சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) (Post No.15,078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,078

Date uploaded in London –   12 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-7-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION

சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) 

ச. நாகராஜன்             

உடல் பயிற்சி போல மனப் பயிற்சியும் மிக முக்கியமானது தான்! 

சிரிக்கும் மனமே சிறந்த மனம்!

அது என்ன சிரிக்கும் மனம்?

சுருக்கமாக இதை MENTAL FITNESS என்று சொல்லலாம்! 

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகச் சிறப்பாக அமையச் செய்வது தான் என்று சொல்லலாம்!

 உங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை நீங்கள் எப்படி எதிகொள்கிறீர்கள்? 

எரிச்சலுடனா? ஏமாற்றத்துடனா? கோபத்துடனா? திருப்தியுடனா? மகிழ்ச்சியுடனா?

 MENTAL FITNESS இருந்தால் எந்த நிலையையும் சிரித்த முகத்துடன் எதிர் கொள்வீர்கள். MENTAL FITNESS  என்பது சிரித்த மனதுடன் எப்போதும் இருப்பது தான்! 

இதற்கும் உடல்பயிற்சி போல மனப் பயிற்சி தேவை!

 நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் திறம்பட மனம் நோகாது எதிர்கொள்ளும் திறமை…….

முடிவுகளை எடுக்கும் போது நமக்கு பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் படைப்பாற்றல் மனமும் வேண்டும்.

 மற்றவர்களுடன் மிக அருமையான ஒரு தொடர்பை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.

 நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்வதோடு அதனால் சமுதாயத்தில் மதிப்பு மிக்க ஒரு இடத்தைப் பிடிக்கும் திறமைகளை வளர்க்க வேண்டும் 

செயல்படும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் தூங்கும் போதும்

நமது மனதையும் உடலையும் அரவணைத்துச் சிறப்பாக வைத்திப்பதற்கான திறன்கள் வேண்டும். 

MINDFULNESS என்று சொல்கிறோமே அதையும் தாண்டி ஒரு படி மேலே போய் நமக்கு இருக்கும் மனம் சம்பந்தப்பட்ட கருவிகளுடன் அவற்றைச் சரியாகச் செயல்படுத்தும் உன்னதமான ஒரு வாழ்க்கையை அமைப்பது தான் ஸ்மைலிங் மைண்ட் அதாவது MENTAL FITNESS. 

சரி, இதை எப்படி நாம் பயிற்சி செய்து மாஸ்டர் ஆவது?

இதோ வழிகள்:

 ஒவ்வொரு எண்ணமும் உண்மை என்றோ அல்லது உதவிகரமான ஒன்று என்றோ நம்பி விடாதீர்கள். 

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாற்பதினாயிரம் எண்ணங்களை நாம் எண்ணுகிறோம். எல்லாமே உண்மை அல்ல; உதவி செய்வதும் இல்லை. ஆகவே எதிர்மறை எண்ணங்களை இனம் கண்டு அவற்றின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்வி கேட்டு அலசி ஆராயுங்கள்.

 ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் சீக்கிரமே நெகடிவ் எண்ணங்களை அண்டவிடாமல் செய்து விடலாம்.

 தியானம் மனதை ஒருமுகப்படுத்தும். சிந்தனையை நல்ல விதமாகத் தூண்டும்.

 கவலைப்படும் போதோ அல்லது மன அழுத்தம் ஏற்படும் போதோ உங்கள் சிந்தனை உங்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி கடைசி எல்லைக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? உடனடியாக மனதை இந்தக் கணத்திற்கு அழைத்து விடுங்கள். ஐந்து புலன்களையும் நிகழ்காலத்தில் இருக்க வையுங்கள். மனதை ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் திருப்புங்கள்.

 சரியான திருப்திகரமான ஓய்வு மூளைக்குத் தேவை. ஓய்வு எடுத்தால்  நமது திறமை குறைவாக மதிப்பிடப்படுமோ என்று பயப்பட வேண்டாம். ஓய்வு நமது படைப்பாற்றலை மேம்படுத்தும். புத்திகூர்மையை அதிகரிக்கும். ஆற்றலைக் கூட்டும்.

 சோம்பேறித்தனத்தை உதறி சரியான ஓய்வு எடுக்க பயிற்சி தேவை.

 எத்தனை எத்தனை மெஸேஜ்கள்?எத்தனை எத்தனை சோஷியல் மீடியா அழைப்புகள்! எத்தனை தேவையற்ற யூ டியூப் காட்சிகள், மின்னஞ்சல்கள்…. இவற்றைத் துடைத்து எறிவதே ஒரு பெரிய வேலை. இதில் அன்றாட குட் மார்னிங் வேறு பலரிடமிருந்து!!!

 இவற்றைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

 அன்றாடத் தூக்கம் மிக மிக இன்றியமையாதது. ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் எழுந்து விடும் பழக்கம் மிக மிக அருமையான ஒரு பழக்கம். அது உடலையும் மனதையும் ரீ சார்ஜ் செய்யும் நேரம்.

 அன்றாடம் ஒரே மாதிரியாகச் செய்யும் சடங்குகளை விட்டு விட்டு சற்று மாற்றி புதிய வழிகளையும் தொடர்புகளையும் கொள்ளலாம்.

ஒரே ரூட்! ஒரே ஷெட்யூல்… இதைச் சற்று மாற்றுங்கள்.

 சிறிது காலப் பயிற்சிக்குப் பின்னர் உங்கள் மனம் சிரிக்கும்.

 அந்த சிரிக்கும் மனம் தான் MENTAL FITNESS!!

***

Ancient Tamil Encyclopaedia- Part 20; One Thousand Interesting Facts! -Part 20 (15,077)

Written by London Swaminathan

Post No. 15,077

Date uploaded in London –  11 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Akananuru (naanooru) wonders continued……………….

எழுத்துடை நடுகல்

Part twenty

Item 125

Interesting customs found in Akananuru:

Coastal fisher woman worshipping Vedic God Varunan by planting Shark fin bone.

Brahmins sent as messengers as told by Tolkappiar.

Women counting days by marking on the wall;

People are listening to lizard clicks to find out good and bad things to come;

Women worshipping crescent moon;

Girls making false cries to attract male youths; Tamil word Venkai stands for both  tiger and a tree. Girls shout Venaki, Venaki and the youths come running to save them; and the girls laugh at the youths; but one or two youths will be trapped by the tricky girls.

Women’s games are described in several poems: they played with crabs, chased parrots from the paddy fields; built sand castles;

Soldiers worship hero stones before going to battlefield.

Soldiers look for good omens before marching;

Brahmins who dot follow Vedic rituals make bangles by cutting conches.

Bride is bathed by Four Sumangalis who gave birth to children;

Cowherds take food/ pack lunch in bamboo holes and tie them on the neck of the cow;

Placing spear and other instruments used by a hero near the Hero stones.

Coastal people taking salt bags on the back of the donkeys for selling.

