ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மான் (Post No.9657)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9657

Date uploaded in London – –28 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THOMAS MANN

(1875 – 195)

தாமஸ் மான் ஜெர்மனியைச் சேர்ந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர்.

ஜெர்மனியிலுள்ள லூபெக் (LUBECK) நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பெரும் பணக்காரர். ஆகவே மானின் இளமைக்காலம் மகிழ்ச்சியான பருவமாகக் கழிந்தது.  இளம் வயதில் தந்தை திடீரென்று இறக்கவே குடும்பத்தின் சூழ்நிலை தலைகீழாக மாறியது. வறுமை வாட்டியது.

தனது தந்தை எப்படி பணக்காரர் ஆனார் என்பதை அடிப்படையாக வைத்து அவர் முதல் நாவலை BUDDEN BROOKS எழுதினார். மானுக்கு 25 வயதானபோது இந்தப் புதினம் வெளியானது. இது ஜெர்மானிய மொழியில் ஒரு சிறந்த நாவல். இதற்கடுத்த நாவலை அவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதினார். அந்த நாவலின் பெயர் THE MAGIC MOUNTAIN ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர் சிறுகதைகளை எழுதினார்.

மாயாஜால மலை (THE MAGIC MOUNTAIN) என்ற புதினம் இவருக்கு அக்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாவலாசிரியர் என்ற புகழைத் தந்தது. ஒரு மலைமீதுள்ள மனநோய் மருத்துவமனையில் வாழ்பவர்கள் உலகத்தை எப்படி கண்ணோட்டமிட்டார்கள் என்பதை விளக்கும் கதையாகும். இந்த உலகில் வாழ்பவர்களை அவர்கள் கடவுள்களாகக் காண்கிறார்கள்.

இந்த நாவல் எழுதிப் புகழ் பெற்றவுடன் 1929-இல் மானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

1933ஆம் ஆண்டில் இவர் இன்னுமொரு நாவலை எழுதினார். பழங்கால எகிப்தை கதை நடைபெறும் இடமாக வைத்து எழுதப்பட்டாலும் இக்கால மனிதர்களின் வாழ்க்கை குறித்த எதிரொலியாக இருந்தது இந்த நாவல். இந்த நாவலின் தலைப்பு JOSEPH AND HIS BRETHEREN

மானின் எழுத்துக்களுக்களிடையே இழையோடிய ஒரு கருத்து – தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் அரசின் கொடுகோன்மைக்கும் இடைப்பட்ட மோதலாகும். நாஜி (NAZI) இயக்கத்தின் போக்கை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கவுக்கு குடியேறினார். அங்குதான் அவரது முக்கிய படைப்பான DR FAUSTUS உருவானது. இந்த நாவல், ஜெர்மனியைப் பிடித்த பைத்தியத்தையும் அது எப்படிப் போரில் நுழைந்தது என்பதையும் விளக்கும் உருவகமாக (ALLEGORICAL) அமைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்த பின் ஜெர்மனிக்குத் திரும்பிய MANN இறுதிநாட்களை சுவிட்சர்லாந்தில்  (SWITZERLAND) கழித்தார்.

–subham—

tags — ஜெர்மனி,  நாவலாசிரியர்,  தாமஸ் மான்

தெய்வத் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர்! (Post.9656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9656

Date uploaded in London – –  –28 May   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குரு பூஜை தினமாகும். அதையொட்டி ஞானமயம் 27-5-21 அன்று ஒளிபரப்பிய சிவஞான சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை!

தெய்வத் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர்!

சம்பந்தர் குருபூஜை விழா உரை

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று ஒரு நன்னாள். வைகாசி மூலம் திருஞானசம்பந்தரின் குருபூஜை தினம். அதையொட்டி சிவஞான சிந்தனை கொள்ளும் நன்னாள் இது.

சயமிகுத்தரு கரைமுருக்கிய தமிழ்பயிற்றிய நாவன்

வியலியற்றிரு மருகலிற்கொடு விடமழித்தருள் நீதன்

கயலுடைப்புனல் வயல்வளத்தரு கழுமலப்பதி நாதன்

இயலுடைக்கழல் தொழநினைப்பவர் இருவினைத்துயர் போமே

என்று கூறி ஆளுடையபிள்ளையார் திருவடி போற்றி வணங்குகிறேன்.

பல்வேறு சிக்கல்கள் நினைந்த மனித வாழ்க்கை என்னும் கடலில் நீந்திக் கரை ஏறுவது என்பது மலைப்பான ஒரு விஷயம். இதைச் சுலபமாக்க அருளாளர்கள் தோணி போல வந்து உதவி அருள் புரிகின்றனர்.

அந்த வகையில் தமிழையே தன் உடலாகக் கொண்ட தமிழாகரன் திருஞானசம்பந்தர் தமிழால் பாடி உலக மக்கள் அனைவருக்குமே ஒரு அற்புதமான நல்வழியைக் காட்டுகிறார்.

பாஸிடிவ் திங்கிங் என்று இன்றைய நவீன அறிவியல் உலகம் கூறிக் கூறி மகிழ்கிறதே அந்த ஆக்கபூர்வமான சிந்தனையை அன்றே தந்து அருளியவர் அவர்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்

கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ன ஒரு அற்புதமான இறை சிந்தனை! மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்,சிவபிரானை எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இல்லை!

இப்படிக் கூறி அருள் பாலிப்பவர் 385 பதிகங்களிலே 4169 பாடல்களிலே நமக்கு உற்ற வழியைத் தருகிறார். அவர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை குறித்து நம்பியாண்டார் நம்பி,

“பன்னு தமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல்

மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் என்று கூறி அவர் பதினாறாயிரம் பனுவல் பாடிய செய்தியைக் கூறுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த பொக்கிஷமான 385 பதிகங்களை ஓர்ந்து கற்று ஓதினாலே போதும் அறம். பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நற்பேறுகளும் யாதும் ஓர் குறைவு இன்றிக் கிடைக்கும்.

‘ஓது, உன்னை அது நன்னெறிக்கு உய்க்கும்’ என்று அவர் கூறுகிறார்.

எதை ஓதுவது, எப்படி ஓதுவது என்று நாம் புரியாமல் அவரிடம் அருள் பாலிக்குமாறு வேண்டும் போது மிக சுலபமாக அஞ்செழுத்தை – பஞ்சாக்ஷரத்தைத் தருகிறார். எப்படி ஓத வேண்டும் என்று அழகுறச் சொல்கிறார்.

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

அனந்தா வை வேதா: – வேதங்கள் அனந்தம். அதை முற்றிலுமாகக் கற்றவர் யாரும் இல்லை. ஆனால் அதன் சாரம் நமசிவாய எனும் நாமம், என்ற பெரும் ரகசியத்தை, உண்மை மெய்ப்பொருளை அவர் தந்து விடுகிறார். அதை உள்ளம் உவந்து ஏற்று காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி, உள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து சொல்க என்று கூறுகிறார்.

அப்படிக் கூறினால் கொரானா உட்பட்ட எந்த இடர் வந்தாலும் போய் விடும் என்பது அவரது ஆணை.

ஆணை நமதே என்று அவர் நான்கு பாடல்களில் ஆணையிடுகிறார். அனைவருக்குமான நன்மைக்கு ஆணையிடும் அதிகாரம் படைத்தவர் யார்? இறைவனே அப்படி ஆணை இட முடியும். திருஞானசம்பந்தர் முருகனின் திரு அவதாரமே என்பதால் தான் அதிகாரபூர்வமாக அருளுடன் ஆணை இடுகிறார் இப்படி.

அஷ்ட கிரகங்களின் சேர்க்கை வந்த போது உலகமே அஞ்சி நடுங்கியது. அதைப் போக்க கோளறு பதிகமான வேயுறு தோளிபங்கன் பதிகத்தை உச்சரித்தோம்; பயத்திலிருந்து மீண்டோம். அந்தப் பதிகத்தில் நல்ல என்ற வார்த்தை மட்டும் 41 தடவை வருகிறது. நாளும் கோளும் இடியும் மின்னலும், கொலை யானை கேழல் கொடுநாகமொடு கரடி உள்ளிட்ட தீமை அனைத்தும் நீங்கி வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல நல்லவையாகவே அமையும் என்று கூறி ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே என்கிறார்.

நம்மை வம்மின் வாருங்கள் என்று கூவி அழைத்து இறையை நினைமின் என்று கூறி அருளுகிறார். அப்படி

மூரல் வெண்மதி சூடும் முடி உடை

வீரன் மேவிய வேற்காடு

வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்

சேர்வர் செய் கழல் திண்ணமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

இப்படி பொருளும் அருளும் கை கூடும் இது திண்ணம் என்று அவர் ஆறு இடங்களில் உறுதிபடக் கூறுகிறார்.

சேர்வர் செய்கழல் திண்ணமே, தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே,சிந்தை செய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே, சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே,புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே என இப்படி உறுதி கூறுதல் இறைவனின் திரு அவதாரத்தைத் தவிர வேறு யாரால் தான் முடியும்?

