Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
London Brahmins have been doing the Rik Yajur Upakrma (Annual Sacred Thread changing Ceremony) for over 30 years now. I have been attending it almost every year from 1987 in London. We missed it in 2020 due to the Chinse virus attack. In the beginning Mr Panchanathan was officiating for us. Then Sri Kalyanasundara Sivacharyar was officiating for us on behalf of World Hindu Mahasangam.. Since it has been organised in various areas in London, we get 40 people in Brent, London. It takes two hours to do the Homam and Vedarambham. Everybody remembers the long long Maha sankalpam and Panini’s Mahesvarani Sutras. We hire halls or temple premises to do it. For those ask for Sankalpa Mantras I used to post it. I have attached some pictures for our record and for your record.
On 22nd August 2021, we did at Kanaga Durga Temple (Kanaka Thurkai amman alayam) in Ealing, London. Si Kalyanasundara Sivacharya and Sri Balasubrahmanya Sivacharya conducted the ceremony. Over 30 people attended the event. The temple authorities honoured me and Mr Sivasanakaran and Mr Shastri. We were adorned with shawls (Ponnadai in Tamil)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புக்கர் டி வாஷிங்டன் ஒரு அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் வாழ்க்கை வரலாறு எழுதிப் புகழ் பெற்றவர் ஆவார்.
அவருடைய முழுப்பெயர் BOOKER TALIAFERRO WASHINGTON புக்கர் டாலியபெர்ரோ வாஷிங்டன் .
பிறந்த தேதி – ஏப்ரல் 5, 1856
இறந்த தேதி- நவம்பர் 14, 1915
வாழ்ந்த ஆண்டுகள் 59
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய AFRO-AMERICAN ஆப்ரோ- அமெரிக்க எழுத்தாளர். அவருடைய பூர்வீகம் ஆப்ரிக்க கண்டம். அவருக்கு 45 வயதானபோது அவர் சுயவரலாற்றை AUTOBIOGRAPHY எழுதி வெளியிட்டார். அடிமைத் தனத்திலிருந்து மீட்சி UP FROM SLAVERY என்பது அவருடைய நூலின் தலைப்பு.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் ரோனோக் என்னும் ஊரில் அடிமைக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவருடைய தாயார் ஒரு சமையல்காரி. பெரிய தோட்டம் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவருடைய தந்தையாக இருக்கலாம் என்று தெரிகிறது . அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் வாஷிங்டனும் அவருடைய அன்னையும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அந்தக் குடும்பம் வேறு இடத்திற்குப் போய் தங்கியது. அவருடைய அன்னை வேறு ஒருவரைக் கல்யாணம் கட்டினார். அப்போது வாஷிங்டன் ஒரு சிறுவன்தான். குடும்பத்திற்கு உதவுவதற்காக நிலக்கரிச் சுரங்கம், உப்பளம் ஆகியவற்றில் வேலை செய்தார் .
அவருக்குக் கல்வி கற்கும் ஆர்வம் பிறந்தவுடன் இரவு நேரத்தில் உள்ளூர் ஆசிரியரிடம் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டார். 500 மைல் தொலைவில் வர்ஜீனியாவில் ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவர்களுக்காக ஒரு விஷேச பள்ளிக்கூடம் திறக்கப்பட்டவுடன் அங்கு சென்றார். 16 வயதுதான். பெரும்பாலான தூரத்தை நடந்தே கடந்தார்.
பட்டப்படிப்பில் தேறியவுடன் அலபாமா மாநிலத்தில் (TUSKEGEE IN ALABAMA) தலைமை ஆசிரியர் வேலை கிடைத்தது. பள்ளிக்கூடத்துக்கு சரியான கட்டிடம் இல்லை; கட்டிடம் கட்டுவதற்கு யாரிடமும் பண வசதியும் கிடையாது . ஒரு பந்தல் திடலில் பள்ளிக்கூடத்தை நடத்தினார். 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவருடைய உழைப்பின் மூலம், அது சிறந்த பள்ளி என்ற பெயரை ஈட்டியது . அவர் சிறந்த பேச்சாளரும் கூட. அமெரிக்க ஜனாதிபதிகளான ரூஸ் வெல்ட் , டாப்ட் ROOSVELT, TAFT ஆகியோருக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார். கறுப்பின மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய பாடுபட்டார். பொருளாதார சமத்துவமே சமூக சமத்துவத்தைக் கொணரும் என்பது அவர் கொள்கை.
புக்கர் வாஷிங்டன் எழுதிய நூல்கள்:–
1899- THE FUTURE OF THE AMERICAN NEGRO
1900- THE STOTY OF MY LIFE – WITH EDGAR WEBBER
1901 – UP FROM SLAVERY- WITH MAX BENNETT THRASHER
1904- WORKING WITH HANDS
1913- THE STORY OF SLAVERY
–SUBHAM—
tags — அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர்,புக்கர் டி வாஷிங்டன், Booker T.Washington
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தள்ளாடும் தமிழகம்!
ச.நாகராஜன்
1
தமிழகமே தள்ளாடுகிறது! ஆம், ஏராளமான ‘குடி மகன்களால்’ அது தள்ளாட்டம் போடுகிறது. சிந்திக்கும் திறனின்றி குடி நிறையப் பேரை ஆட்டிப் படைப்பதனால் அது தள்ளாடுவதில் வியப்பே இல்லை. தந்தையை விஞ்சிய விதத்தில் செயல்படும் மகனைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் “சாதனைகளில்” எதை முதல் சாதனையாக் முன் நிறுத்துவது என்பதில் அறிஞர் பெருமக்களுக்குள் ஒரே குழப்பம் என்பது உண்மை தான்! அத்துணை “சாதனைகள்!”
