ஆந்திரப் பிரதேசத்தத்தைச் சேர்ந்த ஹரிஜன பையன் பிரபாகர் காந்திஜியிடம் சொன்னான்- பாபுஜி, நம்முடைய தாயாரைவிட பசு என்னும் கோ மாதா சிறந்தவள் என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் தாயார் ஆனவள் குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பால் தருகிறாள்; ஆனால் பசு மாடோ நமக்கு வாழ்நாள் முழுதும் பால் தருகிறது அல்லவா?
இதைக் கேட்டவுடன் காந்திஜி சொன்னார்:
டேய் பையா! நான் உன்னைவிட கூடவே சொல்லுவேன் டா !
நம்மைப் பெற்ற தாயை விட , பலஅம்சங்களில் சிறந்தவள் கோ மாதா.
நம் தாயார் நமக்குச் சில ஆண்டுகளுக்குப் பால் கொடுத்துவிட்டு, நாம் வளர்ந்த பின்னால் , நம்முடைய உதவியை வாழ்நாள் முழுதும் எதிர்பார்க்கிறாள் .ஆனால் பசு என்னும் தாயோ அப்படி எதிர் பார்க்கவில்லை. புல்லும் தானியமும் அதற்குப் போட்டால் போதும்.
நம்ம தாயார் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறார்.அப்போது நம் சேவையை எதிர்பார்க்கிறாள் பசு என்னும் தாயோ அபூர்வமாகத்தான் நோய்வாய்ப்படுகிறாள் .
அதுமட்டுமல்ல இறந்த பின்னரும் நமக்கு உதவுவது பசு என்பதால் இடைவிடாத, தொய்வில்லாத உதவியைப் பெறு கறோம். நம் தாயார் இறந்தால் அவளை எரிக்கவோ, புதைக்கவோ காசு வேண்டும். ஆனால் பசு மாடு இறந்தாலோ இறந்தாலும் ஆயிரம் பொன் ; இருந்தாலும் ஆயிரம் பொன். அந்த மாட்டின் ஒவ்வொரு பகுதியையும் , நாம் பயன் படுத்துகிறோம். அதனுடைய மாமிசம், எலும்பு, குடல், கொம்புகள், தோல் ஆகிய அனைத்தும் பயன்படுகின்றன இதை நான் சொல்லும்பபோது , பெற்று எடுத்த தாயாரை தாழ்த்துவதாக எண்ணி விடாதே. . நான் ஏன் கோ மாதாவை வழிப்படுறேன் என்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொன்னேன் .
ஹரிஜன் பத்திரிகை, 15-9-1940
XXXX
என் கருத்து
கடந்த சில தினங்களில் நான் எழுதிய கட்டுரைகளில் காந்திஜியின் முரண் பாடுகளை எடுத்துக் காட்டினேன். முஸ்லீம்கள் பசுக்களை வெட்டிச் சாப்பிடுவதை தடுக்காதீர்கள் என்று அவர் எழுதிய கட்டுரைகளைக் காட்டினேன். மேற்கூறிய எழுத்திலும் பசு மாமிசம் பயன்படுவதைக் குறிப்பிடுகிறார். நாம் வணங்கும் தாயை பிறர் வெட்டிச் சாப்பிடுவதை அனுமதிக்க வேண்டும் என்று அவர் சொல்லுவது புரியாத புதிராக உள்ளது; காந்திஜியே புகழ்ந்த மனுவோ ,
மனு நீதி நூலில் ஒரு தாய் ஆயிரம் தந்தைகளுக்கும் மேலானவர் என்று புகழ்கிறார்
இதோ மனுவின் ஸ்லோகம்
उपाध्यायान् दशाचार्य आचार्याणां शतं पिता ।
सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते ॥ Manu 2-१४५ ॥
upādhyāyān daśācārya ācāryāṇāṃ śataṃ pitā |
sahasraṃ tu pitṝn mātā gauraveṇātiricyate || Manu 2- 145 ||
உப ஆசார்யார் /ஆசிரியர் என்பவரை விட பத்து மடங்கு பெரியவர் பேராசிரியர் ; அந்தப் பேராசிரியரைவிட நூறு மடங்கு வணங்கப்பட வேண்டியவர் நம்முடைய தந்தை ; ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டியவர்.– 2-145 மநு
–SUBHAM—
TAGS- கோ மாதா , தாய், மனு, ஆயிரம் தந்தை , மேலானவள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com
இராமாயண வழிகாட்டி
விஸ்வாமித்திரருடன் சென்ற 25 நாட்களில் ஶ்ரீ ராமருக்குக் கல்யாணம்!
ச.நாகராஜன்
பெரிய மஹான்கள் ஒருவருடன் சேர்ந்தால் அப்படிச் சேர்ந்தவருக்கு நிச்சயமாக நல்லது நடக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் அயோத்தி வந்து தசரதனிடம் அவரது குமாரரான ஶ்ரீ ராமரை தனது யாகத்தை இடையூறின்றி நடத்த பாதுகாப்பதற்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
முதலில் தசரதர் தயங்கினாலும் பின்னர் வசிஷ்டர் அவரை சமாதானப்படுத்த ஶ்ரீ ராமரை விஸ்வாமித்திர மஹரிஷியுடன் அனுப்பச் சம்மதித்தார்.
அதிலிருந்து என்ன நடக்கிறது என்பதை நாள் வாரியாக ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் ‘வால்மீகி ஹ்ருதயம்’ என்ற நூலில் விவரித்துள்ளார்.
நாள்வாரியாக அவர் தரும் விவரத்தின் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.
முதல் நாள் ; விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராம, லக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சரயூ நதியின் தென் கரையில் அரை யோஜனை தூரம் சென்றவுடன் அவருக்கு ஆசமனம் செய்யச் சொல்லி பலை, அதிபலை ஆகிய இரு மந்திரங்களை உபதேசித்தார்.
இரண்டாம் நாள் : சரயு நதியும் கங்கையும் சேருமிடத்தில் உள்ள காமனுடைய ஆசிரமம் சென்று அங்கே இரண்டு நதிகளின் மத்தியில் அன்றிரவு அனைவரும் தங்கினர்.
மூன்றாம் நாள் : காலையில் முனிவர்கள் தயாரித்துக் கொடுத்த ஓடத்தில் ஏறி நதியைக் கடந்து ஜம்பாஸுரனின் புத்திரனான ஸுந்தனியின் மனைவியும் மாரீசனின் தாயுமான தாடகையை விஸ்வாமித்திரரின் வார்த்தையைக் கேட்டு ராமர் சம்ஹாரம் செய்தார். அன்றிரவு அங்கேயே அனைவரும் தங்கினர்.
