Find out 17 words that occurs in Hindu scriptures or literature; colour coding will help you to some extent.
ACROSS
1. an emperor, universal monarch, sovereign of the world, a ruler whose dominions extend as far as the ocean in Sanskrit
6. a Sanskritpoetician contemporary of Daṇḍin. He is noted for writing a work called Kavyalankara .
7.vehicles of Gods like Garuda, Mayura, Rishabha;
8. refers to that particular sign of the zodiac which is cut by the eastern horizon at the time of one’s birth; also auspicious moment ;
9.at least seven kings of Kampuchea/ Cambodia had this name;
10.water Lilly in Sanskrit; also common feminine name ;
11.Hunter who killed Lord Krishna ;
12.New Year for Telugus, Kannadigas;
13.an appendix; addition; even Rig Veda has this ;
15.Biggest Buddhist stupa in Java, Indonesia;
16.Half Shiva, half Parvati form
xxxxxx
DOWN
2. “gesture of fearlessness” is a gesture of reassurance and safety shown with hand or palm, which dispels fear and accords divine protection and bliss in Hinduism, Buddhism and other Indian religions ;
3.Indian gooseberry tree; Malacca got this name from this tree;
4.a drama written by Harsha about Udayana and this princess ;
5. a 7th century Chinese Buddhist pilgrim who has left behind an account of his travels to India. ; he came after fa-hien and hiuen-tsang,
51.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில் Hedathale Lakshmikantha Swami temple
நஞ்சன் கூடு தாலுகாவில் உள்ள லெட்சுமிகாந்த கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன . இடது தலை என்பது ஊரின் சரியான பெயர்.. இங்கு லெட்சுமிகாந்த சுவாமி கோவில் உளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹொய்சாளர் கால கோவில். இது த்ரிகூட கூட கோவில்; அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்; அவைகளை இணைக்கும் பொது மண்டபமும் இருக்கும் . இந்தக் கோவிலில் லெட்சுமிகாந்த சுவாமிக்கு அருகில் லெட்சுமிநரசிம்ம சுவாமி, வேணுகோபால சுவாமிகளும் இரண்டு கர்ப்பக் கிரகங்களில் இருக்கின்றனர்.
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் ஹதினாறு முக சாவடி ஆகும். ஹதினாறு என்றால் தமிழில் 16 என்று பொருள். இந்த மண்டபம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுளது . இரண்டாம் வீர வல்லாளன் 1187ல் கட்டிய கோவில். அவர் காலத்தில் பீம தண்ட நாயக ஒரு பாளையக்காரர் .
அவருக்கு (பாளையக்காரருக்கு) 16 பெண்களாம்.. மாமியார்கள் , மாப்பிள்ளைகளை நேரடியாகப் பார்க்கக்கூடாது என்பதால் 16 முக மண்டபத்தைக் கட்டினார் . 16 ஜோடிகள் அமரும்போது பாளையக்காரரின் மனைவி– அதாவது மாமியார் , 16 பெண்-மாப்பிள்ளைகளைக் காண முடியாது. இதற்காக அற்புதமாக டிசைன் செய்யப்பட்டது இந்த ஹதினாரூ/ பதினாறு முக சாவடி/ மண்டபம் !!
இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயமும் உண்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கும் இங்கே கர்ப்பக்கிரகம் உள்ளது. அர்ச்சகர் தீவாராதனை காட்டும்போது ஆண்டாளின் கண்கள் பளபளக்கும் . அப் போது பக்தரை ஆண்டாள் பார்ப்பது போலத் தோன்றும் !
எடத்தலை , மைசூரு நகரிலிருந்து 40 கி.மீ .
XXXX
52. சோம்நாத்பூர் கோவில் Chennakeshava Temple, Somanathapura
மைசூரு நகரிலிருந்து 33 கி.மீ .தொலைவில் கட்டிடக் கலை சிறப்புமிக்க சோம்நாத்பூர் கோவில் அமைந்துள்ளது.
மூன்றாம் நரசிம்மனின் தண்ட நாயக்க சோமநாதனால் 1258 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இக்கோவில் .