***

126

There are more interesting details ; we will look at them now:-

Three Akam poems (53, 67 and 269; also Ainkuru.352) tell us about the Hero stones with Tamil inscriptions. But until very recently such ancient stones were not discovered. So archaeologist K V Sundararajan raised doubts about the age of such poems. At that time the oldest hero stone was dated Sixth century CE. But in 2006 newspapers reported Hero stones with Brahmi letters and experts placed them in BCE period. Old Brahmi inscriptions never mentioned dates, and they were very short. And so, we need more clearcut evidence for Hero stones with Tamil inscription.

Tamils have the habit of pushing all the Brahmi inscriptions to fourth century BCE which is ridiculous. Asoka’s brahmi inscriptions are very long with lot of information, where as Tamil Brahmi inscriptions are not only very short but also in Prakrit or colloquial , ungrammatical Tamil .So they must be later than , much more later than Asoka’s inscriptions.

We know that Orissa king Kharavela marched into Pandya country and defeated the Pandya king according to Hathikumbha cave inscriptions in Orissa. On another side, Mauryans laid road routes in Western Ghats and marched towards or into Tamil Nadu according to Mamular’s Sangam verses. But in that part, that is Karnataka- Tamil Nadu border, we don’t find hero stones with inscription. From Pallava period only we get inscriptions. Jains must have brought it into Tamil nadu. That shows northern origin of Brahmi script.

Karnataka has more documented hero stones than Tamil Nadu. Nearly 3000 hero stones are in Karnataka from sixth century CE

The big question about Tamil Brahmi inscriptions is why didn’t Tamils write legibly like Asoka?

Why didn’t Tamils write at least three lines?

Why do we have to guess the meaning and put words into the mouths of dead people?

Even the very late sixth century CE ones don’t have long sentences.

My guess is Tamils did not practise writing on stones or on any material until sixth or seventh century. Even Lord Shiva’s letter to Cheraman (Kerala King) belongs to post Sangam period.

Some of the references to Hero stones with writings on it:–

விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 

எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்

அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்,- Akam 53

****

அரம் போழ் நுதிய வாளி அம்பின், 

நிரம்பா நோக்கின் நிரையங்கொண்மார்,

நெல்லி நீளிடை எல்லி மண்டி

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்  Akam- 67

***

ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது

செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய

தறுக ணாளர் நல்லிசை நிறுமார்,

பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,

நட்ட போலும் நடாஅ நெடுங்கல்

அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,

நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய- Akam 269

***

My old articles

Hero Stone Worship in North India (Post No.4286)

Date:9 October 2017; Post No. 4286

***

HERO STONES ON SEA BATTLES (Post No.5163)

Date: 29 JUNE 2018

Post No. 5163

***

To be continued………………………

Tags- Hero stones, with Inscriptions,எழுத்துடை நடுகல், Tamil Encyclopedia, Part 20

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்–10 (Post No.15,076)

 பரீக்ஷித், 

ஜெயத்ரத, 

Written by London Swaminathan

Post No. 15,076

Date uploaded in London –  11 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கிருதவர்மா

Part Ten

நேற்று வந்த படங்களின் விளக்கம்:

Wayang pictures were published yesterday ; here is the explanation

Ashwaththama –son of Dronacharya and Kripi; at the end of 18 day Mahabharata war, he along with two other commanders survived. When he wanted to take revenge, he watched crows killing owls with fire in the night; he went to the tents of Draupadi’s children and set fire to them; they all perished except Uttara’s son in the womb. Pandavas wanted to kill him but Bhisma advised them not to kill him. They took the jewel on his head to insult him; Krishna also cursed him to live for thousands of years so that he could suffer from the cruel thoughts of war and smell of flesh.

அஸ்வத்தாமா – துரோணரின் புதல்வன் ; மஹாபாரதப் போரில் தப்பிப்பிழைத்த மூன்று கெளரவர் தளபதிகளில் ஒரு  தலைவன் ; ஆந்தைகளை காகம் கொல்வதை பார்த்து, பழி தீர்க்கும் விதமாக திரவுபதியின் புதல்வர்களை இரவு நேரத்தில் தீயிட்டு அழித்தான். ஆயினும் அவன் குருவின் புதல்வர் என்பதால் உயிர்தப்பிச் செல்ல பஞ்ச பாண்டவர்கள் அனுமதித்தனர். அவன் உயிருக்கு உயிராகக் கருதிய, தலையில் இருந்த ரத்தினத்தை மட்டும் பறித்துவிட்டு, அவமானப்படுத்தி அனுப்பினார்கள் . ஆயினும் அவனுக்கு கிருஷ்ணன்  சிரஞ்சீவித்வம் கொடுத்தார்; ஆயிரக்கணக்காகன் ஆண்டுகளுக்கு யுத்தக் கொடுமைகளை நினைத்து  வாடி வதங்கக்   கொடுத்த சாபம் இது ; இந்துக்களின் ஏழு சிரஞ்சீவிகளில் அவரும் ஒருவர்.

*****

இந்திரன் 

Abhimanyu – son of Arjuna and Subhadra. At the end of 13 year forest life, he married Uttara, daughter of king of Virata. When Abimanyu was caught up in the chkra vyuha (military formation)  , he was treacherously killed by Kaurava army. At that time his wife Uttara was pregnant and Parikshit was born to them.

அபிமன்யு – அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் பிறந்த அன்பு மகன் ; பாண்டவர்களின் வனவாசம் முடியும்போது விராட தேச மன்னரின் புதல்வி உத்தராவை மணந்தான் . போரில் சக்ரவியூவுஹாத்தில் சிக்கி இறந்தான் ஆனால் அந்த நேரத்தில் உத்தரா  கர்ப்பவதியாக இருந்ததால் ஒரு பிள்ளை பிறந்தது . அவனே பரீக்ஷிதித் மகாராஜன் ஆனான்.

***

Shalya is a character in the Mahabharata, He was a powerful king from the Bahlika clan, ruling over the Madra kingdom. Although he was the brother of Madri, the wife of Pandu, Shalya sided with the Kauravas in the Kurukshetra War. Shalya was killed by the eldest Pandava, Yudhishthira.

சல்ய என்பவன் மாத்ர நாட்டைச் சேர்ந்தவன்; பாண்டுவின் மனைவியான மாத்ரியின் சகோதரனாக இருந்தபோதும் கெளரவர் தரப்பில் போரிட்டான் ; இறுதியில் யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டான்.

சாத்யகி

  பூரிச்ரவா

To be continued……………………………….

Tags-10Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்10 , Mahabharata, Shalya

இந்து மத கலைச் சொல் அகராதி- Part 2 (Post.15,075)

Written by London Swaminathan

Post No. 15,075

Date uploaded in London –  11 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Part Two

ஆங்கில எழுத்து வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது ; அதாவது ஏ , பி, சி, டி ………………. என்ற வரிசையில் சொற்கள் வரும்; WORDS ARE GIVEN IN ALPHABETICAL ORDER… A B C D

அஸ்வத்த – அரச மரம் ;  வேத காலம் முதல் இந்துக்கள் புனிதமாக வழிபடும் மரம். விஷ்ணு சஹஸ்ர   நாமத்தில் ஆலமரம், அரச மரம், அத்தி மரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன.