நான்காம் நாள் : காலையில் விஸ்வாமித்திரர் சகல விதமான அஸ்திரங்களையும் ராமருக்கு உபதேசிக்கிறார். அஸ்திர உபசம்ஹார மத்திரங்களையும் உபதேசிக்கிறார். தனது ஆசிரமமான சித்தாஸ்ரமம் சென்று அன்றே விஸ்வாமித்திரர் தீக்ஷை எடுத்துக் கொள்கிறார்.
ஐந்தாம் நாள் : விஸ்வாமித்திரரிடம் உற்சாகமாக ராம லக்ஷ்மணர், “ராக்ஷஸர்கள் எப்போது வருவார்கள்?” என்று கேட்க விஸ்வாமித்திரர் தீக்ஷையினால் பேச முடியாதவராக இருக்க, இதர முனிவர்கள் ‘இன்னும் ஆறு தினங்கள் இங்கு காவல் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.
6,7,8,9 ஆகிய நாட்களில் ராமரும் லக்ஷ்மணரும் காவல் காக்கின்றனர்.
பத்தாம் நாள் : யாகத்தின் கடைசி தினம். மாரீசனும் ஸுபாஹுவும் வந்து ரத்தத்தை வர்ஷிக்க, ராமர் மானவாஸ்திரத்தை பிரயோகித்து மாரீசனை நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் உள்ள கடலில் அமிழ்த்தி விடுகிறார். ஆனால் கொல்லவில்லை. ஸுபாஹுவை ஆக்னேயாஸ்திரத்தால் அடித்து ஸம்ஹரிக்கிறார். மற்றவர்களை வாயவ்யாஸ்திரத்தினால் அடித்து ஸம்ஹரிக்கிறார்.
யாகம் முடிகிறது. விஸ்வாமித்திரர் மிக்க மகிழ்ச்சியை அடைகிறார்.
அனைவரும் இரவு ஓய்வு எடுக்கின்றனர்.
பதினொன்றாம் நாள் : மிதிலைக்குச் சென்றால் ஒரு யக்ஞத்தையும் தனுசையும் பார்க்கலாம் என்று சொல்ல, அனைவரும் கிளம்பி அன்று சூரியன் மறையும் வேளையில் சோணா நதி தீரம் சென்று அங்கே தங்குகின்றனர்.
பனிரெண்டாம் நாள் : சோணா நதியில் காலை ஆஹ்நிகங்களை முடித்த பின்னர் கங்கைக் கரையைச் சேர்கின்றனர். அங்கு கங்கையின் கதையை விஸ்தாரமாக விஸ்வாமித்திரர் சொல்ல அதை ராமர் மிக உற்சாகமாகக் கேட்கிறார்.
பதிமூன்றாம் நாள் : கங்கையைக் கடந்து வடகரையில் உள்ள விசாலா என்ற நகரம் சென்று அடைகின்றனர். விசாலனின் வம்ச பரம்பரையில் வந்த ஸுமதி என்ற மஹாராஜன் உபசரிக்க அங்கே தங்குகின்றனர்.
பதிநான்காம் நாள் : மிதிலை நகருக்கு வெளியே ஒரு உபவனத்தை அடைகின்றனர். அங்கு அகல்யையின் சாப விமோசனம் நடைபெறுகிறது. பின்னர் ஜனகரின் யாக சாலை சென்றடைய அங்கே ஜனகர் அனைவரையும் வரவேற்கிறார்.
பதினைந்தாம் நாள் : ஜனகரிடம் விஸ்வாமித்திரர் சிவதனுசைக் கொண்டு வருமாறு சொல்ல, ஶ்ரீ ராமர் அதை எடுத்து வளைத்து ஞாண் பூட்டும் போது அது ஒடிகிறது. உடனே சீதையை ராமருக்கு மணம் செய்விப்பதற்காக தசரத மஹாராஜனுக்கு தூதர்கள் அனுப்பப்படுகின்றனர்.
16, 17ஆம் நாட்கள் : மூன்று தினங்களில் தூதர்கள் அயோத்தி சென்று சேர்கின்றனர்.
பதினெட்டாம் நாள் : தசரதரிடம் அனைத்து விஷயங்களும் விவரிக்கப்பட அவர் மிக்க மகிழ்ச்சி கொள்கிறார். மறுநாளே கிளம்பலாம் என முடிவு செய்யப்படுகிறது.
20, 21ஆம் நாட்கள் : தசரதரின் யாத்திரை மிதிலையை நோக்கித் தொடர்கிறது.
இருபத்தியிரண்டாம் நாள் : மாலை அனைவரும் மிதிலை அடைகின்றனர். மொத்தம் பயணப்பட்ட நாட்கள் நான்கு. ஜனகரால் அனைவரும் மிக்க மரியாதையுடன் வரவேற்கப்படுகின்றனர்.
சீதையை ராமருக்கும் ஊர்மிளையை லக்ஷ்மணருக்கும் கொடுக்க ஜனகர் தீர்மானித்து விவாகத்திற்கு முன்பு செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிக்கிறார்.
இருபத்திமூன்றாம் நாள் : ஜனகர் இக்ஷூமதி நதிக்கரையில் ஸாங்காசியம் என்ற நகர்த்தில் உள்ள தனது தம்பி குசத்வஜரை அழைத்து வரச் செய்கிறார். அன்று மக நக்ஷத்திரம். ஆகவே மூன்றாம் நாள் உத்தரபல்குனீ நக்ஷத்திரத்தில் விவாகம் நடக்க முடிவு செய்யப்படுகிறது.
குசத்வஜரின் குமாரிகள் இருவரையும் பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் கொடுக்கத் தீர்மானம் செய்யப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகிறது.
இருபத்திநான்காம் நாள் : கைகேயியின் தம்பி யுதாஜித் விவாகம் பற்றித் தெரிந்து கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். தசரதர் அனைத்து தானங்களையும் செய்கிறார்.
இருபத்திஐந்தாம் நாள் : விவாக நாள். ஜனகர் அக்னி சாக்ஷியாக சீதா தேவியை ஶ்ரீ ராமருக்கும் ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் பாணிக்ரஹணம் செய்து வைக்கிறார்.
இப்படியாக விஸ்வாமித்திரருடன் கிளம்பிய ஶ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கும் 25ஆம் நாள் மிதிலையில் திருமணம் நடைபெறுவதை வால்மீகி விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
ராமாயணம் முழுவதும் ஆங்காங்கே ஒவ்வொரு சம்பவத்திற்கும் காலத்தை வால்மீகி குறிப்பிடுவது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம்.
(The following is taken from a discourse a Harijan boy from Andhra named Prabhakar had with Gandhiji and reported by M.D.)
I (Prabhakar) said to Bapu that I had realised that the cow was like our mother. Mother gives us milk for a couple of years. Mother cow gives us milk the whole of our life.
