Over 160 plants are listed in the Vedic literature. I have collected them from old books. So, there may be some changes in the nomenclature or identification. So, it is better to double check before using them in medicines.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023) சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார். பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக் கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.
நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.
பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார் . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)
கொலுசு அதிசயம்
இந்த மேக நாதர் கோவிலில் லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத் துவங்கியவுடன் , சமையல் அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).
அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.
11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்
அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்
சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.
கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .
பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே.
கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன
சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle) அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .
அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோவில் இது
இறைவர்: முயற்சி நாதர், மேகநாதர்
இறைவியார்: சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்
தல மரம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய புஷ்கரணி
தேவாரப் பாடல்கள்: சம்பந்தர்
யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.
சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது
இதோ திருஞானசம்பந்தர் பதிகம்
பாடல் எண் : 1
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி,
மாயச் சூர்அன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
பொழிப்புரை :அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.
பாடல் எண் : 2
பூஆர் சடையின் முடிமேல் புனலர், அனல்கொள்வர்,
நாஆர் மறையர், பிறையர், நறவெண் தலைஏந்தி
ஏஆர் மலையே சிலையாக் கழிஅம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.
பாடல் எண் : 3
பொன்நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்,
மின்நேர் சடைகள் உடையான், மீயச் சூரானைத்
தன்நேர் பிறர்இல் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிதுஅன்றே.
பாடல் எண் : 4
வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோடு ஆகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
பாடல் எண் : 5
விடைஆர் கொடியார், சடைமேல் விளங்கும் பிறைவேடம்,
படைஆர் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்,
பெடைஆர் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடைஆர் நடைஒன்று உடையார் மீயச் சூராரே.
பாடல் எண் : 6
குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர்கொன்றை
ஒளிரும் பிறைஒன்று உடையான் ஒருவன், கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்,
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே.
பாடல் எண் : 7
நீல வடிவர், மிடறு நெடியர், நிகர்இல்லார்,
கோல வடிவு தமதுஆம் கொள்கை அறிவொண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர், மீயச் சூராரே.
பாடல் எண் : 8
புலியின் உரிதோல் ஆடை, பூசும் பொடிநீற்றர்,
ஒலிகொள் புனல்ஓர் சடைமேல் கரந்தார், உமைஅஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.
பாடல் எண் : 9
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதில் அவனும் மாலும் தொழப்பொங்கு எரிஆனார்,
கோதி வரிவண்டு அறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.
பாடல் எண் : 10
கண்டார் நாணும் படியார், கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.
பொழிப்புரை :கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்
பாடல் எண் : 11
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர்ஐந்து மொழிந்து, உள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.
பொழிப்புரை :பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 2
ச.நாகராஜன்
ஆகவே எல்லாமே வேகத்தைப் பொறுத்தே தான் இருக்கிறது. காலமும் பொருண்மையும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுபவையே.
பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் .நிஜமல்ல.
மனோசக்தியை வளப்படுத்தும் குருமார்கள் தீடா அல்லது வேறு மாறுபட்ட நிலையில் மனதை இயக்குகின்றனர். அவர்கள் காலமற்ற பிரதேசம் ஒன்றில் நுழைந்து கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகத் தெளிவாக பார்க்க முடியும் என்கின்றனர்.
காலம் எப்போதுமே முன்னோக்கிச் செல்லும் ஒன்று என்று கருதப்பட்டு வந்தது. இதை வில்லிலிருந்து புறப்பட்ட அம்பானாது எப்படி ஒரு நேர்கோட்டில் செல்லுமோ அதே போலத் தான் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் க்வாண்டம் பிஸிக்ஸ் என்னும் அணு இயற்பியல் அது எதிர்திசையிலும் கூடச் செல்லும் தன்மை கொண்டது என்று சொல்கிறது. இந்தப் புது இயற்பியலின் உள்ளே செல்லச் செல்ல அதிகமதிகம் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வந்து நம்மை பிரமிக்க வைக்கின்றன.
இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா?
ஒரு திரையில் ஒரு குறுகிய வெட்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் வழியே ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்டது. இது அபெர்சர் டெஸ்ட் (aperture test) என்று சொல்லப்படுகிறது.
இந்த ஒளியானது ஒரு துகள் சித்திரமாகவோ அல்லது அலை வடிவிலோ சோதனையாளரின் விருப்பப்படி திரையில் தெரிந்தது.
இப்போது ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. சாதாரணமாக நாம் பார்க்கும் நிகழ்வுகள் அலைவடிவில் தோன்றுபவையா, அவை நாம் துகள் வடிவில் பார்க்க வேண்டும் என்று உணர்வுடன் சோதனை செய்யப்படும் போது அப்படித் தோன்றுகின்றனவா?
ஒரு திடப் பொருளில் உள்ளே மிக அதிகமான வெற்றிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் இந்த துகள் கொள்கை தன் பங்கிற்கு தனது செல்வாக்கைச் செலுத்தலாம்.