ASVATTA- Pipal tree, Peepul tree; Ficus Religiosa;

Hindus consider this as a holy tree from Vedic period. Along with this tree two other trees from Ficus genus (Banyan and Fig trees) are Vishnu’s names in Vishnu Sahasranama.

***

அதிதி – வேதத்தில் கடவுளின் தாயாக ADITHI வருணிக்கப்படும் பெண் தெய்வம் ; பொதுவான சம்ஸ்க்ருத அர்த்தம் – விருந்தாளி ATHITHI ;

(இரண்டும்வெவ்வேறு ஸ்பெல்லிங் உடைய ஸம்ஸ்க்ருதச்  சொற்கள்: Aditi; Athithi)

இந்துக்கள் தினமும் விருந்தாளிகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பது கடமை; தமிழிலும் ஸம்ஸ்க்ருத்த்திலும் இதைப் புகழும்  பாடல்கள் ஏராளமாக உள்ளன. அதிதி தேவோ பவஹஎன்பது வேத மந்திரம்; அதாவது மாதா, பிதா, குரு ஆகியோருக்கு அடுத்தபடியாக விருந்தினரையும் தெய்வமாகக் கருத வேண்டும். விருந்தோம்பல் என்ற தலைப்பில் பல பாடல்கள் உள்ளன.

ADITI- ATHITHI (both have different meanings)

Aditi (अदिति).—[a-diti], f. The name of a female deity, Chr. 298, 25 = [Rigveda.] 1, 112, 25; the mother of the gods, [Rāmāyaṇa] 3, 20, 15.

Aditi (अदिति).—2. [adjective] boundless, unlimited, infinite; [feminine] infinity, person, as the other of the gods.

Atithi (अतिथि) – meaning guest.

***

ஆதித்ய – சூரியனுடைய பெயர் ; இந்து மன்னர்கள் சூரியனைத் தனது பெயரில் வைத்துக்கொண்டனர் (ஆதித்த கரிகாலன்விக்ரமாதித்தன் ). பன்னிரு சூர்ய நமஸ்கார பெயர்களில் ஒன்று. (மித்ர, ரவி, சூர்ய, பானு, கக, பூஷண, ஹிரண்யகர்ப, மரீசி, ஆதித்ய, ஸவித்ர, அர்க்க, பாஸ்கர)

AADITYA- Name of Sun God; Hindu kings had sun in their names, E.g. Aditya Karikalan, Vikramadityan etc. It is one of the 12 Surya Namaskara Mantras: Mitra, Ravi, Surya, Bhanu, Khaga, Pushana, Hiranyagarbha, Marichi, Aditya, Savitra, Arka, Bhaskara are the 12 names of Sun God)

***

ஆசனம் – பொதுவான அர்த்தம் -அமரும்,  உட்காரும் பலகை , பாய் முதலியன ; யோகா அகராதியில் உடலினை,– கை, கால், தலை  முதலிய உறுப்புகளை– வெவ்வேறு வகையில் வைக்கும் முறை.

AASANAM – Yoga posture; general meaning in Sanskrit is a seat, anything to sit on. In Yoga any prescribed posture.

Some examples:  Padmaasana, Bhujangaasana, Sirssaasana

***

ஆத்மா – மனிதன் (தான்); பரமாத்மா = கடவுள், பிரம்மம் . அத்வைத சித்தாந்தப்படி இரண்டும் ஒன்றே; அதை உணராமல் தடுப்பது மாயத் திரை/ மாயை.

AATMAN- The Soul. Individual Self; In Advaita, Self is identified with Brahman/God or Paramaatman . When the Maayaa/illusion is removed it will be known.

***

ஆத்மவித்யா – உன்னையே நீ அறிவாய் என்னும் தத்துவம், கலை.

AATMAVIDHYAA- Science of the Self.

***

பலி – பொது  இடத்தில் படைக்கப்படும் சோறு ; யாகத் தீயில் போடப்படுவது ஆஹுதி; வெளியே பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் படைக்கப்படுவது பலி . கிராமக் கோவில்களில் ஆடு, கோழி முதலியவற்றைக் கொல்வதற்கும் இந்தச் சொல் பயன்படுகிறது ; இந்துக்கள் தினமும் செய்ய வேண்டிய ஐவேள்விகளில்– பஞ்ச யக்ஞங்களில் –சொல்லப்படும் பூத பலி சோறு அல்லது தானியங்கள்- படைப்பதையே குறிக்கும்.

BALI- Offering cooked rice to the birds and beasts is called Bali; part of Five Yajnas of Hindus. Hindus are supposed to offer food or water or grains to five kinds of living beings. It is called Bhuuta yajna in the Pancha Mahaa Yajnaas. When food is offered in fire it is called Aahuti. When it is offered in public places it is called Bali. Temples do this. In Village temples animals are sacrificed and that is also called Bali.

***

பஸ்மம்- பஸ்மம் என்றால் சாம்பல் என்று பொருள்; சிவனுக்குப் பிரியமான பஸ்மம் பசு மாட்டின் சாணத்திலிருந்து செய்யப்படும்; இதை விபூதி என்று அழைக்கிறோம்.

உடலில் 12 இடங்களில் இதைப் பூசிக்கொள்வது சிவனடியார்களின் மரபு; காலையிலும் மாலையிலும் குளித்துவிட்டு இதைப் பூசிக்கொள்ள வேண்டும்.

BHASMA- Ashes of cow dung are smeared on forehead and body. Devotees of Shiva apply this on 12 places on body parts. Holy ash is called Vibhuuti also. Shiva is fond of ashes.

***

பில்வம்/ வில்வம்   – வில்வம் என்பதை பிறமொழிகளில் பில்வம் என்பார்கள் ப=வ இட மாற்றம் இந்திய மொழிகளில் காணப்படும். இந்த வில்வ மரத்தின் இலைகள் ஒவ்வொரு காம்பிலும் மூன்று இதழ்களாக இருக்கும். சிவ பூஜையில் வில்வத்தைஅதிகமாக பயன்படுத்துகிறோம்

BILVA- in Tamil it is spelt Vilva; B=V are interchangeable. This tree is called Aegle marmelos. Every stem has three leaves. Some varieties have more than three leaves on a single stem. Used in the worship of Shiva

To be continued……………………….

Tags- இந்து மத கலைச் சொல் அகராதி- 2, பலி, பஸ்மம், ஆத்மா, வில்வம், அரச மரம், அஸ்வத்தம், அதிதி, ஆதித்ய

செல்வம் சேர ஒரு சின்ன வழி! காமதேனு வழிபாடு; பசுபதி தலங்கள் ஐந்து! (Post.15,074)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,074

Date uploaded in London –   11 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

14-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

செல்வம் சேர ஒரு சின்ன வழி! காமதேனு வழிபாடு பசுபதி தலங்கள் ஐந்து! 

