சரக சம்ஹிதையில் 84 வகை மது பானங்கள்! (Post No.7158)

Triphala Powder

WRITTEN  by  London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 OCTOBER 2019

Time  in London – 18-26

Post No. 7158

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027)

Written by S NAGARAJAN

 

Date: 20 MAY 2018

 

Time uploaded in London –  6-28 AM   (British Summer Time)

 

Post No. 5027

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கிய ரகசியம்

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!

 

ச.நாகராஜன்

நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.

நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.

சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.

1

நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்

ரோக நிமித்தம்

  • ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
  • வாதம்
  • பித்தம்
  • ஸ்லேஷ்மா

சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

 

2

நோயாளியின் நான்கு குணங்கள்

ரோகாதுரா குணா:

 

1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)

2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)

3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)

4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)

 

சரக சம்ஹிதை (சூத்ர 9-9)

 

3

நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்

Aspects of therapeutics for the cure of disease

 

1)பிஷக் – வைத்தியர் (Physician0

2) த்ரவ்யாணி –  மருந்துகள் (Medicines)

3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata

4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi

சரக சம்ஹிதை (சூத்ர 9-3)

 

4

வைத்யருக்கான குணங்கள்

வைத்ய குணா:

 

1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)

2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)

3) திறமை (தாக்ஷ்யம்)

4) சுத்தம் (சௌசம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

 

5

அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்

சஸ்த்ர வைத்ய குணா:

பயப்படாமை – சௌர்யம்

எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா

சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்

வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது

குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)

 

6

நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை

வைத்ய வ்ருத்தி

 

நட்பு – (மைத்ரி)

தயை – (காருண்யா)

சந்தோஷம் – (ப்ரீதி)

இரக்கம் – (உபேக்ஷணம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-26)

7

நோய் அறிதல்

வியவஹார தர்ஷணம் (Diagnosis)

 

கேட்டல்- (ஆகம)

உரையாடுதல் – (வியவஹாரா)

சிகிச்சை – (சிகித்ஸா)

முடுவெடுத்தல் – (நிர்ணயா)

நாரத ஸ்மிருதி (1-36)

 

8

நோய் அறிதல்

ரோக விஞ்ஞானம்

நோய் வருவதற்கான காரணம் – நிதானம்

முந்தைய நிலை – பூர்வரூபா

தோற்றம் – ரூபா

நோய்க்குத் தீர்வு – உபசாயா

முடிவு – சம்ப்ராப்தி

மாதவ நிதானம் (1-4)

 

9

 

வியாதிகளின் வகைகள்

வியாதி

 

தொற்று நோய் – (ஆகண்டவா)

உடல் சம்பந்தமானது – (சரீரா)

மனோ வியாதி – (மானஸா)

இயற்கையானது – (ஸ்வாபாவிகா)

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)

10

எலும்பு வகைகள்

அஸ்திவர்கா

 

தட்டை – (கபாலா)

பல் – (ருசகா)

குருத்தெலும்பு – (தருணா – cartilege)

வட்ட வடிவமானது – (வளயா)

நீளமானது – (நாளகா)

சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)

11

மருந்துக் கஷாயங்கள்

கஷாயம்

 

அத்தி – (சமி)

அரசு – (அஸ்வத்தா)

ஆலமரம் – (ந்யாக்ரோதா)

புரசு – (பலாச)

 

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.

 

அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!

***

 

 

 

 

 

 

 

 

 

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

Charak

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1

By ச.நாகராஜன்

ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர்

பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வரலாற்றைக் கொண்டவர் ஆயுர்வேத ஆசார்யர் சரகர். இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 என்பது சரகரின் தீர்மானமான எண்ணம். ஆகவே தான் 120 அத்தியாயங்களில் 120 வயது வரை எப்படி வாழலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதே போல பேலர், கஸ்யபர் சுஸ்ருதர் ஆகிய ஆயுர்வேத ஆசார்யர்களும் தங்கள் நூல்களை 120 அத்தியாயங்களாகப் பகுத்துள்ளதும் பாரதத்தின் புராதன மஹரிஷிகள் மனிதனுக்கு பூரண ஆயுர்தயா (பூரண ஆயுள்) 120 வருடங்கள் என நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

