புது வீட்டுக்குக் குடி போகக் கூடாத மாதங்கள்: அம்பலவாணர் கூறும் அதிசயக் காரணங்கள் (11,661)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,661

Date uploaded in London – –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

(எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் நைசாக , நாசூக்காக என் சுய சரிதையையும் கொடுத்துள்ளேன் ; அடைப்புக்குறிக்குள் நான் நுழைத்திருக்கும் விஷயங்களை படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம்)

xxxx

அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணக் கவிராயர் , புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் புதல்வர் ஆவார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் . அவர் சொல்லும் புராண நிகழ்ச்சிகளின் காலம் (மாதங்கள்) இதுவரை பாரும் அறியாத விஷயம் ஆகும். சித்திரைவைகாசிஆவணிஐப்பசிகார்த்திகைதை மாதங்களில் புது வீட்டுக்குக் குடிபோகலாம் என்று செப்புகிறார்.

Xxxx

   அடுத்த பாடலில் விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறுசெவ்வாய், வியாழன் தகாதவை; மற்றவை நலமானவை என்கிறார்.

நான் பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் இந்த விஷயத்தை அறியேன். குடிபோகக்கூடாத மாதங்கள் தெரியும். ஆனால் அதற்குப் புலவர் சொல்லும் கரணங்கள் எனக்குப் புதுமையானவை..

xxxx

என் சுய சரிதை

((ஒரு முறை ஒரு இலங்கைத் தமிழ் டாக்டர் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். நான் ஒவ்வொரு நாளாகச்  சொல்ல அவர் அந்த நாட்களில் வேலை இருக்கிறதே என்று தட்டிக்கொண்டே வந்தார். அதற்கென்ன வியாக்கிழமை வாருங்கள் என்றேன். அவர் பதறிப்போய், “முடியவே முடியாது; எந்தக் கிழமை போனாலும் நாங்கள் வியாழக்கிழமை முதல் சந்திப்பை வைக்க மாட்டோம்” என்றார். அப்போதுதான் எனக்கு வியாக்கிழமை பற்றித் தெரிந்தது. பொதுவாகப்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பலரும் பாராட்டுவார்கள். மனித குலம் முழுதும் இப்படி எவ்வளவோ வினோதமான நம்பிக்கைகள்! மேலை நாடுகளில் 13-ம் ஆம் எண் அறை  கிடையாது . 666 என்ற எண் பேயின் எண் என்பார்கள்.

xxxx

நான் லண்டனில் உலக இந்து மஹாசங்கத்தின் செயலாளர்.

ஒரு நிகழ்ச்சிக்கு நான் தயாரித்த இந்து மஹா சங்க அழைப்பிதழில் பார்டர் border  முழுதும் ஸ்வஸ்திகா Swastika  Symbol சின்னம் போட்டு அலங்கரித்து இருந்தேன். மேற்கூறிய  டாக்டர் எனக்கு போன் செய்து அவருடைய வெள்ளைக்கார (டாக்டர்) நண்பர்கள் அந்த அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாகவும், அது பயங்கரமான சின்னம் என்றும் கூறினார்.

ஆரியன் என்ற சொல்லையும், ஸ்வஸ்திகாவையும் ஹிட்லர் (Hitler) பயன்படுத்தியதால் வந்த வம்பு அது. நான் சொன்னேன்  ; இந்துக்களுக்கு அது மிகவும் புனிதமான சின்னம். இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிக்கைகளின் அதிபர் ராம்நாத் கோயங்காவின் குடும்ப கல்யாண அழைப்பிதழ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அதில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது என்று குறிப்பிட்டேன். இந்தியாவில் வடக்கத்தியர் வீடுகளிலும் கடைகளிலும் ஸ்வஸ்திகா சின்னம் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் .

கார்த்திகை நட்சத்திரம், செவ்வாய்க் கிழமைகளில் எங்கள் குடும்பத்தினர் எந்த புது விஷயங்களையும் செய்ய மாட்டோம்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்ததும் கார்த்திகை நட்சத்திரத்தன்றுதான். அது எனக்குத் தெரியாது. காஞ்சி சங்கராசார்யார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , “அடாடா ! கார்த்திகை நட்சத்திரத்தன்று போகிறார்களே” என்று வருத்தப்பட்டதாக பின்னர் ஒருவர் கூறினார்.

அவரவர் நம்பிக்கை, அனுபவத்தின் பேரிலும், காலாகாலமாக இருந்துவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் எழுகின்றன தமிழ் சம்ஸ்க்ருத இலக்கி யம் முழுவதிலும் தும்மல், கண்துடிப்பு (Sneezing, Eye Twitching) பற்றி ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் மேலை நாட்டில் அப்படி இல்லை.

இதே போல, அம்பலவாணர், சில விஷயங்களுக்குக் காரணம் சொல்கிறார். சில விஷயங்களுக்கு சொல்லுவதில்லை.

திருமூலரும் சம்ஸ்க்ருத நூல்களும் பயணம் செய்யக்கூடாத திசைகளை வார சூலை என்று குறிப்பிட்டுள்ளனர்.. எதையும் பின்பற்றுவதும் புறக்கணிப்பதும் அவரவர் இஷ்டம்.

Xxxx

எனக்கு அடிக்கடி போன் செய்து பல்வேறு விஷயங்களைக் கதைக்கும் ஐயங்கார் இளைஞன்,  ஒரு நாள் போன் செய்து நாம் எல்லோரும் X Y Z செய்கிறோமே; என் நண்பன் சொல்கிறான் ; அப்படிச்செய்தால்  நாம் பிராமணர் இல்லையாமே என்றான்.

எனக்கு ஒரே சிரிப்பு !

நான் கேட்டேன்- உன் நண்பரும் அவரது மனைவியும் லண்டனில் இருக்கிறார்களா ? என்று

ஆமாம், ஆமாம் இங்கேதான் இருக்கிறார்கள் என்றார். நாளைக் காலையில் இரண்டு பேரும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என்று ஒரு பெரிய பிராமண அறிஞர் சொன்னார் என்று சொல் என்றேன்.

அவர் பதறிப்போய் What? What? வாட், வாட், என்றார் .

திருப்பியும் அதையே அழுத்தம் திருத்தமாக சொல்லி பிராமணர்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று மனு நீதி நூல் சொல்கிறது. பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியம் சொல்கிறது. அவர் சாஸ்திர விதிகளில் நம்பிக்கை உடையவர் என்பதால் நாளைக் காலையே இந்தியாவுக்குப் போக வேண்டும் என்றேன். அவர் நைஸாக பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். நானும் விட்டுவிட்டேன் .ஆக வேண்டுமென்றால் சாஸ்திரம்; வேண்டாமென்றால் அது தெரியாது போல நடிப்பது என்பது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்டது

இன்னும் இரண்டு சுவையான விஷயங்களை பின்னர் எழுதுகிறேன்

என்னுடைய பிராமண உறவினர் லண்டனில் சனிக்கிழமை காலை உண்ணாவிரதம் முடிந்து மலையில் என்னுடன் சுற்றிப்பார்க்க வந்தபோது மக் டொனால்டில் (Chicken  in Mc Donald) சிக்கன் ஆர்ட்டர் கொடுத்தார் ; அதற்குப்பின்னர் என்ன நடந்தது என்பதை பின்னர் எழுதுகிறேன் !

மற்றோரு சம்பவம் மதுரையில் செளராஷ்டிர பிராமணன் மாமிசம் சாப்பிட்ட கதை. என் தம்பியிடம் அந்தப் பையன் சொன்னான் : நாங்களும் ஐயர் Iyer தான் ; எங்க அப்பா ஒரு டையர் Dyer  (சாயம் ஏற்றும் தொழிலாளி) ஆனால்  நாங்கள் கறி (மாமிசம்) மட்டும்  சாப்பிடுவோம் என்று சொல்ல , என் தம்பி அதை வீட்டில் வந்து சொல்ல , அன்று முழுதும் ஒரே தமாஷ்தான் ; பின்னர் விரிவாகக் காண்போம்.))

xxxx

  67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்

     செல்வம்உண் டதினும் நலமே

  சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்

     தீயிட்ட தானி யாகா;

வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்

     வீறல்ல; ஆவ ணிசுகம்;

  மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;

     மேன்மையுண் டைப்ப சிக்கே;

உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்

     ஓங்குபா ரதம்வந் தநாள்;

  உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்

     உம்பர்கோன் உண்ட தாகாது;

அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்

     ஆகுமோ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்த – தலைவனே!, அருமை …… தேவனே!, சித்திரைத்

திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு – சித்திரைத்

திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் –

சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா – முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது,

வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல –

வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள்

சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் – ஆவணித்திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது – புரட்டாசித்திங்கள் இரணியன் இறந்ததுஆகையால்தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு –

ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டுகார்த்திகைக்கு உத்தமம் –

கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்தநாள் மார்கழியில்

ஆகாது – பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித்திங்களில் தகாது, மகரத்தில் உயர்வு உண்டு – தைத்திங்களில் மேன்மை உண்டாகும்,

உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது – வானவர்

தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை எரித்த பங்குனிதானும் ஆகுமோ – நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)

xxxxx

             68. விருந்து வாரம்

செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;

பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;

மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;

அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே –

அகங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுவையுடையவனே!,

அண்ணலே – பெரியோனே!, அருமை …… தேவனே!, செங்கதிர்க்கு

விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை

வரும் – ஞாயிற்றுக்கிழமையில் ஒருவர் விருந்துசெய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும், திங்களுக்கு உறவு

உண்டு; நன்மைஆம் – திங்கட் கிழமையில் (விருந்துண்டால்) உறவு வரும்;வேறு நன்மையும் உண்டாகும், செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும்- செவ்வாய்க்கிழமையில் விருந்துண்ணமாட்டார், (உண்டாற்) பகையுண்டாகும்,

பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் – நலம்மிகு புதன்கிழமையில்

நலமுண்டாகும்உறவும் உண்டாகும், பொன்னவற்கு விருந்து உண அதிக

பகைஆம் – வியாழனில் விருந்துஉண்டால் மிகு பகைவரும், புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் –

வெள்ளிக்கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர், மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் – முகில் அனைய

சனிக்கிழமை நலம் உண்டாகும், இதனினும் மனம் ஒத்து இருந்த இடம்

வாலாயமாய்ப்போய் விருந்துஉண விருந்துஉதவ வாய்த்தநாள் என்று

அறியலாம் – மேலும் இந்த நாளே உளம் ஒத்தும் உள்ள இடத்தில்

வழக்கமாகச்சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என

உணரலாம். (வி-ரை.) சனியின் நிறம் கருமையாகையால், ‘மங்குல் நிகர் சனி’

என்றார். அகம் + கை – அங்கை. 