இறைவன் அணோரணியான் மஹதோ மஹீயான். அணுவுக்கு அணு, பெரிதுக்கும் பெரிதானவன் என்ற வேத சாரத்தைப் பல நூறு பாடல்களில் பிழிந்து தருகிறார் அவர்.   

                                                     நுண்மைக்கும் நுண்மையான இறைவனை லாபரட்டரியில் சோதனைக்குட்படுத்திக் கண்டுபிடித்து விட முடியுமா? கடவுளின் படைப்புத் தொழில் தனக்குத் தெரிந்து விட்டதாகவும் தன்னால் ஒரு மனிதனைப் படைக்கவும் முடியும் என்றும் சவால் விட்டார் ஒரு விஞ்ஞானி. கடவுளிடம்  சென்ற அவர், கடவுளே! நீங்கள் படைத்தது போதும். உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை. நாங்களே மனிதனைக் கூடப் படைத்து விடுவோம் என்றார். புன்சிரிப்புடன், கடவுள் அப்படியா! சரி செய், எங்கே ஒருவனைப் படைத்து காண்பியேன் என்றார். விஞ்ஞானி பெரு மகிழ்ச்சியுடன் கீழே இருந்த மண்ணை எடுத்தார், தன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்க! கடவுள் சொன்னார் உடனே” அப்பனே! அது கூடாது, நீ உனது மண்ணை, நீ படைத்த மண்ணை எடுத்து உன் வேலையை ஆரம்பி என்றார். விஞ்ஞானி வெட்கித் தலை குனிந்தார்.

ஞான சம்பந்தர், சிவபிரான் உள்ளம் உருகுவார்க்கு உள்ளேயே இருப்பவன் என்கிறார். கள்ளமிலா நெஞ்சம் உடையவர் மட்டும் அவனைக் காணலாம் என்கிறார்.

 ஏனையோருக்கு அவர் ஒரு எச்சரிக்கையே தருகிறார் இப்படி:

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி

மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே

தர்க்கம், அடுக்கு மொழி – LOGIC and REASONING இங்கே உதவாது அப்பா, மனம் ஒன்றி வாழ்மின், இறைவனையே வந்து பற்றுங்கள் என்கிறார்.

நம்பிக்கை இல்லாதவர்களையும், அவருக்கு இடர் விளைவித்தவர்களையும் அவர் எதிர்கொண்ட விதம் தனி. உலகத்தோர்க்கு அவர் காட்டிய அற்புதங்கள் பல. திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் அருளிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் அவற்றைத் தொகுத்துத் தருகிறார் இப்படி:

ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்

பாடல், பனை, தாளம், பாலைநெய்தல் – ஏடு எதிர், வெப்பு

என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்

தென்புகலி வேந்தன் செயல்.

மயிலாப்பூரிலே  பூம்பாவை என்ற இறந்த பெண்ணின் எலும்புகளை ஒன்று சேர்த்து உருவமாக்கி உயிர் கொடுத்தார். சமணரை வாதில் வெல்ல மதுரையில் இறைவனின் திருவுள்ளக் குறிப்பை அறிந்தார். ஆண்பனையைப் பெண்பனையாக்கிக் காட்டினார். உலவாக் கிழி பேறு பெற்றார் திருப்பூந்தராயில். பிரமபுரத்திலே இறைவி தந்த ஞானப்பாலை உண்டு, சிவபிரான் அம்பிகை தரிசனம் கண்டு தோடுடைய செவியன் என்று பாடினார். தம்மை சிறு பாலகன் என்று பயந்த மங்கையர்க்கரசியாரைத் தேற்றினார். சமணரை வாதில் வென்றார்.  ஆற்றின் போக்கை எதிர்த்துச் சென்ற ஏட்டை திருவேடகத்தில் தங்கப் பாடினார். தீயிலிட்ட ஏடு இன்ன ஏதுவால் பச்சையாய் இருக்குமெனப் பாடினார். தோணியில் இருந்த காட்சியைத் திருவீழிமிழலையில் கண்டார். பொன் தாளம், முத்துச் சிவிகை பேறு பெற்றார். மறைக்கதவம் அடைக்கப் பாடினார். திருநல்லூர்ப் பெருமணத்து இறைவனிடம் முக்திப் பேறு வேண்டினார். தன்னுடன் இருந்த அனைவரையும் ஜோதியில் கலக்குமாறு வழி நடத்திச் சென்று முக்தி பெறச் செய்தார்!                               சம்பந்தரின் அற்புதங்கள் சொல்லால் விளக்க முடியாதவை. அவரது பதிகங்களிலே ஏராளமான புராணச் செய்திகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

இயல் இசை நாடக நற்றமிழை தெய்வத் தமிழ் ஆக்கி புதிய உயரத்திற்கு ஏற்றினார் அவர். முதல் மூன்று திருமுறைகளில் உள்ள ஏராளமான  சொற்றொடர்களும், கருத்துக்களும், இயற்கை வர்ணனைகளும் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

தமிழின் வலிமையைக் காட்ட அவர் பாடிய பாடல்கள் ஏராளம். ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயா நீ மாமாயா

இதன் அருமையான பொருளைப் பார்ப்போம்:

யாம் ஆமா – ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுள் என்றால் அது பொருந்துமா? பொருந்தாது!

நீ ஆம் ஆம் – நீயே கடவுள் என்றால் அது பொருந்தும்

மா யாழீ – பெரிய வீணையை வாசிப்பவனே

காமா – யாவரும் விரும்பத்தகும் கட்டழகு கொண்டவனே

காண் நாகா – யாவரும் காணுமாறு பாம்புகளை அணிந்தவனே

காணா காமா – காமனைக் கைகால் அங்கங்களைத் தோன்றாதவாறு அழித்தவனே

காழீயா – சீகாழியில் எழுந்தருளி இருப்பவனே

மாமாயா – லக்ஷ்மி தேவியின் கணவனான திருமாலாகவும் வருபவனே

மா மாயா நீ – கரியனவாகிய மலங்களிலிருந்து  எம்மை விடுவிப்பாயாக!

 தேவாரத் தலங்கள் என்றப் பேற்றைப் பெறும் வகையில் ஏராளமான தலங்களுக்குச் சென்று இசையுடன் அவர் பதிகங்களைப் பாடினார்.

அவர் பாடலில் இடம் பெற்ற, ஆனால் அவர் செல்லாத தலங்கள், அதாவது வைப்புத் தலங்களும் ஏராளம்.

திருஞானசம்பந்தரின் தேவாரத்தைப் பாடிப் பரவிய கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் தங்கள் வியப்பை நிறையப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவருக்குத் தந்த புகழாரங்கள் ஒரு கலைக் களஞ்சியம் அளவு பெரியவை. சில புராணக் கூற்றுகளையும் புலவர் தம் கூற்றுக்களையும் பார்ப்போம். அமுதக் கவி பொழி சிறுவன் இது கூர்ம புராணம். அருளும்சொல் பனவன் இது பேரூர்ப்  புராணம். கழுமலப் பேரொளி இது சுழியல் புராணம். காழி ஞானப்பிள்ளை இது பட்டீசுவர புராணம். பண்டித ஞானாசாரியன் இது திருவையாற்றுப் புராணம். மணிச்சிவிகை ஏறினான் இது குற்றாலத்துப் புராணம். நான்மறையவன் இது சிவபுண்ணியத் தெளிவு.

அருட்பிரகாச வள்ளலார் தெள்ளமுதாம் சிவகுருவே, உத்தம சுத்த சற்குருவே என்கிறார். ஒட்டக்கூத்தர் திருஞானசம்பந்தரை பரசமயக் கோளரி என்றும், வைதிக ராஜ சிங்கம், வைதிக வாரணம் என்றும் இன்னும் பலபடியாகவும் பரவிப் புகழ்கிறார்.

அருணகிரிநாதரோ முருகனே ஞானசம்பந்தர் என்ற இரகசியத்தை மிகத் தெளிவாக உலகினருக்கு அறிவிக்கிறார், பல இடங்களில்! உதாரணத்திற்கு திருத்தணிகைத் திருப்புகழிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.

பொறியுடைச் செழியன் வெப்பு ஒழிதரப்

பறிதலைப் பொறியிலிச் சமணர் அத்தனை பேரும்

பொடிபடச் சிவமணப் பொடி பரப்பிய திருப்

புகலியில் கவுணியப் புலவோனே.

இந்த குருபூஜை நன்னாளில் நமக்கு ஒரு பெரிய பொறுப்பு இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். காலம் காலமாக பன்னிரு திருமுறைகளையும் பாதுகாத்து ஓதி அவற்றை நமக்கு நம் முன்னோர்கள் தந்துள்ளனர். அவற்றை அப்படியே இனி வரும் தலைமுறையினருக்குத் தரும் பெரிய பொறுப்பை உணர்ந்து இந்த குருபூஜை நன்னாளில் நமது உள்ளார்ந்த பக்தி உணர்வை அர்ப்பணித்து திருஞானசம்பந்தரை வழிபடுகிறோம்.