தாய்க்குலத்தோர் தவிக்க சம்பாதித்த அனைத்தையும் இழந்து தடுமாறும் எண்ணற்ற “குடி மகன்களுக்க்காக” இறைவனை பிரார்த்திப்போமாக!
போதையிலிருந்து விடுபட்டால் பாதை தடுமாறிய இவர்கள் வேதனை நீங்கி நல்வழிக்கு வரட்டும்!
2
அடுத்த சாதனை ஒவ்வொரு தமிழனையும் “கடன்காரனாக்கிய” சாதனை இன்னும் பெரிதோ?! தந்தை இலவச டிவியை வழங்கி அதன் மூலம் அதைப் பார்ப்பதற்கான விண்வழி இணைப்புகளுக்கு காசு வாங்கித் தன் குடும்பத்தைச் செழிக்க வைத்த உத்தி “சிறப்பானது” தான்!
இன்று ஒவ்வொருவனும் கடன்காரனாகித் தவிக்கும் நிலையை டபிள் வாட்ச் காரர் வெள்ளையறிக்கை மூலம் சுட்டிக் காட்டி சாதனை படைக்க உடனே ஒரு நல்ல தமிழர், ‘அய்யா நகைக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, விவசாயக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் வரும் தொகை இவ்வளவு, பஸ் இலவசப் பயணத்தால் வரும் தொகை இவ்வளவு’ என்று ஒரு நீண்ட கணக்கை விரைவாகப் போட்டு வெள்ளை போர்டில் அனைத்தையும் கூட்டி “அடடே! இது கடன் தொகையை விட அதிகமாகி விட்டதே! எங்களுக்கு இவ்வளவும் வேண்டாம், நீங்களே வைத்துக் கொண்டு கடன் தீர்ந்து விட்டது என்று பத்திரம் தந்து விடுங்கள் என்று பத்திரமாகச் சொல்லி விட்டார்.
இப்படிப்பட்ட புத்திசாலிகள் வேண்டாம் என்று தானே முதலில் சொன்னது போல குடிகாரக் கடைகளைத் திறந்து வைத்தோம், இவன் ஏன் அங்கு போகவில்லை என்று அவர்(கள்) கோபப்பட்டால் அதில் நியாயமே இல்லை!
3
அடுத்து ஒன்றியக் குழப்பத்தை திமுக முன் வைக்க, மத்திய வார்த்தையில் நிலையாக இருக்கும் நண்பர் “Take your seat” என்றால் நாற்காலியைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தம் இல்லை, நண்பரே. உட்காருவது தான் என்று சொல்ல, ஆங்கிலம் தெரியாத நிலையைக் கொண்ட அனைவரையும் மக்கள் இனம் காண முடிந்தது.
4
இரு வாரங்களுக்கு ஒரு குழப்பம் வைத்தால் தங்களின் மொத்த (505) வாக்குறுதியையும் மறந்து ஐந்து ஐம்பத்திரண்டு வாரங்களையும் கடந்து விடலாம் என்ற நிலையில் அடுத்ததாக கடவுள் மேலேயே கையை வைக்கும் விதமாக அர்ச்சனைக் குழப்பம்!
இதில் அறிஞர்களும் நல்லோரும் ஆவேசமாய்ப் பல கேள்விகளை வைத்துள்ளனர்.
இறைவனோ அல்லது பக்தர்களோ இதைக் கேட்டார்களா?
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற ஈவெராவின் சிலை முன்னே அர்ச்சகர் ஆணை கிடைத்தவர்கள் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்தே இவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களே தவிர நாவார தேவாரம் பாடும் கோஷ்டி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.
இவர்களுக்கு ஆகம சிலபஸை யார் தந்தது? யார் தேர்வு வைத்தது? எவர் திருத்தினர்? எப்படி சர்டிபிகேட் வழங்கப்பட்டது? கேள்விகள் கணைகளாக வருகின்றன!
பிராமண – பிராமணர் அல்லாதவருக்கு இடையே ஒரு சண்டையையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சியும் கேள்விகளால் துவண்டு விட்டது.
40000 கோவில்களில் ஐந்து சதவிகிதமோ அல்லது அதிக பட்சமாக பத்து சதவிகிதமோ தான் பிராமண அர்ச்சகர்கள்! ஆகவே இதர கோவில்களில் ஆங்காங்கு உள்ள சம்பிரதாயப்படி பிராமணர் அல்லாதாரே முறைப்படி வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்தக் கோராத தமிழக அரசு, சர்ச்சுகளில் (AMEN) ஆமெனைக் கூட தமிழில் சொல்ல வேண்டுமென்று சொல்ல முன் வராத தமிழக அரசு ஹிந்துக் கோவில்களை மட்டும் குறி பார்த்து வழிபாடுகளை பக்தர்களின் இஷ்டப்படி நடத்த விடாமல் செய்ய ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது ஹிந்து மதத்திற்கே ஆபத்தானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாத அர்ச்சகர்கள் கோவிலில் நுழைவது ஏன், இதற்குப் பின்னர் உள்ள சதித்திட்டம் என்ன என்று கேட்கின்றனர்.
40000 ஏக்கர் கோவில் நிலம் பறி போயிருக்கிறது. அங்கு பல்வேறு கட்டிடங்கள் எழுந்துள்ளன.
சில ஏக்கர் நிலங்களை மீட்டு விட்டோம் என்று கூறும் தமிழக அரசு அது யார் வசம் இது வரை இருந்தது, ஏன், எப்படி இருந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர். இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்திய அவர்களிடமிருந்து கோவிலுக்குச் சேர வேண்டிய தொகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேட்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பானதும் முதலாவதுமான ஒரு விஷயம் இருக்கிறது.
இப்படிப்பட்ட அரசு ஆணை சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்பது தான்!
இது contempt of the court ஆகுமா? அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று சுப்ரம்ண்யம் சுவாமி போன்ற மூத்த அறிவாளிகள் கூறுகின்றனர்.
