Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2
ச.நாகராஜன்
இதே தலைப்பில் 23-6-2018 அன்று 5139 என்ற எண் கொண்ட எனது கட்டுரையைப் படித்தவர்களுக்கு இன்னும் சில செய்திகள்.
இவையும் உண்மையில் நடந்தவையே!
16-7-2012 The Telegraph இல் வந்த செய்தியை Leo Lewis லண்டன் The Timesஇல் செய்தியாகத் தந்துள்ளார்.
தெற்கு பிலிப்பைனிஸில் நடந்த சம்பவம் இது. மூன்று வயதே ஆன பெண் குழந்தை ஒன்று பல நாட்கள் ஜுரத்தால் அவஸ்தைப்பட்டு வந்தது.
ஒரு சனிக்கிழமை அன்று குழந்தையை அரோரா (Aurora) என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர்.
டாக்டர் ஒருவர் குழந்தையைப் பரிசோதித்தார். பின்னர் அவர் குழந்தைக்கு நாடித்துடிப்பே இல்லை என்றும் குழந்தை இறந்து விட்டது என்றும் கூறினார்.
குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கு செய்ய ஆயத்தமாயினர்.
மறுநாள் குழந்தையின் உடல் அருகிலிருந்த சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு சிறிய மரத்தினால் ஆன சவப்பெட்டியில் குழந்தை வைக்கப்பட்டு அந்தப் பெட்டியை நான்கு நாற்காலிகள் மேல் சீராக வைத்தனர்.
இறுதிச் சடங்கு ஆரம்பமாக இருந்தது.
சில விநாடிகள் முன்பாக குடும்ப உறுப்பினர் சவப்பெட்டியின் மூடியைத் திறந்து கடைசி நிமிடமாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.
அப்போது அருகிலிருந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹெய்டில் டீலான் (Inspector Heidil Teelan) குழந்தையின் தலை அசைவது போல இருக்கிறதே என்று நினைத்தார்.
உடனே குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
குழந்தையின் நாடித்துடிப்பு சரிபார்க்கப்பட்ட போது அது உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
அவ்வளவு தான், உடனே குழந்தைக்கு சிறிது தண்ணீர் அளிக்கப்பட்டது, நேராக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவ மனையில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது.
பிலிப்பைன்ஸ் மீடியாவில் பேட்டி அளித்த டீலான், “குழந்தை நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இதைப் படிக்கும் போது பராகுவேயில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.
இது 10-9-2009 தேதியிட்ட The Sunday Telegraph பத்திரிகையில் வந்த செய்தியாகும்.
ஜோஸ் அல்வரேங்கா (Jose Alvarenga) என்பவர் ஆசங்ஷன் (Asunction) என்ற பராகுவே (Paraguay) தலை நகரில் தனது மனைவியை பிரசவத்திற்காக அட்மிட் செய்திருந்தார். பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாகக் கூறிய மருத்துவ மனை அதிகாரிகள் அவரிடம் குழந்தையைத் தந்தனர்.
அது ஒரு தற்காலிகமான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு நான்கு மணி நேரம் கழித்து எடுத்துச் செல்லப்பட்டது.
சிறிது நேரம் கழித்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்த குழந்தையின் தந்தை அது மூச்சு விடுவதைப் பார்த்தார்.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடினார்.
குழந்தையை சோதித்த டாக்டர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இது போன்ற அதிகாரபூர்வமாக பத்திரிகையில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
(This article follows my Nine Part Series on Vedic Plants posted in the past nine days)
All of us know that the Rigveda is the oldest book in the world. It mentioned Four Principal Plants, yet to be identified .And there are many more unidentified plants too. No one is able to identify Soma, the king of the Plant kingdom. Like deciphering the Indus- Sarasvati Valley script several people “identified” Soma plant and declared that they are all IDIOTS. If anyone can identify it and make juice out of it, then that person can make millions of rupees every second.
Since they are all fake identifications not even a single person tried it.
Let me first list the unidentified plants in the Vedas:
The botanical knowledge of the Vedic society gave a big slap on the face of the Max Muller gang. The Western Idiots maintained that the Hindus came from outside India But the plants in the Vedas such as Sugarcane, Banyan tree (described as Maha Vrksha in the Rig Veda) and sesame plant, SOMA etc show that the Hindus were born and brought up in the country.
Those who identified Matha with Mother, Pita with Father, Bratha with Brother, Hora with hour , were unable to find similar plant or word to SOMA in any European language. Once again the linguists also showed that they are ignoramuses. There are thousands of references to Soma and its miraculous and magical properties.
xxxx
40 Unidentified Plants in the Vedas
Alasala
Asvavati
Aukshagandha
Citraparni
Dasavrksa
Kakambhira
Kiyambhu
Laksmana
Madavati
Madugha
Mahavrksha (Banyan?)
Masaparni
Masusya
Naraci
Nilagalasala
Pila
Pramanda
Pramandani
Praprotha
Putirajju
Sahadeva
Sahamana
Salanjaala
Sankhapuspika
Sailaaci
Silanjaala
Soma
Somavati
Spandana
Svadha
Svadhiti
Syandana
Tarstagha
Taudi
Arayamana
Udojasa
Urjayanti
Vanaparni
Vihalha
Vyalkasa
Xxx
Mention of over 160 plants in the Vedic literature shows that the Ayurveda is the oldest medical system in the world. Another wonderful thing is that it is followed until this day.
The difficulty in the identification proved one more thing. Vedas are very ancient and no one can find its date.
Xxxx
Orthodox Hindus recite Vishnu Sahasranamam everyday where three Ficus species (Banyan, Peepal, Fig) are portrayed as Vishnu.
Millions of Hindus recite Mrtyunjaya Mantra from Rudram of Yajur Veda, where they use Urvaruka (cucumber plant) in a simile everyday.
Hundreds of flowers and leaves are mentioned as Puja materials in later literature. All these stands as proof for Indian origin of Vedas and its religion. No culture use WATER like Hindus from Birth to Death. That is also another proof for Tropical origin of Hinduism
xxxx
Four Principal Plants
Following Four Principal Plants are mentioned in the Veds.
Udojasa
Urjayanti
Asvavati
Somavati
Xxxx
At least 26 plants are mentioned in the Rig Veda. Rest of the 160++ plants are in Atharva Veda or later Samhitas. That shows Ayur Veda began at least 3000 to 6000 years ago. Atharva Veda was used as a medical book.
More research is required to identify the forty unidentified plants listed above. By identifying them we may add valuable information to the Ayurveda.
