திருவிழா (Post No.12,049)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,049

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிர மாநிலத்தில் இடைக்குல மக்கள் ஒரு விநோதத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ; அப்போது ஊரே மஞ்சள் வர்ணமாகி விடுகிறது ; இடைக்குல பாபா /சுவாமிகள் ஒருவர், இனி என்ன நடக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவார். இதோ சுவையான  விவரம் :-

கோலாப்பூர் மாவட்டத்தில் பட்டண கோடொலி என்ற கிராமம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் விட்டல் வீரதேவ மஹாராஜின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பது இடைக்குல மக்களின் நம்பிக்கை.

மஹாராஷ்டிரா , கோவா, கர்நாடகா , ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு இடையர்கள் ஜாதிக்கு வீரதேவ் குல தெய்வம் ஆகும் .விழா நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்த பட்டண கோடொலி கிராமத்துக்கு நடந்து வருகிறார்கள் அவர்கள் ஒரு விஷேச அலங்காரக்கு டையையும் எடுத்து வருவார்கள். கிராமீய பாடகர்கள் இசைக்கருவிகள், கொட்டு மேளங்களுடன் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள். கழைக் கூத்தாடிகள் சர்க்கஸ் வித்தைகளைக் காட்டுவார்கள். பண்டார என்னும் விசேஷ மஞ்சள் தூளை நினைத்த இடமெல்லாம் அள்ளி வீசுவார்கள். வியாபாரிகள் தெருவெங்கும் கடை விரிப்பர்..

சோலாப்பூர் அஞ்சன் கோவ்  கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கேலோபா ராஜபாவ் வாக்மோடே ( Sri Keloba Rajabau Waghmode) என்பவர் அபூர்வ சக்தி கொண்ட சாமியார் என்று கருதப்படுகிறார். அவர் 17 நாட்களுக்கு நடையாக நடந்து, இந்த பட்டன் கோடொலி கிராமத்துக்கு வருகிறார். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அவர் அமர்கிறார் .விழாக்காலம் முழுதும் அவர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து ஆசி வழங்குவார். மக்கள் அவர் மீதும் மஞ்ச ள் பொடியைத் தூவுவர். முக்கிய நாளன்று அவர் திடீரென சாமி வந்தவர் போல ஆடுவார். துள்ளிக் குதிப்பார். பத்து நிமிட நேரத்துக்கு அவர் பல ஆரூடங்களைச் சொல்லுவார். பெரும்பாலும் கன்னட  சொற்கள் கலந்த இந்த மொழி யாருக்கும் புரியாது. அருகிலுள்ள பூஜாரி,  புரியும் மொழியில் வியாக்கியானம் செய்வார். அதில் வருமாண்டில் பெய்யக்கூடிய மழை விவரம், விளைச்சல் விவரம், வியாபார நடப்புகள்  போன்றவை இருக்கும். அவர் சொல்லும் விஷயங்கள் 90 சதவிகிதம் சரியாக இருக்கிறது என்று இடையர்கள் கூறுகின்றனர்.

பாபாவிடம் ஒரு புனித வாளைக் கோவில் பூஜாரி  கொடுப்பார். அப்போது அவருக்கு சாமி வரும். உடனேயே அவர் சொல்லுவது எல்லாம் பலிக்கும் என்று பக்தர்கள் நம்புவர். இது போல தமிழ் நாட்டுக்கு கிராமீய கோவில்களிலும் சாமி வந்து ஆடுவோர், கிராமத்துக்கு வரும் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதை காணலாம் 

கிட்டத்தட்ட தமிழ் பஞ்சாங்கங்கள் சொல்லுவது போல இவரும் பல விஷயங்களை பேசுகிறார். இந்த ஆரூட, சாமி ஆடும் வேலை முடிந்தவுடன் அவர் சொந்த கிராமத்துக்கு நடந்து செல்லுவார்.

அருகிலுள்ள மண்டபத்தில், பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள் ;ஆங்காங்கே சமைத்துச் சாப்பிடுவர். விழாவின் போது பயன்படுத்தும் பொடி  வெறும் மஞ்சள் கிழங்குப் பொடி மட்டுமன்று . அதில் தேங்காய்த் தூளும் இருக்கும். இதை பிரசாதமாகப் பயன்படுத்துவோர் ஆட்டு ரோமத்துடனும் சாமிக்குப் படைப்பர். இந்த வட்டாரம் ஆட்டுரோம கம்பளத்துக்கும் பெயர் பெற்ற இடம். மஞ்சள் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

விழா நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலிருந்தே மக்கள் யாத்திரையைத் துவக்கி விடுவார்கள் .