ஆக நீதிக்குப் புறம்பானது, தர்மத்திற்குப் புறம்பானது, பழக்க வழக்க சம்பிரதாயங்களுக்குப் புறம்பானது, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தக் கூடியது, கோவில் சொத்துக்களுக்கும் நிலங்களுக்கும் நகை, சிலைகள் உள்ளனவற்றிற்கும் ஆபத்தை விளைவிப்பது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி மக்கள் தங்களைப் பல கேள்விகள் கேட்காமல் திசி திருப்புவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறானதாகும்! இது தனது அதர்மச் சுமையால் சுமை அழுத்தம் தாங்காது தானே விழுந்து விடும்!
It will fall on its own deadweight!
இறுதியாக திருமூலரின் எச்சரிக்கை ஒன்றையும் கூறி இந்தக் கட்டுரையை முடிக்கலாம்:-
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம் குன்றும்
கன்னங் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுதுரைத் தானே (திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – திருக்கோயிலிழிவு அதிகாரத்தில் -பாடல் எண் 518)
***
INDEX
திமுக ஆட்சி, குடித்தல் அதிகரிப்பு, கடன் சுமையும் இலவசங்களும் அதிகரிப்பு, ஒன்றியம் உள்ளிட்ட வார்த்தைக் குழப்பம், வழிபாடு மாறுதல்கள், அறிஞர்களின் ஆதங்கமும், கேள்விகளும்,
திருமூலர் திருமந்திரத்தில் எச்சரிக்கை
LIQUOR SHOP Q
TAGS- திருமூலர் ,எச்சரிக்கை, திமுக ஆட்சி ,தள்ளாடும் ,தமிழகம்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 22-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருவள்ளூர் திருத்தலம்!
திங்கள் அப்பு வான் எரிகாலாகித் திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கடல் சூட நின்ற
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே!
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும் புண்யாவர்த்த க்ஷேத்திரமாகக் கொண்டாடப்படுவதுமான தொண்டை நாட்டுத் தலமான திருவள்ளூர் என்று இப்போது அழைக்கப்படும் திருஎவ்வுளூர் திருத்தலமாகும். இந்தத் தலமானது சென்னையிலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெருமாள் திருநாமம் : திரு எவ்வுள்கிடந்தான் என்கிற ஸ்ரீ வீ ரராகவப் பெருமாள்; தாயார் திருநாமம் : வஸுமதி தாயார் என்கிற கனகவல்லித் தாயார் வனம் : வீ க்ஷாரண்யம்; தீர்த்தம் : ஹ்ருத் தாப நாசினி தீர்த்தம்;
விமானம் : விஜய கோடி விமானம்
மிகவும் புராதனமான இந்தத் தலத்தின் விசேஷ மஹிமையை மார்க்கண்டேய புராணம் விரிவாகக் கூறுகிறது.
முன்னொரு காலத்தில் அசுர குலத்தில் உதித்த மது, கைடபன் ஆகிய இரு ராக்ஷஸர்களை வதம் செய்ய மஹாவிஷ்ணு அவர்களுடன் கோர யுத்தம் ஒன்றைச் செய்தார், அவர்கள் மீது தனது சுதர்ஸன சக்கரத்தை ஏவினார். அப்போது அந்த அசுரர்கள் பயந்து ஓடி வந்து இந்தத் தலத்தில் ஒளிந்தார்கள். மஹாவிஷ்ணு விமானத்திலிருந்து அவர்களை வதம் செய்தார். ஆகவே இங்கிருக்கும் விமானத்திற்கு ஸ்ரீ விஜயகோடி விமானம் என்ற பெயர் ஏற்பட்டது.
கிருத யுகத்தில் ப்ரத்யும்ன மஹாராஜன் என்னும் ஒரு அரசன் புத்திரப் பேறு வேண்டி மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய விஷ்ணு பகவான் அவன் முன்னே தை அமாவாசை தினத்தன்று தோன்றி அவனுக்குக் காட்சி அளித்தார். உனக்கு என்ன வேண்டும் என்று கேள் என்று விஷ்ணு அருள் பாலித்துக் கூற, அந்த அரசன் எனக்கு புத்திரப் பேறு தருமாறு வேண்டுகிறேன் என்றும் இன்று தை அமாவாசை தினம் என்பதால் இங்குள்ள தீர்த்தம் எல்லா புண்யதீர்த்தங்களை விட அதிக மஹிமை உள்ளதாக ஆக வேண்டுமென்றும் பிரார்த்தித்தான்.
அவன் கேட்ட இரு வரங்களையும் அருளினார் மஹா விஷ்ணு.
இன்னொரு வரலாறும் இந்தத் தலத்தைப் பற்றி உண்டு. முன்னொரு காலத்தில் தர்மஸேன மஹாராஜன் என்பவனுக்கும் அவள் மனைவியான கௌதமி என்பவளுக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பேரழகுடன் விளங்கிய அவள் யௌவனப் பருவத்தை அடைந்து ஒரு நாள் நந்தவனத்தில் மலர் கொய்து கொண்டிருந்தாள். அங்கு அவள் முன்னே ஸ்ரீ வீரராகவன் ஒரு அழகிய ராஜகுமாரனாகத் தோன்றினார். அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வீரராகவன் அவளது தந்தையை அணுக, அவரும் சம்மதித்து உமது ஊர், பெயர், வம்சம் முதலானவற்றைக் கூற வேண்டும் என்று கூறினார்.
உமது பெண்ணை எனக்கு மணம் முடித்துக் கொடுப்பீர்கள் என்றால் காலம் காலமாக நான் இங்கேயே இருப்பேன் என்று உறுதி கூறிய வீ ரராகவர், திருமணக் கோலத்தில் வஸுமதியின் கையைப் பிடித்தவாறே ஸ்ரீ வீரராகவன் சந்நிதியில் சென்று அந்தர்தியானமானார்.