ச. நாகராஜன் 

அனைத்து நலனும் பெற ஒரு எளிய வழி! 

செல்வம் சேரவும், வாழ்க்கையில் நமக்கு அவ்வப்பொழுது ஏற்படும் பலவிதமான தடைகள் நீங்கவும், பாவங்கள் தொலையவும் நமது முன்னோர்கள் ஒரு எளிய சிறிய வழியைக் கூறி அருளியிருக்கின்றனர்.

 அது தான் காமதேனு வழிபாடு! காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

     பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :

பசுவின் பற்களில் புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும்,  நாக்கில் சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின்  முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.

    நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும்,  லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.

   எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.

     அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”

பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது.

 பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.

 ஆகவே பசுவை வழிபட்டால் போதும் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் மட்டுமல்ல அனுபவ மொழியும் ஆகும்.

 ஐந்து பசுபதி தலங்கள்

பசுபதி தலங்கள் ஐந்து மிக்க சிறப்பு வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

அவையாவன:

1) ஆவூர் 2) நேபாளம் 3) திருக்கொண்டீஸ்வரம் 4) பந்தணைநல்லூர் 5) கருவூர்

 ஆவூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆவூர். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பசுபதீஸ்வரர். அம்மனின் நாமம் பங்கஜவல்லி மற்றும் மங்களாம்பிகா. தீர்த்தம் : காமதேனு தீர்த்தம்.

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு பிரம்மாவின் அறிவுரைப்ப்டி இங்கு வந்து வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம் இது.

திருஞானசம்பந்தர் “பூவியலும் பொழில் வாசம் வீசப் புரிகுழலார் சுவடொற்றி முற்றப் பாவியல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே” என்று பாடுகிறார்.

 நேபாளம்

நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இதைப் பற்றி விரிவாக லிங்க புராணம் எடுத்துரைக்கிறது.

சிவபிரானின் உச்சியைப் பார்க்க பிரம்மாவும் அடியைப் பார்க்க விஷ்ணுவும் முயன்ற போது பிரம்மா தான் உச்சியைப் பார்த்து அதற்கு அப்பாலும் சென்று விட்டதாக பொய் உரைத்தார். இது உண்மை தானா என விஷ்ணு தெய்வீகப்பசுவான காமதேனுவிடம் கேட்க காமதேனு அது உண்மை இல்லை என்பதைக் கூறும் விதமாக வாலை இல்லை என்று ஆட்டியது. ஆகவே அது புனிதமானதாக ஆனதோடு அனைத்துக் கோயில்களிலும் வழிபடும் இடத்தைப் பெற்றது.

 திருக்கொண்டீஸ்வரம்

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் திருக்கண்டீஸ்வரம் என்று இப்போது வழங்கப்படும் திருத்தலம் இது

இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன்பெயர் பசுபதீஸ்வரர். அம்மன் சாந்த நாயகி தீர்த்தம்: பாற்குளம் தல விருட்சம்: வில்வம்

கொண்டி என்றால் பசு என்று அர்த்தம். இங்கு அம்பாள் பசுவாகி தனது கொம்பால் உழும் போது கொம்பு பட்டு லிங்கத்திலிருந்து இரத்தம் சொறியவே தன் மடியிலிருந்து பால் சொரிந்து காயத்தைப் போக்கினார். வியாழ பகவான் சிவபிரானை வழிபட்டு பல பேறுகள் பெற்ற தலம். தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

 பந்தணைநல்லூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் என்று இப்போது வழங்கப்பட்டு வரும் இந்தத் திருத்தலம்சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடல் அருளப்பெற்ற தலமாகும்.

 இறைவன் நாமம்: பசுபதீஸ்வரர் அம்மன் நாமம்: வேணுபுஜாம்பிகா

தல விருட்சம்: சரக்கொன்றை மரம் தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

 பார்வதி தேவி ஒரு சமயம் பந்து விளையாட ஆசைப்பட, சிவபிரான் நான்கு வேதங்களையும் நான்கு பந்துகளாக ஆக்கித் தந்தார். விளையாட்டில் நேரம் போவது தெரியாமல் தேவி விளையாடிக் கொண்டே இருக்க, சூரியன் மறையாமல் இருக்க ரிஷிகள் சந்தியாவந்தனம் செய்ய முடியாமல் தவித்தனர். சூரியனிடம் அவர்கள் முறையிட சூரியன் சிவபிரானிடம் முறையிடுகிறார். இதனால் தேவியை ஒரு பசுவாகப் பிறக்கும்படி சிவன் சபிக்க, தேவி பசுவாக இங்கு வந்து வழிப்பட்ட தலமாகும் இது. இங்கு வழிபட்ட காம்போஜ தேச மன்னன் தன் குருடு நீங்கப் பெற்றான். அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த அற்புத தலம் இது.

 கருவூர் 

இறைவன் நாமம்: பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர்

அம்மன் நாமம்: சௌந்தர்யநாயகி

தல விருட்சம் வஞ்சி தீர்த்தம் தடாகை தீர்த்தம் 

வஞ்சிவனம் என்று பெயர் பெற்ற இந்தத் தலத்தில் காமதேனு அங்கு புற்றில் இருந்த லிங்கத்திற்குப் பால் சொரிந்து வழிபடவே மகிழ்வுற்ற சிவபிரான் காமதேனுவிற்கு படைக்கும் ஆற்றலைத் தந்தார். 

படைப்பாற்றலால் கர்வம் கொண்டிருந்த பிரம்மா இதனால் கர்வம் நீங்கி சிவனை வழிபடவே அவருக்கே படைப்புத் தொழிலை சிவன் மீண்டும் தந்தார். காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

பல பெருமைகளைக் கொண்ட இந்த ஊரில் தான் கருவூர்த் தேவர் அவதரித்தார். 

ஆக இந்த ஐந்து தலங்களும் பசுவின் மகிமையை உலகிற்கு உணர்த்திய தலங்களாகும். 

பசுவின் அருளைப் பெற ஒரு சின்ன வழி;  பசுபதீஸ்வரரின் வழிபாடு; அத்துடன் அகத்திக்கீரையை பசுவிற்குக் கொடுத்து வழிபட்டால் சகல தடைகளும் நீங்கும். காரிய சித்தி உண்டாகும்.

கன்றுடன் இருக்கும் காமதேனுவின் படத்தை அதில் உள்ளிருக்கும் தேவர்களுடன் கூடிய சித்திரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

சின்ன வழி தான்! ஆனால் செல்வம் சேரும் வழியாயிற்றே!!

