ராமனை பரதன் சந்தித்த அக்ஷய நவமி (Post No.11,975)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,975

Date uploaded in London – –  May 6 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அக்ஷய நவமி பண்டிகை பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது. ஏனெனில் இதை வங்காளிகள்தான் பெரும்பாலும் கொண்டாடுகிறார்கள்.  வீடுகளில் கொண்டாடப்படும் விழா இது. துர்கா பூஜைபோல தெருவெங்கும் பந்தல் போட்டு மாநில  அளவில் கொண்டாடாமல், வீடுகளில் மட்டும் அனுஷ்டிக்கப்படுகிறது..துர்கா பூஜையின்போது சக்தியை துர்கா என்று வழிபட்டனர். அவள் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டினாள் . இப்பொழுது அதே சக்தியை ஜகத்தாத்ரி என்ற பெயரில் வழிபடுவார்கள். உலகையே வழிநடத்தி  பராமரிப்பவள் என்பது இதன் பொருள்

எப்போது இந்தப் பண்டிகை ?

கார்த்திகை மாத சுக்லபக்ஷ நவமி அன்று வங்காளிகள் இதைக் கொண்டா டுவார்கள் . துர்கா பூஜையின்போது களிமண்ணால் துர்க்கை உருவத்தைப் படைத்து  , சில நாட்களுக்குப் பின்னர் நதிக்கரையில் விசர்ஜனம் (கரைத்தல் ) செய்வார்கள். இந்தப் பண்டிகையில் ஜகத்தாத்ரி என்னும் சக்தி தேவியை தாமிரம் அல்லது பித்தளைக் குடத்தில் ஆவாஹனம் செய்து பூஜைக்குப்பின்னர் விசர்ஜனம் செய்வார்கள்.

நாட்டின் சில பகுதிகளில் இந்த நாளில் நெல்லிக்காய் மரத்தை வழிபடுகிறார்கள். அதை விஷ்ணுவின் அமசமாகக்  கருதுவதே இதற்குக்காரணம். ஆனால் வடக்கில் வேறு சில இடங்களிலோ  வெண் பூசணிக்காய் முக்கியத்துவம் பெறுகிறது.

Xxx

பரத மிலன்

முதலில் உத்தரப் பிரதேசத்தில் இதன் கதையைக்  காண்போம் .

சீதை, லட்சுமணன் சகிதம் ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வசித்தார் . இந்த வனவாசத்தின் துவக்க காலத்தில் ரிஷிகளில் ஒருவரான பரத்வஜரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். 14 ஆண்டு வனவாசத்தின் இறுதியில் ராவணனை ஸம்ஹாரம் செய்து திரும்புகையில், பரத்வாஜரைச் சந்தித்து நன்றி கூறும் முகத்தான்,  பிரயாகைக்கு வந்தார். அவரது புஷ்பக விமானம் பிரயாகையில் இறங்கியவுடன் பரதனுக்கு செய்தி பறந்தது. அண்ணனின் வருகைக்காக அயோத்திக்கு வெளியே 14 ஆண்டுகளுக்கு ராமனின் காலணிகளை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்துவந்த பரதன், நந்திக்கிராமம் என்னும் ஊரிலிருந்து தேன் சிட்டாகப் பறந்து வந்தார் .

உடனே உலகம் முழுதுமுள்ள பத்திரிக்கை, டெலிவிஷன் சானல்களுக்கும் செய்தி தெரிய அவர்கள் எல்லோரும் ஸ்பெஷல் ஹெலிகாப்டர்களில் அங்கே வந்து குழுமி இருப்பார்கள் என்பதை நாம் ஊகிக்கலாம்.

ராமனைக் கண்ட பரதன் அண்ணா என்று அலறிக்கொண்டு ஓடி வந்து ராமபிரானைக் கட்டித் தழுவினான். இந்த சந்திப்பை பரத மிலன் என்பர். காசியில் தசராவுக்கு மறுநாள் இதை பெரிய அளவில் ஆண்டு தோறும் பரத மிலாப் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தேதி வேறுபட்டாலும் அண்ணன்- தம்பி உறவின் சின்னமாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

xxxx

பூசணிக்காய் அசுரன் / பஞ்ச ரத்தின தானம்

கூஷ்மாண்ட என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பூசணிக்காய் என்று பொருள். சிலர் கூஷ்மாண்ட என்ற அசுரனை விஷ்ணு சம்ஹரித்த / தீர்த்துக்கட்டிய நாள் என்பர். ஆயினும் வட இந்தியாவில் பல இடங்களில்  இதற்கு வேறு பொருள். அவர்கள் அன்றைய தினம், பிராமண புரோகிதர்களுக்கு வெண் பூசணிக்காயை தானாம் செய்வார்கள் . சிலர் பூசணிக்காய்க்குள் பஞ்ச  ரத்தினங்களை வைத்து தானம்  செய்வார்கள் .

பஞ்ச ரத்தினம் என்றால் என்ன?

பூசணிக்காயை, இந்தியில்  ‘பேட்டா’ என்பார்கள். அதற்குள் தங்கம், வெள்ளி, தாமிரம், முத்து, பவளமென்னும்  ஐந்து ரத்தினங்களை (ரத்தினம் = விலை மதிப்புடைய பொருள்; சிறந்த பொருள்; மனிதருள் மாணிக்கம் என்பது போல) மறைத்து வைத்து தானமாகத் தருவார்கள். இப்படி மறைத்துவைத்துத் தருவதால் இதற்கு குப்த தானம் என்று பெயர் குப்த என்றால் ரகசிய/ மறைவான என்று பொருள்.

சிலர் இந்த நாளில்தான் திரேதா யுகம் துவங்கியதாகவும் சொல்லுவார்கள்.

பிரயாகையின் மற்றொரு  பெயர் திரிவேணி சங்கமம்; கங்கை, யமுனை, ஸரஸ்வதி (பூமிக்கு ஆடியில்) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்; துலுக்கர்கள் ஆட்சியில் இதற்கு அலஹாபாத் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அந்தப் பெயர் அழிக்கப்பட்டுவிட்டது.

–subham —

Tags- பூசணிக்காய், கூஷ்மாண்ட , குப்த தானம், பஞ்ச ரத்தினம் , அக்ஷய நவமி, ராமன், பரதன், சந்திப்பு, பரத , மிலன், மிலாப் , நெல்லிக்காய்

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி! (Post No.11,974)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,974

Date uploaded in London –   May 6 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி! 

ச.நாகராஜன்

 1

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!

 மஹாபாரதத்தில் ஆஸ்வமேதிக பர்வத்தில் (அத் 92) வரும் ஒரு விஷயம் கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களைப் பற்றிக் கூறுகிறது.

அமாவாசை, பௌர்ணமி தினங்களும் அவற்றை அடுத்து வரும் த்வாதசி தினங்களும் ச்ரவண நக்ஷத்திர தினங்களும் ஆக இந்த ஐந்து தினங்களும் கிருஷ்ண பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து தினங்களும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான தினங்களாகும்.

பர்வத்வயம் சா த்வாச்யௌ ச்ரவணம் ச நராதிப |

மத்பஞ்சமீதி விக்யாதா மதிப்ரியா ச விசேஷத: ||

2

உடலுக்குள் இருக்கும் அக்னிகள் ஐந்து!