தனக்குப் பெண்ணாக அவதரித்தவள் மஹாலக்ஷ்மியே என்பதையும் வந்து அருள் பாலித்தது மஹாவிஷ்ணுவே என்பதையும் புரிந்து கொண்ட மன்னனும் மற்றோரும் அவர்களை ஸேவித்து ஆனந்தம் அடைந்தனர்.
அவரது திருக்கல்யாண மஹோத்ஸவ ஞாபகமாக இன்று வரை தை பூரட்டாதிக்கு பத்து நாள் முன் தொடங்கி திருக்கல்யாண உற்சவம் இங்கு நடைபெறுகிறது.
இன்னொரு வரலாறும் உண்டு. ஆதியுகத்தில புருபுண்யர் என்னும் அந்தணர் தன் மனைவியான ஸதீ என்பவளுடன் புத்திரப் பேறு வேண்டி சாலியக்ஞம் என்னும் யாகத்தைச் செய்தார். அவரது பக்தியை மெச்சிய பகவான் அவருக்கு அருள் பாலிக்க, ஒரு புத்திரர் பிறந்தார்.
சாலியக்ஞம் செய்து பிறந்ததால் அவருக்கு சாலிஹோத்ரன் என்ற பெயர் ஏற்பட்டது. பெரும் தவத்தால் ஸ்ரீசாலிஹோத்ர மஹரிஷி என்ற பெயரைப் பெற்ற அவர் மிகுந்த தவத்தை இந்தத் தலத்தில் மேற்கொண்டார். அவரது தவத்தை மெச்சிய விஷ்ணு அவர் முன் ஒரு வயோதிக அந்தணராகத் தோன்றினார். அவர் திருப்தி உறும்படி அவருக்கு சாலிஹோத்ரர் அமுது படைத்தார்.
பூரணமாய் அமுது உண்ட அந்த அந்தணர் ‘திருப்தன் ஆனேன், நடந்து வந்த சிரமம் நீங்க படுத்துறங்க எவ்வுள்’ என்று கேட்டார்.
சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைச் சுட்டிக் காட்ட அவர் தெற்கே திருமுடியை வைத்து படுக்க வானில் தேவர் அனைவரும் கூடி துந்துபி முழங்கி மலர் மாரி பொழிந்தனர்.
பகவான் அவர் முன் தோன்றி அருள் பாலித்ததோடு இன்று வரை அங்கு வரும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.
சேஷ சயனத்தில் சயனித்து தனது நாபியில் தோன்றிய பிரம்மாவுக்கு ஒரு கையால் ப்ரணவத்தை உபதேசித்தும் மற்றொரு திருக்கையால் சாலிஹோத்ர மஹரிஷியின் சிரசில் அபயப்ரதானம் செய்து கொண்டும் தெற்கே சிரசும் வடக்கே திருவடி நிலைகளையும் வைத்து அருள் பாலிக்கிறார்
ஸ்ரீவீ ரராகவப் பெருமாள். அனைத்து பாவங்களையும் போக்கும் அரும் தலம் இது. அத்துடன் இங்கு வந்து வழிபடுவோரின் அனைத்து வியாதிகளும் உடனே நீங்கி விடும். ஆகவே பக்தர்கள் பரவசத்துடன் வைத்ய வீரராகவன் என்று பெருமாளை அழைக்கின்றனர்.
ஒரு சமயம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட அருட்பிரகாச வள்ளலார் பெருமான் இங்கு வந்து வீரராகவரை திருஎவ்வுளூர் வீரராகவப் பஞ்சகம் பாடிப் போற்றினார். உடனே வயிற்று வலி நீங்கியது. இந்தத் தலத்தில் திருமங்கையாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீவீ ரராகவப் பெருமாளும் வஸுமதித் தாயாரும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
இன்று உலக சம்ஸ்க்ருத தினம். பாரதப் பிரதமர் தனது ட்வீட்டில் அனைவருக்கும் நாள் வாத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆவணி பவுர்ணமி தினத்தன்று உலக சம்ஸ்க்ருத தினம் கொண்டாடப்படுகிறது.
XXX
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா?; ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள், முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளன.
சுப்பிரமணியன் சாமி பேட்டி:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார். தி.க., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார். திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.
முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் ‘வாபஸ்’ பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும்: விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை
”அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும். அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
ஆகம விதிமுறைகளை மீறி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு பலரையும் கோவில் பூஜை பணிகளுக்கு நியமித்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் கடும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், அர்ச்சனையின்போதும், அபிஷேக ஆராதனையின்போதும், பாராயணம் செய்யும் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களின் உச்சரிப்பு மாறியுள்ளது. மந்திரங்கள் மற்றும் சைகை நடைமுறைகள் மாறியுள்ளன. இது ஆகமவிதிகளுக்கும், வேத நடைமுறைகளுக்கும் எதிரானதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
ஹிந்து மதத்துக்கான ஆகம, வேத நடைமுறைகள் 3,000 ஆண்டு பழமையானது. இதுவரை மன்னர் ஆட்சிக்காலத்தில் கூட கோவில் நடைமுறைகள் மாற்றப்படவில்லை.
ஹிந்து சமய மரபுகளை மீறி, அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர்களாக்க அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கென்று யாரிடமும் ஆலோசனை எதுவும் பெறாமல் நடைமுறைப்படுத்தியது தவறு. இது தெய்வக்குற்றம்.
திருமூலர் கூற்றுப்படி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தற்போது அதர்மம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து வருகிறது.
ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு சட்டம் இருக்கக் கூடாது. அனைத்து சமூகத்துக்கும் பொதுவான சட்டம் வேண்டும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.
