கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்! (11,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,823

Date uploaded in London –   21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com  

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்!

ச.நாகராஜன் 

ஒவ்வொரு நாளும் யூ டியூபில், செய்தித் தாளில், தொலைக்காட்சி செய்திகளில் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, கேட்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

கோவில் பணத்தில் சொகுசு கார், கோவில் பிரகாரத்திலேயே நிற்கிறது.

அர்ச்சகர் பணம் அம்பேல்.

கோவில் நிலத்தைச் சொந்தக்காரர்களுக்கும், லஞ்சம் தரும் வியாபாரிகளுக்கும் தரத் தயார்!

இப்படி நூற்றுக் கணக்கான அவலங்கள்.

இந்த திராவிட மாடல் டிரஸ்டிகளுக்கும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் என்ன கதி கிடைக்கும்?

ஓ, ராமா. ஒரு பதிலைச் சொல்லேன்.

பதில் கிடைத்தது வால்மீகி ராமாயணத்தில்!

வாருங்கள் ராமாயணத்திற்குள் புகுவோம்!!

*

ராமராஜ்யம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு விதவை இல்லை. ஒரு பிச்சைக்காரன் இல்லை.

கொடுக்க யாரும் இல்லை, ஏனெனில் கொள்வோர் இல்லை.

வண்மை இல்லை ஓர் வறும இன்மையால்.

இப்படி கம்பனின் வர்ணனைப்படி அற்புதமாக நடந்து கொண்டிருந்தது ராம ராஜ்யம்.

அரண்மனை வாயில் வெறிச்சோடிக் கிடக்கும் எப்போதும்.

ஏன், யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே, இருந்தால் தானே அரண்மனை வாசலில் வந்து நிற்க வேண்டும்?

*

ஒரு நாள் ராமர் லட்சுமணனை அழைத்தார். ‘லட்சுமணா. அரண்மனை வாசலுக்குப் போய் யாராவது நிற்கிறார்களா, பார்த்து வா’ என்றார்.

லட்சுமணருக்கு ஒரே ஆச்சரியம்!

ராம ராஜ்யத்தில் ஒரு குறை இருக்குமா, என்ன!

என்றாலும் அண்ணா சொல்கிறாரே போய்ப் பார்ப்போம் என்று வாசலுக்கு வந்து பார்த்தார்.

யாரையும் காணோம்.

திரும்பிச் சென்று ராமரிடம், ‘யாரும் இல்லை’, என்றார்.

இந்த முறை ராமர், “ நீ மீண்டும் சென்று கவனமாகப் பார்.” என்றார்.

லட்சுமணர் திரும்பி அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

யாரும் இல்லை.

ஆனால் அண்ணா கவனமாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாரே!

கவனமாக லட்சுமணர் பார்த்தார்.

ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது.

லட்சுமணர் அதன் அருகே சென்றார்.

“என்ன, எதாவது சொல்ல வேண்டுமா? உள்ளே வா!” என்றார்.

“சொல்ல வேண்டும். ஆனால் நாய்ப் பிறப்பான நாங்கள் அரண்மனைக்குள் வரலாமா, கூடாதே” என்றது நாய்.

“இல்லை, இல்லை, யார் வேண்டுமானாலும் வரலாம், வா, வா” என்று நாயை அழைத்துக் கொண்டு ராமரிடம் சென்றார்.

*

ராமர் நாயைக் கூர்ந்து பார்த்தார்.

அதன் மண்டையில் அடிபட்டதற்கான ரத்தக் காயங்கள் மூன்று இருந்தன.

திகைத்த ராமர், “என்ன ஆயிற்று? சொல், ஏன் மண்டையில் காயம்?” என்று பரிவுடன் கேட்டார்.

நாய் பேச ஆரம்பித்தது : “நான் ஒன்றுமே செய்யவில்லை. நடந்து வந்து கொண்டிருந்தேன். சர்வசித்தி என்ற பிராம்மணன் என் தலையில் அடித்தான். இப்படிக் காயங்கள் ஏற்பட்டன. நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும்” என்றது நாய்.

ராமர் அரசவையைக் கூட்டினார்.

அந்த சர்வசித்தி பிராம்மணனை உடனே அவைக்கு அழைத்து வர ஆணை பிறப்பித்தார்.

பிராமணனும் வந்து சேர்ந்தார்.

“ஏன் இப்படிச் செய்தீர்?” என்று ராமர் பிராமணனைக் கேட்டார்.

பிராமணன் ராமரைப் பார்த்து, “ஓ! ராமா! பசியோடு நடந்து வந்து கொண்டிருந்தேன். இந்த நாய் நடு வழியில் வந்து நின்று வாலை ஆட்டி என்னை ஏளனம் செய்வது போல நடந்து கொண்டது. கோபம் வந்தது. களைப்பு, பசி! என்ன செய்வதென்று தெரியவில்லை. அது நடந்து கொண்ட விதத்திற்காக அடித்தேன். சிறு காயங்கள் ஏற்பட்டு விட்டன” என்றார்.

அரசவையினர், பிராமணனை தண்டிக்கும் அளவு இது பெரிய குற்றமில்லை என்று அபிப்ராயப்பட்டனர்.

ஆனால் நாய் ராமரைப் பார்த்து, ‘நான் தண்டனையைச் சொல்லலாமா’ என்று கேட்டது.

ராமர் அனுமதிக்கவே நாய், “இந்த பிராமணனை காலாஞ்சர் மடத்தின் தலைவராக நியமித்து விடுங்கள்” என்றது.

அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

ப்ரம்மாண்டமான மடத்தின் அதிபதியாக அவரை அமர்த்துவதா?

ராமர் நாய் சொல்வதற்கு இணங்கினார்.

பிராம்மணன் நன்கு அலங்கரிக்கப்பட்டு பெரிய யானையின் மீது ஆசனத்தில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவையினர் பலரும் நாயைப் பார்த்து, “ ஒரு சந்தேகம்! இது தண்டனை அல்ல, வரம்! எவ்வளவு பெரிய கௌரவம் இது. இதை தண்டனையாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டனர்.

*

நாய் பதில் அளிக்க ஆரம்பித்தது:

“நான் இந்த ஜன்மத்தில் நாய். போன ஜன்மத்தில் ஒரு பெரிய மடாதிபதி. எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன். ஆனால் அன்றாட வாழ்க்கையில் தேவ திரவியங்களை எடுத்துப் பயன்படுத்தினேன். உண்டேன். அதனால் தான் எனக்கு இந்த இழிபிறப்பு கிடைத்து விட்டது. ஆகவே பிராமணனுக்கு எனக்குத் தெரிந்த அளவில் சரியான தண்டனையைத் தான் கொடுத்திருக்கிறேன்.” – இப்படி பதில் சொல்லியது நாய்.