சூரிய மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். அவற்றில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவற்றிற்கு இடையே உள்ள தூரமோ மிக மிக அதிகமானவை. இந்தப் பெரிய சூரிய மண்டலத்தை ஒரு அணு அளவிற்குச் சுருங்கியதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கும் இடத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் இப்போது :- 99.9999999999% திடப் பொருளை வெளியாக (Space) வைத்துக் கொள்வோம்.
அப்போது ஒரு அபூர்வமான மதிப்பீடு பிரபஞ்சம் பற்றி நமக்கு வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா “வெளிகளும்” எடுக்கப்பட்டு விட்டால், “திடப் பொருள்” மட்டுமே விடப்பட்டால், பிறகு இதை உங்கள் உள்ளங்கையில் வைத்து விடலாம்!
எனது இந்தியப் பயணத்தின் ஓரு பகுதி, பார்க்காத கோவில்களைப் பார்ப்பதாகும். குல தெய்வமான வைதீஸ்வரன் கோவிலையும், ஒரு காலத்தில் நாங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு (Hide and Seek game) விளையாடிய மீனாட்சி கோவிலையும் (Madurai) மட்டும் என்றும் மறவோம். எத்தனை முறை வாய்ப்பு கிடைத்தாலும் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
புதிய கோவில்களின் விஜயத்தின் ஒரு பகுதியாக, சென்னைக்கு அருகிலுள்ள சிறுவாபுரி பால சுப்ரமண்ய சுவாமி கோவிலுக்குப் போனோம். நல்ல தரிசனம் கிடைத்தது. எல்லா வகை அபிஷேகங்களையும் கண்டு களித்தோம். இது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் என்பதால் சுமார் 600, 700 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கவேண்டும். கோவில் மிகவும் சிறியதுதான் .
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு முருகன் விக்ரகம் வள்ளியை அணைத்துக்கொண்டு இருக்கும் செப்புத் திருமேனி ஆகும். கோவிலில் வைத்துள்ள பலகைகளில் சிறுவா புரி முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்களை பொறித்து வைத்துள்ளனர்.. மேலும் என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற போர்டும் வைத்துள்ளார்கள் . இந்தக் கோவிலில் செவ்வாய்க் கிழமைகளிலும் முருகனுக்குரிய விழா தினங்களிலும் நீண்ட வரிசை இருக்குமாம். மணிக் கணக்கில் வரிசையில் நின்றால் தான் தரிசனம் கிடைக்குமாம். நல்ல வேளையாக மாணவ மாணவிகளுக்கு பரீட்சை அடக்கும் பிப்ரவரியில் நாங்கள் சென்றதால் முருகன் எங்களைச் சோதிக்கவில்லை .
இந்த அழகிய கோவிலில் ஸ்ரீ அண்ணாமலை (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகனுக்கு முன்னால் மயில் வாகனம் கற்சிலையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது
ஒரு திருப்புகழில் வேண்டுவன வெல்லாம் தரும் முருகன் என்ற வரி வருகிறது. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் எனது உறவினர் விஷயத்திலேயே அற்புதங்கள் நடந்தன.
ஒரு பெண் வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக ஏழு வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தார். ஐந்தாவது வாரத்தில் அவருக்கு வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் உத்தரவுக் கடிதம் வந்துவிட்டது.
மற்றோர் உறவினருக்குத் திருமணம் ஆகி, நீண்ட நாட்களுக்குக் குழந்தை பிறக்காததால் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தார். ஏழு வாரங்களுக்கு முன்னதாகவே அவர் கர்ப்பவதி ஆனார்.
இந்த இரண்டு விஷயங்களையும் என் கார் டிரைவருடன் பேசிக்கொண்டே வந்தேன். அவரும் அதை ஆமோத்தித்து ஒரு விஷயத்தைச் சொன்னார் . வழக்கமாக ஒருவாடிக்கையாளரை அவரது டாக்சியில் அழைத்துச் செல்வாராம். அவரை இந்த முருகனை , வரப்ப்ரசாதியான கடவுள் என்று புகழ்ந்துவிட்டு உனக்குக் குழந்தை இருக்கிறதா என்று கேட்டாராம். கல்யாணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்றவுடன் சிறுவாபுரி முருகனைத் துதித்து விரதம் இருக்கச் சொன்னாராம். அவரும் அப்படியே செய்ய, அவருக்கும் குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மார்ச் 2ம் தேதி , அதிகாலை 5 மணிக்கு என்னை சென்னை விமான நிலையத்துக்கு ஏற்றிச் செல்ல வந்த போது , ஸார் , ஒரு குட் நியூஸ் ; என மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார் என்றார் . இறங்குகையில் அதிகாலை வேளையில் நல்ல செய்தி சொன்னீர்கள் என்று சொல்லிவிட்டு கூடவே 200 ரூபாய் கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தேன். எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற புண்ணியம் என்று நினைத்தேன்.
· வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள்.
· தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவில் பெரம்பூரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அங்கிருந்து நாங்கள் ஒரே மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தோம். இது தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம் . இந்தக் கோவிலுக்கும் சிறுவருக்குமென்ன தொடர்பு இருக்கிறது என்று வியப்போருக்கு ஒரு கதையும் இருக்கிறது ; இதைக் கோவிலில் எழுதியும் வைத்துள்ளனர் :
இதோ கோவில் பலகையில் கண்ட விஷயம் :
இராம பிரானின் மகன்களான குசன், லவன் என்ற இரண்டு சிறுவர்களும் ராம பிரானுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலம் ஆதலால் சிறுவர் +அம்பு+ எடு = சிறு வரம்பெடு, என்றும் சிறுவம்பெடு , சிறுவாபுரி , ‘சிறுவை’யென்றும் பெயர் வந்துள்ளது. அழகு மயிலில் ஆடி வந்து , அருணகிரியாருக்கு முருகன் காட்சி அளித்த இத்தலத்திற்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. புது வீட்டில் குடியேற விரும்புவோர், சிறுவாபுரி திருப்புகழை ஓதி , சிறுவாபுரி முருகனைத் தரிசித்து, மரகதக் கல்லில் மாட்சியுடன் விளங்கும் மயிலையும், மற்ற மூர்த்திகளையும் வழிபட்டு, வாழ்வில் சொந்த வீட்டில் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் பெறலாம் என வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளார் .
இதோ சிறுவாபுரி கோவில் பற்றி அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்கள்:-
Number 1
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram from kaumaram.com
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று …… தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி …… யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை …… யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று …… பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து …… வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த …… முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து …… சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
பிறவியான சடமிறங்கி … இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட
உடலிலே புகுந்து,
வழியிலாத துறைசெறிந்து … நல்வழி இல்லாத வேறு வழிகளிலே
நெருங்கிப்போய்,
பிணிகளான துயருழன்று தடுமாறி … நோய் முதலிய துக்கங்களின்
வேதனையுடன் தடுமாறி,
பெருகு தீய வினையி னொந்து … பெருகும் கெட்ட வினைகளினால்
கஷ்டப்பட்டு,
கதிகடோறும் அலைபொருந்தி … இவ்வாறு பிறப்புக்கள் தோறும்
அலைச்சல் அடைந்து,
பிடிபடாத ஜனன நம்பி யழியாதே … பிறவியின் உண்மைத்தன்மை
ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல்,
நறைவிழாத மலர்முகந்த … தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும்,
அரிய மோன வழிதிறந்த … அருமையான மெளன வழியைத் திறந்து
காட்டுவதுமான
நளின பாத மெனது சிந்தை யகலாதே … உனது தாமரைப்
பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல்,
நரர் சுராதிபரும்வணங்கும் … மனிதர்களும், தேவர் தலைவர்களும்
வணங்குகின்ற
இனிய சேவை தனைவி ரும்பி … இனிமையான உன் தரிசனத்தை
விரும்பி
நலனதாக அடிய னென்று பெறுவேனோ … நன்மை அடையும்
பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ?
பொறிவழாத முநிவர் … ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல்
காத்திருந்த நக்கீர முனிவர்
தங்கள் நெறிவழாத பிலனு ழன்று … (குகையில் அடைபட்டாலும்)
தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே
மன அலைச்சலுற்று,
பொருநிசாசரனைநினைந்து வினைநாடி … குகையில்
அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல
நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது,
பொருவிலாமல் அருள்புரிந்து … ஒப்பில்லாத அன்பு வழியிலே
கிருபை கூர்ந்து,
மயிலினேறி நொடியில் வந்து … உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப்
பொழுதில் வந்து,
புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே … புளகாங்கிதம்
கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு)
திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே,
சிறுவராகி யிருவர் … சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின்
புதல்வர்கள் இருவரும்
அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல் … அந்த யானைப்படை,
காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன்
சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி … வில் ஏந்திய ஸ்ரீராமருடன்
எதிர்த்துப் போர் செய்து,
செயமதான நகர் அமர்ந்த … வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்**
அமர்ந்த,
அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி … குபேரப்பட்டினம்
போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த,
வரமி குந்த பெருமாளே. … வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை
முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை – ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் ‘சிறுவரம்பேடு’. ‘லவ – குசர்’ ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
Xxxx
Number 2
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம …… மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம …… கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம …… மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம …… அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி …… யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக …… முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக …… வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் …… பெருமாளே.
Xxxx
Number 3
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
(தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய,பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க,லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும்.
தாமரை போன்ற கண்களை உடையவனே,தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து,ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த, பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே,குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே,செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே,நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே,எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட, குளிர்ந்த சிறுவைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.)
ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது .ஆனால் நான் பேசும் இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது . இது எனது அனுபவம் . இதற்கு வேறு சான்று எதுவும் தேவை இல்லை .இருப்பினும் மலையாள நூல் அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் , சீதா உபநிஷத்திலும் இது உறுதிபடக் கூறியிருப்பதைக் காணலாம் .
xxx
மார்ச் 3 வெள்ளிக்கிழமை
இதய குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது .நான் – நான் என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது.ஆன்ம விசாரத்தினாலோ அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே இரு.
xxx
மார்ச் 4 சனிக்கிழமை
பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது .எனவே பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம்.
xxx
மார்ச் 5 ஞாயிற்றுக்கிழமை
உலகத்தில் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம் . சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது .
xxx
மார்ச் 6 திங்கட் கிழமை
சுருக்கமாகச் சொன்னால் நான் என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம் . அது உதிக்கும் இடம் இதயம்.
xxx
மார்ச் 7 செவ்வாய்க் கிழமை
இந்த இதயம் ரத்தம் சுத்திகரிக்கும் அங்கம் அல்ல. ‘ஹிருதயம்’ என்பதற்கு இதுவே மையம் என்று பொருள. ஆகவே அது ஆன்மாவைக் குறிக்கிறது .
Xxx
மார்ச் 8 புதன் கிழமை
முயற்சி செய்து மனதை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமானால் அதுவே சஹஜ நிலை (இயல்பு நிலை)
xxx
மார்ச் 9 வியாழக்கிழமை
மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே. ஆனால் அதற்குப் பதிலாக நம் நம் மனம் வெளிப்பொருள்களைப் பற்றி நிற்கிறது .
xxx
மார்ச் 10 வெள்ளிக்கிழமை
நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால் உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு ஏற்படுகிறது. தவறான எண்ணங்ககளை விட்டுவிட்டு நமது மூலத்தைத் தேடிப்பிடித்து நமது இயல்பான நிலையில் இருப்பது அவசியம் .
xxx
மார்ச் 11 சனிக்கிழமை
நமது சொரூபத்தை மறப்பதே உண்மைச் சாவு. அதை நினைவுகொள்ளுதல் உண்மைப் பிறப்பு. தொடர்ந்து வரும் பிறப்புகளுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது .
xxx
மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை
நாம் ஆனந்தத்தைப் புதிதாகச் சேர்ப்பதில்லை .நம் சொரூபமே ஆனந்தம்தான் . செய்யவேண்டியதெல்லாம் மகிழ்ச்சியின்மையை நீக்குவதே . இந்த வழிகள் அவ்வாறு செய்கின்றன .
Xxx
மார்ச் 13 திங்கட் கிழமை
மனம் என்பது என்ன? தேடிக்கண்டு பிடித்தால் மனம் என்று தனியாக ஒரு பொருள் இல்லை என்பது தெரிய வரும் .
xxx
மார்ச் 14 செவ்வாய்க் கிழமை
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே. அவை நான் என்ற எண்ணத்தையே சார்ந்து இருக்கின்றன . நான் என்ற எண்ணமே மனம் என்று அறி
xxx
மார்ச் 15 புதன் கிழமை
மனம் என்று ஒன்றுமில்லை. எண்ணங்கள் உதயமாவதால் , அவை தொடங்கும் இடத்தை வைத்து ஏதோ ஒன்றை மனம் என்கிறோம் .
xxx
மார்ச் 16 வியாழக்கிழமை
உள் திரும்பிய மனமே ஆன்மா . வெளிப்புறம் திரும்பினால் அதுவே அகந்தையாகவும் உலகமாகவும் மாறுகிறது .
xxx
மார்ச் 17 வெள்ளிக்கிழமை
எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்பொழுதாவது ஒரு பயனை விளைவிக்கும் . எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீண் போகாது .
xxx
மார்ச் 18 சனிக்கிழமை
நீ எண்ணத்திலிருந்து வேறானவனா ? அவை இல்லாமல் நீ இருக்கிறாயா ? ஆனால் நீ இல்லாமல் எண்ணங்கள் இருக்க முடியுமா ?
Xxxx
மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை
வலிமையாகச் சிந்திக்கும்போதுதான் மனம் வலிமை பெறுகிறது எனப்து பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப் பட்ட மனமே வலிமையானது .
Xxx
மார்ச் 20 திங்கட் கிழமை
தன்னைப் பற்றிய அறிவை ஒதுக்கிவிட்டு , வெளி விஷய அறிவையே எப்போதும் நாடுகிறது மனம் .
xxx
மார்ச் 21 செவ்வாய்க் கிழமை
மனம் அலைபாயும்போது , சக்தி எண்ணத்தினால் சிதறிப்போய் , பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது , சக்தி சேமிக்கப்படுகிறது. மனம் வலிமை பெறுகிறது
Xxx
மார்ச் 22 புதன் கிழமை
நமது நோக்கு ஞான வழியில் அமையுமானால் , உலகமே கடவுளாகத் தெரியும்
xxx
மார்ச் 23 வியாழக்கிழமை
தேடினால் அகந்தை ஓட்டம் பிடிக்கும் . எஞ்சி நிற்பது ஆத்மாவே .
