அருள்வாயே! – 10 (Post No.11,652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,652

Date uploaded in London –  10 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

அருள்வாயே! – 10   (85 முதல் 94 முடிய)

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

85) சிதம்பரம்

மோக வாரிதி தனிலே நாடொறு

  மூழ்கு வேனுன தடியா ராகிய

     மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே

பாடல் எண் 484 –   ‘தாது மாமலர்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : காமக்கடலில் தினமும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மௌன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள்வாயாக!

86) சிதம்பரம்

விலைமாதர்

காத லாயவ ரோடு பாழ்வினை

   மூழ்கி யேழ்நர காழு மூடனை

     காரி பாருமை யாசி வாபத மருள்வாயே

பாடல் எண் 486 –   ‘நீல மாமுகில்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே மூழ்கி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக!

87) சிதம்பரம்

அவரோடே

  பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர

    கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன

     பதம்பற் றிப்புக ழானது கூறிட அருள்வாயே

பாடல் எண் 489 –   ‘இணங்கித் தட்பொடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இத்தைகைய பொது மகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக!

88) சிதம்பரம்

அருவரு வொழிய வடிவுள பொருளை

   அலம்வர அடியேற் கருள்வாயே

பாடல் எண் 494 –   ‘தறுகணன் மறலி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ

அருள்வாயாக!

89) சிதம்பரம்

ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர

   மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே

பாடல் எண் 507 –   ‘நீலக் குழலார்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அருள்வாயாக!

90) சிதம்பரம்

இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி

  இப்படிக்கு மோக்ஷ மருள்வாயே

பாடல் எண் 510 –   ‘மச்ச மெச்சு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டு இன்பத்தைத் தந்து அருள்வாயாக!

91) சிதம்பரம்

சித்தெ லாமொரு மித்துன தாறினம்

   வைத்து நாயென ருட்பெற வேபொருள்

      செப்பி யாறுமு கப்பரி வோடுணர் வருள்வாயே

பாடல் எண் 514 –   ‘முத்த மோகன‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சித்தி எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக!

ஆறுமுகங்களுக்கான விளக்கங்கள் ஏராளம் உள்ளன.

ஏறு மயில் ஏறி எனும் பாடலைக் காணலாம்.

சக்திகள் ஆறு : ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி

பீஜங்கள் ஆறு : அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை

அத்துவாக்கள் ஆறு : மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்

இறைக்குணங்கள் ஆறு : ஸர்வக்ஞத சக்தி – பூரண அறிவுடன் இருக்கும்.

நித்ய திருப்தி சக்தி – எல்லா அனுக்ரகமும் புரியும்.

அநாதிபோத சக்தி – எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும்.

ஸர்வ சுதந்திர சக்தி – ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும்.

அலுப்த சக்தி – ஐந்தொழிலைப் புரியும்.

அநந்த சக்தி – எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.

குணங்கள் ஆறு – ஐஸ்வர்யம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.

92) சோலை மேவிய குன்று

பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய

  பண்புசேர் பாத தாமரை யருள்வாயே

பாடல் எண் 516 –   ‘வஞ்சமே கோடி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள்வாயாக!

93) கயிலை மலை

இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ

  ரிளையவ னெனவித் தார மருள்வாயே

பாடல் எண் 517 –   ‘திருநிலம் ‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகைய கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி,  தேவர்கள் இவன் இளையவன் என்னு என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக!

94) கயிலை மலை

 ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ

   நாளுங் களிக்கபத  மருள்வாயே

பாடல் எண் 518 –   ‘தேனுந்து முக்கனிகள் ‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிவ ஞானம் பெருகி வரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோக்ஷத்தில், அடியேன் எந்த நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடையைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

***

யாண்டு பலவாக நரையிலையே ! அது எப்படி? பிசிராந்தையார் பதில் (Post.11,651)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,651

Date uploaded in London – –  9 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு ஸ்லோகங்கள் கவலை இல்லாத மனிதனைப் படம்பிடித்துக் காட்டுகின்றன .

இதோ இரண்டு சுபாஷிதங்கள் –  பொன் மொழிப்பாடல்கள்

க்ரீடாமி தாவாமி படாமி நித்யம் பச்யாமி ஜிக்ராமி  ச்ருணோமி சுத்தம்

ராத்ரெள லபே சாத சுகேன நித்ராம்  ஈசஸ்ய  காருண்ய  மிதம் சமக்ரம்

பொருள்

இறைவனின் கருணையால் விளையாடுகிறேன், ஓடுகிறேன், படிக்கிறேன் , தினமும்  (நல்லவற்றைக்) காண்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன் . இரவில் சுகமாய் தூங்குகிறேன்.

Xxx

ஜரா மரண துக்கேஷு ராஜ்ய லாப சுகேஷு ச

ந பிபேமி  ந ஹ்ருஷ்யாமி  தேன ஜீவாமி அநாமயஹ

மூப்பு, மரணம், துயரம், அரசாங்க சலுகைகள், சுகங்கள் இவைகள் பற்றி பயப்படுவது இல்லை; (அதாவது வருமா வராதா என்று கவலைப்படுவதில்லை). விரும்பியது கிடைத்ததால் சந்தோஷப்படவும் மாட்டேன் .; ஆகையால்தான் நான் நோயற்றவனாக வாழ்கின்றேன்.

xxxx

பிசிராந்தையார் யார்?

சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:

“ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ” என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- “ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்?” என்று பாடுகிறார்:–

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்றுஉயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கவலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

புறநானூற்றிலுள்ள பாடல் 191 

Xxx

இந்துக்கள் பெரிய சைக்காலஜிஸ்ட்கள் Psychologists ; மன  இயல் நிபுணர்கள் ; உள்ள இயல் அறிஞர்கள் ; கவலை இல்லாத மனிதனாக வாழ்க்கை நடத்தினால் தலை முடி கூட கருக்காது; 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் . ஆனால் அப்படிக் கவலை இல்லாமல் வாழ மூன்று அம்சங்கள் தேவை :-

ஓம் சாந்தி – மனதில் அமைதி

ஓம் சாந்தி – குடும்பத்தில்  அமைதி

ஓம் சாந்தி – நாட்டில்  அமைதி

நான் அமைதியாக இருக்கிறேன். இதில் வியப்பில்லை ; என் மனைவி, மகன்கள், வீட்டு வேலைக்காரர்கள் அனைவரும் நான் எண்ணியத்தைச் செய்து முடிக்கின்றனர் . அது மட்டுமா ?  நான் வசிக்கும் ஊரில் சத் சங்கம் இருக்கிறது. அங்கு எல்லோரும் ஆய்ந்து, அவிந்து, அடங்கிய, கொள்கைச் சான்றோர்.

ஆதாவது அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் ; கற்கக் கசடறக் கற்று அதன் பின்னர், அதற்குத் தக நின்றவர்கள். அதாவது படித்த அகம்பாவம் இன்றி , வித்யா விநய சம்பந்னே  என்றவாறு அடக்கம் மிக்கவர்கள் ; அது மட்டுமல்ல; கட்சிமாறிகள் அல்ல. அவர்கள் கொள்கைச் சான்றோர்.; தான் ஏற்ற தருமத்தை விடாப்பிடியாகப்  பிடித்துக் கொண்டு நின்று ஒழுகும் கொள்கை உடையோர் . இது பழங்காலத்   தமிழகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது .

Xxxx

கவலை இல்லாத மனிதன்.

கவலை இல்லாத மனிதன் , 1960 ஆம் ஆண்டுத் திரைப்படம்

இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல் ஓரளவுக்கு கவலை இல்லாத மனிதன் கொள்கையைக் காட்டுகிறது

“கவலை இல்லாத மனிதன்.

கவலை இல்லாத மனிதன்.

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

போவதைக் கண்டு கலங்காமல்

வருவதைக் கண்டு மயங்காமல்

மெய் தளராமல் கை நடுங்காமல்

உண்மையை, பொய்யை, உணர்ந்தவனே

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

வாழ்க்கை என்பது நாடகமே

வந்து போனவர் ஆயிரமே

கொண்டு சென்றவர் யாரும் இல்லை

கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை

அந்த நாடகம் இன்னும் முடியவில்லை

மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்.

வாழ்வை அறிந்தவன் சம்சாரி

வாழப் பயந்தவன் சன்னியாசி

கண்ணீர் வடிப்பவன் மூடனடா

காலத்தை வென்றவன் வீரனடா

நல் இன்பத்தைத் தேடி உறவாடு

நீ எழுந்திடு மனிதா விளையாடு

Xxxxx

இதை பகவத் கீதையிலும்– 12 ஆவது அத்தியாயத்தில் (12-13 to 12-20) — கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் . கவலை இல்லாத மனிதன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவன் ; தமிழில் இதை இருமை அல்லது இரட்டை என்பர். சம்ஸ்க்ருதத்தில் த்வந்த்வம் என்பர்; இன்ப துன்பம் , சீத உஷ்ணம், இரவு பகல், ஏற்ற தாழ்வு, பெரியோர் சிறியோர் — இவைகளைப் பொருட்படுத்தாமல்  சம பார்வை உடையவர்கள் ; கணியன் பூங்குன்றனின் யாதும்  ஊரே பாடலிலும் இக்கருத்து வருகிறது.