சுவர்கள் முழுக்க ராமாயண , மஹாபாரத , பாகவதக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன . கேசவர், ஜனார்த்தனர் , வேணு கோபாலர் சந்நிதிகள் சபா மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன ; நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது . கோவிலின் கூ ரைகளில் கூட பல வித மலர் வடிவங்களைக் காணலாம்
இங்கு சிவனும் இருப்பதால் சோமநாத என்ற பெயர் ஏற்பட்டது
ஹொய்சாளர்கள் கட்டிடக்கலை மன்னர்கள்; 1500 சமணர் கோவில் , இந்துக் கோவில்களைக் கட்டினார்கள் . அலாவுதீன் கில்ஜியின் படைத்ததலைவன் மாலிக்காபூர். தென் இந்தியா முழுதுமுள்ள கோவில்களைத் தாக்கி தங்கத்தை டன் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றான் இந்தக் கோவிலையும் தாக்கிச் சேதப்படுத்தினான். அவன் அசுரர்களின் மறு அவதாரம். ;பின்னர் துலுக்க ஆட்சிக்கு சாவு மணி அடித்த விஜய நகரப் பேரரசர்கள் பல திருப்பணிகளைச் செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினர் .கோவிலில் உள்ள புராணக் காட்சிகளின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு காட்சியையும் வருணிக்க ஒரு புராணக் கதையைச் சொல்லவேண்டிவரும் .
XXXX
53.தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் Talakkad Temples
மைசூரு நகரிலிருந்து 28 மைல் தொலைவில் இருக்கும் தலக்காடில் முப்பது கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்கள் முக்கியமானவை; .ஸ்ரீ வைத்யனாதேஸ்வரர் , மருளேஸ்வர் பாதாளேஸ்வர் , அர்கேஸ்வர், மல்லிகார்ஜுன கோவில்கள் ஆகியன இவற்றில் அடக்கம்
வைத்யநாதேஸ்வரர் கோவிலில் நிறைய சிற்பங்களை க் காணலாம்
தலக் காடு சாபங்கள்
ஸ்ரீங்கப்பட்டிணத்தில் இருந்த விஜயநகர பிரதிநிதியின் பெயர் திருமலை ராஜா; அவர் ஒரு நோய் காரணமாக இங்கே வைத்யநாதரை வழிபடவந்தபோது, இறுதிக்கா லத்தில் அவர் மனைவி அலமேலு அம்மாள் இங்கு வந்தார். . அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க மைசூரு மஹாராஜா அவரை விரட்டிச் சென்றதாகவும் ஆனால் அந்தப் பெண்மணி தனது நகைகளை காவிரி நதியில் வீசி எறிந்துவிட்டு எதிரில் இருந்த மாலங்கியில் விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது அப்போது அவர் 3 சாபங்களை இட்டார்.
தலக்காடு, பாலைவனம் ஆகட்டும் ;
மாலங்கி சுழல் நிறைந்ததாகட்டும் ;
மைசூரு மஹாராஜா வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும்.
Talkādu Maralaāgi,
Mālingi maduvaāgi,
Mysuru dhorege makkalagade hōgali!
(ತಲಕಾಡು ಮರಳಾಗಿ; ಮಾಲಿಂಗಿ ಮಡುವಾಗಿ, ಮೈಸೂರು ದೊರೆಗೆ ಮಕ್ಕಳಾಗದೆ ಹೋಗಲಿ
இது ஓரளவுக்கு உண்மையே; மணலில் புதைந்திருந்த இரண்டு கோவில்களை மணலை அகற்றி வெளியே எடுக்க வேண்டியதாயிற்று. இவை எல்லாம் 1650 ஆம் அண்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள்.
Xxxxx
54.நஞ்சுண்டேஸ்வரர் கோவில் Nanjundeshwara Temple (also called Srikanteshwara Temple)
Sri Nanjundeswarar Temple
காவிரியில் கலக்கும் கபில நதியின் கரையில் , நஞ்சன்கூடில் அமைந்த இக்கோவிலை தட்சிணப் பிரயாகை என்று அழைப்பர்
120 அடி உயரமுள்ள ஒன்பது நிலைக் கோபுரத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி தேவராஜ அம்மணி கட்டினார்.. பாற்கடலை கடை ந்தபோது தோன்றிய விஷத்தை சிவன் அருந்தியதால் சிவனுக்கு நஞ்சுண்ட சுண்டன் , நீல கண்டன், ஸ்ரீகண்டன் என்ற பெயர்கள் உண்டு. அருகில் பரசுராமர் கோவிலும் இருக்கிறது ; பரசுராமர் இங்கு வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் .