அனவைரும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டனர்.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்போருக்கு உரித்தான நரகம் எது?

கோவில் தெய்வ சொத்தை துஷ்பிரயோகம் செய்வது, மனைவி, பிராமணர், மற்றவர் சொத்தை அபகரிப்பது, ஒரு மைனரின் சொத்தை அபகரிப்பது இப்படிப்பட்ட செயல் படுபாதகச் செயல். இதைச் செய்தவருக்கு அவிச்சின்ன நரகமும் நாய்ப் பிறப்பும் தான் கிடைக்கும்.

இதை அவையோர் உணர்ந்தனர்.

நாயைப் புகழ்ந்தனர். நாய் தன் வாலை நன்றியுடன் ஆட்டியது.

*

திராவிட மாடல் கோவில் சொத்துக் கொள்ளையர்களுக்கு என்ன கதி என்று இனி நாம் எண்ண வேண்டாம்.

வால்மீகி ராமாயணத்திலேயே பதில் இருக்கிறது.

சிவன் சொத்துக் குல நாசம் என்று வழி வழியாக நமது முன்னோர் கூறியதோடு கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியில் நெற்றியில் இட்டது போக மீதியை அங்கேயே கோவிலிலேயே விட்டு விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது!

என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை முறை ஹிந்து வாழ்க்கை முறை!

கோவிலைக் காப்போம்! இறைவனின் உடைமைகளை துஷ் பிரயோகம் செய்ய அனுமதியோம் இனி! – கொள்ளையரின் நலன் கருதியே!!!!

***

சுக்கிரன் பரிகார ஸ்தலம் கஞ்சனூர் (Post No.11,822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,822

Date uploaded in London – –  20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், சூரியனார்கோவில் ஸ்தலத்தைப் பார்த்துவிட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரக பரிகார ஸ்தலமான திருக் கஞ்சனூருக்குச் சென்றோம் கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் செல்லவேண்டும் .

மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் நாரசிங்கன்பேட்டை ரயில் நிலயத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவிலில் சுவாமி பெயர்- அக்கினீசுவரர்

தேவியின் திருநாமம் – கற்பக நாயகி

சுக்கிரனுக்கு இங்கு தனி சந்நிதி இருப்பது சிறப்புடைய விஷயமாகும்

நடராஜர், சிவகாமி அம்மையார் உருவங்கள் இங்கு  சிலைகள் உருவத்தில் உள்ளன. வேறு இடங்களில் பஞ்சலோகத்தில் அவர்களைக் காண்கிறோம்.

அப்பர், சுந்தரர் ஆகிய இரு தேவார அடியார்கள் இங்குள்ள சிவ பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர்.

மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.

கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.

இந்த தலத்தின் மரம்- புரச மரம்  (இதன் இலைகள் யாகத்தில் நெய்யையும் அவிஸையும் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.)

ஹரதத்த சிவாசாரியார் சைவத்தின் மேன்மையை ஸ்தாபித்த தலம் . அவருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அவர் பூஜித்த சிவலிங்கமும் இருக்கிறது .

கோயிலுக்குக் கிழக்கில் அக்கினி தீர்த்தம் அமைந்துள்ளது.

அக்கினியும் பிரமனும் பூஜித்த தலம்.

இங்கு அற்புதமான  செப்புத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பலருடைய ரோகங்களைத் தீர்த்த இறைவன் இவர் என்று பல தல புராணக்கதைகள் இருக்கின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷமுள்ளவர்கள் வந்தால் அவைகள் நீங்கும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகின்றனர்

பராசர முனிவருக்கு சிவன் தாண்டவ கோலத்தைக் காட்டியதால் பராசபுரம் என்றும், பிரம்மனுக்கு திருமண கோலத்தைக் காட்டியதால் பிரம்மபுரி  என்றும், கம்சன் என்ற வடநாட்டு மன்னனுக்கு நோயைத் தீர்த்தத்தால் கம்சனூர்/ கஞ்சனூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது

சுரைக்காய் பக்தர் என்பவர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். அவருடைய வரலாறும் செவிவழியாக வந்துள்ளது. அவர் சுரைக்காயை விற்று வாழ்க்கை நடத்திய பொழுது, கடைசி சுரைக்காயை விதைக்காக வைத்திருந்ததாகவும் சிவனடியார் போல இறைவனே வந்து யாசித்தபோது அவர் ஏது செய்வதென்று திகைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.  பாதி  சுரைக்காய் கறிக்கு, மீதி பாதி விதைக்கு என்று சிவனே சொன்னார் என்றும் கதை போகிறது. இதனால் இவர் சிலையும் இடம்பெற்றுவிட்டது.

ஹரதத்தர் என்ற  பெரியார் ஒரு வைணவக்  குடும்பத்தில் பிறந்தாலும் சிவனை வழிபட்டு பல அற்புதங்களைச்  செய்தார் . ஒரு பிராமணர் தவறுதலாக ஒரு பசுவின் கன்று மரணம் அடையக்  காரணமாகியதால் பயந்து நடுங்கினார். சிவ பெருமானின் ஐந்தழுத்தை உச்சரித்தால் பாவம் நீங்கிவிடும் என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே ஹரதத்தர் அவரைப் புல்லைப்பறித்துக் கொணருமாறு கூறினார். கோவிலில் இருந்த கல் நந்தியிடம் அதைக் காட்டி இந்தக் கல் நந்தி புல்லைச் சாப்பிடுமானால் சிவனின் பஞ்சாட்சரமும் உமது பாவத்தை நீக்கும் என்று சொன்னவுடன் கல் நந்தி  புல்லைச் சாப்பிட்டதாம். இவ்வாறு பல அற்புதங்கள் நிறைந்த இடம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வருகின்றனர்.

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற பாரதியார் வாசகமும் இதை உறுதிப்படுத்துகிறது.

Xxxx

அப்பர் அருளிய தேவாரம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : ஆறாம்-திருமுறை

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   1

தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   2

 –subham–

Tags- கஞ்சனூர் , சுக்கிரன் தலம்,

ஹரதத்தர், புரச மரம், பராசர முனிவர் , அப்பர்

திருடனின் கம்பு! (Post No.11,821)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,821

Date uploaded in London –   20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருடனின் கம்பு!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் நியாயாதிபதிகள் எவ்வளவு புத்திகூர்மையுடன், தர்க்கரீதியாக, துப்பறிவதில் சிறந்து விளங்கினர் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லப்படும். 

அது இது தான்: 

ஒரு கிராமத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவரிடம் இரண்டு வேலைக்காரர்கள் வேலை பார்த்து வந்தனர்.

