வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா? (Post No.8724)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8724

Date uploaded in London – – 23 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் வேதங்கள் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு முன் உள்ள கேள்வி : வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா?

வேத வியாஸரை வேதங்களை விளக்குமாறு கேட்ட போது அவர் கூறிய பதில் அனந்தா வை வேதா: இதன் பொருள் – வேதங்கள் கணக்கற்றவை; முடிவில்லாதவை; ஆகவே அனைத்தையும் விளக்குவது என்பது முடியாத காரியம்.

வேதங்களுக்கு ஆதி இல்லை; அந்தமும் இல்லை.

ஆனால் மனித குல நன்மைக்காக வேதங்களை நான்காகப் பகுத்துத் தந்தார் வியாஸ மஹரிஷி. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என வேதம் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

இவை இன்றும் இருக்கின்றன. ஓதப்பட்டு வருகின்றன.

குரு மூலமாக சிஷ்யர்களுக்கு தரப்பட்டு வாய்மொழி மூலமாகவே இன்று வரை காப்பாற்றப்பட்டு வரும் ஒரே தெய்வீக நூல் உலகில் வேதம் ஒன்றே. வேதத்திற்கு அடிப்படையான மூலச் சொல் வித். வித் என்றால் அறிவது என்று பொருள்.

வேதங்கள் சம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிடதம் என்ற பகுப்பைக் கொண்டவை.

‘பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

    பார்மிசை வேறெது நூலிது போலே’ என்று மஹாகவி பாரதியார் வேதங்களின் அந்தமான உபநிடதப் பெருமை பற்றிக் கூறுகிறார்.

அத்தோடு ‘நாவினில் வேதம் உடையவள்’ என பாரத தேவியைப் அவர் போற்றுகிறார்.

ரிக் வேதத்தை வியாஸரிடமிருந்து அவர் சீடரான பைலர் பெற்றார்.

யஜூர் வேதத்தை அளப்பரிய புத்திகூர்மை உடைய வைசம்பாயனர் பெற்றார்; அதை 24 கிளைகளாகப் பிரித்தார்.

வியாஸரின் சீடரான ஜைமினி சாம வேதத்தைப் பெற்று அதற்குப் பல கிளைகளை உருவாக்கினார்.

வேதங்களில் சாம வேதமாக நான் இருக்கிறேன் என்று கீதையில்

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அந்த அளவு பெருமை பெற்றது சாம வேதம்.

அதர்வண வேதத்தைச் சுமந்து மஹரிஷி பெற்றார்; அதை தகுந்த சீடர்களுக்குத் தந்தார்.

****

வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டு.

சிக்ஷா (Phonetics) அதாவது உச்சரிப்பு முறை இலக்கணம் – இது வேதத்தின் மூக்காக விளங்குகிறது,  அடுத்தது வியாகரணம் (Grammer) அதாவது மொழி இலக்கணம் – இது வேதத்தின் வாயாக விளங்குகிறது, அடுத்தது சந்தஸ்(metrics) அதாவது யாப்பிலக்கணம் – இது வேதத்தின் காலாக விளங்குகிறது, அடுத்தது நிருக்தம் (etymology) அரும்பதவுரை – இது வேதத்தின் காதாக விளங்குகிறது, அடுத்தது ஜோஸ்யம் (astronomy) அதாவது வானவியல், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றியது – இது வேதத்தின் கண்ணாக விளங்குகிறது, அடுத்தது கல்பம் (ritual) அதாவது வேள்விகளுக்கான செய்முறை நூல் – இது வேதத்தின் கையாக விளங்குகிறது.

இந்த ஆறு தான் வேதங்களின் அங்கங்களாகும்.

****

மந்திரங்கள் எழுபது கோடி என்று சொல்லப்படுகின்றன.

மந்திரங்களை ரிஷிகள் தங்களது தவ ஆற்றலால் கண்டனர். ஆகவே தான் அவர்கள் ‘மந்த்ர த்ருஷ்டா’ என்று கூறப்படுகின்றனர். ‘மந்த்ர த்ருஷ்டா: ந து கர்தாரா: – அவர்கள் மந்திரங்களைக் கண்டவர்கள்; இயற்றியவர்கள் அல்ல என தெளிவாகக் கூறப்படுகிறது.

வேதங்களிலிலிருந்தே அனைத்துக் கலைகளும் பிறந்தன. வேதங்களில் இல்லாத விஷயமே இல்லை.

உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்க்கலாம்.

