மதுரையில் ‘தினமணி’-யில் 16 வருடம் சீனியர் சப் எடிட்டராக வேலைபார்த்த பின்னர் 1987 ஜனவரியில் பி.பி.சி BBC அழைப்பின்பேரில் லண்டனுக்கு வந்தேன் . என்னை ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்ற , பி.பி.சி வெளிநாட்டு ஒலிபரப்பின் கிழக்கத்திய சேவையின் துணைத் தலைவர் (David Page, Asst. Head of BBC Eastern Service) டேவிட் பேஜ் என்னைப்பார்த்து வியந்தார் ; நோஞ்சானாக, ஒல்லியாக, ஒரே ஒரு பெட்டி , ஒரே ஒரு கைப்பையுடன் இறங்கிய என்னைப்பார்த்து காரின் பின்பக்கத்தை பூட்- டைத் திறந்து மற்ற பெட்டிகள் எங்கே ? என்றார். ‘இந்த இரண்டு’தான் என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே என் தாத்தாவின் கோட்டைக் கொண்டு வந்திருக்கேன்; இந்த ஊரில் உல்லன் கோட் Woollen Coat இல்லாமல் இந்தக் குளிரில் இருக்கக்கூடாது என்று சொல்லி ‘கோட்’ டைக் கொடுத்தார். அதற்குள் 3 சாமிநாதன்கள் நுழையும் அளவுக்கு இடம் இருந்தது. இந்தியன் இங்கிலீஷில் நான் என் வாழ்நாளில் விமானத்தைப் பார்ப்பதும் வெளிநாட்டுக்கு வருவதும் இதுதான் முதல் தடவை என்றேன். அடுத்த சில நாட்களில் லண்டனை மூழ்கடிக்கும் அளவுக்குப் பனி கொட்டித் தீர்த்தது பத்திரிகைகள் 130 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு அது என்று எழுதித் தீர்த்தன
டேவிட் பேஜ் என்னிடம் சொன்னார் – இப்பொழுது கிறிஸ்தமஸ் -புத்தாண்டு விடுமுறைக் காலம் என்பதால் பி பி சி ஹாஸ்டல் மூடியிருக்கிறது . ஆகையால் உன்னை பி பி சி தமிழோசையில் உன்னுடன் வேலை பார்க்கும் இலங்கைப் பெண்மணி Mrs ஆனந்தி சூர்யபிரகாசம் வீட்டில் முதல் 3 நாட்களுக்குத் தங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். எனக்கு வெளி உலகமே தெரியாது. நான் வெஜிட்டேரியன். என்றேன். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் கவலை வேண்டாம் என்றார்.
அங்கே போனவுடன் நான் முட்டை, மீன், மாமிசம் சாப்பிடாத வெஜிட்டேரியன் என்றேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னை வீட்டில் ‘சாமா’ என்றுதானே கூப்பிடுவார்கள்; அதுவும் தெரியும் என்றனர். இதென்னடா? சி ஐ ஏ CIA , கே ஜி பி KGB போன்ற உளவு அமைப்புகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே என்று பயந்தேன். ஆனால் அன்பே வடிவான, அமைதியி ன் உருவான சூர்யபிரகாசம் (ஆனந்தியின் கணவர்) உனக்காக தனி பாத்திரத்தில் வெஜிட்டேரியன் உணவு ஆக் கி வைத்துள்ளோம் என்றார். மிகவும் சுவையான உணவு. அன்று மட்டுமல்ல. பி பி சி ஹாஸ்டலில் என்னை விட்ட பின்னரும் கூட, வாரம் தோ றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்யப்பிரகாசம் சமைத்த சுவையான உணவு கிடைத்தது. அவர்தான் அந்த வீட்டில் சமைப்பவர். ஒரே வாரத்துக்குள் தமிழ் திரைப்பட நடிகை சுஹாசினி, அவருடைய சகோதரி டாக்டர் நந்தினி, அவரது கணவர் ஆகி யோரும் அங்கே வந்தனர். ஒரு புறம் வெஜிட்டேரியன் விருந்து மற்றோர் புறம் அசைவ விருந்து . ஆனால் சுஹாசினி நந்தினி போன்றோரும் சைவ உணவு மட்டுமே சாப்பிவிட்டனர் .
சில வாரங்கள் கழிந்தன. என்னை சென்னையில் இன்டெர்வியு செய்து, தமிழோசை ப்ரொட்யூசராகத் தேர்ந்தெடுத்த, இந்தி – தமிழ் சேவைப் பிரிவின் தலைவர் கைலாஷ் புத்வார் (Kailash Budhwar) எங்கள் அறைக்குள் நுழைந்தார். என்னைப்பார்த்து திகைத்தார்.