செல்வந்தர் அவர்களைப் பெரிதும் நம்பினார். அவர்களும் நன்கு நடந்து கொண்டு வந்தனர்.

நாளடைவில் நம்பிக்கையின் பேரில் வீட்டின் பொறுப்பை அவர்களிடமே தந்தார் செல்வந்தர்.

தனது நகைகளை அவர் பத்திரமாக ஒரு பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார். சாவி பீரோவின் மேலேயே வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் தனது பீரோவைத் திறந்த செல்வந்தர் திடுக்குற்றார்.

நகைகளைக் காணோம்.

வீட்டில் இருப்பதே இரு வேலைக்காரர்கள் தான்; உடனே வேலைக்காரர்களை அழைத்த அவர், ‘யார் நகைகளைத் திருடியது, உண்மையைச் சொல்லுங்கள்’ என்றார்.

இருவரும் தாங்கள் திருடவில்லை என்று உறுதியாகக் கூறினர்.

ஊர் நியாயாதிபதியிடம் சென்ற செல்வந்தர் நடந்ததைக் கூறினார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் நியாயாதிபதி.

அவர் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர். திருடர்களின் சைக்காலஜி தெரிந்தவர்.

அவர் திடமாக செல்வந்தரிடம் இவர்கள் இருவருமே நிரபராதிகள் போலத் தான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதைக் கேட்ட இரு வேலைக்காரர்களும் மகிழ்ந்தனர். அவர்களில் ஒருவனே நகை முழுவதையும் எடுத்திருந்தான். அவன் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியுற்றான்.

பின்னர் செல்வந்தரைத் தன் அருகே அழைத்த நியாயாதிபதி, “இருந்தாலும் உங்கள் திருப்திக்காக இதை நிரூபிக்க முயல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் காதோடு ரகசியமாகப் பேச ஆரம்பித்தார்.

அவர் தனது பேச்சை ரகசியமாக ஆனால் சற்று உரக்கவே சொன்னார்.

அதை இரு வேலைக்காரர்களும் உன்னிப்பாகக் கேட்டனர்.

“என்னிடம் மர்ம மூங்கில் தடிகள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே அளவு உயரம் கொண்டவையே. அந்த இரண்டையும் இவர்களிடம் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். அதில் மர்மம் என்னவென்றால் திருடியவன் கையில் சென்ற தடி இரவு நேரத்தில் ஆறு அங்குலம் வளர்ந்து விடும். நாளை பார்ப்போம்” என்றார்.

“இரு வேலைக்காரர்களிடம் நாளைக்குக் காலை இதைக் கொண்டு வாருங்கள், இப்போது போகலாம்” என்றார்.

நல்ல வேலைக்காரன் தடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அதை ஒரு ஓரத்தில் பத்திரமாகச் சாத்தி வைத்தான்.

திருட்டு வேலைக்காரனோ சற்று சிந்தித்தான்.

“இரவில் ஆறு அங்குலம் திருடியவனின் தடி வளரப் போகிறது. ஆகவே சரியாக ஆறு அங்குலத்தை இப்போது வெட்டி விடுவோம். அப்போது நாளைக்கு தடி சரியான பழைய உயரத்தை அடைந்து விடும்” என்று எண்ணினான்.

சரியாக ஆறு அங்குலம் தடியை வெட்டினான்.

மறுநாள் காலை இருவரும் நியாயாதிபதியிடம் குறித்த நேரத்தில் சென்றனர்.

திருட்டு வேலைக்காரனின் தடி ஆறு அங்குலம் குறைந்திருந்தது.

அவனைச் சுட்டிக் காட்டிய நியாயாதிபதி, செல்வந்தரிடம், “இவன் தான் உங்கள் நகையைத் திருடியவன்” என்றார்.

திருட்டு வேலைக்காரனோ கத்தினான் :”நேற்று நீங்கள் திருடியவனின் தடி ஆறு அங்குலம் வளரும் என்று சொன்னீர்களே! என் தடி ஆறு அங்குலம் குறைவாக அல்லவா உள்ளது” என்றான்.

“உனது தவறான செய்கையால் உன் மனச்சாட்சி உன்னை உறுத்தவே நீ தான் ஆறு அங்குலம் தடியை வெட்டினாய். இந்தத் தடி நியாயத்தை இப்படித் தான் வழங்கும்” என்றார் நியாயாதிபதி.

அந்த வேலைக்காரனின் வீட்டைச் சோதனை போட்ட போது அனைத்து நகைகளும் கிடைத்தன.

செல்வந்தர் நியாயாதிபதியின் புத்திகூர்மையை எண்ணி வியந்தார்.

அந்தக் கால நியாயாதிபதியின் செயல்பாட்டை விளக்கும் சம்பவம் இது!

—subham—

திருச் சேறை கோவில்களைத் தரிசிப்போம் (Post No.11,820)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,820

Date uploaded in London – –  19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கும்பகோணத்திலிருந்து சுமார் 25  கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை இருக்கிறது. இங்கு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன.

சம்பந்தரும் அப்பரும் பாடிய இத்திருத்தலத்தில் குடிகொண்டுள்ள ஈசனின் பெயர் செந்நெறி அப்பர்.

தேவியின் பெயர்- ஞானாம்பிகை

தீர்த்தம் – மார்க்கண்டேய தீர்த்தம்,

ஸ்தல விருட்சம் – மாவிலங்கை மரம்

தெளம்ய ரிஷி பூஜித்த கோவில் .

கும்பகோணத்திலிருந்து சென்றால் அரிசிற்கரை புத்தூர், திருநறையூயூர் தலங்களையும் தரிசிக்கலாம். போகும் வழியில் பெரிய விஷ்ணு / பெருமாள் கோவில்களும் இருக்கின்றன.

திருவாரூரில் தங்கியும் தரிசித்து வரலாம்.

XXX

திருச் சேறை பெருமாள் கோவில் , மற்றுமொரு விஷ்ணு தலமான நாச்சியார் கோவிலிருந்து (கல் கருடன்) 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது . வைணவ பக்தர்கள் இவ்விரு  தலங்களுடன் உப்பிலியப்பன் பெருமாளையும் அடுத்தடுத்து தரிசிக்கலாம்.

திருச் சேறை, பஞ்ச ஸார க்ஷேத்ரங்களில் ஒன்று .இது முடிகொண்டான் ஆற்றுக்கும், குடமுருட்டியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. .

குடவாசல் அருகிலுள்ள பெரிய ஊர்.

மூலவர் – ஸாரநாதன் , நின்ற திருக்கோலம், கிழக்கே பார்த்து நிற்கும் பெருமாள்.

தாயார் -ஸாரநாயகி , பஞ்ச லக்ஷ்மி

தீர்த்தம் – ஸார புஷ்கரிணி

காவேரி அம்மனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், குளக்கரையில் காவேரி அம்மனுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.