To be continued………………………………..

Tags–குடி போக, விருந்துக்கு அழைக்க, போக, நல்ல நாட்கள், மாதங்கள் , சதகம், என் சுய சரிதை

ஒளவையாருக்குப் பிடித்த கத்தரிக்காய் கறி (Post No.11,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,660

Date uploaded in London – –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தனிப்பாடல்  திரட்டிலிருந்து ஒளவையாருக்குப் பிடித்த உணவு வகைகள் என்ன என்ற தகவல் நமக்குக்  கிடைக்கிறது . அவருக்குக் கத்தரிக்காய் கறி  மிகவும் பிடிக்கும். அவர் பாடிய தெய்வீகப்  பாடல்களிலிருந்து அவர் சுத்த சைவம் – வெஜிட்டேரியன் Vegetarian — என்ற தகவலும் கிடைக்கிறது. அவ்வை என்ற சொல்லிலேயே  வயதான மூதாட்டி , இறைவனை நாடும் மாது , திருமணமாகாத பெண் அல்லது கணவனை இழந்த பெண் என்ற பொருள் எல்லாம் வந்து விடுகிறது. தமிழ் நாட்டில் சங்க காலம் முதல் சமீப காலம் அவரை ஆறு ஒளவையார்கள் இருந்ததாக ஒரு புஸ்தகமும் வெளியாகி  இருக்கிறது.

“ஒள” என்ற எழுத்தில் துவங்கும் சொல் திருக்குறளிலோ அதற்கு முந்திய சங்க இலக்கியத்தின் 18 நூல்களிலோ கிடையாது . தொல்காப்பியர் , “ஒள” என்ற எழுத்தை மட்டும் குறிப்பிடுகிறார் .

ஆகையால் ஒளவையார் என்றும் எழுதலாம் அவ்வையார் என்றும் எழுதலாம் .

XXX

இனி உணவு வகைகளுக்கு வருவோம்

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரெனவே புளித்த மோரும்- திரமுடனே

புல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு

எல்லா உலகும் பெறும்”

புல் வேளூர்ப் பூதன் என்பவன் போட்ட சாப்பாட்டைப் புகழ்ந்து அவ்வையார் பாடிய பாடல் இது .

பூதன் என்பவன் பரிமாறிய  வரகரிசிச் சாதம், கத்தரிக்காய் வதக்கல்,  நுரை பொங்கும்  புளித்த மோர் ஆகியனவை மிகவும் சுவையாக இருந்தன . அதை அவன் அன்போடு உபசரித்து படைத்தான். இதற்கு உலகம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு சுவையானது என்கிறார்.

சாப்பாட்டுப் பட்டியலைப் பார்த்தால் அது ஒரு ஏழை வீட்டுச் சாப்பாடு என்று தெரிகிறது. ஆயினும் பரிவுடன் இட்டதால் அதன் சுவை ஆயிரம் மடங்கு பெருகிவிடுகிறது .

Xxx

அவர் பாடியதாகக் காணப்படும் இன்னொரு தனிப்பாடலும் ,சோற்றின் சுவையை விட அதைப் பரிமாறுவோரின் அன்புதான் முக்கியம் என்று காட்டுகிறது .

(இந்தப்பாடல் 1960ம் ஆண்டுகளில் வெளியான இரண்டு தனிப்பாடல் நூல்களில் இல்லை. ஆனால் 1897-ம் ஆண்டு நூலில் இருக்கிறது .என்னிடம் லண்டனில் மூன்று தனிப்பாடல் நூல்கள் உள்ளன. ஒன்று மிகப்பழைய நூல் ;சந்தி பிரிக்காமல் எழுதப்பட்ட, பழுப்பு நிறம் கண்ட, தூள் தூளாக உடையும் நூல் ; வெளியான ஆண்டு 1897. இராமநாதபுரம் ஸமஸ்தானம் மகாராஜ ஸ்ரீ பொன்னுசாமித்தேவர் அவர்கள் அனுமதியினால், முன்பதிப்பித்த  பல பிரதிகளைக்கொண்டும், இன்னும் சில பாடல்களும் நூதனமாக சேர்த்து ,சரவணபுரம் முதலியாரவர்களால் பார்வையிடப் பட்டு, பு. ஏ.  இராகவப்பிள்ளை அவர்களது விவேக விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது; 1897 வரு.(க்ஷம்)..

xxxx

கீழ்கண்ட இரண்டு நூல்களில் இல்லை

அதற்குப் பின்னர் 1960ம் ஆண்டு நூல். அது கலைச்செல்வி தொகுத்தது ; அகிலன் எழுதிய முன்னுரையுடன் கூடியது. வெளியீடு — மீனாட்சி பதிப்பகம், கீழ இராச வீதி, புதுக்கோட்டை , ஆண்டு 1960

இரண்டாவது புஸ்தகம் :தமிழ் தந்த கவியமுதம் — கு.அழகிரிசாமி,  தமிழ்ப் புத்தகாலயம் , சென்னை-14, ஆண்டு 1962.

xxxx

கடை எழு வள்ளல்களில் ஒருவர் முல்லைக்குத் தேரீந்த பாரி . அவருக்கு சங்கவை அங்கவை என்று இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் படைத்த உணவு என்று சிலரும் ‘இல்லை, இல்லை’ அதே பெயரில் வாழ்ந்த இடையன் பாரியும் அவனது மகள்கள் இருவரும் போட்ட உணவு என்று பலரும் கற்பனைக்கு ஏற்றபடி எழுதுவார்கள். ஆயினும் பாடலின் பொருள்தான் நமக்கு முக்கியம்

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்

நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யா

அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்

செறியாதோ கைக்கு.

பழைய நூல்களில் உள்ள கருத்து:-

அவ்வையார் மழையில்  நனைந்து போய், மிகவும் நடுங்கிக்கொண்டே வந்தார். அவரைக் கண்ட பாரி என்ற இடையன் அவரைக் குடிசைக்கு அழைத்துச் சென்றான் . அவர்கள் கருப்பு நிற சிற்றாடையை அவருக்குப் போர்த்திக்கொள்ள கொடுத்தனர்; குளிர் காய நெருப்பு மூட்டினர்.முருங்கைக் கீரையை நெய்விட்டுச் சமைத்து கேழ்வரகுக் களியுடன்  இலையில் இட்டனர் ; அதுமட்டுமா ‘போதும் போதும்’ என்று மன்றாடும் அளவுக்கு பரி மாறிக்கொண்டே இருந்தனர். அதுதான் இந்திர லோக அமுதம் .

கடைசி வரிக்கு இரண்டு பொருள் உண்டு. சிறிது எழுத்துக்களை மாற்றினால் (கடகஞ் செறியாதோ கைக்கு)  (கடகம்) வளையல் அணிந்த கைகளென்பதை அந்தக் கைகளுக்கு தங்க வளையல் போட வேண்டும் (கடகஞ் செறியாதோ கைக்கு) ; அவ்வளவு தகுதி உண்டு என்றும் கொள்ளலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பாடலின் பொருளுக்குத் திரும்பினோமானால், எளிய கிராமீய சத்துணவு, அன்புடன் பரிமாறப்பட்டது ‘போதும் போதும்’ என்று சொல்லுமளவுக்கு படைக்கப்பட்டது  என்பது தெளிவாகும்.

XXX

ஆறு அவ்வையார்கள்

 MY OLD ARTICLES ON AVVAIYAR

ஆறு அவ்வையார்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

4 Aug 2020 — 10 Jul 2015 – அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் …

தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No.8326)

https://tamilandvedas.com › தமிழ…

11 Jul 2020 — 31 Jan 2020 – … (Protestant) பிரிவை. உருவாக்கினார் போப்பாண்டவர் ‘பாவ மன்னிப்புச் சீட்டு’.

அவ்வையாரும் சாணக்கியனும் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

14 Feb 2018 — ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் …

ஔவை – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

11 Oct 2019 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …

அவ்வையாரும் பேயும் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

19 Dec 2013 — குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் …

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

https://tamilandvedas.com › அவ்…

·

14 Nov 2015 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …

அவ்வையார் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

21 Nov 2018 — திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and … tamilandvedas.com/2016/02/12… –subham—. October 27 …

சாக்ரடீசும் அவ்வையாரும்! – Tamil and Vedas

https://tamilandvedas.com › சாக்…

10 Jul 2015 — அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்,… … வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …

Tags- ஆறு ,அவ்வையார்கள், வரகரிசிச் சோறும், கத்தரிக்காய் கறி, தனிப்பாடல், ஔவை

விவேகானந்தர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post.11,659)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,659

Date uploaded in London –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஜனவரி 12 – ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தி தினம்! 

ஸ்வாமிஜி தோற்றம் :- ஜனவரி 12, 1863

ஸ்வாமிஜி சமாதி தினம் :- ஜூலை 4, 1902

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

ச.நாகராஜன்

1

ஸ்வாமி விவேகானந்தர் இமயமலையில் நடைப்பயணமாக வெகு தூரம் நடந்து கொண்டிருந்தார்.

வழியில் ஒரு வயதான மனிதர் ஸ்வாமிஜியைப் பார்த்தார்.

‘ஓ ஸ்வாமிஜி! நான் நடந்து நடந்து  மிகவும் களைத்து விட்டேன்.

இந்த மலைப் பாதையில் பாதி தூரம் வந்து விட்டேன்.

இனி மீதி தூரத்தை எப்படி ஏறிக் கடப்பது?” என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்டார்.