ஆங்கிலத்தில் அளவளாவினார்
உன்னை ஒரு வாரத்துக்கு முன்னர் பார்த்ததைவிட இப்பொழுது சோர்ந்து போயிருக்கிறாயே . என்ன விஷயம்? என்ன நடக்கிறது? என்று வினவினார்.
இல்லை; நீங்கள் என்னைத் தங்க வைத்துள்ள பி பி சி ஹாஸ்டலில் வெஜிட்டேரியன் உணவே கிடையாது. அரை வேக்காடு அரிசி மட்டும் உள்ளது அத்தோடு வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் மட்டும்தான் ஒரே ஒரு வேளை சாப்பிடுகிறேன். மற்ற நேரம் எல்லாம் ரொட்டி, சான்டவிச்–தான் என்றேன். பேசாமல் அடுத்த அறைக்குப் போனார். அது வங்காளி ஒலிபரப்புக்காரர்கள் அறை . அங்கிருந்து பங்கஜ் ஷா என்ற ஒருவரை அழைத்து வந்து, பங்கஜ் இன்று மா லை ஒலி பரப்பு முடிந்தவுடன் சுவாமிநாதனை இந்தியன் ஒய், எம் சி, ஏ ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வசதி செய். நா ன் இப்போதே அவர்களுக்குப் போன் செய்கிறேன். என்றார். மாலையில் அங்கே சென்றோம். பி பி சி என்று சொன்னவுடன் ராஜ உபசார த்துடன் ஆறு மாதங்களுக்கு தங்குவதற்கு அறை ஒதுக்கினார்கள். அங்கே பக்கா இந்திய உணவு கிடைத்தது. ஒரு புறம் வெஜிட்டேரியன் மறு புறம் நான் வெஜிட்டேரியன். ஆறு மாதத்துக்கு சுகபோகம்தான் ; பின்னர் இந்தியாவிலிருந்து மனைவியும் மகனும் வந்து சேரவே பி பி சியில் , அவ்வப்போது குரல் கொடுக்க வரும் மைத்ரேயி கணேசன் மூலம் ஒரு படேல் வீட்டு மாடியில் தங்கினோம். நிற்க.
xxx
மீண்டும் பிபிசி உலக சேவைக்கு வருவோம்
500 பேர் எழுதிய தேர்வில் முதன்மையில் நின்ற என்னைத் தேர்ந்தெடுத்த கைலாஷ் புதவார், பி பி சி கான்டீன் கமிட்டில்யிலும் மெம்பர்.. என்னை மனதிற்கொண்டு இனி பி பி சி கான்டீனில் தினமும் லஞ்ச் நேரத்தில் குறைந்தது ஒரு வெஜிட்டேரியன் டிஷ் vegetarian dish இருக்க வேண்டும். அதைத் தனியாக வெஜிட்டேரியன் போர்டின் கீழ் வைக்க வேண்டும். கரண்டியை மிக்ஸ் mix பண்ணக்கூடாது. வெஜிட்டேரியன் என்பது தெளிவாகத் தெரிவதற்காக மெனு Menu Borad போர்டில் அதை பச்சை வண்ணக் Green Logo குறியில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு என்னிடமும் தெரிவித்தார். அப்படியே நடந்தது . எனக்கும் மகிழ்ச்சி.
ஒரு வாரம் சென்ற பின்னர் மீண்டும் என் அறைக்கு வந்தார். சுவாமிநாதன் தினமும் 12 மணிக்கு கான்டீன் திறந்தவுடன் நீதான் முதலில் நிற்க வேண்டும். ஏனெனில் சைவ உணவுக்கு நீண்ட கியூ நிற்கிறதாம். நீ முதலில் சாப்பிட்டு விடு ; தாமதமாகப் போனால் கிடைக்காது என்று சொன்னார். நான் சிரித்துக்கொண்டே தமிழ்ப் பழமொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன் – பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று. அவரும் பலத்த சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினார்.
தனி ஒருவனுக்காக பி பி சி கான்டீன் மெனு Menu வையே மாற்றிய கைலாஷ் புதவாரை (Kailash Budhwar) நான் மட்டுமல்ல; வெஜிட்டேரியன் உணவை விரும்பும் வெள்ளைக்காரர்களும் நன்றியுடன் என்றும் நினைவு கூறுவர்.
1987ல் இலங்கை அகதிகளோ முஸ்லீம் அகதிகளோ குவியத் தொடங்காத காலம். ஒய் எம் சி ஏ Y M C A பக்கத்திலுள்ள ஒன்றிரண்டு வெஜிட்டேரியன் உணவு விடுதிகளுக்கு மேலாக, அதிகம் சைவ உணவு கிடைக்காத நகரம் லண்டன் . இப்போது இலங்கை அகதிகள் வருகையாலும் இந்திய கம்பியூட்டர் கும்பல் வருகையாலும், தடுக்கி விழுந்தால் சைவ உணவு விடுதியில்தான் விழுவீர்கள்.
