பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? (Post No.11,328)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,328

Date uploaded in London – –    6 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?

ச.நாகராஜன்

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிறைய உண்டு. அவற்றை எப்படித் தான் தீர்ப்பது?!

ஒரு ராஜகுமாரி இருந்தாள். அவளுக்குக் கண்களில் ஒரு பிரச்சினை இருந்தது. கண்களில் ஒரே எரிச்சல்.

ராஜகுமாரி அல்லவா? அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

ராஜா மிகவும் வருந்தினார்.

ராஜ வைத்தியர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்களுக்கு மருந்தைத் தந்தனர். ஆனால் ராஜகுமாரியோ அதை போட்டுக் கொள்ள மறுத்தாள். தனது கண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அப்படித் தொடுவது கண்களின் எரிச்சலைக் கூட்டியதோடு புண்ணும் உருவாக ஆரம்பித்தது.

இது தாங்க முடியாமல் போன போது ராஜகுமாரி ஓவென்று கதற ராஜா இதை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் சன்மானம் தருவேன் என்று முரசறிவித்தார்.

பலரும் முயன்றனர். ஒருவராலும் ராஜகுமாரியின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். அடுத்த நாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் தான் மிகப் பெரிய வைத்தியர் என்றும் தெரிவித்தான்.

ராஜா அவனை ராஜகுமாரியைப் பார்க்க அனுப்பினார்.

அவன் ராஜகுமாரியைப் பார்த்தான். அவள் அலறுவதையும் பார்த்தான். அவள் எந்த ஒரு வித  மருந்தையும் எடுத்துக் கொள்ள மறுப்பதோடு தன் கண்களை தானே குத்திக் கொண்டிருப்பதையும் அவன் மற்ற மருத்துவர்களிடமிருந்து கேட்டு அறிந்திருந்தான்.

அவளைப் பத்து நிமிடம் பார்த்து விட்டு, ‘ஹா ஹா’ என்று சிரித்தான்.

ராஜ குமாரி திகைத்தாள்.

“ஏன் இந்த சிரிப்பு” என்று வைத்தியரை அவள் கேட்டாள்.

“ஆஹா! இது ஒரு பிரச்சினையே இல்லையே! கண்கள் சரியாகத் தான் இருக்கிறது. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது” என்றான் அவன்.


“எந்த இடம்? என்ன பிரச்சினை?” என்று திகைப்புடன் கேட்டாள் ராஜகுமாரி.

“ஐயோ! அதைச் சொல்ல முடியாதே! சொல்லவும் கூடாதே! ராஜா அனுமதி தந்தால் மட்டும் தான், அது பற்றிப் பேசவே முடியும். நான் வருகிறேன்!” என்றான் அவன்.

திகைத்துப் போன ராஜகுமாரி உடனே தன் தந்தையை வரவழைத்து வைத்தியர் கூறியதைச் சொல்ல ராஜா, இளம் வைத்தியரைப் பார்த்து, ”நான் அனுமதி தருகிறேன். பிரச்சினை என்ன?” என்றார்.

“அரசே! ராஜகுமாரியின் கண்களில் ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது. அதுவும் பெரிய பிரச்சினை” என்றான் இளைஞனான அந்த வைத்தியர்.

“என்ன அது?” – ராஜா கேட்டார்.

“அரசே! ராஜகுமாரிக்கு கண்களில் பிரச்சினையே இல்லை. ஆனால் ராஜகுமாரிக்கு ஒரு வால்  முளைக்கப் போகிறது. அது ஒன்பது கஜ நீளம் அளவு பெரிதாக வளரப் போகிறது. ஆனால் அது தோன்றியவுடன் ராஜகுமாரி அதைப் பற்றிச் சொல்லி விட்டால் அதை உடனே என்னால் குணமாக்கி விட முடியும்” என்றான் அவன்..

ராஜகுமாரி பயந்து போனாள். அவள் தனது வாலைப் பற்றி நினைக்க ஆரம்பித்து அது எப்போது தோன்றப் போகிறது என்பதையே நினைத்திருந்தாள்.

சில நாட்கள் கழிந்தன. கண்களைத் தொடவே இல்லை ராஜகுமாரி.

கண்கள் பூரண குணம் அடைந்தன. எரிச்சல் இல்லவே இல்லை.

ராஜாவிடம் வந்த வைத்தியர் ராஜகுமாரியின் கண்கள் எப்படி இருக்கிறது என்று கேட்டான்.

மனமகிழ்ச்சியோடு ராஜா, “கண்கள் பூரண குணம் அடைந்து விட்டன, ஆனால் வால் தான் இன்னும் தோன்றவில்லை” என்றார்.

ராஜகுமாரியும் அதை ஆமோதித்தாள்.

வைத்திய இளைஞன் கூறினான் : “வால் தோன்றவே தோன்றாது. சிறிய பிரச்சினையை ஊதி ஊதி ராஜகுமாரியே வளர்த்து வந்ததால் இப்படிச் சொன்னேன். அழகிய ராஜகுமாரிக்கு வால் எப்படி வரும், வளரும்?” என்ற இளைஞன் சிரித்தான்.

ராஜா அவனுக்கு ஆயிரம் பொன்களை அளித்ததோடு அவனை நிரந்தரமாகத் தன்னுடன் இருக்குமாறு வேண்டினார்.

இந்த புத்தமதக் கதை கூறும் நீதி பெரிய நீதி! அது என்ன?

எப்போதும் நாம் தான் பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினையாக இனம் காண்கிறோம். தானாகத் தீரக் கூடிய சிறிய பிரச்சினையை ஊதி ஊதி விட்டுப் பெரிய பிரச்சினையாக ஆக்குகிறோம். அப்போது பிரச்சினை மட்டுமே வாழ்க்கையாக ஆகி விடுகிறது.

“எனது பிரச்சினை, என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு, எனது ஆசை, எனக்கு வேண்டியவை, எனக்குப் பிடிக்காதவை” – இவை நம்மை ஆக்கிரமிக்கும் முன்னர் அவற்றை நாம் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

சுயநலத் துடிப்புகளாலும் மறுப்புகளாலும் வாழ்க்கையை நாமே பாழாக்கிக் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 பிரச்சினைக்கே பிரச்சினை தந்து அதை அண்டவிடாமல் செய்ய இதுவே சிறந்த வழி!

***

புத்தக அறிமுகம் – 78

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 4)

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

 பொருளடக்கம்

1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

2. தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள்!

3. அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

4. காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

5. பசுமை இயக்கம் பரவட்டும்!

6. உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

7. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!

8. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

9. பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம்

10. கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்!

11. ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம்

12. கடலில் ஏற்படும் ஒலி மாசால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும்

   அபாயம்!

13. தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி!

14. பசுமையைப் பாதுகாப்போம் ஆற்றலைச் சேமிப்போம்!

15. சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கப் பல வழிகள் உண்டு!

16. காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள்!

17. நதிகள், குளங்களின் தூய்மையைக் காப்போம்!

18. கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு!

19 கடலில் கலக்கும் சாத்தான்கள்!

20. நாம் காக்க இருப்பது ஒரே ஒரு பூமி தான்!

21. புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும்!

22. புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை

23.. அழிந்து வரும் மழைக் காடுகள்!

24. உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்!

25. கார்பன் தரும் சவால்!

26. மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை!!

27. ஒளியீரி விளக்குகளுக்கு மாறுவோம்!

28. காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே!

29. ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்

30. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

31. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின்

   வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

32. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

33. உரத்தொழிற்சாலைக் கழிவுகள்!

34. வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே!

35. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!

36. அதிக ஒலியைக் கட்டுப்படுத்துவோம்!

37. இமயமலைக் காடுகளைக் காப்போம்!

38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

39. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!

40. பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!

*

இந்த நூலுக்கு மேலாண்மை இயல் பயிற்சியாளரும் எழுத்தாளருமான திரு என்.சி. ஶ்ரீதரன் அவர்கள் அளித்துள்ள  முன்னுரை:

முன்னுரை

திரு. ச. நாகராஜன் அவர்களின் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் நான்காம் பாகம்’ படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.  இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நான் எங்கோ படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஒரு வீட்டுத்தலைவன் தன்னுடைய கையில் ஒரு பையுடன் வீட்டுக்குள் நுழைகிறான். வந்தவன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறான். அது என்னவென்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அந்தப்பக்கம் போன ஒரு எலியும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவன் வெளியே எடுத்தது ஒரு எலிக்கத்திரி. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த எலி தலைதெரிக்க ஐயோ! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! இந்த வீட்டில் ஒரு எலிக்கத்திரி இருக்கிறது! என்று கதறியவாறு ஓடியது.  எதிரே வந்த ஒரு கோழியிடம் தான் பார்த்ததைச் சொல்லியது. ஆனால் கோழியோ எலிக்கத்திரி இருந்தால் அது உனக்கு பிரச்சனை. என் நேரத்தை வீணாக்காதே என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்கப் போனது. அந்த எலி அடுத்து தன் எதிரே வந்த ஆட்டிடம் இதைப் பற்றிச் சொல்லியது. அதற்கு ஆடு நானும் கேள்விப்பட்டேன் எலியாரே. இருந்தாலும் சற்று கவனமாக இரும். நல்ல வேளை இதனால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தப்பித்தேன் என்று  சொல்லியவாறு சிரித்துக்கொண்டே போனது. அதன் பிறகு அந்த எலியின் முன்னால் ஒரு எருமை மாடு வந்தது. எலியை ஒரு மாதிரி பார்த்தவாறே  என்ன எலியாரே, நானும் கேள்விப்பட்டேன். உன் பிரச்சனையைப் பற்றி ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே? என்னுடைய நேரத்தை வீணாக்குவதற்கு முன் நான் கழண்டு கொள்கிறேன் என்று சொல்லியவாறே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தது. 