ஸ்வாமிஜி புன்சிரிப்புடன் அவரைப் பார்த்தார், பேசலானார்: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்கள் காலடிக்குக் கீழே பாருங்கள். நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறதா? இதை இவ்வளவு தூரம் கடந்தது யார்? நீங்களே தான்! இதே சாலை தான் உங்கள் முன் இருக்கிறது. இதுவரை எப்படி நீங்களே இதைக் கடந்து வந்து சாதித்தீர்களோ அதை இன்னும் உங்களால் செய்ய முடியுமே! நடந்து முன்னேறுங்கள். வெற்றி தான்!”

என்றார்.

ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற அவர் புத்துணர்ச்சி பெற்று அவரை வணங்கி விட்டு மலை மீது ஏறலானார்.

2

ஸ்வாமிஜி ஒரு முறை மேலை நாட்டில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் அவருக்கு எதிரில் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவரது உடையைப் பார்த்த அந்த இருவரும் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

ஒருவன் தனது நண்பனைப் பார்த்துச் சொன்னான்: “ இந்த ஆளைப் பார்! இவரை ‘ஃபூல்’ என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”

அதற்கு அவனது நண்பன் பதில் சொன்னான்; “இல்லை இல்லை, நீ சொல்வது தப்பு. இவர் ஒரு இடியட். அது தான் சரியாக இருக்கும்.”

இருவரும் மாறி மாறித் தான் சொல்வதே சரி என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு இப்படிப்பட்ட காவி உடை அணிந்த ஒருவருக்கு ஆங்கிலமே தெரியாது என்ற எண்ணம்.

நடுவில் டிக்கட் பரிசோதகர் வந்த போது ஸ்வாமிஜி, “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமே? எங்கே கிடைக்கும்?” என்று தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் கேட்டார்.

அவரும் தக்க பதிலைச் சொல்லி விட்டு அகன்றார்.

இவரது பேச்சைக் கேட்ட எதிரிலிருந்த இருவரும் அசந்து போனார்கள்.

பிரமிப்புடன். “என்ன உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நாங்கள் இவ்வளவு நேரம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே தானே இருந்தீர்கள்?” என்று கூறினர்.

ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார்.

பிறகு அவர்கள் வியப்புடன், “ நீங்கள் யார்?” என்று கேட்டனர்.

ஸ்வாமிஜி அவர்கள் இருவரையும் தன் பக்கத்தில் தன் தோளுக்கு அருகே இழுத்துக் கொண்டார். நடுவில் ஸ்வாமிஜி இருக்க ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் இருந்தனர்.

“ஓ! நான் யார் என்றா கேட்கிறீர்கள்! நான் ஃபூலுக்கும் இடியட்டுக்கும் நடுவில் இருப்பவன்” என்றார்.

அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

3

ஸ்வாமிஜி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

நரேந்திரன் (பின்னால் விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற ஸ்வாமிஜி) தன் நண்பர்களிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கதை சொன்ன விதம் நண்பர்களை ஈர்த்தது. பாடத்தை யாரும் கவனிக்கவில்லை. கதையையே கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் யாரோ முணுமுணுத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

“யார் அங்கே பேசுவது?” என்று கேட்டார். பதிலே வரவில்லை.

முணுமுணுப்பு சப்தம் வந்த இடத்தை நோக்கிய அவர் அங்கிருந்தவர்களிடம், “இது வரை நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் சொல்லுங்கள்” என்றார்.

யாரும் ஒன்றும் பேசவில்லை.

நரேந்திரன் மட்டும் அவர் நடத்திய பாடத்தைச் சொன்னார்.

தான் நடத்திய பாடத்திலிருந்து ஆசிரியர் கேள்விகள் கேட்கவே அனைத்திற்கும் அவர் பதிலைச் சொன்னார்.

ஆசிரியர் வியந்து போனார்.

அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் பெஞ்சின் மீது நிற்கச் சொன்னார். அனைவரும் ஏறி நின்றனர்.

விவேகானந்தர் தானும் ஏறி நின்றார்.

“நீ ஏற வேண்டாம். இறங்கு” என்றார் ஆசிரியர்.

“ஸார்! நான் தான் இவ்வளவு நேரம் பேசியது. அவர்கள் கேட்கத் தான் செய்தனர். நான் தான் பெஞ்சின் மீது நிற்க வேண்டும்” என்றார் நரேந்திரன்.

அனைவரும் வியந்தனர்.

ஒரே சமயத்தில் பல விஷயங்களைக் கவனிக்கும் அவதான சக்தியை அவர் அப்போதே கொண்டிருந்தார்.

அது அனைவரையும் வியக்க வைத்தது!

இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு.

அனைத்தும் சுவையானவையே!

***Tags– ஸ்வாமி, விவேகானந்தர்

Learn Tamil Verbs– Part 38 (New Verbs)—Post.11,658

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,658

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 LET US LEARN MORE SENTENCES AND PRACTISE WITH OLD VERBS

 I would like to see a temple = நான் ஒரு கோவில் பார்க்க வேண்டும்; எனக்கு ஒரு கோவிலைப் பார்க்க ஆசை

xxxxxxx

What time does it open? அது எப்போது திறக்கும்?/ என்ன நேரம் அது திறக்கும்?

xxxxxxxx

What time does it close?அது எப்போது மூடும் / என்ன நேரம் அது மூடும் ?

xxxxxxx

Do I have to pay? நான் காசு கொடுக்க வேண்டுமா ?

xxxxx

How much is the entrance fee? நுழைவுக்  கட்டணம் எவ்வளவு ?

xxxxxx

How much is the fare? பயணக் கட்டணம் அல்லது டிக்கெட் எவ்வளவு

xxxxx

I am going to sleep/eat/bathe/read/write/talk/get up/sit/stand

நான் தூங்க/ சாப்பிடப் / குளிக்கப் / படிக்கப் / எழுதப் / பேசப் /எழுந்திருக்க / உட்காரப் நிற்கப் போகிறேன்

Going to = போகிறேன் (You place it after the infinitive of a verb)

xxxxx 

Important verbs முக்கிய வினைச் சொற்கள்

Come வா ; go போ ;   read  படி;   write எழுது;

XXXXXX

Stand நில்; sit உட்கார்; run ஓடு; climb ஏறு ;

XXXXXXXXX

Cook சமை ;    bathe குளி; washகழுவு; clean சுத்தம் செய் ;

XXXXXXXX

Ask   கேள்; sing பாடு;      speakபேசு ;     talkபேசு;

XXXXXX

Listenகேள்        walk நட    cry அழு     laugh சிரி  

XXXXXXXXX

Do                        be                        look                      eat

செய்                 இரு                      பார்  சாப்பிடு / உண்

XXXXXXXXXX

Buy                      sell                       push                    pull

வாங்கு           வில்                   தள்ளு                 இழு

XXXXXXXXXX

Like                      learn                    teach                   love

பிடிக்கும்  கற்றுக்கொள் சொல்லிக்கொடு காதலி

XXXX

Hate                     start                     reach                   marry

வெறு —-புறப்படு ———அடை  ———-கல்யாணம் செய்

XXXXXXX

Sleep                   getup                   play                      stop

தூங்கு  —–எழுந்திரு  ——— விளையாடு  ——-நில்

XXXXXX

Use                      pray                     finish                    start

உபயோகி ——-பிரார்த்தனைசெய் —-முடி —–புறப்படு

XXXXXX

Live                      dwell                    rent                      hire

வாழ்  —-வசி ———-வாடகைக்கு விடு  —–வாடகைக்கு எடு

XXXX

Lend                    borrow                 give                      take

கடன் கொடு  கடன் வாங்கு  கொடு ———–எடு

XXXXX

Act                       put                       leave                   want

நடி ————வை —————–விட்டுவிடு——- வேண்டும்

XXXXXX

Show                   happen                gather                  drink

காட்டு ————நடக்கிறது ——–சேகரி ————குடி

XXXXXX

Smoke                 say                       fight                     enjoy

புகைபிடி /சிகரெட் குடி சொல் சண்டை போடு அனுபவி

XXXXXXX

Draw                    jump                    throw                   catch

இழு —————குதி ——————–எறி —————பிடி

XXXXXX

Greet                   fly                         crawl                    swim

வாழ்த்து ——–பற — ஊர்ந்து போ /செல் ——  —நீந்து

XXXXXX

TO BE CONTINUED…………………………

Tamil Hindu Encyclopaedia- 46; சூரர மகளிர்‌ Dance by the Possessed woman (Post No.11,657)

Nymph Images from England

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,657

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Dance by Possessed women is also described in Sangam Tamil literature. If one is possessed by a nymph or a divine spirit, then the person jumps up and down and dance. Tamils describe it as Saami Aadal சாமி ஆடல் (Divine dance). Poets compare it to the running and jumping cows ; Puram.259 composed by Kodai Paadiya Bhutanaar, compares the cows gambolling, bouncing and jumping to a low caste woman possessed by Muruga.

‘முருகுமெய்ப்பட்ட புலைத்தி போல, தாவுபு தெறிக்கும்‌.

ஆன்‌! (புற. 259:5-6)

We see it also in Kurunthokai 52-2 . ‘சூர்‌ நசைந்தனையைய: நடுங்கல்‌-கண்டே’ (குறுந்‌:52:2)

Any one possessed by Suur will shiver and shake. Not only humans but also animals are possessed by divine spirits. The peacocks had eaten the offerings given to Gods by mistake and they started dancing like a possessed woman according to a verse in Kurunthokai

“சூர்‌ உறு மஞ்ஞை யின்‌ நடுங்க! (Kurinji குறிஞ்சி.169)

‘புனவன்‌ துடவைப்‌ பொன்போல்‌ சிறுதினைக்‌

கடி உண்‌ கடவுட்கு இட்ட செழு ங்குரல்‌.

அறியாது உண்ட  மஞ்ஞை  ஆடுமகள்‌

வெறிஉறு வனப்பின்‌ வெய்துற்று, நடுங்கும்‌

சூர்மலை நாடன்‌’ (Kurun. குறுந்‌.105: 1-5)

Xxxx

Gods in Musical Instruments and Breasts of Women

Tamils believed that nymphs live in the breasts of women, Lyre or Yaaz, Drums etc.