மண்டபத்தில்  உள்ள கடவுள் சிலை மீது பொடியைத்தூவி, இறைவன் பாதத்திலிருந்து பிரசாதம் எடுத்துச் செல்லுவார்கள் .

–subham—

Tags – மஞ்சள் பொடி , திருவிழா , இடையர் , பாபா, ஆரூடம், ஆட்டு ரோமம்

ரஸனைக்குரியவை ஆறு! (Post No.120,48)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,048

Date uploaded in London –   27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

ரஸனைக்குரியவை ஆறு!

ச.நாகராஜன்

ரஸனைக்குரிய விஷயங்கள் ஆறு

1) புஷ்பம் 2) வாசனை 3) பெண் 4) படுக்கை 5) ஆடை 6) அலங்காரம்

*

பாஷைகள் ஆறு!

பண்டைய காலத்தில் ஆறு பாஷைகள் வழங்கி வந்தன.

அவையாவன:

1) சம்ஸ்கிருதம் 2) ப்ராக்ருதம் 3) அபப்ரம்ஷம் 4) சௌரசேனீ 5) மாகதீ 6) பைசாசீ

சம்ஸ்க்ருத ப்ராக்ருத அபப்ரம்ஷ பைஷாசிக மகத சூரசேனாபி:

*

உபரத்னங்கள் ஏழு

ஏழு உபரத்னங்கள் உள்ளன.

அவையாவன : 1) வைக்ராந்தம் 2) சூர்யகாந்தம் 3) சந்த்ரகாந்தம் 4) ராஜாவர்தம் 5) லால் 6) பேரோஜ் 7) ஸ்படிகம்

*

கர்மபலனின் ரூபங்கள் ஏழு

ஒருவனின் கர்மபலனின் ரூபங்களை ஏழு விஷயங்களின் மூலமாகக் காணலாம்.

1) புத்தி 2) ஆயுள் 3) ஆரோக்யம் 4) பலம் 5) பாக்யம் 6) ஆகமம் (பாரம்பரிய கொள்கைகள்) 7) ரூபம்

இது மஹாபாரதத்தில் அனுசாஸன பர்வத்தில் வரும் ஸ்லோகம்.

புத்திமாயுஷ்யமாரோக்யம் பலம் பாக்யம் ததாகமம் |

ரூபேண சப்ததா பூத்வா மானுஷம் பலதி த்ருவம் ||

*

முக்கிய கீதைகள் ஏழு

அநேக கீதைகள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஏழு.

அவையாவன :

1) பகவத் கீதை 2) ராம கீதா 3) கணேச கீதா 4) சிவ கீதா 5) தேவி கீதா 6) கபிலா கீதா 7) அஷ்டாவக்ர கீதா

*

சக்ரவர்த்திகள் எழுவர்

பாரத தேசத்தில் சக்ரவர்த்திகள் எழுவர்.

1) பரதன் 2) அர்ஜுனன் 3) மாந்தாதா 4) பகீரதன் 5) யுதிஷ்டிரர் 6) சகரன் 7) நகுஷன்

*

மோக்ஷபுரிகள் ஏழு

ஸ்கந்த புராணத்தின் படி (காசி காண்டம் 6/68) மோக்ஷ புரிகளாக இருப்பவை ஏழு.

1) காசி 2) காஞ்சீபுரம் 3) மாயா 4) அயோத்யா 5) த்வாரகா 6) மதுரா 7) அவந்திகா

காசீ காஞ்சீ ச மாயாக்யா த்வயோத்யா த்வாரவத்யபி |

மதுராவந்திகா சைதா: சப்த பூர்யோத்ர மோக்ஷதா: ||

ப்ரஹ்மபுராணத்தின் படி (4,40,91)  ஏழு மோக்ஷபுரிகளின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

1) அயோத்யா 2) மதுரா 3) மாயா 4) காசீ 5) காஞ்சீ 6) அவந்திகா 6) புரீ 7) த்வாராவதீ

அயோத்யா மதுரா மாயா கானீ காஞ்சீ அவந்திகா |

புரீ த்வாராவதீ சைவ சப்தைதா மோக்ஷதாயிகா: ||

*

ஏழு ’ காரங்கள் அடைவதற்கு கஷ்டம்!

’ –வில் ஆரம்பிக்கும் இந்த ஏழும் அடைவதற்கு மிகவும் கஷ்டமே!