XXX
‘சிவாச்சாரியார்களை அழித்து விடாதீர்கள்‘: நீதியரசர்கள் உத்தரவு
சென்னை- -”எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்,” என, சுவாமிநாதன் சிவாச்சாரியார் தெரிவித்தார்.
சென்னை வாழ் சிவாச்சாரியார் சமூக நல சங்கம்சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுவாமிநாதன் சிவாச்சாரியார் கூறியதாவது:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு அறிவித்து, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்தவர்களை நீக்கி விட்டு, புதிய நபர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இது, ஆகம விதி மீறல்.
பெரும்பாலான கோவில்களில் சிவாச்சாரியார்கள், தினக்கூலி, வாரக்கூலி, சம்பளம் இல்லாமல் தட்சணையை மட்டும் எதிர்பார்த்து பணிபுரிந்து வருகின்றனர். அது போன்றவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதைவிடுத்து, அதிக வருமானம் வரும், சிவாச்சாரியார்கள் பணியாற்றும் கோவில்களில் தான், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் இல்லாத பல கோவில்களுக்கு அர்ச்சகர்களை நியமித்து, அனைத்து விதமான பூஜைகளையும் செய்ய வேண்டும்
அரசாங்க பணி என்பது வேறு; ஆன்மிகப் பணி என்பது வேறு.பிராமணர் சமுதாயத்தின் உட்பிரிவான ஆதிசைவர் எனும் சிவாச்சாரியார்கள் சிறுபான்மையினர். அவர்களை அழித்து விடாதீர்கள்.எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்திக்கு லண்டன் ஞான மயம் குழு நன்றி தெரிவிக்கிறது
Xxx
அர்ச்சகர்கள் நியமனம்: ஆகம விதிகளை மீறிய செயல்!
”கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசுவோர், கடவுளை எப்படி வணங்க வேண்டும்; யார் பூஜை செய்ய வேண்டும்; எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பது ஏன்,” என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: திருச்சி சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில், பல ஆண்டுகள் பணிபுரிந்த குருக்கள் பலரை நீக்கிவிட்டு, பிராமணர் அல்லாத பலரை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இந்த அத்துமீறலை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
XXX
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
XXXX
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்: நித்தியானந்தா அறிவிப்பு
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
Xxxx
மோடி கோவிலில் திடீரென சிலை அகற்றம் புனே நகரில் பரபரப்பு
புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித் தொண்டரான 37 வயது மயூர் முண்டே என்பவர் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிய மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் எனது சொந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டியதாகவும், இதற்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவு செய்ததாகவும் மயூர் முண்டே கூறினார். மேலும் அவர், “மோடி பிரதமரான பிறகு நாட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, ராமர் கோவில் கட்டுவது, முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது போன்றவற்றில் வெற்றி கண்டு உள்ளார்” என்று கூறியிருந்தார்.
திடீரென்று சிலை அகற்றப்பட்டதற்கு தில்லியிலிருந்து வந்த கட்சித் தலைவர் உத்தரவே காரணம் என்று முண்டேயும் அவருடைய வழக்கறிஞரும் பத்திரிகையாளருக்கு நீண்ட பேட்டி அளித்தனர். பாரதீய கட்சித் தலைமை உத்தரவிட்டதால்தான் அகற்றப்பட்டது. ஆயினும் மோடி, நாட்டுக்கு விரிவான சேவை செய்து வருவதை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர்கள் விரிவாகப் பாராட்டினார்கள்.
Xxx
சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு
ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இதற்கு வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதிக பொருட் செலவில் தயாராக உள்ள ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனாகபூரை அணுகியதாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்திவிட்டதாக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். கரீனா கபூரிடம் சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.
XXXX
நேயர்கள் அனைவருக்கும்
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.
ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்;
உலக சம்ஸ்க்ருத தின வாழ்த்துக்கள்
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
XXX
TODAY IS WORLD SANSKRIT DAY
PM Modi sends message on World Sanskrit Day.
Prime Minister Narendra Modi took to Twitter on Sunday to mark the occasion of World Sanskrit Day. Sanskrit is an ancient world language. Sanskrit is often referred to as the Language of the Gods and is made of the words ‘sáṃ’, meaning together, good, well, perfected, and ‘kṛta’, meaning made, formed and work. When used together connotes something that is well-formed or perfected. HINDU VEDAS ARE IN OLD SANSKRIT LANGUAGE.
XXX
World Sanskrit Day is celebrated on Shravana Poornima every year, and this year it falls on August 22.
xxxxx
HINDU LEADERS WARN DMK GOVERNMENT
Row over appointment of non-Brahmin priests in temples by DMK govt
BJP MP Subramanian Swamy cautioned Tamil Nadu Chief Minister MK Stalin that he would move court against the appointment of non-Brahmin priests to Tamil Nadu’s temples.
Keeping its poll promise, the DMK Government has appointed trained aspirants from various castes as temple priests in Tamil Nadu.
Of the 208 appointees, CM MK Stalin handed over appointment orders from the Hindu Religious and Charitable Endowment (HR & CE) Department on Saturday to 75 personnel who had completed ‘Archagar’ training.
The group comprises ‘Bhattacharyas’ (Vaishnavite priests) and Odhuvars (Shaivite reciters) including one female Odhuvar.
SUBRAMANIAN SWAMY TO MOVE COURT
BJP MP Subramanian Swamy tweeted that MK Stalin, just like his father M Karunanidhi, is meddling with temple priests’ posting, warning that it has become necessary for him to approach court.
WHAT POLITICAL ANALYST SAYS
Political analyst Sumanth C Raman tweeted a video of a priest alleging that several priests are being evicted for the new appointees to begin work. The priest is heard saying that priests from Kalahasti Temple and Kabaleeswarar Temple are being evicted with nowhere to go.