In general nymphs are feminine; but in a few places Tamils use it for male spirits as well. In Sanskrit we see Apsaras and Yakshas- female and male. Yakshi woman is also there. Poru. Poet says the nymph is in Yaaz- Lyre

மணம்‌ கமழ்‌ மாதரை மண்ணியன்ன

அணங்கு மெய் ந்‌ நின்ற அமைவரு காட்சி,

ஆறு அலை கள்வர்‌ படை விட அருளின்‌.

மாறு தலை பெயர்க்கும்‌ மருவு இன்‌ மாலை’ (Poruபொருந.19-22)

Nachchinarkiniyar, the most famous commentator of Sangam Tamil literature gives more information in his commentary on Post Sangam Tamil epic Seevaka Chintamani. Such Gods or Nymphs are known as Maathangi (another name of Sarasvati).

In fact, Tamils worship all musical instruments and books as Divine. They place all such things in front of Goddess Sarasvati during Navaratri and worship them.  They never touch the books or musical instruments with their feet. It is considered disrespect or contempt to God.

Xxx

Nymph on Breast

The strangest thing about Tamil Hindus is that they see nymphs on woman’s breast. Poems in Akam and Natrinai  refer to it.

சுணங்கு சூழ்‌ ஆகத்து அணங்கு என உருத்த

நல்வரல்‌ இளமுலை. (அகம்‌.161:12-13 Akam)

,பொரிப்‌ பூம்‌ புன்கின்‌ அழற்தகை ஒண்முறி,

சுணங்கு அணி வனமுலை அணங்கு கொளத்‌ திமிரி. (Natri.நற்‌.9.5-6),

Xxxx

Swords given by  Goddess Bhavani

We know from Hindu history that several great heroes of India such as Veera Shivaji, Kumara Kampanna received their Victorious Sword from Goddess Bhavani. Hindus consider even weapons as Gods. They do Ayudha Puja (Weapon Worship)  on Sarasvati Puja day or Vijaya Dasami day. We see such ceremonies today in Mysore Dasara. Chamundeeswary is worshipped with all paraphernalia before the Great Dasara/ Vijaya Dasami procession.

Kali.verse refers to nymphs in weapons:–

அரவின்‌ பொறியும்‌ அணங்கும்‌ புணர்ந்த

உரவு வில்மேல்‌ அசைத்த கையை’ (Kali கலி.50:6-7)

Tamils showed the same respect to weapons and poets praise nymph residing weapons . A king’s drum was also given great respect. It was decorated like Gods and Goddesses. It was given a special raised seat. On the days of Expedition, they were taken first at an auspicious time. And not all the people can possess drums. Only the three great Tamil Kings Chera, Choza, Pandya can have it.

Here are some references to War Drums and the Puja done to it.

“மாசு அற விசித்த வார்புறு வள்பின்‌

மை படு மருங்குப்‌ பொலிய. மஞ்ஞை

ஒலி நெடும்‌ பீலி ஒண்‌ பொறி மணித்தார்‌,

பொலங்குழை உழிஞையெகடு பொலியச்‌ சூட்டி

குருதி வேட்கை உருகெழு  முரசம் 

மண்ணிவாரா அளவை . (Puramபுற 50. 1- 6 )

Greatest poet of modern Tamil Literature Bharatiyar’s poem on Shivaji begins with hail Bhavani, Hail Bhavani; it shows that weapons should be used against the bad people.

சிலைத்‌ தார்  முரசம்‌ கறங்க.

மலைத்தனை! (புறம்‌ 50 1.6 Puram)

பலி பெ று முரசம்‌ பாசறைச்  சிலைப் ப’ (புறம்‌ 362 Puram)

வாள் மின்  ஆக. வயங்கு கடிப்பு அமைந்த

குருதிப்‌ பலிய முரசு முழக்கு ஆக” (புற 369 4-5 Puram)

Xxxx

Following Pathitrupathu passage gives detailed description of Puja done to Drum in the Palace of a Chera King

பணைகெழு வேந்தரும்‌ வேளிரும்‌, ஒன்று மொழிந்து,

கடலவும்‌ காட்டவும்‌ அரண்‌ வலியார்‌ நடுங்க.

முரண்  மிகு கடுங்குரல்‌ விசு ம்பு அடைபு அதிர,

சடுஞ்சினம்‌ கடாஅய்‌. முழங்கும்‌ மந்திரத்து

அருந்திறல்‌ மரபின்‌ கடவுட்‌ பேணியர்‌,

உயர்ந் தோள்‌ ஏந்திய அரும்பெறற்‌ பிண்டம்‌.

கருங்கட்‌ பேய்மகள்‌ கைபுடையூ நடுங்க…

நெய்த்தோஈ தூ உ ய நிறைமகிழ்‌ இரும்பலி,

எறும்பும்‌ மூசா இறும்பூது மரபின்‌;

கருங்கட்  காக்கையொடு பருத்து இருந்து ஆர.

ஓடாப்‌ பூட்கை, ஒண்‌ பொறிக்‌ கழற்‌ கால்‌.

பெருஞ்‌ சமம்‌ ததைந்த, செருப்புகல்‌, மறவர்‌

உருமு  நிலன்‌ அதிர்ககும்‌ குரலொடு, கொளைபுணர்ந்து,

பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்

கடுஞ்சின வேந்தே !- நின் தழங்கு குரல் முரசே

–பதிற்றுப்பத்து 30-30 – 44

As soon as the sound from the Palace Drum is heard, the enemy kings were scared. The person who is doing Drum Worship utter the Mantras in harsh tone. He offered blood and wine to the god of the drum. Even the female ghosts and ants were afraid to come to eat such offering. Crows and falcons only ate them. The drum is played to celebrate the Big Feast offered to victorious soldiers.

Xxxx

There’s another interesting Anecdote in Purananuru verse 50 . One poet by name Mosi Keeranar reached the palace of the Chera/Kerala  King Thagadur Erintha Peruncheral Irumporai. The poet was dead tired after a long walk. So he thought that he should take some rest before getting audience with the king. He saw a beautiful cot with silk cloth spread over it. That was the base for the drum. The officials took the drum outside for bathing/washing and cleaning it. Without realising it the poet lied on it and slept.  It was reported to the king. He rushed out with his  drawn sword to kill the enemy of the country who insulted his drum. When he realised  that it was a tired poet, he calmed down started fanning him with royal fans so that the poet feels more comfortable. When the port suddenly woke up, he was shocked and surprised to see the king fanning him. Later he realised his mistake and praised the king with a poem. He says that he escaped the death sentence due to the love and affection of the king.

குருதி வேட்கை உருகெழு முரசம்‌

மன்னி வாரா அளவை , எணணெய் 

நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை

அறியாது ஏறிய என்னைத்‌ தெறுவர

இருபாற்  படுக்கும்‌ நின்‌ வாள்வாய்‌ ஒழித்ததை.

அதூ உம்‌ சாலும்‌. நல்‌ தமிழ்‌ முழுது அறிதல்‌,

அதனொடும்‌ அமையாது, அணுக வந்து, நின்‌:

மதனுடை முழவுத தோள்‌ ஓச்சி, தண்ணென

வீசியோயே  (புற Puram 50 5-13)

To be continued……………………………..

Tags- Tamil Drums, Tamil breast, Nymphs, Musical instruments, Possessed, dance, women of low caste, Drum anecdote, Mosi Keeranar, Chera king

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 7 (Post.11,543-part7)  


WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 7

Date uploaded in London – 11 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 23 

மாரிகாலத்தில் மலைக்குகையில் நிலையாய் துயின்ற

சீரிய சிங்கம் தீப்பொறி தெறித்த கண்கள் திறக்க

சுற்றும் முற்றும் சிலுப்பி உலுக்கிய உடலும் பிடரியுமாய்

குகைவாயிலில் கர்சித்து வெளித்தோன்றியது போல்

காயாம்பூவையொத்த நிறத்தோனே! நின் கோயில்

வாய் மணிமண்டத்தில் அரிதான அரியணை அமர்ந்த

நீர்! நிர்கதியாய் குழுமியோர்கள் வந்த காரியம்

கேட்டருள ஆயருக்காக வேண்டிய ஆயிழை வாழியே

தேனினுமினிய சொல்லில் வல்லாள்

தெளி நீர் தாமரை முகத்தாள்

விழியிலும் மொழியிலும் வைத்தாள்

ஊழி முதல்வனை தன்னுள்ளும் வைத்தாள்

எழிலோன் மகிழ்ந்தானோ இம்மங்கையின்

மொழி வளமும் பொருளும் பொருந்திய

பாசுரங்கள் வேதத்திற்கிணையாக, பாரோர்

போற்றுவரே கோதையின் இந்த கீதையை

திருப்பாவையென 

நாராயணன்

Xxx

மார்கழித்திங்கள் 24

முன்னொரு காலம் மூன்றடி நிலமிரந்து

மூவுலகமளந்தானைப் போற்றி

முந்திய அவதாரத்தில் தென்னிலங்கைக்

கோமானை வதைத்தோனைப் போற்றி

பொய்யுருவில் சகடமாய் வந்த பகட

அசுரனை வதைத்த பாதத்தைப் போற்றி

கன்று வடிவில் வந்த அசுரனைக்

கைத்தடியாகப் பற்றி தரு உருவாய்

நின்ற மாற்றான் மீதெரிந்திருவரையும்

கொன்றவன் தாள் போற்றிக்  குடையாய்

குன்றைப் பிடித்து குலத்தோரைக் காத்த

குணசீலனைப் போற்றிப் பகைவர் கை

வேல் பறித்து வென்றோனைப் போற்றி

என்றுமே  தங்கள் வீர,சூர,தீர ரூபத்தை

நின்று துதித்தனுபவிக்க கூடிய குலத்தோர்

கோரிக்கையை கோவிந்தன் முன் வைத்த

கோதை வாழியே.

