உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்! (Post.9813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9813

Date uploaded in London – 4 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி விவேகானந்தர் சமாதி தினம் ஜூலை 4; அவர் நினைவைப் போற்றுவோம்!

உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் உள்ளம் பத்தரை மாத்து தங்கத்தை விடச் சுத்தமானது; விலை மதிப்பே கணக்கிட முடியாதது.

முதல் தடவை அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்கி ஹிந்து மத மேன்மையை அங்கு அனைவருக்கும் உணர்த்தி விட்டு அவர் இந்தியா திரும்பிய சமயம் அது. பலராம் போஸ் வீட்டில் அவர் தங்கியிருந்தார். ஒரு நாள் அவரைக் காண அவரது சக துறவியான துரியானந்தர் வந்தார். ஸ்வாமிஜி வாரந்தாவில் தனியே நடந்து கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை அவருக்கு. அவர் துரியானந்தர் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீராபாயியின் கீதம் ஒன்றை ஹம்மிங் செய்யலானார் ஸ்வாமிஜி. அப்போது அவர் கண்களிலிருந்து நீர் பெருகி ஓடிற்று. அவர் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டார். அங்கிருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதில் சாய்ந்தார். தொடர்ந்து பாட ஆரம்பித்தார்.

“ஓ! யாருமே எனது துயரைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே!

யாருக்கு இரத்தம் வடியவில்லையோ, அவருக்கு வேதனை புரியாது”

அவர் கீதம் தொடர்ந்தது!

   பின்னால் இந்த சம்பவத்தைக் கூறிய துரியானந்தர், “ அவரது வார்த்தைகள் என் நெஞ்சைக் கூரிய அம்புகள் பிளந்தது போல் பிளந்தன. எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.” என்றார்.

ஸ்வாமிஜி எந்தக் காரணத்திற்காக இப்படி உருகுகிறார் என்பதை அறியாத துரியானந்தர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் அவர் மனதில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. “உலகினர் படும் துன்பங்களைக் கண்டு வேதனை தாள முடியாமல் தான் அவர் கண்ணீர் பெருக்கினார். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே அவர் உருகி அழுதார்” – இந்த எண்ணம் தான் ஸ்வாமிஜியின் வருத்தத்திற்குக் காரணமாகத் துரியானந்தருக்குத் தோன்றியது.

ஸ்வாமிஜி உலகனைத்திற்கும் உரித்தானவர் அல்லவா!

*

இரண்டாவது முறையாக அமெரிக்க விஜயம் மேற்கொண்டார் ஸ்வாமிஜி. ஒரு நாள் நதிக் கரையோரம் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு நதிக்கரையில் ஒரு இளைஞர்கள் கூட்டம் குழுமி இருந்தது. அவர்கள் நீரில் தோன்றும் நீர்க்குமிழிகளைக் குறிபார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால் ஒருவருக்கும் வெற்றி தான் கிடைக்கவில்லை. ஸ்வாமிஜிக்கு இந்தக் காட்சி வேடிக்கையாக இருந்தது. அவர் பார்ப்பதைக் கண்ட இளைஞர்களுள் ஒருவன், “இது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை, சார்! நீங்கள் வேண்டுமானாலும்  முயற்சி செய்து பாருங்கள்” என்றான்.

ஸ்வாமிஜி ஒன்றும் சொல்லவில்லை. அவனிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அவர் குறி பார்த்து நீர்க் குமிழிகளைச் சுடலானார். ஒன்றல்ல, இரண்டல்ல, பன்னிரெண்டு குமிழிகளைத் தொடர்ந்து அவர் சுட்டார்.

இளைஞர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர். இவர் ஒரு மார்க்கர் – குறி பார்த்துச் சுடுவதில் வல்லவர் – என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.

ஸ்வாமிஜி அவர்களிடம் கூறினார்:” நான் எனது வாழ்க்கையில் ஒரு போதும் துப்பாக்கி ஏந்தி சுட்டதில்லை. இப்படிச் சுட முடிந்ததற்கான காரணம் கான்செண்ட்ரேஷன் – ஒரு முனைப்பட்ட கவனக் குவிப்பு தான் “ என்றார்.

*

நூற்றுக் கணக்கான அபூர்வமான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

அவர் ஜூலை நான்காம் தேதி சமாதி எய்தினார். அவர் நினைவைப் போற்றுவோமாக!

***

INDEX

ஸ்வாமி விவேகானந்தர்

ஸ்வாமி துரியானந்தர்

மீராபாய் கீதம்,

உலகினருக்கான கீதம்

அமெரிக்கா இரண்டாவது முறை விஜயம்

நீர்க்குமிழிகளைக் குறிபார்த்து 12 முறை சுட்டது,

ஒருமுனை கவனக் குவிப்பு தான் காரணம்

ஜூலை 4, ஸ்வாமிஜி சமாதி தினம்

tag- ஸ்வாமி விவேகானந்தர்

சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி எழுதிய லூசியஸ் அப்யூலியஸ் (Post.9812)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9812

Date uploaded in London –4 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த லூசியஸ் அப்யூலியஸ் (LUCIUS APULEIUS) எழுதிய ஒரே ஒரு லத்தீன் மொழி நாவல்தான் இன்று நமக்குக்  கிடைத்துள்ளது  .அந்த நாவலின் பெயர் மெடமார்பசிஸ் ( THE METAMORPHOSES); அதாவது உருமாற்றம்.

ரோம் நகர ஆட்சி ஒரு காலத்தில் வட ஆப்ரிக்கா வரை பரவி இருந்தது. அப்போது மடவ்ரா  MADAURA (மதுரா??) எனும் நகரில் லூசியஸ் அப்யூலியஸ்  ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். பெரிய அதிகாரியின் மகன் என்பதால் வட ஆப்ரிக்காவின் கார்தேஜ் நகரிலும் பின்னர் கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதன்ஸிலும் கல்வி கற்றார்.

