மனு நீதி மன்னர்களின் ஒளி, எட்டு திக்கிலும் பிரகாசிக்கும்: அம்பலவாணர் கூற்று (11,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,614

Date uploaded in London – –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகப் பாடல் 43-ல்  மனு நீதிப்படி  ஆட்சி செய்யும் மன்னர் ஒளியும் அறிஞர்களின் பேரொளியும் சூரியன் ஒளியும் எட்டு திக்கிலும் பரவும் என்கிறார் அம்பலவாணர். ஒவ்வொரு படியாக ஒளியின் அளவையும் ஒப்பிடுகிறார். மாணிக்கம் ஒளிமிக்கது. அதைவிட ஒளியுடையது மின்மினி உமிழும் புழுக்கள். அதை விட  ஒளிமிக்கது விளக்கு; அதைவிட ஒளியுடையது வர்த்தி. ஞாயிற்றினுக்கும்,மனுநீதி மன்னர்க்கும் ,வீரமுடைய அறிஞருக்கும், மேலே சொன்ன எல்லாவற்றையும் விட  ஒளி இருக்கும்; அது எட்டு திக்கிலும் பிரகாசிக்கும் என்கிறார் அம்பலவாணர்  .

xxxx

இதோ கம்பனை ஒப்பிட்டுப் பார்ப்போம்

  ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில் கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான்:–         

வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்

ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே

ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.

பொருள்:–

“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.

Xxxx

கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–

இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்

குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ

இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா

பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்

பொருள்:-

ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?

இதற்கு இராமன் அளித்த பதில்:– 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,

மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.

இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு: 

நஞ்ச மன்னவரை நலிந்தாலது

வஞ்சமன்று மனு வழக்காதலால்

அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் 

பொருள்:-விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.

இங்கே இன்னும் ஒரு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தமிழ்ப் பழமொழியையும்  கம்பன் நமக்கு நினைவு படுத்துகிறான்  யோகாசனம் பயிலுவோர் ஐந்து வயது முதல் பழக வேண்டும். ஐம்பது வயதில் உடம்பு வணங்காது ; பல்லக்கு மூங்கில் வேண்டுவோர் மூங்கிலை  இளமை நிலையிலேயே வளைத்து வைப்பர் ; பல ஆண்டுகளுக்குப்பின்னர் பல்லக்கு செய்ய அதைப்  பயன்படுத்துவார்கள்.

Xxx

மனு நீதி நூலில் பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிராக நுழைக்கப்பட்ட 40, 50 பாடல்களை நீக்கிவிட்டால் கம்பனும் கல்வெட்டுகளும் மனு நீதியைப் புகழ்ந்தது ஏன் என்பது விளங்கும்

Xxx

அறப்பளீசுர சதகம் 45ஆவது பாடலில் எதை, யார் செய்தால்  சிறப்பாக இருக்கும் என்கிறார்:

நல்ல  செயலானாலும் கெட்ட செயலானாலும் பெரியோர் செய்தால் சிறப்பு.;

பெரிய அரசியல் தலைவர்கள் தெருக்கூட்டினால் பத்திரிக்கையாளர் புகைப்படம், வீடியோ படம் எடுப்பர்

காம சம்பந்தமான செயல்களை பருவ மங்கையர் செய்தால் பிரபல மடையும் ; இதை சினிமாக்காரிகள் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்தால் அதற்கும் கோடி ரூபாய் கிடைக்கும்

வாரி வாரி வழங்கிய வள்ளல்களுக்கு உயர்விலும் தாழ்விலும் புகழ் மங்காது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இதைக் கேட்கிறோம்

போர் வீரர்களுக்கு விழுப்புண்கள் அதிகமானால் மேலும் அழகுதான். புறநானூற்று வீரத்தாய் கதையில் இதை அறிகிறோம்

தவறி விழுந்தாலும் யானையிலிருந்து விழுந்தால் பெருமைதான்;  நாயின் மேலிருந்து விழுந்தால் நகைப்புக்கு உள்ளாவோம் .

தமிழ் கூட குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்போம்.

ஏதேனும் ஒருவகையில் உயர்ந்த நிலைக்குப் போய் விட்டோருக்கு தாழ்வே கிடையாது.

xxxxx

 அறப்பளீசுர சதகம் 43, 44, 45    

அறப்பளீசுர சதகம் 43. ஒளியின் உயர்வு

செழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோ

     செய்யகச் சோதம் எனவே

  செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்

     தீபத்தின் ஒளிஅ திகமாம்!

பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!

     பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப

  ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ

     பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!

 மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன

     விரகுளோர் உரைசெய் குவார்!

அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழல் விழிகொடு எரிசெய்து மதனவேள் தனைவென்ற

அண்ணலே – தீவிழியினாலே காமனை எரித்து வென்ற பெரியோனே!,

அருமை ……. தேவனே!,

செழுமணிக்கு அதன்மட்டிலே ஒளி – நல்ல

மாணிக்கத்துக்கு அதன் அளவிலேதான் ஒளியுண்டு, அதினும் செய்ய

கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி – அம்மணியைக்

காட்டினும் சிவந்த மின்மினியெனக் கூறப்படும் புழுவுக்கு மிகுதியான ஒளி

உண்டு, அதனினும் தீபத்தின் ஒளி அதிகம்ஆம் – அந்த மின்மினியினும்

விளக்கின் ஒளி மிகுதியாகும், தீபத்தின் பழுதுஇலாத் தீவர்த்தி அதிகம்

ஆம் – விளக்கினும் குற்றமற்ற தீவர்த்தியின் (ஒளி) மிகுதியாகும், அதில்

பகல்வர்த்தி அதிகம் ஆம் – அதனினும் பகல்வர்த்தி(யின் ஒளி)

மிகுதியாகும், அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் – பகல்வர்த்தியினும்

பெரிய மத்தாப்பின் ஒளி மிகுதியாகும், அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம்

ஆம் – மத்தாப்பினும் குளிர்ந்த திங்களின் ஒளி மிகுதியாகும், விழைவுதரு

பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும் வீரவிதரணிகருக்கும் – விருப்பம் ஊட்டும்

ஞாயிற்றினுக்கும் செங்கோல் அரசர்க்கும் வீரமுடைய அறிஞருக்கும்,

மிக்கஒளி திசைதொறும் போய்விளங்கிடும் என்ன விரகு உளோர்

உரைசெய்குவார் – பேரொளி எட்டுத்திக்கினும் சென்று விசும் என்று

அறிவுடையோர் கூறுவர். 

Xxx

           அறப்பளீசுர சதகம் 44. நன்று தீதாதல்

வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு

     மாறாத வல்வி டமதாம்!

  மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய

     மா தருக் கோவி டமதாம்!

மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்

     மிக்கபேர்க் கதிக விடமாம்!

  வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப

     வீணர்க்கெ லாம்வி டமதாம்!

ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்

     ஏலாத கொடிய விடமாம்!

  ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்

     எந்நாளும் அதிக விடமாம்!

ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும் அண்ணலே

– ஆக்கம்பெற்ற தவயோகியரின் உளத்தாமரைமலரில் வாழும் பெரியோனே!

அருமை …….. தேவனே!,

சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின்

மாறாத வல்விடமது ஆம் – திருடருக்கும் காமநோயாளருக்கும் வானத்தில் திங்களைப் பார்த்தால் நீங்காத கொடிய நஞ்சு ஆகும். இதம்இலா விபசரிய

மாதருக்கு மகிழ்நன்தனைக் காணில் விடமது ஆம் – நன்மையில்லாத

தீயொழுக்

கப் பெண்டிருக்குக் கணவனைப் பார்த்தால் நஞ்சுபோல் இருக்கும்,

சுரரோகம் மிக்கபேர்க்கு மேன்மைதரு நல்சுவை பதார்த்தமும் அதிகவிடம்

ஆம் – வெப்புநோய் மிகுந்தவர்கட்கு உயர்ந்த இனிய சுவைமிக்க கறிகளும் மிகுந்த நஞ்சாகும், அதிலோப வீணர்க்குஎலாம் வித்தியாதிபர் தமைக்

கண்டபோது விடமது ஆம் – மிகுந்த ஈகைப் பண்பிலாத வீணர்கள்

யாவருக்கும் கலைவல்லோரைக் கண்டபோது நஞ்சாகும், ஈனம்மிகு புன்கவி

வலோர்க்கு அதிக சபை காணில் ஏலாத கொடியவிடம் ஆம் – இழிவு

மிக்க புன்கவிவாணருக்குப் பேரவையைக் கண்டாற் பொறுக்கமுடியாத தீய நஞ்சாகும், ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில் எந்நாளும்

அதிகவிடம் ஆம் – மேன்மையில்லாத பெரும் பாவிகளுக்கு அறம்

என்றால் எப்போதும் பெருநஞ்சு ஆகும்.