ஆக, எலியின் பிரச்சனையைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. 

          அன்று நடு இரவு. ‘டப்’ என்று ஒரு சப்தம் கேட்டது. சரி, எலிதான் எலிக்கத்திரியில் மாட்டிக் கொண்டுவிட்டது என்று நினைத்து, அந்தக் குடும்பத்தலைவி, இருட்டில் கண் தெரியாமல் தட்டுத் தடுமாறி விளக்கைப் போட்டாள். எலிக்கத்திரியில் சிக்கியது எலியல்ல. ஒரு விஷப்பாம்பின் வால் பகுதி மட்டும்.  அரைகுறையாக மாட்டிக்கொண்டிருந்தது. வலியால் துடித்துக் கொண்டிந்த அந்தப் பாம்பின் தலைமேல் அந்தக் குடும்பத்தலைவி காலை வைக்க, அது அவள் காலைத் தீண்டியது. குடும்பத்தலைவன் ஒரு நாட்டு வைத்தியரை உடனே அழைத்து வந்தான். விஷம் தலைக்கு ஏறக்கூடாது என்றால் முதல் உதவியாக ஒரு டம்ளர் கோழி சூப் கொடுக்க வேண்டும் என்றார் அவர். குடும்பத்தலைவன் உடனே அந்தக் கோழியை எடுத்துக் கொண்டு ஒரு கையில் கத்தியுடன் சமையலறை நோக்கிச் சென்றான். 

           மறுநாள் அந்தக் குடும்பத்தலைவின் உடல்நிலை மோசமாக, விருந்தினர்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பித்தனர். அனைவருக்கும் அந்தக் குடும்பத்தலைவன் ஆட்டுக்கறி சமைத்து உபசரித்தான்! சில நாட்களில் அந்தக் குடும்பத்தலைவி இயற்கை எய்தினாள். அவருடைய பதினாறாம் நாள் சடங்கிற்கு அந்த மாடு உணவானது! 

ஆக, ஒருவருக்கு வந்த பிரச்சனை அனைவரையும் பாதிக்கும் என்று கோழியோ, ஆடோ அல்லது மாடோ உணரவில்லை.

இந்தக் கதை நம்முடைய இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும். காடுகள் அழிவது பற்றியோ, ஓசோன் அடுக்கில் ஓட்டை விழுவது பற்றியோ, நம்முடைய சுற்றுப்புறம் மாசு அடைவது பற்றியோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பிரச்சனையைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இது பற்றிய எளிமையான புத்தகங்கள் இல்லை.

இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ளது என் நீண்ட நாள் நண்பர் திரு. ச. நாகராஜன் அவர்களுடைய இந்தப் புத்தகம். சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறையாவது சுற்றுப்புறச் சூழலை நாம் எப்படியெல்லாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம், இனிமேலும்  நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.                   

திரு. ச. நாகராஜன் அவர்கள் இது போன்ற விழிப்புணர்வு புத்தகங்களை மேன்மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 20-3-2014                                                                            திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்

*

இந்த நூலுக்கு நான் அளித்துள்ள என்னுரை

என்னுரை

    சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடாமல் காக்க வேண்டும் என்பது வேத காலத்திலிருந்து இருந்து வரும் உயர்ந்த சிந்தனையாகும். வேத ரிஷிகள் நாம் வாழும் இந்த பூமியை மாசுறாமல் காக்க வேண்டிய அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்துள்ளனர்.

  இன்றைய வேக யுகத்திலோ இது பற்றி சிந்திப்பதற்கே யாருக்கும் போதிய நேரம் இல்லை. விளைவு, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.

   இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஆல் இண்டியா ரேடியோவின் வானொலி நிலையங்கள் சுற்றுப் புறச் சூழ்நிலையை மாசின்றிப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்றாடம் காலை நேரத்தில் உயரிய சிந்தனைகளை ஒலிபரப்பி வருகின்றன..

   ஆல் இண்டியா ரேடியோவுடனான எனது தொடர்பு முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அற்புதமான ஒரு தொடர்பு. திருச்சி, மதுரை, சென்னை என அகில இந்திய வானொலி நிலையங்களில் எனது நாடகங்கள், அறிவியல் சம்பந்தமான உரைகள், சுற்றுப் புறச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான உரைகள் மற்றும் உரைச் சித்திரம் ஆகியவை அவ்வப்பொழுது ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன.

  தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகம் நிறைந்துள்ள இந்த நாளிலும் கூட வானொலிக்கு இருக்கும் மதிப்பே தனி என்பதை எனக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் உணர வைத்துள்ளன. வானொலியின் நல்ல தாக்கத்தால் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தும் ஏராளமான நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். இந்த உரைகளை உருவாக்க வாய்ப்பும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அகில இந்திய வானொலியின் பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், நிலைய இயக்குநர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

   சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவன் அவசியத்தை நாடு, இனம், மதம் என்ற எல்லையைத் தாண்டி அனைவருக்கும் கொண்டு சென்று பூமியைக் காக்க வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் இந்த வானொலி உரைகளை வெளியிட முன் வந்துள்ள லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

  இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை திரு N C ஸ்ரீதரன் அவர்கள் அளித்துள்ளார். திரு ஸ்ரீதரன் ஒரு நல்ல பேச்சாளர், திறமையான நிர்வாகி. பல நூல்களை எழுதியுள்ள நூலாசிரியர். கல்வித் துறையில் பல உன்னதமான சாதனைகளைச் சாதித்து வருபவர். பல்வேறு நிறுவனங்களில் சுய முன்னேற்றம், உற்பத்திப் பெருக்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விஷயங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளைப் பல வருடங்களாக நடத்தி வருபவர். எல்லாவற்றிற்கும் மேலாக எனது இனிய நண்பர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு எங்களுடையது.அவர் இந்த நூலுக்கு முன்னுரை அளித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   வளமார்ந்த வாழ்க்கையை நம் சந்ததிகளுக்கு உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு.அதற்கு அடித்தளம் நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலை. இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதைக் காப்பதோடு மேம்படவும் உரிய  முயற்சிகளை மேற்கொள்வார்களேயானால் அதுவே இந்த நூல் படைத்ததன் பயனாக மிளிரும். வாசகர்களுக்கும், இவற்றைக் கேட்டு என்னை ஊக்கிய ஏராள்மான வானொலி நேயர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

பெங்களூரு                                         ச.நாகராஜன்

20-3-2014                             மின்னஞ்சல் :snagarajans@gmail.com

 இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

To understand and appreciate the pure air and sound, Thoughts on Environment IV has been published in continuation of Part I, II and III. Very thoughtful articles such as “Telling Effects of paper cups on the honey bees”, on “Save green campaign” that helps in keeping environment clean bringing awareness among the readers, on keeping the islands to ensure the safety of fish- culture in the seas, on the dangers that carbon monoxide brings, on the need to protect the society from sound pollution etc. lend color to the book. Other articles on the sufferings of earth due to heat waves, illnesses arising out of de-forestisation, increasing acids in the sea, shrinking vegetation and fishes due to heat on earth, challenge posed by carbon, pollution of the sea through wasted chemicals and bio wastes, need to protect ozone layer and several such illuminating and informative articles lend color and weight to the book.

 மாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 4 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -4  ( last part)-Post No.11,327

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,327

Date uploaded in London – 5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Rig Veda and classical Sanskrit literature describe the forest fires. Tamils also described such wild fires in the Sangam literature. But ancient Tamils were better Hindus than many others so that they remember only Mahabharata when they see such a horrible scene

Kabilar in Kurinjik kali ( one of the five chapters in Kalittokai) says in verse 52:

A herd of elephants is caught in a wild fire spreading over mountain. The leader of the herd takes courage and boldly guides others out of the fire and saves them like the hero Bhima (of Mahabharata) who saved his aged mother and brothers when their palace was set fire to by the scheme of their enemy Duryodhana.

 Again, an elephant attacking a tiger with great ferocity with its sharp tusks tearing into pieces is compared to the hero Bhima of the great epic. He fought in the same way with his enemy Duryodhana and cut his thigh with vengeance.

When it (the elephant) returns to its herd in a spirit of joy and pride after killing the tiger, it is compared to Krishna, who killed and crushed the pugilists induced to attack him (Kalittokai 52)

xxx

Sapta Rishi Worship (Great Bear Constellation)

Worshipping Seven Seers known as Sapta Rishis is attested by Panini 2700 years ago.  Brahmins around the world worship 7 seers thrice a day in their Sandhya Vandana ritual. They are seen in the Ursa Major constellation in the northern sky. A Tamil poet by name Ila Nagan (naagan) sang about it  in Natrinai verse 231. He says the sapphire like blue sky has Seven Seers who are worshipped (by the people with their hands ).

Seven stars in Ursa Major (Great Bear) constellation are identified with Seven Seers of Vedas by the Hindus.

Arundhati is considered the most chaste woman by the Hindus. Newly married Hindu couple see this Star in the Ursa Major constellation on the wedding day

We have many references to Aundhati in Tamil:

 Vasishta’s wife Arundhati: Pari 5-44;Pathitru 31-27;89-17;Perum.line 302

Xxx

Crescent Moon Worship

Muslims follow crescent moon to celebrate their festivals such as Ramazan. But crescent moon worship is referred to in Hindu scriptures long before the appearance of Islam.