Plants like black pepper show that the Hindus in the remotest North knew South India very well. Even Panini mentioned the black pepper that came from South.
Botanical research and ethnic plant research will show that the Vedic Hindus are the sons of the soil.
Sugar is found in the Rig Veda and the Indus Valley! Sandal of South India is through out Sanskrit literature. No Society except Hindus use Sesame (Til) seeds .
–subham—
Tags- Principal plants, Vedas, Unidentified plants, Soma, Sons of the soil, Hindus
பிப்ரவரி 2023 இந்திய பயணத்தின்போது பல சிவன் கோவில்களுக்குச் சென்றேன். நானும் பட்டரும் மட்டும்தான் இருந்தோம். ஒரு வேளை பிப்ரவரி மாதம் , தேர்வுகள் நெருங்கும் மாதம் என்பதாலோ அல்லது இப்போதுதான் பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் களைப்பு அடைந்திருப்பதாலோ தெரியவில்லை.
திருமங்கலக்குடி, திருநறையூர், , திருவலஞ்சுழி ஆகிய சிவன் கோவில்களை தரிசிப்போம்.
XXX
திருமங்கலக்குடி கோவில்
சுவாமியின் பெயர் – பிராண வரதேஸ்வரர்
தேவியார் – மங்கள நாயகி
ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருக்கிறது . கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர்.
தல மரம் – வெள்ளெருக்கு
சம்பந்தரும் அப்பரும் பாடிய தலம்.
கோவிலுக்கு எதிரில் குளம் இருக்கிறது.
மாகாளி பிரம்மா, விஷ்ணு, சூரியன், அகத்திய முனிவர் பூஜித்த திருத்தலம்.
அரசனிடத்தில் பொக்கிஷதாரர் வேலை பார்த்த ஒரு சிவபக்தர், அரசனுடைய பணத்தைக்கொண்டு ஆலய திருப்பணி செய்தார். இதை அறிந்த அரசன் அவரை அழைத்தார். அவரோ அரச கட்டளைக்கு கீழ்ப்படியாமல், உயிர்துறந்தார். அவரது சடலத்தைத் திருமங்கலக்குடிக்கு அப்பாற்சென்று இறுதிச் சடங்கு செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஆனால் சடலம் திருவியலூருக்கு அருகில் வரும்போது, அவரது மனைவியின் பிரார்த்தனையால் , அவருக்கு மீண்டும் உயிர்வந்தது. இதனால் உயிர்கொடுத்த இறைவன் என்று அங்குள்ள சிவன் போற்றப்பட்டார்.
திருமங்கலக் குடியில் இருந்த மங்களாம்பிகையை அவர் வேண்டிக்கொண்டார் என்பது தல புராணம் ஆகும்.
XXX
திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்
இது ஒரு சிவன் கோவில் என்றாலும் பிள்ளையாரால், பெயர் பெற்ற தலம் ஆக விளங்குகிறது.
கும்பகோணத்திருந்து ஆறு கிலோமீட்டர்
தல மரம் – வில்வம்
அப்பர் பாடிய கோவில்.
நாங்கள் உள்ளே சென்றபோது பிள்ளையார் முன்னிலையில் நாங்கள் மட்டுமே பட்டருடன் இருந்தோம். தீபாராதனை காட்டிய பின்னர், அவர் எங்களுடன் மற்ற சந்நிதிகளைக் காட்டுதற்கு முற்பட்டபோது வேறு சில பக்தர்கள் வந்ததால் நாங்களே உள்ளே சென்று சிவனையும் தேவியையும் தரிசித்தோம். பின்னர் அவர் அஷ்டபுஜ துர்க்கை தவி சந்நிதியில் காத்திருந்த ஒரு தம்பதிக்காக அரச்சனைசெய்ய வந்தார். புகழ்பெற்ற கோவில் கரடு முரடான பாதைகளுடன் பராமரிப்பின்றி இருப்பது வருத்தம் தந்தது. அந்தந்த பகுதிமக்கள் அந்தந்த கோவில்களை பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
என்றோ ஒருநாள் வெளிநாட்டிலிருந்து அந்த ஊர் மக்கள் காசு பணம் அனுப்புவதால் மட்டும் எந்தக் கோவிலையும் பாதுகாத்துவிட முடியாது.
ஒரு ஊரில் வேதபாட சாலைக்கு டொனேஷன் / நன்கொடை தருவது பற்றி விவாதித்தேன் அப்போது அதை நடத்தும் சாஸ் திரிகள் சொன்னார் . அ ந்த ஊர்க்காரர்கள் வெளிநாட்டிலிருந்து நிறைய பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்; ஆயினும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்வதே கடினமாக இருக்கிறது என்றார். டெலிவிஷனும் சினிமாவும் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள காலத்தில், சில மாணவர்களை அந்த செல்வாக்கிலிருந்து பாதுகாப்பது கடினமே.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முந்தைய தலைமுறைக்கு திடீரென்று வேத இதிஹாச புராணங்களில் நம்பிக்கை வருகிறது அடடா, நாம் கற்றுக்கொள்ளவில்லை; அடுத்த தலைமுறையாவது கற்றுக்கொள்ளட்டும் என்று பணம் அனுப்புவது பலன் ராது. அதற்கான சூழ்நிலையும் தேவை. மேலும் தான் கடைப்பிடிக்காத விஷயங்களை மற்றவர்களை பின்பற்றச் செய்யமுடியாது. சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லுவதற்குச் சமம் இது . குறைந்தது தினசரி சந்தியா வந்தனம் செய்தால்தான் , வேதம் பிழைக்கும். காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும் என்று மனு ஸ்ம்ருதி முதல் , காஞ்சி மகா சுவாமிகள் வரை சொல்லிவிட்டனர். அதைச் செய்யாதோர் வேதங்களைக் காப்பாற்ற முயலுவது விழலு க்கு இறைத்த நீர் போன்றதே
.XXXX
மீண்டும் கோவிலுக்கு வருவோம்
திரு வலஞ் சுழி சிவன் கோவிலில் இறைவன் திருநாமம் -கற்பக நாதேஸ்வரர், கபர்தீஸ்வரர்
தேவியின் திரு நாமம் – பெரியநாயகி.
தேவேந்திரன் பூஜித்த கோவில். தலத்துக்கு வடக்கில் அரசலாறு ஓடுகிறது.