ஒவ்வொருவரின் உடலுக்கும் மறைந்திருக்கும் அக்னிகள் ஐந்து. அவையானவன 1) மந்தாக்னி 2) தீக்ஷனாக்னி 3) விஷமாக்னி 4) சமாக்னி 5) பஸ்மாக்னி

இவை ஐந்துமே உணவை எடுத்துக் கொள்கின்றன.

3

முக்கியமான ஐந்து காரங்கள்!

‘உ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஐந்து ‘உ’காரங்கள் மிக முக்கியமானவை. இவை பஞ்ச ‘உ’காரங்கள் என அழைக்கப்படும்.

அவையாவன 1) உத்யோகம் 2) உத்ஸாகம் 3) உத்தேஜன் 4) உபகாரம் 5)  உதாரத்வம்.

இந்த ஐந்தும் ஒரு மனித வாழ்க்கையில்  மிக முக்கியமானவை.

4

ஈஸ்வரின் தொழில்கள் ஐந்து!

ஈஸ்வரனின் தொழில்கள் ஐந்து. அவையாவன :

1) ச்ருஷ்டி 2) பாலன் (பரிபாலனம்) 3) சம்ஹாரம் (அழித்தல்) 4) அனுக்ரஹம் 5) நிக்ரஹம்

5

ஒரு காரியம் உருவாக உள்ள ஐந்து காரணங்கள்!

எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அது உருவாக ஐந்து காரணங்களே உள்ளன. அவையாவன:

1) காலம் 2) ஸ்வபாவம் 3) நியதி 4) புருஷ 5) கர்மம்

6

ஆசார்யர்கள் ஐவர்!

வைதிக சம்ப்ரதாயத்தின் படி ஆசார்யர்கள் ஐவர்.

அவர்கள் : 1) ஶ்ரீ சங்கராசார்யர் 2) ஶ்ரீ ராமானுஜாசார்யர் 3) ஶ்ரீ வல்லபாசார்யர் 4) ஶ்ரீ நிம்பார்காசார்யர் 5) ஶ்ரீ மத்வாசார்யர்

அந்தக்கரணம் ஐந்து!

அந்தக்கரணம் ஐந்து. இவை பஞ்ச அந்தக்கரணம் என அழைக்கப்படுகிறது.

அவையாவன: 1) மனம் 2) புத்தி 3) அஹங்காரம் 4) சித்தம்

5) சைதன்யம்

8

பஞ்ச மாதாக்கள்!

ஐந்து பேரைத் தாயாக மதிக்க வேண்டும் என்கிறார் சாணக்யர்! இந்த பஞ்ச மாதாக்கள் யார் யார்?

1) ராஜபத்னி 2) குருபத்னி 3) மித்ரபத்னி 4) பத்னி மாதா (மாமியார்) 5) ஸ்வமாதா (சொந்தத் தாயார்)

 9

பஞ்ச மாதாக்கள்!

இன்னும் ஒரு ஸ்லோகம் பஞ்ச மாதாக்கள் யார் யார் எனக் குறிப்பிடுகிறது இப்படி:

ஜனனீ  ஜன்ம பூமி ச ஜாஹ்னவீ வேத மாதர: |
சுரபி தத்ர விக்ஞேயா பஞ்சைதே மாதர: ஸ்ம்ருதா ||

சொந்தத் தாயார், பிறந்த பொன்னாடு, கங்கா, காயத்ரி, பசு – இவர்களே பஞ்ச மாதாக்கள்

***

Akshaya Navami Day is Important because of Rama’s Meeting with Bharata (Post No.11,973)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,973

Date uploaded in London – –  May 5 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bharata Milap in Varanasi/ Kasi

Navami means Ninth day, either after New moon or after Full moon, because Hindus have divided a month into two halves. Akshaya means eternal, indestructible, ever- lasting etc. Akshaya Navami is celebrated on the Navami day in Kartika bright half, i.e. Sukla Paksha.

This day is observed in various parts of India for various reasons. Goddess Jagaddhatri (the nurse or the sustainer of the world) is worshipped on this day.

Bengalis celebrate it as a household event and not as a communal one like Durga Puja. It is not even a festival, but a domestic ritual. Puja is done with a copper or brass pot. Devotees believe that Sun God worshipped Durga on this day.

This day has added significance because Hindu astrologers believe that Treta Yuga began on this day.

The special merit resulting from the worship of goddess on this day is that the worshipper is rewarded with peace and prosperity for thw whole year. Devi Purana explains the merit one attains by observing this day.

Xxx

‘Akshaya’ explains the merit of this day. Those who observe this day get the blessings for the whole year.

Hindu scriptures give this Akshaya status to

1.Akshaya Trityai Day

2.Amavasyai on Mondays ( Soma vaara New moon day)

3.If a Saptami falls on a Sunday

4.If a Chaturthi falls on a Tuesday

5.If an Ashtami falls on a Thursday

Xxxx

Ash gourd Donation

In some parts of North India people give donations to Brahmins.  Gray gourd or Ash gourd (petha) or Pancha ratna (five gems) placed inside the ash gourd are given to Brahmins. Hidden pancharatna is called Gupta Dhan (secret charity). Pancha ratnas are Gold, Silver, copper, coral and pearl.

Xxx

Bharata met Rama on this Day! (Bharata Milan)

Akshaya Navami is also associated with a touching episode in Ramayana., in connection with which there is a celebration in Prayag (old name Allahabad). It was on this day Bharata met his brother Rama who spent 14 years in the forest. When Rama returned from the forest, he stayed in Prayag for a day to meet great saint Bharadwaj. Before going deep into the forest also he met him at the same place . When Bharata came to know about his arrival in Prayag, he rushed to Prayag in great speed. As soon as he heard that Rama’s aerial car (Plane) Pushpaka Vimana landed in Prayag, Bharat hastened from Nandigrama from where he was ruling Kosala country with Rama’s shoes on the throne.

This happy meeting of the two brothers (Bharata Milan)  after a painful separation for fourteen years, is an event which is annually celebrated with much rejoicing all over India, especially in the Bharadwaja Ashram in Uttar Pradesh.

Bharadwaja devoted his entire life to the peaceful work of teaching the holy scriptures to a band of adoring disciples, who at the time numbered thousands.

Xxx

Celebration of Bharat Milap Festival
Bharat Milap Festival is celebrated with much enthusiasm and joy in Varanasi. It marks the victory of truth over evil and also the love of brothers for each other. The Bharat Milap festival is celebrated the day following Dussehra.