(திரு கைலாஷ் புதவார், திரு. சூர்ய பிரகாசம் ஆகியோர் இப்பொழுது சொர்க்கத்தில் வாசம் செய்கின்றனர் )
–subham—tags. பிபிசி தமிழோசை கான்டீன் , கைலாஷ் புதவார், வெஜிட்டேரியன் உணவு,
‘காக்கைக்கும் கூட தன் குஞ்சு பொன் குஞ்சு’. அது போல அவரவர்க்கு சின்ன வயதில் அம்மா, என்ன சமைத்துப் போட்டார்களா அதுதான் அமிர்தம் . இந்தியாவின் இரும்பு மனிதரான (Iron Man of India) வல்லப பாய் படேல் , இதற்கு விலக்கல்ல . இதோ ஒரு சுவையான சம்பவம்
1929 ஆம் ஆண்டில் வேதாரண்யம் மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார் வல்லப பாய் படேல் . மகாநாடு முடிந்ததும் , தமிழ்நாட்டில் சுமார் இருபது நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.திருப்பூர் வந்து சேர்ந்தார். ராஜாஜியும் படேலுடன் சுற்றுப்பிரயாணம் செய்தார். திருப்பூரில் குடியேறிய பண்பாடுமிக்க குஜராத்திக் குடும்பம் ஒன்றில் படேல் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
படேல் அந்த வீட்டுக்குச் சென்றதும் , அந்த வீட்டுத் தலைவரைப் பார்த்து, நீங்கள் ஒரு குஜராத்தியா? என்று கேட்டார்..
‘ஆம்’ என்றார் வீட்டுத் தலைவர்.
நீங்கள் கோதுமை சாப்பிடுவது உண்டா? என்று கேட்டார் படேல்.
வீட்டுக்காரர் ‘ஆம்’ என்றார் .
‘இருபது நாட்களாக அரிசிச் சோறு சாப்பிட்டு வந்தேன். தயை செய்து கோதுமை ரொட்டி தயாரித்துக் கொடுங்கள் என்றார் சர்தார் வல்லப பாய் படேல்’.
Xxxx
My story (Part of My Autobiography)
லண்டன் சாமிநாதன் பட்ட பாடு
சந்தடி சாக்கில் என்னுடைய சுய புராணத்தையும் நுழைக்கப் பார்க்கிறேன் .
இதுவரை லண்டனிலிருந்து இரண்டு முறை குடும்பத்தோடு ரோம் (Rome, Florence, Venis) நகருக்கும், பிளாரன்ஸ், வெனிஸ் நகரங்களுக்கும் சென்று வந்துள்ளோம். முதல் தடவை ரோம் நகருக்குச் சென்றபோது என் மகன் 7 நாள் பயணம் ‘புக்’ book செய்துவிட்டான். நாங்களோ சுத்த வெஜிட்டேரியன்கள் .தினமும் பாஸ்தாவும் பிட்சாவும் (Italian Pasta and Pizza) சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது. அரிசிச் சோறு கிடைக்காதா என்று ‘கூகுள்’ (google) செய்து விட்டு, ஹோட்டலைத் தேடி, ‘போர்டு போர்ட்டாக’ படித்துக்கொண்டு அலைந்தோம். கிடைக்கவில்லை. ஒரு வேளை தவறான முகவரிக்குச் சென்றிருக்கலாம். இறுதியில் நிறைய இந்திய முகங்கள் (உண்மையில் பங்களாதேஷிகள்) தெரிந்த ஒரு ‘சாலை ஒர’ (Roadside Restaurant) உணவு விடுதிக்குள் நுழைந் தோம் ; ஆனந்தம் ஒரு புறம்; அருவறுப்பு மறுபுறம் . ஏனெனில் பெரிய பெரிய பாத்திரங்களில் ‘ஏதோ ஏதோ’ மிதந்து கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் ஒரு புறம் கண்களை மறைத்துக்கொண்டு அரிசிச் சோற் றை மட்டும் எடுத்துக்கொண்டு வெஜிட்டேரியன் என்று உரத்த குரலில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அவர்கள் கொடுத்த ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்தோம் . சில மணி நேரத்தில் இரண்டு பேருக்கு வயிறு கடமுடா சப்தம். சம்ஸ்க்ருதத்தில் களேபரம் (கலவரம் என்ற சொல்லின் மூலம்) என்று சொல்லுவார்கள். மாலை நேர பயணங்களை ரத்து செய்ய மனம் இல்லை. ஆகையால் உடல் நிலை பாதித்தவர்களை விட்டுவிட்டு, இருவர் மட்டும், ரோம் நகரில் பார்க்காத இடங்களை சுற்றிப்பார்த்தோம். மறுநாள் காலையில் அடுத்த இரண்டு பேருக்கு வயிற்றில் ‘கடமுடா’ சப்தம் . முதல் நாள் பாதிக்கப்பட்ட இருவருக்கு உடல் நிலை முன்னேறிவிட்டது. சரி, போங்கள் ; இன்று உங்கள் ஷிப்ட் shift . நீங்கள் போய் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று சிரித்துக்கொண்டே அனுப்பி விட்டோம்
.சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரோம் நகருக்குச் சென்ற பொழுது தீவிர ஆராய்ச்சிகள் செய்து, வெஜிட்டேரியன் VEGETARIAN உணவுவிடுதிகளைக் குறித்துக் கொண்டு, வெற்றிகரமாக கண்டும் பிடித்தோம். ஒரு அழகிய காஷ்மீரி பெண்மணி நடத்திய ரெஸ்டாரன்டில் வெஜிட்டேரியன் என்றால் என்ன? என்ற இலக்கண வரையறைகளைக் (Definition of South Indian Vegetarian) கற்பித்து ஆர்டர் கொடுத்தோம். நல்ல உணவு கிடைத்தது.