     Xxxxx

அறப்பளீசுர சதகப்  பாடல் 44-ல் யாருக்கு எது பாகற்காயாகக் கசக்கும் என்ற பட்டியலை அம்பலவாணர் தருகிறார் :-

திருடர்களுக்கும் காம வேட்டை ஆடுவோருக்கும் — நிலவு ஒளி பிடிக்காது.

தீய ஒழுக்கமுள்ள பெண்களுக்கு – கணவனே பாகற்காய்தான் ;

நோயுள்ளோருக்கு நல்ல கறிவகை – கசப்பானதே;

கருமிகளுக்கு கலைஞர்கள் வந்தால் பாகற்காய்;

போலி கவிஞர்களுக்கு சபையே கசப்புதான் ;

பாவிகளுக்கு தர்மம் என்றால் நஞ்சு போன்றதே

இவை அனைத்தும் உலகம் அறிந்த உண்மைகளே.

xxx

      அறப்பளீசுர சதகம் 45. தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்

     மேன்மையோர் செய்யில் அழகாம்!

  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்

     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து

     சாரிலோ பேர ழகதாம்!

  சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்

     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்

     நாளும்அது ஓர ழகதாம்!

  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்

     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அகம்ஆயும் நல்தவர்க்கு அருள்புரியும் ஐயனே –

உள்ளத்திலே ஆராயும் நல்ல தவத்தினர்க்கு அருள்செய்யும் தலைவனே!,

ஆதியே – முதல்வனே!, அருமை …….. தேவனே!, வெகுமானம் ஆகிலும்

அவமானம் ஆகிலும் மேன்மையோர் செய்யில் அழகுஆம் – பெருமதிப்புச்

செயலானாலும் இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால்

அழகுதரும். விரகமே ஆகிலும் சரசமே அகிலும் விழைமங்கை செய்யில்

அழகுஆம் – காமநோயானாலும் காமக்கூட்டம் ஆனாலும் விரும்பத்தக்க

மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும், வெகு தருமங்களைச்

செய்து தகுதாழ்வு வாழ்வு சாரில் பேரழகு ஆம் – மிக்க அறங்களைப்

புரிந்து தக்க தாழ்வாயினும் வாழ்வாயினும் பெற்றால் மிகுந்த அழகு ஆகும்,

சமர்செய்து சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும் வரில் அழகது

ஆம் – போர்புரிந்ததால் உடம்பில் ஏதாயினும் காயமாவது பெருமையாவது உண்டானால் அழகு ஆகும். நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்

அதுநாளும் ஓர் அழகது ஆம் – மலைபோன்ற மதயானையின்மேல்

ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் அச்செய்கை எப்போதும் ஓரழகாக இருக்கும்,

நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர் நகைசெய்து அழகு அன்று என்பர்

– நாயின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தபேர் நகைத்து

அழகாகாது என்று கூறுவர்.

–subham—

Tags- அறப்பளீசுர சதகம் 43, 44, 45. மனு நீதி, மன்னர்களின் ஒளி,   பிரகாசிக்கும்,  அம்பலவாணர்

அருள்வாயே! – 8 (Post No.11613)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,613

Date uploaded in London –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 8

(65 முதல் 74 முடிய)

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

65) காஞ்சீபுரம்

   அவமே யான்

    திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து

     தெளியமோ க்ஷத்தையென்று அருள்வாயே

பாடல் எண் 352 –   ‘அறிவிலாப் பித்தர்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து நான் தெளிவு பெறுவதர்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?

66) திருவானைக்கா

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய

   திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய

      துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே

பாடல் எண் 362 –   ‘குருதி புலால் என்பு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.

67) திருவருணை

அலமரும் வினைவாழ்வும்

சலில லிபியன சனனமு மலமல

   மினியு னடியரொ டொருவழி படஇரு

     தமரபரிபுர சரணமு மவுனமு மருள்வாயே

பாடல் எண் 368 –   ‘அருவை மிடையென‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும், போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு (உன்னுடைய) இரண்சு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மௌன உபதேசத்தையும் அருள்வாயாக.

68) திருவருணை

குலவினை களையுங்

  கழல்தொழு மியல்தந் தருள்வாயே

பாடல் எண் 389 –   ‘விரகொடு வளை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

69) திருவருணை

எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

  கிருபா தமெனக் கருள்வாயே

பாடல் எண் 393 –   ‘அருமா மதனை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக) நரகத்தில் புகாத வண்ணம் உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

எரிவாய் நரகம் என்பது கூடாசலம்கும்பிபாகம்அள்ளல்அதோகதிஆர்வம்பூதிசெந்து ஆ ஏழு நரகங்களில் ஒன்று. இது கும்பிபாகம் என அழைக்கப்படும். பாவம் செய்தோரைக் குயச் சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் இது.

70) திருவருணை

பறிமாதர்

  தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்

     சோதியொளிப் பாதமளித் தருள்வாயே  

பாடல் எண் 395 –   ‘ஆனை வரிக்கோடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய் அஎன்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.

71) திருவருணை 

 சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே

   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே 

பாடல் எண் 397 –   ‘இமராஜன் நிலாவது‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.

 இந்தப் பாடல் அகத்துறையில் நாயக-நாயகி பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடியது. இப்பாடலில் வரும் சந்திரன்தென்றல் காற்றுமன்மதன்மலர்க் கணைகள்ஊர்ப் பெண்களின் ஏச்சு ஆகியவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.

72) திருவருணை 

அடியேன் முன்

   கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

    கடுகிந  டங்கொ டருள்வாயே

பாடல் எண் 401 –   ‘இருவினை அஞ்ச‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரிவாயாக.

73) திருவருணை

    ஊடாடி யவரோடு முழலாதே

      ஊராகத் திகழ்பாத மருள்வாயே

பாடல் எண் 418 –   ‘கோடான மடவார்கள்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (விலைமாதர்களுடன்) ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமல், (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்தருள்வாயாக.

74) திருவருணை 

இறையோ னிடமாய் விளையா டுகவே

    யியல்வே லுடன்மா அருள்வாயே

பாடல் எண் 421 –   ‘சிவ மாதுடனே‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

British Massacre of Sikhs, Sinhalese, and Zulus (Post No.11,612)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 11,612

Date uploaded in London – –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

This is part 3 of British Atrocities

 Sathnam Sanghera has compiled lot of information from many books about British atrocities and exploitation around the world.

 British slaughtered Sikhs, Sri Lankans and Zulu s like birds. They themselves have said it. It is not outsiders report.

Here is what we read in his book Empireland, published in 2021 by Viking

 “In Empires of Sikhs, Patwant Singh estimates that the first seventy years of eighteenth century saw around 200,000 Sikhs killed. But I accept it was British colonialists who did most to entrench and propagate this view of Sikhs in the world, and who in their obsession with classification, accentuated the boundaries between the Sikhs and other religious groups in India”.

Xxx 

“In 1914, it was not only Britain which took on the Germans and their allies, but the entire British empire. Over three million men from across the empire and Commonwealth supported the British army.

 In the Second World War, the number of imperial soldiers was just as significant , including 1,440,500 troops from India, 629,000 from Canada, 413,000 from Australia,136,000 from South Africa, 128,500 from New Zealand and more than 134,000 from other colonies. But after the war, all the empire troops were packed off back home in unseemly haste and the huge celebratory Peace March that took place in London in July 1919 did not include any of those non- British troops”.

 (So ungrateful. Later politicians also gave a completely different picture, leaving the non- whites out).

 Xxx

 Sanghera gives many incidents where Sikhs and other Indians were attacked in Wolverhampton in England.

 Wolverhampton MP Enoch Powell was the one who cast a huge shadow not only over local Wolverhampton politics but over national politics too. In 1968 he made the infamous ‘Rivers of Blood’ speech. He feared that ‘ in this country in 15 or 20 years the Blackman will have the whip hand over the white man’.

