Written by London swaminathan
Date : 15th August 2016
Time uploaded in London: 9-21 AM
Post No.3064
Pictures are taken from various sources; thanks for the pictures.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.
நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது, பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல் பாடி இருக்கிறார்:–
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பொருள்:-
“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.
ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”
இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்
காளிதாசர் தரும் அற்புதச் செய்தி
காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே – நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.
ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும் சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான். அங்கே இயங்கும் காற்று பரவாஹ.
இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–
ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா
விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச
ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.
ஏழுவகை மழைகள்:-
சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம்- நீர் மழை
புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)
துரோணம் – மண் மழை
காளமுகி- கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
ஏழு மலைகள்
இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்
ஏழு கடல்கள்
உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு
உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.
எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-
இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016
ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை!, posted on 22-11-2014
தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)
கீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–
தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க!, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014
–subham–
You must be logged in to post a comment.