–subham—

Tags- Bharata Milan, Akshaya Navami, Jagaddhatri, Ash gourd , Gupta dhan, Bharadwaja. Lord Rama, Prayag, Pancha ratna, Milap

London Swaminathan Articles Index for April 2023 (Post No.11, 972)

Picture: London Swaminathan launching a poetry project on 24th March, 2023 with Gareth Thomas, Harrow MP

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,972

Date uploaded in London – –  May 5 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

London Swaminathan Article Index for April 2023(Index No.125)

London Swaminathan Articles Index for February and March 2023 (Post No.11,861) 1-4-23

Bihar in Rig Veda (Post No.11,866) 3/4

Etymology 3000 years ago! (Post No.11,869) 4/4

Clairvoyant predicted Middlesbrough woman’s £12,050 Postcode Lottery win(Post No.11,873) 5/4

Death Sentence to Naked Muslim Saints (Post No.11,879) 7/4

Cows are of different Colours, but Milk is White!(Post No.11,885) 9/4

How did Two Japanese Cities escape from American Atom bombs? (Post No.11,889) 10/4

Four Hindu Castes in Arabic and Persian (Post No.11,893) 11/4

Hindus’ Great Investment Festival Akshaya Trithiyai (Post No.11,896) 12/4

Hindus celebrate

Stories of Two Donkeys blessed by Lord Shiva (Post No.11,876) 6/4

Pancha sila of Buddha copied from Manu Smriti (Post No.11,890) 10/4

SHUDRAS AND BRAHMANAS ZINDABAD; MY BOOK ON MANU SMRITI (First Part) 11/4

The Story of Fig Tree in Hinduism (Post No.11,902) 14/4

New Stories about Tamarind Tree (Post No.11,905) 15/4

Story of Banyan Tree in Hinduism (Post No.11,920) 20/4

The Story of Indian Gooseberry Tree in Hinduism (Post No.11923) 21/4

Who named the Days of the week? (Post No.11,998) 23/4

Two Marathi Proverbs on Lord Dattatreya (Post No.11,937) 25/4

Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11,943) 27/4

Four Navaratris with Little Girl Puja (Post No.11,899) 13/4

Cacti Plant worship in Hinduism (Post No.11,911) 17/4

Coconut tree in Hinduism; Why do we break coconut in temples? (Post No.11,914) 18/4

Interesting story about Balsam and Apamaarga Plant worship in Hinduism (Post 11,917) 19/4

Gandhi Quotes on Hinduism: May 2023 Good Thoughts Calendar (Post No.11,950) 29/4

A Rare Tree in Alandi Jnaneswar Samadhi (Post No.11,908) 16/4

108 Famous Hindu Shrines in Maharashtra- Part 1(Post No.11,926) 22/4

108 Famous Hindu Shrines in Maharashtra-2 (Post No.11,930) 23/4

108 Famous Hindu Shrines in Maharashtra-3 (Post No.11,934) 24/3

108 Famous Hindu Shrines in Maharashtra- Part 4 (Post No.11,940) 26/4

108 Famous Hindu Shrines in Maharashtra – Part 5 (Post No.11,947) 28/4

Kolhapur Mahalakshmi, Tuljapur Bhavani :108 Famous Hindu Shrines in Maharashtra -6 (Post No.11,953) 30/4

Xxxx

TAMIL ARTICLES APRIL 2023

கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11,860) 1-4-23

ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் சாமியார்

விமர்சனமும்! (Post No.11,863) 2/4

மீண்டும் வைத்தீஸ்வரன்கோயில் ! குல தெய்வ வழிபாடு ஏன்? (Post No.11,865)3/4

சேலையூருக்கு செல்வோம் வாருங்கள்; ஒரே கல்லில் 20 மாம்பழம் அடிக்கலாம்! (11,871)5/4

ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ்

பத்திரிகைகள் ஒப்புதல் (Post.11,872) 5/4

‘பாப் கார்ன்’ POPCORN உணவைக் கண்டுபிடித்தது தமிழனா? (Post.11,868) 4/4

நிர்வாண முஸ்லீம் சாமியார்களுக்கு மரண தண்டனை (Post No.11,878) 7/4

மனுவைக் கள்ளக்காப்பி அடித்த புத்தர் (Post No.11,892) 11/4

சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள் (Post No.11875) 6/4

சிறை சென்ற சாமியார் சுவாமி சாந்தானந்தா (Post No.11881) 8/4

எந்த அரிசி நல்ல அரிசி? (Post No.11,888) 10/4

யாழ் மூரி பதிகம் பாடி அசத்திய சம்பந்தர் (Post No.11,887) 10/4

மனசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி (Post No.11,910) 17/4

அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர்

மரணம் (Post No.11,882)- Part 1 8/4

அமெரிக்கா போட்ட ப்ளூட்டோனியம் அணுகுண்டு – 2 (Post No.11,884) 9/4

அக்ஷய திருதியை – தங்கம் பொங்கும் பண்டிகை! (Post No.11,895) 12/4

இந்துக்கள் கொண்டாடும் நான்கு நவராத்ரிகள் (Post No.11,898) 13/4

அத்தி மரத்தின் கதை: மரம், செடி, கொடிகளை

வழிபடுவது பற்றி புதிய செய்திகள்! (Post No.11,901) 14/4

புளியமரத்தின் கதை ; மரங்களைப் பற்றிய புதிய செய்திகள் (Post No.11,904) 15/4

ஆலந்தியில் ஒரு அற்புத தல விருட்சம் (Post No.11,907) 16/4

இந்து மதத்தில் தென்னை மரம்; தேங்காய் உடைப்பது ஏன் ? (Post No.11,913) 18/4

இந்து மதத்தில் காசித் தும்பை , நாயுருவிச் செடி வழிபாடு! (Post No.11,916) 19/4

இந்து மதத்தில் ஆலமர வழிபாடு (Post No.11,919) 20/4

இந்து மதத்தில் நெல்லிக்காய் மர  வழிபாடு (Post No.11,922) 21/4

108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – 4 (Post No.11,939) 26/4

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – 1 (Post No.11,925) 22/4

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 3 (Post No.11,933) 24/4

மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு-1 (Post No.11,942) 27/4

மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு- Part 2 (Post.11,945)28/4

108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – Part 5 (Post No.11,946)28/4

108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – Part 6 (Post No.11,948) 29/4

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – 2 (Post No.11,928) 23/4

கிழமைகளுக்கு பெயர் சூட்டியது யார் ? (Post no.11,932) 24/4

தத்தாத்ரேயர் பற்றி 2 சுவையான மராத்தி பழமொழிகள் (Post No.11,936) 25/4

இந்து மதம் பற்றி காந்திஜியின் பொன்மொழிகள் (Post No.11,952) 30/4

—-SUBHAM—-

22 சிவன் கோவில்கள்: 108 மஹாராஷ்டிர புனிதத் தலங்கள்-10 (Post No.11,971)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,971

Date uploaded in London – –  May 5 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 10

தமிழ் நாட்டைப் போலவே, தடுக்கி விழுந்தால் கோவிலில்தான் விழுவோம் என்ற நிலையில் எங்கெங்கும் புனிதத் தலங்கள் நிறைந்த பூமி மஹாராஷ்டிரம் . ஆறு முக்கிய சக்தி கேந்திரங்களை  சென்ற சில கட்டுரைகளில் கண்டோம் இனி 22 முக்கிய சிவன் தலங்களைத் தரிசிப்போம். புகழ் பெற்ற எல்லோரா, எலிபெண்டா குடைவரைக் கோவில்களும் அவைகளில் அடக்கம். சிற்பக்கலை நிறைந்த கோவில்கள் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையவை. 22 கோவில்கள் சிவ பெருமானுக்கு என்றவுடன் அத்தனை மட்டுமே என்று எண்ணிவிடாதீர்கள். தற்காலத்தில் மக்களைக் கவர்ந்திழுக்கும் கோவில்களை மட்டுமே இந்தப் பட்டியலில் கொடுக்கிறேன் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் மூன்று இந்த மாநிலத்தில்தான் உள்ளன.