பிறந்த ஆண்டு – 123

இறந்த ஆண்டு – 150

வாழ்ந்த ஆண்டுகள் -27

அப்பா சேர்த்து வைத்த செல்வத்தைப் பயன்படுத்தி ஆசிய கண்டத்தின் தொலை தூர  நகரங்களுக்குப் பயணம் செய்து நல்ல அனுபவம் பெற்றார். பல மதங்கள், பல கலாசாரங்கள், மாய ஜால வித்தைகள் முதலியவற்றை அறிந்தார். அவைகளைப் பயன்படுத்தி மெட்டாமார்பசிஸ் நாவலை எழுதினார். இதன் மற்றோரு பெயர் தங்கக் கழுதை THE GOLDEN ASS.

இது ஒரு பழி கரப்பு அங்கத நாவல் (SATIRE). ரோம சாம்ராஜ்யத்திலுள்ள மத குருமார்களையும் . போலி மருத்துவர்களையும் கிண்டலும், கேலியும் செய்யும் நாவல்.. எகிப்திய புராணத்தில் ஆசிரிஸ்- ஐசிஸ் (OSIRIS- ISIS) கதை மிகவும் பிரபலமான கதை. அதைப் பயன்படுத்தி இவர் புதினம் படைத்தார். இவரது கதையில் , கதாநாயகன் ஒரு கழுதை . அதை ஐசிஸ் என்னும் எகிப்திய தேவதை ஒரு ஆண்மகனாக மாற்றிவிடுகிறது இது மன்மதன்- ரதி காதல் கதை போன்றது.. கிட்டத்தட்ட கவிதை படிப்பது போன்ற உரைநடை நூல் இது.

அப்யூலியஸ்  ஒரு விதவையை மணந்தார். இது பிடிக்காத சிலர், இவர் மாய மந்திரங்களை பயன்படுத்தி அந்தப் பெண்ணை வலையில் சிக்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார்கள் . அப்யூலியஸ் தன்னை நிரபராதி என்று காட்ட வழக்காடு மன்றத்தில் அழகிய உரை நிகழ்த்தினார். இது அப்பாலஜி (THE APOLOGY) என்ற நூலாக பின்னர் வெளிவந்தது. கோர்ட்டும் அவரை விடுவித்தது.. பின்னர் அவர் கார்த்தேஜ் (CARTHAGE) நகருக்குத் திரும்பி வந்தது தத்துவம் மற்றும் பேசும் கலை பற்றி (PHILOSOPHY AND RHETORIC) பாடம் நடத்தினார்.

இவர் சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி கட்டுரைகளும் எழுதியுள்ளார்.. கார்த்தேஜ் நகரிலும் ஏனைய பல இடங்களிலும் இவருக்கு சிலைகள் சமைக்கப்பட்டன.  இவர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் பெருமளவுக்கு மதிக்கப்பட்டார் என்பதற்குச் சிலைகள் சான்று பகர்கின்றன.

அப்யூலியஸ் எழுதிய நூல்கள்:-

SECOND CENTURY CE

THE METAMORPHOSES (LATER KNOWN AS THE GOLDEN ASS)

THE APOLOGY

THE FLORIDAESSAYS ON THE GREEK PHILOSOPHER PLATO, INCLUDING ‘ON THE GOD OF SOCRATES’.

–SUBHAM-

tags :- லூசியஸ் அப்யூலியஸ் ,LUCIUS APULEIUS ,Metamorphoses

ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்! (Post No.9811)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9811

Date uploaded in London – 4 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

ச.நாகராஜன்

பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை மஹரிஷியின் அணுக்கத் தொண்டர்கள் நன்கு பதிவு செய்து வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்:

1

ஸ்ரீ T.V. கபாலி சாஸ்திரிகள் 3-9-1886 அன்று சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர். 17-8-1953 அன்று பாண்டிச்சேரியில் மறைந்தார்.

1911ஆம் ஆண்டு அவர் மஹரிஷியின் வட்டத்துக்குள் வந்தார். அவர் The Maharshi என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு சம்பவம் இது:

ஒரு சமயம் மஹரிஷி மலை மீது வசித்துக் கொண்டிருந்தார். வேடன் ஒருவன் ஒரு மயிலைக் கொல்ல எத்தனித்தான். மஹரிஷி அவனிடம் அதைக் கொல்ல வேண்டாம் என்றார். “போ, சாமி, நீ யாரு அதைச் சொல்ல என்று கூறிய அவன் மஹரிஷியின் வார்த்தைகளைப் புறக்கணித்தான். தனது வேலையைச் செய்து முடித்தான். மறுநாள் அவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. எந்தக் கையால் மயிலை முடித்தானோ அதே கை வெட்டுண்டது. மஹரிஷி அதற்காக வருத்தப்பட்டார். “ஆனால் என்ன செய்யறது? விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு முன் ஜனங்கள் இப்படிப்பட்டதை அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்றார்.

From Leaves from a Diary, Book :  The Maharshi

2

T.K. சுந்தரேச ஐயர் பகவானின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். அவர் பகவானுடனான தனது அனுபவங்களை At the Feet of Bhagavan என்று எழுதியுள்ளார். 38 அத்தியாயங்களில் நிறைய வியப்பூட்டும் சம்பவங்களைப் படித்து மகிழலாம்.

அதில் ஒரு சம்பவம் இது:

ஒரு நாள் காலை உணவுக்குப் பின்னர் பகவானின் பக்தர்களுடன் சுந்தரேச ஐயர் ஹாலில் இருந்தார்.  தத்துவம் ஒன்றைப் பற்றி பகவான் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். மணி 10.45 ஆயிற்று. யாருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பான உரை. 10.45க்கு சுந்தரேச ஐயரின் பக்கம் திரும்பிய பகவான், “அட, பையா, நீ இன்னும் ஸ்கூலுக்குப் போகவில்லையா?” என்றார்.