திப்புசுல்தான் நன்கொடை
திப்பு சுல்தானின் யானை குருடனாவுடன் , அவனது அமைச்சர் பூர்ணய்யாவின் ஆலோசனைப்படி யானையை நஞ்சன்கூடு கோவிலுக்கு அனுப்பி 48 நாட்களுக்கு சில பூஜைகளைச் செய்தவுடன், யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது. இதற்கு நன்றி செலுத்தும் முகத்தான், கோவிலுக்கு திப்பு சுல்தான் மரகத லிங்கம் ஒன்றை காணிக்கையாக அளித்தான் . சிவ பெருமானை ஹகீம் (வைத்தியர் )நஞ்சுண்டன் என்று அழைத்தான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நீதி த்விசஷ்டிகா
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3
ச.நாகராஜன்
‘நீதி த்விசஷ்டிகா’ சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள அழகிய நீதி நூல்.
இதை இயற்றியவர் சுந்தரபாண்டியர்.
சுந்தரபாண்டியன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கு வழக்கமாக சூட்டப்பட்ட ஒரு பெயர். ஆகவே இந்த நூலை இயற்றிய சுந்தரபாண்டியரது காலத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
என்றாலும் கூட கி.பி.600 இல் ஜனாஸ்ரயா என்ற நூலில் இதிலிருந்து மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டிருப்பதால் இது ஆயிரத்திநானூறு வருடங்களுக்கு முற்பட்ட நூல் என்று உறுதிபடச் சொல்லலாம்.
கி.பி.750 ஆம் ஆண்டைச் சேர்ந்த சின்னமனூர் செப்பேடு ஒன்று சுந்தரபாண்டியன் சகல சாஸ்திர விற்பன்னன் என்று கூறுகிறது. அரிகேசரி வர்மனுக்கு மூத்தவர் இவர் என்பதால் இவர் நிச்சயமாக கி.பி, 600 அல்லது கி.பி.650 இல் வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.
ஆதிசங்கரரும் தனது பிரம்மசூத்ரத்தில் சமன்வயாதிகரணத்தில் சுந்தர பாண்டியரது மூன்று செய்யுள்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.
இப்படி இன்னும் ஏராளமான நூல்களில் சுந்தரபாண்டியரது அழகிய நீதி ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகளில் இது 120 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
என்றாலும் கூட மூல நூலில் 100 ஸ்லோகங்கள் மட்டுமே இருந்திருக்கக்கூடும் என்றும் 20 அதிகப்படி ஸ்லோகங்கள் காலப்போக்கில் ஏற்பட்ட இடைச்செருகல்களாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகும்.
மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் பல்வேறு நிலைகளுக்கும் சுந்தரபாண்டியர் வாழ்வாங்கு வாழும் அற நெறிகளைக் கூறுகிறார்.
பேச்சில் அடக்கம், நளினம், சத்யம், இனிமை இருக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை.
நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது என்றும் நல்ல நட்பை யாராலும் சரியாக விவரிக்க முடியாது என்றும் கூறும் இவர் நட்பைப் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
வாழ்க்கைக்கு ஒரு பெரும் இடையூறு ஏழ்மை என்று கூறும் இவர் செல்வத்தின் பண்பைப் பற்றியும் அழகுறக் கூறுகிறார். ஆனால் செல்வத்தை விட ஞானம் மிகச் சிறந்தது என்று விளக்குகிறார் சுந்தரபாண்டியர்.
தானம் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற அறவுரையை நம் முன் வைக்கும் இவர் பல்வேறு பொருள்களைப் பற்றி மனிதனுக்குப் பயன்படும் விதத்தில் எடுத்துக் கூறுகிறார்.
இவரது நீதிகளைப் படிக்கும் போது தமிழில் உள்ள திருக்குறள் ஞாபகத்திற்கு வரும். தமிழ் நூலான மூதுரையில் உள்ள பல நீதிகளை இவர் சொல்கிறார்.