என்ன அம்மணி? உன் கடையை நன்கு விளம்பரம் செய்யக்கூடாதா ? போன தடவை ரோம் நகருக்கு நாங்கள் வந்தபோது தவியாய்த் தவித்துப் போய்விட்டோம் என்று சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டே, நானே போன மாதம்தான் இந்த ரெஸ்டாரண்டை ஆரம்பித்தேன் என்றார் . வாழ்க வாழ்க என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
london swaminathan in Great Barrier Reef, Australia.
New Rule
இபோதெல்லாம் என் மகன்களுக்கு ஒரு கட்டளை போட்டிருக்கேன். வியன்னா, மாட்ரிட் என்று ஏதேனும் ஹாலி டே Holiday புக் செய்தால் எந்த இடத்திலும் மூன்று இரவுக்கு மேல் ஹோட்டலில் தங்க வேண்டாம். அப்படித் தங்கினால் முதலில் வெஜிட்டேரியன் உணவுவிடுதி பட்டியல் தயாரித்து, அதன் பக்கத்திலுள்ள ஹோட்டலை book புக் செய்ய வேண்டும் என்று விதி செய்தோம்.
இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்; தனி ஒருவனுக்கு வெஜிட்டேரியன் உணவு இல்லாவிடில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடலை மாற்றிப் பாடினோம்.
ஐயர் , வேதம், சம்ஸ்க்ருதம் ஜிந்தாபாத்- அம்பலவாணர் சொன்ன கசப்பான உண்மை!!
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணர் சொல்கிறார் :
மலையில் உயர்ந்தது பொன்னிற மேரு ;
நதியில் உயர்ந்தது கங்கை;
ஒளியில் சிறந்தது சூரியன் ;
ஜாதியில் உயந்தவர் பிராமணர்;;
மொழிகளில் உயர்ந்தது சம்ஸ்க்ருதம் ;
நூல்களில் உயர்ந்தது வேதம் ;
தானங்களில் சிறந்தது அன்னதானம் ;
தெய்வங்களில் உயர்ந்தவர் அன்னையும் பிதாவும்!
இதில் ஒன்றை ஒப்புக்கொண்டால் பிறவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி சூரியனையும், கங்கையையும் , மேருவையும், தாய் தந்தையரையும் சொன்ன நொடியில் ஐயரையும் வேதத்தையும், ஸம்ஸ்க்ருதத்தையும் உயரத்தில் தூக்கிவிடுகிறார் அம்பலவாணர். வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும், பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதத்தைவிட முக்கியமானது என்றும் சொல்கிறான். தேவாரம் திருவாசகம் போலவே ஆவினையும் அந்தணரையும் இணைத்தே பாடுகிறான் . ஆனால் ஜாதியை மறந்துவிட்டு, ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவர் உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். மேலும் சம்ஸ்க்ருத மொழியின் பழமை கருதி அம்பலவாணர் பாராட்டி இருக்கலாம். துருக்கியில் பொகஸ்கோயில் கி.மு 1380 தேதியுள்ள களிமண் கல்வெட்டில் கியூனிபார்ம் லிபியில் சம்ஸ்க்ருதம் உள்ளது. தமிழிலோ அதற்கு 1300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது. வேதங்களின் பழமையும் கி.மு 1500 என்றும் தமிழின் தொல்காப்பியம் கி.மு முதல் நூற்றாண்டு என்றும் பெரும்பாலான அறிஞர் கூறுவதை ஒட்டி அம்பலவாணரும் எழுதினார் போலும்.
xxxx
முதல் பாடலில் வள்ளுவர் சொன்ன கருத்தையே சொல்கிறார்; ஊழில் பெருவலி யாவுள? விதியை வெல்ல முடியாதே! என்கிறார். சிலப்பதிகாரத்தின் கருத்தும் அதுவே; ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை வலியுறுத்தவே காவியத்தை எழுதியதாக இளங்கோ சொல்கிறார்.