பிரம்மாவும் விஷ்ணுவும் இங்கு அம்மனைத் தரிசிப்பதாக இருப்பது ஒரு அபூர்வம் ஆகும் .

xxxx

உலகில் எல்லா நதிகளையும் கடவுளாக வணங்குவதும் , தாயாக வணங்குவதும் இந்துக்கள் மட்டுமே. இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்ததால் அவர்களுக்கு ‘நீர்’ WATER IS GOD ஒரு கடவுள். வேறு எந்த மதத்திலும்  பிறப்பு முதல் இறப்பு வரை  தண்ணீர் பயன்படுவதில்லை . நீர் Water Mantras மந்திரங்கள் உலகின் மிகப் பழைய புஸ்தகமான ரிக்வேதத்திலேயே உள்ளன ஆரிய – திராவிட வாதம் பேசும் வெளிநாட்டுக் கும்பல்களுக்கு செமை அடி கொடுப்பது கோவில் தீர்த்தங்களும், காவேரி, கங்கை நதி தேவதை வழிபாடுகளும் ஆகும்.

xxxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில் , தைப்பூச காலத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். அப்போது தேரில் ஸ்ரீ தேவி பூ தேவி , நீலா தேவி, மகா லட்சுமி, சார நாயகி ஆகிய ஐந்து தேவியாருடன் பெருமாள் பவனி வருவார்.

பிரளய காலத்தில், இவ்வூரின் கெட்டியான மண்ணைக்கொண்டு செய்யப்பட கடத்தில் (Mud Pot) வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாக தல புராணம் சொல்லும் .

பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் 13 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள தலம் இது.

புஷ்கரணியின் மேற்குக்கரையில் ஆஞ்சனேயர் கோவிலும் இருக்கிறது. ஈசான்ய திசையில் ஸாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்- சிவன்) கோவில் இருக்கிறது.

xxx

பஞ்ச ஸார க்ஷேத்ரம் என்றால் என்ன?

இங்கு சாரநாதன், சாரநாயகி, சார புஷ்கரிணி, சார விமானம் , சார க்ஷேத்ரம் இருப்பதால் இப்படிப் பெயர் பெற்றது .

சார = சேறு

இது திருச் சேறை என்ற பெயருடன் தொடர்பு உடையது

பிரம்மா இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான உபகரணங்களை வைப்பதற்காக ஒரு பானை செய்த போது அது உடைந்து கொண்டே இருந்ததாகவும் இறுதியில் விஷ்ணுவின் கட்டளையின் பேரில் இந்த ஊர்ச் சேற்றைக் கொண்டு கட்டம்/ பானை செய்தபோது அதுநிலைத்து நின்றதாகவும் அதனால் இந்த இடம் திருச் சேறு என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது .

Xxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில், ராஜ கோபால சுவாமிக்கும் சந்நிதி இருக்கிறது. இது பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரின் உத்தரவின்பேரில் அவருடைய மந்திரி நரச பூபாலன் மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமிக்கு  கோவில் எழுப்புகையில் , அந்தக் கோவிலுக்காக  வாங்கிய கற்களில் ஒவ்வொரு பெரிய கருங் கல்லை சாரநாதன் கோவில் கட்டவும் இறக்கியதாகவும் இதை ஒற்றர் மூலம் அறிந்து நாயக்க மன்னர் வந்த போது , அவரது கோபத்தைத் தணிக்க இங்கும் ராஜ கோபாலருக்கு சந்நிதி எழுப்பியதாகவும் செவி வழிச் செய்தி கூறும்.

xxx

நாச்சியார் கோவில், திருச்சேறை முதலிய தலங்களுக்குச் செல்லும் இந்துக்கள் அடுத்தடுத்து ‘பாடல்பெற்ற’ , ‘மங்களாசாஸனம்’ செய்யப்பட தலங்களை தரிசித்துக் கொண்டே செல்லலாம்.

அடியேனும் இவ்வாறு பிப்ரவரி 2023ல் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்

–சுபம்–

Tags- திருச் சேறை , பெருமாள் கோவில் , சிவன் கோவில்,சாரநாதன் , செந்நெறி அப்பர் , நீலாதேவி, பஞ்ச ஸார க்ஷேத்ரம்    .

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4 (Post.11,819)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,819

Date uploaded in London –   19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் மார்ச் மாத இதழில் (March 2023) வெளியாகியுள்ள கட்டுரை!

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

நாம் உண்ட பின்னர் நடக்கும் ஆச்சரியங்கள்!

ஆச்சரியகரமான இந்தப் பிரித்தெடுத்தலானது நாம் உணவை விழுங்குவதற்கு முன்னரேயே நடக்கிறது, ஏனெனில் வாயில் உள்ள உமிழ்நீர் அதை ஸ்டார்ச்சாக தூளாக்குகிறது. உணவு ஜீரணம் ஆவதற்கு முன்பேயே நாம் திருப்தி அடைகிறோம், ஏனெனில் நமது வாய் நமது மூளைக்கு ஆற்றல் வருகிறது என்று சொல்கிறது. சில குறைந்த கால சேமிப்புகளை வெளி விடுவது பாதுகாப்பானது என்றும் சொல்கிறது.

இந்தச் சமயத்தில் வயிற்றில் உள்ள அமிலங்களும் சிறுகுடலில் உள்ள என்ஜைம்களும் எது வந்ததோ அதை செயலாக்கம் செய்ய ஆரம்பிக்கின்றன. அவை தங்கள் வேலையை முடித்து விடும் போது உணவில் உள்ள ஆற்றல் மிகு பேரணுக்கள் (molecules) தங்களது அமைதியற்ற எலக்ட்ரான்களை திருப்பி மாற்றி அமைத்து குளுகோஸாக திரட்டிக் கட்டுகிறது. அதாவது சாதாரண ஜீனியாக!