பாடிய பாசுரமெல்லாம் பரமன் பல பேராக

மூடிய கண்கள் முன் தேடிய முகுந்தன் தோன்றி

நாடியவன் அவள் நாடியிலும் நாரணன் நாமம்

துடிக்கக் கேட்டுப் பல கோடி நூராயிரம் ஆண்டு

கூடி அடியாளிவளுடன் குடும்பம் ஓம்பிட அவள்

சூடிய மாலை வாடிடினும் எம் தோளிணைந்திட

பீடுடைய பெருமாளாவேனே!

 நாராயணன்

xxx

மார்கழித்திங்கள் 25

ஒருத்தி மடியினின்று விழுந்த இரவே வேறு

ஒருத்தி மார்பு தழுவி ஒளிந்து வளர உற்ற

பகையோன் பெற்ற தாய் மாமனேயாகி

விடுத்த எதிரிகளை அடுத்தடுத்து வீழ்த்திட

எஞ்சிய மாமன் கஞ்சன் வயிற்றில் தீயாய்

எரிந்த அஞ்சனவண்ணனே! தேடியுமதடி கூடிய

அடியார்கள் திருவுடையாள் ஓம்பும் செல்வமும்

உன் வீர சரிதங்களைப்பாடி வருத்தம் நீங்கி

ஆனந்த நிலையடைய விரும்புவதாக

முறையிட்ட தரை மங்கை வாழியே

மறையுள்ளுறையும் மாயவனே

சிறையுள் பிறந்தும் தூயவனே

குறையொன்றில்லாத கோவிந்தனே

நிறைவாய் எதிலும் நிற்பவனே

முறையான முதல்வனான முகுந்தனே

தரை சேர்ந்து தரணியோரைக் காத்தவனே

அன்று ஆய்ச்சியரோடு உறவாடியவனே

கன்றோட்டி அவரோடு கூடிக் களித்தவனே

குன்றைக் குடையாய் ஏந்தியவனே

குலத்தாரை கோகுலத்தில் காத்தவனே

எப்பொழுதும் ஓரிள நங்கையுன் நினவினிலே

முப்பொழுதும் உன் திரு நாமமவள் மூச்சினிலே

முப்பதுப் பாசுரமாய் தொகுத்தப் பாமாலையிலே

முகில் வண்ணனின் பூ மாலையாய் மார்கழியினிலே

பாவையின் பக்திக்கு பரமனடிமையானதாலே

பாரோர் போற்றிப் பணியும் ஆண்டளானாளே   

நாராயணன்

xxxx

மார்கழித்திங்கள் 26

ஆலிலையில் பள்ளிக்கிட ந்து பிரளய காலத்தில்

அகிலம் காத்த அன்பே வடிவான நீல மணிவண்ணனே!

அதிகாலை நீராடி மார்கழி நோன்பு காக்க அறவோர்

அனுட்டித்த முறை படியும்மைப் பள்ளி எழுப்பப் பால்

போன்ற வண்ணத்துன் பாஞ்சசன்னியமீடான சங்கும்,

பெரிய முரசும்,பல்லாண்டிசைப்பரும், மங்கள தீபமும்

பிடிக்கக் கொடியும் மேல் படர்ந்த விதானமும் கேட்கும்

அடியார்க்கு அளித்தருள வேண்டிய கோதை வாழியே

 அதி காலை உன் சன்னிதி வாயிலில் நின்று 

அடி வானம் சிவக்கும் முன் நீவீர் பள்ளி எழ

ஆன்றோர் வகுத்த முறையிலே முழங்க

சங்கும் அறைய பறையும், பல்லாண்டு

இசைப்பாரும் , கொடியும் விதானமும்

இரந்து கேட்ட அடியார்க்கு தேவையற்றதோ

இவையெலாம் திருப்பாவையொன்றே போதும்

பள்ளியவரெழ திரு வைகுந்தத்திலும் ஒலிக்கும்

பட்டர்பிரான் கோதை மொழிந்த சங்கத்தமிழ்

மாலை முப்பதும் முத்தாரமாக அவளும்

அவருக்குகந்த முத்தாரமாயானாளே

நாராயணன்

Xxxx

மார்கழித்திங்கள் 27

ஆதிபுருடனையணுகா அவனை வெறுப்பவரையும்

ஆட்கோண்டு வெல்லும் தேசுடையோன் புகழ் பாடி

அருள் பெற்ற அடியார் கள் மேலும் விரும்பிய பரிசுகளாக

அணியும் ஆபரணங்களாய் தோள்வளையும், கம்மலும்

கர்ணப்பூவும் கால் சிலம்பும் உடுக்கப் புத்தாடையும்

பெருகும் நெய் கசியும் பாற்சோறும் பெற்று அவனோடு

கூடிய குடும்பியாய் கொண்டாடி குலத்தோரோங்க ஆதி

புருடனான கோவிந்தனை வேண்டிய கோதை வாழியே

நாராயணன்

கூட வாழ்வோருடன் மார்கழி நோன்பு காத்து

கோவிந்தன் அருள் பெற வீடு வீடாய் சென்று

குலத்தோர்களைக் கூட்டி வைத்து எட்டாத

குலசேகரன் படி வாயில் நின்று கிட்டாத

குணசேகரன் கீர்த்திமைப் பாடிக் கட்டிய

பாமாலையில் பைய்த்துயின்ற பரமனெழுந்து

பாவையர் வந்த காரியம் ஆராய்ந்தருள

பன்னோருடன் பரமனனுபவம் பகிர்ந்த

பட்டர் பிரான் கோதை வாழியே

 நாராயணன்

To be continued………………………..

ஆட்டுப்பால் ஆகாது; முருங்கைக்காயும் ஆகாது என்கிறார் அம்பலவாணர் (Post.11,656)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,656

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

65. உணவில் விலக்கு

அம்பலவாணர் எழுதிய அறப்பளீசுர சதகத்தில் மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக்கொள்வோம்.

முதல் பாடலில் விலக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்ன என்று சொல்கிறார்.

எந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சொன்னவர் காரணத்தை விளம்பவில்லை. இவை பழைய நூலில் உள்ளவை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார். விளக்கில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது, பழைய, கெட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் மஹாத்மா காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பாலை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் ? என்று தெரியவில்லை. வெங்காயம், உள்ளிப்பூண்டு , முருங்கைக் காய், காளான் முதலியவற்றை ஆன்மீக நாட்டம் உடையோர் சேர்ப்பதில்லை ; வேறு சில காய்களையும் விலக்கியமைக்கு நமக்கு விளக்கம் தேவைப்படுகிறது

Xxx

இரண்டாம்  பாடலில் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குற்றங்களை சொல்கிறார்

கங்கை நதிக்கு வெள்ளப்பெருக்கின்போது வரும் நுரை குற்றம்.

நிலவுக்கு அதிலுள்ள களங்கம் குற்றம் ;

தவ சீலர்களுக்கு கோபமே குற்றம் ; உடனே நமக்கு  துர்வாசர் நினைப்பு வருகிறது. கோபத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றி முன்னரே சதகத்தில் கண்டோம். .குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)

பேரரசர்கள் ஆராயாமல் முடிவு செய்வது மன்னர்களின் தோஷம். உடனே நமக்கு கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் நினைவுக்கு வரும்

xxxx

விஷம்- விடம் , பாஷை- பாடை என்று  ஆவது போல தோஷம் என்ற சொல்  தோடம் ஆகியுள்ளது.

xxxxxx

கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,

செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை வெல்லம் லாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,

எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்

ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்

அமலனே – ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்

தூயவனே!, அருமை ……. தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் –

விலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் – ஆட்டுப்பாலும், வரும் கார் ஆகறந்த வெண்பால் – வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு,

செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம்,

மலாவகம் – பிண்ணாக்கும், சீர்இலா வெள் உள்ளி – சிறப்பில்லாத

வெள்ளைப் பூண்டு, ஈர்உள்ளி – (சிறப்பில்லாத) வெங்காயமும், இங்குவொடு

– பெருங்காயத்துடன், சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் – சிறப்பில்லாத

வெள்ளைக் கத்தரிக்காயும், எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் –

குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட

பொருளும், கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் – சூரியன் ஒளியும்,

விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், இவை யெலாம் சீலம்

உடையோர்க்கு ஆகா – இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை,

எனப் பழைய நூல் உரைசெயும் – என்று பழைமையான நூல்கள் கூறும்.

Xxxx

PLEASE READ MY OLD ARTICLE ABOUT FOOD TABOOS

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு …

https://tamilandvedas.com › வெ…

27 Oct 2018 — அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் …

    66. நற்பொருளிற் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்

     பேனமே தோட மாகும்!

  பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே

     பெரிதான தோட மாகும்!

சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற

     சீற்றமே தோட மாகும்!

  தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று

     செய்வதவர் மேல்தோ டமாம்!

தாராள மாமிகத் தந்துளோர் தாராமை

     தான்இரப் போர்தோ டமாம்!

  சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்

     தாலம்செய் தோட மாகும்!

ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும் அண்ணலே

– ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத

பெரியோனே!, அருமை ……. தேவனே!.

பேரான கங்கா நதிக்கும் அதன்மேல்

வரும் பேனமே தோடம் ஆகும் – புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், பெருகிவளர் வெண்மதிக்கு

உள்உள் களங்கமே பெரிதுஆன தோடம் ஆகும் – மிக வளர்ச்சியுடைய

வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம்

எனப்படும், சீர்ஆம் தபோதனர்க்கு ஒருவர்மேல் வருகின்ற சீற்றமே தோடம்

ஆகும் – கீர்த்திமிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே

குற்றம் எனப்படும், தீதுஇல் முடிமன்னர் விசாரித்திடாது ஒன்று செய்வது

அவர் தோடம் ஆகும் – குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச்

செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், தாராளமா மிகத்தந்து உளோர்

தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் – அளவின்றி (முன்)

கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம்

எனப்படும், சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம்செய்

தோடம் ஆகும் – சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது

(பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்..

–subham–

 tags–உணவில் விலக்கு,அம்பலவாணர் , அறப்பளீசுர சதகம், ஆட்டுப்பால், முருங்கை , காளான் , வெங்காயம், பூண்டு , கூடாது , ஆகாது 

கடத்தப்பட்ட 32,000 கேரளப் பெண்கள் – ஒரு சோகக் கதை! (Post No.11,655)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,655

Date uploaded in London –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கடத்தப்பட்ட 32000 கேரளப் பெண்கள் – ஒரு சோகக் கதை!