வேத மந்திரங்களில், குறிப்பாக அதர்வண வேதத்தில் உள்ள 16 முக்கிய சூத்திரங்களையும் 13 துணை சூத்திரங்களையும் கண்டறிந்த  பூரி ஜகத்க்ரு சுவாமி பாரதி கிருஷ்ணதீர்த்தர்  16 பாகங்கள் அடங்கிய வேத கணிதம் என்ற நூலை எழுதியுள்ளார்.

இதன் மூலம் நான்கு பக்கம் எழுதிச் செய்ய வேண்டிய கடினமான கணிதத்தை சில வரிகளிலேயே துல்லியமாக முடித்து விடலாம். இன்று உலகின் பல பிரதான பல்கலைக் கழகங்களில் வேத கணிதம் கற்பிக்கப்படுகிறது.

உதாரணத்திற்காக இன்னொரு விஷயம்.

சூரியனின் வேகம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரத்து இருநூற்று எண்பத்தேழு மைல்கள் என்பதை விஞ்ஞானம் இன்று விளக்குகிறது.

அமெரிக்க பேராசிரியரும் வேத நிபுணருமான சுபாஷ் கக் அவர்கள் எப்படி இது மிகத் துல்லியமாக வேத சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டி சமீபத்தில் உலகினரை வியக்க வைத்தார்.

“ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்’ என்ற ரிக் வேத மந்திரத்தின் பொருள், “சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2208 யோஜனை தூரம் செல்கிறான்” என்பதாகும். அதாவது   0.1056 விநாடியில் சூரிய ஒளியானது 9.09 மைல்கள் பயணப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு விநாடியில் சூரிய ஒளியானது 1,89,547 மைல் வேகத்தில் செல்கிறது என்பதாகும்.

இன்னொரு அதிசயம், வேதத்தின் ஒரு அங்கமான ஜோதிடம், வானத்தில் நிகழும் சூரிய சந்திர கிரகணங்கள் உள்ளிட்டவற்றைத் துல்லியமாக உரைப்பது தான்.

விஞ்ஞானிகள் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் எவற்றையும் வேத ஜோதிடர்கள் பயன்படுத்துவதில்லை. இதைக் கணிக்க ஐந்து விரல்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்துவது அதிசயிக்கத் தக்க வைக்கும் ஒரு விஷயம்! ஒலைகள் இல்லை, எழுத்தாணி இல்லை, பேப்பர் இல்லை பேனா இல்லை. அனைத்தும் மனத்திலே தான். அதை ஐந்து விரல்கள் மூலம் கணக்குப் போட்டுச் சொல்வது என்பது அதிசயம் தானே! பஞ்சாங்கம் குறிக்கும் யோகம், கரணம், திதி, வாரம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களை இவர்கள் கணிக்கும் வேகமும் துல்லியமும் சொல்லுக்கு அப்பாற்பட்டவை.

இன்னும் ஏராளமான கலைகளின் தாயகம் வேதங்கள் என்பதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி என்பவர் நிரூபித்து உலகினரை பிரமிக்க வைத்திருக்கிறார்.

மஹரிஷி அரவிந்தர், மஹரிஷி தயானந்தர் போன்றோர் வேதத்தில் ஆழப் பொதிந்து கிடக்கும் ரகசியங்கள் பலவற்றைக் கூறியுள்ளனர். ஒவ்வொரு வேதச் சொல்லுக்கும் பத்து அர்த்தங்கள் உண்டு என்பது இதன் பன்முகத் தன்மையைப் பறை சாற்றுகிறது.

மஹரிஷி மகேஷ் யோகி வேதம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர். மந்திரங்கள் உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் நல்ல மாற்றங்களை விஞ்ஞான ரீதியாக அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட உலகின் தலையாய நியூரோ விஞ்ஞானியான டாக்டர் டோனி நாடெர் (Tony Nader) மற்றும் டாக்டர் பேரி சார்லஸ் (Barry Charles) கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்துள்ளனர். மனித உடலில் உள்ள நாற்பது அங்க அமைப்பும் அவற்றின் பணிகளும் வேதம் குறிக்கும் நாற்பது அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன என்று அவர்கள் தங்கள் கண்டுபிடிப்பைக் கூறிய போது உலகமே வேத மஹிமையை உணர்ந்து பிரமித்தது.

எண்ணற்ற வேத சாகைகளை – கிளைகளை வாய்மொழியாகச் சீடர்களுக்குக் கற்பித்து அதன் பாரம்பரியம் கெடாமல் பாரதமெங்கும் உள்ள வேத பண்டிதர்கள் இன்றும் காத்து வருகின்றனர். ரிக் வேதத்தில் 10170 மந்திரங்கள் இன்று பிரசித்தமாக உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் 101 சாகைகள் உள்ளன; 4773 மந்திரங்கள் இன்று பிரசித்தமாக உள்ளன.