பிரபலம் அடைந்த 22 சிவன் கோவில்கள்

1.திரயம்பகேஸ்வரர் கோவில்ஜோதிர்லிங்கம்,நாசிக்

2.பீமசங்கரர் கோவில்ஜோதிர்லிங்கம்புனே

3.கிரிஷ்னேச்வரர் கோவில்,  ஜோதிர்லிங்கம்அவுரங்காபாத்

4.அவுந்த் நாகநாதர் கோவில், ஹிங்கோலி

5.கைலாசநாதர் கோவில்,, எல்லோரா குகை

6, அம்பர்நாத் சிவன் கோவில், அம்பர்நாத்

7.கோபேஸ்வர் சிவன் கோவில்,  கோலாப்பூர் மாவட்டம்

8.வைஜனாத சிவன் கோவில்,  (வைத்தியநாதர்), பரலி

9. எலிபெண்டா குகை திரிமூர்த்தி , மும்பை

10. கோண்டேஸ்வரர் சிவன் கோவில்,  , சின்னார்,

11. பாபுல்நாத் சிவன் கோவில்,  , மும்பை

12. பூலேஸ்வர் சிவன் கோவில்,  மும்பை

13.வாகேஸ்வரர் சிவன் கோவில்,  மும்பை

14. அம்ருதேஸ்வர் சிவன் கோவில், அகமதுநகர்

15. வேல்னேஸ்வரர் சிவன் கோவில்,  ரத்ன கிரி

16.பாணேஸ்வரர் மஹாதேவர் கோவில், நர்சாபூர்

17.ஜோதிபா சிவன் கோவில்,  . வாடி ரத்ன கிரி

18.மார்லேஸ்வர் குகை சிவன் கோவில்,  தேவருக்

19.சங்கமேஸ்வரர் சிவன் கோவில்,  ஹரிபூர்

20.கங்கேஸ்வரர் சிவன் கோவில்,  தேவகாட்

21. ஷிகர் ஷிக்னாபூர் சிவன் கோவில்,  ஷிக்னாபூர்

22. மஹா பலேஷ்வர் சிவன் கோவில்,  மஹாபலேஷ்வர் குன்று

xxxx

ஆங்கிலத்தில்

1.Triambakeshwar (Trayambakeswar) Jyotirlinga, Nasik

2.Bhimashankar Jyotirlinga, Pune

3.Grishneshwar Jyotirlinga, Aurangabad

4.Aundha Nagnath Temple, Hingoli

5.Kailasanatha Shiva Temple, Ellora Caves

6.Ambarnath Shiva Mandir, Ambarnath

7.Kopeshwar Shiva Temple, Kolhapur District

8.Vaijnath (Vaidyanath) Shiva Temple, Parali

9.The Elephanta Cave Trimurti Temple

10. Gondeshwar Temple at Sinnar, Nasik District

11. Babulnath Shiva Temple, Mumbai

12. Bhuleshwar Shiva Temple, Mumbai

13. Walkeshwar /Baan Ganga Temple, Mumbai

14.Amruteshwar Shiva Temple in Ahmednagar

15.Velneshwar Shiva Temple of Ratnagiri

16. Baneshwar Mahadev Temple in Nasrapur near Pune

17.Jyotiba temple, near Wadi Ratnagiri, Kolhapur District

18.Marleswar cave Shiva Temple 17 km from Devrukh and 44 km from Sangameshwar Road railway station

19. Sangameshwar Shiva Temple, Haripur

20. Kunkeshwar Shiva temple, Devgad

21. Shikhar Shingnapur temple | Shambhu mahadev mandir in shingnapur

22. Mahabaleswar

Xxxx

39.த்ரயம்பக ஈஸ்வரர் கோவில் (श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग मंदिर)

நாசிக் நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த த்ரயம்பகேஸ்வரர் கோவில் 12  ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாகும். த்ரயம்பக என்றால் முக்கண்ணன் என்று பொருள். யஜுர் வேத ருத்ர மந்திரத்தில் வரும் புகழ்பெற்ற ம்ருத்யுஞ்ஜய மந்திரம் த்ரயம்பகம் யஜாமஹே……………………… என்று துவங்கும் . தமிழ் இலக்கியங்களிலும் முக்கண்ணன் என்னும் சிவனைக் காண்கிறோம்.

கோதாவரி என்னும் புனித நதி இந்தக் கோவிலுக்கு மிக அருகில் உற்பத்தி ஆகிறது. கோவில் வளாகத்திலேயே குசவர்த்த என்னும் புனித தடாகமும் உள்ளது இந்த இடம் மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் லிங்கத்துக்கு மூன்று முகங்கள் இருப்பதாகும். அவை பிரம்மா , விஷ்ணு, சிவன்/ருத்ரன் ஆகிய மூவரையும் குறிக்கும். நான்கு வாயில்களுடைய கோபுரத்தில் வடக்கு வாசலே மிகப்பெரியது . இந்த வாயிலின் வழியே பக்தர்கள் உள்ளே செல்லலாம்.அதை அடுத்து இசை மண்டபம் காணப்படும். தெற்கு, மேற்கு வாசல்களுக்கு இடையே அம்ருத குண்டம் என்னும் ஏரி இருக்கிறது.

சிவன் சந்நிதிக்கு எதிர்ப்புறம் நந்தியை தரிசிக்கலாம். கிழக்கு வாசலில் நுழைந்தவுடன் 12 சதுர அடி சலவைக்கல்லில் ஆமை உருவம் அமைந்துள்ளது மேற்கு பகுதியில் சிவலிங்க சந்நிதி. ஐந்து படிகள் இறங்கிச் சென்றால் லிங்கத்தை தரிசிக்கலாம்.பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிக்கும் மூன்று மிகச் சிறிய பாணலிங்கங்கள் உள்ளன எப்போதும் தண்ணீர் ஊற்றெடுத்து வந்து கொண்டிருக்கிறது கிழக்குப் பகுதியில் சலவைக் கல்லாலான பார்வதி காட்சி தருகிறாள்.

கோவிலில் ஏனைய வட இந்தியக் கோவில்களிலிருப்பது போலவே வைணவ, சாக்த தெய்வ உருவங்கள் இருக்கின்றன. மூன்று சின்ன பாண லிங்கங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஆவடை யார் காணப்படுகிறது. இதன் மேல் ஒரு முகம் அல்லது 3 முகம் அல்லது 5 முகம் கொண்ட சிவபெருமானின் உருவத்தை வைத்து பூஜை செய்கிறார்கள்

Xxxx

பீம சங்கர ஜோதிர்லிங்கம் கோவில்

இதே தொடரில் வெளியான பகுதி 3-ல் எண் 10-ல் பீம சங்கரம் பற்றிய விவரத்தைப் படிக்கலாம்

xxx

40. கிரிஷ்ணேஸ்வரர் ஜோதிர் லிங்க கோவில்

அவுரங்காபாத் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் எல்லோரா குகைக் கோவிலுக்கு மிக அருகாமையிலும் இருக்கும் கிரிஷ்ணேஸ்வரர் கோவில் 12 ஜோதிர் லிங்க கோவில்களில் ஒன்றாகும் ; கருணைமிக்க சிவன் என்னும் பொருளில் கிரிஸ்ணேஸ்வர்  என்ற பெயர் உருவாகியது . டில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்திலும் அவுரங்க சீப் போன்ற மதவெறியர் காலத்திலும் முஸ்லீம்களால் சிதைக்கப்பட்ட இந்தக் கோ வில், பக்தர்களின் முயற்சியால் மீண்டும் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. இந்தூர் மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் ஏராளமான  கோவில்களை  புணருத்தாரணம் செய்தார். அதில் ஒன்று இந்தக் கோவில்.