குளுகோஸ் என்பது ஒரு இரசாயனம் கொண்ட ஷிப்பிங் கண்டெய்னர் என்று கூறப்படும் கப்பல் சரக்குக் கொள்கலம் (Shipping container) போல! அது எலக்ட்ரானை எடுத்துச் செல்ல ஒரு அருமையான ‘ஏற்றி செல்லும் வாகனம்’ போல. இதற்கு ஒரு காரணம் அதன் உச்ச பட்ச திறன் மற்றும் அது வசதியாக வடிவம் கொண்டது, சுலபமாக கிடைப்பது. அதுமட்டுமல்ல அது வழக்கத்தை விட அதிகம் கரையும் ஒன்றாகும். அதாவது இரத்தஓட்டத்தில் மிகச் சிறப்பாக பயணப்படுவதாகும். மேலும் அது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ளதாகும். ஆக்ஸிஜன் மற்றும்   ஹைட்ரஜன் அணுக்கள் உயரிய எதிர்வினை கொண்டவை – அதனால் தான் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் தொட்டிகள் (tanks) எளிதில் தீப்பற்றக் கூடியது என்ற அடையாளக் குறிகளைக் கொண்டிருக்கும் – மேலும் பல நிலையற்ற எலக்ட ரான்கள் ஒவ்வொரு கார்பன் அணுவையும் மற்ற பேரணுக்களுக்கும் நகர்வதற்கான ஆவலுடன் சுற்றுகிறது.  கணிக்க முடியாத படி ஆற்றல் தேவைகளைக் கொண்டுள்ள நமது மூளைகள்,  நியூரான் செயல்பட ஆரம்பித்தவுடன் பெரிய  மிக அதிக தேவையை உருவாக்குகிறது – பிரத்யேகமாக ஆற்றலுக்காக குளுகோஸை நம்பி!

மிக அதிக வளர்சிதை மாற்றத்தை மற்ற எந்த விலங்கினத்தையும் விட அதிகம் கொண்டிருக்கும் ஹம்மிங்பேர்ட் பறவைகள் தன்னுடைய இறக்கைகளுக்கு உடனடியாக தீனியைத் தருகின்றன, அவை சுத்தமான குளுகோஸையும் சுக்ரோஸையும் (கரும்பில் உள்ள முக்கியப் பொருள்) கலந்து உடனடியாக அனுப்புகின்றன. குளுகோஸ் நமது உயிரணுக்களைச் சென்று அடையும் போது – கப்பல் கண்டெய்னர் போல அல்லாமல் அவை முறையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒரு தொடர் போன்ற  எதிர்வினைகள் உயரிய ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உரித்தெடுத்து அவற்றை சிறிய “ஏந்திச் செல்லும் பேரணு”வை உருவாக்கப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு ஒரு பெயர் தனியே உண்டு. அது தான் என் ஏ டி ஹெச் – NADH!

குளுகோஸ் ஒரு கப்பல் கண்டெய்னர் போல என்று கொண்டோமானால், NADH  (கண்டெய்னரிலிருந்து பொருள்களை எடுத்து) டெலிவரி செய்யும் லாரிகள் என்று கொள்ளலாம்.  இப்படி லாரிகளில் எலக்ட்ரான்களை ஏற்றி விடுவது க்ளைகோலிஸிஸ் என்று கூறப்படுகிறது. இது மிகப் பழமையானது. உண்மையில் ஈஸ்ட் திசுக்கள் (Yeast) ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் க்ளைகோலிஸிஸ் ஏற்படும் போது அது ஃபெர்மெண்டேஷன் (புளிப்பேறுதல்) என்று சொல்லப்படுகிறது. உங்கள் தசைகள் அவற்றின் எல்லைக்குத் தள்ளப்பட்ட்டால், உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்றால், உங்கள் உயிரணுக்கள் (செல்) குளுகோஸை ஆற்றல் உற்பத்திக்காக தற்காலிக அளவாக ஃபெர்மெண்ட் (புளிப்பேற்றம்,) செய்கிறது.

இதில் ஆக்ஸிஜன் உட்படுத்தப்பட்டால் உடைந்து தூளாகும் குளுகோஸ் இன்னும் அதிகமாக சுத்தப்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனானது எலக்ட்ரான் மீது தீராப் பசி கொண்டதாகும். அதன் வெளி உறைகள் முழு அமைப்பாக ஆவதற்கு இன்னும் இரண்டே இரண்டு தான் தேவை! அதன் விளைவாக க்ரெப் சுழற்சி மூலமாக அவற்றை இழுக்கிறது. அது தான் உண்மையான வளர்சிதை மாற்றத்தில் ஆற்றல் சேமிப்பகம்.

இந்த சுழற்சியே சற்று சிக்கலானது.. அது மாணவர்களை பேரதிர்ச்சி தருவதை நோக்கமாகக் கொண்டது போன்ற பல இரசாயன சூத்திரங்களின் தொடரைக் கொண்டது. ஆனால், முக்கிய விஷயம் என்னவெனில் குளுகோஸ் இரண்டாக உடைக்கப்படுகிறது. அதன் இரு பகுதிகளும் ஒரு தொடர் எதிர்வினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த எதிர்வினைகள் அவற்றை பாகங்களிலிருந்து உரிக்கின்றன. பின்னர் அவற்றின் முதுகெலும்புகள் மறுபடியும் இன்னொரு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய விஷயம் என்னவெனில், போகின்ற வழியில் ஆற்றல் மிகு எலக்ட்ரான்கள் உரிக்கப்படுகின்றன; பின்னர் இன்னும் அதிக NADHகளில் ஏற்றப்படுகின்றன – க்ளைகோஸிஸில் மட்டும் இருப்பதை விட இன்னும் அதிகமாக!

அநேகமாக ஆற்றல் எதுவும் வெப்பத்தில் இழக்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அது பாதுகாக்கப்பட்டு உருமாற்றப்படுகிறது. அதுபோலவே, குளுகோஸில் அதிக சுற்றுப்பாதையைக் கொண்ட எந்த ஒரு எலக்ட்ரானும் NADHகளில் தனது முழு ஆற்றலுடன் சமநிலையில் இருக்கும்.  

தொடரும்………………………………………..

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள்: தமிழ் நாட்டில் சூரியனார் கோவில் (11,818)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,818

Date uploaded in London – –  18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள் இருக்கின்றன. குமரி முதல் இமயம் வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதற்கு இவை சான்றாகத் திகழ்கின்றன. தமிழில் சிப்பதிகாரத்தில் உச்சிக்கிழான் கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் தமிழ் நாட்டிலுள்ள சூரியனார் கோவில் தலத்தைவிட காஷ்மீரில் உள்ள மார்தாண்ட் , குஜராத்திலுள்ள மதேரா , ஒடிஸாவிலுள்ள கொனார்க் ஆகிய கோவில்கள் பமைவாய்ந்தது ஆகும்.