But Bapu (Gandhiji) said,
I am prepared to go one better than you. Mother cow is in many ways better than the mother who gave us birth. Our mother gives us milk for a couple of years and then expects us to serve her when we grow up. Mother cow expects from us nothing but grass and grain. Our mother falls often ill and expects service from us. Mother cow rarely falls ill. Here is an unbroken record of service which does not end with her death. Our mother when she dies means expenses of burial or cremation. Mother cow is as useful dead as when she is alive. We can make use of every part of part of her body – her flesh, her bones, her intestines, her bones and her skin. Well I say this not to disparage the mother who gives us birth, but in order to show you the substantial reasons for my worshipping the cow.
Harijan 15-9-1940
Xxx
My comments
As I mentioned earlier in my article Gandhiji remained A Bundle of Contradictions. He supported Muslims killing the cow for flesh. Even in the above write up, he used flesh is also useful.
Manu says in Manu Smriti
One acharya/Guru excels ten Upadhyayas/teachers in glory; a father excels 100 acharyas/Gurus in glory; but a MOTHER excels even a thousand fathers in glory (Manu 2-145)
उपाध्यायान् दशाचार्य आचार्याणां शतं पिता । सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते ॥ Manu 2-१४५ ॥
upādhyāyān daśācārya ācāryāṇāṃ śataṃ pitā | sahasraṃ tu pitṝn mātā gauraveṇātiricyate || Manu 2- 145 ||
In veneration, the Preceptor excels ten Sub-teachers; the Father a hundred preceptors, and the Mother a thousand Fathers.—(145)
7 Jun 2013 — Ancient Indian women made more literary contributions than women of any other country in the world. Hindus worshipped God as ‘He’ and ‘She’ …
I will give you one clue; all names begin with Capitals; so look for capitals. Names may be across or down.
Across
5.God on earth (in two rows); 9.Uma’s husband, 14.Siva’s angry /furious form; red in colour
Down
1.God of Kasi 2. Big Lord 3. Always Siva 4.Shiva’s heroic form ,7.One who destroyed three worlds; 6.One who dances for ever; 8.One who does good
10.Lord of living beings 11.Lord, Boss, 12. One who is ever existent (go upwards), 13.God with moon or God of moon
ANSWER
Answer
P r a b h u, B h a v a ,Vishwanath, Umapati, V e e r a b h a d r a , Tripurari, Rudra, Pashupati,Shankara, ,Nataraja,Maheshwara, Sadasiva,Bhudeva, Someshwara
கடந்த 100 ஆண்டுகளுக்குள் உருவான புதிய தலம் ஷீரடி என்னும் கிராமம் ஆகும். இங்கு 60 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் சாய் பாபா சமாதி ஆனார். இன்று ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோர் சமாதியை தரிசிக்க வருகின்ரனர். விழா நாட்கள், விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் கியூவில் நின்றால்தான் தரிசனம்.
மஹாராஷ்டிரா மாநில அஹமதுநகர் மாவட்டத்தில் நாசிக் என்னும் நகரிலிருந்து 122 கிலோமீட்டர் தொலைவில் ஷீரடி இருக்கிறது . 1858-ம் ஆண்டில் இங்கு பாபா வந்தார். 1918ல் சமாதி ஆனார் . அவருடைய சமாதி மீந்து 36 ஆண்டுகளுக்கு வெறும் புகைப்படம் மட்டுமே இருந்தது. கோபால் ராவ் பூட்டி என்பவர் கனவில் பாபா வந்து சொன்னதால் அவரும் ஷாமா என்னும் நண்பரும் கட்டிடம் கட்டினார்கள் . வசிப்பதற்கான இடமும் கோவிலும் கட்டத் துவங்கி, பாபா இறந்ததால் பின்னர் சமாதி ஆனது . புதிய சமாதி 1954-ல் எழுந்தது. இப்போது தங்கத்தால் வார்க்கப்பட்டு ஜொலிக்கிறது. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, பல ஆ ரத்திகள் (தீபாராதனை) நடைபெறுகிறது . உலகிலேயே பெரிய ஸூரிய அடுப்பு மூலம் சமைத்த பிரசாதம் காலை 10 மணி முதல் விநியோகிக்க ப்படுகிறது.
பாபாவின் சமாதியுடன் சாவடி என்னும் பழைய கிராம அலுவலகம், பாபாவின் வெள்ளிப் பல்லக்கு , பாதுகைகள், சமையயல் பாத்திரங்கள், பழைய புகைப்படங்கள் அடங்கிய மியூசியமும் சமாதி வளாகத்தில் இருக்கின்றன. சாவடியில் பாபவின் நல்ல வரைபடம் இருக்கிறது .பாபாவின் அருமையான பளிங்குச் சிலை அமைந்ததும் ஒரு கனவின் மூலம்தான் நடந்தது . பம்பாய் துறைமுகத்தில் அருமையான இதாலி நாட்டு சலவைக்கற்கள் வந்து இறங்கின. யார் அனுப்பினார், யாருக்காக அனுப்பினார் என்னு தெரியாததால் துறைமுக அதிகாரிகள் அதை
ஏலம் .விட்டனர். அதை வாங்கிய பணக்கார கனவான், அவற்றை பாபா கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார் . பாபா சிலையை வடிக்கும் பணியை புகழ்பெற்ற மும்பை கலைஞர் பாலாஜி வசந்த தலீம் என்பவரிடம் ஒப்படைத்தனர் . அவர் பழையகால கருப்பு- வெள்ளை படம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு எப்படியடா சிலை செதுக்குவது என்று மலைத்து நின்றார். பாபாவே கனவில் வந்து பலவித கோணங்களில் நின்று போஸ் POSE கொடுத்த பின்னர், பல்லோர் புகழும் சிலை உருவானது
நான் இறந்த பின்னரும் சமாதியிலிருந்து அருள் மழை பொழிவேன் என்று பாபா சொன்னதால் இன்றும் பக்தர் கூட்டம் பெருகி வருகிறது..
(இந்தக் கட்டுரை எழுதும் லண்டன் சுவாமிநாதன், ஷீரடி , த்ரயம்பகேஸ்வரம் , பஞ்சவடி, காலா ராம் கோவில், சீதா தீவி குகை, முக்திதாம் , கோதாவரி நதி தோற்றுவாய், நாசிக் நகர், சிங் சிங்னாபூர் சனைச்சரன் கோவில் ஆகிய அனைத்தையும் மும்பை நகர முக்கியக் கோவில்களையும் 2015ம் ஆண்டில் தரிசித்தார்).
ஷீரடி முதலிய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் .