“பகவான், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது” என்றார் அவர்.

பகவான் சிரித்தார். “நீ ஸ்கூலுக்குப் போகற லக்ஷணம் நன்னாயிருக்கு. இன்றைக்கு திங்கள் கிழமை. ஓடு. உனது ஹெட்மாஸ்டர் உனக்காக கேட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அவர்.

அவ்வளவு தான்; சுந்தரேச ஐயர் ஓடினார். அது இடைவேளை நேரம். கேட்டை அடைந்த போது ஹெட்மாஸ்டர் பகவான் கூறியதூ போலவே அங்கு நின்று கொண்டிருந்தார். அவரது பொடி டப்பியைக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பொடியை எடுத்து உறிஞ்சியவாறே அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

மஹரிஷி கூறிய அதே வார்த்தைகளை ஹெட்மாஸ்டர் சுந்தரேசனிடம் கூறினார்:” என்ன, சார், இன்னிக்கு திங்கள்ங்கறது மறந்து போச்சா? ஒருவேளை மஹரிஷி அதை உனக்கு ஞாபகப்படுத்தி இன்னிக்கு ஸ்கூல் உண்டுன்னு சொன்னாரோ”

உடனே சுந்தரேசன் கூறினார்:” ஆமாம், சார்! நான் மறந்து போய்விட்டேன். மஹரிஷிதான் என்னை இங்கு அனுப்பினார்.”

ஹெட்மாஸ்டர் சிரித்தார். “போ, க்ளாஸ்ரூமுக்குப் போ” என்றார் அவர்.

இப்படி மஹரிஷி தனக்கு நினைவு படுத்திய நிகழ்ச்சியை சுந்தரேச ஐயர் நினைவு கூர்கிறார்.

தவத்திரு குஞ்சு ஸ்வாமிகள் பகவானின் பழைய பக்தர்களில் ஒருவர். அவர் ‘எனது நினைவுகள்’ என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் தனது பெயரை ‘குற்றேவல் குஞ்சு சுவாமி’ என்று குறிப்பிடுகிறார். 70 அத்தியாயங்களையும் 11 அநுபந்தப் பகுதிகளையும் கொண்ட அருமையான நூல் இது.

அதில் ஒரு சம்பவம் இது:

வடக்கே இருந்து பெரிய பண்டிதர் ஒருவர் ஸ்ரீ பகவானை தரிசிக்க வந்தார். சிலநாள் ஆசிரமத்திலேயே அவர் தங்கியிருந்தார். பண்டிதர் தினமும் ஸ்ரீ பகவான் அருகில் உட்கார்ந்து கொண்டு சம்ஸ்கிருதத்திலேயே உபநிஷத்துகளிலிருந்தும் மற்றும் பல நூல்களிலிருந்தும் சுலோகங்களை இடைவிடாது சப்தமாக வாசித்துக் கொண்டிருப்பார். அங்கு குழுமியிருந்த மற்றவருக்கெல்லாம் ஸ்ரீபகவானிடம் பேசவோ தியானம் செய்யவோ அது பெரிய இடையூறாக இருந்தது. ஸ்ரீ பகவான் பொறுமையாக அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படியாக பத்து தினங்கள் ஓடின. ஒரு நாள் காலையில் ஸ்ரீ பகவான் அருகில் இடம் காலியாக இருந்தது. சப்தமும் இல்லை. பண்டிதர் அங்கே ஒரு மூலையில் அடங்கி அமர்ந்திருந்தார். குஞ்சு சுவாமிகள் ஆச்சரியத்துடன் பார்ப்பதைக் கண்ட பகவான் “பண்டிதரும் நம் போல் ஆகி விட்டார் என்று சிரித்துக் கொண்டே மலையாளத்தில் சொன்னார்.

“ஆம்! அநுபவம் ஒன்றுமில்லாமல் ஏட்டுப் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு தானும் ஈடேற முடியாது. பிறரையும் தூக்கி விட முடியாது. ஞான தினகரனாம் ஸ்ரீ பகவானிடம் வந்தடைந்தவர்கள் பண்டிதராயினும், பாமரராயினும் தங்களிடம் உள்ள அறியாமை, அகங்காரம், மனச்சுமை யாவும் தீர்ந்து ஸ்ரீ பகவானின் அருட்பார்வையால் பரம சாந்தி பெற்று உய்வது யாவரும் அறிந்த உண்மையன்றோ – என்று இப்படிக் கூறி இந்த நிகழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீ குஞ்சு ஸ்வாமிகள்!

 எனது நினைவுகள் – குற்றேவல் குஞ்சு சுவாமி

***

INDEX

  1. Book The Maharshi by Sri T.V. Kapali Sastru
  2. Book At the Feet of Bhagavan by Sri T.K.Sundaresa Iyer
  3. Book : எனது நினைவுகள் – குற்றேவல் குஞ்சு சுவாமி

மயிலைக் கொன்ற வேடனுக்கு நேர்ந்த கதி

ஸ்கூலுக்கு போக நினைவு படுத்திய மஹரிஷி

தானாக அடங்கிய பண்டிதர்!

ரமணாசிரம நினைவுகள் – பகவான் ரமண மஹரிஷி

குறிப்பு: மேற்கூறிய நூல்கள் அனைத்தையும் ரமணாசிரமம், திருவண்ணாமலையிலிருந்து அன்பர்கள் பெறலாம்.

****

TAGS- ரமண மஹரிஷி, அற்புதங்கள்,

PLEASE JOIN US TODAY SUNDAY 4-7-2021

4-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –- by Ranjani Dasarathi

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON Thirukkarugavur Garbha Rakshakaambikaa Temple– 8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND Mr and Mrs Nirmala and Natarajan of Amersham , Smt Sumathi Suresh, Sri Suresh, Smt Srilatha Sainath —  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  appr. 70 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY 4721

TAMIL VEDA IN THE OLDEST BOOK RIG VEDA (Post No.9810)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9810

Date uploaded in London –3 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WHAT IS TAMIL VEDA?