ச.நாகராஜன்

எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். ஒரு நர்சாக ஆகி மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

இப்போது நான் பாதிமா பா. ஆப்கானிஸ்தானத்தில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.

நான் மட்டும் இப்படி இல்லை.

32000 பெண்கள் என்னப்போலவே மதம் மாற்றப்பட்டு, சிரியா, யேமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு கோரமான விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – கேரளாவில் சாதாரணப் பெண்களை மதம் மாற்றி தீவிரவாதிகளாக ஆக்குவது வெளிப்படையாகவே நடைபெறுகிறது.

அவர்களைத் தடுத்து நிறுத்த யாருமே இல்லையா?

இது தான் எனது கதை!

இன்னும் 32000 பெண்களின் கதை!

இப்படிச் சொல்வது யார் தெரியுமா? எங்கு தெரியுமா?

ஒரு திரைப்பட முன்னோட்டத்தில்.

திரைப்படத்தின் பெயர் :- தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)

திரைப்படத்தில் ஷாலினியாகத் தோன்றும் அடா ஷர்மா இப்படி  முன்னோட்டத்தில் கூறி அனைவரையும் திகைக்க வைக்கிறார்.

ஆதி சங்கரரின் ஜன்ம பூமியில் இப்படி ஒரு அவலம் என்பதை நினைத்தாலே மனம் திகைக்கிறது.

ஹிந்துப் பெண்மணிகளை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைத் தீவிரவாதிகளாக ஆக்குவதை கம்யூனிஸ அரசு கண்டுகொள்வதே இல்லை என்பது கூடுதல் செய்தி.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் The Kerala Story அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இந்தப் படத்தை இயக்கியவர் – விபுல் அம்ருத்லால் ஷா.

இந்திய திரைப்பட உலகில் குறிப்பிடத் தகுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் 2022 நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

முன்னோட்டத்தின் நேரம் சுமார் ஒன்றரை நிமிடம்.

இதைப் பார்த்தவுடன் பொங்கியது காங்கிரஸ்.

இதைத் தடை செய்ய வேண்டும் என்றது.

கேரள போலீஸ் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருக்கிறது.

32000 என்ற எண்ணிக்கை தவறு என்று கூறினர் சிலர்.

ஆனால் படத் தயாரிப்பைச் சேர்ந்தவர்களோ இது சரி தான், இதற்கான சரியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்கின்றனர்.

இந்த எண் என்னுடையது அல்ல. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த தகவல் இது. உமன் சாண்டி கேரள முதல் மந்திரியாக இருந்த போது அவரே அசெம்பிளியில் இதைக் கூறி இருக்கிறார். இதற்கான சரியான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

இது தயாரிப்பு பக்கத்திலிருந்து வந்த செய்தி.

மூலம் ஆங்கிலத்தில் :-

This figure (32,000) is not mine. It was a piece of news in The Times of India… one thing I can tell you is that Oommen Chandy, the (then) chief minister of Kerala, had placed this number in the state assembly. So this is not my number, I have got all the documents with me,” he was quoted as saying by Alt News.

12 ஆண்டுகளில் 32000 பெண்கள் இப்படி மதம் மாற்றப்பட்டுள்ளனராம்!

படத்தைப் பார்த்து உண்மைகளைக் கண்டறிந்து மத்திய அரசு ஷாலினிகளின் உண்மை நிலவரங்களைக் கண்டறிய வேண்டும்.

இனியும் ஷாலினிகள் பாத்திமாக்களாக வலுக் கட்டாயமாக ஆக்கப்படக் கூடாது.

இதில் இருவித கருத்துக்களே இருக்க முடியாது!

2023 ஆம் வெளியீடு என்று எதிர்பார்க்கப்படும் கேரளா ஸ்டோரி வருமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

***

Tags- Kerala story, film, கடத்தப்பட்ட, 32000, கேரளப் பெண்கள் ,  சோகக் கதை

நல்ல,  கெட்ட சகுனங்கள்! அம்பலவாணர் தரும் நீண்ட பட்டியல் (Post.11,654) 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,654

Date uploaded in London – –  10 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எந்த நாளில் புத்தாடை அணியலாம் என்று அம்பலவாணர், முதல் பாட்டில் சொல்கிறார் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புத்தாடைகளை  அணிக!  என்கிறார்.

பின்னர் 3 பாடல்களில் சகுனங்கள் பற்றிப் பாடி, ஒரு பெரிய லிஸ்ட்-ஐ நமக்கு விட்டுச் சென்றுள்ளார் அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பல வாணக்  கவிராயர் .

நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் யாரவது புதுச் சட்டை போட்டுக்கொண்டு வந்தால் கோடிக் கிள்ளு என்று சொல்லி அந்தப் பையனைக் கிள்ளுவோம். அவ்வாறு நானும் கோடி உடுத்திய நாட்களில் கிள்ளு வாங்கியிருக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை

xxxx

மூன்று பாடல்களில் அவர் சகுனம் பற்றிப் பாடியதிலிருந்து அதில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி  கூட சகுனம் பார்த்ததாக உள்ளது

சகுன சாஸ்திரம் பற்றிய குறிப்புகள் தமிழில் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதைப் போல சம்ஸ்க்ருதத்தில் கூட காணமுடியாது. ஸம்ஸ்க்ருதத்தில் அதற்காகவே உள்ள தனி நூலை விட்டுவிட்டால் பொதுவாக ராமாயணம், மஹாபாரதம், காளிதாசன் காவியங்கள் போன்ற நூல்களில் அங்குமிங்கும் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. ஆயினும்  தமிழில் சங்க நூல்கள் என்ற  18 மேல்கணக்கு நூல்களிலும் காணப்படும் சகுனக் குறிப்புகளைப் போல ஒரே இடத்தில், வேறு எங்கும் காண முடியாது. 

தொல்காப்பியம் துவங்கி சங்க நூல்கள் 18-லும் சுமார் 25 இடங்களுக்கு மேல் சகுனக் குறிப்புகள் இருக்கின்றன. சங்க நூல்களான பத்து ப்பாட்டுக்கும் எட்டுத் தொகைக்கும் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் மேலும் பல குறிப்புகள் உள்ளன. சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியும் அறப்பளீசுர சதகம் போல நீண்ட சகுனப் பட்டியலைத்  தருகிறது ; திருக்குறளில் தும்மல் சாஸ்திரம் வருகிறது. தமிழ்ப் பழமொழிகளில் நிறைய சகுன சாஸ்திரக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. கம்பராமாயணத்தில் இன்னும் அதிகமாகக் கிடைக்கின்றன

நரி இடமாகப் போனால் என்ன, வலமாகப் போனால் என்ன,, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும்

ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி  (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –இப்படி நிறைய உள்ளன.

தொல்காப்பியத்தில் தலைவனுக்கு பிறந்த நாள் அடிப்படையில் ஜாதகம் கணித்து வருங்காலம் உரைப்பது  இளம்பூரணர் உரையால் நமக்குத் தெரியவருகிறது . அதில் பறவை சாஸ்திரம் ‘புள்’ என்று சொல்லப்பட்டுள்ளது ஆனந்த விகடன் அகராதி நிமித்தம், நிமித்திகன் என்ற சொற்களுக்கு சோதிட அடிப்படையில் பொருள் கூறுகிறது. சகுனம், நிமித்தம் என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். தமிழில் விரிச்சி, குறி சொல்லுதல் நல்ல நேரம், இடை  அறிதல் , செவ்வியறிதல் என்ற சொற்களில் இதைக் காண்கிறோம். தும்மல், கண் துடிப்பு ஆகிய தனிச் சொற்களும் சகுனத்தைக் காட்டும்.

சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில்  பயணம் செய்யக்கூடாத திசைகளை வாரசூலம் என்ற பாடல்களில் காணலாம் அப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம்/ தானம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளது. திருமூலர் திருமந்திரத்திலும் வாரசூலை உள்ளது. இதோ தொல்காப்பியக் குறிப்பு

அச்சமும் உவகையும் எச்சமி ன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

-தொல் . புற .30

அச்சமாவது தீமை வரும் என்று அஞ்சுதல் , உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல் ; நாளாவது நன்னாள், தீய நாள் ; காலம் கண்ணுதலாவது வருங்காலம் குறித்தல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார்

நல்ல சகுனங்கள் என்ன?

           62. சகுனம் – 1

முதல் பாடலில் எந்த எந்த பிராணிகள் வலமிருந்து இடமாகச் சென்றால் நல்லது என்று நீண்ட பிராணிகள் பட்டியல்  தருகிறார். பலரும் பயப்படும் ஆந்தை, பூனை கூட குறுக்கே போகலாம். ஆனால் வலதா இடதா என்பது முக்கியம். அவை மேலே இடிக்கக்கூடாது , கைகால்களில் அகப்படக்கூடாது, தும்மல் இருமல் போடக்கூடாது அவை எல்லாம் நல்ல தல்ல என்கிறார் அமபலவாணர்.

XXX

               63. சகுனம் – 2 

சகுனம் பற்றிய இரண்டாவது பாடலிலும் எந்த பிராணிகள் வலமாக வந்தால் நல்லது என்று சொல்கிறார். இறுதியில் என்ன என்ன ஒலிகள் காதில் விழுந்தால் நல்லது என்றும் ஒரு பட்டியல் கொடுக்கிறார்.

xxxx

கெட்ட சகுனங்கள் என்ன ?

              64. சகுனம் – 3 

சகுனம் பற்றிய மூன்றாவது பாடலில் தலைவிரி கோலமாக வருவோர், ஒரு பிராமணன் வருதல் முதலியன கெட்ட சகுனம், இரட்டை பிராமணர், அழகிய சுமங்கலிகள் , வண்ணான் , பால்குடம் முதலியன நல்ல சகுனம்  என்பார்.

வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் சகுனங்கள் பற்றிப் பாடியுள்ளார்

  சகுனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பறவை என்று பொருள்; பறவைகள் பறப்பதை ஒட்டி எழுந்த சாஸ்திரம் சகுன சாஸ்திரம் ஆகும். பஞ்சாங்கத்தில்  இன்றும் கூட பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆகியன பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

ரிக் வேத காலம் முதல் சகுன சாஸ்திரம் இருந்து வருகிறது

xxx

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்

https://tamilandvedas.com › சகு…

 19 Apr 2015 — காகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதைக் …

ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஜ…

 16 Mar 2021 — 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரரும் ஆருடம் பற்றி எழுதியுள்ளார்.

தமிழர் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › த…

 3 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், …

அறப்பளீசுர சதகம்  61. கோடி உடுக்கும் நாள்

கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்

     கட்டலாம் புதிய சீலை;

  கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்

     கடிதுநனை வுற்றொ ழிதரும்;

குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய

     குருதிவா ரந்த னக்கு;

  கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;

     குருவார மதில ணிந்தால்,

மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை

     வரும்; இனிய சுக்கி ரற்கோ

  வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு

     வாழ்வுபோம், மரணம் உண்டாம்;

அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்

     கமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அறைகின்ற வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே

– கூறப்படுகின்ற மறைவடிவாகவும் ஆகமவடிவாகவும் விளங்கும் தூயவனே!,

அருமை ………. தேவனே!, ஆதிவாரந்தனிற் புதியசீலை கட்டலாம் –

ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடை உடுக்கலாம். (அவ்வாறு உடுத்தால்)

கறைபடாது ஒளிசேரும் – (ஆடையிற்) கறை பிடிக்காதுதூயதாக ஒளிதரும்,

கலைமதிக்கு ஆகாது – கலைகளையுடைய திங்களுக்குத் தகாது,

(கட்டினால்), பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் – பல

முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோம், அரிய குருதிவாரம்தனக்குக் குறைபடாது இடர்வரும் வீரியம் போம் – நன்மைக்கு ஆகாதசெவ்வாய்க்கிழமையில் மிகுந்த துன்பம் உண்டாகும; ஆண்மையும் நீங்கும்,புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் – புதன்கிழமையிற்சிலநாளிலே கிழிந்துவிடும்வெற்றியும் நீங்கும், குருவாரமதில் அணிந்தால்

மறைபடாத அழகு உண்டு;மேன்மேலும் நல்லஆடை வரும் –

வியாழக்கிழமைகளில் உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும்மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், சுக்கிரற்கோ வாழ்வு உண்டு

திருஉண்டு – வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும்

உண்டாகும், பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் – தீய

சனிக்கிழமையில் உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.

xxxx

           62. சகுனம் – 1

சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு

     சூகரம் கீரி கலைமான்

  துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை

     சொற்பெருக மருவும் ஆந்தை

வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

     விளங்கும்இரு நா உடும்பு

  மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்

     வெற்றியுண் டதிக நலம்ஆம்;

ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,

     ஒருதுடை யிருத்தல், பற்றல்,

  ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன

     உபசுருதி சொல்இ வையெலாம்

அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

  (இ-ள்.) முதியோர் பரவும் அமலனே – பெரியோர்கள் வாழ்த்துகின்ற

தூயவனே!, அருமை ……. தேவனே!, சொல்அரிய கருடன் – சொல்லுதற்கு

அரிய கருடனும், வானரம் – குரங்கும், அரவம் – பாம்பும், மூஞ்சூறு –

மூஞ்சுறும், சூகரம் – பன்றியும், கீரி – கீரியும், கலைமான் – கலைமானும்,

துய்ய பாரத்வாசம் – தூயதான கரிக்குருவியும், அட்டை – அட்டையும், எலி

– எலியும், புன்கூகை – இழிந்த கோட்டானும், சொல்பெருக மருவும் ஆந்தை

– மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்அரிய கரடி – வெல்லமுடியாத

கரடியும், காட்டு ஆன் – காட்டுப் பசுவும், பூனை – பூனையும், புலி – புலியும்

மேல்விளங்கும் இருநா உடும்பு – மேலாக விளங்கும் இருநாவையுடைய

உடும்பும், மிக உரைசெய் இவையெலாம் – (என) மிகுதியாகக் கூறப்படும்

இவை யாவும், வலம் இருந்து இடம்ஆகில் வெற்றி உண்டு அதிக நலம்ஆம்

– வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றியுண்டாகும்; மிகுதியான

நலமும் உண்டாகும், ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல்

– விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், ஒருதுடை

யிருத்தல் – ஒருகாலில் நிற்றல், பற்றல் – வந்து கையைப் பிடித்தல், ஒரு

தும்மம் – ஒற்றைத் தும்மல், ஆணையிடல் – ஆணையிடுதல், இருமல் – இருமுதல், போகேல் என்ன உபசுருதி சொல் – போகாதே என்று காதில்

விழும்படி கூறுதல், இவை எல்லாம் அல்லல் தரும் – இவை யாவும் துன்பமே

தரும், நல்ல அல என்பர் – நல்லன அல்ல என்பர்.

               63. சகுனம் – 2

நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

     நாவிசிக் சிலியோந் திதான்

  நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

     நாடரிய சுரபி மறையோர்

வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்

     வழிப்பயணம் ஆகை நன்றாம்;

  மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,

     வாய்ச்சொல்வா வாவென் றிடல்,

தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு

     தப்பட்டை ஒலிவல் வேட்டு

  தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

     தனக்கேக நன்மை யென்பர்!

அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருணகிரண உதயம் தருண பானுவை அனைய அண்ணலே

– சிவந்த கதிர்களையுடைய காலையிள ஞாயிறு போன்ற பெரியோனே!,

அருமை ……. தேவனே!, நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு

காக்கை நாவி சிச்சிலி ஓந்திதான் – நரியும் மயிலும் பச்சைக்கிளியும்

கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும், ஓணானும், நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி நாட அரிய சுரபி

மறையோர் – வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும்

சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், வரி உழுவை முயல்இவைஅனைத்தும் – வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் வலமாயிடின்

வழிப்பயணம் ஆகை நன்றுஆம் – வலமாக வந்தால் வழிச்செலவு

நன்மைதரும், மற்றும் – மேலும், இவை அன்றியே – இவையல்லாமலும்,

குதிரை அனுமானித்தல் – குதிரை கனைத்தலும், வாய்ச்சொல் வாவா

என்றிடல் – வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும்,

தருவளை தொனித்திடுதல் – கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், கொம்பு

கிடுமுடி முரசு தப்பட்டை ஒலி – கொம்பும் கிடுமுடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் வல்வேட்டு

தனிமணி முழக்கு எழுதல் – விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல

வாத்தியம் முழங்குதலும், இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை

என்பர் – இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.

              64. சகுனம் – 3

தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,

     தவசி, சந்நாசி, தட்டான்,

  தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,

     தட்டைமுடி, மொட்டைத் தலை,

கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

     கதித்ததில தைலம், இவைகள்

  காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,

     கனி, புலால் உபய மறையோர்

நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை

     நாளும்வண் ணான்அ ழுக்கு

  நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்

     நாடியெதிர் வரநன் மையாம்;

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

     அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் – அலையையுடையகங்கையை அணிந்த சடையனே!, பரசு அணியும் அண்ணலே – மழு ஏந்திய

பெரியோனே!, அருமை ……. தேவனே!, தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப்

பிராமணன் தவசி சந்நாசி தட்டான் – தலைவிரி கோலமாக ஒருவர்

எதிர்வருதலும்ஒற்றைப் பார்ப்பானும்தவம்

புரிவோனும்துறவியும்தட்டானும், தனம்இலா வெறுமார்பி மூக்கறை புல்

விறகுதலை தட்டைமுடி மொட்டைத் தலை – தனம் இல்லாத மார்பினளும்,

மூக்கில்லாதவனும்புல்தலையனும்விறகுதலையனும்சப்பைத்தலையும்,

மொட்டைத்தலையும், கலன்கழி மடந்தையர் குசக்கலம் செக்கான் கதித்ததில

தைலம் – அணிகலம் இல்லாத பெண்களும்குசவன் பாண்டமும்வாணியன்

மிகுந்த எண்ணெயும், இவைகள் காணஎதிர் வரஒணா – இவை கண்காண

எதிர் வருதல் தகாதன;

நீர்க்குடம், எருக்கூடை, கனி, புலால், உபயமறையோர்

– நீர்க்குடமும்எருக்கூடையும்பழமும் இறைச்சியும்இரட்டைப்

பார்ப்பனரும், நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை, நாளும் வண்ணான்

அழுக்கு – நன்மைமிக்க மங்கல மடந்தையும்கிழங்கும்பூப்புப்பெண்ணும்,நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், நசை பெருகு பால்கலசம், மணி,

வளையல், மலர் – விருப்பம் ஊட்டும் பாற்குடமும்மணியும்வளையலும்,

மலரும். இவைகள்நாடி எதிர்வர நன்மைஆம் – இவை தேடி எதிரே வரின்

நலம் ஆகும்.

Xxx subham xxxx

Tags —  சகுனம், நல்ல, கெட்ட , நிமித்தம், விரிச்சி, புள்

அதிசய ஹைட்ரஜன் -2 (Post No.11,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,653

Date uploaded in London – –  10 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

ஹைட்ரஜன் வாயு பற்றிய சுவையான விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்.

ஹைட்ரஜன் Hydrogen என்ற  சொல் கிரேக்க மொழியில் பிறந்தது; ஹைட்ரோ Hydro  என்றால் தண்ணீர்  ஜெனி Gene என்றால் தோற்றுவிப்பது (ஜனனி= தாயார் என்பது சம்ஸ்க்ருதம்)

பிரபஞ்சத்தின் 88 சதவிகிதம் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பி இருக்கிறது.

மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு (Big Bang) நிகழ்ந்த காலத்தே, மூன்று மூலகங்கள்/ தனிமங்கள் பிறந்தன ; அவை ஹைட்ரஜன் வாயு , ஹீலியம் வாயு மற்றும் லிதியம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு வினாடியும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்த வண்ணமுள்ளன. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் வாயுவை உண்டாக்கும்போது இந்த  பிரம்மாண்டமான சக்தி கிடைக்கிறது . பூமியிலும் விஞ்ஞானிகள் இவ்வாறு சோதனை முறையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தனர்.