Sankatahara Chaturthy is an important day for orthodox Hindus, particularly for Ganapathi worshippers. It is observed on the fourth day/Chaturthi after the Full moon day/Purnima. Orthodox Hindus fast in the daytime and eat food only after seeing moon in the evening. Sankata hara means, eliminating difficulties or sorrow. This crescent moon worship is mentioned in Tamil literature too. Sankatahara Chaturthi is from Vinayaka Purana.

Worship of crescent moon: Kuruntokai verses 178;307; Akam. 239; Maduraikanchi- line 193; Puram.60 and Prayer 1;silambu-2—38;

Xxx

Sun Worship

Adi (aadhi) Sankara divided Hindu worship into six main ways. One of the six types is the worship of Sun God (sauram from Suurya). Sun God and his one wheeled chariot with seven horses is also mentioned by Tamil poets

Sun’s one wheel chariot- Akam 360

Suns horses: Akam 363; Pattina. Line 122-124

Xxx

In Hindu Puranas Jupiter or Brihaspati was the teacher of Devas (angels) and Sukracharya (Venus) was the Guru of Asuras. Both these Gurus are Brahmins. Maruthan Ilanagan mentioned both of them as ‘The Two Brahmins’ in Kalittokai verse 99.

Two Brahmins (Jupiter and Venus): Kali-99

xxx

Sati by Monkey

Kuruntokai verse 69 sings about a monkey which committed suicide. Tamil scholar Professor M.Varadarajan described it as ‘Sati’:

Sati is the Hindu custom of chaste wife burning herself with the dead husband during cremation.

“On the death of its loving mate, a female monkey is imagined to hand over its young one to its kith and kin and perform sati by falling down from the top of a hill” (Kuruntokai 69 by Kadunthot Karaveeran).


(Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

He is right in describing this as Sati, because the word in the poem is Kaimmai. The monkey did not like the Kaimmaai ( a widow’s life of fasting and rituals). In other poems also we see that Sati was practised by the Tamils where widows did not like Kaimmai  fasting (Puram 246, Sati committed by Pandya queen Bhutapandyan Devi).

— subham—-

Tags- Purana, Sangam Tamil, Poets, Crescent moon, Sapta Rishi, Bhima, Duryodhana

சித்த வைத்தியருக்கு மன்னன் அவுரங்கசீப் எழுதிய கடிதம் (Post.11,326)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,326

Date uploaded in London – 5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மொகலாய சக்ரவர்த்திகளில் மிகவும் கொடுமைக்காரன் என்றும் மத வெறியன் என்றும் வருணிக்கப்படுபவர் அவுரங்கசீப். இந்துக்களுக்கு ஏராளமான தீங்கிழைத்தவர்.முனைவர் சிவ . பாலகடாட்சம் எழுதிய நூலில்  அவர் பற்றிய சுவையான ஒரு விஷயத்தை ஆங்கில நூல் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இதோ அதன் விவரம் –

பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த ஆனந்த நாதர் என்னும் சித்தர் ஒருவருக்கு 1661 அல்லது 1662ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 89 வயது வரை வாழ்ந்த மன்னர், தனது 43 ஆவது வயதில் எழுதி அனுப்பிவைத்த கடிதம் இது.

“வணக்கத்துக்குரிய தங்களின் கடிதமும் கூடவே தாங்கள் அனுப்பிவைத்த இரண்டு தோலா பாதரசமும் கிடைக்கப்பெற்றேன் . எனினும் தாங்கள் எங்களுக்கு விளங்கவைத்த அளவுக்கு இம்மருந்து மிகச் சிறந்ததாயில்லை. தாங்கள் இன்னும் ஒரு முறை மிகக் கவனமுடன் சுத்தி செய்யப்பட பாதரசத்தைத்  தயாரித்து தாமதமின்றி அனுப்பிவைப்பது விரும்பத்  தக்கது. தங்களது மே லாடைக்குத் தேவையான அளவு துணியும்  இருபத்தைந்து ரூபாய் பணமும் காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  அத்துடன் தங்களது பாதுகாப்பை எப்பொழுதும் உறுதிப்படுத்துவது  குறித்து வீரமிக்க பாற்றே சந்துக்கு (Fath Chnad) எழுதப்பட்டுமுள்ளது “.

இந்துக்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுபவரும் இஸ்லாத்தில் தீவிர பற்றுடையவருமான அவுரங்கசீப், ஒரு சித்தருக்கு எழுதிய கடிதம் இது என்பதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். எனினும் அதுவே உண்மை.பேரரசராலேயே மதிக்கப்பட்ட இந்த சித்தருக்கு பொது மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருந்திரு க்கும்  என்பதை ஊகிப்பது கடினமன்று .

xxx

இத்தாலிய யாத்ரீகர் மார்க்கோ போலோ , (Marco Polo) பிரான்ஸ் நாட்டின் மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியர் (Francois Bernier)   ஆகியோர் எழுதிய சுவையான விஷயங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.

அக்காலத்தில் இரும்பு, ஈயம்,  செம்பு முதலியவற்றைத் தங்கமாக மாற்றும் ரஸவாதத்திலும், என்றும் சாகாமல் இருக்கச்செய்யும்  காயகல்ப மூலிகையிலும் மக்களுக்கு எவ்வளவு நமபிக்கை இருந்தது என்பதற்கு 18-ம் நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த தாயுமானவர் பாடலையும் தந்துள்ளார் சிவ  பால கடாட்சம். தாயுமானவர் இதிலுள்ள பேராசையைக் கடிந்துரைக்கின்றார் :-

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி

ஆளினும் கடல் மீதிலே

ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக

அம்பொன் மிக வைத்த பேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாளிருந்த பேரும்

நிலையாக வேயினுங் காயகற்பந்தேடி

நெஞ்சு புண்ணானவர் எல்லாம்

பொருள்:-

“ஆசைக்கு ஓர் அளவில்லை. உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் கட்டி ஆண்டபோதும் கடலிலும் தமது ஆணையே செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். குபேரனுக்கு நிகராகப் பொன்னைக் குவித்து வைத்திருப்போரும் (செம்பைப் பொன்னாக்கும்)  இரசவாத வித்தையை அறிந்துகொள்ள அலைவார்கள் . மிகவும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்துவிட்டோரும் , இன்னும் இறவாமல் இருக்க சாவா மருந்தாகிய காயகல்பத்தைத் தேடித் தேடி  அது கிடைக்காமல் மனம் வருந்துவர்” என்பது இப்பாடலின் பொருள்.

நூலின் பெயர் தமிழர் மருத்துவம்

ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்

முதல் பதிப்பு – டிசம்பர் 2021

பக்கங்கள் 224, விலை 250 ரூபாய்

வெளியீட்டாளர் – பட்டினம்

SALES OFFICE:- AAZHI PUBLISHERS,

5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,

SALIGRAMAM , CHENNAI 600 093

aazhipublishers@gmail.com

—subham—

Tags- அவுரங்க சீப், சித்த வைத்தியர், கடிதம், ஆனந்த நாதர்,

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் (Post No.11,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,325

Date uploaded in London – –    5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

ச.நாகராஜன்

 ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள தி 48 லாஸ் ஆஃப் பவர் (Robert Greene – The 48 Laws of Power) வெற்றிக்கான விதிகளைச் சொல்லும் புத்தகம்.

 இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகம் – இது கூறுகின்ற வழி முறைகளால்! அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகமும் கூட.

இப்போது நாம் பார்க்கப் போவது அவர் கூறும் 26வது விதி.

உன் கையைச் சுத்தமாக வைத்துக் கொள் (Keep your hands clean) என்பது அவர் கூறும் விதி.

இதில் அவர் ஒரு நீதிக் கதையை எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார்.

ஜீன் டீ லா ஃபாண்டேன் (Jean De La Fontaine) கூறுகின்ற கதை இது.

கதை இது தான்:

ஒரு குரங்கும் ஒரு பூனையும் நண்பர்கள். குரங்கின் பெயர் பக்(Pug). பூனையின் பெயர் டாம் (Tom).

வீட்டில் இரண்டும் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது.

குறும்புச் செயல்கள் ஏராளம். ஒரு சமயம் எரிகின்ற விறகில் செஸ்ட்நட் வேக வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வாசனையோ வாசனை.

குரங்கிற்கு அதை சாப்பிட ஆசை. பூனை நண்பனைப் பார்த்தது. பூனையின் அழகிய கைகளை எடுத்துக் கொண்டது. “அடடா! என்ன அழகிய கைகள்!. இந்த வாசனையைப் பார்த்தாயா! இதை இந்த வீட்டுக்காரி நமக்கு தரவா போகிறார். உன் கைகளைக் கொஞ்சம் கொடேன். அதை வைத்து சடக்கென்று இதை எடுத்து விடலாம்.” என்றது.

பூனையின் கையை எரியும் விறகில் விட்டு சடக்கென செஸ்ட்நட்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது. பூனை நெருப்புச் சூட்டால் அலறியது. அந்தச் சமயம் பார்த்து வீட்டுக்காரி அங்கே வர குரங்கு பாய்ந்து வெளியில் ஓடியது. பூனை அடி வாங்கியது.

நீதி : எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

‘அரசியலில் இதெல்லாம் சகஜம்’ப்பா’ என்ற வசனம் ஞாபகத்திற்கு வருகிறதா?