அதே போல கவிஞர்களான காளிதாஸர், பர்த்ருஹரி ஆகியோரின் பல செய்யுள்களையும் இவரது ஸ்லோகங்களுடன் ஒப்பு நோக்கி மகிழ முடியும்.
ஆரோக்கியம், வித்வதா, நல்ல நண்பர்களின் சேர்க்கை, நல்ல குலத்தில் பிறப்பு, யாரையும் நம்பி வாழாமல் ஸ்வாதீன வாழ்க்கை ஆகியவையே ஒரு மனிதனுக்கான உண்மையான செல்வம். அவனிடத்தில் லோகாயத ரீதியிலான செல்வம் இல்லாவிட்டாலும் இவையே உண்மையான செல்வங்கள் என்று உறுதிபட இவர் அறிவிக்கிறார். (‘ஆரோக்யம், வித்வத்தா சஜ்ஜனமைத்ரீ மஹாகுலே ஜன்ம’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)
யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தீங்கு பேசாமல் ஊமையாக இருக்கிறார்களோ,
யாரெல்லாம் மற்றவர்களுடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள் என்கிறார் இவர். (பரபரிவாதே மூகா: பரதாரநிரீக்ஷணேஷு ஜாத்யந்தா:’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)
இப்படி 120 ஸ்லோகங்கள் கூறும் அறிவுரைகள் அறவுரைகளே.
டாக்டர் S.ஜெயஶ்ரீ இந்த நூலைத் திறம்பட ஆராய்ந்து நீதி த்விஷ்டிகா என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு அடையார் லைப்ரரி ரிஸர்ச் சென்டர் இதை வெளியிட்டுள்ளது.
சுந்தரபாண்டியரின் நீதி த்விஷ்டிகா காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த காமகோடி ப்ரதீபம் மாத இதழிலும் தொடராக தமிழில் அர்த்தத்துடன் வெளியிடப்பட்டது.
இதை அன்பர்கள் அனைவரும் ஒரு முறையேனும் படித்தால் அது வாழ்க்கையை வளம் படச் செய்யும் சிறந்த வழியை மேற்கொண்டதாக ஆகும்!
The name Burma is the corrupted form of Brahmadesa; scholars agree that Burma is changed in Burmese language to Myanmar. M=B or B=M change is universal; Hindus know that Mumbai was changed into Bombay by the British. In Tamil also we see M=B changes in Bandar= Mandi; Panini himself has given Madra= Badra desa example 2700 years ago.
People used to say that Brahma lied to Shiva and so Shiva cursed that there wont be any temple for him. But we see Brahma temples in many places including Pushkar in Rajasthan. In Tiruppatur near Trichy is Brahmapureeswarar, where a huge Brahma statue is worshipped by thousands of Hindus. More crowd is seen in Brahma’s shrine than main deity Shiva. Almost all Shiva temples in Tamil Nadu have a shrine or statue for Brahma.
In the Guru sloka/hymn also first comes Gurur Brahma; this is to show that he is not relegated to back position. But his temples are very few.
Xxxx
Brahma in Prambhanan, Indonesia
Six Brahmas in Burma
Brahma is shown with Shiva and Vishnu in the Ananta Sayana relief in Thaton and Hmawza.
Two Brahma statues are in Rangoon (now Yangoon) museum and Pagan (now Bagan) museum.
Another Brahma figure can be seen in the pillars of Manuha Temple in Pagan.
Broken images of Brahma were found in two more places.
The Rangoon Museum Brahma is carved in greyish soapstone. He is in Padmasana with three heads and folded hands (Fourth head is behind). He is with matted lock of hair beautifully dressed in the Jata mukuta style crowned over with a floral ornament.
Though Pagan museum Brahma is similar to this, there is a gap of two centuries between them. This one is a product of Indian artist similar to late Gupta period, not later than 10th century CE.
Xxxx
Nanpaya Temple in Pagan
Brahma in Cleveland Museum, U S A
At Burma’s Nan-hpaya Temple in Pagan, among the finest carvings in the entire temple are a set of four bas-relief panels of Lord Brahma. They appear on the inner sanctum walls, facing the presiding deity there. Carved from single stone blocks rather than a slab, the blocks are interlocked to form the panel, reminiscent of Java or Cambodian sculptures
This temple was the residential house of the defeated king Manuha. He is a Talaing. IT IS THE CORRUPTED FORM OF TELUGU’S TELENGANA.