Tamil Veda is Titukkural written by Tamil poet Tiru Valluvar. It is considered the greatest Tamil work that Tamils contributed to the world. It contains 1330 couplets on moral and ethics in Tamil. It is dated 31 BCE by Tamil enthusiasts, but linguistically it belongs to 5th century CE.

Who said it is Tamil “Veda”?

Many contemporaries of Tiru valluvar by name Ukkirap Peruvazuthi, Paranar, Gowthamaanar,Vannakkaan sathanar, Sengkannanar, Velli Veethiyar, Mangudi Maruthanar sand Karikkannanar say it. And also Saraswati Devi says that she gave Veda and Tirukkural. All their verses are in Tiru Valluva Malai.

WHAT IS RIG VEDA?

Rig Veda in Sanskrit is the oldest book in the world. It is the oldest anthology with over 1000 hymns which contain 10,000 mantras. Herman Jacobi and B G Tilak dated it between 4000 and 6000 BCE. Max Muller dated it 1500 BCE or before that. The seers sing the glory of Gods and call them Friends and Comrades.

The amazing fact is that Hindus are the only people in the world who glorified Friendship and Hospitality as virtues. Both Sanskrit and Tamil poets have sung hundreds of verses appreciating these two virtues. It is hardly seen in other cultures.

Here are some comparisons; the numbers in the Rig Veda (RV) are Mandala-Hymn-Mantra.

RV 1-5-1

Comrades , come here and sit down; sing the songs of praise to Indra

xxx

1-6-9

Come here from the light of Heaven; we are longing  for this.

A man who leads an ideal life in this world

Will be ranked amongst the Gods in the Heaven– Kural 50

Xxx

1-8-8

So also is his excellence, great, vigorous, rich in cattle, like a ripe fruit tree to the worshipper.

When prosperity comes to a large hearted man,

It is like the useful village tree bearing fruit –Kural 216

Xxx

1-9-8

Grant us high fame; o Indra , grant us riches bestowing thousands.

If one is born at all, he should be born to glory;

Otherwise it were better that he were not born –Kural 236

Xxx

1-10-9

Hear, you whose ear is quick, my call; take these songs.

O , Indra let my praise come nearer , even than your friend.

Like the hand , that goes to the rescue when a garment slips, stepping in to help

When a friend faces adversity, is true friendship –Kural 788

Xxx

1-16-5

You Come you here,  song of praise is sung. Drink of it like a thirsty stag (Gowra)

Some people translated Gowra as buffalo.

Just as a yak , which is shorn of its wool does not survive,

A man of honour will not live if he loses it- Kural 969

Here Gowra in Sanskrit and Kavari in Tamil are similar in sound. Both are confused with deer and buffalo.

Xxx

1-20-8

As ministering priests, they were here once; their pious acts won them a share in the sacrifice with Gods.

A man who leads an ideal life in this world

Will be ranked amongst the Gods in the Heaven– Kural 50

Xxx

1-23-19, 1-23-20

Amrit is water ; in the waters there is healing balm.

Within the Waters, dwell all balms, Soma told me

and Agni as well. The waters hold all medicines.

As the fallen rain sustains the world,

It must be deemed Amrita (Nectar of life)- Kural 11

Dhaanam and Tavam cannot be sustained

If the heavens will not give their bounty – Kural 19

Valluvar was a great Sanskrit scholar; he must have studied the Vedas. Here he uses the Sanskrit words Amrit, Dhaanam (Charity) and Tapas (Penance) in the same chapter on Rains. So I think Amrita is equated with Soma juice.

To be continued………………………………

tags- Tamil Veda, Tirukkural, Rigveda, Tiru valluvar,

POWER OF SUBCONSCIOUS MIND- PART 2 (Post No.9809)

WRITTEN BY TIRUCHY K.GANESAN

Post No. 9809

Date uploaded in London –3 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

POWER OF SUBCONSCIOUS MIND- PART 2

Visualisation & Picturisation in the Mind :

At least for 15 days continuously one should give auto suggestion to his/her sub conscious mind. From 16th day onwards one has to visualize in his / her mind that he/she has already achieved what he/she wants to achieve in life. He / she should picturise that he/she is  getting the Excel Award or Sharam Vir / Sharam Sree Award for the achievements. Also  he/she should visualize in his/her mind that he/she had already achieved  the goal and getting the Award from our CMD or from the central Minister and should imagine that he/she is interacting with them for  a minute or so.  If one visualizes and picturises like this then he/she will be able to achieve his/her dream very quickly.

One should write his/her goal in a 3” x 5” size card and should see that as and when time permits/ when ever it is possible. This will help them  get their goal in the shortest possible time. If you make an analysis of the success of others, you may find that, almost all would have achieved their goal by visualizing in their mind before actually getting that. We achieved freedom from British empire only because of the focused dream of 30 crores of people at that time in India. This was introduced in to the minds of the people of India before independence by the great poet Subramania  Bharathiyar.

Nothing is impossible if you Learn with determination:

Just think of how you learnt to drive bicycle during your childhood. You will laugh even now on thinking of this. So many times one might have fallen down and got himself injured while learning cycle but you were focused and learnt to drive bicycle with confidence and determination.

When you want to learn car driving you will affix “L” sticker in the front and rear side of the car so that others will know that you are   a learner. But after mastering how to drive car your ego will not permit you to have the “L” sticker. If we remove “ L “ from the word LEARN then it becomes EARN. That means you started to earn not only money but you earn respect, recognition and reward from the society. Hence at the time of learning one should learn with sincerity and should learn it from “the horse’s mouth” .