1) சம்பத்தி (செல்வம்) 2) சரஸ்வதி (கல்விவாக்கு வன்மை) 3) சத்யம் (சத்யம் பேசுதல்) 4) சந்ததி (மக்கட்பேறு) 5) சதனுக்ரஹ 6) சத்தா (பல அர்த்தங்கள் உண்டு – வாள் சுழற்றல்வேத ஞானம் உள்ளிட்டவை) 7) சுக்ருதம்

*

பார்வதி தேவியின் ஏழு பேர்கள்

தர்மசாஸ்திரத்தின் படி பார்வதி தேவிக்கு ஏழு பெயர்கள் உள்ளன. அவையாவன:

1) குஸுதா 2) மாதவீ 3) கௌரீ 4) பவானீ 5) பார்வதீ 6) உமா 7) அம்பிகா.

**

Strange Haldi Festival in Maharashtra (Post No.12,047)

b

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,047

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


The Haldi festival, held at Pattan Kodoli, in the district of Kolhapur in Maharshtra is organised every year in October. It is a festival of the Shepherd Community.

The festival  is celebrated to commemorate the birth anniversary of Vitthal Birdev Maharaj, who is considered to be a reincarnation of Lord Vishnu.

Birdev is also the family deity of the Dhangar, a shepherd community that resides in Maharashtra, Karnataka, Goa and Andhra Pradesh. The annual fair and festival attract thousands of devotees, where the festive mood is set with people throwing haldi or turmeric powder over Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ who sits under a Banyan tree. The baba is considered as the messenger of god, and people seek his blessings for a healthy life. He’s revered for his ability to foretell his predictions about farming, rain and future conditions of the country which is helpful to the people of the community.

The most important ceremony of this fare is the predictions by Shree Kheloba Rajabhau Waghmode, from Anjungau, a village in Solhapur District. He gives predictions whenn he gets the divine sword from the temple priest.

 Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ of the devotees, walks 17 days from his village to reach Pattan Kodoli for the festival every year. Huge umbrellas are brought in to welcome the Baba to the temple, accompanied with a procession with drums and traditional music. As soon as he enters the temple, Baba attains a trance mode that makes him jump and dance that lasts for nearly 10 minutes. The Baba then goes ahead to foretell his predictions about farming, rain and future conditions in Kannada, his trance language, which is translated by the priest. He starts his journey back after the rituals gets over.

For a week people walk towards the village with accompanied folk musicians. They are joined by acrobats, vendors and farmers. They carry a special type of umbrella.  which they spin and dance.. Baba’s predictions are like the predictions in Tamil Panchangs (almanacs). it also predicts about the weather, harvest, political situation, natural catastrphes that may happen in the new year.

Like Baba, Tamil village priests also get possesed and make preditions for the village; but in this Maharashtra village it is celebrated with a huge crowd.

Devotees offer the yellow powder to God in the village temple and take it back as Prasad. Since this area is famous for carpets made out of goats  hair, devotees offer goat hair with the yellow powder to God.

—subham—

Xxxxx Subham xxxxx

 Tags- Haldi Festival, Turmeric, Shepherd community Baba

‘ஆனந்தா’ குறுக்கெழுத்துப் போட்டி 16 ‘ஆனந்தா’க்களைக் கண்டுபிடியுங்கள் (Post.12,046)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,046

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

“னந்தா” என்ற எழுத்துக்களுக்கு முன்னுள்ள 16  சுவாமிஜிக்களைக் கண்டுபிடியுங்கள். வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வர்ணத்தில் உள்ளன உங்களுக்கு உதவி செய்ய சில துப்புத் தகவல் இதோ:

Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடர்

2.சின்மயா மிஷனின் முந்தைய  தலைவர்

3. ஒரு யோகியின் சுய சரிதை நூல் எழுதியவர்

4.அவர் ஸ்தாபித்த மிஷன் அவர் பெயரிலேயே இயங்குகிறது

8. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இந்த சுவாமிஜியை வாழ்த்தி 32 வரிகளில் பாரதியார் கவிதை படைத்தார்.

9. வட இந்தியாவில் கபீர், ரவிதாஸ் முதலியோரின் குரு

Xxxx

Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.பறக்கும் சுவாமிஜி என்று பெயர் எடுத்தவர்

4.தெய்வ நெறிக்கழகத்தை நிறுவியவர்

5.புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில் , ஸ்கந்தாஸ்ரமத்தை

நிறுவியவர்

6. திருக்கோவிலூர் தபோவன சுவாமிஜி

7. ஓடிப்போய் தீவில் வாழும் சுவாமிஜி ;போலீஸ் கேஸ்

10.மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ் நூல் எழுதி பிரபலம் அடைந்தவர்