சாம வேதத்திலோ 1549 செய்யுள்கள் உள்ளன. ஆயுர்வேதம், போர்க்கலை உள்ளிட்ட ஏராளமானவற்றைச் சொல்லும் அதர்வண வேதத்தில் எண்ணற்ற மந்திரங்கள் இன்றும் காணப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வேதமானது அபௌருஷேயம் – மனிதனால் இயற்றப்பட்டது அல்ல – என்று  ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறுவதோடு அதன் அபூர்வ மஹிமைகள் பற்றி தனது உரைகளில் குறிப்பிடுகிறார்.

வேதங்களின் சிந்தனை உலக நலன் ஓங்குக என்பது தான்!

சர்வே ஜனா சுகினோ பவந்து – அனைத்து மக்களும் சுகமாக வாழட்டும்!

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து – அனைத்து உலகும் சுகம் பெறட்டும்!

இதுவே வேத பிரார்த்தனை!

 இப்படிப்பட்ட தெய்வீக வேதங்களைப் போற்றுவோம்; அதை ஓதி பாரம்பரியம் கெடாமல் வழி வழியாகத் தருவோரையும் ஆதரித்து நலம் பெறுவோமாக!

நன்றி, வணக்கம்!

 tags– வேதங்கள் ,எத்தனை,

–subham—

**

Part 2 -வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

சாணக்கியன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1935

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 16 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 17-06

Part 1 was posted yesterday.

(படங்கள் பேஸ் புக் முதலிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி)

ஊர் பேர் தெரியாத கொட்டாம்பட்டி, அரிட்டாபட்டி தமிழ் எழுத்தாளனின் இந்து மத விரோதக் கதைகளை பெரிதுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் அதைப் படமாக வைத்து அந்த எழுத்தாளனின் வங்கிக் கணக்கில் பல லட்சம் பவுன்கள் அல்லது டாலர்களை “பம்ப்” செய்யும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களின் சதி—– இந்துமதத்தை மட்டும் தாக்கும் வெண்டி டோனெகர் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு பப்ளிசிட்டி, பணக் குவிப்பு– இதுவரை வேதத்தை அலசி ஆராய்ந்த எந்த “அறிஞ”னும் வேறு எந்த மத நூலையும் ஆராயாத மர்மம் —- அவர்களுக்குத் துணைபோகும் தேச விரோத, தர்ம விரோத திராவிட–மார்க்சிஸ்ட் கும்பல்கள், பத்திரிக்கைகளின் சதி — பற்றி முதல் பகுதியில் குறிப்பிட்டேன்.

இந்த இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு “அறிஞரும்” செய்த வேலை குறித்துக் கண்போம்:–

முதலில் மூன்று முக்கியமான விஷயங்களை எல்லா இந்துக்களும் அறிய வேண்டும். இதில் சில அறிஞர்கள் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணத்தை ஒவ்வொரு இந்துவும் படித்தால் இவர்கள் கொலைபாதகச் செயலுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெளிவாகும்.

இரண்டாவது இந்த “அறிஞர்களில் பெரும்பாலோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக போடிலியன் பேராசிரியர் பதவி வகித்தோர் அல்லது அதற்கு ஆசைப்பட்டோர். அதில் சம்ஸ்கிருதம் ஏன் கற்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்துமதத்தை எள்ளி நகையாட இந்த பதவியை ஏற்படுத்துவதாக அந்த அறக் கட்டளையை ஏற்படுத்தியவர் எழுதி, பணம் கொடுத்துள்ளார்.. ஆக இந்த அறிஞர் கும்பல் எல்லாம் மோசடி செய்ய வந்த கும்பல்!

மூன்றாவதாக இவர்கள் அவ்வளவு பேரும்—தமிழர்கள் தலை மேல் வைத்து கூத்தாடும் கால்டுவெல் பாதிரியார் உள்பட—மாக்ஸ்முல்லர் உள்பட – எல்லோரும் “இந்தியர்கள் அனைவரும் வந்தேறு குடிகள்” என்று எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு அதிசயம் நடந்தது. கங்கை நதியில் கலக்கும் சாக்கடை எல்லாம் புனிதம் அடைவது போல, சில அசத்துக்கள், சத்துக்களாகவும் மாறிவிட்டன. அதில் ஒரு அசத்து மாக்ஸ்முல்லர்.