xxx
மார்ச் 24 வெள்ளிக்கிழமை
நான் யார் என்று விசாரித்து இதயத்தில் நுழைந்தால் , அகந்தை வேரோடு சாயும் .
xxx
மார்ச் 25 சனிக்கிழமை
அகந்தை உண்டாயின் எல்லாம் உண்டாகும். அது அடங்கினால் எல்லாம் அடங்கும். எனவே அகந்தையே எல்லாம். அது என்ன என்று நாடுதலே எல்லாவற்றிலும் வெற்றியைத் தரும்
Xxx
மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை
மூச்சைக் கட்டுப்படுத்தி வலிமையற்ற மனத்தை அடக்கவேண்டும். பின், அது கட்டப்பட்ட மிருகத்தைப் போல அலையாது நிற்கும் .
xxx
மார்ச் 27 திங்கட் கிழமை
மூச்சை நெறிப்படுத்துவதால் எண்ணங்கள் ஒழுங்கு செய்யப்படும். பின் அவற்றின் மூலத்தில் வசிக்கலாம் .
xxx
மார்ச் 28 செவ்வாய்க் கிழமை
ஒரு மடங்கு வெளி விடுதல் ,ஒரு மடங்கு உள்ளிழுத்தல் , நான்கு மடங்கு உள்ளடக்குதல் என்ற நெறியில் செல்லும்போது மூச்சுக் காற்று செல்லும் நாடிகள் தூய்மை அடைகின்றன .
Xxx
மார்ச் 29 புதன் கிழமை
தினமும் ஞானிகள் சங்கத்தில் இருப்பதால் , நம் மனம் அதன் மூலத்தில் கலந்துவிடும்.
xxx
மார்ச் 30 வியாழக்கிழமை
மூச்சை நெறிப்படுத்தினால் , வலையில் பிடிபடும் பறவை போல மனம் அமைதியாகும். மனத்தை அடக்க இது ஒரு வழி .
மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகிப் போகும்.
xxx
மார்ச் 31 வெள்ளிக்கிழமை
எண்ணங்களை அடக்கும்போது விழிப்புணர்வு தேவை. இல்லையேல் தூக்கம் உண்டாகும் .
Xxx
பயன்படுத்திய நூல்- ரமணரின் தெய்வ வாக்கு, தொகுப்பு ஏ ஆர் நடராசன், தமிழாக்கம், பிரணாதார்த் திஹரன்
Xxx subham xxx
Tags- மார்ச் 2023, காலண்டர், நற்சிந்தனை, ரமண மகரிஷி , பொன்மொழிகள்
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல என்று நமது பாரத தேச மஹான்கள் கூறினால் பகுத்தறிவுவாதிகள் சிரிப்பார்கள்!
கண்ணெதிரே தோன்றுவதெல்லாம், ஐம்புலன்களால் உணர்வதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள் இதே பகுத்தறிவுவாதிகள்.
சரி, அறிவியலுக்குள்ளேயே புகுவோம்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பொருளின் எடை எப்போதும் எந்த இடத்திலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்று அனைவரும் எண்ணி வந்தனர்.
சர் ஐஸக் நியூட்டன் வந்தார். பிரபல விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். பல ஆய்வுகளை நடத்தினார். ஆப்பிள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்தது.
சிந்திக்க ஆரம்பித்தார். புவி ஈர்ப்பு விசை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு பொருளின் எடை கடல் மட்டத்தில் இருப்பதை விட மலை மீது குறைவாக இருக்கும்.
உயரத்தில் ஏற ஏற எடை குறையும்; இதற்குக் காரணம் புவி ஈர்ப்பு விசை என்றார்.
அனைவரும் அளந்து பார்த்தனர்; அதில் இருக்கும் உண்மையைக் கண்டு மலைத்தனர்.
எடை என்பதானது புவி ஈர்ப்பு விசையின் சக்தி ஒரு பொருளின் மீது பட்டு அதை நெருக்கும் போது ஏற்படுவது என்பது தெரிய வந்தது.
உடனே எடை என்பதோடு மாஸ் (Mass) எனப்படும் பொருள்திணிவு அல்லது பொருண்மை என்ற சொல் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
உயரத்தில் ஏற ஏற எடை குறையலாம், மாறலாம். ஆனால் ஒரு பொருளின் பொருண்மை அதாவது Mass எப்போதுமே மாறாது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நிலையானது என்று சொல்லப்பட்டது.
இந்தக் கொள்கையை அனைவரும் நம்ப ஆரம்பித்தனர். அதை அப்படியே கடைப்பிடித்தும் வந்தனர்.
அப்புறம் ஐன்ஸ்டீன் வந்தார். புதிய கொள்கையான ரிலேடிவிடி என்னும் ஒப்புமத் தத்துவத்தை உலகின் முன் வைத்தார். பொருண்மை அல்லது பொருள்திணிவு அல்லது மாஸ் என்பது எப்போதும் நிலையானது என்று கருதப்பட்டு வந்ததைத் தன் கொள்கை மூலம் உடைத்தார்; நிராகரித்தார்.