12 முக்கிய சிவன் கோவில்களில் மிகவும் சிறியது இதுதான். மராத்திய பாணியில் சிவப்பு நிற பாறைகளால் அமைக்கப்பட்ட கோவில் இது. கோவிலுக்குச் செல்லும் வழியில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளையும் காணலாம் .ஐந்து நிலைக்கு கோபுரம் உடைய இங்கு பல தெய்வங்களின் உருவச் சிலைகளையும் தரிசிக்கலாம்

24 தூண்கள் உடைய மண்டபம் ஒன்றில் சிவ பெருமானின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்குள்ளே செல்லும் ஆண்கள் மேல் சட்டைகளையும் பனியன்களையும் கழற்றிவிட்டு உள்ளே செல்லவேண்டும்.

அவுரங்காபாத் பஸ்  நிலையத்திலிருந்து நிறைய பஸ்கள்  கோவிலை நோக்கிச் செல்கின்றன.

2022ம் ஆண்டில் கோவிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் எழுதுகிறார் : “நாங்கள் அவுரங்காபாத்திலிருந்து காரில் சென்றோம். முக்கால் மணி நேரத்தில் கோவிலை அடைந்தோம். கார் நிறுத்த வசதி உள்ளது 20 ரூபாய்க்கு பூக்கள் பூஜை சாமான்கள் நிறைந்த தட்டுகளை பல கடைகள் விற்கின்றன. நாங்கள் 100 ரூபாய்க்கு பூக்கள்  முதலியவற்றை வாங்கினோம். முக்கால் மணி நேரம் க்யூவில் / வரிசையில் நின்றோம். ஆயினும் சிவலிங்கத்தை நாமே வணங்கலாம். அதனால் நல்ல திருப்தி கிடைத்தது. அனைவரும் தரிசிக்க வேண்டிய இடமே.

xxx

My old article in this blog

திரயம்பகேஸ்வரம், ஜோதிர்லிங்கம், ஆமை …

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › த…

10 Dec 2015 — இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் …

To be continued……………………………..

Tags- திரயம்பகேஸ்வரம்,   ஜோதிர்லிங்கம், ஆமை, கிரிஷ்ணேஷ்வர் , த்ரயம்பக, முக்கண்ணான் , நாசிக், கோதாவரி

ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்! (Post No.11,970)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,970

Date uploaded in London –   May 5, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 11

ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்!

.நாகராஜன்

பகுதி 15

அனைத்து யூதர்களையும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி, வயதில் மிக மிக மூத்தவர்களாக இருந்தாலும் சரி, இரக்கமின்றி கொன்று குவித்த ஹிட்லர் ஒரே ஒரு யூதரை மட்டும் கொல்லவில்லை. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை இது.

இதை வெளிப்படுத்தியது ஒரு கடிதம்.

ஃப்யூரர் ஹிட்லர் தனது SSக்கு (Secret Service) ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். அதன் படி ஜட்ஜ் எர்ன்ஸ்ட் ஹெஸ் -ஐக் (Judege Ernst Hess) கொல்ல வேண்டாம் என்று கூறினான்.

முதல் உலகப் போரில் ஹிட்லரின் கமாண்டராக இருந்தவர் எர்ன்ஸ்ட் ஹெஸ்.

அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ஈவு இரக்கமின்றிக் கொல்ல உத்தரவிட்ட ஹிட்லர் தனது ஒரு காலத்திய கமாண்டரைக் கொல்ல வேண்டாம் என்று கூறி விட்டான்.

ஹெஸ்-இன் மகள் ஊர்சுலா (Ursula) தனது 86ஆம் வயதில் இந்த அபூர்வமான சம்பவத்தை 2012இல் வெளியிட்டார்.

2012ஆம் ஆண்டு டெய்லி மெயில் இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் வெளியிட்டது.

கெஸ்டாபோ (Dusseldorf Gestapo) வின் ஃபைல்கள் பத்திரமாக ஓரிடத்தில் இருந்தன. அதில் சீக்ரட் சர்வீஸின் தலைவனான ஹென்ரிச் ஹிம்லர்  (SS – Heinrich Himmler) 1940, ஆகஸ்ட் 27ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் ஹெஸ்-க்கு ஒரு நிவாரணம் (relief and protection as per the Fuhrer’s wishes) மற்றும் பாதுகாப்பு ஃப்யூரரின் விருப்பத்திற்கிணங்க தரப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தான்.

எர்ன்ஸ்ட் மோரிஸ் ஹெஸ் (Ernst Moritz Hess) 1890ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் இரண்டாம் ராயல் பவேரியன் ரிஸர்வ் இன்ஃபண்ட்ரியில் (Second Royal Bavarian Reserve Infantry) ஒரு ஆபீசராக – அதிகாரியாகச் – சேர்ந்தார்.

இதே ரெஜிமெண்டில் தான் ஹிட்லரும் தானாக வந்து சேர்ந்தார்.

இருவரும் 1914ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் ஃப்ளான்டர்ஸ் (Flanders) போர்க்களத்தின் முன்னணி நிலைக்கு அனுப்பப்பட்டனர்.  1918முடிய அதில் அவர் பணியாற்றினார்.

1916ஆம் ஆண்டு ஹெஸ் தற்காலிகமாக ஹிட்லரின் கம்பெனி கமாண்டராக இருந்தார்.

ஹெஸ்ஸின் தாயார் ஒரு யூதர். ஆனால் ஹெஸ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார்.  ஆனால் நாஜிக்களின் 1935ஆம் ஆண்டு சட்டப்படி ஹெஸ் ஒரு யூதர் தான்.

 1936ஆம் ஆண்டு இந்த விதிகளின் படி ஹெஸ் தனது நீதிபதி பதவியிலிருந்து கட்டாயமாக விலகுமாறு வற்புறுத்தப்பட்டார்.

 1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விதியிலிருந்து தனக்கு ஒரு விலக்கு அளிக்குமாறு ஹெஸ் ஒரு பெடிஷனை ஹிட்லருக்கு அனுப்பினார். தனது மகளுக்கும் இனச் சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் படி அவர் வேண்டினார்.

1937 அக்டோபரில் இத்தாலியில் போல்ஜனாவிற்கு (Bolzano)விற்கு இடம் பெயர்ந்த ஹெஸ் மீண்டும் 1938இல் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 

ஹிட்லருடனான தனது நட்பு தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தனது குடும்பத்துடன் பவேரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 1940ஆம் ஆண்டு மத்தியில் குடியேறினார்.