XXX
72. பஞ்சவடி
நாசிக் நகரின் அருகில் கோதாவரி நதியின் இடது புறம் உள்ளது பஞ்சவடி. இதன் அர்த்தம் ஐந்து ஆல மரம். இப்போதும் அவைகளைக் காணலாம். நாசிக் என்றால் லெட்சுமணன் சூர்ப்பனகையின் நாசியை/ மூக்கை வெட்டிய இடம் என்று பொருள். தண்டகாரண்யம் என்னும் அடர்ந்த, கொடிய வனவிலங்கு நிறைந்த காடு இது. இப்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் மாறி வருகிறது. ராம், லட்சுமண, சீதா தேவி மூவரும் 14 ஆண்டு வனவாச காலத்தில் பெரும்பகுதியை இங்குதான் கழித்தனர் . ராவணன் வந்து சீதையை தூக்கிக்கொண்டு போன இடமும் இதுதான். லெட்சுமணன் போட்ட லக்ஷ்மண் ரேகா ( எல்லைக் கோடும்) அருகில்தான் இருக்கிறது.
இந்தப் புனித பூமியில் ஏராளமான கோவில்கள் இருப்பதால் இதை மேற்கு இந்தியக் காசி நகரம் என்றும் அழைப்பர். கபாலீஸ்வர் , கங்கா- கோதாவரி , சுந்தர் நாராயண் , திலபந்தேஸ்வர் , தாகூஸ்டேவர் , நீல கண்டேஸ்வர, பாலாஜி, விட்டல் , பஞ்சமுகி ஹனுமான், பத்திரகாளி கோவில்கள் என்று நிறைய கோவில்கள் வந்துவிட்டன .
XXX
73.காலா ராம் கோவில்
கருப்பு ராமன் என்பதை காலா ராமன் என்பர். ராமபிரானே ஒரு கருப்பன் தான் . அவனுக்கும், அவன் தம்பி, லெட்சுமணனுக்கும் , சீதா தேவிக்கும் இரண்டு அடி உயரச் சிலைகள் நிற்கும் இடம் காலா ராமன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சர்தார் ரங்காராவ் என்பவர் 2000 ஆட்களைப் பணியில் அமர்த்தி, அரும்பாடு பட்டுக் கட்டிய கோவில் . 70 அடி கோபுரம் உடையது இது, தற்காலக் கோவில்களில் முக்கியமானது.
XXX
74. சீதா குகை
சீதையை ராவணன் கடத்திய இடம். ராம, லட்சுமணர்கள் வெளியே சென்றால் , இங்குதான் சீதை பாதுகாப்பாக ஒளிந்து கொள்வாள். அப்படியும் ராவணன் சன்யாசி வேடத்தில் வந்து பிச்சை கேட்டபோது ஏமாந்து போனாள் ; குகைக்குள் நுழைய தலை குனிந்து பணிவாகச் செல்ல வேண்டும் . நாசிக் பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருக்கிறது. .பஞ்சவடி , காலாராம் கோவில் எல்லாம் அடுத்தடுத்து இருக்கும் இடங்கள்தான் . குகையின் முதல் அடுக்கில் ராமர் , லெட்சுமணர், சீதா தேவி சிலைகள் உள்ளன. அடுத்த அடுக்கினுள்ளே சிவலிங்கமும் இருக்கிறது. அன்றாடம் சிவனை வழிபட்ட பின்னரே ராம லெட்சுமணர், சீதா தேவி சாப்பிட்டனர் . குகைக்கு எதிரே ராமாயணக் காட்சிகளைக் காட்டும் ஓவியங்கள், சிற்பங்கள் இருக்கின்றன.
Ravana in Panchavati
XXX
75.கோதாவரி நதி உற்பத்தி
நான்கு ஆண்டுச் சுழர்ச்சியில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் MINI மினி கும்ப மேளா கோதாவரி நதி தோன்றும் இடத்தில் நடைபெறும் . நாசிக் நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து செல்லுவதற்கு வசதிகள் உண்டு
XXX
76. கண்டோபா கோவில்
தேவ லாலி கண்டோன்மென்ட் பகுதில் இந்தக் கோவில் அமைந்துள்ளது . சிவனின் மற்றோர் வடிவமாகக் கருதப்படுபவர் கண்டோபா. இது இரண்டு .அரக்கர்களைக் கொல்ல சிவன் எடுத்த வடிவம். கோவில் 500 ஆண்டுப் பழமையானது.. அரக்கர்களை மாய்த்த பின்னர் சிவன் ஓய்வெடுத்த இடம் என்பதால் இதை விஸ்ராம் காட் என்பர்.
XXXX
77.முக்திதாம் கோவில்
நாசிக் பஸ் நிலையத்திலுந்து 9 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது முக்திதாம் கோவில். இது 1971ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது . இங்கு 12 ஜோதிர் லிங்கத் தலங்களையும் சிற்ப வடிவில் தரிசிக்கலாம். உள்ளே கிருஷ்ணர் சந்நிதியும் இருக்கிறது. அங்கே கிருஷ்ண லீலைகள் வரையப்பட்டுள்ளன . பிரபல ஓவியர் ரகுவீரா மல்காவ்ங்கர் வரைந்த ஓவியங்கள் அவை.
பல இந்தக் கடவுளரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. 200 பேர் தாங்கக்கூடிய தர்ம சாலையும், உணவு விடுதியும் உளது.
XXXX
78.தபோவனக் காடுகள்
கோதாவரி நதி இறங்கும் இடத்தில், பஞ்சவடியிலிருந்து 1. 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த தண்டகாரண்ய புண்ய பூமி ராமனின் காலடி ச் சுவடுகள் பட்ட இடம் ஆகும். ராம, லட்சுமணர்கள் அன்றாடம் பழங்களைப் பறிக்க வரும் இடம் இதுவே.. இங்கும் ராம லெட்சுமணருக்குக் கோவில் வைத்துள்ளார்கள் . ராம் பர்ண குடில் இருக்கும் இந்த இடத்தில்தான் , மினி கும்ப மேளா காலத்தில், சாது சந்யாசிகள் முகாமிடுவர் .
இந்த வட்டாரத்தில் கபில தீர்த்தம், குஷாவர்த் தீர்த்தம், புத்தர் சிலைகள் உள்ள பாண்டவர் குகைகள், சமண மத கோவில், மங்கி துங்கி கோவில் முதலி யனவும் அமைந்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி நாசிக் வட்டாரக் கோவில்களை முடிக்கலாம். ஏனெனில் அருகிலேயே த்ரயம்பகேஸ்வர சிவன் கோயிலும் இருக்கிறது. ஒரே நாளில் தரிசிக்கவும் முடியும்.
TO BE CONTINUED……………………………. tags- ஷீரடி ,சாய் பாபா, சமாதி, .காலா ராம், கோவில்,சீதா குகை, பஞ்சவடி, முக்திதாம் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கடவுளைக் காண வழி சொல் – ஒரு வாரத்திற்குள்!
ச. நாகராஜன்
முன்னொரு காலத்தில் தெய்வ பக்தியுள்ள ஒரு மன்னன் தனது நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு வாய்த்த மந்திரியோ மதியூகி. மன்னனைப் போலவே மிகவும் தெய்வ பக்தி கொண்டவன்.