Xxxx

 3000 Sikhs massacred 

There turn out to be many more demonstrations of anti- Sikh racism beyond what happened at Jallianwalla Bagh. Here during the Battle of Gujarat ( 1849), an encounter during the Second Anglo Sikh War we see Britons dehumanising Sikhs, losing just 96 men in the course of slaughtering 3000 Sikhs, an officer of the ninth Lancers remarking in the process that enemies running for their lives were of course shot, with Sikhs hiding in trees providing great sport for our men, who were firing up at them as at so many rooks…..down they would come like a bird head downward, and bleeding most profusely.

Here in the Indian Pavilion of the 1851 Crystal Palace exhibition in London, we have Sikhs being described as lacking a ray of intelligence. Here in 1871, deputy commissioner J L Cowan summarily executing 68 Namadhari Sikh prisoners ,in a form of collective punishment following on attack on the small Muslim principality of Malerkota in Punjab ; the method he chose was to fire the victims from canons, meaning that their body parts were so scattered they could not be retrieved for funeral rites.

Xxx 

10,000 Zulus massacred 

William Gladstone , who served four times as Prime Minister of Britain ,between 1868 and 1894, complained that in South Africa 10,000 Zulus had been slaughtered for no other offence than their attempt to defend against your artillery with their naked bodies, their hearths and homes, their wives and families.

Xxx 

10,000 Sinhalese massacred 

Jan Morris’ Pax Brittanica trilogy extends to well over 1500 pages, Lawrence Jame’s Rise and Fall of the British Empire comprises 736 of densely printed text, are recommended by many.

The stories they tell are so violent it is not conducive to sleep to go to bed reading about, how in 1818, the British were responsible for f the deaths of 10000 people in the course of battling the Kandyan kingdom of Ceylon, how the 1838 Myall Creek massacre saw up to fifty indigenous Australians , including women, children, aged, being brutally murdered by a group of colonist cattle ranchers, or how the Hola camp for Mau Mau rehabilitation in Kenya was so brutal that eleven prisoners were beaten to death by guards under the watch of a British prison official.

 To be continued……………………..

வாராத செல்வத்தைப் பெற, தீராத நோயைத் தீர்க்க வழி (Post No.10,611)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,611

Date uploaded in London – –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் 

    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

    மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  

பொருள் :

ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,

கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,

தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,

வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே  என்று புலம்புகிறார்  அப்பர்.

(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல்  நாயகி)

XXX

இதில் தெரியவரும் அரிய செய்திகள் :

அப்பர் பெருமான் காலத்திலேயே சிவ பெருமானுக்கு ஸஹஸ்ரநாமம் இருந்திருக்கிறது.

திருமாலும் பன்றியாய்ச்

    சென்றுணராத் திருவடியை

உருநாம் அறியஓர்

    அந்தணனாய் ஆண்டுகொண்டான்

ஒருநாமம் ஓருருவம்

    ஒன்றுமில்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம்

    தெள்ளேணங் கொட்டாமோ- என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்

Xxxx

இரண்டாவது அரிய செய்தி :–புள்ளிருக்கு வேளூர் என்பதற்கு தல புராணம் தரும் தகவலை திருஞான சம்பந்தரும் வேறு ஒரு பாடலில் உறுதி செய்கிறார் . புள்= ஜடாயு, சம்பாதி என்ற இரண்டு புள் (பறவைகள்), ருக்கு வேதம், வேள் /முருகன், ஊர்/ சூரியன் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது .

இதை சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம் :

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்

தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

Xxx

மூன்றாவது அரிய செய்தி :– சிவபெருமான், நோய் தீர்க்கும் கடவுள் ஆகும். சம்ஸ்க்ருதத்தில் வைத்தீஸ் வரன் என்று பெயர். முன்காலத்தில் தமிழ்ப் பெயர்கள் மட்டுமே இருந்ததென்றும் பின்னர் சிலர் அதை ஸம்ஸ்க்ருத்திற்கு  மாற்றிவிட்டனர் என்றும் பலரும் புலம்புவர். அதைத் தகர்த்து  எறிகிறது அப்பரின் அருள்வாக்கு :

மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

இது பிறவிப்பிணியைத் தீர்க்கும் வரி என்றாலும் பொருந்தும். உடலில் வரும் நோய்களைப் போக்குவார் என்றாலும் பொருந்தும். ஏனெனில் இந்தக் கோவிலில் மட்டும் நோய் தீர்க்கும் மருந்து உருண்டை — புற்று மண் – பிரசாத மாகக் கிடைக்கிறது. அத்தோடு உப்பும் மிளகும் கிடைக்கிறது. ஆக அப்பர் பாட்டில் வரும் மருந்து என்பது இதையும் குறிக்கும்.

மருந்து என்ற சொல் பல் இடங்களில் அமிர்தத்தையும்– சாவா மருந்து — குறிக்கும். அதைத் தரும் தன்வந்திரி சந்நிதி, இந்தக் கோவிலில் இருப்பது நோய் தீர்க்கும் தலம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ருத்ரம் போன்ற யஜுர் வேத மந்திரங்களிலேயே இறைவனை பேஷஜம் /மெடிசின் MEDICINE , பிஷக் /டாக்டர் DOCTOR என்று ரிஷிகள் அழைத்துள்ளனர்

Xxx

நாலாவது அரிய செய்தி :–இந்தத் தலத்தின் புனித மரம் வேம்பு ஆகும். தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மரம் வேப்ப மரம் என்பதைச்  சொல்லத் தேவையே இல்லை .

Xxx

ஐந்தாவது அரிய செய்தி :-இது அங்காரக க்ஷேத்திரமும் ஆகும்.. அந்த செவ்வாய்க்கு உரியவனான் முருகப்பெருமான் செல்வ முத்துக் குமாரசாமி என்ற பெயரில் இங்கு கொலு வீற்றிருப்பது குறிப்பிடத்  தக்கது.

எங்கள் குல தெய்வமான வைத்தீஸ்வரனை வணங்கச் செல்லுகையில், நாங்கள் ஐந்து அர்ச்சனைத் தட்டுகள் வாங்கி வைத்யநாத சுவாமி, தையல் நாயகி என்னும் பாலாம்பிகை, அங்காரகன், செல்வ முத்துக் குமரன், தன்வந்திரி ஆகிய அனைவர்க்கும் அர்ச்சனை செய்வோம்.

Xxx

ஆறாவது அரிய செய்தி:-

வைத்தீஸ்வரன் கோவில் குளமும் மிகப்பெரியது; பார்ப்பதற்கு அழகானது; மீன்கள் .தவளைகள் வசிக்காத குளம் என்ற பெருமையுடைத்து. கோபுரமும் குளமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது.

XXX

ஏழாவது அரிய செய்தி:-

ஊரின் பெயரும் கோவிலின் பெயரும் ஒன்று. இப்படி இருப்பது சில இடங்களில் மட்டுமே ; காண்க- வைத்தீஸ்வரன் கோவில்

பாலாம்பிகே ச வைத்யே ச பவரோக ஹரேதி ச

ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்

என்ற ஸ்லோகத்தையும்

XXX

நோய்கள் விலக:

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வாமய வினாசாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ என்ற ஸ்லோகத்தையும் சொல்லி பயன் அடைவோமாக .

தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வந்து நம் உடலில் உள்ள ஸர்வ ஆமய = எல்லா நோய்களையும் தீர்த்துவிடுவார்.

பேராயிரம்பரவி – திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர்

https://www.youtube.com › watch

6:36

… 6.54.8 தலம்: புள்ளிருக்கு வேளூர் பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் …

YouTube ·  · 15 Nov 2020

XXX

ENGLISH TRANSLATION OF THEVRAM OF APPAR BY

SEKKIZAR ADIPPODI DR T N RAMACHANDRAN

Alas, alas I have wasted many, many days not hailing

Him of Pullirukkuvelur! He is the Lord whom Devas

Hail with a thousand names; unto the servitors who part not

From Him. He secures the wealth of salvation; becoming

Mantra, Tantra and Medicine too. He cured the malady

Well-nigh impossible to cure; He is the martial one who held

The strong bow with which He gutted with fire

The triple hostile towns.

xxx

following is from shaivam.com

Praising thousands of names hailed by celestials, 

for the never separating devotees the One Who brings

the non-attainable wealth, Being the mantra, tantra 

and medicine Capable of curing even the incurable 

diseases, the Warrior Who held the mighty bow in hand 

burning the three cities, that Lord, the One in 

puLLirukku vELUr (vaiththIswaran kOvil),

without praising Him, oh I wasted so many days !