 சீனாவிற்குப் போவோம். ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் சீனாவில் உள் நாட்டுப் போரால் ஒரே அமளி. 1927இல் சியாங்கே ஷேக் ஒரு முடிவுக்கு வந்தார். எப்பாடு பட்டேனும் எல்லா கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டுவது என்ற முடிவு. கடைசி கடைசியாக ஒரு கம்யூனிஸ்டு கூட உயிரோடு இருக்கக் கூடாது என்பது அவரது லட்சியம். லேசில் இது முடியவில்லை. வருடங்கள் ஓடின.

1934-35இல் அவர்களை ஒரு வழியாகப் பிடித்து தென்கிழக்கிலிருந்து வடமேற்கிற்கு 6000 மைல்கள் நடக்க வைத்தார்.

லாங் மார்ச்! நீண்ட நடைப் பயணம். இது தாங்காமல் உயிரிழந்தனர் கம்யூனிஸ்டுகள். 1936இல் கடைசி முயற்சியாக அவர்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட நினைத்த போது பெரிய கலகம் மூண்டது.

அவரை அவரது படைவீரர்களே காட்டிக் கொடுத்து விட்டனர்.

மாஸேதுங்கிடம் மாட்டிக் கொண்டார் சியாங்கே ஷேக்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

அப்போது சீனாவின் பரம்பரை எதிரியான ஜப்பான் சீனா மீது போர் தொடுத்தது.

தனக்கு மரணதண்டனை தான் என்று நினைத்த ஷேக்கிற்கு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

மாஸேதுங் அவரிடம் ஜப்பானிற்கு எதிரான போரில் சீனப் படைகளுக்குத் தலைமை தாங்கச் சொன்னார்.

வியப்பில் மூழ்கிய ஷேக் அந்தப் பொறுப்பை ஏற்றார். நீண்ட கொடிய போர் நடந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானை வெல்ல முடிந்தது.

ஆனால் போர் முடிவில் ஷேக்கின் சேனை பெரும்பாலும் அழிந்து விட்டது – நீண்ட போரால்.

கம்யூனிஸ்டுகள் இந்தப் போரை நேருக்கு நேர் சந்திக்காமல் கொரில்லா முறையில் அவ்வப்பொழுது தாக்கி விட்டு மறைந்தனர்.

ஜப்பான் போர் முடிந்தவுடன் மீண்டும் இப்போது உள்நாட்டுப் போர் துவங்கியது.

படை வலிமையை இழந்த சியாங்கே ஷேக்கை மாஸேதுங் குரங்கு பூனை கையால் செஸ்ட் நட் சாப்பிட்டதைப் போல வலிமை இழந்த ஷேக்கை அகற்றி விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மாஸேதுங்கைத் தவிர வேறு யாராவதாக இருந்திருந்தால் ஷேக்கைப் பிடித்த மறுநாளே அவரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் மாஸேதுங் குரங்கு-பூனை நீதிக் கதையை அறிந்த கம்யூனிஸ்ட் போலும்.

எதிரியை வலிமை இழக்கச் செய்தார்; தனது அதிகாரம் நிலை பெறுமாறு அவரைப் பயன்படுத்தியும் கொண்டார்.

ஆகவே வெற்றி பெற 26வது விதி:

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!.

***

புத்தக அறிமுகம் – 77 

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3) 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

பொருளடக்கம்

1.   மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும்  

2.   அனைத்து உயரினங்களுக்கும் தாவர வகைகளும் வாழட்டும்!

3.   சுற்றுப்புறம் மாசுபடும் வகைகள்

4.   தோரோவும் இயற்கைப் பாதுகாப்பும்  

5.   டாக்ஸிக் (நச்சூட்டும்) மாசுகள்   

6.   மரம் நடுவோம்; நம்பிக்கை விதைப்போம்!  

7.   சுற்றுப்புறம் காக்க சிறிய செயலையேனும் செய்வோம்!

8.   மறு சுழற்சிப் பொருள்கள்  

9.   பூமி வெப்பமாவதைத் தடுப்போம்

10.  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி பெறுவோம். 

11.  பசுமைக் கட்டிடம்    

12.  மழைக் காடுகள் இனி நம்மைக் காப்பாற்றுமா?   

13.  அரிய செல்வமான அமேஸான் மழைக்காடுகள்!  

14.  கார்பன் சேமிப்பகம்   

15.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 1   

16.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 2   

17.  மீன் வளம் காப்போம்!

18.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள்-1

19.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள் 2

20.  சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க எளிய வழிகள்!   

21.  நீர் ஆதாரம் காப்போம்

22.  மரங்கள் அளிக்கும் நன்மைகள்  

23.  காற்று மாசுபடக் காரணங்கள்   

24.  மரங்களின் பெருமை 

25.  மாசுக்கான காரணங்கள்    

26.  பூங்காக்களின் சேவை.

27.  ஓஸோனின் துளை   

28.  பேரழிவு அலைகளிலிருந்து காத்த மரங்கள் 

29.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 1    

30.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 2    

31.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாட்டில் நிறுவனங்களின் பங்கு  

32.  வீடுகளில் சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு 

33.  காடு வளர்ப்போம் கடனை அடைப்போம்    

34.  ஆபத்தில்லா ரசாயனம் க்ரீன் கெமிஸ்ட்ரி   

35.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின்       முயற்சிகள்    

37.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த பிரசார வழிகள்

38.  சின்னச் சின்ன செயல்கள். 

39.  காட்டுச் செல்வம்

40.  வீடுகளில் மாசு அகற்றுவோம்    

* 

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:- 

This book contains the third part of the discussion on the topic of environmental awareness, broadcasted on All India Radio. The world is slowly being exposed to the growing dangers of global warming, and this book attempts to create awareness amongst its readers in this regard. The hundreds of essays that spread across the three books on this topic of environmental awareness and protection are not only interesting reads but also wonderful educational tools.

 புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூன்றாம் பாகம் இது! முந்தைய பாகங்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!

 இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 3 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -3 (Post No.11,324)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,324

Date uploaded in London – 4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with more Purana episodes in 2000 year old Sangam Tamil literature: –

Hindus are nature lovers. They believe in optimum use of everything in Nature. As soon as they get up from the bed in the early morning, they recite a sloka saying ‘Oh Ye Earth , please forgive me for putting my feet on you’. When they start farming they call the king to start it and he comes with a golden plough and starts farming, where he also says mantras praising the earth. This is an annual ceremony. On one of those occasions, several thousand years ago, Emperor Janaka of Videha Country, found Sita Devi in the field and brought her to Mithila, capital of Videha.

Whenever Hindus construct a house or a bridge or a temple, they first do Bhumi Puja (Bhoomi poojaa), saluting the earth. All the Tamils do it even today. Even Christians and Muslims do it following Hindus.

So, no wonder that a Tamil poet of Sangam period described Five Trees as Five Gods.

Two thousand years ago poet Perum Katunko saw five trees on the banks of River Vaigai in Madurai. At once he remembered five personalities from the Puranas and Mahabharata itihasa (itihaasa= history).

The reason for such a description is that they had different sized trunks and variety of colourful flowers.

What he said was

Maraa maram/tree  looked like Balarama (raamaa);

Serunthi –  looked like the Sun God;

Kanchi (kaanchi) – tree  looked like Fish bannered Kama (kaama, God of Love, Manmatha);

Gnaazal – tree  looked like Manmathan’s brother Sama (saama);

Ilavu – tree  looked like Bull bannered Lord Shiva.

xxx

Lord Shiva and his son Skanda( Murugan in Tamil) are always portrayed Red in colour as we see them in the Vedas Rudra=Red= Reddish face with anger.

The beauty is ancient Tamils were so well versed in Hindu Puranas that they always mentioned the colours or the flags or the mounts/vahanas of Gods throughout their poems. Nakkirar in his Purananuru verse 56 described four gods with Vaahanaas and flags. This shows that there was huge bulk of devotional literature at that time. Though we lost all those ancient books, modern Tamil poets in the last few centuries composed several thousands of verses about 18 Puranas .

Before going into details of those modern Tamil Puranas, I will give what Nakkirar (nakkeerar) said in Purananuru verse 56, which is the oldest part of Sangam Tamil corpus.

First, he described four Hindu gods in detail and compared them to the Pandya king Nanmaran (nan maaran).

Siva has Bull flag (Rishaba); he has flame red hair; he has a blue throat; he has a weapon called Kanichchi.

All these are in Siva purana and each has a story. Flags and Vaahanaas (mounts) of gods are interchangeable. Hindus were the one who gave the world Flags, Symbols, Emblems, Ambassadors, Spies etc.

Siva drank poison to save the humanity (both devas and asuras- angels and demons); his wife Uma/Parvati got alerted and stopped it in his throat; so, he became blue throated. Tamil poetess Avvaaiyar also said it in another verse in the same book.

Tiru Valluvar in his Tirukkural also mentioned how Siva saved the world (Kural 580) by drinking poison. It was in Sangam book Natrinai verse 355. Also in Manikkavasagar’s Tiruvasagam. (maanikka vaasagar, tiru vaasagam)

xxx

Then Nakkirar described Baladeva or Balarama. He looked white like the conch shell in the ocean; he has plough.