காவிரி நதி, பூமிக்குள் புகுந்து வெளியே வராமல் நின்றுவிட்டது. மக்களின் கஷ்டத்தைக் கண்ட ஏரண்ட முனிவர் தம்மையே பலிகொடுத்த பின்னர் காவிரி நதி, மீண்டும் தோன்றி வலமாகச் சுழித்து ஓடியதால் ஊருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள் ஏரண்ட முனிவரின் உருவமும் கோவிலுக்குள் இருக்கிறது அவருக்குப் பின்பக்கத்தில் வலம் சுழி நாதர் (தக்ஷிணாவர்த்தர்) என்ற பெயரில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் வீற்றிருக்கிறார் .
இங்குள்ள பிள்ளையார் சந்நிதி மிகவும் சிறியது; கடல் நுரையால் ஆன பிள்ளையார் என்று சொல்லுகிறார்கள். ஸ்வேத / வெள்ளை விநாயகர் .ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக் காலங்களில் பெரிய கூட்டம் இருக்கும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் திருத்தலமான சுவாமி மலையிலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது .
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர் .கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று.
அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் இது .
1500 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய இந்தக் கோவிலில் சோழர் காலக்கல்வெட்டுகள் இருக்கின்றன.
XXXX
திருநறையூர்
கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நாச்சியார் கோவிலின் முற்பகுதியில் திருநறையூர் அமைந்துள்ளது.
சுவாமியின் திருநாமம்- சித்தநாதேஸ்வரர்
தேவியின் திருநாமம்- அழகம்மை
தல மரம் – பவள மல்லிகை
சம்பந்தரும் சுந்தரரும் பாடிய திருத்தலம்.
சித்தர்கள் வழிபட்டுச் சென்ற இடம் ஆதலால் சித்தீச்வரம் என்று பெயர் பெற்றது
குபேரன், தேவர்கள், கந்தர்வர்கள் வழிபட்டனர்.
பிள்ளையார் பெயர்– ஆண்ட பிள்ளையார்.
தீர்த்தம் – பிரம தீர்த்தம் . இது கோயிலுக்கு வடபால் உள்ளது.
தேன் சித்தி தீர்த்தம் என்றும் ஒன்று இருந்ததாகச் சொல்லுவார்கள்.
XXX
கோவிலுக்குள் நாதஸ்வர முழக்கம்
ஆளில்லாத ஒரு கோவிலுக்குள் மிக சப்தமாக நாதஸ்வர இன்னிசை ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தால் பட்டர் கூட இல்லை. ஓஹோ! பட்டர் இல்லாததால் டேப்ரிகார்ட்டர் ஒலிப்பதிவைப் போட்டுவிட்டு போய்விட்டார் போலும் என்று ஒலி பெருக்கியைத் தேடினோம். அதையும் காணோம்.
என்ன அதிசயம் !
ஒரு நாதஸ்வர வித்வான் தனிமையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார் .
அது கோவில் முழுதும் கேட்பதற்காக அதனுடன் ஸ்பீக்கரையும் இணைத்திருந்தார். அவரிடம் கொஞ்சம் நன் கொடை கொடுத்து எங்கள் பாராட்டைத் தெரிவித்தோம்.
சிவன் கோவிலுக்குள் மஹா லெட்சுமி சந்நிதிக்குப் போகும் வழி என்று ஒரு போர்டு வேறு தொங்கியது. அதைக் கண் டுபிடிக்காமல் திணறினோம். ஆளே இல்லாத கோவில் என்பதால் அந்த நாதஸ்வர வித்வானையே கேட்டோம். ஒரு மூலையில் குறுகிய படி ஏறிச் சென்றால் , மகா லெட்சுமி தரிசனம் கிடைக்கும் என்றார் . அவரையும் தரிசித்தோம் .
xxxx
கல்வெட்டுகள் தரும் அரிய தகவல்கள்
அரசாங்கம் படியெடுத்த 24 கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை குறிப்பிடும் சோழ அரசர்கள் (கால வரிசைப்படி)
ராஜ ராஜன், வீர ராஜேந்திரன், முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன் விக்ரம சோழன், இரண்டாம் ராஜ ராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன்.
ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வளநாடு என்பதன் முன்னர் அந்தந்தக் கால அரசர் பெயர் உள்ளது
கல்வெட்டுகளில் சித்த நாதேஸ்வரமுடைய தேவர் , சித்த நாதேஸ்வரமுடையார் என்றும் இறைவன் திருநாமம் காணப்படுகிறது
இங்குள்ள பிட்சாடன தேவர் சிறப்புடையார் .. இவருக்கு திரு நறையூர் சிவப்பிராமணர் ஒருவர் 30 பொற்காசுகளை நிவேதனத்துக்காக அளித்தார்
இங்கு வழிபட வரும் சிவ யோகியாருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக்கு கருப்பூர் உடையான், நில தானம் செய்தார்.
இத்தலத்துள்ள பிடாரி கோயிலுக்கு நிலம்விட்ட செய்தியையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ஏனைய கல்வெட்டுகள் விளக்கு ஏற்றவும் நிவேதனம் செய்யவும் பொன்னும் பொருளும் நிலமும் தானம்விட்டதைப் பகர்கின்றன.
—-subham—
Tags- திருமங்கலக்குடி, திருநறையூர், திருவலஞ்சுழி , சிவன் கோவில், நாதஸ்வர வித்வான், ஏரண்ட முனிவர், காவிரி நதி
ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு ஏற்படக் காரணம் என்ன? இருவரின் மனைவிகளும் கடத்தப்பட்டார்கள். ஆகவே ஒருவரின் துன்பம் இன்னொருவருக்கு நன்கு புரிந்தது. ஒத்த நிலையில் இருந்த இருவரும் நட்பு கொண்டதில் ஆச்சரியம் என்ன?
ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச
வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: |
ஏவம் த்யோரத்வநி தைவயோகாத்
சமானஷீலவ்யஸனேஷு சக்யம் ||
பொருள் :-
ரகு வம்சத் தலைவரின் மனைவி கடத்தப்பட்டார்; வானரங்களின் தலைவரின் மனைவியும் கடத்தப்பட்டார். இப்படி இருவரும் வழியில் விதியால் சந்திக்கப்பட்டு ஒரே மாதிரியான பிரச்சினையில் இருந்ததால் நண்பர்களானார்கள்.
ராமரும் சுக்ரீவரும் நட்பு கொண்டது அடிப்படையான பிரச்சினை இருவருக்கும் பொதுவான ஒன்றாக அமைந்ததால் தான்!
xxxx
மெதுவாக அடையப்படும் ஐந்து விஷயங்கள்!
எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் கற்று விட முடியுமா என்ன? சில விஷயங்களை மெதுவாக படிப்படியாகத் தான் கற்றுத் தேற முடியும் அவை என்ன விஷயங்கள்? பார்ப்போமா?