1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின்  சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார். பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார். இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

பஞ்சபாத்ரம்

தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்

ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார். பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார். மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார். ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை. யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி. இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர். வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய  நூலகத்தில் சேர்த்தார். இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.

இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம். பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள். பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர். எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம். அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.

இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார், அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது. இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.

ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின. அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார். இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.

பிராமணர்

மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):

ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.

வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர். 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார். நிறைய நூலகள் எழுதியுள்ளார். கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார். ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார். இதோ விக்கி பீடியா வாசகம்:

Muller once wrote that;-

The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]

As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?

—Max Müller, (1868)[22]

அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார் ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார். அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன். வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906

கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார். ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார். ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை, பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார். ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார். காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.

ஐயங்கார்

தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார். எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார். அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார். அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).

ரோஸனின் பணி

1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார். 1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).

மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு  பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.

போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை. வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர். இது இந்து மத எதிரிக் கும்பல்.

பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.

பகவத் கீதை மொழி பெயர்ப்பு

வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும். ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.

சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார். அவர் கல்கத்தாவில்   ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார். சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார். பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார். அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார். நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.

பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார். அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.

ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்

பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார். லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்

நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.

தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.

கேரம் பாய்ஸ்

ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்

விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.

1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்

1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.

1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.

1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.

போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத- ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.

186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.

1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார். இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது

1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர். தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார். 1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார். சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார். சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார். சம்ஸ்கிருத  நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர். அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.

பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர். இது வான சாத்திர ஆராய்ச்சி என்பதால் தனிக்கட்டுரையாக தருகிறேன்.

கீதை, வேதம் பற்றிய பழமொழிகள்

சாந்தம்

Compiled by London swaminathan

Article No.1927

Date :12th June 2015

Time uploaded in London: 9-25 am

கீதா கங்கோதகம் பீத்வா புனர்ஜன்ம ந வித்யதே

பகவத் கீதையையும், கங்கை நீரையும் அருந்தியவருக்கு மறு பிறப்பு என்பதே இல்லை

கீதா சுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை:

கீதையை நன்றாகப் படிக்க வேண்டும். மற்ற சாஸ்திரங்களால் என்ன பயன்? – மஹாபாரதம்

ஒப்பிடுக:

பகவத் கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜல லவ கணிகா பீதா

சத்க்ருதபி யேன முராரி சமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா – பஜகோவிந்தம்,20

பொருள்:கீதையைக் கொஞ்சமேனும் படித்தவர்களுக்கு, கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பருகியவருக்கு முரஹரியை (கண்ணன்) ஒரு முறையாவது வனங்கியவருக்கு யமனுடன் சண்டை போட வேண்டியது வராது (பீஷ்மர் போல நீங்கள் நினைத்த நேரத்தில் அமைதியாக, ஆனந்தமாக, சுற்றம் புடைசூழ நிற்க, உயிர் துறக்கலாம்)

இதிஹாச புராணாப்யாம் வேதம் சம உப ப்ரும்மயேத் – மஹாபாரதம்

வேத மந்திரங்களை இதிஹாச புராணங்கள் வாயிலாக விளங்கிக் கொள்ள வேண்டும்

ருஷயோ மந்த்ர த்ருஷ்டார:

ரிஷிகள் மந்திரத்தைக் கண்டவர்கள் (இயற்றியவர்கள் அல்ல; ஐன்ஸ்டைன், நியூட்டன் சொன்ன விதிகள் போல அவை முன்னமே உள்ளன; என்றும் இருப்பன)

சின்ன பையன்கள்

வேதோகில தர்மமூலம் (மனு 2-6)

எல்லா  தர்மங்களுக்கும் வேதங்களே வேர் போன்றவை

பாரதே பாது பாரதி

பாரத தேசத்தில் பாரதி (சம்ஸ்கிருதம்) பிரகாசிக்கட்டும் (வாழ்க சம்ஸ்கிருதம் என்று பொருள்)

வேதானாம் சாமவேதோஸ்மி – பகவத் கீதை

வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்

ஸ்ரவணசுகசீமா ஹரிகதா – ப்ரசங்காபரணம்

கேட்பதில் கிடைக்கும் சுகங்களில் உயர்ந்தது ஹரிகதை கேட்கும் சுகமாகும்.