—subham—

Tags-கவலை இல்லாத மனிதன், யாண்டு பலவாக நரையிலவாகுதல், பிசிராந்தையார்

அதிசய ஹைட்ரஜன், அதிசய தண்ணீர்- 1 (Post No.11,650)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,650

Date uploaded in London – –  9 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பிரியாடிக் டேபிள்(Periodic Table) என்னும் மூலக (தனிம)அட்டவணையில் உள்ள 118 மூலகங்களில் இதுவரை 45 மூலகங்கள் பற்றிய சுவையான விஷயங்களைக் கண்டோம் . இன்று 46 ஆவது தனிமம் ஆன ஹைட்ரஜன் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் காண்போம்.

இதோ ஹைட்ரஜன் (Hydrogen) பற்றிய சுவையான விஷயங்கள் :–

ஹைட்ரஜன் வாயுதான் எல்லாவற்றிலும் முதல் பரிசு பெறுகிறது .

வாயுக்களில் மிகவும் லேசானது ஹைட்ரஜன் ;

மூலக அட்டவணையில் முதலில் நிற்பது ஹைட்ரஜன் ;

பிரபஞ்சம் தோன்றியபோது முதலில் தோன்றியது ஹைட்ரஜன் ;

பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள மூலகம் ஹைட்ரஜன் ;

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் நமது சூரியனும் பயன்படுத்தும் எரிபொருள் ஹைட்ரஜன் ;

உலக உயிரினங்களுக்கு மூலாதாரமாக விளங்கும் தண்ணீர் H₂O இருப்பதற் குக் காரணம் ஹைட்ரஜன் .

இது நடந்து கொள்ளும் முறை எல்லோரையும் வியப்பில் ஆழ்ந்த்துகிறது .

இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தால் தண்ணீர் H₂O கிடைக்கும் என்பது ரசாயனம் படிக்கும் மாணவர்களுக்குத் தெரிந்த தகவல்தான் . ஆயினும் இந்த தண்ணீர் மட்டும் விஞ்ஞானிகளுக்கு பல வியப்பான விஷயங்களைத் தெரிவிக்கிறது .

தண்ணீர் என்பது மிகவும் லேசான molecule மூலக்கூறு; இயற்கை விதிகளின் படி இது வாயு ரூபத்தில் இருக்கவேண்டும். ஆனால் அப்படியில்லை தண்ணீரைப்போல இரண்டு மடங்கு கனம் உடைய ஹைட்ரஜன் ஸல்பைட் Hydrogen Sulfide , வாயு உருவத்தில் இருக்கிறது.

திட உருவத்தில் உள்ள எல்லாம், திரவத்தைவிட கனமானது; இயற்கை விதிப்படி, அந்த திடப்பொருள், திரவத்தில் மூழ்கிவிடும். தண்ணீர் மூ லக்கூற்றை  0 டிகிரியாகக் குளிர்விக்கையில் அது ஐஸ் கட்டியாக மாறுகிறது. இது ஏன் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்கிறது என்பதும் விஞ்ஞானிகளுக்கு விளங்ககாத  புதிராக இருந்தது ; இப்போது ஒருவழியாக ஒரு விஞ்ஞான விளக்கம் கிடைத்தாலும் அதன் நடவடிக்கை ஒரு வினோதமே .

அறிவியல் தெரிந்தவர்கள் மட்டும் கீழேயுள்ள விளக்கத்தைப் படியுங்கள்,

The reason is that each water molecule in ice forms four hydrogen bonds to surrounding water molecules and in doing so arranges itself into a crystal with a very open lattice, making it less dense than liquid water, so it floats.

தமிழில் சுருக்கமாகச்  சொல்ல வேண்டுமானால், அது நான்கு கைகளை உண்டாக்கிக்கொண்டு அருகிலுள்ள 4 கை பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு ஜாலியாக நீச்சல் அடிக்கிறது

xxxx

தண்ணீரைப்  புகழாத உலக இலக்கியங்கள் கிடையாது. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் தண்ணீரைப் புகழ்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்துக்கள்,  பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள எந்தச் சடங்கினையும் செய்ய முடியாது. கோவிலில் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது போல, பிராமணர்கள்  ஒரு நாளைக்கு மூன்று தடவை மந்திரம் சொல்லி தலையில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளுவர். 12 இறைவன் திருநாமங்களைச்  சொல்லி தண்ணீரை இறைவனுக்கே அளிப்பர். காயத்ரீ மந்திரத்தைச் சொல்லியும் இறைவன் கொடுத்த தண்ணீரையே (குளம் அல்லது ஆற்றில்) இறைவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ்thanks  சொல்லுவார்கள் ; அதாவது தண்ணீர் இல்லாத இந்துமத சடங்கு இல்லை. ஏனெனில் இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. கங்கை சிந்து நதிக்கரையில் பிறந்தவர்கள். வேற்று மதக்காரர்கள் தண்ணீரை அதிகம் பயன்படுத்துவதில்லை.

Xxx

மீண்டும் அறிவியலை விவாதிப்போம்

தண்ணீர் இல்லாவிடில் இந்த பூமி ஐஸ் கட்டி போல ஆகிவிடும். திரவ ரூபத்திலும் நீராவி ரூபத்திலும் உலகத்தின் வெப்ப நிலையை உயர்த்துவது தண்ணீர்தான் . தண்ணீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உடையது என்பதை மறந்துவிடாதீர்கள் . அதனால்தான் இந்த தண்ணீர் பற்றி இங்கு கதைக்கிறோம்.

வாயு ரூபத்தில்/ வடிவில் உள்ள நீர், நமது காற்று மண்டலத்தில் 4 சதவிகிதம் இருக்கிறது. இது பூமியைச் சுற்றி கண்ணாடிப் பெட்டி வைத்துள்ளது போல இருப்பதால் காற்று மண்டலத்தை 30 டிகிரி C  அதிகரிக்கிறது. அது இல்லாவிடில் பூமியின் சராசரி வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரியாக இருக்கும்; கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூமிக்கு சராசரி + 15 டிகிரி C வெப்பத்தைத் தருகிறது. இதே போல கடலில் உள்ள தண்ணீரும் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது . வினோதமாக இல்லையா? தண்ணீர் இருந்தால் குளிரும் என்றல்லவா சொல்லுவோம்.

xxx

இன்னும் ஒரு அதிசயத்தைக் காண்போம் .

தண்ணீரை பானையில் வைத்து அடுப்பில் சூடேயேற்றினால் அது 100 டிகிரி C யில் ஆவி ஆகும். இது நாம் வசிக்கும் கடல் மட்டத்தில் உள்ள நகரங்களில் மட்டும்தான். உயரே போகப்போக அது மாறும்; ஏனெனில் மேலே செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது எவரெஸ்ட் சிகர உச்சியில் தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அது 75 டிகிரியிலேயே ஆவி ஆகிவிடும். அதற்கு நேர் மாறாக மிகவும் ஆழத்துக்குச் சென்றால், தண்ணீர் கொதிக்க 374 டிகிரி வெப்பம் தேவை. அதாவது தரை மட்ட காற்றழுத்தத்தைப்போல 220 மடங்கு அழுத்தம் இருக்கும். அதற்கும் மேலே போனால் வேறு ஒரு அதிசயம் நிகழும். தண்ணீர் ஆனது சூப்பர் கிரிட்டிக்கல் ப்ளூஉய்ட் Super Critical Fluid — திரவம் ஆகும். அப்படியானால் என்ன? அது எதையும் கரைத்து விடும். எண்ணெய் போன்ற பொருளும் கரைந்து விடும். அப்படிக் கரைகையில் அது பாதியாகச் சுருங்கி விடும்.

தாவரம் போன்ற பசுமைப்பொருட்களை அதில் வைத்தால் எரிந்துவிடும் சாக்கடைக் கழிவுகளை எரித்து அகற்ற இதை பயன்படுத்தலாமே என்ற யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. ஆனால அதற்கு ஒரு  தடை உண்டு. இதன் சக்தி, தங்கம் போன்ற,  அரிக்கவே முடியாத , உலோகக்கங்களையும் அரித்து விடும்.

xxx

தண்ணீர் பற்றிய கடைசி விஞ்ஞான அதிசயத்தை ப்பார்ப்போம் .