டில்லியிலுள்ள விமானநிலையத்தில் பிரம்மாண்டமான சூரியன் சிலை உள்ளது. முதலில் இந்தியாவில் உள்ள சிறப்பு மிகு சூரியன் கோவில்களைப்  பட்டியல் இடுகிறேன்

ஆந்திரப்பிரதேசம் – அரசவல்லி சூரியன் கோவில்

பீஹார்  – தக்ஷிணார்க்க  சூரியன் கோவில் (கயா அருகில்)

கர்நாடகம் – தோல்மூர்/பெங்களூர்  சூரியன் கோவில்

அஸ்ஸாம்- சூர்ய பஹர்  கோவில்

ஜார்கண்ட் – ராஞ்சி சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- உணாவோ பாலாஜி-சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- குவாலியர் சூரியன் கோவில்

ஜம்மு காஷ்மீர் — மார்த்தாண்ட சூரியன் கோவில்

குஜராத் – மதேரா சூரியன் கோவில்

உத்தர கண்ட் — கதர்மால் சூரியன் கோவில்

ஒரிஸ்ஸா (ஒடிசா)- கொனாரக் சூரியன் கோவில்

தமிழ் நாடு -சூரியனார் கோவில்

பழைய கோவில்களில் பூஜைகள் கிடையாது. அவைகள் வரலாற்றுச் சின்னங்களே ; பெங்களூர் (தோல்பூர்) முதலியன இடங்களில் உள்ள புதிய கோவில்களில் வழிபாடு உண்டு .

கும்பகோணத்தைச் சுற்றி ஒன்பது கிரகங்களுக்கும் கோவில்கள் உள்ளன. சிலர் இவைகளை மட்டும் தரிசித்து வருவதற்காக செல்லுவார்கள். உடம்பை வருத்திக்கொண்டு ஒரே நாளில் செல்லுவர் அல்லது இரண்டு நாட்களில் செல்லுவார்கள். நான் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது ஆர , அமர வைத்தீஸ்வரன் கோவில், (செவ்வாய்) சூரியனார் கோவில், சுக்கிரன் கோவிலான கஞ்சனூர் கோவில், திருப்பாம்புரம் (ராகு கேது) திருநாகேச்வரம் (ராகு) முதலிய கோவில்களுக்குச் சென்றுவந்தேன். இன்னும் போகாத கோவில்கள் திருநள்ளாறு (சனைச்சரன்); ஆலங்குடி (குரு ). புதன் தலமான திருவெண்காட்டுக்கு முன்னரே (2022) சென்று வந்தேன் . இன்று சூரியனார் கோவிலை தரிசிப்போம்.

xxxxx

சூரியனார் கோவில் தலத்தின் சிறப்பு

கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் சூரியபகவானுக்கு சிறப்பு மிகு தலங்கள் நிறைய உள்ளன. ஆயினும் தென்னிந்திய சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுவது இதன் சிறப்பு. அதுமட்டுமல்ல சூரியன் தவிர ஏனைய கிரக தேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது

இங்குள்ள சூரிய பகவானுக்கு எதிரில் அவருடைய வாகனமான குதிரையைக்  காணலாம்.

சூரிய பகவான் தனது இரண்டு மனைவிகளான (இடது புறத்தில்) உஷா , (வலது புறத்தில்) பிரத்யுஷா தேவிகளுடன் காட்சி தருகிறார்.

உஷா என்பது காலைச்  சூரிய ஒளி; அதாவது சூரியன் உதிக்கும் முன் தோன்றும் ஒளி.

பிரத்யுஷா என்பதை பிரதிபலிப்பு, நிழல் (சாயா ) என்று சொல்லலாம்

மேற்கு திசை பார்த்து இருப்பதால் அவரை காலையில் கிழக்கில் உதித்த சூரியன் என்றும் கருதலாம். அவருடைய உக்கிரத்தைத் தனிக்க எதிரே குரு என்னும் வியாழ பகவான் சந்நிதி இருக்கிறது

ரத சப்தமி  போன்ற காலங்களில் பெரிய விழா நடைபெறும். ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு பரிகாரத் தலமாக இருப்பதால் எப்போதும் கூட்டம் இருக்கிறது. மேலும் நகைக்கிரகங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது.

பிற்கால சோழர் காலம் முதல் , இந்தக் கோவில் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன . இந்தக் கோவிலின் மஹிமை பற்றி ஒரு கதையும் உண்டு. காலவ முனிவர் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டதாகவும் அது தீரவேண்டுமென்று பிரார்த்தனை செய்தவுடன் இங்கு நோய் அகன்ற தாகவும் சொல்லப்படுகிறது..

எல்லாக் கோவில்களிலும் நவக்கிரஹ சந்நிதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி சந்னகிதி இருப்பது சிறப்பாகும்

அருகிலுள்ள திருமங்கலக்குடி பாடல் பெற்ற சிவன் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

—subham—-

TAGS–இந்தியா முழுதும்,  சூரியன் கோவில்கள், பட்டியல்,  சூரியனார் கோவில் , சந்நிதிகள், நவக்கிரகங்கள்,

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 3 (Post No.11,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,817

Date uploaded in London –   18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி

 எடுத்த ஆரத்தி! – 3 

.நாகராஜன் 

ஒரு நாள் சத்யேந்திரநாத் போஸின் மிக நெருங்கிய உறவினரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.

விவேகானந்தா சாலையில் அவர் வாழ்ந்து வந்தார். மிக அருகில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.

ஹிந்துக்களுக்கே உரித்தான வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை ஶ்ரீ குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.

அவர் ஒரு வேத விற்பன்னர், நல்ல பக்தர்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சாந்திபூரில் அவர் வசித்து வந்தார். திருமணத்தை வேத முறைப்படி அவர் நடத்தி வைக்க அதைப் பார்த்த சத்யேந்திரநாத் அந்த வைபவத்தால் மிகவும் கவரப்பட்டார்.

அவரது சம்ஸ்கிருத ஞானம், வேத உச்சரிப்பு எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த சத்யேந்திரநாத் அவரிடம் சென்றார்.

“எல்லா வைபவங்களும் இரவுக்குள் முடிந்து விடுமே. இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா?” என்று அவர் குருமோகன் பட்டாசார்யாவைக் கேட்டார்.

குருமோகன், “சாந்திபூருக்கு நள்ளிரவில் செல்ல முடியவே முடியாது. ஆகவே நாளை காலை தான் போகப் போகிறேன். உங்களுடன் தங்க எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை” என்றார்.

சத்யேந்திரநாத் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

இரவை குருமோகன் அவரது இல்லத்தில் கழித்தார்.

காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளஸிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.

அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.

சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.

துளஸிக்கு ஆரத்தி எடுக்கும் போது, ஆரத்தி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்திற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.

ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்வது சுலபமே.

குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.

தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.

ஆரத்தியின் மஹிமையே மஹிமை!

குறிப்பு:

சத்யேந்திரநாத், கடவுள் துகள், போஸான் பார்டிகிள், செர்ன் விஞ்ஞான கூடம், உள்ளிட்டவை பற்றிய பல சுவையான விவரங்களை எனது அறிவியல் துளிகள் மூன்றாம் பாகத்தில் 76,77,78 அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்.

ஆகவே அவை இங்கு தரப்படவில்லை.