11.சின்மயா இயக்கத்தின் தற்போதைய தலைவர்

12.தேனீ வேதபுரீ ஆஸ்ரமத்தை நிறுவியவர்

13..ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர் சீடர்

14. ஆர்ய சமாஜ நிறுவுனர் அல்லது மஞ்சக்குடி ஆஸ்ரமம் நிறுவுனர்

 1       2
         
       3 
     4   
   5  6    
        7
8     9  
         
         
   10 1112  13 14

Answers

ACROSS

1.வி வே கா , 3.ப ர ம ஹ ம் ச யோ கா ,4.சி ன் ம யா ,8.அ பே தா

9.ராமா

XXXX

DOWN

1.வி ஷ் ணு தே வா ,2.தே ஜோ ம யா ,4.சி வா ,6.ஞா னா ,7.நி த் யா

10.சு க போ தா ,5.சா ந் தா,11.ஸ் வ ரூ பா ,12.ஓ ம் கா ரா,13.பி ர ம் மா ,

14.த யா

வி 1வேகா    தே 2
ஷ்      ஜோ
ணும்ப 3
தேயோ  சி 4ன்யா
வாகாசா 5ஞா 6வா  த்
  ந்னாந்தாநி 7
8 அபேதா பாரா 9மா 
  போ ரூகாம் 
   ம்யா
  சு 10 ஸ்11ஓ 12பி 13த 14

 –SUBHAM —tags- ‘ஆனந்தா’ ,குறுக்கெழுத்துப் போட்டி

சிவாஜிக்கும் ஒரு கோவில்; 108 மஹாராஷ்டிர புனிதத்தலங்கள்- 20 (நிறைவு) -Post No.12,045

VEERA SHIVAJI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,045

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 108 புனிதத் தலங்கள் என்ற கட்டுரைத்  தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது . தமிழ் நாட்டைப் போலவே இந்த மாநிலத்திலும் ஏராளமான பிள்ளையார் கோவில்களும் அனுமார் கோவில்களும் இருக்கின்றன. இது தவிர ஹரே கிருஷ்ணா இயக்கக் கோவில்கள், குஜராத்திகள் வணங்கும் சுவாமி நாராயண் கோவில்கள் பெரிய ஊர்கள் அனைத்திலும் உள்ளன. ஆனால் நான் பழங் காலக் கோவில்களையும் முக்கியக் கோவில்களையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி மொகலாய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டிய சிவாஜிக்கும் கூடக் கோவில் இருக்கிறது. அவரை இம்மாநில மக்கள் , சிவ பெருமானின் அருள் பெற்ற பவானி தேவியின் அருள் பெற்ற ,ராஜாவாகவே கருதுகின்றனர்.

PART 20

101. கணேஷ் மந்திர், தேக்டி

நாகபுரி நகரிலுள்ள பழங்காலக் கோவில்களில் தேக்டி பிள்ளையார் கோவில் முக்கியமானதும் புகழ் பெற்றதும் ஆகும் ;  தேக்டி என்றால் குன்று. இந்தப் பிள்ளையாரும் குன்றின் மேல் அமர்ந்தவர் தான். தற்போதைய கோவில் கட்டி 250 ஆண்டுகள் ஆயிற்று . பிள்ளையாரின் தலை தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளி   ஆபரணங்கள்  அவர் உடலை அலங்கரிக்கின்றன. கவர்ச்சிமிக்க கணபதி .

102. ராம்டேக் கோவில்

நாகபுரியின் ராம்டேக் பகுதியில் ராமபிரானுக்கு கட்டப்பட்ட கோவில் இது இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ராமர் தங்கிய இடம் என்பது பக்தர்களின் கூற்று. ராமரின் சபதம் என்னும் பொருள்படும் வகையில் ராம் ‘டேக்’ என்று பெயர் இடப்பட்டது அகஸ்திய முனிவர் இங்கு இருந்தபோது அசுரர்களை ஒழிக்க ராமபிரான் சபதம் செய்த இடம் இது  

ஒரு குன்றின் மீது , கோட்டைக்குள் கோவில் அமைந்திருப்பதால் நகரத்தின் ‘கர் முர்’  ஒலிகளுக்கு அப்பால் அமைதியான சூழ்நிலையில் ராமரை தரிசிக்கலாம். இது குறைந்தது 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். 350 அடி அகல நீளமுள்ள ‘ஒம்’ சின்னத்தினால் கூடுதல் பெருமையும் உண்டு; காளிதாசரின் மேக தூத காவியத்தின் நினைவாக ‘ஓம்’ வடிவில் கட்டிடம் கட்டப்பட்டது. குரங்குகளுக்கும் குறைவில்லை . கார்கள், மலை உச்சி வரை செல்லும் . பின்னர் 60 படிகள் ஏறினால் போதும் . இந்த வட்டாரத்தில் மேலும் பல கோவில்களும் பழங்கால சின்னங்களும் உள .

103. போதரேஸ்வர் ராம் மந்திர்

நாக்பூர் நகரின் நடுவில் அமைந்த கோவில் இது.