கன நீர் என்பதை D2O’ டி 2 ஓ’ என்பர் ; சாதாரண நீர் H₂O எச் 2 ஓ . இது ஹைட்ரஜனின் ஒரு ஐசடோப்பான டெடூரியம் (Deuterium) என்பதால் உண்டாகிறது. அணு உலைகளில் இந்த கன நீரைப் பயன்படுத்துகிறார்கள். இதை ஒருவர் குடித்தால் நீண்ட காலம் உயிர் வாழ  முடியாது. ஏனெனில் நம்முடைய உடலில் உள்ள செல் களிலும் தண்ணீர் உள்ளது . கன  நீர் இருந்தால் அவை சாதாரண முறையில் செயல்பட முடியாது.

xxx

தண்ணீர் புராணத்தை முடித்துக் கொண்டு ஹைட்ரஜன் புராணத்துக்கு வருவோம்.

சூரியனிலும் நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு வினாடியும் வெடித்துக்கொண்டு இருக்கும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன் குண்டுகள் பற்றிக் காண்போம்.

English words used in the article:Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure

To be continued……………………………………………………..

tags- ஹைட்ரஜன் , தண்ணீர், கன நீர் Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure

ஆயிரத்தில் ஒருவர் யார்? லட்சத்தில் ஒருவர் யார்? அம்பலவாணர் கண்டுபிடிப்பு (Post No.11,649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,649

Date uploaded in London – –  9 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம்  பாடல் 58-ல் அறநெறிப்படி வாழ்வோர் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.  ஏறத்தாழ புத்தர் சொன்னதுதான். அவர் கடவுள் பற்றி ஒன்றுமே பேசவில்லை; எட்டு அறநெறிக்  கொள்கைகளை  பின்பற்றினால் போதும் என்கிறார் ; வள்ளுவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றான். மேலும் பல குறள்களில் உலகமே கைகூப்பித் தொழும்  என்று முடிக்கிறான்; அதாவது கொல்லாமை, வாய்மை, பிறர் பொருள் நயவாமை, சினமின்மை, யான், எனது என்னும் எண்ணம் இல்லாமை முதலியன எல்லோரையும் வணங்கச் செய்யும் என்கிறான். இவை அனைத்தும் இந்து மதக் கருத்துகள் என்றாலும் இந்து மதம் பல படிகளைச் (Steps) சொல்லி அதன் மூலம் மேலே வரச் சொல்கிறது.

இதோ அம்பலவாணர் கூற்று:-

ஒழுக்கம் உடையோருக்கு யாத்திரை தேவை இல்லை ;

கொலை களவு செய்யாதோருக்கு வேறு தர்மம் தேவை இல்லை;

ஆசையையும் கருமித்தனத்தையும் விட்டவர்களுக்கு வேறு அறம் தேவை இல்லை

உள்ளத்தில் தூய்மை இருந்தால் கங்கை நதியில் ஸ்னானம் செய்யப்போகவேண்டாம்

உன் தொண்டரை வணங்குவோர் உன்னை வணங்கத் தேவை இல்லை

நல்ல பிராமணர்களை போற்றுவோர் இறைவனுக்கு அர்ச்சனை செய்யத் தேவை இல்லை.

அறப்பளீசுர சதகம்  58. இவையே போதும்

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்

     பூவலம் செயவேண் டுமோ?

  பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்

     புகழ்அறம் செயவேண் டுமோ?

நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்

     நல்லறம் செயவேண் டுமோ?

  நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு

     நதிபடிந் திடவேண் டுமோ?

மெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம்

     விரும்பிவழி படவேண் டுமோ?

  வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை

     வேண்டி அர்ச் சனைசெய் வரோ?

ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை

     அதிபனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே –

திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின்

தலைவனே!, அருமை …… தேவனே!, பொய்யாத வாய்மையும் சீலமும்

சார்ந்து உளோர் பூவலம்செய வேண்டுமோ – அழியாத உண்மையும்

ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வரல்வேண்டுமோ?, பொல்லாத

கொலைகளவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ –

தீய கொலையும் களவும் அற்ற நல்லொழுக்கமுடையவர் புகழத்தக்க

அறங்களைச் செய்தல் வேண்டுமோ?, நையாத காமத்தை லோபத்தை

விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ – மெலியாத ஆசையையும்

ஈயாமையையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தை நாடல்வேண்டுமோ?,

நல் மனோ சுத்தி உண்டானபேர் மேலும் ஒரு நதிபடிந் திடவேண்டுமோ –

நல்ல உளத்தூய்மை பெற்றவர்கள் வேறாக ஒரு தூய ஆற்றில் முழுகுதல் வேண்டுமோ?, நின் அடியரை மெய்யா(க) பரவுவோர் உன்பதம் விரும்பி

வழிபட வேண்டுமோ – உன் தொண்டரை உண்மையாக வணங்குவோர் நின் திருவடியைப் போற்றுதலும் வேண்டுமோ?, வேதியர் தமைப்பூசை

பண்ணுவோர் வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ – மறையவரை

வணங்குவோர் வானவரை விரும்பி மலரிட்டு வழிபடல் வேண்டுமோ?

     (க-து.) நன்னெறியில் நிற்போர் வேறு அறங்கள் செய்ய

வேண்டியதில்லை.

XxxxXxxxx

ஆயிரத்தில் ஒருவர் யார்?

பாடல் 59.ல் பத்து, நூறு ஆயிரம் என்று டெசிமல் சிஸ்டப்படி அடுக்கி கோடி வரை எண்களைச் சொல்லி. யார் அப்படி கோடியில் ஒருவர் என்று முடிக்கிறார். புதுமையான அணுகு முறை. கிருஷ்ணர் கூட பகவத் கீதையில் ஆயிரத்தில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர்,  என்று திரும்ப திரும்ப சொல்கிறாரே தவிர 10 முதல் கோடி வரை எண்களை பயன் படுத்தவில்லை.

பத்துக்கு ஒருவன் நல்ல பேச்சாளன்  (இது நம்ம ஊர் பட்டிமன்ற கேஸுகள் )

நூற்றுக்கு ஒருவர் நல்ல பாடகர் ( இது நம்ம ஊர் சங்கீத சபா கேஸுகள் )

ஆயிரத்தில் ஒருவர் சங்கீத உபந்யாசம் செய்வோர் (இப்போது விசாகா  ஹரி போன்றோர் உணமையிலேயே ஆயிரத்துக்கு ஒன்றாகிவிட்டது!)

பத்தாயிரத்தில் ஒருவர் இதன் சிறப்பை அறிந்தவர் .

லட்சத்தில் ஒருவர்தான் அவர்களுக்கு பொருளுதவி செய்கின்றனர்

கோடியில் ஒருவர்தான் த்ரிகால ஞானி

அது உண்மையே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மஹரிஷி , ராமகிருஷ்ண பரமஹம்சர் , சேஷாத்ரி சுவாமிகள் , மா ஆனந்த மயி போன்ற ஞானிகள் கோடியில் ஒன்றுதான்

பகவத் கீதையில் 7, 8, 11ம் அத்தியாயங்களில் 7 இடங்களில் ஆயிரம் என்ற சொற் பிரயோகம் வருகிறது

             அறப்பளீசுர சதகம் 59. அரியர்

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!

     பாடுவோர் நூற்றில் ஒருவர்!

  பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது

     பாடிப்ர சங்க மிடுவோர்!

இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!

     இதையறிந் திதயம் மகிழ்வாய்

  ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே

     இலக்கத்தி லேயொ ருவராம்!

துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்

     தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.

  தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை

     சூழும்அவி நாசி பேரூர்

அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) தொல் உலகு புகழ் – பழைமையான உலகம் போற்றுகிற,

காசி ஏகாம்பரம் கைலைசூழும் அவிநாசி பேரூர் அதிகம்உள வெண்காடு

செங்காடு காளத்தி அத்தனே – காசியும் காஞ்சியும் கயிலையும் (அடியர்)

சூழும்

அவிநாசியும் திருப்பேரூரும் பெருமையுடைய திருவெண்காடும்

திருச்செங்கோடும் திருக்காளத்தியும் இடமாகக் கொண்ட முதல்வனே!, சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் – அவை புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர், பாடுவோர் நூற்றில் ஒருவர் – (இனிமையாகப்) பாடுவோர் நூற்றுக்கு ஒருவர், விதிதப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார்மீதில்

ஆயிரத்து ஒருவர் – முறை தவறாமற் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர், இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் – இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரவரில்ஒருவர், இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் – இதன் பெருமையை உணர்ந்து மனமகிழ்வுடன் பெருளளிப்போர்புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் – உலகில் அருமையாக இலட்சத்துக்கு ஒருவர் ஆவர், துதிபெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்தூயர் கோடியில் ஒருவர்ஆம் – புகழ் மிக வரும் முக்காலமும்

உணர்ந்த உண்மையான் நல்லோர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.