Xxxx
இதை பிறர் சொல்லுவதுட ன் ஒப்பிடலாம் :
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பறங்கியை துறை என்ற காலமும் போச்சே – பாரதியார்
xxx
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே –பாரதியார்
xxx
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலை ஈடே –பாரதியார்
xxx
பிராமணர் பற்றி புத்தர்
ஒருவன் அமைதியான தூய்மையான, தன்னடக்கமான வாழ்க்கை வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கிழைக்காவிடில் அவன்தான் பிராமணன்; அவன்தான் சந்நியாசி; அவன்தான் பிக்ஷு – தம்ம பதம், ஸ்லோகம் 142; புத்தர் செப்பியது
ஒரு சன்யாசியும் பிராமணரும் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுபட்டுவிடுகிறார்கள் . அவர் தாயாரையும் தந்தையையும் கொலை செய்திருந்தாலும் , இரண்டு நல்ல அரசர்களைக் கொலை செய்திருந்தாலும், ஒரு பெரிய ராஜ்யத்தையே அழித்திருந்தாலும் அவர்கள் அந்த பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள் — தம்ம பதம், ஸ்லோகம் 294; புத்தர் செப்பியது .
ஒரு பிராமணனுக்கு தீங்கு செய்யாதே; பிராமணரும் எவருக்கும் தீங்கிழைக்கக்கூடாது அப்படித் தீங்கிழைப்பவனுக்கு என்ன நேருமோ; அடடா , என்ன நேருமோ.- தம்ம பதம், ஸ்லோகம் 389; புத்தர் செப்பியது.
இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான். அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!
xxxx
வினைமாற்றும்
வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்,
தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க,
ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ,
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ.
Meaning
நல்ல வாழ்வ வந்த போது மனதில் (அளவிற்கதிகமாக) மகிழ்ச்சி கொள்ளவேண்டாம். விவேகமுள்ளவர் விதியினால் தாழ்வானது வந்தபோதும் மனம் தளரமாட்டார். வினைப்பயனை யாராலே மாற்றமுடியும், பரம ஏழையாய் இருந்தவர் பல்லக்கில் ஏறுவதை பார்த்ததில்லையோ!
Xxxx
அந்தணர் அறம் மாறினால்..
இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,
மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,
சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,
அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.
அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?
நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.
BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN AND S NAGARAJAN ARE DISPLAYED IN STALL NO.499 AT CHENNAI BOOK FAIR..
ONLY 20 BOOKS ARE DISPLAYED OUT OF 200++++ BOOKS WRITTEN BY BOTH OF US.
IF YOU WANT PRINTED BOOKS PLEASE LET THEM KNOW WHEN YOU VISIT PUSTAKA.CO. STALL
ONLY FOR PRINTED BOOKS, YOU HAVE TO INFORM THEM.
YOU MAY GIVE YOUR NAME , E MAIL OR MOBILE PHONE NUMBER WITH THE BOOK NAME/S YOU WOULD LIKE TO BUY.
BOOKS ARE ALWAYS AVAILABLE ON LINE.
PLEASE NOTE THE BOOK FAIR ADDRESS GIVEN ABOVE.
POSTED ON 6-1-2023
சென்னை புத்தகக் காட்சி 2023 –
நாள் : 06-01-2023 முதல் 22-01-2023 நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 600035.
Another name given to such spirits is சூர் Suur; they live in mountainous areas. Tamils believed that they even kill people. Even the mountain goats won’t touch the plants grown in such Suur inhabited areas in the hills.
“உருமும், சூரும், இரைதேர் அரவமும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழுமலை விடரகம், உடையவால் எனவே”
(குறிஞ்சி.255-261) kurinjip
Xxxx
Mountain goats won’t eat the plants
“வாடல கொல்லோ தாமே –அவன் மலைப்
போருடை வருடையும் (mountain goats) பாயா,
கூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?’
(நற்.359:7-9) natri
xxxx
They also scare you to such an extent that you would shiver and shake at the sight of them
சூர்ப்பனிப்பு அன்ன தண்வரல்.