அவர் கூறினார் : “ஒரு பொருளின் பொருண்மை (Mass) என்பது எப்போதுமே நிலையானது என்று கூறுவது தவறு. அது வேகத்தைப் பொறுத்து மாறும்”.
பொருண்மை வேகத்தைப் பொறுத்து மாறும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். ஒரு பொருளின் பொருண்மை ஒளியின் வேகத்திற்கு நெருங்க நெருங்க அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போகும் என்றார் அவர்.
ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள்.
ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை அடையும் போது அதன் எடையானது எல்லையற்ற அளவைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதன் மீது எல்லையற்ற விசையின் தாக்கம் இருப்பதால் அதை விட திடமான ஒன்று ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது. (When it reaches the speed of light its mass becomes infinite and as it would take an infinite force to accelerate an infinite mass then nothing solid can exceed the speed of light.)
பொருண்மை முன்னாலேயே எடையை விட முக்கியமானதாக ஆகி இருந்தது.
இந்த புதிய கொள்கையினால் வேகம் என்பது பொருண்மையை விட முக்கியமானதாக ஆனது.
இது மட்டுமல்லாமல், ஐன்ஸ்டீன் இன்னொரு அதிசயிக்கத் தக்க விஷயத்தையும் கூறினார். ஒரு பொருளானது ஒளியின் வேகத்தை எட்டும் போது காலமானது ‘ஸ்லோ’. (Slow) மெதுவாகிறது.
எடுத்துக்காட்டாக விண்வெளியில் பயணம் செய்யும் ஒரு விண்வெளி வீரர் சந்திரனுக்குச் சென்று திரும்பி பூமிக்கு வந்தால் அவர் விநாடியில் ஒரு சிறிய பங்கு பூமியில் வாழ்பவரை விடக் குறைந்த வயது உடையவராக ஆகிறார்.
இதையே சற்று அதிகமாக்கிப் பார்ப்போம். ஒரு விண்வெளி வீரர் விண்வெளியில் ஒளியின் வேகத்தில் ஐந்து வருடங்கள் பயணம் செய்து பின்னர் பூமிக்கு அதே வேகத்தில் திரும்பி வந்தால் அவர் பத்து வருடம் வயதில் கூடுதலாக ஆகி இருப்பார்; அதே சமயம் பூமியில் வாழ்பவர்கள் சுமார் 50 முதல் 100 வருடங்கள் கூடுதல் வயது ஆகி இருப்பர்.
ஆகவே ஐன்ஸ்டீனின் தத்துவத்தின் படி வேகம் என்பது மிகவும் முக்கியம் என்று ஆனது. பொருண்மையும் காலமும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானது.
ஆக உலகில் நாம் காண்பதெல்லாம் பார்ப்பது போல இருப்பதில்லை என்பது தெரிய வருகிறது.
ஆம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!
விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதுமைகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறது; பழைய கண்டுபிடிப்புகளில் தவறு இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுகிறது!
நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் ஒப்பிட்டு ஒரு வேடிக்கையான ஒப்புமை கூட ஒன்று உண்டு.
Two Lines in Two Centuries என்ற தலைப்பிட்டு தரப்பட்ட அந்த ஒப்புமை இது தான்:
Nature and Nature’s laws lay hid in night God said, Let Newton be, and all was light
– Alexander Pope in the Eighteenth Century
It did not last. The Devil, howling Ho! Let Einstein be, restored the status Quo.
– J.C. Squire in the Twentieth Century
இதை Arthur Mee தொகுத்த One Thousand Famous Things நூலில் காணலாம்.
This month Our Good Thoughts Calendar contains 31 quotations from Bhagavan Ramana Maharishi’s talks and writings
Festival Days- March 6- Masi Makam; 8-Holi; 15- Kaaradaiyaan Nonbu; 22- Ugadhi; Telungu New Year; 30 – Sri Rama Navami
Full Moon Day -7; New Moon Day – 21; Ekadasi Fasting Days – 3, 18
Auspicious Days- 9, 10, 13, 17, 23, 27
xxx
March 1 Wednesday
Happiness
All beings desire happiness always, happiness without a tinge of sorrow. At the same time everybody loves himself best. The cause for love is only happiness. So that happiness must lie within oneself.
Xxxx
March 2 Thursday
That happiness is daily experienced by everyone in sleep when there is no mind. To attain that natural happiness one must know oneself. For that self enquiry,Who am I ? Is the chief means.
Xxxx
March 3 Friday
There is no happiness in worldly objects. Because of our ignorance we imagine we derive happiness from them.
Xxxx
March 4 Saturday
Everyone desires to sleep soundly. The conclusion therefore is that happiness is inherent in man and not due to external causes.
Xxxx
March 5 Sunday
Contact with Jnanis is good. They will work through silence.
Xxxx
March 6 Monday
A guru is not the physical form . Hence his contact remains even after the physical form of the Guru vanishes.