ஸ்ருதிர்விபன்னா ச்ம்ருதயஸ்ச பின்னா: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வேதங்கள் வேறு; ஸ்மிருதிகள் வேறு (வேதங்கள் சொல்வதை திருத்தவே முடியாது. ஸ்மிருதிகளை பெரியோர்கள் ஒவ்வொரு காலத்திலும் திருத்துவர் அல்லது புதிதாக எழுதுவர்)

ஸம்ஸ்க்ருதி: ஸம்ஸ்க்ருதாஸ்ரிதா

பண்பாடு, சம்ஸ்கிருதத்தை அண்டி வாழ்கிறது.

சர்வஞானமயோ ஹி ச:

வேத இலக்கியமே அனைத்து அறிவும் அடங்கிய களஞ்சியம்.

சர்வம் வேதாத் ப்ரசித்யதி

வேதத்திலிருந்தே எல்லாம் கிடைக்கிறது

சர்வத சம்ஸ்க்ருதீ பூய சுகின: சர்வ சந்து சர்வதச

எல்லாவிதத்திலும் பண்பட்டு எப்போதும் சௌக்கியமாக வாழுங்கள்!

ஸ்துதா மயா வரதா வேத மாதா – அதர்வ வேதம்

வரங்களை அளிக்கும்  வேத மாதா என்னால் தொழப்பட்டாள்.

Pictures are from Face book friends; probably from Art of Living Centre.

–SUBHAM-

ரிக் வேதத்தில் ஒரு புதிர்!

vedas-by-the-great-priests-

Research Paper written by London Swaminathan
Post No. 1331; Dated 6 October 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ருக் வேதம். இந்த இருக்கு வேதத்துக்கு கி.மு.1200 என்று மாக்ஸ் முல்லர் தேதி நிர்ணயித்தார். அதாவது 1200-க்கு முன்னால் இது இருக்க முடியும் ஆனால் 1200-க்குப் பின் இது இருக்கவே முடியாது என்றார். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து கி.மு 6000 என்று முடிவுக்கு வந்தனர்.

துருக்கியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைக் கல்வெட்டில் ரிக் வேத கால தெய்வங்கள் வேதப் பாடலில் என்ன வரிசையில் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் காணக் கிடக்கின்றனர். இந்தத் தொல் பொருட்துறைத் தடயம் கி.மு. 1380 ஆம் ஆண்டுக்குரியது. ஆக வேதத்தை யாரும் இதற்குக் கீழே இழுக்க முடியாது. இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்தது என்பதே உண்மை.

வேதம் என்பது மிகப்பல ரகசியங்கள் நிறைந்தது. இதை நன்கு உணர்ந்த சங்க காலத் தமிழர்கள் இதற்கு பரம ரகசியம் “மறை’ என்று பெயர் சூட்டினர். இதை எழுதக்கூடாது என்பதால் சங்க காலத் தமிழர் இதற்கு எழுதாக் கற்பு என்றும் அழகான பெயரைச் சூட்டினர்.

வெள்ளைகாரர்கள் ஆராய்ச்சி செய்யும்வரை இதற்கு பெரிய மதிப்பு இருந்தது. அவர்கள் ஆராய்ச்சி செய்தவுடன் பல பொய்யுரைகளைப் பரப்பினர். மற்ற மதத்தினருக்கு எல்லாம் ஒரே ஒரு நூல்தான். அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க ஒரு சில மணி நேரம் போதும். ஆனால் இந்துக்களின் புனித நூல்களோ பசிபிக் மஹா சமுத்திரத்தைவிடப் பெரியவை. ஆகையால யாரும் எல்லாவற்றையும் படிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி பல பொய்க்கதைகளைக் கட்டிவிட்டனர். இன்றும் கூட வேதத்தையோ, மஹாபாரதத்தையோ, வால்மீகி ராமாயணத்தையோ முழுக்கப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் நாற்பது ஆண்டுகளாகப் படித்துவருகிறேன். இன்னும் முடிந்த பாடில்லை. ஒன்பது திருமுறைகளைத் தமிழில் படித்தேன். அதில் கூட இன்னும் மூன்று திருமுறைகள் பாக்கி.

வேதம் பற்றி வெளி நாட்டினர் சொல்வதை நம்பக் கூடாது; அதை படிக்காமலேயே வெளி நாட்டினர் பெயரை மேற்கோள்காட்டி எழுதிவரும் திராவிடக் கோமாளிகள். மார்க்சிஸ்ட் கூத்தாடிகள், அதுகள், இதுகள் ஆகியோரை ஏன் நம்பக்கூடாது என்பதற்கு ஒரு நாலு வரி எடுத்துக்காட்டு தருகிறேன். இது போல நூற்றுககணக்கான ரகசியங்கள், புதிர்கள், விடுகதைகள் வேதத்தில் உண்டு.