சைவ ஆகமம் 28இல் ஒன்றாகிய காரணாகமத்தில் 141ஆம் படலமான மகோற்சவப் படலத்தில் மூன்று ஸ்லோகங்கள் திருஞானசம்பந்தரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுத்துக் கூறுவதைக் காணலாம்.அம்சுமதாகமும் விரிவாக வழிமுறைகளைக் கூறுகிறது. ஓதுவாரை அழைத்து  ஞானசம்பந்தரின் பதிகங்களைப் பாடச் செய்ய வேண்டும்,பாற்சோறு நிவேதனம் செய்து அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். ஓதுவார் உள்ளிட்ட நல்ல சொற்பொழிவாளர்கள் மூலம் சம்பந்தரின் வரலாற்றை அனைவருக்கும் வழங்க வேண்டும். ஓதுவாருக்கு ஆடை முதலியன வழங்கி கௌரவிக்க வேண்டும். இப்படிப் பல நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.  அந்த வழியிலே, இந்த நன்னாளிலே

 காலத்திற்கேற்றபடி,  உலகளாவிய அளவில் திருஞானசம்பந்தரின் குருபூஜை நாளை இணையம் வழியே எடுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். பல பெரியோர்கள், ஆதீனங்கள் அருளுரை வழங்கியது பெரும் பேறாகும். வரும் தலைமுறையை எண்ணி இப்படிப்பட அரும் செயல்களை அயராத முயற்சியுடன் செய்து வரும்  லண்டன் ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாசாரியார் பெரிதும் போற்றுதலுக்கு உரியவர். அவருக்கும், இதில் கலந்து கொள்ளும் பெரியோர்கள்,தாய்க்குலத்தோர், பக்தர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகிறேன். சேக்கிழார் வழியில் திருஞானசம்பந்தரின் பாதமலரில் சிரம் தாழ்த்தி நமஸ்காரம் செய்கிறேன்.

வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப்

பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தர் பாதமலரைத் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்!

நன்றி வணக்கம்!

***

tags– தெய்வத் தமிழ், திருஞானசம்பந்தர்

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-2 (Post.9655)

RESEARCH ARICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9655

Date uploaded in London – –27 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

First part of this article was posted here yesterday; this is part -2

ORIGIN OF ANIMAL FABLE IN THE RIG VEDA;

Mantra 8 out of 25

Here we get remarkably interesting and mysterious details.

Asvini devas are praised for making the blind see and the lame walk.

There is a famous sloka in Sanskrit –

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ।

यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ॥

Muukam Karoti Vaacaalam Panggum Langghayate Girim |

Yat-Krpaa Tamaham Vande Param-Aananda Maadhavam ||

Meaning:

1: (I Remember with Devotion the Divine Grace of Krishna Who can make the) Dumb speak with Eloquence and the Lame cross high Mountains,

2: I Remember and Extol that Grace which flows from the Supreme Bliss manifestation of Madhava.

This happened in many saints’ lives. Great Tamil saint Kumara Gurupara became a great poet though he was born dumb. Muka kavi also become eloquent. But the origin of such miracles is in the Rigveda .

Paravrj is mentioned in this mantra. Sayana said that was the name of a seer ; but Benfey explains the word as setting sun. This is the difference between a true Hindu and a foreigner.

The same mantra says Asvins saved a quail swallowed or seized by a wolf. Yaska , as quoted by Sayana, explained it as dawn swallowed by sun; Benfey explained it as the sun after setting.

My interpretation

If 20 plus foreigners can comment on Vedic hymns, why shouldn’t I who recite Vedic mantas everyday?

A lot of birds and animals are portrayed in the Rigveda. Falcons and eagles bringing Soma plant to seers, deer and other animals helping seers, wolf behaving mysteriously and here quail saved by a wolf are some of thee animal stories.

I interpret it in two ways-

  1. It is solar eclipse. Like the puranas and 2000 year old Sangam Tamil literature describe the lunar eclipse as Snake demon Rahu devouring moon, here quail devoured by wolf is nothing but solar eclipse.
  2. The falcon-soma story, wolf-quail story show that the animal fables originated in Vedic period. Neither Aesop nor Vishnu sarman of Pancha tantra claim credit for animal fables.

Mantra 9

Here we come across four people or seers who received Asvins’ help.

They are Vasistha, Srutarya, Kutsa and Narya. We don’t get any more details about two of the four seers. This shows Vedas were very ancient. Also the words Asvins bringing light, ocean of air are not satisfactorily explained. 

Mantra 10 – artificial metal leg

Two miracles of Asvins are often repeated.

1.Asvins sea adventure in big ship to rescue Bhujyu, son of Tugra.

2.Vispala getting artificial metal leg.

Hindus were far advanced in medicines than any other ancient community. We have huge volumes of medical books written by Susruta and Charaka. Susruta not only mentioned 100s of surgical instruments but also gave the details of artificial/plastic nose surgery. Tamil literature says that a Pandya king was given a golden hand when he cut his hand to punish himself. The king knocked at the door of a Brahmin’s house by mistake and so he cut his hand off. We come to know about fixing artificial hand from this anecdote. Like ‘ayas’ in Rigveda ‘pon’ in Tamil also mean a  metal. So the Pandya might have had some metal hand or may be golden hand.

Aprat from this, we have names such as Mr Gold hand, i.e. Hiranya Hasta in the Rigveda. God is also described as Doctor and Medicine, i.e Bhishak and Besajam in the Vedas. So there is no wonder Vispala getting prosthetic leg several thousand years ago!

Another seer Vasa is mentioned in the mantra. So many names and so many anecdotes in one hymn!

Mantra 11

This describes the help the business community received from the Twins- Asvini Devas. Dirghshravas, Ausija re the names of businessmen. They were seers as well. It is very strange to find Rishis/ Seers doing business.

To be continued ………………………………..

tags- oldest historian-2

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2 (Post.9654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9654

Date uploaded in London – –27 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதி நேற்று வெளியானது இதோ இரண்டாம் பகுதி.

மந்திரம் 8

எட்டாவது மந்திரத்தில் நிறைய அதிசய விஷயங்கள் வருகின்றன. இறைவனுடைய அருள், ஊமையைப்  பேச வைக்கும், முடவனை நடக்க வைக்கும் என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் உள்ளது .

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ।

यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ॥

Muukam Karoti Vaacaalam Panggum Langghayate Girim |

Yat-Krpaa Tamaham Vande Param-Aananda Maadhavam ||

Meaning:

1: (I Remember with Devotion the Divine Grace of Krishna Who can make the) Dumb speak with Eloquence and the Lame cross high Mountains,

2: I Remember and Extol that Grace which flows from the Supreme Bliss manifestation of Madhava.

பொருள்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

இதற்கான மூலம்  இந்த மந்திரத்தில் வருகிறது

முடவனான பராவிரஜனை நடக்கச் செய்தீர்கள், குருடனான ரிஜ்ராகவனைக் கண் பார்வை பெறச் செய்தீர்கள்,சப்பாணியான சுரோணனை நகரச் செய்தீர்கள் என்று குத்ச ஆங்கீரசன் அஸ்வினி தேவர்களைப் புகழ்கிறார்.

டுத்து வரும் நிகழ்வு – ஓநாயால் கவ்வப்பட்ட காடையை தப்பித்துப் பிழைக்கவைத்தீர்கள் என்பதாகும். இது வேறு சில பாடல்களிலும் வருகிறது .

வெள்ளைத் தோல் கோமாளிகள் சொல்லுவது என்ன   என்பதைக் கேளுங்கள்-

பரா விரஜன் என்பது ஒருவரின் பெயர் என்பது சாயனரின் விளக்கம். எல்லா இந்துக்களும் இதை ஏற்பர். ஏனெனில் மூக கவியும் , குமர குருபரரும் கடவுளின் அருளைப்பெற்று கவி பாடியதை இந்துக்கள் அறிவர். ஆனால் பென்பீ என்பவர் சொல்கிறார் “அஸ்தமன சூரியனைக் குருடன் என்றும் முடவன் என்றும்  இந்த மந்திரம் வருணிக்கிறது” .

இதுதான் வெள்ளைக்காரனுக்கும் சாயனருக்கும் உள்ள வித்தியாசம்.

என் கருத்து

மாக்ஸ்முல்லர் முதல் கீத் (A B Keith) வரை 20 கோமாளிப் பயல்கள் ரிக் வேதத்துக்கு பாஷ்யம் எழுதப் போனால், நான் , லண்டன் சாமிநாதன், என்ன மட்டமா?

ORIGIN OF ANIMAL FABLES

இதோ  எனது பாஷ்யம்:-

ரிக் வேதத்தில் பறவைகள், மிருகங்கள் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் வருகின்றன. ஆகவே முதல் முதலில் வியாசர், வால்மீகி , ஈசாப் , விஷ்ணு சர்மன் , புத்த ஜாதகக் கதைகளில் வரும் பிராணிகள் பற்றிய கதைக்கெல்லாம் மூலம் ரிக் வேதம்தான். பருந்து கொண்டுவரும் சோம ரச மூலிகை பற்றிப் பல மந்திரங்கள் உள்ளன .