Xxxx

கற்புக்கரசிகள்

கற்புக்கரசிகள் பட்டியலில் அருந்ததி, நளாயினி, சீதாதேவி, சந்திரமதி, திரௌபதி ஆகியோர் செய்த அரிய செயல்களை அம்பல வாணர் குறிப்பிடுகிறார் . இந்துக்கள் அனைவரும் அறிந்த புராண, இதிஹாஸக் கதைகள் இவை. விளக்கத் தேவை இல்லை.

சம்ஸ்க்ருதத்தில் வேறு ஒரு பட்டியல் கிடைக்கிறது

பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரணம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக, குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

அஹல்யாத்ரௌபதீசீதாதாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.

அஹல்யா, த்ரௌபதீ,சீதா, தாரா மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களை நினைத்தால் எல்லா பாவங்களும் போய்விடும்

          அறப்பளீசுர சதகம் 60. கற்பு மேம்பாடு

தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்

     தனக்கிணங் காத நிறையாள்,

  தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்

     சாபம் கொடுத்த செயலாள்,

மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது

     மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,

  மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி

     வாள்மாலை யான கனிவாள்,

நன்னதி படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி

     நாயகனை மேவு தயவாள்,

  நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,

     நளினமலர் மேல்வை தேகி

அன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர்

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆதியே – முதல்வனே!, அருமை…….தேவனே!, தன்கணவன்

உருவமாய்த் தற்புணர வந்தோன் தனக்கு இணங்காத நிறையாள் நானிலம்

புகழ்சாலி – தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட

வந்தவனுக்குச் சம்மதியாத கற்புடையாள் உலகம் புகழும் அருந்ததி,

தழல்கதிர் எழாமலும் பொழுது விடியாமலும் சாபம் கொடுத்த செயலாள்

பேர்பெறு நளாயினி – கதிரவன் தோன்றாமலும் இரவு கழியாமலும் சாபம்

கொடுத்த செய்கையினாள் புகழ்பெற்ற நளாயினி, மன்னிவளர் அனல்மூழ்கி

உலகு அறியவே தனது மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள் நளினமலர்மேல்

வைதேகி – பொருந்தி வளர்ந்த தீயிற்புகுந்து உலகம் அறியுமாறு தன்

கணவனை அடைந்த அன்பினாள் தாமரை மலர்மேல் இருக்கும்

இலக்குமியின் அமிசமான சீதை, மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்த

வடிவாள் மாலையான கனிவாள் அன்னம் எனவரு சந்திரமதி – மகனைத்

தீயிலிட வந்த(போது) தன் கணவன் வெட்டிய கூரிய வாள் (மலர்)

மாலையான கனிவுடையவள் அன்னம் போன்ற நடையையுடைய சந்திரமதி,

நல்நதி படிந்திடுவது என்னஆர் அழல்மூழ்கி நாயகனை மேவுதயவாள்

துரோபதை – நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித்

தன் கணவனைக் கூடும் அன்புடையாள் திரௌபதி, என்பர் – என்று

(அறிஞர்) கூறுவர்..

Xxxx subham xxxx

Tags- கற்புக்கரசி, ஆயிரத்தில் கோடியில் , ஒருவர்

ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல் அதிகமான்! (Post No.11,648)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,648

Date uploaded in London –  9 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 42

தமிழ் ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல் அதிகமான்!

ச.நாகராஜன் 

தகடூரைத் (இன்றைய தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான்.

ஒரு நாள் பருத்திப்பள்ளிக் காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் அவன் சஞ்சரித்தான்.

அப்போது ஒரு துறவி அவனைப் பார்த்து அவனிடம் ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்து, “இந்த நெல்லிக்கனியை உண்பவருக்கு நரை திரை வராது; அவர் நீண்ட நாள் உயிர் வாழ்வார். இதை நீ உண்பாயேல் நெடு நாள் வாழ்ந்திருந்து புலவர்களை ஆதரித்து, தமிழை நன்கு வளர்த்து, நீதியோடு நாட்டைக் காக்க முடியும்” என்றார்.

அதை ஏற்றுக் கொண்ட அதிகமான் தன்னிடம் அதை பத்திரமாக வைத்திருந்தான்.

ஒரு நாள் ஔவையார் அவனிடம் வரவே, அந்தக் கனியை ஔவையிடம் கொடுத்து அதன் வரலாற்றையும் கூறி, “ அம்மையே! இதை உண்டு நீண்ட நாள் வாழப் பெற்று பல அரிய தமிழ் நூல்களை இயற்றி உலகத்திற்கு அருள் பாலிப்பீராக!’ என்று வேண்டினான்.

சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்ட வரிகள் இந்த வரலாற்றை உரைக்கிறது:

“மால் வரைக் –

கமஞ் சூழ் சாரற்க வினியநெல்லி

யமிழ்து விளை தீங்கனி யௌவைக் கீத்த

வுரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே

லரவக் கடற்றானை யதிகனும்”

அடுத்து கரபுரநாதர் புராணம் என்ற நூலில் கீழ்க்கண்ட பாடல்களும் இந்த வரலாற்றை விரித்துரைக்கிறது:

“பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற்

காதலாய்க் கருங்காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து

வீதலின் மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்

தீதிலாக் கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி

இந்த வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி சயமென்னோ

சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங் களி கூர்ந்தே

அந்த நாட் பிரமன்ற்ரு மலையிதி லதிசய சஞ்சீவி

எந்த நாட்களு  முளதிதை யுட்கொள நரைதிரை யிவை மாற்றும்”

இங்கு சேரலன் என்று பாட்டு குறிப்பிடுவது அதிகமானையே.

இவனது நாட்டில் கரும்பைக் கொண்டு வந்து நட்டார்கள் என்பதை சிறுபாணாற்றுப்படை இப்படிக் குறிப்பிடுகிறது:

“அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்

அரும்பெரு மரபிற் கரும்பிவட்டத்து” – சிறுபாணாற்றுப்படை

கரூரை ஆண்ட புகழ்ச்சோழர் ஒரு முறை, ‘நமக்குத் திறை கொடுக்க மறுக்கும் அதிகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்ட பொழுது அதற்கு பதிலாக, ‘ஓங்கு எயில் சூழ் மலையில்’ உறையும் அதிகமானைக் குறிப்பிடுவதை புகழ்ச்சோழர் புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது:

“ஆங்கவன்யா ரென்றருள் அதிகனவ னணித்தாக

ஓங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான்” – புகழ்ச்சோழர் புராணம்

பதிற்றுப்பத்து தரும் தகவல் இது:

கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை

பல்வேற் றானை யதிகமான் – (பதிற்றுப்பத்து)

அதியமான் ஒரு முறை பாண்டியன் நெடுஞ்சடையனோடு போர் புரிந்தான்.

இந்தப் போர் பற்றி நெடுஞ்சடையனது தான சாஸனம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது:

மாயிரும் பெரும் புனற் காவிரி வடகரை

ஆயிரவேலி அயிரூர் தன்னிலும்

புகழி யூருந் திகழ்வே லதியனை

ஓடுபுறங் கண்டவன்

இதில் கொங்கில், காவிரி வடகரையில் வாளவந்தி நாட்டின் உபநாடு ஆன விமலை நாட்டு அயிலூரூ – ரிலும் , அக்காவிரியின் தென்கரையில் கிழங்கு நாட்டுப் புகழியூரிலும் அதியன் போர் புரிந்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.

இது, கொங்குமண்டல சதகம் பாடல் 80 இல் வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். நாமக்கல்லில் இந்த சாஸனம் உள்ளது.

ஆகவே அதியனின் ஆட்சி இங்கும் பரவி இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட அரும் வள்ளலைப் பற்றி கொங்குமண்டல சதகம் 42ஆம் பாடலில் பெருமையுடன் குறிப்பிடுகிறது.

பாடல் :

சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்

காதர வோடு  கொடுத்தவன் கன்னலை யங்குநின்று

மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்

மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே

பொருள் : நெடுநாள் வாழும் படி சாதலை நீக்கும் அருமையான நெல்லிக் கனிதன்னை தமிழ் வளர்க்கும் ஔவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து நட்டு உற்பத்தி செய்தவனின் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய மலையரணை உடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

***

Britain looted £45 Trillion from India (Post No.11,647)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 11,647

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Dadabhai Naoroji was a Parsi scholar  and he was the first Indian MP in Britain. He was a trader and politician. He claimed that between 1835 and 1872 Britain received approximately £13 million worth of goods from India annually, with no corresponding return of money.

 This wealthy drain theory was taken up by Holden Furber, a twentieth century expert on South Asia, who estimated that annual drain from India to Britain was around £1.3 million during the ten years from 1783 to1793. In today’s money it is equal £1.8 billion.

 Aditya Mukerjee,who in 2010, calculated that India was bled anything between 5 to ten percent of her GDP annually for close to two centuries.

 Usha Patnaik, who recently drew on almost two centuries of data on tax and trade and calculated that Britain drained a total of £45 trillion in today’s money from India during the period 1765 to 1938– seventeen times more than the total annual gross domestic product of the United Kingdom today.