சனை: பந்தா சனை; கன்யா சனை: பர்வதலங்கணம் |
சனை:ர்வித்யா சனை:ர்வித்தம் பஞ்சைதானி சனை: சனை: ||
சனை: என்றால் மெதுவாக என்று பொருள்.
பாடலின் பொருள் :
இந்த ஐந்து விஷயங்கள் மெதுவாகத் தான் அடையப்பட முடியும். ஒரு பயணத்தின் தூரத்தைக் கடத்தல்; ஒரு ஆபரணத்தை பழுது பார்த்துச் சரியாக்கல்; ஒரு மலையைக் கடத்தல்; வித்யாவில்- கல்வியில் -தேர்ச்சி பெறுதல் மற்றும் செல்வத்தைச் சேர்த்தல்.
ஆக இந்த ஐந்தும் மெதுவாகவே அடையப்படுபவை.
Xxxx
சத்துக்கள் சுலபமாக தம் புலன்களால் அறியக் கூடியவை!
காட்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று, கண்ணுக்குப் புலனாகும் எதிரில் உள்ள காட்சி, எது கிடைக்கக் கூடியது எது கிடைக்க முடியாதது – புலன்களால் அறியக் கூடிய இந்த அனைத்தையும் எல்லோராலும் தம் புலன்களால் அறிய முடியாது! யாரால் எளிதில் அறிய முடியும்? சத்துக்களால் மட்டுமே அறிய முடியும். ஆகவே மேன்மை மிகுந்தோராக ஆதல் அவசியம்!
எது கண்ணால் காண முடியாதபடி பரோக்ஷமாக இருக்கிறது, எது காட்சிக்கு பிரத்யக்ஷமாகத் தோன்றுகிறது, எது சுலபமாக அடையப்படக் கூடியது எது துர்லபம்- சுலபத்தில் அடைய முடியாதது, ஆக இப்படி எல்லா இந்திரியங்களாலும் அறியப்படும் வஸ்துவானது சத்துக்களுக்கு கை வந்த கலையாக அறியப்படும்!
xxxxx
சத்யமேவ ஜயதே ; நாந்ருதம்!
சத்தியமே ஜயிக்கும்; வேறொன்றுமல்ல என்பது வேத வாக்கு. சத்யத்தின் மஹிமைகள் எவை? பார்ப்போம்.
சத்யேன தாரயதே ப்ருத்வி சத்யேன தபதே ரவி: |
சத்யேன வாயவோ வாந்தி சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் ||
பொருள் :
பூமியானது சத்தியத்தினாலேயே தாங்கப்படுகிறது. சூரியன் சத்தியத்தினாலேயே ஒளிர்கிறது. சத்தியத்தினாலேயே காற்று வீசுகிறது. உண்மையாகச் சொல்லப் போனால் அனைத்தும் சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
ஒருவர் சத்தியத்தையே எப்போதும் பேச வேண்டும் ஒருவர் எது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதோ அதையே பேச வேண்டும். ஒருவரால் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இல்லை என்றாலும் கூட அசத்தியத்தை – உண்மை அல்லாதவற்றை – ஒருவன் பேசக் கூடாது. இது தான் மிக உயரிய சநாதன தர்மம்.
xxxx
எல்லா மலையிலுமா மாணிக்கம் கிடைக்கும்?
ஷைலே ஷைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே |
சாதவே ந ஹி சர்வத்ர சந்தனம் ந வனே வனே ||
ஒவ்வொரு மலையும் மாணிக்கத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு யானையும் முத்தைக் கொண்டிருக்க முடியாது. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. சந்தன மரங்கள் கூட எங்கு பார்த்தாலும் எல்லா வனங்களிலும் காணப்பட முடியாது.
xxxx
மனம், வாக்கு, செயல் ஒன்றாக இருக்க வேண்டும்!
மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாக ஒரு போதும் இருக்கக் கூடாது. அல்பர்களுக்கே அது சாத்தியமாகும். நல்லோர்கள் நன்கு சிந்திப்பதையே சொல்வர், செய்வர்.
யதா சித்தே ததா வாசி யதா வாசி ததா க்ரியா |
சித்தே வாசி க்ரியாயாம் ச நாதூநாமேகரூபதா ||
எது ஒன்றை சிந்திக்கிறாரோ அதையே பேசுவார். எதைப் பேசுகிறாரோ அதையே செய்வார். ஏனெனில் நல்லோரிடம் சிந்தை, வாக்கு, செயல் ஒன்றாகவே இருக்கும்.
குருடன், குருடனுக்கு வழிகாட்டியது போல Blind leading the Blind என்ற உவமையை பைபிளிலும் பிற இந்துமதப் பாடல்களிலும் காணலாம் . சைவப் பெரியார் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் இதைச் சிறிது மாற்றி குருடனுக்கு ஊமை வழிகாட்டியது போல என்று சொல்லிப் பாடுகிறார். ஊமை கண்ட கனவு என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆயினும் ஊமை வழிகாட்டுவது போல, அதுவும் கண் பார்வையற்றவனுக்கு, என்பதை நாம் மனக் கண் மூலம் சித்திரமாகக் கண்டால் அப்பரின் அற்புத உவமை தெள்ளிதின் விளங்கும். உவமை என்பதைச் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால்தான் 1500 உவமைகள், சொற் சித்திரங்களைக் கையாண்ட காளிதாசன் உலகப் புகழ்பெற்றான்
xxxx
இதோ அப்பர்/ திருநாவுக்கரசர் பாடல் :–
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்;
திருமுறை : நான்காம்-திருமுறை; பண் : திருவிருத்தம்
நாடு : தொண்டைநாடு; தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ? (Dumb leading the Blind)
குறிப்புரை :
` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம் . கொத்தை – குருடு . மூங்கர் – ஊமையர் . ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல் . சொல் . வேற் . மூன்றாவது . ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை – நுண்ணுணர்வின்மை , மூங்கர் :- அமணர் . வழி – கடவுள் நெறி .
காஞ்சி காமாட்சி கோவிலை அறியாதோர் எவர்? காஞ்சி காமகோடி மடத்தினால் கோவிலுக்குப் பெருமை; அதே போல கோவிலால் மடத்திற்குப் பெருமை. மஹா சுவாமிகள் படங்கள், பெரும்பாலும் காமாட்சி யுடன் காணப்படுவதும் இதை மெய்ப்பிக்கும்.
காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது. பல புராதன கோவில்களில் பெருமாளும் சிவ பெருமானும் அருகருகே அமர்ந்திருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது ; அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்பது சிறுவர் வாயிலும் முழங்கிய காலம் அது. பின்னர் பக்தி இயக்கம் வளர வளர , இரு பிரிவினரிடையே போட்டா போட்டி, காட்டா குஸ்தி ஏற்பட்டது.
முதலில் கோவிலுக்குள் புகுவோம்.
சாதாரணமாக, பக்தர்களைக் கருவறையுள்ள மண்டபத்துக்கு வெளியே செல்லுமாறு க்யூ Q வரிசை இருக்கும். விசேஷ பூஜைக்குப் பணம் கட்டியோரும், பட்டர்களின் , கோவில் அதிகாரிகளின் அன்பிறகுப் பாத்திரமானோரும் மட்டும் மிக அருகில் செல்லலாம். அப்படிச் செல்லுகையில் மட்டுமே 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாளைத் தரிசிக்கலாம். திரு மங்கை ஆழ்வார் ஒருவரால் மட்டுமே மங்களா சாஸனம் செய்யப்பட பெருமாள்.
காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
மூலவர்- கள்வர், நின்ற திருக்கோலம்; மேற்கே பார்த்த பெருமாள்
தாயார்- அஞ்சிலை வல்லி ; தீர்த்தம் நித்ய புஷ்கரணி (இரண்டும் இப்போது இல்லை)
லிப்கோ LIFCO நூலில் கண்ட விஷயம் இதோ:
ஒரு காலத்தில் சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் ஏற்பட,
சிவ பெருமான் கோபமடைந்து பார்வதியைச் சபிக்க,
பார்வதி சிவனடிபணிந்து க்ஷமிக்க வேண்ட,
சிவன் ஆக்ஞைப்படி, ஒரு காலால் நின்று வாமனரை நோக்கித் தவம் செய்து ,காமாக்ஷி என்ற பெயர் பெற்று , சிவனை மணந்ததாக ஐதீகம்.
ஸ்ரீமன் நாராயணன் , காம கோஷ்டத்தில் பஞ்ச தீர்த்தக் கரையில் ,
பெருமாளுக்கு பார்வதி கள்வன் என்று பெயர் சூட்டினாள் .
பார்வதியின் பிரார்த்தனைக்கு இணங்க , பகவான் பூதத்தின் மேல் நின்று,
பின்னர் இருந்து, மறுபடி கிடந்தபடியால்,
நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற சந்நிதிகள் ஏற்பட்டன.
குறிப்பு :
திரு நெடுந்தாண்டகத்தில் காரகத்தாய் கார் வானத்துத்ளாய் கள்வா என்று குறிப்பிட்டுள்ளதைத் தவிர இந்த தலத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு சந்நிதியில் மூன்று அடுக்குகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்று மூன்று திருக்கோலங்கள் உள்ளன இதற்கும் மங்களா சாஸனத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ச்சிக்குரியது.
என் கருத்து
பல்லவர்களின் தலை நகரமாவதற்கு முன்னரே காஞ்சி புகப்பெற்ற ஊராகத் திகழ்ந்தது; சங்க இலக்கியத்திலும் இடப்பெற்றது. காமக்கண்ணியார் என்ற சங்க கால பெண் புலவரின் பெயர் காமாக்ஷி என்பதை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரும் , காஞ்சி மஹா சுவாமிகளும் நமக்குத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சி மஹா நகரம் நூற்றுக்கும் மேலான கோவில்களை உடைத்து . பல மன்னர்களின் படை எடுப்புகளில் இந்த நகரம் சின்னாபின்னம் அடைந்தது ஆகையால் பல உருவங்கள், சிலைகள் இடம்பெயர்ந்தும் அழிந்தும் போயின. நம் காலத்தில் நடக்கும் கும்பாபிஷேகம், திருப்பணிகளின் பொழு து எத்தனை ஓவியங்கள், கல்வெட்டுகள் அழிந்தன, அழிக்கப்பட்டன என்பதை நாம் பத்திரிகைகளில் படித்தவண்ணம் இருக்கிறோம். ஆகையால் இது திவ்ய தேசம் என்பதில் ஐயம் இல்லை ; காலப்போக்கில் பல மாறுதல்கள் நடந்தன என்பதை நாம் ஊகிக்கமுடிகிறது.
திருமங்கை ஆழ்வார் பாசுரம் 2059
அவரது காலத்திலேயே இந்த வைணவ தலம் புகழ் இழந்து இருக்கவேண்டும். ஆழ்வார்களில் காலத்தால் பிந்திய ஆழ்வார்களில் அவரும் ஒருவர்
Xxxxx
கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்!
காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி
காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர். கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு இருப்பதை அறிந்தோம்.அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது.
இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் .
ஏன் ? என்று எல்லோரும் கேட்பார்கள்.
மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறோம்.
நாங்களும், எங்களை அழைத்துச் சென்ற பட்டர் சொன்னபடி குங்குமத்தைத் தடவி நெற்றியில் பிரசாதமாக இட்டுக்கொண்டோம்.
Xxxx
காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பல முறை சென்றுள்ளதால் முன்னரே கோவிலின் மஹிமையை எழுதிவிட்டேன். கண்டு மகிழ்க!!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிகுந்த வேதனையிலும் கூட அன்பு செலுத்திய புத்த குரு மாஸ்டர் ஷு யுன்!
ச.நாகராஜன்
மிகுந்த வலியிலும் மரண வேதனையிலும் கூட மற்றவர் மீது எல்லையற்ற அன்பு செலுத்த முடியுமா? குறிப்பாக அப்படி நமக்கு வேதனையைத் தந்த எதிரியிடம் அன்பு செலுத்த முடியுமா?
முடியும் என்ற அதிசய பதில் புத்தமத குருமார்களின் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.
மரண வேதனையில் அப்படிப்பட்ட சொல்லவொண்ணா வேதனையைத் தந்த செஞ்சட்டை ராணுவத்தினருக்குத் தன் அன்பைக் காட்டிய அபூர்வமான குரு மாஸ்டர் ஷூ யுன் (Master Hsu Yun)!
இவர் மாஸ்டர் ஷுவன் ஹுவாவின் (Master Hsuan Hua) குரு. மாஸ்டர் ஹூவா சீனாவில் பத்தாயிரம் புத்தர்கள் நகரின் மாபெரும் ஆலயத்தின் மடாதிபதி.
அவரது குருவான மாஸ்டர் ஷூ யுன், சீனாவில் இருந்த ஐந்து விதமான புத்தமத வம்சாவளியினரின் தலைமை குரு. அந்த ஒவ்வொரு வம்சாவளியினராலும் அவர் மிகவும் பூஜிக்கப்பட்டார்.