இங்கே ஓநாயிடமிருந்து காப்பாற்றப்பட்ட காடை / கவுதாரிப் பறவையைக் காண்கிறோம்.இதுதவிர சிங்கம், மான் முதலிய பிராணிகள் பற்றி வினோத விஷயங்கள் வருகின்றன. ஆக முதல் முதலில் அனிமல் பேபிள்ஸ் (Animal Fabes) எழுதியவர் இந்துக்களே.

இதற்கு நான் எழுதும் பாஷ்யத்தில் இன்னும் ஒரு விளக்கமும் சொல்லுவேன் :-

கிரஹணம் என்பது என்ன என்று தெரிந்து கணக்குப் போட்டு பஞ்சா ங்கத்தில் நாள் குறித்த போதும் பாமர மக்களுக்காக ராகு என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதாக கதை சொன்னார்கள். அது போல இதுவும் சூரிய கிரஹண குறிப்பு என்றே நான் கருதுகிறேன். “ஓநாயால் கவ்வப்பட்ட காடை” என்பது சூரிய கிரஹணமே . அடிக்கடி நடக்கும் சந்திர கிரஹணத்தை இது குறிப்பிட்டால் மேலும் நிறைய இடங்களில் இந்தச் செய்தி வந்திருக்கும். ஒரு சில இடங்களில் இது வருவதால் சூரிய கிரஹணமே.

ஒன்பதாவது மந்திரம்

சிந்து நதியில் இனிய நீர்ப் பெருக்கினை உருவாக்கினாய்;

‘மூப்பு இல்லாத’ நீங்கள் வசிஷ்டனைக் குணப்படுத்தினீர்கள்;

குத்சன், நர்யன், சுருதர்யனைக் காப்பாற்றினீர்கள் ;

இதற்கு விளக்க உரை/ பாஷ்யம் செய்த சாயனர் இவர்கள் அனைவரும் ரிஷிகள் என்கிறார். ஆனால் என்ன ,எப்படி, எதற்காக எங்கே குணப்படுத்தினார்கள் என்ற செய்தி எங்கும் இல்லை.

என் கருத்து

இந்த மந்திரம், இதற்கு முந்தைய மந்திரங்களில் ‘சு’ என்ற எழுத்துடன் பெயர்கள் வருவதைக் காண்கிறோம். இதை அப்படியே தமிழர்ளும் சங்க காலம் முதல் பின்பற்றி வருகின்றனர். ‘சு’ என்றால் ‘நல்ல’  இதை நாம் ‘ந’க்கீ ரன் , ‘ந’ப்பால த்தன் ,’ ந’ச்செள்ளை, ‘ந’ப்பசலை,’ ந’ப்பின்னை முதலிய பல பெயர்களில் காண்கிறோம். இன்றும் தமிழர்கள் சு-மதி, சு-கந்தி சு- ஹாசினி , சு- சீலா என்றெல்லாம் பெயர் சூட்டுவதைக் காண்கிறோம்.

இந்த மந்திரத்தில் மேலும் சில விளக்க முடியாத விஷயங்கள் உள்ளன. அஸ்வினி தேவர்கள் ஒளியைக் கொண்டு வ  ததாகவும், காற்று என்பது கடல் போல உள்ளதாகவும், அஸ்வினிகள் ஒளியால் காற்றை வேகமாக வீசச் செய்வதாவும் உரைகளில் வருகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இதற்கு விடை கூறலாம்

பத்தாவது மந்திரம்

மந்திரம் 10ல் மேலும் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. விச்பலை என்ற பெண்ணுக்கு அஸ்வினி தேவர்கள் செயற்கைக் கால் (ARTIFICIAL LEG) கொடுத்த செய்தி. இதே செய்தி நிறைய பாடல்களில் வருவதால் அவள் உலோகத்தினால் ஆன கால் பெற்றதையும் நாம் அறிகிறோம். இது வேத காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதைக் காட்டுகிறது. உலகிலேயே முதல் முதலில் செயற்கை மூக்கு ஆப்பரேஷன் செய்ததை சுஸ்ருதர் நூலில் இருந்து அறிகிறோம். கீரந்தை என்னும் பிராமணன் வீட்டை இரவில் தவறாகத் தட்டிய குற்றத்துக்காக பாண்டியன் தன கைகயை தானே வெட்டிக்கொண்டதையும் பின்னர் மருத்துவர்கள் அவருக்கு தங்கக்ககை பொருத்தியதையும் பொற்கைப் பாண்டியன் (Golden Handed Pandya King) கதை    மூலம் நாம் அறிவோம். வேதத்தில் சில பெயர்கள் ஹிரண்ய ஹஸ்தன் / பொற்கை என்று வருவதும் குறிப்பிடத்தக்கது . வேத கால இந்துக்கள் மிக உயரிய அறிவியல் ஆற்றல் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.

பத்தாவது மந்திரத்தில் அசுவனின் மகன் வசன் பற்றியும் பாடுகினறனர் . இது என்ன கதை என்று தெரியவில்லை . வேதம் அவ்வளவு பழமையானது. பல விஷயங்களுக்கு விளக்கமே இல்லை. அவர்கள் மன்னரா, ரிஷிகளா என்றும் சொல்ல இயலவில்லை . ஆயிரம் என்ற டெசிமல் எண்ணும்  இதில் வருகிறது

மந்திரம் எண் 11

இதில் வணிகர் பற்றிய குறிப்பு வருகிறது. வேறொரு பாட்டில் தச்சர், நெசவாளர் பற்றி ஒரே மந்திரத்தில் வருகிறது. டாக்டர் என்று கடவுளை பல மந்திரங்கள் புகழ்கின்றன. இவை எல்லாம் வேத கால சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மிக உயர்ந்த கல்வி கற்ற சமுதாயம் அது. 20 வெள்ளைக்கார கோமாளிகள் சொல்லுவது போல நாடோடிகள் அல்ல. பல மந்திரங்களில் நெல், பார்லி விவசாயம் பறறியும் கவிகள்  பாடுகின்றனர் . இதை எல்லாம் மொழி பெயர்த்த பின்னரும் வேத கால இந்துக்களை நாடோடி என்கின்றனர் 20 கோமாளிகள் அந்தக் கும் பலுக்குத் தலைவன் மாக்ஸ் முல்லர்.

இந்தப் பாடலில் உள்ள 25 மந்திரங்களில் 11-தான் பார்த்து இருக்கிறோம் .

தொடரும் …………………………………………

tags- வரலாற்று ஆசிரியர் -2, வரலாறு-2, ஓநாய், காடை

அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன் (Post No.9653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9653

Date uploaded in London – –27 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SAMUEL JOHNSON

(1709 – 1784)

சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON)  முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் ஜான்சன் லிச்ஃபீல்டு புத்தக்கடை உரிமையாளரின் மகன். லிச்ஃபீடில்(LICHFIELD) பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கல்விக்  கட்டணம் கட்ட முடியாததால் பட்டம் பெறுவதற்கு முன்னரே படிப்பை நிறுத்த நேரிட்டது. பின்னர் அவர் ஒரு நூல் வெளியீட்டாளரிடம் பணிபுரிந்தார். அவர், இவருக்கு சிறுதொகையை கொடுத்துவந்தார்.

26 வயதில் அவருடைய முதல் நூல் வெளியானது. இது ஒரு மொழிபெயர்ப்பு. அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அவர் திருமணம் செய்து கொண்டார்.

லிச்ஃபீல்டு அருகில் அவர் பள்ளிக்கூடம் துவக்கினார், அதிலும் வெற்றி கிட்டவில்லை. மூன்று மாணவர்களே வந்ததால் பள்ளிக்கூடத்தை மூட நேரிட்டது. ஆனால் அதில் ஒரு மாணவர் DAVID GARRICK பிற்காலத்தில் அவர் இங்கிலாந்தின் மிகப்பெரிய நடிகரானார்.

1737-ஆம் ஆண்டில் ஜான்சனும் கேரிக்கும் (Garrick) லண்டனுக்குச் சென்றனர். ஜான்சன் பல பத்திரிகைகளுக்கு எழுதினார். பின்னர் THE SPECTATOR என்ற பத்திரிகையையும் தொடங்கினார். அதே நேரத்தில் ஆங்கில அகராதியை தொடுக்கும் பணியிலும் இறங்கினார். அவருக்கு 46 வயதானபோது அவருடைய நூல் வெளியானது. இது அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றிவிட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் வழங்கியது.      

      இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாயார் இறந்தார். சடலத்தை அடக்கம் செய்யக்கூட கையில் காசு இல்லை. ஒரே வாரத்தில் ஒரு நாடகம் எழுதி பணம் திரட்டினார்.

      இதற்குப் பின்னர்தான் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவர் மீது விழுந்தது. அகராதியை உருவாக்கிய அவர்தம் பெருமையை ஆங்கில உலகு உணர்ந்தது. அவருக்கு ஆண்டுக்கு 300 பௌன்ட் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.

      ஜான்சனுக்கு 44 வயதானபோது ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பாஸ்வெல்லை (JAMES BOSWELL) சந்தித்தார். இவர்களுடைய நட்பு வளர்ந்து வேரூன்றியது. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறு உருவாக இது வழி வகுத்தது. ஜான்சனின் வாழ்க்கையை (LIFE OF SAMUEL JOHNSON) பாஸ்வெல் எழுதினார்.