 Other scholars calculated how much Britain earned in slave trade. In August 1999, the African World Reparations and Repatriation Truth Commission suggested $777 trillion as a suitable sum for reparations paid as compensation for lives lost during the African slave trade and the gold diamonds and other resources stolen from the continent during the colonisation.

 Xxx

 Battle of Plassey in 1757 defeated the Nawab of Bengal and his French allies. After the battle, which arguably marked the founding of British rule in India, Robert Clive received one of the largest corporate windfalls in history. And ten years later he was worth, by his own calculations £401,102- equivalent to £702 million today. He used this money to buy lot of estates and thousands of acres of land in Shropshire. He named the estate Plassey where he defeated Indians.

 Xxx 

Plundered Tippu’s Treasures 

When Tippu Sultan, the ruler of Mysore in South India from 1782 to 1799,was finally defeated by the East India Company after an assault-on Seringapatnam, the city was ravaged by unbridled looting, rape and killing, with Arthur Wellesley, later the first Duke of Wellington and one of the leading political and military figures of nineteenth century Britain who was to serve twice Prime Minister , writing a letter to his mother that scarcely a house in the town was left unplundered, and I understand that in camp jewels of the greatest value, bars of gold etc etc have been offered for sale in the bazaars of the army. When the prize committee assembled what remained of Tippu’s belongings ,they found large amounts of gold plates, jewellery, palanquins, arms and armour, silks and shawls, the Sultan s solid gold throne and an almost life sized wooden semi automaton, depicting a European soldier lying on his back being mauled by a tiger. This item was shipped to London. It is in Victoria and Albert museum now.

 From the book:Empireland by Sathnam Sanghera, Viking publication,2021

 –subham—

Tags- British, looting, Tippu Sultan, Robert Clive, Triilions, Dadabhai Naoroji

London Swaminathan December 2022 Articles ( Index No.121) Post No.11,646

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,646

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Tamil Hindu Encyclopaedia -38; Murugan /முருகன் Skanda in Sangam Tamil Corpus 17/12

Tamil Hindu Encyclopaedia – 39; கந்தன், வேலன் Skanda ,Velan in Sangam Tamil Books (Post No.11,560) 18/12

Tamil Hindu Encyclopaedia – 40; மயிலூர்தி Peacock Rider /Skanda in Sangam Tamil Books (Post No.11,567) 20/12

Tamil Hindu Encyclopaedia – 41; வேலன் வெறியாடல் Skanda in Sangam Tamil Books (Post No.11,578)23/12

Tamil Hindu Encyclopaedia; 42, Nymphs, Ghosts, and Local Gods in Sangam Tamil Corpus (Post.11,585) 25/12

Tamil Hindu Encyclopaedia 43 -Tamil Ghost and Nymph பேய், பிசாசு, அணங்கு (Post No.11,596)28/12

Tamil Hindu Encyclopaedia 44 நீர்த்துறைக்‌ கடவுள்‌ Nereids of Greeks (Post No.11,607) 31/12

TWO BOOKS A DAY KEEP YOURSELF BUSY ALL DAY (Post No.11,499)2/12

Hindus knew about ETs, UFOs, Time Travel and Nuclear Weapons (Post No.11,518) 7/12

Hinduism around the World: Evidence from My English Books (Post No.11,541) 13/12

Democracy and Asylum in Ramayana (Post No.11,549) 15/12

Beautiful sloka on Silver Plate to Silver Tongued Srinivasa Sastri (Post No.11,564) 19/12

A Book is a Gift You can Open Again and Again! (Post.11,579) 23/12

British Atrocities-1 (Post No.11,604)30/12

British Atrocities- Part 2 (Jallianwala Bagh Massacre)- Post No.11,608 (31-12-2022)

November 2022 London Swaminathan Article (INDEX No.120) – Post No.11,506 (4/12)

January 2023 ‘Good Thoughts’ Calendar -Guru Govinda Simhan Quotes (Post No.11,593)27/12

Pustakam Hastha Lakshnanm –Beauty of Hand is Enhanced by a Book (Post 11,561) 18/12

Learn Tamil Verbs- 28 (1000 Tamil Verbs)—Post No.11,497) 2/12

Learn Tamil Verbs- 29 கொள் (1000 Tamil Verbs)—Post No.11509 (5/12)

Learn Tamil Verbs- 30 அழி பழி கிழி விழி சுழி (1000 Tamil Verbs)—Post No.11517 (7/12)

Learn Tamil Verbs -31 ;கிள்ளு, தள்ளு, துள்ளு, (1000 Tamil Verbs)—Post No.11529 (10/12)

Learn Tamil Verbs -Part 32; புரியும் , விளங்கும் (1000 Verbs ) Impersonal Verbs – Post No.11,540

Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது.

Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546) 14/12

Learn Tamil Verbs Part -34 ( 1000 Verbs) Podu போடு as suffix (Post No.11,553)16/12

Learn Tamil Verbs Part -35; USEFUL PHRASES (Post No.11,572) 21/12

Learn Tamil Verbs Part -36; Verbs Present, Future, Past Continuous

கொண்டு , இரு (Post No.11,583) 24/12

xxxx

TAMIL ARTICLES

பாரதியார் கண்ட  அழகான காடு (Post No.11,535)12/12

ராமாயணத்தில் ஜனநாயகம், சரணாகதி தத்துவம்! (Post No.11,551) 16/12

Do You Agree with Me?  ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ (Post No.11,590) 26/12

ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர்  போடும் Marks/ மதிப்பெண்!     (Post 11,602) 30-12-22

அழகியிடம் பாரதியார் கேட்ட 7 கேள்விகள் (Post No.11,531)11/12

அரைக்கினும் தன் மணம் குன்றாது சந்தனம்–அறப்பளீசுர சதகம்  (Post.11,548)15/12

அழகு எது ?அறப்பளீச்சுர சதகம் கூறுகிறது (Post No.11,495)2/12

ஆடினாள், பாடினாள்; முறத்தால் கணவனை சாடினாள்– அவ்வையார் அதிர்ச்சி (Post.11559)18/12

அனுமன் பற்றிய வருணனை வால்மீகி– கம்பன் வேறுபாடு-Part 1 (Post No.11,600)29/12

அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி– கம்பன் வேறுபாடு-Part 2 (Post no.11,603)30/12

கம்பன் தரும் புது சரணாகதி பட்டியல்: வால்மீகியில் இல்லை (Post.11,556)17/12

செய்யக்கூடாத செயல்கள் (ஒண்ணாது) எவை எவை? –அறப்பளீச்சுர சதகம் (Post.11493)1/12

இந்திய கோஹினூர் வைரத்தைக் கமில்லா அணிவாரா ? (Post No.11,505) 4/12

தமிழே, தமிழே! உயிரே ,உயிரே!! (Post No.11,514) 6/12

சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,504)

இந்துமதம் உலகம் முழுதும் இருந்ததற்குச்  சான்றுகள் (Post.11,522) 8/12

2 சம்பவங்கள் – செய்நன்றி, நேர்மை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11524)

என்ன என்ன செய்ய வேண்டும்? அறப்பளீச்சுர சதகம் அறிவுரை (Post No.11,513)6/12

கலியுகத்தின் “மகிமை” பற்றி அம்பலவாணர் & அருணகிரிநாதர் (Post.11,575)22/12

கள் குடித்து, தேள் கொட்டி, பேயும் பிடித்த குரங்கு பற்றி அறப்பளீசுர சதகம் (Post.11,563)19/12

கோயில் இல்லாத ஊர், அறிஞர் இல்லாத சபை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,501)3/12

நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை (Post No.11,552)16/12 நூல் பல கல்: ஆத்திச் சூடி!(Post.11,502) 3/12

பேசத் தெரியாதவன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,508) 5/12

நீங்கள் இந்திரனா, பிரமனா,  விஷ்ணுவா, சிவனா ? புது CCTV ‘காமெரா’ சொல்லிவிடும்!(11,516)7/12

புலியைக் கட்டித் தழுவலாம்; முட்டாளைத் திருத்த முடியாது- அறப்பளீசுர சதகம் (Post.11,521)8/12

பெண்களை நம்பலாம்: என்னுடைய 3 புஸ்தகங்கள் சொல்கின்றன (Post.11,526)9/12

அம்பலவாணரின் அழகான சொல் ஓவியம் (Post No.11,536)12/12

நாய்ப் பாலும், பேய்ச் சுரைக்காயும்  யாருக்கும் பயனில்லை ! (Post.11,544)14/12

நூல் பல கல் – ஔவையார் ஏன் சொன்னார்? என் புஸ்தகங்கள் (Post No.11,518)20/12

போலந்து நாட்டின் பெயரில்  பொலோனியம்  Polonium Murder in London (Post No.11,571)21/12