ராஜஸ்தானிலிருந்து வந்து வியாபாரம் செய்த போதார்  குடும்பத்தினர் 1923-ம் ஆண்டில் கட்டிய கோவில்; ராமன் மற்றும் சிவன் மூர்த்திகளை தரிசிக்கலாம். ராமர், லட்சுமணர், ஹனுமான் சீதை சிலைகள் இருக்கின்றன. சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

104.ஆதாசா கணபதி கோவில்

நாகபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஆதாஸா என்னும் ஊர் உளது இந்தக் கிராமத்தில் குன்றின் மீதுள்ள கோவிலை பக்தர்கள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும் ; பழமையான கோவில் . இங்குள்ள கணபதியின் சிறப்பு 12 அடி உயரமும் 7 அடி அகலமும் ஆகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கணபதி..

பெளஸ மாதத்தில் பெரிய விழா நடைபெறுகையில் பெரும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம்.

XXXX

 கொறடி கோவில் (சென்ற பகுதியில் விவரம் உளது. நாக்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த சக்தி கோவில். கொறடி ஏரிக்கரையில் அமைந்த அம்மனைத் தரிசிக்க பெரிய பக்தர் கூட்டம் வருகிறது தேவியின் பெயர் மஹாலக்ஷ்மி ஜகதம்பா.

105. நாராயணபுர மஹாதேவ் / நாராயனேஸ்வர் கோவில்

புனே நகரிலிருந்து 35 கிலோமிடேட்டர் தூரத்தில் நாராயனேஸ்வரர் கோவில்  இருக்கிறது . அருகிலுள்ள நாராயண்பூர் தத்த மந்திர் பிரசித்தம் அடைந்த அளவுக்கு இது பிரபலம் ஆகவில்லை. அதற்கு அருகிலுள்ள இக்கோவிலில் ஸ்வயம்பூ லிங்கம் இருக்கிறது. கோவிலுக்குள் சின்ன தீப ஸ்தம்பம் இருக்கிறது . இது மிகவும் பழமையான கோவில் ஆயினும் உள்ளூர் மக்கள் நல்ல வண்ணக் கலவையைப் பூசியுள்ளனர்.உள்ளே சென்றால் பழமையை உணரலாம். கோவிலுக்குப் பின்னால் படிக்கிணறு அமைந்துள்ளது .

106.பராடிவாடி தேவி கோவில், ஆங்கண் வாடி

மால்வன் வட்டாரக் கோவிலான  பராடிவாடி தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஜாத்ரா (யாத்திரை ஊர்வலம்) மிகவும் புகழ் பெற்றது . பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் ஜாக்ருத் தேவஸ்தானங்களில் ஒன்று என்ற நம்பிக்கையால் பக்தர்களின் வருகை அதிகம். இந்தக் கோவிலின் சடங்குகள் விநோதமானவை.தேவியின் கற்சிலையை ஆபரணங்கள், முக கைவசத்தால் அலங்கரிப்பார்கள் ; இதற்குப் பின்னர் ஊர் நாவிதர் ஒரு கண்ணாடி மூலம் சூரிய கிர ணங்களை அந்தச் சிலை மீது பிரதிபலிப்பார் . அது மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்மணி சென்று, கோவில் பிரசாதம் தயாரிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும்; சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா இது.

இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள் – கங்கவிலி , ஓரோஸ்.

107.ஸ்ரீ சிவ சத்ரபதி (சிவாஜி) கோவில் , தர்கார்லி

சத்ரபதி சிவாஜியின் மகன்களில் ஒருவரான ராஜாராம், இந்தக் கோவிலை சிந்து துர்க் கோட்டையில் கட்டினார். மாலவன் நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது டில்லி கேட் அருகில் கோபுரத்தில் சிவாஜியின் கால், கை சுவடுகள் பதிக்கப்பட்டுள்ளன 1695-ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியின் நினைவாக இது கட்டப்பட்டது  சிவாஜியின் சிலை கருங்கல்லால் ஆனது. அவருடைய வாளும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.. சுற்றுலாப் பயணிளைத் தவிர உள்ளூர் மக்களும் பயபக்தியுடன் வந்து சிவாஜி மஹாராஜாவைத் தரிசித்துச் செல்கின்றனர் .

மால்வன் என்னும் இடத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் தார்கர்லி உளது.

108.பிரம்மநாத் கோவில், பாருண்டே

புனே மாவட்ட ஜுன்னார் தாலுகாவில் பாருண்டே கிராமத்தில் பிரம்மநாத் கோவில் இருக்கிறது. ஆஷாட கிருஷ்ண ஏகாதசியில் விழா நடைபெறும்.