ஆலியொடு(அ௧.304:3)
Xxx
KARAIKKAL AMMAIYAR
One man compares his lady love to Suurara Makalir (Suur Nymphs) who is not only a rare being but also troublesome
Tamil men used such divine women to make vows or promises . A man holding his lady love’s hand and says I swear in the name of Suur Nymphs
“எக்கர் நண்ணிய எம்ஊர் வியன் துறை,
நேர்இறை முன்கை பற்றி,
சூரர மகளிரோடு உற்ற சூளே‘ (குறுந்.53:5-7)
xxx
One may be reminded of the great Saivite Woman Saint Karaikkal Ammaiyar (Madame of Karaikkal- previously French ruled territory in Tamil Nadu). When she got one mango fruit in a miraculous way, her husband refused to live with her saying she is a divine woman. Then she assumed the form of an ugly woman and called herself Peyaar= Miss Ghost.
Tamils gave us detailed description of the Suur Ladies’ appearance as well. They wear red colour Kanthal flowers and blue colour Kuvalai flowers on their hair and dance to the tune of thundering waterfalls.
“கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்’ (நற்.34:1-5),
xxxx
Tiru murugatrupadai gives us more details about their dance. They wear red sarees, and body full of jewels from head to foot. The scene is an enthralling one according to poet Nakkirar.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி,
கணைக்கால், வாங்கிய நுசுப்பின். பணைத்தோள்.
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்:
பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல்.
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலோடு பெயரிய பொலம்புனை அவிர் இழை.
சேண் இகழந்து விளங்கும் செயிார் தீர் மேனி
குரர மகளிர் ஆடும் சோலை — (முருகு Murugu. 12-41)
To be continued…………………………………………………………
Tags- Attacking, troublesome, Nymphs, Sur Women, attacking women, வருத்தும் தெய்வம், தாக்கு அணங்கு, சூரர மகளிர்
ஒருமுறை, பகவான் ரமணரிடம் அமிர்த நாத யதீந்திரர் என்னும் பெரியவர் ஒருவர் வந்தார்.
‘ரமணன் யார்?’ என்று கேட்டு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்.
அதற்கு ரமணர் உடனடியாக அருளித் தந்த பதில் இது:
‘அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
வறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்’
இப்படி எங்கும் ஒளிரும் பரமாத்மனே தானாய் ஒளிர்வதை அவரே இந்தப் பாடல் மூலம் விளக்கி அருளி விட்டார்.
ஆனால் அன்றாடம் அன்பர்கள் வந்து பேசும் போது அவர், ‘நான் இதைக் கேட்டேனே, நான் அதை எழுதினேனே’ என்பார்.
இங்கு அவர் குறிப்பிடும் நான் என்ற சொல் அன்றாட வாழ்க்கைக்கு உரியதான நடைமுறை வழக்கில் இருக்கும் விவகாரச் சொல்.
ஆனால் உண்மையில் அவர் நான் என்று எப்போதும் தன்மயமாய் பிரகாசிக்கும் ஆன்மாவிலேயே உறைந்திருந்தார் என்பதுவே உண்மை.
பிரம்மத்தை அறிந்த ஞானி அதற்குப் பின்னர் நாம் கண்ணால் காணும் உலகைக் காண மாட்டான்.
ஆனால் ஒரு அஞ்ஞானியோ தனது கற்பனா உலகையே உண்மை என்று எண்ணுவதால் ஆதாரமான உலகை அறிய மாட்டான்.
இதுவே ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு.
ஒரு அஞ்ஞானி ஞானியாக முடியுமா?
முடியும் என்று அருளினார் மஹரிஷி.
எப்படி என்ற கேள்விக்கும் அவர் விடையைத் தெளிவாகத் தந்துள்ளார்.
‘நான் யார்’ என்ற விசாரத்தைப் பயிற்சியாக மேற்கொள்.
அப்போது உன்னை நீ யார் என்று உணர்வாய்”
இதுவே அவரது உபதேசம்.
இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இந்தப் பேருண்மையை, அறிதற்கு அரிய ரகசியத்தை அவர் எந்த நூலையும் படித்து அறியவில்லை; யாரையும் நாடித் தெரிந்து கொள்ளவில்லை.
அருணாசலனின் கருணையால் தன் அனுபவத்தால் சுயமாக உணர்ந்து கொண்டார்.
அதை கருணை மனத்துடன் உலகினர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
ரமண மஹரிஷி பிறந்த நாள் ; 30-12-1879 – திருவாதிரை நன்னாள்
உலகப்புகழ் பெற்ற வரலாற்று அறிஞர், தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி இன்று நம்மிடையே இல்லாத போதும் அவர்தம் ஆராய்ச்சி அரிய பல தகவகல்களைத் தந்த வண்ணமுள்ளன. அவர் சிவபுரம் நடராஜர் சிலையை லண்டன் கோர்ட்டில் வாதாடி வென்ற கதை அனைவருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லப்பபோவது வேறு கதை.