      ஜான்சனுக்கு மரணத்தைக் கண்டு பயம். வாழ்நாள் முழுதும் மரணத்தை எண்ணி அஞ்சிய அவர் இறக்கும்போது அதைத் துணிவுடன் சந்தித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

சாமுவேல் ஜான்சன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

Translate this page

7 Nov 2015 — Article Written by London swaminathan. Date: 7 November 2015. Post No:2308. Time uploaded in London :–7-58 AM. (Pictures in this article are taken by London swaminathan). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!



அகராதி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

Translate this page

அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன். IMG_7860.



அடக்கமில்லாத | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

Translate this page

10 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.



தவிடுபொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › த…

  1.  

Translate this page

11 Jul 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆங்கில அகராதியை வெளியிட்ட அகராதித் தந்தை சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) ஜெ J சொற்களையோ V …

–subham—

tags-ஆங்கில அகராதி , சாமுவேல் ஜான்சன்

என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி! (Post.9652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9652

Date uploaded in London – –  –27 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி!

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்யசாயி பாபா ஊட்டி, நந்தனவனத்தில் சத்யசாயி இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கிடையே 16-4-1988இல் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது:-

உலகியல் இன்பங்கள் எல்லாமே நிலத்திருப்பவை அல்ல. வந்து செல்பவை அவை. இறைவன் ஒருவனே எல்லையில்லா ஆனந்தம் தருபவன்.

அரசன் ஒருவன் ஏராளமான கலைச் செல்வங்களையும் ஓவியங்களையும் கொண்ட பிரம்மாண்டமான கண்காட்சி ஒன்றை அமைத்தான். அனைத்து மக்களையும் அழைத்த மன்னன், உள்ளே செல்வோர் தங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னான்.

அவ்வளவு தான், கூட்டம் அலைமோதியது. அவரவர் தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை அல்லது இதர பொருளை எடுத்துக் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு பெண்மணி மட்டும் கண்காட்சியிலிருந்து ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் எதையும் எடுக்காமல் வெளியில் வந்தாள். வெளியே நின்றிருந்த அரசன் அவள் எதையும் எடுக்காமல் வந்ததைப் பார்த்தான். அவளை அழைத்தான். “என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா?” என்றான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்றாள் அவள்.

“மிக அழகிய பொருள்கள் உள்ளே உள்ளனவே. அவற்றில் எதுவுமே வேண்டாமா?” என்றான்.

“உள்ளே மிக அழகிய பொருள்கள் இருக்கின்றன” என்று பதில் சொன்னாள் அவள்.

“அப்படியானால் ஒன்று கூட அவற்றில் உங்களுக்கு வேண்டாமா? என்று அரசன் கேட்டான். திட்டவட்டமாக வேண்டாம் என்றாள் அவள்.

“அப்படியானால் உங்களுக்கு என்ன தான் வேண்டும்? அதைச் சொல்லுங்கள் நான் தருகிறேன்” என்றான் அரசன்.

“அரசே! வாக்கு மாற மாட்டீர்களே! நான் கேட்டதைத் தருவீர்களா?” என்றாள் அந்தப் பெண்மணி.

“நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான்” என்று அரசன் உறுதி கூறினான்.

உடனே அந்தப் பெண்மணி, “அரசே! எனக்கு நீங்கள் தான் வேண்டும்” என்றாள்.

தான் கொடுத்த வாக்கின் படியே அரசன் அவளைப் பணிந்து வணங்கி தன்னை அவளுக்குக் கொடுத்து விட்டான்.

அரசனே அவளுக்குச் சொந்தமான பின்னர் அந்தக் கண்காட்சியில் இருந்த அனைத்துமே அவளுக்குச் சொந்தமாகி விட்டது.

இந்த பிரபஞ்சம் ஒரு பெரிய கண்காட்சி. அது இறைவனால் படைக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நுழைபவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வேலை பிடிக்கிறது. சிலருக்கு செல்வம் தேவைப்படுகிறது. ஆனால் எவருமே “ஸ்வாமி! இதில் ஒன்றை எடுத்துக் கொள்வதால் எனக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது. நீங்கள் என்னவராக ஆகி விட்டால் எல்லாமே எனக்குக் கிடைத்து விடுமே” என்று சொல்வதில்லைல்.

பிரபஞ்ச எக்ஸிபிஷனில் (COSMIC EXIBITION) நுழையும் நீங்கள் தெய்வீகத்தை வேண்ட வேண்டும். அப்போது பிரபஞ்சமே உங்களுடையதாகி விடும். எது ஒன்று மாறாததோ எது ஒன்று நிலைத்து நிற்பதோ அதையே நீங்கள் நாட வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றாக ஒன்றின் பின் ஒன்றாக நீங்கள் செல்லக் கூடாது. அதில் எப்போதுமே திருப்தி கிடைக்காது. இன்று கவர்ச்சியாக இருப்பது நாளைக்கு கவர்ச்சியாக இருக்காது. ஆனால் இறைவனைக் கொள்பவர்களுக்கோ அனைத்துமே கிடைத்து விடும்.

ஆசைகளைத் துறக்க மனிதன் தன் மனதை கடவுள் பால் திருப்ப வேண்டும். அதுவே திருப்தி, சந்தோஷம், எல்லையற்ற ஆனந்தம் அடைய வழி வகுக்கும்.

       ஆதாரம் ; Sri Sathya Sai Speaks Volume 21 chapter 11 (ஆங்கிலத்தில் உள்ள உரையின் சுருக்கம் மேலே தமிழில் தரப்பட்டுள்ளது)

ஓம், ஸ்ரீ சாயி சரணம்!

***

tags- அம்மணி, அரசன்,கேள்வி , சத்யசாயி பாபா

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1 (9651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9651

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

 ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1

ரிக்  வேதத்தில்  பத்து மண்டலங்கள் (புத்தகங்கள்) உள்ளன. அதில் 1000 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மந்திரங்கள் இருக்கும்; மொத்த மந்திரங்கள் பத்தாயிரத்துக்கும் சற்று அதிகம். இதில் முதல் மண்டலத்தில் உள்ள 112 ஆவது பாடல் முக்கியமானது. அதில் 25 மந்திரங்களில் ஏராளமான அற்புதங்களின் பட்டியலும், மன்னர்களின் பெயர்களும் வருகின்றன . இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கில அயோக்கியர்கள் இந்தியாவில் மன்னர்களே இல்லை என்றும் புத்தர் காலம் முதலே மன்னர்கள் பெயர்கள் உள்ளன என்றும் எழுதிவிட்டார்கள். அதை படித்துதான் நானும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றேன் . வெட்கக்கேடு.

கி.மு 2500ல் துவங்கிய சரஸ்வதி- சிந்து நதி தீர நாகரிகம் கி.மு 1700ல் வறட்சி, வெள்ளப் பேருக்கு முதலியவற்றால் அழிந்தது . வெள்ளைக்காரன் கணக்குப்படி 2000 ஆண்டுகளுக்கு மன்னரே கிடையாது. பெயரில்லாப் பூச்சி ஆட்சி செய்தது! அனால் இதே காலத்தில் பாபிலோனிய, எகிப்திய, சீன , மாயா மன்னர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் வெள்ளைத்  தோல்களே பட்டியல் போட்டுக் காட்டுகின்றன. புராணங்களோ வேனில் 140 தலைமுறையினரை கி.மு காலத்தில் காட்டுகின்றன. அவற்றை எல்லாம் அயோக்கியர்கள் ஒதுக்கிவிட்டனர். சூரிய வம்ச 140 +++ தலை முறை தவிர சந்திர வம்சம் வேறு உள்ளது !

மாக்ஸ்முல்லர் முதலிய 20 கோமாளிகள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கப்  புறப்பட்டு “முழி பெயர்த்தனர்”. அவர்களுக்கிடையே மஹா குழப்பம் !!! தெரியாத ஒரு சொல் வந்தால் ஒரு கோமாளி அதை புழு பஎன்பான் . மற்றோரு கோமாளி அதை அரக்கன் என்பான். மூன்றாவது கோமாளி இது ஒரு தெய்வத்தின் பெயர் என்பான். ஒரே ஜோக் Joke மயம் . வாய்விட்டுச் சிரிக்கலாம். 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் என்ற மஹான், வேதத்துக்கு பாஷ்யம் எழுதினார். அதை ஆதாரமாக வைத்து எழுதுவதாகச் சொல்லும் ‘’மாக்ஸ்முல்லர் கும்பல்’ ஏராளமான இடங்களில் அவரை மறுப்பதோடு, சாயனருக்குத் தெரியாத ஆரிய- திராவிட வாதத்தை செய்யுளுக்குச் செய்யுள் சேர்த்துள்ளனர். அதாவது இவர்கள் மொழி பெயர்ப்பாளர் அல்ல. நாட்டைப் பிடிக்க வந்த, மதத்தைப் பரப்ப வந்த அயோக்கிய சிகாமணிகள்!