நாத் சம்பி ரதாய வழிபாட்டின் சிற்பங்கள் இங்கே காணப்படுகின்றன..  ஹட யோகம் , தியானம், ஆசனம் மூலமாக வழிபடும் சைவர்கள் இவர்கள். மீனநாத அல்லது மச்சேந்திரநாத என்பவர் இதன் ஸ்தாபகர்

கோரக்க நாத் , ஹரிபா, கானுபா என்பவர்கள் அவரைப் பின்பற்றினர் .கோரக்நாதர் வழியாக இது பிரபலம் அடைந்தது  நாத் சம்பிரதாய பயிற்சி பெறுவோரின் சிற்பங்கள் பருண்டே முதலிய கோவில்களில் இருப்பதால் இங்கு ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர் .

xxxx சுபம் xxxxx

நாத் சம்பிரதாயம், சிவாஜி கோவில், மஹாராஷ்டிர , 1008 தலங்கள் , பிரம்மநாத், நாராயணேஸ்வரர்

மூன்றாவது நண்பன்! (Post No.12,044)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,044

Date uploaded in London –   26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூன்றாவது நண்பன்! 

ச.நாகராஜன்

ஒரு மனிதனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். 

முதலாவது நண்பன் மீது அவனுக்கு அளவு கடந்த அன்பு. இரண்டாவது நண்பன் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் உண்டு; ஆனால் முதல் நண்பனுக்கு அடுத்தபடியாகத் தான் அடுத்த நண்பனை அவன் வைத்திருந்தான்.

மூன்றாவது நண்பனுடன் அடிக்கடி பேசுவதில்லை. ஆனால் அவனும் நண்பன் தான்.

 ஒரு சமயம் ஒரு கோர்ட் கேஸில் அவன் சிக்கிக் கொண்டான். யாராவது காப்பாற்ற வேண்டிய நிலை.

வேகமாகத் தனது முதல் நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொன்னான்.

“உடனே என் கூட கோர்ட்டுக்கு வந்து என்னுடைய இந்த கேஸிலிருந்து என்னை நீ விடுவிக்க வேண்டும்” என்றான்.

முதல் நண்பனோ உடனே, “இதோ பார், இதற்கெல்லாம் உன்னுடன் கூட வர முடியாது. என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது” என்று கூறி விட்டான்.

அந்த மனிதனுக்கு சலிப்பும் ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டது.

நேராக இரண்டாவது நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொல்லித் தன்னைப் பாதுகாக்க உடனே கோர்ட்டுக்கு வருமாறு அழைத்தான்.

இரண்டாவது நண்பனோ, “ நீ சொல்வதெல்லாம் சரிதான், என்னால் கோர்ட்டுக்கு வர முடியாது. ஆனால் கூடவே கோர்ட் வாசல் வரை வருகிறேன்” என்றான்.

இதனால் சலிப்புற்ற அந்த மனிதன் மூன்றாவது நண்பனைப் பார்க்க ஓடினான். நடந்த விஷயங்களைக் கேட்டான் மூன்றாவது நண்பன்.

“என்னுடன் வந்து என்னைக் காப்பாற்றுவாயா?” என்று அந்த மனிதன் கேட்டான்.

மூன்றாவது நண்பன் புன்சிரிப்புடன், “இதை விட எனக்கு வேறு என்ன வேலை? வா, போவோம். உனக்காக நான் வாதாடுகிறேன், சாட்சி சொல்கிறேன், போவோம் வா” என்றான்.

அந்த மனிதனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கோர்ட்டுக்குச் சென்றனர் இருவரும். மூன்றாவது நண்பன் அடுக்கடுக்கான உண்மைகளைச் சொல்லி நண்பனை கேஸிலிருந்து விடுவித்தான்.

அந்த மனிதன் தனது உண்மையான நண்பன் மூன்றாவது நண்பனே தான் என்று தெரிந்து கொண்டான்.

கதை அல்ல இது, உங்கள் வாழ்க்கை தான் இது!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மூன்று நண்பர்கள் உண்டு.

1) செல்வம்

2) உறவும், சுற்றமும்

3) தர்மம்.

முதல் நண்பனான செல்வம் இந்த உலகில் ஆட்டம் போட்டுப் பாட்டுப் பாடி மகிழ்விக்கும். அது ஒருவன் மறையும் போது அடுத்த உலகிற்கு வராது. ஏனெனில் அது அங்கு செல்லுபடியாகாது.

அடுத்த நண்பனான உறவும் சுற்றமும் சுடுகாடு வரை நிச்சயமாக வருவர். அதற்கு மேல் அவர்கள் வர மாட்டார்கள்.