Kanchi Paramacharya (1894-1994) has already shown that Dhillon in North India is a corruption of ‘Tri Linga’ Desa. Tri Linga Desa is changed to Telengana.
They were originally from Telengna area of Andhra Pradesh. King Anawrahta (corrupted form of Anirudhdha) defeated him and imprisoned him in Pagan.
Brahma is seated on lotus flower in Lilaasana posture; he is holding two lotus flowers; hair is arranged in Jatamukuta fashion and one can see his carefully intertwined plaits. Sacred thread is hanging from his left shoulder. Four images are similar. Brahma holding lotus flowers in both hands is very rare.
20 Nov 2014 — 1.Brahma = Big, Supreme, creator; To breathe is also another meaning. · 2.Atmabhu = self existent · 3.Surajyeshta = elder of the Devas/Deities
xxxx
Tamil Hindu Encyclopaedia 31–Brahma / பிரம்மா (Post No.11,489)
Post No. 11,489
Date uploaded in London – 30 November 2022
xxxxx
Why did Hindu Gods lose their Heads? (Post No.4420)
Date: 21 NOVEMBER 2017
xxxxx
பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீனஅறிவியல்!
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.
xxxxx
பிரம்மாவின் 29 பெயர்கள்!
Research paper written by London Swaminathan Research article No.1424; Dated 21 November 2014.
—– subham—-
Tags- Brahma in Burma, Myanmar, Nanpaya temple, Telangana, Talaing
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒன்பது தேசங்கள், பழைய பெயர்களுடன், இக்கட்டத்தில் உள்ளன. அவைகளைக் கண்டுபிடியுங்கள். இதில் தீட்டப்பட்ட வண்ணங்கள் ஓரளவுக்கு உதவும்.
.
ம1
ல
ய
தே
ச
ம்
கா 2
லா
பி3
மா4
லா
த்
வீ
ம்
க்
ர
ஷ் 5
யா
ம
ப
போ
கா
ம்
ல6
வ
ய 7⇠
ம்
ஜ
ம்
ம8
ஹா
லி
ங்
க
ம்
விடைகள்
மலேயா, பர்மா, தாய்லாந்து, ஜாவா, பிலிப்பைன்ஸ், மாலத் தீவுகள் லாவோஸ்,கம்போடியா , ஆமலகங்கள் அவற்றின் வேறு பெயர்கள் :–
1.மலய தேசம் Malaysia , 3.பிரம்ம தேசம் Burma= Myanmar , 2.காம்போஜம் Cambodia , 6. லவ Laos ,5. ஷ்யாம Siam= Thailand ,4. மாலா த்வீப Maldives= Mala Dwipa, 7.யவ Java/Indonesia, 8.மஹாலிங்கம் Philipines ,1. மலாக்கா Malacca= Amalakka= Indian Gooseberry Tree country தமிழில் நெல்லிக்காய் மரம் = ஆ/மலக
1.பிருகு முனிவருக்கு காலில் கண் இருந்தது. பின்னர் விஷ்ணுவை உதைத்தபோது அது மறைந்தது .
xxxx
3.துர்வாச மகரிஷி
xxxx
4.ஆணி மாண்டவ்யர் ; சிறு வயதில் அவர் வண்டுகளை பிடித்து முள்ளால் குத்தினார் ; அதனால் பின்னொரு காலத்தில் கழுவில் ஏற்றப்பட்டார் ; பூர்வ கதை :- அவர் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தபோது , அரண்மனையிலிருந்து திருடிய முத்து மாலை , இரத்தின மாலைகளை எல்லாம் அவர் கழுத்தில் போட்டுவிட்டு திருடர்கள் பதுங்கி இருந்தனர். அரச சேவகர்கள் அவரைப் பிடித்து, மன்னருக்கு முன்னால் நிறுத்தியபோது அவர் சரியானபதிலைச் சொல்ல முடியவில்லை.. அரசன் அவரைக் கழுவில் ஏற்ற உத்தவிட்டான் .
