மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post No.9722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9722

Date uploaded in London – –12 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும்  ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

ராமன், கிருஷ்ணன் போன்ற கறுப்புத்  தோல்படைத்த  மன்னர்களையும் அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். மற்றொரு காகம் போல கருப்புத் தோல் படைத்த கிருஷ்ண த்வைபாயன வியாஸரையும் பகவான் என்றும் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் துதி பாடுகின்றன. இவை எல்லாம் மனிதனை, குறிப்பாக கவிஞர்களை, தெய்வீக நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டுகின்றன.

இதை வள்ளுவர்  மிக அழகாகச் சொல்கிறார்….

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

நிலவுலகத்தில் , இல்லற வாழ்க்கையை , வாழவேண்டிய அறநெறிப்படி நின்று வாழ்பவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் வாழும் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுவான்.

இதனால்தான் நாம் சம்பந்தர், ஆதி சங்கரர் போன்றோரையும் கடவுளின் அவதாரமாக அல்லது அம்சமாகக் கருதுகிறோம்.

திருக்குறள் 413ல் மீண்டும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

செவியுணவிற் கேள்வியுடையார்  அவியுணவின்

ஆன்றாரோ  டொப்பர் நிலத்து – குறள் 413

செவிக்கு உணவாகிய வேதத்தை (கேள்வி=சுருதி) உடையவர்கள் (பிராமணர்கள் )உலகத்தில் வாழ்ந்தாலும் அவிஸ் என்னும் யாக உணவை உண்ணும் தேவரோடு ஒப்பிட்டுக்  கூறத்தக்கவர்களே .

பிராமணர்களை பூ சுரர் , ‘பூலோக தேவர்கள் என்று மநு முதலிய சட்டப்புஸ்தகங்கள் கூறுவதை வள்ளுவர் அப்படியே மொழி பெயர்த்து விட்டார். அவி = ஹவிஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதில் இருந்து இது தெரிகிறது. ஆயினும் ராமர் கிருஷ்ணர் போன்றார் பிராமணர் அல்ல. வாழ்வாங்கு வாழ்பவர் எல்லோரும் தெய்வங்களே.

வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சதபத பிராஹ்மண நூலில் உளது.

யே ப்ராஹ்மணாஹா சுச்ருவாம்ஸோ

அனூ சானாஸ்தே மனுஷ்யே தேவாஹா

xxx

வித்வாம்ஸோ ஹி தேவாஹா  (அறிஞர்களும் தேவர்களே)

2-2-2-6; 2-4-3-14 ; 3-7-3-10, சதபத பிராமணம்

ஜாதி என்பதை மறந்துவிட்டு அறிவை நாடும் எல்லோரும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

இந்தக் கருத்துக்கள் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்திராது

இதோ ரிக்வேதப் பாடல்கள்/ மந்திரங்கள். இதைத்தான் பிற்கால பிராஹ்மண நூல்களிலும் திருக்குறளிலும் காண்கிறோம்

ரிக்வேதம் 1-20-8 ல்

வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் இருந்தார்கள் ; அவர்கள் தங்கள் நற்செயல்களால் வேள்வியில் தேவர்களோடு பங்கு கிடைக்கப்பெற்றார்கள் என்று ரிஷி மேதாதிதி கண்வன் பாடுகிறார் .

இது குறள் 413 போலவே உளது.

ரிபுக்கள் யார் ?

ரிக்வேதத்தில் வரும் தெய்வங்களில் ரிபுக்கள் என்ற பன்மைச் சொல்லும் உளது. இவர்கள் சுதன்வான் என்பவருடைய 3 மகன்கள். இவர்கள் அங்கீரஸ் என்பவர்களின் வழித்தோன்றல்கள். ரிபு, விபவான், வாஜா  என்ற மூவரையும் கூட்டாக ரிபுக்கள் என்பர். இவர்கள் தங்கள் இடையறா முயற்சியால் தெய்வீக அந்தஸ்த்தைப் பெற்றனர் சூரிய மண்டலத்தில் இவர்கள் வசிக்கின்றனர். சூரியனின் ஒளிக்கதிர்கள் என்றும் இவர்களை ரிஷிகள் துதி பாடுகின்றனர் மனிதன் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு என்று ரிக் வேத பாஷ்யம் (உரை) இயம்புகிறது.