ரிக்வேதத்தை பத்து மண்டலங்களாகப் பிரித்துக் கொடுத்தார் வியாசர் என்னும் மாமுனிவர். அவர் காலத்திலேயே இது கடல் போலக் கரை காண முடியாமற் போகவே அவர் கவலைப் பட்டு இவைகளைத் தொகுத்து வகுத்துக் கொடுத்தார். அந்த பத்து மண்டலங்களில் வாமதேவரிஷியின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நாலாவது மண்டலத்தில் உள்ளன. பல ஆய்வாளர்கள் இதுதான் மிகப் பழைய மண்டலம் என்றும் இன்னும் சிலர் இது பழமையான மண்டலங்களில் ஒன்று என்றும் பகருவர்.

vedic-mathes-001

இதிலுள்ள ஒரு பாடல் யாருக்கும் விளங்கவில்லை. எண்களை வைத்து வார்த்தா ஜாலம் செய்திருக்கிறார் புலவர் வாமதேவர். அவர் செய்த சொற் சிலம்பத்தை அவருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த சிவவாக்கியர், திருமூலர் போன்ற தமிழ் சித்தர்கள் கூடப் பயன்படுத்தினர். அதாவது எண்களை வைத்து கவிதை அமைப்பர். அந்த எண்ணின் பொருள் என்ன என்பதை வியாக்கியானம் இல்லாமல் யாரும் அறிய முடியாது. இதோ வாம தேவரின் கவிதை:

அவருக்கு நான்கு கொம்புகள், மூன்று காலகள் அவரைத் தாங்கி நிறுத்தும். தலைகளோ இரண்டு, கைகளோ ஏழு! அவரை பிணைத்து இருப்பன மூன்று. அவர் பயன்கர சப்தத்துடன் செல்கிறார். அந்த மகத்தான கடவுள் மானிடருக்குள் புகுந்து விட்டார் – ரிக் வேதம் 4-58-3

இதற்கு வெள்ளைக்காரர்கள் பல விதமான பொருள் கூறினர். கிரிப்பித் என்பார் அவர்களின் கருத்துக்களை தொகுத்தளித்தார்.

வெள்ளைக்காரர்கள் எதற்கு வேதம் படித்தார்கள்?

இதில் பல்வகையான பேர்வழிகள் உண்டு. சிலர் நாடகம் சர்க்கஸ் பார்ப்பது போல வேடிக்கை பார்க்க வந்தோர்; இன்னும் சிலர் இதில் உள்ள அசிங்கங்களை உலகிற்குப் பறை சாற்றி இந்தியாவையும் இந்து மதத்தையும் வேருடன் பிடுங்கி எரிவேன் என்று வந்தனர். இன்னும் சிலர் ஏதொ பொழுது போவதில்லை, இதில் என்னதான இருக்கிறது என்று பார்ப்போமே என்று வந்தவர்கள்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயக் கிழகிந்திய கம்பெனியிடம் கூலி வாங்கிக் கொண்டு வேதங்களை மொழிபெயர்க்க வந்த மாக்ஸ் முல்லர் ஆரம்பத்தில் வேதங்களைப் பற்றி “கன்னா பினா மன்னார் கோவில்” — என்று எழுதினார்’ படிக்கப் படிக்க ஞான உதயம் ஏற்படவே நடையை மாற்றிக் கொண்டார். மெகாலே போன்றவர்கள், “இதோ பார், இதே வேகத்தில் ஆங்கிலக் கல்வி பரவினால் இந்து மதமும் இந்தியாவும் அழியும் பிறகு நம் ஆதிக்கம் ஓங்கும்” — என்று பகிரங்கமாக அறிக்கை விட்டனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். யார் இந்த அறிஞர்கள்? உலகில் இந்துக்களைத் தவிர வேறு யாரையும் சீண்ட அஞ்சும் கோழைகள்!! வேறு எந்த மத நூலையும் ஆராயத் துணியாத கூலிப் பட்டாளம். இந்துக்களை “காபிர்கள், பேகன்”கள் என்று எள்ளி நகையாடிய வம்சத்தினர்! உலகம் கி.மு 4100 ஆம் ஆண்டில் தோன்றியது என்று பரப்பியவர்கள்! மது,. மாது, மாட்டு மாமிசம் ஆகிய மூன்றிலும் ஊறியவர்கள். ஆக ஆரம்பத்திலேயே உள் நோக்கத்துடன் வந்தது தெள்ளிதின் விளங்கும்.