 மனு நீதி நூல் பற்றி அறப்பளீசுர சதகம் (Post No.11,570) 21/12

பிராமண, வைசிய, க்ஷத்ரியர்க்கு எதனால் வெற்றி ? அம்பலவாணர் கருத்து (Post.11,586)25/12

பணக்கார அவிசாரி பந்தியிலே,அஃதில்லாத அவிசாரி சந்தியிலே (Post No.11,588)26/12

‘பெண் புத்தி கேட்கின்ற மூடர்’ பற்றி அம்பலவாணர் (Post.11,592)27/12

நல்லவர்களைக் கண்டுபிடிக்கும் உரைகல்: அறப்பளீசுர சதகம் (Post No.11,577)23/12

சப்பாத்திக்கு குருமா,  இட்லிக்கு மிளகாய்ப்பொடி,

பூரிக்கு உருளைக்கிழங்கு வேண்டும்! (Post No.11,595)28/12

சிறு துளி பெரு வெள்ளம் ;ஊர் கூடித் தேர் இழுக்கலாம் -அறப்பளீசுர சதகம் (Post.11,581)24/12

சொல்லக்கூடாத 9 விஷயங்கள் : அம்பலவாணர் தரும் பட்டியல் (Post No.11,606)31/12/22

ரசாயன (Chemistry) பாடமும் சுவையானதே (Post No.11,510)5/12

மாதா, பிதா, குரு, தெய்வத்துக்கு நிகரானவர் யார் – அறப்பளீசுர சதகம் புது விளக்கம் (Post No.11,566)20/12

முதல் ‘சீட்’ SEAT யாருக்கு? அறப்பளீசுர சதகம்  (Post No.11,528)10/12

யானைக்கு இல்லை தானமும் தருமமும்; ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் (11,532)11/12

வெளி உலகவாசிகள் பற்றி இந்துக்கள் நம்பிக்கை (Post No.11533)11/12

லெட்சுமியும் அவள் அக்காளும் வசிக்கும் இடங்கள் பற்றி அம்பலவாணர் (11,539) 13/12

முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம்: அறப்பளீசுர சதகம் (Post.11,555)17/12

தமிழ்நாட்டில் ஆட்சி மாற வறுமையே காரணம்! (Post No.11,599)18/12

லண்டனில் மர்மக்கொலை! துப்பறியும் அறிஞர்கள் திகைப்பு !! (Post No.11,574)22/12

மோரின் மகிமை, புளியின் பெருமை, மூலிகையின் அருமை! (Post No.11,582)24/12

ஜனவரி 2023 காலண்டர்: உணவு பற்றி மேலும் 31 பொன்மொழிகள்

 (Post.11,589)26/12

Xxxxx subham xxxxTags- Index 121, London swaminathan, December 2022 articles, Index

துவையலும் கீரையும்- சிவஞான முனிவர் கேட்டது! (Post.11,645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,645

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கீரைத் தோட்டத்தை தனது மருந்துப் பெட்டி  என்று பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Russian writer, novelist Leo Tolstoy) கூறியுள்ளார்

சற்றே துவையல் அரை தம்பிஓர் பச்சடி வை,

வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை

காயமிட்டு கீரை கடைகம்மெனவே மிளகு

காயறைக்க  வைப்பாய் கறியே ’

என்று. சிவஞான முனிவர் தன் சமையற்காரனுக்குச் சொன்னதாக  உணவு பற்றிய புஸ்தகத்தில் உள்ளது

பாடலின் பொருள்:

துவையல், வற்றல், தயிர்ப் பச்சடி , பெருங்காயம், மிளகுடன் கீரை- —இன்றைய சமையல்

கீரைக்கு அவ்வளவு பெருமை .

சுமார் 50 வகைக்கீரைகள் உள்ளன. பூமிக்கு அடியில் வளரும் கிழங்கு வகைத் தாவரங்களின்  மேலேயும்  கீரை போன்ற இலைகள் இருக்கும். வட தேசத்து மக்கள் இவைகளையும்  பயன்படுத்துவர் . தமிழர்கள் அவ்வளவாக இவைகளை பயன்படுத்துவதில்லை  அவர்கள் கீரை என்று பெயருடைய 20, 30 வகை களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் இதோ 50 வகைக் கீரைகள்

அகத்திக் கீரை ,அரைக் கீரை ,கக்டுகுக் கீரை ,கலவன் கீரை ,

கரசணாங் கனிக் கீரை ,கவா கீரை ,காசினிக் கீரை ,காட்டுக் கீரை ,

குப்பமேனிக் கீரை ,கொத்தமல்லிக் கீரை ,கோயாக் கீரை ,கோசுக் கீரை

சக்கரவர்த்திக் கீரை ,சரவல்லைக்  கீரை ,சர்ச்சாக் கீரை ,சாக்வாட் கீரை, சிறு கீரை ,செலரிக் கீரை ,தண்டுக் கீரை ,தூதுக் கீரை ,தூதுவளைக் கீரை, நச்சுக் கொட்டைக் கீரை ,நூல்கோல் கீரை ,பச்சரிசிக் கீரை ,பசலைக் கீரை,

பருப்புக் கீரை , பன்னாக்கீரை , பசரிக்கீரை  , பச்சடி க்கீரை,

புளியாரக்கீரை, புண்ணாக்குக்கீரை, புளிச்சைக்கீரை,

பொன்னாங்கண்ணி க்கீரை, மணத்தக்காளி க்கீரை,

மணல்   கீரை, மின்மினிக்கீரை, முளை க்கீரை,

முள்ளங்கி க்கீரை, முருங்கைக்கீரை, முர்ராயா க்கீரை,

மொடக்கத்தான்  கீரை, வதநாராயணன் கீரை,

வீதி க்கீரை, வேலை க்கீரை, வெள்ள க்கீரை, வெள்ளரிக்கீரை,

லெட்டஸ் கீரை , லூனி க்கீரை, ரேசலிக்கீரை, வேப்பிலை.

வேப்பிலையை ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்து இருக்கிறோம். அமைப்பில் கீரை வகைகளைப் போன்றதாகவே வேப்பிலையும் இருக்கிறது. முற்றிய இலைகளிலும் கொழுந்து இலைகளிலும் புரதங்கள், சுண்ணாம்புச் சத்து , இரும்பு, வைட்டமின் ஏ  ஆகியவை அதிகம் இருக்கின்றன.. இவ்வகையில் கொத்தமல்லிக் கீரைக்கும், தண்டுக்கீரைக்கும், பசலைக்கீரைக்கும் விட இது உயர்வானது. என்று பிரபல உணவு நிபுணர் டாக்டர் அக்ராய்டு கூறியுள்ளார் .

ஒரு நபருக்குத் தினந்தோறும் வைட்டமின் ஏ 5000 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) தேவை. ஒரு வேலை, முருங்கைக் கீரை சாப்பிட்டால், அதில்  வைட்டமின் ஏ 3260 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) கிடைக்கிறது  என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பச்சைக் கீரைகளை சரியானபடி உபயோகிக்கத் துவங்கிவிட்டால், உணவைப்பற்றி வழக்கமாக இருந்துவரும் அபிப்ராயங்கள் எல்லாம் புரட்சிகரமான மாறுதல் அடைந்துவிடும் . பால் சாப்பிடுவதால் என்ன கிடைக்கிறதோ அதே சத்துக்களைப் பச்சைக்கீரைகள் அளித்துவிடும் – என்று பிரபல ஆங்கில டாக்டர் ஒருவர் தம்மிடம் கூறியதாக காந்தி அடிகள் குறிப்பிட்டுள்ளார் .

ஆதாரம்- உணவு, ஏ.கே செட்டியார் தொகுத்தது., டி .வி.எஸ் . நிறுவனம் வெளியிட்டது ; முதல் பதிப்பு 1967.

XXXX

MY AUTOBIOGRAPHY

கட்டுரையின் நீளம் குறைவாக இருப்பதால் நைஸாக கொஞ்சம்  சுய புராணத்தையும் நுழைக்கிறேன் .

நாங்கள் பணக்காரர்கள் இல்லை. நடுத்தரக் குடும்பம்தான்; கடவுள் புண்ணியத்தில் கடன் வாங்கியதில்லை. பிறருக்குக் கடன் உதவி செய்தே  வாழ்ந்தோம். எனது தந்தை தினமணி மதுரை பொறுப்பாசிரியர் வெ . சந்தானத்தைக் காண எல்லா சாமியார்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர் ஏ.கே செட்டியார்.. நாங்கள் மதுரை வடக்குமாசிவீதியில் கிருஷ்ணன் கோவில் அருகில் வசித்து வந்தோம். அது பழங்கால வாடகை வீடு. இருந்தபோதிலும் சிருங்கேரி மஹாஸன்னிதானம் , புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள், கோபால கிருஷ்ண பாகவதர் , ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா முதலிய பல புண்ய சீலர்கள் விஜயம் செய்த வீடு.