சான் வம்சம், சூத்ரா வம்சம், மந்த்ரா வம்சம், வினயா வம்சம், மறைவியல் வம்சம் என இந்த ஐந்து வம்சங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் அன்பு பாராட்டினர். ஒவ்வொரு வம்சமும் அவரைத் தங்கள் வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டும் என்று வேண்டினர்.
துரதிர்ஷ்டவசமாக சீனாவில் செஞ்சட்டை ஆதிக்கம் கம்யூனிஸத்தால் ஏற்பட்ட போது புத்த மதத்தினரும் புத்த மத குருமார்களும் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாயினர்.
செஞ்சட்டை ராணுவம் அவர் மடத்தைத் தாக்கிய போது அவருக்கு வயது 110.
மரத் தடிகளைக் கொண்டு செஞ்சட்டை தடியர்கள் அவரைத் தாக்கினர்.
மாமிசக் குவியலாக ரத்தம் ஒழுக அவரைப் பார்த்த பிறகே அவர் அப்படியே சாகட்டும் என்று விட்டு விட்டு அந்தப் பொல்லாத் தடியர்கள் அகன்றனர்.
உடைந்த எலும்புகள், பிய்ந்த சதைகள், ஒழுகும் ரத்தம் – என்றாலும் கூட அவர் உயிர் பிழைத்தார்.
இந்த அதிசயச் செய்தி சீனாவெங்கும் பரவியது.
இதைக் கேட்ட செஞ்சட்டையினர் மீண்டும் அவர் இருப்பிடத்திற்கு வந்தனர். அவரைக் குறி வைத்துத் தாக்கினர். இந்தத் தடவை இரும்புத் தடிகளால் தாக்கினர்.
அவர் சுருண்டு விழுந்தார்.
ஆனால் இந்த முறையும் அவர் இறக்கவில்லை.
அவரது சீடர்கள் அவருக்குக் கட்டுப் போட்டு சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றினர். அவர் உயிருடன் இருந்தார்.
அனைவரும் இது கண்டு அதிசயித்தனர்.
ஆனால் அற்புதமான தியானத்தின் சக்தி அவரிடம் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆகவே ஆற்றலுடன் அவர் இருப்பதை அனவரும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
‘தங்களது மாஸ்டர் தங்கள் மீது மாறா அன்பு கொண்டவர்; தான் இறந்து விட்டால் சீடர்கள் சொல்லொணா வேதனைக்கு ஆட்படுவார்களே என்று நினைத்து அவர் தன் உயிரை இந்த வேதனையிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது பிரிவு வேதனையால் சீடர்கள் தவிக்கக் கூடாதே என்று தான் அவர் தன் உயிரை விடாமல் இறப்பைத் தள்ளிப் போட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்’ – என்று இப்படி அவர்கள் எண்ணினர்.
ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரிடம் சென்றனர்.
“ஐயனே! எங்களுக்காக நீங்கள் வேதனைப் பட வேண்டாம். நீங்கள் இப்படி வேதனைப்படுவதைத் தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த வேதனைக்கு நீங்கள் இறந்ததால் வரும் வேதனையே பரவாயில்லை. நீங்கள் உங்கள் உயிரை விடுவதற்கான தருணம் இது தான் என்றால் தாராளமாக உயிர் துறக்கலாம்” என்றனர்.
உடனே மாஸ்டர் அவர்களைப் பார்த்து அன்புடன் கூறினார் இப்படி:
“சீடர்களே! நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது உண்மை தான்! ஆனால் அது உங்களுக்காக அல்ல. இது அந்த செஞ்சட்டை ராணுவ வீரர்களுக்காக. என்னை அடி அடி என்று அடித்து அவர்கள் துன்புறுத்தி இருக்கின்றனர். நான் இறந்தால் அந்த கர்மாவினால் அவர்களுக்கு வரும் எல்லையற்ற பாதிப்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு பெரியது. அந்த விளைவுக்கு நான் ஒரு காரணமாக இருக்க வேண்டாமே என்று நினைத்துத் தான் என் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.”
இதைக் கேட்ட அனைவரும் எதிரி மீதும் அவர் காட்டும் பரிவையும் அன்பையும் எண்ணி பிரமித்தனர்.
இதை அறிந்த செஞ்சட்டை ராணுவ வீரர்கள் அதிர்ந்து போனார்கள்.
அவரை விட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதற்குப் பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார். 100 வயது புத்த சந்யாசியாக இருப்பதாக அவர் விரதம் பூண்டிருந்தார்.
தனது 120ஆம் வயதில் அவர் உயிர் துறந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சீடர்களுக்கு ஆற்றிய உரை பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த தர்மா போதனைகள் Ch’an and Zen Training என்ற நூலாக Charles Luk என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
புத்த மத குருமார்கள் சரித்திரம் உலகில் அவ்வளவாகப் பரவவில்லை.
ஆர்வமுள்ளோர் அவற்றைத் தேடிப் பார்த்து நூல்களிலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
RV.3-53-19 (with Khadira), a stately and beautiful tree
AV.20-129-7; 6-129-1
wood
xxx
126 a.SIPALA
Water plant, Blyxa Cylanica
RV.10-68-5 later form Saivala; Siyalya overgrown with Sipala plants.
AV 6-12-3
xxxx
127.SOMA
Cannot now be identified with certainty; variously identified:
1.Sacrostemmabrevistigma= Asclepias acida
2.S.intermedium= S.viminale
3.Periploca asphylla
4.Ephedra vulgaris
5.Cannabis sativa
RV. The whole of Ninth Mandala and Six hymns of other mandalas devoted to this plant. Soma is described the best among plants all trees prostrate to Soma who is their king.
Drink.
xxx
128.SOMAVATI
RV.5-10-97,7
One of the four principal medicinal plants in Rigveda
xxx
129.SPANDANA
A certain tree
RV.3-53-19
xxx
130.SPHURJAKA
Diospyros perigrina
SB.13-8-1-16
Timber, fruit
xxx
131.SRAKTYA
Cleodendron phlomidis
Amulet derived from its wood, according to commentators on AV.8-5-4-7,8
(See Bloomfield in Amer. Jour.Phil.7, 477)
Medicinal
xxx
132.SREKAPARNA
Nerium odorum
Taittriya Bra.3-6-6-3
Aiareya Bra.2-6-15
Medicinal
xxx
133.SUGANDHI TEJANA
Andropogan squarrosus
Tittr; Kathak, samhitas
Aitare, Panca. Bra
SB .3-5-2-17
Grass
xxx
134.SVADHA
A plant
AV.6-96-3
xxx
135.SVADHITI
A great tree with hard wood, according to Roth
RV.5-32-10; 9-96-6; 1-82-2
xxx
136.SYAMAKA
Millet
Echinochla colona var fumentacea
Tait, Mait, Vaja. Kath.Samhitas
SB.10-6-3-2
Food of pigeons – AV.20-35-12
Also Cha.Upa 3-14-3
Max Muller says Canary seed.