Xxxx
5.ஆங்கிலத்தில் உள்ள seer என்பது சம்ஸ்க்ருத ரிஷி என்ற சொல்லின் திரிபு (mirror image in Linguistics).
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி என்கிறார்; ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ SEE என்பது இதன் மூலம் (root ). அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு SEER நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
Xxxx
Answer to 6th question 6.
1.நீண்ட ஆயுள் 2.மந்திரங்களை காணும் சக்தி 3.ஈசுவரத்தன்மை 4.தெய்வீகப்பார்வை 5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு 6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல் 7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல் இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
Xxx
7.பாணினி சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.
‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’–என்கிறார்.
இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள் —
அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள்.
Xxxxxx
8.சங்க இலக்கியத்தில் நற்றிணைப் பாடல் 231 புலவர் இளநாகனார் பாடியது; அதில் சப்த ரிஷிக்களை தமிழர்கள் கைகூப்பி வணங்குவதை , “கைதொழு மரபின் எழுமீன் போல ” என்றார் வரிகளில் குறிப்பிடுகிறார்.
Xxxxx
9.சங்க இலக்கியத்தில், வசிஷ்ட மஹரிஷியின் மனைவி அருந்ததியை பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவள் கற்பின் இலக்கணம். அருந்ததி காட்டல் என்னும் சப்த ரிஷி தரிசனம் திருமணத்தின் முதலிரவுக்கு முன்னர் நடைபெறும்.
Xxxxx
10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
தேவியின் மூக்குத்தி
தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது – ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.
இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.
அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.
கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து
தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.
கோவில் அமைப்பு
இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால்
தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.
கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமணம் கைகூடும் தலம்
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.
இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் சென்று நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.
இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில்
கன்யாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.
விவேகானந்தர் தவம் புரிந்த இடம்
கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.
ஶ்ரீபாதப் பாறை
இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின்ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
மருந்துவாழ் மலை
கன்யாகுமரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருந்துவாழ்மலை பற்றிய ஆன்மீக வரலாறு ஒன்று உண்டு,
ஹனுமார் அரிய உயிர்காக்கும் சஞ்சீவனி மூலிகையை மலையுடன் பெயர்த்துக் கொண்டு வந்த போது மலையின் ஒரு பகுதி இங்கு விழ அது அரிய மூலிகைகளைக் கொண்ட மருந்து வாழ் மலை என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மலை 2500 அடி உயரம் உள்ளது.
அரிய வகை மூலிகைகளை இது கொண்டுள்ளது. அகத்தியர் இங்கிருந்து தவம் புரிந்து இந்த இடத்திற்கு சக்தி ஊட்டியுள்ளார்.
கன்யாகுமரியில் 131 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.
குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!
***
கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள 132 நூல்கள் பற்றிய விவரங்களை
2.மும்பையில் நடிகர் நடிகையரும் வரக்கூடிய இந்துக்கோவில்கள் எவை ?
xxxxxx
3.கேட் வே ஆப் இண்டியா Gate way of India , இண்டியா கேட் India Gate – இவற்றில் மும்பையில் உள்ளது எது?
xxxxx
4.நியூயார்க்கில் வணிக விஷயங்களை கவனிக்கும் நிறுவனங்கள், ஸ்டாக் மார்க்கெட் உள்ள தெருவை Wal Street வால் ஸ்ட்ரீட் என்பர். இது போல மும்பையில் வணிகர் தெரு எது?
xxxxxxx
5.மும்பை வட்டாரத்தில் பல Beach பீச் – கடற்கரைகள் உள்ளன. ஜூஹூ பீச் என்னும் கடற்கரைக்கு ஏன் மதிப்பு அதிகம்.?
xxxxxxx
6.மும்பாயிலிருந்து கடலில் படகில் சென்றால் காணக்கூடிய பெரிய திரிமூர்த்தி சிலை எங்கேயுள்ளது ?
xxxxx
7.புத்தர் சிலைகள் உள்ள இரண்டு குகைகளும் மும்பையில் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?
zzzzz
8.மும்பை யிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ஆங்கில நாளேடு எது ?
xxxxxx
9. இந்திய ரயில்வே வரலாற்றில் மும்பைக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன ?:
xxxxxx
10.உலகிலேயே பெரிய சேரிப் பகுதி எது?