–subham—

tags-அப்பர் தேவாரம் , பேராயிரம் பரவி, வைத்தீஸ்வரன் கோவில், புள்ளிருக்குவேளூர் , தன்வந்திரி, நோய்கள் தீர 

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள் (Post.11,543-part 5)  

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543- Part 5

Date uploaded in London – 1 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 13

    கொக்காய் தோன்றிய கொடிய அரக்கனின்

    கூறிய அலகுகள் கூடிய வாய் பிளந்தழித்தோனும்

    கொடுங்கோல் கொற்றவன் இலங்கை சீமான் சிரங்கள்

    கொய்தது புறங்கையறியாப் புகழோன் பேர் பாட

    கூடமொன்றில் குழுமிய கெழுவுடைய மங்கையர் 

    குரு சாய்ந்து சுக்கிரனெழ திறந்த வானில் புட்கள் கூவிட

    மான் விழியும் மலர் போல் கண்களுமுடைய பாவையே!

    நீண்ட நித்திரை நின் கண் வளர நீராடாது பள்ளி இருந்து   

    நீலவண்ணனின் லீலையனுபவம் கண்ட கனவினை கூடி

    எம்முடனும் பகிர வேண்டின  நங்கை வாழியே

    வெண்ணெயுண்ட வாயாலே

    மண்ணையுண்டு மண்டலத்தை 

    கண்டத்தில் காட்டியோனே

    மண்ணுலக மங்கையொருத்திக்கு 

    கண்ட இடமெலாம் கண்ணனாக

    கண்ணனெங்கே கோதையங்கே    

     நாராயணன்

Xxx

மார்கழித்திங்கள் 14 

புறக்கடை வாவியுள் மலர்ந்த செங்கழுநீரும்

கூம்பிய ஆம்பலும் புலர்ந்த காலையில்   

காவி ஆடை மேனி தழுவிய வெண் பல்

மாதவர் ஊதிய சங்குடன் ஊர் கோயிலடைய

தோழிகளெம்மை முன்போதெழுப்ப

செப்பிய வாக்கு சப்பிட்டுப்போக

நாணமின்றி துயிலும் நங்கை நீ!

செங்கமலக்கண்ணும் சங்குமாழியும்

ஏந்திய தடக்கையோன் புகழ் பாட

எழுந்தெம்முடன் சேர்வாயென அழைத்த

ஆயிழையின் அணியியலோ திருப்பாவை

மறையுள் நிற்கும் மாயவனே

சிறையுள் பிறந்த மாதவனே

குறையொன்றில்லா கோவிந்தனே

முறையாக கோபியரின் கோபாலனே

உறைவதோ அவனுள்ளம் கோதையே

நாராயணன்  

Xxx

மார்கழித்திங்கள் 15

எம் தோழியே ! கிளி போல் சொன்னதைச்   

சொல்லும் இள நங்கையே! இன்னுமா உறக்கமென

வாயில் நின்ற தோழி மாரின் உரப்பலோடு கனிந்த

மொழியில் கூவியழைத்தோர் திறனறிந்துமிழைத்த       

தவற்றுக்குத் தானே காரணமென புறந்தோன்றிப் 

போந்தாருடன் பொருந்தி,கடுங்கண் களிரின்

கழுத்தைத் திருகியும் மாறா மாற்றானையும்

மாய்த்த மாயனைப் போற்றிப் பாடப் பாவைகளம்    

புக்கிய பெரு நங்கை வாழியே

ஆயிழையாள் ஆழ்வான் கை தவழ்ந்து

ஆயன் மாயன் தூயோனே அவளுள்ளுறைந்து

ஆயிரம் நாமமும் மேலும் பல பேருடையானை

ஆறைந்து பாசுரங்களாய் தொடுத்த பாமாலையே          

ஆதியும் அந்தமுமில்லாதோனை ஆனந்தத்தில்     

ஆழ்த்திய ஆண்டாளின் திருப்பாவை.

நாராயணன்

XXX

மார்கழித்திங்கள் 16

நாயகனான நந்தகோபனின் கோயிலும் 

நீண்டோங்கிய கொடிமரமும் தோரண

நெடு வாயிலும் காப்போர்களே!  நேற்றே 

நிரை வாய் அறை பறை தர மொழிந்த

குறையிலா மாயன் மணிவண்ணனைத்

துயிலெழப் பாட தூயோராய் வந்த ஆயர்

சிறுமியரெமக்கு ஆயன் அறை வாய் மூடிய

சீரான மணிக்கதவு தாள் திற வென வேண்டிய

சரணநெறியறிந்த சிறுமியர்கள் வாழியே.               

                    (16 முடிவு) 

xxx

அலரும் கன்றின் அரும்பசி நீக்க

ஆவின் மடி கனத்து முலை சொரிய

அம்மாவின் முலை தீண்டாப் பருகிய

பாலில் கடும்பசி தீர்ந்த கன்று போல்

காலின் சிலம்பொலிக்கக் கை வளை 

குலுங்கிய வேய்ங்குழலோனை கோதையின்

கலையாப் பூங்குழலில் வீசிய நறுமணம்

தொலைவிலுள்ளத் தேனீ போலீர்த்தது

நீரும் சோறும் உடுக்கையுமுற்றார்க்குப் பற்றுமளவு       (மார்கழித்திங்கள் 17)

ஈன்ற ஆயர் கோமான் நந்த கோபரே எழுவீரோ

வஞ்சியர் குலக்கொழுந்தும் குலதீபமான 

ஆய்ச்சியர்குல அரசி யசோதையே எழுவீரோ

ஆகாயத்தினூடே ஓங்கி உலகளந்து அமரர்க்கும்

அதிபதியோனே உறங்காதெழுவீரோ

அன்றைய இளையோனே இன்று முத்தோனாய்

கன்றோட்டிடும் கண்ணனுடன் பிறந்த பலராமா

எழுவீரோ வென குலத்தோருக்குப் பள்ளி

எழுச்சிப் பாடிய நிலமங்கை வாழியே                                           17

கோடி தேவர்கள் கூடி வந்தாலும்

நாடிய நாரணனைத் தேடிய கோதை

சூடிய மாலையோடு வாடிய முகத்தில்

பாடிய பாக்களைப் பழரசமாய் பருகிட

ஓடி வந்தானோ ஓங்கி உலகளந்தோன்

நாராயணன்

 —-to be continued…………………………

யுகம், தூய்மை, அடக்கும் வழிகள் பற்றி அம்பலவாணர் புது தகவல் (Post.11,610)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,610

Date uploaded in London – –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகத்தில் மூன்று பாடல்களில் (404142)  அம்பல வாணர் சொல்லும் விஷயங்கள் நாம் அறிந்தவையே. ஆனால் சிவபக்தரான அவர்சிவ பெருமானை மிகவும் உயர்ந்த நிலையில் காட்டுவதற்கு கையாளும் உத்தி வியப்பைத் தரும் .இதோ அவருடைய யுகக்கணக்கு :-

2000 சதுர் யுகம் = பிரம்மாவின் ஒரு நாள் ;

பிரம்மாவின் ஒரு நாள் = 14 இந்திரர்களின் பதவிக் காலம் ;

பிரம்மாவின் 100 வயது = ஒரு கல்பம்

ஒரு கோடி பிரம்ம கல்பம்  = திருமாலின் ஒரு நாள் ;

ஒரு கோடி திருமால்கள் வந்து போன காலம் = சிவனுக்கு ஒரு நொடி ;அதாவது சிவபெருமான் ஒரு சிரிப்பு சிரித்து தலையை அசைக்கும் காலம் என்பார் அம்பலவாணர்.

பிரம்மா, இந்திரன் பதவிகள் மாறக்கூடியவை என்று எல்லா புராணங்களும் செப்பும். ஆனால்  இந்தக் கால அளவோ திருமாலு டைய ஆயுளோ வேறு எங்கும் காணப்படாதது. சிவனை உயர்த்தி வைக்க இப்படிச் சொல்கிறார். கால ளவை மறந்துவிட வேண்டும்.

Xxx

அடுத்த பாடலில் தூய்மை பற்றிச் சொல்லுவதும் பெரும்பாலோர் அறிந்ததே ;

குதிரைக்கு – முகத்தில் தூய்மை;

அந்தணர்/ முனிவர்க்கு – பாதம் தூய்மை; அதனால் பாத பூஜை செய்கிறோம்.