**

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-9 (Post.15,073)

Written by London Swaminathan

Post No. 15,073

Date uploaded in London –  10 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx    

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-9

WAYANG is a puppet show performed in Indonesia for over two thousand years. Accompanied with music, Ramayana and Mahabharata stories are told. Though Indonesia is the largest Muslim country in the world, Hindu culture is respected by all.

Here are characters from the Mahabharata :

BALARAMA is brother of Krishna and son of rohini. He married Revati, daughter of king Raivata.

Balarama helped Krishna to abduct Rukmini and marry her. But he objected when Arjuna abducted Subhadra, but he was calmed down by Krishna.

He was short tempered and killed rishi Romaharshana,  disciple of Veda Vyasa. He went on a pilgrimage during Mahabharata war to atone for his action. He always carried a plough on his shoulder. He spread agriculture throughout India. He disliked wars. So, he maintained neutrality in the war and went away from Kurukshetra, but came on the final day. Again he objected to Krishna  when Bhima killed Duryodhana violating the rules of fighting; his objection was  Bhima hitting Duryodhana below the belt. But again, Krishna calmed him down. Balarama wore blue silk garment and Krishna wore yellow colour garment . Balarama wore ornament in only one ear which was sung by Sangam Tami poets.

இந்தோனேஷியா உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு ; ஆனாலும் இந்து கலாசாரத்தில் மூழ்கிப்போன நாடு; ஆகையால் ராமாயணமும் மஹாபாரதமும் பல்வேறு நாடகங்களாக நடந்த வண்ணம் உள்ளது வயங் என்பது பொம்மலாட்டம் ஆகும்; நல்ல இசையுடன் ராமாயண மஹாபாரதக் கதைகளை விளக்குவார்கள். ஒவ்வொரு மஹாபாரத கதா பாத்திரத்தையும் அவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

பலராமன்  கிருஷ்ணாநின் சகோதரர் ; ரோகிணியின் மகன்.  அவர் ரைவதன் புதல்வியான ரேவதியை மணந்தார் ; கொஞ்சம் முன்கோபக்காரர்; ருக்மிணியை கடத்தி வந்து திருமணம் செய்ய கிருஷ்ணனுக்கு உதவினார்; ஆனால் அர்ஜுனன் சுபத்ராவைக்க கடத்தி வந்து மணம்புரிய ஆட்சேபம் தெரிவித்தார். கிருஷ்னன் சமாதானம் செய்யவே கோபம் அடங்கியது. ஒரு முறை தவறுதலாக கோபத்தில் வியாசரின் சீடரான ரோமஹர்ஷ ரிஷியைக் கொன்றுவிட்டார்.

பொதுவாக யுத்தத்தை விரும்பாதவர்; ஆகையால் ரிஷியைக் கொன்ற பாவத்தை அகற்ற புனித யாத்திரை மேற்கொள்தாககக் கூறி புறப்பட்டுவிட்டார்

தோளில் உழுகலனை ஏந்திச் சென்று நாடு முழுதும் விவசாயத்தைப் பரப்பினார்

இவர், ஒரு காதில் அணிகலம் அணிந்திருப்பதை சங்கத் புலவர்கள் பாடியள்ளனர்.

பலராமன் நீல வண்ண சில்க் ஆடையையும் கிருஷ்ணன் மஞ்சள் வண்ண ஆடையையும் அணிவதால் நீலாம்பரன் பீதாம்பரன் என்று இருவரும் அழைக்கப்பட்டனர்.

கிருஷ்ணா

அபிமன்யு 

, அஸ்வத்தாமா,

 சல்யன் 

To be continued………………………..

Tags- Wayang, Mahabharata, Indonesia , Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-9, மஹாபாரதம் , வயங், பொம்மலாட்டம்,  இந்தோனேஷியா

TIRUKKURAL CALENDAR, YEAR 1915; FROM BRITISH LIBRARY, LONDON.

TIRUKKURAL CALENDAR, YEAR 1915; FROM BRITISH LIBRARY, LONDON.

POSTED BY LONDON SWAMINATHAN ON 10-10-2025.

–SUBHAM–

TAGS- KURAL CALENDAR, YEAR 1915.

GNANAMAYAM 12th October 2025 BROADCAST PROGRAMME SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

MRS Brhannayaki Sathyanarayanan  from Bengaluru speaks on

THERAZUNDUR TEMPLE

****

SPECIAL EVENT-

Talk on Periyapuranam

By

Sri T R RAMESH,

President of Temple Worshippers Association

(Son of ‘ Sekkizar Adippodi’  Dr T N Ramachandran )

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 12 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்

வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு– தலைப்பு  தேரழுந்தூர் தலம்கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரிய புராணத் சொற்பொழிவுத் தொடர்:

பேசுனர் – திரு T R  ரமேஷ் அவர்கள்,

(சேக்கிழார் அடிப் பொடி டாக்டர் T N  ராமச்சந்திரன் அவர்களின் புதல்வர்)

ஆலயம் செல்லுவோர் சங்கத் தலைவர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 12-10- 2025, programme,

வாழ்க்கையில் முன்னேற Backward Law தெரிந்து கொள்ளுங்கள்! (Post.15,071)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,071

Date uploaded in London –   10 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

23-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION

வாழ்க்கையில் முன்னேற Backward Law தெரிந்து கொள்ளுங்கள்! 

ச. நாகராஜன் 

மடாலய குரு வெட்டிய மரம் 

தி விஸ்டம் ஆஃப் இன்செக்யூரிடி (The Wisdom of Insecurity) என்ற தனது நூலில் பிரபல தத்துவ ஞானி ஆலன் வாட்ஸ் (Alan Watts) ஒரு சிறிய சம்பவத்தை நகைச்சுவையாகக் கூறுகிறார்.

அது இது தான்:

ஒரு மடாலயத்தின் தலைமை குருவுக்கு அடுத்த நிலையில் இருந்த கின்யோ என்பவருக்கு ரியோகேகு என்ற சகோதரர் இருந்தார். அவர் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுபவர்.

மடாலயத்தின் பக்கத்தில் அதிகமாக நாற்றம் அடிக்கும் ஒரு நெட்டில் மரம் (Nettle Tree) இருந்தது. அனைவரும் ரியோகேகுவைக் குறிப்பிடும் போது நெட்டில் ட்ரீ குரு (நாத்தம் பிடிச்ச குரு) என்று அழைக்க ஆரம்பித்தனர் –அவரது குணத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில்! 

இந்தப் பட்டப் பெயரால் பெரிதும் கோபமுற்ற அந்த குரு அந்த மரத்தை வெட்டி விட்டார். 

அடி மரம் மட்டும் இருந்தது.

 இனி அப்படிக் கூப்பிட மாட்டார்கள் என்று குரு எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது அனைவரும் அவரை ‘அடிமர குரு’ என்று பொருள்படும் ‘ஸ்டம்ப் குரு’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

முன்னை விட இது மோசமாக இருக்கிறதே என்று எண்ணிய குரு இப்போது அடிமரத்தையும் வெட்டித் தூக்கி எறிந்தார்.