Xxxxxxx
ANSWERS
1.இந்த நகரின் பூர்வீக பெயர் மும்பைதான். மும்பா தேவி இந்த நகரின் தெய்வம். இப்போது அவள் கோவிலுக்கு ஏராளமான பேர் போகின்றனர்.
ப= ம என்பது மொழியியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே;.பர்மா என்பதை இப்போது மியன்மார் என்று சொல்லுவதும் இதனால்தான் ; பண்டார் என்பது மண்டி என்றாகிறது; மேனுவல் என்பது தமிழில் பனுவல் /நூல் ஆகிறது .
xxxxx
2.சித்தி விநாயகர் கோவிலும் , மகா லெட்சுமி கோவிலும் ஆகும்.
Xxxxx
3.இண்டியா கேட், டில்லியில் இருக்கிறது; கேட் வே ஆப் இண்டியா, மும்பையில் இருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும் அவரது மனைவியையும் வரவேற்க மும்பையில் கட்டினர்
Xxxxx
4.மும்பையிலுள்ள தலால் ஸ்ட்ரீட்; தலால் என்றால் ப்ரோக்கர்.
Xxxxx
5.கடற்கரை அழகான கடற்கரை என்பது மட்டுமல்ல; நடிகர், நடிகையர் வீடுகள் அருகில் இருக்கின்றன. அவர்களும் வாக்கிங் Walking வருவார்கள்
Xxxxx
6.எலிபெண்டா தீவில் உள்ளது
Xxxxx
7.கனேரி குகைகள், மகா காளி குகைகள்
xxxx
8.டைம்ஸ் ஆப் இந்தியா.Times of India ; 1838ல் துவங்கியது. 1861 முதல் இந்தப் பெயரில் வெளிவருகிறது.
xxxxx
9.இந்தியாவின் முதல் ரயில் பாதை 1853ல் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இடையேதான் போடப்பட்டது . அதன் நீளம் 32 கிலோமீட்டர்தான் .
xxxx
10.மும்பையிலுள்ள தாராவி சேரி உலகில் பெரிய சேரி ஆகும்
48.நம்பி நாராயணன் கோவில் (பஞ்ச நாராயண க்ஷேத்ரம்) Sri Nambinarayana Temple, Thondanur , Mandya
விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் ராமாநுஜாசார்யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் தங்கியிருந்த காலத்தில் 5 கோவில்களை பிரபலப்படுத்தினார். அவை பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள் என்று அழைக்க ப்படுகின்றன . அதில் ஒன்று தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோவில் ஆகும்..
ராமானுஜர் கால பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்:
1.Nambi Narayana at Kere Thondanur நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர்
2. Cheluva Narayana at Melukote செலுவ நாராயணன் கோவில் , மேல்கோட்டை
3. Vijaya Narayana at Belur விஜய நாராயணன் கோவில் , பேலூர்
4. Keerti Narayana at Talakadu கீர்த்தி நாராயணன் கோவில் , தலக்காடு
5. Veera Narayana at Gadag வீர நாராயணன் கோவில் , கடக்
( Vijaya Narayana at Belur is popular by name Beluru Chennakeshava) பேலூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலை சென்ன கேசவர் கோவில் என்றும் சொல்லுவார்கள் ).
நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர் , ஏனைய பல கோவில்களிலிருந்து வேறு பட்டது. நாலரை ஏக்கர் பரப்பில் நந்த வனம் , புல்வெளிக்கு இடையில் உள்ளடங்கி இருக்கும் அமைதியான கோவில். பெரிய கோவில்; ஒரே பட்டர். அவரை அழைத்துதான் பூஜை செய்ய முடியும். .பெருமாள் நின்ற திருக்கோலம்.