Thus if one gives auto suggestion to his/her sub conscious mind he/she will be able to tune the mind and make use of both the conscious and  sub conscious mind for achieving what ever one wants to achieve on the earth and  under the sun.

What are all the things we can earn / achieve from sub conscious mind:

  1. Achieving success in any field.
  2. Enormous happiness in our life .
  3. Harmonious relationship with others.
  4. To remove mental blocks.
  5. To remove fear from our mind .
  6. To stay young in spirit forever.
  7. To get more friends in our life.
  8. To achieve what ever we want in life .
  9. To resolve all problems.

10. To sustain and maintain the success achieved already.

If all of us  practices all the above mentioned things by giving auto suggestion to our subconscious mind then India will become the number one country in the world by 2015  itself and not by 2020 as dreamt by Dr.APJ Kalamji.

I will conclude this with a poem :

We can,  if others can . We can,  even if others cannot:

We can ,  if  only experts  can . We can, even if experts cannot:

Because we are an inch above all , That inch is the decision making inch:

Move a step ahead, move an inch ahead:

Success will come to us always, in all ways.

From today onwards let all of us give Auto Suggestion to our Sub conscious Mind with full Faith and in a focused manner to make our Country Number One in the world Power Scenario forever . 

K.Ganesan

     Tiruchy 18.

     India.

tags- subconscious mind-2

‘சைலஸ் மார்னர்’, ‘மில் ஆன் தி ப்லாஸ்’ நாவல்கள் எழுதிய பெண்மணி (Post.9808)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9808

Date uploaded in London –3 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பள்ளிக்கூடத்தில் ‘சைலஸ் மார்னர்’ , ‘மில் ஆன் தி ப்லாஸ்’   நாவல்களையோ அவற்றின் சுருக்கத்தையோ படித்திருப்பீர்கள் . அவற்றின் மூலம் புகழ் பெற்ற கதாசிரியை  ஜார்ஜ் எலியட் (George Eliot)  ஆவார்.அவருடைய இயற் பெயர் மரியம் ஆன் இவான்ஸ் (Mariam Ann Evans) . ஆங்கில நாவல் எழுதியோர் வரிசையில் பிரபலமானவர்களின் ஒருவர் அவர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கதைகள் எழுதிய  அவர் புகழ் இன்று வரை நீடித்து வருகிறது.

பிறந்த தேதி – நவம்பர் 22, 1819

இறந்த தேதி – டிசம்பர்  22, 1880

வாழ்ந்த ஆண்டுகள் – 61

அவர் எழுதிய மேலும் இரண்டு புகழ்மிகு கதைகள் —

ஆடம் பீட் , மிடில் மார்ச்

ஜார்ஜ் எலியட் இங்கிலாந்தில் வாரிக் க்ஷைரில் (Warwickshire) பிறந்தார். அப்போது இங்கிலாந்து பெரும் மாறுதல்களைக் சந்தித்தது. நீராவி என்ஜின்கள், புதிய ரயில் பாதைகள், எந்திரங்களுடன் பெரிய தொழிற்சாலைகள் என்று பெரிய தொழில்  புரட்சி ஏற்பட்டது. அவரும் நல்ல பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றார். 1849-ம் ஆண்டில் தந்தை இறந்த பின்னர் ஐரோப்பாவில் பல இ டங்களைப் பார்த்துவிட்டு லண்டனில் குடியேறினார்.

ஜார்ஜ் ஹென்றி லூயிஸ் என்ற எழுத்தாளருடன் ஜெர்மனிக்குச் சென்றார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆயினும் முறையான மண முறிவு (Divorce) கிடைக்கவில்லை. ஆயினும் ஜார்ஜ் இறக்கும் வரை 24 ஆண்டுகளுக்கு அவருடன் வாழ்ந்தார் எலியட். அந்தக் காலத்தில் இது மிகவும் வெறுக்கப்பட்ட செயல். எங்கு போயினும் அவரின் முதுகுக்குப் பின்னால் கிசு கிசுப் பேச்சு எழும்.

அவருக்கு 40 வயதான பொழுது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். அந்தக் காலத்தில் ஆண்களே , எழுத்துலகில் ஆதிக்கம் செலுத்தினர். ஆகையால் இந்தப் பெண்மணியும் ஜார்ஜ் எலியட் என்ற புனைப் பெயரில் எழுதத் தொடங்கினார்.

‘ஆடம் பீட்’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட சோக மய காதல்கதைக்கு இவரது தந்தையே முன்னுதாரணம் ஆனார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் இ முன்னனி  எழுத்தாளராகக் கருதினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஸைலஸ் மார்னர் கதை வெளியானது. இதில் ஒரு இளம் பெண்ணின் காதலில் மயங்கிய ஒரு கருமி அவளுக்காக எல்லா பணத்தையும் சேமித்த கதாபாத்திரம் வருகிறது.

இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் எழுதிய மிடில் மார்ச் (Middlemarch) புதினம்தான் அவருடைய சிறந்த படைப்பு என்று இலக்கிய உலகம் எடைபோடுகிறது  ஜார்ஜ் எலியட்டின் கதைகளில் சாதாரண மனிதர்களே கதா நாயகர்கள். அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளே கதைகளின் முக்கிய விஷயம். நிதர்சன நிலையைக் காட்டியதால் அவர் தனக்கு என  ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவருடைய முக்கிய கதைகள்:-

1858- SCENES OF CLERICAL LIFE

1859- ADAM BEDE

1860 – THE MILL ON THE FLOSS

1861 – SILAS MARNER

1863 – ROMOLA

1866 – FELIX HOLT, THE RADICAL

1868 – THE SPANISH GYPSY

1871-72- MIDDLEMARCH

1876 – DANIEL DERONDA

-SUBHAM-

tags – ஜார்ஜ் எலியட், George Eliot

ஓம் என்ற பிரணவ உச்சரிப்பால் ஏற்படும் பலன்கள்!(Post No.9807)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9807

Date uploaded in London – 3 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 10 கட்டுரை எண் 9729 வெளியான தேதி 14-6-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 11 (30-33)

ச.நாகராஜன்

30. ஓம் தோன்றியது எப்படி?