“Many social media messages and videos saying priests in temples are being sacked to make way for new appointees. I welcome the appointment of priests of all castes but sacking those working in temples for decades is wrong,” tweeted Sumanth C Raman.
Viswa Hindu Parishad and Hindu Front of Tamil Nadu also condemned the move of DMK Government. Their motive is to destroy the roots of Hinduism by removing the traditional Brahmin priests.
The Archakas also voiced their protest. General public have pointed out that the mosques and churches do their prayers in Non-Tamil languages and the DMK government has never asked them to do prayers in Tamil. DMK government’s main aim is to destroy Hinduism according to the the comments and tweets posted in mass media.
XXXX
Afghanistan crisis: India to provide refuge to Sikh and Hindus
Prime Minister Narendra Modi on Tuesday directed officials to ensure safe evacuation of all Indian citizens from Afghanistan and to provide refuge to Sikhs and Hindus wanting to come to India from there, as he chaired a crucial high-level meeting in the backdrop of the Taliban takeover of the war-torn country, official sources said.
Modi directed officials concerned to undertake all necessary measures to ensure safe evacuation of Indian nationals from Afghanistan in the coming days.
The Cabinet Committee on Security is the apex government body that deals with the issues of national security.
Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and Finance Minister Nirmala Sitharaman attended the meeting, besides senior government officials.
Xxxx
BJP worker removes PM Modi bust from temple after criticism
A BJP worker, who had set up a temple with the bust of Prime Minister Narendra Modi in Aundh in Pune in Maharashtra , has removed the sculpture after he was pulled up by the BJP leadership in Delhi.
Mayur Munde had set up a small temple alongside a road in Aundh area in Pune a few days ago and installed a bust of Modi in it. “I am a follower of Prime Minister Narendra Modi and I worship him… and take his blessings. The temple would also enable other followers to seek his blessings,” Munde had said.
His action, however, attracted sharp criticism, not only from opposition parties but even local BJP leaders.
While Munde initially remained unavailable for comments, he addressed the media late on Thursday. “I am here to clear my stand but my lawyer Madhukar Musale will speak on my behalf,” he said.
Musale said Munde had set up the temple and it was recently inaugurated by local residents. “News about the temple spread across the country due to the respect and love for the Prime Minister. It also reached BJP’s national leaders… they called me up and asked me to remove the statue,” he said.
xxxx
Gujarat Anti-conversion law does not prohibit inter-faith marriages
The Gujarat government on Tuesday strongly defended its new anti-conversion law before the High Court, claiming the legislation only deals with “unlawful” religious conversion through marriage and does not prohibit people from entering into inter-faith wedlocks.
To further allay apprehensions raised by a petitioner as well as the Gujarat HC about the new law, Advocate General Kamal Trivedi, on behalf of the state government, said the legislation has several “safety valves”, such as prior approval of a district magistrate or an SDM- level officer to initiate prosecution.
After hearing the government’s arguments, a division bench of Chief Justice Vikram Nath and Justice Biren Vaishnav kept the next hearing on August 19 for pronouncement of an interim order.
The bench is hearing a petition challenging provisions of the law which penalizes forcible or fraudulent religious conversion through marriage.
The petition against the Gujarat Freedom of Religion (Amendment) Act, 2021, was filed last month by the Gujarat chapter of the Jamiat Ulema-e-Hind.
XXXX
Fugitive Godman Nityananda claims to have taken charge of Madurai Aadheenam
Fugitive godman Nityananda stirred a controversy by taking to social media to declare that he has taken charge as the 293th pontiff of Madurai Aadheenam.
The 292nd pontiff of Madurai Aadheenam Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya Swamigal, aged 77, passed away at a private hospital in MADURAI on August 13 after battling respiratory illness. He served as the pontiff for over four decades.
Later on August 14, the mortal remains of the pontiff were laid to rest at a piece of land belonging to the Aadheenam at Munichalai. The same day, Harihara Desika Gnanasambandha Paramacharya Swamigal who was named the junior pontiff by Arunagirinatha Swamigal in 2019 was named the 293rd pontiff of the Madurai Aadheenam and he is likely to be coronated soon.
However, Nityananada took to social media late on Tuesday to declare that he had assumed charge as the 293rd pontiff of Madurai Aadheenam, creating a buzz.
Nityananda was formally made the junior pontiff by Arunagirinathar on April 27, 2012. However, he was removed as the junior pontiff on December 19, 2012 by Arunagirinathar himself who went on to appoint and later remove two other junior pontiffs with the issue ending up as legal suits at the Madurai Bench of Madras High Court.
XXXX
Haryana bans use of phrase ‘Gorakh Dhanda’
A decision in this regard was taken by CM Manohar Lal Khattar after a delegation of the Gorakhnath community met him
The Haryana government has banned in official communication the use of expression “Gorakh Dhanda”, generally used to describe unethical practices.
The decision was taken by CM Manohar Lal Khattar after a delegation of the Gorakhnath community met him, according to an official statement on Wednesday.
The delegation urged Khattar to ban the use of the expression as it hurts sentiments of followers of saint Gorakhnath.
The CM said Gorakhnath was a saint and using this term hurts sentiments of his followers.
Therefore, the use of the word in whatsoever context has been completely banned, the CM said according to the statement.
Gorakhnath was a saint and a temple dedicated to him is located at Gord village, 20 km from Sonepat. — PTI
XXXX
UNION MINISTER SHOBHA PLANS TO CLIMB CHAMUNDI HILL
BJP MP Shobha Karandlaje to climb steps of Chamundi Hill during Navaratri.
She was in Mysore as part of her ‘Janashirvada Yatre’
Union Minister of State for Agriculture and Farmers Welfare Shobha Karandlaje said she would climb the steps of Chamundi Hill for a ‘darshan’ of Sri Chamundeshwari Devi during Navaratri in October.
