28 வயதில் இறந்த சங்கீத மாமேதை- 1 (Post No.6368)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 May 2019
British Summer Time uploaded in London – 13-
42

Post No. 6368

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

வெண்கலக் குரலில் பாடிய எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடலை அறியாத சங்கீத ரஸிகர்கள் இருக்க மாட்டார்கள். கருப்பு- வெள்ளை திரைப்படங்களிலும், அந்தக் கால கச்சேரிக்ளிலும் தூள் கிலப்பிய மேதை. ஆனால் குடிபோதையால் அவர் வாழ்வு 28 வயதில் முடிந்தது. இதோ அந்த சோகக்கதை- பிரிட்டிஷ் லைப்ரரியில் அவரது வாழ்க்கையை படித்தவுடன் அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே எழுந்தது. ஏனெனில் நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் அவரது ‘மஹா சுகிர்த ரூப சுந்தரி’ , ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை’…………………….பாடல்களைக் கேட்டு திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே (முனுமுனுத்துக் கொண்டே) இருப்போம்.

கிட்டப்பா நூலாசிரியர் – ஆக்கூர் அனந்தாச்சாரி, அவருடைய நண்பர்

புல்லட் பாயின்ட்ஸ் S G Kittappa’s  Biography in Bullet Points

தெய்வம் யாரிடத்தில் அன்பு காட்டுகிறதோ அவர்களுக்கு ஆயுள் குறைவு– கிரேக்க நாட்டுப் பழமொழி

முழுப்பெயர்- செங்கோட்டை கங்காதர ஐயர் கிட்டப்பா

பிறந்த ஊர்- செங்கோட்டை

தாயார்-மீனாட்சி அம்மாள்

தந்தை- கங்காதர ஐயர்

பிறந்தபோது இட்ட பெயர்- ராம கிருஷ்ணன்

தாத்தா பெயர்- கைலாசமய்யர்

பாட்டி பெயர் சுப்புலக்ஷ்மி

அஷ்டஸ்ஹஸ்ரம்; கௌசிக கோத்ரம்

கைலாசமய்யருக்கு 7 ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள்; அவர்களில் ராமகிருஷ்ணன் என்னும் கிட்டப்பா ஒருவர்.

கிட்டப்பா பிறந்தது ஆகஸ்ட் 25, 1906; விசாக நக்ஷத்திரம்

படிப்பு கிடையாது; பணம் இல்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை.

கோலி விளையாட்டில் கில்லாடி.

ஆறு வயதில் சங்கரதாஸ் நாடகக் குழுவில் முதல் நடிப்பு;

ஏழு வயதில் தென்னாடெங்கும் விஜயம்.

திருநெல்வேலியில் தாம்பரபரணி நதியில் விழுந்தபோது நடந்த அதிசயம்.

கொழும்பு நகருக்குப் பயணம்

கன்னையா நாடகக் கம்பெனியில் சேருதல்

வள்ளி திருமணன்; நாரதர் வேடம்

விஷ்ணு திகம்பர் பரவசம்; ஆசீர்வாதம்

எல்லா நாடகங்களிலும் ரகுபதி ராகவ ராஜா ராம் பாடல் பாடியதன் காரணம்;

ஜூன் 23 1924 விவாகம்; மணப்பெண் விசுவநாதய்யர் புதல்வி கிட்டம்மாள்.

கன்னையா கம்பெனி தசாவதார நாடகத்தில் நடிப்பு.

1927ல் கே.பி. சுந்தராம்பாளுடன் தொடர்பு

துஷ்ட சஹவாசம் பிராண சங்கடம்- கெட்டவர் சஹவாசத்தால் குடி போதை; உடல் நலக் கேடு

1933ல் கடுமையான நோய் தாக்குதல்.

தொடரும்…………………………………………

—to be continued