பல அறிஞர்கள் நேர்மையாக ஒப்புக் கொண்டனர்; இந்த வேதப் பாடலின் பொருள் தெளிவில்லை, இந்தப்பாடலின் பொருள் விளங்கவிலை, இது எங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை. இதை சாயாணாச்சாரியார் இப்படி விளக்குகிறார். ஆனால் அப்படி இருக்குமா என்பது சந்தேகமே – இப்படி எல்லாம் எழுதி தங்கள் அறியாமையைப் பிரகடனப்படுத்தினர். அவர்களுக்கு இருந்த நேர்மை கூட வேதத்தை வியாக்கியானம் செய்ய வந்த மார்க்சிஸ்ட் கோமாளிகளுக்கும், திராவிட பஃபூன்களுக்கும் இல்லை.

Vedas flow chart
சாயனர் விளக்கம்

வேதத்துக்கு முதல் முதலில் முழு அளவு பொருள் எழுதத் துணிந்தவர் சாயனர் என்னும் 14ஆம் நூற்றாண்டு அறிஞர். வேதம் தோன்றியதாக வெள்ளைக்காரர் போட்ட கணக்கிற்கும் இவருக்கும் இடையில் 2600 ஆண்டு இடைவெளி! ஆக சாயனரே தவித்தார். ஆனால் சாயனர் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர். மற்ற அறிஞர்கள் இந்து மதத்தை தகர்க்க வந்தவர்கள்.

அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மஹிந்தரா என்ற அறிஞர் முயன்று பார்த்தார். இந்த நாலு வரிக்கு மட்டும் ஒவ்வொருவரும் சொல்லும் விளக்கத்தை பாருங்கள். பிறகு வெளி நாட்டுக் கோமாளிகள் எழுதிய நகைச் சுவைகளைப் படித்து நீங்கள் சிரித்து மகிழ ஆயிரக் கணக்கான பக்கங்கள் காத்துக் கிடகின்றன.

சாயனர் சொல்லுவார்:

இந்தப் பாடல் யாகத்தில் ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
யாகம் என்று பொருள் கொண்டால் நான்கு கொம்புகள் என்பதை நாலு வேதங்கள் என்று கொள்ளலாம்;
மூன்று கால்கள் என்பதை நாள்தோறும் செய்யும் மூன்று யக்ஞங்கள் என்று கருதலாம்;
இரண்டு தலைகள் என்பதை பிரம்மோதன, ப்ரவர்க்ய சடங்குகள் என்று சொல்லலாம்;
ஏழு கைகள் என்பதை ஏழு யாப்பு அணிகள் என்று சொல்லலாம்
மூன்று பிணைப்புகள் என்பதை மந்த்ர, கல்ப, பிராமணங்கள் எனலாம்.

இதை ஆதித்யன் என்று பொருள் கொள்வோமானால்
நான்கு திசைகள், மூன்று என்பது காலை, மதியம், மாலை; இரண்டு என்பது பகலும் இரவும், ஏழு என்பது சூரிய ஒளியின் ஏழு நிறங்கள்; மூன்று பிணைப்பு என்பது பூர், புவ, சுவர்லோகம் எனப் பொருள் சொல்லலாம்.

இது சாயனர் வியாக்கியானம்.

rishi_vedas_text03

மகீதரர் சொல்வதாவது:
4 கொம்புகள்:–பெயர்ச் சொல், வினைச் சொல், முன்னிடைச்சொல், பின்/முன் ஒட்டு
3 கால்கள்:– மூன்று வேதங்கள், அல்லது 3 காலங்கள் அல்லது தன்மை, முன்னிலை, படர்க்கை
2 தலைகள்:– 2 யக்ஞங்கள் அல்லது செய்பவர், செயப்படு பொருள்
7 கைகள் :– 7 யாப்பு அணிகள் அல்லது 7 வேற்றுமை உருபுகள்
3 பிணைப்புகள்: 3 தினசரி யக்ஞங்கள் அல்லது ஒருமை, இருமை, பன்மை

வெளிநாட்டோர் விளக்கம்:

பேராசிரியர் வில்சன்: “வேத கால இரு பொருள் பேச்சுக்கும் தெளிவின்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வியாக்கியானக் காரகள் கஷ்டப்பட்டு பொருள் கறக்கிறார்கள். ( தனக்கு விளங்கவில்லை என்று ஒப்புக்கொள்ளாமல் வேத காலத் தெளிவின்மையைக் காட்டுகிறது என்று பழையை ரிஷிகள் மீது பழி போடுகிறார். இந்த அப்பாவி வில்சனுக்கு சிவவாக்கியர், திருமூலர், திருமழிசை ஆழ்வார் பாடல்கள் தெரியாது. பிழைத்தார்கள் தமிழ்ச் சித்தர்கள்!!!)