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா ? ஆண் முதலில் பிறந்தானா , பெண் முதலில் பிறந்தாளா? என்பதெல்லாம் திருப்திகரமான பதில் சொல்ல முடியாத கேள்விகள் . இதே பாணியில் நடராஜர் சிலை முதலில் வந்ததா, ஆடல் வல்லானின் வர்ணனை முதலில் வந்ததா? என்பது அறிஞர் பெருமக்கள் விவாதிக்கும் ஒரு விஷயம்.
நடராஜர் சிலை என்பதை இன்று கல்லிலும் விக்ரகத்திலும் கண்டு உலகமே வியக்கிறது. இது சோழர் காலத்தில் வந்தது என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. “இல்லை இல்லை அதற்கும் பின்னர் வந்தது” என்பர் வெள்ளைக்காரர்கள் . கிபி.600-ல் ஞான சம்பந்தர் காலத்திலேயே நடராஜர் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததை தேவார பாடல்கள் பாடல்கள் மூலம் காட்டுகிறார டாக்டர் இரா. நாகசாமி. அவர் எழுதிய ஆங்கில நூலில் (Tamil Nadu The Land of Vedas) இது பற்றி விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.
அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்தில் பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகர் இது பற்றி சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால் அவரும் ஆடல் வல்லானை, நட ராஜப் பெருமானை நாம் இன்று சிலையில் காண்பது போலவே வருணிக்கிறார் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர்.
முதலில் டாக்டர் நாகசாமி சொல்வதன் சுருக்கத்தைத் தருகிறேன்
கலை வரலாற்றை எழுதிய சில மேல்நாட்டார் (Art Historians) நட ராஜ என்ற சொல் 14-ஆவது நூற்றாண்டினை ஒட்டி எழுந்தது . ஆகையால் இதில் வைதீக தொடர்பு (Nothing to do with Vedic Tradition) — ஏதுமில்லை என்று கூறுவார்.கள் . ஆனந்த குமாரசாமி காட்டிய சில இலக்கியக் குறிப்புகளை பார்த்தும் கூட நடராஜ என்ற சொல் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது என்பர்.
சம்பந்தர் தேவாரத்தில் நடனம் ஆடிய ராஜா என்றே குறிப்பிடுகிறார் . ஆகவே கி.பி.600க்கு முன்னதாகவே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .
இதோ திருப்புகலி திருத்தலப் பாடல்
திருப்புகலி –தேவாரம் 1-30-9
324 மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9
நடம் ஆடிய வேந்தன் = நட ராஜா ;
(வேந்தன்= ராஜா)
Xxxx
சம்பந்தர் ஊரான சீர்காழியில், அவர் பாடிய பாடலில் சொக்க நிருத்த நடனம் பற்றிப் பாடுகிறார். இது பரத முனி எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது நாட்டிய சாஸ்திரத்தின் ஆறாவது அத்தியாயத்தில் சுத்த ந்ருத்தத்தை , சிவ பெருமான், நந்தி கேஸ்வரருக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் அதை பரத முனிக்குக் கற்பித்ததாக காணப்படுகிறது. இதோ சீர்காழி திருத்தலப் பாடல் :-:-
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே. 1-126-5
பின்னர் டாக்டர் சாமி, சுத்த நிருத்தம் , 108 கரணங்களில் இருப்பது பற்றி விளக்குகிறார். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சொக்க தாண்டவம் என்பதும் கி.பி.600க்கு முந்தியதுதான் என்பதை சம்பந்தர் தேவாரம் காட்டுவதாச் சொல்கிறார்.
திருச்சிற்றேமம் என்னும் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல் அனைத்திலும் சிவன் ஆடலைக் குறிப்பிடுவதோடு அவருடைய முக்கியப் பணியே அது தான் என்றும் பாடுகிறார்:–
தேவாரம் மூன்றாம் திருமுறை
42. திருச்சிற்றேமம் – கொல்லிக்கௌவாணம்
3244. நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
“இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே. 3-42-1
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே! 3-42-3
Xxx
Shiva likes dance of others as well
இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாகசாமி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.. சிவனுக்கு, தான் ஆடுவது மட்டும்தான் பிடிக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அழகான பெண்கள் பாடிக்கொண்டே ஆடுவதையும் சிவன் ரசிக்கிறாராம் . இதோ அந்தப் பாடல் .
2649.
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு அல்குல், மங்கைமார் பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய மொழியார், மென் கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர் ;நற்கொழுந்தே! என்று எழுவார்கள் சங்கை ஒன்று இலர் ஆகி, சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே.