 குழி மட்டும் இருந்தது. இப்போது அனைவரும் அவரை ‘சாக்கடை குரு’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

குரு நொந்து போனார்.

 ஆலன் வாட்ஸின் விதி 

இந்த சம்பவத்தை விவரிக்கும் ஆலன் வாட்ஸ், இது தான் ‘பேக்வேர்ட் லா’ என்று கூறுகிறார்.

அதாவது ஒரு செயலில் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிர் மாறாக நடப்பது பேக்வேர்ட் லா – பேக்வேர்ட் விதி எனக் கூறப்படுகிறது.

 இதை ஒரு உதாரணம் மூலம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

 ஒரு நீச்சல்குளத்தில் தண்ணீர் மீது நீங்கள் மிதக்க விரும்பி அதிக முயற்சி செய்தால் நீங்கள் குளத்தில் அமிழ்ந்து போவீர்கள். ஆனால் நீங்கள் மூழ்க ஆரம்பிக்க முயற்சித்தால் நீங்கள் மிதக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் மூச்சை நீங்கள் நிறுத்தினால் மூச்சே இல்லாமல் போய்விடும். அதன் போக்கில் விட்டால் மூச்சு நிதானமாக வரும்.

 ஆலன் வாட்ஸின் விதி கூறுவது இது தான்:

நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் முதலில் உங்கள் படுக்கையைத் தயார் செய்யுங்கள்” – என்கிறார் அவர்.

இதன் பொருள் என்ன? கடைசி படியை முதலில் செய்யுங்கள் மற்றவை எல்லாம் தானே சரியாகி உங்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும் என்பது தான்.

 கடற்படை சோதனை

கடற்படையில் சேர விரும்புவோர்க்கு நீரில் மூழ்காமல் இருக்கும் பயிற்சி ஒன்று, சோதனையாக தரப்படுகிறது. இதன் பெயர் ‘DROWN PROOF’ சோதனை!

கையையும் காலையும் கட்டி நீரில் போட்டபோது ஐந்து நிமிடம் அப்படியே இருந்து நீரில் மூழ்காமல் இருக்க வேண்டும்.

இது முடியுமா? பலர் ஓவென்று அலறி உடனேயே தங்களை வெளியில் தூக்குமாறு சத்தம் போடுவார்கள்.

சிலரோ கையையும் காலையையும் வேக வேகமாக உதறுவார்கள். ஆனால் அந்த உதறலே அவர்களை நீரில் மூழ்க அடிக்கும்.

மூச்சைப் பிடித்து நிறுத்த விரும்புவோரோ அதிக ஆக்ஸிஜனை இழந்து மூச்சு விடுவதில் சிரமப்படுவர்.

 நிதானமாக இருப்பவர்கள் தங்களை நீரில் மூழ்கும் படி விட்டு விடுவர். நீரின் ஆழத்தில் சென்றவர்கள் தானே மேலே வருவர். அப்போது மூச்சை நன்கு விடுவர்.

இது உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவரா நீங்கள் என்பதைப் பார்க்கவும் இந்த ட்ரவுன்- புரூபிங் (DROWN PROOFING) சோதனை நடத்தப்படுகிறது.

 பேக்வேர்ட் லாவுக்குச் சிறந்த உதாரணம் இந்த சோதனை தான்!

 இனிமேல் பேக்வேர்ட் லாவைக் கடைப்பிடிப்போமா, நண்பர்களே!

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி -Part 1 (Post.15,072)

Aahuti in Homa Kunda, London Highgate Murugan Temple

இந்துமத கலைச்சொல் அகராதி -Part 1 (Post.15,072)

Written by London Swaminathan

Post No. 15,072

Date uploaded in London –  10 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அபிஷேகம் – இறைவனுக்கோ பெரியோருக்கோ தண்ணீர் அல்லது பால் அல்லது சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களைக் கொண்டு குளிப்பாட்டுதல் ; கோவில்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சிலைகளுக்கும் விக்கிரகங்களுக்கும் இது நடைபெறும்  . வயதில் மூத்தவர்கள் 80 அல்லது 100 வயதைக்கொண்டாடும் போது தங்கக் காசுகளைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் கனகாபிஷேகம்;  கனகம்  என்றால் தங்கம்.

ABHISHEKAM- Bathing a deity or a guru or idols in the temple; occasionally done to elders with gold coins and it is called Kanakaabishekam .


***

ஆசாரம்  – பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஒழுங்கு முறை விதிகள் ; குறிப்பாக பழங்கால  சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றுதல்

AACHAARAM  -orthodox codes and practises of a religious group or matters of custom and tradition that serve as a general discipline.

****

அபிவாதனம் – குரு அல்லது வீட்டிற்கு வரும் பெரியார்களை மந்திரம் வாயிலாக குலம், கோத்திரம் சொல்லி வணங்குதல் /வழி படுதல் . குனிந்து இரு கைகளையும் காதில் வைத்துக்கொண்டு எந்த ரிஷி, எந்த வேதத்தைப் பின்பற்றுபவர் என்று பிராமணர்கள் அறிவிப்பார்கள் ; சன்யாசிகளுக்கு இதைச் சொல்லக்கூடாது; அவர்களுக்கு குலம், கோத்திரம் பற்றி அக்கறை கிடையாது; அவருக்கு முன்னால் எல்லோரும் இறைவனின் குழந்தைகள்.

ABHIVAADANAM – Reverential salutation of a superior like an elder or a Guru.  Brahmins do this by placing their hands on ears, bowing down reciting mantras which reveal their Gotra and the branch of Veda they follow.  No one do this with mantra to an ascetic like Shankaracharya or Swamiji, because they are not interested in knowing any one’s clan or caste. All are equal before them.

***

அத்யயன – வேதத்தை முறையாகப் பயிலுதல்; ஒரு குருவிடமிருந்து வாய்மொழி மூலமாகக் கேட்டுத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்தல் ; எந்த வேதம் என்பதைத் தேர்ந்தெடுத்து அதைப் பயில்வர் ; இரண்டு வேதங்களை அறிந்தவர் த்வி வேதி ; மூன்று- திரிவேதி ; நான்கு வேதம்- சதுர்வேதி;  தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த அதங்கோட்டு ஆசார்யர் சதுர்வேதி- நான்மறை முற்றிய- என்பது பனப்பாரானார் வாக்கு  

ADHYAYANA – learning the Vedas orally from a Guru; chanting them regularly; one of the Six Duties of a Brahmin. Normally a boy goes to Guru’s residence or school and learn it. they memorise it.  If one masters  two Vedas he is called Dwivedi; three- Trivedi; Four- Chaturvedi. Oldest Tamil books Tolkaappiam was approved by a Chaturvedi of Thiruvithaankodu.