Xxxx
March 7 Tuesday
No one can be out of sight of the Supreme Presence. Since you identify one body with Bhagavan and another body with yourself, you find two separate entities and speak of going away from here.
Xxxx
March 8 Wednesday
No thought will go in vain. Every thought will produce its effect sometime or other.
Xxxx
March 9 Thursday
Some have maintained that the body can be made immortal and they give recipes, medical or other for perfecting this body and making it defy death. But all people, after writing long treatises on the indestructibility of the body and keep it alive for ever, pass away one day
Xxxx
March 10 Friday
Name of god and god are not different.
Xxxx
March 11 Saturday
In the name Rama , Ra stands for the self and ma for the ego. As one goes on repeating Rama, Rama, the ma disappears, getting merged in the Ra and then Ra alone remains . In that state there is no conscious effort at dhyana, but dhyana is always there, for dhyanais our real nature.
Xxxx
March 12 Sunday
Avoid desire and aversion. Do not engage the mind much in the affairs of the world. As far as possible do not get entangled in the affairs of others. Giving to others is is really giving to oneself. Of one knows this truth, would one ever remain without giving?
Xxxx
March 13 Monday
If ego rises, all will rise. If ego merges, all will merge. The more we are humble, the better it is for us.
Xxxx
March 14 Tuesday
The best and most potent diksha ( initiation) is by silence, which was practised by Lord Dakshinamurti. Those y touch, look, etc., are of a lower order. Mouna can change all hearts.
Xxxx
March 15 Wednesday
The sun illumines the universe,whereas the Sun of Arunachalais so dazzling, that in It the universe is not seen; there remains only an unbroken brilliance.
Xxxx
March 16 Thursday
It is not true that birth as a man necessarily the highest, that one must attain Self Realizatdion while only being a man. Even an animal cal attain Self Realisation.
Xxxx
March 17 Friday
There is no need for anyone to start reforming the country or the nation before reforming himself. Ea h man’s first duty is to realise his true nature. If after doing this he feels like reforming the country or nation, by all means let him take up such reform.
Xxxx
March 18 Saturday
Swami Ram Tirtha advertised: Wanter Reformers- but reformers who will reform themselves first.
Xxxx
March 19 Sunday
No two persons in the world can be alike or can act alike. External differences are bound to persist, however hard we may try to eliminate them. The only solution is for each man to realise his True Nature .
Xxxx
March 20 Monday
From silence came thought, from thought the ego, from ego speech. So, if speech is effective, how much more so must be it’s source?
Xxxx
March 21 Tuesday
Karpura arathi is symbolic of burning away the mind by the light of illumination. Vibhuti is Siva/ Absolute Being and Kumkum is Sakti/ consciousness.
Xxxx
March 22 Wednesday
If we concentrate on any thought and go to sleep in that state, immediately on waking up the same thought will continue in our minds. People who are given chloroform are asked to count one, two etc., A man who goes under after saying six, , for instance, will, when he comes round again, start saying seven, eight etc.
Xxxx
March 23 Thursday
No want is the greatest bliss. It can be realised only by experience. Even an emperor is so much for a man with no wants.
Xxxx
March 24 Friday
God illumines the mind and shines within it. One cannot know God by means of the mind. One can but turn the mind inwards and merge it in God.
Xxxx
March 25 Saturday
For all thoughts the source is the I thought. The mind will merge only by Self enquiry. Who am I ? The thought Who am I ?will destroy all other thoughts and finally kill itself also.
Xxxx
March 26 Sunday
What is Gayatri ? It really means
Let me concentrate on That which illumines all.
Xxxxx
March 27 Monday
I have not said that Guru is not necessary. But a Guru need not always be in human form.
One can go to another Guru after one’s Guru passes away. But after all ,Gurus are one, as none of them are the form. Mental contact is always the best.
Xxxx
March 28 Tuesday
A Jnani has attained liberation/ Mukti even while alive, hee and now. I is immaterial to Him as to how, where and when he leave the body. Some Jnanis may appear to suffer, others may be in Samadhi, some others may disappear from sight before death. But that makes no difference to their Jnana.
Xxxx
March 29 Wednesday
Sat sangh means association with Sat or Reality. One who knows or has realised Sat is also regarded as Sat. such association is absolutely necessary for all. Shankara has said,
In all the three worlds there is no boat like Sat sangh to carry one safely across the ocean of births and deaths.
Xxxx
March 30 Thursday
In the centre of the cavity of the heart, the sole Brahman shines by itself as the Atman (Self) in the feeling of I, I. Reach the Heart by diving within yourself , by control of breath or with thought concentrated on the quest of the self. You will thus get fixed in the Self.
Xxxx
March 31 Friday
Free will and destiny are ever existent. Destiny is the result of past action.it concerns the body. Let the body act as may suit it. Why are you concerned about it? Why do you pay attention to it? Freewill and setiny last as long as the body lasts. But Jnana transcends both.
