
Written by S Nagarajan
Post No.7531
Date uploaded in London – – 4 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே பாரதத்தில் உலவிய பெரும் அவதார புருஷரான ஆதி சங்கரர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை.
அவற்றில் உள்ள உபதேச அருளுரைகளும், உண்மைகளும் இரகசிய விளக்கங்களும் எண்ணற்றவை.
அவரது நூல் பட்டியல் இதோ:

Bhashya Granthas: 1. Brahma Sutras 2. Isavasya Upanishad 3. Kena Upanishad 4. Katha Upanishad 5. Prasna Upanishad 6. Mundaka Upanishad 7. Mandukya Upanishad 8. Mandukya Karida 9. Aitareya Upanishad 10. Taittireeya Upanishad 11. Chhandogya Upanishad 12. Brihad Aranyaka Upanishad 13. Sree Nrisimha Taapaneeya Upanishad 14. Sreemad Bhagawad Geeta 15. Sree Vishnu Sahasranama 16. Sanat Sujateeyam 17. Lalita Tri-satee 18. Hastaamalakeeyam Compiled by S Nagarajan, tamilandvedas.com, swamiindology.blogspot.com Prakarana Granthas: 19. Viveka Chudamani 20. Aparokshanubhooti 21. Upadesa Sahasri 22. Vaakya Vritti 23. Swaatma Niroopanam 24. Atma-bodha 25. Sarva Vedanta Sara Samgraha 26. Prabodha Sudhakaram 27. Swaatma Prakasika 28. Advaita anubhooti 29. Brahma anuchintanam 30. Prashnouttara Ratnamaalika 31. Sadachara anusandhanam 32. Yaga Taravali 33. Anatmasree Vigarhanam 34. Swaroopa anusandhanam 35. Pancheekaranam 36. Tattwa bodha 37. Prouda anubhooti 38. Brahma Jnanavali 39. Laghu Vakyavritti 40. Bhaja Govindam 41. Prapancha Saaram Hymns and Meditation Verses: 42. Sri Ganesa Pancharatnam 43. Ganesa Bhujangam 44. Subrahmanya Bhujangam 45. Siva Bhujangam 46. Devi Bhujangam 47. Bhavani Bhujangam 48. Sree Rama Bhujangam 49. Vishnu Bhujangam 50. Sarada Bhujangam 51. Sivananda Lahari 52. Soundarya Lahari 53. Ananda Lahari 54. Sivapaadaadi kesaanta varnana 55. Siva kesaadi padaanta varnana 56. Sree Vishnu-paadaadi-kesanta 57. Uma maheswara Stotram 58. Tripurasundari Vedapada Stotram 59. Tripurasundari Manasapooja 60. Tripurasundari Ashtakam 61. Devi shashti upachara-pooja 62. Mantra matruka Pushpamaala 63. Kanakadhara Stotram 64. Annapoorna Stotram 65. Ardhanareshwara Stotram 66. Bhramanaamba Ashtakam 67. Meenakshi Stotram 68. Meenakshi Pancharatnam 69. Gouri Dasakam 70. Navaratna Malika 71. Kalyana Vrishtistavam 72. Lalitha Pancharatnam 73. Maaya Panchakam 74. Suvarna Mala Stuti 75. Dasa Sloki 76. Veda Sara Siva Stotram 77. Siva Panchaakshara Stotram 78. Sivaaparadha Kshamapana 79. Dakshinamoorthy Ashtakam 80. Dakshinamoorthy Varnamala 81. Mrutyunjaya Manasa Pooja Stotram 82. Siva Namavali Ashtakam 83. Kaala Bhairava Ashtakam 84. Shatpadee Stotram 85. Siva Panchakshara Nakshatra Mala 86. Dwadasa Ling Stotram 87. Kasi Panchakam 88. Hanumat Pancharatnam 89. Lakshmi-Nrisimha Pancharatnam 90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram 91. Panduranga Ashtakam 92. Achyuta Ashtakam 93. Sree Krishna Ashtakam 94. Hari Stuti 95. Govinda Ashtakam 96. Bhagavat Manasa Pooja 97. Praata Smarana Stotram 98. Jagannatha Ashtakam 99. Guruvashtakam 100. Narmada Ashtakam 101. Yamuna Ashtakam 102. Ganga Ashtakam 103. Manikarnika Ashtakam 104. Nirguna Manasa Pooja 105. Eka Sloki 106. Yati Panchakam 107. Jeevan Mukta Ananda Lahari 108. Dhanya Ashtakam 109. Upadesa (Sadhna) Panchakam 110. Sata Sloki 111. Maneesha Panchakam 112. Advaita Pancharatnam 113. Nirvana Shatakam 114. Devyaparadhakshamapana Stotram ![]() ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார். சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர். சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம். இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம். ![]() Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள், Adi Shankara Hymns |