ஏ .கே செட்டியார் வந்தாலும் சரி, பிரபல எழுத்தாளர் எழுத்து சி சு. செல்லப்பா வந்தாலும் சரி , மணிக்கொடி  பி.எஸ்.ராமையா வந்தாலும் சரி முதலில் குமரி மலர்எழுத்து பத்திரிகைகளுக்கு வருட சந்தாவை என் தந்தை கொடுத்துவிட்டு, காப்பி சாப்பிடுங்கள் என்று உபசரிப்பார். என் அம்மா போடும் காப்பி உலகப் பிரசித்தம் .

முதல் நாள் இரவு நாங்கள் சகோதர்கள், போட்டி போட்டுக்கொண்டு கையால் அரைக்கும் சின்ன மிஷினில் காப்பிப்பொடி அரைத்து வைப்போம். காலை 5 மணிக்கு எதிர்த்த வீட்டு யாதவர்கள்  வந்து “பால் சொம்பில் தண்ணீர் இல்லை! பாத்துக்கொள்ளுங்கள்! என்று கவிழ்த்துக் காண்பித்துவிட்டு பால் கறந்து கொடுப்பார்கள். இவற்றுடன் அம்மாவின் கை மணமும் சேர்ந்தால் காப்பியின் சுவை குறையுமா?

ஏ கே செட்டியார் மிக உரிமையுடன் , அம்மா, இட்டிலி இருக்கிறதா? என்று வினவுவார். பிராமணர் வீட்டில் இட்டிலிக்கு என்ன குறைவு? என் அம்மா சூடாக வார்ப்பார் . அம்மா, அதில் நல்ல நெய் தடவிக் கொண்டு வாருங்கள் என்று மேலும் உரிமையுடன் கேட்பார் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

இதற்குள் சும்மா இருக்க மாட்டார். எங்கள் வீடோ பழங்கால வாடகை வீடு. எல்லா மூலைகளிலும் ஒட்டடை தொங்கிக்கொண்டு இருக்கும்.

எங்களில் ஒருவரை அழைத்து, “தம்பி ஓட்டைக்கம்பு கொண்டு வா” என்பார். எங்களுக்குப் புரியாது. அவரோ பஞ்சுக்கும் மேலான தூய வெள்ளை வேட்டி , வெள்ளைச் சட்டை அணிந்திருப்பவர். தயக்கத்துடன் மாசும் தூசியும் படைத்த ஒட்டடை கம்பைத் தேடிக் கண்டு பிடித்துக்கொண்டு ஒடி வருவோம் . அவரே ஒட்டடை அடிக்க ஆரம்பிப்பார். நாங்கள் “ஐய்யய்யோ எங்களிடம் கொடுங்கள் நாங்கள் செய்கிறோம்” என்று ஆரம்பிப்போம்.. அதாவது  , இதைச் செய், அதைச் செய்யுங்கள் என்று கட்டளை இடாமல் மற்றவர்க்கும் கற்பிக்கும் காந்தீய வழி அது . இதற்குள் இட்டிலியும் நெய் மணக்க வந்து விடும். காப்பியுடன் சாப்பிட்டு விடை பெறுவார்.

எல்லோரிடமும் நாம் கற்க முடியும். அடுத்த முறை யாராவது வீட்டிற்கு வருகிறார் என்று அறிவிப்பு வந்தால் வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு  சுத்தம் செய்வோம்.

அப்பாடா , யாராவது வந்தால்தான் வீடே சுத்தம் ஆகிறது என்று சொல்லி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்வோம்.

(ஒரு ரகசியத்தைக் காதோடு சொல்கிறேன்; லண்டனில் நான் இப்போதும் அதையேதான் செய்கிறேன். யாராவது வருவதாகத் தெரிந்தால்தான் வீடு வீடாக இருக்கும். மற்ற நேரங்களில் அது ‘மார்க்கெட்’ போல காட்சி தரும் )

-subham–

Tags- துவையல்,  கீரை,  சிவஞான முனிவர், ஏ கே செட்டியார், 50 வகைக்கீரைகள்

மாமனார் வீட்டில் சாப்பிடுவோன் ,  மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,644

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான்  கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless)  பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது  எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.

மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark

வெட்டி அரட்டையை  விரும்புவோரும் – 30 marks

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks

படிப்பில்லாதவரும்- 20 marks

கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,

மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks

பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks

வரவவே  இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows) 

xxxx

அறப்பளீசுர சதகம் 56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை

     விரும்புவோர் அவரின் வீணர்!

  விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை

     விரகிலோர் அவரின் வீணர்!

நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!

     நாடி அவர் மேற்கவி சொல்வார்

  நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே

     நரரைச் சுமக்கும் எளியோர்!

தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்

     சேரொரு வரத்தும் இன்றிச்

  செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்

     திரியும்எளி யேனை ஆட்கொண்

டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) வீணனாய்த் திரியும் எளியேனை ஆட்கொண்டு –

வீணனாகத்திரியும் எளியனான என்னை அடிமையாக ஏற்று, ஆட்டம்

செய்யும் பதஅம்புயம் முடியின்மேல் வைத்த அமலனே – நடனம்இடும்

திருவடித்தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை …….

தேவனே!, வேட்ட அகம் சேர்வோரும் வீணரே – மாமனார் வீட்டில்

உறைவோரும் வீணராவர்அவரின் வீண்உரை விரும்புவோர் வீணர் –

அவரினும் வீண்மொழியாடலை விரும்புவோர் வீணர், அவரின் விருந்து

கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடிமறை விரகு இலோர் வீணர் –

அவரினும் விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர், நாட்டம்தரும் கல்வி இல்லோரும் வீணரே –

(அவரினும்) (அகக்) கண்ணைத்தரும் படிப்பில்லாதவரும் வீணரே

நானிலந்தனில் அவர்மேல் நாடிக் கவி சொல்வார் வீணர்-(அவரினும்)

உலகில் கல்லாதவரைத் தேடி அவர்மேற் பாக்களைப் புனைவார் வீணர்,

அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே – அவரினும் மக்களைச்

சுமக்கும் எளியவர் வீணர், தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும்

– (பொருளைத்) தேடும் அறிவுஅற்ற பெருவீணரேயான அவரினும், சேர் ஒரு

வரத்தும் இன்றிச் செலவுசெய்வோர் அதிக வீணராம் – வரக்கூடிய எந்த

வரவும் இல்லாமல் செலவுசெய்பவர் பெரிய வீணராவர்.

     (வி-ரை.) வேட்டல் – மணம்புரிதல், விரகு – அறிவு. நாட்டம் – கண்;

இங்கு அறிவைக் குறிப்பதால் அகக்கண் ஆயிற்று;

நான்கு + நிலம் – நானிலம்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், உலகம்

இந்த நால்வகையில் அடங்குவதால் நானிலம் எனப்பட்டது, நரரைச்

சுமப்போர் – பல்லக்குத் தூக்குவோர்.

Xxx

மாப்பிள்ளைக்கு — மருமகனுக்கு — எங்குமே கெட்ட பெயர்தான்; அவர்களுக்கு செல்வத்தின் அருமை பெருமை தெரியாததால் அதிக நாள் தங்கிவிடுவர் . இதோ ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :

அதிதிர் பாலகஸ் சைவ ஸ்த்ரீ ஜனோ நிருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜாநந்தி ஜாமாதா சைவ பஞ்சமஹ

ஜாமாதா= மாப்பிள்ளை /  மருமகன்

ஐந்து பேருக்கு பணத்தின் அருமை தெரியாது:–விருந்தாளி, சிறுவன் பெண், ராஜா, மாப்பிள்ளை

xxxx

விவேக சிந்தாமணி பாடல் சொல்லும்:

34: யார் யார், யார்?

கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்

கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்,

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்,

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேய னாகும்,

பரிவு நழுவினவன் பசப்ப னாகும்

பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.

சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.

Xxxxx

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்

சதகத்தின்  26ஆவது பாடல் விளக்கத்திலேயே கீழ்கண்ட அவ்வையார் கதையைக் கொடுத்துவிட்டேன்

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

XXX

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

xxxxxxxxxxxxxxxxxxxxx    

முதியவர் இல்லாத கன்னியின் வாழ்க்கையும்,

(No Protection for Virgins; Manu Smrti said this)

காவல் இல்லாத பட்டினமும், (Danger from Robbers; Tiruvalluvar said this )

அதிகாரிகள் கூடும் இடமும் ( CBI Raids; Income Tax raids)

எதுகைமோனை சேராத செய்யுளும் (Film Songs)

காவல் இல்லாத பூங்காவும் ( Risk of Child Sex; Drug addicts)

கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும் (Rain Water wasted)

ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும்,(Drona- Ekalaiva Anecdote)

புகழ்ந்து கூறாத விறலியர் கூத்தும் ( No appreciation)

ஆற்றோர மரமும் ( Washed away by floods)

சுள்ளாணி இல்லாத தேரும் (Broken Chariot)  are USELESS, WASTE

Xxxx

அழிவன/ கெடுவன பற்றி விவேக சிந்தாமணி

மூப்பிலாக் குமரி வாழ்க்கை,

முனிவிலா அரசன் வீரம்,

காப்பிலா விளைந்த பூமி,

கரையிலா திருந்த ஏரி,

கோப்பிலான் கொண்ட கோலம்,

குருவிலான் கொண்ட ஞானம்,

ஆப்பிலாச் சகடு போல அழியும் என்று உரைக்க லாமே.