எந்த வெற்றியை அடைந்தாலும் இந்த இருவருமே, ‘கடவுளின் அருளால்’ என்று ஆரம்பித்தே தங்கள் வெற்றிகளைச் சொல்லி மகிழ்வது வழக்கம்.
காலம் சென்றது. மன்னனுக்கு வயதாகிக் கொண்டே போனது. ஒரு நாள் அவன் இறைவனடி சேர்ந்தான்.
முறைப்படி ராஜகுமாரன் மன்னனாக முடி சூடப்பட்டு மன்னனாக ஆனான்.
ஆனால் அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மந்திரியிடம். ‘தந்தையிடம் கூறுவது போல, ‘கடவுளின் அருளால்’ என்று எதையும் ஆரம்பித்துச் சொல்லக் கூடாது’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.
ஒரு நாள் பழக்க தோஷத்தின் காரணமாக மந்திரி, அவனிடம், ‘கடவுளின் அருளால்’ என்று முக்கிய வெற்றியைக் கூற ஆரம்பித்தார்.
உடனே மன்னனாக இப்போது இருக்கும் ராஜகுமாரனுக்கு மிகுந்த கோபம் வந்தது.
“உங்களிடம் எத்தனை முறை கூறி இருக்கிறேன். கடவுள் என்று சொல்லாதீர்கள் என்று” என்று கோபத்துடன் மந்திரியைப் பார்த்துக் கூறிய அவன், “சரி, உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன்.
முதலாவது, கடவுளை எப்படிப் பார்ப்பது, உங்களால் வழி சொல்ல முடியுமா? இரண்டாவது அவர் எந்தத் திசையைப் பார்த்து இருக்கிறார்? மூன்றாவது அவர் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறார்? ஒரு வாரத்திற்குள் இதற்கான விடைகளைச் சொல்ல வேண்டும்.” என்றான்.
மந்திரி மிகவும் வருத்தப்பட்டார். ஒரு வாரத்திற்குள் எப்படி கடவுளைக் காணும் வழியைச் சொல்ல முடியும்? அவர் எந்த திசையை யாரைப் பார்க்கிறார் என்பதை எப்படிச் சொல்ல முடியும்? அவர் எப்படி மன்னனிடம் அற்புதத்தை நிகழ்த்துவார்?
தூக்கம் வராத மந்திரி மிகவும் சோகமாக இருந்தான்.
மூன்று தினங்கள் கழிந்தன.
மந்திரியின் வேலைக்காரன் அவரை மிகுந்த சோகத்துடன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, “ஐயா? என்ன விஷயம்?” என்று கேட்டான்.
மந்திரி, ‘போ, போ, உனக்கு ஒன்றும் புரியாது’ என்று சொல்லி அவனைத் துரத்தி விட்டார்.
ஆறாவது நாள் வந்தது.
வேலைக்காரன் விடாமல் அவரிடம் வந்து காரணத்தைக் கேட்ட வண்ணம் இருந்தான்.
மந்திரியும் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் மன்னனின் கேள்விகளைச் சொன்னார்.
இதைக் கேட்ட வேலைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இவை எல்லாம் கேள்விகளா என்ன? நாளை நான் இதற்கு பதில் கூறுகிறேன். நீங்கள் என் வேலைக்காரனே இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவான்” என்று சொல்லி விடுங்கள் என்றான்.
வேறு வழியில்லை மந்திரிக்கு.
அடுத்த நாள் அரசவை கூடிய போது மந்திரி மன்னனைப் பார்த்து, “இதற்கு என் வேலைக்காரனே பதில் சொல்வான்” என்று கூறினார்.
வியப்படைந்த மன்னன் வேலைக்காரனைப் பார்த்து, “நீயா கடவுளைக் காணும் வழியை எனக்குச் சொல்லப் போகிறாய்?” என்றான்.
“ஆம், மன்னவா! நானே தான்!” என்ற வேலைக்காரன், “இப்போது கேள்வி கேட்கும் சீடன் ஸ்தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பதில் அளிக்கும் குரு ஸ்தானத்திற்கு நான் வந்து விட்டேன். ஆகவே குரு மேலான ஆசனத்திலும் குருவுக்கு கீழாக சீடன் இருப்பதும் தான் முறை. நீங்கள் மந்திரி அருகில் வந்து உட்காருங்கள். நான் உங்கள் ஆசனத்தில் அமர்ந்து விடை சொல்கிறேன்” என்றான் வேலைக்காரன்.
வேறு வழியில்லை மன்னனுக்கு. அவன் கூறியதில் இருந்த நியாயம் அவனுக்குப் புரிந்தது. கீழே வந்து அமர்ந்தான்.
வேலைக்காரன் சிம்மாசனம் ஏறி அமர்ந்தான்.
மன்னனைப் பார்த்து, “ஒரு பாத்திரத்தில் பாலைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.
மன்னனும் உடனே அதற்கு ஏற்பாடு செய்தான்.
பால் வந்தது.
“ மன்னா! இதற்குள் வெண்ணெய் இருக்கிறதா?” என்று கேட்டான்.
மன்னன், “இருக்கிறது!” என்றான்.
“காணோமே” என்றான் வேலைக்காரன்.
“இது கூடவா புரியவில்லை. கடைய வேண்டும். கடைந்தால் தான் உள்ளே இருக்கும் வெண்ணெய் வரும். அதை நீ பார்க்க முடியும்” என்றான் மன்னன்.
“மன்னா! உங்களின் முதல் கேள்விக்கு விடையை நீங்களே கூறி விட்டீர்கள்!. எப்படி உள்ளே இருக்கும் வெண்ணையைக் கடைந்தால் மட்டுமே பார்க்க முடியுமோ அதைப் போல எங்கும் உள்ள கடவுள் உங்கள் உள்ளத்திலேயேயும் கூட இருக்கிறான். மனதைக் கடையுங்கள். அவன் வெளிப்படுவான்” என்றான் வேலைக்காரன்.
அடுத்து இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம் என்ற வேலைக்காரன்,
“ஒரு தீபத்தைக் கொண்டு வரச் சொல்லுங்கள்’ என்றான்.
சுடர் விட்டெறியும் தீபம் வந்தது.
“மன்னா! தீபத்தின் சுடர் எந்த திசையைப் பார்த்து, யாரைப் பார்த்து இருக்கிறது?” என்று கேட்டான்.
மன்னன், “அது எல்லா திசையையும் பார்த்துத் தானே இருக்கும். எல்லோரையும் அது பார்க்கிறது. வானையும் கூட அது பார்க்கிறது?” என்றான்.
“மன்னரே! உங்கள் இரண்டாவது கேள்விக்கும் விடையைக் கூறி விட்டீர்கள்! இந்த தீபச் சுடர் போல கடவுள் எல்லா திசையையும் பார்க்கிறான். எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறான்!” என்றான் வேலைக்காரன்.