பிற்காலத்தில் உபநிஷத்துக்களில் இந்தக் கருத்து மிகவும் தெளிவாகவே உள்ளது. தத் த்வம்  அஸி , ‘அஹம் பிரம்மாஸ்மி  (நீயே அது; நானே பிரம்மம்) போன்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

–subham—

yags-கடவுள், தெய்வம், மனிதன், தெய்வப்புலவர்

மனிதன், தெய்வம், பேய், தலைவன்! (Post No.5782)

Written by S Nagarajan

Date: 15 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 14 am


Post No. 5782

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

மனிதன், தெய்வம், பேய், தலைவன்!

ச.நாகராஜன்

இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.

ஒருவர் எழுந்து கேட்டார்.

நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?

வள்ளுவர் உடனே கூறினார்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.  

அப்படி வாழாதவன்?

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்

பேய் உண்டா?

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும்   

தலைவன் யார் ஐயனே!

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்   

ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.

பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள்  வைத்தார்.  மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்   

இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்    

மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்  

ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.

அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.

பிறவித்  துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.

ஐயனே!  மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?

வள்ளுவர் சிரித்தார்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்

கூடலிற் காணப் படும்    

மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.

புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.

எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்   

தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்  

முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.

இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப் படும்   

அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!

வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்

சொற்றொக்க தேறப் படும்  

ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக. 

எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?

வள்ளுவர் கூறினார்:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும் 

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும் 

கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.

நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.

கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே!  கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.

வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.

ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?

உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்  

வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.

வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:

நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்   

அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட,  மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.

வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.

ஆராயத் தக்கது எது?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்  

பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.

எள்ளப்படுவது எது?

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்  

கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.

உள்ளப்படுவது எது?

வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்

ஊறெய்தி உள்ளப் படும்   

நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.

எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.

பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.

காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.

பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.

மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.

வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.

மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”

கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.

மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.

அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?

கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?

யாருக்குத் தெரியும்?

வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.

வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!

நன்றி, வணக்கம்!

****

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Index :

Chapter 1 இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110                         Total upto this article 6

Chapter 2 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55                       total upto this :10

Chapter 3 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260             total upto this : 17

Chapter 4 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207 Total upto this : 22

Chapter 5 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590                                   Total upto this : 34

Chapter 6 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 759,374,179,36,669,893,512,106,391,725,177,931,414,416,695,587    Total upto this : 50

Chapter 7 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

350, 12, 15, 291,298, 300, 292, 1081, 1085, 1113,1116, 1117   Total upto this : 62

Chapter 8 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33 

Total upto this : 80

Chapter 9 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,

Total upto this : 100

 tags –  தெய்வம், பேய், தலைவன்,

–subham–

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்(Post No.5420)

Written by S NAGARAJAN

Date: 12 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 8-08 AM (British Summer Time)

 

Post No. 5420

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே!

 

ச.நாகராஜன்

 

பசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.

ஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.

பசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.

பத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.

ஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.

அதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.

அது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ! ஜனக மன்னரே! தர்மவானே! இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”

இந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.

அவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே! இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.

ஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச்  செல்ல முடியும்” என்றார்.

உடனே யமதர்மன், “ மன்னரே! இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.

உடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.

இப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.

அவர் யமனை நோக்கி  தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.

அதற்கு யமன், “ ஜனகரே! ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.

பசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.

*

மஹாபாரதத்தில் ஒரு சம்பவம்.

திரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.

இந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்தில் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.

பசு காப்பாற்றப்ப்பட்டது.

 

 

ஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

ஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.

பசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.

இந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல  முடிந்தது.

பசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.

அதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே!

***

தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! (Post No.3278)

adi-perukku-sri-rangam

Written by S. NAGARAJAN

Date: 23 October 2016

Time uploaded in London: 5-50 AM

Post No.3278

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.

 

இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!

சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.

1000-krishnas

அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

  • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
  • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

  • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
  • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

  • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

  • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

  • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
  • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
  • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
  • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

  • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!

**********

 

பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–