ரிக் வேதத்தை அனைவரும் படிக்க வேண்டும். முதல் மண்டல 112 ஆவது பாடலை (RV 1-112) கட்டாயம் படிக்க வேண்டும்.

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். ஒவ்வொரு வெள்ளைத்தோல் கோமாளியும் அதற்கு ஒரு காலம்  சொல்லுவான். மாக்ஸ்முல்லர் முதலி ல் கி.மு.1200 என்று சொல்லி, மூஞ்சி மொகரை எல்லாம் குத்து வாங்கிய பின்னர் இது. கி.மு 1500 அல்லது அதற்கும் முந்தையது; எவராலும் இதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனார். இந்திய மண்ணை மிதிக்க அஞ்சி, வாழ் நாள் முழுதும் இந்தியா வராமலேயே ரிக் வேதத்துக்கு ‘பாஷ்யம்’ (COMMENTARY) எழுதினார். அதாவது கொட்டாம்பட்டி கிராம மேஸ் த்திரி நியுயார்க்கிலுள்ள உயர்ந்த கட்டிடம் பற்றி தீசிஸ் THESIS எழுதியது போல. நியூயார்க்குக்கு போகாமலேயே!!

முதல் மண்டல 112ஆவது பாடலைக் “கேட்டவர்” பெயர் கவிஞர் குத்ச ஆங்கீரசன். அவர் பாடிய கடவுள் உலகிலேயே முதலில் பிறந்த TWINS இரட்டையரான அஸ்வினி தேவர்கள். இவரைப் பற்றி  எல்லா வெள்ளைக்கார பயல்களும் ‘இவர்கள் புரியாத புதிர்கள்’ என்று எழுதிவிட்டனர். இவர்கள் செய்த அற்புதங்கள், கப்பல் பயணம், கடல் சாகசங்கள் எண்ணிலடங்கா. இந்த 112 ஆவது பாடலில் நீண்ட அற்புதப் பட்டியலும் மன்னர்களின் பெயர்களும் வருகின்றன. நாம் 25 மந்திரங்களையும் காண்போம் . வேத மந்திரங்கள் வானிலிருருந்து ரேடியோ அலைகள் போல “கேட்க”ப்பட்டவை. அவை கவிகள் எட்டுக்கட்டியதல்ல.

*****

மந்திரம் 1 (1-112-1)

குத்ச ஆங்கீரசன் செப்புகிறார் – நான் முதலில் வானத்தையும், பூமியையும், அக்கினி தேவனையும் வணங்குகிறேன் .அஸ்வினி தேவர்களே ! முன்னர் போரில் வெல்ல எந்த சங்க நாதம் எழுப்பினீர்களோ அத்துடன் வருக.

இதில் போர் வெற்றி, ‘கிடைத்த செல்வத்தைப் பங்கிடல்’ முதலிய செய்திகள் வருகின்றன.

மந்திரம் 2

இதில் ஒரு அருமையான வரி வருகிறது. புனித செயல்களில் ஈடுபட எங்களைத் தூண்டும் உத்திகளுடன் வருக. இன்னும் ஒரு அருமையான வரி வருகிறது ‘சொல் தேர்’-சொல் ரதம் ; தச்சன் தேர் கட்டுவது போல கவிகள் சொற்றேர் கட்டுகின்றனர் . தமிழிலும் இது உண்டு. சொல் தச்சன், கல் தச்சன்.

‘தச்சன்’, ‘தேர்’ என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பது பலருக்குத் தெரியாது

தக்ஷ என்ற சொல்லிலிருந்து டெக்கனிகல், டெக்னாலஜி, ஆர்க்கி ‘டெக்ட்’ போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு. இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஒரே நாளில்  எட்டு தேர் செய்த தச்சன் பற்றிய பாடலைக் காண்க. தேர் என்பதன் கண்ணாடி உருவம் ரத . அதாவது ரத என்பதைக் கண்ணாடியில் பார்த்தால் தேர். இதை மொழி இயல் வல்லுநர்கள் Mirror Image மிர்ரர் இமேஜ் என்பர்.

ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் இன்னும் ஒரு உவமை வருகிறது ஆனால் கிரிப்பித் ( R T Griffith  ஆங்கில மொழி பெயர்ப்பில் அது இல்லை. அதாவது “அறிஞர்களின் மொழிகளைச் செவியுறும் மாணவர்களை போல அடியார்கள் அஸ்வினி தேவர்களின் தேருக்கு அருகில் நிற்கிறார்கள் ” என்பதாகும். இதற்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்பதைக் காண வேண்டும். ஜம்புநாதன் எழுதியது சரி என்றால் ‘மாணவர் உவமை’ அக்கால  கல்வி நிலையைக் காட்டுவதாகும்.

வேதம் முழுதுமுள்ள உவமைகள், உருவகங்களைப் பார்க்கையில் உலகிலேயே உன்னதமான கலாசாரம் அதுதான் என்று தலை மேல் அடித்துச் சத்தியம் செய்யலாம். பாட்டுக்குப் பாட்டு தங்கம் (Gold)  பற்றி வருகிறது, கணவன் மனைவி காதல், தாய்- பிள்ளை பாசம், அரசன்- மக்கள் அன்பு, சகோதரன்-சகோதரி பாசம் என்ற உவமைகள் எண்ணிலடங்கா.

‘பத்து நூறு அடுக்கிய கோடி’ என்பதை திருக்குறளிலும் சங்கத் பாடல்களிலும் காணலாம். இந்த Decimal System டெசிமல் சிஸ்டம் ரிக் வேதம் முழுதும் நிரம்பி வழிகிறது . ஏனைய கலாசார பழங்கால நூல்களில் இதைக் காண முடியாது.

மந்திரம் 3

மூன்றாவது மந்திரத்தில் மலட்டுப் பசுவை பால் சுரக்கும் கறவை மாடாக அஸ்வினி தேவர்கள் மாற்றிய அற்புதம் வருகிறது. இதை நாம் ஞான சம்பந்தரின் அற்புதத்துடன் ஒப்பிடலாம். ஆண்  பனை மரம் காய்க்காது என்று சமண மத ஆள் கிண்டல் செய்யவே அவன் சம்பந்தரிடம் சொல்லி வருத்தப் பட்டான் . அதை அவர் செக்ஸ் சேஞ்ச் SEX CHANGE  செய்து காய்க்கும் மரமாக மாற்றினார்.

மந்திரம் 4

இங்கு நிறைய உருவகம் வருகிறது; காற்று என்பதை எங்கும் சுற்றுபவனாகவும் (Wanderer) அதன் குழந்தை (offspring) அக்கினி என்றும் வருகிறது. அத்தோடு அக்கினியை இரு தாய்மார்களின் புதல்வன் என்கிறது (Twin mother)அதாவது இரண்டு கட்டைகளை உரசி தீயை உண்டாக்கியதால் இரட்டைத் தாய். காற்று  வீசி தீ  பரவுவதால் அதன் புதல்வன் அக்கினி. இப்படியெல்லாம் வியாசர் காலத்துக்கு  முன்னே – கி.மு. 3150க்கு முன்னரே கவி பாடினால் அவர்கள் எவ்வளவு அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மந்திரம் 5

ஐந்தாவது மந்திரத்தில் கிணற்றில் தள்ளப்பட்ட ரேபனையும் வந்தனையும் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதாக ஒரு செய்தி உள்ளது. இது போல கண்வ மகரிஷி மீட்கப்பட்ட குறிப்பும் உள்ளது. முதல் மண்டலத்திலேயே  4 அல்லது 5 ரிஷிக்கள் கிணற்றில் தள்ளப்பட்டு மீட்கப்பட்டதாக பாடல் வருகிறது. “கிணற்றில் தள்ளுதல்” (Idiom and phrase) என்பது ஒரு மரபுச் சொற்றோடராக இருக்கலாம். ஒரு மணப் பெண் தவறான கணவனுக்கு வாக்குப்பட்டால் உடனே அவள் பிறந்தகத்துக்கு வந்து “என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டீர்களே” என்று அழுவாள். அடுத்த வீட்டுக் காரர்களும் “கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துவிட்டார்களே”

என்று அங்கலாய்ப்பர். இது போல “கிணற்றில் தள்ளப்பட்டது” அறியாமை என்னும் கிணறாகவும் ஒளி என்பது ஞானம் என்றும் இருக்கக்கூடும். ஆயினும் அப்பர் வாழ்வில் மஹேந்திர பல்லவன் அவரை சுண்ணாம்பு சூளையில் தள்ளியதையும் அவர் சிவ பெருமான் அருளால் உயிர் பிழைத்ததையும் நாம் அறிவோம். அது போல கண்வ மகரிஷியும் பிழைத்திருக்கலாம்.

ஆனால் ‘ஜோக்’ என்னவென்றால் எந்த ஒரு நிகழ்சசியிலும் 20 அயோக்கிய சிகாமணிகளும் இன  வாதத்தைப் புகுத்தி இருப்பதுதான். உலகிலேயே  1500 ஆண்டுகளுக்குச்  சண்டை போட்ட  இனம் தமிழ் இனம்தான். சேர, சோழ , பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்ததைப்  போல உலகில் வேறு எந்த இனமும் 1500 ஆண்டுகளுக்கு ஒருவரை ஒருவர் அழித்ததாக வரலாறு இல்லை.