பசுமாட்டுக்கு – பின்புறம் சுத்தம்; அதனால் பின்புறத்தை தொட்டு வணங் குவதோடு பசு மூத்திரம், சாணத்தையும் பயன்படுத்துகிறோம்.

பெண்களுக்கு உடல் எல்லாம் தூய்மை என்பது மனு நீதி நூலில் உள்ளது.

கண்ணாடிக்கு பின்புறம் ரசம் பூசப்பட்டிருப்பதால் முன்புறம் மட்டுமே தூய்மை.

கடைசியில், பெண்கள் மாதவிலக்கின் போது தூய்மை பெறுவதும், உலோகத்தால் ஆன பொருட்கள், புளி , சாம்பல் மண், சாணம் முதலியவற்றால் சுத்தம் செய்யப்படுவதும் உலகியலில் உள்ள விஷயங்களே.

Xxxx

கடைசி பாடலில் எதை எதை எப்படி அடக்கலாம் என்பதில் முக்கிய விஷயம் வருகிறது.

மாட்டினை அடக்கி ஆள = மூக்கணாங் கயிறு;

யானையை அடக்கி ஆள = அங்குசம்;

பாம்பினை வசப்படுத்த = மந்திர தந்திரம்

குதிரை யை அடக்கி ஆள= கடிவாளம்

கயவர்களை அடக்கி ஆள = சவுக்கடி

கோபத்தை அடக்கி ஆள = அறிவு.

அதைச் சொல்லவே 5 எடுத்துக்காட்டுகளைத்  தந்தார் .

கோபத்தை அடக்கினால் அபூர்வ சக்திகள்  கிடைக்கும். அத்தோடு வனவிலங்குகளும் கூட தீங்கு செய்யாது.

இதை வள்ளுவரும் பாரதியும் செப்புகின்றனர்

Xxx

அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

அதே பாடலில் பாரதி,

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சிசிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

. என்பான்.

Xxx

ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309)  என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின். -குறள் 309

உள்ளத்தில் கோபம் என்பதே தோன்றாவிடில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

Xxx

நரகத்தின் 3 வாசல் (பகவத் கீதை 16-21 )

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।

कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥

த்ரிவிதம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |

காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||

 ஆத்ம நாசத்துக்கிடமான  மூன்று நரக வாயில்கள்: காமம் க்ரோதம்/ சினம், , பேராசை.  ஆதலால், இம்மூன்றையும் விடுக

xxxxxxxxxxxxx

அறப்பளீசுர சதகம்    40. வானவர் கால அளவை

சதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்

     சதுமுகற் கொருதின மதாம்!

  சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்

     தாமும்ஈ ரேழ்சென் றிடும்!

மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்

     மாண்டபோ தொருகற் பம்ஆம்!

  மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய

     மால்தனக் கோர்தி னமதாம்!

துதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்

     தோன்றியே போய்ம றைந்தால்

  தோகையோர் பாகனே! நீநகைத் தணிமுடி

     துளக்கிடும் கால மென்பர்!

அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்

     கரசனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) தோகையோர் பாகனே – மயில் (போலும் உமாதேவியார்)

ஒரு பங்கிலுள்ளவனே!, அதிகம்உள பல தேவர் தேவனே – கூட்டமாக

உள்ள பலவகைப்பட்ட வானவர்க்கும் வானவனே!, தேவர்கட்கு அரசனே

– வானவர் தலைவனே! அருமை ……தேவனே!,

சதுர்யுகம் ஓர் இரண்டாயிரம்

பின்படின் சதுமுகற்கு ஒருதினமதாம் – (கிரேதாயுகம்திரேதாயுகம்,

துவாபரயுகம், கலியுகம் என்னும்) நான்கு கொண்ட யுகங்கள் இரண்டாயிரம்

கடந்தால் நான்முகனுக்கு ஒரு நாளாகும். சாற்றும் இத்தினம் ஒன்றிலே

இந்திர பட்டங்கள் தாமும் ஈரேழ் சென்றிடும் – கூறத்தக்க இந்த ஒரு

நாளிலே பதினான்கு இந்திர பதவிகள் கழிந்துவிடும், மதிமலியும்

இத்தொகையின் அயன் ஆயுள் நூறுபோய் மாண்டபோது ஒருகற்பம்

ஆம் – அறிவுமிகுந்த இந்தக் கணக்கின்படி நான்முகன் வயது நூறு கழிந்து இறந்தானானால் ஒரு கற்பம் எனப்படும், மாறிவரு கற்பம் ஒருகோடி

சென்றால் நெடியமால் தனக்குஓர் தினமதாம் – (இவ்வாறு) மாறிமாறி வரும் பிறமகற்பம் ஒருகோடி கழிந்தால் திருமாலுக்கு ஒரு நாளாகும், துதிபரவும்

இத்தொகையில் ஒருகோடி நெடியமால் தோன்றியே போய் மறைந்தால் –

துதிக்கத்தகுந்த இந்த எண்ணிக்கையில் ஒரு கோடி திருமால்கள் பிறந்து

மறைந்தால், நீ நகைத்து அணிமுடி துளக்கிடும் காலம் என்பர் – நீ சிரித்து

அழகிய திருமுடியை ஒருமுறை அசைக்கும் காலம் ஆகும் என்று அறிஞர் கூறுவர்.

Xxx

அறப்பளீசுர சதகம் 41. தூய்மை

வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;

     மறையவர்க் குயர்பு னிதமோ

  மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு

     மாசில்முற் புறம்அ தனிலே;

மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;

     மிக்கமட மாத ருக்கோ

  மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு

     மேவுவனி தையர்த மக்கும்

தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்

     தங்கம்ஈ யந்த மக்கும்

  தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்

     சாரும்மண் தாது சாணம்

ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மாமேரு வில்லியே – பெருமைமிக்க மேருவை

வில்லாக்கியவனே!, அனகனே – குற்றம் அற்றவனே!, அருமை ……..தேவனே!,

வாம் பரிதனக்கு முகமதனிலே அதிக புனிதம் – தாவிச்செல்லுங் குதிரைக்கு முகத்திலே மிகுதூய்மை, மறையவர்க்கு மலரடியிலே உயர் புனிதம் – மறையுணர்ந்த அந்தணர்க்கு மலரனைய அடிகளிலே மிகுதூய்மைஒளிகொள் கண்ணாடிக்கு மாசுஇல் முற்புறம் அதனிலே புனிதம் – ஒளியையுடைய கண்ணாடிக்குக் குற்றமற்ற முன்புறத்திலே தூய்மை, மேம்படும் பசுவினுக்குப்

பிற்புறத்திலே – உயர்ந்த ஆவுக்குப் பின் புறத்திலே (தூய்மை), மிக்கமட

மாதருக்கு மேனியெல்லாம் புனிதம் ஆகும் – சிறந்த இளம்பெண்களுக்கு

மெய்யெல்லாம் தூய்மையாகும், ஆசௌசமொடு மேவும் வனி

தையர் தமக்கும் – தீட்டுற்ற (பூப்படைந்த) பெண்களுக்கும், தாம்பிரம்

அதற்கும் – தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம் தமக்கும் – அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்

பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், புமனிதம் தரும் – தூய்மையைத் தருகிற,

வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை

புனிதம் ஆம்என்பர் – வருகின்ற வெள்ளத்துடன் புளியும்சுண்ணப்பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.

xxx

 அறப்பளீசுர சதகம்  42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று

     கோத்துவச விர்த்தி கொள்வார்;

  குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்

     கொண்டுவச விர்த்தி கொள்வார்;

படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்

     பற்றிவச விர்த்தி கொள்வார்;

  பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை

     பழக்கிவச விர்த்தி கொள்வார்;

விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு

     வீசிவச வீர்த்தி கொள்வார்;

  மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்

     விலக்கிவச விர்த்தி கொள்வார்;

அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்

     தையனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்து ஐயனே –

திருவடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரனைய திருவடியை

உடைய தலைவனே!, அருமை …… தேவனே!, கொடிய பொலி எருதை

இருமூக்கிலும் கயிறுஒன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் –

கொடுந்தன்மையுள்ள பொலிகாளையை (அதன்) இரண்டு மூக்கிலும் ஒரு

கயிற்றைக் கோத்து வசப்படுத்துவர், குவலயந்தனில் மதக்களிறதனை

அங்குசம்கொண்டு வசவிர்த்தி கொள்வார் – உலகத்தில் மதயானைகளை

அங்குசங்கொண்டு (தாக்கி) வசப்படுத்துவர், படியில்விட அரவை மந்திர

தந்திரத்தினால் பற்றி வசவிர்த்தி கொள்வார் – உலகில் நஞ்சுடைய நாகத்தை

மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர், பாய்பரியை நெடிய

கடிவாளமது கொடு நடைபழக்கி வசவிர்த்தி கொள்வார் – தாவும் குதிரையை

நீண்ட கடிவாளத்தைக்கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர், விடம்உடைய

துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு வீசி வசவிர்த்தி கொள்வார் –

நஞ்சுடைய தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர், மிக்க

பெரியோர்களும் கோபத்தை அறிவால் விலக்கி வசவிர்த்தி கொள்வார் –

பெரிய சான்றோர்களுங்கூடத் (தம்) கோபத்தை அறிவின் திறமையினால்

நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து (மனத்தை) வசப்படுத்துவர்..