ஆனால் மூன்றாவது நண்பனாக தர்மமோ அடுத்த உலகிலும் வந்து நாம் செய்த நல்லது அனைத்தையும் ஒவ்வொன்றாக முன் வைத்து நம்மை சிக்கலிலிருந்து விடுவிக்கும். நமக்கு தர்மத்தால் அடைய வேண்டிய அனைத்தையும் பெற்றுத் தரும்.

ஒவ்வொருவரும் மூன்றாவது நண்பனான தர்மத்தை மறக்கவே கூடாது; அவனே நிஜமான துணைவன்; நண்பன்!

ஏக ஏவ சுஹ்ருத் தர்மோ நிதனேப்யநுயாதி ய: |

சரீரேன சமம் நாசம் சர்வம் அன்யது கச்சதி ||

செல்வமோ சுற்றமோ அல்ல; நல்ல மனதுடன் அனுஷ்டிக்கப்பட தர்மம் மட்டுமே நமக்குத் துணை; மற்ற அனைத்தும் அகன்று போய்விடும்!

***

நான் கண்ட பத்மநாபபுரம் அரண்மனை (Post.12,043)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,043

Date uploaded in London – –  25 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

1970 களில் கல்வெட்டுப் பயிற்சி முகாமையும் கல்வெட்டுகள் உள்ள  இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவைகளைக் காண்பதையும் தொல்பொருட் துறை இயக்குநரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்தார்.. அப்போது திருவனந்தபுரம் முதல் சிதம்பரமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண இலவச சுற்றுலாப்பயணத்தையும் தொல்பொருட் துறையின் சார்பில் ஏற்பாடு செய்தார். அந்த ஆயிரம் மைல் இலவச பஸ் பயணத்தில் ஆசிரியரல்லாத ஆசிரியர் நான் ஒருவன்தான் . நான் தினமணிப் பத்திரிக்கையின்  உதவி  ஆசிரியர். ஏனையோர் அனைவரும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். அவர்களோடு தொல்பொருட் துறையின் கல்வெட்டு மாணவர்களும் வந்திருந்தனர். எனக்கு நண்பர்களான   இரண்டு பேரும் அதில்  இருந்தனர். ஒருவர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், இன்னொருவர் அதே பள்ளியைச் சேர்ந்த என்.சி.சி. மாஸ்டர் சீனிவாசன் . மூவரும் அரட்டை  அடித்துக் கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் பயணத்தை இனிதே முடித்தோம்.

கன்யாகுமரி வட்டாரத்தைப் பொறுத்த மட்டில் இன்று வரை நினைவில் நிறைக்கும் காட்சி திருவாட்டாறு கோவில், இயற்கை வனப்பும், பத்மநாபபுரம் அரண்மனையும் தான் .

இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் – பூமுகம்(நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை(மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம்.

இந்த அரண்மனை திருவநந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும் , தக்கலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது .

அவைகளைப் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம் .

1550 முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை வேணாட்டுத் தலைநகராக  விளங்கியது . இதைப் பிற் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று அழைத்தனர். கார்த்திகைத் திருநாள் ராம வர்மா (கி.பி 1758-1798) ஆட்சி முடிவு வரை இதுவே தலைநகர். கோட்டையும் அரண்மனையும் சேர்ந்து 186 ஏக்கர்.  நுழை வாயிலில் அலங்கார வளைவு. . அதைத்தாண்டி பூமுகம் அல்லது நுழைவறை ; அதிலுள்ள குறிப்பிடத்தக்க விஷயங்கள் :

ஒரே கல்லால் ஆன கட்டில்;

மன்னர்க்கு பரிசாக வந்த ஓவியங்கள் , வில்கள் ;;

அலங்கரிக்கப்பட்ட மரக் கூரை .

Xxx

பூமுகத்தின் முதல் மாடி மந்திர சாலை; அதாவது மந்திரிசபை மண்டபம்; அரசனுக்கும் மந்திரிகளுக்கு தனித்தனி ஆசனங்கள்.; மேலே காற்று வருவதற்கு துவாரங்கள்.ஆசனங்களில் யாளி, சிங்க உருவங்கள். மண்டபத்தைத் தாங்கும் தூண்களிலும் சிற்பங்கள் !