ராமானுஜர் அமர்ந்த ஆசனம் இன்னும் காட்சிக்கு உள்ளது அவர் இங்கு 1000 தொண்டர்களுடன் தங்கி உபன்யாசம் செய்த இடம்
மேல்கோட்டையிலிருந்து ஆறு கி.மீ. ஹொய்சாளர் கட்டிடக்கலை அம்சங்களைக் காணலாம். அருகில் திருமலசாகர ஏரியும் உளது.
xxxxxx
சமணர் கோவில்கள்
மாண்ட்யா வட்டாரத்தில் கம்பட தள்ளியில் உள்ள சமணர் பஸதிக்கள் மிகவும் புகழ்பெற்றவை Kambadahalli is a near Nagamangala in Mandya district
இங்கு பிரம்மதேவ யக்ஷ ஸ்தம்பம் ( Manastambha )உள்ளது.இதன் உயரம் 50 அடி. அதன் உச்சியில் கட்டப்பட்டுள்ள மணி அடிப்பதை சகுனமாக கருதுகின்றனர். மேலை கங்க வம்ச ஆட்சிக்கால , 900 ஆண்டுப் பழமையான பல கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று ஆராய்ச்சிக்கு அவை துணை செய்கின்றன.
பிரம்மதேவ ஸ்தம்பத்துக்கு முன்னால் பஞ்ச கூட கோவில் உள்ளது. 5 தீர்த்தங்கரர்களின் சந்நிதிகள் பொது மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன Panchakuta Basadi. அங்கு நிறைய கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.
Xxxxxx
49. Adhichunchanagiri Temple, Adichunchanagiri அதி சுஞ்சன கிரி கால பைரவர் கோவில்
சுமார் 3330 அடி உயரமுள்ள குன்று
இது வொக்காலிக சமூகத்தினரின் புனித ஸ்தலம்; மஹா சமஸ்தான மட ம் இருக்கிறது. மயில்கள் சரணாலயத்தில் ஏராளமான மயில்களையும் பார்க்கலாம்
இங்குள்ள பைரவர் கோவிலும் கங்காதரேச்வரர் Gangadeshwara Temple தரிசிக்க வேண்டிய இடங்கள்; மாண்ட்யா மாவட்டத்தின் நாக மங்கல தாலுகாவில் இருக்கிறது
கங்காதரேஸ்வரர் கோவிலில் ஐந்து லிங்கங்கள் (Panchalingas — Lord Gangadhareshwara, Chandramouleshwara, Malleshwara, Siddeshwara, and Someshwara.)
ஐந்து லிங்கங்கள் – கங்காதரேஸ்வர , சந்திர மூலேஸ்வர , மல்லேஸ்வர, சித்தேஸ்வர, சோமேஸ்வர லிங்கங்கள் இருப்பதால் பஞ்ச லிங்கேஸ்வர கோவில் என்றும் கூறப்படும்.. மலையின் உச்சி ஆகாச பைரவர் என்று அழைக்கப்படுகிறது .
காலபைரவர் கோவிலில் அவருடைய 64 அவதார உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சமீப காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்; பாலா கங்காதரநாத சுவாமிஜி Sri Balagangadharanatha Swamiji.முயற்சியில் உருவான கோவில்
சுஞ்ச, கஞ்ச என்ற இரண்டு அரக்கர்களை சிவபெருமான் அழித்த இடம். .
Xxxxx
50.மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் The Chamundeshwari Temple
மைசூரு நகரிலிருந்து 13 கி.மீ.தொலைவில் , அரச குடும்பத்தினரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின் கோவில் இருக்கிறது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலின் நந்தி தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தி போலவே உருவில் பெரியது 16 அடி உயரம், 25 அடி நீளம்!
குன்றின் மீது அமைந்த கோவில் இது. உயரம் 3300 அடி. இங்குதான் துர்கா தேவி மஹிஷ அசுரனை வதம் செய்தாள் என்பது ஐதீகம் மஹிஷாசுர என்பது ஆங்கிலேயர்களால் மைசூர் என திரிக்கப்பட்டது .இங்கு மிகப்பெரிய மஹிஷாசுரன் சிலையும் உள்ளது
12ஆ ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டது என்றாலும் சிவனும் நந்தியும் மிகவும் பழையன
நவராத்திரி காலத்தில் தேவிக்கு 9 வித அலங்காரங்களை செய்வார்கள். ஆஷாட வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் .
To be continued………………………………………………
Tags—ராமானுஜர் ஆசனம், மைசூரு , சாமுண்டீஸ்வரி, பெரிய நந்தி , பஞ்சலிங்கம், காலபைரவர்