ஹிம்லரின் கடிதத்தின் ஒரு நகல் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை மூனிஸ் நகரில் சீக்ரட் சர்வீஸ் முன்னால் ஆஜராக வேண்டும் என்று SS உத்தரவிட்டது.

அவர் தனக்கு ஹிம்லர் அளித்த ‘பாதுகாப்பு” அளிக்கப்பட்ட கடிதத்தை அங்கு காண்பித்த போது அது 1941இல் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இப்போது அவர் மற்றவர்களைப் போல நூறு சதவிகிதம் யூதர் தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் கொல்லப்படவில்லை.

இந்த விவரத்தை எல்லாம் 2012ஆம் ஆண்டு 86 வயதான ஊர்சுலா பத்திரிகை பேட்டியில் தெரிவித்தார்.

ஆக ஹிட்லர் உயிருடன் விட்ட ஒரு யூதரும் இருந்திருக்கிறார் என்பது இரண்டாம் உலகப் போரின் ஒரு மிக மிக அபூர்வமான செய்தியாக ஆகிறது!

****

22 Famous Shiva Temples ;Part 9 of 108 Maharashtra Shrines (Post No.11,969)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,969

Date uploaded in London – –  May 4 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 9

We have seen six famous Devi/Shakti shrines in Maharashtra. Now let us look at 22 famous Shiva Temples in Maharashtra. The famous Shiva templesin the state  are

1.Triambakeshwar (Trayambakeswar) Jyotirlinga, Nasik

2.Bhimashankar Jyotirlinga, Pune

3.Grishneshwar Jyotirlinga, Aurangabad

4.Aundha Nagnath Temple, Hingoli

5.Kailasanatha Shiva Temple, Ellora Caves

6.Ambarnath Shiva Mandir, Ambarnath

7.Kopeshwar Shiva Temple, Kolhapur District

8.Vaijnath (Vaidyanath) Shiva Temple, Parali

9.The Elephanta Cave Trimurti Temple

10. Gondeshwar Temple at Sinnar, Nasik District

11. Babulnath Shiva Temple, Mumbai

12. Bhuleshwar Shiva Temple, Mumbai

13. Walkeshwar /Baan Ganga Temple, Mumbai

14.Amruteshwar Shiva Temple in Ahmednagar

15.Velneshwar Shiva Temple of Ratnagiri

16. Baneshwar Mahadev Temple in Nasrapur near Pune

17.Jyotiba temple, near Wadi Ratnagiri, Kolhapur District

18.Marleswar cave Shiva Temple 17 km from Devrukh and 44 km from Sangameshwar Road railway station

19. Sangameshwar Shiva Temple, Haripur

20. Kunkeshwar Shiva temple, Devgad

21. Shikhar Shingnapur temple | Shambhu mahadev mandir in shingnapur

22. Mahabaleswar

The State is an abode of 3 of the 12 Jyotirlinga shrines of Lord Shiva including Triambakeshwar Jyotirlinga in Nasik, Bhimashankar Jyotirlinga near Pune and Grishneshwar Jyotirlinga near Aurangabad.

Two of the grand ancient rock-cut Shiva temples of India, The Elephanta Cave Temple and the Kailasanatha Temple at Ellora are also located in the State.

xxxx

39.TRYAMBAKESWARAR TEMPLE (श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग मंदिर)

TRYAMBAKESWARAR TEMPLE wrongly spelt as Trimbakeshwar is 28 kilometres from Nashik. It is one of the 12 Jyotirlinga shrines.

Trayambaka is one of the names of Lord Shiva meaning Three Eyed.

River Godavari originates very near this temple. Sacred pond Kusavarta Kunda is in the temple complex.

It is situated among three hills. The extraordinary feature of the Linga in the temple is three faced representing, Lord Bramha, Lord Vishnu and Lord Shiva.

There are entry gates on all the four sides. The entry gate on the North side of the temple bulwark is the biggest and the devotees enter from this gate only. There is a Nagarakhana of the size 38 feet by 15 feet. Between the entry gate of west and south, there is Amrut kund- a graceful, compact lake

Facing the main temple, opposite the gate is temple of Nandi-pious bull of Lord Shiva. There are three gates to the main temple facing east, south and north. After entering from the eastern gate, there is an attractive a hall with dome shaped canopy. On 12 feet square of marble, there is a turtle-a religious symbol.

On the west side is main sanctum of the temple. One enters the sanctum by descending five steps and sees the Swayambhu (natural-self existent) Shiva linga in a tiled surrounding. There are three thumb sized Ban ling of three almighty gods-Brahma,Vishnu and Mahesh. The continuous flow of water i.e. Ganga flows from the Bana linga of Shiva. On the east of this Jyotirlinga is marble statue of Goddess Parvati.

Xxxx

Bhimashankar Jyotirlinga, Pune

I have already dealt with in part 3, item number 10

10.BHIMASANKARA JYOTIRLINGA TEMPLE

Xxxxx 

40.Grishneshwar Jyotirlinga, Aurangabad

Grishneshwar temple is 30 kilometres from Aurangabad and within a kilometre of famous Ellora caves.

The temple structure was destroyed by the Delhi Sultanate Muslim Rulers in 13th and 14th-century. The temple went through several rounds of rebuilding followed by repeated destruction by Muslim rulers. It was rebuilt by the queen Ahilyabai Holkar of Indore, after the fall of the Mughal Empire

Temple was constructed with red rocks in Maratha style. This is the smallest of the Jyotirlinga temples. Vishnu’s Dasavathara scenes are also seen in the temple complex.

The tower is a five tier one. There is a Nandi bull in the court hall. The temple houses carvings and sculptures of many Hindu gods and goddesses.

For males it is mandatory to remove shirt/banian while entering into main jyotrilinga premises. many buses available from Aurangabad bus stand and its just around 30 kms.

xxx

One visitor who visited the temple in 2022 has written ,

We visited this temple on 29 Oct 22. We started from Aurangabad at around 8 am and reached Grishneshwar Temple at 8:45 am in our own car. We found a parking just opposite to the temple. There are so many shops selling Pooja items. Price vary from Rs 20 onwards. We took one for Rs 100 with flowers, Bel, Datura and Lotus flower. It took us 45 mins to clear the queue and reach for darshan. Men need to enter the sanctum sanctorum bare chested. You can remove your clothes above your waist before entering the sanctum sanctorum and later on wear  them ; we could  touch the Shiva Lingam.

Overall a visit worth the effort.

To be continued……………………………………………..

Tags- Grishneshwar ,Jyotirlinga, temples, Triambakeshwar, Trayambakeswar, Part 9, Maharashtra shrines

What Gandhiji wrote Before Godse’s Shooting (Post No.11,968)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,968

Date uploaded in London – –  May 4 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Abducted Women

Gandhiji was shot dead by Nathuram Godse n 30th January 1948. Millions of Hindus in Punjab and Bengal were suffering because of partition. Muslims kidnapped and raped and converted thousands of Hindu and Sikh women.

xxxx

Just three weeks before his assassination Gandhiji wrote in Harijan magazine on 4th January 1948,

“Several thousand Hindu and Sikh girls had been taken away by Muslims. The whereabouts of a few were known., but there were large numbers about whom we knew nothing. When contacted some were reported to have said they did not wish to return they were afraid that they would not be accepted by their society. Their husbands, parents and friends would look down upon them. Gandhiji wanted to say, with all the emphasis at his command, that society welcome those girls back. Some of them were pregnant. It was no fault of theirs. Their children, when born, should be treated with the same regard and respect as any other children. The religion of these children would be that of mother. On growing up they were to change it if they wished. If any such girl came to him, she would be treated by him as any other girl in his party. To castigate these girls, have fallen victim to the lust of some monster was less than human. No shame attached to them.