அடுத்து உங்கள் மூன்றாவது கேள்விக்கு வரலாம்.
“கடவுள் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறான் என்பது உங்கள் கேள்வி.
மன்னா! அற்பனான நான் அந்தஸ்தோ, செல்வமோ, அதிகப் படிப்போ இல்லாதவன். ஆனால் பாருங்கள், மன்னனான உங்களைக் கீழே இறக்கி என்னை சிம்மாசனத்தில் அமரச் செய்திருக்கிறான். ஆனால் மன்னரான உங்களையோ கீழே அமர்த்தி இருக்கிறான்.
இது தான் இறைவனது திருவிளையாடல்! லீலை! கணம் தோறும் அவன் செய்யும் அற்புதம்” என்று கூறிய வேலைக்காரன் கீழே இறங்கினான்.
மன்னனிடம் வந்து தான் சிம்மாசனத்தில் சிறிது நேரம் அமர்ந்ததற்கு மன்னிப்பையும் வேண்டினான்.
மன்னன் முகம் மலர்ந்தான்.
‘எனக்கு எல்லாம் புரிகிறது ‘என்றான். மந்திரியும் மகிழ்ந்தான். கூடி இருந்த அரசவையினர் கை தட்டி அவனைப் பாராட்டினர்.
7. The castor-oil plant or Without decoration or ornaments or refers to “plenteous (light) in Shakta worship
8.Rishi or Saints residence
9.Pandava’s wife (left to right)
10.Satyavan’s wife who fought with Yama
12.Name of Lotus in Sanskrit
13.Association in Indian languages
14. 1. A name of Saraswati; the goddess of speech. 2. The place where an elephant is tied or fastened. 3. A captive, a prisoner. 1. A water-pot, whether large or small, pitcher, a jar. 2. The rope that fastens an elephant. 3. A hole or trap for catching elephant. , 4.Water .
15.Indra’s wife (left to right)
16. Nala’s wife
Down
1.Gautama’s wife, molested by Indra
2.Serpent in Sanskrit
3.Siva’s Wife
4.Yama’s Sister
5.Harichandra’s wife
6.Ravana’s wife
9. Name of the eighteenth of 60 years cycle or refers to “raft” (e.g., for crossing the ocean of worldly existence), according to the Siva Purana or Aloe vera plant in Kannada
Shirdi is located at a distance of 122 Km from Nasik in the Ahmednagar district of Maharashtra, Shirdi is the home of Sai Baba. It is believed that Sai Baba arrived at Shirdi in 1858 and spent 60 years of his life here until he attained salvation in 1918. His Samadhi attracts a huge crowd all through the year.
Apart from his shrine, there are many small temples in the complex, such as Chavadi, Samadhi Mandir, Dwarkamai.
The temple offers different darshans and aartis throughout the day. The temple opens at 4 AM and has darshans during the morning, noon, and evening slots. The last Arti is at 10 pm.
The world’s largest solar cooker is operated at the Shirdi Bhojanalaya. It prepares food for thousands of devotees every day. The timings of Bhojanalaya are 10 AM to 10 PM.
Baba has promised, “I shall be active and vigorous even from the tomb,”
At busy times, especially during festivals, the queue for darshan used to stretch for long distance and People may wait up to eight hours just for Darshan.
The shrine which houses Baba’s tomb was originally constructed as a wada (large private house) during Baba’s last years in his physical body. It is built on some land that Baba had tended as a garden.
The shrine was built by a wealthy devotee from Nagpur, Gopalrao Booty. The wada was originally intended as a rest house and mandir. The inspiration for the building came to Booty in a dream, when he was sleeping beside his friend and fellow devotee, Shama, Baba appeared and told him to build a house and temple. The work was begun around 1915. But Saibaba’s health rapidly deteriorated and on 15 October 1918, he attained Samadhi.
A photograph of Sai Baba was placed on a throne on the platform of the tomb. It remained there until the statue was installed in 1954. There is an interesting story about the marble statue we see today.
The statue, which has become such a famous and well-loved image of Baba, was not installed until 1954. Some white marble arrived from Italy at the Bombay docks, but nobody seemed to know anything about it who it was for, or why it had come. In the absence of a claimant, the dockyard auctioned it and the purchaser offered it to the Shirdi Sansthan (temple authorities). Impressed by the quality of the marble, they wanted to use it for an idol of Baba and gave the commission to a sculpture from Bombay, Balaji Vasant Talim. However, the latter had only one black and white photo of Baba as his model, and was struggling to get the likeness. One night Baba came to him in a dream, remarked on his difficulties and then showed him his face from various angles, encouraging Talim to study it thoroughly and remember it well. This gave Talim the fillip he needed .
xxxx
The Display of Baba’s Belongings in Museum
In the Museum some things associated with Baba are on display. These include three pairs of sandals (though Baba was almost always barefoot), his folded clothes in a glass fronted cupboard, cooking pots and a silver palanquin.
Many clay pipes and earthen vessels used by Baba are also seen here. The coins given by Baba to Mahalsapati, Khandoba’s temple priest, are seen. The idols of Muralidhar along with the idols of Rama, Sita and Lakshmana are seen here which were actually meant to be installed in Booty Mandir. But as per Baba’s wish this wada became baba’s Samadhi Mandir.
xxx
Chavadi
Chavadi means “village office”, and was the place where taxes were collected, village records kept and visiting officials put up. After Baba’s Maha samadhi the Sansthan acquired Chavadi, and until the late 1930s, used it for storing books and accommodating pilgrims. The village offices have long been relocated and Chavadi is kept as a shrine to Baba and is open to all.
Chavadi is also very significant to Sai devotees as it played a major role in the inception of formal worship of Baba. Once Baba started sleeping at Chavadi, the custom arose of offering regular arati to him on his arrival from the mosque. Inside Chavadi is a large portrait of Baba which was painted by Ambaram from Nausari in Gujarat after Baba had given him darshan in a dream in 1953. At the time, Ambaram was only eighteen years old.
xxx
72 Panchavati
Panchvati is situated on the left banks of sacred river Godavari in Nashik city.
Close to Kalaram temple there are some very old and lofty banyan trees which are believed to be sprung from five banyans which gave its name to Panchvati.The name ‘Panchvati’ is derived from the words Panch which means five and Vati which means banyan tree. This is the site where Sita Gumph or Sita’s Cave is situated . Kalaram temple , Kapaleshwar temple, Ganga Godavari temple, Sunder Narayan temple, Talkuteshwar temple,temple, NilkantheshwarGoraram mandir Murlidhar Mandir,Tilbhandeshwar mandir, Balaji temple, Sandvyachi devi temple, Vitthal temple, Pataleshwar temple,Naroshankar temple, Ramkund, Karthikswami temple,Dutondya maruti , Katya maruti temple, Panchmukhi Hanuman temple , Bhadrakali temple,Katpurthala monuments are located in and around Panchavati area. Nashik has earned name of the Banaras of western India due to large no of temples.