Baladeva, krishna’s brother was a practical man; he was not interested in Pandava -Kaurava politics; he was so honest that he opposed all crooked plans of Lord Krishna. But Krishna believed in the concept of ‘All is Well that Ends Well’, ‘Ends are more important than Means’; Baladeva alias Balarama took plough on his shoulder and spread agriculture throughout India, while the Pandavas and Kauravas fought in the battlefield at Kurukshetra (modern Haryana). We have hundreds of references to agriculture in the Rig Veda, the oldest book in the world (6000 BCE according to Herman Jacobi and Bala Gangadhara Tilak).

Nakkirar added one more detail about Balarama; he had Palmyra flag. This is in the oldest Tamil book Tolkappiam as well. Palmyra flag is not found anywhere in the world except India in such a remote period.

Xxx

Thirdly, Nakkirar portrayed Vishnu as Eagle bannered and bluish black in colour. Vishnu’s association with Garuda/eagle is in all the Puranas. Now even America (USA) has this emblem.

Hindus were so colour conscious that they called even their favourite God Mr Black (Krishna) and the most beautiful woman in the Mahabharata Miss Black (Krishnaa = Draupadi) and the most prolific writer as Mr Black Islander (Krishna Dvaipaayana Vyaasa).

They even allocated differently coloured seats in the theatre for different castes according to Bharata’s Natya Shastra (naatya, saastra).

Even today they sing in Bhajans “Oh Krishna, you Yellow clad, Oh Balarama, you Blue clad” (Piitaambhara/yellow clothed; Neelaambhara/ blue clothed).

They allocated colours for Yugas, Directions, Siva’s five faces etc, which Mayans of South America and Buddhists copied.

Xxx

Fourthly Nakkirar sketched Lord Muruga (Skanda, Kartikeya in Sanskrit); he is peacock bannered and peacock mounted ; some commentators described elephant mounted.

Then the poet goes on attributing the virtues of these gods to the Pandya king.

Nakkirar did not stop there. His poem on Lord Muruga/Skanda is called Tiru Murukatrup patai, part of Sangam literature. This book has hundreds of references from the Puranas.

To be continued…………………….

Tags- Purana, Sangam literature, Nakkirar, Siva, Balarama, colour, blue throat, Flags, Banners, Bull, Rishaba, peacock, Muruga

September 2022 London Swaminathan Article (INDEX No.118) – Post No.11,323

Picture- London swaminathan with famous actor Kamalahasan in London

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,323

Date uploaded in London – 4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

September 2022 London Swaminathan Article (INDEX No.118)

MY VISIT TO ROYAL PALACE IN MADRID IN SPAIN (Post No.11,231) 1/9/2022

MADRID CITY TOUR – HELPFUL TIPS (Post No.11,236) 3/9/ 2022

MEDICINE WOMEN & MEDICINE MEN IN PRAKRIT GSS (Post No.11,240) 5/9

August  2022 London Swaminathan Article (INDEX No.117)  6/9

Glory of Womanhood: Bharati in English (Post No.11256) 10/9

Interesting Story of Prakrit Poet Haribhadra Suri (Post No.11,260) 12/9

‘SANSKRIT IS MALE, PRAKRIT IS FEMALE; PRAKRIT IS SWEETER THAN SANSKRIT’ (Post No.11,263) 13/9

MORE ABOUT SCIENTIFIC STUDY OF BODY FEATURES (SAMUDRIKA LAKSHANA)- Post No.11,27819/9

MORE ABOUT TAMIL’S STRANGE LIZARD ASTROLOGY/ OMENS (Post No.11,295) 25/9

Sadhu Vaswani Quotations – OCTOBER 2022 CALENDAR (Post No.11,308) 29/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS: FESTIVALS AND BELEIFS- Part 1 (Post No.11,246)7/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS…… PART 2 (Post No.11,248) 8/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS……. PART 3 (Post No.11,250) 9/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- PART 4 (Post No.11,253) 10/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- 5 (Post No.11,257) 11/9

IMPORTANCE OF 12 TAMIL MONTHS-6 (Post No.1,259) 12/9

‘Kari’ for Elephant is Not a Tamil Word?-1 (Post No.11,282) 20/9

KARI for Elephant is Not a Tamil Word? Part 2 (Post No.11,285) 21/9

KARI for Elephant is Not a Tamil Word-3 (Post No.11,287) 22/9

KARI for Elephant is Not a Tamil Word-4 (Post No.11,289) 23/9

KARI for Elephant is Not a Tamil Word- part 5 (Post No.11,292) 24/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 6 (Post No.11,294) 25/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 7 (Post No.11,297) 26/9

KARI for Elephant is Not a Tamil Word? -Part 8 (Last Part) Post No.11,300 27/9

LONDON HARE KRISHNA RATHA YATRA 4-9-2022 (Post No.11,273) 17/9

Q & A – ETYMOLOGY OF PAAL பால் FOR MILK IN TAMIL, 14/9

Xxx

picture- london swaminathan with famous writer Jayamohan in London

TAMIL ARTICLES IN SEPTEMBER 2022

நான் கண்ட ஸ்பானிய அரண்மனை (Post No.11,233) 2/9

யா யா யா யா யா யா யா யா (32 தடவை ) – கவிதை (Post.11,234) 2/9

500 ஆண்டு வரலாறு கூறும் அற்புத ருத்ரதாமன் கல்வெட்டு! (Post No.11,238) 4/9

பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் -1 (Post No.11,242) 6/9

பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் – PART 2 (Post No.11,245) 7/9

தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ-கிருஷ்ணன் கவிதை (Post No.11,251) 9/9

மேலும் சில விந்தைக் கவிதைகள் (Post No.11254) 10/9

யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை (Post 11,262)13/9

பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் (Post No.11,265) 14/9

திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம் (Post No.11,281) 20/9

சிவன் ஏன் பிச்சை எடுக்கிறார் ? (Post.11,291) 24/9

யாளி என்னும் அதிசய மிருகம்! (Post No.11,298) 26/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்-1 (Post No.11,301) 27/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2 (Post No.11,304) 28/9

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3 (Post No.11,307) 29/9

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)30/9/2022

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1 (Post No.11,268) 15/9

வால்மீகி  ராமாயணத்தில் பெண்கள் – 2 (Post.11,270) 16/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3 (Post No.11,272) 17/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4 (Post No.11,275) 18/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5 (Post No.11,277) 19/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6 (Post No.11,280) 20/9

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)- Post No.11284 21/7

—subham—-

Tags- article index 118, London swaminathan, September 2022,

கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! (Post No.11,322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,322

Date uploaded in London – –    4 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!

ச.நாகராஜன்        

     “வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்”, என்று தன்னை இனம் காண்பிக்கப் புகுந்த மகாகவி பாரதியார் விண்ணில் திரிகின்ற மீனெலாம் நான்; அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவை பிழையாமே சுழற்றுவோன் நான் என்று தன் அகண்ட தன்மையை விவரித்துச் சொல்லுகையில், “கம்பன் இசைத்த கவியெலாம் நான்” என்று கூறுகிறார். கம்பனின் கவிதையையும் அகண்டத்தன்மையில் சேர்த்துக் கொள்கிறார்.

(முழு கவிதைக்கு பாரதியாரின் நான் என்ற கவிதையைப் பார்க்கவும்)

      கம்பனின் எல்லையற்ற தன்மையை இன்னும் விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டுத் தன் எண்ணத்தை உறுதிப் படுத்துகிறார்.தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற தனது உறுதிக்குக் காரணமாக சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் கம்பனின் ராம காதையையும் மகாகவி சுட்டிக் காட்டும்போது அவற்றின் பெருமை நமக்குப் புலப்படுகிறது.

   கம்பனின் எல்லையற்ற தன்மை இன்னும் உலகாளவிய அளவில் ஆராயப்படவில்லை; உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகின் முன் எடுத்துச் சொல்லப்படவில்லை. தமிழன் செய்ய வேண்டிய முக்கியமான கடமை இது.

    கம்பனின் எல்லையற்ற தன்மையைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அளவில் பரவுவதற்கு முன்னர் “நாமமது தமிழரெனக் கொண்டு வாழும்” நம்மவர் அந்த எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    கம்பனின் எல்லையற்ற உத்திகளில் ஒரே ஒரு உத்தியை மட்டும் இங்கு பார்ப்போம்.

   தன் காவிய நாயகனின் சொந்த நாடான கோசலத்தை வர்ணிக்க வந்த மகாகவி கம்பன், பெரும் பீடிகையுடன் கோசல நாட்டை வியந்து, “வரம்பெலாம் முத்தம் (கழனிகளின் வரம்புகளில் எல்லாம் முத்துக்கள்); தத்து மடையெலாம் பணிலம் (தாவிப் பாயும் தன்மையுள்ள மதகுகளில் எல்லாம் சங்குகள்)மாநீர் குரம்பெலாம் செம்பொன் ( பெரிய நீர்ப்பெருக்கையுடைய வாய்க்கால்களின் செய்கரைகளில் எல்லாம் செவ்விய தங்கக் கட்டிகள்)” என்று வர்ணிக்கத் தொடங்குகிறான். கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும் போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்!

 கோசல நாட்டில் தானம் செய்வோர் யாருமே இல்லையாம்! வண்மை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறான் .மனத்தில் ஈரம் இல்லா நாட்டவர் வாழும் நாடும் ஒரு நாடா? ராமனின் கோசலமா இப்படி? மனம் குடைகிறது. அடுத்து கம்பன் சொல்வது இன்னும் நம்மை திடுக்கிடச் செய்கிறது.அந்த நாட்டவருக்கு திண்மையும் இல்லையாம். அதாவது பராக்கிரமும் இல்லையாம்.அங்கு உண்மையும் இல்லையாம்;  ஒண்மை அதாவது அறிவுடைமையும் இல்லையாம்.