Since Shobha was Mysuru District in-charge Minister in 2008-09, she is closely connected with the city and its people. She has been climbing the steps of the Chamundi Hill since 2009 during the ‘Ashada’ month
She is in the city as part of her ‘Janashirvada Yatre’. She toured Mandya and Chamarajanagar districts and reached Mysuru, on Monday.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 12 கட்டுரை எண் 9841 வெளியான தேதி
12-7-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 13
(41 முதல் – 45 முடிய)
ச.நாகராஜன்
41. மகாலக்ஷ்மி தோற்றம்
வைவஸ்த மனு பூர்வ ஜென்மத்தில் சுரதன் என்னும் பெயருடைய அரசனாக இருந்தான். ஒரு சமயம் அவனது பகைவன் அவனைத் தொற்கடித்தான். தனியே குதிரை மீதேறிச் சென்ற சுரதன் தீர்க்கதிருஷ்டி என்ற முனிவரது ஆசிரமத்தினுள் சென்று அவரை வணங்கினான். அவர் தேவியின் மஹிமையைப் பலவாறாகச் சொல்ல ஆரம்பித்தார். அதில் மகாலக்ஷ்மியைப் பற்றி அவர் கூறும் பகுதி இது:-
மகிஷாசுரன் சகல லோகங்களையும் சகல திக்பாலகர்களையும் வென்று ஆண்டு கொண்டிருக்கும் சமயத்தில் தேவர்கள் பிரமதேவரை அழைத்துக் கொண்டு சங்கரரும் விஷ்ணுவும் இருக்குமிடம் சென்று மகிஷாசுரனின் கொடுமைகளைக் கூறினர். அவனை வெல்லும் உபாயம் எது என்று சிந்தித்துக் கவலைப்பட, விஷ்ணுவிற்கு அதிக கோபம் உண்டாயிற்று. அதே போல ருத்ரமூர்த்திக்கும் கோபம் உண்டாயிற்று. இவ்வாறு யாவரிடத்தும் உண்டான கோபாக்னியானது ஒவ்வொரு ஓளியாக வெளி வரலாயிற்று.
அந்த ஒளிகளுள், ஆயிர சூரியப்ரகாசம் உள்ள சம்புவின் ஒளி முகமாகவும்,
யமனுடைய ஒளி தலை மயிராகவும்,
விஷ்ணுவினுடைய ஒளி கைகளாகவும்,
சந்திரனுடைய ஒளி ஸ்தன்யங்களாகவும்,
இந்திரனுடைய ஒளி இடையாகவும்,
வருணனுடைய ஒளி முழங்கால்களாகவும்,
பூதேவியினுடைய ஒளி நிதம்பமாகவும்,
பிரமனுடைய ஒளி பாதமாகவும்,
சூரியனுடைய ஒளி கால் விரல்களாகவும்,
வசுக்கள் ஒளி கை விரல்களாகவும்,
குபேரனுடைய ஒளி நாசியாகவும்,
பிரஜாபதியினுடைய ஒளி பற்களாகவும்,
அக்னியினுடைய ஒளி மூன்று நேத்ரமாகவும்,
சாத்தியர்களுடைய ஒளி இரண்டு புருவமாகவும்,
வாயுவினுடைய ஒளி இரண்டு காதுகளாகவும் ஆயின.
இவ்வாறு சகல தேவர்களுடைய தேஜோரூபங்களே ஓர் உருவாக மகிஷனை சம்ஹாரம் செய்ய மஹாதேவியானவள், மஹாலக்ஷ்மி என்னும் திருநாமத்துடன் தோன்றினாள்.
ஆதிசேஷன் நாகஹாரமும் கொடுத்து மகிஷாசுரனைக் கொல்ல வேண்டுமென்று போற்றி வாழ்த்தினர்.
தேவி சந்தோஷித்து கர்ஜித்து மகிஷனோடு யுத்தம் செய்வதற்காக வர, அந்த அசுரன் சிக்ஷுரன், துர்த்தரன், துன்முகன், பாஷ்கலன், தாம்பிரகன், பிடாலன் முதலானவர்கள் சூழ்ந்து வர தேவியை எதிர்த்துப் போர் செய்தான்.
தேவி அவர்களையெல்லாம் நாசம் செய்து மகிஷனையும் பாசத்தினால் கட்டி கத்தியினால் சிரசை வெட்டினாள்.
அது கண்டு தேவர்கள் அனைவரும் தேவியைப் போற்றி வாழ்த்தினர்.
இவ்வாறு மகாதேவி மகிஷனைக் கொல்ல மகாலக்ஷ்மியாய்த் தோன்றினள் என்று அறிவாயாக!
கேட்பதாலும், ஸ்பரிச உணர்வினாலும், பார்வையினாலும், நாவின் ருசியாலும், மூக்கின் நுகரும் தன்மையாலும் நாசமடைவதற்கு உதாரணங்கள் பல உள்ளன.
புல்லாங்குழலின் இசையைக் கேட்டு புள்ளிமான் மயங்கி தான் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இருக்கிறது, உடனே அது வேடனால் பிடிக்கப்படுகிறது. இது காதால் கெடுவதற்கு உதாரணமாகும்.
புணர்ச்சியை விழையும் ஆண் யானையானது பெண் யானையைப் பின் தொடர்ந்து சென்று வேட்டைக்காரர்கள் அதைப் பிடிப்பதற்காக வெட்டியுள்ள படுகுழியில் விழுந்து பிடிக்கப் படுகிறது. ஸ்பரிச இன்பத்தால் கெடுவதற்கு இது உதாரணமாகும்.