Panchavati is in the fiery forests of Dandakaranya along the flowing Godavari River.
Panchavati was the place where Rama, Lakshmana and Sita made their home while serving the exile. The trees could still be seen in the temple premises nearby Sita Gufaa.
xxxx
73.Kalaram (Black Rama) Temple
Kalaram Mandir is situated within the Panchvati area of Nashik City.
This temple is supposed to stand on the spot where Lord Ram lived during his exile. It was built in 1782 by Sardar Rangrao Odhekar on the site of an old wooden temple. The work is said to have lasted twelve years, 2000 persons being daily employed. It is one of the finest modern temples of Ramji in western India. The temple has standing images of Lord Rama, Sita, Laxmana are of black stone and around 2 feet height. The temple is 70 ft high with beautifully sculptured idols of Lord Rama and Lady Sita, along with Lakshman in black stone, giving the temple its name.
xxx
74.Sita Gufaa (Guha=Cave):Panchavati
Sita Gufaa: Panchavati, Maharashtra The cave where Sita was staying when demon Ravana came to kidnap her, is located on the western door of the Kalaram temple. ‘Lakshman Rekha’ drawn by Lakshman for protection of Sita is located some one kilometer from the caves.
Sita gupha is situated in Panchawati area about 3 km away from the Nashik Central bus stand.
The deities of Ram, Seeta and Laxman are placed inside the first main gummpha. In the second small gupha there is a Shivling . The main reason attributed for the Shivling is that Seeta used to worship God Shiva and she never took her meals before worshiping him.
A room opposite to Seetagmupha is decorated with the scenes from Ramayana like Marich Vadha (i.e. Ram Killing Marich, the demon.), Seetaharan (the kidnapping of Seeta by Ravan).
xxxx
75 Godavari River Sthala
River Banks of Godavari: The place is spot for the Kumbh Mela bathing and gets full of pilgrims from every corner of world during the occasion.
By Rail: After reaching Nashik Road Railway Station, passengers can take local transportation to North of Nashik, where now-heavily-populated Panchavati is located.
By Road: Nashik is connected to cities like Delhi, Bangalore, Nagpur, Mumbai, etc, thus easily reached by buses, cars and taxis.
( I visited Shirdi, Trayambakeshwar Temple, Panhavati, Kaalaa Raam temple, Muktidham temple, shin Shignapur Shiva and Sanaicharan (Saneesvar) temples in 2015- London swaminathan)
76.Khandoba Temple
This temple is situated on small hill in Deolali Cantonment area.
Shri Khandoba Maharaj is an incarnation of Lord Shiva and this temple dedicated to him is reportedly over 500 years (five hundred) old. Lord Shiva killed two demons Malla Daitya and Mani Daitya and after killing them, Shiva relaxed on this hill and hence this temple is called ‘Vishramgadh’. The hill is popularly known as Khandobachi Tekadi.
Xxx
77.Muktidham Temple
Muktidham marble temple is located at a distance of 9 km from Nashik Central Bus Station. It is one of the popular tourist attractions in the city of Nashik.
Muktidham Temple complex was built by Late Sri Jayram Bhai Bytco in 1971. An abode of most of the gods and goddesses of the Hindu religion, this splendid shrine displays the replica of all the 12 Jyotirlingas of India.
It is a magnificent piece of architecture, made with white marble from Makran in Rajasthan. There is a temple dedicated to Lord Krishna .The walls of Krishna temple have paintings depicting scenes from life of Krishna and Mahabharata. These were painted by a noted painter Raghubir Mulgaonkar. Unique to this temple are eighteen chapters of Bhagavad-Gita written on the walls.
There are also idols of all major Hindu Gods and Goddesses like Vishnu, Goddess Lakshmi, Rama, Lakshman, Sita, Hanuman, Durga, Ganesh. Further, the complex also houses a dharamshala, which can accommodate at least 200 pilgrims.
78.Tapovan Forest
Tapovana or the Forest of Austerities is located hardly 1.5 km on the downstream of Panchwati on Godavari river.
Once a part of the holy Dandakaranya forest, Tapovan is a pictorial spot and has a close association with the epic Ramayana. Lord Ram who is believed to have lived on fruits collected by Lakshmana from this forest. At this place Lakshmana cut the nose of Shurpanakha, the sister of Ravana . Therefore the city gets its name Nashik. This sacred place has temples of Ram Parnakuti, Laxmana. At the time of Sinhastha Kumbhamela majority of Sadhus camp at Tapovan .
Kapila Tirtha, Kushavart Thirtha, Panadava Caves with Buddhist sculptures, Jain temple, Mangi Tungi temple are all located near Nashik. One can spend a few days visiting all these places or even cover them in just 24 hours.
To be continued………………..
Tags- Nashik, Muktidham, Sita Gufa, Caves, Panchavati, Kala ram, Temple, Godavari, Rama, Sita, Lakshmana, Five Banyan Trees, Shirdi, Sai baba, Samadhi
வாழ்க்கை முழுதும் முன்னுக்குப்பின் முரணான கொள்கையுடன் வாழ்ந்தவர் மஹாத்மா காந்தி; ஜனநாயக முறையில் காங்கிரஸ் கட்சி வோட்டெடுப்பில் வென்ற நேதாஜி சுபா ஷ சந்திர போஸை நாட்டிலிருந்து வெளியே ஓடச் செய்தார். பாகிஸ்தான் கொடுத்தால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் ,முஸ்லீம் கலகத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் கொடுக்காவிட்டால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார். தெரு நாய்களைக் கொல்லலாம், வயலுக்குள் புகும் குரங்குகளைக் கொல்லலாம், மனிதர்களைக் கொல்லும் துஷ்டர்களைக் கொல்லலாம், ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்லலாம் என்று சொல்லி தினமும் நூற்றுக்கணக்கான எதிர்ப்புக் கடிதங்களை பெற்றார் .
பல்லாயிரக்கணக்கான ஹிந்து சீக்கிய பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த அரக்கர்கள் கற்பழித்த கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் ஏற்க வேண்டும் என்று கட்டுரை எழுதினார். இதே போல பசு மாடு என் தாய்க்கும் மேலானவள்; நான் வணங்கும் தெய்வம்; ஆனால் முஸ்லீம்கள் பசு மாட்டை வெட்டிச் சாப்பிடுவதைத் தடுக்காதீர்கள்; அது சரி தான் என்று கட்டுரை எழுதினார். இவை எல்லாம் பிராணி நல ஆர்வலர்களையும் சனாதன இந்துக்களையும் கொதித்து எழச் செய்தன . காந்திஜியே தனக்கு வெள்ளம் போல எதிர்ப்புக் கடிதங்கள் வருகின்றன. அது பிரிட்டிஷ் தபால் இலாகாவின் வருமானத்தைப் பெருக்குகிறது என்று எழுதிவிட்டு “டேய் கிழவா உன்னை விஷ ஊசி வைத்துக் கொல்லாமல் எப்படிடா டாக்டர்கள் வெளியே விட்டனர்?” என்பன போன்ற கடிதங்கள் குவிகின்றன என்றும் எழுதினார் ..