       கம்பனின் இந்த கோசல நாட்டின் வர்ணனையைக் கேட்டு நாம் திகைக்கும் போது, அவனே அதற்கான காரணத்தையும் தருகிறான்.

    வண்மை ஏன் இல்லை தெரியுமா? யாராவது எனக்குக் கொடு என்று கேட்டால் தானே கொடுக்க முடியும்? அங்கே இரப்பவர் யாருமே இல்லை!

திண்மை இல்லை; யாராவது அந்த நாட்டின் மீது போர் தொடுத்தால் தானே பராக்கிரமத்தைக் காண்பிக்க முடியும்!

    உண்மை இல்லை; ஏனெனின் பொய் என்று சில பேர் சொன்னால் தானே உண்மை என்ற ஒன்றைப் பற்றி உரைக்க வேண்டி வரும். யாருமே பொய் பேசுவதில்லை என்னும் போது உண்மை என்ற சொல்லே அங்கே இல்லாது இருப்பது இயல்பு தானே!

     எல்லோரும் கல்வி அறிவும் கேள்வி அறிவும் மிக்கவராய் இருக்கும் போது ஒண்மை எனும் அறிவுடைமை அங்கு சிறந்து தோன்றவில்லையாம்!

கம்பனின் பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”

கம்பனின் புதிய உத்தி இது. நம்மை திடுக்கிட வைத்து அந்த திகைப்பை போக்க அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகும் போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறோம்.

   இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ராவணனின் மைந்தன் அட்சகுமாரன் பெரும் படையுடன் அனுமனுடன் மோதக் கிளம்புகிறான். மூன்று கோடி தெருக்களை உடைய இலங்கையில், தங்கமாய் மின்னும் இலங்கையில், வைரமும் முத்தும் சிதறிக் கிடக்கும் இலங்கையில் சூரியனும் நுழையப் பயப்படுகிறான். அதிகமாக வெயில் அடித்து அது ராவணனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பது சூரியனின் கவலை. அப்படிப்பட்ட இலங்கையில் அட்சகுமாரனின் படையை யாராவது விளக்க முடியுமா?

    விளக்க முடியும் என்கிறான் கம்பன். யாரால் தான் விளக்க முடியும் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.

    அட்சகுமாரனின் யானைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள சுறாமீன்களை எண்ண முடியுமானால்!

     அட்சகுமாரனின் தேர்களின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள மீன்களை மட்டும் சரியாக எண்ண முடியுமானால்!

    அட்சகுமாரனின் காலாட் சேனையில் உள்ள வீரரின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லி விடலாம். கடலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து  உள்ள மணலின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்றால்!

அட்சகுமாரனின் தாவிச் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். கடலில் எழுந்து வந்து கொண்டே இருக்கும் அலைகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சொல்லி விட முடியுமானால்!

   பாடலை கம்பன் வாயிலாகக் கேட்போமா?

 “பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கி

திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம்பொன் திண் தேர்

உருவுறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை

வருதிரை மரபின் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி”

(பூட்கை-யானை; உரவுத் தானை – வலிமை பொருந்திய காலாட் சேனை; வாவும் வாசி- தாவிச் செல்லும் குதிரைகள்)

“எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்” என்று பிறவிகளின் எண்ணிக்கையைப் பின்னால் வந்த அருணகிரிநாதர் கடல் மணலின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். கம்பனோ காலாட்படை வீரரின் எண்ணிக்கைக்கு அதை முன்னமேயே பயன்படுத்தி விட்டான். தாவி வரும் குதிரைளுக்கு தாவி வரும் அலைகளை உவமையாக அவன் கூறுவது சிந்திக்கச் சிந்திக்க களிப்பைத் தரும் ஒன்றாகும்.

      நம்மை திகைக்க வைத்து பின்னர் காரணங்களைச் சொன்ன பின்னர் வியக்க வைக்கும் கம்பனின் உத்தி இலக்கிய உலகிற்குப் புதிது.

       வடமொழியில் ஸம்பாவநாலங்காரம் என்று வழங்கப்படும் இந்த உத்தி வேறொறு பொருள் சித்திப்பதற்காக ‘இப்படி இருந்தால் இன்னது ஆகும்’ என்று வாய்பாடு படக் கூறுவது ஆகும்.

      உலகின் இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ‘திகைக்க வைத்து வியக்க வைக்கும்’ உத்தியைத் திறம்படக் கையாண்ட மகாகவிஞன் கம்பன் ஒருவனே என்பது தெரிய வரும்.

       கம்பன் கவிதையைக் கற்போம்; இதயம் களிப்போம்; உலகிற்கு அதைப் பரப்புவோம்

                             ******************** 

  Tags- கம்பன், அட்சகுமாரன்

புத்தக அறிமுகம் – 76

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

நூலில் உள்ள அத்தியாயங்கள்

பொருளடக்கம்

01.சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பட இணையத்தைபயன்படுத்துவோம்

02. இணையத்தால் சுற்றுப்புறச் சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்!

03. ஓஜோன் உறையின் அவசியம்!

04. பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம்!

05. கடல் நீர் சூடாகும் அபாயம்!

06. ஆர்க்டிக் உருகுகிறது!

07. பழைய காடுகளைக் காப்போம்!                                         08. ஓஜோன் துளை

09. சுத்த நீர் சேமிப்போம்        

10. கடல் வளம் காப்போம்!                                                11. கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம்!                             12. மழைக்காடுகள் மனிதரின் செல்வம்!                                         13. மழைக்காடுகள் தரும் செல்வம்!

14. மரங்களை வெட்டாதீர்கள்!

15. கரியாலும் காகிதத்தாலும் பாதிக்கப்படும் சுற்றுப்புறச் சூழல்!

16.  மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!

17. மழைக்காடுகளின் பாதுகாப்பு!

18. காடுகள் இல்லாத எதிர்காலம்!

19. புவி வெப்ப உயர்வு!

20. துருவக்கரடிகளுக்கு அபாயம்!

21. உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம்

22.  சிந்தனை செய்வோம்!

23. சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்!

24. புதிய கோஷம் : குறைவாகப் பயன்படுத்துவோம்!

25. சின்னச் சின்ன செயல்கள்!

26. பெட்ரோலுக்கு மாற்று

27. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள்

28. ஹைட்ரஜன் வாகனங்கள்

29. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்! -1

30. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம் – 2

31. நீரைச் சுத்தமாக்க சுலபமான வழி!

32. பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!

33. விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

34. நீர்ப் பாதுகாப்பு

35.சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!

35. சுத்த நீர் தட்டுப்பாடு

36. நீரை வீணாக்காமல் இருக்க வழிகள்!

37. சுற்றுப்புறச் சூழல் காக்க உபயோககரமான குறிப்புகள்

38. நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள்

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

This book emphasizes the importance of environmental protection. While the world has been falling apart due to environmental degradation, it is important for its inhabitants to understand the significance of protecting and safe-guarding our environment. This book consists of several interesting discussion on this topic, all of which are taken from an environmental program broadcasted on All India Radio. While environmental enthusiasts would definitely enjoy this book, it is also a necessary read for today’s younger generation who will make a societal impact tomorrow.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நூல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகமே அழிந்து வரும் இவ்வேளையில் அது பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது! அவ்வகையில் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் மட்டுமின்றி அனைவருமே, குறிப்பாக நாளைய தலைமுறையினரான மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது! சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் இரண்டாம் பாகமாக இந்நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் படிப்பீர்! பிறருக்கும் பரிசளிப்பீர்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 2 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE -2 (Post No.11,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,321

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

Let us look at more scenes from the Puranas (purana) as seen by the Sangam period Tamil poets.

When the world famous poet Kalidasa saw blue Yamuna and white Ganges water , he immediately  remembered bluish black Krishna and white skinned Balarama. Tamils were well versed in Kalidasa (kaali daasa), who lived in the first century BCE or slightly earlier. Sangam Tamil poets used more than 200 of Kalidasa’s  (out of1500) imageries. So Tamil poet also used the same simile when he saw a blue hill and white waterfall. It is in Natrinai verse 32 sung by Brahmin poet Kabilar. He was well versed in Sanskrit literature, and he was the one who used highest number of Kalidasa’s similes in Tamil. His famous Kurinjippattu (paattu) is an imitation of Meghaduta of Kalidasa. Rev.G U Pope also mentioned it.

Kabilar said,

The hill is like Maayon (Vishnu/ Krishna)

The white waterfall is like Vaaliyon (Balaraamaa)

–Natrinai verse 32

Xxx

But a more beautiful description of a scene from Bhagavata is found in Sangam book Akananuru verse 59 composed by Maruthan Ilanagan (naagan). In the same poem he used another episode from Skaantham (in Tamil Kantha Puraana) also.

First episode

An elephant bends the branches of the Yaa tree so that its female companion could easily feed herself with the leaves. The poet says it is like Krishna bending the branches of Kuruntha tree on the banks of the river Yamuna to enable the Gopikas to use its branches for hiding their semi naked bodies from the sight of Balarama who came there while they were bathing.

Balarama, elder brother of Krishna was a strict guy and Krishna new that he would not tolerate his pranks.

Tamils used a strange name for Yamuna – Tholunai. It may mean a river running near Thozu/ cattlesheds of Brindhavan or where Krishna was worship (thozu)ed by the Gopis.