பேராசிரியர் லுட்விக்:–
சாயனர் இந்த ‘ரிக்’கின் முதல் வரிக்கே பல விளக்கங்களைக் கூறுகிறார். அதைத் திருப்பிச் சொல்லுவதில் பொருளே இல்லை. சம்பிரதாயமாக வரும் அர்த்தம் கூட நிச்சயமற்றதாக இருக்கிறது. சமுத்ரம் (கடல்), ஊர்மி (அலை) என்ற சொற்களுக்குக் கூட அவர் பலவிதப் பொருள்களை ‘’ இது அல்லது, அது அல்லது” என்று மாற்றி மாற்றிச் சொல்லிவருகிறார்.

இதை எல்லாம் தொகுத்தளித்த கிரிப்பித் இன்னும் ஒரு கருத்தை ஏ.ஹில்பிராண்ட் சொல்லியிரூபதையும் கோடி காட்டுகிறார்.

vedas music

இதிருந்து தெரிவதென்ன?

1.வேத கால இந்துக்கள் எழுத்தறிவற்ற காட்டுமிராண்டிகளோ மாடு மேய்க்கும் இடையர்களோ அல்ல. முழு முதற் கடவுளை உணர்ந்து மறை பொருளில் ஆடிப்பாடி மகிழும் பெரும் ஞானிகள் அவர்கள்
2.பிற்காலத்தில் திருமழிசை ஆழ்வார், சிவவாக்கியர், திருமூலர் போன்றோரும் வேத கால முனிவர் போல அடையாளபூர்வ, சங்கேத, பரி பாஷைகளைப் பயன்படுத்துகின்றனர். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது வியப்பை ஏற்படுத்துகிறது.

3. வேதங்களுக்குப் பொருள் காண்பது மிகக் கடினம். சாயனர் போன்ற பெரியோர்களே இதுவா, அதுவா எனச் சந்தேகிக்கும் போது வெளியே இருந்து வந்த கலாசாரமே தெரியாத, மது, மாது, மாட்டு மாமிச அறிஞர் களையும், கடவுளே இல்லை — சமயம் என்பது ஒரு அபினி — புராண, இதிஹாசம் எல்லாம் வர்க்கப் போராட்டமே — என்று கூறும் அறிஞர்களையும் அவர்களுக்கு “உரிய இடத்தில்” வைக்கவேண்டும்.

4.சுதாச, திவோதாச என்னும் தாசர்கள் வேத காலத்தில் பெரிய பதவிகளில் இருக்கும்போது, தாசர், தஸ்யு, சிஸ்நதேவா: எனபதற்கு எல்லாம் விஷமத்தமான பொருள் கற்பிப்போர் ஏராளமான பாடல்களுக்குப் பொருள் தெரியாமல் திக்கு முக்காடி மூச்சுத் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களின் பொய்மை வாதத்தின் பெயரில் ஒரு ஆரிய—திராவிடக் கொள்கை வேறு!!!

5.இந்த குறிப்பிட்ட நாலே வரிகளில் வரும் சமுத்ரம் (கடல்), ஊர்மி (பெண்களின் பெயர்; பொருள்: அலை) ஆகியவற்றை இன்றும் எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றன. ஆக வேத காலப் பெயர்களும் சம்ஸ்கிருதமும் நம் வீட்டு முற்றத்திலேயே இருக்கின்றன. அது செத்து விடவில்லை. கண்டி முதல் காஷ்மீர் வரை எல்லோரும் இந்திரன், இந்திராணி பெயர்ளை இன்றும் குழந்தைகளுக்கு சூட்டுவதை முன்னொரு கட்டுரையில் தந்துள்ளேன்.

6.ஆக “வேதத்திற்கு பொருள் காண முயற்சிப்பதைவிட அதன் மந்திர சப்தத்தில் நம்பிக்கை வை” — என்ற சம்பிரதாயத்தை ஏற்று இந்து மதத் தலைவர்கள் அதற்கு சொல்லும் பொருளையே ஏற்கவேண்டும்.
7.தமிழர்களாகப் பிரந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்: திருக்குறளில் இருப்பதெல்லாம் வேதக்கருத்துகள் என்று திருவள்ளுவ மாலை கூறுவதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாக எடுத்துரைத்தார். வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்றும், தேவார திருவாசக கருத்தெல்லாம் வேதக் கருத்துகளே என்று நால்வரும் கூறுவதால் அவைகளும் வேதம் எனக் கொளல் சாலப் பொருத்தம்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — (பாரதியார்)
–சுபம்–