அங்கு ஒருவரை ஆரியர் என்றும் மறறொருவரை திராவிடர் அல்லது பூர்வ குடிகள் என்றும் சொல்லவில்லை. ரோம சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு செத்து ஒளிந்ததையும் நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதை விட்டு விட்டு வில்சன் என்ற ஜோக்கர், ஒரு வேளை  பூர்வ குடிமக்கள் இந்து மதம் பரப்ப வந்த கண்வ மகரிஷியை குழிக்குள் தள்ளி இருக்கலாம் என்று எழுதுகிறார்.

இவர்களை ‘ஜோக்கர்கள்’ என்பதை விட விஷமிகள் என்றே சொல்ல  வேண்டும். ஆரி ய- திராவிட/தஸ்யூ மோதலை அதி கம் பிரஸ் தாபிப்பவர் மாக்ஸ்முல்லர். அதாவது விஷமிகள் கும்பலின் தலைவன்.

எல்லோரும் ரிக் வேதத்தைப் படிக்க வேண்டும். விருத்திரன், கி, சுஷ்ணன் , சம்பரன் முதலிய 30 அரக்கர்களை இந்திரன் கொன்றான். பத்து பாடல்களில் அவர்களை அரக்கர்கள், அதாவது பூர்வ குடிமக்கள் என்று எழுதிவிட்டு அடுத்த 10 ப்பாக்களில் இது வறட்சி, மேகம் என்று எழுதுகின்றனர். இந்திரன் என்பவனை ஒரே ஆளாக சித்தரிக்கின்றனர். இது பிழை என்பதை காஞ்சி  பரமாசார்யார், அரவிந்தர் விவேகானந்தர், மஹாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் எவரும் ஆரிய- திராவிட மோதல் வாதத்தை ஏற்கவில்லை

ஆறாவது மந்திரம்

இங்கு அந்தகன், பூஜ்யூ , கற்கண்டு, வய்யா ஆகிய நால்வர் பற்றிய செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லோரும் அஸ்வினி தேவர்களின் உதவி பெற்றவர்கள். அந்தகன் ஏரியில் தள்ளப்பட்டபோது அஸ்வினிகளால் மீட்கப்பட்டவர். பின்னொரு பாடலில் த்ரிதன் என்பவனை சகோதர்களே கிணற்றில் தள்ளிவிட்டதாக வருகிறது. ஆக “கிணற்றில் தள்ளுதல் ” என்பதன் பொருள் வேறு.

‘வய்யா’ என்பதிலுள்ள ‘ய்யா’ தமிழ் செல்வாக்கைக் காட்டுகிறது. வேதங்களில் பல பெயர்கள் நம்ம ஊர் மாதவையா, அய்யா சாமி  , முருகையா என்பது போல முடிகிறது.இது சம்ஸ்க்ருதத்தில் இப்போது இல்லை. அனால் தமிழில் ஐயா ஒட்டு உண்டு. ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

ஆறாவது மந்திரத்தில் வரும் பூ ஜ் யூ , துக்ரா என்பவரின் மகன். அவனை அவர் கடலில் விட்டவுடன் அஸ்வினி தேவர்கள் மிகப்பெரிய கப்பலில் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ரிஷிகள் பாடுகின்றனர். பிற இடங்களில் அவர் பற்றி வரும் செய்தியில் கப்பலின் முழு விவரமும் உள்ளது

ஏழாவது மந்திரம்

இதில் வரும் ஆட்களில் இருவர் பற்றி ஒரு விவரமும் எங்கும் கிடைக்கவில்லை. மாற்வர்களில் அத்ரி  மகரிஷியை அசுரர்கள் தீக்குழியில் தள்ளிவிட்டதாகவும் அஸ்வினிகள் காப்பாற்றியதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் சுச்சந்தி, பிருசினிக்கு பற்றி செய்தி எதுவும் இல்லை. மற்றோருவரான புருகுத்சன் அரசன் என்று தெரிகிறது  . இதுவரை குறிப்பிட்ட பெயர்களில் பல, அரசர்களுடைய பெயர்களாக இருக்கலாம். சிந்து – சரஸ்வதி தீர எழுத்துக்களை படித்தால் இந்தப் பெயர்கள் அங்கே கிடைக்கலாம்.

–தொடரும்

 tags- முதல் வரலாற்று ஆசிரியர்,  ரிக் வேதம்  ,  இந்திய வரலாறு 

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-1 (Post No.9650)

Reseaarch Article

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9650

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-1 (Post No.9650)

EVERYONE MUST READ AT LEAST  ONE HYMN IN THE RIG VEDA. IT IS IN THE FIRST MANDALA, HYMN 112. IT LISTS ALL THE MIRACLES THAT HAPPENED BEFORE 3150 BCE AND ALL THE HISTORICAL ANECDOTES. SO THE POET-SEER  KUTSA ANGIRAS IS THE OLDEST HISTORIAN .NEITHER HERODOTUS NOR BERORUS NOR KALHANA OF RAJA TARANGINI COULD CLAIM THIS TITLE.

IT HAS NOT ONLY HISTORICAL DETAILS BUT ALSO SCIENTIFIC DETAILS SUCH AS THE ECLIPSE AND EARTH QUAKES!

***

RIGVEDA 1-112- 1 TO 25

HYMN 1-112 HAS 25 MANTRAS OR STANZAS, ONE OF THE LONGEST IN THIS MANDALA (BOOK)

Rishi /Kavi/Seer/Poet Kutsa Angirasa address this hymn to the oldest Twins in the world ‘Asvini Devas’.

Mantra 1 (RV.1-112-1)

Kutsa Angiras says, let me first salute Heaven and Earth and  Agni/fire god.

O Asvins, come here ! you helped us to get the spoil in the battle with your war cry  .

Mantra 2 , RV.1-112-2

O Asvins, come here!

You help our thoughts to think about more holy acts.

Here is a beautiful line – the hymns are described as ‘AN ELOQUENT CAR’. That is like carpenters make a beautiful chariot by cutting and joining the wooden pieces and decorating it with pearls and gems so do we do construct poems. Tamils also use SOL THER=WORD CHARIOT and SOL THATCHAN= WORD CARPENTER.

Please note the Tamil words ‘thachchan’ and ‘ther’ are Sanskrit words.

Thaksha gives birth to 100s of English words such technology, technical, archi TECT, tactics, tect etc.

‘Ther’ is RATHA inverted, reversed . it is called mirror image of ‘rathe’

Mantra 3

O Asvins, come here.

You, HEROES made the barren cow yield milk.

The word hero is used 1000s of times in the Rig Veda. They not only called the gods heroes, but also prayed for heroic children in 100s of verses.

Here the barren cow/pasu is interpreted as rishi Sayu’s cow.

So we hear one ancient anecdote and even milk is interpreted as Soma rasa/juice.

So we see the first miracle of Asvins, world’s first TWINS here.

Mantra 4

Here Fire God Agni is described as ‘Two Mothered’.

Ancient seers rubbed two sticks and made fire – says the interpreter. 

We get so many words like this which shows Vedic Hindus were highly cultured, imaginative, poetic, eloquent and literate.

According to Sayana, the most often quoted commentator, here Wind god is described as Wanderer and Fire God as his child.

Veda is full of symbolism. Vedic Hindus were highly imaginative. They don’t say anything straight. They themselves sing in one of the hymns GODS LOVE MYSTERIOUS EXPRESSIONS. They are NOT nomadic as described by the 15 Western jokers/translators.

Here comes one word ‘triple lore’. Commentators believe that a saint come poet Kakshivan became a master of 3 things. Western commentator and translator R T Griffith says the ‘passage meaning is uncertain’. Words like ‘uncertain, obscure, not clear, inserted, interpolated, incorrect’ are found throughout Griffith’s Rig Vedic translation. He quotes at least 20 jokers / comedians/ translators of the West; we get beautiful jokes- one person describes a word as a worm, another a devil and third person it may be a deity.

Number symbolism came to Tamil during the period of Siddha poetry. But in the R V ., we see it from the very beginning to the end.

Mantra 5

‘Pushed into well, fallen into well’ – are phrases used by Vedic seers.

Rebha and Vandana are said to have been thrown into wells by the Asuras and Kanva also was thrown into well. Asvins rescued them all. In other passages we come across TRITA thrown into well. Westerners could not understand this phrase. So  they gave this phrase a racial tone. One of the jokers, WILSON, say that the ‘some of the first teachers of Hinduism tried to civilise people and they pushed them into wells. We see lot of jokes like this throughout Vedic translation.

My comments

‘Well’ is ignorance; Asvins helping some people to ‘see light’ is attaining wisdom. Later literature gives stories around this phrase.

But Asvins miracle list includes this as well.

SEA ADVENTURE

Mantra 6

This stanza contains the sea adventure, sea miracle which is quoted very often. We come across huge ships with different descriptions.

There are four anecdotes reported here. And most important of them is Asvins saving Bhujyu. He was son of Tugra and was let in the middle of the sea. At last, Asvins recued them.