அணுகுண்டு (Atomic bomb) என்பது யுரேனியம், ப்ளூட்டோனியம்  போன்ற உலோகங்களின் அணுவைப் பிளப்பதாகும் ; ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb)  இதற்கு நேர் மாறானது; இரண்டு அணுக்களை இணைப்பதாகும் .

 ஹைட்ரஜன் குண்டு , முன்னர் அமெரிக்கா  உபயோகித்த  சின்ன அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவை. இரண்டாவது உலக மஹாயுத்தத்தின்போது அமெரிக்கா  2 ஜப்பானிய நகரங்கள் மீது சின்ன அணு  குண்டுகளை போட்டு ஒரு நொடியில் இரண்டு லட்சம் பேரைக் கொன்றது. அது வெளியிட்ட சக்தி 10,000 TNTடிஎன்டி  க்கு சமமானது. ஒரு ஹைட்ரஜன் குண்டு ஒரு லட்சம் TNT டி.என்.டி  வெடிமருந்துக்குச் சமமானது.

பெரிய ஹைட்ரஜன் குண்டுகள் மில்லியன் டன் TNT டி என் டி  வெடிமருந்து வெடிப்பதற்குச் சமமானவை

சூரியன் என்பது நட்சத்திர வகைகளில் சிறிய நட்சத்திரம்தான். அதில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகின்றது

இனி ஹைட்ரஜன் வாயு பற்றிக் காண்போம்

பூமியின் ஈர்ப்பு விசையையும் தாண்டித் தப்பித்துச் செல்லவல்லது இந்த வாயு. குரு (Jupiter)  என்னும் வியாழன் கிரகம் அளவுக்கு ஈர்ப்பு விசை இருந்தால்தான் இதை பிடித்துவைக்க முடியும். கள்ளனுக்கும் குள்ளன் ஹைட்ரஜன்!

மருத்துவத்தில் ஹைட்ரஜன்

நம்முடைய உடலில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் தேவை. இதில் பாதி தண்ணீர் மூலமும், மீதிப்பாதி  உணவு வகைகளிருந்தும் நமக்கு கிடைக்கிறது

உடலில் உள்ள தண்ணீரை 65 சதவிகிதம் என்றும் அதில் ஹைட்ர னின் அளவு 11 சதவிகிதம் என்றும் ஆராய்சசியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இது உள்ளது; குறிப்பாக DNA டி  என் ஏ என்னும் மரபணுவில் இருக்கிறது  நம்முடைய உடலில் உள்ள ரத்தம் பொதுவாக அமிலத் தன்மை (acidic)  வாய்ந்தது. உடலில் தண்ணீர் வற்றிப்போன நிலையில் (Dehydrated Condition)  , தண்ணீரை உடனே கொடுத்தால் மாரடைப்பு வந்துவிடும். ஆகையால் சொட்டுச் சொட்டாக ஏற்றுவர். ஏனெனில் இதயம் திடீரென்று அதிகத் தண்ணீரை ஏற்காது.

இதை மருத்துவ ரீதியில் விளக்குகிறார்கள். அதாவது இருதயத்தின் தசைகளில் உள்ள சோடியம் பொட்டாசியம் ‘அயான்’களின் சமச்  சீர் நிலையை (It upsets the balance of sodium , potassium ions in  heart muscle) பாதிக்கிறது. இருதய நோயுள்ளவர்களின் இருதய திசுக்களில் சோடியம் – ஹைட்ரஜன் பரிமாற்றம் ( exchange of sodium, hydrogen ions in heart tissues )முக்கிய பங்கு வகிக்கிறது.

தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழமுடியாது; இதையே ஹைட்ரஜன் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்னாலும் தவறில்லை

xxxx

வரலாறு

1671-ல் இதை ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவர் சோதனைச் சாலையில் உருவாக்கினார். ஆயினும்  ஹைட்ரஜனைக் கண்டுபிடித்த பெருமை லண்டனில் வசித்த பைத்தியக்கார (eccentric), பணக்கார ஆராய்ச்சியாளர் ஹென்றி காவென்டிஷுக்கு (Henry Cavendish 1731-1810) தான் கிடைத்தது . அவர் லண்டனில் தனி சோதனைச் சாலை வைத்து பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். இதனால் இவரை ஒரு மாதிரியான ஆள் (eccentric) என்று சொல்லத் துவங்கினர். பிரெஞ்சு ஆராய்ச்யாளர் அந்தோணி லவாய்ச்சியர் (Antoine Lavoisier) தான், இதற்கு ஹைட்ரஜன் என்று பெயர் சூட்டினார்.

xxx

ஹைட்ரஜன் பலூன் (Hot Air Balloons)  பயணம்

இந்த வாயு மிகவும் லேசானதால் இதை பெரிய பலூனில் ஏற்றி , அத்துடன் இணைத்த கூடை வடிவ பயணப்பெட்டியில் மனிதர்களை வான வெளிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சுற்றுலாத் தலங்களை மேலேயிருந்து காண இது பயன்பட்டது . பின்னர் ஹைட்ரஜன் விமானங்களையும் பறக்கவிட்டனர் ; இவைகளை ஷெப்பலின்  (ZEPPELINS ) என்று அழைப்பர். பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இவை பயணப் போக்குவரத்துக்கு பயன்பட்டன. 1914ல் முதல் உலகப்போர் வெடித்தபோது 35, 000 பயணிகள் வரை இதை பயன்படுத்தினர். ஆயினும் 1937ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து இதற்க்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்தது. ஹைட்ரஜன் வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 35 பேர் இறந்தனர் . முதல் உலக யுத்தத்தில் லண்டன் மீது குண்டு போடக்கூட, ஜெர்மனி  ஹைட்ரஜன் (Zeppelins) பலூன்களைப் பயன்படுத்தியது

ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வாயு.

xxxx

பொருளாதார உபயோகம்

பெரும்பாலும் ரசாயன தொழிற்சாலைகளில் இந்த வாயு பயன்படுகிறது. அமெரிக்காவில் ஹைட்ரஜன்  வாயுவை, நாடு முழுதும் கொண்டுசெல்ல தனி குழாய்ப்பாதையே  இருக்கிறது. Ethanol எதனால், Methanol மெதனால் தயாரிக்கும் ஆலைகளில். அம்மோனியா உரம் தயாரிக்கும் ஆலைகளில்,  இது அதிகம் பயன்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் தாவர எண்ணெய்களை ‘மார்ஜரின்’ போல கட்டியாக மாற்றும் ஆலைகளிலும் இதற்கு வேலை  உண்டு . உயர்ந்த வெப்பம் தேவைப்படும் வெல்டிங் Welding தொழிற்சாலைகளில் சிறிதளவு பயன்படுகிறது.

அமெரிக்கா , விண்வெளி ஆராய்ச்சிக்கும் இதைப்பயன்படுத்துகிறது திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான ரயில் மற்றும் சாலை வாகனங்களை இயக்குகிறது.

விண்வெளிக்குச் சென்று திரும்பிவரும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்துக்கு 5 லட்சம் லிட்டர் திரவ நிலை ஆக்சிஜனும் 15 லட்சம் லிட்டர் திரவ நிலை ஹைட்ரஜனும் தேவை . இவைகளைச் சேமித்துவைக்கவோ  அதைவிட பெரிய டாங்குகள் (Tanks) தேவை.

xxx

ஹைட்ரஜன் பஸ்கள்கார்கள் (Hydrogen Buses and Cars)

இப்பொழுது ஐரோப்பிய நகரங்களில் ஹைட்ரஜன் பஸ்களையும் கார்களையும் அதிகம் பயன்படுத்துகின்றனர்  பெட்ரோலைவிட விலையும் குறைவு;. காற்று மாசுபடுவதும் இல்லை..

அவன் தண்ணீரில் கூட கார் ஓட்டுவான் என்று கிண்டலாகச் சொன்ன மொழி இப்பொழுது உண்மையாகி விட்டது . தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்று பிரித்து அவற்றின் சக்தியில் வாகனங்கள் ஒட்டப்படுகின்றன.

ஹைட்ரஜன் பஸ்களும், கார்களும் லண்டனில் அதிகம் பயன்படுகின்றன. மின்சக்தி அல்லது ஹைட்ரஜன் சக்தி அல்லது இரண்டையும் கலந்த (Hybrid Vehicles) சக்தியை மட்டுமே பயன்படுத்த லண்டன் சபை திட்டமிட்டுள்ளது . எதிர்காலத்தில் புறச்சூழலை மாசுபடுத்தும் பஸ்கள் இருக்கக்கூடாது என்பது அவர்கள் அணுகுமுறை. இத்தகைய  பஸ்கள் பூனை போல சப்தம் இன்றி இயங்குகின்றன. பின்னால் வாகனம் வ்ருவதை சப்தத்தால் அறிய முடியாது.!

xxx

ரசாயன குணங்கள் Chemical Properties

குறியீடு H  (எச்)

அணு எண் -1

உருகு நிலை – மைனஸ் 259 டிகிரி C

கொதி நிலை  – மைனஸ் 253 டிகிரி C

இந்த வாயு நிறமற்றது; மணமற்றது எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியது (Highly inflammable) .

ஆர்த்தோ Ortho ஹைட்ரஜன்  , பாரா Para ஹைட்ரஜன்  என்ற இரண்டு நிலையில் காற்றில் உள்ளது .

மூலக உலகிலேயே ஐசடோப்புகளுக்கு தனிப் பெயர் உடைய பெருமை இந்த வாயுவுக்கு மட்டுமே உண்டு.

ஒரு ஐசடோப்- டெட்டூரியம் (Deuterium ), மற்றொன்று- ட்ரைஷியம் (Tritium); மூன்றாவது ஐசடோப் -ஹைட்ரஜன் 1  (Hydrogen 1) என்று அழைக்கப்படும்

–subham—

Tags- அதிசய ,ஹைட்ரஜன்,  Zeppelin, ஷெப்பலின்