சூதர் சௌனகாதியரை நோக்கிக் கூறியது :

பிரணவம் பரம் என்றும் அபரம் என்றும் இரு வகைப்படும். பரம் என்பது சிதானந்த ஸ்வரூபமாகிய சிவமேயாகும்.

அபர பிரணவமாவது மாயாமய ஸ்வரூபமான சுத்த சொரூபமாகும்.

இந்த மந்திரத்தால் சிவ ஞான சித்தியுண்டாம். பரசிவவாச்சியத்திற்கு வாசகமாகும். சிவத்தை அடைவதற்குக் காரணமாக இருக்கின்றது.

முன் காலத்தில் பிரமதேவர் சிவ சின்னமான திருநீறு, கண்மணி தரித்து, பஞ்சாட்சர ஜபம் செய்து, இந்திரிய நிக்ரஹம் செய்து பரமசிவனை நோக்கி மூன்று வருடம் கோரமான தவம் செய்தார்.

பரமசிவனுடைய அநுக்ரஹத்தைப் பெற்று ஸ்வர்க்கம், அந்தரம், பூமி ஆகிய மூன்றையும் படைத்தார்.

பிறகு தபாக்கினியால் அந்த மூன்றையும் எரித்து விட்டார்.

அதிலிருந்து அக்னி, காற்று, சூரியன் ஆகிய மூன்றும் உண்டாயின.

அந்த மூன்றையும் அவர் தபாக்கினியால் எரித்தார்.

அவற்றிலிருந்து ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்கள் உண்டாயின.

அந்த வேதங்களை அவர் தகித்தார்.

அவற்றிலிருந்து மூன்று வியாக்ருதிகள் உண்டாயின.

அவற்றையும் தகித்தார்.

அவற்றிலிருந்து அகார, உகார, மகாரங்கள் தோன்றின.

அந்த மூன்றையும் ஒன்று சேர்த்து அவர் பிரணவமாக்கினார். (ஓம்)

                  ஸ்கந்த புராணம் , சூத சம்ஹிதை, யக்ஞவைபவ காண்டம்,  

                                                   நான்காவது அத்தியாயம்

31. ஓம் என்ற பிரணவத்தின் மஹிமை!

பிரணவத்தில் பரசிவமே பிரதிபிம்ப ரூபமாக விளங்குகிறார்.அதனால் பிரணவத்தை சிவ வாசகம் என்று அறிஞர்கள் கூறுவார்கள். பிரணவமும் சிவமும் இரும்பும் அதில் கலந்த நெருப்பையும் போல அபேதமாக இருக்கும். இதை ஜபித்தால் எல்லா மந்திரங்களையும் ஜபித்தது போலாகும். இதற்குத் தெய்வம் பரசிவமே.

ஸ்கந்த புராணம் , சூத சம்ஹிதை, யக்ஞவைபவ காண்டம்,  

                                                   நான்காவது அத்தியாயம்

32. ஓம் என்ற பிரணவ உச்சரிப்பால் ஏற்படும் பலன்கள்!

அகர உகர மகாரங்களாகிற மூன்றுக்கும் பிரமன் விண்டு முத்தேவர்களும், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்னும் மூன்று நிறமும், ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று அவஸ்தைகளும், பூமி, அந்தரம், சொர்க்கம் என்னும் மூன்று ஸ்தானங்களும், உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்னும் மூன்று ஸ்வரங்களும், ரிக், யஜுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும், காருகபத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்கினீயம் என்னும் மூன்று அக்னிகளும், சத்வ, ரஜஸ், தமோ என்னும் முக்குணங்களும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுமாக ஆக்கப்பட்டன. இந்த மூன்றினாலும் மூன்று விரல் சந்துகளிலும் நியாசம் செய்தலாகிய் அங்க நியாசத்தையும் உந்தி, இதயம், சிரஸ் ஆகிய மூன்று இடத்திலும் வைத்து அங்க நியாசம் செய்து இந்த மந்திரத்தை பத்து லட்சம் முறை செய்தால் சகல சித்திகளும் உண்டாகும். பரமசிவன் அருள் உண்டாகும்.

பாசம் நீங்கும். ஞானம் உதிக்கும். முக்தியும் சித்திக்கும்.

ஸ்கந்த புராணம் , சூத சம்ஹிதை, யக்ஞவைபவ காண்டம்,  

                                                   நான்காவது அத்தியாயம்

33. அருணாசலேஸ்வரரின் மஹிமை : பகவான் ரமண மஹரிஷி மொழி பெயர்த்து அருளியது!

அருணாசலநாதருடைய காந்தியால் ஸகல பாபங்களும் தஹிக்கப்பெற்ற பக்தகோடிகள் நாட்டில் எங்கும் சுகமாய் இருக்கிறார்கள். (45)

அருணாத்ரீசனைப் பிரதக்ஷிண, நமஸ்கார, தபோ நியமங்களால் ஆராதித்தவர்களுக்குச் சம்பு வசமாகிறார். வேறு எவ்விதத் தவத்தாலும், தானங்களாலும், யோகங்களாலும், அருணாசல தரிசன சமமான பிரீதி சம்புவுக்கு உண்டாவதில்லை (46-47)

சுயம்புவான அருணகிரியைச் சுற்றிலும் வானுறையும் வேதங்கள், இதிஹாஸங்கள் எல்லாம் கிரிகள் வடிவாய் நின்று துதிக்கின்றன. (48)

அருணாசல மஹிமை முழுவதையும் நானாவது, விஷ்ணுவாவது, கோடி வருஷங்களில் கூடச் சொல்லி முடியாது. விஷ்ணுவை முன்னிட்ட தேவர்களும், கற்பக விருக்ஷங்களும் மறைந்திருந்து அருணாசலத்தை ஸதா ஸேவிக்கின்றார்கள். (49-50)

அருணாசல லிங்கத்தை என்றும் பூஜிப்பவர்களுக்கு வியாதி, பீடை, மனோதுக்கம், முதலான கலி தோஷங்கள் எவையும் இரா. (52)

சூதர்:

என்றிவ்வாறு பிரம்மாவின் முகத்தினின்றும் வெளிவந்த உதாரமான் அருணகிரி கதாம்ருதத்தை இரு காதுகளாலும் மனம் பூரிக்கக் கேட்டு, ஸனக முனிவர் தவத்தின் பயனை அடைந்தார்.