This shows Vedic Hindus were great sea farers. Even before Columbus , Magellan and Captain Cook, they travelled to far off islands. It is reported in other stanzas and Ashtadhyayi of Panini and Kalidasa.

In this sixth stanza we come across Antaka, Karkandhu, Vayya who were all rescued by Asvins

Antaka was rescued by Asvins from a lake.

Vayya is referred to in RV 2-13; 4-19-6

MY COMMENTS

‘YYA’, ‘AYYA’ ending in several names show Tamil connection or influence.

Madhavayya, Ayyachchaami, Rajayya are common names

So in mantra 6, we come across four personalities with 4 miracles.

Mantra 7

Seventh mantra talks about four more people-

Asvin helped Sucanti ,Atri ,Purukutsa and Prsnigu .

Asvins gave Sucanti wealth and home.

Guarded Purukutsa and Prsnigu.

About Prsnigu and Sucanti nothing more is related.

Atri is referred to in 1-45-3 and 1-51-3  where in it is said he was thrown into a fiery pit by the Asuras .

Asuras throwing seers and poets into a well or a lake or a fire pit is strange. Asuras were described as cannibals in one hymn in the same Mandala. This shows they were barbarians. If we don’t take it literally it may mean different things.

But we have another historic anecdotes to compare it.

One of the greatest Saivite saints Appar alias Tirunavukkarasu was also thrown into fire pit by the greatest of the Pallava Kings Mahendra Varman at the instigation of bad Jains. But Appar enjoyed the burning lime kiln as a ‘cool pond in summer’ due to Lord Shiva’s grace. This is one of the miracles in the life of Appar. So it is possible that Atri also escaped from such a fiery ordeal .

Purukutsa  is referred to in RV 1-63-7.

Indra demolished seven castles in a war to gain victory for Purukutsa. So it is a historical incident.

Foreigners wrote wrong history of India and listed kings only from Buddha period- Sixth Century BCE. According them , India had NO kings from 2500 BCE, beginning of the Indus- Sarasvati Civilization.  When they have listed all the kings of Egyptian, Babylonian and Mayan Kings, they rejected 140 kings names in the Puranas. Even when I got M.A.in history from Madurai Kamaraj University in 1977 , I had to write that false history! What a shame!

Rig Veda lists lot of personalities. Most of them were kings or Priest Kings. We must include those kings and 140 generations of Solar Dynasty. Apart from this , there is Lunar dynasty as well.

About two of the above four names in the seventh mantra we do not know anything else.

There are Ten Mandalas/Books in the Rig Veda with over 1000 hymns and in those we have over 10,000 mantras!

I am dealing with only one hymn with 25 mantras.

(All the Rig Vedic verses are available free of cost in the websites; both in English and Sanskrit; I will give the full verse at the end of this essay)

To be continued ………………………….

tags- RV 1-112, History, Oldest, Historian

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ் (Post.9649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9649

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ்

Henry James

(1843 – 1916)

ஹென்றி ஜேம்ஸ் ஒரு ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர், – சிறுகதை ஆசிரியர். நியூயார்க்கில் பிறந்தார். இவரது தந்தை சமயம் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். பணம் படைத்தவர். இதனால் ஜேம்ஸ் அவர்களுக்கு விருப்பம் எதையும் செய்ய முடிந்தது.

      சிறுவயதிலேயே ஐரோப்பா சென்று வந்தார். இதனால் ஐரோப்பிய பண்பாட்டில் அவருக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் பல பள்ளிகளில் அவர் கல்வி கற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சட்டம் பயின்றார். படிப்பை முடித்த சிறிது காலத்தில் அவருடைய முதலவது நாவல் வெளிவந்தது. 30 வயதானபோது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்தார்.

      ஜேம்ஸின் படைப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

      பழைய அமைதியான ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும், புதிய முதிர்ச்சி பெறாத அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைச் சித்தரிக்கும் நாவல்கள் முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டன. “PORTRAIT OF A LADY”, “DAISY MILLER”, “THE BOSTONIANS” இவ்வகையைச் சேர்ந்தவை.

      இரண்டாவது காலகட்டத்தில் அவர் எழுதிய நாவல்கள் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. WHAT MAISIE KNEW, THE AWKWARD AGE ஆகிய நாவல்கள் இந்த காலத்தைச் சேர்ந்தவை.

மூன்றாவது காலகட்டத்தில் மீண்டும் அமெரிக்க ஆங்கிலேய மோதல்கள் முரண்பாடுகளை மையமாக வைத்து எழுதினார். “THE WINGS OF A DOVE”, THE AMBASSADORS ஆகியன இந்தக் காலத்தைச் சேர்ந்தவை.

ஜேம்ஸ் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. 1915-இல் அவர் பிரிட்டிஷ் குடிமகனானார். 1916-இல் “ORDER OF MERIT” விருது பெற்றார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags– ஆங்கில, அமெரிக்க, நாவலாசிரியர், ஹென்றி ஜேம்ஸ், Henry James,

உண்மை வைஷ்ணவன் யார்?(Post No.9648)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9648

Date uploaded in London – –  –26 May   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்!

உண்மை வைஷ்ணவன் யார்?

ச.நாகராஜன்

11 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்த ஒரு யூ டியூப் பதிவு! 124 நாடுகளில் உள்ளோர் இந்தப் பாட்டைப் பாடுவதாக அபூர்வமான காட்சி அமைப்பு உள்ளது. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அனைவரும் பார்க்க வேண்டிய அவசியமான் வீடியோ பதிவு இது. 5 நிமிடம் 44 வினாடிகள் மட்டும் ஒதுக்குங்கள் போதும்!

எந்தத் தொடுப்பில் பார்க்கலாம்? இதோ இருக்கிறது தொடுப்பு:

பாடல் என்ன பாடல்? இதோ விவரம்:-

மஹாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் அது. நரசிம் மேத்தா என்ற மகான் எழுதிய ஒரு குஜராத்தி பாடல் அது. அதில் உண்மையான வைஷ்ணவன் யார் என்பதை கவிஞர் விளக்குகிறார். பாடல் இது தான்:-

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே

ஜே பீட பராயே ஜானேரே

பரதுக்கே உபகார் கரே தோயே

மன் அபிமான் ந ஆனே ரே (வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே

நிந்தா ந கரே கேனீ ரே

வாச் கச்ச மன் நிஸ்சல ராகே

தன் தன் ஜனனீ  தேனே ரே (வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகி

பரஸ்த்ரீ ஜேனே மாத ரே

ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே

பர தன் நவ் ஜாலே ஹாத் ரே (வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே

த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே

ராம் நாம் சூன் தாலீ லாகீ

சகல தீரத் தேனா தன்மாம் ரே (வைஷ்ணவ)

வண லோபீ  நே கபட-ரஹித சே

காம க்ரோத நிவார்யா ரெ

பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா

குல் ஏகோதேர் தார்யா ரே

இதைத் தமிழில் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அழகுற மொழிபெயர்த்துத் தந்துள்ளார் இப்படி:-

வைஷ்ணவன் யார்?

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்                                                         வகுப்பேன் அதனைக் கேட்பீரே                                                                                                               பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும் அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்;

நாயக னாகிய ஸ்ரீராமன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இனி வைஷ்ணவ ஆசாரியரான நஞ்ஜீயர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அவர் எப்போதும் கூறுவது இது:- “ எந்த ஒருவனும் தன்னை உண்மையான வைஷ்ணவன் தானா என்பதை எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து எப்போது அவன் இரக்கத்தால் கிளர்ச்சியுறுகிறானோ, “ஓ” என்று கத்துகிறானோ அப்போது அவன் உண்மையான வைஷ்ணவன் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது அவனது நெஞ்சம் மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து இறுகி இருக்கிறதோ, அதைப் பார்த்து இன்புறுகிறானோ அப்போதே அவன் வைஷ்ணவன் என்ற சொல்லுக்கு உரியவருடன் சேர்ந்தவன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு வைஷ்ணவனாய் இருப்பது என்பது கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பது என்று அர்த்தம். கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பவன் என்றால் அவன் வைஷ்ணவனாய் இருக்கிறான் என்று அர்த்தம். அது அவன் எதை நம்புகிறானோ அதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான் என்று அர்த்தம். அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்பதே அந்த இலட்சியங்களுள் ஒன்றாகும்.

விடுமின் என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இது:

வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே

இதை விளக்க வருகையில் நஞ்சீயரைப் பற்றிய இந்த விஷயத்தை பகவத் விஷயம் நூல் தருகிறது.

முக்கியக் குறிப்பு: இந்தப் பாடலைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு சுவாமிநாதன் இதே ப்ளாக்கில் (www.tamilandvedas.com) எழுதியுள்ளார். கட்டுரை எண் 2133. பதிவான தேதி 7-9-2015 கட்டுரை தலைப்பு: அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

***

tags- உண்மை , வைஷ்ணவன் , கவிஞர், வெ.ராமலிங்கம் பிள்ளை, நரசிம்ம  மேத்தா

  •