The second episode in the same verse is about Lord Kartikeya (Murugan) killing the demon Surra padma (soorapathman). So Maruthan Ilanagan has brought two episodes from two puranas in one verse. Tamils were so familiar with Puranas.

Skanda/ Kartikeya killing demon Soorapathman is enacted every year during Skanda Shashti festival.in Tiruchendur , lakhs of devotees gather on the sea shore every year to watch this divine act.

To be continued………………

 Tags- Sura samharam, Gopi, Krishna, Balarama, Yamuna, Bathing, Gopika

மாறன் சடையன், சடையன் மாறன் , மூன்றாம் சார்லஸ் (Post 11,320)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,320

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பாண்டிய மன்னர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு அற்புதமான ஒழுங்கு (order) முறை காணப்படும். அதாவது ஒரு மன்னன் பெயர் மாறன் என்றால் அதற்கு அடுத்து வரும் மன்னனின் பெயர் சடையன் என்று முடியும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள். இதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு வரலாற்று உணர்வு (HISTORICAL SENSE) இருந்திருக்கிறது என்பது புலனாகும். வேறு எந்த ஒரு வம்சத்திலும் இப்படி ஒழுங்கு முறை (ORDER) பின்பற்றப்பட்டதாகத் தகவல் இல்லை.

இங்கு பிரிட்டனில் இது போன்ற ஒரு வழக்கத்தை கடந்த சில தினங்களாக பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அது 200 ஆண்டு வழக்கம்தான்.பாண்டியர்களோ 800 ஆண்டுக்கும் மேலாக அவ்வழக்கத்தைப் பின்பற்றியதற்கு நமக்கு தக்க சான்றுகள் உள்ளன .

பிரிட்டனில் யார் ஆளுகிறார்களோ அந்த ராஜா  அல்லது ராணியின் படம்தான்  ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில் இடம்பெறும்  .அது மட்டுமல்லாமல் காமன்வெல்த் நாடுகளிலும் இந்தியா போன்ற குடியரசு ஆகாத நாடுகளிலும்  பிரிட்டிஷ் ராஜா  அல்லது ராணியின் படமே ரூபாய் நோட்டு, தபால் தலை, நாணயங்களில்  இருக்கும்.

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபாய் நோட்டு, தபலத்தலை, நாணயங்களில் ஒரு ராஜாவோ ராணியோ இடது புறம் பார்க்கும் படி உருவம் இருந்தால், அடுத்த ஆட்சியாளர் வலது புறம் பார்த்திருப்பார்.

செப்டம்பர் எட்டாம் தேதி இறந்து போன பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் வலது புறம் பார்க்கும்படி தபால் தலை நாணயங்களில் இருக்கிறது. அடுத்ததாக வரும் சார்லஸின் படம் இடது புறம் பார்ப்பதாக அமைக்கப்பட்டுள்ளது . இந்தப் படத்தை மஹாராஜா ‘ஓகே’ OK என்று சொல்லிவிட்டார். புதிய நாணயங்களுக்காக பிரிட்டிஷ் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதுவரை உலகிலேயே அதிக அளவு உருவம் அச்சிட்டப்பட்டவர் பிரிட்டிஷ் மஹாராணி . அவரை மிஞ்ச எவராலும் இனி முடியாது. ஏனெனில் அவர் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்! பிரிட்டனில் இப்போது பதவி ஏற்பவர் மூன்றாம் சார்லஸ் (CHARLES iii) என்று அழைக்கப்படுவார். 1952 முதல் கோடானு கோடி நாணயங்களிலும் தபால்தலைகளிலும் இடம்பெற்றவர் எலிசபெத் மஹாராணி. புதிதாக வெளியாகப்போகும் 5 பவுண்டு நாணயங்களில் மட்டும் நாணயத்தின் மறு பக்கத்தில் அவர் உருவம் இருக்கும்.

XXX

பாண்டிய மன்னர் பட்டியல்

கடுங்கோன் (இடைக்காலம்) (560–590)

மாறவர்மன் அவனி சூளாமணி (590–620)

செழியன் சேந்தன் (620–640)

அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் (670–710)

கோச்சடையன் ரணதீரன் (710–735)

அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் I (735–765)

பராந்தக நெடுஞ்சடையன் (765–790)

இராசசிம்மன் II (790–800)

வரகுணன் I (800–830)

சீர்மாற சீர்வல்லபன் (830–862)

வரகுண வர்மன் (862–880)

பராந்தக வீரநாராயணன் (880–900)

மூன்றாம் இராசசிம்மன் (900–920)

பல பாண்டியர்களின் முழுப்பெயர்களும் நமக்குக் கிடைக்கவில்லை அவைகள் கிடைத்தால் பிற்காலத்திலுமிந்தப் பெயர்கள் இருப்பதைக் காணலாம்.

பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)

சுந்தர பாண்டியன் I

வீர பாண்டியன் I

வீர பாண்டியன் II

அமரபுசங்க தீவிரகோபன்

சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்

மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்

மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்

சடாவர்மன் சோழ பாண்டியன்

சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)

மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)

பராக்கிரம பாண்டியன் I (1161–1162)

குலசேகர பாண்டியன் III

வீர பாண்டியன் III

சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)

விக்கிரம பாண்டியன் (1180-1190)

முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)

பராக்கிரம பாண்டியன் II (1212–1215)

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)

சுந்தர பாண்டியன் IV (1309–1327)

வீர பாண்டியன் IV (1309–1345)

ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்றியதால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை என்ற வெள்ளைக்காரன் ஏச்சுப்பேச்சு அடிபட்டுப்போகிறது. மேலும் ஒரு மாறனுக்கு அடுத்தாற்போல் இன்னொரு மாறன் பெயரே நமக்கு இன்று கிடைத்தாலும் இடையே ஒரு சடையன் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

வாழ்க பாண்டியர்கள்! 

-SUBHAM-

tags – மூன்றாம் சார்லஸ் , மாறன், சடையன், பாண்டியர், மன்னர் 

காந்தி வந்தாராம், பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்………………… (Post No.11,319)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,319

Date uploaded in London – 3 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

(எச்சரிக்கை ; கட்டுரையின் உள்ளே என் சுய சரிதையும் உள்ளது )

65 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் வடக்கு மாசி வீதியிலுள்ள யாதவாஸ் ஸ்கூலில் (யாதவர் ஆரம்பப் பள்ளி) படிக்கும்போது ஒரு அசட்டுப் பிசட்டு Nursery Rhyme நர்சரி ரைம் பாடுவோம். குறிப்பாக பெண் களை நோக்கி.!.

காந்தி வந்தாராம் பூந்தி தந்தாராம்

சாந்தி தின்னாளாம்  வாந்தி எடுத்தாளாம்

இப்போது அதையே  கொஞ்சம்  மாற்றிப்படலாம்

காந்தி வந்தாராம்  நம்ம  நாட்டுக்கு

சாந்தி தந்தாராம்

ஏந்தி  வந்தாராம் அஹிம்சை கொள்கையை

ஏந்தி  வந்தாராம்

சந்தி சந்தி இடமெல்லாம் சிலையாய் நின்றாறாராம்

சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும்

காதி’யணிந்த மக்களைக் காணவில்லையாம்.

(என்னுடைய தந்தை தினமணி வெ . சந்தானம், தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஆகியோர் எப்போதும் கதர் (காதி) ஜிப்பாதான் போடுவார்கள். இப்போது ‘காதி’ மறைந்துவிட்டது.)

அப்படியென்ன காந்திஜி சேவை செய்தார்? என்போருக்கு ஓரிரு பதில்கள்.

அரசியலில் காந்தீஜி படு தோல்வி அடைந்தார். அவர் முழு zero ஜீரோ . மற்ற துறைகளில் அவர் ஒரு Hero ஹீரோ . சுய வாழ்வில் உள்ளதைச் சொல்வேன்சொன்னதைச் செய்வேன்; வேறொன்றும் தெரியாது (சினிமாப்பாடல்) என்று பாடினார் . மற்றவர்களையும் பாட வைத்தார். முதலில் ஓரிரு சம்பவங்களைப்  பார்ப்போம் . அவர் படித்ததோ வக்கீல் தொழிலுக்கு; அவருக்குப் பிடித்ததோ ‘அனைவருக்கும் சம உரிமை’.

தென் ஆப்பிரிக்காவில் சம உரிமைகளுக்குப் போராடியவர்தான், இந்தியாவுக்கு வந்தவுடன் தேச விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்து கொண்டார்.

HAIR CUT

காந்தி, தலை முடி அதிகம் வளர்ந்ததால் ஹேர்கட்டிங் சலூனுக்குப் (Hair cutting Saloon) போனார்.  அங்கு  முடிவெட்டும் தொழிலில் வேலை செய்த நாவிதர்கள் கறுப்பர்கள்தான். அவர்கள் காந்திஜியை உள்ளே அனுமதிக்கவில்லை. பழுப்பு நிறத் தோல் உடைய இந்தியர்களுக்கு முடிவெட்டினால், வெள்ளையர்கள் விரட்டி விடுவார்களே என்று அஞ்சி , ‘போ  , போ வெளியே போ’ என்று விரட்டிவிட்டனர். அவர் என்ன செய்தார்? தனக்குத் தானே முடி வெட்டிக்கொண்டார். பின்புறம் சரியாக வெட்ட முடியவில்லை. மறுநாள் வெளியே சென்ற போது வெள்ளைக்காரர்கள் கிண்டல் செய்தனர்.