மழைக்காலத்தில் எரியும் விளக்கைக் கண்டு விட்டில் பூச்சிகள் அது கனிந்திருக்கும் பழம் என்று நினைத்து அதில் விழுந்து எரிந்து தீய்ந்து போய் கண் பார்வையை இழக்கின்றன. இது கண் பார்வையால் கெடுவதற்கு உதாரணமாகும்.
தேனீக்கள் தேன் சுவையை விரும்பி அதைத் தன் தேன் கூட்டில் சேர்த்து வைத்திருக்க, வேடர்கள் தீயால் கூட்டினைக் கொளுத்தி அவற்றை விரட்டுவதும் சாகடிப்பதுமாகச் செய்து தேனைக் கவர்ந்து செல்கின்றனர்.
இது நாவால் கெடுவதற்கு உதாரணமாகும்.
தூண்டில் முள்ளில் கோர்த்துள்ள இறைச்சியின் நாற்றத்தை விரும்பி மீனானது அந்தத் தூண்டிலில் சிக்கி தன் உயிரை இழக்கிறது. இது நாசிப்புலனால் கெடுவதற்கு உதாரணமாகும்.
இப்படி ஒவ்வொரு இந்திரியத்தாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் கெடும் போது பஞ்ச இந்திரியங்களைக் கொண்ட மனிதன் அடையக் கூடிய கேடுகள் கொஞ்சமாக இராது அல்லவா?
கருடனுக்கு நாராயணர் கூறியது – கருட புராணம்
43. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்!
நைமிசாரண்யத்தில் குழுமி இருந்த முனிவர்களைப் பார்த்து சூதர் கூறியது:- எவன் ஒருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்ததால் உண்டாகும் பலனைப் பெறுகிறான். அது மட்டுமல்ல, அவன் குலத்தில் பிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர். பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று நினைத்தாலேயே அவன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்,
கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவ லோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான். சிவலிங்கத்தைச் செய்பவன் சிவ லோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவ லோகத்தை அடையும் பலனைப் பெறுவர்.
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவ லோகத்தை அடையச் செய்வான். ஒருவனால் செய்ய முடியவில்லை என்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலேயே போதும், அவன் முக்தி அடைவான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகம் முழுதுமுள்ள சிறுமியர்கள், இளம் பெண்கள், மாணவிகள் ரசித்துப் படிக்கும் புஸ்தகம் , ANNE OF GREEN GABLES ‘ஆன் ஆப் க்ரீன் கேபிள்ஸ்’ என்ற நாவல் ஆகும். இதை எழுதியவர் லூசி மாட் மாண்ட்கோமரி LUCY MAUD MONTGOMERY ஆவார்.
கனடாவிலுள்ள பிரின்ஸ் எட்வார்ட் PRINCE EDWARD ISLANDS தீவில் அவர் பிறந்தார்; இரண்டே வயதில் தாயாரை இழந்தார். தந்தையோ வேறொரு பெண்ணை மணந்து கொண்டு ஓட்டம் பிடித்தார். லூசியை கொடுமைக்கார தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டார். அவர் 15 வயதில் கவிதை ஒன்றை எழுதியது வெளியானது. பின்னர் ஆசிரியராகவும் பத்திரிகை நிருபராகவும் ஹாலிபாக்ஸ் HALIFAX நகரில் பணியாற்றினார்.
புகழ் பெற உதவிய ANNE OF GREEN GABLES நாவலை அவர் எழுதினார், திருத்தினார், மீண்டும் எழுதினார்; மாற்றி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் வெளியீட்டாளர்களும் திருப்பி அனுப்பினர்.
இறுதியில் 34 வயதானபோது ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டு வெளியிட்டது.
ஒரு பிள்ளை பிறக்காதா என்று ஏங்கிய வயதான ஒரு தம்பதியருக்கு ஆன் ANNE என்ற அனாதைக் குழந்தை கிடைத்தது. அந்தச் சிறுமியின் ஒவ்வொரு பருவத்திலும் அவருடைய ஆசை அபிலாஷைகள் எப்படி இருந்தன என்பதை லூஸி சித்தரிக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் இது லுயூஸியின் சொந்த அனுபவமே. இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது .
மார்க் ட்வைன் போன்றோரும் வரவேற்றனர். ஆன் ANNE என்ற கதா பாத்திரத்தை வைத்து ஏழு தொடர் நாவல்கள் எழுதினார். ஆன் என்பவர் ஆசிரியர் ஆகி,, கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்வது வரை நாவல் செல்கிறது.
1911ல் பாட்டி இறந்தவுடன் லூஸி , ஒரு சமயப் பிரசாரகரை மணந்துகொண்டு ஒண்டாரியோவுக்கு குடியேறினார் குடும்பத்தை நடத்திக்கொண்டே இரண்டு ஆண்டுக்கு ஒரு நாவல் வீதம் 20 நாவல்கள், சிறு கதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.
மாண்ட்கோமெரி 20 புதினங்களையும் 530 சிறுகதைகள், 500 கவிதைகள் மற்றும் 30 கட்டுரைகளையும் வெளியிட்டார்
பிறந்த தேதி – நவம்பர் 30, 1874
இறந்த தேதி ஏப்ரல் 24, 1942
வாழ்ந்த ஆண்டுகள் – 67
வெளியிட்ட கதைகள்
1908 – ANNE OF GREEN GABLES
1909 – ANNE OF AVONLEA
1911 – THE STORY GIRL
1915- ANNE OF THE ISLAND
1917 – ANNE’S HOUSE OF DREAMS
1919 – RAINBOW VALLEY
1921 – RILLA OF INGLESIDE
1923 – EMILY OF NEW MOON
1936 – ANNE OF WINDY POPLARS
1939- ANNE OF INGLESIDE
–SUBHAM–
TAGS- கனடா , சிறுவர் கதை ஆசிரியர், லூசி மாண்ட்கோமரி, LUCY MAUD MONTGOMERY