–subham—-t

ags- யுகம், தூய்மை, அடக்கும் வழிகள் , அறப்பளீசுர சதகம் 

பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலைகள்! – 3 (Post.11,609)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,609

Date uploaded in London –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 3 

ச.நாகராஜன் 

மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறான்:- 

These convent schools will bring out children who look like Indians but are English by the brain and they won’t know anything about their country. They won’t know anything about their culture, they won’t have any idea about their traditions, they will not know their idioms, when such children are there in this country. Even if the British go away, English will not leave this country.”

“இந்த கான்வெண்ட் பள்ளிகள், குழந்தைகளை பார்க்க இந்தியர்கள் போலவும் ஆனால் மூளையால் ஆங்கிலேயர் போலவும் ஆக்கி விடும். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும் போதுஅவர்களுக்குத் தங்கள் நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்குத் தங்கள் பண்பாட்டைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. தங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பற்றி அவர்களால் அறிய முடியாது. அவர்களுக்குத் தங்கள் வழிவழியிலான மரபுச் சொற்கள் புரியாது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு அகன்றாலும்ஆங்கில மொழி இந்த நாட்டை விட்டுப் போகாது.”

இந்தக் கடிதத்தில் உள்ள கூற்று பெரும்பாலும் உண்மை என்பதை இன்றும் நாம் நமது நாட்டில் காண முடிகிறது. ஆங்கிலேயரைச் சார்ந்த பழக்க வழக்கங்களும் போகவில்லைஆங்கிலமும் போகவில்லை.

இதனால் நாடு முழுவதிலும் ஏற்பட்ட குழப்பங்களை ஒரு சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். எது மேலை நாட்டைச் சார்ந்ததாக இருந்தாலும் அதைப் புகழ்கிறோம்.

நமது பெருமைகளை நாமும் உணரவில்லை. நமது சந்ததிகளுக்கும் உணர்த்த முற்படுவதில்லை.

நமது பாடத் திட்டங்கள் வகுத்த பாடங்களோ நமது அடிமை வாழ்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து கூறுகிறது.

நமது புகழோங்கிய வீரர்களையோஅரசர்களையோரிஷிகளையோ பற்றிப் பேசுவதே இல்லை. நமது கண்டுபிடிப்புகள் நமக்கும் தெரியாதுஉலகத்தினருக்கும் தெரியாது.

தாய்மொழியை எவன் ஒருவன் புறக்கணிக்கிறானோ அவன் ஒரு போதும் முன்னேற முடியாது. இதை நன்கு அறிந்தவன் மெக்காலே.

ஆகவே தான் திட்டமிட்டு சம்ஸ்கிருதத்திலிருந்து ஆரம்பித்து எல்லா இந்தியமொழிகளையும் ஒழிக்க ஆரம்பித்தான் – பள்ளிகளை எல்லாம் மூடி!

இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்ல வேண்டும்.

பாடத் திட்டத்தை மாற்றி நமது புகழோங்கிய பண்டைய நாளின் பெருமையையும் அதே வழியில் சென்று புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் வழியையும் சொல்லித் தர வேண்டும்.

 நமது பாரம்பரிய கலாசாரத்தைப் பற்றிய நமது நூல்களை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

இதைக் கற்று வியந்து போற்றும் அயல் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளைத் தொகுத்து அதைப் பரப்ப வேண்டும்.

புத்தம் புதிய கலைகளையும் அதன் நுட்பங்களையும் கற்று அதில் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து உலகை அனைவரும் சீரோடும் சிறப்போடும் அறிவோடும்ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும்இறை பக்தியோடும் வாழும் வழியை உலகிற்கு நல்க வேண்டும்.

பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவனின் இன்றைய தலையாய கடமை இது தான்இது ஒன்று தான்!

***                      இந்தத் தொடர் நிறைவுறுகிறது

British Atrocities- Part 2 (Jallianwala Bagh Massacre)- Post No.11,608

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,608

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Let me give you more from Sathnam Sanghera’s book Empireland 

He describes the Jallianwala Bhag Massacre elaborately

Jallian wala Bagh is a Park in Amritsar, about the size of Trafalgar Square in London.

About a century ago at 5-15 pm on a Sunday in April 1919, General Reginald Dyer stormed in with what he called his ‘special party’ of fifty armed infantry. Having recently arrived in the city to quash a supposed uprising against the British, and having hours earlier issued what he claimed were clear warnings against public gatherings, he concluded that the people assembled there — between 15000 and 20,000 men women and children— were intentionally resisting Raj rule. With no warning, he ordered his troops to fire. As one the huge crowd seemed to sink to the ground according to witness Sergeant WJ Anderson, a whole flutter of white garments . There were few opportunities to escape: those climbing walls were targeted and shot, as was seen anyone seen running to the exit.

 At one point according to British eyewitness, Dyer asked one of his officers ‘Do you think they have had enough? ‘before adding, ‘No, we will give them four rounds more’. And at the end of ten minute carnage ,1650 shots had been fired an average of 33 bullets per soldier.

  1000 people massacred

 The official number of deaths was eventually set at 379, with around three times as many wounded, but other sources put the number of dead between 600 and 1000. Other estimates put the dead to thousands.

 The Jallianwalla Bagh Massacre is one of the key events of the twentieth century, arguably marking the moment of the Raj lost its grip on the largest empire in human history, after which the momentum for Indian Independence became unstoppable. The Nobel Laureate Ravindranath Tagore described it ‘as without parallel in the history of civilised governments’ and returned his knighthood in protest.

 The independence activist Motilal Nehru, father of the first prime minister of India, symbolically burned his European furniture and clothes. Gandhiji declared that ‘he lost his trust in British justice’ , saying that ‘he underrated the forces of evil in the empire’.

 And in Britain even the Imperialist Winston Churchill famously described the incident as ‘monstrous’, while the Labour politician J C Wedgwood declared ‘it had destroyed our reputation throughout the world…… and damns us for all the time’.

 The massacre happened on 13th April 1919 , the Vaisakhi day. Sikhs celebrate it to commemorate the creation of the fellowship of the Khalsa by Guru Govinda Singh .

 The crowd at Jallianwalla Bagh had gathered there in peace. Some were there to listen to a political speech, but the majority were ordinary students , watch makers, barbers, hawkers, pedlars and pilgrims visiting the Golden Temple to mark the festival of Vaisakhi.

That day was considered auspicious and Maharajah Ranjit Singh chose the festival day in 1801 to proclaim himself the ruler of the Sikh Empire.

 The victims , most of whom were entirely unaware of the warnings Dyer had erratically issued across the city, included women and more than forty children, some as young as one.

 Dyer remarked afterwards that he would have used the machine guns on his armoured cars if he could have physically got them into the Bagh, but the rifles used by the troops were deadly enough. A single bullet from.303 Lee Enfield rifle of the type used in the massacre could rip through several bodies— stray shots killed at least one woman outside the Bagh— and the weapons could fire tens of rounds a minute. A military curfew prevented many injured in getting treatment. They died subsequently.

 Accounts show that the doctors who later treated victims were harassed by the authorities for the details of the patients, because anyone at Jallanwalla Bagh was labelled a potential enemy of the state. Groups of men with no evidence whatsoever, deemed to have been involved in riots or disturbances before the massacre were arrested, ordered to stand in the brutal heat for hours, flogged until they passed out, dragged by the beard, kicked up and down the streets and subjected to the sexual violence that was routine in colonial India.