Harijan 4-1-1948

Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)

Xxx

What Godse said in his final statement in the court

( I have given only some paragraphs from following website)

From Indiansaga.com

Nathuram Godse’s final statement (unedited)


“On January 13, 1948, I learnt that Gandhiji had decided to go on fast unto death. The reason given was that he wanted an assurance of Hindu-Muslim Unity… But I and many others could easily see that the real motive… [was] to compel the Dominion Government to pay the sum of Rs 55 crores to Pakistan, the payment of which was emphatically refused by the Government…. But this decision of the people’s Government was reversed to suit the tune of Gandhiji’s fast. It was evident to my mind that the force of public opinion was nothing but a trifle when compared with the leanings of Gandhiji favourable to Pakistan.

….In 1946 or thereabout, Muslim atrocities perpetrated on Hindus under the Government patronage of Surhawardy in Noakhali made our blood boil. Our shame and indignation knew no bounds when we saw that Gandhiji had come forward to shield that very Surhawardy and began to style him as ‘Shaheed Saheb’ – a martyr – even in his prayer meetings…

… Ram killed Ravan in a tumultuous fight… Krishna killed Kansa to end his wickedness… In condemning Shivaji, Rana Pratap and Guru Govind as ‘misguided patriots,’ Gandhiji has merely exposed his self-conceit… Gandhiji was, paradoxically, a violent pacifist who brought untold calamities on the country in the name of truth and nonviolence, while Rana Pratap, Shivaji and the Guru will remain enshrined in the hearts of their countrymen forever…

…. ….One of the conditions imposed by Gandhiji for his breaking of the fast unto death related to the mosques in Delhi occupied by Hindu refugees. But when Hindus in Pakistan were subjected to violent attacks he did not so much as utter a single word to protest and censure the Pakistan government…

Gandhi is being referred to as the Father of the Nation. But if that is so, he had failed his paternal duty inasmuch as he has acted very treacherously to the nation by his consenting to the partitioning of it… The people of this country were eager and vehement in their opposition to Pakistan. But Gandhiji played false with the people…

….I shall be totally ruined, and the only thing I could expect from the people would be nothing but hatred… if I were to kill Gandhiji. But at the same time, I felt that Indian politics in the absence of Gandhiji would surely be proved practical, able to retaliate, and be powerful with armed forces. No doubt, my own future would be totally ruined, but the nation would be saved from the inroads of Pakistan…

.I do not desire any mercy to be shown to me… I did fire shots at Gandhiji in open daylight. I did not make any attempt to run away; in fact I never entertained any idea of running away. I did not try to shoot myself… for, it was my ardent desire to give vent to my thoughts in an open Court. My confidence about the moral side of my action has not been shaken even by the criticism levelled of against it on all sides. I have no doubt, honest writers of history will weigh my act and find the true value thereof some day in future.”

Nathuram Godse

—subham—

Tags- Godse, Gandhiji, Hindu women, abduction, Pregnant,

கோட்ஸே சுட்டதற்கு முன்னால் காந்திஜி எழுதியது (Post No.11,967)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,967

Date uploaded in London – –  May 4 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நாதுராம் கோட்ஸே சுட்டுக்கொன்றான். அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னால் காந்திஜி எழுதியதைப்  பார்க்கும்போது அதுதான் அவனுக்கு ஆத்திரம் ஊட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

xxxxx

காந்திஜி எழுதியது

கடத்தப்பட்ட பெண்கள்

பல்லாயிரக்கணக்கான இந்துப் பெண்களையும் சீக்கியப்  பெண்களையும் முஸ்லீம்கள் தூக்கிச் சென்றுவிட்டனர். அவர்களில் ஒரு சிலர் மட்டும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரிந்தது , ஆனால் பெருந்தொகையான பெண்கள் பற்றி நமக்கு தகவல் கிடைக்கவில்லை.சிலரைத் தொடர்புகொண்டபோது சிலர் திரும்பி வருவதற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார்கள்  அவர்களுடைய சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள் . அவர்களுடைய கணவன்மார்கள் பெற்றோர்கள் , நண் பர்கள் ஆகியோர் அவர்களை தாழ்வாக நினைப்பார்கள் . அந்தப் பெண்களை சமுதாயம் வரவேற்கும் என்பதை காந்திஜியான நான் உறுதிபடச் சொல்லுவேன். அவர்களில் பலர் கர்ப்பவதிகள் . அப்படி கர்ப்பம் அடைந்தது அவர்கள் செய்த தவறு அல்ல.அவர்களுக்கு குழந்தை பிறக்கும் போது ஏனைய குழந்தைகளை போலவே அவர்கள் நடத்தப்படவேண்டும்..

அந்தக் குழந்தைகளின் மதம், அவர்களுடைய தாயாரின் மதமாக இருக்கும் .வளர்ந்த பின்னல் அவர்கள் விரும்பினால் மதம் மாறிக்கொள்ளலாம்.அப்படிப்பட்ட பெண்கள் எவரேனும் என்னிடம் வந்தால் , என்னுடைய குழுவிலுள்ள மற்ற பெண்களைப்போலவே அவர்களும் நடதப்படுவார்கள் . சில மிருகங்களின் காம இச்சைக்குப் பலியான இந்தப் பெண்களைக் கண்டிப்பது மனிதாபிமானம் அற்ற செயல் ஆகும். அவர்கள் விஷயத்தில் அவமானம் ஏதுமில்லை

ஹரிஜன் பத்திரிகை 4-1-1948

மஹாத்மா காந்தி எழுதியது . Harijan 4-1-1948

Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)

Xxxx

காந்திஜி  பற்றி கோர்ட்டில் நாதுராம் கோட்ஸே  சொன்னது:—

What Godse said in his final statement in the court  ( I have given only some paragraphs)

From Indiansaga.com

Nathuram Godse’s final statement (unedited)


“On January 13, 1948, I learnt that Gandhiji had decided to go on fast unto death. The reason given was that he wanted an assurance of Hindu-Muslim Unity… But I and many others could easily see that the real motive… [was] to compel the Dominion Government to pay the sum of Rs 55 crores to Pakistan, the payment of which was emphatically refused by the Government…. But this decision of the people’s Government was reversed to suit the tune of Gandhiji’s fast. It was evident to my mind that the force of public opinion was nothing but a trifle when compared with the leanings of Gandhiji favourable to Pakistan.