சரகரின் ‘சரக சம்ஹிதா’ முழு நூலாக இன்று நம்மிடையே கிடைத்துள்ளது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். அத்ரி மஹரிஷியின் மகனான புனர்வசு ஆத்ரேயரின் சிஷ்யராக சரகர் இருந்தார் என்பதும் ஆத்ரேயர் தனது சிஷ்யர்களான பேலர் அக்னிவேசர் ஜாதுகர்ணர் பராசர்ர், ஹரிதர் காஷிரபாணி ஆகியோருக்கு ஆயுர்வேதத்தைப் பயில்வித்தார் என்பதும் செவி வழிச் செய்திகள். இந்த சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைப் படைத்தனர். அவற்றுள் அக்னி வேசர் எழுதிய நூலே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லவே அதுவே பிரசித்தி பெற்ற நூலானது. இதை சரகர் செம்மைப் படுத்தினார். ஆகவே சரக சம்ஹிதை என்ற பெயரைப் பெற்றது.

சரகர் கனிஷ்கர் காலத்தவரா?

சரகரின் காலம் சரியாக நிர்ணயிக்கப்பட முடியவில்லை. ஆனால் புராதன சீன ஏடுகளின் மூலம் சரகர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு புத்த துறவிகள் கி.பி. 472இல் ஒரு சம்ஸ்கிருத நூலை மொழிபெயர்த்தனர்.அதன் பெயர் சம்யுக்த ரத்ன பீடக சூத்ரா. சம்ஸ்கிருத மூலச் சுவடிகள் தொலைந்து போயின. ஆனால் மொழிபெயர்ப்பு நூல் மட்டும் கிடைத்துள்ளது. புத்தமத சரித்திரத்தைச் சொல்லும் இந்த நூலில் உள்ள கதைகளில் 16வது கதையில் ஏழாவது அத்தியாயத்தில் பிரசித்தி பெற்ற அரசனான தேவபுத்ர கனிஷ்கரின் பெயர் இடம் பெறுகிறது.கனிஷ்கரின் மிக நெருங்கிய நண்பர்கள் மூவர். அஸ்வகோஷர் போதிசத்வர்,பிரதம மந்திரி மாதரர் மற்றும் சரகர். இவர்கள் மூவரும் இணைபிரியாமல் மன்னருடனேயே இருப்பார்கள். ஆக கனிஷ்கர் காலத்தில் சரகர் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

சரகர் என்றால் சுற்றுபவர் என்று பொருள்

சரகர் என்றால் சுற்றிக் கொண்டிருப்பவர் என்று பொருள். ஆகவே இவர் இடம் விட்டு இடம் பயணப்பட்டுக் கொண்டே இருந்து பரந்த அனுபவத்தைப் பெற்றவர் என்றாகிறது.

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும், நீடித்த பூரண ஆயுளுக்கு ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும், எது பூரண உணவு, பஞ்ச மஹா பூதங்களும் அதனால் நமக்கு ஏற்படும் பலாபலன்களும் என்னென்ன,மூன்று தோஷங்களான வாத, கப, பித்தம் என்றால் என்ன, மூலிகைகள் யாவை அதனால் ஏற்படும் பயன்கள் யாவை, மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும், ஒரு வியாதியை எப்படி குணமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களையும் மனித உடல் பற்றிய அரிய ரகசியங்களையும் சரக சம்ஹிதை நன்கு விளக்குகிறது.

சரகரின் மூன்று ஆசைகள்

சரகர் மூன்று ஆசைகளை வெளியிடுகிறார் : 1) வாழ்வதற்கான உறுதி, 2) வளம் பெறுவதற்கான ஊக்கம், 3) இந்த உலகை விட மேம்பட்ட ஒன்று ஆகியவற்றை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே அவரது ஆசை.

எதையும் மூன்று மூன்றாகச் சொல்வது அவர் பாணி. நன்கு எளிதாக நினைவில் இருத்திக் கொள்வதற்காக இந்த மூன்று மூன்றாகச் சொல்லும் சூத்திர பாணியை அவர் கையாண்டாரோ என்று எண்ணம் சரக சம்ஹிதையைப் படிக்கும் அனைவருக்கும் தோன்றும்.

சின்ன உண்மை
கருவிலிருக்கும் ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் துல்லியமாக நிர்ணயிக்கும் விதத்தை சரகர் தெளிவாக விளக்கியுள்ளார்!
-தொடரும்
Published in September 2013 issue of Healthcare monthly (Tamil magazine).

CONTACT:- swami_48@yahoo.com