அருணாசல மாஹாத்மியம் : ஸ்கந்த  மஹா புராணம் – பூர்வ பாகம் அத்தியாயம் 13- ஈசன் அருணாசலத்திற்கு ஸர்வோத்தம வரம் அருளுதல் (பகவான் ரமணர் மொழி பெயர்த்து அருளியது)

***

INDEX

ஸ்கந்த புராணம், ஓம் தோன்றிய விதம், ஓம் -பிரணவத்தின் சிறப்பு, பிரணவத்தைஉச்சரிப்பதால் ஏற்படும் பலன்கள், அருணாசல மஹிமை, பகவான் ரமணர் மொழி பெயர்ப்பு.

tags- ஓம் , பிரணவத்தின் சிறப்பு ,

ரிக் வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள் (Post No.9806)

IMAGE OF VALLUVAR

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9806

Date uploaded in London –2 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நட்புறவு பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவரேனும் பாட்டு பாடியிருப்பார்களா, அதுவும் ரிக்வேதமும் தமிழ் வேதமும் பாடிய அளவுக்குப் படியிருப்பார்களா என்பது சந்தேகமே . நட்பு பற்றி  திருக்குறளில் திருவள்ளுவர் பல அதிகாரங்கள் பாடி இருக்கிறார். ரிக் வேதத்திலோ துதிக்கு துதி நண்பன், நட்புறவு (Friend and Friendship) என்ற சொற்கள் வருகின்றன. அதே போல விருந்தோம்பல் (Hospitality) பற்றியும் இந்தியாவில் மட்டுமே பாடல்கள் இருக்கும். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அசோகன் கல்வெட்டுகள் மூலம் நெடுஞ் சாலை நெடுகிலும் சத்திரங்களும் சாப்பாட்டு (Boarding and Lodging) வசதிகளும் இருந்ததை அறிகிறோம்.

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்களில்  ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. அவற்றில் 10,000 மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறள் போல  வரிகள் உள்ளவை. சில குறள்களையும் மந்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்

சம்ஸ்க்ருதத்தில் வேதம் இருந்தது. அது தமிழில் இல்லையே என்ற குறையை தமிழ் மறை, தமிழ் வேதம் நீக்கிவிட்டது என்று திருவள்ளுவ மாலையில் ஒருவர் தமிழ் வேதத்தைப் புகழ்ந்துரைத்துள்ளார்

ரிக்.1-5-1

ரிஷி மதுச் சந்திர வைச்வாமித்திரன்  தன்னுடைய சகாக்களை நண்பர்களே! (Comrades)  இங்கே வாருங்கள், உட்காருங்கள் இந்திரனைப் பாடுங்கள் என்று அழைக்கிறார்.

1-6-9

அதே ரிஷி வானுறையும் தெய்வங்கள் என்கிறார். நாம் வள்ளுவர் குறளி ல் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள்  வைக்கப்படும் என்கிறார்

இந்திரனின் தோழர்களான மருத் தேவர்களை அழைக்கும் பொழுது  “வானிலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து வாருங்கள்) என்கிறார் .

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )

xxx

1-8-8

மற்றவர்களுக்கு உதவுவோரை ஊரின் நடுவிலுள்ள பழுத்த மரத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர் . ரிஷி மதுச் சந்தஸும் அதையே சொல்கிறார்.

“தொழுபவனுக்கு இந்திரனுடைய மொழிகள் சத்தியமாகின்றன . அவை பலவித நன்மைகளைத் தரும்.பழுத்த

பழங்களைத் தாங்கும் மரங்கள் போல இருக்கின்றன.”

இதைச் சொல்லும் கவிஞரின் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் தேன் கவி (Mr Honey Poem) என்று அமையும்! என்ன பொருத்தம் பாருங்கள்!!

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின் (குறள் 216)

[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

xxxx

1-9-8

தோன்றிற் புகழொடு தோன்றுக என்கிறார் வள்ளுவர். அதாவது புகழ் தரும் செய்கைகளைச் செய்து, உலகை விட்டு நீங்கிய பின்னரும் புகழ் தாங்கிய பெயரை விட்டுச் செல்ல வேண்டும் என்பது வள்ளுவனின் கொள்கை.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று. ( குறள் எண் – 236)

ரிஷி மதுச் சந்தஸும் அதையே விரும்புகிறார்.

“இந்திரனே , சகடங்களில் ஏந்தி வரப்படும் உணவுகளையும் ஆயிரம் வழிகளால் வரும் புகழையும் எங்களுக்கு அளிக்கவும்”.

xxx

1-10-9

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788)

என்கிறார் வள்ளுவர்.

மதுச்சந்தஸ் சொல்கிறார்

“அனைத்தையும் கேட்பவனே, என் அழைப்புக்கு உடனே செவிகொடுக்கவும். என்னுடைய இந்த துதியை நண்பனின் மொழிகளைப் போல அருகில் வைத்துக்கொள்”.