Cereal
xxxx
137.SYANDANA
Wood of a plant according to Roth
Kausika Sutra- 8-15
xxx
138.TAAJABHANGA
Ricinis communis
AV.8-8-3; Kau. Sut.14-14
Oil, medicinal
xxx
139.TALASA
Flacourtia cataphracta
AV 6-15-3
xxx
140.TARSTAAGHA
Tree
Kaus. Sut. 25-23
Its adjective tarstaaghi is found in AV.5-29-15
Weber thinks it is mustard plant.
xxxx
141.TANDI
AV 10-4-25
xxx
142.TILA, TIRYA
Sesamum indicum
AV.2-8-3; 6-140-2; 18-3-694-32
As an epithet of Kurambha- AV4-7-3
Many samhias, Upanishads
SB 9-1-1-3; often mentioned with Masa- AV6-140-2
Medicinal, Ritual
xxxx
143.TILVAKA
Symplocos racemosus
SB. 13-8-1-16
Yupa made of is wood
xxx
144.TRAYAMBANA
AV 8-2-6; also mentioned in Amarakosa
xxx
145.UDOJASA
One of the four principal medicinal plants
RV.10-97-7
xxx
146.UDUMBARA
Ficus glomerata
AV.19-31-1
Many samhitas and many brahmnas
Fruit as sweet as Madhu
Medicinal, eatable, ritual
Yupa and ladle made of its wood
Amulets- AV19-31-1
TO BE CONTINUED………………………….
Tags- Vedic Plants, Part 8, Soma, Sesamum, 4 principal, medical palnts, RV, AV
குடந்தைக்கு — அதாவது கும்பகோணத்துக்கு — சுமார் ஐந்து மைல் தொலைவில் ஸ்ரீவத்சம் என்ற பெயரில் முதியோர் குடியிருப்பு இருக்கிறது. அங்கே எங்கள் நண்பர் ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். அவரது அழைப்பை ஏற்று அங்கே தங்கினோம் . இந்த முறை 3 வார இந்திய விஜயத்தில் நான்கு நாட்களை அங்கு செலவிட்டோம்.
இந்தக் குடியிருப்பு — ஹோட்டல்– லாட்ஜ் என்பது முதியோர் இல்லம் ஆகும். இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இடம். பெரும்பாலும் பிராமணர்கள்தான் அங்கே இருந்தாலும், வெஜிட்டேரியன் விஷயங்களை அப்படியே பின்பற்றும் பிராமணர் அல்லாத சிலரும் வசிக்கிறார்கள். சொந்தக் கட்டிடம் வாங்கியோ அல்லது அறைகளை நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தோ இங்கு பல முதியோர்கள் வசிக்கினறனர்.
மகன்களோ, மகள்களோ வெளிநாட்டில் குடியேறிய பின்னர், வயதான தாய் தந்தையரை இங்கே தங்க வைக்கின்றனர். இது போல சில ஊர்களில் உள்ளது . மேலும் பல குடியிருப்புகள் அவசியம்.
ஸ்ரீ வத்சம் குடியிருப்பில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் சிறிய அளவில் கட்டி வைத்திருக்கிறார்கள் ; சுப்ரபாதங்களும் ஸ்லோகக்ங்களும் காலையில் ஒலிக்கும்.
இந்த complex உள்ளேயே Divine Inn என்ற லாட்ஜும் உள்ளது. அப்பா, அம்மாவைப் பார்க்க வருபவர்களோ, என்னைப்போல நண்பர்களை பார்க்கச் செல்பவர்களோ ‘வசிப்போர் அறை’யிலும் தங்கலாம். பிரைவசி Privacy வேண்டுமானால் அறை எடுத்தும் தங்கலாம். நாங்கள் ஒரு Double Bedroom AC டபுள் பெட்ரூம் ஏஸி அறை எடுத்து 4 நாட்கள் இருந்தோம். நண்பர் மூலமாகப் போனதால் தினசரி வாடகை 1500 க்குப் பதிலாக 1300 ரூபாய்தான் கொடுத்தோம். ரூ.300 தள்ளுபடி.
xxx
நல்ல பிராமண உணவு
காலை ஐந்தரை மணிக்கு, கும்பகோணம் பில்டர் காப்பி. அதே போல மாலை மூன்றரை மணிக்கும் அசல் பில்டர் காப்பி Filter Coffee . பகல் 12 மணிக்குப் பின்னர் ரசம், சாம்பார், கறியுடன் சாப்பாடு. மாலை 7 மணி வாக்கில் டிபன் என்று சொல்லக்ககூடிய பலகார வகைகள். பெரும்பாலும் வெங்காயம் பூண்டு இராது.
ஆனால் உலகின் பல பகுதிகளில் இருந்து தாய் தந்தையரைப் பார்க்க வருவோருக்கு Divine Inn டிவைன் இன் மாடியில் சப்பாத்தி, தால் தால் Dhal , புட்கா Putka சஹிதம் சாப்பாடு உண்டு. எப்போதும் கிடைக்கும் இட்லி தோசை பொங்கல் வகையாறாக்களும் இருக்கும். மேலே, கீழே இரண்டு உணவு விடுதிகளிலும் சாப்பிடும் ஐட்டங்களுக்கு ஏற்ப நாம் பணம் கொடுக்கவேண்டும் . நல்ல ஏற்பாடு. அங்கேயே தங்கி வசிப்போர் சாப்பாடு வேண்டாம் என்று உபவாசம் இருக்கும் நாட்களும் உண்டு. அறையிலேயே சாப்பாட்டைப் (Room Service) பெரும் வசதியும் உண்டு.
xxx
அமாவாசைச் சாப்பாடு
நாங்கள் தங்கிய நாட்களில் (பிப்ரவரி 2023)ஒரு அமாவாசையும் வந்துவிட்டது. நானும் என் சகோதரனும் அறையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு மதியச் சாப்பாட்டுக்குச் சென்றோம். மூன்றே ஐட்டம்கள்தான். சாதம் மோர்க்குழம்பு, வாழைக்காய் கறி (பொடித்தூவல்)
எங்களுக்கு டாக்சி ஓட்டி வந்தவர் பிராமணர் அல்ல. அவரிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்
Sorry சாரி, நீங்கள் வேண்டுமானால் கும்பகோணம் வரை சென்று உங்களுக்குத் பிடித்த உணவைச் சாப்பிட்டு வாருங்கள் அல்லது மாடிக்குப் போய் சப்பாத்தி, தால் , புட்கா சாப்பிடுங்கள் என்றேன்.