….In 1946 or thereabout, Muslim atrocities perpetrated on Hindus under the Government patronage of Surhawardy in Noakhali made our blood boil. Our shame and indignation knew no bounds when we saw that Gandhiji had come forward to shield that very Surhawardy and began to style him as ‘Shaheed Saheb’ – a martyr – even in his prayer meetings…

… Ram killed Ravan in a tumultuous fight… Krishna killed Kansa to end his wickedness… In condemning Shivaji, Rana Pratap and Guru Govind as ‘misguided patriots,’ Gandhiji has merely exposed his self-conceit… Gandhiji was, paradoxically, a violent pacifist who brought untold calamities on the country in the name of truth and nonviolence, while Rana Pratap, Shivaji and the Guru will remain enshrined in the hearts of their countrymen forever…

…. ….One of the conditions imposed by Gandhiji for his breaking of the fast unto death related to the mosques in Delhi occupied by Hindu refugees. But when Hindus in Pakistan were subjected to violent attacks he did not so much as utter a single word to protest and censure the Pakistan government…

Gandhi is being referred to as the Father of the Nation. But if that is so, he had failed his paternal duty inasmuch as he has acted very treacherously to the nation by his consenting to the partitioning of it… The people of this country were eager and vehement in their opposition to Pakistan. But Gandhiji played false with the people…

….I shall be totally ruined, and the only thing I could expect from the people would be nothing but hatred… if I were to kill Gandhiji. But at the same time, I felt that Indian politics in the absence of Gandhiji would surely be proved practical, able to retaliate, and be powerful with armed forces. No doubt, my own future would be totally ruined, but the nation would be saved from the inroads of Pakistan…

.I do not desire any mercy to be shown to me… I did fire shots at Gandhiji in open daylight. I did not make any attempt to run away; in fact I never entertained any idea of running away. I did not try to shoot myself… for, it was my ardent desire to give vent to my thoughts in an open Court. My confidence about the moral side of my action has not been shaken even by the criticism levelled of against it on all sides. I have no doubt, honest writers of history will weigh my act and find the true value thereof some day in future.”

Nathuram Godse

—-subham—-

TAGS- இந்து, சீக்கிய பெண்கள், முஸ்லீம் கடத்தல், கர்ப்பம் ,

தலைவனுக்காகஏங்கியஜெர்மனி (Post No.11,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,966

Date uploaded in London –   May 4 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 10

தலைவனுக்காக ஏங்கிய ஜெர்மனி

.நாகராஜன்

பகுதி 13

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 முடிய நடந்தது.

இதில் ஜெர்மனி முக்கியப் பங்கை வகித்தது. ஆரம்ப கால வெற்றிகளை அது பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது யுத்தத்தில் தனது தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

 போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட, வெர்சாய் உடன்படிக்கை (Treaty of Versailles) என்ற ஒரு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட நேர்ந்தது.

அதில் அது நன்கு தண்டிக்கப்பட்டது.   அமெரிக்க உட்ரோ வில்ஸன் ஜெர்மனியைக் கடுமையாகத் தண்டிக்க விருப்பப்படவில்லை. எதிர்காலத்தில் வீறு கொண்டெழுந்து ஜெர்மனி அனைவரையும் தாக்கக்கூடும் என்று அவர் முன்னெச்சரிக்கையுடன் ஊகித்தார். ஆனால் பிரான்ஸின் ஜார்ஜ் க்ளிமென்ஸ் ஜெர்மனியைப் பழி வாங்க நினைத்தார். பிரான்ஸின் நஷ்டத்திற்கு ஜெர்மனி பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பிரிட்டனின் டேவிட் லாய்ட் ஜார்ஜ் பிரிட்டன் மக்களின் விருப்பத்தை நன்கு அறிந்திருந்தார். அவர்கள் ஜெர்மனியைப் பழிவாங்கத் துடித்தனர். ஆக இந்த அனைத்துப் பார்வைகளும் ஒன்று சேர வெர்சாய் உடன்படிக்கையில் ஜெர்மனி நன்கு பழி வாங்கப்பட்டது.

போரை ஆரம்பித்தது ஜெர்மனியே என்ற போர்க் குற்றத்தை (War Guilt Clause) அது ஏற்க வேண்டி வந்தது. ஜெர்மானியர் இதைக் கேட்டுத் துடித்தனர். போர் ஆரம்பிக்க ஆஸ்திரியா- ஹங்கேரியும் காரணம்; அதை மறைத்து அனைத்துப் பொறுப்பையும் தம்  மீது திணிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆஸ்திரியா- ஹங்கேரியே செர்பியா மீது முதலில் போர் தொடுத்தது. ஆகவே தான் உலகப் போர் துவங்கியது.

அடுத்து ஜெர்மானிய ராணுவத்தை பலமிழக்க ஒரு ஷரத்து இருந்தது. அதன் படி ஜெர்மனியின் ராணுவ வீரர்கள் ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டனர். இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .

கடற்படையில் ஆறு போர்க்கப்பல்களே வைத்துக் கொள்ளலாம், சப்மரீனோ, விமானங்களோ டாங்குகளோ உற்பத்தி செய்யப்படக் கூடாது. அத்தோடு நேச நாட்டுத் துருப்புகள் 15 ஆண்டுகள் அங்கு இருக்கும்,  ஜெர்மனியில் சில பகுதிகள் ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டன. மிக மோசமான ஷரத்தாக இருந்தது ஜெர்மனி 66000 லட்சம் பவுண்டுகளை போர் இழப்பீடாகத்தர வேண்டும் என்பது தான்.

இவ்வளவு மாபெரும் தொகையை ஜெர்மனி எப்படித் தர முடியும். அமெரிக்கா கடனாகத் தர முன் வந்தது.

ஜெர்மனியில் பொருளாதாரம் ஆடிப் போனது. பணவீக்கம் ஒரு புறம், எதையும் வாங்க முடியாமல் ஜெர்மானியர் தவிக்க, போரில் தோல்வி, அவமானம் இன்ன பிற தொல்லைகளும் சேர ஜெர்மானியர் மனம் உடைந்தனர்.#

 அவர்கள் தங்கள் நாட்டைத் தூக்கி விட நல்ல ஒரு தலைவனுக்காக ஏங்கினர். உற்சாகம் தர வல்ல அந்தத் தலைவன் யார்? 

பகுதி 14

 ஹிட்லரின் தோற்றம்!

இந்தக் கால கட்டத்தில் தான் ஹிட்லர் தோன்றினார்.

1889 ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பிறந்த ஹிட்லர் 56 ஆண்டுகளே வாழ்ந்து உலகை ஒரு கலக்குக் கலக்கி 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

நாஜி கட்சியின் தலைவராக அவர் 1920-21இல் விளங்கிப் பின்னர் ஃப்யூரர் என தன்னை அறிவித்துக் கொண்டார். 1933 முதல் 1945 முதல் தன்னிகரற்ற ஒரே தலைவனாக விளங்கினார்.

1933 ஜனவரி 30 முதல் அவர் ஜெர்மனியின் சான்ஸலராக ஆனார். பிறகு ஜனாதிபதி பால் வான் ஹிண்டன்பெர்க் மறைந்ததை ஒட்டி அவரே இரு பதவிகளையும் – ஃப்யூரர் மற்றும் சான்ஸலர் – ஏற்றுக் கொண்டார்.

ஃப்யூரர் என்றால் ஜெர்மானிய மொழியில் தலைவர் என்று அர்த்தம்!

***