இதன் அருகில் ஊத்துப் புறம் என்னும் உணவருந்தும் அறை ; இது கீ ழடுக்கும், மாடியும் உடையது . அன்னதானம் அளிக்கும்போது 2000 பேர் உட் காரலாம் ; இவ்வறையின் கூடாரம் இரு கூறைகளுடன் அமைக்கப்பட்டிருப்பதால் மழைக் காலத்திலும் பாதிக்கப்படமாட்டாது..

xxx

மணிக்கூண்டு

இதிலுள்ள கடிகாரம் 200 ஆண்டுக்கு முன்னால் செய்யப்பட்டது.. அது அடிக்கும் மணி ஓசை சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் ; சக்கரம், அதிலிருந்து தொங்கும் 9 மீட்டர் சங்கிலி, அதில் தொங்கும் இரண்டு  கற்களால் இயங்கும் விசித்திரமான கடிகாரம் ஆகும் .

Xxx

தாய்க்கொட்டாரம் அல்லது தாய் அரண்மனை

இதுதான் பழமையான இடம்; ஏகாந்த மண்டபம் எனும் திறந்த வெளிக்கூடத்தில் பல மரச் சிற்பங்களைக் காணலாம்.. நவம்பர் டிசம்பர் மாதங்களில் 41 நாட்களுக்கு துர்கா பூஜை நடத்தப்பட்ட இடம் .

உப்பரிகை மாளிகை

இதுதான் அழகான இடம்.; மூன்று மாடிகள் கொண்டது. மேல் மாடியில் ஒரு மரக்கட்டில் போடப்பட்டுள்ளது தினமும் இதில் விஷ்ணு சயனிப்பதாக நம்பிக்கை. . ஓர் மூலையில் சிவப்புத துணியால் போர்த்தப்பட்ட கத்தி இருக்கும். இப்போதும் கூட நவராத்ரி விழாவின்போது இக்கத்தி திருவனந்த புரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது .

17ம், 18ம் நூற்றாண்டு ஓவியங்கள் இந்த மாடியை அலங்கரிக்கின்றன. அவைகள் இந்த மாநிலத்தின் கலைப் பாரம்பரியத்தின் சின்னங்களாகத் திகழ்கின்றன . முக்கிய ஓவியங்களில்ன் பட்டியல் இதோ :

ஹரிஹரன், அர்த்த நாரீஸ்வரர், கணேசர், கிருஷ்ணனும் கோபியர்களும், நடராஜர், சாஸ்தா வேட்டையாடுதல், சுப்ரமண்யர், அனந்த சயனம், பார்வதி திருமணம், தேவியர்களுடன் ஸ்கந்தன்..

Xxxx

நவராத்ரி மண்டபம்

உப்பரிகை மாளிகைக்கு மேலேயுள்ள நவராத்ரி மண்டபம் ஓர் விசாலமான அறை . இதில் நாயக்கர் கால பாணியை நினைவுபடுத்தும் அழகிய கற்றூண்கள் இருக்கின்றன . முன்காலத்தில் காலை நிகழ்சசிகள் நடந்த இடம். இதற்கு முன்னால் , சிறிய சரஸ்வதி கோவில் இருக்கிறது. கோவிலை இணை க்கும்  நமஸ்கார மண்டபத்தில் தூண்கள் இருக்கின்றன. மண்டபம் முழுதும் இந்துக் கடவுள்களின்  தெய்வங்களும் ஊழியர்களின் சிற்பங்களும் இருக்கின்றன  அந்தப் புறத்திலிருக்கும் பெண்கள் மறைவாக நின்று பார்க்கக்கூடிய திரைகள் உள்ள இடமும் இருந்தது .

அரண்மனையில் தஸ்தாவேஜுகளைப் பாதுகாத்து வைக்கும் (சந்திர விலாசம் )அழகான வேலைப்பாடு மிக்க  மர மேஜைகளும் இருந்தன . வேலை பார்க்கும் இடங்களில் கூட சிற்பங்கள் !!

கோவிலைச் சுற்றி பெரிய கோட்டை . இந்தக் கல் கோட்டையின் குறுக்களவு நாலு கிலோமீட்டர் என்றால் எவ்வளவு பெரியது என்பதை ஊகிக்கலாம் ; நான்கு புறங்களிலும் கொத்தளங்கள் இருக்கின்றன..

(இதிலுள்ள படங்கள் கேரள அரசு தொல்பொருட் துறை இயக்குனர் என். ஜி, உண்ணித்தான் வெளியிட்ட கையேட்டிலிருந்து  எடுக்கப்பட்டது). 

xxxx

2-11-2020 News Item

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்வேளிமலை முருகன்பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் கடந்த மாதம் 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றுதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்றன. அந்த சாமி சிலைகள் கடந்த 27-ந் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு கோட்டை வாசலில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் தேவார கட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதே போல் வேளிமலை முருகன் குமாரகோவில் சென்றடைந்தது.

 —subham—

Tags- பத்மநாபபுரம் அரண்மனைசரஸ்வதி அம்மன்நவராத்ரி மண்டபம், ஓவியங்கள்