ஸார் , 15 நாட்களுக்கு கூட நன் பிராமண உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவேன் என்றார் .
xxxx
இதைச் சொல்லும்போது வேறு ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. என் தந்தை வெ . சந்தானம் மதுரை தினமணி பத்திரிக்கையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் தினமணி ஊழியர் அதிகாரிகள் 300 பேர் வரை சாப்பிட வருவார்கள். வெங்காயம், பூண்டு என்பதை பிராமணர்கள் அறியாத காலம் அ து. 300 ஊழியர்களும் ‘அய்யர் வீட்டு சாப்பட்டைப் போல ருசி வேறு எங்கும் இல்லை’ என்று சொல்லி மனம் மகிழ்ந்து சாப்பிடுவார்கள். இன்றோ வெங்காயம் இல்லாமல் சமைக்க பிராமணர்களுக்குத் தெரியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது .
xxxx
நான் வேலை பார்த்த இடத்தில் இரண்டு சீக்கிய பெண்மணிகளுடன் மதிய உணவுக்குச் செல்வேன். சில நாட்களில் நான் , வெங்காயம் பூண்டு உணவுகளைத் தவிர்ப்பேன். அவர்களும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். இது பற்றி ஒரு நாள் சம்பாஷணை Conversation எழுந்தது.
எங்களுக்கு எல்லாம் இந்த இரண்டும் இல்லாமல் சமைக்கத் தெரியாது. அலுவலத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற அடுத்த நிமிடத்தில் சமையல் அறைக்குள் நுழைந்து எங்களை அறியாமலேயே வெங்கா யம், பூண்டு இவைகளை வெட்டிவிட்டு பின்னர், இன்று என்ன சமைக்கலாம் என்று யோசிப்போம் என்றார்கள். அதாவது வெங்காயம்- பூண்டு இல்லாத வாழ்க்கை இல்லை.
மீண்டும் ஸ்ரீவத்சத்துக்குத் திரும்புவோம்.தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிப்போர் ஸ்ரீவத்சம் என்ற சொல்லுக்கு அடுத்த படியாக கெளஸ்துபம் என்ற சொல் வருவதை அறிவார்கள். அந்தக் கெளஸ்துபம் பெயரில் மேலும் ஒரு பெரிய குடியிருப்பு உருவாகிறது. முதலில் ஸ்ரீவத்சம் போய் தங்கி உங்களுக்குத் பிடித்திருந்தால் கெளஸ்துபம் குடியிருப்பில் வீடு வாங்க அப்ளிகேஷன் போட்டு வையுங்கள்.
xxx
டாக்டர் வசதி
வயதானோர் வசிக்கும் இடத்தில் தினமும் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்காக தினமும் டாக்டரும் இரண்டு நர்ஸுகளும் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் வருகிறார்கள்.
கும்பகோணத்தைச் சுற்றி 30, 40 கிலோ மீ ட்டர் சுற்று வட்டாரத்தில் 200 கோவில்கள் உள்ளன. ஆகவே யாத்திரைப் பிரியர்களுக்கு இந்த அமைதியான இடம் உதவும். அங்கேயே டாக்சி, ஆட்டோ வசதிகள் கிடைக்கும் என்றாலும், நம்முடைய சொந்த டாக்சியோ அல்லது காரோ இருப்பது அவசியம். நினைத்த நேரத்தில் புறப்பட்டு , இரவில் நினைத்த நேரத்தில் திரும்பலாம். நாங்கள் 4 நாட்களில் 40 கோவில்களையும் அதிஷ்டானங்களையும் தரிசித்து வந்தோம். காலையில் ஒரு ட்ரிப்.Trip ; மாலையில் ஒரு Trip . மதிய நேரத்தில் ஓய்வு.
xxxx
ஒரு சம்ஸயம் ! Doubt!
ஒரு வயதான நபரோ, தம்பதிகளோ இப்படிப்பட்ட இடத்தில் வசித்தால் போர் BOREDOM அடித்துவிடாதா என்ற எண்ணம்/ சந்தேகம் மனதில் எழுந்தது. என் நண்பர் அங்கு ஒன் றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.அவரால் வெளியே சென்று வரும் அளவுக்கு உடல் வலு இருப்பதால் ஆக்டி Active வாக உள்ளார். ஆனால் மிகவும் வயதானவர்கள் அங்கேயே பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டு வாழவேண்டும். வீட்டில் இருந்தாலும் அதையேதான் செய்யப்போகிறார்கள்.
என் நண்பரிடம் கேட்டேன். இங்கு நீண்ட காலம் வசிப்பவர் எவ்வளவு காலம் இருந்தார் என்றேன். மூன்று ஆண்டுகள் என்று பதில் கொடுத்தார்.
ஆயினும் ஸ்ரீ வத்சம் நிர்வாகம் அவ்வப்போது உபந்யாசம், பாட்டுக் கச்சேரி, யோகா முதலியவற்றை ஏற்பாடு செய்து எல்லோரையும் ஆ னந்தப்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இருந்த நாட்களில் பெரிய சினிமாப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.
சொந்தமாக வீடு வாங்கி இருப்பவர்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிடவும் வசதி உண்டு. சமைக்க விரும்பாதோருக்கு 24 மணி நேரமும் காப்பி, டிபன், சாப்பாடு வசதியும் உண்டு.
கார் அல்லது டாக்சியில் சென்று தாங்கித்தான் பாருங்களேன். காலையிலும் மாலையிலும் கோவில் தரிசனம் கிடைக்கும்
ஸ்ரீவத்சம் என்று கூகிள் செய்தாலேயே முழு விவரங்களும் கிடைத்துவிடும் .
We, SR Estates & SR Realtors – The premium real estate firms based in Kumbakonam have been operating in Kumbakonam and its surroundings for the last 10 years …
17 Nov 2022 — In this Project, they are going to build about 400 flats (approximately), and in this project also, they are going to build temples for Shiva …
–SUBAHAM—
Tags- ஸ்ரீவத்சம், குடியிருப்பு , பிராமணர், முதியோர், கும்பகோணம், Srivatsam, Divine Inn