Xxx

1-16-5

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் என்று ஒரு குறளில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி மயிரை இழந்தவுடன் இறக்கும் பிராணி இப்போது எதுவும் இல்லை. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் சடை எருமை எனப் பொருள்படும் YAK யாக் என்னும் மிருகத்தை குறிப்பிடுகின்றனர்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)

இதே பொருளும், குழப்பமும் ரிக் வேதத்திலும் உளது

இதை பாடியவர் மேதாதிதி காண்வர் .

அவரும் கெளரா (கவரி) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

இதை மொழி பெயர்ப்போர் ‘தாகம் கொண்ட மான்போல’, ‘எருமை போல’ என்று மொழிபெயர்ப்பார்கள்.

கவரி வீசுதல் என்போம். அதிலுள்ள முடி வெண்மையாக இருக்கும்.  கெளரா என்றாலும் வெண்மையே.

கவரி முடி என்பதில் இருந்துதான் பெண்கள் அணியும் சவுரி முடியும் வந்ததோ?

Xxx

1-20-8

மனிதன் தெய்வமாகலாம் என்ற கருத்தை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறார்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)

ரிஷி மேதாதிதி காண்வன்  ரிபுக்கள் என்னும் தேவர்களை போற்றிப் பாடுகையில் சொல்கிறார்

“வேள்வியைத் தங்கும் ரிபுக்கள் (Rhbus) மானிட வடிவங்களில் இருந்தார்கள் அவர்கள் தங்கள் நற் செயல்களால் உயர்ந்து தேவர்களோடு கிடைப்பதை பகிர்ந்து கொண்டார்கள்”.

xxx

1-23-19

நீர் = அமிர்தம்

“நீரில் அமிர்தம் உண்டு. நீரில் மருந்து இருக்கிறது. ஆகையால் அதை போற்றுங்கள்” — ரிஷி மேதாதிதி காண்வன் 

1-23-20

“நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காண, என் உடலில் எல்லா நோய் நீக்கும் மருந்துகளையும் நிரப்புங்கள் “–ரிஷி மேதாதிதி காண்வன் 

இவ்வாறு ரிக் வேதம் ஆறு மந்திரங்களில் நீரைப் போற்றுவதைக் கண்டு, படித்துத்தான் திருவள்ளுவரும் 10 குறள்களை வான் சிறப்பு என்ற அ திகாரத்தில் பாடினாரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19)

வான் நின்று உலகம் வழங்கி  வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள் எண்:11)

ஒரு குறளில் வேதம் பயன்படுத்தும் அமிர்தம் என்ற சொல் வருவதும், பகவத் கீதையில் வரும் தானம், தவம் என்ற மேலும் இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்னொரு குறளில் வருவதும் என் கருத்துக்குச் சான்று பகரும்.

–தொடரும் ………………………………

IMAGE OF VEDA VYASA

tags- ரிக் வேதம், தமிழ்வேதம், திருக்குறள் , ரிஷி, மதுச்சந்தஸ் , மேதாதிதி காண்வன்

KANCHI SHANKARACHARYA ON THE REAL INTENTION OF MAX MULLER ET AL(Post No.9805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9805

Date uploaded in London –2 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

In Tamil we have an idiom “like inserting a needle in a ripe banana fruit”. That means attacking someone without visible injury. That is what Max Muller and gang did to Hindus. From hymn 1 to 1025 in the Rig Veda (RV) ‘Soma drink’ appears directly or indirectly. Max Muller and gang dubbed it as a narcotic drug. That means Vedic Hindus were drug addicts. That too, they used drug at 4-30 am every day after a holy dip by lighting the fire, that too in a geometrically shaped fire altar, that too after wasting the precious Soma drink by pouring some into the sacred fire. And that Soma plant was brought to them by Eagles and Falcons according to several hymns of the RV. (Please read RV to debunk the Western Jokers/Clowns/ Jesters/ Comedians/ Poisonous Snakes/ anti Hindus)

Second thing they did was translated ‘arya’ with a capital ‘A’ to mean that it is a race and they added wherever this word comes, the opponents were native people who they destroyed after entering India via Khyber pass.  Sayana used it to mean ‘cultured, educated, civilized and those follow the rules in the Vedas’. All the westerners misused and abused Sayana’s name.

Hindu religious leaders saw Sayana as a  great saint but they never approved his translations. Because Vedas are not supposed to be translated. According to them it is based on magical sounds. Moreover Sayana did try sincerely just 700 years before our time and failed miserably. He himself could not understand many passages and their deep meaning. For instance, through out the Vedas all rishis /seers sing the glory of all gods as Finders of Cows hidden in the Cave. All the seers say Indra broke the top of mountains, created seas and sun and earth. Whenever Indra destroyed Forts, they dubbed it as an attack on the natives. Whenever Indra broke the mountain, Vishnu measured the earth, the westerners dodge and ran away without elaborating on it.  Whenever they found something which went against their hypothesis, they told  us it must be a later addition/interpolation

Even when Yaska was alive 2800 years ago he could not understand 600 words in the Vedic Sanskrit, according to Aurobindo’s ‘Vedic Glossary’ book. Now I am reading the Rig Veda Mantra by Mantra (there are over 10,000 mantras in the RV) and I am amazed to see all our customs, literary style, Idioms and phrases are rooted in the RV. Even Tamils  who occupy the Southern most part of India use hundreds of words found in the RV.

Up to this part my comments. I don’t want to put my words into the mouth of the greatest linguistic scholar cum saint of our times Sri Chanrda Sekara Indra Sarasvati (1894-1994), Kanchi Shankaracharya. Please read how he criticizes the western scholars ‘like inserting a needle into the ripe old banana fruit’. Any one interested in linguistic research must read his lectures on grammar, astrology, etymology etc.

xxx

from the bokk HINDU DHARMA, B V BHAVAN, BOMBAY

TAGS- INTENTION, WESRERN VEDIC SCHOLARS, KANCHI , SHANKARACHARYA-