 Although eventually forced to resign by the army council , Dyer was subsequently effectively exonerated by the House of Lords, and the Morning Post, which was eventually absorbed into the Daily Telegraph, started a public fund to defend him. Contributors to the fund , who included Rudyard Kipling, and one who remembers 1857, raised £26000– the equivalent today of £4.4 million. In contrast the relatives of those killed received on average just 8700 rupees each — modern equivalent £141537.

 To be continued………………………..

 Tags- Jallaianwala Bagh, British massacre, British, Atrocities, Amritsar, Dyer

Tamil Hindu Encyclopaedia -44 நீர்த்துறைக்‌ கடவுள்‌ Nereids of Greeks (Post No.11,607)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,607

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பேய் பிசாசு பூதம் Ghosts/ Ghouls/ Spirits  continued

This is part 3

நீர்த்துறைக் கடவுள் WATER NYMPHS

Water gods were called நீர்த்துறைக் கடவுள் in Sangam Tamil literature and the Greeks called them Nereids. So Tamil word found in the Rig Veda Neer for water is not a Tamil word. It is in Greek as well. It is a word common for Tamil and Sanskrit. All ancient languages are derived from Sanskrit and Tamil.

We have references in Ainkurunuru(nuuru) for the water nymphs troubling womenfolk:-

. ‘உண்துறை அணங்கு இவள்‌: (ஐங்‌.28:1),

துறை எவன்‌ அணங்கும்‌‘ (ஐங்‌.88:1),

அருந்திறற்‌ கடவுள்‌ அல்லன்‌! – பெருந்துறைக்‌ கண்டு இவள்‌

அணங்கியோனே: (ஐங்‌.188:3-4)

கடவுட்‌ கற்சுனை: (நற்‌.34:1), ‘சூர்ச்சுனை”  (Even in Ponds the nymphs live)

xxxx

(௮௧.91:4) . ‘நல்யாற்று நடுவும்‌! (பரி.4:67),

கவின்பெறு துருத்‌தியும்‌‘ (முருகு,888) Even in river islands according to Paripatal and Murugu.

Xxx

Tamils believed that the gods of nature live where the river meets the sea

கொடுஞ்சுழிப்‌ புகாஅர்த்‌ தெய்வம்‌ நோக்கி,

கடுஞ்சூழ்‌ தருகுவன்‌நினக்கே‘ (அக.110:4-5)  according to Akam110.

A woman swears on God residing there.

Xxx

Sea Goddess

Of all the Water Gods or Nymphs, Sea God was the great one. Women used to swear on sea gods , according to Kali.131

பெருங்கடற்‌ தெய்வம்‌ நீர்நோக்கித்‌ தெளித்துஎன்‌.

திருந்திழை மென்றோள்‌ மணந்தவன்‌! (கலி.131:1-2)

Xxx

Following are the references to Sea Gods found in Sangam Tamil corpus:

. ‘அணங்குடை முந்நீர்‌:.   (Nymph residing Sea) Akam(௮௧.820:1), ‘பெருந்துறைப்‌ பரப்பின்‌ அமர்ந்து உறை.

அணங்கோ?Natr.( நற்‌.185:2-6),

 ‘கடல்கெழு. செல்வி: Akam(௮௧.370:18)

Xxx

The Taml Hindus not only described the Sea Nymphs like the Greek’s Oceanids , but Sangam Tamils also described they wear garlands of Gnazal flowers and Neithal flowers:

ஞாழல்‌

வண்டுபடத்‌ ததைந்த கண்ணிநெய்தல்‌.

தண்நறும்‌ பைந்தார்‌ துயல்வர. அந்தி,

கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு ‘ Akam 270 (௮௧.270:9-12)

Xxx

Tamil Hindus worshipped Sea Goddess with folded hands (Namaste) according to Akam 240

அணங்குடைப்‌ பனித்துறை கைதொழுது ஏத்தி,

யாயும்‌ ஆயமோடு அயரும்‌: (அ௧.240:8-9)

xxx

They also offered Pearls, Special Conches to the Goddess

வினைநவில்‌ யானை விறற்போர்ப்‌ பாண்டியன்‌

புகழ்மலி சிறப்பின்‌ கொற்கை முன்துறை

அவிர்‌ கதிர்‌ முத்தமொடு வலம்புரி சொரிந்து,

தழை அணிப்‌ பொலிந்த கோடு ஏந்து அல்குல்‌

பழையர்‌ மகளிர்‌ பனித்துறை பரவ‘ (௮க.201.3-7)

Xxx

Valmiki and Kamban

In Valmiki and Kamba Ramayana, we see Lord Rama worshipping the Sea before building a bridge across the sea to Sri Lanka. When Varuna, the Sea God, delayed his presence, Rama became angry and then Varuna apologised.

We see such scenes in Sangam literature and later Tiru Vilaiyadal Purana. When Pandya Kings became angry they fight with the sea and make it go backward.

We see such stories in Parasurama reclaiming Land in Kerala (old Chera country). Even today Malayalees boast that they live in God’s Own Land.

In Sangam period Tamils celebrated INDRA VIZA to pacify Sea God. When they stopped doing it, Sea Gods became angry and caused havoc according to Tamil epics Silappadikaram and Manimegalai.

One of the oldest Pandyas who did innumerable Yagas and Yajnas was Mudukudumi Peruvazuthi (In Sanskrit Jata varman). His celebration of such Sea festival is in Puram 9-10

‘ முந்நீர் விழவின்‌ நெடியோன்‌! (புற.9:10)

Xxx

We saw in one of the passages that Tamil women gave expensive pearls and rare Valampuri Changu (Dextrous Conch) to Sea Goddess. Ordinary Tamils offered sea Gods just Bali in the form of garlands, toddy, goat (sacrificial offering) like they offered for Land Gods according to Akam verse 156

கள்ளும்‌ கண்ணியும்‌ கையுறையாக:

நிலைக்கோட்டு வெள்ளை நால்செலிக்‌ கிடாஅய்‌.

நிலைத்துறைக்‌ கடவுட்கு உளப்பட ஓச்சி‘ (௮௧.166:13-18)

Xxxx



MAHABHARATA YAKSHA PRASNA AND TAMIL TREE GODS

In the Mahabharata Vana Parva chapter we come across the Tree Yaksha and we have123  beautiful questions and answers. Tamils also believed that Gods or Spirits live on Trees.

In Valmiki Ramayana we see Sita Devi worshipping the Banyan Tree. Tamils strongly believed that Gods reside there.

In Vishnu Sahasranama we see Three Trees belonging to the same family and same genus are portrayed as Lord Vishnu.

Ficus Bengalensis (Nyagrodha), Ficus Glomerata (Udumbara) and Ficus Religiosa (Asvaththa)

Throughout South East Asia, we see Vata Tree/ banyan tree as abodes of all Gods (Anghor Vat/ banyan tree temple is the largest temple in the world)
vat= Vata Tree= Banyan Tree= Angor VAT

Sangam Tamils worshipped these trees as well

It is interesting to find such belief existed from Vedic Age.

காடும்‌. காவும்‌ கவின்‌ பெறு துருத்தியும்‌‘ (முருகு.223)

Forests, parks and gardens, river islands are the places where Gods are- Murugu 223

Tamils believed that Gods reside at the bottom part of the trees

கடவுள்‌ மரத்த முள்‌ மிடை குடம்பை(௮௧.270:18),

*நல்‌௮ரை மராஅத்த கடவுள்‌: (மலைபடு.395),

தொன்றுஉறை. கடவுள்‌ சேர்த்த பராரைமன்றப்‌ பெண்ணை: (நற்‌.300:3-4),

தெய்வம்‌ சேர்ந்த. பராரை வேம்பில்‌:. (௮௧.309:4) .

Xxx

More references to Banyan Tree ஆலமரம்‌

குறுந் 15-1; நாற்ற.343-3/6;  புற.199:1; கலி.101:18-14, 106:38-29),

மரா மரம் குறுந்.87-1; : மலைபடு.395; கலி.101:13),

Xxx

Following  trees were also considered sacred:-

Kadampa கடம்பு -(பதிற்‌.88:6 கலி.10:38);

Vengai வேங்கை (நற்‌.216:6-7),

Omai ஓமை (௮௧.297:11),

Vempu/ Neem/ Margosa வேம்பு (அ௧.309:4-6),

Maruthu மருது (பெரும்‌.232);

Palmyra/ Panai பனை (நற்‌.303:3-4),

Kalli கள்ளி (புற.260:5)

Because of this Hindu belief Nature was preserved in its pristine form.

Today in all Tamil temples we have sacred trees called  ‘sthala vrksha’.