இதே போல கண் திருஷ்டியைப் பற்றி பிரபல விஞ்ஞானி கூறியவை பற்றியும் அறிவியல் துளிகள் தொடரில் அதைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் தரப்பட்டுள்ளதையும் இங்கு அன்பர்கள் நினைவு கூரலாம்.

***

இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

Kathakali Facts- Part 2 (Role of Colours; Play of Colours)-Post No.11,816

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,816

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

Colours play a major role in the Kathakali dance. From the colours and facial make ups ,one can find out good and bad characters in the dance drama. There are five types of actors:

Pacha = green

Kathi = knife

Thadi = beard

Minikku = polished

Kari = black.

The costume and make up of Kathakali actors are impressive. Legend avers that the Raja Kottarkkara who first conceived the characters had a vision of SEA NYMPHS and MONSTERS from whom he copied the form. A Raja of Vettathunadu family made far reaching changes in the facial make up and head gears of characters. There are four different colourations of the face, each connoting a different mood.

Make up takes about three to four hours; an actor has to tie at least 80 knots in the process of dressing.

Xxx

Five distinct types

1.Pacha

Here the actors colour their faces deep green; the characters who impersonate gods and mythological heroes are called Pacha . they paint their lips dep red. The movements are dignified. They observe absolute silence.

2.Kathi

Kathi characters paint their faces red and green; they represent ferocious and evil beings such as Ravana , the demon king. A knife shaped reddish marking on either side of the nose extending to the cheeks distinguish the Kathi type of actors. They wear artificial teeth and claws.

3.Thadi

Actors who wear red, white and black beards are called Thadi. Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All these characters roar loudly.

4.Minikku

Those who impersonate Narada , ambassadors, ladies etc. come under the group  Minikku. They paint their faces in a mixture of yellow and light red and put white dots on their cheeks. They put on their fore-heads caste marks. They put black dye on eye brows. They redden their eyes.

5.Kari

Demons and evil characters symbolising savagery and primitiveness cone under the category of Kari.

Three to four years training is required for make up artistes.

Kathakali actors redden their eyes by applying the flower of Chunda (Solanum pubescence ).

xxx

Music

The musicians need at least five years training. They follow classical Ragamala. A standard Kathakali performance will take 8 to 10 hours. Nowadays they perform it within a few hours.

Dance

Kathakali actors are masters of both Lasya and Tandava styles. They change it in quick succession. There are three distinct varieties of  Kathakali Dance.

1.Ilakiyattam

The mild and gentle type usually adopted while depicting love and such other sweet and subtle emotions.

2.Idamattu

The intermediate type which is half way between the too slow and too quick varieties.

3.Murukiyattam

The extremely vigorous variety used in duels and battle scenes.

Xxx

Mahakavi Vallathol

Kathakali has flourished long under royal patronage. Raja of Travancore supported various troupes.

Thanks to the great leadership of the foremost poet of Malabar,  Mahakavi Vallathol , the kathakali which was until yesterday a dying art has been revived. Poet Vallathol and his troupe of fine Kathakali dancers succeeded in rendering the historic art more attractive and popular. Now over 100 plays are available in print. Kerala Kala Mandalam and the academies are spreading the art.

Source book – Kathakali by K B Padmanabhan Tampy, 1963

—subham—

Tags- Kathakali, Vallathol, Five types, Colours, Make ups

பிறந்ததிலிருந்து 3 SHIP/கப்பல் பயணம் ! திருச்சி கல்யாணராமன் பொன் மொழிகள் (Post No.11,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,815

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நகைச்சுவை ததும்பப்பேசி ஆன்மீக உண்மைகளை ஆழப்பதிக்கும் உபந்யாசகர் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் ; அவர் பட்டினத்தார் பற்றிய சொற்பொழிவின் இடையே சொன்ன விஷயம்

பிறவிப்  பெருங்கடல் நீந்துவர்  நீந்தார்

இறைவன் அடி சேராதார் – என்கிறார் வள்ளுவர்.

இன்பம்- துன்பம் நிறைந்தது சம்சார சாகரம். சம்சாரம் என்றால் மனைவி என்று சொல்லுகிறோம். சம்சாரம் என்றால் இல்லறம். அதை நீந்திக் கடக்கவேண்டும். நாம் உண்மையில் பிறந்தநாள் முதல் மூன்று கப்பலில் பயணம் செய்து அதைக் கடக்கவேண்டியிருக்கிறது. இறுதியில் அதைக் கடக்க உதவுவதும் ஒரு கப்பல்தான்.

ஆங்கிலத்தில் கப்பல் என்றால் SHIP ஷிப்.

முதலில் நமக்கு அறிமுகம் ஆவது தாய், தந்தை மற்றும் சித்தப்பா, அத்தை, மாமா , மாமி. அதாவது பிறந்தவுடனேயே ரிலேஷன்ஷிப் RELATIONSHIP என்னும் கப்பலில் குதிக்கிறோம். இவர்களில் யாரையாவது எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்ற முடியுமா? மாமா, மாமா தான் ; அத்தை அத்தைதான். அந்த ரிலேஷன்ஷிப் என்ற சொந்த பந்தத்தை தமிழில் சொந்தக்காரர்கள்- உறவினர்கள் என்போம். இது முதல் SHIP கப்பல்=ஷிப்.

கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போனால் அங்கே நாம் மாட்டிக்கொள்வது FRIENDSHIP ப்ரண்ட்ஷிப்ப்பில். அது ஒரு கப்பல்= ஷிப். அதிலிருந்தும் மீள்வதில்லை ; அது அலுவலகம்வரை தொடர்கிறது.

பின்னர் இல்லறத்தில் நுழைகிறோம். . அங்கு நமக்குக் கிடைப்பதோ வாழ்க்கைத் துணை ; அதாவது PARTNERSHIP பார்ட்னர்ஷிப் ; மனைவி .

இவர்கள் யாரும் நாம் இறக்கும்போது கூட வரப்போவதில்லை. அதற்குப்பின் நமக்கு உதவ இறைவன் இருக்கிறான். அவனை அடையவும் ஒரு ஷிப் – கப்பல்தான் — உதவும். அதுதான் WORSHIP வொர்ஷிப் – இறை வழிபாடு.

பட்டினத்தார் போன்றோர் இப்போதே அவனை நினை என்கிறார்.

Xxxx

திருவெண்காடர்

பட்டினத்தாரின் பெயர் திருவெண்காடர் ; அவர் கோடீஸ்வரனாக இருந்த காலையில் , தன்னுடைய வெளிநாட்டு கப்பல் பிஸினஸ் (Maritime Trade) நிமித்தமாக அதிகாரிகளை சென்றுபார்த்தார். அந்த நாட்டு அரசனைச் சென்று பார்த்தார். அவர்கள் எல்லோரும் அதிகார தோரணையில் அமர்ந்து இருக்கபட்டினத்தார் நின்ற நிலையில் தன்  கோரிக்கைககளை முன்வைத்தார்.