மூத்தவர் துணை இல்லாத குமரிப் பெண்ணின் வாழ்க்கை, கோபம் இல்லாத அரசனின் வீரம், பாதுகாப்பு வேலியில்லாத விளைநிலம், உயர்ந்தகரை இல்லாத ஏரி, ஒழுக்கமில்லாதவன் கொண்ட  அழகு, குரு அருள் இல்லாமல் பெற்ற ஞானம் ஆகியவை அச்சாணி இல்லாத வண்டி போல அழிந்து போகும்..

xxxxxx

          அறப்பளீசுர சதகம்  57. கெடுவன

மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை

     மோனையில் லாத கவியும்

காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல

     கரையிலா நிறையே ரியும்,

  கசடறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,

கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட் டமும்,

  குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று

     கோடுயர்ந் தோங்கு தருவும்,

ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, மூப்பு

ஒருவர் இல்லாத குமரி குடிவாழ்க்கையும் – முதியவர் ஒருவர் இல்லாத கன்னியின் இல்வாழ்க்கையும், மூதரண் இலாத நகரும் – பழைமையான

காவல் இல்லாத பட்டினமும், மொழியும் வெகுநாயகர் சேர்இடமும் –

கூறப்பட்ட பல அதிகாரிகள் கூடும் இடமும், வரும் எதுகைமோனை

இல்லாத கவியும் – (இலக்கணத்தில்) எதுகையும் மோனையும் சேராத செய்யுளும், காப்பு அமைவு இலாதது ஓர்

நந்தவனமும் – காவல் பொருந்தியிராத ஒரு பூங்காவும், நல்ல கரைஇலா

நிறை ஏரியும் – நல்ல கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும், கசடுஅறக் கற்காத

வித்தையும் – குற்றமின்றிக் கல்லாத கல்வியும், உபதேச காரணன் இலாத

தெளிவும் – கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும், கோப்புஉள

விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர்செய் கூத்தாட்டமும் –

கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் ஆடும் கூத்தும், குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோர

மதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் – குளிர்ந்த நீர் நிறைந்து

வரத்தக்க ஆற்றோரத்திலே இருந்து வளரும் நீண்ட உயர்ந்த

கொம்புகளையுடைய மரமும், ஆப்பது இல்லாத தேர் – சுள்ளாணி இல்லாத தேரும், இவையெலாம் ஒன்று ஆகும் – இவை யாவும் ஒரேதன்மையுடையன (கெடுவன) ஆகும்.

     (க-து.) எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.

To be continued………………………….

Tags– வீணர், கெட்டவை , பயனற்றவை, மாப்பிள்ளை

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்! (Post No.11,643)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,643

Date uploaded in London –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

ச.நாகராஜன்

வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

வாயு பகவான் மூன்று அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

1) ஹனுமான் 2) பீமசேனன் 3) மத்வாசாரியார்

ப்ரதமோ ஹனுமான் த்வீதியோ பீம ஏவ ச |

பூரணப்ரக்ஞஸ்த்ரூதியஸ்து பகவத்கார்யஸாதக: ||

–    சர்வதர்சனசங்க்ரஹம் (பூர்ணப்ரக்ஞ)

2) மூன்று விஷயங்கள் எதிரிகளைச் சம்பாதிப்பது போல!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் செய்வதானது எதிரிகளைச் சம்பாதிப்பது போலத் தான் என்று விதுரர் கூறுகிறார்.

1) தன்னை அண்டியவர்களுக்கு வரம் தருதல்

2) ஒரு ராஜ்யத்தை ஜெயிப்பது

3) மகனைப் பெறுதல்

இந்த மூன்றும் எதிரியைச் சம்பாதிப்பது போலத் தான்!

வரப்ரதானம் ராஜ்யம் ச புத்ர ஜன்ம ச பாரத |

ஷத்ரோஸ்ச மோக்ஷணம் க்ருச்சாத்த்ரீணி சைகம் ச தத்சமம் ||

–    விதுர நீதி 1.72

–     

3) திருப்தி அடைய வேண்டியவை மூன்று!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் திருப்தி அடைய வேண்டும் என்று சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.

1) தனது மனைவியிடன்

2) போஜனம் – உணவில்

3) தன்னிடம் இருக்கும் செல்வத்தில்

சந்தோஷஸ்தீரிஷு கர்தவய: ஸ்வதாரே போஜனே தனே |

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

4) மூன்று விஷயங்களில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது!

கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஒருவன் ஒருபோதும் திருப்தி அடையக் கூடாது என்று சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் தனது ஒரு ஸ்லோகத்தில் அறிவுறுத்துகிறது.

1) தானம் கொடுப்பதில்

2) தவத்தில்

3) கற்றுக் கொடுப்பதில்

த்ரீஷு சைவ ந கர்தவ்யோ தானே தபஸி பாடனே!

–            சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 160/337

–     

5) சூரிய கிரணங்கள் தரும் நன்மைகள் மூன்று!

நமது சாஸ்திரங்களும் அறிவியலும் போற்றும் சூரிய கிரணங்களின் பெருமை சொல்லி மாளாது.

சூரிய கிரணங்கள் மூன்று நன்மைகளைத் தருவதாக நமது அறநூல்கள் கூறுகின்றன.

1) உஷ்ணம்

2) ஆரோக்யம்

3) ப்ரகாசம்

கிரணா ஸ்த்ரீ வித்யா: சூர்யே தாபாரோக்யப்ரகாஷதா: |

க்னந்தி ஸ்வப்ரபாவேண தைன்யம் தாபம் ச பாதகம் ||

6) துக்கத்திற்கான காரணங்கள் நான்கு!

ஒருவன் நிச்சயம் துக்கப்பட வேண்டிய நிலையில் அவனை நான்கு விஷயங்கள் கொண்டு விட்டு விடும். அவை யாவை? விடையை மனு தனது மனு ஸ்மிருதியில் தருகிறார்.

1) குடித்தல்

2) சூதாட்டம்

3) ஸ்த்ரீ சம்போகம் (பெண்களுடனான பாலியல் உறவு)

4) வேட்டையாடுதல்

பானமக்ஷா: ஸ்த்ரீயஸ்சைவ ம்ருகயா ச யதாக்ரமம் |

ஏதத்கஷ்டதமம் வித்யாச்சதுக்கம் காமஜே கனே ||

–    மனு ஸ்மிருதி VII – 50

–     

7) பக்தர்கள் நான்கு விதம்!

பகவத் கீதையில் க்ருஷ்ண பரமாத்மா பக்தர்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்.

1) ஆர்த்தா (துன்பத்தில் இருப்பவர்கள்)

2) ஜிக்ஞாஸு (விசாரித்து அறியத் துடிப்பவர்கள்)

3) அர்த்தார்த்தீ – செல்வத்தை விரும்பித் துதிப்பவர்கள்

4) ஞானி

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: சுக்ருதிநோர்ஜுன |

ஆர்தோ ஜிஞாஸுரரதார்தீ ஞானி ச பரதர்ஷ்ப ||

–    பகவத் கீதா VII – 16

8) மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உள்ள நான்கு வழிகள்!

மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க நான்கு வழிகளை  யோக சாஸ்திரம் கூறுகிறது.

1) மைத்ரி : சந்தோஷமான மனிதர்களிடம் நட்பு கொண்டிருப்பது

2) கருணா : சந்தோஷமற்ற மனிதர்களிடம் கருணை காட்டுவது

3) முதிதா – நல்லனவற்றில் சந்தோஷம்

4) உபேக்க்ஷா _ பாவ விஷயங்களில் வெறுப்பு

மைத்ரிகருணாமுதிதோபேக்ஷாணாம் சுகதுக்கபுண்யாபுண்யவிஷயாணாம் பாவ நாதஸ்சித்தப்ரஸாதனம் |

–    யோக சூத்ரம் I – 3

9) தர்ம சாத்யத்திற்கான இரு வழிகள்!

தர்மத்தைச் செய்வதற்கான இரு வழிகள் இதோ

1) த்ரவியம் – செல்வத்தினால்

2) தேஹம் – உடலினால்

இந்த இரண்டினாலும் தர்மம் செய்து உரிய பலன்களை அடையலாம்.

தர்மஸ்ச த்விவித: ப்ரோக்தோ த்ரவ்யதேஹத்வயேன ச |

***