(அவருடைய ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்குமானால் அது என்னுடையதே)
xxxxx
என் கருத்து
சிவனை நாம் இன்று நடராஜராகக் காண்பதும் சிதம்பரத்தில் அவர் நடனமாடும் காட்சி கொடுப்பதும் சோழர் காலத்துக்கும் முந்தியது. அதாவது மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்துக்கும் முந்தியது.. அப்பர், சம்பந்தர் தேவாரம் மட்டுமின்றி காலத்தால் அவருக்கும் முந்தி வாழ்ந்த மாணிக்க வாசகர் பாடலிலும் இதே செய்தியைக் காண்கிறோம். குறிப்பாக மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பாடிய திருவெம்பாவையில் இந்த ஆடல் செய்தி வருவது டாக்டர் நாகசாமி சொன்ன செய்திக்கு மேலும் வலுவூட்டுகிறது
திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
சிதம்பரத்தில் அவர் பாடிய பாடல் இது. கையில் அனலை வைத்துக்கொண்டு ஆடும் கூத்தன் என்பதால் நாராஜர் உருவத்தைக்கண்டே பாடியிருக்க வேண்டும் . இதோ மேலும் தெளிவான பாடல்,
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
பதப்பொருள் : காது ஆர் குழை ஆட – காதில் பொருந்திய குழை அசையவும், பைம்பூண் கலன் ஆட – பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும், கோதை குழல் ஆட – பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட – மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்,
இதில் உடல் பகுதிகள் மட்டுமின்றி அணிகலன்களின் ஆட்டத்தையும் காண்கிறோம் ; தற்போது நமக்குக் கிடைக்கும் நடராஜர் விக்ரகங்களில் அவர் சடை கூட இரு புறமும் பறப்பதைப் பார்க்கிறோம் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்கவாசகர்.
இது ஒருவர் கற்பனையில் உதித்த காட்சி அல்ல என்பது நால்வர் வர்ணனையிலும் வருவதால், — தில்லைக்கூத்தன் சிலை — அதாவது நடராஜர் வடிவம்—- சம்பந்தர் காலத்துக்கும் முன்னரே இருந்திருக்க வேண்டும் அதிகை வீரட்டானத்தில்கூட , ஆடும் காட்சியை சம்பந்தர் பாடுகிறார்.
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே. 1.46.7
இதில் வரும் அருமையான வரி, உமா பாட, சிவன் ஆடினார் என்பதாகும். அதிகை வீரட்டானத்தில் சம்பந்தர் பாடிய தேவாரம் இது.
ஆக சிவன் ஆடிய காட்சி, சுவற்றில் படமாகவோ கற்சிலையாகவோ, விக்ரகமாகவோ எங்கும் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்பர் பாடிய காலத்துக்குப் பின்னர் வந்த கங்கை கொண்ட சோழபுரத்தில்குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் என்பதை அப்படியே காண முடிகிறது உலகிலேயே அழகான, அற்புதமான சிலை அது.
1977ம் ஆண்டில் எங்கள் 45 பேரை டாக்டர் இரா நாகசாமி தமிழ்நாடு தொல்பொருட் துறை பேருந்தில் திருவனந்தபுரம் முதல் சிதம்பரம் வரை சுற்றிக் காட்டியபோது இச்சிலையின் முன் நின்று அப்பர் தேவாரத்தை எடுத்துரைத்தார் ; கண்களை விட்டு அகலாத காட்சி அது.
ஆருத்ரா தரிசன நாளான இன்று அவன் ஆடலை மனக்கண் முன் கண்டு பாடிப் பரவுமோவாக
–subham—
Tags- நடராஜா , நடனம் , வேந்தன், டாக்டர் நாகசாமி, , நிருத்தம்
ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions) ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில் சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .
தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர்.
இதே போல, ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் எது நிதர்சனமான சான்று (unquestionable evidence) என்றும் அடுக்குகிறார் அம்பலவாணர். பேதிமருந்தின் பலனைப் பார்த்தாலேயே வைத்திய சாஸ்திரம் உண்மை என்பதை அறிவீர்கள்; ஒருவன் ஏன் அரசனாக இருக்கிறான், இன்னும் ஒருவன் ஏன் அடிமையாக இருக்கிறான் என்பதே பாவ புண்ணியத்தைக் காட்டிவிடும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பொன்மொழியும் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற வள்ளுவன் குறளும் (37) பாவ புண்ணிய பலன்களைச் சு ட்டிக்காட்டுகின்றன.
அரிச்சுவடியில் ஹரி என்றோ ஓம் நமோ நாராயணா என்றோ எழுதுவதன் மூலம் திருமாலின் பெருமையும், யஜுர் வேதத்தில் நம சிவாய என்ற மந்திரத்தைத் தாங்கிவரும் ருத்ரம் -சமகம் என்ற மந்திரத்தின் மூலம் சிவ பெருமானின் பெருமையும் புலப்படும் என்கிறார்
Xxxxx
அடுத்த பாடலில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் பிறவியின் காரணமாக குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார் புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)