***

அத்வைதம் – ஆதி சங்கரர் பிரசாரம் செய்த தத்துவம். இறைவனும் மனிதனின் ஆத்மாவும் இரண்டல்ல; ஒன்றே என்னும் தத்துவம்; அஹம் பிரம்மாஸ்மி = நானே  பிரம்மம்; தத் த்வம் அசி- நீ அதுவாக இருக்கிறாய் என்பன முக்கிய வாக்கியங்கள். இரண்டாக நினைப்பது மாயம்.

ADVAITA – Monism; Doctrine of Non-Duality preached by Adi Shankara; the doctrine that declares that there is but, One Reality; that the individual Self and the Brahman are one. The concept of Aham Brahmaasmi= I am Brahman or Tat Tvam Asi= You are That.

(Please note Brahman, Braahmin and Brahmaa are three different words)

***

ஆச்சார்யார்  – ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு குருவாக விளங்குபவர் .உ.ம் சங்கராச்சார்யார்.

ACHARYA – Spiritual Guru, mentor (Shankaracharya – Saivite Guru; Vaishnava Acharya – Guru for Vaishnavites.

***

ஆகமம் –சைவ அல்லது வைணவ கோவில்களை நிர்மாணிக்கும் முறை , விக்கிரகங்களை பிரதிஷட்டை செய்யும் முறை ; அவைகளின் உருவம், சடங்குகள், விழாக்கள் , கும்பாபிஷேகம் , யாக யக்ஞங்களைச் செய்வது முதலியனவற்றை  விளக்கும் புனித நூல்கள்.

AAGAMA- traditional doctrine; science of knowledge; the aagama saasrtraas deal with the rituals, iconography, the construction of temples, yantras, festivals and daily rituals to be followed in temples.

***

அஹம்காரம் – நான் என்னும் செருக்கு ; சம்ஸ்க்ருதத்தில் அஹம் என்றால் நான் ; தமிழில் அகந்தை; மம என்றால் என்னுடைய ; தமிழில் மமதை என்போம்; அதாவது மமகாரம். இது இரண்டும் அகன்றால் இறைவனடியைச் சேரலாம் என்பார் வள்ளுவர்; அதாவது கீதை முதலிய இந்து சமய நூல்கள் சொன்னதை அப்படியே மொழிபெயர்த்து இருக்கிறார்:-

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்.- குறள் 346

 His is the world beyond heaven

Who is free of the delusion of ‘I’ and ‘Mine’.

AHAMKAARAM- Ego sense; I feeling; Self conceit .

Mamakaaram _ feeling of Mine, my-ness.

Tamil poet Tiru Valluvar  says ,

His is the world beyond heaven

Who is free of the delusion of ‘I’ and ‘Mine’- Kurl 346.

***

அக்ரஹாரம் – பிராமணர் தெரு அல்லது பேட்டை; மன்னர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த நிலம் பிரம்மதேயம் என்றும் கோவில்களுக்கு கொடுத்த நிலம், சொத்து தேவதானம் என்றும் அழைக்கப்படும். தமிழில் உள்ள பல்லாயிரம் கல்வெட்டுகள் இவை பற்றியே பேசுகின்றன

AGRAHAARAM- Brahmin’s street or area where Brahmins reside. Most of the Tamil inscriptions give us information of kings donating to Brahmins and it is called Brahmadeyam; Kings donated more to temples which is called Devadhaanam

***

ஐராவதம் – இந்திரனின் யானை

Airaavata- Elephant of Indra .

***

அபிசாரம் – எதிரிகளுக்கு தீமையை உண்டாக்கும் கிரியைகள் ; பேய் ஓட்டுதல் ; மந்திரம் மற்றும் சடங்குகள் மூலம் கெடுதி செய்தல்; அதர்வண வேதத்தில் அத்தகைய மந்திரங்கள் உண்டு

ABICAARA- Exorcism; Practice of black magic; Using spells with an evil intent. Atharvana Veda has such spells .

***

அபரக்ரியை – இறந்தவர்களுக்குச் செய்யும் கிரியைகள்.

APARA KRIYAI- Funeral Rites

***

அஞ்ஞானம் / அவித்யா – அறியாமை 

AVIDHYAA/AJNAANA- Ignorance, nescience.

***

அக்ஷதை – மஞ்சள் தடவிய அரிசி (நல்ல காரியங்களுக்கு)வேறு காரியங்களுக்கு வெறும் அரிசி .

Aksataa – Rice mixed with turmeric powder for all auspicious deeds; just white rice for other rites; unbroken full rice, raw rice used for both

***

அங்கம்  – உறுப்புபகுதி,

வேதாங்கம்- வேதத்திற்குத் துணைபோகும் ஆறு பாடங்கள்; இவைகளைப் படித்தால்தான் வேத இலக்கியங்களின் உண்மைப்பொருள் விளங்கும்

வேதாங்கம் – ஷடங்கம் என்றும் சொல்லுவார்கள் – சடங்கு என்ற சொல் இதிலிருந்து பிறந்ததே;  ஷட் என்றால் எண் ஆறு ; அவையாவன – சிக்ஷை, வியாகரணம், சந்தஸ் , ஜோதிஷம், நிருக்தம், கல்பம்..

இவை இலக்கணம், வேத உச்சரிப்பு, சொற்பிறப்பு இயல், தர்க்கம், வான சாஸ்திரம் முதலிய பாடங்கள் ஆகும்.

ANGAS/VEDANGAS – Six subjects are taught to Vedic Students- they are Siksha, Nirukta, Kalpa, Jyothisha, Vyaakarana, Chandas. These are ancillary subjects taught in the Vedic schools called Guru kul/am. They will help one to understand Vedic literature. They are about grammar, logic, etymology, astronomy, phonetics and prosody.

***

அந்தக்கரணம் – மனம் புத்தி, ஆன்மா ; உணர்ச்சி பிறக்கும் இடங்கள், மனச் சாட்சி

ANTAH-KARANA – Internal organs or faculties; the mind, the intellect, consciousness and ego; according to another reckoning, the heart, soul, the seat of thought and feelings, the mind and conscience.

***

அப்சரஸ் – தேவலோக அழகிகள்; ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா என்போர் முக்கியமானவர்கள் ; முனிவர்களின் கடும் தவத்தைக் கலைக்க, இறைவன் இவர்களை சோதனைக்கு அனுப்புவான்; காம வயப்பட்ட ரிஷிகள் தவம் கலைந்து நிலை தடுமாறுவர்; அதனால் புலன்களை வென்றவனே வீரன் என்பார் அவ்வையார்.

APSARAS- Celestial damsels; Rambhaa, Menakaa, Uurvasii, Tilottamaa are popular damsels. Celestials send them to the sages to distract the sages from their ascetic endeavours .

***

அர்க்யம் – ரிஷிகளுக்கும், இறைவனுக்கும், இறந்து போன முன்னோர்களுக்கும் செலுத்தப்படும் தண்ணீர் சடங்கு பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்யும்போது தண்ணீரால் அர்க்யம் கொடுப்பார்கள்.