Xxxx subham xxxxx
tags- March 2023, Calendar, Ramana Maharishi, Golden sayings
பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.
xxx
நான் சென்ற இடங்கள் :-
12-2-2023 வைத்தீஸ்வரன் கோவில் (இரவு தங்கினோம்; 13-ம் தேதியும் சுவாமி தரிசனம் செய்தோம் )
xxxx
15–2-2023 காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் ( பலமுறை தரிசித்த புகழ்மிகு கோவில்),
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விடக் கூடாத மூன்று விஷயங்கள்!
ச.நாகராஜன்
விடக்கூடாதவை மூன்று!
மூன்று காரியங்கள் செய்வதை ஒரு போதும் விடக்கூடாது.
அவையாவன:
1) யாகம் 2) தானம் 3) தபஸ்
யாகத்தைச் செய்வதை நிறுத்தாதே.
தானம் கொடுப்பதை நிறுத்தாதே.
தவம் செய்வதை நிறுத்தாதே.
பகவத் கீதையின் 18ஆம் அத்தியாயமான மோக்ஷசந்யாஸ யோகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.
யக்ஞ தான தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
Actions based upon sacrifice, charity, and penance should never be abandoned; they must certainly be performed. Indeed, acts of sacrifice, charity, and penance are purifying even for those who are wise.
ஆகமங்கள் மூன்று!
மூன்று ஆகமங்கள் நம்மிடம் உள்ளன.
1) வைஷ்ணவாகமம் 2) சிவாகமம் 3) சாக்தாகமம்
கவிதைக்குத் தேவையான மூன்று!
ஒரு நல்ல கவிதைக்குத் தேவையானவை மூன்று குணங்கள்.
1) மாதுர்யம் – இனிமை
2) ஓஜஸ் – கம்பீரம், பிரம்மாண்டம்
3) ப்ரஸாதம் – தெளிவு
பண்டிதருக்குத் தேவையான மூன்று குணங்கள்!
ஒரு நல்ல பண்டிதருக்கு மூன்று குணங்கள் இன்றியமையாதவை.
1) க்ரந்தார்த்த பரிஞானம் – நூலைப் பற்றிய முழு அறிவு தேவை
2) தாத்பர்யார்த்த நிரூபணம் – நூலில் சொல்லப்பட்டதை நிரூபிக்கும் திறமை வேண்டும்.
3) ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி – முழு நூலையும் திறம்பட விளக்கும் சக்தி
க்ரந்தார்தஸ்ய பரிஞானம் தாத்பர்யார்த்தநிரூபணம் |
ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி: சாஸ்த்ரவிதோ குணா: ||
கிடைத்தற்கரிய மூன்று பேறுகள்!
மூன்று பேறுகள் கிடைப்பதற்கு தெய்வ அனுக்ரஹம் வேண்டும்.
அவையாவன:
1) மனுஷ்யத்வம் – மனிதப் பிறவி
2) முமுக்ஷத்வம்
3) மஹாபுருஷ சம்சர்கம் – பெரியோரின் தொடர்பு
இப்படி விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் அருளியிருக்கிறார்
துர்லபம் த்ரயமேவைத்தைவானுக்ர: ஹேதுகம் |
மனுஷ்யத்வம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ சம்ஸ்ரய: ||
மூன்று ரத்னங்கள்!
மஹாமாயாவின் மூன்று ரத்தினங்கள் என்று சொல்லப்படுபவர்கள் இதோ:
1) சிவன் 2) சக்தி 3) விஷ்ணு.
இவர்கள் ‘ரத்ன த்ரி’ அல்லது ‘த்ரி ரத்ன’ என்று சொல்லப்படுகின்றனர்.
வீரர்கள் மூவர்!
வீரர்கள் மூன்று வகை உண்டு
1) ரண வீர் (போர்க்களத்தில் சண்டையிடுபவர்)
2) வித்யா வீர் (கல்வியில் சிறந்து விளங்குபவர்)
3) தான வீர் (தானங்களில் சிறந்து விளங்குபவர்)
தூரத்திலிருந்து சந்தோஷப்பட மூன்று!
தூரத்திலிருந்து சந்தோஷம் அடைய உள்ளவை மூன்று.
1) பர்வதம் – மலை
2) முகமண்டன வேஷ்யா – முகப்பூச்சு அலங்காரம் செய்து கொண்டவள்
3) யுத்தாவர்தா – யுத்தம் பற்றிய செய்தி
மலையை எங்கிருந்து பார்த்தாலும் ரம்யமே.
அலங்காரம் செய்து கொண்ட வனிதை காண்பதற்கு மகிழ்ச்சிக்கு அளிப்பவள்.
யுத்தம் பற்றிய சுவாரஸ்யமான செய்தி கேட்பதற்கு சுவை தான் ( நாம் கலந்து கொள்ளாமல் இருந்தோமானால் – அல்லது நம் சுற்றமும் நட்பும் பாதிக்கப்படவில்லை என்றால்!)
தூரஸ்தா: பர்வதா ரம்யா” வேஷ்யா ச முகமண்டனே |
யுத்தஸ்ய வார்தா ச த்ரீணி ரம்யாணி தூரத: |
இப்படி சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் உள்ள சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.