Xxx

Victorious Goddess in Vaakai Tree

Like the Greeks olive tree, Tamils considered Vaakai Tree as the symbol of Victory. They wore Vaakai flowers when they won the war. And the goddess of victory in Hinduism is Kotravai/ Durga.

So Tamils believed that Goddess live in Vaakai Tree

.கடவுள்‌ வாகைத்‌ துய்வீ” (பதிற்‌:66-15),

Ancient commentators gave us this information.

Xxx

Worshipping Trees with Goat Blood

Tamils worshiped trees in the traditional way. They offered goat and rice to the gods or spirits living in tree. They saw them as troublesome spirits

மன்ற மராஅத்த பேஎம்‌ முதிர்கடவுள்‌‘ (குறுந்‌.87:1) troublesome god

Some interesting similes show that Tamil Hindus garlanded the trees to satisfy the gods residing there. When the Tamil Yadavas went to fight with the bulls, some of them were gored and butchered by them and their intestines were picked up by the vultures. A few of them fell on the tree branches and were hanging. A poet compared these hanging human intestines to hanging garlands of devotees (Kali 106-2/29)

Another scene show that the goats slaughtered for Tree Gods and the rice mixed with blood offered to such gods and the food was shared by crows as well

நெடுவீழ்‌ இட்ட கடவுள்‌ ஆலத்து,

உருபலி அருந்திய தொகுவிரற்‌ காக்கை * (Banyan Tree God was offered Bali and crows sharing)

புன்கண்‌ அந்தி கிளைவயின்‌ செறிய’ (நற்‌.343:4-6),

தெய்வம்‌ சேர்ந்த பராரை வேம்பில்‌

கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்‌, 

புலவுப்‌ புழுக்கு உண்ட வான்கண்‌ அகல்‌ அறை’ (௮௧.309:4-6)

To be continued…………………………………………………………

tags- Tamil Sangam literature, Tree nymphs, Water goddess, Spirits

சொல்லக்கூடாத 9 விஷயங்கள் : அம்பலவாணர் தரும் பட்டியல் (Post No.11,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,606

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பிறந்த ஆண்டும்,

2.கிடைத்த செல்வமும்

3.கோள்களின் பலனும்

4.உண்டுவரும் மருந்தும்

5.குரு உபதிசித்த மந்திரமும்

6.தனக்கு நேர்ந்த மானக்கேடும்

7.கொடுத்த கொடையும்

8.பெண்களின் சேர்க்கையும்,

9.தன்னுடைய பெருமையும்

சொல்லாதே, சொல்லாதே, சொல்லாதே!

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

Xxx

சொல்ல வேண்டியது 3

தன் நோயையும்,

பசியையும்,

தான் செய்த பாவத்தையும்,

பிறரிடம் சொல், சொல்சொல்.

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

xxxx

அறப்பளீசுர சதகம் 39. மறைவும் வெளிப்படையும்

சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,

     தீதில்கிர கச்சா ரமும்,

  தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்

     செப்பிய மகாமந்த் ரமும்,

புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி

     புனையும்மட வார்க லவியும்,

  புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது

     புந்திக்கு ளேவைப் பதே

தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்

     தன்பிணியை யும்ப சியையும்,

  தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்

     தஞ்செவியில் வைப்ப தியல்பாம்!

அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை

     அன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

xxxx

     (இ-ள்.) அல்மருவு கண்டனே – (நஞ்சு தங்கியதால்) கருமை

பொருந்திய கழுத்தை உடையவனே!, மூன்று உலகும் ஈன்ற

உமைஅன்பனே – மூவுலகத்தையும்பெற்ற உமையம்மையார் காதலனே!,

அருமை ……. தேவனே!, சென்மித்த வருடமும் – பிறந்த ஆண்டும்,

உண்டான அத்தமும் – கிடைத்திருக்கும் செல்வமும், தீதுஇல் கிரகச்

சாரமும் – குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், தின்றுவரும் ஒளடதமும்- உண்டுவரும் மருந்தும், மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும் –உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், புன்மை அவமானமும் –(தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், தானமும் – (தான் பிறர்க்குக் கொடுத்த) கொடையும் பைம்பொன் அணிபுனையும் மடவார்கலவியும் – புதிய பொன்னாலான அணிகளை அணிந்த பெண்களின் சேர்க்கையும்,புகழ்மேவும் மானமும் – புகழ்பொருந்திய பெருமையும், இவை ஒன்பதும் –

(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தமது புந்திக்குள் வைப்பதே தன்மம்

என்று உரைசெய்வர் – தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும்

என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை), ஒன்னார் கருத்தையும் –

பகைவரின் நினைவையும், தன் பிணியையும் – தன் நோயையும்பசியையும்– (தன்) பசியையும், தான்செய்த பாவமும் – தான் இயற்றிய பாவத்தையும், இவையெலாம் – (ஆகிய) இவைபோன்றவற்றை, வேறு ஒருவர்தம் செவியில்வைப்பது இயல்பாம் – மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்)இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)

     Xxxx

சுருக்கமான பதில்

9 விஷயங்களை ஏன் சொல்லக்கூடாது ?

ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது ; உலகம் முழுதும் கண் திருஷ்டியில் நம்பிக்கை இருக்கிறது . நமக்கு தீமை ஏற்படலாம். மேலும் பொறாமைத் தீ வளரும் ; அதன் மூலமும் தீங்கு நேரிடலாம். நம்முடைய அகந்தையே நம்மைப் பாதிக்கலாம்

xxx

3 விஷயங்களை ஏன் சொல்ல வேண்டும் ?

செய்த பாவம் நோய் , பசி இவற்றைச் சொன்னால் பிறர் உதவலாம். நல்லாத்மாக்கள் நமக்காக பிரார்த்தனை செய்யலாம். பாவ மன்னிப்பு இந்துக்களின் எல்லா து திகளிலும் உள்ளது.அதைச் சொல்லாத ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் ல்லை . அதனால் பாப விமோசனம் கிடைக்கும்

பிற அறிஞர்களும் இதையே செப்புவர்; ஒப்பு நோக்குக:–

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளைஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ? 

இதெல்லாம் கூடத் தவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும். 

இதனால்தான் அவ்வையாரும், 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439) 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

Xxxx

மனு நீதி நவில்வது 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162) 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

Xxxx

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம் 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

Xxx

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான். 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:– 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

பரந்த கிரணங்களை உடைய சூரியனையும் கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும். ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல், சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

Xxxx

வெளியிடக்கூடாதவை

குருவுப தேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்,

மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தன்மம்,

அரியமந் திரம்வி சாரம் ஆண்மையிங் கிவைக ளெல்லாம்,

ஒருவருந் தெரிய வொண்ணா (து) உரைத்திடில் அழிந்து போமே.

——விவேகசிந்தாமணி

குரு தனக்கு தனியாக செய்த உபதேசம், பெண்களோடு தான் அனுபவித்த இன்பம், தன்னிடமுள்ள நற்பண்புகள், கல்வி, வயது, தான் செய்த தான தர்மம், குருவிடமிருந்து பெற்ற மந்திரம், ஞானம், தன் ஆண்மை நிலை ஆகியவற்றை ஒருவரும் அறிந்துகொள்ளாதவாறு பாதுகாக்கவேண்டும். வெளியே சொன்னால் அழிவு நேரிடும்.

xxxxx

சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

இதோ ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்:

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் ஸம்ஸ்க்ருதத் தனி ப்பாடல் திரட்டில் ஒரு ஸ்லோகம் இதோ-

சொல்லக்கூடாத விஷயங்கள் 5; அவையாவன:-

1.அர்த்தநாசம்- பொருள் இழப்பு;

2.மனஸ்தாபம் – கருத்து வேறுபாட்டால் மனத்தில் ஏற்பட்ட கசப்பு;

3.கிருஹே துஸ் சரிதானி- வீட்டில் நடந்த கெட்ட விஷயங்கள்; (Don’t wash dirty linen in public)

4.வஞ்சனம் – பிறர் நமக்கு செய்த துரோகம்;

5.அபமானம் – நாம் அவமானம் அடைந்த விஷயங்கள்.

அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச

வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாசயேத்’.

புத்திமான்கள் இவைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டார்கள்

–சுபம்–

 tags–சொல்லாதே, சொல்லக்கூடாத, விஷயங்கள் , அம்பலவாணர், மனு, விவேக சிந்தாமணி