ARGYAM – Libation to the Seers/rishis, Gods and departed souls. Brahmins do this thrice a day in their daily Sandhyaavandanam.

****

அஷ்டாக்ஷரீ – வைணவர்களின் எடடெழுத்து மந்திரம் ; ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரத்தை பொதுமக்கள் எல்லோருக்கும் கோபுரத்தின் உச்சியிலிருந்து பகிரங்கமாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர் ராமானுஜர்.

ASHTAKSHARI- An Eight Syllable Mantra- Om Namo Naaraayanaa. Sri Ramanuja publicly announced it from the top of a temple tower for the benefit of all people.

****

அஸ்வமேதம்

அஸ்வமேதம் – ஒரு குதிரையை பல நாடுகளுக்கு அனுப்பி இறுதியில் குதிரையை பலியிடும் யாகம். அந்தக் குதிரையை எந்த நாட்டுப் படைகளாவது தடுத்து நிறுத்தினால் அதை அனுப்பிய மன்னன் போரிடுவான் ; இதைச் செய்த மன்னர்கள் ஸார்வ பெளமன் என்று அழைக்கப்படுவார்கள் அதாவது ஒரு குடைக்கீழ் உலகாண்ட மன்னர்கள்.

ASVAMEDHA- Horse sacrifice performed by an imperial ruler or a Saarva bhauma, literally Universal Ruler. A horse will be sent to travel through several adjoining countries with an army. Those who challenge it will have to fight the Imperial ruler.

***

அஸ்திரம்

அஸ்திரம் – மந்திர சக்தியால் ஏவப்படும் ஆயுதங்கள்; இதுவரை இதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை; இவைகளில் பல வகை உண்டு ; இந்துக்களில் தேவர்களும் இராட்சதர்களும் இந்த மந்திர ஆயுதத்தைப் பிரயோகித்தனர்  

ASTRA- A weapon energised by a Mantra; There are different types; both Devas and Rakshasas used such weapons.

***

ஆரத்தி

ஆரத்தி- பூஜையின் அல்லது வழிபாட்டின் முடிவில் தெய்வத்துக்கு தீபங்கள் அல்லது நெய் விளக்கு அல்லது சூடத்தை ஏற்றிக் காண்பித்து வழிபாட்டினை முடித்துவைக்கும் நிகழ்ச்சி. தென் இந்திய கோவில்களில் பலவகைத் தீபங்கள் காட்டப்படும் வடக்கில் ஒரே தீபத்தைக் காட்டி அதற்கான பாடலைப் பாடுவார்கள்; எல்லோரும் சேர்ந்து அந்தத் துதியை இசைப்பார்கள்; கோவில்களில், தீபாராதனைமஹா தீபாராதனை என்றும்  சொல்லுவார்கள்

Aarti or Aarati- It marks the conclusion of a ceremony, worship. The priests or the performers present lights or lamps to the deity. In Temples they show ghee lamps or lighted camphor. Usually accompanied with special hymn or song in which all joins.

***

 ஆஹுதி- யாகம்  அல்லது ஹோம அக்கினியில் இறைவனுக்கான பொருள்களைப் போடுதல்; முடிவில் முக்கியப்பொருட்களை அக்கினியில் சமர்ப்பிப்பது பூர்ண ஆஹுதி எனப்படும்.

Aahuti- Oblation made in the Sacrificial Fire. Final ceremony is called Poorna Aahuti.

***

ஆசீர்வாதம் – வயது குறைந்தோருக்கு பெற்றோர்களும் சாது, சன்யாசிகளும், பெரியோர்களும் வழங்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மையாவர்கள் இப்படி ஆசி வழங்கினால் அது அப்படியே பலிக்கும் . பொதுவாக பதினாறு பேறுகளை பெறும்படி வாழ்த்துவார்கள். திருமணமான பெண்கள் ஆனால் தீர்க்க சுமங்கலி பவஹ என்று வாழ்த்துவார்கள் ; பொதுவான வாழ்த்து தனம், தான்யம், பஹுபுத்ர லாபம், ஆயுள்,  ஆரோக்கியம் பெறுக என்பதாகும்

AASEERVAATHAM- Blessings; normally elders bless the youngsters; they bless them to get sixteen types of good things or in general good health, long life, wealth, plenty of food and happiness. If married women seek blessings, they wish them long married life. If a person has purity in thought, word and deed, the blessings will come true.

***

ஆஸ்ரமம்

ஆஸ்ரமம் – இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு ; முனிவர்கள் தங்கும் கானக விடுதிகளுக்கு ஆசிரமம் என்று பெயர் ; ஊருக்கு வெளியே இவைகள் இருக்கும்; தற்காலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள சில சாது சந்நியாசி மடங்களும் இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளன. புதுவை அரவிந்தஆஸ்ரமம் , திருவண்ணாமலை ரமண ஆஸ்ரமம் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமம் .

மனிதனின் 4 வகையான வாழ்க்கைப் பிரிவுகளுக்கும் ஆச்ரமம் பொருந்தும். பிரம்மச்சர்யம், கிரஹஸ்தாச்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்பன அவை.

AASHRAM -Ashram – HERMITAGE; Example- Aurobindo ashram,  Pondicherry , Sivananda Ashram (Headquarters of The Divine Life Society), Rishikesh, Himalayas, India. Ramanaashram in Tiruvannamalai .

Another meaning- One of the Four Stages in life, these being Brahmacharyaasrama, Grhastaasrama, Vaanapprastha, and Sanyaasa.

Aasrma Dharma denotes the codes of conduct and duties for each of these stages in life; they are found in Smritis, Law Books of Hindus.

***

ஆதீனம்ஆதீனகர்த்தர்

ஆதீனம்ஆதீனகர்த்தர் : சைவ சமயத்தைப் பரப்புவதற்காக நிறுவப்பட்ட துறவிகளின் மடம்; அதன் தலைவர் ஆதீனகர்த்தர் ; பொதுவாக பிராமணர் அல்லாதோர் இவைகளின் தலைவராக இருக்கிறார்கள்  ; புகப்பெற்ற ஆதீனங்கள்: தர்மபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, பேரூர், மதுரை ஆதீனம் முதலியன; இவைகள் பல நூற்றாண்டுகள் வரலாறு உடையவை.

AADINAM Aadheenam –

Religious establishment managed by ascetics for the propagation of Saivism.

Examples- Dharmpuram, Tiruvavduthurai, Tiruppanandal, Madurai, Perur Aadhiinams. They are several centuries old.

The head of an Aadhiinam is called Aadhinakarthar ; generally headed by a non-brahmin ascetic.

To be continued……………………….

Tags- இந்துமத கலைச்சொல் அகராதி -Part 1, அபிஷேகம், அஸ்திரம், ஆரத்தி, அஸ்வமேதம் ,ஆசீர்வாதம், Hindu Dictionary part one