“என்ன, காந்தி ? வீட்டில் எலிகள் அதிகமோ ? ராத்திரி தின்று மென்று விட்டது போல் இருக்கிறதே” என்று. அவர் கொஞ்சமும்  திருப்பித் திட்டவில்லை ; உங்கள் நாட்டு கறுப்பர்கள் கூட எனக்கு முடிவெட்டப் பயப்படுகின்றனர் என்று உண்மையைச் சொல்லி அவர்கள் வாயை மூடினார். பின்னர் எப்போதும் தனக்குத் தானே முடிவெட்டிக்கொண்டார் (நல்ல  வேளை ! பிற்காலத்தில் வழுக்கைத் தலை ! முடிவெட்டும் தேவையே இல்லை )

xxx

காந்திஜி சிறை செல்வதும் வீட்டுக்குத் திரும்பி வருவதும் தென் ஆப்பிரிக்காவிலேயே துவங்கிவிட்டது. அவருக்கு மிகவும் பிடித்தது — தானே ‘தக்ளி’யில் நூல் நூற்று ஆடை நெய்வது ஆகும். இப்படி நெய்த ஆடைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் (குறள்  314)

கெட்டது செய்த ஒருவர், வெட்கப்படும்படி, அவருக்கு நன்மை செய்து விடு — என்ற வள்ளுவன் வாக்கினை வாழக்கையில் பின்பற்றினார் .

நான் மதுரையில், மஜூரா காலேஜில் (Madura College) பி.யூ.ஸி படித்தபோது ஒரு ஆங்கிலப் பாடம் இருந்தது. அதில் படித்தது இன்றுவரை மறக்கவில்லை . அது லூயி பிஷர் Louis Fisher என்பவர் காந்திஜி பற்றி எழுதிய கட்டுரை ; அவர் சொன்னார் ; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் காந்திஜி மட்டும் பிறந்திருந்தால் இந்துக்கள் இவ்வளவு நேரம் அவருக்கு கோவில் கட்டி இருப்பார்கள் ; ஏனெனில் அவர் சொன்னதைச் செய்தார்; செய்ததை சொன்னார் .

Had Gandhi born in this country 2000 years ago, Hindus would have built him a temple by this time; because he practised what he preached and preached what he practised.

இது முற்றிலும் உண்மை ; இன்றைய அரசியல்வாதிகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அவர் வாழ்ந்தார். வள்ளுவனும் இதை ஆதரிக்கிறான்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் (குறள்  50)

உலகத்தில் நேர்மையாக வாழ்பவன் மேலுலகத்தில் உள்ள கடவுளுக்கு சமம் அல்லது கடவுள் ஆகிவிடுவான் என்பது வள்ளுவன் கண்ட உண்மை.

அரசியலில் காந்தி சொன்னதை யாரும் கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சியைக் கலை என்றார் ; அதைச் செய்யாததோடு அதை வைத்து இன்று பிழைப்பே நடத்துகின்றனர். பசுக்களை ரட்சியுங்கள்; இந்தி படியுங்கள் என்றார் ; அதையும் பலரும் பொருட்படுத்தவே இல்லை. பாகிஸ்தான் உண்டானால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் பாகிஸ்தான் கொடுக்காவிட்டால்  செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ; ஆக அரசியலில் அவர் சொல்லுக்கு மதிப்பில்லை. 1948-ல் இறக்காமல் இன்னும் பத்து, இருபது  ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அவரை யாரும் மதிக்காமல், ஆஸ்ரமத்தில் வைத்து ‘கும்பிடு மட்டும்’ போட்டு வைத்திருப்பார்கள் (வினோபாஜி போல).

போகட்டும் அரசியலை மறந்துவிட்டு அவர் வாழ்ந்த விஷயங்களை மட்டும் — வாழ்ந்த முறையை –மட்டும் பின்பற்றுவோம். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் ; நாமோ அடுத்த வீட்டுக் காரனைவிட இன்னும் விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்; சொந்தக்காரனைவிட பெரிய சொகுசு வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறோம்; அந்த நினைப்பையாவது கைவிடலாமே; எளிமை என்பதை கைக்கொள்ளலாமே !

(என் வாழ்க்கையில் நடந்த ஓரிரு சம்பவங்களையும் எழுதி வைக்கிறேன் ; என் மகன் என்னைக் காரில் அழைத்துச் செல்லும்போது DAD, DAD டாட் டாட் எதிரே வரும் காரைப் பாருங்கள். இதைப் போலத்தான் வாங்க எனக்கு ஆசை; ஆனால் இது வாங்கலாமா ? அல்லது அது (வேறு ஒரு  மிக உயர்ந்த காரின் பெயரைச் சொல்லி) வாங்கலாமா ? What do you think? வாட் டூ யூ திங்க் ? என்பான் ; நான் சிரித்துக்கொண்டே,’ மகனே நாலு சக்கரம்; ஒரு கூரை ; நிற்காமல் போகவேண்டும்; டப்பா கார் ஆனாலும் பரவாயில்லை’ என்பேன்.

உண்மையில் இது நடக்கவும் நடந்தது..

20 ஆண்டுகளுக்கு முன்னர்

இலங்கையின் புகழ்பெற்ற அறிஞர் (காலம்சென்ற ) பேராசிரியர் . கைலாசநாத குருக்கள் வந்திருக்கிறார் ;டாக்டர் சுவாமிநாதன் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என்று ஒரு இலங்கைத் தமிழ் அன்பர் டெலிபோன் செய்தார். அடடா, அவர் எழுதிய வட மொழி இலக்கிய வரலாறு புஸ்தகம் என் தந்தை வைத்திருந்தார். அதை இப்போதும் லண்டனில் படித்து அவ்வப்போது கட்டுரைக்கு குறிப்புகள் எடுக்கிறேன். அவசியம் சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். ஒரு குறிப்பிட்ட லண்டன் ஸ்டேஷன் (Underground)  வாசலில் குறிப்பிட்ட நேரத்துக்கு என் நண்பர் கார் வரும் ஏறிக்கொள்ளுங்கள் என்கிறார். அப்படியே காரும் வந்தது. அது கார் அல்லதகர டப்பா தான் ; பத்து முறை கதவை தடால், தடால் என்று அடித்த பின்னர் மூடிக்கொண்டது ; கட்டை வண்டி வேகத்தில் சென்றது. தடால், படால் சப்தத்தோடு இலக்கை அடைந்தது; இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்பு. இது போன்ற சுவையான சம்பவங்கள் இருப்பதால்தான் மனத் தொய்வு இல்லாமல் வாழ முடிகிறது. இன்னொரு சம்பவம் .

எச்சரிக்கை 2

போர் (bore) அடித்தால் மேலே படிக்காமல் நிறுத்தி விடுங்கள்

லண்டனில் க்ராய்டன் Croydon  பகுதியில் தமிழர்களுக்கு கோவிலே இல்லை ; ஒன்று துவங்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்தனர். (இப்போது அப்பகுதியில் கோவில்கள் வந்து விட்டன ).  நான் உலக இந்து மஹா சங்கம்(WHMS) , தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) , லண்டன் சத் சங்கம் (LSS), சவுத் இந்தியன் சொசைட்டி (SIS) எல்லாவற்றிலும் இருந்ததால் என்னையும் அந்தக் கமிட்டியில் போட்டனர். மாதத்துக்கு இரண்டு முறையாவது சந்திப்போம் .Croydon க்ராய்டன் அதிக தூரம் என்பதால் என்னை ஒரு டாக்டர் அவருடைய மிக விலை உயர்ந்த காரில் (Luxury Car) அழைத்துச் செல்லுவார்.

அவர்கள் (Doctors) சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி விலை உயர்ந்த கார் வாங்கினால் வரி கொடுப்பதில் தள்ளுபடி (Tax discounts)  உண்டு. ஆகையால் அவர்களுக்கு விலை உயர்ந்த காரை வாங்குவதும் ‘பழைய’ கார்களை நண்பர் – உறவினருக்கு விற்பதும் சகஜம். அது மிக விலை உயர்ந்த கார் என்பதை அறியாத நான், ஒவ்வொரு முறையும் காரின் கதவைக் கையால் இழுத்து ‘தடால்’ என்று மூடினேன். அவர் பேச்சு வாக்கில் தனது காரின் மதிப்பு , அது என்ன கார் என்றெல்லாம் கார் புராண பிரவசனம் செய்து பார்த்தார். அப்போதும் என் டியூப் லைட் (Tube light- fluorescent bulb) போன்ற மூளையில் அது ஏறவில்லை. அடுத்த முறை அவரது காரின் கதவை தடால் என்று மூடியபோது அவருக்குப் (He lost his patience) பொறுக்கவில்லை.

‘நான் சொன்னேனே; இது அல்ட்ரா மாடர்ன்  (Ultra modern features) அம்சங்களைக் கொண்டது . இது ஆட்டோமேட்டிக் டோர் (automatic door). நீங்கள் இறங்கிய பின்னர் கதவைத்  தொட்டாலே போதும் அது தானாகவே மூடிக்கொள்ளும்’ என்று  சொன்னார் ; நான் அவரிடம் அபால்ஜிஸ் (apologies)  கொடுத்துவிட்டு, என் மகனிடம் அடிக்கும் டப்பா கார் ஜோக் Joke கைச் சொல்லி ஒருவாறு மழுப்பி சமாளித்தேன் .

எளிமை வாழ்க!!

— subham —-

Tags- காந்தி, பூந்தி, முடி, நூல் நூற்றல் , என் சுய சரிதை , டப்பா கார்