பட்டினத்தார் முறும் துறந்த முனிவராகி, கோவணத்துடன் ஊருக்கு வெளியே அமர்ந்திருந்தகாலையில் , அதே அதிகாரிகள் வந்து ,

திருவெண்காடரே ; இப்படி பாதியில் பிசினஸ்ஸை விட்டுப் போகலாமா ? இதில் என்ன லாபம் என்றனர்.

நான் இதற்கு முன்னர் பிசினஸ்மேன் (Businessman) என்று வந்த போது நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள்; நான் கைகட்டி வாய்பொத்தி நின்றுகொண்டு பேசினேன். இன்று பாருங்கள்; நான் அமர்ந்து ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் – என்றார்.

Xxxx

LOAN லோன் – கடன் — தொல்லையிலிருந்து வழிபட மந்திரம்

நம்மில் யாராவது கடன் இல்லாமல் இருக்கிறோமா?

வீட்டுக் கடன், போன் கடன், கார் கடன், ஸ்கூட்டர் கடன், எஜூகேஷனல் லோன் (கல்விக்கடன்), திருமணக் கடன் என்று இறுதிவரை லோன்- கடனில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் வெளியே பேசும் போது என் வீடு, என் கார் என்கிறோம். போன் கட்டணம் செலுத்தாவிடில் அது கூடப்பேசாது.

வாழ்நாள் முழுதும் நமம்மைத் தொடர்ந்து வரும் கடனை LOAN ஒழிக்க இரண்டு லோன்கள் LOANS உள்ளன. அதை நாடுங்கள்; கடன் விடுபடும்

ஒன்று மாலோன் = திருமால் MAA+ LOAN

இன்னொன்று மயிலோன் = முருகன்  MAYIL + LOAN

மாலோனையும் மயிலோனையும் வழிபட்டால் பிறவி LOAN லோன் = பிறவிக் கடனிலிருந்து விடுபடலாம்.

Xxxx

L I C

எல் ஐ சி என்ற அமைப்பு இருக்கிறது; யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று பெரிதாக எழுதிப்போட்டு இருக்கிறார்கள்; எனக்கே புரியவில்லை. பணம் கட்டு; நீ போனால் …….. (செத்துப் போனால்) இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள்; இருக்கும்போது பயன்படுத்த பணம் இல்லாமல், (செத்துப்) போனால் கிடைக்கும் பணம் எதற்கு?

கையெழுத்துப் போடப் போகும்போது உன் நாமினி NOMINEE  யார் என்று கேட்கிறார்கள் ; கூடவே வந்த மாமி (நீ) இதோ நான்தான் நாமினி இருக்கிறேனே என்கிறாள்; கணவன் போனபின்னரும் நீண்ட நாள் வாழ்வோம் என்று நம்புகிறார்கள்!

( அவர் சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்; சில சொற்கள் என்னுடையதாக இருக்கலாம்; ஒரிஜினல் உபன்யாசத்தை யூ டியூப் முதலிய சேனல்களில் காணவும்; இன்னும் சுவையாக இருக்கும்.)

Xxxx subham xxxxx

TAGS– மா லோன், மயிலோன், பட்டினத்தார், மூன்று ஷிப் , கப்பல், திருச்சி, கல்யாணராமன், உபந்யாசம், லோன், Loan, Ship, Relationship, Partnership, Friendship

நாச்சியார் கோவில் கல் கருடன் (Post No.11,814)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,814

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நாச்சியார் கோவில்(திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால்  மேலும் மேலும்  தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம். இதே ஊரில் பாடல் பற்ற சிவன் கோவிலும் இருப்பது எல்லா இந்துக்களுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனையும் கொடுக்கிறது. 

முதலில் நான் பிப்ரவரி 2023-ல் எப்படிப் போனேன் என்று சொல்லி துவங்குகிறேன் . கும்பகோணத்திலிருந்து இந்த ஊர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாங்கள் காரில் சென்றோம். அருகிலேயே சிவன் கோவிலும் இருக்கிறது. கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் என்ற தலைப்பில் எழுதிய மூன்று சிவன் கோவிலில் இந்த சிவன் கோவிலும் அடக்கம் .

இப்போது பெருமாளைத் தரிசிப்போம்.

மூலவர் பெயர் – ஸ்ரீநிவாசன் , திருநறையூர் நம்பி, வாசுதேவன் .

நின்ற திருக்கோலம் .

தாயார் வஞ்சுள வள்ளி ( நம்பிக்கை நாச்சியார்) , திருமால் பக்கத்தில் திருமண கோலத்தில் நிற்கிறார்.

ஐந்து தீர்ததங்கள் உள்ளன.

மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளான வஞ்சுள வல்லியை திருமால் ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார் என்பது நம்பிக்கை .

சிறிதும் பெரிதுமாக 16 கோபுரங்கள் காட்சி தருகின்றன.

பெருமாளுடைய  கல் கருட வாகனம் பிரசித்தமானது. ஏழு வியாழக்கிழமைகளில் கருட பகவானை அர்ச்சித்தாலோ தரிசித்தாலோ நினைத்தது நிறைவேறும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் .சந்நிதியில் 4 பேர் தூக்கும் கருட வாகனத்தை இறுதியில் 64 பேர் தூக்கிச் செல்லுவார்கள்; கல் கருடனுக்கு தனி சந்நிதி உள்ளது.

கருட சேவையின்போது, பெருமாள் கல் கருடன் வாகனத்திலும் தாயார் அன்ன னாவாகனத்த்திலும் பவனி வருவார்கள்.

திருமங்கை ஆவார் பாடிய திருத்தலம் . 108 திவ்ய தேசங்களில் ஒன்று

கருட பட்சிகள் மரணம்

திருக்கோயில் நந்தவனத்தில் நீண்டகாலமாய் வசித்து வந்த கருட பட்சிகள் 1999ம் ஆண்டில் முக்தி அடைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன.. இவை  நமக்கு திருக்கழுகுக் குன்ற கழுகுகளை நினைவுபடுத்தும்

108 திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் இந்தக்கோவிலில் ஒரு சீராகக் காணலாம் என்று லிப்கோ பாதிப்பு கூறுகிறது.

அருகில் திரு நாகேஸ்வரம், அழகாபுத்தூர் கோவில்கள் உள்ளன. இதே ஊரில் பாடல் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது.

—subham—

Tags-நாச்சியார் கோவில், கல் கருடன், பெருமாள், கருட பட்சிகள் , மேதாவி முனிவர் , திவ்ய தேசம்