இதோ காந்திஜியின் மாட்டுக் கறி கட்டுரை
கேள்வி
காந்திஜி அவர்களே ! ஒரு முக்கியமான கேள்வி பற்றி நீங்கள் தெளிவாக்குவதை முஸ்லீம்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இந்து மெஜாரிட்டி அரசாங்கத்தில், முஸ்லீம்களின் தேசீய உணவான மாட்டு மாமிசத்தை சாப்பிட அனுமதி தருவார்களா? இந்த விஷயத்தில் நீங்கள் முஸ்லீம்களுக்கு திருப்தி தரும் முடிவைச் சொன்னால், பல பிரச்சனைகள் தீர்ந்து போகும் . நீங்கள் நடத்தும் ஹரிஜன் பத்திரிகையில் ‘பொட்டில் அடித்தாற்போல’ இந்தக் கேள்விக்கு பதில் தாருங்கள்
காந்திஜியின் பதில்
இந்தக்கேள்வி ஏன் வந்தது என்பதே எனக்கு விளங்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் பதவி வகித்த இடங்களில் முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்னும் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. மேலும் உங்கள் கேள்வி கொஞ்சம் நெருடலாக உள்ளது . ஹிந்து மெஜாரிட்டி (பெரும்பான்மை) அரசு என்பதற்கே இடமில்லை.. இந்தியா சுதந்திரம் அடைந்து, அமைதியான முறையில் வாழ வேண்டுமானால் மத விஷயங்களின் அடிப்படையில் இல்லாமல் அரசியல் அடிப்படையில்தான் அது வாழ வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் மத வேற்றுமைகள் பூதாகரமாக உருவெடுத்தபோதிலும் பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள் . மேலும் முஸ்லீம்களின் தேசீய உணவு மாட்டு மாமிசம் என்பதும் தவறு . முதலாவதாக, இந்திய முஸ்லீம்கள் இன்னும் தனி நாடு பெறவில்லை இரண்டாவததாக, மாட்டுக்கறி அவர் களின் சாதாரண உணவும் இல்லை.. பல லட்சம் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் அவர்களும் சாப்பிடுகின்றனர் .
. முஸ்லீம்களில் மரக்கறி உணவு மட்டும் சாப்பிடுவோர் மிகக் குறைவு என்பது உண்மையே.. ஆகையால் கிடைக்கும் இடங்களில் அவர்கள் மற்ற மாமிச உணவுடன் மாட்டுக்கறியையும் சாப்பிடுவார்கள்; ஆயினும் வறுமை காரணமாக ஆண்டின் பெரும்பகுதியில் அவர்கள் மாமிசமே சாப்பிடாமலும் இருக்கிறார்கள்.. இவைதான் சரியான தகவல்கள் .
நீங்கள் கேட்ட கொள்கை ரீதியிலான கேள்விக்கு பதில் சொல்லுவது அவசியம்.. நான் ஹிந்து; மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுபவன்; என் தாயைப் போல (அடக்கடவுளே; இன்று அவள் என்னுடன் இல்லையே) பசுவையும் வணங்குபவன் முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் பசுக்களை வெட்டிச் சாப்பிட பரிபூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதே என் நிலை. சுகாதார முறையில், அருகில் வசிக்கும் இந்து மக்களுக்கு கஷ்டம் ஏற்படாமல் அவர்கள் இதைச் செய்யலாம்.வகுப்பு நல்லிணக்கம் நிலவுவதற்காக முஸ்லீம்களுக்கு பசுக்களை வெட்டிக் கொன்று சாப்பிடும் பரிபூரண சுதந்திரம் இன்றியமையாதது ; இது பசுக்களை பாதுக்காக்க உதவும் 1921ம் ஆண்டில் முஸ்லிம்களே முன்வந்து ஆயிரக் கணக்கான பசுக்களைக் காத்தார்கள்
இப்போது இருண்ட மேகங்கள் தலைக்கு மேலே காணப்படுகின்றன அவை விலகி நாம் இந்த துரதிருஷ்டமான பூமியில் வகுப்பு நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்ற நமிப்பிக்கையைக் கைவிட நான் தயாராக இல்லை. என்னுடைய நம்பிக்கைக்கு (Hope) ஆதாரம் என்ன? என்று கேட்டால் , அது எனது சமய நம்பிக்கையின் (Faith) அடிப்படையில் வந்தது. சமய நம்பிக்கைக்கு ஆதாரம் தேவை இல்லை..”
ஹரிஜன் 27-4-1940
xxxx
எனது கருத்து
காந்திஜி அரசியலுக்குத் தகுதியற்றவர். ஒரு சந்நியாசி போல மடம் கட்டி வாழ்ந்திருக்க வேண்டியவர். கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிடும் இருண்ட மேகம் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை ஆகும் . மயிலே மயிலே இறகு போடு என்னும் பாலிஸியைப் பின்பற்றி, முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்ன உதவினால், பாகிஸ்தான் வராது என்ற அவரது நம்பிக்கை பொய்யாய் பழங்கதையாய் போனதை நம் அறிவோம். மாட்டுக்கறி கேள்வியை ஒரு சங்கராசார்யார் அல்லது நல்ல இந்துவின் முன் வைத்திருந்தால், இந்த நாட்டில் முஸ்லீம்கள் அதைச் செய்யக்கூடாது. எப்படி பன்றிக்கறியை முசுலீம் நாடுகள் விரும்பவில்லையா அப்படி நாங்கள் மாட்டுக்கறியை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருப்பார்கள். வேறு ஒரு கட்டுரையில் தாயைவிட மேலானவள் கோ மாதா என்று ஆறு காரணங்களை வேறு முன் வைத்துள்ளார்; ஆனால் அதே தாயை மற்றவர்கள் வெட்டினால் எனக்கு ஒன்றுமில்லை என்று எழுதுகிறார் . இப்படி அவர் எழுதியதும், எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவிட்டு முஸ்லீம்களைக் கண்டிக்காமல் இருந்ததும் இந்துக்களை ஆத்திரம் அடையச் செய்தன. .
மாட்டு மாமிசம் பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகளுக்கு அக்காலத்தில் கடுமையான எதிர்ப்புக் கடிதங்கள் வந்திருக்கும்.அது 1940ம் ஆண்டுப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் தெரியும் .
–subham—
Tags- மாட்டுக்கறி , பசு மாமிசம், முஸ்லீகள், காந்திஜி, கோ மாதா , என் கருத்து, மரக்கறி உணவு